Surveyor

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,731
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Surveyor last won the day on September 24 2015

Surveyor had the most liked content!

Community Reputation

311 ஒளி

About Surveyor

 • Rank
  Advanced Member
 • Birthday

Profile Information

 • Gender
  Male
 • Location
  இமய மலை
 • Interests
  Except Politic. Reading, Driving and travelling.

Recent Profile Visitors

2,174 profile views
 1. 23 - குங்கிலியக்கலய நாயனார்பெயர்: கலயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: ஆவணி மூலம் அவதாரத் தலம்: திருக்கடவூர் முக்தித் தலம்: திருக்கடவூர் "கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" திருத்தொண்டத் தொகை காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர். அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்லநிலம் முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர். வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கில்யப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார். அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தனன். இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் உணர்ந்து எழுந்து செல்வங்களைப் பார்த்தனர்; அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதனர்; தனது கணவனாரிற்குக் திருவமுது சமைக்கலாயினார். திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு "நீ பசித்தனை! உன் மனையிற் சென்று பாலின் இன் அடிசில் உண்டு துன்பம் நீங்குக" என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர். செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளை வெல்லாம் எப்படி விளைந்தன?" என்று கேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்" என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தனர். மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவன் அடியார்களோடு இருத்தித் தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்த கலயனார் இன்பமுற்றிருந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தனர். இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிர செய்ய முயன்றான். இறைவர் நேர் நிற்கவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற கலநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார். இவ்விளைப்பிலே நானும் பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார். இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துத்திதான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர். திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார் http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
 2. 22 - காரைக்கால் அம்மையார்பெயர்: காரைக்கால் அம்மையார்குலம்: வணிகர்காலம்: கி.பி. 300-500 பூசை நாள்: பங்குனி சுவாதி அவதாரத் தலம்: காரைக்கால் முக்தித் தலம்: திருவாலங்காடு வரலாறு சுருக்கம்: எவ்வாறு கண்ணப்ப நாயனார் மற்றும் கழறிற்றறிவார் நாயனார் சிவபக்தியே ஒரு பதிவில் விளக்கம் தர இயலாதோ அதே போல் காரைக்கால் அம்மையாரின் சிவபக்தியே ஒரு பதிவில் விளக்கம் தர இயலாது இரு தனித் தனிப் பதிவாக அறியலாம் முதல் பகுதியில் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்றதை காணலாம். இளமைக் காலம்: காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.இவரின் இயற்பெயர் புனிதவதி. சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். ஓவியம் போல அழகுடைய புனிதவதியார் சிறுவயது முதல் சிவபக்தியில் திளைத்தார். சிவஆலயத்தை சுத்தம் செய்வது, கோலமிடுவது, அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவந்து தருவது, விளக்கேற்றுவது மட்டுமே இன்றி தன் இல்லம் தேடிவரும் சிவ பக்தர்களை வணங்கி உணவிட்டு வந்தார்.வளர்ந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் புனிதவதியின் தந்தை தனதத்தன். இல்லறம்: அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள்வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார். இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான்.புனிதவதியார் அவைகளை வாங்கி வைத்தார். பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார். பின், பரமதத்தன் பகலிலே வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மாங்கனி பெறுதல் புனிதவதியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்து விழுந்து. அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான். புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் தமக்குத் திருவருள் உதவிய திறத்தை நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது" என்றான் புனிதவதியார். இதை நம்பாத புனிதவதியார் கணவன் "என்ன பகல் கனவு காண்கிறாய்" என்றார். இதை கேட்ட புனிதவதியார் மனம் கலங்கி "நான் கூறுவது அனைத்தும் உண்மை" என்றார். "நீ கூறுவது உண்மை என்றால் மற்றோறு கனி கொண்டு வா" என்றார் புனிதவதியார் கணவன் பரமதத்தன். