• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Innumoruvan

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  754
 • Joined

 • Last visited

 • Days Won

  14

Innumoruvan last won the day on October 4 2015

Innumoruvan had the most liked content!

Community Reputation

517 பிரகாசம்

About Innumoruvan

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Recent Profile Visitors

1,710 profile views
 1. மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள். பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்தம் என்றிருந்தது. ஒரு கதைப்புத்தகம் மண்டபத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்தது. அப்புத்தகத்திற்குப் பொழிப்புரை என பல்வேறு முயற்சிகள் மண்டபததிற்குள் நடந்துகொண்டிருந்தன. புத்கத்தைச் சிலர் கொண்டாடினர், அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களைச் சித்தரிப்பதாகத் தமக்குத் தோன்றிய விடயங்களைச் சித்திரங்களாக்கி, அவற்றை நிரையாக கணனிவழி சுவரில் தெறித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் முடிவு சார்;ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தியதாக அவர்கள் நம்பிய அக புறக் காரணிகள் சார்ந்து அவர்கள் தங்கள் விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டார்கள். ஏதோ ஒரு வகையில் பலரது மனம் புத்தகத்தின் ஏதோ ஒரு அம்சத்தில் குவியப்பட்டிருந்தபோதும், வந்திருந்தவர்களிற் சிலர், புத்தகத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத தமது பிணக்குகளையும் உரசிப்பார்த்தார்கள். முட்டை மண்டபம் அமைந்திருந்த காணி விசித்திரமாக இருந்தது. ஒரு உயரமான மரத்தில் ஏறி நின்று கீழ் நோக்கி அந்தக் காணியினைப் பார்க்கின் அது ஒரு அடைக்கோழி போன்று தோற்றமளித்தது. முட்டைக்கு அடைக்கோழி பொருத்தமாகத் தான் இருந்தது. கோழி வாலறுந்ததாக இருந்தது. அது உண்ட இரைகள் விசித்திரமான முறையில் கோழியின் வயிற்றின் ஒரு பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. உணவு செரித்துவிட்டபோதும், தான் உண்ட அனைத்து இரையினையும் கோழி வயிற்றிற்குள் அடையாளப்படுத்தி வைத்திருந்தது. கோழியின் தொண்டைவழி மண்டபத்திற்கு மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த புத்தகம் புதியதோர் உலகம் போன்று ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. எழுத்தாளர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தை வாசித்தவர்கள் அதனை ஒரு புனைவுபோன்றும் சமயத்தில் கொண்டாடியபோதும், புத்தகம் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கதைமாந்தர்களும் அந்த மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தைப் பார்ப்பதும், பின் கதைமாந்தர்களைக் கண்களாற் தேடுவதுமாக வந்திருந்தவர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். கதைமாந்தரைக் கண்டமாத்திரத்தில் வரையறுக்கப்பட்ட வித்தில் தாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வந்திருந்தவர்கள் ஏனோ நம்பினார்கள். ஆனால், விசித்திரமான முறையில், அறையில் இருந்த நிசப்த்தம், வந்திருந்தவர்களின் உணர்வுகளையும் ஓசையற்றதாக்கியிருந்தது. மூளை இவைசார்ந்து இவ்வாறு நீ உணர்வாய் என்று உணர்த்தத் தலைப்பட்டபோதும், மனது வரண்டநிலமாய் உணர்ச்சியற்று நிசப்த்தம் காத்தது. மண்டபத்துள் இருந்தவரை, புத்தகத்திற்குள் இடைச்செருகல்களையோ பின்னிணைப்புக்களையோ வாசகர்களால் இணைத்துவிடமுடியவில்லை. நிசப்த்தம் வாசகரை நெறியாழ்கைசெய்தது. நிகழ்வு முடிந்து, வந்திருந்தவர்கள் அடைக்கோழியின் தொண்டைவழி தத்தமது வீடுகளை அடைந்து இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்தபோது... புத்தகத்தின் கதையின் இரண்டாம் அத்தியாயம் ஒன்று வாசரகருள் ஒரு சிறு விதையாகத் துளிர்க்கத் துடித்தது. இந்த இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு அபத்தம் இருந்தது. அதாவது, கதைமாந்தரின் வாழ்வில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளிநின்றபடி, தாம் எழுதவிளையும் இரண்டாம் அத்தியாயத்தால் தமக்கு எவ்வித பொறுப்போ செலவோ ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டு, தாம் படித்த இலக்கியங்களினதும் தாம் பார்த்த நாடகங்களினதும் தாக்கத்தில், மனக்கிழர்வுடன் அந்த இரண்டாம் அத்தியாயம் துளிர்க்கத்தலைப்பட்டது. அபத்தம். உண்மைச் சம்பவங்களின் தொகுப்பிற்கு இது அபத்தம். ஆனால்: உலகின் அனைத்து அபத்தங்களையும் போன்று, இந்த இரண்டாம் அத்தியாயமும் எழுத முயற்சிக்கப்படும். இலக்கியம் வலியது. அது அழகியலைச் செவ்வனே வாசகருள் பதியம்போட்டுவி;ட்டது. ஆதலால், அபத்தம் என்று தெரிந்தபோதும், அழகியலிற்கு இரைதேடி, அழகியல் கோணத்தில் இந்த இரண்டாம் அத்தியாயத்திற்கான முயற்சி நடக்கப்போவது திண்ணம். ஒருவேளை அந்த இரண்டாம் அத்தியாத்தின் தலைப்பும் இப்படி இருக்கும்: 'ஒரு மரணச்சடங்கு மண்டபத்திலிருந்து - சிறு குறிப்பு'
 2. பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்டு கைகள் போன்று மெழுகுவர்த்தியினால் உருக்கி இரண்டு றீபிள்களும் இணைக்கப்படுகின்றன. றீபிள்களின் மறுமுனையில் இரு பலூன்கள் இறுக்கமாய் இணைக்படுகின்றன. இந்த அமைப்பு போத்தலின் அரிந்து திறக்கப்பட்ட கீழ்ப்பகுதியினால் உட்செலுத்தப்பட்டு, பேனாவின் உடல் போத்தலின் வாயினால் வெளிவந்ததும், காற்றுப் புகாவண்ணம், போத்தலின் வாயோடு பேனாவின் உடல் தக்கை கொண்டு இறுக்கி இணைக்கப்படுகிறது. ஒரு பலூனினை அரைவாசியாக வெட்டி அந்த றப்பர் கொண்டு போத்தலின் கீழ்ப்பகுதி மூடப்படுகிறது. அந்த பலூன் இப்போது பிரிமென்தகடு என்றாகிப்போகிறது. பிரிமென்தகடான பலூனைப் பிடித்து இழுக்க, றீபிள்களில் பொருத்தப்பட்ட பலூனினுள் காற்று உட்சென்று நுரையீரல் என்றான பலூன்கள் பெருக்கின்றன. இழுத்த றபறை விடுவிக்க காற்று வெளிச்சென்று நுரையீரல் சுருங்கிக்கொள்கிறது. சுவாசத்தொகுதியின் செயன்முறை விளக்கம் உட்பட்ட விஞ்ஞான விளக்கம் முடிக்கபட்டபேது, ஆசிரியர் காட்சிப்பொருளினை கண்காட்சிக்குத் தெரிவுசெய்து அவனை அதை விளக்கும் பொறுப்பில் நியமிக்கிறார். ----------------------------------------- ரெயில் ஓடிக்கொண்டிருக்கிறது. கண்ணை மூடி, மூச்சு உட்செல்வதையும், தன் வயிறு உப்பி மேலெழுவதையும், பின்னர் வயிறு சுருங்க மூச்சு வெளிச் செல்வதையும் அவதானித்தபடி அவன் தியானத்தில் இருக்கிறான். ஏதோ ஒரு தரிப்பில் வண்டி நிற்க, அப்போது தான் கதைக்கத் தொடங்கியிருக்கும் ஒரு குழந்தையோடு ஒரு தந்தை வண்டியில் ஏறுகிறார். குழந்தையின் கதை மூலம் அவர்கள் ஏறியதை இவன் மூளை அறிகிறது. புகையிரதத்தின் கதவு சாத்துகிறது. 