Sakkaravarththi Jaffna

புதிய உறுப்பினர்கள்
 • Content count

  27
 • Joined

 • Last visited

Community Reputation

9 Neutral

About Sakkaravarththi Jaffna

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.tamilkingdom.com/2017/02/453_28.html
 2. எழுக தமிழ் நிகழ்வு 28.01.2017 இற்கு மாற்றம் ! கிழக்கில் பெரும் எழிர்ச்சியுடன் இடம்பெறவிருந்த எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் 28.01.2017 இற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்கழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18.01.2017 இல் திட்டமிடப்பட்டிருந்த எழுக தமிழின் வலுவை குறைக்கும் நோக்குடன் அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சம்பந்தர் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் பேரணியும் அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் திருகோணமலைமாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களால் எழுக தமிழ் நிகழ்வான அதே தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட அறிவிப்பு காரணமாகவும் இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே வடக்கில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஓரணியில் திரண்டமையால் மைத்திரி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அது பலத்த சங்கடத்தை உண்டுபண்ணியிருந்ததோடு மக்கள் மத்தியிலும் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்திருந்தது. இன்நிலையிலேயே கிழக்கிலும் இவ்வாறு பெருமெடுப்பில் விக்கினேஸ்வரன் தலைமையில் மக்கள் அணிதிரள்வதை எப்படியாவது தடுத்துவிட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பொறுப்பாக கிழக்கின் தமிழரசுக்கட்சியின் விவசாய அமைச்சர் தலைமையில் திட்டமிடப்பட்ட மாட்டுப்பொங்கலும் கல்வி அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்படும் பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே என கிழக்கிலுள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மாட்டுப்பொங்கல் நிகழ்வைக்கூட பொங்கலோடு நிறுத்தாமல் அதனை பேரணியாக முன்னெடுத்து தற்போதைய நிலையில் மைத்திரியின் நல்லாட்சி அரசு கோபம்கொள்ளும் முகமாக பேரணிகளை நடத்த வேண்டாம் என சம்பந்தர் அறிவிப்பதும், அந்த நாளை பாடசாலை நாளாக அறிவிப்பதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வதை தடுப்பதும் பெரும்பாலான பஸ்சேவைகள் பாடசாலை சேவைகளில் ஈடுபடுவதால் அந்த போக்குவரத்து சேவையை தடுப்பதும் தமிழரசுக்கட்சியின் நோக்கமாக இருப்பதால் இதனை ஏற்பாட்டாளர்கள் மாற்றியிருப்பதாக தமிழ் கிங்டொத்தின் கிழக்குமாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார். எழுக தமிழை குழுப்ப சம்பந்தன் தலைமையில் மாட்டுப்பொங்கல் எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள் அணி திரள்வதை குறைக்கும் நோக்குடனும் அந்த நிகழ்விற்கு இரு நாட்கள் முன்னதாக ஒரு நிகழ்வை பொங்கல் என்றபோர்வையில் மக்களை ஊர்வலமாக்க ஏற்பாடு நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுக தமிழ் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னர் ஓர் ஊர்வலத்தினை நடாத்தி தமிழ்மக்களின் தேவை மற்றும் அரசியல்விடயங்கள் சம்பந்தமாக தாம் மிகவும் சாதுரியமாக செயற்படுவதாகவும் சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு எல்லா விடயங்களையும் தாம் கையாள்வதாக மக்களுக்கு வழமையான அரசியல் உரையூடாக சொல்வதன் மூலம் அவர்களை நம்பவைத்து அடுத்தடுத்த தினங்களில் மக்கள் அணிதிரள்வதை குறைப்பதே இவர்களின் திட்டமெனவும் இதனால் அங்குள்ள இளைஞர்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அந்த பணிகளை முன்னெடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை குழப்புவதற்கு கடுமையாக உழைத்த உதயன் நிர்வாக இயக்குனரும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவனுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாண எழுக தமிழை குழப்புவதற்காக பத்திரிகை வாயிலாக பல பொய்யான செய்திகளை பரப்பியதோடு துளை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி மூலமாக அதே தினத்தில் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதும் அதனை ஏற்பாட்டாளர்கள் சாதுரியமாக கையாண்டு அவர்களை வேறிடத்தில் செய்யுமாறு அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னைய நாட்களில் வர்த்தகர் சங்கம் ஆதரவில்லை என்ற படுமோசமான பொய்யினையும் எழுக தமிழ் நிகழ்விற்கு பொலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தியும் பின்னர் எழுக தமிழ் அன்று இன்று புரட்டாதிச் சனி இன்று எள்ளெண்ணை எரிக்காவிட்டால் 5வாரங்கள் காத்திரிக்கவேண்டும் என்று தலைப்பு செய்தியையும் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியிருந்த சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளை மைத்திரியை அழைத்து வீட்டில் கொண்டாடும் அளவிற்கு அரச செல்வாக்குடையவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி உண்மையான செய்தி வேறு பத்திரிகையில் http://www.tamilkingdom.com/2017/01/a.html
