பிரபாதாசன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  731
 • Joined

 • Last visited

 • Days Won

  1

பிரபாதாசன் last won the day on June 9 2015

பிரபாதாசன் had the most liked content!

Community Reputation

119 Excellent

About பிரபாதாசன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஈழம்

Recent Profile Visitors

1,081 profile views
 1. மக்களுக்கு உண்மையாக இருந்து ஒரு அரணாக இருந்தவர்களை எப்படி மறப்பது ... இன்றைய இளையவர்களின் திறனில் அது தெரிகிறது ......
 2. இணைந்த வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரமற்ற எந்த தீர்வை ஆதரிப்பது என்பது நம் கைகளால் எமது கண்ணை குத்துவது போன்றது. மற்றது போர்க்குற்ற விசாரணை மற்றும் புலிகள் மீதான இவரின் பார்வை . புலிகளை குற்றம் சொல்ல இவர் என்ன மாவீரரின் தந்தையா? சுமந்திரனின் நகர்வு தெளிவாக தெரிகின்றது ... இவர் ஏன் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை எதிர்த்தார் ? ரணிலுக்கு பிடிக்கவில்லை அதனால் எதிர்த்தார் . இது போதாதா இவரை நாம் நம்பலாமா அல்லது இல்லையா என தீர்மானிப்பதற்கு
 3. மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன. அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதென மகிந்தராஜபக்­ தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றவேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவரைக் கடந்து ஒரு படி மேலாக செல்ல முற்படுவதும் போலத் தெரிகிறது. அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரின வாத சிந்தனைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் சிங்களத்தை அரச மொழியாக்குவதென அறிவித்தார். ஆக, பண்டாரநாயக்கவின் அறிவிப்பு உன்னை விட நான் பேரினவாதி என நிரூபிப்பதாக இருந்தது. இந்தக் கலாசாரம் இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதைப்போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டாலும் அது தொடர்பில் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்போம் என மகிந்த ராஜபக்­ தரப்பு பகிரங்கமாக கூறிவிட்டது. இந்நிலையில் நீங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்த்தால் அதனை அப்படியே கைவிடுவதுதான் ஒரே வழியயன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய தென்பது நீ எதிர்ப்பதற்காக மட்டுமல்ல என்னுடைய நினைப்பும் அதுதான். எனவே உன்னுடைய எதிர்ப்பை விட நான் முந்திக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கு முடிவு கட்டுவேன் என்பதாக நிலைமை இருக்கிறது. இத்தகையதோர் முடிவுதான் வரும் என்பதை தமிழ் மக்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதிமொழியும் அவர்கள் ரணில்விக்கிரம சிங்கவுக்கு வழங்கிய ஆதரவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளியாகிவிடுமோ என்ற பிரமையை ஏற்படுத்தியிருந்ததும் உண்மைதான். எதுஎவ்வாறாயினும் வெறுங்கையோடு இலங்கைபுத்தான் என்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு தமிழ் மக்களை நோக்கி வருகிறது. இங்குதான் தமிழ் மக்கள் தங்களை உசார்படுத்தவும் தங்களை வீரச் செறிவுள்ளவர்களாக்கவும் வேண்டிய தேவையுள்ளது. கேள்வி கேட்பதும் அவற்றுக்கு பதில் தருவதென்பதும் நெறிப்படுத்துவதற்கான ஒருவழிமுறையே அன்றி கேள்வி கேட்பது மட்டுமே உரிமையைப் பெற்றுத் தருவதாக ஒருபோதும் அமையாது. ஆகையால் ஒரு புதிய வழியைத் தேடுகின்ற மக்களாக தமிழ் மக்கள் தங்களை மாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் எங்களை ஆற்றுப்படுத்துமேயன்றி அது பெரும்பான்மை சார்ந்தவர்களையோ அன்றி ஆட்சி அதிகாரத்தையுடையவர்களையோ ஒருபோதும் அதட்டாது. அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம். எமக்குப் பலமாக இருந்தவர்களை நாம் இழந்துவிட்டோம். எனவே அவர்கள் கூறியதை ஏற்றுவாழ்வது தான் எங்களின் வாழ்வாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். இங்குதான் தமிழர்கள் இராஜதந்திர ஆயுதத்தை ஏந்தியும் தமக்கு ஏற்பட்ட இழப்பு என்ற மறையை பலமாகவும் தொட்டு புதிய