nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Content count

  36,059
 • Joined

 • Last visited

 • Days Won

  24

Everything posted by nunavilan

 1. தென் ஆபிரிக்கா உலக தர வரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளது.
 2. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு . யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணியம்தோட்டம், உதயபுரம் – கடற்கரை வீதிச் சந்தியில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில், உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, மற்றொரு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று குண்டுகள் துளைத்து படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் அவர் மரணமானார். சுவாசப் பையில் குண்டுதுளைத்ததால், ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே அவரது மரணத்துக்குக் காரணம் என்று, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். “துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கு அதிக குருதிப் போக்கு காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி ரவை அவரது மார்பின் ஊடாக, சுவாசப்பையை துளைத்துச் சென்றுள்ளது. சுவாசப்பையில் ஏற்பட்ட அதித குருதிப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இளைஞன் மரணமான சம்பவத்தை அடுத்து, யாழ். போதனா மருத்துவமனையில் பதற்றநிலை காணப்பட்டது. இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திலும், காவல் நிலையங்களிலும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை. அதேவேளை, சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. http://www.puthinappalakai.net/2017/10/23/news/26759
 3. அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தராது- என்கிறார் கோத்தா மேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பகாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “எந்தவொரு நாட்டிலும் அதிகாரப் பகிர்வின் உதவியுடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நான் அறியவில்லை. முன்னர் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தான், தற்போது புதிய அரசியலமைப்புக்காக பரப்புரை செய்கின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் போரின் மூலம் வெற்றியைப் பெற முடியாது என்று அவர்கள் எப்போதும் கூறிவந்தார்கள். 2005இல் நான் பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்ற போது எனக்கும் அவர்கள் இதே ஆலோசனையை வழங்கினார்கள். விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சில நாடுகளும் கூட கூறின. 2002 பெப்ரவரியில், சிறிலங்கா, நோர்வே அரசாங்கங்கள் விடுதலைப்புலிகள் என செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு உடன்பாடு, பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டதாகும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போருக்குப் பின்னர், பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு மேலதிக அதிகாரப் பகிர்வோ, அரசியலமைப்பு திருத்தமோ, தீர்வைத் தராது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2017/10/23/news/26770
 4. விஜய் பி ஜே.பியின் தமிழ் நாட்டின் பிரதிநிதியாம்(தமிழிசைக்கு அந்த இடம் கிடைக்கவில்லையாம்) என்ற காரணத்தால் வடக்கின் மோடியின் ஊதுகுழல்கள் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
 5. கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி "> " type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
 6. கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி,குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன்வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில்இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம்ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்குவருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிடஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன்.எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும்தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்குமுரட்டுக் குளம்பு இருக்கிறது. இரண்டு கால் உள்ள மனுசன் செருப்பைசம்பாதிக்க வேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிட்டான். பாட்டப்பன் ஒரு கல்யாணத்திற்காக அவசரமாக போய்க்கொண்டிருந்தான்.மாப்பிள்ளை பெயர் என்ன, எந்த பெண்ணுக்கு கல்யாணம் என்றுஅவனுக்குத் தெரியாது. எந்த கல்யாண மண்டபத்திற்கு போகவேண்டும்என்றும் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று மண்டபம்தான்.ஒவ்வொரு மண்டபமாக போய் பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான்அவன் போனான். முதல் மண்டபத்தில் ஷாய்ரா பானுவுக்கும், சாகுல் அமீதுக்கும்கல்யாணம் என்றார்கள். எல்லோரும், ~சலாம் அலேக்கும்!|சொல்லிக்கொண்டு, கறுப்பு கறுப்பாய் போர்த்திக்கொண்டிருந்தார்கள்.பாட்டப்பன் “என்பெயர் முகமது இஸ்மாயில்” என்று சொல்லிவிட்டுமண்டபத்திற்குள் போயிருக்கலாம். நெற்றி நிறைய பட்டை பட்டையாகதிருநீறு பூசிக்கொண்டு இஸ்மாயில் என்று சொன்னால் புத்திசாலிமனிதர்கள் நம்புவார்களா? அதனால் வேறு மண்டபத்திற்கு கிளம்பினான்பாட்டப்பன். இன்னொரு மண்டபத்தில் இருந்த அத்தனைபேரும் சொல்லி வைத்ததுபோல செக்கச் செவேர் என்று இருந்தார்கள். பெயிண்ட் கடைவைத்திருக்கும், அல்லது சிவப்பு சுண்ணாம்பு சாப்பிடும், அல்லது குங்குமவியாபாரம் செய்கிற குடும்பத்தின் கல்யாணமாக அது இருக்கலாம்.அட்டைக் கறுப்பாய் பாட்டப்பன் அங்கே போய் நின்றால் பரம்பரைக்குழப்பம் வந்து கல்யாணமே நின்று போகிற அளவுக்கு கலவரம் வந்தாலும்வரும். பயந்த பாட்டப்பன் சிவப்பாக இருந்த யாரிடமும்சொல்லிக்கொள்ளாமல் மூன்றாவது மண்டபத்திற்கு நடையைக்கட்டினான். மூன்றாவது மண்டபத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் பாட்டப்பனின்சொந்தக்காரர்கள் போல கறுப்பாக இருந்தார்கள். மண்டபத்திற்குள் செல்லபாட்டப்பனுக்கு கூச்சமாக இருந்தது. கல்யாணத்திற்கு வருகிறவர்கள்வந்தோமா, கல்யாணம் பார்த்தோமா, சாப்பிட்டோமா என்றுஇருப்பதில்லை. சொந்த பந்தத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் என்றுதேடிப் பிடித்து எவன் செத்தான், எவன் உயிரோடிருக்கிறான், எவன்சவுக்கியமாய் இருக்கிறான் எவன் நாசமாய்ப் போனான் என்று நலம்விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அறிமுகமே இல்லாத பாட்டப்பன்போன்றவர்களை ~நீ யார்?| என்று சௌக்கியம் விசாரிக்கும் கும்பல்கேட்டுவிட்டால் எத்தனை கஷ்டமாகிவிடும். உறவு இல்லையென்றால்என்ன, பந்தல்காரன், சமையல்காரன், லைட் பற்றவைப்பவன் என்றுஏதாவது வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்கலாம் என்று பதுங்கிபதுங்கி உள்ளே போனவன் கடைசி இறுக்கையில் பதுவிசாகஉட்கார்ந்துகொண்டான். கல்யாணமண்டபம் ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாய்கும்மாளமடித்து ஆரவாரமாய் இருந்தது. பெண்கள் அணிந்திருந்தஏராளமான நகை மற்றும் புடவைகளைப் பார்த்து அரண்டு போனான்பாட்டப்பன். நம்மைப்போல கறுப்பாக இருப்பவர்களும் பணக்காரர்களாகஇருப்பார்களா? நம்பவேமுடியவில்லை பாட்டப்பனால். நம்பமுடிகிறதோமுடியவில்லையோ... யார் கண்ணுக்கும் அடையாளம் தெரியாமல்பதுங்கியிருந்துவிட்டு, வந்தகாரியத்தை முடித்துக்கொண்டுஓடிவிடவேண்டும் என்று கூடுமானவரை தலைதெரியாதபடி தாழ்த்திஉட்கார்ந்துகொண்டான். எத்தனை பதுங்கி இருந்தாலும் ஆந்தைக் கண்களுக்கு தவளை தப்புவதேஇல்லை. ஒரு இளம் வயது பெண் - கல்யாணம் ஆனவள் போலத்தான்இருந்தாள் - பாட்டப்பனையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.பாட்டப்பனுக்கு பயமாகிவிட்டது. பயத்தை இன்னும் கொஞ்சம்அதிகரிப்பது போல அந்தப் பெண் அவனை நோக்கி வந்தாள். வந்தவள்பாட்டப்பனை நோக்கி ஒருகையை நீட்டி, 'நீங்க... நீங்க...!" என்றுசந்தேகத்துடன் ஒரே கேள்வியை கேட்க ஆரம்பித்தாள். ஆள் வைத்துஉடம்பை உலுக்கியது போல பயத்தில் நடுக்கமெடுத்தது பாட்டப்பனுக்கு.தன் தொடையை தானே நடுங்கச் செய்து மாட்டிக்கொள்ளக்கூடாது என்றுநினைத்த பாட்டப்பன், 'அது நான் இல்லைங்க.." என்று நடு மத்தியமாக ஒருபதில் சொன்னான். வெகு காலத்திற்கு முன்பு தொலைந்துபோன யாரையோ திடீரென்றுபார்த்தது போல பரவசத்துடனும், அறைகுறையாய் அடையாளம்தெரிந்துகொண்ட சந்தேகத்துடனும் இருந்த அந்த பெண், 'நீங்க நீங்க!"