'நான் மூடிவிட்டேன்' என்று சொல்லிக் குழந்தை சிரிக்கிறது. 'நீ மூடினியோ?' தந்தை நெகிழ்ச்சியான நகைப்போடு கேட்கிறார். வண்டி நகர்கிறது. யார் கதவினை மூடியதென்பதில் குழந்தைக்குத் தெட்டத்தெளிவான புரிதல் இருப்பதனால் அது அதுபற்றி அது மேலே பேசவில்லை. --------------------------- மேடையில் அரசியல் வாதி வாக்கு வங்கியினைக் குறிபார்த்து அடித்துக்கொண்டிருக்pறார். 'எம்முப்பாட்டன் சுவாசித்த காற்றைச் சுவாசித்தபடி என் மண்ணில் நான் நிற்கிறேன்' என்கிறார். கரவொலி வானைப் பிளக்கிறது. கூட்டத்தில் உணர்ச்சி மேலீட்டில் சில கண்கள் பனித்திருக்கின்றன. ஒரு செல் அமீபாவிற்கு முன்னிருந்தும் தற்போதும் இனிமேலும் இருக்கும் காற்று மூக்குவளி நுழைந்தும் பிரிந்தும் கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் அனைத்தையும் இணைத்து ஒரே வெளி பரந்து கிடக்கிறது. காற்றிலும் வெளி ஒட்டியிருக்கிறது. மனதின் ஆதிக்கத்தில் மேடையும் சனத்திரளும் அமிழ்ந்து கிடந்தபோதும், சுவாசிப்பதற்கு யாரும் எந்த முயற்சியும் எடுக்காத போதும், ஆவர்த்தனம் மாறாது அனைவரிற்குள்ளும் சுவாசம் நடக்கிறது. சுவாசம் வெறும் காற்றின் உட்செல்லலும் விலகலுமாக மட்டுமன்றி காற்றோடொட்டிய வெளியின் வளியாக மனித இயந்திரத்திற்குத் தரவுகளையும் வளங்கிக் கொண்டுமிருக்கிறது. வெளியேறும் காற்று உள்நடந்த அனுபவங்களையும் காவிச் செல்கிறது. முப்பாட்டன் சுவாசித்த காற்று என்பது மறுப்பதற்கில்லை. உலகின் அனைத்து ஆளுமைகளும் சுவாசித்த ஒரே காற்று. அனைவரின் அனுபவமும் அதனுள் பதிந்து கிடக்கிறது. கோக்கோகோலாப் போத்தல் சுவாசத் தொகுதிக்குள் நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கும் காற்றும், நம் முப்பாட்டனும், அவன் வேட்டையாடிய மானும், புலியும் கரடியும் சுவாசித்த காற்றும் மரமும் மலையுமென அனைத்தும் தரவுகளை வாங்கியும் கொடுத்தும் கொண்டே இருக்கின்றன. ----------------------------------------- கட்டிலில் படுக்கைக்குச் சென்றதும், படுத்தவர் எத்தனை தடவை புரண்டு படுத்தார், குறட்டை விட்;டாரா, தூங்கினாரா, கனாக் கண்டாரா என அனைத்துத் தரவுகளையும் ரா முழவதும் கட்டில் மின்காந்த அலையாக அனுப்பிக்கொண்டிருக்;கிறது. எங்கோ தொலைவில் ஒரு கணனினியில் தரவுகள் உள்ளீடாகி, காலையில் தூக்கத்திற்குப் புள்ளி வளங்கப்படுகிறது. சிறந்த தூக்கமெனில் பச்சை ஒளி மின்னுகிறது. 'Internet of things' என்ற வகையில் முன்னர் நம்மால் சடங்கள் எனக்கருதப்பட்ட அனைத்திற்கும் மூளை வளங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இருபத்து நான்கு மணிநேரமும் தரவுகள் மின்காந்த அலையாக அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தரவுகள் தற்போது விளைபொருட்கள் என்றாகிப்போய் சந்தை விற்று வாங்குகிறது. சுவாசத் தொகுதியினைக் கண்காட்சியில் விளக்கியவன் இன்று சுவாசத்தை மறந்த மென்பொறியாளனாக மொடல்களை எழுதிக்கொண்டிருக்கிறான். மின்காந்த அலைகள் எடுத்துவரும் தரவுகளைக் கொண்டு தன் மொடலினை மேலும் மேலும் பயிற்றிக் கொண்டிருக்கிறான். காற்று உள்நுழைவதால் தனக்குள் எழுகின்ற மனத்தினை ஒத்து மின்காந்தத் தரவுகள் உள்நுளைந்ததும் கணனிக்குள் மனத்தை எழுப்புவது அவனது வேலை. அவனது முகாமைத்துவத்தின் கீள் மேலும் ஆட்கள் கணனி பயிற்றத் தேவைப்படுகிறார்கள். விண்ணப்பதாரிகளில் ஒருவரை நேர்முகத் தேர்வு செய்வதற்காய் அறைக்குள் நுழைகிறான். ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் ஒரு கிழக்கு ஐரோப்பியர் சூட்டும் ரையும் உள்டங்க உச்ச நாகரிகத்தில் உடை அணிந்து இவனிற்காகக் காத்திருக்கிறார். ஐந்து நிமிட உரையாடலில் அவர் தேறமாட்டர் என்பது தெரிந்து போகிறது. இருப்பினும் நாகரிகம் கருதி குறைந்தது அரைமணிநேரமாவது அம்மனிதரோடு உரையாடல் அவசியம் என்றுணர்ந்து மேலோட்டமாக அவரிடம் கேட்கிறான: 'இன்றை உலகின் இலத்திரனியற் தரவுகள் சார்ந்த உங்கள் பார்வை எவ்வாறிருக்கிறது?' சற்றும் தாமதிக்காது மனிதர் பதிலளிக்கிறார்: 'வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் எங்கும் நிறைந்தவர் அனைத்தும் அறிந்தவர். பிசாசு மட்டுமே தரவுகளிற்காக ஏங்கும். அது மூச்சுவிடாது தரவுகளைத் திரட்டிக்கொண்டிருக்கும். கடவுளிற்கு ஈடாக தானும் அனைத்தையும் அறிந்தவனாய் ஆகும் அவாவில் பிசாசு மூச்சிரைக்கத் தரவு திரட்டும். ஆனால் தரவுகள் காட்டாறாய் அதனிடம் பாய்ந்து வரினும், அத்தரவுகளை அதனால் எப்போதும் கிரகிக்க முடியாது. தரவுகளில் திணறி அது தரவுகளைக் காணாது மேலும் தரவு சேர்த்துக்கொண்டிருக்கும். தற்போதைய உலகில் நம் அனைவரது முகங்களிலும் எண்ணற்ற மின்தரவுகள் அறையப்படுகின்றன. ஆனால் நமது மூளை கிரகிக்க முடிhயாது மூடிக்கொள்கிறது. பிசாசு மூச்சிரைக்கத் தரவு தேடுகிறது, கடவுள் மட்டுமே எங்கும் நிறைந்தவர் அனைத்தும் ஏற்கனவே அறிந்தவர்,' மூச்சிரைக்கக் கூறிவிட்டு, அந்த மனிதர் தன் மூக்கு வளி உள்நுழையும் காற்றையும் அதனால் மேலெழும்ப்பிப் பின் கீழிறங்கும் தன் வயிற்றையும் பின் மூக்கு வழி வெளியேறும் காற்றையும் பார்த்தபடி இரு நிமிடம் இருக்கிறார். பின் முறுவலுடன் 'உங்கள் நேரத்தை விரயமாக்கியதற்கு மன்னிக்கவும். எனது தகமை இந்த பொறுப்பிற்குப் பொருத்தமில்லை என்பது தெரிகிறது' என்று கூறிக் கைகுலுக்கி விட்டுச் செல்லுகிறார். சுவாசத்த் தொகுதியில் ஐந்து நிமிடம் தியானித்து வி;ட்டு, கணனி பயிற்றும் தொழில விட்ட இடத்தில் இருந்து தொடரப்படுகிறது....
