கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  11,670
 • Joined

 • Last visited

 • Days Won

  9

கந்தப்பு last won the day on November 18 2014

கந்தப்பு had the most liked content!

Community Reputation

198 Excellent

About கந்தப்பு

 • Rank
  Advanced Member

Contact Methods

 • ICQ
  0
 1. உங்களின் இரண்டு பிள்ளைகளையும் நன்றாக வளர்த்திருக்கிறீர்கள். நன்றாகப் படிப்பித்திருக்கிறீர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று முடிந்து பட்டம் பெறும்போது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி , பழைய சோகங்களை மறக்கச்செய்யும். எத்தனையோ மாவீரர் குடும்பங்களுக்கு உதவி புரிந்தீர்கள். நிச்சயம் , உங்களுக்கும் நல்ல உள்ளங்கள் உதவி செய்வார்கள். உங்களின் அம்மாவும் , சகோதரிகளும் சித்தப்பாக்களும் உங்களைத் தேடிவருவார்கள். நாய் வாலை நிமிர்த்தலாம் .ஆனால் அளவுக்கு அதிகமாகக் குடிப்பவரை திருத்தமுடியாது.
 2. வல்வை படுகொலை

  சில வருடங்களுக்குப் முன்பு மட்டக்களப்பினைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவரைச் சந்திதேன். இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்ட அப்பாவி மட்டக்களப்பு மக்கள் சார்பாக அவரும் சில ஆசிரியர்களும் ஒரு மகஜரினை இராஜீவ் காந்திக்கு அனுப்பிவைத்தார்கள். ஒரு மாதத்தின் பின்பு அந்த மகஜரை எழுதிய 26 ஆசிரியர்களில் 25 பேர் இந்தியப்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் . அந்த ஆசிரியரின் மனைவியும் (அவரும் ஒரு ஆசிரியை, அந்த மகஜரில் கையோப்பமிட்டவர்) இந்தியப்படையினால் கொல்லப்பட்டார். அந்த ஆசிரியர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்றதினால் தப்பினார். அவரின் பெயர் தேவராஜா. கொக்குவில், இணுவில், உரும்பிராய் என இந்தியா இராணுவத்தினால் (Innocent people killing force) கொல்லப்பட்ட பலர்கள் அதிகம்.
 3. இயக்கங்கள் தோன்ற முன்பே 70களில் தமிழர்களின் உயர்கல்விக்கு வேட்டுவைப்பதற்காக தரப்படுத்தலைக் கொண்டு வந்தது சிங்களம். 57ளில் எங்கள் சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்தது சிங்களம். தமிழர் பகுதியில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் செய்தது சிங்களம். ஆனால் கேடு கெட்ட மானம் கெட்ட ஈனப்பிறவிகளான எங்கட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கட சுயநலத்திற்காக சிங்களத்துக்கு ஆதரவு தருகிறார்கள்.நான் பெரியவன் ,நீ பெரியவன் என்று போட்டி போட்டு ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் காணும் என்று சுயநலமாக வாழ்கிறான் தமிழன். சிங்களத்தீவிற்கு அடிக்கடி சுற்றுலா சென்று , அங்கு பாலும் தேனும் ஓடுது , மகிந்தா மாமாவும், மைத்திரி சித்தப்பாவும், சந்திரிக்கா பாட்டியும் ,ரணில் பெரியப்பாவும் அங்கை எங்கட சனத்தை நல்லாய் வைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள்.. இலண்டனிலும் , சிட்னியிலும் சிங்கள துடுப்பாட்ட அணி வரும்போது வாளை ஏந்திய சிங்கத்தின் உருவத்தைப் பொருத்திய உடையினை அணிந்து சிங்கள தேசியக் கொடி பிடித்து , சிங்களநாட்டின் தேசிய கீதத்தினை பாடி , தற்பொழுது சிங்கள அரசுளில் மந்திரிகளாக இருக்கிற ரணதுங்காவையும், ஜெயசூரியாவையும் கடவுளாக நினைத்து வாழுகிற இனம் தான் எங்கட இனம். அவனுக்கு எங்கட சகோதரிகளான கிருசாந்தி, இசைப்பிரியாவுக்கு நடந்த் கொடுமைகளைவிட ஜெயவர்த்தனா, சங்கக்காரா போன்றவர்கள் சதம் அடிக்கத்தவறியதுதான் கவலை.
 4. என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. தமிழனுக்கு, தனித்த கலாசாரம் இருக்கு; தொன்மையான பண்பாடு இருக்கு; வரையறுக்கப்பட்ட நிலமும் வாழ்வாங்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு. அதனால அவனை ஒண்ணுசேரவிடக் கூடாது. அவன் இனமான உணர்வோடு இருக்கக் கூடாதுனு இப்பவும் ஒரு கூட்டம் வேலைபார்க்குது. அதனாலதான் 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. இந்த விஷயத்தில் தமிழக ...அரசியல்வாதிகளும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அரசியல் பண்ணிட்டாங்க. பொங்கிவந்த இன உணர்வுகள்ல மண்ணைப் போட்டுட்டாங்க. ஆனா ஒண்ணு... முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தியாகம் இவங்க மனசாட்சியைக் கேள்வி கேட்கும். -#ஓவியர்_வீரசந்தானம் அளித்த பேட்டியில். நன்றி: தமிழ்வின். வீர சந்தானம் ஐயாவிற்கு வீரவணக்கம்!
 5. ரவிக்கை

