• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

poet

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,586
 • Joined

 • Last visited

 • Days Won

  6

poet last won the day on December 6 2013

poet had the most liked content!

Community Reputation

313 ஒளி

About poet

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,920 profile views
 1. பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல் . பொங்கல் வாழ்த்துப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
 2. போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள் வானில் ஒலித்த போதெலாம் உயிர் நடுங்கினையாம். நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம். இருளர் சிறுமிகள் மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில் கன்னிமாங்கனி வாடையில் வந்த கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே எங்கள் ஆற்றை எங்கள் காட்டை உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா. என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை உன்னை வந்து பார்க்கலையாமே. போகட்டும் விடம்மா. அவனும் அவனது பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல உன்னைக் காக்க யானையின் மதநீர் உண்டு செளித்த நம் காடும் உளதே . *கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு L
 3. தமிழரை குழப்ப விரும்பும் மகிந்த ராஜபக்ச ”கேழ்வியும் நானே. பதிலும் நானே என எனது விருபத்துக்கு அமைய நிகழ்ச்சியை வழிநடத்தியமைக்காக ” ரங்காவை பாராட்டி மகிழக்கூடும்.
 4. 1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறேன். 1986ல் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புத் தோழதோழியர்களாலும் நயந்து வாசிக்கபட்ட “தாய் நிலமும் தனையர்களும்” என்கிற என்னுடைய கவிதையில் சில அடிகள் இந்த நிலைபாட்டை பதிவு செய்கிறது. . “போத்துக்கீசரை போரில் எதிர்த்த” சிங்கள நாட்டு இளவரசனுக்கு தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த சங்கிலி மன்ன்னைப் பாடுவோம் அம்மா. …………………………………………………….. அன்னியர்க் கெதிராய் போர்களில் விழுந்த நம் மூதாதையர்கள் மீண்டும் சிறுவராய் உதித்துவந்தனரோ பணிகள் முடிக்கும் சபதங்களோடு. எத்தனை பேரைக் களபலியாக மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா! . பல்கலைக்கழக முன்றலில் நின்று தொடுவானங்களை எட்டிப் பிடித்த எத்தனைபேரைக் களபலி தந்தோம். விமலதாசனை, ரவி சேகரனை திருமலை தந்த கேதீஸ்வரனை முல்லைத் தீவின் சிறீ எனும் தோழனை பொன்பூச் சொரியும் நிழல்வாடிகளின் நீழலில் நின்று விடுதலைப்போருக்கு எம்மை அழைத்த எத்தனை பேரை நாங்கள்ம் இழந்தோம். . வெடிகுண்டின்மேல் விழுந்துபடுத்து தோழரைக் காத்த ’வெத்திலைக் கேனி’ அன்புவைப்போல இன்னொரு தோழனைக் காண்பது எப்போ? . காரைதீவுக் கடற்கரைப் போரில் இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து வீரம் விழைத்த சோபா என்ற தேவதை போல மீண்டுமோர் தோழியைக் காண்பது எப்போ? சாவகச்சேரியில் எதிரியை வேருடன் கல்லி எறிந்த நீக்கிலஸ் போலவும் வன்னிச் சிறுத்தை காத்தான் போலவும் கொழும்பு வீதியில் போர் முரசறைந்த மானவன் பரிபூரணைப் போலவும் இன்னொரு தோழமை எய்துமோ வாழ்வு? . விடுதலைக்கு மூலைக் கல்லாய் இவர்களைத் தானே நாங்கள் நாட்டினோம் விடுதலைக்குத் திசை விண்மீனாய் இவர்களைத்தானே நாங்கள் எரித்தோம். ……………………….. ………………………… ………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………………………. 1986. இயக்கங்கள் தங்கள் தங்கள் மாவீர்ர் தின்ங்களை தாம் நியமித்த நாட்களில் கொண்டாடுவது தொடரட்டும். ஆனால் எல்லோரும்கூடி பொதுவான ஒரு தியாகிகளுக்கு நன்றி கூறும் தினத்தை மே 17 அல்லது18 அல்லது 19ம் திகதிகளில் கொண்டாடுவது வரலாற்றுக் கடமையாகும்.
