• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,437
 • Joined

 • Last visited

 • Days Won

  32

வல்வை சகாறா last won the day on March 19 2017

வல்வை சகாறா had the most liked content!

Community Reputation

1,189 நட்சத்திரம்

3 Followers

About வல்வை சகாறா

 • Rank
  Advanced Member
 • Birthday December 5

Profile Information

 • Gender
  Female
 • Location
  கனடா
 • Interests
  ஆன்மாவுடன் பேசுதல்

Recent Profile Visitors

 1. சர்வ சாதாரணமாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சாவிற்கு இப்போது அரச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த நாட்டில் எல்லாமே அதி உச்சமானதாகவே உள்ளன. நாகரீகத்தில் இருந்து நாய் படாத பாடு வரைக்கும் எல்லாமே எல்லையற்றவை. இவற்றுக்குள் அகப்படாமல் சீரிய சமூகவாழ்வுக்குள் நம்மைக் கட்டிமைக்கமுடிந்தால் அது பெரும் சாதனையே. இப்போதே நம்முடைய இளையவர்கள் வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குறியோடு நகர்கிறது அதற்கு இன்னும் வலுக் கொடுப்பதாகவே இந்த அரச அனுமதி, இதுவரைகாலமும் பயந்து ஒளித்து கஞ்சா பாவித்தவர்கள் வெள்ளைச் சுருட்டைப்போல் எல்லா இடத்திலும் பாவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கனடாவின் பல பாகங்களை போதை நகரங்களாக இன்னும் சில வருடங்களில் மாற்றிவிடும். இந்த ஓட்டத்தில் நாமும் எதிர்காலத்தில்... பத்து வருடங்களுக்குப் பின்னர் இங்கு பதிவிடும்போது யார் கண்டா நானும் கூட கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இங்கு பதிவிடலாம்.😁
 2. வல்வை சகாறா

  பச்சைமிளகாய் கறி

  இதைப்புளித்தீயல் என்று நம்மபக்கம் சொல்வார்கள். இந்தச் செய்முறையில் நெத்தலி மீனை இணைத்தால் நெத்தலித்தீயல் என்றும் சூடை மீனை போட்டால் சூடைத்தீயல் என்றும் இறாலைப் போட்டால் இறால் தீயல் என்றும் சொல்வோம் காரமும் புளிப்பும் தூக்கலாக இருக்கும். கண்களில் நீர் முட்டும்.
 3. வல்வை சகாறா

  பெண்கள் போகக் கூடாதா ???????