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்து விழுந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதியார் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான். ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான். பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியாருக்கு உறவினர்கள் அதிச்சி தகவல் அழித்தனர் இதை பகுதி இரண்டில் காணலாம்... ********** குறிப்பு: மாங்கனித் திருவிழா: மாங்கனித் திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ********** புனிதவதியாரின் கணவன் ஆகிய பரமதத்தன் புனிதவதியார் தெய்வ பிறவி என்பதை உணர்ந்து அவர்களை விட்டு பிரித்து மற்றோறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.அவனுக்கு அம்மனைவிக்கும் பெண்குழந்தை பிறந்தது. அவன் வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான். பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியாருக்கு. சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, பரமதத்தனிடம் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, புனிதவதியாரிடம் நடந்தது சுற்றத்தார் கூறினார்கள். அதை கேட்ட புனிதவதியார் தன் கணவன் பரமதத்தன் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்லுமாறு வேண்டினார். சுற்றத்தாரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு பரமதத்தனிடம் சென்றார்கள். பரமதத்தன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை காரியம்" என்றார்கள். அதற்குப் பரமதத்தன் "இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன்; இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான்.அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள். பெறுதற்கரிய பேய் வடிவு பெறுதல்: புனிதவதியார் பரமதத்தன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்றார். கயிலாயம் செல்லல்: அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, புனிதவதியாருடைய பக்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார். பரமேஸ்வரனை நோக்கி "சுவாமி இந்த கயிலையில் காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே கைகள் கொண்டு நடந்து வரும் இந்த பக்தையின் பக்தியே என்ன என்று சொல்லி அழைப்பது" என்றார் பரமேஸ்வரி அன்னை. அதை கேட்ட பரமேஸ்வரன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற புனிதவதியார்.இந்தப் பெருமை பொருந்திய பேய் வடிவத்தையும் இவள் வேண்டிப் பெற்றாள்' என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் கயிலைமலையினை தலையினாலே கைகள் கொண்டு நடந்து வந்து அடைந்தவுடன் நந்தி தேவர் புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார். புனிதவதியார் கண்ட பரமேஸ்வரன் உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, புனிதவதியார் பக்தியில் மனம் மகிழ்ந்து உலகிற்கு அம்மையும் அப்பனும் ஆன பரமேஸ்வரன் ஓடிவந்து அவரை நோக்கி, "அம்மையே வருக" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவினார். புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்றார். சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார். அம்மையார் எழுதியுள்ள நூல்கள்: காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே பரமேஸ்வரன் "அம்மையே" என்று அழைத்ததை இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன. இறைவனின் பெயர்கள்: தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார் காரைக்கால் அம்மையார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், பரமேஸ்வரன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன், ஏகாம்பரநாதர், சதாசிவம், அப்பா என்று பல. ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் காணப்படுகிறது. http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
 3. 21 - காரி நாயனார்பெயர்: காரி நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: மாசி பூராடம் அவதாரத் தலம்: திருக்கடவூர் முக்தித் தலம்: திருக்கடவூர் வரலாறு சுருக்கம்: “கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை. தமிழ்த்துறைப் பயன் தெரிந்து அகத்திணை தழுவிய கோவைப் பிரபந்தமியற்றி அதன் முக்கியப் பொருளான வீட்டின்ப விளக்கம் இனிது புலப்பட மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்ற காரி நாயனார்... மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார் . அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும் படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார். அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார். நாளைய பதிவில் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரானவரும், உலகுக்கே அம்மைஅப்பனான சிவபெருமானே கயிலையில் வரும் போது "அம்மையே வருக" என்று அன்போடு அழைத்த காரைக்கால் அம்மையார் பற்றிய வரலாற்றை காணலாம்... http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html
