Jump to content

இ.பு.ஞானப்பிரகாசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    30
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

இ.பு.ஞானப்பிரகாசன்'s Achievements

Contributor

Contributor (5/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

33

Reputation

  1. நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!
  2. கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன். மிகப் புதுமையான திரைப்படம்! ‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது! ‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம். அடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் சிவகார்த்திகேயன். தன்னைப் பாதிக்கும் சமுகச் சிக்கல்கள் எதையும் தட்டிக் கேட்காமல் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து வாழும் கோடிக்கணக்கான எளிய மக்களில் ஒருவன்தான் கதைநாயகன். அவனே இயற்கைக்கு மாறான ஓர் ஆற்றல் கிடைத்ததும் கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாய் மாறுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கடைசியில் ஒரு முழு மாவீரனாகச் சிறகடித்து எழ வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வேடத்துக்கு வார்த்தெடுத்தது போலப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். இவரைத் தவிர வேறு யார் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! உயிருக்கு அஞ்சி ஓடுவது, ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் துணிவது, எதிர்பாராத ஓர் ஆற்றல் கிடைத்ததும் அதைக் கையாளத் தெரியாமல் புலம்புவது, அதுவே தன்னைச் சிக்கல்களில் மாட்டிவிடும்பொழுது என்ன செய்வதெனத் தெரியாமல் மேலே பார்த்து விழி பிதுங்க நிற்பது எனக் காட்சிக் காட்சி சிவகார்த்திகேயன் ஆட்சி! குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் இன்னொருவரிடம் கேட்டுக் கேட்டுச் சண்டையிடுவது போல் வரும் இடங்களில் எதிரிகளை மட்டுமில்லை நடிப்பிலும் நொடிக்கு நொடி அடி பின்னுகிறார் மனிதர்! நாயகனுக்கு அடுத்தபடியாகத் தூள் கிளப்புபவர் யோகிபாபு! வழக்கம் போல் ஒன்றும் தெரியாத, அனைவராலும் ஏமாற்றப்படுகிற வேடம்தான். அதில் அவர் காட்டும் அமர்த்தலான (subtle) முகக்குறிப்புகளும் நறுக்குச் சுருக்கான உரையாடல்களும் கைகொட்டிச் சிரிக்க வைக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் சரிதா! சிவாசி கணேசனோடேயே மல்லுக்கட்டிய அற்புத நடிகை, அம்மா வேடத்தைச் சும்மா ஊதித் தள்ளியிருக்கிறார். ஏதாவது சிக்கல் வரும்பொழுதெல்லாம் "அவனுங்களை..." என்று கறுவியபடி கூந்தலை அள்ளி முடிந்து அவர் கிளம்புவது நம் சென்னைத் தாய்மார்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. கதைநாயகி என்றாலே அவர் நாயகனின் காதலியாகவோ மனைவியாகவோதான் இருக்க வேண்டும் என்பதைத் தமிழ்த் திரையுலகம் எப்பொழுதோ உடைத்தெறிந்து விட்டது. அவ்வகையில் இந்தப் படத்தைப் பொருத்த வரை சரிதாதான் நாயகி. நாயகனின் காதலியாக வரும் அதிதி சங்கருக்குப் பெரிய காட்சிகள் இல்லை. ஆனால் கொடுத்த காட்சிகளைச் சரியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். சி.கா-வுக்கு வேலை வாங்கித் தரும் இடத்திலும் சிறு சிறு முகச்சுழிப்புகளிலும் கவனிக்க வைக்கிறார். இவரை விட அதிகம் கவனிக்க வைப்பவர் தங்கை வேடத்தில் வரும் மோனிசா பிளெசி. Black Sheep வலைக்காட்சியில் நாம் பார்த்த இளம்பெண். வழக்கம் போலவே நன்றாக நடித்திருக்கிறார். ஆனானப்பட்ட நடிப்புச் சூறாவளி சரிதாவின் பக்கத்திலேயே எப்பொழுதும் நின்று கொண்டு தனித்துத் தெரியும் அளவுக்கு இவர் நடித்திருப்பதே இவருடைய திறமைக்குப் போதுமான அத்தாட்சி. படத்தின் எதிர்நாயகனாக (villain) எதிர்பாராத தோற்றத்தில் இயக்குநர் மிசுகின். அவர் உருவமும் தோரணையும் எமன் எனும் பெயருக்கு வெகு பொருத்தம்! ஆனால் நடிக்க இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். சீற்றம், அதிர்ச்சி, வியப்பு எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியாக அவர் முறைத்துக் கொண்டே இருப்பது கை கொடுக்கவில்லை. ஆனால் ஒரு கொலையைச் செய்துவிட்டுக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக சி.கா., முன் உட்கார்ந்து பேசும் காட்சியில் அசத்தி விடுகிறார். மிசுகினின் உதவியாளராக வந்து அவரையே தூக்கிச் சாப்பிடும் புதுமையான வேடத்தில் சுனில் என ஒரு தெலுங்கு நடிகர். அருமையாக நடித்திருக்கிறார்! கடைசிக் காட்சி வரை நடிப்பும் உடல்மொழியும் யார் இவர் என கூகுளிட வைக்கின்றன. ஆனால் படத்தின் இயல்பு கெடக்கூடாது என்பதற்காக நாயகன் உட்பட யாருக்கும் ஒப்பனை (make-up) செய்யாமல் விட்ட இயக்குநர், ஒப்பனைக்காரருக்குக் காசு கொடுக்க வேண்டுமே என்பதற்காக மொத்த வேலையையும் இவரிடமே காட்டச் சொன்னது போல் அவ்வளவு ஒப்பனை! ஓங்கிப் பேசும் காட்சிகளில் அவர் முகத்தில் இருக்கும் மாவு எங்கே உதிர்ந்து விடுமோ என நமக்கே கொஞ்சம் பதறுகிறது. கோழையை வீரனாக்கும் முக்கியமான பொறுப்பில் விசய் சேதுபதி. முகத்தைக் காட்டாமலே நடித்துக் கொடுத்திருக்கிறார். அது எப்படி? படம் பாருங்கள், புரியும். இவர்கள் தவிர வட்டார அரசியலாளன், பொறுக்கித்தனம் செய்யும் பொறியாளன், பக்கத்து வீட்டுத் தானி ஓட்டுநர் (auto man), எதிர்வீட்டுச் சிறுமி எனச் சிறு சிறு வேடங்களில் வருபவர்கள் கூட மனதில் நிற்கும் வண்ணம் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனை விடப் பெரிய நாயகன் படத்தின் கதைதான். அசத்தலான கற்பனை! இயக்குநர் நினைத்திருந்தால் இதை ஓர் அறிவியல் புனைவாக (Sci-Fi) எடுத்திருக்கலாம். ஆனால் துணிந்து ஒரு மாய இயல்பியப் படமாக எடுத்திருக்கிறார். அவரை விடத் துணிச்சல் இதைப் படமாக்க ஒப்புக் கொண்ட ஆக்குநருக்கு (producer)! கொஞ்சம் பிசகினாலும் சிறுவர் படம் போல் ஆகியிருக்கக்கூடிய கதையைத் துணிந்து படமாக்கியிருக்கிறார். ஒரு வணிகப் படத்தின் முக்கியத் தேவையே அடுத்து நடக்கப் போவது என்ன என்பதைப் பார்வையாளர் கணிக்க முடியாதபடி திரைக்கதை அமைப்பதுதான். ஆனால் இந்தப் படத்திலோ அடுத்தடுத்து நடக்கப் போகிற அத்தனையையும் முன்கூட்டியே சொல்லி விடுவதுதான் கதையே! ஆனாலும் அதையே நேர்மறையாகப் பயன்படுத்தித் திரைக்கதையைச் செதுக்கி எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியிலேயே படத்தின் வகைமை (genre) என்ன என்பதை மறைமுகமாக உணர்த்தி விடுகிறார்கள். கோட்டுச் சித்திரங்களில் நகரும் அந்தக் காட்சியின் முடிச்சு அவிழும்பொழுது இரண்டு காட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு ஓ போட வைக்கிறது! ஏழை மக்களுடைய பாதுகாப்பின்மையை உணர்த்த ஒரு குளியலறைக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் துளி கூட அருவருப்பு (vulgarity) இல்லாமல் அதைப் படமாக்கியிருக்கும் விதம் இயக்குநரின் திறமைக்கும் சமுகப் பொறுப்புணர்ச்சிக்கும் நல்ல சான்று! சேரி, அடுக்குமாடிக் குடியிருப்பு என வாழ்விடங்களை மையப்படுத்திய கதையில் எந்த இடத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் வடிவமைத்த கலை இயக்குநரின் உழைப்பும் திறமையும் பாராட்டப்பட வேண்டியவை. “வண்ணாரப்பேட்டையில” பாடலும் இசையும் முதல் முறை கேட்கும்பொழுதே பிடித்துப் போகின்றன. மற்றபடி பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு நான் ஒன்றும் கலைநுட்பம் அறிந்தவன் இல்லை என்பதால் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தப்பித்தீர்கள். இல்லையென்றால் கட்டுரை இன்னும் நீண்டிருக்கும். இவ்வளவும் இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களுக்கே உரிய சில குறைபாடுகளும் படத்தில் இல்லாமல் இல்லை. ஆளுங்கட்சி அமைச்சர் தாக்க வந்தால் பிழைக்க விரும்புபவன் உடனே ஓட வேண்டியது எதிர்க்கட்சிக் கூடாரத்துக்குத்தான். அது கூடத் தெரியாமல் நாயகன் கடைசி வரை தனக்குக் கிடைத்த அற்புத ஆற்றலை மட்டுமே நம்பிக் கையைப் பிசைந்து கொண்டு நிற்பது ஏற்கும்படி இல்லை. சரி, நாயகன்தான் ஒன்றும் தெரியாதவன் என்றால் ஒரு நாளிதழுக்கே துணையாசிரியராய் இருக்கும் நாயகிக்காவது அது தெரிய வேண்டாவா? ஊகூம்! நடக்கிற சிக்கலைத் தன் நாளிதழில் வெளியிட ஒரே ஒரு முறை முயன்று தோற்பதுடன் தேங்கி விடுகிறார். படத்தின் முன்பாதி முழுக்க எல்லாரிடமும் அடி வாங்கும் நாயகன் பின்பாதியில் வீரம் வந்ததும் எத்தனை பேர் வந்தாலும் அடித்துக் கொண்டேஏஏஏ இருக்கிறார். அதுவும் சி.