சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  156
 • Joined

 • Last visited

 • Days Won

  1

சுப.சோமசுந்தரம் last won the day on May 5

சுப.சோமசுந்தரம் had the most liked content!

Community Reputation

160 Excellent

About சுப.சோமசுந்தரம்

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 06/24/1960

Profile Information

 • Gender
  Male
 • Location
  Tirunelveli, Tamilnadu, India
 • Interests
  Literature - Classical and Modern, Social and Union Activities
 1. சுப.சோமசுந்தரம்

  சபரிமலையும் ஆண் மையவாதமும்

  எனக்கு இறை நம்பிக்கை இல்லையென்றாலும், சபரிமலையிலும் மசூதிகளிலும் பெண் அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராடுவது பெண்ணை ஒதுக்கி வைக்கும் ஆண் மையவாதச் சமூகத்திற்கெதிரான நிலைப்பாடு. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் 'தீட்டு' எனச் சொல்லி கோயிலுக்குச் செல்ல அவளிடமே ஒரு மனத்தடையை உருவாக்கிய பேடித்தனத்தை என்னவென்று சொல்ல? மேல்மருவத்தூர் 'அம்மா'விடம் எனக்கு எந்த அபிமானமும் இல்லையென்றாலும், இந்த 'தீட்டு' நம்பிக்கையைத் தூக்கியெறிந்த 'புரட்சி' சிந்தனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தேவையற்ற விழாக்களையும், ஆடம்பரங்களையும் தவிர்க்கும் நான் பூப்புனித நீராட்டு விழாவை ஆதரிப்பது - அது தீட்டன்று, புனிதமானது ; அந்த உடல் மாற்றத்திற்காக பெண் போற்றுதலுக்குரியவள், கொண்டாடப்பட வேண்டியவள் என நிறுவுவதால் (பழங்காலத்தில் அந்த விழாவின் நோக்கம் எவ்வாறும் இருந்திருக்கலாம்).
 2. இப்படிச் சொல்லும்போது நம் மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. ஆனால் பொதுவாக அப்படிச் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன், தோழர். மேற்கண்ட வாழ்க்கையில் தந்தை நம் மனதைத் தொடுகிறார். தற்காலச் சூழலில் இந்திய - இலங்கைச் சமூகங்களில் தாய்க்குத்தான் பெரும்பாலும் இந்நிலை ஏற்படுகிறது. வருங்காலம் எப்படியோ?
 3. திறமைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொடர்பில்லை. ஒரு துறையில் நிவந்து நிற்போர்க்கு அத்துறை சார்ந்த விருது வழங்கப்படுகிறது. சமயச் சார்பின்மையைத் தூக்கியெறிகிற தற்போதைய இந்திய நடுவண் அரசினைக் கண்டித்து அறிஞர் பெருமக்கள் சிலர் பத்ம விருதுகளைத் திருப்பியளித்ததே தேவையற்றது எனக் கருதுபவன் நான். வைரமுத்து தாம் பெற்ற விருதுகளுக்குத் தகுதியானவர். அவ்வளவே. எச்.ராஜா போன்ற கீழ் மக்களின் உளறல்கள் விவாதப் பொருளானது நம் காலத்தின் இழிநிலை. நாமும் பதில் சொல்லத்தான் வேண்டும். வேறு வழி? 'அறுக்க அறுக்கத்தான் வைரம் மிளிரும் ' எனச் சொல்வதுண்டு.
 4. சுப.சோமசுந்தரம்

  கடவுள் எங்கே இருக்கிறார்

  " தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்து இருந்தானே " என்றும் " உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும் திருமூலர் அருளிய பின் நான் சொல்ல என்ன இருக்கிறது?
 5. சுப.சோமசுந்தரம்

  பெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? - குறள் ஆய்வு-7, பகுதி-2