 4. 20 - கழற்சிங்க நாயனார்பெயர்: கழற்சிங்க நாயனார்குலம்: குறுநில மன்னர்பூசை நாள்: வைகாசி பரணி அவதாரத் தலம்: திருக்கச்சி முக்தித் தலம்: திருக்கச்சி வரலாற்று சுருக்கம்: "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" திருத்தொண்டத்தொகை. காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார். இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார். அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள்.அங்கே வந்த செருத்துணைநாயனார் அதை கண்டார். உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார்.அவள் சோர்ந்து புலம்பினாள். அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவினார். செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்" என்றார். அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையை முதலில துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மனைவி புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார். அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்.ஈசன் மூவருக்கும் காட்சி கொடுத்தார். கழற்சிங்கநாயனார் மனைவிக்கு மீண்டும் இருகரங்களையும் மூக்கையும் அளித்தார். இருவரின் பக்தியையும் கண்டு மனம் மகிழ்ந்து ஈசன் முக்தி அளித்தார். பின் செருத்துணை நாயனார் சில காலம் பல சிவாலயம் சென்று இறைபணி செய்து முக்தி அடைந்தார். கழற்சிங்கநாயனார் நெடுங்காலம் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html
 5. 19 - கழறிற்றறிவார் நாயனார்பெயர்: கழறிற்றறிவார் நாயனார்குலம்: அரசர்பூசை நாள்: ஆடி சுவாதி அவதாரத் தலம்: கொடுங்கோளூர் முக்தித் தலம்: திருவஞ்சைக் வரலாற்று சுருக்கம்: “கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை. கழறிற்றறிவார் நாயனார் சிவ பக்தி பற்றி ஒருபதிவில் விளக்கம் தர இயலாது ஆகையால் இருதனி தனி பதிவுகளாக அறினலாம் சோழ நாட்டிலே சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேற் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினாற் கண்ணுதற் பெருமானாகிய சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்துடையராயினார் தமக்குரிய அரசியற் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களமென்னுந் திருக்கோயிலையடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துறைதலை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல எனவுணர்ந்த அப்பெருந்தகையார், நாடோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுகுமிட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டையாட்சி புரிந்த செங்கொற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதிவினைத் துறந்து தவஞ்செய்தற் பொருட்டுக் கானகஞ் சென்றான். இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள் சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திருவஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி இச்சேரநாட்டின் ஆட்சியுரிமை தங்களுக்குரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்’ என வேண்டினர். பெருமாக்கோதையார் ‘மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான ஆட்சியுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். இச்சிவதொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தையுணர்ந்து நடப்பேன்’ எனத் தமதுள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலிற் புகுந்து இறைவன் திருமுன்னர் பணிந்து நின்றார். இறைவனது திருவருளால் தமக்குரிய அரசுரிமையில் வழுவாது ஆட்சிபுரிந்த இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடுமியல்பும், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்துணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும் உயர் திணை மக்களும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று. உலகுயிர்கள் கழறுச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் கண்ணெதிர்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து ‘அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்’ என்றான். அதுகேட்ட சேரர்பிரான் ‘அடியேன் அடிச்சேரன் காதலாற் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக’ என அவனிற்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சரனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர். சேரமான் பெருமாள் யானை மீதமர்ந்து நகர்வலஞ் செய்து அரண்மனை அடைந்துள அரியணையில் வீற்றிருந்து அரசுபுரிந்தருளினார். மேற்றிசை வேந்தராகிய இப்பெருந்தகையார் கீழ்த்திசை வேந்தராகிய சோழ மன்னரோடும் தென்திசை வேந்தராகிய பாண்டிய மன்னரோடும் நண்பராக விளங்கினார். மூவேந்தரும் தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி வளரவும், வேதநெறி வளரவும் அறநூல் முறையே ஆட்சிபுரிந்தனர். பெருமாதைக் கோதையார் தாம் பெற்ற அரசபதவியின் பயனும் நிறைந்த தவமும், தேடும் பொருளும், பெருந்துணையும் ஆகிய இவையெல்லாமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடித்தாமரையெனத் தெளிந்தார். ஆதலால் நாள்தோறும் சிவபூசை செய்வதை, தமக்குரிய கடைமையாக மேற்கொண்டார். திருமஞ்சனம், பூ, புகை, ஒளி ஆகியவற்றுடன் செய்யும் அன்பு நிறைந்த சிவபூசை ஏற்றுக்கொண்ட இறைவர், தமது திருவடிச் சிலம்பின் ஒலியினைச் சேரமான் செவிகுளிரக் கேட்டின்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டருளினார். இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திருவாலவாயென்னுந் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையாற் பரவிப்போற்றும் பாணபத்திரனென்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு அவரது கனவில் தோன்றி ‘அன்பனே, என்பாற் பேரன்புடைய சேரமான் பெருமாளென்னும் வேந்தன் உனக்குப் பொன், பட்டாடைகள், நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாங் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு திருமுகம் எழுதிக் கொடுத்திருக்கிறோம் நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று பொருள் பெற்று வருவாயாக’ எனக் கூறினார் சிவபெருமான்; ‘மதிமலிபுரிசை’ எனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார். திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர், சேர நாட்டையடைந்து சேரமான் பெருமாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான் அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உளமுருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது நிதியறையில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து ‘இப்பெரும்பொருள்களையும், யானை , குதிரை முதலிய சேனைகளையும், இம்மலைநாட்டு ஆட்சியுரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும்’ எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். அவரது கொடைத் திறத்தைக் கண்டுவியந்த பாணபத்திரர் ‘என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின், அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரசுறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டருளதல் வேண்டும்’ என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரபெருமாள். அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினால் தம்மைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தையடைந்தார். கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள், என்றும் போல ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த பொழுது, வழிபாட்டில் நாடோறுங்கேட்டின்புறுவதாகிய திருச்சிலம்பொலியை அன்று கேட்கப் பெறாது பெரிதும் மனங்கலங்கினார். அடியேன் என்ன பிழை செய்தேனோ எனப் பொருமினார். இறைவனை வழிபடும் ஆசை காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன இருக்கிறது எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித் தம் மார்பில் நாட்டப் புகுந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய கூத்தப் பெருமான் விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேராமன் பெருமாள் செவிகுளிரக் கேட்டு மகிழும் வண்ணம் ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். ‘தேவர்களும் தேடிக் காணுதற்கரிய பெருமானே! இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்த்தது எது கருதி? என வினவினார் கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள். அந்நிலையில் தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் “சேரனே! வன்றொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்று புகழமைந்த திருபதிகங்களால் நம்மைப் பரவிப் பாடினான். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்ந்தோம்’ எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் ‘அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது கருணைத்திறம் என்னே’ என வியந்து உளமுருகினார். இறைவன் திருநடம்புரிந்தருளும் பெரும்பற்றப் புலியூரிலமைந்த பொன்னம்பலத்தையும் அங்கே இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் பெரியோராகிய வன்றொண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச் சோழ நாட்டிற்குச் செல்ல விரும்பினார். திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளுடன் புறப்பட்டுச் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதுரின் எல்லையை அடைந்தார். அந்நிலையில் தில்லை வாழந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதூரின் எல்லையையணுகினார். அந்நிலையில் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு வரவேற்றனர். அடியர்களோடு தில்லைத் திருவீதியை வலம்வந்து எழுநிலைக் கோபுரத்தை வணங்கி உட்புகுந்த சேரமான்பெருமாள் நாயனார் திருப்பேரம்பலத்தை இறைஞ்சி உள்ளே புகுந்து இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந்தார். அளவில்லாப் பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய ஒருமையுணர்வாற் கண்டு உருகிப் போற்றித் திருவருளின்பக்கடலில் திளைத்து இன்புற்றார். தாம் பெற்ற பேரின்பத்தை வையத்தார் அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது கீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழ்ப் பனுவலாகிய பொன்வண்ணத் திருவந்தாதியினைப் பாடியருளினார். சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர் அதற்குப் பரிசிலாகத் தூக்கிய திருவடியிலணியப் பெற்ற திருச்சிலப்பொலியை நிகழ்த்தியருளினார். ஆடற்சிலம்பொலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகையுற்ற சேரமான்பெருமாள் காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருல்லைப்பதியிற் சில நாள் தங்கியிருந்தார். பின்னர் நம்பியாரூரரைக் கண்டு வணங்குவதற்கு