கலைஞன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  7,636
 • Joined

 • Last visited

 • Days Won

  11

கலைஞன் last won the day on March 21 2016

கலைஞன் had the most liked content!

Community Reputation

296 ஒளி

About கலைஞன்

 • Rank
  உங்களில் ஒருவன்
 • Birthday January 19

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

12,714 profile views
 1. பலர் பங்களித்து இருக்கின்றார்கள். நானும் முடியுமான அளவு அனைத்து ஆக்கங்களுக்கும் தேடித்தேடி பச்சைகளை குத்தினேன். மொபைலூடு பார்ப்பதால் ஒன்றும் எழுதமுடியவில்லை. குருஜியின் துருச்சாமியும், கிருபனின் இருட்டடியும் வாசிப்பதற்கு பரபரப்பாய் இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
 2. சில வாரங்களினுள் முன்பும் வேலையற்ற பட்டதாரிகள் சம்மந்தமாக ஓர் செய்தி இங்கே காணப்பட்டது. இப்போது அது சார்ந்து இன்னோர் செய்தி. இரண்டிலும் கருத்துக்களை கூறியவர்கள் போராட்டம் செய்பவர்கள் மீது வெறுப்புணர்வுடன் தமது கருத்துக்களை வைத்தார்கள். அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. இதே போராட்டத்தை வேலையற்ற மருத்துவ பட்டதாரிகள் செய்தால் மேற்கண்ட அதேமாதிரியான வெறுப்பான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா? ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் தாங்கள் எப்படி சீவித்தார்கள், சீவிக்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிண்டலுடன் கருத்துக்களை வைத்தார்கள். சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம்.
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்! 🎂
 4. என்னப்பா இது. குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்
 5. உங்கள் ஆதங்கம் புரிகின்றது. குமாரசாமி அண்ணா. கீழுள்ள இந்த இணைப்பை பாருங்கள். இது நான் ஏழு வருடங்களின் முன் எழுதிய உண்மைக்கதை. இந்தக்கதையின் நாயகனே எனது மாங்கல்யத்தை (தாலிக்கொடி) கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் எனது திருமணத்துக்கு வந்து இருந்தான். அவனை நான் 22 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்தேன். நான் தாலிக்கொடியை இங்கிருந்து காசு அனுப்பி அங்கு செய்வித்தேன். அவனே நகைக்கடைக்கு சென்று என் சார்பில் பொன்னுருக்கு செய்து பின்னர் திருமண நாளன்று பத்திரமாய் தாலிக்கொடியை கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பித்தான். அவன் உடல் எல்லாம் காயங்கள். இடுப்பு பகுதியில் ஓர் துப்பாக்கிச்சன்னம் தங்கியுள்ளது. எடுக்க முடியவில்லை. மருத்துவத்துறையில் பொறுப்பான பகுதியில் இருந்தபோது அவன் இயக்கத்தை விலகவிருந்த காலத்தில் உடனடியாக சண்டைபிடிக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டான். அவன் தற்போது உயிர்வாழ்வதே ஓர் அதிசயம். ஓர் மாதிரியாக 2006 காலப்பகுதியில் இயக்கத்தைவிட்டு விலகி பொதுவாழ்வில் இணைந்தான். இப்போது எளிமையாக ஒரு குடும்பஸ்தனாக தனது வாழ்க்கையை ஓட்டுகின்றான். தான் பட்ட கஸ்டங்கள், சந்தித்த ஆபத்துக்கள், துயரங்கள் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொண்டான். அவன் ஓர் புனித ஆத்துமன். அவனுக்கு நான் கூறினேன் உனது கால்களில் விழுந்து நான் வணங்கவேண்டும் என்று. அவனது எதிர்பார்ப்பு எல்லாம் தனது பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும். தான் உழைத்து சம்பாதித்து கெளரவமாக சமூகத்தில் வாழவேண்டும் என்பதே. அவனது கதைகளை விரிவாய் எழுதினால் இரத்தக்கண்ணீர்தான் உங்களுக்கு வரும். இவ்வாறே முழுக்குடும்பமுமே போராட்டம் என்று இயக்கத்திற்கே வாழ்ந்து இறுதியில் இயக்கத்தினாலேயே விலத்தி வைக்கப்பட்டு பின்னர் சிறையில் மூன்று வருடங்கள் இருந்து புனர்வாழ்வு பெற்று எளிமையாக மனைவி, பிள்ளைகளுடன் சுயமாய் உழைத்து வாழ்கின்ற இன்னோர் நண்பனை 23 வருடங்களின் பின் சந்தித்தேன். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தன் பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும், தன்போல கஸ்டப்படக்கூடாது, அவர்களுக்கு நல்லதோர் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்பதே. வெளிநாடுகளில் வாழும் நாங்கள் இங்கிருந்து என்னவும் கூறலாம். அங்கே நாட்டுக்காகவே வாழ்ந்து, நாட்டுக்காகவே தமது வாழ்க்கை, சுகங்களை தொலைத்து தற்போது மீண்டும் பொது சமூகத்தில் இணைந்து தாமும் மற்றவர்களைப்போல் நிம்மதியாய், மகிழ்ச்சியாய் வாழவேண்டும் எனும் முனைப்போடு முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களையும் நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் நான் சுருக்கமாக கூறக்கூடியது நான் கனடாவில் பாதுகாப்பாய் இருந்துகொண்டு அங்கே வாழும் மக்களுக்கு உசுப்பேத்திவிடமுடியாது. நான் இங்கு எனக்கு கிடைக்கும் சுகங்கள், பாதுகாப்பு அங்கே அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். இலங்கையில் தற்போது உள்ள நிலமைகளை பார்க்கும்போது நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் சுமுகமான நிலமை ஏற்படும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இங்கே கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் கதைக்கும் பல்லின சமூகத்தில் நாங்கள் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் நிச்சயம் அங்கேயும் மூன்று நான்கு இனங்கள் ஒன்றாய் வாழக்கூடிய நிலமையை நிச்சயம் ஏற்படுத்தமுடியும். கனடாவில் நாளைய தமிழ் சமுதாயம் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் இலங்கையிலும் நிச்சயம் வாழமுடியும்.
 6. பிள்ளைகளை சிறியவர்களாய் முன்பு பேஸ்புக்கில் பார்த்தேன். உங்களுக்கு மேலாக இப்போது வளர்ந்து விட்டார்கள். பிள்ளைகளின் ஆக்கங்களையும் முன்பு இங்கே பகிர்ந்து இருந்தீர்கள். வாழ்த்துக்கள் சாந்தி!
 7. எனக்கு கிடைத்த அனுபவம் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று நான் கூறவில்லை. இலங்கை போர் நடைபெற்ற பூமி, காயங்கள் முழுதாய் ஆற யுகங்கள் செல்லலாம். எனது ஒப்பீடு முன்பு நான் அங்கு வாழ்ந்தபோது பெற்ற அனுபவங்களுக்கும் தற்போதைய வருகையின்போது கிடைத்தனவற்றுக்குமான சிறிய அளவான ஒப்பீடு மட்டுமே. தலை மீது தற்போது குண்டுவீச்சு விமானங்கள் பறந்து, பறந்து குண்டுமாரி பொழியவில்லை. அங்குமிங்குமாய் தற்போது ஷெல் குண்டுகள் வந்து வீழவில்லை. விட்டுவிட்டு துப்பாக்கிக்குண்டு சத்தங்கள் கேட்கவில்லை. ஒவ்வொரு செக்கனும் நான் சாகப்போகின்றேனா சாகப்போகின்றேனா என்ற மரணபீதியில் நடுங்கும் மனநிலை ஏற்படவில்லை. வவுனியா, கொழும்பில் நின்றபோது பொலிஸ் ரிப்போர்ட் எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. பொலிசாரினால் எதேச்சையாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் எனும் பயம் ஏற்படவில்லை. யாராவது பலாத்காரமாக பிடித்து தமது குழுக்களில் சேர்த்துவிடுவார்களோ எனும் பயம் இருக்கவில்லை. ஆறுமாதங்கள் பாஸ் எடுத்து ஆளை பிணை வைத்து வெளியேறி மீண்டும் குறிப்பிட்ட காலத்தினுள் செல்லாதபடியால் விசாரணைகளுக்கு உள்ளாவேன் எனும் பயம் ஏற்படவில்லை. முன்பு அங்கே வாழ்ந்த வாழ்க்கையை விட மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை வாழக்கூடிய வாய்ப்பை அங்கே காண முடிந்தது. இலங்கையில் பாலும், தேனும் ஓடுவதாய் நான் கூறவில்லை. ஆனால், முன்பு காணாத‌ ஓர் புதிய பூமியினுள் காலடி வைத்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. நான் எமது அயலினுள் சென்றபோது காலிற்கு நான் பாதணிகள் அணியவில்லை. கற்களும், முட்களும் நிறைந்த பற்றைக்காணிகளில் எமது ஊர் மண் என் கால்களில் படுவது மனத்திருப்தியை தந்தது.
 8. எம்பெருமானுக்கு அரோகரா! எமது யாழ்கள புத்தன் அருள் பாலித்தமையால் நானும் அண்மையில் சிட்னி முருகனை தரிசித்தேன். நன்றி புத்தன். சிட்னி முருகனுக்கு அரோகரா!