  அருமை. தொடரட்டும் நாம் வாசித்து இன்புறவே!
 6. குழந்தைப் பருவத்தில் ஒழுக்கங்களைச் சொல்லித் தருகையில் அடக்கியாளும் சிந்தனை கேடானது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். சோழன் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் வரலாற்றுக் குறிப்பே தவிர, மார்தட்டி போற்றப்பட வேண்டியதில்லை. விலங்கிற்குரிய போட்டி, பொறாமை, அடக்கியாளும் உணர்வு அனைத்தும் மனிதனுக்கும் உண்டு. அதிகமும் உண்டு. இயற்கையான இவ்வுணர்களை அடக்கியாளுதலே மனிதத்தை நோக்கிய நகர்வு. மனிதனை மனிதன் அடக்கியாளும் உணர்வே மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் அல்லல்களில் பெரும்பங்கு வகிப்பது. விக்னேஸ்வரன் கூறியதைப் போல் இதனை வீட்டிலும், அலுவலகத்திலும், அரசியல் தளத்திலும் மற்றும் சமூகத்தில் எங்கும் காணலாம்.
 7. மாற்றான் காட்டு மரங்களுக்கும் நல்ல மரியாதை உண்டு .
 8. இவ்வளவு காலம் கழித்து சின்மயி பிரச்சினையைக் கிளப்பியதும் , ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவாவாதிகளின் பழிவாங்கும் ஆயுதமாய்ச் செயல்படுகிறாரோ என்று எண்ணத் தோன்றியது . பிராமண சங்கத் தலைவரையெல்லாம் கூட அவர் இழுத்து விட்டதைப் பார்க்கையில் , courtesy ' Me too ' என எடுத்துக் கொள்ளலாம் . சூழ்நிலை காரணமாக சமரசம் செய்திருந்தால் , இத்தனைக் காலம் கழித்தா குற்றம் சாட்டுவது? பெண் பன்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறாள் என்பது உண்மை . அவளைக் காத்து நிற்பது இச்சமூகத்தின் கடமை . சமரசமாகவோ விருப்பத்தினாலோ ஒரு பெண் உடன்பட்டிருந்தால் , எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள அவளுக்கு உரிமையுண்டு . ஆனால் முந்தைய காலத்திற்கு ஆணை மட்டும் குற்றம் சாட்டுவது நேர்மையன்று (சின்மயியின் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தாலும் கூட ) .
 9. சுப.சோமசுந்தரம்

  பெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை! - குறள் ஆய்வு-7, பகுதி-1

  அதிகப்பிரசங்கித்தனமாக எனக்குத் தோன்றவில்லை . சித்திரமும் கைப்பழக்கம் ; செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அடிப்படையில்தான் நாம் எல்லோரும் முயற்சிக்கிறோம். உங்களது நல்ல முயற்சி . அதிலும் நீங்கள் எழுதிய ஒரு பத்தி பத்தியே விட்டது (பக்தியே என்பதைத் தமிழ்ப் படுத்திய சிலேடையல்ல). காமத்துப்பாலில் உள்ள குறளோ எனும் ஐயத்தை ஏற்படுத்தும் அளவு அருமையான வருணனை. ( 'அன்றைய பெண்கள் ' என ஆரம்பிக்கும் பத்தி ) .
 10. மக்களுக்குத் தேவையான தகவல் பதிவு.
 11. விஷாலுக்கும் நிஷாவுக்கும் வாழ்த்துக்கள். " ஒரு மனதாயினர் தோழி " என்ற பாரதிதாசன் வரிகள் இவர்களுக்கே சாலப் பொருத்தம் .
 12. சுப.சோமசுந்தரம்

  அப்படியென்ன அவசரம் , சித்தி ? - சுப.சோமசுந்தரம்  

  தமிழ் சிறி புங்கையூரனைக் கலாய்த்திருக்கிறார். மற்றபடி பேரா.கிருஷ்ணன் சொன்னதைப் போல புங்கையூரனின் ஐயம் நியாயமானது . தந்தை என்ற முறையில் எனக்குப் பெருமையானதும் கூட . மேலும் பேரா. கிருஷ்ணன் என் மீதுள்ள அபிமானத்தினால் சொன்ன 'அறிஞர்' என்ற அடைமொழிக்கு என்னைத் தகுதியாக்க இன்னும் எவ்வளவோ வாசிக்க வேண்டும் ; எழுத வேண்டும். மூவர்க்கும் நன்றி.
 13. சுப.சோமசுந்தரம்