  உதுதான் புத்தர் அடிக்கடி கடற்கரைக்குப் போய் வார இரகசிமோ?
 6. எனது முதல் பயணம் பலாலியில் இருந்து கொழும்புக்கு போனது. சிறுவயதில் போனதென்பதினால் எல்லாம் மறந்து போயிட்டுது.
 7. ஆகாஸ் தியாகலிங்கம் என்பவரின் முகநூலில் இருந்து அனைவருக்கும் வணக்கம் நடிகர் ரஜனிகாந்தின் யாழ்ப்பாண விஜயம் நிறுத்தப்பட்டதை எதிர்த்தும் ஆதரித்தும் பல செயற்பாடுகள் நடந்து வரும் இச்சூழலில் இன்று மாலை நல்லூரில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாகவும் அதற்கு ஈழத்து கலைஞர்கள் - வடமாகாணம் அழைப்பு விடுத்திருப்பதாகவும் பரவலாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளுக்கும், வலைத்தள செய்திகளுக்கும் திரைத்துரை கலைஞர்களாகிய எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அத்தோடு ஒரு சில கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல இருப்பதாகவும் அறிந்தோம். அது அவரவர் தனிப்பட்ட விருப்புவெறுப்பாக இருப்பினும் ஒட்டுமொத்த கலைஞர்களையும் பாதிக்கும் விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது நல்லதல்ல எனவும் கருதுகின்றோம். எது எவ்வாறாக இருப்பினும் ஈழத்து கலைஞர்கள் எனும் வார்த்தைக்குள் அடங்கும் கலைஞர்களை கலைத்துறை அடிப்படையில் நோக்குவோமானால் அது வடமாகாணத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த கலைஞர்களையும் உள்ளடக்கியதாக கருதப்படும். இருந்தபோதும் பெருமளவு விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் திரைத்துறை கலைஞர்களாகிய எம்மை நோக்கி முன்வைக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு இதனால் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாகின்றோம். அத்தோடு ஒரு சிலரின் விருப்பத்தோடு நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒட்டுமொத்த கலைஞர்களையும் குறிக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்துவதையோ ஒட்டுமொத்த கலைஞர்களையும் விமர்சிக்கும் விதத்தில் நடந்துகொள்வதையோ இனிவரும் காலத்தில் என்றாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி இத்தகவல் உண்மை என கருதும் கலைஞர்கள் இதனை பகிர்ந்தோ மீள் பதிவு செய்தோ எம் உணர்வினை வெளிப்படுத்துங்கள்
 8. ‘கருணாநிதி’ என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ‘ஜெயலலிதா’ என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் தலையெழுத்தை, அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், அரசியல் செய்வது, அறிவிப்பு வெளியிடுவது என எதிரெதிர் துருவங்களாகக் காட்சியளிக்கின்றனர். ஆனால், ஊழல், தனி மனிதத் துதி, குடும்ப அரசியல், சர்வாதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இருவரும் ஒருவரே. சர்க்காரியாவும் மைக்கேல் டி.குன்ஹாவும்..! தமிழகத்தில் ஊழல் என்ற வார்த்தை கருணாநிதியின் காலத்தில் பிரபலம் அடைந்தது. காமராஜரின் காலத்தில்... அண்ணாவின் ஆட்சியில்... அந்த வார்த்தைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்கு கருணாநிதி கொண்டு வந்த பிறகே, ஊழல் என்ற சொல் பிரபலமானது. 