கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,770
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by கவிப்புயல் இனியவன்

 1. எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... ஏங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^^^^^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்
 2. கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்
 3. அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் ..... அ திகாலை எழுத்தவன் ...... அ திசக்தி ஆதவ்னையே..... அ ருகில் வரவைப்பான்......! அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுபட்டு ... அ ண்ட சராசரத்தோடு .... அ டக்கமாவதே .........! அ ன்று சொன்னதை செய்ததை .... அ ன்றே மறப்பவனே .... அ தி உயர் மனிதன் .... அ தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....! அ ந்தி சாயும் நேரம் .... அ ன்றைய நிகழ்சிகளை ... அ சைபோட்டுபாருங்கள் .... அ ருவருப்பான செயல் எது ...? அ ரவணைப்பு செயல் எதுவென .....! & கவிப்புயல் இனியவன்
 4. கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ... கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் .... கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் .... கேள்வன் மனைவிக்கு கேடயம் ....! கேட்பார் சொல் கேளாதே கேட்டவுடன் எதையும் கொடுக்காதே .... கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே .... கேவலமானவன் என யாரையும் கருதாதே ....! கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி கேட்டறிதல் அறிவுக்கு உறுதி .... கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி .... கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....! ^^^ அகராதி தமிழில் கவிதை கவிப்புயல் இனியவன்
 5. தினமும் அர்சனை ...! முகம் பார்த்து ...... பேச மாட்டார் ....! ஒரு சில நேரங்களில் ..... உரத்த குரல் ஆனால் ...... ஒருநாளும் சிறு அடிகூட ..... அடித்த தில்லை ...! நீங்கள் சொன்ன அர்ச்சனைதான் எதிர் கால வாழ்க்கை தத்துவம் இன்று உணர்ந்தேன் தந்தையே ....! ----- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை கவிப்புயல் இனியவன் ------
 6. சண்டை போடுவதாயின்... சட்ட சபையில் போடுங்கள்... வீட்டில் சண்டை போட்டால்... சட்டம் தன் கடமையை... செய்யும்........!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ பகல் முழுவதும்.. தன்னை கஷரப்படுதி... உழைக்கிறான்..... இரவு குடும்பத்தை... கஷ்ரப்படுத்துகிறான்....!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ ஆடம்பர வீடு... அழகாக இருக்கிறது... வீட்டில் இருக்கும்... சில்லறை காசு ... துர் நாற்றம் வீசுகிறது....! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்
 7. பிஞ்சு விரலை பஞ்சு...... போல் நினைத்து மெல்ல ..... மெல்ல அமர்த்தி சுகம் ..... காணும் உயிரே .........!!! மார்பிலே ...... போட்டுக் கொண்டே... மனம் நிறைந்து மகிழ்ந்து மனத்தால் வளர்த்த உயிரே ....!!! மளமளவென வளர்ந்தேன் .. மணமுடித்து வைத்தாள்... நான் விரும்பிய உயிரை..!! அன்னை அவள் கண் மூடியதால்... அனாதையானேன் அன்பென்னும் உறவிலிருந்து ...!!! உள்ளத்தால் சொல்லுகிறேன்... தாயை நினைத்து கவிதை எழுதும் எந்த கவிஞனும் ...... கண்ணீரை சிந்தாமல் ....... எழுதவே முடியாது ........!!! & குடுப்ப கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்
 8. முதல் ........ காதல் மட்டுமல்ல ... தந்தையிடம் முதல் அடி ஆசிரியரிடம் முதல் திட்டும் மறக்க முடியாதவையே ...! தந்தையே நீர் திடீர் என எதற்காக கோபப்பட்டீர் ..? எதற்காக அந்த அடி அடித்தீர் ..? என்றெல்லாம் எனக்கு இன்றுவரை -புரியவில்லை ...! ஆனால் ..... அந்த அடிதான் எனக்கு..... கடைசி அடி என்பது....... வாழ்க்கையில் மறக்க ..... முடியாத அடி ....! ----------- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை கவிப்புயல் இனியவன் ------------
 9. எதற்காக..... இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....! $$$$$ என் ...... காதல் நினைவு .... உன் காதல் வலி... எப்படி தாங்கும் என் இதயம் ....! $$$$$ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... காதல் செய்கிறாய்........ என்று நம்பி விட்டேன் ....! ^^^^^^
 10. கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....! $$$$$ மூச்சை நிறுத்தினால்.. மட்டுமே மரணம் இல்லை. நீ பேச்சை நிறுத்தினாலும். மரணம் தான்......! $$$$$ உயிர் விட்டு போகும் ..... உடலுக்காக விடும் .... கண்ணீரை விட கொடுமை ... உயிராய் காதலித்தவர் ,,,, விட்டுப்பிரியும்போது .... ஓரக்கண்ணில் வடியும் ... சிறுதுளி கண்ணீர் ....! ^^^^^^ கவிப்புயல் இனியவன்