  அப்படியென்ன அவசரம் , சித்தி ? - சுப.சோமசுந்தரம்  

  இதை எழுதியவன் நான்தான். மறைந்தவள் என் சித்திதான். வயது 68 என்றாலும் சுறுசுறுப்பாக இயங்கியமையால் அவளை யாரும் வயதானவர் பட்டியலில் வைக்கவில்லை. என் புலம்பலைப் பார்த்து என் மகள்தான் என்னை எழுதத் தூண்டினாள். மற்றபடி என் மகள் சோம.அழகு வேறு எங்காவது எழுதியவற்றை ' தோட்டத்து மல்லிகையில்' அவள் பெயரில் நான் பதிவிடுகிறேன்.
 14. அப்படியென்ன அவசரம் , சித்தி ? -சுப.சோமசுந்தரம் சென்ற சனிக்கிழமை காலை அப்படி மோசமாக விடிந்தது. அம்மா எழுப்பினாள். "ஒங்க மீனா சித்திக்கு (அம்மாவின் தங்கை) நெஞ்சு வலிக்குன்னு சித்தியும் சித்தப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போறாங்களாம். வாரியா, போவோம் ?" எங்கள் வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் ஏறக்குறைய நடுவில்தான் அந்த மருத்துவமனை. நானும் அம்மாவும் அங்கு சென்றடைந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சித்திக்கு முதலுதவி ஆரம்பித்திருந்தார்கள். இதய நோய் மருத்துவர் சொன்னார், "இது massive attack. கொடுத்துள்ள மருந்திலும் ஊசியிலும் stable ஆகிறதா என்று பார்ப்போம்". சித்தியைப் பார்க்க உள்ளே சென்றேன். பேசக்கூடிய நிலையில் இருந்தாள் என்றாலும் தேவையான விடயங்களை மட்டும் பேசுமாறு நாங்களும் மருத்துவர்களும் அறிவுறுத்தினோம். "லேசான வலிதானே ? அதற்குள் விழுந்தடித்து ஓடி வந்துட்டீங்களே ! " என்றாள். "நான்தானே உனக்குத் தலைமகன் ! மேலும் அருகில் வசிப்பவன் நான்தானே !" என்றேன். வழக்கம் போல் வாஞ்சையுடன் சிரித்தாள். சுமார் இரண்டு மணி நேரத்தில் தம்பி (சித்தியின் மகன்) தன் மனைவி, குழந்தைகளோடு விருதுநகரிலிருந்து நெல்லை வந்துவிட்டான். மாலையில் இதைவிடப் பெரிய மருத்துவமனைக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றினோம். பெரிய மருத்துவமனை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம். தேவைப்பட்டால் 'ஸ்டென்ட்' பொருத்தலாம். மற்றபடி நோயுற்றவர்களை வேறு பெருநகரங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் திருவனந்தபுரத்திலிருந்தோ மதுரையிலிருந்தோ மருத்துவர் வர வேண்டும். இதுதான் இன்றைக்கும் நெல்லை மாநகரின் நிலை. ஆஞ்சியோகிராம் பார்த்து விட்டு மருத்துவர் சொன்னது "முக்கியமான மூன்று தமனிகளில் ஒன்று கையே வைக்க முடியாத அளவிற்குப் பழுதாகி விட்டது. மற்ற இரண்டிலும் அநேகமாக 100 சதவீத அடைப்பு உள்ளது. இரண்டு நாட்களில் condition stable ஆனால் ஸ்டென்ட் வைக்கலாம். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து சென்னையிலோ பெங்களூருவிலோ மருத்துவம் பார்க்கலாம்." முன்பே ஒன்றிரண்டு முறை எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஏதோ வாய்வுப்பிடி என்று சித்தி அலட்சியப்படுத்தியிருப்பாள். இப்போதும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். மறுநாள் காலை பெங்களூருவிலிருந்து தங்கை (சித்தியின் மகள்) வந்த பின்பு அவளிடம் வீட்டில் புதிதாக அமைத்த குழாயில் வால்வை எப்படி மாற்றி நல்ல தண்ணிரோ உப்புத் தண்ணிரோ ஒரே குழாயில் வரவைப்பது