 3. அனைவரது கருத்திற்கும் மிக்க நன்றி. தும்பளையான். உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். காக்கி நிறத்தில் பாவாடை என்று தலைப்பிட்டமைக்கு ஒரு காரணம் முதற்பந்தியில் சொல்லப்பட்ட வெளிப்படையான காரணம். மற்றையது, மனவமைப்பின் மீதான நையாண்டி. எதேச்சையாக கையில் கிடைத்த ஒரு புத்தகம் ஒரு புதிய முனை விசாரணைகளைக் கிழறிக்கொண்டிருப்பதால், இதுவும் இதற்கு முந்தைய பதிவும் அப்புத்தகத்தின் தாக்கத்தில் தான் இருக்கின்றன. சில நாட்களிற்கு முன்னர் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவரிற்குக் கைகள் இல்லை. விரல்கள முளங்கையிற்கும் தோளிற்கும் இடைப்பட்ட பகுதியில் முளைத்திருந்தன. அவையும் சூம்பிப்போயிருந்தன. ஆனால் நான் பார்த்தபோது அந்தப் பெண், பிளக்பெரியில் அலுவலக மின்னஞ்சல் அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தாள். எனது மனதின் கணிப்பீட்டில் அவளது கைகளை மடக்கினால் அவை பிளக்பெரியினை பிடிக்கும் அளவிற்குக் நீளமுடியாத குள்ளமாகவே தோன்றின. ஆனால் என் கண்முன்னே அந்தக் கணிப்பிற்கு முரணாக அவள் இயங்கிக் கொண்டிருந்தாள். அவளது கையின் தன்மை எனக்குள் மறைந்து போய் ஒரு சக மனிசி தோன்றினாள். இவ்வாறே அதை அடுத்த சில நாட்களில் ஒரு ட்;டுவோபிசம்(குள்ளன்) பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன். எமது மனதின் தன்னிச்சையான கணிப்பீடுகளைத் தாண்டுகையில் அவனுள்ளும் அவனது வயதின் முதிர்ச்சிக்கேற்ற மனிதன். குள்ளன் எனது மனதில் மறைந்து போய் ஒரு சக மனிதன் தோன்றினான். ஆனால் பெரும்பான்மை மணித்துளிகள் மனதின் கற்பிதங்களிற்குள் சிறைப்பட்டே கிடக்கின்றன. இந்தக் கதை அகம் புறம் என்பதாகவோ, உள்ளிற்குள் எல்லாம் ஒன்று என்ற சமரசமாகவோ எனக்குள் எழவில்லை. மாறாக, மனதின் கற்பிதங்களிற்கு மேலான தளம் என்ற வகையில் தோன்றியது. நான் குறிப்பிட்ட காணொளியில் அந்த 84 வயது உடலத்தின் முகத்தை மறைத்திருந்தார்கள், அதன் காரணம் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக என்றார்கள். முகம் மட்டுமே எமது அடையாளமா? அடையாளங்கள் சார்ந்து fragmented realities create பண்ணிக்கொண்டு யானை பார்த்த குரடர்களாக வாழ்வு நகர்கிறது.
 4. கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாய் நினைத்துக்கொள்கிறார்களோ என்று நினைக்கத்தோன்றியது காட்சி. அன்றைய நாள்முழவதும் அழகியல் நிறைந்து கிடந்தது. பொதுவாக நாள் எவ்வாறு ஆரம்பிக்கிறதோ அவ்வாறே நகர்கிறது. மாலை திட்டமேதுமில்லாததால் யூரியூபை நோண்டிக்கொண்டிருந்தேன். ஒரு வித்தியாசமான காணொளி கண்ணில் படப் பார்கத் துவங்கினேன். 84 வயதில் மரணித்த ஒரு பெண்ணின் உடல் அம்மணமாக மேசையில் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிவர பார்வையாளர்களும் ஒளிப்பதிவுக் கருவிகளும் இருந்தன. இரண்டு மருத்துவர்களும் ஒரு சில மாணவர்களும் இருந்தார்கள். நிகழ்வு ஜேர்மனியில் பதிவாகியிருந்தது. மனித உடலமைப்பு, குறிப்பாக குருதியோட்டத் தொகுதியில் நிகழக்கூடிய பிறழ்வுகள் பற்றியது நிகழ்ச்சி. அதற்காக அந்தப் பெண்ணின் உடல் வெட்டித் திறக்கப்பட இருந்தது. சில முகவுரைகளைத் தொடர்ந்து, ஜேர்மனிய மருத்துவர் உடலத்தை அறுக்கத் தொடங்கினார். கழுத்திற்குக் கீழே நெஞ்சுப் பகுதியில் ஆரப்பித்து இடது மார்பகத்தைக் கடந்து சென்று அடிவயிற்றைக் குறுக்கறுத்தது வெட்டுப் பாதை. ஒரு பயணப் பொதியின் சிப்பைத் திறந்து பையைத் திறப்பது போல் கத்தி அந்த உடலத்தின் சிப்பைத் திறந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிற கொழுப்பு வெளியே தெரிந்தது. இறந்த உடலமாதலால் குருதிப்பெருக்கில்லை. மூன்று நான்கு தடவை கத்தி தடத்தில் பயணித்தபின்னர் பயணப்பொதி திறப்பது போல் மருத்துவர் அந்த உடலத்தில் உடம்பின் மூடியினை அவளது இடது மார்பகத்தோடு சேர்த்துத் தூக்கித் திறந்து போட்டார். உள்ளுர நுரையீரல் தொட்டுப் பெருங்குடல் முடிவுவரை அவள் உள்ளுறுப்புக்கள் கிடந்தன. அன்றைய நாள் முளுவதும் நிறைந்து கிடந்த அழகியலை மறுபடி நினைத்துப் பார்த்தேன். காலையில், காக்கி நிறப் பாவாடை, நீல நிறச் சட்டை, சிற்றருவியெனக் கருங்கேசம், லூயி விற்ரான் பை, தாளத்திற்குத் தப்பாதை நடை, அவளுடன் பேசிவிடத் தோன்றிய எனது உந்துதல். மாலையில், இடது மார்பகம் உள்ளடங்கலாகப் பயணப் பை திறப்பது போல் திறந்து போடப்பட்ட உடலம். இப்போதும் முறுவல். நாளைய காட்சிகளிற்காய்ப் பின் தூக்கம்.
 5. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும். கனவு பற்றி எழுதவில்லை, கனவு போன்று அர்த்தமின்றிக் கரைந்து கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து விழித்துக்கொள்ளல் பற்றியது. தூக்கம் என்பதை விழிப்புணர்வுக்கு முந்தை நிலையாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். உலகின் அத்தனை சமயங்களும் (இந்து, கிறீஸ்த்தவம், இஸ்லாம் (சூபி குறிப்பாக), பௌத்தம், சென் அனைத்தும்) காலாதிகாலமாக குறிப்பிடும் அடிப்படை விடயங்கள், மூன்றாம் வகுப்புச் சமயப்புத்தகத்திலேயே நாம் படித்துவிட்டாலும் விழிப்புணர்வின்றி, துன்பத்தில் உழன்று, எத்தனை செழிப்பிருப்பினும் வெறுமை மட்டும் உணரப்பட்டதாயப் பல வாழ்வுகள் நகர்கின்றன. மனம் பற்றிய புரிதல் இன்றி, உலகை துண்டுதுண்டாக மட்டும் பார்த்துக் கிடக்கிறோம். அனைத்தையும் மனதின் ஆதிக்கத்தில் விடுத்து, தீர்ப்புக்கூறாது எதையும் பார்க்க முடியாதவர்களாக, இருக்கிறோம். எம்மை உலகினின்று பிரிந்தவர்களாக ஒரு தீவு போன்றே எம்மையறியாது உணர்ந்துகொண்டிருக்கிறோம். உலகின் முழமைக்குள் நாமும் என்பது ஞாபகத்தில் வருவதே இல்லை. கவிதை போன்றன கூட துண்டு துண்டா விடயங்களை மனத்தின் ஆழமைக்குள் மட்டும் நின்று பேசிக்கொண்டிருக்கின்றன. அழகை வெழியே தேடுகின்றன. மதிப்பீடு தீர்ப்பு என்பனவற்றைத் தாண்டிய, மனதிற்கும் சிந்தனைக்கும் அப்பாலான கட்டத்தில் பார்த்தல் என்றவகையில் இதைப் பதிந்துள்ளேன். கவிதை என்று பதிந்துவிட்டு அதற்கு பொழுpப்பும் எழுதுவது சரியாக அமையாது என்பதால் வாசகர் கையில் விட்டுகிறேன். சுவியின் பார்வை அண்மித்து வருவதாகத் தோன்றுகிறது.
