நந்தி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  16
 • Joined

 • Last visited

Community Reputation

4 Neutral

About நந்தி

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling
 1. ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா.முதியவர்கள் இயலுமானவரை தனித்துப் பயணிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 2. நன்றி Vaasi. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
 3. மனமார்ந்த நன்றிகள் திரு தமிழ் சிறி.நீங்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.
 4. நன்றி,மிக்க நன்றி. திரு ஜீவன் சிவா.உங்கள் பின்னிணைப்புத் தளங்கள் மிகவும் பயனுள்ளவை.
 5. எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ? 1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ? 2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ? 3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவை ?
 6. உங்கள் கணவர்தான் ஓ கே சொல்லிட்டாரு, பிறகென்ன. ஆனால் ஒன்று எனக்கு விளங்கவில்லை.குடும்ப நலனுக்காக தொழிலையே தியாகம் செய்த நீங்கள் இவர்களின் கருத்துக்களில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையே.கருத்துச் சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம் எல்லாம் உள்ளதுதான்.இருப்பினும் சமுதாயக்கட்டுக்கோப்பு எனவும் ஒன்று இருந்து வருகிறது .இதனையும் கருத்தில் கொள்வது எதிர்காலத்தை வளம் படுத்த உதவும்.மனைவியின் நடவடிக்கைகள் கணவனுக்குப் பிடிக்காவிடினும் சில விடயங்களில் அவன் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டி த்தான்இருக்கிறது.இது காலத்தின் கோலம்,குடும்பத்தின் நிலைத்திருப்பிற்காக கணவன்மாரில் பலர் இன்றும் குறுடர்களாகத்தான் இருக்கிறார்கள். மாற்றம்தான் சகோதரி வாழ்க்கை.நேற்று மகள்,இன்று மனைவி,நாளை தாய்,மறுநாள் பாட்டி...நல்ல கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நம்மை நாம் மாற்றிக்கொள்வதில் நன்மைகள்தான் அதிகம்.இது எல்லோராலும் முடியாது ஏனெனில் இதுவும் ஒருவகையில் தியாகம்தான்.
 7. முடிவுக்கு வந்தால் சரிதான்.மகிழ்ச்சியாக உள்ளது.எங்கே தானாக முடிவடைய வேண்டிய மாகாண சபையின் ஆயுள்காலத்தை,முடித்து வைத்து விடுவார்களோ என கவலைப்படத் தோன்றியது.விரைவில் மாகாணசபைத்தேர்தல் வராவிட்டால் சரிதான்.
 8. நன்றி.அடியவனும் உங்களில் ஒருவன்.அனுபவத்தையும்,சூழலையும்வைத்துத்தானேதத்துவங்கள் அமையும்.எல்லாம் அவர்களிடம் இருந்து பெற்ற அனுபவங்கள்தான்.
 9. அவர்களிடம் ஆயுதம் இல்லாமலா இன்று இலங்கைச் சனத்தொகையில் இரண்டாம் இடத்துக்கு வரப்போகிறார்கள்.மரவள்ளிக்கிழங்கையும்,மாட்டிறைச்சியையும் சாப்பிட்டபடி "அந்த" ஆயுதப்பயன்பாட்டை மேற்கொள்ளுவது,வீறாப்பு வார்த்தைகளை வீசுவது, என்னவோர் அரசியல்.இதற்குள் தொட்டுக்கொள்ள ஊறுகாயாக தமிழர்கள்.பலே வெள்ளையத்தேவா.
 10. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்ததன் பயன் பிள்ளைகள்.இது தொடக்கநிலை.பிள்ளைகள் பிறந்ததன் பயன் கணவனும்மனைவியும் சேர்ந்தே வாழ வேண்டி இருப்பது. இது இறுதி நிலை. என்னே விதியின் விளையாட்டு. மேலும் கனடா நாட்டில் பிரிந்து வாழ முயற்சித்தால் பெண்களுக்கு சலுகைகள் அதிகம்.கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான் கணவனுக்கு.இதனால்தான் வெள்ளைகள் கட்டுறதே இல்லை "அவளைத் தொடுவானேன் .கவலைப் படுவானேன்".
 11. வணக்கம்