என விளக்கியதிலிருந்தே தெரிந்தது - இவளது இதய வால்வோடு இவள் வாழ்வுக்காக நாங்கள் போராடுகிறோம் என்பதை இவள் அறியவில்லை என்று. இதுவரை படர்க்கையிலிருந்த என் சித்தி இனி முன்னிலையில். செவ்வாய்க்கிழமை காலையில் கூட தங்கையிடம், "தாலிச் சங்கிலியைப் போட்டு விடு. மூளிக் கழுத்தோடு எப்படித்தான் இருப்பது ?" எனக் கேட்டாயே ! அவசர சிகிச்சைப் பிரிவில் அவ்வப்போது பரிசோதனைகள் செய்ய வசதியாக நகைகள் அணிந்து கொள்ள அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்போதும் கூட தெரிந்தது - நெருங்கிவிடும் காலனின் நிழல் கூட உன்மீது படவில்லை என்று. அன்று மதியமே மீண்டும் மாரடைப்பு. மருத்துவர்கள் போராடினார்கள். "நான்கு நாட்கள் நீங்கள் பார்க்க, பேச அவளை விட்டு வைத்தேன். போதுமடா" என்று காலன் வாயிற்படியில் வந்து நின்றான். அவ்வுலகில் கால் வைத்துவிட்ட உன்னை இவ்வுலகிற்கு இழுத்து வர பாசம் எனும் கயிற்றின் ஒரு முனையில் நாங்கள் இழுக்க மறுமுனையில் இழுத்த அந்தப் படுபாவி காலன் வென்று தொலைத்தான். நாங்கள் தோற்று விழுந்தோம். உன்னை வீட்டிற்கு வாகனத்தில் ஏற்றி விட்டு நான் வந்த காரை நோக்கி நடந்தேன். சத்தமில்லாமல் என்னால் அழ முடியும் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பீறிட்டு வரும் அழுகையை அடக்க முற்பட்டபோது முகம் அஷ்ட கோணலாகியிருக்க வேண்டும். எதிரே வந்த ஒன்றிரண்டு செவிலியர் பச்சாதாபத்துடன் என்னைப் பார்த்துச் சென்றார்களோ ? வெளியே காரை எடுக்க எனக்கு உதவிய காவலாளி என் முகத்தைப் பார்த்து ஊகித்து விட்டார். உறவினை இழந்த குமுறல் என்று. "சார், தனியாப் போறீங்க. காரை கவனமா ஓட்டிருவீங்களா?" என்றார். "பரவாயில்லை, ஓட்டிருவேன்" என்றேன். காலனைத்தான் ஓட்ட முடியவில்லை. காரையுமா ஓட்ட முடியாது? என் சித்தி மங்கையர் திலகம். அதனால் வானமும் அழுதது. கார் கண்ணாடியில் வழிந்தோடிய நீரைத் துடைக்க 'வைப்பர்' இருந்தது. கார் ஓட்டும்போது கண்களில் வழியும் நீரைத் துடைக்க 'வைப்பர்' இல்லையே, சித்தி ! தனிமையில் வரும் அழுகை மற்றவர்கள் முன் வரவில்லை. ஆண் அழக்கூடாது என இச்சமூகம் வரையறுத்த திமிரோ? உறவுகளை இழந்திருக்கிறேன். ஆனால் உன்னை இழந்தது என்னை ஏன் இவ்வளவு உலுக்குகிறது? என் மனதை அலசினேன். எல்லோராலும் விரும்பப்படும் ஆளுமை சிலரிடம் உண்டு. உன்னிடம் உண்டு ; என்னிடம் இல்லை. நான் வார்த்தையால், மனதால் கூட தீங்கிழைக்காத சிலர் என்னிடம் வெறுப்பினை உமிழ்வதை உணார்ந்திருக்கிறேன். அதைச் சரிசெய்ய மெனக்கிடுவதில்லை. எனக்கான அடையாளத்தை நான் ஏன் தொலைக்க வேண்டும்? நான் நானாக இயங்க, நான் உள்ளவாறு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் உன்னைப் போன்ற பலர் இவ்வுலகில் எனக்கான வலிமை. உன் மறைவு அந்த வலிமை சிறிது குறைந்ததற்கான குறியீடு. உன் இழப்பு என்னை உலுக்குவது அதனால்தான் என என் மனம் சொல்கிறது. என் இயல்புக்கு அவ்வளவாக ஒத்து வராத உறவுகளுக்கும் நீ நல்லவள்தான். நீ புறம் பேசுவதில்லை. மற்றவர்கள் புறம் பேசுவதையும் ஊக்குவிப்பதில்லை. இப்படி எல்லோருக்கும் நல்லவளாக இருந்த நீதானே எனக்குச் சிறந்த உறவாக அமைய