 9. எங்களைப்பொறுத்த அளவில் மற்ற வருசங்களை விட 2017ம் ஆண்டு நல்லாய் முறுக்கிகொண்டு எழும்பித்தான் நிற்கிது. என்றாலும் திபெத்திய லாமாவின் குட்டிப்பந்துகள் செய்யும் வேலையால் முழு திபெத்திய மக்களும் குழம்பிவிட்டார்களே என்பதை எண்ணும்போது குட்டிப்பையனின் பந்துகளை அவன் அறியாத வயதிலேயே பல வருடங்களின் முன் கிள்ளி இருக்கலாமே என்று நினைக்கின்றேன்.
 10. கிருபன், கதை வாசிப்பதற்கு விறுவிறுப்பாய் இருந்தது. எனக்கு சகாறா அக்கா கூறியதுபோல் பெட்டைகுயிலன் மீது அனுதாபமே ஏற்பட்டது. இப்போது பெட்டைகுயிலன் எப்படி, எங்கே இருக்கிறார் என்று அறிந்தீர்களா?
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி! 🎂
 12. அண்மையில் 17 வருடங்களின் பின் இலங்கை சென்று திரும்பினேன். விமானநிலையத்தில் எதுவித கேள்விகளும் கேட்கப்படவில்லை. பாஸ்போர்டை நீட்டினேன். சீல் குத்தி தரப்பட்டது. குடிவரவுப்பகுதி அலுவல் ஒன்று இரண்டு நிமிடத்தில் முடிந்தது. இவ்வாறே திரும்பி வரும்போது விமானநிலையத்தில் எதுவித சிரமமும் ஏற்படவில்லை. பாஸ்போர்ட்டில் மீண்டும் ஓர் தடவை ஓர் சீல் குத்தப்பட்டு தரப்பட்டது. வரிசையில் காத்திருந்தது தவிர வேறு ஏதும் கால தாமதம் ஏற்படவில்லை. எங்கே போகின்றேன், ஏன் போகின்றேன், எப்போது இலங்கையில் இருந்து வெளியேறினேன், எவ்வளவு காலம் இலங்கையில் தங்கப்போகின்றேன் இப்படி எதுவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. விமானநிலையத்தில் கடவுச்சீட்டை காட்டியது தவிர, நான் இலங்கையில் நின்ற இரண்டு கிழமைகளில் எனது அடையாள அட்டையையோ அல்லது கடவுச்சீட்டையோ காண்பிக்கவேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லை. தெருவில் ஆங்காங்கே போக்குவரத்து கட்டுப்பாட்டு காவல்துறையினர் வாகனங்களை இடைமறித்து ஓட்டுனரின் சாரதி பத்திரத்தை சரிபார்த்தார்கள். அத்துடன் வேகமாய் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரிக்கெட் கொடுத்தார்கள். இலங்கைபற்றி மூன்று விடயங்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும். 1- பணவீக்கம் அதிகரித்துவிட்டது. ஆயிரம் ரூபாய் தாளுடன் சென்ற எனக்கு அதை வைத்து எவ்வளவு பொருட்களை வாங்கமுடியும் என்று அறிந்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. இதுதவிர, இப்போது 5000 தாளும் இருக்கின்றது. பணவீக்கம் போகும்போக்கை பார்த்தால் விரைவில் 10,000 ரூபா தாளும் வந்துவிடுமோ என்று தோன்றுகின்றது. 2-தெருக்களில் வாகனங்கள் செல்வதை பார்க்கும்போது பயமாய் இருந்தது. அங்கே ஒவ்வோர் ஒழுங்கைகளை பின்பற்றி வாகனங்கள் ஓடப்படுவதில்லை. எங்கெங்கே இடைவெளி கிடைக்கின்றனனோ அந்தந்த இடைவெளியூடு வாகனத்தை விட்டு சைக்கிள் ஓடுவதுபோல் பயணிக்கின்றார்கள். 60/70கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்லும் சாலைகளில் தனியார் பஸ் வண்டிகள் 90/100 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்கின்றார்கள். ஏராளமான பெண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓடுகின்றார்கள். ஆங்காங்கே மாடுகள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பல இடங்களில் நாய்கள் தெரு ஓரமாக கால்களை நன்கு நீட்டி ஒய்யாரமாய் தூங்குகின்றன, சுகம் காண்கின்றன. பாதசாரிகள் வாகனங்களை அசட்டை செய்துகொண்டு முன்னும், பின்னும் எதேச்சையாக நடக்கின்றார்கள், தெருவை கடக்கின்றார்கள். சாலைப்போக்குவரத்து பலபடிகள் முன்னேறவேண்டும். 3-வெக்கை வாட்டி தள்ளியது. இதே வெக்கையினுள் நான் பல்லாண்டுகள் பிறந்து வளர்ந்தேனே என்பதை நினைத்தபோது வியப்பாய் இருந்தது. மின்விசிறியை போட்டாலும் அனல் பறந்த காற்று உடம்பை வாட்டி எடுத்தது. சில வீடுகள் குளிர்மையாக இருந்தன. ஏசி இல்லாவிட்டால் வாகனங்களில் பயணிப்பதும், வீட்டில் இருப்பதும் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கலாம். இப்போது மீண்டும் இலங்கை செல்வதற்கு ஆயத்தம் செய்யத்தொடங்கிவிட்டேன். நான் பிறந்து, வளர்ந்த நாட்டிற்கு எனது கல்வி, அனுபவங்களை பயன்படுத்தி ஏதாவது செய்யவேண்டும் என்று ஓர் ஆசை ஏற்பட்டுள்ளது. நான் நினைத்ததைவிட இலங்கைத் திருநாடு மிக நன்றாகவே உள்ளது.