Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51084
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. உண்மையான நாடகம் கார்த்திகையில் வரவுள்ளது. Stay tuned.🙂
  2. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என பலர் இணைந்து கூட்டணியில் செயல்படுவதால், தங்கள் கருத்து, நிலைப்பாடு குறித்து கூட்டணியில் செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=185298
  3. இன்று வரை எமக்குரிய நண்பர்களையும் பலஸ்தீனியர்களின் நண்பர்களையும் (நாடுகளையும்) கணக்கில் எடுங்கள். யார் எங்கு பிழை விட்டோம் என புரியும்.
  4. வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!
  5. நாங்கள் யாரையும் நண்பராக்காமல் குய்யோ முறையோ என்பதில் பலனில்லை. சிங்களம் தமிழர்கள்(புலிகள்) முஸ்லிம்களை தமது இடத்தை விட்டு கலைத்து விட்டார்கள் என்று கூறி முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றார்கள் என்பதை நீங்கள் அறியாது அல்ல.
  6. புரட்சி சிங்கங்கள் கியூபாவும் எமக்கு எதிராக ஐ நாவில் வாக்களித்த்தார்கள். யாரின் குற்றம் அது??
  7. இன்று ஒடிசாவில் இறந்த இராணுவத்தினர் #Ukraine - Détails sur la frappe Iskander sur Odessa -3/4- Encadrants étrangers (OTAN) éliminés identifiés : Klaus Fischer, Jurgen Schmidt, Kevin Miller, Philippe Leblanc, Stefan Dragomirescu Translate post 9:46 AM · Mar 16, 2024 · Jacques Frère @JacquesFrre2 · 11h #Ukraine - Détails sur la frappe Iskander sur Odessa -4/4- Au total, plus de 45 à 50 étrangers et militaires ont été tués par la frappe, tandis que le nombre de blessés dépasse les 100 personnes (et non pas 550 comme évalué précédemment)
  8. வேதனையான கருத்துக்கள். எம்மவர்கள் (சிலர்) திருந்தப்போவதில்லை. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன்.
  9. Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
  10. “என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760
  11. புதிய கூட்டணிக்கு கைச்சாத்து ஆ.ரமேஸ். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சி தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக சவேரியார் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை தலமையகமாக கொண்டு செயற்படும் ஐக்கிய சுதந்திர கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/மலையகம்/பதய-கடடணகக-கசசதத/76-334751
  12. கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ! NO COMMENTS பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார். கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2024/03/blog-post_387.html
  13. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!! 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் நடத்தப்படவுள்ளது என்றும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஆந்திரா, சண்டிகர், தாதா நாகர் மற்றும் ஹவேலி, கோவா, டெல்லி, குஜராத், இமாசல பிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார் கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், சட்டீஸ்கர், அசாமில் 3 கட்டங்களாகவும், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்டில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறினார். https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-many-phases-of-election-in-which-states-here-is-the-full-details-124031600060_1.html
  14. வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் ! வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/296040
  15. இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு! வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பிகேஹள்ளி பொலிஸார் அங்கு சென்று, தகராறு செய்த கும்பலை விரட்டி அடித்தனர். பின்னர் அனாதை இல்லத்தில் சோதனை நடத்தியபோது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமியர் மீட்கப்பட்டனர். இந்த அனாதை இல்லம் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக அடைக்கலம் தருவதாக கூறிய சிறுமிகளை சேர்த்துள்ளது. ஆனால் அனாதை இல்லத்தில் சேர்ந்த சிறிது நாட்களுக்கு, பள்ளிக்கு சரியாக அனுப்பினர். அதன் பின்னர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்த அந்த சிறுமிகள், எங்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்த முயற்சி நடக்கிறது என கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இல்லத்தின் நிர்வாகி சமீர், உதவியாளர் சல்மா உட்பட 20 பேர் மீது, சம்பிகேஹள்ளி பொலிஸில், பிரியங்க் கங்கூன் முறைப்பாடு அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185235
  16. ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்? 17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=185234
  17. அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு! அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -கிளிநொச்சி நிருபர் சப்தன் https://tamil.adaderana.lk/news.php?nid=185232
  18. கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது அனைவருக்கும் பேரிழப்பாகும். Posted By: adminon: March 13, 2024In: இலங்கை, கனடா Print Email குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் – சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் தனது பவழவிழாவைக் கொண்டாடியிருந்தார். திருமண பந்தத்தின் காரணமாக குரும்பசிட்டியைப் புகுந்த வீடாக்கிக் கொண்டார். இலங்கையில் ஆசிரியராகவும், அருனோதயாகல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியவர். உயர் கல்வியை தமிழ்நாட்டில் பெற்ற இவர், இலங்கையில் நாடக கல்வி சார்ந்த டிப்புளோமா பட்டமும் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வரும் இவர் நாடகம், கவிதை, சிறுகதை, சமயம் நிகழ்ச்சிகள் என்று எமது இனத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்பணித்தவர். இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருட்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர் போன்ற பல பட்டங்களைச் சமூக நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன. இன்று பல நிகழ்ச்சிகளில் தமிழில் இசைக்கப்படும் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது. https://uthayannews.ca/2024/03/13/கவிஞர்-வி-கந்தவனம்-எம்மை/
  19. அமெரிக்காவின் மிதக்கும் துறைமுகம் மூலம் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்குமா?
  20. கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
  21. 30 வருடமாக போராடிய மக்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தானே இவர்கள்?????
  22. உச்சநீதிமன்றத்தில் விவசாயி சின்னம் வழக்கிற்காக நடத்தப்பட்ட திராவிட சதி பிரஸ்மீட்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.