nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Content count

  35,120
 • Joined

 • Last visited

 • Days Won

  24

nunavilan last won the day on May 31 2015

nunavilan had the most liked content!

Community Reputation

1,781 நட்சத்திரம்

2 Followers

About nunavilan

 • Rank
  நிர்வாகம்
 • Birthday 02/16/1980

Profile Information

 • Gender
  Male
 • Location
  USA

Recent Profile Visitors

12,094 profile views
 1. ஆர்ஜன்ரினாவின் உருகுவே, வெனிசுவலா, பெரு ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் மெசி விளையாட முடியாது. தென் அமெரிக்காவில் ஆர்ஜன்ரீனா தற்போது 3 ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 4 நாடுகள்(தென் அமெரிக்காவில்) ரஸ்யாவில் விளையாட தகுதி பெறும்.
 2. இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையத் தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவது போலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச் சடங்குகள் செய்வது போலவும் அந்த காட்சியில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வந்தபோது, ஏ.ஆர்.ரகுமான் விடுத்த அழைப்பின்பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு அவர் சென்றதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும், சூர்யா எந்த மதத்திற்கும் மாறவில்லை என்றும், அதுகுறித்து வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=89757
 3. கடந்த வருடத்தை விட 9 A பெற்ற மாணவர்கள் இவ்வருடத்தில் அதிகம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களிலும் “ஏ” சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடம் 6102 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். இவ்வருடப் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதம், வரலாறு ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாகவும் கணிதப் பாடத்தில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை 28877 எனவும், இது கடந்த வருடத்தைவிட 7.63 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார் http://www.dailyceylon.com/120060
 4. சர்வதேச நீதிபதிகளை தேவை இல்லை – மங்கள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/119741
 5. நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார். இத்தாய் ஆண் குழந்தையைப் பிரசவித்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவரது குடும்பத்தை இந்தோனேசிய அதிகாரிகள் தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய குடிவரவு வாகனம் ஒன்றில் இக்குடும்பத்தினர் ஏற்றிச் செல்லப்படும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயதான சிவரஞ்சினி பகீதரன் மற்றும் இவரது கணவரான 34 வயதான பகீதரன் கந்தசாமி ஆகியோர் எட்டு ஆண்டுகளாக சிறிலங்காவின் சிறையில் தாம் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும் இந்தோனேசியாவின் லொக்சியுமோவ் அகதி நிலையம் மற்றும் மெடன் குடிவரவுத் தடுப்பு முகாம் ஆகியவற்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக எடுத்துக் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியாவின் வடக்கு மாகாணமான ஆச்சேயின் கரையோரத்தை வந்தடைந்த படகில் 20 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் ஒன்பது சிறுவர்கள் உட்பட இத் தமிழ் தம்பதிகளும் அடங்குவர். இவர்கள் 20 நாட்கள் வரை இந்தோனேசியாவின் கடலில் தரித்து நின்ற பின்னர் ஆச்சே கரையை நோக்கி படகைச் செலுத்தினர். இவர்கள் படகிலிருந்து இறங்குவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சில பெண்னள் படகை விட்டு கீழே இறங்க முற்பட்ட போதிலும், அதிகாரிகள் அவர்களைப் பலவந்தமாகப் படகில் ஏற்றினர். இவர்கள் பயணித்த படகு மீண்டும் கடலிற்குள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதால், இவர்கள் பத்து நாட்கள் வரை கடற்கரையில் முகாம் அமைத்து தங்குவதற்கான அனுமதியை இந்தோனேசிய அதிகாரிகள் வழங்கினர். பத்து நாட்களின் பின்னர் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு லொக்சியுமோவ் அகதி முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகில் பயணித்த தமிழர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனம் நேர்காணலை மேற்கொண்டது. ஆனால் இத்தகவல் தவறாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர்கள் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவிற்கே பயணம் செய்ததாக தவறாகப் பதிவு செய்யப்பட்டது. ‘அவுஸ்திரேலியா தனது குடிவரவுச் சட்டங்களை மேலும் இறுக்கமாக்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். 2014 தொடக்கம் அவுஸ்திரேலியா தனது நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழையும் படகுகளை திருப்பி அனுப்பி வருவதை நாம் அறிவோம். ஆகவே நாங்கள் அவுஸ்திரேலியாவிற்குச் செல்லாது நியூசிலாந்திற்குச் செல்வதெனத் தீர்மானித்தோம்’ என பகீதரன் தெரிவித்தார். நியூசிலாந்து விமான நிலையத்தை அடைந்த 11 புகலிடக் கோரிக்கையாளர்கள் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால் ஒக்லாண்ட்டிலுள்ள மௌன்ற் எடென் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ‘கிட்டிய எதிர்காலத்தில் நியூசிலாந்திற்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் பெருமளவில் வருவதற்கான சாத்தியம் காணப்படாது என நான் நம்புகிறேன். ஏனெனில் நாங்கள் குடிவரவுச் சட்டத்தை மேலும் இறுக்கமாக்கியுள்ளோம். ஆகவே ஆபத்தான