கா., நம் வீட்டுப் பிள்ளையாகப் போய்விட்டாரா? ஒரு கட்டத்தில் "போதும்ப்பா, உடம்பு என்னாவது?" எனச் சொல்லலாம் போல நமக்கே கவலை தொற்றிக் கொள்கிறது. ஒரு காட்சியில் மருத்துவர் ஒருவரின் மொட்டைத் தலையில் மடோன் அசுவின் சொல்லி வைத்தாற்போல் மடேரெனக் கழன்று விழுகிறது ஒரு மின்விசிறி. ஆனால் அவர் ஏதோ மாங்காய் தலையில் விழுந்தது போல் தலையைத் தடவிக் கொண்டு போகிறார்! ஊழல் அமைச்சரின் வீட்டில் முன்னாள் அமைச்சரும் புகழ் பெற்ற நடிகருமான S.S.இராசேந்திரன் அவர்களின் படம் ஆளுயரத்துக்கு. இன்னொரு காட்சியில் பாதிக்கப்பட்டு நிற்கும் நாயகனின் வீட்டில் எம்ஞ்சியார் படம். இந்தக் குறியீடுகள் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெரிவித்தால் நலம். எதுவாக இருந்தாலும் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குள் சென்ற உலகின் முதல் நடிகர்” எனும் வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் S.S.R அவர்கள்; அப்பேர்ப்பட்டவர் படத்தை அவர் இறந்த பின் இப்படித் தவறாகப் பயன்படுத்தியது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. இப்படி ஆங்காங்கே பொத்தல்கள் இருந்தாலும் மொத்தத்தில் மிகச் சிறப்பான படம்! வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் இன்றைய மற்ற படங்களில் வருபவை போல் அவை கொடுமையான முறையில் படமாக்கப்படவில்லை. கவர்ச்சியான காட்சிகளும் இல்லை. எனவே குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கலாம். படம் அமேசான் பிரைமிலேயே இருக்கிறது. குறிப்பாக வீட்டில் பிள்ளைகளுடன் உட்கார்ந்து இந்தப் படத்தைப் பாருங்கள்! ஏனென்றால், நல்லவனை நாயகனாகக் காட்டும் படங்கள் இன்று அரிதாகி விட்டன. குடும்பத்துக்காக வாழ்வது, சமுகத்துக்காக உயிரைக் கொடுப்பது, சமுக அவலங்களைத் தட்டிக் கேட்பது போன்றவையெல்லாம் இப்பொழுது தேய்வழக்குகளாகி (cliche) விட்டன. "எது எப்படிப் போனால் உனக்கு என்ன? உன் வாழ்க்கையை நீ பார்த்துக் கொண்டு போ" என்பதையே திரைப்படம் முதல் பாடத்திட்டம் வரை வலியுறுத்தும் காலம் இது. திராவிடம், பொதுவுடைமை போன்ற சமுகநலன் சார்ந்த அரசியல் விழுமியங்களையெல்லாம் தன்னலனை மட்டுமே முன்னிறுத்தும் காவி அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வரும் காலக்கட்டத்தில் வாழ்கிறோம் நாம். இப்படிப்பட்ட சூழலில் "யார் எப்படிப் போனால் என்ன, நான் நன்றாக இருந்தால் போதும் என நினைப்பது வடிகட்டிய கோழைத்தனம்" எனச் செவிட்டில் அடித்துச் சொல்கிறது இந்தப் படம். அவ்வகையில் மண்டேலா போல் இதுவும் ஒரு நுட்பமான அரசியல் படமே! "யாரைக் கண்டும் அஞ்சாதே! உயிருக்கு அஞ்சி ஓடாதே! நீ எவ்வளவுதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் சமுக அவலங்கள் உன்னைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும். துணிந்து எதிர்த்து நில்! அதுதான் ஒரே தீர்வு" என்பதை நகைச்சுவை, சண்டைக்காட்சி போன்றவற்றைக் கலந்து சுவைபடச் சொல்கிறது. இப்படிப்பட்ட படத்தை நம் பிள்ளைகள் கட்டாயம் பார்க்க வேண்டும்! நம் பிள்ளைகள் கோழையாகவும் தன்னலக்காரர்களாகவும் இல்லாமல் கொஞ்சமாவது தன்மதிப்புடன் விளங்க இப்படிப்பட்ட ‘மாவீரன்’கள் கட்டாயம் தேவை. அவ்வகையில் இப்படி ஒரு படத்தை வழங்கியமைக்காக மாவீரன் குழுவினருக்கு நனி நன்றி! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி சாந்தி டாக்கீசு. - https://agasivapputhamizh.blogspot.com/2023/08/Maaveeran%20Review.html
  3. உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் உறவுகளே! இது இரண்டு மாதங்கள் முன்பு வெளியான மிக மிக மிக முக்கியமான கட்டுரை! வெறும் அரசியல் அலசல் இல்லை இது. தமிழினப் படுகொலை தொடர்பாகப் பன்னாட்டளவில் இடைவிடாது செயல்பட்டு வரும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள மிக முக்கியமான கடிதம்! புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த கோரிக்கை! படித்துப் பார்த்து இதில் உள்ள பரிந்துரையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுகிறேன்!🙏🏾 * * * * * மாலத் தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து… என்று கோட்டபாயவின் சுற்றுலா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. விசாவை நீட்டிக்க முடியாதென்று சிங்கப்பூர் கைவிரித்துவிட்டது. 90 நாள் சுற்றுலா விசா தான் தரமுடியும் - என்கிற நிபந்தனையுடன், வேண்டாத விருந்தாளியாகத்தான் உள்ளே விடுகிறது தாய்லாந்து. தாய்லாந்துக்குப் பிறகு, எங்கே போவது? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற நிலை. வேறு வழியில்லாததால் நவம்பரில் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்று உறுதியான தகவல். சப்ஸ்டியூட் ரணில் அதை விரும்பமாட்டார் என்று இன்னொரு தகவல். எது உண்மையென்று இன்னும் சில வாரங்களில் தெரியலாம். ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க மூலகாரணமாக இருந்த ஒருவர், பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற ஒருவர், இலங்கையின் போர்க் கதாநாயகன் என்று கூறிக்கொண்ட ஒருவர், சிங்கள மக்களால் தான் அதிபரானேன் - என்று தம்பட்டமடித்த ஒருவர், அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட பிறகு, ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல், திரிசங்கு நிலையில் கிடப்பதைப் பார்த்து, நாம் மகிழ்ச்சியடையவில்லை. நாம், இதையெல்லாம் சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிற கோழைகளும் இல்லை. கோதா கோ ஹோம் என்கிற முழக்கத்தையே நாம் ஏற்கவில்லை. தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கொடுங்குற்றவாளியை, பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறார்களே என்கிற வேதனையும் கவலையும்தான் வாட்டியது நம்மை! நமக்கிருக்கிற கவலைகளும் அச்சங்களும் குன்றாமல் குறையாமல் அப்படியே நீடிப்பதற்கு, குறைந்தது ஆயிரம் காரணமாவது சொல்லமுடியும். அவ்வளவு வலுவானது நமது குமுறல். எவ்வளவு காலம்தான் நாம் ஏமாற்றப்படுவோம் என்கிற குமுறல். இதை சிங்கள மக்களும் தலைவர்களும் புரிந்து கொள்ளவேயில்லையா, அல்லது புரியாததைப்போல நடிக்கிறார்களா - என்கிற கேள்வியைத்தான் எழுப்பியது கொழும்பில் நடந்த போராட்டம். 2015ல், ராஜபக்சக்கள் மீதான சர்வதேசத்தின் பிடி இறுகிய நிலையில், அதிபர் நாற்காலியில் அமர்ந்த மைத்திரிபால, புதிய அரசு, புதிய நிர்வாகம், நல்லிணக்கம்….. என்று சொல்லிச் சொல்லியே, இன அழிப்புக்கு சர்வதேச நீதி கிடைக்கிற வாய்ப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். ராஜபக்சக்களுக்கு வாய்தா வாங்குவது மட்டுமே, ஜெனிவாவில் அவரது வேலையாக இருந்தது. சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய விசாரணை - என்பதை ஜெனிவாவில் ஆதரித்துவிட்டு, கொழும்பில் நிராகரித்தது இலங்கை. ‘பார்த்தீர்களா பார்த்தீர்களா இலங்கையையே சம்மதிக்க வைத்துவிட்டோம்’ என்று ஜெனிவாவில் பீற்றிய தமிழ் ஏமாளிகள் முகத்தில் கரிபூசியது. சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றார் மைத்திரிபால. ராஜபக்சக்களை அவர் கையாண்ட விதமும், அவரை ராஜபக்சக்கள் கையாண்ட விதமும் ஜாடிக்கு மூடி சரிபோயிந்தி என்கிற லட்சணத்தில்தான் இருந்தது. இந்தத் தமிழ் ஏமாளிகளை எப்படிக் கையாண்டார்கள் என்பதுதான் தெரியவேயில்லை. ரணில் விஷயம் வேறு! இவர், மைத்திரிபால மாதிரி கிராமசேவகர் கிடையாது. ஜெயவர்தன போலவே, நரி. ‘நாடு திரும்ப உகந்த நேரம் வரவில்லை….’ என்று கோட்டபாயவுக்கே புளுத்துப்போன புளிசாத பார்சலை அனுப்ப முடிகிறது இவரால்! கோட்டாவின் ராணுவம் தன்னிடம் வாலாட்டினால், மேற்கு நாடுகளும் இந்தியாவும் உதவக் கூடும்… வெளியார் தயவில் பதவிக் காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற ரணிலின் நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். ரணிலின் நம்பிக்கையைத் தகர்க்கிறவிதத்தில், சர்வதேச அளவில் ஒரு துல்லியத் தாக்குதல் நடந்து முடிந்திருக்கிறது. அதை நடத்தியிருப்பவர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷேல் பச்லெட் அம்மையார். 2009ல் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில், 58 இலங்கை ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டுமென்கிற மிஷேலின் அறிவிப்பு, ரணிலுக்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால் தான் ராஜபக்சக்கள் மின்சார நாற்காலியிலிருந்து தப்பினர் - என்றெல்லாம் பேசி, ‘அவர்கள் போர்க்குற்றவாளிகள் தான்’ என்பதை உறுதிசெய்தவர் ரணில். இப்போது என்ன செய்யப் போகிறார்? மனித உரிமைகள் பேரவை சொல்வதை அவர் ஏற்க மறுத்தால், வெளிநாட்டு உதவிகளை நம்பி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிற ஒரு நாடு என்ன ஆகும்? எல்லா உதவிகளையும் பெற்றுத் தருவேன் - என்று பேசிக் கொண்டிருக்கிற அவரது நிலைதான் என்னவாகும்? மைத்திரிபாலா மாதிரி, செய்வேன் ஆனால் செய்யமாட்டேன் என்று நாடகமாடுகிற காலச்சூழல் ரணிலுக்கு இல்லை. ஒன்று, அவர்களைக் கைது செய்யவேண்டும், அல்லது கைது செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க வேண்டும். இரண்டில் ஒன்றைத்தான் அவரால் செய்ய முடியும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தமிழின அழிப்பின் சூத்திரதாரிகளைக் காப்பாற்றத் தலைகீழாய் நின்றவர்கள் தமிழர் தரப்பிலும் இல்லாமலில்லை. இந்த உண்மையைத் தப்பித்தவறிக் கூட நாம் மறந்துவிடக் கூடாது. . இலங்கை அரசியல் இப்படியெல்லாம் தலைகீழாக மாறுமென்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. தந்தை செல்வாவின் லட்சுமண ரேகை பற்றி கவலையேபடாமல், கொடியவர்களோடு கைகுலுக்கிக் கொடிவணக்கம் செய்தவர்கள் அவர்கள். ஸ்ரீலங்கா மாதோ நமோ நமோ என்று பாடியவர்கள். 58 பேரையும் கைது செய்தாக வேண்டுமென்று, அவர்களும் இப்போது குரல் கொடுத்தாக வேண்டும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தமிழீழ மண்ணில் அதற்கு வேறுமாதிரி மரியாதை தரப்படும். அது ஒன்றரை லட்சம் தமிழரின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் மண். குற்றவாளிகள், குற்றவாளிகளுக்குத் துணை நின்றவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் - என்று அத்தனைப்பேருக்கும் தப்பிக்கவே முடியாதபடி செக் வைத்திருக்கிறார் மிஷேல் பச்லெட். வேறொரு கோணத்தில் பார்த்தால், ரணிலுக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்பாகவும் இது மாறிவிடக் கூடும். அப்படியொரு வாய்ப்பு குறித்து ரணில் யோசிக்காமல் இருக்க மாட்டார். 58 அதிகாரிகளைக் கைது செய்யாவிட்டால் சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகலாம். அப்படியொரு நிலையில், 58 பேரையும் கைது செய் என்று ஒட்டுமொத்தத் தென்னிலங்கையும் முழங்கக் கூடும். 58 பேர் கைது செய்யப்படுவதன் மூலம், ரணிலுக்கு ராணுவத்தினரால் இருக்கிற ஆபத்தும் ஓரளவு குறையலாம். 58 பேர் கைதானால், கோட்டபாயவும் கைது செய்யப்படுகிற நிலை நிச்சயமாக உருவாகும். அப்படியொரு நிலையில், ரணில், அச்சமில்லாமல் பதவியில் தொடரலாம். என்றாலும், இந்த விஷயத்தில் ரணில் என்ன செய்வாரென்று இப்போது கணிக்க முடியவில்லை. “தண்ணீர் கொதிக்கும் வரை, பாத்திரத்துக்குள் இருக்கிற நண்டு நடனமாடிக் கொண்டுதான் இருக்கும்” - என்பது ஒரு சிங்களப் பழமொழி. அப்படித்தான் ஆடிக் கொண்டிருக்கிறார் ரணில். மழையைப் பார்த்துப் பயப்படுபவர்களெல்லாம் என் குடைக்குக் கீழே வந்துவிடுங்கள் - என்று ஊரிலிருக்கிற அத்தனைக் கட்சியையும் அழைத்துக் கொண்டிருக்கிறார். கையில் ஒரு ஓட்டைக் குடையை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் அழைப்பு விடுப்பது, அவருக்கு மட்டுமே சாத்தியம். இதெல்லாம் ஒரு பிழைப்பு - என்கிற விமர்சனத்தைக் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். இந்த லட்சணத்தில், கொள்கைப் பிரகடன உரை வேறு தேவைப்படுகிறது ரணிலுக்கு! இவரது பிரகடனமும், கோதபாயவின் பிரகடனத்தைப் போல், பௌத்த சாசனத்துக்கான முக்கியத்துவம் மற்றும் முதலிடம் குறித்து அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது. சிங்கள பௌத்த வெறி - என்கிற பொறியை வைத்துத்தான் ராஜபக்ச பரிவாரம் நாட்டைத் திவாலாக்கியது. கஜானாவைக் காலி செய்தது. நாக்கு வழிப்பதற்குக் கூட எதுவுமில்லை என்கிற நிலையை உருவாக்கியது. அதையேதான் பேசுகிறார் ரணிலும்! கோவிட் போய் ஒமிக்ரான் வந்ததைப் போல, கோதா போய் ரணில் வந்திருக்கிறார்… அவ்வளவுதான்! ரணிலின் பிரகடனம் முழுக்கவே கேலிக்கூத்துதான் என்றாலும், அதிலிருக்கிற குரூர நகைச்சுவை, ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் உறவுகள் உதவ வேன்டும்’ என்பது. கொழுப்பில் தோய்த்தெடுத்த இந்தத் தடித்த வார்த்தைகள், பௌத்த சிங்கள ஆதிக்கத் திமிரை உணர்த்துகின்றன. நாம் கொஞ்சம் அசந்தால், ‘வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை வேட்டையாடப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் உறவுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் துணை நிற்கவேண்டும்’ என்று கூட இந்த மனிதர் பேசக் கூடும். 2015ல் மைத்திரிபாலவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்ததும், அவரை முந்திக்கொண்டு, சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்ன பிரகஸ்பதி, இதே ரணில்தான்! அத்துடன் நில்லாமல், ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாமே விசாரித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று பொறுப்பேயில்லாமல் பேசியவர். அதிலிருந்து, அவர்களை அவர்களே விசாரித்தால் என்ன நடக்குமென்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ரணில் இப்போது பேசுவதிலும், எதுவும் புதிதல்ல! ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுதான்! எல்லாமே வெல்லப்பாகில் ஊறவைத்த பூச்சிமருந்து. . “புதிய இலங்கையை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், தங்கள் தாயகத்தின் புதல்வியாக / புதல்வராக இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் திகழவேண்டும்” என்பதெல்லாம் ரணிலின் நிரந்தர போதனைகள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தம் இடிக்கிறது. ராஜபக்சவின் ராணுவத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் யார்? அவர்கள் அதே தாயகத்தின் புதல்வர்களும் புதல்விகளும் கிடையாதா? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களா? சிங்கள ராணுவ மிருகங்களால் வயது வித்தியாசமில்லாமல் சீரழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளை மறந்துவிட்டு, அதைக்கொண்டாட பால்சோறு பொங்கிய சமூகத்துடன் இணைந்து புதிய நாட்டை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்கிறாரா? தமிழருக்கு அநீதி இழைத்த ராணுவத்தைக் கூண்டில் ஏற்றாமல், இலங்கையின் பேரினவாத வெறிக்கு முடிவுகட்ட முடியாது. அதுவரை இலங்கை புதிய இலங்கையாக மாற வாய்ப்பேயில்லை. இதை ரணிலும் ஏனைய சிங்களத் தலைவர்களும் உணர்ந்துகொள்ளாவிட்டால் அந்த நாடு திருந்த வாய்ப்பேயில்லை. தாயகத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், இந்த 58 பேர் கைது விவகாரம் ஓர் அரிய வாய்ப்புதான்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் - என்கிற எண்ணம் வலுத்துவருகிற தருணத்தில், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட, இதைக்காட்டிலும் அருமையான வாய்ப்பு கிடைத்துவிடப் போவதில்லை. சர்வதேசமும், உலகெங்கும் சிதறிக் கிடக்கிற லட்சக்கணக்கான தமிழ் மக்களும் தங்களை உன்னிப்பாகக் கவனிப்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர் பகுதிகள் அனைத்திலும், தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும், தமிழ்நாட்டிலும், இந்த 58 பேர் மீதான கைது நடவடிக்கையை வலியுறுத்தும் நிகழ்வுகள் அவசியம், அவசரம். இன்னும் ஒருபடி மேலே போய், ‘சர்வதேச விசாரணையை முறைப்படி அனுமதித்தால், பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவத் தயார்’ என்றுகூட புலம்பெயர் அமைப்புகள் அறிவிக்கலாம். ரணிலுக்கும் சிங்கள மக்களுக்கும் அது உறைக்கிறதா என்று பார்ப்போம். இந்த 58 என்பது வெறும் எண் அல்ல! குற்றவாளிகளின் எண்ணிக்கை. இது, இன அழிப்பில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளுக்கான வலை. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விரிக்கப்பட்டிருக்கிற இந்த வலை எவ்வளவு வலுவானது என்பதை காலம் உணர்த்தும். அதற்கு முன்பாக, தமிழினத்தின் ஒற்றுமையையும் வேதனையையும் வலியையும் ஒன்றுபட்டு நின்று சர்வதேசத்துக்கு நாம் உணர்த்தியாக வேண்டும். ஈழ மக்களை நேசிக்கும் அத்தனைப்பேரும் ஒற்றுமையுடன் இந்தக் களத்தில் இறங்குவது முக்கியம். . இதில் தனிப்பட்ட எவருக்கும் பெயர் கிடைத்துவிடப் போவதில்லை. எல்லாப் புகழும் மிஷேலுக்கே - என்பதால் அந்தப் பிரச்சினையே எழாது. இந்த விஷயத்தில் கூட நம்மால் ஒரே குரலில் பேச முடியாதென்றால், நாளைய தலைமுறையின் நக்கல் பார்வையிலிருந்து நாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. - புகழேந்தி தங்கராஜ் நன்றி: தாரகம்
  4. அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு! * * * * * மதிப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு நல்வணக்கம்! தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையில் பொதுமக்களான எங்கள் கருத்தையும் கேட்க முன்வந்தமைக்கு முதலில் என் இனிய நன்றி! நம் கல்விக் கொள்கையில் கட்டாயம் இடம்பெற்றாக வேண்டியதாக நான் கருதும் ஒன்றே ஒன்றை மட்டும் இக்கடிதத்தின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் தாய்மொழி வழிக் கல்வி! அறிஞர் பெருமக்களும் கல்வியியல் ஆய்வுகளும் “அறிவியலை நாம் தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும்” என்று கூறிய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளரான சர் சி.வி.ராமன் தொடங்கி “இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (ISRO) பணி புரியும் 90% அறிவியலாளர்கள் தாய்மொழியில் படித்தவர்களே! அதனால் குழந்தைகளைத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்” என்று கூறிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழக மேனாள் இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வரை அறிவியலாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மொழியியலாளர்கள், உளவியலாளர்கள் என அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்துவது தாய்மொழி வழிக் கல்வியையே! 1952ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மருத்துவர் இலட்சுமணசாமி தலைமையிலான ஆணையம், 1964இல் சவகர்லால் நேரு அவர்களால் அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையம், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த முத்துக்குமரன் ஆணையம் ஆகிய கல்வி ஆணையங்களின் ஆய்வு முடிவுகளும் தாய்மொழி வழிக் கல்வியையே பரிந்துரைத்திருக்கின்றன. உலக அளவில் பார்த்தாலும் ‘கற்பிக்கும் முறைகளில் சரியானது ஆங்கில வழிக் கல்வியா தாய்மொழி வழிக் கல்வியா?’ என்று கண்டறிவதற்காக அமெரிக்காவில் நடத்தப்பெற்ற ராமிரசு எட் அல் 1991 ஆய்வு¹, அதே நாட்டில் 32 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தாமசு அண்டு காலியர் ஆய்வு² போன்ற ஆய்வு முடிவுகள் அனைத்தும் தாய்மொழி வழிக் கல்விமுறையையே சரியான கல்வி முறை என உறுதி செய்கின்றன. அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகமும் (UNESCO) 1953ஆம் ஆண்டிலிருந்தே தொடக்கநிலைப் பள்ளிக் கல்வி தாய்மொழி வழியில் அமைவதைத்தான் ஊக்குவித்து வருகிறது³. ஆங்கில வழிக் கல்வியின் பாதிப்புகளும் தாய்மொழி வழிக் கல்வியின் நன்மைகளும் ஆங்கிலம் இன்றியமையாத் தேவைதான். அதை மறுக்கவே முடியாது. ஆனால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிள்ளைகளுக்கு நாம் அதை ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்க வேண்டுமே தவிர அதையே கற்பித்தலுக்கான ஊடக மொழியாக (medium of instruction) பயன்படுத்துவது தவறானது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. கனடாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சிறார் மற்றும் இளைஞர் நலப் பள்ளிப் பேராசிரியர் யெசிகா பால் அவர்கள், “தாய்மொழி வழியில் கல்வி பெறாத மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கல்வியின் தொடக்கநிலைகளில் தோல்வி அடைபவர்களாகவும் பள்ளிக் கல்வியிலிருந்து இடையிலேயே வெளியேறி விடுபவர்களாகவுமே இருக்கிறார்கள்” என்கிறார்⁴. தொடக்கநிலைக் கல்வியில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் தாய்மொழி வழிக் கல்வி அடிப்படையிலான பன்மொழிக் கல்வித்துறையில் தனது செயல்பாடுகளாலும் பன்னாட்டளவில் புகழ் பெற்றவரான இவரது கருத்து மிக முக்கியமானது! தமிழ்நாட்டில் கல்விச் சேவை முழுக்கவும் மாநில அரசின் கையில் இருந்த வரை அனைவரின் ஒரே சரியான தேர்வாக தாய்மொழி வழிக் கல்வியே இருந்து வந்தது. ஆனால் 90-களின் தொடக்கத்தில் மாநிலமெங்கும் புற்றீசல் போலப் பரவத் தொடங்கிய ஆங்கில வழிப் பள்ளிகளாலும் அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஏற்படத் தொடங்கிய பொருளாதார மேம்பாட்டாலும் மக்கள் ஆங்கில வழிப் பள்ளிகளை நாடத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே தெரியாத ஒரு தலைமுறை இன்று உருவாகியிருப்பதாகச் சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்திய மாணவர்களின் கற்றல்திறன் குறித்து நடத்தப்பெறும் கள ஆய்வுகளின் கல்விநிலை ஆண்டறிக்கை (Annual Status of Education Report-ASER) முடிவுகளிலும் பள்ளி மாணவர்களில் கணிசமானோரின் கற்றல்திறன் பின்தங்கியிருப்பதைப் பார்க்கும்பொழுது⁵ சமுக ஆர்வலர்களின் கவலை சரியானதே என்பதை உணரலாம். “குழந்தைகளை ஏன் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறீர்கள்?” என்று தமிழ்நாட்டில் எந்தத் தாயை / தந்தையைக் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே மறுமொழி “குழந்தைக்கு ஆங்கில அறிவு கிடைப்பதற்காக” என்பதாகத்தான் உள்ளது. ஆனால் கல்வியாளர்களோ “தாய்மொழி வழியில் படிக்கும் குழந்தையால்தான் இரண்டாவது மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்” என்கிறார்கள். அது மட்டுமில்லை, மாணவர்களின் ஒட்டுமொத்தக் கற்றல் அடைவுகள் (overall academic achievement) கணிதக் கற்றல் அடைவு இரண்டாம் மொழியைக் கற்பதில் எட்டப்படும் அடைவு தாய்மொழி சார்ந்த கூடுதல் மொழியியல் திறன்கள் கல்வி கற்றுக் கொள்வதிலான தன்னம்பிக்கை ஆகிய அனைத்திலும் தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குவதாக அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் நடத்திய ஆய்வு முடிவு உறுதி செய்கிறது⁶. முன்னேறிய நாடுகளும் முன்னேறும் நாடுகளும் பின்பற்றும் தாய்மொழி வழிக் கல்வி அறிஞர்களின் கருத்துக்கள், ஆய்வு முடிவுகள் எனக் கோட்பாட்டியல் (theoretical) அடிப்படையில் மட்டுமில்லாமல் நடைமுறை (practical) அடிப்படையில் பார்த்தாலும் தாய்மொழி வழிக் கல்வியே சரியானது என்பதைப் பிற நாடுகளின் போக்கிலிருந்து உணர முடிகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் தாய்மொழி வழிக் கல்வியையே தங்கள் மாணவர்களுக்கு அளித்து வருகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் விடுதலை பெற்ற நாடுகள் மட்டுமே தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கல்வி, நல்வாழ்வு, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என எந்தத் துறையிலும் முன்னேறாமல் இருப்பதையும், மறுபுறம் தாய்மொழி வழிக் கல்வி முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் அனைத்தும் பன்னாட்டளவில் அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கி நிற்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அதிலும் இரண்டாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்ட செருமனி, அணுக்குண்டுத் தாக்குதலால் நிலைகுலைந்த சப்பான், இரண்டு பதிற்றாண்டுகளுக்கு (Two Decades) முன்பு வரை கூட மூன்றாம் உலக நாடுகளின் தரநிலையிலேயே இருந்து வந்த சீனம் போன்ற நாடுகள் இன்று உலக அளவில் பெருவளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளிலெல்லாம் தாய்மொழி வழிக் கல்வி முறைதான் பின்பற்றப்படுகிறது என்பது ஒப்பு நோக்க வேண்டிய ஒன்று. தாய்மொழி வழிக் கல்வி - அறிவியல் சார்ந்த பார்வை கென்யாவில் உள்ள அமெரிக்கப் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் மொழியியல் பிரிவுப் பேராசிரியராக உள்ள ஏஞ்சலினா கியோகோ அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியின் இன்றியமையாமை பற்றிய தன் கட்டுரையில் “முதலில் கல்வி என்பது பள்ளியில் தொடங்குவதில்லை. அது மாணவர்களின் வீடுகளில் அவர்களின் தாய்மொழியிலேயே தொடங்குகிறது” என்கிறார்⁷. கல்வியளவில் மட்டுமில்லாமல் அறிவியல் அடிப்படையிலும் இது மிக மிக முக்கியமான ஒரு கூற்று! குழந்தைகள் தமது 3 வயதிலேயே 200 முதல் 1000 வரையிலான சொற்களைப் பேசத் தொடங்கி விடுவதாக மருத்துவயியலும் கூறுகிறது⁸. அதாவது ஒரு குழந்தை பள்ளியில் சேரும் முன்பே அன்றாடப் பேச்சுக்கான கணிசமான சொற்களைத் தன் தாய்மொழியில் கற்றுக் கொண்டு விடுகிறது. எனவே பள்ளியில் சேர்ந்த பின்பும் அதுவரை அந்தக் குழந்தை கற்றுக் கொண்ட அதே சொற்களை அடிப்படையாகக் கொண்ட கல்வியை நாம் முன்வைத்தால்தான் அந்தக் குழந்தை அதைப் புரிந்து கொண்டு படிக்க இயலும் என்பது வெளிப்படையான உண்மை. பள்ளியில் சேர்ந்த முதல் இரு ஆண்டுகள் மழலையர் வகுப்பில் ஆங்கிலச் சொற்களும் கற்பிக்கப்படுகின்றன என்றாலும் வீட்டின் பாதுகாப்புணர்வு நிறைந்த பின்புலத்தில் எந்தவிதப் புற அழுத்தமும் இல்லாத தன்னியல்பான போக்கில் கற்றுக் கொண்ட பல நூற்றுக்கணக்கான தாய்மொழிச் சொற்களுக்கு நிகராக இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குழந்தை அயல்மொழிச் சொற்களை எண்ணிக்கையிலோ தரத்திலோ அந்த அளவுக்குக் கற்றுக் கொண்டு விட முடியாது. மேலும் ஏற்கெனவே ஒரு மொழியில் ஏறக்குறைய ஆயிரம் சொற்கள் வரை கற்றுக் கொண்டு விட்ட ஒருவர் மேற்கொண்டு படிக்கக் கல்வியமைப்புக்குள் வரும்பொழுது அதுவரை அவர் கற்ற மொழியிலேயே கல்வியைத் தொடர்ந்து வழங்குவதுதான் இயல்பானது. மாறாக, புதிதாக ஒரு மொழியை அறிமுகப்படுத்தி, அந்தப் புதிய மொழியில் எல்லாப் பாடங்களையும் அவர் கற்க வேண்டும் என வற்புறுத்துவது எந்த வகையிலும் பொருளற்றது. ஆங்கிலம் என்பது இங்கு மிகச் சில மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் பள்ளி மூலமாகத்தான் அறிமுகமே ஆகிறது. மற்ற பாடங்களோடு ஆங்கிலத்தையும் புதிதாகக் கற்றுக் கொள்ளத்தான் ஒரு குழந்தை பள்ளியிலேயே சேர்க்கப்படுகிறது. அப்படிப் புதிதாக அறிமுகமாகும் அந்த மொழியிலேயே அவர்கள் எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது அடிப்படையிலேயே தவறானது! பிரெஞ்சு கற்பதற்காக ஆங்கிலேயர் ஒருவர் பிரான்சுக்குச் செல்கிறார் என வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக அங்கேயே அவர் தனது முதுநிலைப் பட்டப்படிப்பையும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டால் பிரெஞ்சு மொழியோடு சேர்த்துப் பட்டப்படிப்புக்கான பிற பாடங்களையும் முழுக்க முழுக்க பிரெஞ்சிலேயே அவர் கற்க நேரிடுவது எப்படிப்பட்டதாக அமையும் என்பதை நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். எந்த மொழியைப் புதிதாகக் கற்றுக் கொள்ள ஒருவர் ஒரு கல்வி நிலையத்தில் சேர்கிறாரோ அந்த மொழியிலேயே அவர் மற்ற பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய வன்முறை! ஆங்கில வழிக் கல்வி மூலம் கடந்த இரண்டு தலைமுறைகளாக அப்படி ஒரு வன்முறையைத்தான் நமது கல்விக்கூடங்கள் நம் பிள்ளைகள் மீது நடத்தி வருகின்றன என்பதை நீதியரசரான உங்கள் மேலான கவனத்துக்கு இங்கே கொண்டு வர விரும்புகிறேன்! தாய்மொழி வழிக் கல்வி எனும் உரிமை அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் (UNESCO) “தாய்மொழியில் கல்வி பெறுவது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமை” என்கிறது⁹. ஆனால் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த உரிமை சரிவரக் கிடைத்தபாடில்லை. இது தொடர்பாக அரசுகளைக் குற்றஞ்சாட்ட ஏதுமில்லை என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு ஆகிய இரண்டுமே தங்கள் பள்ளிக்கூடங்களில் தாய்மொழி வழிக் கல்விக்கு இடம் அளித்திருக்கின்றன; மாறாக, பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ப்பதால்தான் ஒரு குழந்தையின் தாய்மொழி வழிக் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது என்பது உண்மையே! ஆனாலும் குழந்தைகள் என்பவர்கள் தங்களுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள். அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதவர்கள். அரசு, நீதித்துறை ஆகியவைதாம் அவர்களுக்கான உரிமையை உறுதி செய்ய முடியும். ஆகவே தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் நீதியரசரான தங்கள் தலைமையில் வகுக்கப்படும் இந்தக் கல்விக் கொள்கை நம் குழந்தைகளின் தாய்மொழி வழிக் கல்வி உரிமையை நிலை நாட்டுவதாக அமைய வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் கருத்தையும் மதித்து இவ்வளவு நேரம் பொறுமையாகப் படித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி! உசாத்துணை: [1] Bilingual Education and English Immersion: The Ramírez Report in Theoretical Perspective [2] Validating the Power of Bilingual Schooling: Thirty-two Years of Large-scale, Longitudinal Research [3] The use of the vernacular languages in education. Monographs on Foundations of Education, No. 8. Paris: UNESCO [4] Children learn better in their mother tongue, Jessica Ball [5] Annual Status of Education Report flags poor learning outcomes in schools [6] Mother tongue matters: local language as a key to effective learning, UNESCO [7] Why schools should teach young learners in home language, Professor Angelina Kioko [8] Should I be concerned that my 2-year-old doesn't say many words and is hard to understand? [9] https://www.unesco.org/en/education/languages ❀ ❀ ❀ ❀ ❀ படம்: நன்றி Freepik. தொடர்புடைய பதிவுகள்: 📂 தாய்மொழி.