என்று வார்த்தை முடிக்க முடியாமல் சந்தோஷமாகத் திணறினாள். பயமாக இருந்தாலும் பாட்டப்பனுக்கு ஆர்வத்தை அடக்கமுடியவில்லை.ஒருவேளை சின்ன வயதில் அவளுக்கு புருசன் காணாமல்போயிருப்பானோ? அவன் என்னைப் போலவே இருப்பானோ? ஆமாம்என்று சொல்லிவிட்டு கூடவே போய்விடலாமா? ஒருவேளை புருசன்தொலைந்ததில் சித்தபிரம்மை பிடித்து, பார்க்கிற புருச வயசுஆட்களையெல்லாம் தன் புருசனென்று நினைத்து ~நீங்க நீங்க| என்றுசொல்லி பைத்தியமடிக்கிறாளா? ரெண்டுங்கெட்டான் குழப்பத்தோடுபார்த்தான் பாட்டப்பன். அப்பொழுது பந்தயக்குதிரைபோல மூச்சிரைக்க வந்தாள் ஒரு கிழவி.அவளும் புருசன் தொலையுண்ட பெண்போல ஒரு கையை நீட்டி, 'நீராமசாமியா?" என்று மிரட்டுவது போல பாட்டப்பனை கேட்டாள்.அவளுக்கு வாயில் நுரை வந்திருந்தால் பந்தயக் குதிரைஎன்றுதீர்மானமாய் நம்பியிருப்பான் பாட்டப்பன். கிழட்டுக் குதிரை. “சொல்லு... நீ ராமசாமியா?” மீண்டும் அதட்டியது கிழட்டுக் குதிரை. 'இல்லை. நான் பாட்டப்பன்" அடுத்த நிமிடம் இளம் பெண்ணை தரதரவேன்று தள்ளிக்கொண்டுபோனாள் கிழவி. 'நாந்தான் அப்பவே சொன்னனே! அது உங்க அப்பன்இல்லேன்னு. முப்பது வயசில உங்க அப்பன் காணாம போனான். போயிமுப்பது வருசமாச்சி. இவனப் பாத்தா ஐம்பது வயசு ஆளாட்டமாஇருக்கான். இவனப் போயி அப்பான்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டியே!" ஆக, புருசனைத் தொலைத்தவள் இளவி அல்ல... இந்தக் கிழவிதான்.குதிரைமூச்சுக் கிழவி போட்ட போட்டையும், கேட்ட அதிகாரத்தையும்பார்த்தால் கிழவியின் புருசன் ஓடிப்போனது சரிதான் என்று தோன்றியதுபாட்டப்பனுக்கு. ஆனாலும் கிழவிக்கு இந்த வயதில் கொஞ்சம் கொழுப்புஅதிகம்தான். தாடி வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காக இருபத்தி ஏழுவயதுள்ள பாட்டப்பனை ஐம்பது வயதுக் கிழவன் என்று அவள்சொல்லலாமா? அதுவும் அவளே ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு இன்னும்கல்யாணம்கூட ஆகவில்லை. இப்பொழுதுதான் பன்னிரெண்டு நாட்களாககண்ணம்மா என்கிற ஒரு அடாவடி சிறுக்கியை காதலிக்கவேஆரம்பித்திருக்கிறான். அதற்குள் கிழவியிடம் கிழவன் என்கிற அசிங்கவார்த்தை. முதல் காரியமாக தாடியை சவரம் செய்துவிடவேண்டும்என்று முடிவெடுத்தான் பாட்டப்பன். கிழவி போனதும் அப்பாடா என்று நிம்மதி மூச்சுவிட்டான் பாட்டப்பன்.அதற்குள் பூதக்கண்ணாடி அணிந்திருந்த இன்னொரு கிழவன் பக்கத்தில்இரும்புச் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்துகொண்டு பாட்டப்பனைபார்த்து பெரிதாக சிரித்தான். 'நல்லா இருக்கீங்களா தம்பி. வீட்டுல அப்பாஅம்மா எல்லாம் சௌக்கியமா?" என்று கேட்டான். இன்றைக்கு கிழடுகள்எல்லாம் சாகடிக்கிற திருவிழா கொண்டாடுகிறார்களா? கடுப்பாககிழவனைப் பார்த்தான் பாட்டப்பன். பாட்டப்பன் பிறந்ததில் இருந்தே இப்படி ஒரு போங்குக் கண் கிழவனைபார்த்ததில்லை. கிழவனை தெரியாது என்று சொலலி தப்பிவிடத்தான்முதலில் நினைத்தான் பாட்டப்பன். ஆனால் அதைவிட புத்திசாலித்தனம்கிழவனின் அரைக்குருடு கண்ணை சரியாக உபயோகப்படுத்திக்கொள்வதுஎன்று முடிவெடுத்தான். முக்கால் கண் வெளிச்சமுள்ள இந்த கிழவன்யாரோ ஒரு அடையாளத்தை தன்னிடம் கண்டுகொண்டு பேசுகிறான். அதுநானேதான் என்று சமாளித்துவிட்டால் மற்றவர்கள் சந்தேகப்படாமல்இருப்பார்கள். தொந்தரவும் இருக்காது. 'நான் நல்லா இருக்கேன், தாத்தா. ஆனா அப்பாவுக்கும்,அம்மாவுக்கும்தான் கொஞ்சம் சௌகரியம் இல்ல. இருபத்தி மூணுவருசத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாங்க. தகவல் சொல்ல முடியல.மன்னிச்சிடுங்க!" என்றான். 'என்ன தம்பி நீ. நான் உன்னோட சித்தப்பன். என்னை தாத்தாங்கறே!போனவாரம்தான் உன் அப்பா அம்மாவ கடைவீதியில பாத்தேன். இருபத்திமூணு வருசத்துக்கு முன்னாடி செத்துட்டாங்கன்னு சொல்லறே! ஆமா, நீசிவராமன் மகன்தானே!" கண் இல்லாவிட்டாலும் ஞாபகம் இருக்கிறகிழவன் தெளிவாகக் கேட்டான். 'சிவராமன் மகன் இல்ல. நானே சிவராமன்தான்." என்று சொன்னான்பாட்டப்பன். தூரத்தில் நின்றிருந்த புருசனைத் தொலைத்த கிழவியும், அவள் மகளும்பாட்டப்பன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தார்கள்.சற்று முன்பு பாட்டப்பன் என்றும் இப்பொழுது சிவராமன் என்றும்ஒருத்தன் சொல்வது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கலாம்.பாட்டப்பனுக்கு சிறுவயதில் சிவராமன் என்ற பெயர் இருந்ததும்பாட்டப்பன் என்பது தொழில் நிமித்தமாய் வந்த பட்டப் பெயர் என்பதும்அவர்களுக்கு தெரியாது. வந்த இடத்தில் ஜாக்கிரதையாகஇருக்கவேண்டும் என்று முடிவெடுத்த பாட்டப்பன் போங்குக் கண் கிழவன்அறியாதபடி இடத்தை மாற்றிக்கொண்டான். அங்கேயும் வினை இருந்தது. கிழவர்கள் தொலைந்தால் குமரர்கள்வருகிறார்கள். ஒரு சின்ன வயசுக்காரன் பொங்குகிற மகிழ்ச்சியோடு வந்துகையைப் பிடித்துக்கொண்டு அப்புறமாகக் கேட்டான், 'உங்களை எங்கியோபார்த்த மாதிரி இருக்கே?" கேட்டுவிட்டு வானத்தில் கண்ணைசெருகிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். எங்கியோ, எவனையோபாத்துட்டு வந்து இங்க என் கழுத்தை அறுக்கறானே சள்ள கிராக்கி!பாட்டப்பன் கையை தந்திரமாக பிரித்துக்கொண்டு வேறு இடம்பதுங்கினான். சள்ளை கிராக்கியே பரவாயில்லை என்பது போலஇன்னொரு சாவுகிராக்கியின் கையில் அகப்பட்டுக்கொண்டான். அவன்ஒரு வழுக்கைத் தலை ஆசாமி. 'நான் உங்களை எங்கயுமேபாத்ததில்லையே. ஆமா, நீங்க யாரு? யாரோட சொந்தம்?" என்றுவிபரீதமாய் ஒரு கேள்வி கேட்டான். எங்கயுமே பார்க்காத ஒருத்தன்கிட்டஇவனுக்கெதுக்கு வெட்டிப்பேச்சு....? பாட்டப்பனுக்கு எத்தனை அடக்கநினைத்தாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது. இது கல்யாணத்திற்கு வந்திருக்கும் கூட்டமா, இல்லை பைத்தியக்காரகூட்டமா? புதிதாக தெரிகிற ஒருத்தனைப் பார்த்து ஒருத்தி ~அப்பா|என்கிறாள். இன்னொருத்தி ~என் புருசனே இல்லை| என்கிறாள். ஒருகிழவன் எப்பொழுதோ செத்துப்போன அப்பன் சௌக்கியமா என்றுகேட்கிறான். ~எங்கியோ பார்த்திருக்கிறேன்| என்று ஒருத்தனும் ~எங்கியுமேபாக்கலையே| என்று இன்னொருத்தனும் குழப்பியடிக்கிறார்கள். இவர்கள்மனுசர்களா, இல்லை பிசாசு மேய்க்கிறவர்களா? அதெப்படி இங்கிருக்கிறஎல்லோருக்கும் நான் தெரிந்தவன் போலவே இருக்கிறேன். பாட்டப்பன்ஆதியோடு அந்தமாய் குழம்பிப்போனான். இன்னும் கொஞ்ச நேரம் இந்தபிசாசு மேய்க்கிற கும்பலில் இருந்தால் முகூர்த்தம் முடிவதற்குள் நமக்கேகல்யாணமாகிவிடும் என்று அச்சப்பட்ட பாட்டப்பன் சாப்பாட்டு பந்திஎந்தப்பக்கம் என்று யாரிடமும் விசாரிக்காமலே நழுவ ஆரம்பித்தான். இந்த கல்யாணம் யாருடையது, இங்கே யாருக்கு கல்யாணம் நடக்கிறதுஎன்று உண்மையிலேயே பாட்டப்பனுக்கு ஒரு இழவும் தெரியாது.அவனுக்கு பசியாக இருந்தது. அதனால் சாப்பிட வந்தான். சாப்பிட்டுமுடித்த பிறகு ஒரு முக்கியமான வேலையும் இருக்கிறது. அதைநினைத்தால்தான் பாட்டப்பனுக்கு திகிலாக இருந்தது. ஒருநாளும் இப்படிஒரு பழிபாவமானது செய்ததில்லை பாட்டப்பன். பூமியில் இருக்கிற சாப்பாடு மொத்தத்தையும் ஒரே நாளில் தின்றுஅழித்துவிடுவது என்ற முடிவோடும் வெறியோடும் ஒரு கூட்டம் அங்கேசாப்பிட்டுக்கொண்டிருந்தது. கடைசி வரிசை, கடைசி இலையில்பாட்டப்பன் உட்கார்ந்தான். வைக்கப்பட்ட வகைதொகையான சாப்பாட்டைபார்த்ததும் வியந்துபோனான் பாட்டப்பன். வாழ்நாளில் பார்க்காத அதிசயம்அது. எச்சில் வாயில் ஊற பெரிய லட்டு ஒன்றை எடுத்து நறுக்கென்றுகடித்தான். அவ்வளவுதான் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி எழுந்துநின்று ~அய்யோ அய்யோ| என்று சத்தமாக கத்த ஆரம்பித்தாள். பதறிப்போனான் பாட்டப்பன். கை தவறி அந்த பெண் இழையில் இருந்தலட்டை எடுத்து கடித்திருப்போமோ என்று பயந்துபோனான். எமனுக்கேகேட்கிறபடி கத்திய அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நாயணக்காரன்ஊதுவதையே நிறுத்திவிட்டான் என்றால் மற்றவர்கள் என்னசெய்வார்கள். கும்பலாக கூடிவிட்டார்கள். கழுத்தில் இருந்த ஒன்பது பவுன்சங்கிலியை காணவில்லை என்று அழுதபடி சொன்னாள் அந்தப் பெண்.பாட்டப்பனுக்கு சந்தோசமாகிவிட்டது. ஓ இது லட்டு பிரச்சினைஇல்லையா? தப்பிச்சோம். வாயில் இருந்த லட்டை உரிமையோடுமீண்டும் சாப்பிட ஆரம்பித்தான். நகை திருடுபோனது தெரிந்ததும் 'சாத்துடா கதவை" என்று ஒருத்தன்உத்தரவிட்டான். நகையை யார் எடுத்திருப்பார்கள்? ஒருவர் முகத்தைஒருவர் சந்தேகமாய் பார்த்துக்கொண்டார்கள். நல்லவன், கெட்டவன்,யோக்கியன், திருடன் யாராக இருந்தாலும் சரி ஒரே ஒரு கணம்திருடர்களாக தோற்றம் தருகிற தருமசங்கடமான சூழ்நிலை இதுதான்.