• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  13,891
 • Joined

 • Last visited

 • Days Won

  70

suvy last won the day on April 22

suvy had the most liked content!

Community Reputation

4,200 நட்சத்திரம்

1 Follower

About suvy

 • Rank
  Advanced Member
 • Birthday 05/04/1952

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  France

Recent Profile Visitors

8,572 profile views
 1. இந்தப் புள்ளி விபரங்கள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.....!
 2. சுக்லாம் பரதரம் என்று தொடங்கி விநாயகருக்கும், விஷ்ணுக்கும் தனித்தனியாக ஸ்லோகங்கள் இருக்கின்றன சகோதரி.....! விநாயகருக்கு. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே ..... வக்ரதுண்ட மகாகாய சூர்யகோடி சமப்பிரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்பேசு சார்வதே..... கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜாம்பூல சாரபசிதம் உமாஸுதம் ரோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கயம்..... ஓம்காராய பிந்து சம்யுக்தம் நித்யம் தியாயந்தி யோகின காமதம் மோஷிதம் சைவ ஓம் காராய நமோ நமம்..... மூஷிகவாகன மோதக ஹஸ்த சாமர கர்ணி விளப்பிக ஸுத்ர வாமனரூப மஹேஸ்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே.....! என்று வரும். இது மகாவிஷ்ணுவுக்கு:
 3. ஆனாலும் குரூமி செய்தது தப்புதான்....அவரிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.அவள் எடுத்த சேர்ட் அவரின் ஏதாவதொரு நினைவின் அடையாளமாக கூட இருக்கலாம்......!
 4. அநேகமாய் அனைவரும் சென்னைக்கு போட்டிருப்பார்கள்...ஹா.....ஹா....ஹாங்......!
 5. பறவையை பார்க்க மனசு வலிக்கிறது....!
 6. நானும் அந்தப்பெயரே அழகாய் இருக்கு என்பதற்காத்தான் எழுதினேன் புங்கை.வாசிப்பு ஒன்றுதான் எண்ணங்களை வளப்படுத்தும்.அது உங்களிடம் அபரிதமாய் இருக்கு நண்பரே.....! தேவார திருவாசகம் ஈறாக நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கம்பராமாயணம் திருக்குறள் அவ்வையார் பாடல்கள் சித்தர் பாடல்கள் போன்ற அளவிடற்கரிய செல்வங்கள் எல்லாம் சுத்தமான தமிழில்தான் இருக்கின்றன. அவ்வளவு சமஸ்கிருதத்தில் இருப்பது சந்தேகமே. அவை 90% வேதங்களும் செவி வழியாக சப்தம் மூலமாக வரும் மந்திரங்களுமே. அவற்றை அந்தந்த ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக் குறியீடுகளோடு கற்பகிரகத்துக்குள் நின்று சொல்வதால் அவற்றின் அதிர்வுகள் சூழ இருப்பவர்களின் உடலில் பரவி மன அமைதியையும்,சில வருத்தங்களையும் குணமாக்குகின்றன. அதிலும் இந்த அதர்வண வேத மந்திரங்களுக்கு பவர் அதிகமுண்டு.அதனால்தான் அவை மாந்திரிக தாந்திரீகங்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.நல்லதோ கெட்டதோ பலன் துரிதமாய் குடுக்கிறது. அதாவது ஒரு ஆஸ்மா நோயாளி இழுக்கும்போது பம்மை உள்ளிழுத்து புத்துணர்ச்சி அடைவது போல.ஆனால் அதுவே நிரந்தரமான தீர்வு ஆகாது. இப்பவெல்லாம் பிராமணர்களே சமஸ்கிருதம் கதைப்பது கிடையாது.எல்லோரும் இங்கிலீஸில்தான் பொளந்து கட்டுகின்றார்கள். சடங்குகளையும் இருபது ஓவர் கிரிக்கட் மாதிரி குறுக்கி விட்டார்கள்.அவர்களில் பலரது விரத நியமங்கள் கூட சுத்தமில்லை. அதனால் இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.
 7. ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சசாலி என நினைக்கிறேன் எழுதி ஒரு ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார்.அவர் அதை படித்துப்பார்த்து விட்டு இதில் நிறைய இலக்கணப்பிழை இருக்கிறது என்று சொல்லி அதை திருத்திக் கொடுத்தார்.இப்பொழுது கவிதை இலக்கண சுத்தமாய் இருந்ததது, ஆனால் அதன் ஆன்மா தொலைந்து விட்டது. தாகூருக்கு மிகவு வேதனையாகி விட்டது. இதை அவரது ஆசிரியர் என நினைக்கின்றேன் (வர வர எனக்கு மறதி அதிகமாகுது, இதிலும் ஒரு சௌகரியம் உண்டு வீட்டில் நான் சொன்னதை சொல்லேல்லை என்றும் சொல்லலாம். இங்கு அது முடியாது.கோட் பண்ணி சாயம் பூசி எடுத்துவந்து காட்டுவார்கள்).). அவர் இரு கவிதைகளையும் வாங்கி பார்த்துவிட்டு சொன்னார் இலக்கணம் சுத்தமாய் இருக்கும் கவிதையில் ஜீவன் இல்லை.ஒரிஜினல் கவிதை காட்டாறு மாதிரி எந்த எல்லைக்குள்ளும் அடங்காமல் உயிரோடு ஓடிக்கொண்டிருக்கு. அதுதான் அழகாய் இருக்குதென்று. பின் அதுவே பிரசுரமாயிற்று. அருள்மொழிவர்மனும் அப்படித்தான். சாண்டில்யன், கல்கி போன்ற ஜாம்பவான்களின் வர்ணனைகளில் கம்பீரமாய் வலம்வரும் அந்த பெயர் தமிழ்ப்படுத்தலில் படுத்து நோஞ்சானாய் விடும். வெத்திலையையே காணாத வெள்ளைக்காரன் அதுக்கு பேட்டல் என்று பேர் வைத்த மாதிரி. புங்கையின் தேடுதல் சிலாக்கியமானதுபல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது. வரு னன் : வருவது அண்மையில், இங்கு எட்டத்தில் இருந்து மழையாக வருதலால். வர்ணம் : பலவிதமான--- நிறங்களாகவும் இருக்கலாம், சாதிகளாகவும் இருக்கலாம். பண்டிதர்கள் எவராயினும் இவற்றின் வேர்ச்சொற்களைக் கூறி விளங்கப் படுத்தினால் நன்று....! என்னப்பா இது ஒரு பேருக்கு இவ்வளவு அக்கப்போராய்க் கிடக்கு....!