Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8353
  • Joined

  • Last visited

  • Days Won

    100

ரஞ்சித் last won the day on February 28

ரஞ்சித் had the most liked content!

About ரஞ்சித்

  • Birthday 12/05/1973

Contact Methods

  • ICQ
    0
  • Yahoo
    anton_devaranjith@yahoo.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    Sydney
  • Interests
    Politics, music, sports.

Recent Profile Visitors

16330 profile views

ரஞ்சித்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

5k

Reputation

  1. துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம்.
  2. உண்மை, நலன்களையல்ல, தமது பகுதிகளில் கட்டுப்பாட்டிற்குற்பட்ட அபிவிருத்தி. இது அனுமதிக்கப்பட்டதற்கான ஒற்றை காரணம், தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்களை தமிழர்களுடன் இணைய விடாது பிரித்தெடுத்து, தமிழரூகெதிரான போரில் அவர்களைப் பயன்படுத்தி தமிழ‌ர்களின் அபிலாஷைகளை முற்றாக அழிப்பதற்காகத்தான். 2009 வரை அரசின் செல்லபிள்ளைகளாக இருந்த ஹிஸ்புள்ளா, ரவூப் ஹக்கீம், பதிருதீன் ஆகியோர் இப்போது எங்கே? 2009 இற்குப் பின்னர் முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தபோதும் கூட அச்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட களுத்துறை, உகணை உள்ளிட பிரதேசங்கள் மீதான வன்முறைகளை அவர்களால் தடுக்க முடிந்ததா? தமது சொந்தப் பைகளை நிரப்பி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்வம் ஏற்படுத்தியதை விட அவர்கள் முஸ்லீம் இனத்தின் நலன்களைக் காக்க செய்த நடவடிக்கைகள் என்ன? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் தீகவாபியை அஷ்ரப்பின் காலத்திலேயே அரசு அடாவடியாக வளைத்துப் போட்டதே? அப்போது அஷ்ரப்பால் செய்ய முடிந்தது என்ன?
  3. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?
  4. சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.
  5. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
  6. ஈரான் மீதான பதில்த் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கான அனுமதியினை இஸ்ரேலிய அமைச்சரவை யுத்தக் கவுன்சிலுக்கு வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ட்டின், இஸ்ரேலுக்கு விடுத்த வேண்டுகோளில் ஈரான் மீதான பதிலடி குறித்து தமக்கு அறியத்தருமாறு கேட்டிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கும் இடையில் உரையாடல் ஒன்று தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
  7. ஈஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானிய ட்ரோன் வகையைச் சேர்ந்த ஒன்று குவைட் விமானச்சேவை தனது பறப்பின் பாதைகளை மாற்றி, தாக்குதல் நடக்கும் பகுதியை விலத்திச் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டென்யாகுவுடன் வெகு விரைவில் இத்தாக்குதல் குறித்துப் பேசப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. மேலும் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலுடன் பைடன் தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று அது கூறுகிறது. இதற்கிடையில் தான் பதவியில் இருந்திருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஈரானியத் தாக்குதலில் தமது தளம் ஒன்று சிறிய சேதத்திற்கு உள்ளானதாக இஸ்ரேல் கூறுகிறது.
  8. இஸ்ரேல் மீதான ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஐ நா செயலாளர் கண்டித்திருப்பதுடன், உடனடியாக பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புக்களும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். சுமார் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள், பலிஸ்ட்டிக் ஏவுகணைகள், ஸ்க்ரூஸ் ஏவுகணைகள் எம்மீது ஏவப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவற்றை எமது விமானப்படை இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியிருக்கின்றது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் டனியேல் ஹகாரி