எல்லோருமே ஒரு கணம் திருடர்களாக மாறிவிடுவதும் இப்படித்தான். எல்லோரும் திருடனை தேடிக்கொண்டிருக்க, புருசனைத் தொலைத்தகிழவி ஒரு மத்தியஸ்தனிடம் குசுகுசுவென்று பேசுவதை பாட்டப்பன்பார்த்துவிட்டான். அப்பொழுதுதான் அவனுக்கு விபரீதம் உறைத்தது.இந்த கூட்டத்தில் சம்மந்தமில்லாமல் இருக்கிற ஒரே ஆள் அவன்தான்.பெயரை மாற்றிச் சொல்லி குழப்பியவனும் அவன்தான். தரும அடிநிச்சயமாகிவிட்டதடா தருமா! தயாராகிவிட்டான் பாட்டப்பன். கட்டம்கடைசியாய் ஒரு கடி லட்டைத் தின்றுவிட்டு முதுகைதயார்படுத்திக்கொண்டிருந்தபோது ஒரு விபரீதம் நடந்தது. சம்மந்தமேஇல்லாமல் பாயாசம் ஊற்றிக்கொண்டிருந்த ஒரு சின்ன பையனை இழுத்துவந்து எல்லோரும் தொபீர் தொபீர் என்று அடிக்க ஆரம்பித்தார்கள். மயக்கம் போட்ட பையனை தண்ணீர் தெளித்து எழுப்பி, 'சௌக்கியமா?"என்று விசாரித்துவிட்டு மீண்டும் அடிக்க ஆரம்பித்தார்கள். “செயினைஎடுத்தியா சொல்லுடா சொல்லுடா?” எத்தனை அடித்தும் அந்த பையன்கேள்விக்கு பதில் சொல்லவேயில்லை. அவன் ஊமையும் கிடையாது. 'அடிக்காதீங்க அடிக்காதீங்க!" என்று காட்டுக்கத்தல் கத்தினான். சமையல்காரன் ஓடிவந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி, 'அவன் செவிட்டுமகன் சாமிங்களா! நீங்க கேக்கறதுக்கு அவனால பதில்சொல்ல முடியாது" “யோவ் செவிடன்னா எப்படியா பேசறான்?” என்று கும்பளுக்கு வெளியேஇருந்தவன் கேட்க, “இவன் யார்றாவன்? செவிடுன்னா காதுலதான்கோளாறு இருக்கும். வாய் நல்லாதான் இருக்கும். உங்க ஊர்ல எல்லாம்காதுலதான் பேசுவாங்களா?” என்று கும்பலுக்கு உள்ளே இருந்தவன் பதில்சொன்னான். “எப்பத்துல இருந்து காது கேக்கலையாம்? பிறவி செவிடா? பாதியிலன்னாதெரிஞ்ச டாக்டர் இருக்காரு..” என்று உயரமானவன் விசாரிக்க, “ஒன்பதுபவுன் செயினுக்கு வழி என்ன கேளுங்க?”சங்கிலிப்பெண் கதற, “ஏம்பாஇங்க கொஞ்சம் பாயாசம் கொண்டார்றீய?” என்று சம்மந்தமே இல்லாமல்ஒரு பெண் குரல் கேட்க, “மூடிகிட்டு இருடி” என்று உறவில் ஒட்டாதஒருத்தன் கத்த, “நான் சீரங்கத்தோட அத்தை கொஞ்சம் பாத்து பேசு,” என்றுஎந்த சீரங்கமோ வந்து குதிக்க, “இந்த பையனை யாரு அடிச்சது எனக்குதெரிஞ்சாகணும்.” என்று சமையல் காண்ட்ராக்டர் களம் இறங்க...குழுகுழப்பமாகிவிட்டது அந்த இடம். கடைசியில் அடிபட்ட பாயாசப்பையனுக்கு குளிர்பானம் கொடுத்து ரகளையை முடித்துக்கொண்டார்கள்.செவிடனை அடித்ததற்காக எல்லோருமே வருத்தப்பட்டார்கள். 'செவிடன் திருடமாட்டானா?" ஒரு பெண் குசுகுசுவென்று யாரிடமோகேட்க, பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் தேவையே இல்லாமல், 'தோரெண்டாவது வரிசையில உட்கார்ந்து ஒரு கூச்சலம் காதில போட்டுக்காமசாப்பிடறானே உன் அக்கா புருசன் அனும் செவிடன்தான். அவன்திருடனாயிருப்பானா? " என்று கேட்டாள். அவர்கள் கழிப்பறைப்பக்கமாகநின்று ஆரோக்கியமாக சண்டை போட ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் அந்த செவிட்டுப் பையன் திருடன் இல்லை என்றுஎல்லோரும் பரிதாபமாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அந்த நகைஎங்கே? யார்தான் நகை திருடியது? நடப்பது நடக்கட்டும் எனக்கென்ன வந்தது என்று தின்பதே தொழிலாகஇருந்த பாட்டப்பன் மீது எல்லோர் பார்வையும் விழுந்தது. 'ஸார் யாரு?யார் வீட்டு உறவு?" ஒருத்தன் எகத்தாளமாக கேட்டபடி பாட்டாப்பன்அருகில் வந்தான். பாட்டப்பனுக்கு தருமசங்கடமாகிவிட்டது. பெண்வீட்டுக்காரனிடம் மாப்பிள்ளை வீட்டு ஆள் என்றும், மாப்பிள்ளைவீட்டுக்காரனிடம் பெண் வீட்டு ஆள் என்றும் சொல்லி ஒருத்தன்தப்பிக்கலாம். இரண்டு பேரும் ஒன்றாய் இருந்தால் சமையல்காரன்,நாயணக்காரன், பந்தல்காரன் என்றும் சொல்லியும் தப்பிக்கலாம்.கல்யாணமண்டபத்தில் திருட்டு சோறு தின்பவர்களெல்லாம் அதைசொல்லித்தான் தப்பிப்பது வழக்கம். ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில்இருந்தால் எதைச் சொல்லி தப்பிப்பது? மாப்பிள்ளை வீடென்றால்கொஞ்சம் குறைச்சலாக விசாரிப்பார்கள் என்று நினைத்த பாட்டப்பன், 'மாப்பிள்ளைக்குச் சொந்தம்" என்றான். 'யாரோட மாப்பிள்ளைக்கு சொந்தம்?" எகத்தாளமாய் கேட்டார்கள்எல்லோரும். 'இதென்ன கேள்வி? கல்யாண மாப்பிள்ளைக்குத்தான்?" பாட்டப்பன்தெளிவாகச் சொன்னான். 'யாருக்கு கல்யாணம்?" ஒரு இரட்டைக் கண்ணன் கேவலமாயக்; கேட்டான். 'என்னய்யா நீ லூசு மாதிரி பேசற. பொண்ணு மாப்பிள்ளைக்குதானே இங்ககல்யாணம் நடக்கும். உனக்கும் எனக்குமா நடக்கும்?" 'யாருடா லூசு. வளைகாப்பு நடக்கிற எடத்துக்கு வந்து கல்யாணத்துக்குவந்ததா சொல்லற நீ லூசா நான் லூசா?" கேட்டபடியே கொத்தாகபாட்டப்பன் சட்டையை பிடித்தான் ஒருத்தன். கடவுளே! கல்யாணமண்டபத்தில கல்யாணம் மட்டும்தான் நடக்கும்னு நினைச்சது எத்தனைபெரிய தப்பு. இதுக்கு பதிலா, திருநீரை அழிச்சிட்டு, சாகுல் அமீதுகல்யாணத்துக்கே போயிருக்கலாம். பாட்டப்பன் பாதி சாப்பாட்டில் எழுந்துநின்று படுஜோராக விழிக்க ஆரம்பித்தான். திருடன்தான் கிடைத்துவிட்டானே! ஒருத்தன், 'போலீஸ் போலீஸ்" என்றுகத்தினான். அதைவிட சத்தமாக இன்னொருத்தன் 'ஆம்புலன்ஸ்,ஆம்புலன்ஸ்" என்று கத்தினான். திருடனை பிடிக்க ஆம்புலன்ஸ்எதுக்காம்? உயிர் போகிறபடி அடிக்க முடிவு செய்துவிட்டார்களா?ஆம்புலன்ஸ் கூப்பிட்டவனை வெடவெடப்போடு பார்த்தான் பாட்டப்பன்.நகையை பறிகொடுத்த பெண் லட்டு லட்டாய் வாந்தி எடுத்துவிட்டு மயங்கிதரையில் விழுந்த பிறகுதான் ஆம்புலன்ஸ் எதற்கு என்று புரிந்ததுபாட்டப்பனுக்கு. பாட்டப்பனை விட்டு எல்லோரும் மயங்கிய பெண் பக்கம் ஓடினார்கள்.தப்பி ஒடிவிட முடிவெடுத்தான் பாட்டப்பன். ஆனால் ஒரே சட்டையைமூன்று பேர் கொத்தாக பிடித்திருந்தால் எப்படி ஓடுவது. ஒருத்தன்புத்திசாலித்தனமாய் தாடியை வேறு பிடித்திருந்தான். 'நகையை குடுத்துடுடா! உன்னால ஒரு உசிர் போயிடும் போல இருக்கே?"கதறியபடி வந்தாள் ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு பேஜாராகிவிட்டது.பாட்டப்பன் நகை திருட வந்தவனில்லை. அவன் திருடவும் இல்லை.அப்பாவி ஏழை ஒருத்தனை திருடன் என்று தீhப்பு சொல்லி இவர்கள்அடித்தால், கொழுத்த பணக்காரன் நகையோடு தப்பிவிடுவது நிச்சயம்.அதை சொன்னால் யார் நம்புவார்கள். எடுக்கவில்லை என்றாலும்நம்பமாட்டார்கள். சோதித்து பார்த்து நகை இல்லை என்றாலும் நம்பமாட்டார்கள். கூட்டாளி எங்கே என்பார்கள். அவன் தப்பிவிட்டான்என்பார்கள். விதியே என்று பாட்டப்பன் தலையில் கை வைத்தவேளையில்தான் விதி நல்லவிதமாக வேஷம் கட்டிக்கொண்டு வந்தது. 'அய்யைய்யோ... நகை என்கிட்டதான் இருக்கு அதுக்கு எதுக்கு இத்தனைபெரிய கூட்டம் சேத்துகிட்டு" சொன்னபடி வந்தவன் நகை பறிபோனவள்புருசனாம். அவள்தான் முகம் கழுவும்போது கழற்றிக்கொடுத்துவிட்டுபிறகு மறந்துவிட்டாளாம். ஆக நகை திருடுபோகவில்லை. ஒரேகணத்தில் எல்லோரும் நல்லவர்கள் ஆனார்கள். பாட்டப்பனும் நல்லவன்ஆனான். வீட்டுக்கு ஓடிவிடலாம் என்று நான்கு எட்டு வீசி நடந்தான்.சந்தேகப் பிசாசுகள் அவனை விடுவதாய் இல்லை. 'ஏய் இரு இரு. வளைகாப்புக்கு வந்துட்டு கல்யாணத்துக்கு வந்தேன்னுசொல்லறீயே அப்ப நீ யாரு? இதுவரையில நீ திருடன் இல்ல. அப்பஇனிமேதான் திருடப்போறீயா?" விவரமாகக் கேட்டான் ஒருத்தன். பெரிய மனிதன் போல இருந்த ஒருத்தர் எல்லோரையும் அடக்கினார், 'ஏய்விடுங்கடா அவன. மண்டபத்தில ஒறவு இல்லாத ஒருத்தன் ஒண்ணுபொருள் எடுக்க வருவான். இல்ல சாப்பிட வருவான். பசின்னு சாப்பிடவந்தவனை பாதி பந்தியில எழுப்பறது பாவம். நீங்க சாப்பிடுங்க, சார்"சொன்ன அவர் பாட்டப்பனை உட்காரவைத்து சோறும் பறிமாறினார். பாட்டப்பன் பசியோடு இருப்பவன்தான். ஆனால் என்றைக்கும் திருடன்என்று பெயர் எடுக்காதவன். அவனால் சாப்பிடவே முடியவில்லை.ஆயிரம் பேர் உற்று பார்த்துக்கொண்டிருக்கும்போது சர்க்கஸில் இருக்கிறகுரங்கு வேண்டுமானால் வாழைப்பழம் தின்னும். பாட்டப்பனால் அதுமுடியாது. பார்வை குறைந்ததும் அவன் சாப்பிடாமலேஎழுந்துகொண்டான். எல்லாம் கண்ணம்மா என்கிற திமிர்பிடித்தசிறுக்கியை காதலித்ததால் வந்தது. சம்சாரி ஆகவேண்டும் என்றுஒருத்தன் முடிவெடுத்தால் செய்யக்கூடாததை செய்து படக்கூடாதஅவமானம் படவேண்டிவரும் என்பது உண்மைதான். கண்ணம்மாவை முதன் முதலில் பார்த்தபோதே டவுசர் ஆகிவிட்டான்பாட்டப்பன். சுழற்றிவிட்ட பம்பரத்தின் சுறுசுறுப்பில் அவள் உடம்புஇருந்தது. சண்டைக் குருவியின் படபடப்பில் அவள் பேச்சு இருந்தது.அவளிடம் தனக்கு பிடித்த எதோ இருக்கிறது என்று தெரிந்தபிறகு தன்வைராக்கியத்தை கைவிட்டு கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தான்பாட்டப்பன். அவள் போகும்போது வரும்போது விடாமல் பார்த்தான்.