  நான் வசிக்கும் கனடாவில் இப்போது பெண்களுக்கு எந்தவிதத்தடையும் இல்லை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்து வாழ்பவர்கள் பெண்களே. அதி உச்ச சுதந்திரத்தை இங்கு வாழ்பவர்களிடையே காணக்கூடியதாக இருக்கிறது. விலங்குகளாக பொறுப்புகளை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் நாம்தான். சுமே ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் அடக்குகிறார்கள் என்று பேசுவது என்னைப் பொறுத்தவரை நான் வாழும் கனடாவில் சுத்த முட்டாள்த்தனம். ஆண்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் கோபக்காரர்கள் ஆக்குவதும் தற்போதைய நிலவரத்தின்படி பெண்களாகவே உணர்கிறேன். கலாச்சாரம் பண்பாடுகளைக்கடந்த எல்லையற்ற சுதந்திரம் இன்று பல பெண்களைத் தனிமரமாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும், அதி உச்ச விரக்தியுற்றவர்களாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது. இந்தத் தரவு உவகை மணமக்கள் இணைப்பின் வாயிலாக பெற்றவை. எல்லையற்ற சுதந்திரவெளியை அனுபவிக்கும் திறமை பெண்களிடம் கிடையாது. இத்தகைய சுதந்திரவெளியை நமது சமூகம் சார்ந்தவகையில் சில பெண்களாலேயே இயலும். எல்லையற்ற சுதந்திரம் என்பதும் துறவு என்பதும் ஒன்று. உறவுகளுக்குள் ஒட்டு இல்லாமல் பெண்களால் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது சாத்தியமற்றது. பெண்களுக்கு இயற்கை தந்த தாய்மை., அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். தன்னுடைய சந்ததியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை முதலில் தாயே ஏற்கிறாள். ஆக தாயிலிருந்தே பிள்ளைகளுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் சமூகவட்டம் சிதறிப்போயுள்ளது. யாரும் எப்படியும் வாழலாம் என்ற கோலம் பற்றற்ற வாழ்க்கையைத்தவிர எந்த ஒரு பெருமையையும் தரப்போவதில்லை.
 4. மீளவும்இவ்விடத்தில் இன்னுமொருவனின் தேடலில் எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி நகர்த்துவது தீர்மானம் இல்லாத அலைக்கழிவைஒவ்வொரு வினாடியும் எதிர் நோக்குவதே நிகழ்வாக அமைகிறது. எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருப்போம் சற்றும் எதிர்பாராத திருப்பு முனைகளைச் சந்திப்போம். சில சமயங்களில் திகைப்பில் இருந்து விடுபட முடியாமலே தேடல் சறுக்கிவிடும். மாறிக் கொண்டிருக்கும் ஓட்டத்திற்குள் முனைப்பெடுத்து திட்டமிட முடியாமல் வாழ்க்கை நழுவிக்கொணடிருக்கும்.இந்த மனித உடல் எடுத்த பாத்திரத்திற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு நடித்து முடித்து விடைபெறும்வரை தேடல்களுக்கும் பஞ்சம் இருக்காது. நிறைய எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. மீளவும் எழுதுவேன். நன்றி இன்னுமொருவன்
 5. சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற புலிவேட்டைத்திருவிழாவில் தவில் நாதஸ்வர இசை புலிவேட்டைத் திருவிழா: இந்திர விழா பெற்றுவரும் முக்கியத்துவத்தைப் போன்றே வல்வை முத்துமாரி அம்மன் கோயிலின் பன்னிரண்டாம் திருவிழாவின் இரவுத் திருவிழா சங்ககாலத் தமிழர் பண்பாட்டியலையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் புறநானூற்றில் இடம் பெறும்இ புலியை முறத்தினால் அடித்துத் துரத்திய ஒரு வீரத் தமிழச்சியின் வரலாற்றைக் கூறும் விழாவாக அமைந்ததால்இஅதனை “புலிவேட்டைத் திருவிழா” என அழைப்பர். “முறம் எடுத்துப் புலி அடித்த தமிழகம்” என்ற பாடல் அடிகளுக்கு உயிர் கொடுப்பது போல்இஅன்று இரவுத் திருவிழாவில் முத்துமாரி அம்மன், முருகன், பிள்ளையார் ஆகிய மூன்று விக்கிரகங்களும், படல் சாத்துப்படி