விரும்பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களை வணங்கி திருவாரூரை அடைந்தார் சேரமான்பெருமானாகிய கழறிற்றறிவார் நாயனார். நம்பியாரூரர், சிவனடியார்களுடன் அவரை எதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை விழுந்திறைஞ்சினார். தம்மை வணங்கிய சேரமான்பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் தூக்கியெடுத்துத் தம் இரு கைகளாலும் ஒருவரொவரிற் கலந்த பெரும் நட்பினராய்ப் பெருமகிழ்ச்சியுற்றார்கள். இங்கனம் இருவரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள், நம்பியாரூரரைச் ‘சேரமான் தோழர்’ என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான் தோழராகிய சுந்தரர் சேரமான் பெருமானது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும் திருவாரூர்க் திருக்கோயிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். சேரமான் பெருமாள் உடைய நம்பியாராகிய சுந்தரைத் தொடர்ந்து சென்று பூங்கோயிலமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை விழுந்திறைஞ்சினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர் பொழியத் திருமும்மணிக் கோவையென்னுஞ் செஞ்நூல் மாலை புனைந்தேத்தினார். தாம் பாடிய செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார். ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்கொண்டருளினார். பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு நங்கை பரவையார் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார், திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானிற்கும் சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்கவகையால் திருவமுது அமைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்டநம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய்தருளினார். இவ்வாறு சேரமான்பெருமாளும் நம்பியாரூரரும் திருவாரூரில் தங்கியிருக்கும் பொழுது பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபடவேண்டும் என்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச் சேரமான்பெருமாளுக்குத் தெரிவித்தார். வன்றொண்டரைப் பிரியாத பெருமானாகிய சேரமான் பெருமாள் தமக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானைப் போற்றவேண்டுமெனும் பேரார்வத்தால் தாமும் அவருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ள உடையார் இருவர் அடியர் புடைசூழத் திருமறைக்காடு முதலிய தலங்களை வணங்கித் தென்தமிழ்ப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார்கள். அப்போது நாடாள் வேந்தனாகிய பாண்டியனும், பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர் சென்று இவ்விருபெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் பெருமாள், ‘அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன்’ என எண்ணி உரை தடுமாறிக் கண்ணீரரும்ப ஆலவாய் கடவுளைப் பரவிப்போற்றினார். பாண்டியன் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினான். இங்கனம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரும் நம்பியாரூராகிய சுந்தரரும் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர். சேரமான் பெருமாளும், சுந்தரரும், பாண்டியர் சோழராகிய இருபெருவேந்தர்களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரரை அடைந்தனர். சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரைத் தங்கள் நாட்டில் எழுந்தருளவேண்டுமென்று பலமுறையும் வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டுகோளுக்கிணங்கிய சுந்தரர், பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார். இருவரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலைநாட்டவர் எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்து, தம் தேவிமார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி நிற்க நம்பியாரூரருடைய திருவடிகளை விளக்கி மலர்தூவி வழிபட்டார். அவருடன் உடனிருந்து அமுதருந்தி உபசரித்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழாவும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்கள் விளையாடல்களும் நிகழ்ச்செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர். நண்பர் இருவரும் அளவளாவி மகிழும் நாட்களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன்றியது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், 'பொன்னும் மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறத்தலும் ஆமே' எனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்றார். சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், ‘இன்று உமது பிரிவாற்றேன் என்செய்வேன்’ என்றுரைத்து மிகவும் வருந்தினார். நம்பியாரூரர் தம் தோழரை நோக்கி ‘இந்நாட்டில் உளவாம் இடர்நீங்கப் பகைநீக்கி அரசாளுதல் உமது கடன்’ என அறிவுத்தினார். அதனைக் கேட்ட வேந்தர் பெருமான் ‘இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பஞ் செய்வன உம்முடைய திருவடித் தாரைகளே. திருவாரூர்க்கு எழுந்தருள வெண்ணிய உமது மனவிருப்பத்தை நீக்கவும் அஞ்சுகின்றேன்’ என்றார். ‘என்னுயிர்க்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன். நீவிர் வணங்கினார் வன்றொண்டரை