Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51176
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. காதல் சடுகுடு
  2. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.....
  3. சும்மா இருக்க அரசு சோறு போடுகிறது? ஏன் விலகினார்கள்? உயிர் பயமும் இல்லை!!!
  4. Jon Secada - Just Another Day Oh-oh-oh (When you come home I breathe a little faster) Every time we're together, oh-oh It'd never be the same (It'd never be the same) If you're not here How can you stay away (How can you stay) Away so long? (Away so long?) Why can't we stay together? Oh-oh Just give me a reason. Give me a reason! 'Cause I, I don't want to say it's I don't want to find another way To make it through the day without you I, I, I can't resist Trying to find exactly what I miss It's just another day without you It's just another day, oh-oh Making the time (Find the right lines) To make you stay forever What do I have to tell you? I'm just trying to hold on to something (Trying to hold on to something good) Oh-oh Give us a chance to make it, to make it (give us a chance to make it) No, no, no Don't wanna hold on to never, no I'm not that strong! I'm not that strong! I, I don't want to say it's I don't want to find another way Make it through the day without you No-oh! I, I, I can't resist Trying to find exactly what I miss It's just another day without you No-oh! I, I, I I, I, I Ooh... why can't you stay forever? Just give me a reason, give me a reason! 'Cause I, no! (I, I don't want to say it's) (I don't want to find another) Don't want to find a way (Way) (Make it through the day without you) Don't want to make it through the day, no! (I, I, I can't resist) Baby, no! (Trying to find exactly what I missed) (It's just another day without you) I, I, I yeah! I don't want to find a way no! (I don't want to find another way) (Make it through the day without you) No, no, no! No, no, no! No, no, no! No, no, no! no, no, no (I, I can't resist) No, no, no! Oh yeah (Trying to find exactly what I missed) (It's just another day without you)
  5. நீச்சல் எல்லோரும் பழகி இருக்க வேண்டும். நீச்சல் தெரியாமல் ஆழமான குளம், கடலில் இறங்க கூடாது. மேற்படி இறந்தவர்கள் போதையில் நீரில் இறங்கி இறந்தவர்கள்(பெரும்பாலும்) கொள்ளலாமா?
  6. தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 8 நன்மைகள் | 8 garlic health benefits | Dr karthikeyan Email: karthikspm@gmail.com Website: https://www.doctorkarthikeyan.com Supporting Studies: https://pubmed.ncbi.nlm.nih.gov/23039.... https://pubmed.ncbi.nlm.nih.gov/15881.... https://pubmed.ncbi.nlm.nih.gov/22280... . https://pubmed.ncbi.nlm.nih.gov/23590.... https://pubmed.ncbi.nlm.nih.gov/24035.... Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
  7. TORONTO இல் நடந்த NPP இன் கூட்டத்தில் தமிழ் தரப்பின் 3 கேள்விகளுக்குப்பின், அநுர குமார பதிலளித்துப்பேசிய உரையின் தமிழாக்கம் பகுதி - I நன்றி மனோரஞ்சன்... எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன். நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது. ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக... அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார். ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது. நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். 'வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது... எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்.... எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்? (தொடரும்)
  8. Are you a Duck or an Eagle? Life Lessons from a Taxi Driver-Inspirational Story by Simerjeet Singh
  9. இஸ்ரேல் கேட்கும் மன்னிப்புக்குள் மறைந்துள்ள திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  10. இன்று திருகோணமலை நீதிமன்றில் திரு.சுமந்திரன் தமிழரசுக்கட்சி வழக்கில் ஆட்சேபணை….தொடரும் நாடகம்…
  11. #தமிழ்நாட்டில்_பிறமொழியினர்_சதவீதம் தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன. TAMIL = 88.37% தமிழ் TELUGU = 5.87% தெலுங்கு KANNADA = 1.78% கன்னடம் URUDU = 1.75% உருது MALAYALAM = 1.01% மலையாளம் HINDI = 0.55% இந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 50 பேர் மட்டுமே என்கிறது 2011 கணக்கெடுப்பு #தமிழ் - இந்தியாவில் மொத்தம் 6,90,26,881 மக்கள் தமிழ் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,37,53,997 மக்கள் வசித்து வருகின்றனர். #தெலுங்கு - இந்தியாவில் மொத்தம் 8,11,27,740 மக்கள்தெலுங்கு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 42,34,302 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தெலுங்கர்களின் 5.21% மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் #கன்னடம் - இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர். #உருது - இந்தியாவில் மொத்தம் 5,07,72,631 மக்கள் உருது மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 12,64,537 மக்கள் வசித்து வருகின்றனர். #மலையாளம் - இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர். #சௌராட்டிரம் - இந்தியாவில் மொத்தம் 3, 61,000 மக்கள் சௌராட்டிர மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 2, 41,000 மக்கள் வசித்து வருகின்றனர். #இந்தி - இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர். #மராத்தி - இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர். #ஆங்கிலம் - இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர். #வங்காளம் - இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர். #சிந்தி - இந்தியாவில் மொத்தம் 27,72,264 மக்கள் சிந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,448 மக்கள் வசித்து வருகின்றனர். #ஒரியா - இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர். #பஞ்சாபி - இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர். #கொங்கணி - இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர். #நேபாளி - இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர். #துளு - இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர் #அசாமிய - இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர். #அரபி - இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர் #மணிப்பூரி - இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர். #சமஸ்கிருதம் - இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர். #பழங்குடிமொழிகள் தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர் ஆதாரம் - இந்திய மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2011
  12. தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிகேட்டை தவிர அனைவரும் விலகி செல்கிறார்கள். ஈரானுடனான போருக்கு தயார் படுத்தலுக்காக இருக்கலாம் என கருதுகிறேன்.