1969-ல் முதன்முதலாக முதலமைச்சரான கருணாநிதி, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தது; சென்னை மவுன்ட் ரோட்டில் இருந்த குளோப் தியேட்டருக்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்தது; ‘பிராட்வே டைம்ஸ்’ பத்திரிகையுடன் ஒப்பந்தம் போட்டது; சென்னையில் அண்ணா மேம்பாலம் கட்டியது; ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு பீர் தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்கியது; வீராணம் ஏரித் திட்டத்துக்குக் குழாய் பதித்தது என்று ஊழல் பட்டியலை நீளமாக்கிக்கொண்டே போனார். அதைப் பட்டியல் போட்டு, அன்றைய ஜனாதிபதியிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதன்பேரில் அமைக்கப்பட்டதுதான் சர்க்காரியா கமிஷன். இன்றைக்கும் சர்க்காரியா என்ற பெயரைக் கேட்டால் கருணாநிதிக்கு மட்டுமல்ல... தி.மு.க-வில் பலருக்கும் கிலி பிடிக்கும். கருணாநிதி மீதான அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த சர்க்காரியா, மிரண்டு போனார். “விஞ்ஞானப்பூர்வமாக இந்த ஊழல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்பட்டமாகத் தவறுகள் நடந்துள்ளன. பல லட்சம் (அன்றைய மதிப்பு) பணம் கைமாறி உள்ளது. அந்தப் பணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். ஆனால், அதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லை. அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, நிர்வாகரீதியில் இந்த ஊழல்கள் செய்யப்பட்டுள்ளன” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அன்று ஊழல்களுக்குப் பழகிய கருணாநிதியின், ஒவ்வோர் ஆட்சியிலும் ஊழல் தொடர்கதையாகிக்கொண்டே வருகிறது. கருணாநிதியிடம் பாடம் கற்றுக் கொண்ட அவரது உடன்பிறப்புகள், மத்தியில் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கும் தங்களின் ஊழல் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட்டனர். 2ஜி அதற்குச் சாட்சி. கருணாநிதிக்கு ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்க விரும்பும் ஜெயலலிதா, இந்த விஷயத்தில் கருணாநிதியாகவே இருக்க விரும்பினார் போல. 1991-ம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரானதும், தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்தார். ஊராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அத்தனை துறைகளிலும் ஊழல் ஊற்றெடுத்து ஓடியது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி வாங்கியது; சுடுகாடுகளுக்குக் கூரை போட்டது; டான்சி நிலம் வாங்கியது; நிலக்கரி இறக்குமதி செய்தது; பிறந்த நாள் பரிசு வாங்கியது என்று எல்லாவற்றிலும் ஊழலை அரங்கேற்றினார். இவற்றில் சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1991-96 காலகட்டத்தில் மட்டும் ரூ.66 கோடியாக உயர்ந்தது. பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை பெற்று பதவியையே இழந்தார். பிறகு, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகி விடுதலை பெற்றார். அதன் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டிக்கப்பட்டு மீண்டும் பதவியை இழந்தார். அந்த வழக்கில், நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த தீர்ப்பின் மூலம் விடுதலை வாங்கிவிட்டாலும், இன்றுவரை அந்த வழக்கு ஜெயலலிதாவின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. கருணாநிதிக்கு சர்க்காரியா என்றால், ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் குன்ஹா என்ற பெயரைக் கேட்டால் தூக்கம் தொலையும். ராஜராஜ சோழனும்... அம்மாவும்..! திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த கருணாநிதி, ஜெயலலிதாவை மாலைகளும், மரியாதைகளும், புகழுரைகளும் தேடிச் சூடிக்கொள்ளும் தருணங்கள் ஏராளமாக வாய்த்து இருந்தன. ஆனால், அவை கிடைக்காத தருணங்களில், விலை கொடுத்து வாங்குவதற்கும், அதைக் கொடுப்பதற்காகவே ஒரு கூட்டத்தைத் தங்களைச் சுற்றிவைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினர். 