கூறியிருக்கிறார். இஸ்ரேலிய சியோன்ஸிட்டுக்களை ஆதரித்துவரும் பயங்கரவாத நாடான அமெரிக்கா தனது செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும். இஸ்ரேலினைத் தண்டிக்கும் தனது நடவடிக்கைகளுக்கும் தனது நலன்களுக்கும் எதிராக அமெரிக்கா செயற்படுமானால் ஈரானின் பயங்கரமான பதிலடியை அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா தளம் அமைத்திருக்கும் நாடுகளோ எதிர்நோக்க வேண்டி வரும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது. ஸ்பெயினும், போர்த்துக்கலும் மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மானில் வசிக்கும் மக்கள் தமது நகரின் மேலாக பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பார்த்திருக்கிறார்கள். இவற்றுள் பல அவ்வானிலேயே இடைமறிப்பால் வெடித்திருக்கின்றன. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலையடுத்து இருதரப்பும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  9. இஸ்ரேல் மீதான தாக்குதலில் அமெரிக்கா இலக்குவைக்கப்படவில்லையென்றே தெரிகிறது. தனது ஜெனரல்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கவேண்டிய கட்டாயம் ஈரானுக்கு. தனது மக்கள் முன்னால் தான் அவமானப்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இத்தாக்குதலை அடையாளமாக நடத்தியிருக்கிறது ஈரான். அதுவும் சில மணிநேரத்திலேயே தாக்குதலை முடித்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் மெளனமாகிவிட்டது. இஸ்ரேலைத் தவிர மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புக்களைத் தாக்குவதைக் கூடத் தவிர்த்திருக்கிறது. ஆக, இத்தாக்குதலை நடத்தவேண்டிய கட்டாயம், ஆனால் தாக்குதலும் விஸ்த்தரிக்கப்படக் கூடாது என்கிற நிலை. பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேல் இதனை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது என்பதுதான். ஈரான் நேரடியாகத் தன்னைத் தாக்கும்வரை இஸ்ரேல் காத்திருப்பதாகவே பலரும் கூறிவந்த நிலையில், ஈரான் அதனை இஸ்ரேலிடம் கொடுத்திருக்கிறது.
  10. ஐ நா சாசனத்திற்கு உட்பட்ட வகையில் நடத்தப்பட்ட தற்காப்புத் தாக்குதலே இஸ்ரேல் மீது நாம் மேற்கொண்ட தாக்குதல் என்று ஈரான் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கிறது. சிரிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கவே தனது இராணுவ வல்லுனர்கள் டமஸ்க்கஸிற்குச் சென்றிருந்தார்கள் என்றும், அவர்களையே இஸ்ரேல் நீதிக்குப் புறம்பான முறையில் கொன்றதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
  11. இங்கிலாந்து வானுக்கு ஏவியிருக்கும் டைபூன் ரக தாக்குதல் விமானம் இஸ்ரேலிய வான்பரப்பில் காணப்படும் ஈரானிய ட்ரோன்கள்
  12. ஈரானிலிருந்து இஸ்ரேலிற்கான மிகக் கிட்டிய தூரம் 1600 கிலோமீட்டர்கள். இதனைக் கடக்க ஈரானிய ட்ரோன்களுக்கு சில மணிநேரங்கள் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட ட்ரோன்கள் இப்போதுதான் இஸ்ரேல் வான்பரப்பிற்குள் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலானவற்றை ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலவற்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. சில வீழ்ந்து வெடித்திருக்கின்றன. இத்தாக்குதலில் காயப்பட்ட இஸ்ரேலியச் சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலா அல்லது இடைமறிப்பா? டைபூன் ரக மிகையொலித் தாக்குதல் விமானங்களை வானுக்கு ஏவியிருக்கிறது பிரித்தானிய வான்படை. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கெதிராக வரும் ஏவுகணைகள், ட்ரோன்கள் என்று அனைத்தையும் சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சந்தில சிந்துபாடக் காத்திருந்த அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தபக்கம் ரஸ்ஸியாவும், வடகொரியாவும் தமது ஆயுதக் கிடங்குகளைத் திறந்துவைத்திருப்பார்கள் ஈரானுக்காக. சீனாவும் ஆயத்தப்படும் போலத் தெரிகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.