 6. மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒன்று, ஒரே ஒன்று, துளிகளிற்குள்ளும் விரியும் ஒரே வெளி வெளியில் ஞானமில்லை, வெளியே ஞானம் அனைத்தும் வெளியாதலால் ஞானமே அனைத்தும் பள்ளியில் இல்லை கருத்தரிப்பில் இல்லை, இருப்பிற்கு முந்திய இல்லாமையில் இல்லை, அது இல்லாது இருந்ததே இல்லை, தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை பேருந்து நிலையத்தில் குள்ளன் ஒருவன், பிச்சைக்கார நோயாளி பிறிதொருவன், முதிய பெண்ணொருத்தி, அழகி இன்னொருத்தி தன் இருப்பைப் பேண... மனம் தீர்ப்புக்கள் எழுதிக்கொண்டிருக்கையில் மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டுதொலைந்தது கூடவே தூக்கமும் கலைந்தது குள்ளனும் கிழவனும் நொடிந்தோனும் அழகியும் என்னானார்கள் தெரியாது இரண்டு கட்டையில் எரியும் ஒரே நெருப்பு பூமிப்பந்தில்லை, பால்வெளிகளில்லை, சூரியசந்திர நட்சத்திரத் துகள்களில்லை ஆதியும் அந்தமும் அற்ற, அடியும் முடியும் இல்லா, நேரம் மரித்த ஞானப்பெருவெளியில்...ஆனந்தத் தாண்டவம் நேரமில்லை, ஆதலாற் தாண்டவம்... தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை
 7. மனிதன் என்பது வெறும் மென்பொருள் மட்டும்தான். அடிப்படையில் இயந்திரம் அனைத்து விலங்கையும் ஒத்தது தான். அடிப்படை இச்சைகள் பயங்கள் அனைத்தும் அனைத்து மிருகங்களிற்கும் தேவை சார்ந்து ஒரே வகையில் தானே அமைகின்றன. அடிக்கப்பட்டுப் போடப்பட்டிருக்கும் இளைனைப் பார்க்க மனது வலிக்கிறது. அதே நேரம் சொத்திழந்தவர்களின் வாதம் முற்றாகப் புரிகிறது: போலிஸ் அடிச்சால் என்ன அயலவர் அடித்தால் என்ன, தண்டனை பற்றி மட்டும் சிந்திக்கையில் எல்லாம் ஒன்று தான். பிரச்சினை இங்கு, எதனால் இளைஞர்கள் களவினை தொழிலாக்குகிறார்கள் என்பது. அது பசு வழர்ப்பவர்கள், திருடுபவர்கள் சமூகத் தலைவர்கள் உட்பட்ட சமூகத்தின் அனைத்து சாராரையும் சோர்த்து நடக்கவேண்டிய உரையாடல். அதற்கு சோதினை மட்டும் திறமைசாலிகளை அடையாளம் காணும் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டும். அதற்கு தலைமைத்துவப் பண்புகள் மட்டுமன்றி சற்று தியாகமனப்பான்மை உடையவர்கள் தேவைப்படும். அத்தகைய மனப்பான்மையும் திறமையும் உடையவர்களை அடையாளங்கண்டு வளர்ப்பதற்கு சமூகத்திற்கு அவகாசம் இல்லை என்பது இத்தகைய செய்திகளில் மேலும் உணரப்படுகையில் மீண்டும் வெற்றிடம் வலிக்கிறது.
 8. 'பவானி மச்சாள்' என்று தலைப்பிட்டுவிட்டு அம்பிகா மச்சாளைப் பற்றி முழுதாக் கதையெழுதி முடிச்சதைப் பாக்க freudian slipபாக இருக்குமோ என்று தோன்றுது. பிடிச்சமச்சாள் பவானியாக இருக்கலாம்
 9. நன்றி உங்கள் கருத்திற்கு சுகன். உண்மையில் விவாதங்கள் இன்றைய நிலையில் பண்டைய விடயமாகிப்போய்விட்டன. சந்தை அதையே விரும்புகிறது. அதனால் உங்களைப் போன்ற ஆழ்ந்த விவாதங்கள் எதிர்த்தரப்பி;ல் அமையும் போது மகிழ்வாக இருக்கிறது—விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதனால். உங்கள் கருத்தில் இருக்கும் கோபம் புரிகிறது. ஆனால் என்னால் உடன் படமுடியவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்ல முன்னர், இப்படி சோபாசக்த்தி எழுதியதால் அவரிற்கு கிடைக்கும் உளவியல் பற்றி பேச முனைவதற்கு முன்னர், குறைந்தபட்ச பொதுநலம் என்று ஒன்றைத் தன்னும் கூறலாம். அதாவது, சோபா தன்னாலே புரியமுடியாத பிறழ்வு ஒன்று தனக்குள் நிகழ்வதாகத் தானே கூறுகிறார். இது சார்ந்து அவர் விமோசனம் தேடுகையில், சோபாசக்த்தியினைத் தெரிந்த, திரு போன்ற இதர பெற்றோர்கள், சோபாவின் மடியில் குழந்தைகள் அமர்வதைத் தவிர்க்கலாம். உலகில் கட்டுப்பாட்டை மீறிய பிறழ்வுகள் இருக்கவே செய்கின்றன. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் அத்தகைய பிறழ்வுகளை தம்மில் உணர்பவர்கள் இருட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள். தீர்வைத் தேடுவதற்குப் பதில் தொடர்ந்து துன்பம் விளைவித்தபடி வாழ்கிறார்கள். அந்தவகையில், தனது பிறழ்வைப் பொதுவெளியில் பேசுவதைப் பாராட்ட வேண்டும். குறைந்தபட்சம், இருட்டில் ஒரு குருடன் விளக்கினை எடுத்துச் செல்வது போலாவது இதனைப் பார்க்கலாம். தனக்குத் தான் ஒளி தெரியவில்லை என்றாலும், மற்றையவர்கள் அந்த ஒளியினைப் பார்த்துத் தன்னோடு மோதாது செல்லட்டும் என்ற அளவிலேனும் இந்தக் கதையினை ஒரு குப்பி விளக்காகவேனும் பார்க்க முடியும். இனி சமூகம் என்பது என்னதான் பொதுமையானதாய் உணரப்பட்டுப் போதிக்கபடினும், அதன் பிரயோகம் என்பது ஒவ்வொரு மனிதனதும் தனித்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு இன்ன விடயங்கள் அனுகூலமானவை என்பதில் பொது உடன்பாடு அடையப்படினும், சமூகத்தால் சராசரி மனிதனிற்கான விதிகளையே அடையமுடியும். விதிமுறித்தல் நாளாந்தம் அனைத்து முனைகளிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன--இல்லாது போனால் சமூகத்தில் ஏழை பணக்காரன் எங்கனம் சாத்தியம்? சுpல விதிமீறல்களைச் சமூகம் வியப்புடன் பார்க்கும், கைதட்டவும் கூடும். சுpலவற்றைக் காறித்துப்பும். சுமூகம் காறித்துப்பும் அனைத்து விதிமுறித்தல்களில் சமூக்தினைப் பயப்பிடுத்தும் விடயங்கள் இருக்கும். பயம் பிறப்பதற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படை, மிகமுக்கியமானது புரியாமை. அடுத்தது, புரியாத விடயங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்ற அங்கலாய்ப்பு. புரியாத விடயங்களைப் புரிவதற்கு முனைவது கடினமானது, அதற்கு ஒரு விலை உண்டு, அந்த விலையினைப் கொடுப்பதற்குப் பதில் பொதுப்புத்தி புரியாத விடயங்களை அகற்றிவிடல் வினைத்திறன் மிக்கது என்று எடுத்துரைக்கும். உடனே புரியாதன சார்ந்து நாம் காறித்துப்பத் தொடங்கி விடுகிறோம். சனநெரிசலான இடத்தில் ஒரு மனிதனின் காம உணர்வுகள் அறைக்குள் இருப்பதைப் போல் இருக்காது என்ற உங்களின் உதாரணத்திற்கு வருவோம். சமூகம் பொதுவெளி நாகரிகம் என்று ஒன்றை வரையறுத்துள்ளது. ஓத்துக்கொள்கிறேன். அவ்விதிப்படி மனிதன் உடைகளிற்குள் உடலை மறைத்துத் தான் வருகிறான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரது மனங்களும் விதிகளின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே சிந்திக்கும் என்பது ஏற்புடையதல்ல. சனக்கூட்டத்தில் சில மனிதர்கள் காமம் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலர் உடமைகளைக் கொள்ளையடித்தல் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலரிற்கு அர்த்தமின்றி துவேசம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் தோன்றி கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிடத்தோன்றும். இப்படி சமூக ஒழுங்குகளி;ற்கு முரணான எத்தனையோ எண்ணங்கள் சர்வசாதாரணமாய் சனக்கூட்டத்தில் நிகழும். ஆனால் பெரும்பான்மை மனிதரிற்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கம் என்ற மென்பொருள் அத்தகைய விதிமுறித்தல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும். சிலர் சற்று சாகச உணர்வில் கட்டுண்டு கொஞ்சம் விதிமுறிப்பர் (நமது திரைப்படங்கள் காட்டும் பேருந்து உரசல்கள் போல). மிகச்சிலரில் ஒழுக்க மென்பொருள் வினைத்திறனற்றுப் போகும். அதை நாம் மறுத்து விட முடியாது. சமூகத்தின் ஒழுக்கம் என்பது தன்னைத் தக்கவைத்தல் என்ற ஒரே நோக்கத்தில் எழுவது. இது அனைத்து உயிரனத்திற்குமான பொதுப்பெறுமதி என்பதனால் ஒழுக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால் பிறழ்வுகள் இல்லாது கூர்ப்பு இல்லை. மரபணுக்களின் திரிபுகள் கூட ஒருவகையில் பார்த்தால் பிறழ்வுகள் தானே. அக்கா அம்மா தங்கை மகள் ஏன் நண்பி சார்ந்து கூட மனிதனின் மனம் ஒழுக்க விதிகளின் படி மட்டும் தான் சிந்திக்கும் என்ற நிலை நன்றாகத் தான் இருக்கும் ஆனால் இயற்கை அவ்வாறானது அல்ல. பிறழ்வான எண்ணங்கள் தோன்றும் போது அதை மனதின் அடி ஆழத்திற்குள் புதைத்துவிட முனைவது இயல்பு. பலரிற்கு அது சாத்தியப்படும். சுpலரிற்கு இது முடியாது இருக்கும். பெண்களின் உடலியல் வளர்ச்சிகள் சார்ந்து சமூகம் கூட்டாக அணுகுகிறது. ஆனால் ஆண்களின் உடல் சார்ந்து பொதுப்பேச்சு மிகக்குறைவு, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சும் புராதன சமூகங்களில் இது அதிகம். பதின்மத்தில் உடல் வளர்சியில் நித்திரையில் நிகழும் விந்துவெளியேற்றங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளில் மிகப்பெரும்பான்மையானவை ஒழுங்களை மீறுவனவாகவே அமையும். அப்படி இருக்கையில் சித்தசுவாதீனம் உள்ள மனிதரின் மனங்களில் அனைத்தும் ஒழுக்கங்களின் பிரகாரம் மட்டுமே நிகழும் என்று நினைப்பது சாத்தியமற்றது. இந்தக்கதை ஒருவேளை சோபாசகத்திக்கு நிகழாது, இது வாக்குமூலமாக அல்லாது, திரு குடும்பம் உண்மையில் இல்லாது, வெறும் கற்பனையில் நிகழ்ந்ததாகக் கூட இருக்கலாம். இது ஒருவேளை சோபாசக்தியின் கவனிப்புப் பெறுவதற்கான தற்கொலைத்தாக்குதல் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் சமூகத்தில் இல்லாது இல்லை.