பாதையில் சர்வதேசத்தை நோக்கியதான நகர்வை ஆரம்பிக்க வேண்டும். இதை விடுத்து தத்துவம் கூறுவதும் தர்ம உபதேசம் செய்வதும் பேரினவாதச் சிந்தனையை ஒருபோதும் திருத்தாது. அவ்வாறு திருத்துவதாக இருந்தால் அது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே காரியமாயிருக்கும். எனவே நாங்கள் பலமாக இருக்கும்போது தான் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சிந்திப்பார்கள். அந்தச் சிந்தனை அமுலாகவேண்டுமெனின் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டியது அவசியமாகும். http://www.valampurii.lk/valampurii/content.php?id=17326&ctype=news
 4. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. யுத்தம் முடிந்த கையோடு இலங்கை அரசு குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்தன. அதில் குறிப்பாக வன்னி யுத்தத்தின் கொடூரம் தமிழ் இனஅழிப்பாக இருப்பதாக மனித நேய அமைப்புக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தன.தவிர யுத்தத்தின் கொடூரங்களை வெளிப்படுத்துகின்ற கண்கண்டசாட்சியமாக சனல் 4 காணொளிகள் அமைந்திருந்தன. கூடவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழினத்துக்கு நேர்ந்த அவலத்தை சர்வதேச வீதிகளில் இறங்கி உரக்கக் கூறினர். இதன் விளைவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தை நோக்கி தனது பார்வையை திசை திருப்பி இருந்தது. எனினும் தென்பகுதிப் புத்திஜீவிகளும் அரசியல் விற்பன்னர்களும் தமிழ் மக்களுக்குச் சார்பாக சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்தியலை முறியடிக்க ஆட்சி மாற்றமேவழி எனத் தீர்மானித்தனர். மகிந்த ராஜபக்­ தரப்பை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி, புதிய ஆட்சியை அமைப்பதனூடாக சர்வதேசத்தின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற அவர்களின் உன்னத தயாரிப்பு நடைமுறையாகியபோது அவர்கள் இலக்கை அடைந்தனர். இந்த இலக்கை அடைவதற்கு தமிழ் அரசியல் தலைமையும் வகிபங்காற்றியமைதான் எங்களிடம் இருந்த இராஜதந்திரப் பலவீனம் என்பதை நாம் இங்கு கூறித்தானாக வேண்டும். இனப்பிரச்சினை தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளை விதித்து அதை நிறைவேற்றப் பணித்தபோதிலும் அவை எதுவும் கருத்தில் எடுக்கப்படவில்லை. மாறாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் போதாது என்ற கருத்து இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டது. இங்குதான் தமிழ் அரசியல் தலைமை மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைக்கிறது. ஆம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை தமிழ் அரசியல் தலைமை முன்மொழி யும் அளவில் நிலைமை எமக்குப் பாதகமாகியது. இந்தக் காலக் கடத்தல்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலைமைகளை உரு வாக்கியது என்பதே உண்மை. வன்னி யுத்தம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் வடுக்களையும் வேதனைகளையும் தமிழ் மக்கள் சுமந்து கொண்டுள்ளனரே தவிர, எங்களுக்கு நேர்ந்தகதியை சர்வதேசம் மறந்து போகும் அளவிலான ஒரு சூழ் நிலையை காலத்தின் நீண்ட அசைவு உருவாக்கி விட்டது. இதுதான் இன்றைய நிலைமை என்ற கட்டத்தில் தமது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகளை தமிழ் மக்கள் எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்ற கையோடு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என நம்மவர்கள் கூறினர். ஆயினும், இதுவரை அதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை. இதுவே நிலைமை எனும்போது எங்களுக்கான உரிமை, எங்களின் வாழ்வு, எங்களின் இலக்கின் எதிர்காலம் பற்றி தமிழ் மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்தச் சிந்தனை அரசியல் என்ற பக்கச் சார்பற்று ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிப் படி செயற்படுவதாய் இருக்கும்போது காலம் கடந்தேனும் உரிமையை வலியுறுத்தி அந்த இலக்கை அடையும் பாதையில் பயணிக்கக் கூடியதாக இருக்கும். எதற்கும் இதுவரை நடந்தது சரியா? என்ற ஆய்வினூடு மனச்சாட்சியை முன்னிறுத்தி தீர்மானம் எடுப்பதுதான் தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும். http://www.valampurii.lk/valampurii/content.php?id=17343&ctype=news