முடியும் ! நீ இவ்வுலகிலேயே கடிந்து பேசுவது சித்தப்பாவிடம் மட்டும்தான் என்று உன்னைப் பற்றிய நெருடல் ஆரம்பத்தில் என்னிடம் இருந்தது. அது கணவன்-மனைவி உறவின் புரிதல் எனப் பின்னர் விளங்கியது. பொதுவாக கணவன்-மனைவிக்கிடையில் ஏற்படும் எரிச்சல் அவரவர் மனதோடு ஏற்படும் எரிச்சல் எனும் பக்குவம் வர நாளானது. அப்பக்குவம் ஏற்பட நீயும் காரணம் எனக் கொள்ளலாம். எல்லோரையும் விட உன் இழப்பினால் சுக்குநூறாய் உடைந்தவர் சித்தப்பாதான். அதுதான் இயற்கையும் கூட. மற்றவர்களிடம் இயல்பாகப் பேசி இத்துயரம் எனும் நிதர்சனத்திலிருந்து தப்பியோட மெனக்கிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வேறு வழி ? சக்கரம் சுழலத்தானே வேண்டும் ! மஞ்சள், பூ, குங்குமத்தோடு தீர்க்க சுமங்கலியாக உன்னை அனுப்பினோம். அன்பு, பரிவு, பாசம் எல்லாம் தந்த உனக்கு நாங்கள் செய்த கைம்மாறு உன்னைச் சுட்டுச் சாம்பலாக்கியதுதான். அந்தச் சிதையில் உன்னைச் சாம்பலாகப் பார்த்தபோது உன் முகம் மட்டுமா நினைவில் நிழலாடியது ? நான் அலுவலகத்திலிருந்து வர நேரமானால், உன் பேத்தியை (என் குழந்தையை), பள்ளிக்கூடத்திற்கு அருகில் வசித்த நீ, உன் வீட்டில் அழைத்து வந்து பாசத்துடன் கவனித்துக் கொள்வாயே ! இப்படி தனிப்பட்ட முறையிலும் நான் உன்னிடம் பட்ட கடன் கணக்கெல்லாம் நினைவில் வந்து போனது. திருமூலர் சொன்ன "நீரினில் மூழ்கி நினைப்பொழிதல்" உன் விடயத்தில் பொய்தான் சித்தி ! இத்துயரிலிருந்து வெளியே வருவது என்ற ஒன்றில்லை. உன் நினைவலைகளுடன் வாழ்ந்துதான் இத்துயரைத் தொலைக்க வேண்டும். "அப்படியென்ன அவசரம், சித்தி ?" என்று நான் கேட்பது உன்னிடமல்ல. நீ அவசரப்படவில்லை என்பது மருத்துவமனையில் நீ அன்றாட விடயங்களைச் சாதாரணமாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. உண்டு என நீ நம்பிய உன் இறைவனிடமோ அல்லது நான் நம்புகிற இயற்கை விதியிடமோ கேட்பதாய் வைத்துக் கொள்ளேன். அந்தப் பாழாய்ப் போன கடவுளை நம்பித் தொலைத்திருக்கலாமோ என நினைக்கிறேன். அப்படி நம்பியிருந்தால், 'உன்னை இறைவன் அழைத்துக் கொண்டான், என்னை அவன் அழைக்கும் போது உன்னை வந்து பார்ப்பேன்' எனும் நம்பிக்கையோடு ஆறுதல் அடைந்து வாழ்ந்து தொலைக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லையே ! என்னைப் பொறுத்தமட்டில் மரணம் என்பது கால்சியம் கார்பனேட், சோடியம் பாஸ்பேட் எல்லாம் எரிந்து சாம்பலாவதுதானே ! ஆனால் கடவுளை நம்பாதவனுக்கும் மகிழ்ச்சி, துயரம், பாசம் எனும் அத்தனை மனித உணர்வுகளும் உண்டே ! உள்ளத்தின் ஆழத்தில் உள்ள துயரத்தை கால்சியம் கார்பனேட் அழித்தொழிக்காதே ! கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்று நீ நம்பிய விடயங்களெல்லாம் நிஜத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த சொர்க்கத்தில் நீ மகிழ்ச்சியாய் இருந்து எங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சிறுபிள்ளையைப் போல் ஆசைப்படுகிறேன், சித்தி !
 15. சுப.சோமசுந்தரம்

  கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

  ஏற்கெனவே நவீனன் அவர்கள் பதிவு செய்துள்ளதை நான் கவனிக்கவில்லை . நன்றி.