சண்டமாருதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,308
 • Joined

 • Last visited

 • Days Won

  29

சண்டமாருதன் last won the day on August 30

சண்டமாருதன் had the most liked content!

Community Reputation

1,161 நட்சத்திரம்

2 Followers

About சண்டமாருதன்

 • Rank
  Advanced Member
 • Birthday 12/05/1955

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto

Recent Profile Visitors

3,927 profile views
 1. அதற்கு ஒரே வழி வடக்கையும் கிழக்கையும் பிரித்து இந்தியாவின் ஒரு மாநிலமாக்குவததான். அதற்கு இந்தியா ஒத்துக்கொள்ளுமா ?
 2. சண்டமாருதன்

  குறும் படம்

  உண்மைதான். .மீம்ஸ் கிரி யேட்டராய் வரும் இளைஞன் சந்திக்கும் வேலைகான இன்ரவியூதான் இந்தப் படத்தின் சிறப்பு. தகவல்களை மட்டும் வைத்திருக்கும் தற்கால இளைஞர்கள் அதற்காக சுயத்தை நவீன தொழில் நுட்ப உலகில் இழந்துவிட்ட பரிதாப நிலை. முகநூலின் என்னுமொரு பக்கத்தை கட்டுகின்றது கீழே உள்ள குறும்படம். இலங்கையில் எடுக்கப்பட்ட படம் என நினைக்கின்றேன் . எயிட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
 3. https://timesofindia.indiatimes.com/india/commercial-flight-operations-begin-from-kochi-naval-airport/articleshow/65468393.cms மலையாளிகளின் கஞ்சா ஏற்றுமதிக்கு இலக்கு வைக்கப்படுவது இலங்கையும் குறிப்பாக வடபகுதியும் https://www.thenewsminute.com/article/sri-lankan-officials-raise-alarm-over-increasing-smuggling-kerala-ganja-71691 https://www.deccanchronicle.com/nation/crime/161117/kerala-ganja-sends-up-swirls-in-lanka-lanka.html மலையாளிள் மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டிலும் இலங்கை கடலிலும் கொட்டுவதால் அதிலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான். https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Bio-medical-waste-from-Kerala-causes-commotion/article15740379.ece https://www.thehindu.com/news/international/medical-waste-from-kerala-spotted-on-sri-lankan-shore/article24693729.ece இது தவிர மலையாளிகள் தமது இயற்கை வளங்கள் ஆற்றுப் படுக்கைகளை பாதுகாத்து அதே நேரம் பக்கத்து மாநிலங்களின் ஆறுகளை சூறையாடுவது நீண்ட காலம் தொடரும் பிரச்சனை. இங்கு விவாதிக்கும் விடயங்களை விட மலையாளிகளால் தமிழகமும் ஈழமும் இலங்கையும் சந்திக்கும் பாதிப்புகள் பல பத்து மடங்கு அதிகமானது. இவற்றுக்கான ஆதாரங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் தேடவேண்டியதுதான்.
 4. சண்டமாருதன்