  13. அமெரிக்கா வாழ் இலங்கைத் தமிழர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..! இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தகவலை அவர் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05.04.2024) நடந்த ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அபிலாசை இது தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி மட்டுமல்ல அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜேவிபி அறியாதது அல்ல. இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்துக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க 13 தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் மற்றும் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்காத நிலையில் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது. கூட்டு முயற்சி இந்நிலையில், அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் மற்றும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜேவிபியினர் கூறுவது அதிபர் தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது. இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை. அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு கடற்றொழிலாளர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மாறாக எடுத்தற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜேவிபி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இறக்குமதி இந்திய பருப்பை உண்ண மாட்டோம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம் மற்றும் தீவுப் பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜேவிபியினர். ஆனால் அதிபர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர். அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜேவிபி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நன்றி ஐபிசி தமிழ்)
  14. ஜே வி பியும் ஒரு இனவாத கட் சி. அது தமிழ் மக்களின் வாக்குகளை பெற நாடகமாடுகிறது. தமிழ் மக்களுக்கான தீர்வில் வெறும் மழுப்பலான பதில்களே இவற்றுக்கு சான்று.
  15. கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வின் மரியாம்பிள்ளை
  16. இலங்கையின் உண்மையான வம்சாவளிகள் தமிழரா ?சிங்களவரா ? சுரேன் ராகவன் | Sooriyan
  17. ஈரானிய தூதரகத்துக்கு மிக அருகில் தான் கனடா தூதரகம் உள்ளதாம். ஈரானிய தூதரகம் தாக்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் கனடிய தூதரகத்தில் உல்ளவர்கள் வெளியேறி உள்ளார்களாம். ஆகவே இத்தாக்குதல் பற்றி கனடாவுக்கு தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
  18. நிலநடுக்கத்தின் போது குழந்தைகளை ஓடிச்சென்று பாதுகாக்கும் தாதியர்கள் ! தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள பிரிவில், இன்குபேட்டர்களில் (Incubators) உள்ள குழந்தைகளை பாதுகாக்க தாதியர்கள் விரைந்து செயற்படும் CCTV காட்சி வௌியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் மருத்துவமனை கட்டடம் ஆட்டம் காண்கையில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள கட்டில்களை இறுகப் பிடித்துக்கொண்டு மிக வேகமாக தாதியர்கள் செயற்படுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவில், கட்டிடம் நடுங்கத் தொடங்கியதும் நான்கு தாதியர்கள் தாம் முன்னுரிமையளிக்க வேண்டிய விடயம் எதுவென தௌிவாகத் தெரிந்துகொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு 9 பேர் உயிரிழந்ததுடன், 1000 பேர் வரையில் காயமடைந்தனர். https://thinakkural.lk/article/298154 https://admin.thinakkural.lk/wp-content/uploads/2024/04/GIPW8xkg0hxvplsDAMkLclGGhxJ2bmdjAAAF.mp4?_=1
  19. இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது! கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) இன்று (04) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இரத்தினபுரியின் தெமுவாவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல் கோபுரத்தை இரண்டு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3,650 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் இரண்டாம் கட்டமாக 14 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 4,500 இலட்சம் ரூபா செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் 27 வணிக வளாகங்களை உள்ளடக்கியதுடன், அதில் 17 வணிக வளாகங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் 10 வணிக வளாகங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கூட்டுத்தாபனத்தின் நிதி இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது வர்த்தகர்களையும் விற்பனையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் ஒரு சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக மையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்கள் மற்றும் ஆபரண விற்பனைக்கான ஆசியாவின் முன்னணி விற்பனை மையங்களான பெங்கொக் மற்றும் ஹாங்கொங்கில் உள்ளதைப் போன்ற சுயாதீன தர சோதனை சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏற்றுமதி சேவைகளும் இங்குள்ளது. நினைவுப்படிகத்தைத் திரைநீக்கம் செய்து, சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு களவிஜயத்திலும் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று திறந்துவைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது, இந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிலையத்தின் பணிகள் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் சாமர சம்பத் ஆகியோரை நாம் நினைவுகூர வேண்டும். இந்த நிலையம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல, இது நாட்டிலேயே ஒரு பாரிய இரத்தினம் மற்றும் ஆபரண மையமாக மாறும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் முன்னேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார சரிவு காரணமாக, கடந்த 2021-2022 காலகட்டத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலும் பல சிரமங்களை எதிர்கொண்டது. 2023 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த பங்களிப்பும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும். மேலும் வரி அதிகரிப்பால் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அண்மையில் என்னுடன் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, இந்த ஏப்ரல் இறுதிக்குள் வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை சமரப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், எதிர்காலத்தில், இந்தத் துறையில் இருந்து குறைந்தபட்சம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தினச் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும் இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஜூலை 2022 இல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 7.4 என்ற மறைப் பெறுமானத்தை காட்டியது. ஆனால் 2024 இல் 4.5 என்ற நேர் பெறுமானத்தை காண்பிக்கிறது.