 11. கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ... கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் .... கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம் .... கேள்வன் மனைவிக்கு கேடயம் ....! கேட்பார் சொல் கேளாதே கேட்டவுடன் எதையும் கொடுக்காதே .... கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே .... கேவலமானவன் என யாரையும் கருதாதே ....! கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி கேட்டறிதல் அறிவுக்கு உறுதி .... கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி .... கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....! ^^^ அகராதி தமிழில் கவிதை கவிப்புயல் இனியவன்
 12. -------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- !!!.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......!!! ^^^^^^^^^ என் விஞ்ஞான அறிவை .... பயன்படுத்தி இறைவனோடு ... பேசுவதற்கு தொலைபேசியை ... கண்டு பிடித்தேன் - பலமுறை ... முயற்சித்தேன் மறுமுனையில் ... யாருமில்லை ......! நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ... சற்று நேரத்தின் பின் தொடர்பு ... கொள்ளவும் என்று கூட .... மறுமுனையில் இருந்து வரவில்லை .... இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....! என்ன ஆச்சரியம் .... ஒருநாள் மறுமுனையில் இறைவன் ..... யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ... நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் .... எத்தனை உண்மையான வசனம் அது ....! இறைவா தயவு செய்து ... இணைப்பை துண்டித்துவிடாதே.... உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு .... நீ துண்டிக்கும் வரையும் நான் ... துண்டிக்கபடமாட்டேன் என்றார் ... இறைவன் ......! எத்தனை உண்மையான வசனம் அது ....!!! உன் படைப்பில் ஏன் இத்தனை .... வேறுபாடுகள் - அறிவாளி ... அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ... படித்தவன் படிக்காதவன் .... இன்னும் இன்னும் எத்தனையோ .... ஏன் இத்தனை வேறுபாடுகள் ....? இறைவன் சிரித்துகொண்டு ... சொன்னார் என் படைப்பில் ... வேறுபாடு என்றும் இல்லை ... உங்கள் எண்ணத்தாலும் .... செயலாலும்தான் இத்தனை ... வேறு பாடுகள் நீங்கள் தான் ... வேறு படுத்தினீர்கள் வேறுபடுகிறீர்கள் என்றார் ....! இப்போதும் பார் நீ கூட இறைவனோடு பேசுகிறாய் ... என்று உன்னோடு ஆழ்மனதோடு .... பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் .... கடலின் பாதையை .....! ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ... போய் விட்டார் - மன்னிக்கவும் என்னுள் அடங்கிவிட்டார் .....! & --------------------------- கடல் வழிக்கால்வாய் வசனக்கவிதை ஆன்மீக கவிதை --------------------------- கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் வட இலங்கை
 13. அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....? சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான் சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில் பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான் அரசியில் பேசுவான் இல்லறம் பேசுவான் எல்லாமே பேசுவான் இலக்கண தமிழில் உரைப்பான் இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன்
 14. கண்களால் தோன்றிய........ காதலை கவிதையால்...... வடிக்கிறேன்......... நீ கண்ணீரால் ....... எழுதச்சொல்கிறாயா........ ஒருமுறை என்னோடு...... பேசிவிடு..........................! காதல் ..... என்ன உடல் நலத்துக்கு......... கேடானதா.......? இப்படி ஜோசிக்கிறாய்........ காதல் செய்ய....? நீ ................ என்னை காதலிப்பாயோ..... இல்லையோ தெரியாது...... உன் நினைவுகள் என்னை...... காதலிக்க தொடங்கிவிட்டன......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09
 15. கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....! நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....! ++ கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை 02
 16. கூடு துறந்து போனால் ..... கூச்சலிட்டு பயனில்லை .... கூட்டுறவு வாழ்கை முறையில் .... கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....! கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு ..... கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் ..... கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் ..... கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....! கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை ..... கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் ..... கூத்து தமிழனின் பாரம்பரியம் ..... கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....! கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் ..... கூனல் முதுமையில் வந்தே தீரும் ..... கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் ..... கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....! ^^^ அகராதி தமிழில் கவிதை கவிப்புயல் இனியவன்