 10. நன்றி விசுகு தும்பளையான் நந்தன் அபாரிஜதன் இணையவன். ரதியின் கேழ்விக்கு சிறிய பதில் என்பதால் அதை முதலில் எழுதிவிட்டு செல்லலாம். ஒவ்வொரு முகமூடி சார்ந்து ஒவ்வொரு விம்பம் மனதில் இருக்கும். ரதியின் பதிவுகளை வாசிக்கும் போது எனது மனதில் வரும் உருவம் மின்சாரக்கனவு படத்தின் வெண்ணிலவே பாடல் காட்சியில் வரும் கஜோல். ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. அது அப்படித்தான் பதிவாகியிருக்கிறது. நிழலி, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. காயா கதை ஏற்கனவே இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருப்பதை இப்போது தான் பார்;த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதும் சரி, இயக்கம் கூட சுயவின்பத்தைத் தடைசெய்யவில்லை என்பதும் கூட நீங்கள் சொல்வதுபோல் அவர் தனக்காகத் தானே வாதிடுவது தான். பவானியை அவர் தவிர்த்தது, இந்தக் கதை எழுதிய பின்னர் அல்லவே. குறிப்பிட்ட சம்பவம் குழந்தை சார்ந்து திருவின் வீட்டில் நிகழ்ந்த அடுத்த நொடிகளில், அவர் திரு வீட்டில் இருந்து கிழம்பிவரும் போது தானே பவானியைத் தவிர்த்தார். அந்த நாளில் அவர் பவானியை மட்டும் தவிர்க்கவில்லை. திருவையும் தவிர்த்தார், குழந்தை காயாவையும் தவிர்த்தார், இன்னமும் சொல்வதானால் தனது விம்பத்தைத் தான் கண்ணாடியில் பார்ப்பதைக் கூட அவர் தவிர்க்கவே முனைந்தார். எங்காவது ஒரு பொந்திற்குள் ஓடிச்சென்று ஒளித்துவிடத் துடித்த தருணம் அது அவரிற்கு. குற்ற உணர்வின் உச்சக் கட்டம். நிச்சயம் இந்தக் கதை சோபா சக்த்தி எழுதினார் என்று தெரிவதனால் எமது கதைசொல்லி பற்றிய எண்ணங்கள் அதிகமாகின்றன. இதை வெறும் இலக்கியமாக வைத்துப் பார்க்க முடியவில்லை. இதை ஒத்த தருணங்கள் இலக்கியத்தில் அற்புதமாகக் கையாளப்பட்டு நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இங்கு சோபா எழுதிய வாக்குமூலம் என்பது தான் இந்தக் கதைக்கு ஒரு மேலதிக பரிமாணத்தைக் கொடுகிறது. அவர் கோரும் ஆன்ம ஈடேற்றத்தை எம்மால் அவரிற்குக் கொடுக்க முடியாது (அது அவரே தவம் செய்து அடைய வேண்டியது. மனவெளியில் ஆழத்தோண்டி அகழ்வாராய்ச்சி அவரிற்கு அவசியப்படும். விடுதலை கிடைக்கும் ஆனால் அது அவரால் மட்டுமே பெறப்படக்கூடியது) என்றபோதும், இலக்கியத் தரத்தில் இந்தக் கதையின் அடுக்கடுக்கான பரிமாணங்கள் சார்ந்து மனந்திறந்து கைதட்டலாம். மிகவும் திறமைசாலி. நான் ஏற்கனவே எனது பின்னூட்டதில் குறிப்பிட்டதைப் போல, இது குழந்தையுடன் நிகழ்ந்த அந்த ஒரு சம்பவத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. 'விட்டு விடுதலையான' ஒரு மனிதனாகத் தன்னை வரித்துக் கொண்டு, சமூகத்தின் தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை காலால் உதைத்த படி வாழ்ந்த அல்ல வாழத்தலைப்பட்ட ஒரு மனிதன் சமூகம் தனது கழுத்தில் கட்டிப் பிடித்திருக்கும் சுருக்குக் கயிற்றை உணர்ந்த தருணம். சமூகம் என்பது வெளியில் அல்ல அது தனக்குள்ளாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்த தருணம். அவை அனைத்துக்கும் மேலால் கதை வாசித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தை பாத்திரமாகப் பார்க்க முனைந்து தோற்றுப் போய், அந்தக் குழந்தையின் அடிப்படை விலங்கியல் தன்மையில் மட்டும் புதையுண்டு போன ஒரு இலக்கிய ஜாம்பவான் தனது அறிவின் வங்குறோத்துத் தனத்தைத் தானுணாந்து தளர்ந்து போன தருணம். இங்கு அவரிற்குள் வெளிப்படும் பயம் தனது அறிவு தன்னைக் கைவிட்டதை நினைத்தும் தான் எழுகிறது. எனக்கு இங்கு மிகப்பிரமிப்பாக இருந்தது என்னவெனில். சோபாசக்தி எமது மனங்களில் அவரைப் பற்றி உண்டாக்கி வைத்திருக்கும் விம்பம் உண்மையாயின், அவர் உண்மையில் ஒரு 'ப்ளேபோயாக' இருந்து பெண்கள் சார்ந்து நன்கு பரிட்சயமுடையவராயிருப்பின், இக்கதையில் அவர் குறிப்பிடும் கட்டுப்பாட்டை மீறிய விந்து வெளியேற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. இது ஒரு பதின்மப் பையனிற்கு நிகழ்ந்திருப்பின் புரிவது இலகு. ஒரு வேளை ஒரு இலக்கிய ஜாம்பவானின் மனத்தில் கற்பனையின் வீச்சு என்னைப் போன்ற சாதாரண மனிதர் புரியமுடியாப் பரிமாணத்தில் இருக்கலாம்.