வணங்கி தம்முடைய திருமாளிகையிலுள்ள பெரும் பொருள்களைப் பொதிசெய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுந்தூரஞ்சென்று வழியனுப்பினார். சுந்தரரும் தம்தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்களூரிலிருந்து மலைநாட்டை ஆட்சிபுரிந்திருந்தார். நெடுநாட்களின் பின் சுந்தரர் மீண்டும் கொடுங்களூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச்சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார். அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான், சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று ‘தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு’ என விண்ணப்பஞ் செய்தார்கள். இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதிற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார். இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர் தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவாற்றலால் விரைந்துணர்ந்த கழற்றறிவாராகிய சேர வேந்தர், பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திரவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீதெழுந்து வன்றோண்டர் ஏறிச்செல்லும் வெள்ளையானையை வலம்வந்து அதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையிற் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள். தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பமுடையராய் உடைவாளினால் தம் உடம்பை வெட்டிவீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர். சேரமான்பெருமாளும் சுந்தரரும் திருக்கையிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையுங் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் பெருமாள் நந்தி தேவரால் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடிமுன்னர் பணிந்தெழுந்தார். ‘கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த நிற்கின்றார்’ என விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் ‘சேரமானைக் கொணர்க’ எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார் நந்தி தேவர். சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, ‘இங்கு நாம் அழையாதிருக்க நீ வந்தது எது கருதி’ என வினவியருளினார். அதுகேட்ட சேரவேந்தர் இறைவனைப் பணிந்து “செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்தருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்றொண்டரது தோழமையை அருளிய பெருமானே!. மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்’ என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், ‘சேரனே அவ்வுலாவைச் சொல்லுக’ எனப் பணித்தருளினார். சேரமான்பெருமாள் நாயனாரும் தாம் பாடிய திருக்கைலாய ஞான உலாவைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர்காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன், அவரை நோக்கி சேரனே நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக’ எனத் திருவருள் செய்ய, சேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html
 6. 18 - கலிய நாயனார் பெயர் : கலிய நாயனார்குலம்: செக்கார்பூசை நாள் : ஆடி கேட்டை அவதாரத் தலம்: திருவொற்றியூர் முக்தித் தலம் : திருவொற்றியூர் வரலாற்று சுறுக்கம்: சிவந்தாள் சேர்தலே வாழ்விலட்சிய முடிநிலை யாதலாலும் அதற்கு நேர்வாயில் சிவதொண்டே யாதலாலும் அதன்பொருட்டு ஒருவரின் இடம்பொருள் ஏவலுக்கமைந்த எல்லாம் ஈடாக்கப்படலாம்; சுயகௌரவமும் அதற்குப் பலியாக்கப்படலாம் என்பதற்குக் கலிய நாயனார் வரலாறு கண்கண்ட சாட்சியாகும். தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார். பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார். அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு முடிவு செய்தார். வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார். அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.html
 7. விபச்சாரம் என்பது பணத்திற்காக உடலை விற்கும் தொழிலாக தான் பார்க்கிறோம். எந்நிலையில் அங்குள்ள பெண்கள் அங்கு செல்கிறார்கள், எவ்வாறு அழைத்துவரப்படுகிறார்கள், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்ன? என்பது பற்றி நூற்றில் ஒரு சதவீதம் கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அதை முழுக்க உங்கள் கண்முன் கொண்டு நிறுத்தும் இணையம் தான் கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்... சொர்கத்தின் மகள்கள் என்ற அர்த்தம் கொண்ட "கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்" என்ற பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதில் செக்ஸியாக உடையணிந்த பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தொழிலாளிகள் என்ற பெயரில் இடம் பெற்றிருந்தன. அத்துடன் அவரவரது மாதவிடாய் நாட்களும் குறிக்கப்பட்டிருந்தன. ட்விஸ்ட்! அந்த இணையத்தில் நீங்கள் ஒரு பெண்ணை தேர்வு செய்தால், உடனே ஒரு சாட் ஓபனாகும். அதில் அந்த பெண்ணுடன் நீங்கள் உரையாடும் வகையில் இணையத்தளம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. சாட் உச்சத்தை அடையும் போது