2006-11 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் அரங்கேறிய பாராட்டு விழாக்கள் கருணாநிதியின் புகழ் மாலைகளுக்கு உதாரணங்கள். அது பாராட்டு விழா நடத்தி காரியம் சாதிக்கும் அளவுக்குப் போனது. கவிஞர்கள் கருணாநிதியைப் பாராட்டு மழையில் நனைத்தனர். ஒருகட்டத்தில் கருணாநிதியைத் தவிர, மற்றவர்களுக்கு அலுத்துப்போயின அந்த விழாக்கள். ஒரு பாராட்டு விழாவில், நடிகர் அஜித், “எங்களை மிரட்டி கூப்பிடுறாங்கய்யா” என்று போட்டு உடைத்தார். அதைச் சொல்ல முடியாமல், புழுங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், அஜித்தின் அந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அதன் பிறகு ரஜினியும் அஜித்தும் கோபாலபுரம் சென்று கருணாநிதியிடம் தங்கள் பேச்சுக்கு புது விளக்கங்கள் கொடுத்து வந்தனர். அதே ஆட்சியில்தான் செம்மொழி மாநாடு, ராஜராஜ சோழன் பட்டாபிஷேகம் போன்ற விழாக்களின் நாயகன் ஆனார் கருணாநிதி. கருணாநிதியின் புகழ் பலவீனத்தைப் புரிந்து கொண்டவர்கள், புதுப்புது வார்த்தைகளைத் தேடித் தேடி கருணாநிதியைப் புகழ்ந்தனர். அவர்களுக்குக் கைமாறாகப் புதுப்புதுப் பதவிகளை உருவாக்கிப் பரிசாகக் கொடுத்தார் கருணாநிதி. கருணாநிதிக்குப் பாராட்டு விழாக்கள் என்றால், ஜெயலலிதாவுக்கு சட்டமன்றக் கூட்டத் தொடரே ஜால்ரா மன்றமாக அமைந்தது. மக்களின் குறைகளை மன்றத்தில் உறுப்பினர்கள் தெரிவிப்பதற்காக நடக்கும் கூட்டத் தொடரை, தன்னுடைய புகழ்பாடும் மன்றமாக மாற்றினார் ஜெயலலிதா. துணிச்சலோடு ஒரு சில கேள்விகளையாவது கேட்கும் எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு, தனது அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை வைத்து தனக்குத் தானே நாள்தோறும் பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டார். அவரைப் புகழும் அளவுக்குக் கருணாநிதியைத் திட்ட வேண்டும் என்பது அந்த அவையில் எழுதப்படாத விதியாக இருந்தது. அதைத் திறம்படச் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவியை அள்ளிக் கொடுத்தார். அதன் உச்சகட்டமாக, சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவை விடுவிப்பதற்கு நடத்தப்பட்ட யாகங்கள், பூஜைகளில் தெய்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஜெயலலிதாவே முன்னிறுத்தப்பட்டார். குடும்ப ஆதிக்கமும்... குறுநில மன்னர்களும்...! அண்ணா வளர்த்த கட்சியை ஓயாத சுறுசுறுப்பு, பேச்சாற்றாலுடன் கருணாநிதி சேர்த்துவைத்த கோஷ்டியும் அவரைத் தலைவராக்கியது. அப்போது அவரைத் தலைவராக ஏற்காத பேராசிரியர் அன்பழகன்கூட பின்னாளில் ‘கலைஞர் என் தலைவர்’ என்று ஏற்றுக் கொண்டார். ஆனால், கருணாநிதியின் வாரிசுகள் என்ற ஒரே தகுதி உடைய பலரையும் தலைவர்களாக ஏற்க வேண்டிய நிலை, இன்றைய தி.மு.க தொண்டனுக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, செல்வி, தயாநிதி மாறன் ஆகியோரின் ஆதிக்கம் கட்சிக்குள் எப்படி இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 2006-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஸ்டாலின் நாடு, அழகிரி நாடு என்று தமிழ்நாடு பிரிந்து கிடந்தது. இப்போது அந்தத் தலைமுறையையும் தாண்டி சபரீசன், உதயநிதி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, அஞ்சுகச் செல்வி என்று அடுத்த தலைமுறையின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு சீட் கொடுப்பதில் இருந்து, யாருக்கு எங்கே பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்பதுவரை இவர்கள் தீர்மானிக்கின்றனர். தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தால் இவர்கள்தான் மிகப் பெரிய அதிகார மையங்களாக இருப்பார்கள். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் குடும்பத்துக்குப் பதில் அங்கு சசிகலாவின் குடும்பம் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் நிரந்தரமாகிவிட்டது. சசிகலா, இளவரசி, நடராஜன், சுதாகரன், ராவணன், தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியையும் கட்சியையும் மன்னார்குடி குடும்பம் கட்டுப்படுத்துகிறது. ஒருவர் போனால், அந்த இடத்துக்கு வரும் மற்றொருவரும் மன்னார்குடி குடும்பத்தில் இருந்தே வருகிறார். அந்தவகையில் இன்றைய புது வரவு விவேக் ஜெயராமன். அடுத்து அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் விவேக் ஜெயராமனின் ஆதிக்கமே நிலவும். கருணாநிதி ஆட்சியில் குறுநில மன்னர்களாக, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, நேரு, பெரியசாமிகள் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வைத்திலிங்கம் வகையறாக்கள் வருகிறார்கள். நில அபகரிப்பு, மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுப்பது, கல்லூரிகள் கட்டுவது, காசு பார்ப்பது என்று இருக்கும் இவர்கள், தலைமையின், கட்சியின் நிதி ஆதாரங்களாக இருக்கிறார்கள். வேட்டி கட்டிய ஜெயலலிதாவும்... சேலை உடுத்திய கருணாநிதியும்..! ஆட்சியை நடத்துவதிலும் கட்சியைக் கட்டுப்படுத்துவதிலும் கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதாவாக இருப்பார். ஜெயலலிதா சேலை உடுத்திய கருணாநிதியாகக் காட்சி தருவார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, சட்டமன்ற நடவடிக்கைகள் என்று அனைத்திலும் ஒரே போக்கு. கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் எதிர்ப்பவர்களைக் கட்டம் கட்டுவது, ஓரம் கட்டுவது, பொய்வழக்குப் போடுவது, அவர் போட்டத் திட்டத்தை இவர் உடைப்பது, இவர் கொண்டு வந்த திட்டத்தை அவர் முடக்குவது என்று சர்வாதிகாரமாகச் செயல் படுவதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான். தன்னைப் பற்றியும் தன் அரசாங்கம் பற்றியும் பத்திரிகைகளில் எது வந்தாலும், ஜெயலலிதா நேரடியாக அவதூறு வழக்குத் தொடர்வார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வழி இன்னும் விநோதமானது. கருணாநிதியைப் பற்றியோ, அவரது குடும்ப ஆதிக்கம் பற்றியோ, அவரது ஆட்சியைப் பற்றியோ ஏதேனும் விமர்சனம் செய்து, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், `முரசொலி’யில் கட்டுரை எழுதுவார். `பார்ப்பன ஏடுகள்’ என்பார்; அவதூறு வழக்குப் போடுவார். இருவரும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் விளம்பரங்களை வெட்டுவார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார் கருணாநிதி. கருணாநிதி கட்டிய தலைமைச் செயலகத்தை பொதுநோக்கு மருத்துவமனை ஆக்கினார் ஜெயலலிதா. இப்படி இவர்களின் ஒவ்வோர் அசைவும் எதிரும் புதிருமாக இருந்தாலும், அடிப்படையில் இருவரும் ஒருவரே. அவர் செய்ததைத்தான் இவர் செய்வார். இவர் செய்ததைத்தான் அவர் செய்வார். - ஜூனியர் விகடன் - 15, மே, 2016