 11. நீண்ட நாட்களின் பின் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஆம், சஹாரா, மிக நீண்டநாட்களின் பின் உரையாடுகிறோம், மகிழ்ச்சி. புங்கையூரான், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. கேழ்விகள் பிறந்துவிட்டால், விடைகள் வந்தே தீரும். நன்றி காவலூர்கண்மணி மற்றும் சசிவர்ணம் உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும். காவலுர்கண்மணியிடம் பலதடவை கேட்கவேண்டும் என்று பின் மறந்து போவது, இன்று ஞாபகம் இருப்பதால் கேட்கிறேன், உங்கள் பின்னூட்டங்கள் அனேக நேரங்களில் தாய்மை நிறைந்தவகையாக, நம்பிக்கையூட்டுவனவாக தலைமைத்துவப் பண்புகளுடன் வெளிப்படுவதை அவதானிதிருக்கிறேன். அனேகமாக யாராவது உங்களிடம் மனப்பாரத்துடன் வந்தால் இழகிய மனதோடு செல்ல வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஆலோசனைத் துறையில் அல்லது கற்பித்ற் துறையில் பணி புரிகிறீர்களா? கிருபன், நீங்கள் சொல்வது சரி. வுழமையாகக் கதைசொல்லி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பணியினையும் செய்து எடிற்றிங்கும் முடித்துப் படமாகக் கொடுப்பார். இம்முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதைசொல்வது போன்று கருவை மட்டும் போட்டிருக்கிறார். ஏனெனில் அவரும் ஒரு கதைமாந்தராய் இருப்பதனால். எனவே, ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு, வசனம் அனைத்தும் வாசகரிடம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு 'ஓப்பின் சோர்ஸ்' காப்புரிமம் போல. எனவே இதைப் படமாக்குவது முற்றுமுழுதாக வாசகரின் கைகளில். இன்னமும் சொல்வதானால் கதைக்களம் மட்டுமே சொல்லப்ட்டிருகிறது, கதை எழுதுவது வாசகரிடம் விடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தேடுவது முடிக்கப்பட்ட படமாக இருக்குமோ? நன்றி நெடுக்காலபோவான் உங்கள் கருத்திற்கு. விம்பம் என்பது ஒரு பெரிய பூதம். சோபாசக்தி வில்லன் வேடத்தை ஆர்ப்பாட்டமாகத் தானே போட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாள கட்டின்றி வாழ முனைந்ததாகத் தோன்றுகிறது. எனினும், இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் பெடபீலியா மட்டுமல்ல. இக்கதையில் ஒரு இடத்தில் பவானி பாத்திரம் 'எழுத்தில் மட்டும் தான் உங்களிற்கெல்லாம் புரட்சி' என்று சொல்லும். இது விதவைக் கலியாணம் என்ற சலிப்பேற்றும் முனையில் கதைக்குள் வந்திருந்தாலும், நிஜத்தில் இது சோபாசக்த்தியின் சுயவிமரிசனம். ஏனெனில், கதைபடித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தையாகப் பார்க்கமுடியாது அவளின் அடிப்படைப் பெண்மையில் சிக்குண்டமை உண்மையில் மிகப்பாரிய பிற்போக்குத் தனம். அடிப்படையில் மனிதன் விலங்கு என்பதைத் தாண்டி மனவெளியில் தான் மனிதன் மனிதனாகிறான். மனவெளயில் குவியம் அவசியம் என்றபோதும் பன்முகப் பார்வை தவிர்க்க முடியாதது. உலகில் 'ஓடிப்பஸ் சின்ட்றோம்' போன்ற ஏகப்பட்ட விடயங்கள் இருப்பது புரியப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் என்ற கட்டமைப்பு அத்தகைய விலங்கிச்சைகளை வென்றதாக முன்வருகிறது. ஒழுக்கம் போன்ற சொல்லாடல் வாயிலாக அவை கட்டுப்படுத்தப்படினும் விஞ்ஞான விளக்கங்கள் பின்னணி ஆகின்றன. அந்தவகையில், நண்பனிற்குத் துரோகம் மற்றும் பெடபீலியா போன்றன மேலோட்டமாகப் பேசப்படினும், அடிப்படையில் கதைசொல்லி தனது பிறழ்வைத் தானுணர்ந்து, அதனைப் புரியமுடியாமல் உழன்று, புரியாதன அனைத்தும் கொடுக்கும் பயத்தால் பாதிக்கபட்டு அந்தப் பயத்திற்கு நிவாரணி தேடி எழுதுகிறார். எந்தப் பயத்திற்கும் நிவாரணி பயத்தை அதன் முகத்தில் பார்ப்பது தான். அந்தவகையில் இதைத் திறந்தவெளியில் கிறியேற்றிவாகப் பேசத்துணிந்த பாத்திரத்தைப் பார்த்துப் பிரமிக்காதிருக்க முடியவில்லை. நிச்சயம் இது மிகவும் 'கருப்புப் பக்கம்'. ஆனால் கருப்புப் பக்கங்களைப் பேசாப்பொருட்கள் ஆக்குவதால் சமூக முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லை.
 12. http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்தியில் அது பற்றிப் பேசுகிறேன். மனதைப் புரட்டிப்போடும் ஒரு படைப்பை நுகர்ந்தபின், அது பற்றி யாரிடமாவது பேசாது இருப்பது முடியாதகாரியம். இன்று காலை வேலைக்குப் போகும் போது புகையிரதத்தில் இக்கதையினைப் படித்தேன். வேலைக்கு லீவு போட்டுவிட்டுப் பதிவெழுதுவோமா என்று தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் கதையின் அதிர்வை ஒளித்துவைக்க முடியவில்லை. இப்போது வீடு மீழும் புகையிரத்தில் இருந்து இதனை எழுதுகிறேன். இங்கு இருவிடயம் பேசுவது எனக்கு அவசியமாகிறது. ஓன்று கதை. மற்றையது கதைசொல்லி. முதலில் கதைசொல்லி பற்றிப் பேசிவிடுகிறேன். அனைத்துப்படைப்பாளிகளும் தமது அனுபவத்தில் இருந்தே படைப்புக்களை உருவாக்குகின்றனர். ஆனால், இயன்றவரை தமது அனுபவத்தின் மூலத்தை மறைப்பதை அனைவரும் அவசியமாகக் கருதுகின்றனர். இதற்கு சட்டரீதியான பிரச்சினைகள், தாம் தம்மைப் பற்றிக் கட்டிவைத்திருக்கும் விம்பத்தினைக் காத்துக்கொள்ளல் முதலான ஒரு முனைக்காரணங்களும், அனுபவங்கள் சார்;ந்த படைப்பாளியின் வாசிப்பு சார்;ந்து உள்ளார்ந்து படைப்பாளிக்குள் எழும் அதிர்வுகளால் பார்த்த படம் மாறிப்போவது போன்ற பிறிதொரு முனைக்காரணங்களுமாகப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுய அனுபவத்தை மறைப்பதை அனைவரும் தலையாய கடனாகச் செய்துவருகின்றனர். இந்தக் கதையில் மாறாக, சோபாசக்தி இதனை ஒரு வாக்குமூலமாக முன்வைக்கிறார். விடுதலை வேண்டி உளவியல் மருத்துவரின் கதிரையில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல் கொட்டிவிடுகிறார். தன்னைப் புரிந்துகொள்ளும் படியும் மன்னிக்கும் படியுமாக இலக்கின்றி இறைஞ்சுகிறார். ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுகிறது. கதை கதையாகவின்றி வாக்குமூலமாக வருகையில், வாசகர்கள் நீதிபதிகளாகிறார்கள். சோபாசக்தி இங்கு கோருவது கல்லெறிகளையும், தண்டனைகளையம், வசைகளையும் அதனூடான ஒரு ஆன்ம ஈடேற்றத்தையுமே. ஆனால் வாசகரால் அவரிற்கு அதனைக் கொடுக்க முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஓன்று சோபா தன்னைச் சார்ந்து புனிதர் விம்பத்தை வளர்க்காதமையினால், அவர் சார்ந்து வாசகர் எதையும் சாத்தியம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஏந்தப் பாவத்தையும் அவர்களால் சோபாவில் பாவம் என்று பார்;க்க முடியாதபடி சோபாசக்த்தி என்பவர் பெறுமதிகளைக் கடந்தவராக, எந்தப் பாதாளத்திற்கும் தீமைகளோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவராக, காமப்பேரரசாக, தூசண வார்த்தைகளைச் சுவாசிப்பராக, விலைமாதரோடே புளங்குபவராக இன்னும் எத்தனையோவாக, மொத்தத்தில் புனிதங்களின் எதிர்ப்பதமாக வாசகரின் மனங்களில் வேரூன்றி இருக்கிறார். இதை இப்படி உருவாக்கியதே சோபா தான். இயக்கத்தை விட்டுவெளியேறி தெற்கில் தண்டவாளத்தில் நடந்த பதின்மப் பையன் முதற்கொண்டு, எந்தப் படைப்பாகட்டும் சோபாவின் ஆண் குறியும் அதிலிருந்து வெளியேறும் சுரப்புக்களும் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமானவை. இரண்டு வகை வாசகர்கள் சோபாவிற்கு இருக்கிறார்கள்., ஒன்று ஆயத்தப்படாத ஆரம்பநிலையில் தெரியாத்தனமாகச் சோபாசத்தியின் கதையினை வாசிக்க ஆரம்பித்துப் பதின்வயதுப் பையன் பார்த்த நீலப்படம் போன்று அரைவேக்காட்டாய் சோபாவின் கதைகளை விளங்கி அதன் நிமித்தம் ஒரு பயங்கர விம்பத்தைக் கதைசொல்லி சார்ந்து உருவாக்கிக் கொண்டவர்கள். மற்றையவர்கள், நன்கு புரிந்து படித்து, கதைசொல்லியின் படைப்பாளி அனுமதிப்பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டவர்கள். இங்கு வேடிக்கை என்னவெனில், இந்த இரு சாராரில் எவராலும் சோபா இரஞ்சும் நீதியினை இக்கதை மூலம் அவரிற்குக் கொடுக்க முடியப்போவதில்லை. ஏனெனில் முதலாமவர் கட்டமைத்து வைத்திருக்கும் பயங்கர பாத்திரத்திற்குள் இந்தப் பாவம் மிகச்சாதாரணம். இரண்டாமவரிற்கோ, இதை ஏன் பாவன் என்று சொல்ல வேண்டும் என்ற மனநிலை இம்சைப் படுத்தும். கதைக்கு மேலால் இந்தவாக்குமூலம் சார்ந்து மேற்படி எழுகின்ற அதிர்வுகள் அடக்கமுடியா ஆர்ப்பரிப்பை உள்ளார்ந்து உண்டுபண்ணுகின்றன. இனிக் கதைக்குள் வந்தால். அட அட அட, எத்தனை இலகுவாக இந்த மனிதரால் இப்பிடிப் பின்னிப் பெடலெடுக்க முடிகிறது. கதையினைப் படிக்கின்ற புனிதர்களிற்குத் தாம் சுயவின்பத்தில் ஈடுபட்டோம் என்று தன்னும் தமக்குள்ளாகவேனும் ஒத்துக்கொள்வது கூடச் சிலசமயம் அசாத்தியமாகலாம். ஆனால், முதன் முதலில் பதின்மத்தில் அதுவும் இலங்கையில் இந்த அனுபவத்தைக் கதைசொல்லி வருணித்த விதத்தில் உணரவில்லை என்று எவரேனும் கூறின், ஒன்றில் அவர்கள் பொய் சொல்லுகிறாhகள் அல்லது அவர்கள் ஜடங்களாவே பிறந்திருக்கிறார்கள். முதற் தடைவ விந்து வெளியேறியதும், பயப்படாதவர் இருப்பது, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயின் அவர்கள் அசாதாரண மனிதர்கள். ஐம்பதுகளை எட்டும் சோபா சக்த்தியால் அந்தத் தருணத்தை இத்தனை தத்ரூபமாக விளக்க முடிவது மலைப்பேற்படுத்துகிறது. அது மட்டுமன்றி வேளாங்கன்னியினை அதற்குள் கொண்டுவந்து...பின்னிப் பெடலெடுத்திட்டான்யா.. பதின்மத்தில் தொடங்கி ஐம்பது வரை, காமம் புரியாத புதிராகக் கதைக்குள் இழையோடித் தொடர்கிறது. காமம் சார்ந்து பயங்களும், புரியாமைகளும் குளப்பங்களுமே வெளிப்படுகின்றன. "குற்றவுணர்வு என்பது உள்ளார்ந்ததாக, நன்கு புரியப்பட்டதாக, உண்மையானதாக, தன்னுடையதாகக் கதைசொல்லியால் முன்வைக்கப்படுகின்ற அதே நேரம் காமம் என்பது வெளியில் இருந்து வந்ததாக, விசித்திரமானதாக, புரியாததாக, தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவே வெளிப்படுகிறது. இதனால்த்தான், நூலகராக இருந்த திருவின் அக்காவைத் தூக்கி அப்புறப்படுத்தி விட்டு, மாயோளைக் கதைக்குள் கதைசொல்லி கொண்டுவருகிறார். மாயோளை வெளியில் இருந்து வந்தவளாக, விசி;த்திரமான பெயருடையளவாக, தனக்குத் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவளாக, மதிலில் பார்த்த தூசணவார்த்தை போன்றிருக்கிறது ஆனால் அவள் பெயர் அதுவல்ல என்பதாக, புரிகிறது ஆனால் புரியவில்லை என்பதைக் குறியிடுவதற்காக மாயோள் என்று பெயரிடுகிறார். அதாவது. தனக்கும் தனது வாசகரிற்கும் நன்கு தெரிந்த ஒரு வார்த்தையினை எடுத்து அதில் ஒரு எழுத்தை மாற்றி அதன் முன்னால் மாயை என்ற சொல்லைச் சேர்த்துக் கதைசொல்லி மாயோளைப் பிரசவிக்கிறார்;. அதனால் தான் இந்தக் கதைக்கு 'மாயோள்' என்பது அற்புதமான தலைப்பாக இருந்திருக்கும் என்றேன். ஆனால் அது இலக்கியத்திற்கு. இங்கு வாக்குமூலமாக விடுதலை கோரப்படுவதால் 'காயா' என்ற தலைப்புத் தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது. என்னதான் சோபாசக்த்தி வாக்குமூலத்தை வைத்து விடுதலை கோரினும், நெஞ்சை நிமிர்த்திப் பிளந்து காட்டினும் தனியே அவரால் சமூகத்தை எதிர்கொள்ளவோ அல்லது சமூகம் எடுக்கிற முடிவை எடுக்கட்டும் என்று விட்டுவிடவோ முடியாதபடி பாதியில் பயம் அவரைப் பற்றிக் கொள்கிறது. அங்கங்கு தனக்காகத் தானே வாதிட்டுகொள்வதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. தான் அத்தனை கெட்டமனிதன் அல்ல என்றும் சொல்லிக் கொள்ளுகிறார். ஆதானால் தான் பெரதேனியாவில் படித்த மீசை மளித்த திருச்செல்வம் மாயோளின் மார்பைப் பிடித்த கதையும் அதற்காக இயக்கப் பொறுப்பாளனாகத் தான் வளங்கிய தண்டனை பற்றியும் இந்தக் கதைக்குள் பேசுகிறார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற யாழ்ப்பாணத்தானின் பாவபுண்ணிய மனநிலையையும் தனக்குத் துணைக்களைக்கிறார். திருவின் வாயாலேயே அதனைச் சொல்லவும் வைக்கிறார். திருகோணமலைச் சாமியாரும் பவானியும் குவியமும் என்று பேசுகிறார். ஒரு முனையில் நீதிகோரித் திறந்த கையுடன் முன்வரும் சோபா பாதியில் பயம் பற்றிக் கொள்ள நாயகன் கமலகாசனைப் போல் 'அவனை நிறுத்தச் சொல்லு இவனை நிறுத்தச் சொல்லு' என்று புலம்புவதையும் தவிர்கமுடியாதவராகிப் போகிறார். அந்தத் தவிப்புக் கதையினை இலக்கியத்தரத்தில் எங்கோ உயரத்தில் தூக்கி அமர்த்துகிறது. பெறுமதிகளிலிருந்து விட்டுவிடுபடல் என்பது ஞானிக்கும் முற்றாகச் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அத்தனை பெறுமதிகளையும் எத்தனை நக்கல் பண்ணினும் பெடபீலியாவினைக் கடந்து சென்றுவிட முடியாதவராகக் கதைசொல்லி பாவமன்னிப்புக் கோரிப் பம்முவதைப் பாத்ததுச் சமூகம் தனது முப்பதாயிரம் வருடத்து வேரைக் காட்டி முறுவலிக்கிறது. இன்றைய நாள் முழுவதும் நான் ஏறி மிதந்து திரிந்த அலாடினின் பாயாக இக்கதை எனக்குள் பதிகிறது.