வடிவில் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தனித்தனி இடப வாகனங்களில் வீதியுலா வரும் பொழுது, தெற்கு வீதியில் இருந்து புலிவேட்டை ஆரம்பமாகும். இதில் புறநானூற்றில் இடம்பெறும் பாடலுக் கேற்ப “வேடுவன் ஒருவனைப் புலி பிடித்து இழுத்துச் செல்லும் பொழுது, அவனுடைய மனைவி எவ்வித பதட்டமும் அடையாது, தனது குடிசையினுள் இருந்த சுளகை எடுத்து வந்து ஆவேசம் கொண்டவளாக அந்தச் சுளகினால் அடித்து அடித்து அந்தக் காட்டுப் புலியைத் துரத்தி, தனது கணவனை மீட்டுக் கொண்டு வரும் அந்த வீரமிக்க வரலாற்றையே 12ஆம் திருவிழாவின் “புலி வேட்டைத் திருவிழா”வில் வல்வெட்டித்துறை இளைஞர்கள் தத்ரூபமாகப் பாவனை செய்து காட்டுவார்கள். அன்றைய இரவுத் திருவிழவின்பொழுது புலி வேட்டைத திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ஏராளமான வர்ண வாண வேடிக்கைகளும், சிலம்படிஇகோலாட்டம்இகும்மி,தீப்பந்த நடனங்கள் போன்ற கிராமியக் கலை வடிவங்களும் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 6. தாய்க்கு பிள்ளையின் வீதியில் வேப்பிலை நிறைகுடங்கள் சகிதம் வரவேற்புச் செய்யும் பெண்கள் இத்தகைய பாரம்பரிய சம்பிரதாயங்களை கொண்ட பற்பல நிகழ்வுகளைக் கொண்டதுதான் வல்வையின் இந்திரவிழா
 7. அம்மன் திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்த உற்சவத்தின் பொழுது, வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய மோர் மட வரவேற்புக்குழு மற்றும் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் இணைந்துஇஅம்மனை வரவேற்கும் வகையில் கடந்த 50 வருடங்களாக நடத்திவருகின்ற “இந்திர விழா” நிகழ்வுகள் மிக அற்புதமாக இருக்கும். அதி காலையில் அம்மன் தீர்த்தமாடுவதற்காக ஊறணி தீர்த்தக் கடற்கரைக்குச் செல்லும் பொழுது, நெடியகாட்டில் இருந்து,அம்மன் கோயிலுக்கு பண்டைய தமிழ் வாத்தியமான 15 கூட்டு பறை மேளங்கள் வரை தமிழர் இசையுடன் சென்று அம்மனை அழைத்துவரும் காட்சி மெய்சிலிக்க வைக்கும். தமிழர் வாழ்வியலுடன் இணைந்த பறை நாதமானதுஇபண்டைய தமிழ் வாத்தியமாக இருந்தபோதிலும் அந்த வாத்தியத்தின் மகிமையை உணராதவர்கள் அவை ஈமச் சடங்குகளுக்கான ஒரு வாத்தியமாகவே பார்க்கின்ற ஒரு நிலையை மாற்றி தமிழர்கள்அதன் இசையை இரசிக்கும் வகையில் நெடியகாட்டு இளைஞர்கள் முக்கியத்துவம் அளித்து இந்திரவிழாவின் முதலாவது மங்கல வாத்தியமாக அறிமுகப்படுத்தியிருந்தனர்.
 8. ரி என் ரி உங்கள் எதிர்பார்ப்பிற்கு... கீழே உள்ள பதிவு திரு ந. அனந்தராஜ் அவர்கள் முகநூல் மற்றும் தினக்குரலில் பதிவிட்டது வல்வை ந.அனந்த்ராஜ் அவர்களின் பதிவில் இருந்து....... பூம்புகாரை நினைவூட்டும் வல்வையின் இந்திர விழா பழம் பெருமையும்,சிறப்பும், வீரமும்,ஆன்மீக நெறியும் நிறைந்த வல்வெட்டித்துறை உலகளாவிய ரீதியில் பெருமைக்குரிய சிறப்புக்கள் பலவற்றைக் கொண்டது.அதன் தோற்றுவாயில் இருந்தே இவரலாற்று ரீதியான சங்ககால மரபுகளும், வீரம் செறிந்த வரலாற்றுகளும்;, பண்பாடும்,உணவுப் பழக்க வழக்கங்களும்,கலை இலக்கிய மரபுகளும்; இன்றும் ஆலய உற்சவங்களின் பொழுதும்,பண்டிகைகளின் பொழுதும்,நாளாந்த வாழ்க்கை முறை களிலும் பேணப்படுகின்றன. அந்தவகையில் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயிலின் வருடாந்த உற்சவத்தின் பொழுது,இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் உலகின் எங்குமே காணமுடியாத ஒரு அற்புத நிகழ்வாகப் பேசப்படுகின்றது. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயிலின் வரலாறு என்பது, வல்வையின் கடலோடிப் பாரம்பரியத்துடன் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்திற்கும், நீராவிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், வடஇலங்கைக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடற்போக்குவரத்துக்கள், வல்வெட்டித்துறையின் துறைமுகத்தினூடாகவே நடைபெற்று வந்தமையை அன்றைய கச்சேரிப்பதிவுகள் காட்டுகின்றன.அதேபோன்று தென் இந்தியாவுக்கான தபால் போக்குவரத்துக் களும் இத்துறைமுகத்தினூடாகவே இடம் பெற்றன. இவ்வாறு தென்னிந்தியாவின் கோடியாக் கரையில் இருந்து தபால் பொதிகளை தோணிகளில் ஏற்றிக் கொண்டிருந்த பொழுது,ஒரு வயோதிபப் பெண்,அங்கே புறப்படுவதற்குத் தயாராக நின்ற வள்ளக்காரரின் முன்னிலையில் தோன்றி, தன்னை வல்வெட்டித்துறைக் கரையில் கொண்டுபோய் இறக்கிவிடுமாறு கேட்டார். அந்தப் பெண்ணை மேலும் கீழும் பார்த்த வள்ளக்காரருக்கோ ஆச்சரியமாக இருந்தது. அந்த வயோதிபப் பெண்ணை ஏற்ற மறுத்த வள்ளமோட்டிகளுக்கு முன்னால் தன் அகன்ற பார்வையைச் செலுத்திய அந்தப் பெண்ணும் விடாப்பிடியாக நின்று,தன்னை, வல்வெட்டித்துறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுமாறும் தனது பெயர் கைலைமாதரசி என்றும் கூறியதும், தம்மை மறந்த நிலையில் நின்ற ஓட்டிகள்இஅந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு வல்வெட்டித்தறையின் கரையில் இறக்கி விட்டனர்.கரையை அடைந்ததும், அவர்களை ஆசி கூறிவிட்டு வள்ளத்தில் இருந்தும் இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார்.அவர் சென்று மறையும் வரை அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த வள்ளமோட்டிகளுக்கு வியப்பாகவே இருந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர்இதற்போதைய முத்துமாரியம்மன் கோயில் கர்ப்பக் கிரகம் இருக்கும் இடத்தில்;இஇரவு நேரங்களில் ஒரு ஒளி தென்படத் தொடங்கியதும் ஊரவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.அந்தப் பகுதி அடர்ந்த மரங்களினால் சூழப்பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் திடீரென இரவு நேரங்களில் ஒளி தென்பட்டதும்இவல்வெட்டித்துறை வாசிகள்இஅவ்வூர்ப் பெரியவர் ஒருவரின் தலைமையில் அந்த இடத்திற்குச் சென்று அங்கே நின்ற வேப்பமரத்தின் அண்மையில் ஒரு சிறிய கொட்டிலை அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.இதுவே இன்றைய முத்துமாரியம்மனின் தோற்றுவாயாக உள்ளது. அன்று முத்துமாரி அம்மன் வள்ளத்தில் வந்திறங்கிக் காட்சி கொடுத்த சம்பவத்தைச் சித்தரிக்கும் வகையில் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முகப்பில் இன்றும் வள்ளமும் மூதாட்;டியும் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுப் புகழ் பெற்ற இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவமானது, சி;த்திரா பௌர்ணமி நாளை இறுதி நாளாகக் கொண்ட 15 நாள்களும் மிகச் சிறப்பான நடைபெறும். இறைவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான படைத்தல் தொழிலை உணர்த்தும் வகையில்,கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகும் உற்சவம்இ எட்டாம் நாள் வேட்டைத் திருவிழாவும்,9 ஆம் நாள் பாம்புத் திருவிழாவும்இ11 ஆம் நாள் பூங்காவனத் திருவிழாவும் 12 ஆம் நாள் புலிவேட்டைத் திருவிழாவும் இடம்பெற்று 13 ஆம் நாள் இரவு சப்பறத் திருவிழாவும்,14 ஆம் நாள் தேர்த்திருவிழாவும்இ15 ஆம் நாள் தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து இந்திரவிழாவும் நடைபெற்று உற்சவம் நிறைவுக்குக் கொண்டுவரப்படும். வல்வை முத்துமாரியம்மன் ஆலய வழிபாட்டில் “காத்தவராயர்” வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதால் இது கிராமிய வழிபாடு சார்ந்ததாகஇ சாதாரண மக்களின் குல தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றது. காத்தவராயரின் சிறப்பு வழிபாடாக தேர் உற்சவத்தின் பொழுதுஇமடை வைத்து விசேட வழிபாடுகள் இடம் பெற்று வருவதுஇகிராமிய வழிபாட்டின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றது. அம்மன் திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்த உற்சவத்தின் பொழுதுஇ வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய மோர் மட வரவேற்புக்குழு மற்றும் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் இணைந்துஇஅம்மனை வரவேற்கும் வகையில் கடந்த 50 வருடங்களாக நடத்திவருகின்ற “இந்திர விழா” நிகழ்வுகள் மிக அற்புதமாக இருக்கும். அதி காலையில் அம்மன் தீர்த்தமாடுவதற்காக ஊறணி தீர்த்தக் கடற்கரைக்குச் செல்லும் பொழுதுஇநெடியகாட்டில் இருந்து,அம்மன் கோயிலுக்கு பண்டைய தமிழ் வாத்தியமான 15 கூட்டு பறை மேளங்கள் வரை தமிழர் இசையுடன் சென்று அம்மனை அழைத்துவரும் காட்சி மெய்சிலிக்க வைக்கும். தமிழர் வாழ்வியலுடன் இணைந்த பறை நாதமானதுஇபண்டைய தமிழ் வாத்தியமாக இருந்தபோதிலும் அந்த வாத்தியத்தின் மகிமையை உணராதவர்கள் அவை ஈமச் சடங்குகளுக்கான ஒரு வாத்தியமாகவே பார்க்கின்ற ஒரு நிலையை மாற்றி தமிழர்கள்அதன் இசையை இரசிக்கும் வகையில் நெடியகாட்டு இளைஞர்கள் முக்கியத்துவம் அளித்து இந்திரவிழாவின் முதலாவது மங்கல வாத்தியமாக அறிமுகப்படுத்தியிருந்தனர். அம்மன் வீதியுலா வரும் காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியின் இருபக்கங்களிலும் ஊரிக்காடு தொடக்கம் பொலிகண்டி வரையான இரண்டு கிலோ மீற்றர் தூரம் உள்ள தெருவெங்கும் நூற்றுக் கணக்கான பழக்குலைகளுடன் காட்சி தரும் வாழைகளும்இசவுக்க மரங்களும்இ தோரணங்களும்இ மின்விளக்கு ளினால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் மரங்களும் அலங்கார வளைவுகளும்இமின் அலங்காரங் களுமாக பூம்புகார் காலத்தை நினைவுறுத்தும் வகையில் அற்புதமான ஒரு தோற்றத்தைக் கொண்டதாக வல்வை நகர் விழாக்கோலம் பூண்டிருக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் பட்டினம் நெய்தல் நிலத்தில் அமைந்துள்ளது. அங்கே வருடம் ஒரு முறைஇ தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்திர விழாவை எடுத்து வந்ததாகச் சிலப்பதிகாரக் காப்பியம்இ “இந்திர விழா எடுத்த காதையில்” மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளது.அந்த விழாவில் நடனம்இ நாடகம்இ சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றபொழுதுஇபூம்புகார் பட்டின மக்கள் தமது வேலையின் களைப்பை மறக்க ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இந்திர விழாவைக் கொண்டாடி மகிழ்ந்ததாக சிலப்பதிகாரக் காப்பியம் வருணிக்கின்றது. தமிழ் நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் ‘பூம்புகார் நகரத்தின் அமைப்பையும், அங்கு வாழ்ந்த மக்களின் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் “இந்திரவிழவு எடுத்த காதையில்”, கடற்கரையோர நகரமான பூம்புகார் நகரத்தின் மக்களால் வருடத்தில் ஒரு நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வழிபாடுகளும், விழாக்களும் எவ்வாறு நிகழ்த்தப்பட்டனவோ அவை போன்றே “வடமராட்சியின் நெய்தல் நிலச் சூழலில் அமைந்துள்ள நகரமான வல்வை மக்களாலும், முத்துமாரி அம்மன் திருவிழாவின் நிறைவு நாள் அன்று இந்திரவிழா கொண்டாடப்பட்டு வருவது இன்றும் “சிலப்பதிகார நிகழ்வை” எடுத்துக் கூறும் ஒரு பெரு விழாவாக அமைந்துள்ளது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வல்வை நெடியகாட்டு