• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

விசுகு

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  26,387
 • Joined

 • Last visited

 • Days Won

  93

விசுகு last won the day on July 25 2016

விசுகு had the most liked content!

Community Reputation

3,337 நட்சத்திரம்

2 Followers

About விசுகு

 • Rank
  Advanced Member
 • Birthday September 30

Contact Methods

 • MSN
  vskugan5@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests
  எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Recent Profile Visitors

7,634 profile views
 1. உண்மைதான் சிறி ஒவ்வொரு கணமும் மனித வாழ்வு எம் கண் முன்னே இவ்வாறே நகர்கிறது அவற்றில் ஒருசில பாடாகப்படுத்துகிறது நன்றி சிறி நேரத்துக்கும் கருத்துக்கும் அந்த கலங்கிய கண்கள் இப்பவும் குடுக்கச்சொல்கின்றன அவரை மீண்டும் காணவில்லை வழமையாக வருபவர்கள் வந்தவண்ணமே இருக்கிறார்கள் அவர் மீண்டும் வந்தால் நான் ....?? வராதவரை அவரது கண்கள் எனக்கு ஞாபகமிருக்கும் எல்லோருமே இவற்றை கவனித்திருக்கின்றோம் யோசித்திருக்கின்றோம் மனதுக்குள் போராடி இருக்கின்றோம் நன்றி கலைஞன் நேரத்துக்கும் கருத்துக்கும்
 2. அதே இந்தக்கரு ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போயிருக்கிறது என்பதை உங்கள் பதிவுகள் சொல்கின்றன இதை எழுதத்தூண்டியவரே நீங்க தானே ராசா நன்றி நிழலி நேரத்துக்கும் கருத்துக்கும் அதே கொழும்பில் கொடுக்காதுவிட்டு அடி வாங்கிய தமிழருண்டு... நன்றி ராசா நேரத்துக்கும் கருத்துக்கும்
 3. உண்மைதான் சிலரை நம்புகின்றோம் நடிக்கிறார்களா? ஏமாற்றுகிறார்களா? என்பதையும் கடந்து பொக்கற்றுக்குள் கை போகிறது.. இன்னொரு பக்கத்தால் பார்த்தால் அன்று கொடுக்காமல் வந்திருந்தால்.....??? நன்றி சகோதரா நேரத்துக்கும் கருத்துக்கும் பெருமாளை கல் என்பேன் நான் அப்படியானால் பிச்சை எடுப்பது மனுசனுக்கு தானே கடினம்?? அதை பார்த்த எனக்கே கடினமென்றால்?? ஒவ்வொருவருக்கும் அந்த நிலை வரவேண்டுமென்பதில்லை அனுபவங்களைப்பெற ராசா... நன்றி சகோதரா நேரத்துக்கும் கருத்துக்கும்
 4. புலத்துக்கும் தாயகத்துக்குமான இடைவெளியின் ஒரு யதார்த்தமிது அனுப்பியவன் தான் கிடைத்ததையும் உறுதிப்படுத்தணும் ஏனெனில் அவனுக்கு மட்டுமே அப்பணத்தின் வலி தெரியும் நன்றி சகோ தொடர்ந்து எழுதுங்கள்
 5. அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய பயமுறுத்திய விடயங்கள் இவை நம்மில் பலரும் நினைக்கின்றோம் எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கின்றோம் எமது எதிர்காலம் நாம் நினைத்தபடி தான் இருக்கப்போகின்றது என்று இல்லை நீங்கள் மேலே எழுதியது போல பலரை மலையிலிருந்து ஒரு சில நாட்களுக்குள் குழிக்குள் வந்தவர்களை நான் சந்தித்திருக்கின்றேன் நன்றி தம்பி இணையவன் நேரத்துக்கும் கருத்துக்கும் அனுபவங்களை பகிர்ந்ததற்கும்...
 6. அதே உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நன்றியண்ணா நேரத்துக்கும் கருத்துக்கும் உண்மை தானக்கா ஐரோப்பிய நாடுகளில் சாப்பாட்டுக்கு வழியற்றுஒரு போதும் வீதியில் விடமாட்டார்கள் அந்தவகையில் தான் நான் எவருக்கும் பிச்சை போடுவது அரிது ஆனால் இது அன்றொரு நாள் மட்டும் அவர் இக்கட்டில் இருந்தது போலிருந்தது நன்றியக்கா நேரத்துக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும்