 3. அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு விபரம் -நேரடி றிப்போட் கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் ஆட்டிப்படைத்த “ஆவா குழு“ தொடர்பான முக்கிய விடயங்கள் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மையிலேயே ஆவா குழு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது அதன் உறுப்பினர்கள் யார் யார் செயற்படுகின்றார்கள் என்ற விடயங்களை விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாகுழுவோ அல்லது இன்னொரு பிரிவாக செயற்படுவதாக சொல்லப்படும் சன்னாகுழு எனப்படுவதன் தோற்றம் மற்றும் அதனை தோற்றுவித்தன் நோக்கம் என்பன முன்னாள் யாழ்ப்பாண கட்டளை தளபதியாகவிருந்த மேஜர் ஜென்ரல் கத்துருசிங்கவுக்கும் அவருக்கு கீழே செயற்பட்ட புலனாய்வு அதிகாரிக்குமே தெரிந்த விடயங்கள். எவ்வாறு சிக்கினர் அப்பாவி இளைஞர்கள் இந்த ஆவா குழு எனப்படுவது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழனுக்காக குரல்கொடுக்கும் ஒரு அமைப்பாக சித்தரிப்பதாகவே மறைமுகமாக ஆரம்பமாகியது சமூக வலைத்தளங்களில் பதிவுகளையிட்டு பிரபலமாகியதிலிருந்து அதனை அவதானித்த அப்பாவி இளைஞர்களான குறிப்பாக 15 முதல் 25 வரையான இளைஞர்களே அவர்களின்பால் ஈர்க்கப்பட்டதாக அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது. இந்த விலைப்பின்னல் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். இதில் செயற்பட்டதாக சொல்லப்படும் இளைஞர்களின் சமூக வலைத்தள பதிவுகளை நோக்குபவர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அவர்களுடைய வெளிப்படையான பதிவுகளும் அதனை 400இற்கு அதிகமான இளைஞர்கள் வரவேற்று விருப்பங்களையும் தமது ஊக்குவிப்பு கருத்துக்களையும் இட்டிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு கூட்டத்திற்கோ அல்லது குறிப்பாக நடைபெற்றுமுடிவுற்ற எழுகதமிழ் பேரணிகூட அனைத்துகட்சிகளின் அழைப்பு மற்றும் பொது அமைப்புக்கள்,பல்கலைக்கழக சமூகம் என்பவற்றின் ஆதரவு இருந்த காரணத்தினாலேயே பெருமளவான மக்கள் அச்சமின்றி அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் எந்த பின்னணியும் செல்வாக்குமில்லாத குறித்த நான்கைந்து இளைஞர்களின் பதிவுகள் குறிப்பாக நடைபெற்று முடிவுற்ற சரஸ்வதி பூசைநிகழ்வைக்கூட ஒருவர் பெரிய வாழை இலைஒன்றில் அதில் பத்திற்கு மேற்பட்ட வாள்கள்,கத்தி,கோடரி போன்ற கூரிய ஆயுதங்களை வைத்து அத்துடன் பிரசாதம் வைத்து கொண்டாடியிருக்கின்றார் அதனையும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பார்வையிட்டும் ஊக்குவித்தும் இருக்கிறார்கள். சாதாரண ஒரு பொதுமகனால் இவ்வாறான ஒரு செயலை செய்யவோ அல்லது அதனை செய்து சமூக வலைத்தளத்தில் தன்னை இவர்தான் என அடையாளப்படுத்தி பிரசுரிக்கமுடிந்திருக்கிறது என்றால் நிச்சயமாக இதன் பின்னணி முக்கியமாக பாதுகாப்பு படையினரின் புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் கருத்துக்களையோ பதிவுகளையோ பார்த்தும் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்பு, இராணுவ அச்சுறுத்தல்கள் என விரக்தியுற்ற சில இளைஞர்கள் இவர்களின் உண்மையான பின்னணி தெரியாமல் இவர்கள்தான் தற்போது எமக்கு தேவையானவர்கள் இவர்களின் பாதை தான் இவற்றுக்கு தீர்வுதரும் என்று எண்ணி அவர்களின் பின்னால் சென்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. இதில் இன்னொரு முக்கியமான விடயம் கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் ஆவாகுழு தலைவர் கைது எனச்சொல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் அதற்கு 400வரையான இளைஞர்கள் கலந்துகொண்டதாகவும் அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கின்றது. கீழ்குறித்த படம்கூட அந்த இளைஞர் வட்டத்தில் ஒருவரின் பதிவில் காணப்படுகிறது. அண்மையில் கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் அரவிந்தன் என்ற நபர்கூட முன்னைய காலத்தில் இளைஞர்குழுக்களுடன் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவர் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் த.தே.மக்கள் முன்னணி சட்டத்தரணி ஒருவரின் உதவி நாடப்பட்டு அப்பாவி இளைஞர் என்ற காரணத்திற்காக அவரும் உதவியிருக்கின்றார். அதன்பின்னர் அந்த இளைஞனும் கடந்த தேர்தலுக்கு பின்னர் முன்னணியினரின் தேசியம் சார்ந்த செயற்பாடுகளுக்கு தனது நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இவ்வாறு மிகவும் விசுவாசமாக செயற்பட்டது அவர் நேர்மையாக செயற்படுவதாக நம்பி முன்னணி கட்சியினரும் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கின்றார்கள். அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வு ஒழுங்கமைப்பிலும் தீவிர விசுவாசியாக செயற்பட்ட அரவிந்தன் பல்வேறுபட்ட சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு இளைஞர் குழுக்களுடன் தொடர்பு இல்லை என்றும் அவர் 2015 தேர்தலுக்கு பின்னர் மிகச்கடுமையாக தேசியத்திற்காக பாடுபட்டதாக த.தே.முன்னணி ஊடக சந்திப்பில் அதன் தலைவர் தெரிவித்திருக்கின்றார். இவற்றை வைத்து பார்க்கும்போது இலங்கை புலனாய்வுத்துறையின் அனுசரணையோடு இயங்கிய ஆவா மற்றும் சின்னா தலமையிலான குழுவால் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் எழுகதமிழ் நிகழ்வு விடயங்களையும் மற்றும் இவர்களின் செயற்பாடுகளுக்கு முன்னாள் புலிகள் யாராவது வந்து ஒத்துழைப்பு வழங்குவார்களா மீள ஒன்றுணைய முற்படுகின்றார்களா என்பதையும் அவதானிக்கும் முகமாக இவர் உள்நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது அவரோடு செயற்பட்ட இளைஞர்களுக்கு கூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்றும் தெரியவருகின்றது. இது த.