 9. விடுதலைப்புலிகளுக்கும், இரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமாதான காலப்பகுதியில் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டினை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த இரு சிங்கள ஊடகவியளாளர்கள் பார்வையிட்டார்கள். அவர்களை தமிழ் ஊடகவியளாளர் ஒருவர் அவ்விடத்துக்கு கூட்டிவந்திருந்தார். சிங்கள ஊடகவியளாளர்கள், சிங்களத்தில் தங்களது சந்தேகங்களைக் கேட்க , தமிழ் ஊடகவியளாளர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். பிறகு அவர்கள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு இடமான தீருவிலுக்கு சென்றார்கள். அங்கே ஒரு 11 வயதுமிக்க சிறுவன் ஒருவன், அவ்விடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தான். சிங்கள ஊடகவியளாளர் ஒருவர் சிங்களத்தில் அச்சிருவனைப்பார்த்து ஏன் இவர்கள் இறந்தார்கள் என்று கேட்டார். தமிழ் ஊடகவியளாளர் தமிழில் இதனை மொழிபெயர்க்க, சிறுவன் ' குமரப்பா, புலேந்திரனின் சாதனைகள், இந்தியா இலங்கையின் கூட்டுச்சதி' என்பவற்றினை விளக்கினான். இதனைக் கேட்டசிங்கள ஊடகவியளாளர் ஒருவர் ' ரூபாவாகினி நடாத்திய போட்டியில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களிடம், இலங்கையின் முதலாவது பிரதமர் பற்றிக் கேட்டபோது பலர் சரியான பதில் தெரியாமல் தவித்ததினையும், 11 வயது சிறுவன் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பற்றி இவ்வளவு விளக்கமாக இருப்பதையும் பற்றிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். அச்சிறுவனைப் பார்த்து நீ விடுதலைப்புலிகளை நேசிக்கிறயா? என்று கேட்டார். சிறுவன் இல்லை என்றான். ஊடகவியளாளர்கள் அவ்விடத்தினைவிட்டு சிறுதூரம் சென்றதும், அச்சிறுவன் நிலத்தில் எதோ எழுதிக்கொண்டிருந்தான். தமிழ் ஊடகவியாளர், அச்சிறுவன் என்ன எழுதுகிறான் என்று திரும்பி வந்து பார்க்க அங்கே 'விடுதலைப்புலிகள்' என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. 'புலிகளைத்தான் பிடிக்காது என்று சொன்னீர். ஏன் அவர்களின் பெயரை இங்கு எழுதினீர். ' என்று தமிழ் ஊடகவியாளர் கேட்க, ''எனக்கு அவர்களைப்பிடிக்கும் என்று சொன்னால் அந்தச் சிங்களவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்' என்று சொன்னான். தமிழ் ஊடகவியளாளர் இதனைச் சிங்கள ஊடகவியளாளர்களிடம் கூறி 'உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இங்கு இருப்பவர்களிடம் , அதில் அச்சிறுவன் என்ன எழுதினான் என்று கேட்டுப்பாருங்கள் என்றார். சிங்கள ஊடகவியளாளர் தனது சந்தேகத்தினை அருகில் நின்றவர்களிடம் கேட்டு அறிந்ததும், 'விடுதலைப்புலிகளினை முற்றாக பிற்காலத்தில் அழித்தாலும், அவர்களை தமிழ் மக்களின் மனதில் இருந்து முற்று முழுதாக அழிக்கமுடியாது.அதற்கு புலிகளின் நினைவு இடங்களும் தமிழ் மக்களுக்கு துணைபோகின்றன' என்று சொன்னார். 2009க்குப் பிறகு வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயில் இல்லங்கள், நினைவுத்தூபிகள், சங்கிலியன், பண்டாரவன்னியன் அரசர்களின் சிலைகளும்,விபுலானந்தர் போன்ற புலவர்களின் சிலைகளும் அழிக்கப்பட்டன. வீரத்துடன் நின்ற சங்கிலியனின் சிலைக்குப் பதிலாக சாந்த குணத்தினாலான சங்கிலியன் சிலை கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களும், தேவாலயங்களும் புனர் நிர்மானம் செய்யப்பட்டன. புதுபுது கோவில்களும் தேவாலயங்களும், புதுக்கடவுளுக்கு அமைவிடங்களும் கட்டப்பட்டுவருகின்றன. புத்தர்சிலைகளும் பெருகிக்கொண்டுவருகின்றன. சிங்கள இராணுவத்தினது நினைவுத்தூபிகளும் கட்டப்பட்டுவருகின்றன.
 10. சிறுவன் & சிறுமி