 17. எனது தொடர்கவிதைகளை அந்த தொடரின் கீழ் பதியவா...? கஸல் தொடர்... அகராதி தமிழ் கவிதை தொடர் இவற்ரை அதிலேயே பதியவா...? இல்லையேல் இதில் தான் பதியனுமா...? பதில் தந்தால் நன்று
 18. நீ இல்லையேல் கவிதையில்லை ------------------------------- ஆயிரம் கவிதைகள் .... ஆயிரம் பின்னூடல்கள் .... ஆயிரம் கவிரசிகர்கள்..... பலநூறு சிறப்புகவிதை ....! அத்தனையையும் .... தாண்டிய சிறப்புகவிதை ..... என்னவள் சொன்ன வார்த்தையே.....! என் கவிதையை ... ரசித்து விட்டு சொன்னாள்..... இத்தனை கவிதையை...... எழுதிய உன் கையில்....... முத்தமிட்ட ஆசை......! அவளுக்கு புரியவில்லை..... அவள் இல்லையேல் எனக்கு...... கவிதையே இல்லை............! ++ கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை
 19. குப்பையில் போட்டாலும் ....குண்டுமணி மங்காது .....குடிசையில் வாழ்ந்தாலும் ....குடிகள் போற்றும்படி வாழ்.....!குடி குடியை கெடுக்கும் ....குணம் கெட்டாலும் குடி கெடும் .....குப்பை கூடினாலும் குடி கெடும் ....குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!கும்பிடு பெற்றோரை கும்பிடு .....குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!குற்றம் செய்யாதே தலை குனியாதே ....குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....! ^^^ அகராதி தமிழில் கவிதைகவிப்புயல் இனியவன்
 20. கீரியும் பாம்பும் போல் வாழாதே .....கீதமும் ஓசையும் போல் வாழ்.....கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!கீர்த்தனை மனதுக்கு நன்று .....கீரை கண்ணுக்கு நன்று ....கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!கீழ்பால் என்று யாரும் இல்லை ....கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!கீர்(சொல்) உறுதி வேண்டும் ....கீளுடையில் சுத்தம் வேண்டும் ....கீறலிலும் தெளிவுவேண்டும் ....கீதை நெறி வாழவேண்டும் .....!!! ^^^ அகராதி தமிழில் கவிதைகவிப்புயல் இனியவன்
 21. இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................அம்மா........................!!! எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......! ^^^ அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்...... அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........! ^^^ உலகின் தியாகி யார் என்று கேட்டேன்....... அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........! ^^^ பிசைந்த சோற்றை அருவருக்காமல் ......... சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........! ^^^ எப்போது நினைத்தாலும் கண்ணீர்...... அன்னையை தவிர யாரும் இல்லை.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்
 22. இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................மழை.........................!!! வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை வானம் கதறி அழுதாள் - அடைமழை |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் ||||||| விவசாயியின் நண்பன் - மழை வியாபாரியின் எதிரி -மழை |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழையில் நனைந்ததும் மறையாது IIIIII இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்
 23. கிழக்கில் இருந்து ஆதவன் .... கிழந்தெழும்பும் போதே .... கிழம்பிவிடு... போராடு .... கிழக்கின் ஆதவன் நீதான் ....! கிரகதோசத்தை காரணம் காட்டி .... கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ... கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து ..... கிரகபதி என்றும் நீதான் .....! கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் ..... கிராமமாக அறிவை பெற்றுக்கொள் .... கிலியை முற்றாக அறுத்து எறி ...... கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....! கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே .... கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் ..... கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ...... கிரகப்பெயர்ச்சியை சாட்டி வாழாதே ....! ^^^ அகராதி தமிழில் கவிதை கவிப்புயல் இனியவன்
 24. காற்றை போல் பலமாய் இரு ....காற்றை போல் மறைமுகமாய் இரு ....காற்றை அசுத்தபடுத்தாதே .....காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!காடுகளை அழிக்காதீர் ....காடு மிருகங்களின் வீடு ......காடுகளை போணுவோம் .....காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!+இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் இயற்கை கவிதை
 25. இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்