தே.மக்கள் முன்னணிக்குள் மட்டுமல்ல த.தே.கூட்டமைப்பில் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டுள்ளவர்களுடனும் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகிய அமைப்புக்களிடையேயும் இந்த ஆவாகுழு உறுப்பினர்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சம் ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவருவது கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இந்த ஆவாகுழு எனச்சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலருக்கு உண்மையிலேயே அந்த குழுவின் செயற்பாடு எப்படிப்பட்டது அது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களது பதிவுகளை ஆழமாக பார்க்கும்போது புரிகின்றது. இந்த கைது எப்படி இடம்பெற்றது? நாம் முன்னர் தெரிவித்ததுபோல அரச புலனாய்வால் உருவாக்கப்பட்ட அமைப்பை ஏன் அரசே கைதுசெய்ய வேண்டும் என்ற சாதாரண கேள்வி எழலாம் ஆனால் இதனை தோற்றுவித்தது மகிந்த ஆட்சிகாலத்திலுள்ள நிர்வாக கட்டமைப்பு. வடக்கில் வன்முறைகள் தலைதூக்கியபோது அவர்களை கைதுசெய்ய எந்த நடவடிக்கையையும் அரசு செய்யவில்லை இரு மாணவர்களின் கொலை அதன் பின்னரான இருபொலீசார்மீதான வாள்வெட்டு என்பவற்றின் பின்னர் அரசுக்கு இது பெரும் தலையிடியாக தோன்றவே அதன் உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித சேனாரத்தின இது கோத்தபாஜ காலத்தில் மகிந்த கத்துருசிங்கவால் குறிப்பாக வடக்கில் தேசியத்திற்காக குரல் கொடுப்பவர்களை கண்காணிப்பது. ராஜித இந்த கருத்தை கூறியும் அதற்கான நடவடிக்கை எதனையும் அரசு செய்யவில்லை காரணம் அரச புலனாய்வு கட்டமைப்பு யாழில் மாறவே இல்லை இதன்காரணமாகவே உடனடியாக மாற்றபட்டிருக்கிறார் புலனாய்வுப் பணிப்பாளர் இதன் அடிப்படையிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்று வருகின்றது.. உண்மையாக அரசின் நோக்கம் என்ன? மகிந்தவின் காலத்தில் முன்னாள் போராளிகளும், தமிழ் இளைஞர்களும் குறிப்பாக தெருச் சண்டியர்களும் புலனாய்வாளர்களின் முகவர்களாக மாற்றப்பட்டனர். முன்னாள் போராளிகள் பலர் மிரட்டியும் முகவர்களாக்கப்பட்டனர். அவ்வாறுதான் புலனாய்வு பிரிவுக்குள் தமிழ் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் சிலர் விரும்பியும் வேலை செய்தனர். மகிந்த ஆட்சியை விட்டு போவார் என யாரும் நம்பியிருக்கவில்லை. ஆனால் எல்லாம் தலைகீழ் ஆனாதும், புதிதாக இணைந்தவர்கள், புலனாய்வு துறைக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் என அனைத்தையும் என்ன செய்வது என்று பழைய புலனாய்வுக் கட்டமைப்பினருக்கு தெரியவில்லை. புதிய அரசாங்கம் பொறுப்பு ஏற்றவுடன் செய்த முதல் வேலை புலனாய்வுத் துறையை சீர்படுத்தியதுதான். பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு, தேசிய பாதுகாப்பு பிரிவு, நிதி குற்றவியல் பிரிவு என மூன்றாகப் பிரித்து இராணுவ தர அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அரசால் நியமிக்கப்பட்டவர்களை மட்டும் புலனாய்வுத்துறைக்குள் வைத்துக்கொண்டு மீதிப் பேரை வீட்டுக்கு அனுப்பியதுதான். மகிந்தவின் காலம்வரை நாட்டின் முழு அதிகாரமும் இராணுவததின் வசமும், புலனாய்வாளர்களின் வசமும் தான் இருந்தது. இந்த அரசாங்கம் அனைத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மூன்றாகப் பிரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவுக்குள் உள்ளீர்த்தது. இதில் சில பழைய புலனாய்வாளர்கள் தர அடிப்படையில் புலனாய்வாளர்கள் புலனாய்வு விசாரணை அதிகாரிகள் ஆனார்கள். பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆனார்கள். பொலிஸ்காரனின் பலம் ஓங்கியதும் மீளவும் பழைய புலனாய்வாளர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் மகிந்த காலத்தில் அனுபவித்த விடயங்கள் எதுவும் இப்போது இல்லை, எனவே அதிகம்பேர் மகிந்த விசுவாசியாகத்தான் தொழிற்பட்டனர். எனவே வடக்கில் எப்படியாவது குழப்பங்களை உண்டு பண்ணி, நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாட்டைபிரிக்கும் செயல் என தெற்கிற்கு காட்டி, மகிந்தவை மீளக்கொண்டுவர வேலைபார்த்தார்கள். அதன் ஒரு வேலைத்திட்டம்தான் ஆவா குழுக்கள் இதையெல்லாம் அறிந்துகொண்ட தற்போதைய அரசில் விசுவாசமுள்ள புலனாய்வு அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவே, பழைய தலைவரை மாற்றி, புதிய தலைவரை கொண்டு வந்ததும், அவர் வந்தவுடன் கைதுகள் ஆரம்பமாகியுள்ளது. கைதுகள் இடம்பெறுவதும் அதில் சம்பந்தப்பட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளே தள்ளுவதுமாக இல்லாமல் உண்மையாகவே இந்த இளைஞர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் பின்னணி என்ன அந்த வலையமைப்பின் தலைமைப்பீடம் யாரால் கையாளப்பட்டது என ஆராய்ந்து அந்த முடிவுகள் தமிழ்மக்களுக்கு தெரியப்படுத்தப்படுமா என்பது இலங்கை வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகவே இருக்கப்போகின்றது.
