• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அருள்மொழிவர்மன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  25
 • Joined

 • Last visited

Community Reputation

23 Neutral

About அருள்மொழிவர்மன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday October 19

Contact Methods

 • Website URL
  http://entamilpayanam.blogspot.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  UAE
 • Interests
  தமிழ் வாசிப்பு

Recent Profile Visitors

 1. மனிதநேயம் பேசும் மகாத்மாக்கள் இங்கு அதிகம்! மதவெறியை பிரசவிக்கும் ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்! மக்களாட்சியைப் பேசும் மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்! க‌வர்ச்சி காட்டி பணமீட்டும் கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்! பெண்களைத் துர‌த்தும் நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்! அன்னையின் கருவறையில் நசுக்கப்படும் பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்! பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும் கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்! ஏழையின் செந்நீரை உறிஞ்சும் இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்! இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!!
 2. இயற்கையின் இனிமையைத் தொலைத்து‌ மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌ நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌ பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌ இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி‌ சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌ இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌ சுவரில்லா சித்திரமாய்‌‌ நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌
 3. அருள்மொழிவர்மன்

  கனவே கலையாதே

  கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
 4. அருள்மொழிவர்மன்

  மறுஇரவு முழுநிலவாகுமோ!

  இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
 5. அருள்மொழிவர்மன்

  ஆடைகளும் நிர்வாணங்களும்

  எது மாதிரியான ஆடை உடுத்துவது என்பது அவரவர் விருப்பம், அது செல்லும் இடங்களைப் பொருத்து அமையவேண்டும். என் பார்வையில் நாகரிகமான உடையணிவது என்பதே சரியானது, கல்வி நிலையம்/மருத்துவமனை/நீதிமன்றம் போன்ற பொதுவிடங்களில் மதம் அல்லது சமூக சார்ந்த அமலாக்கத்தைத் திணிப்பது தவறானது. இதில் இசுலாம், கிறித்துவம் அல்லது இந்து போன்ற மதம் சார்ந்த திணிப்புகள் அறவே கூடாது.
 6. அருள்மொழிவர்மன்

  கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

  @ சுப.சோமசுந்தரம், தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ! நண்பர் குறிப்பிட்டதுபோல் இனிவரும் நாட்களில் என் மனம் கவர்ந்த இலக்கியக் காட்சிகளையும் பாடல்களையும் யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாகவுள்ளேன். தங்களின் "நான் காணும் தொ.ப" எனும் பதிவை வாசித்து நிச்சயம் பின்னூட்டமளிக்கிறேன்.
 7. அருள்மொழிவர்மன்

  கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

  தோழி நிலாமதி அவர்களுக்கு வணக்கம். கவிதைப் பூங்காடு பகுதியில் கவிதைத் தொகுப்புகளும் பாடல் வரிகளுமே இடம்பெற்றுள்ளன. சங்கப்பாடல் பற்றிய பதிவுகள் இப்பகுதிக்குள் அமைப்பது உகந்ததாக இல்லையோ என்று தோன்றுகிறது. இத்தளத்திற்குப் புதியதாதலால் குழப்பமாகவுள்ளது ! நன்றி.
 8. மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும். குறுந்தொகைப் பாடல் எண் - 27 ஆசிரியர் - வெள்ளிவீதியார் திணை - பாலைத்திணை தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள். ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலென் மாமக் கவினே’’ கலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு தீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல் என்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன் பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல் அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்) மாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு பாடலின் பொருள்: நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள். “இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது. ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”. தள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
 9. அருள்மொழிவர்மன்

  நயகரா

  நயகரா..சிறப்பு. மிகவும் ரசித்தேன்.' " புன்னகை வெண்புகையோ பொன்னகை வானவில்லோ"...
 10. காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ்வொரு ஜன்மத்திலும் இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!”. காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது. காளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள். உதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்; “மழையின் முதல் துளிகள் அவளின் கண் இமைகளில் சிறிது தங்கின… பின் அவள் மார்பகங்களில் சிதறின… இறங்கி அவள் வயிற்று சதைமடிப்பு வரிகளில் தயங்கின… வேகுநேரத்திற்கு பின் அவள் நாபிச் சுழியில் கலந்தன…” இனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன். தொடரும்.. நன்றி, அருள்மொழிவர்மன் (www.entamilpayanam.blogspot.com)
 11. @ புங்கையூரன், தங்களின் மேற்குறிப்பிட்ட கருத்துடன் முற்றிலும் ஓத்துப்போகிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவள் மாறித் தான் ஆக வேண்டும்! அது தான் இயற்கை!
 12. அருள்மொழிவர்மன்

  யாழ் நண்பர்களுக்கு முதல் வணக்கம்

  அலுவலகத்தில் உள்ளேன் ஐயா (இங்கு ஐக்கிய அரபு நாட்டில் வார விடுமுறை வெள்ளி மற்றும் சனி !!).
 13. அருள்மொழிவர்மன்

  யாழ் நண்பர்களுக்கு முதல் வணக்கம்

  @புங்கையூரன், பெயர் விளக்கத்தைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ! ம்ம்ம்.. புனைப்பெயரில் சிறிது திருத்தம் செய்யலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது.
 14. அருள்மொழிவர்மன்

  கவி காளமேகம் - சிலேடை பாடல்கள்

  அருமையான பகிர்வு, இதுபோன்ற தனித்தத்துவமான பாடல்களைத் தொடர்ந்து பகிருங்கள் ! இத்தளத்தில் நுழைந்தபின் ஏதோ தமிழ் கற்கும் மாணவன் போல உணருகிறேன்.
 15. அருள்மொழிவர்மன்

  கவி காளமேகம் - சிலேடை பாடல்கள்

  சுவாரசியமான பகிர்வு, காளமேகப் புலவர் சரியான வித்தாரக்கவி என்பது இதனூடே புலனாகிறது.