கடற்பயணத்தின் மூலம் மக்கள் படகுகளில் நியூசிலாந்திற்குள் நுழைவதற்கு இந்தச் சட்டங்கள் உத்வேகத்தை வழங்கமாட்டாது’ என நியூசிலாந்தின் பிரதமர் பில் இங்க்லிஸ் தெரிவித்தார். ஆனால் நியூசிலாந்துப் பிரதமரின் கருத்திற்கு முரண்பாடான கருத்தொன்றை இந்நாட்டின் குடிவரவு பொறுப்பதிகாரி அன்னா போல்லே தெரிவித்துள்ளார். அதாவது நியூசிலாந்தானது ஆட்கடத்தல்காரர்களின் இலக்காக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் சட்டவிரோதக் குடிவரவாளர்கள் பெருமளவில் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முழுஅளவில் தயாராக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அன்னா போல்லே தெரிவித்தார். படகுகளில் நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட 44 தமிழர்களும் தலா 3200 நியூசிலாந்து டொலரை தென்னிந்தியாவிலுள்ள முகவர் ஒருவரிடம் வழங்கியதாகவும் பகீதரன் தெரிவித்தார். ஆச்சே மாகாணத்தை படகின் மூலம் சென்றடைந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்களில் ஐந்து பேரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 17 பேர் மீண்டும் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் எஞ்சிய 22 பேரும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடிய ஆபத்தில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பயணத்திற்கு முகவராகச் செயற்பட்டவர் புதிதாகப் படகொன்றை வாங்கியதுடன் படகோட்டி ஒருவரையும் நியமித்து தென்னிந்தியாவின் வேளாங்கண்ணி எனும் இடத்திலிருந்து இப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ‘இந்தோனேசியாவைக் கடப்பதற்குத் தேவையான போதியளவு எரிபொருளை எம்மிடம் இல்லை என்பதை பயணத்தின் அரைவாசியில் நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டார்கள்.’ என பகீதரன் தெரிவித்தார். ‘ஆட்கடத்தல்காரர்களின் பொய் வாக்குறுதியை நம்பி ஏமாந்து விட்டோம்’ என பகீதரனும் அவரது மனைவியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மூலம் தெரிவித்தனர். இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்திலுள்ள லொக்கிங்கவின் கபுக் கடற்கரை நோக்கி படகைத் திசை திருப்புமாறு இந்தோனேசிய குடிவரவு மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் படகிற்கு எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் அதனைப் பெற்று வருவதாகக் கூறி படகோட்டி வேறொரு மீன்பிடிப்படகிற்குள் பாய்ந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் பகீதரன் தம்பதிகள் தெரிவித்தனர். தமிழ்ப் புலிகள் அமைப்பில் தாம் இணைந்தமையால் போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறையில் எட்டு ஆண்டுகள் தாம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் இத்தம்பதிகள் கூறினர். தாம் தடுத்து வைக்கப்பட்ட போது சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாகவும் பகீதரனும் அவரது மனைவியும் தெரிவித்தனர். ‘சித்திரவதையின் போது எனது கால் நகங்கள் மற்றும் இரு கட்டைவிரல்களின் நகங்களும் பிடுங்கப்பட்டன’ என பகீதரன் தெரிவித்தார். சில நாட்களின் முன்னரே ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த சிவரஞ்சினி, லொக்சியுமோவ் அகதி நிலையத்திலிருந்து மெடனிலுள்ள குடிவரவுத் தடுப்பு மையத்திற்கு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட போது பகீதரன் தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுதவாறு தம்மை அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என கெஞ்சினர். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவித்த சிவரஞ்சினி வெறும் மூன்று நாட்களே ஆகிய நிலையில் வேறிடத்திற்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் வலியால் துடிதுடித்தார். ‘எனக்கு உதவுங்கள்’ என அவர் கெஞ்சினார். ‘என்னால் சரியாக இருக்கவோ அல்லது நிற்கவோ முடியவில்லை. அறுவைச் சிகிச்சை மூலமே பிரசவம் இடம்பெற்றதால் எனது உடல் வலி இன்னமும் ஆறவில்லை. அத்துடன் கடந்த முறை பிரசவத்தின் போதும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்கனவே காயங்கள் உள்ளன’ என சிவரஞ்சினி அழுதவாறு தெரிவித்தார். இவர்களது இரண்டு வயது மகனான ரதீசன் ஏற்கனவே மெடன் குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருடன் தங்க வைக்கப்பட்டுள்ளான். பகீதரன் குடும்பத்தினர் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் அபாய நிலையில் உள்ள 27 வயதான சாரு மற்றும் அவருடைய 29 வயது கணவரான குமார் ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர். சாரு படகில் பயணித்த போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். ‘அவர்கள் என்னைத் திருப்பி அனுப்ப முயற்சித்தால் நான் இங்கேயே இறக்க விரும்புகிறேன். இந்த வாழ்வை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எனது நடுத்தெருவில் வைத்து எனது மகனிற்கு பாலூட்டுகிறேன்’ என சாரு தெரிவித்தார். இவ்விரு தம்பதிகளில் ஒரு தம்பதிக்கு புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றைய தம்பதியின் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவ்விரு தம்பதிகளும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என குடிவரவிற்கான அனைத்துலக அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவனத்திடமிருந்து அழுத்தம் இடப்பட்டுள்ளது. குடிவரவிற்கான அனைத்துலக அமைப்பு இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டது. நியூசிலாந்து கடந்த ஆண்டு தனது அகதிகள் எண்ணிக்கையை 750 தொடக்கம் 1000 