இசைக்கலைஞன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  21,015
 • Joined

 • Last visited

 • Days Won

  63

இசைக்கலைஞன் last won the day on March 12

இசைக்கலைஞன் had the most liked content!

Community Reputation

2,779 நட்சத்திரம்

1 Follower

About இசைக்கலைஞன்

 • Rank
  Advanced Member

Contact Methods

 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  கனடா
 • Interests
  இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Recent Profile Visitors

12,911 profile views
 1. நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

  இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித்திணிப்பை எதிர்த்து ஐநாவில் குரலெழுப்பிய நாம் தமிழர்!
 2. இது ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. ஆனால் களத்தின் தன்மைதான் ஒரு தனி நபரினது அல்லது குழுவினது நடவடிக்கைகளை இங்கு தீர்மானிக்கின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் என்பது 18 மைல் தொலைவில் வாழ்ந்த சக தமிழரைக்கூட காப்பதில் தவறி விட்டது என்பதே உண்மை. காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்றுதான். இதற்கு உள்ளிருந்து ஒரு சுய பரிசோதனையில் இறங்குவது அவசியமாகிறது. இந்தியாவின் வருவாயில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில் (அதாவது இந்தியாவை ஓரளவுக்கு தாங்கிப் பிடிக்கின்ற) ஒரு மாநிலத்து மக்களால் தம் சக இனத்தவரை ஏன் காக்க முடியாமல் போனது? காரணம் எதுவாயினும், கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் வேலைக்கு ஆகவில்லை என்பது உண்மையானது. ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறுவார்கள். நாம் தமிழர் கட்சியின் கூற்று என்பது இத்தனை காலமும் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி நடக்கவில்லை என்பது. தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளில் தமிழர் தலைமை இல்லை என்பது கண்கூடு. ஆனால் இதுவேதான் காரணமா என்பது விவாதிக்கப்பட வேண்டியதுதான். ட்ரம்ப் உதாரணம் இதற்கு சரியானது என்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெள்ளையர்கள் லட்சக்கணக்கில் ஸ்பானியர்களாலும், ஆபிரிக்க கறுப்பர்களாலும் கொன்று குவிக்கப்பட்டிருந்தால் ட்ரம்ப் உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆட்சித் தலைமை கறுப்பரிடம் போனாலும், அதிகாரம் என்பது அமெரிக்காவில் வெள்ளையர் வசமே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும், அதிகாரம் என்பது இதுவரையிலும் தமிழர் வசம் இருந்ததில்லை (காமராஜர் உட்பட). காமராஜர் உறுதியான தலைவராக இருந்தாலும் தேசியப் பார்வையையே கொண்டிருந்தார். இதனால் மாநிலப் பிரிவினையில் தமிழர் பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்ல காரணமாக இருந்தார். இந்தக் கருத்தியலுக்கு (தமிழரை தமிழரே ஆள வேண்டும்) என்பதற்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் எப்படி மாறுபட்டு வருகிறது என்பதை கவனியுங்கள். தமிழரை தமிழரே ஆளவேண்டும்.. (இது இனவெறி) தமிழரை தமிழரே ஆள வேண்டும் (சரி.. யாரெல்லாம் தமிழர்) தமிழரை தமிழரே ஆளவேண்டும் (ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் தமிழர்தானே) தமிழரை தமிழரே ஆள வேண்டும் (நானும் பச்சை தமிலன் - ரஜினி ) தமிழரை தமிழரே ஆளவேண்டும் (தமிழ்தேசியம் என்பது திராவிடத்தின் தோள்களில் நின்றுதான் பயணிக்க முடியும் - திருமுருகன் காந்தி) கவனித்துப் பார்த்தீர்களானால் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை இப்போது யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. அது ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. நாங்களும் தமிழர்கள்தான் என பலர் வருகிறார்கள். அதில் கரிகரசிங் ராஜாவும் (எச். ராஜா) அடக்கம்.
 3. அவர்களது முதன்மையான கொள்கை தமிழர்களை உலக அளவில் ஒன்றிணைப்பது. அது எமது போராட்டம் நடந்த காலத்திலேயே கொள்கை ரீதியில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் மிகப்பெரிய சனத்திரள் கொண்ட தமிழகம் அதிலிருந்து விடுபட்டுவிட்டது. அதற்கு பல்வேறு காரணிகள். இப்போது தமிழகம் இணைந்த ஒருமுகப்பட்ட ஒரு சக்தியை உருவகப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அதில் பல சிக்கல்கள் உண்டு. ஒருவரை அரவணைத்தால் இன்னொரு தரப்புக்கு அதிருப்தி இருக்கும். மேலும், பல உள்குத்துகளை அறியாதவர்கள் அவர்கள். அதனால் கொள்கை ரீதியில் ஒரு முடிவை எடுத்து வைத்துள்ளார்கள். அதாவது தமிழர் குழுமங்கள் உள்ளாக இருக்கும் தகராறுகளை யாரும் தீர்க்கப் போவதில்லை. அதனால் அதில் நேரத்தை செலவிடுவது விரயம். அதை எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இணைந்து செல்பவர்களுடன் இணைந்து பயணிப்பதுதான் கால ஓட்டத்திற்கு ஏற்றது. இதன் காரணமாகவே, லைக்கா சுபாஸ்கரனை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உண்டியல் பணம் சேர்ப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் இங்கிருந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்பது எனக்கு தெரியாது. நான் எதிலும் இணைந்து பயணிக்கவில்லை. ஆக மொத்தத்தில், தமிழகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஆட்சி அதிகாரம், அதன் மூலம் இந்தியத்திடம் காட்டக்கூடிய வலிமை இதை நோக்கியே பயணப்படுகிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலில் தமிழகத்தில் அதிகாரத்தை மீண்டும் சரியான தமிழ் தலைமை வசம் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கிறார்கள். மேலும், கிடைக்கும் நன்கொடைகளை ஒவ்வொரு மாதமும் இளையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். http://www.naamtamilar.org/downloads/Naam-Tamilar-Katchi-Development-Fund-income-expenditure-report-Augest-2017.pdf
 4. திருமுருகன் காந்தி போட்டியிடப்போவதில்லை. அவரது மே 17 என்பது இயக்கம். அது ஒரு கட்சி அல்ல என்பது சரிதான். அவர்கூட தேர்தல் அரசியல் வெற்றி பெறாது என உறுதிபட தெரிவித்து வருகிறார். ஆனால்..... அவருடன் சேர்ந்து பயணிக்கும் மார்ட்டின் டைசன், இளமாறன் போன்றவர்கள் (சேர்ந்தே கைதானவர்கள்) தமிழர் விடியல் கட்சி எனும் பெயரில் ஒரு கட்சியை நடத்துகிறார்கள். நான் மேலே இணைத்த படம் கூட அவர்களது மேடைதான். அதில்தான் திருமுருகன் காந்தியும் ஏறி நின்று பேசினார். இந்த டைசனும், இளமாறனும் முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்தவர்கள். சீமான் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துவிட்டார் என்பதற்காக அவரது கொடும்பாவியை எரித்துவிட்டு தனிக்கட்சி கண்டவர்கள். அப்படி வந்தவர்களை திருமுருகன் காந்தி அரவணைப்பது என்பது எதேச்சையான செயலா?
 5. நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