 4. புலிகளின் இனவழிப்பு நிகழ்வு- சம்பந்தன்,சுமந்திரன் தலைமையில் (காணொளி) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட புலிகள் இனவழிப்பு செய்தார்கள் என்றும் அதன் நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு வருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்குபற்றலோடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சம்பந்தன் தனது வழமையான புலியெதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு புலிகள் யாழிலிருந்து முஸ்லீம்களை மட்டும் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தமிழ் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்கள் என்று தனது பிரசங்கத்தை ஆற்றியிருந்ததோடு தீர்வு விடயத்தில் முஸ்லீம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனதுரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வல் தடைபோட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு தன்னால் வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களுக்கு சில முஸ்லிம் தலைவர்கள் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அவருக்கு அவ்வாறு யாரும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வடமாகாணத்தில் (வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளில்) சிறப்புடன் பணியாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். http://www.tamilkingdom.com/2016/10/a30_30.html
 5. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தது. காட்டுக்கூச்சல் போட்டுவிட்டு, ‘பிணத்தோடு நீதியையும் புதைத்துவிட்டு’ எல்லாவற்றையும் ஒரு சம்பவமாக கடந்துபோய்க்கொண்டிருக்கும் தமிழர் உணர்ச்சிப்பேச்சு அரசியல் சூழலில், இந்த மாணவர்களின் படுகொலைக்கு பின்னால் உள்ள துப்பாக்கிகளின் மனோநிலை, படுகொலைக்கு பின்னால் உள்ள அரசியல், படுகொலைகளின் மூலவேர், படுகொலைகளின் அரசியல், தொய்வும் சோர்வும் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட குணமும் – களமும், மாணவர்களை அரசியல் நீக்கம் செய்யும் பல்கலைக்கழக சமுகம் – அரசியல் தலைமைகள் – இலத்திரனியல் ஊடகங்கள், சம்பவங்களின் வீரியத்தை கூர்மைப்படுத்தி அதனை தக்கவைத்து அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர்த்த முடியாத தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனங்கள், வெறுப்பும் சலிப்பும் அடைந்துவரும் தமிழ் அரசியல் பங்கெடுப்பாளர்கள், இப்படி பலதரப்பட்ட விடயங்களையும் இந்த காணொளியில் ஆழமாக அலசி ஆராய்ந்து பேசுகின்றார்கள் ஆளுமைகள். http://www.tamilkingdom.com/2016/10/453_29.html
 6. ஆரம்பமானது எழுக தமிழ்

  இன்றைய எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அவர்களது சிறப்புரை காணொளி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி யாருக்கும் எதிரானதல்ல குறிப்பாக தமிழரசுக்கட்சிக்கு எதிரானது அல்ல என்றும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு? மற்றும் நாம் எதற்காக இந்த பேரணியை நடாத்துகின்றோம் என்றும் முதல்வர் விரிவாக உரையாற்றினார். முழுமையான எழுத்துவடிவம் பின்னர் இணைக்கப்படும். யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார். இதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள். http://www.tamilkingdom.com/2016/09/a24.html
 7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேட செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி என்ற என்னை நீங்கள் தூக்கிட்டு போகலாம் அனால் எனக்கு பின்னால் 8000 ஆயிரம் போராளிகள் உள்ளார்கள் அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள். <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1l9XqDxebzw" frameborder="0" allowfullscreen></iframe> சாதாரணமாக ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையே தீர்மானிக்கமுடியாத நிலையில்தார் இருக்கின்றீர்கள் ஓமந்தை என்றபோது தாண்டிக்குளம்மென்று பின்னர் மாங்குளமாக வந்திருக்கிறது. இதுபோல முன்னாள் போராளிகளை சோதனை செய்வதற்கு அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் அனுமதி பெற்றபோது அதன்பிறகு யாரோ தலையிட்டு அதனை தடுத்துவிட்டார்கள் இதற்குள் கன குளப்பங்களை நாம் காண்கின்றோம். எம்மை பரிசோதித்து முழுமையான ஒரு அறிக்கையை பெற்றாலேயே முன்னாள் போராளிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம். சாதாரணமாக ஒரு முன்னாள் போராளியை திருமணம் செய்வதற்குகூட சமூகத்திலுள்ளவர்கள் அஞ்சுமளவிற்கு நஞ்சு ஊசி விவகாரம் உள்ளது. என மிக முக்கியமான விடயங்களை பிரித்தானிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். http://www.tamilkingdom.com/2016/08/1218.html
 8. தமிழ்த் தலைமைகளும் றிஸ்க் எடுக்க வேண்டும்-நிலாந்தன் தமிழ் அரசியல் தலைமைகள் சிங்களத் தலைவர்களைப்போல தமிழ் மக்களின் உரிமைக்காக றிஸ்க் எடுக்குமாறு நிலாந்தன் கேட்டுக்கொண்டார். மன்னாரில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் , கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,கல்விமான்கள் மற்றும் மதத்தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார். இந்த கருத்துக்களும் காரசாரமான உரையாடல்களும் இடம்பெற்ற வேளை எதிர்க்கட்சி தலைவர் கண்மூடி கேட்டுக்கொண்டிருந்ததாக அங்கிருந்த தமிழ்க்கிண்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மைத்திரிபால சிங்கள மக்களுக்காக எவ்வாறு துணிச்சலாக சில முடிவுகளை எடுத்தாரோ அதே போல தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களின் உரிமைக்காக துணிச்சலுடன் செயலாற்ற வேண்டும் என்றும், தொடர்ந்தும் எமது பேரம்பேசும் வலு குறைவடைந்தே செல்கின்றது முக்கியமான உலக வரலாற்று ஆதாரங்களையும் இலங்கையின் நடைமுறை செயற்பாடுகளையும் மிகவும் வரிவாக விளக்கி அரைமணிநேர உரையினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்கள் பார்வைக்காக முழுமையாக இணைத்துள்ளோம். http://www.tamilkingdom.com/2016/07/47.html