ஆக அதிகரித்திருந்தது. நியூசிலாந்தின் துறைமுகம் அல்லது விமான நிலையத்தில் வைத்தே அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் செல்லுபடியாகும் நுழைவுவிசைவுகளுடனேயே நியூசிலாந்தைச் சென்றடைகின்றனர். சட்டரீதியற்ற வகையில் நியூசிலாந்திற்குள் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சட்டம் ஒன்று 2013ல் ஜோன் கீ அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டது. குடிவரவுச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையால் நியூசிலாந்திற்குள் வரும் சட்ட ரீதியற்ற குடிவரவாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கீ தெரிவித்தார். சிவரஞ்சினி மற்றும் பகீதரன் ஆகியோருக்கு அகதி நிலை வழங்கப்பட்ட போதிலும், நியூசிலாந்தை அடைவதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதை அறிய இவர்கள் காத்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் – KATE SHUTTLEWORTH வழிமூலம் – Stuff மொழியாக்கம் – நித்தியபாரதி http://www.puthinappalakai.net/2017/03/28/news/22202
 6. போரில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்ந்தன – ஒப்புக்கொள்கிறார் கோத்தா போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் எப்போதும் கூறுவார். எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது. போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல. எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால், அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச் சுவை.” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2017/03/28/news/22192
 7. அரசியலில் விருப்பமில்லை; ஆனால் சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு அரசியல்வாதியல்ல என்று கூறினார். தனக்கு அரசியல் தெரியாது என்பதுடன், அரசியல் நடவடிக்கைகளில் தான் கலந்து கொண்டதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து கூறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ட்ரம்பின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கண்கானித்து வருவதாக கூறினார். அத்துடன், ஊடகவியலாளர்களை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொள்ளல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று இருந்ததாக முன்னாள் இரணுவத்தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த கோட்டாபய ராஜபக்‌ஷ, அது அடிப்படையற்ற அரசியல் நோக்கம் பொண்ட குற்றச்சாட்டு என்று கூறினார். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அவ்வாறான குழுவொன்று இருந்தால் அதன் பொறுப்பை இராணுவத் தளபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இராணுவப் புலனாய்வுப் பிரிவு இராணுவத் தளபதியின் கீழ் இருக்கவில்லை எனக் கூறுவது நகைச்சுவையானது என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த சந்திப்பில் கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89740
 8. தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எதிரில் நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒருபோதும் தேர்தலை பிற்போடுவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89741
 9. 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறு விபரங்கள் இதோ.... 2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். Exams என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டெண்ணை பதிவு செய்து 7777 என்ற என்ற எண்ணுக்கு அனுப்பவும். வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின்படி, முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்தியாலயத்தின் அனுகி சமத்கா பெஸ்குவேல் என்ற மாணவி பெற்றுள்ளார். ஏனைய இடங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு 2. கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க 3. கொழும்பு ஆனந்த கல்லூரியின் ஆர்.எம்.சுகத் ரவீந்து சன்வர 3. மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் திமுத் ஓஷதி மிரிஸ்ஸகே ஆகியோர் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 4. கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தின் எச்.பி.பவசரா மலிதி குமாரி ஹேரத் இந்தநிலையில் 5 வது இடத்தை மூன்று மாணவர்கள் பகிரந்து கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5. கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் டி.எம்.ரனுமி தியரணி நாணயக்கார. 5. காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் ஏ.தம்சரா மெதாவி. 5. யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியின் ஏ.அபிநந்தன். இதுதவிர, இந்தமுறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றவர்கள் வரிசையில் 6 வது இடத்தை 2 மாணவிகள் பெற்றுள்ளனர். 6. காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் கே.ஜி.ஜி.ஈ.ரன்தினி டி சில்வா. 6. மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி. இவற்றை தவிர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும். இதேவேளையில் அகில இலங்கை மட்டத்தில் 05ம் இடத்தை பெற்றுள்ள யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியின் மாணவன் ஏ.அபினந்தன் தமிழ் மாணவர்களில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை கூறத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=89727&mode=lead
 10. நெதர்லாந்து தேர்தலும் தேசியவாதத்தின் தாக்கமும்
 11. தினசரி கிழிக்கும் நாட்கலண்டர்.