 5. UNSUNG EULOGY பாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறுதிச் சாபங்கள் அலைகிறதே. எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன். . அகலும் வலசைப் பறவைகளின் புலம்பல்கள் தேயும் மண்ணில் மொட்டை மரங்கள் பாடுகின்றன ”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.” . (I am looking for an English Translator)
 6. மிகவும் நன்றி தமிழ் சிறி, மிகவும் நன்றி யாழ் தோழ தோழியரே. இப்பதான் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றியும் விசுவாசமும். மரணம் வாசித்து முடிந்த புத்தகத்தை மூடிவைக்கிறதுபோலத்தானே.
 7. துயரிடையும் நன்றி. நுணாவிலான் , புங்கையூரான் இணையவன், யாழ்கவி அனைவரது ஆதரவுக்கும் என் நன்றிகள். அன்பான நல்வாழ்த்துக்கள்.
 8. படம் மனசை நோகவைக்குது, இரண்டு பக்கத்தில் பயமும் மாறுபட்ட பிரச்சினைகளும் இருப்பதை நான் மறுக்கவில்லை. காணிவாங்கும் பிரச்சினையில் யாழில் முஸ்லிம்களின் காணிகள் தமிழரால் வாங்க படுகிற பிரச்சினையில் நான் தமிழர்களே முஸ்லிம்களின் காணிகளை வாங்காதீர்கள் எனவும் முஸ்லிம்களே உங்கள் காணிகளை தமிழருக்கு விற்காதீர்கள் எனவும் குரல் எழுப்பினேன். என்னிடம் எப்பவும் இரண்டு நாக்கில்லை. கிழக்கிலும் கானி வாங்கும் முஸ்லிம்களிடமும் காணி விற்க்கும் தமிழரிடமும் அட்தையே சொல்ல எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. ஆனால் பல பிரச்சினைகளை பேசித் தீர்க்கிற வழி முறைகளை அனுபவம் ஆற்றலை இருசாராரும் இதுவரை கட்டி எழுப்பவில்லை. இதுவும் கவலை தருகிறது
 9. தங்கைக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . எண்ணில் நினைவெல்லாம் இன்னுமுன் சிரித்த முகம். பின்னே உன் பாதக் கொலுசின் பாடல் மட்டும் ஒலிக்கவில்லை. . வாழ்வே பொய் என்பவளின் மரணம் எங்கண் மெய்யாகும். முந்திவிட்டாய் போய்வா விடுதலையாம் சிறகசைத்து . பெண்ணின் கசந்த விதியே வசந்தத்தும் இலையுதிரவைக்கும் மங்கையரின் பாழ் விதியே காடெரிந்த நாட்களிலும் தீ புகுந்து குட்டிகட்க்காய் இரைதேடும் அகதிப் பெண் புலிஒன்றை கண்ணாடி கூண்டுள் வீழ்த்திவிட்டாய். வாழிய வல் விதியே , தங்கச்சி என் நினைவில் இருக்கும் உன் முதல் வார்த்தை புன்சிரிப்பு. என் காதுள் உறைந்த இறுதி வார்த்தை உன் இயலாத பெண்ணுக்கான அழுகையாய் இருந்தது, எங்கும் மனிதர்கள் இருக்கின்றோம். இருக்கிறது தமிழ்நாடு. எதற்கும் இனிமேல் அழாமல் போய்வாடி? . இதோ தாய்மண்ணால் வனைந்து நீ உடுத்த ஆடை கிடக்கிறது. கலங்காதே மின்னில் எரித்து வங்கக் கடலில் எறிந்தால் ஈழக்கரை சேர்ந்துவிடும். , போய்வா
 10. நன்றி இணையவன். ஏற்கவும் மறுத்து விமர்சிக்கவுமான மனநிலைதான் நமக்குத் தேவைபடுகிற பொறுப்புள்ள அரசியல் அணுகுமுறை. ஏற்ற விடயங்களை அரசியல் ஆதாயங்களாக்குவதும் எற்காத விடங்களை மோசமடைய அனுமதிக்காமல் விடுவிக்க முனைவதுதான் இன்று எமக்குத் தேவையான அடிப்படை இராசதந்திர்ம்.