 13. அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்pறி. முதலில் எனது பந்தியில் விடுபட்ட உறவுகளிற்கு. பட்டியல் முழுமையற்றது என்பதைக் குறிக்கவே Ellipsis குறியுடன் பட்டியிலை முடித்திருந்தேன். ஆங்கிலத்தில் பல பதங்களைப் போல 'இலிப்சிஸ்' என்ற பெயரும் புராதன கிரேக்கத்தின் எச்சம். இந்தப்பெயரின் அர்த்தமே தோல்வியினை ஒத்துக் கொள்வது தானே (falling short). ஒரு தோப்பு நமது நினைவில் ரம்மியமாகப் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு மரம் மட்டும் காரணமும் அல்ல எந்த மரமும் காரணமல்லாமலும் அல்ல. யாழ் தோப்பும் விதிவிலக்கு அல்ல. அடுத்து, யாழ் களம் அமைந்ததற்கான அடிப்படையே எமது ஈழக்கனவு தான். அதனால் விவாதம் என்றவுடன் பின்னூட்டங்களும் இனி என்னத்தை விவாதிப்பது/விளக்குவது என்ற விரக்த்தியினையே வெளிப்படுத்துகின்றன. இன்னுமொருபுறம் விவாதம் பொழுதுபோக்காவது கண்டிக்கப்படுகிறது. புரிந்துகொள்ளக் கூடியது தான். ஆனால் இவை இரண்டுமே கூட விவாதப்பொருளாகின்றன, பொழுதுபோக்கு அவரவர் வசதிக்கும் தேடலிற்கும் ஏற்ப மாறுபடும். சக்கை உணவும் பசிபோக்கும் நிறையுணவும் பசிபோக்கும். இருப்பினும் உண்டவர் வாழ்வு உண்டதைப் பிரதிபலிக்கும். பசி என்பது வெறும் அறிகுறி. ஒவ்வொருமுறை பசிக்கும் போதும் பசியின் தார்ப்பரியத்தை எவரும் ஆராய்வது இல்லை. இயந்திர ரீதியில் பசி அடக்கப்பட்டபடி வாழ்வு நகர்கிறது. இது பசிக்கும் மற்றும் பசி குறியிடும் அனைத்திற்கும் பொருந்தும். பொழுதுபோக்கு முனையில் யாழ் களம் தனித்துவத்துடன் நிறையுணவு வழங்குவது சாத்தியமானது. எமது சமூகத்தில் பலர் நாற்பது வயதில் அறுபது வயது மனிதர்கள் போல் தெரிகிறார்கள். ஆண் பெண் இருபாலாரிற்கும் இது பொருந்தும். இளமை என்பது மனத்தில் இருந்து வரவேண்டியதே அன்றி நரைக்கடிக்கும் மையினால் அல்ல. அசதி நம்மவர்களைப் பற்றியுள்ளது. இதற்கான காரணம் முள்ளிவாய்க்கால் என்று கூறுவது ஒரே ஒரு வகையில் மட்டும் உண்மை. அதாவது, ஈழத்தமிழனிற்கு போராட்டம் இருந்தவரை ஒரு ஆரோக்கியமான நிறையுணவு போன்ற பொழுதுபோக்கு இருந்தது. பொதுமை பற்றிப் பேசினர். ஆதரிப்போரும் விமர்சிப்போரும் ஓயாது தேடினர். அன்றாட உழல்தல்களிற்கப்பால் ஒரு குவியம் இருந்தது. முள்ளிவாய்க்காலில் அனேகம் பேரிற்குத் தொலைந்தது உண்மையில் இது தான். போராட்டம் வகித்த அச்சாணி பாத்திரம் போராட்ட தொலைவில் தான் பலரால் உணரப்படுகிறது. ஒயாது செல்வத்தைப் பெருக்குவதிலும், குளந்தைகளைப் படிப்பிப்பதிலும், பக்கத்துவீட்டுக் காரனையும் இனசனத்தையும் மிஞ்சியவராய்க் காட்டிக்கொள்வதிலும் மகிழ்ந்திருப்பதாய் வெளிப்படைக்குக் காட்டிக்கொள்ளினும் பலர் வெற்றிடத்தை உணருகின்றனர். பல்கலைக்களகம் சென்றிராத பெற்றோர் தம் குழந்தைகளை பல்கலைக்கழகம் வாயிலாகப் பெருநிறுவனங்களின் அலுவலகங்களில் அமர்த்திவிடப் போராட, தாம் பல்கலைக்கழகம் சென்ற பெற்றோர், பள்ளிக்கூடங்களின் worker-bee தர்ப்பரியத்தைப் புரிந்து கொண்டு, ராணித்தேனியாவதற்காய் ஹாவர்டும் ஸ்ரான்போட்டும் வேண்டி ஓட, இரு சாராரும் நிறையவே வெற்றிகள் பெற்று, மில்லியன்களும் அதிகாரங்களும் அதிகரித்து விட்டது உண்மை தான். ஆனால் ஒரு வெற்றிடம் அவர்களிற்குள் அசதி ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் எமது சமூகத்திற்குள் மது என்பது போத்தலலோடு கவிழ்ப்பதாய் இருக்கிறது. உணவு என்பது மெல்லாது முழுங்குவதாய் இருக்கிறது. ஆன்மீகம் என்பது மொட்டை அடித்து ஜோஹா செய்வதாக இருக்கிறது. முகநூலில் தமது வாழ்வு பரிபூரணமானது என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காய் போடப்படும் படங்களிற்கு உண்மையில் அப்படங்களைப் போடுபவர்களே பச்சைகுத்த மாட்டார்கள் என்ற நிலையில் அசதி பற்றிக் கொள்கிறது. அடுத்த சந்ததிகளை விட்டுவிடுவோம். குறைந்த பட்சம் நாற்பது வீதமான எமது சந்ததியினர் தமிழில் உரையாடும் தேவை அற்றவர்களாக வாழ்கிறார்கள். தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அப்பால் தமிழ் தமிழர் வாழ்வில் அகன்றபடி இருக்கிறது. உடலும் உளமும் புத்துணர்வு பெறுவதற்கு 'வெற்றி பெற்ற' தமிழர்கள் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்திற்கு அந்நியமான முனைகளிலேயே நுகர்கின்றனர். பாவிக்காது விடப்படும் மொழி நிச்சயமாக அகன்று செல்லும். ஈழம் என்பது பொதுமை சார்ந்தது. இலக்கிய வட்டங்கள் மற்றும் இதர வட்டங்கள் அனைத்தும் முதுகுசொறிவதற்காக மட்டும் இயங்குவதால் இவையும் முகநூல் மட்டத்தில் தான் செயற்படுகின்றன. ஆனால் தமிழில் மட்டும் உரையாடும் எத்தனையோ குடும்பங்கள் பாரம்பரிய பேசாப்பொருட்களிற்கு அடிமைப்பட்டு, பேச நாதியின்றி, செய்வதறியாது உழல்வது புலத்தில் இன்னமும் இருக்கின்றது. புலத்தில் வறுமை இருக்கின்றது. ஈழம் என்பதன் அடிப்படை சக தமிழன் மீதான பரிவு. ஒரு இனமாக நாம் தொடர்வது அவசியமாயின் இனம் ஆரோக்கியமாவது அவசியம். Activism என்பதற்குப் புலத்தில் தமிழன் மத்தியில் கூட நிறைய இடமிருக்கிறது. நாம் ஒரு புராதன சமூகமாக இருந்தும் முதிர்ச்சி அற்ற சமூகமாகத் தொடர்வதற்கான காரணம் நாம் விடுதலையடையாத சமூகம். விடுதலை என்பது சிங்களவரிடம் இருந்து அல்ல, எமது பயத்தின் நிமித்தம் வஞ்சனையால் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை மனவமைப்பில் இருந்து பலர் இன்னமும் விடுதலைபெறவில்லை. எவர் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, தமிழ் என்பதும் அதன் அனைத்து விழுமியங்களும் இன்றைய தேதிக்கு பொருளீட்டுவதற்குப் பயனற்ற ஒன்றாகவே பலரிற்கும் இருக்கிறது. எனவே வெறும் பிறான்ட் அளவில் தான் இன்று தமிழ் அடையாளம் இருக்கிறது. எவரிற்கெல்லாம் தமிழ் நிலைப்பது அவசிமோ அவர்கள் இந்த பிறான்டினைக் கவர்ச்சி மிக்கதாய் ஆக்குவது தவிர்க்கமுடியாதது. தமிழர்களையே தமிழோடு இணைந்து இருக்கச் செய்வதற்கு தமிழ் பிராண்ட் முனைந்தால் தான் சாத்தியம். அப்படி முனைகையில் தொலைந்த பொதுமை மீழலாம் அசதி நீக்கும் குவியம் கிடைக்கலாம். யாழ்களம் நிறையுணவொத்த பொழுதுபோக்கினை தமிழ் சமூகம் மற்றும் மொழி சார்ந்து வழங்குவதன்மூலம் ஒரு தலைமைத்துவத்தை இம்முனையில் உருவாக்கமுடியும்.
 14. கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்.... பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.
 15. இன்றுதான் விடமேறிய கனவு படித்து முடித்தேன். முடித்த தறுவாயில் அறிவைக் கொன்று உள்ளிற்குள் ஒரு கிளர்ச்சி. வாகை மரத்தைப் புறோபைல் படமாக உள்வர்களைத் தேடி இணைந்து செயற்படவேண்டும் போன்று தோன்றியது. கனடாவின் குமரன் புத்தகசாலையில் 'நஞ்சுண்ட காடு' மற்றும் 'அப்பால் ஒரு நிலம்' கிடைக்கவில்லை. 'விடமேறிய கனவு' மட்டும் கிடைத்தது. விலை 21 டொலர்கள். நிச்சயமாக இந்த விலைக்கேற்ற பங்கு எழுத்தாளரிற்குச் சென்றடையாது என்றது வெறுப்பேற்றியது. குணா கவியளகனின் நாவல்களை நேரடியாக அவரிடம் பணம் கொடுத்துப் பெறுவதற்கு ஏதாவது வளிகள் உள்ளனவா?