 9. இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (காணொளி) ஜோதிட சாஸ்திரத்தின்படி 02.08.2016 இல் மாற்றமடையும் குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி என்பதை அறியத்தரும் நோக்குடன் கீழ்வரும் காணொளி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்கிங்டொம் இணையம் மகிழ்ச்சிகொள்கின்றது. குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் கிருஷ்ண பட்ச அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், காலை மணி 9.23க்கு கன்யா லக்னத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள், 11.8.2016 வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார். ஆக மொத்தத்தில் ஆனி போய் ஆடி வந்தால் சில ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும், சிலருக்கு லேசான பாதிப்பும் ஏற்படும். மனிதர்களின் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார் எப்ப கல்யாணம் நடக்கும் என்று ஜோதிடரிடம் கேட்டால் அடுத்த ஆண்டு வியாழ நோக்கம் வரும் போது திருமணம் முடிக்கலாம் என்று கூறுவார்கள். பொதுவாகவே ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாதபொழுது,அவரின் ராசியிலிருந்து குரு,2,5,7,9,11ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்கிறது. இதுவே குரு நோக்கமாகும். இன்னும் தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சாரப்படி குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. புத்திரம், அறிவு விருத்திக்கு குரு காரகன் ஆவார். ஆண் கோள். ஆகாயத் தத்துவக்கோள். இக்கோள் சூரியனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது. குரு பகவானுக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி வீடு. தனுசு ராசியில் மூலத்திரிகோண பலம் அடைகிறார். கடக ராசியில் பரம உச்சம் அடைகிறார். மகர ராசியில் பரம நீசம் அடைகிறார். ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் அவர் சஞ்சாரம் செய்கிறார். http://www.tamilkingdom.com/2016/07/48.html இவ்ஆண்டிற்கான பலன்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் உங்கள் பிறந்த திகதிக்கான பலன்கள்
 10. ஓமந்தையா? தாண்டிக்குளமா? -முதல்வருக்கெதிரான சம்பந்தனின் காய்நகர்த்தல் வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிர்மாணிப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்ற பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு வடக்கு மாகாண சபை எக்காலத்திலும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க கூடாது என்பதை உறுதி செய்துள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்துடையது என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏலவே கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவாக முன்வைத்திருந்தார். இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற முடிவை எடுப்பதற்காக மேற்குறித்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிடம் செல்கிறது. இந்த இடத்தில் தமிழ் மக்களிடம் - வடக்கு மாகாண சபையில் - மாகாண சபை உறுப்பினர்கள், வடபுலத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தரப்புகளுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று இரா.சம்பந்தர் நினைத்திருந்தால், ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்ற முடிவை எங்கள் மரியாதைக்குரிய வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே தீர்மானிப்பார். அவரின் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் கூறியிருந்தால் அதுகண்டு இலங்கை அரசும், இலங்கை மீது கவனஞ்செலுத்தும் உலக நாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையும் இராஜதந்திரமும் இன்னமும் சேதமடையாமல் உள்ளது என்று நினைத்திருப்பர். ஆனால் வடக்கு மாகாணசபையை குழப்ப வேண்டும்; அங்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கன்னைபிரிந்து கயிறு இழுக்க வேண்டும் என்று நினைத்ததன் காரணமாகவே, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்துவது என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்யை நடத்துவதென்பது எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்றுமை இன்மையையும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை செவிமடுக்காத தன்மை என்பதையுமே வெளிப்படுத்தும். அதேநேரம் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடக்கு மாகாணசபையில் ஒரு பொது உடன்பாட்டிற்கு எவரும் வரப்போவதில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை. ஆக, வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது என்று ஒருசாராரும் தாண்டிக்குளத்தில் நிர்மாணிப்பது என்று மறுசாராரும் கன்னைபிரிந்து வாதம் செய்வர். பெரும்பாலும் வடக்கின் முதலமைச்சர் செய்ய நினைப்பதை எப்பாடுபட்டும் எதிர்ப்பது என்ற முடிவில் மிகவும் உறுதியாக இருக்கக்கூடிய- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு என்றும் விசுவாசமாக செயற்படும் அன்பர்கள், தமிழ் மக்களின் நலன் என்பது பற்றி சிந்திப்பார்களா என்ற கேள்வியின் மத்தியில், இதன் முதல் கட்டமாகவே இந்த கூட்டத்திற்கு வருகைதந்திராத தமிழரசுக்கட்சி தலைவர் சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியிலிருந்து நோட்டம்விட்ட இத்தரப்புக்கள் முதல்வரின் செயற்பாட்டில் எவ்வாறான முட்டுக்கட்டையினை ஏற்படுத்தலாம் என்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து அதற்கெதிராக ஏற்கனவே சுமந்திரனால் களமிறக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை பலிக்கடாவாக்கி எதிர்காலத்தில் முதல்வர் எடுக்கும் எந்த திட்டத்திற்கும் வாக்கெடுப்பு என்ற முறையை கொண்டுவருவதன் ஊடாக முதல்வரை ஓரங்கட்டுவதற்கு குறித்த தரப்புக்கள் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அன்புக்குரிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களே! வடக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே! தமிழர்களுக்கு கிடைப்பது சரியான இடத்தில் அமைய வேண்டும். இங்கு அரசியல் என்பதை விடுத்து எம் இனம் என்று சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் சிந்தனை நிச்சயம் தமிழ் மக்களிடம் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தும். தொடர்புடைய காணொளிகள் http://www.tamilkingdom.com/2016/07/34_5.html
 11. பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்) எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சினையை சந்தித்து வந்திருந்தது. இந்த தடைகளையெல்லாம் தாண்டி பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் தமிழகத்தில் திரையிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் கௌதமன்,கவிஞர் காசியானந்தன், செந்தமிழன் சீமான், மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஈழ ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தொடர்புடைய முன்னைய பதிவுகள்