 11. மீரா மற்றும் தனிக்காட்டு ரஜாவுக்கு என் பணிவான வேண்டுகோள். ஒரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எல்லா நிலையிலும் பேச்சு வார்த்தையை தொடர்வது அடிப்படை அரசியலும் அடிப்படை ராஜதந்திரமுமாகும். 1996க்கும் 2006 க்கும் இடையில் பலதடவை விடுதலைபுலிகளது வேண்டுகோளின் பெயரிலும் முஸ்லிம் தலைவர்களது கோரிக்கையில் அடிப்படையிலும் பல கந்துறையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். என்னை அறிய குறைந்தபட்ச்சம் என் முகநூலையாவது வாசியுங்க. ஐ.டி Jaya Palan
 12. எத்ர்காலம்பற்றி ஆயுத்தமாக இருப்பதன்றி தமிழ் முஸ்லிம் கலந்துரையாடல்கள்தவிர என்செயலாவது யாதொன்றுமில்லை. கடந்த காலத்தில் என்னால் இயன்ற சிறு பணியை எதிர்கால சந்ததிக்காக என் சுயசரிதையில் பதிவு செய்யவுள்ளேன்,
 13. யாழ்ப்பானத்திலும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் முனைப்புப் பெறுகிற அழுத்த அரசியல் அவசியமில்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் அழுத்த அரசியல் வாதிகளை எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்த முயல்வது வரலாறு. தமிழர்மீது அக்கறையிருந்தால் வடக்கில் மட்டும் உங்கள் அழுத்த அரசியலை செய்யுங்கள். சிங்கள இனவாத சக்திகள் விரும்புவதுபோல சம்பந்தருக்கு எதிராக போட்டிபோட்டு தமிழர் வாக்குகளை பிரித்து திருமலையில் தமிழர் பிரதிநிர்கித்துவத்தை குறைத்ததுபோன்ற காரியங்களில் ஈடுபடாதீர்கள். தயவு செய்து கிழக்கு மாகாணத்தைப் பிழவு படுத்தாதீங்க. அழுத்த அரசியல் வடமாகாணத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
 14. தோழர் விசுக்கு. என்னை பயங்கரவாதியாக சிறைவைக்க கோட்டுக்கு கொண்டுசெல்லப் போவதாக சேதி கிடைத்திருந்த தருணத்தில் உடனடியாக நாடுகடத்துவதாகச் சொன்னார்கள். நீதி அமைச்சர் றவ் ஹக்கீம் உட்பட அரசும் கோத்தபாயவும் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் கண்டனங்கள் வந்ததாகச் சொன்னார்கள். நோர்வே வந்த பின்னர்தான் என் பிள்ளைகள் தொகுத்துவைத்திருந்த பத்திரிகையில் வெளிவந்த கண்டனங்களை வாசித்தேன். என்னை கைது செய்தவகளுடன் ”அம்மா சமதிக்கு எடுத்துச் செல் அல்லது நாயைபோல சுட்டு உடலை எடுத்துச் செல்” என வன்னிவிழான்குழம் கோவில்முன் நான் போட்ட சண்டை இன்று உலக பிரசித்தம், நோர்வே சுந்தரலிங்கத்துக்கு (fb : kanap suntharalingam) அவரது வன்னிவிழான்குழ உறவினர்கள் “ஆமி ஜெயபாலனை பிடிச்சு வைச்சிருக்கு, ஜெயபாலன் ஆமி கமாண்டர்போல கத்திறார். ஆமி தமிழர் மாதிரி நிக்கிறாங்க” என கைபேசியில் சொல்லியிருக்கிறார்கள். சுந்தரலிங்கம் குளோபல் தமிழ் செய்தி குருபரனுக்கும் வேறு செய்தியாளர்களுக்கும் தகவல் சொன்னதால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். எனக்காக உலகளாவ நடந்த முயற்சிகள் வெலியில் வந்துதான் தெரியும். விசுக்கு “நானென்னால் என்மீசையை அல்ல தலையையே எடு அவர் வாய் திறக்கட்டும்த மிழருக்கு அந்த வாய் உதவட்டும்” என சொல்லியிருப்பேன் எனச் சொல்கிறீங்க. நான் அதை மறுக்கவில்லை. நானும் உங்களைபோல துணிந்தவன்தான். என்னை தெரிந்தவர்களை சந்திக்கும்போது கேழுங்கள். வெளியில் வந்துதான் எல்லாம் தெரியும். ஒரு வேழை என் மரணத்துக்கு முன்னம் விட்ட இடத்தில் இருந்து விடுதலைகான இராஜதந்திரபணிகளை தொடர நேரலாம் என்கிற நப்பாசை இன்னும் இருக்கு. அந்த நப்பாசையால்தான் உங்கள் கேழ்விக்கு பதில்கூறுவதைத் தவிர்க்கவும் உங்கள் கேழ்வியை நீங்கவும் நேர்ந்தது. புரிந்து கொள்ளுங்கள். அல்லது மன்னியுங்கள். http://ireport.cnn.com/docs/DOC-1063267