Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7194
  • Joined

  • Days Won

    24

இணையவன் last won the day on July 2 2023

இணையவன் had the most liked content!

About இணையவன்

  • Birthday 03/19/1970

Profile Information

  • Gender
    Male
  • Location
    பிரான்ஸ்

Recent Profile Visitors

12206 profile views

இணையவன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

2.2k

Reputation

  1. ஆம், வேறு திரியில் பதிந்திருக்க வேண்டிய கருத்தைத் தவறுதலாக இங்கே பதிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்குதான் யாழ் கள புடின் ஆதரவாளர்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். 😂
  2. இந்த மூன்றாவது பரீட்சார்த்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது பற்றிச் செய்தியில் சொல்லப்படவில்லை.
  3. சில பிரச்சனைகள் உள்ளன. சரி செய்ய முயற்சிக்கிறோம்.
  4. மென்பொருள் புதுப்பித்தல் காரணமாகச் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
  5. தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இது ஒரு பாரதூரமான நிகழ்வு.
  6. சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள். இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை).
  7. ஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.
  9. போலி நோட்டு என்ற சொல் நமது ஊரில் பாவிக்கப்படுவதில்லை. அது தவிர தமிழில் எழுதாமல் ஏன் வீரகேசரி இப்படி எழுதுகிறது ?
  10. வணக்கம் ரசோதரன், உங்கள் பெயர் நீங்கள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.
  11. அமெரிக்க இராணுவ உதவிகள் கிடைக்காத நிலையில் உக்ரெய்ன் இராணுவம் எதிர்த்தாக்குதல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றது. ரஸ்ய படைகள் Avdiïvka நகரினை மூன்று பக்கத்தாலும் சுற்றி வளைத்துள்ளன. இங்குள்ள உக்ரெய்ன் இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.
  12. கதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.
  13. இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.