  5. சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளை வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளென அமைதிப் பேச்சுவார்த்தை அங்கீகரித்திருந்தது மட்டுமன்றி அந்தத் தீவில் வாழ்கின்ற அனைத்து மக்களுமே நீதியுடன் கூடிய அமைதியை அனுபவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் அது உருவாக்கியிருந்தது. அதற்குப் பதிலாக தமிழீழ ஆதரவாளர்களைக் குற்றவாளிகளாக்க யேர்மனிமுன்னெடுக்கின்ற செயற்பாடு, 2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தூண்டிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் இணைந்து மேற்கொண்ட அணுகுமுறைக்கு இட்டுச்சென்றது மட்டுமன்றி, இன்றும் சிறீலங்காவில் இனவழிப்பு தொடரப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. கடந்த 2022 ஏப்பிரல் மாதம் 27ம் திகதி டுசல்டோவில் (Düsseldorf) தொடங்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருள் இருவரான நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் ‘விடுதலைப் புலிகளுக்கு தாம் நிதி திரட்டியது குற்றம் அல்ல’ என்றும் அதே வேளையில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை எதிர்த்தும் வாதிடுகிறார்கள். அரசியல் அளவிலானதும் சட்டம் ஊடாகவும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கின்ற இவர்கள் உங்கள் ஆதரவை வேண்டிநிற்கிறார்கள். டுசல்டோவ்: நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜாவுக்கு எதிராக ஜேர்மானிய நீதிமன்றத்தில் 2022 ஏப்பிரல் மாதம் 27ம் தேதி வழக்குத் தொடங்கிய போது நீதிமன்றத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம். 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்த நிகழ்வுவானது யேர்மனி தனது கொள்கையில் சந்தித்த முக்கியமான தோல்வியாகும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஆதரவு அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக மீளப்பெறப்பட்டது. அது அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால்; இன்று சிறீலங்காவின் நிலைமை வேறாக அமைந்திருக்கும். பேச்சுவார்த்தை மூலம் அமைதியை அடையும் முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உறுதியான ஆதரவின் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்துடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை மேற்கொண்ட அழுத்தத்தின் காரணமாக தனது ஆதரவை மீளப்பெறுவதற்கு முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு முக்கியமானது. காரணம் என்னவென்றால் பேச்சுவார்த்தைக்கு முன்னர் யேர்மனி விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகவே சித்தரித்திருந்தது. அமைதிப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் பிரித்தானியர்களால் கட்டமைக்கப்பட்ட சிறீலங்கா அரசின் குரூரமான இன அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல பத்து ஆண்டுகளாகப் போராடி வந்த தமிழ் மக்களுக்குப் பாரம்பரியமாகச் சொந்தமாக இருந்த நிலங்களில் அண்ணளவாக 75 வீதமானவை விடுதலைப்புலிகளாலேயே நிர்வகிக்கப்பட்டுவந்தன. இருந்த போதிலும் மூலோபாய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீவில், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தமது இறைமையைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய ஒரு தீர்வை அமெரிக்கா அறவே விரும்பவில்லை. குறிப்பிட்ட இந்தப் பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்குமாக இருந்தால் இந்தத் தீவை இராணுவத்தளமாக அமெரிக்கா எவ்வகையிலும் பயன்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்படும். (அமெரிக்காவுக்கு சிறீலங்கா எவ்வகையில் மூலோபாய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பான ஊடகவியலாளர்சிவராமின் செவ்வியைப் பார்க்கவும்) அமைதிப் பேச்சுவார்த்தையைத் திட்டமிட்ட வகையில் தோல்வியுறச் செய்த அமெரிக்கா, 2006ம் ஆண்டு May மாதத்தில் தனது அழுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் வெற்றிகண்டதுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்தஆதரவும் மீளப்பெறப்பட்டது. (கீழுள்ள குறிப்பைப் பார்க்கவும்). முன்னர் எதிர்வுகூறப்பட்டது போன்று, விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையைத் தொடர்ந்து, அமைதி முயற்சியை முற்றுமுழுதாகக் கைவிட்ட சிறீலங்கா அரசு, விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தை அழித்தொழிக்கவும் அந்தத் தீவில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் மாண்புடன் வாழ்கின்ற வாய்ப்பை அழித்தொழிக்கவும் பன்னாட்டு அரசுகளின் உதவியுடன் ஆக்ரோசமான ஓர் போரை முன்னெடுத்தது. அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிராக இராசதந்திர அளவிலும், அரசியல் நிலைப்பாட்டிலும் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே பின்னர் தொடர்ந்து வந்த இனவழிப்பைத் தூண்டிய பெருங்குற்றமாகும். (இனவழிப்புக் குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வைப்பற்றி அறிவதற்கு சிறீலங்கா பற்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையைப் பார்வையிடவும்). விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக்கி, அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு யேர்மானிய நீதி அமைச்சுக்கு 2010 இல் யேர்மனி வழங்கிய அதிகாரம், யேர்மனி கடைப்பிடித்து வந்த கொள்கையில் மேலும் ஒரு தோல்வியாகும். 2006ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஓர் புதிய போரை சிறீலங்கா அரசு தொடுத்த பொழுது, அந்த மக்களுக்கு எதிரான கொடுமையான செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அதே வேளையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடும் இன்னும் ஆழமான நிலைக்குச் சென்றது. விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்குப் பணமோ அல்லது ஆயுதங்களோ சென்று சேர்வதைத் தடுப்பதற்கென அமெரிக்கா பல ‘தொடர்புக்குழுக்களை’ உருவாக்கியது (விக்கிலீக்சில் இவற்றைக் காணலாம்). இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற ஈழத்தமிழ் அகதிகள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற மேற்கு நாடுகள் பலவற்றில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிராகக் கைதுகளும் தீடீர்ச்சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது எவ்வாறிருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு யேர்மனி தனது ஆதரவை வழங்கிய போதிலும், ஈழத் ஆதரவாளர்களை இவ்வாறு யேர்மனி அப்போது கைதுசெய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை இயல்பாகவே அமுல் நடத்த வேண்டிய தேவை ஜேர்மனிக்கு இருக்கவில்லை. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளைப் பயங்வரவாதிகளாக யேர்மனி நோக்குகின்றது என்பது தொடர்பான எந்தவித சமிக்ஞையும் அவ்வேளையில் தென்படவில்லை . ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்குச் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னரே, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை தனது நாட்டுக்கு யேர்மனி அழைத்திருந்தது. போர் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், அமெரிக்காவைப் போலன்றி, சிறீலங்கா அரசுக்கு நிதியுதவி அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டுக்கு யேர்மனி தனது ஆதரவை வழங்கியிருந்தது. 2009 இல் விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்ட பிரதேசங்களில் படுகொலைகள் அதிகமாக இடம்பெற்ற போதும்மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த இனவழிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த போதும், பிரான்சில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்ட பொழுதும், யேர்மனிய அரசு அவற்றை எந்தவிதத்திலும் தடைசெய்யவில்லை (2009 ஏப்பிரலில் டுசல்டோவ் விமானநிலையத்துக்குச் செல்லும் பெருந்தெருவை மக்கள் இடைமறித்த போது). யேர்மனிய அரசின் கொள்கையில் 2010;ம் ஆண்டில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட நிகழ்வு முற்றுப்பெற்றுச் சில மாதங்களே ஆன சூழலில், சுதந்திரத்துக்கான தமிழ் மக்களின் நம்பிக்கை அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டு, தமது உறவுகள் கொடுமையாக கொல்லப்பட்டதனால் உளவியல் அளவில் தமிழ் மக்கள்மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கணப்பொழுதில், தனது நாட்டில் வசித்து வந்த ஈழ ஆதரவாளர்கள் மட்டில்திடீர்ச்சோதனைகளையும் கைதுகளையும் யேர்மனி மேற்கொண்டது. அப்போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது வழக்குகள் தொடுக்கப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்ததற்காக அவர்களுக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனைகளும் வழங்கப்பட்டன. அன்றிலிருந்து, இவ்வாறான வழக்குகள் யேர்மனியில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்காவின் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் உத்தியோகபூர்வமான தலைவராகப் பணியாற்றிய ஊல்வ் ஹென்றிக்சனின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதென தனது பொதுவான வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு,பிரஸ்ஸெல்சில் தேநீர் அருந்தும் இடங்களில் எடுக்கப்பட்ட மிகவும் உயர்மட்ட முடிவாகும். (சிறிலங்காவில் உள்ள பன்னாட்டுச் சமூகமும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் பல்வேறு தூதரகங்களும், ஐக்கிய நாடுகளும் புலிகளைத் தடைசெய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் சொன்னோம். ஆனால்.. அதற்கு மாறாக அனைத்தும் மிக விரைவாகவே நடைபெற்று முடிந்துவிட்டன. உங்களது இந்த முடிவுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்பது புலனாகிறது. இந்தத் தடையைக் கொண்டுவருவதற்கு அமெரிக்காவிடமிருந்தும் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும் அதிக அழுத்தங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது ஓர் நல்ல முடிவு அல்ல என்று எண்ணும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்) இவ்வாறு புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் ஐக்கியஇராச்சியமும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை தமக்கு வேண்டிய விதத்தில் கையாண்டிருக்கின்றன. யேர்மனிய சட்டம் இவ்வாறு கையாளப்பட்ட விதமும், 2010ம் ஆண்டில் யேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளும் சிறீலங்கா அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபோதுமே நடைபெற்றிருக்கவில்லை என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்ட அடைவுகள் என்று எதுவுமே இல்லை போன்றதுமான ஒரு திரிபை வரலாற்றில் ஏற்படுத்தியது. யேர்மனி முன்னெடுத்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் வரித்துக்கொண்ட தமது கொள்கைக்கு இணங்கிச் செல்வதாக அமைந்திருந்தது மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ள தாயகத்திலும் புலம்பதிந்து தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளிலும் உள்ள தமிழ்மக்கள் தூண்டப்பட்டனர். 