இரண்டு வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்தக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது. 2022 ஜூலை மாதமளவில் 54.6% ஆக காணப்பட்ட பணவீக்கம் இன்று 9% ஆக குறைத்திருப்பதால் ரூபாய் வலுவடைகிறது. அன்று 23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அன்று 361 ரூபாயாக காணப்பட்ட டொலரின் பெறுமதி இன்று 300.4 ஆக குறைந்திருக்கிறது. அதனை 280 ரூபாய் வரையில் மட்டுப்படுத்திகொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. உள்நாட்டுக் கடன் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும். இந்தப் பணியைத் தொடர்வதற்கான இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அரசாங்கக் கடன் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக காணப்படுகிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 95% ஆக குறைக்க வேண்டும். தற்போது, மொத்த தேசிய உற்பத்திக்கு மேலதிகமாக 35% வருமானத்தை ஈட்ட வேண்டும். 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 13% ஆக குறைக்க வேண்டும். மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 9.4% ஆக காணப்படும் வெளிநாட்டுக் கடன்களை2025 ஆம் ஆண்டிலிருந்து 2.3% உபரியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி நகர வேண்டும். இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால், எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகள், “நீங்கள் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள், எனவே கடனைத் திருப்பித் தாருங்கள்” என்று அறிவிக்கும். ஆனால் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது. இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது. நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம். நாம் இன்று தொங்குபாலத்தின் நடுவில் நிற்கிறோம். வீழ்வதா? மீள்வதா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, 2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அத்தியாவசியமாக காணப்பட்ட இந்த கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரைவாகப் பெருகும். இரத்தினக்கல் வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து இம்மாவட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வியாபார நிலையத்தின் ஊடாக வருடத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதனை விடவும் அதிகமான வருமானம் ஈட்டு முடியுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இரத்தினக் கல் கூட இல்லாத ஹொங்கொங் இராச்சியம், இரத்தின கற்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. அதேபோல் தாய்லாந்து வருடாந்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால் இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. அதனால் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுதந்திர வர்தக முறைமைகளை பலப்படுத்துவது காலோசிதமானதாக அமையும். ஜனாதிபதியும் அந்த பொருளாதார முறைமைகளை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி, இரத்தினபுரிக்கு மிகவும் அவசியமானதாக காணப்பட்ட இரத்தினக்கல் வியாபார நிலையம் திறக்கப்பட்டமை பொருளாதாரத்திற்கு பலனளிக்கும். கடந்த காலத்தில் இரத்தினக்கல் வர்க்கர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். பொருளாதார நெருக்கடியால் வங்கி விட்டி விகிதம் 30% ஆக அதிகரித்தமையால் நெருக்கடி வலுவடைந்தது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் சுமூகமான காலம் உதயமானது. இன்று இரத்தினபுரிக்கு சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் கிடைத்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்துள்ளது. அஸ்வசும திட்டத்தின் மூலம் 20 லட்சம் வறிய குடும்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் காணி உரிமையை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். சரிவிலிருந்து நாட்டை மீட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை சரியாகச் செய்துள்ளார். அனுபவமிக்க தலைவர் நாட்டுக்கு தேவை என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார். ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, இன்று திறந்து வைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இரத்தினபுரிக்கு மாத்திரமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வழி செய்யும். இதன் மூலம் இரத்தினபுரியின் இரத்தினக்கல் வர்த்தக சமூகத்தை ஒழுங்குபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வருமானம் ஈட்டும் வீதத்தை அதிகரிக்க முடியும். இந்த நிலையத்தில் இரத்தின வியாபாரத்திற்கான சகல வசதிகளும் உள்ளன. இன்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது பொருளாதாரக் மீட்சி பற்றிய விடயங்களை காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டடை மீட்க முன்வராத அரசியல் தலைவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பது வேடிக்கையானது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, இலங்கை வரலாற்றுக் காலத்திலிருந்தே இரத்தினக் கற்களுக்கு பெயர் பெற்றிருந்தது. அதற்கான பெறுமதி சேர்ப்பதற்கான சரியான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை.முதல் தடவையாக எமது இரத்தினக் கற்களை உலகிற்கு கொண்டுச் செல்வதற்கான மத்திய நிலையம் திறக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் இரத்தினங்களை சரியான விலைக்கு விற்று பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும். இந்த சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2012 இலிருந்து திட்டமிடப்பட்டன. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இன்று முதல் முழுக் கட்டிடமாக சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தை மக்களுக்கு கையளிக்க முடிந்துள்ளமை வர்த்தக சமூகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும். ஊவா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, ஜானக வக்கம்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல, காமினி வலேபொட, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் சில்வா, இரத்தினக்கல் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=186023
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.