 7. இந்த எண்ணத்துக்குள் பல கருக்கள் உள்ளன கிருபன் நீங்கள் குறிப்பிடும் காசு கொடுக்கலாமா? இவரை அதே தொழிலை செய்ய நாமே தூண்டலாமா? போன்ற எண்ணங்கள் என்னுள்ளும் வந்தே சென்றன எனக்கு முன்னாலிருந்த ஒரு இளம் பெண் ஒரு தோடம்பழத்தை கொடுத்தார் என்னிடம் பணம் மட்டுமே இருந்தது நன்றி ராசா நேரத்துக்கும் கருத்துக்கும்
 8. உண்மைதான் புலத்தில் மட்டுமல்ல தாயகத்திலும் நம்பி கெட்டு மிகவும் பலவீனமாக இருந்த என்னையே மீண்டும் தர்மம் செய் என அவன் என்னுள் விதத்ததை உணர்ந்தேன் ராசா அது தான் எழுதினேன் இன்று நினைத்தாலும் அந்தக்கண்களை என் கண்கள் கலங்குகின்றன ... எவருக்கும் இந்தநிலை வரலாம் ஆனால் பகைவனுக்குக்கூட இது வரக்கூடாது என்பார்களே அது தான் இது. நன்றி தம்பி கருத்துக்கும் நேரத்துக்கும்..
 9. எனது மனைவி கேட்ட கேள்வியையும் பதிந்ததற்கு காரணம் நானும் கொடுப்பதில்லை அண்ணா ஆனால் அவன் எனக்கொரு வேறு பக்கத்தை ஞாபகப்படுத்தினான் அதை கீழே இணையவன் எழுதியிருக்கிறார் நன்றியண்ணா கருத்துக்கும் நேரத்துக்கும்..
 10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....
 11. அது ஒரு புது அனுபவம் ராசா அந்தக்கண்களின் வலி இத்தனை வருடங்களாகியும் இன்றும் என்னை கண் கலங்க வைக்கிறது என்றால்...?? சிலவற்றை தான் நாம் நடிக்கமுடியும் ஆனால் உணர வைப்பது என்பது நிழுத்துக்கு மட்டுமே முடியுமானது நன்றி கருத்துக்கும் நேரத்துக்கும்
 12. ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லும்போதும் அதன் வலியை உணர்ந்தது அதை சொல்ல மிகவும் சிரமப்பட்டது ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி வெட்கப்பட்டது அவர் இதை விரும்பவில்லை ஆனால் வேறு வழி இன்று தெரியவில்லை என்ற போது உடல் முழுவதும் கூசியது அந்த வலியை நானும் உணர்ந்தேன் இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது என்பதை வாழ்வில் முதன்முதலாக உணர்ந்தேன் பொக்கற்றுக்குள் கை வைத்த என்னை மனைவி கேட்டார் திடகாத்திரமான எவருக்கும் பிச்சை போடமாட்டீர்களே இன்று என்னாச்சு என்று? அவன் ரொம்ப வெட்கப்பட்டு பிச்சை கேட்கின்றான் எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று காசு போடும் போது தான் பார்த்தேன் நான் மட்டுமல்ல பலரும் கண்களில் ஒருவித கனிவுடன் பணம் போட்டபடி இருந்தனர். (இந்தக்கதையை எழுதத்தூண்டிய தம்பி நிழலிக்கு நன்றிகள்)
 13. நல்லதொரு கரு கன காலத்துக்கு பின்னர் நிழலியின் கதை தூண்டிய நண்பருக்கு நன்றிகள் என:னையும் இக்கதை தூண்டியிருக்கிறது ஒரு கரு இருக்கிறது விரைவில் பதிகின்றேன் உங்கள் உடல்நிலை சார்ந்து.. கவனமாக இருங்கள் நித்திரை முக்கியம் நித்திரையால் எழும்பும் போது சிறு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள் இதற்கு மருந்து உங்கள் அமைதியில் தான் இருக்கிறது
 14. பட்டது + படிச்சது + பிடித்தது - 64 யாழ் மாநகரசபைக்கு ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது. தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமான விடயமில்லை. ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு சாணக்கியர்கள் சொல்லப்போகும் அரசியல் பதில்களையும் கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
 15. சீமான் உயிருக்கு ஆபத்து: எச்சரிக்கும் ஹீலர் பாஸ்கர் / seeman not safe healer baskar