இளைஞர்களினாலும், நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழுவினராலும் கொண்டாடப்பட்டுவரும் இந்திரவிழா தற்பொழுதுஇ வல்வெட்டித்துறையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் விளையாட்டுக் கழகங்களும், சனசமுக நிலையங்களும் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் பெரு விழாவாக அமைந்ததால், இந்த விழாவைப் பார்ப்பதற்காகவே குடாநாட்டின் பல பகுதிகளி;ல இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வல்வெட்டித்துறையை நோக்கித் திரண்டு வருவார்கள். அன்றைய இரவு நிகழ்ச்சிகளின் பொழுது, நாதஸ்வரக் கச்சேரி, உள்ளுர் மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரபலமான கலைஞர்களின் நடன, நாட்டியநாடக நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நூற்றுக்கணக்கான புகைக்கூண்டுகளை வானத்தில் பறக்க விடுதல் மற்றும் கரக ஆட்டம், பொம்மலாட்டம் என மிகவும் கோலாகலமாக அந்த இந்திர விழா நடைபெறும். கொழும்பு தமிழ் சங்கத்தில் 2016 ஆம் ஆண்டில் வழமைபோன்று சிலப்பதிகார விழாவின் பொழுது காலையில் ஆய்வரங்கமும், பிற்பகல் கலையரங்கமும் நடைபெற்றது. பெருந்திரளான அறிஞர்கள் பங்குபற்றியிருந்த நிகழ்வில், கிழக்கு பல்கலைக் கழகத்தின் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராஜா அவர்களின் தலைமையில் நடந்த ஆய்வரங்கில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ரகுபரன் உட்படப் பல கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் ஆய்வரங்கில், பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சுமன் அவர்களால், “பூம்புகாரின் இந்திர விழா” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டது. அப்பொழுது, பேராசிரியர். செ.யோகராஜா ஆய்வாளரையும், அவரால் எடுக்கப்பட்ட தலைப்பையும் அறிமுகம் செய்யும் பொழுது, சிலப்பதிகாரத்தில் இந்திர விழா எடுத்த காதையில், பூம்புகாரில் இந்திரவிழா மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது போன்று கடந்த பல வருடங்களாக வடக்கே வல்வெட்டித்துறை நெடியகாட்டிலும், ஒவ்வொரு சித்திரா பௌர்ணமியின் பொழுதும்.மிகவும் கோலாகலமாக இந்திர விழாவைக் கொண்டாடும் மரபு பேணப்படடு வருகின்றது. இந்த வருடமும் 60 அடி உயரமான பாரிய புகைக் கூண்டுகள் பறக்கவிடப்;பட்டதுடன் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஆனால் அந்த விழாவுக்கு இந்திரவிழா என்று பெயர் எவ்வாறு சூட்டப்பட்டது ஏன் என்பதுதான் தெரியவில்லை.இது பற்றி இங்கே சமூகம் அளித்திருக்கும் எழுத்தாளர் கலாபூசணம் வல்வை ந.அனந்தராஜ் அவர்கள் தான் குறிப்பிடவேண்டும் என்று தெரிவித்தபொழுது, பேராளர் உரையின் பொழுது, ந.அனந்தராஜ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்: “சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் பட்டினம் நெய்தல் நிலத்தில் அமைந்துள்ளது. அங்கே வருடம் ஒரு முறை, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்திர விழாவை எடுத்து வந்ததாகச் சிலப்பதிகாரக் காப்பியம், இந்திர விழா எடுத்த காதையில் மிக அற்புதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த விழாவில் நடனம், நாடகம்இ சிலம்பாட்டம் வாணவெடிக்கைகள், பொம்மலாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றபொழுது, பூம்புகார் பட்டின மக்கள் தமது வேலையின் களைப்பை மறக்க ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இந்திர விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோன்று தமிழ் நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற “இந்திரவிழாவை” நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு சித்திரா பௌர்ணமி நாள் அன்றும் நெய்தல் நிலச் சூழலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை நகரில் கோயில் கொண்ட அருள்மிகு முத்துமாரி அம்மனின் தீர்த்த உற்சவ நாளன்றுஇ ஊறணிக் கடற்கரையில் இருந்துஇஊரிக்காடு வரை காலை ஆறு மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை “வல்வையின் இந்திர விழா” மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வல்வை நெடிய காட்டு இளைஞர்களினாலும், நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழுவினராலும் கொண்டாடப்பட்டு வரும் இந்திரவிழா தற்பொழுது, வல்வெட்டித்துறையின் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். வல்வையின் இந்திர விழாவின் பொழுது, இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு வாழை மரங்களும், மூங்கில் மரங்களும்இதமிழர்களின் வரலாறுகளைச் சித்தரிக்கும் அலங்கார வளைவுகளும், பலவர்ண மின் அலங்கார வளைவுகளுமாக நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்றைய இரவு நிகழ்ச்சிகளின் பொழுது நாதஸ்வரக் கச்சேரி, உள்ளுர் மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரபலமான கலைஞர்களின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள்,நூற்றுக்கணக்கான புகைக்கூண்டுகளை வானத்தில் பறக்க விடுதல் மற்றும் கரக ஆட்டம்பொம்மலாட்டம் என மிகவும் கோலாகலமாக அந்த இந்திர விழா நடைபெறும்;” என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் ஆய்வாளராகக் கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ் துறைத்துறைத் தலைவர் பேராசிரியர் பா.இரகுவரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “வல்வெட்டித்துறை மண் கடலோடிச் சாதனை படைத்த மண் என்பதால் மட்டுமல்ல தமிழர்களே பெருமைப்படக்கூடிய வகையில் சாதனை படைப்பதில் எதிலும் முன்மாதிரியாக நடந்து வருவது தமிழர்கள் என்ற வகையில் எமக்கும் பெருமை தருகின்றது” என்று குறிப்பிட்டமை வல்வையின் பாரம்பரியப் பெருமைகளையும்,வீரத்தையும் எந்த அளவுக்கு நேசிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.” என்று குறிப்பிட்டு வல்வையின் பெருமைகளை நினைவு கூர்ந்தார் சங்கமருவிய காலத்தில் எழுந்த அற நூல்களில் சிலப்பதிகாரம் அறக் கருத்துக்களை எடுத்துக் கூறும் மிகச் சிறந்த ஒரு காப்பியமாக “இளங்கோ அடிகளினால்” இயற்றப்பட்டது.அந்தக் காப்பியத்தில் குறிப்பிட்ட பின்வரும் அறக்கருத்துக்கள் இன்றும் காலத்தால் அழியாத தீர்க்கதரிசனமிக்க கூற்றுக்களாக இருப்பதுஇ அண்மைக்கால இலங்கை அரசியலிலும்ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனுபவரீதியாகக் காணமுடிகின்றது..அறக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிலப்பதிகாரம் தொடர்பான பாயிரம் ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகாரின் வீதியின் சிறப்புக்கள் இளங்கோவடிகளினால், பின்வருமாறு வருணிக்கப்படுகின்றது: “புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும்இஅவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கணும் நிகழ்கின்றன.விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக்இ கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்துஇ விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன.அத்தகைய ஒரு வரலாற்றின் சிறப்பு மிக்க பூம்புகார் நகரத்தை ஒத்ததாக வல்வெட்டித்துறை நகரம் அன்று விழாக் கோலம் பூண்டிருக்கும். வல்வையின் இந்திர விழாவின் பொழுது வீதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்ட வல்வையின் அற்புதமான கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு புராண வரலாற்றைச் சித்தரிக்கும் அலங்கார வளைவுகளும்இகண்ணைப் பறிக்கும் மின்விளக்குகளைக் கொண்ட வளைவுகளும்,வீதிகளில் இடம் பெறும் பொம்மலாட்டங்களுமாக அன்றைய இரவு பூம்புகாரின் இந்திர விழாக் காட்சிகளை நினைவூட்டிக் கொண்டிருக்கும். பூம்புகார் வீதிகள் எங்கும், வீடுகளின் முகப்புக்கள் தோறும் அலங்கரித்து, பூரண கும்பங்கள் வைத்து இந்திரனின் விக்கிரகத்தை வரவேற்க மக்கள் கோலாகலமாகக் கர்ததிருப்பது போல், வல்வெட்டித்துறை நகரின் ஊறணி தீர்த்தக் கடற்கரையில் இருந்து, அழகிய கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட முத்துமாரி அம்மனின் விக்கிரகமும் முத்துக்களும்தங்கங்களும் பொறித்த அலங்கார வடிவினராக இந்திர விமானத்தில் வருகை தரும் பொழுது,மக்கள் தமது வீடுகளின் முன்னால் பூரண கும்பங்களையும், வீதிகள் எங்கும் தாகசாந்தி நிலையங் களையும் அமைத்துக் காத்திருக்கும் அந்த வல்வையின் இந்திரவிழாவைக் காண்பதென்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கின்ற பெறுபேறாகும். புலிவேட்டைத் திருவிழா: இந்திர விழா பெற்றுவரும் முக்கியத்துவத்தைப் போன்றே வல்வை முத்துமாரி அம்மன் கோயிலின் பன்னிரண்டாம் திருவிழாவின் இரவுத் திருவிழா சங்ககாலத் தமிழர் பண்பாட்டியலையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் புறநானூற்றில் இடம் பெறும்இ புலியை முறத்தினால் அடித்துத் துரத்திய ஒரு வீரத் தமிழச்சியின் வரலாற்றைக் கூறும் விழாவாக அமைந்ததால்இஅதனை “புலிவேட்டைத் திருவிழா” என அழைப்பர். “முறம் எடுத்துப் புலி அடித்த தமிழகம்” என்ற பாடல் அடிகளுக்கு உயிர் கொடுப்பது போல்இஅன்று இரவுத் திருவிழாவில் முத்துமாரி அம்மன், முருகன், பிள்ளையார் ஆகிய மூன்று விக்கிரகங்களும், படல் சாத்துப்படி வடிவில் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தனித்தனி இடப வாகனங்களில் வீதியுலா வரும் பொழுது, தெற்கு வீதியில் இருந்து புலிவேட்டை ஆரம்பமாகும். இதில் புறநானூற்றில் இடம்பெறும் பாடலுக் கேற்ப “வேடுவன் ஒருவனைப் புலி பிடித்து இழுத்துச் செல்லும் பொழுது, அவனுடைய மனைவி எவ்வித பதட்டமும் அடையாது, தனது குடிசையினுள் இருந்த சுளகை எடுத்து வந்து ஆவேசம் கொண்டவளாக அந்தச் சுளகினால் அடித்து அடித்து அந்தக் காட்டுப் புலியைத் துரத்தி, தனது கணவனை மீட்டுக் கொண்டு வரும் அந்த வீரமிக்க வரலாற்றையே 12ஆம் திருவிழாவின் “புலி வேட்டைத் திருவிழா”வில் வல்வெட்டித்துறை இளைஞர்கள் தத்ரூபமாகப் பாவனை செய்து காட்டுவார்கள். அன்றைய இரவுத் திருவிழவின்பொழுது புலி வேட்டைத திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ஏராளமான வர்ண வாண வேடிக்கைகளும், சிலம்படிஇகோலாட்டம்இகும்மி,தீப்பந்த நடனங்கள் போன்ற கிராமியக் கலை வடிவங்களும் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 9. வல்வை சகாறா

  கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

  ஸ்பைடருக்கே பச்சை குத்தி சாதனை படைத்த உடையாருக்கு வாழ்த்துக்கள்
 10. வல்வை சகாறா

  யாழ் நண்பர்களுக்கு முதல் வணக்கம்

  வணக்கம் வாருங்கள் அருள்மொழிவர்மன்.
 11. சசி கனகாலத்திற்குப் பிறகு ஒன்றரை மணித்தியாலம் ஒரே இடத்தில் என்னை இருத்தி வைத்துவிட்டீர்கள். நன்றி சசி இணைப்பிற்கு. இசை என்னை வசீகரிப்பதும் அதற்குள் நான் அடிமைப்படுவதும் மாற்ற முடியாது போல இருக்கு........
 12. வல்வை சகாறா

  மூ.தேவி யின் முதல் வணக்கம்

  வாங்கோ
 13. நிழலி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கவிதாவின் அம்மாவுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.