 12. தனி நாடாகிறது பிரித்தானியா-கமரோன் பதவி விலகிகின்றார்(காணொளி) ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) முழு பிரித்தானிய மக்களும் உற்சாகமாக வாக்களித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்த நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக 52 வீதமான மக்களும் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 48 வீதமான மக்களும் தமது வாக்குகளை அளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவளித்து பரப்புரை நிகழ்த்தி வந்த பிரித்தானிய UKIP கட்சி தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஜூன் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் சுதந்திரதினம் என்றே கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்குமானால் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பாரிய மாற்றங்களும் தாக்கங்களும் உணரப்படும் என பல்வேறு ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டு வந்தனர். இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன. இந்த முடிவுகளின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 பேர் வாக்களித்துள்ளனர். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 பேர் வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக வட அயர்லாந்து, லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர். வட அயர்லாந்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா, நீடிப்பதற்கு ஆதரவாக 55 தசம் 8 வீதமான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 40 ஆயிரத்து 437 ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 49 ஆயிரத்து 442 ஆக அமைந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை 44 தசம் 2 வீதமாக பதிவாகியுள்ளது. வட அயர்லாந்தில் 62 தசம் 9 வீதமான மக்கள் தமது வாக்குரிமையை இந்த சர்வஜென வாக்கெடுப்பில் பயன்படுத்தியுள்ளனர். இதேவேளை ஸ்கொட்லாந்தில் 16 இலட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அத்துடன் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 322 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 67 தசம் 2 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். எனினும் இங்கிலாந்தின் வட பிராந்தியம் மற்றும் வேல்ஸ்சிலுள்ள மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவளித்துள்ளனர். இங்கிலாந்தில் ஒரு கோடியே 51 இலட்சத்து 88 ஆயிரத்து 406 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என கோரி, தமது வாக்கை பதிவுசெய்துள்ளனர். இதேவேளை ஒரு கோடியே 32 இலட்சத்து 66 ஆயிரத்து 996 பேர் , ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இங்கிலாந்தில் அதிக வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதுடன், மொத்த வாக்காளர்களில் 73 வீதமான மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் வேல்ஸ்சில் எட்டு இலட்சத்து 54 ஆயிரத்து 572 பேர் பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாகவும், 7 இலட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவாகவும் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர். வேல்ஸ்சில் 71 தசம் 7 வீதமான மக்கள் சர்வஜென வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பிரித்தானிய மக்களின் விருப்பம் என்னவென்பது வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே பிரித்தானிய நாணயமான பவுண்களின் பெறுமதி பாரிய வீழச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீழ்ச்சியானது 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பவுணுக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilkingdom.com/2016/06/24_56.html தொடர்புடைய முன்னைய செய்தி வெளியேறுகிறது பிரிட்டன்; அடுத்த நகர்வு என்ன? ஒரு பார்வை
 13. “தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சர் இங்கு தனது உரையில் தெரிவித்திருப்பதாவது: “இன்று ஒரு இனிய நாள். பதினான்கு குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வில் அதிஸ்டம் அவர்களை அணைத்துக் கொள்ளும் நாள். அழகிய இந்த வீடுகள் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டிருக்கின்ற நாள். இந்த நல்ல கைங்கரியத்தில் இணைந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து கொண்டு ‘வறுமையை ஒழிப்போம் கல்வியைக் கொடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “உயர்த்தும் கரங்கள்” என்ற செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்றைய இந்த வீடுகள் அமைக்குந் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வறுமையை ஒழிப்போம் என்ற இச் செயற்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறுவது மட்டுமன்றி இப் பிரதேசத்தின் நலன் விரும்பிகளுக்கான உதவிகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கான உதவிகள், முதியோர் இல்லங்களுக்கான விசே~ உணவுகள், வெள்ள நிவாரணம் என இன்னோரன்ன பல பணிகளை இச் சனசமூக நிலையத்தினர் நிறைவேற்றி வருகின்றமை பாராட்டப்பட வேண்டியவை. இவ்வாறான சமூகப் பணிகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போன்று அமையும் இந்த 15 வீடுகள் அமைக்கின்ற பணிக்கு கோண்டாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் அவர்களே முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவ் அழகிய வீடுகளை உருவாக்கி இச் சனசமூக நிலையத் தெரிவினூடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவற்றை வழங்கியிருப்பது போற்றப்பட வேண்டியதொன்று. சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அறிகின்றேன். அதாவது ஒவ்வொரு வீடும் 23 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைத்துக் கொடுத்த பெரு வள்ளல் இராசையா குவேந்திரநாதன் அவர்கள் தொடர்பாக அறிய முற்பட்ட வேளையில் அவரின் அயரா உழைப்;பு, பரோபகார சிந்தை, தூர நோக்கு ஆகிய அவரின் பல நற்பண்புகள் எமக்குத் தெரிய வந்தன. முன்னேற்றகரமான திட்டங்கள் குவேந்திரநாதன் அவர்கள் இந்த வீட்டுத்திட்டம் மட்டுமல்ல இன்னும் பல முன்னேற்றகரமான பொதுப் பணிகளுக்கு உதவி வந்துள்ளார். கோண்டாவில் உப தபால் அலுவலகத்திற்கு சுமார் 60 இலட்சம் பெறுமதியான ஒரு அழகிய கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். யாழ் கோண்டாவில் ராமகிரு~;ண மகா வித்தியாலயத்திற்கு 120 இலட்சம் ரூபா செலவில் 4 பரப்புக் காணியையும் அதனுள் 2 மாடிகளைக் கொண்ட 4 வகுப்பறை கட்டடத்தையுந் தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் செய்துள்ளார். 100 இலட்சம் ரூபா செலவில் கோண்டாவில் சனசமூக நிலைய முன்பள்ளியை விருத்தி செய்யும் நோக்குடன் 2 ½ பரப்பு காணி, முன்பள்ளி, பகல் நேர குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறான பணிகளில் ஈடுபட்டிருப்பது எமக்கு மட்டுமல்ல வடபகுதியைச் சார்ந்த அனைத்து மக்களையும் மகிழ்வூட்டி வருகின்றன. இவ்வளவு தொகைப் பணத்தை எவ்வாறு செலவழிக்க முன்வந்தார் என அறிய வந்த போது கட்டடத் தொழிலில் ஒரு ஒப்பந்தக்காரராக, புதிய வீடுகளை அமைத்து விற்பனை செய்பவராகத் தமது தொழிலை ஆரம்பித்த குவேந்திரநாதன் மூன்று பிள்ளைகளின் தந்தையாராக இருப்பதையும் முதலாவது மகன் கொழும்பில் டாக்டராகவும், இரண்டாவது மகள் விவசாயப் பீட விரிவுரையாளராகவும், மூன்றாவது மகள் மக்கள் வங்கி உத்தியோகத்தராகவும் இருப்பது தெரியவந்தது. பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த பின்னர் இனி அவர்கள் பங்கிற்கு அவர்கள் உழைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்குடன் தனக்கு இப்போது கிடைக்கின்ற வருமானம் முழுவதையும் பொதுப் பணிகளுக்கு செலவிடுவதாக அவர் தீர்மானம் எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் பிள்ளைகளும் மனமுவந்து பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள். தந்தையாரின் அறப்பணிகளுக்குத் தாமும் இணைந்து பணியாற்றுவது மட்டுமன்றி புதிய புதிய அறப்பணிகளில் அவர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் குடும்பமே பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்வில் உரையாற்றும் போது ஆறு திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றைப் பற்றி அறிய நேர்ந்தது. அதில் அவர் யாழ்ப்பாணத்தவரும் சிங்கப்பூரில் வசித்தவருமாகிய எஸ்ரேட் கார்த்திகேசு அவர்களின் அறக்கொடை நிதியில் சுமார் 90 மில்லியன் ரூபா பணம் வடபகுதியில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தை விருத்தி செய்வதற்கும் நுண்கலைப் பீடத்தை விருத்தி செய்வதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இருந்து இதுவரை 25 ஆயிரம் ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவுந் தெரிவித்திருந்தார். முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை அதாவது நொந்து போன எம்மக்களைத் தாங்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பரோபகாரிகள் தயாராக இருக்கின்ற போதும் அவர்களின் பரோபகார சிந்தனைகள் தாராள மனப்பான்மைகள் ஆகியவற்றை நாம் முறையாக ஒழுங்கு செய்ய முடியாது முழுமையாகப் பயன்படுத்த முடியாது இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். கொடையாளர்களையும் வறுமையில் வாடும் எமது பயனாளிகளையும் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால்த்தான் இன்று பல பிரச்சனைகள் மத்தியிலும் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். கொடுக்கும் மனமுள்ளவர்களை மனங்கோணாமல் நாம் வாழ வழி அமைக்க வேண்டும். எங்கள் அன்பும் பாராட்டும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தயார் செய்யப்பட்ட நியதிச் சட்டம் நிறைவுறும் நிலையில் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் நிதி வழங்குபவர்கள் இந்த நிதியத்தினூடாகத் தாம் விரும்பியவாறு விரும்பிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆளுநர் குழாமொன்றே அந்நிதியத்தைப் பரிபாலிக்கும். உரிய கணக்காய்வு போன்றவை காலத்திற்குக் காலம் நடைபெறும். அரசாங்க அனுசரணையுடனேயே அதை வழிநடத்த எண்ணியுள்ளோம். இந்த புதிய வீடுகள் அமைத்து அதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளின் போது பயனாளிகள் தெரிவில் கோண்டாவில் பகுதியில் இருந்து 4 பயனாளிகளைத் தெரிவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்த அந்தப் பயனாளிகளில் ஓரிருவர் இந்த இடம் தூரம், வசதிகள் போதுமானதாக இல்லை என்ற காரணங்களைக் காட்டி ஏற்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு 23 இலட்சம் ரூபா சிலவேளைகளில் சில்லறைக்காசாக இருக்கலாம். ஆனால் 23 ரூபாவிற்கு வழியில்லாத பலர் வன்னிப் பகுதியில் ஒரு நேர உணவுக்கே வழியின்றி, இருக்க இடமின்றி, தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளிலும,; மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் ஆகிய எந்தவித வசதிகளும் இன்றி வாடுகின்றார்கள். சிலர் பல்வேறு பாதிப்புக்களுடன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை இழந்து, கண்பார்வையற்று தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம் மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். வன்னியில் தொடரும் அவலம் அன்பான கொடையாளர் குவேந்திரநாதன் அவர்களே! பல தேவைகளையுடைய மக்கள் வன்னிப் பகுதியில் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு இவ்வாறான அறக்கொடைகளை மேற்கொள்வதற்கு இன்னோர் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் அதனூடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 10 இலட்சம் மட்டும் என்ற கணக்கில் சிலருக்கு உதவி செய்ய முன்வாருங்கள். உண்மையான வறிய குடும்ப அங்கத்தவர்களை எமது உதவி வழங்கும் வங்கியில் இருந்து அவர்களின் விபரங்களை உங்களுக்கு தருகின்றோம். உங்கள் உதவிக் கரங்கள் வன்னி வரை நீளட்டும். அன்பான என் சகோதர சகோதரிகளே! வன்னியை வாழ வைக்குங் கடப்பாடு எங்களுக்குண்டு என்பதை மறவாதீர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு ஓடவே கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். எமது மக்கள் யாவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உத்தேசித்தால் நாம் ஏன் இத்தனை போராட்டங்களில் இறங்க வேண்டும்? பேசாமல் அரசாங்கம் செய்வதைச் செய்யட்டும் என்று விட்டு விடலாமே? வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள் அவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்று இந்த புதிய வீடுகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் இந்த வீடுகளை முறையாகப் பேணி பாதுகாப்பதுடன் அயலில் வாடும் மக்களுடன் நெருங்கிய உறவையும், புரிந்துணர்வையும் பேணிக் கொண்டு எந்தவித கருத்து வேறுபாடுகளோ அல்லது போட்டி பொறாமைகளோ இன்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கத்தக்க வகையில் உங்கள் வாழ்க்கை முறைமையை அமைத்துக் கொள்ள முன்வரவேண்டும். புதிய வீடு கிடைத்துவிட்டது தானே என வாழாதிருக்காது உங்களாலான முயற்சிகளையும் உடல் உழைப்புக்களையும் பொருள் தேடலுக்காகப் பயன்படுத்த வேண்டும். அதன்பின் உங்கள் உழைப்பைப் பாவித்து நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவ்வாறு உதவினால் உங்கள் மீதுள்ள பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கரைந்து போய் விடுவன. இவ்வாறான நடவடிக்கைகளால் சமூக மறுமலர்ச்சி ஏற்படுவது திண்ணம். அப்போது தான் இவ்வாறான கொடையாளர்கள் தமது இலட்சியம் நூறு வீத வெற்றி அடைந்துள்ளதெனக் கண்டு மனம் மகிழ்வார்கள். கொஸ்கம முகாம் வெடி விபத்து அண்மையில் கொஸ்கம சாலாவ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் அப்பாவி சிங்கள மக்களை கதிகலங்க வைத்தது. அது போன்ற எத்தனை வெடி விபத்துக்களைத் தமிழ் மக்கள் அனுபவித்து அல்லல்பட்டிருப்பார்கள் என்பதனை அனுபவ வாயிலாகவே இப்போது சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதற்காகச் சாதாரண சிங்கள மக்கள் தமது வருத்தங்களைத் தெரிவிக்கவும் பின்நிற்கவில்லை. நன்றாக வாழ்ந்த பல குடும்பங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து 27 வருடங்களாக அகதி முகாம்களில் தரித்து நிற்கின்றார்கள். தமது சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழக் கூடிய சூழ்நிலை எப்போது வரும், எப்போது வரும் எனக் காத்துத் தவம் கிடக்கின்றார்கள். இந்தக் காத்துக் கிடத்தலானது தெற்கின் மக்களைத் தற்பொழுது தாக்கியுள்ளது. எம் மக்களின் பரிதாபகரமான நிலை பற்றி எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பல மேடைகளில் சிங்கள மக்கள் முன்நிலையிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கான காலம் நெருங்கி வரவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இந்த ஈவினைப் பகுதி ஒரு