  குறும் படம்

  ஆண்டவர் சவடால்
 5. வியாழேந்திரனோ இல்லை கருணாவோ மகிந்த அரசில் பதவி வகிப்பதால் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தலாம் என்று பொருள் இல்லை. அதே போல் வடக்கில் உள்ள அரசியல் வாதிகள் இவர்கள் போல் முடிவெடுப்பதால் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கலாம் என்று பொருள் இல்லை. இவைகள் பேச்சளவில் இருக்கலாம் தவிர நடமுறையில் சாத்தியமில்லை. எப்போது ஒருவர் தனது ஊருக்கும் பிரதேசத்துக்கும் என்றளவில் தனது சிந்தனையை குறுக்குகின்றாரோ அப்போதே பேரினவாதம் எந்த முயற்சியும் இல்லாமல் வெற்றி பெறுகின்றது .என்னும் தூர நோக்கில் சிந்தித்தால் பேரினவாதத்தின அடுத்த கட்டம் இஸ்லாமியர்கள் பரவலை தடுப்பது. அதை அவர்கள் நேரடியாக செய்யப்போவதில்லை. தமிழர்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையிலான பகையை விருத்தி செய்வதே அவர்களின் தெரிவில் முதன்மையானதாக இருக்கும். அதற்கு எற்றாற் போல்தான் அனைத்து அணுகுமுறைகளும் மாற்றங்களும் தென்படுகின்றது. கடந்த காலங்களைப் பார்த்து திருந்த மறுக்கும் எம்மவருக்கு எதிர்காலத்தில் மேலும் சில அழிவுகள் தவிர்க்க முடியாதது.
 6. பெண்கள் பொருளாதாரம் வேலைவாய்பு சார்ந்த தேவைகளுக்காக ஆண்களை அனுசரித்து போவதும் தேவைகள் பூர்த்தியாகி வளர்ந்த பின் குற்றம் சுமத்துவதும் தன் இந்த மீ டு வில் அதிகம் காணக் கூடியதாக உள்ளது. இந்த பல்லவியும் நீண்ட காலமாக அக்பருடன் விரும்பி உறவில் இருந்தவர் என்றே அறிய முடிகின்றது.
 7. முன்னய ஆட்சியில் செயற்பட்டதைப்போன்று செயற்படுவதற்கு என்ன இருக்கின்றது ? உரிமைக்கான போராட்டத்தையும் அது சார்ந்த மக்களையும் அழித்தாகிவிட்டது. எஞ்சியது மிஞ்சியது எல்லாம் உடலாலும் உளவியாலாலும் பொருளாதராம் உடமைகள் என அனைத்திலும் ஊனப்பட்ட மக்கள். என்னுமொருபக்கம் தேரிழுத்து திருவிழா கொண்டாடி பேரினவதத்தை அண்டிப்பழைக்கும் கூட்டம். என்ன செய்வது எப்படி போராடுவது மக்களோடு எப்படி இணைவது என்ற எந்த முடிவுக்கும் வரமுடியாத அரசியல் தலமைகள். இவற்றுக்குள் மகிந்த தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க எதுவும் இல்லை. போர்க்குற்றங்களை கடந்து மகிந்த திரும்ப அதிகாரத்துக்கு வருவதே பேரினவாதத்திற்கு பெரும் வெற்றி. சிங்களவர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவும் பேரினவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புலிவருகின்றது இருக்கின்றது என்று சில நாடகங்கள் நடத்தலாம் அல்லது இஸலாமியர்களின் பரவலைத் தடுக்கலாம். மகிந்த மைத்திரி ரணில் சந்திரிக்க எல்லாம் தமிழர்களை கொன்றதின் எண்ணிக்கையில் கூடிக்குறையலாம் தவிர அடிப்படையில் சிங்களப் பேரினவாதிகள்.
 8. புலம் பெயர்ந்த நாடுகளிலும் இதே நிலைதான். ஒரு மித்த சக்தியும் ஐக்கியப்பாடும் இந்த இனத்திற்கு அவசியமானது என்பது வெளிப்படையாக தெரிந்த போதும் அதற்கு எதிரான நிலையிலேயே பயணிப்பது இந்த இனத்தின் குணம் மரபு வரலாறு என்று எப்படி வேணடுமானாலும் சொல்லலாம். இனம் அது சார்ந்த பொதுநோக்கு என்பது சாதீய பிரதேசவாத முரண்பாடுள்ள சமூகத்தில் இரண்டாம் நிலையில் உள்ளதால் இந்த குணத்தை மாற்ற முடியாது. முடிந்தளவுக்கு ஒரு மித்த சக்தியாய் ஒரு குடையின் கீழ் நின்று முப்பது வருடமாக போராடி மடிந்த 40 ஆயிரம் போராளிகளின் காலம் மட்டு;ம் தான் வரலாற்றில் விதி விலக்கு. இனிவரும் காலங்களில் ஆளாளுக்கு ஒரு கட்சி ஊர்கள் தெருக்களுக்கு ஒரு சங்கம் என தத்தமது அடயாளங்களை தேடிக்கொள்ள வேண்டியது தான்.
