Mayuran

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    467
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Mayuran last won the day on May 18 2016

Mayuran had the most liked content!

Community Reputation

174 Excellent

About Mayuran

  • Rank
    உறுப்பினர்
  • Birthday 10/24/1979

Contact Methods

  • Website URL
    http://inuvaijurmayuran.blogspot.com
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    றைன் நதி தாலாட்டும் அல்ப்ஸ் மலையோரம்.
  • Interests
    http://inuvaijurmayuran.blogspot.ch/

Recent Profile Visitors

916 profile views
  1. மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
  2. வார்த்தைகள் யாவும் வலுவிழந்து போகின்றன கார்த்திகை வானம் போல மனம் கனத்துக் கிடக்கின்றது நேற்று வரை எம்மோடு இருந்த நீ இல்லை என்ற சொற்கேட்டு இடி விழுந்த கோபுரம் போல இதயம் நொருங்கிக் கிடக்கின்றது ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ ஆக்கி வைத்த இலக்கியங்கள் இன்னும் நூறு தலைமுறைக்கு ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும் பழகிட இனித்திடும் வெல்லமே பார்வையாலே பேசும் பெருமகனே ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர் இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் நிறைந்து வளங்கும் வள்ளலே உன்னால் உயர்ந்தவர் பலர் - எம் உள்ளத்தில் என்றும் நீ இருப்பாய் பெரும் கனலாய் வருகின்ற எம் படைப்புக்களின் இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்... #ஈழத்துப்பித்தன் 2002 காலப்பகுதிகளில் நாம் யாழ் களத்தில் நுழைந்த போது எம்மை தட்டிக் கொடுத்து வயது இடைவெளி பாராது சக நண்பனாய் எம்மோடு பழகியவரும் பல்துறைக் கலைஞனுமான "இராஜன் முருகவேள்" (சோழியான்) அவர்களின் நினைவு சுமந்து...
  3. பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா பள்ளிப் பருவமதில் பகிடியாய் கடந்த நாட்கள் பாலர் வகுப்பினிலே பாட்டி வடை சுட்ட கதை படித்து பகுத்தறிய மறந்த நாட்கள் பக்கம் வந்து சீண்டுதம்மா புளியடிப் பள்ளியிலே புழுகத்தோடு பயின்ற நாட்கள் புட்டும் முட்டைப்பொரியலும் பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள் புரையேறி நெஞ்சமெங்கும் புத்துணர்வாய் கிடக்குதம்மா அம்மன் கோவிலிலே அழகான விழாநாளில் ஊர் கூடி இழுத்த தேர் இன்று ஊர் காவல் படை இழுக்க உள்ளமெல்லாம் உருக்குலைந்து உணர்வற்று தவிக்குதம்மா புலம் பெயர்ந்தோர் வாழ்வு புகழ் மிக்க வாழ்வு என்று புகழ்ந்து பேசுவோர் பலரும் புண்பட்டும் கிடக்கும் எம் உணர்வுகளை அறிவாரோ? #ஈழத்துப்பித்தன் 2003 - 2016 படம்: சுவிற்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள பிரெஞ்சு தேசத்துக் கிராமமொன்றில் அதிகாலைப்புலர்வு. http://inuvaijurmayuran.blogspot.ch/2016/07/blog-post.html
  4. ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடியாமல்தோத்தது சிங்களம் எண்டது உண்மையேஎரிஞ்ச அந்தச் சாம்பல் மேட்டிலை இருந்துஇண்டைக்கு உலகமெங்கும்தமிழன் வாழுற நாடுகளிலை எல்லாம்புத்தக வெளியீடும் நூலகமும்வீட்டுக்கு வீடு புத்தக்க் களஞ்சியமுமாஉருவங்கொண்டு எழும்பி நிக்குதுஆயிரந்தான் கிடந்தாலும்தமிழன்ரை அறிவுத்தேடல் அழிக்க முடியாததே.#ஈழத்துப்பித்தன்31.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_31.html
  5. எதிர்ப்பு "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஓரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன,அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும்,உணவுக்கும் இடத்துக்கும் தத்தமக்கிடையே அடித்துக் கொள்ளும்,ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை,கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஓரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன. இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும்,பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின. காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை,காலம் காலமாக அந்த மரத்தின் நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான்,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது. காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது,குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும்,காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன,ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின,இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன,சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன.தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன,இன்னும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின,வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்,ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின. இது ஆந்தைக் குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன,இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை,இது எங்கள் மரம் நீங்கள் வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது. காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மௌனம் காத்தன,குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு,அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன. குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில் வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஓலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின,இரவுகளில் முறை வைத்துக் காவல் காத்தன,பனைமரம் பலவிதங்களிலும் காகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது. இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும்,காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது. இரவிரவாக ஆந்தைகள் கூடின,நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது,காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது,இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஓரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது,சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது. இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன,கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஓலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின,இந்நேரம் காகஙக்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன. இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது" இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் என்னோடு" காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஓலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞ்சுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான் வழி" "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின.வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை,கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது பி.கு:- இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல #ஈழநாதன் யாழ்களத்தில் ஈழவன் எனும் பெயரில் எம்மோடு உறவாடிய அமரர். ஈழநாதன் அவர்களால் எழுதப்பட்டது.
  6. அழகியல் கவிதை. நன்று, வாழ்த்துக்கள்.
  7. வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி முனிவர் ஜீ. வந்துதான் உண்மையை தெரிய வேண்டியவர்கள் அல்ல நாம். உணர்வாலே உணர்ந்தவர்கள்.
  8. வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி குமாரசாமித்தாத்தா. இது அந்த முள்ளிவாய்க்கால் போன போது ஏற்பட்ட என் மன உணர்வை அப்படியே பிரதியெடுத்தேன்.
  9. வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி சுவி.
  10. அழகழகா வாழைமரம்அடுத்தடுத்து குலை சாய்சிருக்குவிதம் விதமாய் உருவம் கொண்டுவிரும்பும் சுவையில் பழுத்திருக்குமாப் பிடிப்பாய் கப்பல்மனம் பிடித்த இதரைதேன் இனிக்கும் கதலி - தின்னத்தெகிட்டாத செவ்வாழைவெட்டிப் பொரித்துண்ணவிருந்து சிறக்கும் மொந்தனதால்இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்அத்தனையும் தொலைத்தோம்அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்துஅன்னியமண் வாசம் நுகர்வதனால்...#ஈழத்துப்பித்தன்22.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_23.html
  11. அல்வாயன் வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி. ம் இந்த வலி நாம் மாழும் வரை கூடவே வரும்.
  12. ஜெயின் கமிசன் அறிக்கை முழுமையா வாசிச்சிட்டியளோ?
  13. நன்றி விசுகர். மீளவும் வந்துள்ளேன். முயற்சிக்கிறேன்.
  14. பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_20.html