காலத்தில் மஸ்கன் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலையைக் கொண்ட ஓர் இடமாக விளங்கியது. இங்கே மஸ்கன் நிறுவனத்தினால் நிறுவப்பட்டிருந்த கூரைத்தகடு தயாரிக்கப்படும் மிகப் பெரிய தொழிற்சாலை இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டு கொழும்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமது பகுதியைச் சேர்ந்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான தொழிற்சாலைகள்; பல மூடப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இதனால் நட்டமடைந்தவர்கள் எம்மக்களே. வீடுகளைக் கட்ட முன்வந்திருக்கும் எமது கொடையாளர்கள் தொழில் வாய்ப்புக்களை மக்களுக்கு உண்டாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் பின்னிற்கக் கூடாது. சிறிய சிறிய கைத்தொழில்களைச் செய்ய முன்வருவோர் ஆரம்ப முதலைப் பெற முடியாமல் வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சுழல் நிதியத்தை அமைத்து மக்களைக் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட வைக்கும் அதே நேரம் சிறிய வட்டியில் முதல் பெற்று சிறுகைத்தொழில்களில் அவர்களை ஈடுபடவைக்கலாம். எடுத்த கடனைத் திரும்பப் பெறும் வகையில் நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். அதனால் சுழல் நிதியம் தொடர்ந்து மக்களுக்கு உதவி பயக்கும். நம்மை நாமே பார்த்தக் கொள்ளும், பராமரிக்கும் காலம் வந்துள்ளது. சூழலை அறிந்து நாம் செயற்பட முன்வர வேண்டும். வடமாகாணம் தொடர்பான சதி சென்ற திங்கட் கிழமை மத்திய அமைச்சர் அவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல சவால்களை எதிர் கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு இரயிலில் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதுந் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சதி அம்பலமானது. வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காறும் பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார். நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர் பார்க்கவில்லை. அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் “வேறு விடயங்கள்” என்று தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுடீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது. நான் விளக்கமளிக்கையில் பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம். அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள். தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படுவன என்று கூறினார்கள். வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள். எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுதீன் தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார். இந்தப் பிரச்சினையைத் தொடக்கி விட்டவரே அவர் தான். இது பிரச்சினையாகியவுடன் பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தூரமாய்ப் போய்விட்டன. வவுனியா நகரத்தினுள் ஒரு இடந் தரவேண்டும் என்று கேட்டார். வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம். எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது. அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன். அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார். எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்டவாறு யு9 பாதையில் ஊவுடீ பஸ்நிலையத்திற்குப் பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட்டினேன். அது திரு.ரிஷாட் பதியுடீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார். மதவாச்சிக்கு கொண்டு செல்ல திட்டம் நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தர வேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன். முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன். மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டு போக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் திரு.ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார். தாண்டிக்குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார். அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. விவசாகக்கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன என்பதை உங்கள் கூட்டத்தை மையமாக வைத்து இங்கு வெளிப்படுத்துகின்றேன். இந்தச் சூழ்நிலையில் எமது கொடையாளர்களின் பரோபகாரம் உச்ச முக்கியத்துவத்தை அடைகின்றது. “எமக்கு நாமே” என்ற ஸ்லோகம் இவற்றினால் வலுவடைகின்றது. எனவே எமது மாகாண முதலீட்டாளர்களும், தொழில் உரிமையாளர்களும் கூடுதலான தொழில்வளங்களை இப் பகுதிகளில் உருவாக்க முன்வரவேண்டும். அதன்மூலம் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் வளங்களைப் பெற்று உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ளவேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன்.”
 14. இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்) வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை பரம்பல் விகிதம் கடந்த 1981ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றத்தினை 2012ஆம் ஆண்டு நிலை காட்டுகின்றது. 2007ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 220,117ஆக இருந்த மக்கள் தொகை 2012ஆம் ஆண்டில் 81,263ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் 195,386 ஆக இருந்த மக்கள் தொகை 111,210ஆக குறைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளுக்கும் 2012இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டிற்கும் பாரியளவிலான வித்தியாசத்தினை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இறுதிப்போரில் முழுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் இரண்டு இலட்சத்து இருபத்துமூவாயிரத்து முற்பது பொதுமக்களின் நிலை என்னவென்பது கேள்விக்குள்ளாகியுள்ளது? இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச இறப்புக்கள்,காணாமல் போனமை தவிர கிளி,முல்லை மாவட்டங்களில் மாத்திரம் 223,030 எண்ணிக்கையான மக்களுக்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நல்லாட்சி அரசோ அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள த.தே.கூட்டமைப்போ இதுவரை வாய்திறக்கவில்லை. ஐ.நா அறிக்கையின்படி நாற்பதாயிரம் என்றும் ஒரு இலட்சம் என்றும் சொல்லப்பட்டுவந்த தொகை தற்போது இரண்டு இலட்சத்திற்கு மேலாக காணப்படுகின்றது. 1981இலிருந்து 2012 வரை வடக்கு கிழக்கில் தமிழ்,சிங்கள இனங்களின் பரம்பல் விகிதமும் வாசகர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். http://www.tamilkingdom.com/2016/06/3_20.html
 15. வலம்வருகிறது இன்றைய மண்வாசம் -நயினாதீவு (காணொளி) சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது. பாகம் -1 பாகம் -2 முன்னைய மண்வாசம் காணொளிகள் தேவையானவற்றை கிளிக் செய்யவும் http://www.tamilkingdom.com/2016/01/58_1.html