2022 – தமிழீழச் செயற்பாட்டாளர்களான நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு எதிராக யேர்மனிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். 2009 இல் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினால் நம்பிக்கையிழந்திருக்கும் தமிழ் மக்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான ஓர் போர் தற்போது யேர்மனியில் முன்னெடுக்கப்படுவதாக உணர்கின்றனர். இவ்வாறான பின்புலத்தில், இவ்வாறான வழக்கு விசாரணைகளின் போது ஒரு குறைந்தபட்ச தண்டனையைப் பெற்றுக்கொள்வதற்காக சமரசத்துக்கு இணங்கும் படி இந்த ஆதரவாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஓர் திறந்த நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பாக தாம் ஒருநிலைப்பாட்டை எடுக்கும் பட்சத்தில் தாயகத்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வாழுகின்ற தமது உறவுகளுக்குத் தீங்கு நேரிடக்கூடும் என்றும் இந்த ஆதரவாளர்கள் அச்சமடைகின்றனர். இருப்பினும், ஏப்பிரல் 2009இல் தொடங்கப்பட்ட மிக அண்மைக்கால வழக்குகளில் நான்கு பிரதிவாதிகளில் இருவரான நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும இந்த சமரச நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விலகி, 2007-2009 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கென நிதியைச் சேகரித்தது ‘தண்டனைக்குரிய ஓர் குற்றம் அல்ல’ என வாதிடுகின்றனர். ‘விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ‘; எனக்குத்தப்படும் அநீதியான முத்திரைக்கு எதிராகப் போராட இவ்விருவரும் துணிந்துவிட்டனர். விடுதலைப்புலிகளை இவ்வாறாகப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முடிவு சட்டபூர்வமானது அல்ல என்றும், சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஊறு விளைவித்த ஒரு அரசியல் நோக்கங்கொண்ட ஒரு நடவடிக்கை இது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். இந்த இருவரும் விடுதலைப்புலிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது மட்டுமன்றி, அப்படிச்செய்வது விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை நியாயப்படுத்துவதாக அமையும் என்றும் கருதுகின்றனர். அதற்குப் பதிலாக விடுதலைப்புலிகள் ‘தமிழ் மக்களின் நியாயபூர்வமான ஒரு விடுதலை அமைப்பு’ என்பதையும் இவர்கள் இடித்துரைக்கின்றனர் . அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உதவிய போது, யேர்மனியும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்ப்பது தான் உண்மையான குற்றம் என இவர்கள் இருவரும் வாதிடுகின்றனர். அவ்வாறு புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பது தமது இனவழிப்புக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசுக்குக் காட்டும் பச்சைக்கொடி என்றே இவர்கள் அதனை நோக்குகின்றனர். பேர்லின்: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் 2004 ஒக்ரோபரில் சந்திக்கும் நிகழ்வு (விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், அரச செயலர், பொருண்மிய ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஜேர்மன் சமஷ்டி அமைச்சு, திரு.எரிக் ஸ்ராதர் மற்றும் அரச அமைச்சர். (2007 நவம்பரில் சிறிலங்கா அரசால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்). நாதன் தம்பியும் ஆனந்தராஜாவும் எடுத்திருக்கும் இந்தக் கொள்கை நிலைப்பாடு, தமிழ் மக்களை இனவழிப்புச் செய்வதற்கு சிறீலங்கா அரசைத் தூண்டுகின்ற சட்டபூர்வமான மற்றும் அரசியல் அடிப்படையிலான அடித்தளத்தைக் கொடுக்கின்றதெனக்கூறி, விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையும், அதே போல புலிகளுக்குப் பயங்கரவாத முத்திரையைக் குத்துகின்ற யேர்மானிய நீதிக்கட்டமைப்பின் செயற்பாடும் 2006ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போரை நியாயப்படுத்தி வருகின்றன. 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை மட்டுமல்ல, மிக மோசமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித காரணமும் இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, பாலியல்வன்புணர்வு, போன்றவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவமயமாக்கல், சிங்களக்குடியேற்றத்திட்டங்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்களில் நடைபெறும் நில அபகரிப்புகள், தமது வரலாற்றை நினைவுகூர்வதற்கான ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுதல் போன்றவற்றையும் யேர்மனிய அரசு இதனூடாக நியாயப்படுத்தி வருகிறது. இனவழிப்புக்கெதிராகப் போராடிய வேளையில் வீரச்சாவடைந்தவர்கள் , மற்றும் சிறீலங்கா அரச படைகளினால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்தல் போன்றவற்றையும் நியாயப்படுத்திவருகின்றன. இவ்வாறான வன்முறைகளைத் தொடர்வதற்கான பச்சைக்கொடியைக் காட்டுவதற்குப் பதிலாக கடந்த காலத்திலும், இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதிகளுக்குக் காரணமாக இருக்கின்ற அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும் யேர்மனி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். ஓர் அரசியல் நோக்கத்துக்கு ஏற்றவாறு சட்டத்தைத் தாம் விரும்பிய வகையில் பயன்படுத்துதல் உண்மையில் குற்றமாகும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான திடீர்ச்சோதனைகளும் கைதுகளும் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி முன்னெடுக்கப்பட்டன. (இக்கைதுகளுக்கான பிடியாணைகள் 2009 டிசம்பர் மாதம் 16ம் திகதி வழங்கப்பட்டன ). இவ்வாறாகக் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக முதலில் யேர்மனியில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக யேர்மானிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் அமைப்பை யேர்மனியைப் பொறுத்த வரையில் ஒரு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பாக பட்டியற் படுத்த முடியாது என்ற காரணத்தால்அவ்வாறு குற்றஞ்சுமத்துதல் சட்டபூர்வமானது அல்ல என நிரூபிக்கப்பட்டது . கைதுசெய்யப்பட்டவர்களை சிறையில் தொடர்ந்து வைத்திருக்க சட்டக்கோவையின் வேறு ஒரு பகுதியைப் பயன்படுத்தி அவர்கள் மீதுகுற்றஞ்சுமத்தும் முடிவு அவசரஅவசரமாக எடுக்கப்பட்டது. 2010ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14ம் திகதி இவ்விடயத்தில் ஒரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் யேர்மானிய சமஷ்டி நீதி அமைச்சு வழக்கைத் தொடு;க்க வேண்டும் அன்றேல் பிரதிவாதிகள் ஒரு கிழமைக்குள் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும் இவ்வாறான வழக்குகளைத் தொடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும் சட்டங்களைப் பொறுத்தவரையில் நியாயபூர்வமான விடுதலை அமைப்புகளின் ஆதரவாளர்களைப் பாதுகாப்பது அவற்றின் நோக்கங்களில்ஒன்றாக இருந்தது (பகுதி 129D சட்டம் ). ‘மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனரா இல்லையா’ என்பதை மதிப்பீடு செய்யவும் வழக்குத்தொடர்பான அனைத்துப் பின்புலங்களையும் நீதி அமைச்சு ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறீலங்கா அரசால் நீண்ட காலமாக இழைக்கப்பட்டு வரும் குற்றங்களைப் பார்க்கும் போதும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைப் பார்க்கும் போதும் ; சட்டத்தின் இந்த சரத்தில் குறிப்பிட்டவாறு தமிழீழ விடுதலைப்புலிகள் மனித உரிமைகளை மதித்த அரசுக்கு எதிராக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகும். மேலும்; 2009ம்ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பான முடிவு 2010ம் ஆண்டே எடுக்கப்பட்டது. அவ்வாறாயின் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) போன்ற அமைப்புகளுக்கு நிதிவழங்குவதும் யேர்மனியில் ஒரு சந்திப்புக்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்ததையும் பார்க்கும் போது, ‘யேர்மனி ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவை வழங்கியதா?’ என்ற கேள்வி எழுகின்றது. கிளிநொச்சி: இடப்பெயர்ந்த 110க்கு அதிகமான குடும்பங்களுக்காகக் கட்டப்பட்ட வீட்டுத்திட்டத்தின் திறப்பு விழா (2005 ஜூன் 30). ஜேர்மானியத் தொழில்நுட்பச் சங்கத்தின் (புவுணு) ஊடாக ஜேர்மானிய அரசினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் (வுசுழு) இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகளுக்கான சட்டபூர்வமான நியாயத்தன்மை பற்றி யேர்மானிய நீதியமைச்சின் முடிவுகள் தொடர்ந்தும் மறைவாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும், யேர்மனி மீதும் ஐரோப்பிய ஒன்றியம் மீதும் பிரயோகித்த அரசியல் அளவிலான அழுத்தமே, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம்தடைவிதிப்பதற்குக் காரணமானது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது என்ற போதிலும், 2009ம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட இந்த அழுத்தங்கள் எவ்வாறு தொடர்கின்றன என்னும் விடயம் இன்னும் மறைவாகவே இருக்கின்றது. தாம் வழங்குகின்ற சாட்சியம், யேர்மனிக்கும் ஏனைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவைப் பாதிக்கும் என்று கூறி, வெளிநாட்டு அமைச்சைச் சார்ந்த இரண்டு அதிகாரிகள் சாட்சியம் வழங்க முன்வந்த போதும் வெளிநாட்டு அமைச்சினால் அவர்கள் தடுக்கப்பட்ட போதும், இவ்வாறான வழக்குகளுக்குப் பின்னால் எவ்வாறான அரசியல் சக்திகள் செயற்படுகின்றன என்பது ஓரளவுக்கு வெளிப்பட்டது. (2018ம் ஆண்டில் இவ்வாறான வழக்குகள் சுவிற்சர்லாந்தில் தொடுக்கப்பட்டபோது, பிரித்தானிய புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் தொடர்பான செய்திகள் அப்போது வெளிவந்தன). தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் உள்ள நியாயத்தன்மை தொடர்பாக 2010ம் ஆண்டில் சமஷ்டி நீதி அமைச்சு எடுத்த முடிவுகளை முழுமையாக வெளியிடும்படி நாதன் தம்பியின் 2022ம் ஆண்டு வழக்கில் சமூகமளித்த சட்டத்தரணி வேண்டுகோளை முன்வைத்த போது அந்த வேண்டுகோளுக்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. நீதி அமைச்சு வழங்கிய அனுமதியின் செல்லுபடித்தன்மையை ஆய்வுசெய்வது இதனால் இயலாததாகின்றது . இந்த வழக்குத் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அவ்வாறு அனுமதி வழங்கியது தவறு என்று கூறும் அதிகாரம் சமஷ்டி அமைச்சுக்கு நிச்சயமாக இருக்கிறது. உலகத்தமிழ் உறவுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொள்ளுதல் 2010ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வழக்குகளைத் தொடரமுடியும் என்பதற்கு நீதி அமைச்சு கூறிய காரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த அமைச்சு மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுங்கள் என்று தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் மேலே முன்வைத்த காரணங்களுக்கு அமைவாக வழங்கப்பட்ட அனுமதி தவறானது என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு யேர்மனிய நீதி அமைச்சையும் நாங்கள் கோருகின்றோம் . இந்த வழக்குத் தொடர்பான இறுதித்தீர்ப்பு வழங்கப்பட முன்னர் அதாவது ஒரு மாதத்துக்குள் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போது தான் அவை சட்டபூர்வமானவையாக அமையும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை தொடர்பான செய்திகளை எமக்கு மின்னஞ்சல் ( imrvbremen@gmail.com) செய்யுங்கள். நாங்கள் அவற்றை https://twitter.com/imrv_bremen, https://www.facebook.com/imrvbremen/ , instagram: www.instagram.com/IMRVbremen என்ற முகவரியில் பதிவேற்றம் செய்வோம். அல்லது Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் குறியீடு (Tag) செய்யுங்கள் எதிர்வரும் August மாதத்துக்குள் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகிறோம். – காணொளிச் செய்திகள் – ஒளிப்படச்செய்திகள் – சமூக வலைத்தளப் பதிவுகள் – கடிதங்கள் (ஆவணங்களை எமக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நாங்கள் அவற்றை தொலைநகல் மூலம் அனுப்பிவைப்போம்) – யேர்மனியத் தூதரகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நாதன் தம்பி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுக்க எமக்கு சட்டபூர்வமான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கக்கூடிய சட்டச்செயற்பாட்டாளர்களையும் நிபுணர்களிடமும் நாம் உதவி கோரிநிற்கின்றோம் ஜேர்மன் சமஷ்டி நீதியமைச்சு மின்னஞ்சல் : poststelle@bmjv.bund.de, Twitter : www.twitter.com/bmj_bund, Facebook : www.facebook.com/bundesjustizministerium, Instagram : www.instagram.com/bundesjustizministerium ஜேர்மன் சமஷ்டி நீதி அமைச்சர் மார்க்கோ புஷ்மன் மின்னஞ்சல் : marco.buschmann@bundestag.de, Twitter : www.twitter.com/MarcoBuschmann, Facebook : www.facebook.com/MarcoBuschmannFDP, Instagram : www.instagram.com/marcobuschmann யேர்மனிய தூதரகங்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கான பட்டியல் : https://www.auswaertiges-amt.de/en/about-us/auslandsvertretungen/deutsche-auslandsvertretungen குறிப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தை தமக்குச் சார்பாக மாற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட பரப்புரை தொடர்பான விடயங்களின் ஒரு பகுதி விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இராசதந்திர தகவற்பரிமாற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005 செப்டம்பர் மாதத்துக்கும் 2006 மே மாதத்துக்கும் இடையே 13 ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 20 வெவ்வேறான சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. ‘உங்களது இந்த முடிவுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இதனை மேற்கொள்வதற்கு அமெரிக்காவிலிருந்தும் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது ஒரு நல்ல முடிவு அல்ல என்று எண்ணுகின்ற உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்று சுவீடன் நாட்டின்முன்னாள் இராணுவத் தளபதியும் அந்நாள் சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஊல்வ் ஹென்றிக்சன் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். ‘வெளிநாட்டு அமைச்சராக நான் பணிபுரிந்த பொழுது, ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கு அமெரிக்கா எமக்குச் செய்த உதவிகளை நாம் மறந்துவிட முடியாது’ என்று 2012 இல் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்த 25 நாடுகளில் 7 நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இதனை ஓர் ஏகமனதான முடிவாக ஐரோப்பிய ஒன்றியத்தால் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அப்போது அமெரிக்காவின் இராசாங்க அமைச்சராகப் பணியாற்றி கொண்டொலீஸா றைஸ் ஐ பல தடவைகள் நான் சந்தித்ததுடன் துணை இராசாங்க அமைச்சராகப் பணிபுரிந்த நிக்கொலஸ் பேண்ஸ் என்பவரது பணிமனையின் உதவியுடன் 2006ம் ஆண்டு MAY மாதம் 29ம் திகதி, விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்கான ஆதரவை அந்த 7 நாடுகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டோம் . இந்த அமைதிப் பேச்சுவார்த்தையினால் பல மனிதாபிமான நன்மைகள் அடையப்பட்ட போதும், இந்த பேச்சுவார்த்தைக்கு அனைத்துச் சமூகங்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கப்பெற்ற போதும்,ஈழத்தமிழ் மக்களுடன் இறைமையைப் பகிர்ந்துகொள்ள சிறீலங்கா அரசு எடுத்த ஒவ்வொரு அடியும் 2003ம் ஆண்டு April மாதத்தில் வோசிங்ரன் டி.சி.யில் நடைபெறவிருந்த நிதி வழங்குநர் மாநாட்டில் விடுதலைப்புலிகள் பங்குபெறுவது தடைசெய்யப்பட்டதுடன் தோல்விக்கு உள்ளாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே ‘சமமான மதிப்பை’ ஐரோப்பிய ஒன்றியம் பேணிய போதிலும், வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய ஆணையாளர் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை 2003இல் சந்தித்ததற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை தனிப்பட்ட விதத்தில் அமெரிக்கா கண்டனம் செய்தது. ‘சிறீலங்கா அரசுக்கு இணையாக விடுதலைப்புலிகள் மதிக்கப்படக்கூடாது’ என்று அந்நேரம் அமெரிக்காவின் துணை இராசங்கச் செயலரான றொக்கா குறிப்பிட்டிருந்தார். (விக்கிலீக்சைப் பார்க்கவும்). 2004ம் ஆண்டு December மாதத்தில் ஆழிப்பேரலை அனர்த்தம் தென்னாசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய போது, தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்த ஒரு உதவி வழங்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆழமாக ஊக்குவித்தது. இதன் தொடர்ச்சியாக சிறீலங்காவின் அதிபருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆழிப் பேரலைக்குப் பின்னரான மேலாண்மைக் கட்டமைப்பு (P-Toms ) 2005 ஜூன் மாதம் 25ம் தேதி ஒப்பமிடப்பட்டதுடன் இதற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம் கணிசமான நிதியையும் வழங்க முன்வந்தது. ஆனால் அதே நேரம் அமெரிக்கா அதற்கு ஆதரவு வழங்க மறுத்தது.
  6. பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா? குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது? சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை? காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்? எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்! இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல! சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும். கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான். இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்! கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது. எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்! இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை. எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்! நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்! நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு. தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
  7. மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! எழுத்து: இ.பு.ஞானப்பிரகாசன் நாள்: 27.11.15 பகுப்பு: அஞ்சலி, இனப்படுகொலை, இனம், ஈழம், கவிதை, தமிழர், தமிழ், விடுதலைப்புலிகள் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்! பல்லவி மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் - நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - கருங் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் - பசும் புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் - நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் உருவடி - ௧ பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் - வெறும் கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன் பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - தமிழ்ப் பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் - விடும் மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் - நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் உருவடி - ௨ சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் - உதிர் சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன் துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தூசித் துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் - தனி உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் - நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் - ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் சுட்டி: http://agasivapputhamizh.blogspot.com/2015/11/maaveerar-naal-tribute.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.