  23-09-2017 ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | செய்தியாளர் சந்திப்பு
 6. இந்த மதிரியான விம்பமே சீமான் போன்றவர்களுக்கு இருக்கும் கெடுதல். சீமான் ஈழம் என்று மட்டும் பேசியது 2008, 2009, 2010 ஆண்டுகள்தான். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சினைகள், உரிமைகள் குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவித்து பயணிக்கிறார்கள். ஆனால் பொது வெளியில் என்னவோ சீமான் என்றால் ஈழத்தமிழர் பற்றி பேசி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிப்பவர் என்கிற புரிதல்தான் உண்டு. அண்மையில் ரஞ்சித் விடயத்தில்கூட ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுத்தாரா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த இடங்களுக்கு சென்றது மட்டுமல்லாமல் அவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் ஊடகங்களில் வெளிவராமையால் பொதுவெளியில் தெரிவதில்லை. இன்று தமிழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று கூட டிகே எஸ் இளங்கோவன் (திமுக) நாம் தமிழர் கட்சி திமுகவை அழிக்கப் பார்க்கிறது என்று முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வளவு காலமும் எதுக்கு வீண் விளம்பரம் என்று இருந்தார்கள். ஆனால் ட்ரென்ட் மாறுவதை அவர்கள் கணித்தே வருகிறார்கள். இப்போது திருமுருகன் காந்தி கூட்டிச் செல்லும் தமிழர் விடியல் கட்சியை முன்னிலைப் படுத்த தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதைக்க முடியும். ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்து நாம் தமிழர் பாணியில் வேலை செய்ய தொடங்கிவிட்டார்கள் (மேடை அமைப்பதில்).