கண்ணம்மாவும் பார்க்கிறாள் என்பதை புரிந்துகொண்டான். பிறகுதைரியமாக அவளிடம் சென்று, 'என்ன நீ கல்யாணம் கட்டிப்பியா,கண்ணம்மா?" என்று கேட்டான். 'என் அப்பன் கசாப்பு கடை வெச்சிருக்கிறது உனக்கு தெரியும்தானே?ஆட்டுக்கு தோல் உரிச்சிட்டு மொதல்ல என் அப்பன் எதை அறுப்பான்னுதெரிஞ்சா நீ இப்படி கேட்டிருக்க மாட்டே" 'எந்த மாமனாரும் தன் மருமகனுக்கு குடும்பக் கட்டுப்பாடுசெய்யமாட்டாருங்கற தைரியத்திலதான் கேக்கிறேன். உன் பதில் என்னசொல்லு." 'கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேக்க ஒரு மொகறை வேணாம்? ஒருலட்சணம் வேணாம்? சோம்பேறிப் பய புள்ளை உனக்கு எதுக்குகல்யாணம்?" 'கை நீட்டி காசு சம்பாதிக்கிறவன் நானு?" தன் பெருமை சொன்னான்பாட்டப்பன். 'ஆ! பிச்சைக்காரன்னு தெளிவா சொல்லு. கோயில்ல துண்டு விரிச்சி, நாலுபேத்துகிட்ட பிச்சை எடுத்து வயிறு வளக்கிறவன் நீ. உன்கிட்ட உடுத்தநல்ல துணி இருக்கா? ஒரு வீடிருக்கா? மூணுவேளை திங்க சாப்பாடுஇருக்கா? செருப்பு போட வக்கில்லாத உனக்கு கல்யாணம் ஒரு கேடா?" 'ஆ! செருப்பு போட எனக்கா வக்கில்ல? பூமாதேவி கோச்சிப்பான்னுதான்நான் செருப்பு போடறதில்ல." 'ஆமா, துர்காதேவி கோவிச்சுப்பான்னு துணி போடாம இருக்கிறதுதானே?" 'ரொம்ப பேசாத கண்ணம்மா. நீ மட்டும் என்ன எம்எல்ஏ மகளா? உங்கப்பன்ஆட்டு தோல் உரிக்கிறவன். நீ காயிதம் பொறுக்கி காசு சேக்கிற சிறுக்கி..." காகிதம் பொறுக்கும் சிறுக்கி என்றதும் கண்ணம்மாவுக்கு கோபம்வந்துவிட்டது. அதுவரை சரிக்கு சரி வாயாடிக்கொண்டிருந்தவள்சட்டென்று வார்த்தை நிறுத்திவிட்டு, காகிதச் சாக்குப்பையை தோளில்போட்டுக்கொண்டு வெடுக் வெடுக்கென்று நடையைக்கட்டினாள். பாட்டப்பனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. காகிதம் பொறுக்குவதைகேவலமாக நினைக்கவில்லை பாட்டப்பன். இரண்டுபேருமே ஏழைக்கடவுள் பெற்ற பிள்ளைகள் என்றுதான் சொல்ல நினைத்தான். தப்பர்த்தம்ஆகிவிட்டது. உன் தொழில் தெய்வத்திற்குச் சமம் என்பதை குப்பைபொறுக்கியாவது அவளுக்கு நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தபாட்டப்பன் பிச்சை எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு தானும் ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சுற்றிச் சுற்றி காகிதம்பொறுக்க ஆரம்பித்தான். 'இதா... எதுக்கு இப்படி என்னை சுத்திகிட்டு இருக்கே?" 'உன்ன மாதிரி உன் புருசனும் காகிதம் பொறுக்கி உழைச்சி திங்கப்போறான். " 'என் புருசனா? அட கெரகத்தே! செருப்பு போட வக்கில்லாதபிச்சைக்காரன்னு மொதவே சொல்லிட்டனே. மொத ஒரு செருப்பைசாம்பாதிச்சிகிட்டு வா. பிறகு புருசன், அரசன்னு பேசலாம்."விரட்டிவிட்டாள் கண்ணம்மா. பாட்டப்பனால் ஒரு செருப்பு வாங்க முடியாதா? “இரண்டு ஜோடி செருப்புவாங்கியாறேன் கண்ணம்மா. உனக்கு ஒண்ணு. எனக்கு ஒண்ணு.கல்யாணச் செருப்பு” சவடால் விட்டு, சாம்பாதித்த காசு எல்லாம்எடுத்துக்கொண்டு செருப்பு கடைக்கு போனான் பாட்டப்பன். கடைக்காரன்பாட்டப்பனின் காலைப் பார்த்துவிட்டு, 'அடேங்கப்பா! ஒரு முழு எருமையசேதாரமில்லாம தோல் உரிச்சி செருப்பு தெச்சாத்தான் உன் காலுக்கு போடமுடியும். நீ செருப்பு தெக்கிற கடைக்கு போயிடு" என்று துரத்திவிட்டான். செருப்பு தைக்கிறவன் சிங்கத்து தோல் எடுத்து செருப்பு தைப்பவன்போலமுகறையை வைத்துக்கொண்டு, ஒரு ஜதை செருப்பு நாநூறு ரூபாய்ஆகும் என்றான். இத்தனை வருடப் பிச்சைக்காரப் பிழைப்பில் மிச்சம்பிடித்து வைத்திருந்த இருபத்தி ஏழு ரூபாயை எண்பத்தெட்டு முறைஎண்ணிப்பார்த்த பாட்டப்பன் ‘கண்ணம்மா! நீ சொன்னது சரிதான்டீ...செருப்பு போட வக்கத்த நாயீ நான்.” என்று புலம்பினான். செருப்பில்லைஎன்பதற்காக நடக்காமல் போய்விடுவமா ஒரு கல்யாணம்.அதற்காகத்தான் ஒரு பெரிய திட்டம் போட்டான் பாட்டப்பன்.கல்யாணமண்டபத்திற்கு போய் மூக்கு பிடிக்க தின்று கால் அகலத்திற்குசெருப்பை போட்டுக்கொண்டுவந்துவிடவேண்டும். வந்தான். தின்றதுசவுகரியம்தான். பட்டதுதான் அசிங்கம். வளைகாப்பு மண்டபம் மீண்டும் ஆரவாரத்திற்கு வந்திருந்தது.பாட்டப்பனை மறந்திருந்தார்கள். மண்டப வாசலுக்கு வந்தான். ஜோடிஜோடியாய் செருப்பு இருக்குமே... எடுக்காமல் போவதா எடுத்துக்கொண்டுபோவதா? சாப்பாடு போட்ட நல்லவர்கள் செருப்பை திருடவேண்டுமா?முன் பின் குழப்பமாய் இருந்தது பாட்டப்பனுக்கு. நல்லவன் என்றுசொன்னதற்காக ஒருத்தன் நல்லவனாகவே இருக்க முடியுமா? செருப்பைகண்ணம்மா என்ற காதல் சிறுக்கிக்காக திருடியேவிடுவது என்றுமுடிவெடுத்தபோதுதான் நெஞ்சு வெடிக்கிறபடி அதிர்ச்சி வந்ததுபாட்டப்பனுக்கு. அங்கிருந்த எல்லோருமே தங்கள் செருப்பை தங்கள்காலிலேயே போட்டிருந்தார்கள். செருப்புக் காலோடு மண்டபத்திற்குள்போலாம் என்று சொல்லிக்கொடுத்த அவர்களின் அம்மாக்களைகண்டபடிக்கு திட்ட ஆரம்பித்தான் பாட்டப்பன். இனி எங்கே போய்திருடுவான் செருப்பை? நாதஸ்வரம் சத்தம் கேட்ட பக்கம் பாட்டப்பனுக்கு அதிர்ஷ்டம்காத்திருந்தது. சிமெண்ட் மேடை மீது ஜமுக்காளம் விரித்து தவில்வாசித்துக்கொண்டிருந்தவர்கள் செருப்பை மேடைக்கு கீழேவிட்டிருந்தார்கள். அவன் சந்தோசமாய் அங்கே போனான். இரண்டுநாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு ஸ்ருதி பெட்டி, ஒரு ச்சைங், சப் என்றுமொத்தம் ஆறு பேர் மேடையில் இருந்தார்கள். கீழே இருந்தது ஏழு ஜோடிசெருப்பு. நான்கு செருப்பு போடுகிற நாலுகால் ஆசாமி யாராகஇருக்குமென்று தவில் கோஷ்டியில் தேட அவகாசமில்லைபாட்டப்பனுக்கு. தன் காலுக்கு சரியாக இருக்கிற செருப்பைபோட்டுக்கொண்டான். தன்னுடைய செருப்பு களவு போவது கூடதெரியாமல் ரசித்து நாதஸ்வரம் வாசித்தவர்களை பரிதாபமாக அவன்பார்த்தான். இசை, கலை, ரசனை என்று சில விசயங்களில் மனசைபறிகொடுத்தால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதைஇழந்துவிடுவோமென்று அவர்கள் புரிந்துகொள்ளட்டுமென்று அவன்மண்டபத்திற்கு வேளியே வந்தான். ஆடாகவோ, மாடாகவோ பிறக்காமல் ஒரு மனுசனாக பிறந்ததற்காகமுதல் முறையாக சந்தோஷப்பட்டான் பாட்டப்பன். ஒரு மாடு தன்காதலுக்காக என்றைக்குமே செருப்பை திருடியிருக்காது. அடுத்ததெருவுக்கு வந்து கடையில் பீடி வாங்கி கம்பீரமாக புகைத்துக்கொண்டேகாலில் செருப்பில்லாமல் வருகிற சம்சாரிகளை அவன் கேவலமாகப்பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு கிழவன் செருப்பில்லாமல்வந்ததையும், வெறும் காலில் அவன் சிகரெட் நெருப்பை மிதித்துவேதனையோடு துடித்ததையும் கண்டான். சிகரெட் நெருப்பின் சூடுஎத்தனை கொடுமையானது என்பது காலில் செருப்பில்லாமல்நடந்தவர்களுக்குத்தான் தெரியும். பாட்டப்பன் காரியத் திருடன் இல்லை.அப்பாவித் திருடன். அதவும் குய்யென்று ஒரு நாய் பசியில் கத்தினாலும்இருக்கிற மொத்த சோற்றையும் அதற்கு கொட்டிவிடுகிற கேணைக்கிறுக்கன். சிகரெட் நெருப்பை மிதித்து ஒரு கிழவன் துடிக்கிறான் என்றுதெரிந்ததும் ஓடினான் பாட்டப்பன். கிழவன் முன்பாக செருப்பை கழற்றிவிட்டு, 'இதை போட்டுக்கோ பெரிசு" என்றான். அடப்பாவமே! கண்ணம்மாவின் காதல் என்னாவது? அவன் மனசுக்குள்பசுமாடொன்று கத்தியது. பாட்டப்பனுக்கு தெரியாத சூதா? பாட்டப்பன்தந்திரக்கார நடிகன். பாட்டப்பன் செருப்பு போட்டுக்கொண்டிருப்பதையும்,அவன் ஒரு கிழவனுக்கு அதை தானமாக தருவதையும் கண்ணம்மாதூரத்தில் காகிதம் பொறுக்கியபடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.அதை பார்த்தும் பார்க்காதவன் போலத்தான் பாட்டப்பன் அப்படிசெய்கிறான். ஆனால் நாமே நடத்துகிற நாடகத்தில் கண்டவனும்போனவனும் கண்ணாபின்னாவென்றுதானே நடிப்பார்கள். பாட்டப்பன்செருப்பைக் கொடுக்க, அந்தக் கிழவனோ செருப்பை தானம்வாங்குவதில்லை என்ற பாட்டியிடம் சத்தியம் செய்தவன் போலமுறைத்துக்கொண்டு நின்றான். பிறகு பாட்டப்பன் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விட்டான். சோகத் திரைப்படம் பார்க்கத்தெரியாதவர்கள் அழுகைக்காட்சியில்தான் சிரிப்பார்கள். கிழவன் விட்ட அறைச் சத்தத்தைவிடபெரும் சத்தத்pல் கண்ணம்மா சிரிக்க ஆரம்பித்தாள். ஒரே நேரத்தில்இன்பமும் துன்பமும் வந்ததில் குழம்பிப்போனான் பாட்டப்பன். 'ஏன்டா, என்னோட செருப்பையே திருடிகிட்டு வந்து எனக்கே தருமம்செய்யறீயா நீ. உன்னால பாருடா வெறுங்கால்ல வந்து நெருப்பைமிதிச்சேன்." 'செருப்பு உன்னோடதா பெரிசு. அப்ப நீ நாயணக்காரனா?" திபீரென்று இன்னொரு அடி விழுந்தது பாட்டப்பனுக்கு. 