 9. அழகையும் உடலையும் அடிப்படை மூலதனமாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இவர்கள் சாதார பெண்கள அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான போராட்ட குரலாக ஒருபோதும் இருக்க முடியாது. தேவைப்படும் நேரம் அனுசரித்து பணம் பார்ப்பது பின்னர் அவமானப்படுத்துவேன் என்று பணம் பார்ப்பது என ஏராளமான உள்நோக்கங்கள் கொண்டது இந்த சர்ச்சைகள்.
 10. தமிழ் அரசியல் தலமைகளின் புத்திக் கூர்மை , கல்வி கறறலின் மேல் நிலை நோக்கிய பாய்ச்சல் அரசியல் ஈடுபாடு, தனியே பொருளாதர விருத்தி சார்ந்ததோ சமூக நலன் சார்ந்ததோ கிடையாது மாறாக தமிழ்ச்சமூகத்தில மேலதிக்கத்தை உறுதிப்படுத்தவும் நிரந்தர சாதிய பிடியில் இருந்து அடயாளம் அந்தஸ்த்தை உயர்தவுமாக காலாகாலம் இருந்துவருகின்றது. இவற்றில் ஒரு அங்கமாக சிங்கள மேலாத்திக்கத்தை அண்டி அனுசரித்துப்போவது என்ற நிலை தொடர்கின்றது. இந்த அனுசரிப்புக்கு தொடர்ந்து பலியாகிவருவது தமிழர்களது உரிமைகள். தமிழ்ச் சமூகத்தின் தன்னினத்துக்குள் இரைதேடும் இந்த குணம் முதன்மையாக இருப்பதால் உரிமைகள பறிபோகும் வேகத்தையோ கனதியையோ வரலாற்று நெடுகிலும் தமிழ் அரசியல் தலமைகள் உணரவில்லை. இதை புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள் என்று சுருக்கிவிட முடியாது. அரசியல் தலமைகளின பேச்சுவார்த்தை அறிக்கைவிடுதல் பேரினவாத அரசை அண்டிப்பழைத்தல், மக்களில் இருந்தும் அவர்கள் பிரச்சனைகளில் இருந்தும் விலத்தி தத்தமதது அடயாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தல் எல்லாவற்றுக்கும் மேலாக உரிமைக்கான மக்களின் போராட்ட குணத்தையும் இயல்பையும் தமது அடயாள அந்தஸ்த்தை தக்கவைப்பதற்காக நீர்த்துப்போகச் செய்தல் என முற்றுமுழுதான தவறான அணுகுமுறையின் எதிர்வினையாக செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அடித்தட்டு மக்கள் வரை இணைநத ஆயுதப்போரட்டம் உருவாக காரணமாகியது. அனைத்து அழிவுகளின் ஆரம்பப் புள்ளியும் முதன் நிலைச் சூட்சுமமும் வரலாறு நெடுகிலும் தவறான அரசியல் அரசியல் அணுகுமுறைதான். ஒரு பேரழிவின் பின்னர் கூட ஆயுதப்போராட்டத்திற்கு முன்னர் இருந்த அரசியல் அணுகுமுறையை விட மோசமான அணுகுமுறையை தொடர்கின்றனர். தன்னினத்துக்கள் இரைதேடும் சமூகம் அதை திருத்தாவிடின் ஒரு கட்டத்தில் அழிந்து போவது விதி. ஒரு இனம் அழிந்து புலம்பெயர்ந்து பெருமளவு சிதைந்தத நிலையில் ஏஞ்சிய நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பகள் தொடர்வதால் இறுதியில் நல்லூர் எதிர்காலத்தில் கோயில் மட்டும் தமிழர்களின் அடயாளமாக இருக்கும் அப்போது அங்கு மணியாட்டுவதாக இப்போதைய அரசியல் தொடரும்.
 11. சண்டமாருதன்

  கவிஞர் வைரமுத்து பாடல்கள்.

  பாடல் வரிகளால் வாழ்க்கையை காட்சியாக மனதில் விரிப்பதில் இந்த பாடலும் ஒன்று