  கருத்துக்கள் பகிர்ந்த புத்தன், சுவி, ஈழப்பிரியன், பகலவன், புங்கையூரான், முனிவர் ஜீக்கும் நன்றிகள். சூரிய உதயம் பார்த்தேன்.
 11. ஒருவேளை கறுவேப்பிலை வாங்க வைத்த காசோ
 12. அண்மையில் உளுறு என்ற மத்திய அவுஸ்திரெலியாவின் நகரமொன்றுக்கு சென்றிருந்தேன். மாலைநேரம் அங்கு தங்கிய விடுதியில் இருந்த நீச்சல் குளமொன்றினைச் சுற்றி அமைந்துள்ள கதிரையொன்றில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். ஒரு 7 வயதுடைய அவுஸ்திரெலியா ஆதிவாசிகளின் இனமான அபோரிஜினல் இனத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி , ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் நீரினில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுவனுக்கும் 7 வயது இருக்கும். அவர்களின் உரையாடலின் மூலம் அச்சிருமியை, வெள்ளைக்காரக் குடும்பம் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வருவதை அறிந்தேன். சிறுவனும் சிறுமியும் அங்குதான் முதலில் சந்தித்ததை உணர்ந்தேன். அவர்களின் உரையாடல்களில் சில சிறுவன் - அவுஸ்திரெலியா தினத்தினை நீ கொண்டாடுகிறாயா?. சிறுமி -- ஆம். சிறுவன் - வெளினாடுகளில் இருந்து வந்து உனது இனத்தினை அழித்து அவுஸ்திரெலியா என்ற நாட்டினை உருவாக்கிய நாள்தான் அவுஸ்திரெலியா தினம். உனது இனத்தினை அழித்த தினத்தினை நீ கொண்டாடலாமா? சிறுமி - ஏன் எனதுநாட்டுக்கு அவர்கள் வந்தார்கள்? சிறுவன் - உனதுநாட்டில் இருக்கும் இருப்பவற்றை எடுத்துச் செல்லவந்தார்கள் . நல்லகாலம் நீ அப்பொழுது பிறக்கவில்லை. உன்னைக் கொலை செய்து இருப்பார்கள்.. சிறுமி - அப்பொழுது நான் எனது அம்மாவின் வயிற்றில் இருந்ததினால் தப்பிவிட்டேன். நீண்டகாலத்துக்கு பின்பு யாழில் எழுதுவதினால் ஏற்பட்ட சொல்பிழை, எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்.
 13. மேலே போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றி ஒரு இணையத்தில் வந்ததாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்விணையத்தின் பெயர் என்ன?. ஜெசிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவு வாக்களித்திருக்கலாம். ஆனால் இணையங்களில் அவர் பெற்ற வாக்குகள் உண்மையில் சரியானதா?. அல்லது யாரோ கற்பனையில் எழுதிய தகவலா?. வழமைபோல ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும் பரபரப்புச் செய்தியா?. ஜெசிக்கா 2ம் இடத்துக்கே வந்தது மிகப்பெரிய விடயம். அடுத்த சுப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்துப் போட்டியாளர்கள் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலைப் பாடலாம். இந்தியாப் பாடகர்கள் வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடலாம். மீண்டும் எமது ஊடகங்களில் இப்படியான செய்திகளும் வரலாம். ஈழத்தின் முக்கிய பிரச்சனையை விட இப்படியான செய்திகள்தான் ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும்.