'ஏன்டா, அரசனட்டிநாட்டாமை என்னப்பாத்து நீ நாயணக்காரன்னா கேக்கறே!" நாட்டாமை ஊர்கூட்டி பஞ்சாயத்துக்கு கத்த ஆரம்பித்துவிட்டான். அப்பொழுதுதப்பித்தாலும் தருமப்படி மீண்டும் திருடனாகிவிட்டான் பாட்டப்பன். 'தருமம் வாழ்க!" என்று சொல்லிக்கொண்டே அவன் தரும அடிக்குதயாரானான். இந்த தருமம் நியாயம் சத்தியம் எல்லாம் ஊமைகளிடம்தான் தன்வேலையைக் காட்டும். வாயுள்ளவர்களைக் கண்டால் தருமம் என்பதுரத்த வாந்தி எடுத்துவிடுகிறது. பாட்டப்பன் ஒப்புக்கொண்டதால் அவன்செருப்பு களவானிதான். ஆனால் கண்ணம்மா அதைஒப்புக்கொள்ளாவிட்டால் தருமம் கால் கிளப்பிக்கொள்ளும். வேடிக்கைபார்த்த கண்ணம்மா காகித சாக்கை போட்டுவிட்டு ஓடிவந்து அந்தநாட்டாமைக் கிழவனை வாங்கு வாங்கு என்று வாங்கினாள், 'ஏய்யாகெழட்டு முண்டம். நீ செருப்பை கேணையனாட்டம் எங்கியோ விட்டுட்டுவந்து இங்க நாந்தான் நாட்டாமைன்னு சொல்லுவே! அதை இந்த மகராசன்கொண்டாந்து குடுத்தா அடிப்பியா நீ? அறிவு கெட்டவனே... இப்படியேநெலவரமில்லாம போகாத பஸ்சுன்னு நெனைச்சி த்ரோவா பாடையிலஏறிடுவே..." என்று அவள் போட்ட கூச்சலில் நாட்டாமைக் கிழவன்ஆடிப்போனான். ஆளை விட்டால் போதுமென்று செருப்பை காலில்போட்டுக்கொண்டு ஓடிப்போனான். மீண்டும் பாட்டப்பன் யோக்கியனாகமாறிவிட்டான். 'எவன் அடிச்சாலும் மொகறைய காட்டிக்கிட்டு நிக்கிறியே கேணப்பயலே!வெக்கமாயில்லே" அடுத்து பாட்டப்பன் மீது பட்டாசு விட்டாள்கண்ணம்மா. 'நீதானே செருப்பு போட வக்கில்லாத பிச்சைக்காரனை கட்டிக்கமாட்டேன்னு சொன்னே" 'அதுக்காக? செருப்பு போட்டவன் பின்னாடியே போக பொண்ணு என்னகுதிரை லாடமா? நீ ஒழுக்கமா ஒரு காசு சம்பாதிக்கணுன்னுதான் நான்அப்படி சொன்னேன். நீ செருப்புத் திருடனா வந்து நிக்கறே! அடி உதைக்குபயப்படாம திருடப்போற நீ வேர்வை வெயிலுக்கு பயப்படாம உழைக்கமாட்டியா? நீயெல்லாம் ஒரு மனுசன்தானே... உனக்கு உடம்புல சூடுசொறணை இருக்குதானே... வாயால திங்கற மனுசன் உடம்பாலஉழைக்கணுன்னு உனக்கு எந்த பொறம்போக்கும் சொல்லித் தரலையா?வாய்யா, என் பின்னாடி வா... குப்பை பொறுக்கிற சேவலுக்கு எட்டுபெட்டைக் கோழி இருக்கு பாரு! எதனால... கம்பீரம் வேணும்யா...குப்பையக் கிளறியாவது பொட்டச்சிய மயக்கற கம்பீரம் வேணும்.இருக்கா? உனக்கு இருக்கா..." கண்ணம்மா ஓயாத அறிவை சொல்லிபாட்டப்பனின் செவிட்டில் ஈரம் காயாமல் அடித்துக்கொண்டே இருந்தாள். எட்டு வயதில் அனாதையாகி, பதினாறு வயதுவரை சித்தப்பன் வீட்டுதண்டச்சோறு தின்று, இன்றுவரை அரைச் சாமியாராக பிச்சை எடுத்து,மானத்தோடு வாழ்ந்துவரும் பாட்டப்பனைப் பார்த்து தெருநாய்குழைத்தாலும் சரி அதன் மண்டை மேல் கல் போட்டு கொன்றுவிடுவான்.ஆனால் கண்ணம்மாளின் அறிவு இன்று அவனுக்கு தித்திக்க ஆரம்பித்தது.புண் வந்த முதுகு, வண்டல் படிந்த பாதம், நாற்றக்கறை பிடித்த பற்கள்,பரட்டைத் தலை, யாசிக்கிற கைகள், பிச்சைக் குரல் எழுப்பும் வாய் என்றுசீரழியத் தயாராக இருந்த தன் முதுமையை திசை திருப்பி, குப்பைக்குள்ரத்தினம் தேடுவது போல காகிதங்கள் தேடவைத்துகுடும்பஸ்தனாகப்போகும் எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும்கண்ணம்மாவின் கட்டளை வசவுகளையும், அதை மந்திரம் போலஉச்சரிக்கிற அவளின் சிவந்த வாயழகையும் கண் இமைக்காமல்,பாவென்று வாய் பிளந்து பார்த்தபடி நின்றிருந்தான் பாட்டப்பன். முரட்டுச்செருப்பணிந்தபடி சண்டைக்கார கறுப்பியின் பாதங்களுக்குப் பின்னால்ஒரு குப்பைச் சேவலாக மாறி தத்திச் செல்வது போன்ற பிரம்மை வந்ததுஅவனுக்கு. “நான் சேவலா மாறி குப்பைய கிளறினா நீ என்னை அறுத்து குழம்புவெச்சிட மாட்டியே?” பாட்டப்பன் கேட்க, பயந்த கிறுக்கனின் கேள்வியில் திகைத்த கண்ணம்மாவயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓவென்று சிரித்தாள். அவள் சிரித்தசிரிப்பில் சில குழந்தைகளின் முகம் தெரிந்து மறைந்தது பாட்டப்பனுக்கு.அது பாட்டப்பனின் சாயல் கொண்ட குழந்தைகள். https://elilvarathan.blogspot.ca/2016/08/blog-post_16.html
 7. அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்...! தன் காந்தக்குரலால் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள் ...!
 8. ஏறாவூர், சவுக்கடி இரட்டைக்கொலை தொடர்பில் மூவர் கைது
 9. வரலாறு இல்லாதவர்கள் உண்மையான வரலாற்றை பார்த்தால் அஞ்சுவார்கள் ?பா.ஜ.க - ஆர் எஸ்.எஸ் - க்கு அதனால் தான் அச்சம்? - ஆரூர் ஷாநவாஸ்
 10. தீபாவளியின் அரசியல் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு சீரிய ஆய்வாளனை ஆய்வின் நுட்பமான தளங்களை நோக்கி நகரவிடாமல், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள ஆய்வுப் போக்கிலேயே, ஒட்டி அல்லது வெட்டி யோசிக்க வைக்கும் இந்த ஆதிக்கத் தன்மைகளின் ஆய்வு அரசியல் செயல்பாடுகளைத்தான் நான் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அரசு சார்ந்த ஆவணங்கள், மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கியப் பிரதிகள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள்... போன்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வைகளுக்கு வந்த அம்சங்களையே கவனத்தில் எடுத்துக்கொள்ளும் போக்குதான் இன்றளவிலும் வெகுஜனஆய்வு தளத்தில் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆவண அரசியல். மக்களின் வாழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாது, மேலோட்டமான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்தி தங்களது அரசியலுக்கேற்ப இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்கும் மேட்டிமைச் சாதிகளின் நுண்ணரசியல். ஆகவே, இந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் வரலாற்றுத் திரிப்புகள் மிகுந்துவரும் இன்றைய சூழலில் மிக மிக முக்கியமான ஒன்று. அப்படியான தேடுகைகளுக்கும், ஆய்வுகளுக்கும் மேலே குறிப்பிட்ட ஆவண வகையறாக்கள் பெருமளவில் பயன்தராது. ஆகவே இதுவரை கவனம் கொள்ளாத, மறைக்கப்பட்ட நாட்டார் வழக்கில் புழங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு விதமான ஆய்வுக்கூறுகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். நாட்டார் வழக்குகளில் புழங்கும் சொலவடைகள், நாட்டார் தெய்வங்களின் பாரம்பரியக் கதைகள், ஊஞ்சல் பாடல்கள், சுப காரியங்களின்போது பாடப்படும் மங்களப் பாடல்கள், வேளாண் பணியின் போது பாடப்படும் ஏலேலோ பாடல்கள், கிராமிய விளையாட்டுகளில் பாடப்படும் குலவைப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், விருத்தப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.. போன்ற பண்பாட்டு வழக்காறுகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. அவைகளின் அடியாழத்தை நுட்பமாக நுண்ணுணர்ந்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. ரத்தமும் சதையுமான இந்த வாழ்வியல் கூறுகளில்தான் மறைக்கப்பட்ட ஆதித் தமிழ்க்குடியின் பண்பாடுகளையும் திரிக்கப்பட்ட வரலாற்றையும் தரிசிக்க முடியும். இப்படியான ஒரு பார்வைப் பின்புலத்துடன் உங்கள் கையிலிருக்கும் வெடிச்சரத்திற்குத் தீ வையுங்கள். அந்த வெடியின் ஓசை ஆயிரமாயிரம் வருடங்களுக்குப் பின்னால் உங்களை அழைத்துப் போகும். ஒரு விழா என்பது, காலங்காலமாக உழவர்களின் செயலூக்கத்திலிருந்துதான் உருவெடுத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண்மைச் சமூகத்திற்கு மாற்றமடையும்போது நிலத்தையும் நிலம் சார்ந்த வாழ்வியல் அம்சங்களையும் வழிபாடு செய்யும் போக்கு ஆரம்பிப்பதை சங்கப் பிரதிகளில் உணரலாம். மழையை வழிபாடு செய்யும் நோக்கில் மாரியம்மன் திருவிழா, நிலத்தை வழிபாடு செய்யும் நோக்கில் பொங்கல் திருவிழா என்று பண்டைய மனிதனின் வாழ்வியலில் பெரும் பங்கு வகித்த வேளாண்மைக் கண்ணோட்டத்திலேயே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் தீபாவளி பற்றிய குறிப்புகள் சங்கப் பிரதிகளில் விரிவாகவும் விளக்கமாகவும் இல்லை. (மணிமேகலையில் வரும் ஓரிரு வரிகள் இந்த நாட்டார் விழாவைக் கோடி காட்டுகின்றன. அந்த வரிகளை உரையாசிரியர்கள் வேறுவிதமாக விளக்கம் கொடுத்து பார்வையை மாற்றிவிட்டதன பயனாக ஆதித் தமிழனின் பண்டைய விழா திசைமாறிப்போய்விட்ட அவலத்தை எதிர்கொண்டு வருகிறோம். கட்டுரையின் இறுதியில் அதைப்பார்ப்போம்) கடந்த சில நூற்றாண்டுகளாக, தீபஒளி ஏற்றுவது என்பது போன்ற செவ்வியல்தன்மை கொண்ட நிகழ்வுகளாக இலக்கியப்பதிவுகளில் சுட்டப்பட்டு வந்திருக்கின்றன. இந்தப் பதிவுகளை அரசியல் இயக்கங்கள் தங்களது அரசியலுக்கேற்ப வளர்த்தெடுக்கும் போக்கே இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. அரசியலாளர்களும் ஆய்வாளர்களும் முன்வைக்கும் இந்தப் பார்வைகளை