  நன்றி சகோதரி வல்வை சகாறா.அத்துடன் நன்றிகள் பலப்பல குமாரசாமி அண்ணன்.நான் நீண்ட நாட்களாக தங்களது கள ஆக்கங்களை ரசித்தவன்.இன்று நீங்கள் என்னை வரவேற்றமையையிட்டு மகிழ்ச்சியுற்றேன்.ஆமா அண்ணன் வீட்டில் கந்தசஷ்டி கவசம் இசைத்து ஒருவழிக்கு கொண்டு வந்திட்டார்கள் போல.வாழ்க.
 12. வணக்கம்

  வருவோரை வரவேற்கவும்,வாழ்த்துக் கூறவும் ஒரு மனப்பக்குவம் வேண்டுமல்லவா ?அதனை வெளிப்படுத்திய உறவுகள் திரு nunavilan,நிழலி மற்றும் ராசவன்னியன் ஆகியோருக்கு என் நன்றிகள்.ஆகா அபாரம் திரு ராசவன்னியன் எதுகை,மோனையுடன்வரவேற்பு பிரமாதம்.சும்மா அதறுதில்ல.
 13. நணபர் நவீனன் ! நல்லதொரு தலைப்பினை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.திருமணத்திற்கு முன்னர் நம்மவர் பலர் செய்கின்ற ஒரு செயல் பட்டியல் தயாரித்தல்.அதாவது எனக்குத் துணையாக வருபவர் இவற்றையெல்லாம் செய்யவேண்டும்.என்பதாக அது அமைந்திருக்கும்.அதில் எந்த இடத்திலும் நான் அவருக்காக இவற்றையெல்லாம் செய்வேன் என்பது இருக்கவே இருக்காது. திருமணத்தின் முன்" நீ ,நான்,உனது,எனது" என இருக்கின்ற நிலைமைகள் திருமணத்தின் பின்னர்" நாம்,நமது" என மாறி அமைகின்ற நிலையை உருவாக்கக் கூடிய கருத்துப்பரிமாற்றங்கள் அவசியமானவையாகும்.நன்றி.
 14. வணக்கம்

  சிந்தை கொண்ட எண்ணங்களெல்லாம், சிறப்புடன் புத்தாண்டில் கைவந்து சேர, எந்தை ஈசன் துணை புரிவார், எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நாரதர் வந்தால் கலகம்தான்.ஆனால் நாரதர் என்ற பெயரே எனக்கு கல(க்)கம். கள உறவு திரு விசுகு கூறியது போல் இந்தப்பெயரில் சக உறவு ஒருவர் ஏற்கனவே களத்தில் உள்ளார். எனவே நான் புனித யாழ்இணையத்தளத்தை தழுவி எனது பெயரை "நந்தி" என மாற்றியமைத்துக்கொள்கின்றேன்என்பதனை யாழ் ஜனநாயக சோசலிச உறவுகளுக்கு இதன் மூலம் அறியத்தருகின்றேன்..இந்த தவறினை இங்கிதமாக தெரியப்படுத்திய கருத்துக்கள நிர்வாகத்துக்குப் பொறுப்பான உறவு நியானி அவர்களுக்கும் எனது நன்றிகள். "வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்" நன்றி.
 15. வணக்கம்

  நன்றி நண்பர்களே. அதிலும் சகோதரி நிலாமதி.களஉறவுகள் suvy.தமிழ் சிறி ஆகியோருக்கு உள்ளத்தி்ல் ஊற்றெடுக்கும் நன்றிகள். சகோதரி நிலாமதி வாக்குமாறும் எண்ணம் எனக்கு இல்லை.இனி எல்லாம் அவ(ள்)ன் செயல்.