மிகவும் கொடுமைக்குள்ளான நிலையில் அந்த பெண்ணின் புகைப்படம் ஒன்று திரையில் தோன்றும். பிறகு தான் நீங்கள் அறிவீர்கள் அந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்டவர் என. இது சதி அல்ல... உடனே அந்த சாட்டை மூடிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சாட் செய்ய முயலலாம். ஆனால், அந்த சாட்டும் இப்படி ஒரு கதையுடன் தான் முடியும். மேலும், இது நிஜமான சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தில் இருக்கும் எல்லா பெண்களும் ஏற்கனவே இறந்தவர்கள். ஏன் இப்படி ஒரு இணையத்தளம்? விபச்சாரிகள் என்றாலே உடலை பணத்திற்காக விற்பவர்கள் என்ற கண்ணோட்டம் தான் உலகம் முழுவதும் இருக்க்ரியாது. ஆனால், அவர்கள் எப்படி அந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன என்பது பற்றி நாம் சுத்தமாக அறிந்திருக்க மாட்டோம். அவர்களது அலங்காரத்திற்கு பின்னாடி உள்ள அலங்கோலமான பக்கங்கள் பற்றி நாம் அறிய வாய்ப்புகளும் இல்லை. கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தளத்தில் இருக்கும் பல பாலியல் தொழில் செய்த பெண்களின் முகங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலைகளும் அடங்கும்! 15 வயதில் கடத்தி செல்லப்பட்டு விபச்சாரத்தில் உட்படுத்தப்பட்ட பெண் கொடுமைகள் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டார். இவர் மட்டும் அல்ல ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக் கொண்டவர், வேறு முறைகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். கத்தி குத்து! பல பாலியல் தொழில் புரிந்த பெண்கள் வாடிக்கையாளர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு ஒரு பெண், கொடூரமான வாடிக்கையாளரால் 54 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உண்மை கதைகள்! கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ் இணையத்தில் காண்பிக்கப்படும் எல்லா பெண்களும் உண்மையாக வாழ்ந்தவர்கள். கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலைக்கு தூண்டப்பட்டவர்கள். விபச்சாரத்தால் உயிரிழந்த சொர்கத்தின் மகள்கள் இவர்கள். இணையதளத்தின் நோக்கம்! இந்த இணையதளத்தை ஆரம்பித்ததன் நோக்கமே, விபச்சாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உண்டாகும் கொடுமைகளை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக தான்.http://tamil.boldsky.com/insync/life/2017/girls-paradise-case-global-study-on-dark-side-prostitution/slider-pf83264-014320.html
 8. நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே குழப்பம், இயக்குனர் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். கதை என்னதான் மறைந்த ஓரு மனிதரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்குவதை நோக்கி எழுதப்பட்டாலும் ட்ரைலரில் இடம் பெற்ற இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சியையும், பந்தடித்து விளையாடிய காட்சியையும் படத்தில் கடுகளவு கூட காண்பிக்கவில்லை, ரிச்சர்ட் பெலேவின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, அவர் என்னதான் இயக்குனரின் நடிகராக இருந்தாலும் பட இடங்களில் தேவையான உடல் மொழியை தரவில்லை. வசன உச்சரிப்பில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் வெளிநாட்டு நடிகர் என்பதால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் காட்சிகளில் தர வேண்டிய முகபாவங்கள் மற்ற நடிகர்களிடம் மிஸ்ஸிங். சுதா சேஷையன் எம்பாமிங் செய்யப்பட்டதை விளக்கியது ஏற்றுகொள்ள முடிந்தாலும், அவரை அழைக்கப்பட்ட நேரமும், செய்த நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது இயக்குனர் சறுக்கிய இடம். மேலும் அதற்குண்டான அவசியத்தை விளக்காதது கதையில் விழுந்த மெகா சைஸ் ஓட்டை. படத்தில் நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருப்பது ஓரளவுக்கு நன்றாக இருந்தது. முக்கியமாக விசிடிங் கார்டு பற்றிய கேள்விக்கு பெலே அளித்த பதில் வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. வாங்கியவரை தெரியாது ஏதோ ஜோசியர் போல் இருக்கிறது என்று சொல்லும் பொழுது தியேட்டரில் ஒரே ஆரவாரம்.ஆளுநர் பார்த்தார், பார்க்கவில்லை என்று ஒவ்வொரு கேரக்டரும் மாற்றி மாற்றி சொல்லுவது கதையை மேலும் குழப்புகிறது. எடிட்டர் கோட்டை விட்ட இடம் போல....பின்னணி இசை நன்றாக இருந்தது. முழ படத்திலும் பின்னணியில் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற பாடலின் ரீ மிக்சிங்கை வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்."சின்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", "சின்னம்மா என்றழைக்காத டயர் நக்கிகள் இல்லையே" பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும்.மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்றால்......இல்லைவிகடன் ரேட்டிங் 0/100மொத்தத்தில்அப்போல்லோவின் அல்வா-------தயிரில் ஊறிய குலாப் ஜாமூன் http://www.kummacchionline.com/2017/02/blog-post_7.html
 9. கவனம் அண்ணை, பெரிய வீட்டுக்கு தெரிஞ்சால் சிக்கலாகும்.
 10. இப்ப சில டாக்டர் மற்றும் யூனிவர்சிட்டி விரிவுரையாளர்களும் இப்படி வாகன இறக்குமதி பெர்மிட்ஐ வேறு சிலருக்கு விற்பதாக கேள்வி. உண்மை பொய் தெரியாது.