சற்றே மறந்து பண்டைய நாட்டார் வாழ்வியலுக்குள் நுழையலாம். என் சிறு பிராயத்தில், வடதமிழகம் சார்ந்த கொங்கு மண்டலத்தில் நிகழ்ந்த வள்ளி திருமணம் என்னும் கூத்து நிகழ்வின் காட்சிகளை உங்களுக்குள் நிழற்றிக் காட்டுகிறேன்: கூத்து நிகழ்வின் ஆரம்பத்தில் வள்ளியின் தந்தையாரான நம்பிராஜன் என்னும் அரசரும் மந்திரியும் உரையாடுகின்றனர். நம்பிராஜன்: அஹோ வாரும் மதியூக மந்திரி.. நமது நாட்டிலே மாதம் மும்மாரி பொழிகிறதா? நமது குடிகள் எல்லாம் ஷேமத்துடன் இருக்கின்றார்களா? மந்திரி: ஷேமத்துக்கு ஒன்றும் குறைவில்லை மகாகனம் பொருந்திய மன்னவா.. நாட்டிலே பெய்யக்கூடிய பருவமழை தவறாது பெய்து வருகிறது. ஆனால், பருவத்தையும் தாண்டி அடைமழையாகப் பொழிகிறது. அதுதான் பெரும்பாடாக இருக்கிறது.. நம்பிராஜன்: விளக்கமாச் சொல்லுங்கள் மந்திரி.. மந்திரி: மன்னவா, காடுகழனிகளில் போட்டிருக்கும் பயிர்கள் பெருமழையால் செழித்து வளர்ந்து பூட்டை வாங்கி பூக்கதிர்களாக துளிர்த்திருக்கும் பொழுதிலே, அடைமழை பிடித்துக் கொண்டது. இந்த அடைமழை, கதிர்களின் சூலகத்தில் ஒட்டியிருக்கும் பூத் தூள்களை கழுவிக்கொண்டு போய்விடும். தானியமணிகளாக சூல் கொள்ளக்கூடிய அந்தப் பூத்தூள்கள் இல்லாததால், தானியங்கள் பதராகி விளைச்சல் குன்றிப் போய்விடுகிறது. நம்பிராஜன்: ஓஹோஹோ.. அப்படியா சங்கதி.. என்றவர் பெருங்குரலெடுத்துப் பாடுகிறார்: மாரியை நிறுத்தவேணும்.. மஞ்சத் தினை காக்கவேணும்.. காடு கரையெங்கும் பந்தங் கொளுத்தவேணும்.. தீபமணையாது காரியைத் திருப்பவேணும்.. என்று பாடியவாறு காடுகழனிகளெங்கும் தீப்பந்தங்களை நட்டுவையுங்கள் என்றும், தீபங்களை அணைப்பதற்கு மாரித்தெய்வம் விரும்பாது என்றும் சொல்கிறார் அரசர். அதைத் தொடர்ந்து, மேலும் அதன் விளைச்சலுக்கு வந்திருக்கும் நேரத்தில் வயல்களில் பறவைகள் விழுந்துவிட்டன. அவைகளை விரட்ட முடியவில்லை என்றும் செழித்து வளர்ந்திருக்கும் பயிர் பச்சைகள் பற்றியும், பறவைகள் மற்றும் விலங்குகளின் அழிமாட்டம் பற்றியும், உழவர்களின் பாடுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறார் மந்திரி. அதற்கு அரசர், அவைகளை விரட்ட இடியோசை போன்ற நம்முடைய பறைகளைத் தட்டுங்கள் என்றும், வேடுவக் குடிகள் தமது விற்களை வளைத்து அம்புகளை வானிலே செலுத்தி அவைகளை ஒன்றோடொன்று மோதவிட்டு வானிலே அக்கினிப் பந்தங்களை உருவாக்குங்கள் என்றும் நீண்ட குரலெடுத்துப் பேசுகிறார். மேலும், ஒவ்வொரு பருவகாலத்தின்போதும் இந்தச் செயல்பாடுகளை ஒரு ‘விழவு’ போலச் செய்யுங்கள் என்கிறார். (விழவு என்பதற்கு பொருள் விளங்காமல், எங்கள் தமிழ் ஐயாவிடம் கேட்டதும், அவர் புருவங்கள் விரிய பதில் சொன்னதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது) இந்தத் தினைப்புலத்தில், பறவைகளை விரட்ட பரண் மீதேறிப் பாடும் வள்ளியின் ஆலோலத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்தில் தீபாவளியை அணுகும்போது அது உழவர்களின் பெருநாளாக வெடிச் சத்தத்தோடு முழங்குவதை அவதானிக்கலாம். தங்களது வேளாண் பயிர்களை பறவைகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் காக்க வேண்டி வேட்டுப் போடும் வழிமுறையை விழாவாகக் கொண்டாடும் அடையாளங்கள் நாட்டார் வழக்காறுகளில் கொட்டிக் கிடக்கின்றன. சிறு தானியங்களின் வேளாண்மைச் சாகுபடியில் கிளியடிக்கும் பருவம் என்று பயிரின் முளைப்பருவத்தைச் சொல்வார்கள். வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக இறங்கி முளைத்தளிர்களை அடிக்கும். இந்தத் துயரமான சூழலை கருப்பு எழுத்தாளரான சினுவா ஆச்சிபி, தனது "சிதைவுகள்’ என்னும் நாவலில் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். தமிழில் இதுபோன்ற பதிவுகள் பெரும்பாலும் இல்லை. அதன்பிறகு புழு அடிக்கும் காலம் தொடங்கும். இறுதியாக கருதுகள் மலர்ந்து தானிய மணிகளாகும்போதுதான் பறவைகள் அடிக்கும். இந்தப் பறவைகளை விரட்டும் முகம்தான் வேட்டு போடுதல். இதை அந்தப் பருவம் முழுவதும் ஒரு கொண்டாட்டம் போல நிகழ்த்தியிருக்கிறார்கள். உழவனின் நீரோட்டமான வேளாண் வாழ்வியலில் உருவாகிய திருநாள்தான் இது. ஆதி இனக்குழு மனிதன் வேளாண்மையை தனது உடல் நலச் சுழற்சியுடனேயே உருவாக்கியிருக்கிறான். பருவமழையின் போக்குகளையும், தனது உடல்நலக் கூறுகளையும் அவதானித்து, சிறுதானியப் பயிர்களின் வேளாண் சுழற்சியை ஆடிப்பட்டம், மாசிப்பட்டம், வைகாசிப்பட்டம் என்று பருவங்களாகப் பிரித்து, அதற்கேற்ப வேளாண்மை செய்தான். ஒவ்வொரு பருவத்தின் போதும், அந்தச் சூழலின் இயல்புக்கேற்ப உடல் சத்துகள் தரும் தானியங்களை உற்பத்தி செய்யும் சுழற்சி முறை அது. கடுமையான உடலுழைப்பு வேண்டும் கோடை காலங்களில் இரும்புச் சத்து தேவைப்படும். அப்போது கேழ்வரகு பயிர் செய்திருப்பார்கள். "கல்லை உடைச்சி களியைத் தின்னு’ என்கிறது சொலவடை. மேலும், வேண்டாத கழிவுகள் உடலில் நிறையச் சேர்ந்து விடும் காலத்தில் குதிரைவாலியைப் பயிர் செய்து அந்தக் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுவார்கள். இந்தக் குதிரைவாலிப் பயிர் குறித்த அம்சங்களில் வேட்டுபோடும் குறிப்புகள் நாட்டார் வழக்கில் காணக் கிடைக்கின்றன. இந்தப் பயிர் நல்ல விளைச்சலுக்கு வரும்போது தானியங்களைக் கொத்தித் தின்ன காக்கை குருவிகள் அண்டுவதில்லை. காரணம், இந்தத் தானியமணி ஏழு தோல்களால் மூடப்பட்டது என்று சொல்வார்கள். மாறாக, கொடுவாச்சிக் குருவி என்று ஒரு வகைக் குருவிகள்தான் வரும். அவை பெரும் கூட்டத்துடன் இந்த வயல்களில் சரேலென்று விழுந்தால் கருதுகள் அனைத்தும் கபளீகரமாகிவிடும். இவைகளை வேட்டுப் போட்டுத்தான் விரட்டுவார்கள். இதற்கான நாட்டார் கதை ஒன்று, இந்தத் தானிய மணி மிகவும் நுண்ணிய உணர்வு கொண்டது என்றும், ஒவ்வொரு வேட்டுப் போடும்போதும் ஒருதொளி உருவாகி மணியைக் கப்பிக் கொள்கிறது என்றும் சொல்கிறது. ஆக, வேட்டுப் போடுவது இந்த தானியத்திற்கு இன்றியமையாததாகிறது. கட்டுறுதியான இந்தத் தானியத்தை உரலில் போட்டு தனி ஒரு ஆள் குத்த முடியாது. கூட இன்னொரு ஆளும் உலக்கையைப் பிடிக்க வேண்டும். அந்த ஆளுக்கு ஈட்டுலக்கை என்று பெயர். அவர்தான் உலக்கைப் பாடல் பாடுவார். குத்தடி குத்தடி குதரைவாலு பத்தியிருக்குது ஏழு தோலு வேட்டு போட்டு வெளைஞ்ச வாலு ஆட்டம் போட்டு அழங்கும் பாரு.. இப்படிப் பல்வேறு நாட்டார் ஆவணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் குதிரைவாலியை உண்பவனை, "ஏழு தோலு தொலைச்சவன் காலு, வேட்டு போட்டு விழாக் கோளும்..’ என்கிற சொலவடை, மஹாவிஷ்ணு அழித்தொழித்த நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடும் தொன்மமாக மாறிப்போனதுதான் நுண்ணரசியல். இவ்வளவு பாரம்பரியமிக்க நாட்டார் மரபின் ஆழமான பார்வைகள், செவ்வியல் இலக்கியங்களில் பதிவாகாமலேயே போய்விட்டதெங்ஙனம்? என்று விவாதிக்க வேண்டியதில்லை. ஆதிக்க வர்க்க கலை இலக்கியங்களை மட்டுமே கவனப்படுத்தி வந்த புலவர் குழாம், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் கூறுகளை பெரிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை சங்கப்பிரதிகளில் உணரலாம். இருந்தும் சிற்சில இடங்களில் பதிவாகியிருப்பதை நாம் நுட்பமான வாசிப்பின் மூலம் தேடிக் கண்டடைய முடியும். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலைக்குள் நுழையலாம்: முதலாவது காண்டமான விழாவறை காதையைப் பார்க்கலாம். பூம்புகார் நகரத்தில் ஆண்டுதோறும் நடக்கின்ற ஒரு விழா குறித்து அந்தக்காதை விரிகிறது. (அந்தவிழாவை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இந்திர விழாவாக அடையாளப்படுத்துகிறார்கள் உரையாசிரியர்கள்.) விழா என்னும் பொருள் குறித்த அருமை பெருமைகள் பேசப்படுகின்றன. விழாவின் தன்மைகள் சுட்டப்படுகின்றன. விழா பற்றிய பரந்துபட்ட நிகழ்வுகள் நினைவு கூறப்படுகின்றன. அவை அப்போதைய சூழலில் உள்ள பல்வேறு கூறுகளை பல பரிமாணங்களாகப் பேசுகின்றன. இப்படிப் பேசப்படும் பல அடுக்குகளை மூலப்பிரதியின் மையத்தன்மைக்கேற்ப ஒற்றைத் தன்மையாகக் கொண்டு உரையாசிரியர்கள் எல்லாவரிகளையும் இந்திரவிழா குறித்த பார்வையாகவே முன்வைத்தார்கள். முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன் திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி வானம் மும் மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் (1:31-35) இந்த வரிகளில் உள்ள தீவகம் என்பதை நாவலந்தீவில் உள்ள தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தி நாள் என்று உரையாசிரியர்களால் சொல்லப்படும் பார்வையிளிருந்து சற்றே விலகி வருவோம். தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்றும் பொருள் இருப்பதை இங்கே பொருத்திப்பார்க்கும்போது ஒரு அற்புதமான காட்சி நம் மனக்கண் முன் விரிகிறது. வான மும்மாரி பொழியும் கோள்நிலை திரியாத மன்னனை வாழ்த்தி முரசு கொட்டிக் கொண்டாடும் முதுகுடியான உழவனின் தீவகச் சாந்திசெய்யும் திருநாளை, இந்திர விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் உவமையாக முன்வைக்கிறார். நாட்டுப்புற மரபிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், நாட்டுப்புறங்களில் இருந்த தீப விழாவை இங்கு பொருத்திக் காட்டுகிறார் சாத்தனார். இப்பாடலில் 'முதுகுடிப் பிறந்தோன்' என்று அவர் அடையாளப்படுத்துவது வள்ளுவர் என்னும் முரசரைபவரை என்பதாக உரையாசிரியர்கள் சொல்வது முற்றிலும் தவறான பார்வை. கவிஞர், வள்ளுவரை அடையாளப்படுத்தியிருந்தால் பாடலின் சந்தபூர்வமாக 'வள்ளுவன்' என்றே போட்டிருக்கலாம். அவர் அடையாளப்படுத்துவது முதுகுடியான உழவனையே இங்கு பொருத்துகிறார். (மேலும், இந்தப்பாடலை தீவக அணி என்னும் இலக்கணப் பார்வையில் பார்க்கலாம்.: ஒரு இடத்தில் எரியும் விளக்கானது அங்குள்ள பல பொருள்களுக்கு வெளிச்சமூட்டி விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் குறிக்கப்படும் ஒரு சொல்லானது, அதன் பல சொற்கேளாடு பொருந்திப் பொருளை விளக்கும் தன்மையே தீவக அணி என்று தண்டியலங்காரம் (39) சொல்வதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.) இரண்டாவது காண்டமான ஊரலருரைத்த காதையில், நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள் காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் (2:1-3) இந்த வரிகளில் தெளிவாக 'நாவலந்தீவு' குறித்தும், தீவகச்சாந்தி நாள் குறித்தும் பாடுவதையும் சீர்தூக்கிப் பார்க்கலாம். 24வது காண்டமான ஆபுத்திரனாடு அடைந்த காதையில், தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் (24: 62-63) இந்தத் தீபவிழா செய்யாத நாள் உன்னுடைய நகரம் கடல் கொண்டுபோய்விடும்.. இப்படியான மாற்றுப் பார்வையில் இந்தப் பாடல் வரிகளை மறு வாசிப்பிற்குட்படுத்தும்போது தீவகத்தின் திருநாள் சங்கப் பிரதிகளில் வெளிச்சம் போடும். 2 இந்தக் குதிரைவாலியை உண்பவனை, "ஏழு தோலு தொலைச்சவன் காலு, வேட்டு போட்டு விழாக் கோளும்..’ என்கிற சொலவடை, மஹாவிஷ்ணு அழித்தொழித்த நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடும் தொன்மமாக மாறிப்போனதுதான் நுண்ணரசியல். இந்தத் தீபாவளிப் பண்டிகையை இந்தியாவின் பல்வேறு நிலங்களில் பல்வேறு தொன்மங்களில் கொண்டாடுகிறார்கள் என்னும் செய்திகளை பகுத்துணர்வு செய்யும்போது அந்த நுண்ணரசியல்கூறுகள் பளீரென விடுபடுகின்றன. வடமாநிலங்களில், ஐந்து நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடுகின்றனர். முதல்நாள் தந்தேராஸ் என்னும் தன திரயோதசி, இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி, மூன்றாவது நாள் தீபஒளியுடன் லஷ்மியை வரவேற்கும் ஸ்ரீலஷ்மி பூஜை, நான்காம் நாள் கணவன் மனைவி உறவுமுறையின் தாத்பர்யத்தை’ கொண்டாடும் பத்வாபூஜை, கடைசிநாள் சகோதர சகோதரிகளின் உறவுமுறை ஐதீகத்தை முன்னிறுத்தும் பாய் தூஜ் என்னும் கொண்டாட்டத்தோடு முடிவடைகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில், ராமன், ராவணனை அழித்து, சீதையை மீட்டுக் கொண்டு, தனது வனவாசத்தை முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்னும் பொருள்பொதிந்த தொன்மத்தின் நினைவுகளோடு தீபாவளி நாளைக் கொண்டாடுகின்றனர். அதற்கு சிலநாட்கள் முன்பாக பெருமளவில் ராவணவதத்தைக் கொண்டாடிவிட்டு, அதன் தொடர்ச்சியாக, ராமர் அயோத்தி திரும்பும் நாளை தீபாவளியாகக் கணிக்கின்றனர். மராட்டிய மாநிலமான மும்பையில் முதன்மையாக லஷ்மி தங்களது வீட்டிற்கு எழுந்தருளல் என்னும் தொன்மமாக உருவகித்து லஷ்மிபூஜையாகக் கொண்டாடுகின்றனர். இதைப் புதுக் கணக்கு எழுதும் லஷ்மீகரமான விழாவாக சிறப்பிக்கின்றனர். இதற்கு நேரெதிராக மேற்கு வங்கத்தில், தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. மேலும், தீபாவளிக்கு அரசு விடுமுறையும் இல்லை. (தீபாவளி மட்டுமல்லாது விநாயகசதுர்த்தியும் அங்கு இல்லை.) தீபாவளி குறித்துச் சொல்லப்படுகின்ற எந்தவிதமான அம்சங்களும் இல்லாமல் அந்த மண்ணின் இறைமரபான காளி பூஜையே அந்தப்பருவத்தில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியிலிருந்து 14 நாட்கள் கழித்து அமாவாசைக்கு முந்தினநாள் இரவில், 14 தீபங்கள் ஏற்றி 14 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் காளியை வரவேற்கும் முகமாக காளிபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். துர்க்காதேவியின் ஆக்ரோஷ வடிவமான நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் காளியின் தொன்மம் மேற்கு வங்கத்தின் மரபுசார்அடையாளம். இந்த உருவகம் குறித்து பல்வேறு தத்துவக் கருத்தாடல்கள் வங்காளம் முழுவதும் வேரூன்றியுள்ளன. வங்க இலக்கியங்களில் எண்ணற்ற படிமங்களாக விரிபடும் காளியின் நாக்கு அந்த மண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளியின் நாக்கு என்பது மெய்துணிவின் சின்னம் என்று வியக்கிறார் புராணவியல் அறிஞரான தேவ்தத் பட்நாயக். ‘வெறும் ஆவேசமாக மட்டுமே பார்க்காமல், இயற்கையுடன் இணைந்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ளும் மெய்துணிவாகக் கொள்ளலாம்’ என்கிறார் அவர். (கல்கத்தாவுக்கு வந்திருந்த ஜெர்மன் நாவலாசிரியரான குந்தர் கிராஸ், ‘நாக்கை நீட்டிக் காட்டு’ என்ற உருவக ரீதியான பொருள் கொண்ட தலைப்பிலேயே அந்த நகரத்தின் சமூகச்சூழல் குறித்து எழுதியிருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.) 14 நாட்கள் போர் செய்து ராட்சசன் தாருகனையும் தீயசக்திகளையும் அழித்துவிட்டு, ரத்தவெறியுடன் அமாவாசை இருளில் வரும் காளிக்கு 14 தீபங்களில் ஒளியேற்றி வரவேற்கும் ஐதீகம்தான் காளிபூஜை. நாக்கைத் துருத்திக் கொண்டு கடுங்கோபத்துடன் வரும் காளியை சாந்தப்படுத்த, அந்த வழித்தடத்தில் சிவபெருமான் படுத்திருக்கிறார். ஆவேசத்துடன் வரும் காளி அவர் வழியில் படுத்திருப்பது அறியாது மிதித்து விடுகிறார். அப்போதுதான் அவரது சன்னதம் குறைகிறது. (தனது கணவரை மிதித்து விட்டோமே என்று வெட்கத்தால் நாக்கை வெளியில் நீட்டினார் என்று சொல்லப்படுவதும் உண்டு) நாட்டார் தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும் துர்க்கையின் காலடியில் சிவபெருமான் படுத்திருக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தின் பெண்ணியம் மற்றும் விளிம்புநிலை சார்ந்த முற்போக்கு முகத்தை முன்வைக்கிறது. தீபாவளிக்கு அடுத்தநாள் வெளியான Times of India (11.11.15) நாளிதழில் South Kolkata breaks away from tradition என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒருமுக்கியமான அம்சத்தை இத்தருணத்தில் இங்கு குறிப்பிடவேண்டும். இதுவரை மண்ணின் மரபான காளி தெய்வத்தை பூஜை செய்துவந்த தன்மை மாறி, கல்கத்தாவின் தெற்குப் பகுதியில் ‘சாமுண்டா’ என்னும் சாந்தமான தெய்வத்தை இந்தவருடம் புதியதாக பூஜை செய்யும் போக்கு ஆரம்பித்திருக்கிறது என்கிறது அச்செய்தி. வங்காள மண்ணின் பண்பாட்டு அடையாளமான காளி என்னும் நாட்டார் வடிவத்தின் நாக்கு, இனி மெல்ல மெல்ல சாமுண்டீஸ்வரியின் பெருந்தெய்வ அம்சத்தில் உள்ளடங்கிப் போகும். அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில், தங்களது புனிதக்கோயிலான பொற்கோயிலின் கால்கோள் தினத்தையே, இந்நாளில் நினைவு கூர்ந்து தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர் சீக்கிய மக்கள். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஜைனமக்கள், மகாவீரர் 'வீடு பேறு' அடைந்த தினமாக நினைவு கூர்கிறார்கள். குஜராத்தில் உள்ள இந்துக்கள், மஹாவிஷ்ணு, வாமன அவதாரம் கொண்டு, அழித்தொழித்த மகாபலி மன்னனின் இறப்பைப் போற்றும் நாளாகக் கொண்டாடுகிறார்கள். இதன் எச்சமாக, கேரளத்தில் மகாபலியைப் போற்றும் ஒருபகுதியாக நடைபெறும் ஓணத்திருநாளைக் கணிக்கலாம். ஆனால், அவர்களது தீபாவளி பற்றிய தொன்மம் என்பது தமிழகத்தில் கட்டமைந்திருக்கும் நரகாசுரன் பற்றியதே. (அங்கிருக்கும் வெடிவழிபாடு என்னும் நிகழ்வும் தீபாவளி கொண்டாட்டங்களும் வேறுவேறு பருவங்களில் நிகழ்வதால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாமல் இருக்கிறது.) பண்டைய தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட நரகாசுரன் பற்றிய தொன்மம், அதன் ஒருங்கிணைந்திருந்த பகுதிகளான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றுள் அப்படியே இன்றும் வேரோடியிருக்கிறது. ஆனால், ஆந்திராவிலிருந்து சமீபத்தில் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த ஒஸ்மானியா மற்றும் காகதீயா பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ‘நரகாசுரன் என்னும் திராவிட மன்னனை அழித்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடும் போக்கிலிருந்து விலகி துக்கநாளாகக் கொண்டாடுவதாக’த் தெரிவிக்கின்றனர். இந்த விழாவை முன்னின்று நடத்தும் பல்கலைக்கழக பேராசிரியரும் தலித்திய அறிஞருமான காஞ்சா அய்லய்யா, ‘தசரா கொண்டாட்டத்தின் ராவணன், தீபாவளியின் நரகாசுரன் போன்றோர் திராவிட தலித் கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்றும், டாக்டர் அம்பேத்கர் சொல்வது போல வரலாற்றை மறுவாசிப்புக்குட்படுத்த வேண்டுமென்றும்’ சொல்கிறார். “இந்த மாற்றுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் போன்றவை, தொன்மங்களையும் வரலாற்றையும் மறுவாசிப்பு செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்குகின்றன..” என்கிறார். (The Hindu -13.6.2015) (இது ஒருவிதத்தில் திராவிட வெகுஜனப்பார்வையை ஒத்திருந்தாலும், பிரிந்து வந்த தனது மாநிலத்தின் தனித்தன்மையை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக புதியதாகக் கட்டமைக்கப்படும் ஒருவகைக் கலாச்சார அரசியல் என்றும் கொள்ளலாம்.) இந்த நரகாசுரன் என்னும் தொன்மம், பண்டைய காமரூபம் என்னும் அஸ்ஸாம் மாநிலத்தின் தோற்றுவாய். இந்த நாட்டுமக்களைப் பெரும் கொடுமைகள் செய்து வந்த நரகாசுரன் என்னும் அரசனை மஹாவிஷ்ணு அழித்தொழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவனது இறப்பை நினைவு கூறும் விதமான திருவிழாவாக தீபாவளி உருவகிக்கப்பட்டது. இந்தியாவின் பலபகுதிகளிலும் தங்களது மரபு சார்ந்து கொண்டாடிக் கொண்டிருந்த வேட்டு போடும் கொண்டாட்டத்தோடு, இந்தத் தொன்மத்தின் புராணிகத் தன்மையை இணைத்து விடப்பட்டதாக அவதானிக்கலாம். மஹாபாரதம் போன்ற புராணிகத்தன்மைகள் மிக அற்புதமானவை; எல்லையற்ற மனித வாழ்வின் பல்வேறுபட்ட பரிமாணங்களை கண்முன்னே காட்சிப்புலங்களாக விரித்துப் போடும் இதன் அபாரமான வலைப்பின்னல், வரலாற்றுச் சொற்களை உருவகங்களாகவும், படிமங்களாகவும், தொன்மங்களாகவும் சுருக்கி மனிதனின் ஆழ்மனப் படிவங்களோடு இணை சேருகின்றது. ‘புராணக்கதை ஒரு சமுதாயத்தைப் பற்றி விளக்கக்கூடிய பயன்பாட்டை வரையறைக்குட்படுத்தி விடுகிறது. ஆனால் அது வேறு பல சாத்தியங்களுக்கு வழி வகுக்கிறது. ஒரு இனத்தின் உண்மையான வாழ்வியலைப் புராணக்கதையில் அப்படியே காணும்பொழுது, சில நேரங்களில் நனவிலி நிலையில் உள்ள சில செய்திகளை அடைவதற்கு உரிய வழியைப் பெறுகிறோம்.’ என்று புராணிகத்திற்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார் புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளரான லெவி ஸ்ட்ராஸ். இந்த ‘புராணிகம்’ என்கிற வடிவம் Illusion தன்மை கொண்டது. தனக்குள் வைத்திருக்கும் உருவகங்களையும், படிமங்களையும், தொன்மங்களையும் மதத்தன்மைகளாக மாற்றக்கூடிய வெளிப்பாடுகளைத் தனக்குள் கொண்டிருக்கும் அவலமும் அதுதான், மனித வாழ்வியலின் தேட்டங்களைத் தொடும் கலையின் சிகரமும் அதுதான். தமிழகத்தில் இத்தொன்மம் பெருமளவில் பரவியதற்கு திராவிட அரசியலுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இந்துப் புராணிகங்களை மறுத்து திராவிட அடையாளம் என்னும் ஒரு கருத்தியல் கொண்ட அரசியலை உருவாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் திராவிட அரசியலில், நரகாசுரன் திராவிட மன்னனாக உருவெடுத்தார். ஆரிய எதிர்ப்பு என்னும் பார்வையில் இத்தொன்மத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது திராவிட அரசியல். புராணிகங்களை பொய் என்றும் ஆரியப்பிதற்றல் என்றும் நிராகரித்து வந்த திராவிட அரசியல், தனது அரசியல் தர்க்கத்தின் தீவிரத்தை உணராமல், அந்தத்தொன்மத்தை ஏற்றுக் கொண்டு ‘நரகாசுரன் ஒரு திராவிட மன்னன்' என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது. வெறுமனே ஆரிய எதிர்ப்பு என்ற தட்டையான பார்வையை மட்டுமே எதிர்கொண்டதுதான் திராவிட அரசியல். அந்தக்கட்டத்தில் செயல்பட்ட மானுட விழுமியங்களையோ, திராவிட இனக்குழுவின் வாழ்வியல் போக்குகளையோ, பண்பாட்டு ரீதியான பார்வையில் திராவிட அரசியல் அவதானிக்கத் தவறியதன் விளைவுதான், இன்றைய இந்துத்துவப் பண்பாட்டுக் கட்டமைப்பு. மேலும், இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்வைத்து வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டு தங்களது அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக்கொள்ளவே விழைந்தனர். செல்பேசி, கணினி வசதிகள் பெரிதளவில் வளர்ச்சியில்லாத கடந்த காலங்களில் தீபாவளி வாழ்த்து என்ற துறை பெருமளவில் வணிகப்பயன்பாட்டில் இருந்தது. இந்த விழாக் கொண்டாட்டங்களை முன்வைத்து, தங்களது கருத்துக்களையும், சின்னங்களையும் தீபாவளி வாழ்த்துக்களாக வடிவமைத்து ஒவ்வொரு மனிதனின் வீட்டிற்குள்ளும் நுழைந்து கட்சி கட்டியது. தீபாவளி என்னும் இந்தக்கட்டமைப்புக்குப் பின்னால் திரளும் அரசியல் நலன்களுடன் வணிகநலன்களும் கைகோர்த்துக்கொண்டு பண்பாட்டு நலன்களாகத் தோற்றம் காட்டியபடி களமிறங்கின. உழவர்களின் குதிரைவாலிக் கருதுகளை பட்டாசுகளாக மாற்றிக் கட்டமைத்தது சிவகாசிச் சந்தை. பட்டாசுத் தயாரிப்பின் மாபெரும் வணிகத்திலிருந்து, ஆடை, அணிகலன், வாகனம், வீட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் என்னும் பல்வேறுபட்ட நுகர்வுச்சந்தையில் பலகோடிகள் புழங்கும் மாபெரும் நுகர்வுக் கலாச்சாரமாக மாறியது அது. திரைப்படங்கள், தொலைக்காட்சிநிகழ்வுகள், ஊடகங்களின் சிறப்புவெளியீடுகள் என்ற ஊடக வியாபாரங்களாகவும், அலுவலகங்களில் புதுக்கணக்கு எழுதுதல், போனஸ், என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றங்களெனவும் இந்த ஒற்றை வார்த்தைக்குள் லௌகீக மனிதனின் வாழ்வியல் பலதரப்பட்ட கூறுகளாகக் கட்டமைந்திருக்கிறது. பன்மைத்தன்மை கொண்ட பல்வேறு நாட்டார் விழாக்களை தமது ஒற்றைத்தன்மைகொண்ட பேருருவாக மாற்றும் போக்கு, தற்கால இந்துத்துவ நுண்ணரசியலின் முதன்மையான கூறுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரம்மாண்டமான வணிகக் கலாசாரம் ஒருபுறமும், பன்மைத் தன்மைகளை அழித்து ஒற்றை ஆதிக்கத்தை நிலைநாட்டும் நுட்பமான அரசியல் கலாசாரம் மறுபுறமுமாகக் கட்டமைந்த தொன்மங்கள் பட்டாசுகளாக வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆத்துக்கு அந்தப்புறம் ஆடுமேய்க்கும் சின்னத்தம்பி.. வேட்டு போடும் நாளு வருது தந்தனத் திய்யாலோ.. அந்தக் காடுகரை பூக்குது பார் தந்தனத் திய்யாலோ.. என்று பாடும் எங்களூர் அம்மாசிக் கிழவனின் பாடல் வரலாற்றின் பக்கங்களில் ஏறும்போது, பட்டாசு குதிரைவாலியாக மாறும். http://unnatham.net/theepavaliyin-arasiyal/
 11. ஈழத்தின் முதல்தர Octobad கலைஞர் பானு அவர்களின் கை வண்ணத்தில் பல வகை தாளவாத்தியங்களை ஒரே வாத்தியத்தில் முறையே தவில், தபேலா, மிருதங்கம், டோலக் என வாசித்து சும்மா பட்டய கிளப்புகின்றார்.
 12. என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள் https://www.facebook.com/video/video.php?v=863882350289044
 13. The 747 Supertanker is a firefighters dream.
 14. http://www.knowledgebase-script.com/demo/article-481.html
 15. தலைவியை இழந்த வானம் போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் ஊழித் தாண்டவத்தில் அழித்தனர் லட்சம்பேரை எஞ்சியோரை மாண்டுபோகும்படி செய்தனர் இனி? ஊழியின் ஈற்றில் சரணடையும் தன் சேனைக்கு தலைவி கூறியது இப்படித்தான் 'இத்துடன், எதுவும் முடிந்துவிடவில்லை' தீபச்செல்வன் https://deebam.blogspot.com/2015/10/blog-post_19.html?m=0
 16. விசுகு அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சசிவர்ணத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 17. கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான். இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார். தென்னாலிராமன் கதைகள்
 18. திருவிளையாடல் படத்தில் இருந்து காட்சி
 19. ரசித்த சினிமா காட்சிகள்