 5. சுமந்திரன் செய்வது எல்லாமே பச்ச துரோகம் , இதில உங்களுக்கு பிரித்து சொல்ல நீங்கள் குழந்தை அல்ல . தமிழரின் நிலையை 1956 கு கொண்டு செல்லும் சுமந்திரன் , வேறென்ன வேண்டும் .
 6. சம் சும் , வழக்கு தொடுக்க முடியுமா , நீங்கள் உண்மையான மனிதர்கள் என்றால் வழக்கு தொடுத்து இந்த நியமனத்திற்கு தடை போட வேண்டும் ..... சும்மா மக்களை ஏமாற்ற வேண்டாம் .....
 7. வடக்கு கிழக்கை இணைத்து காணி போலீஸ் அதிகாரங்களை மாகாண முதலைமச்சருக்கு கொடுப்பீர்களா . இதனை உங்கள் சிங்கள மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவார்களா ? இங்க சும் தமிழ் மக்களை ஏமாற்ற நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்
 8. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ..... நம்பிடடம் சும் ..
 9. சுமந்திரனின் தற்போதைய மக்களுக்கு நன்மையளிக்கும் செயல் - கஞ்சா காச்சுவோருக்கு ஆதரவாக இருப்பது . அதாவது தமிழ் மக்களை அழிப்பதட்கு சிங்களவருக்கு உதவும் இன்னுமோர் செயல் ... இவர்தான் justinin கனவான் ..... கூட்ட்டமைப்பு பிழைப்பது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி .....வாக்கு சேர்ப்பது , சரியான தலைமைகள் இல்லாததால் வென்றார்கள் . அடுத்த தேர்தலில் விக்கி ஐயா அவர்கள் நின்றாள் சுமந்திரன் துரத்தப்படுவார் ....justin பார்ப்பம் எப்படி சுமந்திரன் வெல்வார் என்று. முடிந்தால் விக்கி ஐயாவுடன் நின்று பார்க்கட்டும் .....
 10. அடுத்த தேர்தலுக்கான புலம்பல்கள் ஆரம்பம் ........ வடிவேல் பாணியில் கேட்க்கிறன் ... எங்க புலிகள் மீது தப்பு சொல்லித்தான் பாரேன் ....
 11. முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் . புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது .
 12. விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற சுமந்திரன் வெளிப்படையவே செயல்பட்டார் , அது ஏன் என்று கூற முடியுமா ? இதன் பின்னணி ரணில் மைத்திரி . அவர்களை அனுசரித்து போகாத கொள்கை கொண்டதால் . இப்ப உள்ள தலைமைகளில் சிங்களத்தை வெளிப்படையாகவே எதிர்ப்பது விக்னேசவ்ரன் , கஜேந்திரகுமார் . அதனால் சிங்களம் இவர்களை எதிர்க்கின்றது . சிங்களத்துடன் ஒட்டி உறவாடி என்னத்த சாதிக்க முடியும் என்பதை எங்கள் வரலாறு சொல்லும் . இனியும் இது முடியும் என்றால் அதனை விட முட்டாள் வேறு யார் . சுமந்திரன் சொன்ன அரசியல் திருத்தம் பாராளுமன்த்தில் நிறைவேற்ற முடியாது , மஹிந்த , மக்கள் முன்னணி இதனை தெளிவாக சொல்லி விடடார்கள் . வேறென்ன வேண்டும் சுமந்திரனின் திறமையை புகழ்வதட்கு .
 13. சுமந்திரன் எப்படி மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலின் உதவியுடன் செய்தது இந்த ஊர் அறிந்த விடயம் இதனை பட்டியல் போட தேவை இல்லை . இதனை தெரியாதவர்கள் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணிலின் உதவியுடன் உடைத்தவர் இந்த விரோதி சுமந்திரன் . வேறென்ன ஆதாரம் வேண்டும் . தமிழ் மக்கள் எப்பவுமே இணையக்கூடாது என்பதில் சிங்களம் எப்பவுமே தெளிவாக உள்ளது , இப்ப இதனை நடத்தி முடித்தவர் தான் சுமந்திரன் என்கின்ற துரத்த வேண்டிய அரசியல்வாதி , இதனை ஆதரித்த சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் . 10 வருடத்தில் சுமந்திரன் செய்ததை விட இனி என்ன செயவர் . எங்களின் கோவணத்தை உருவாததுதான் மிச்சம் . அடுத்த தமிழ் ஏமாளி பட்டியலில் சேரவேண்டியவர் . இப்ப உள்ள தலைவர்களில் விக்கினேஸ்வரன் மட்டுமே கொஞ்சமாவது செய்ய கூடியவர் . இப்ப உள்ள மாகாணசபையால் என்னத்த செய்யமுடியும் எது முடியாது , ஆளுநரின் அதிகாரம் எப்படி 13 வது திருத்தத்தில் உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்த்தவர் . இதட்கு முதலமைச்சர் நிதியத்தை எவ்வாறு ஆளுநர் தடுத்தார் என்பது எல்லருக்கும் தெரியும் . 1987 சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் இதனை மக்கள் முன் தெரிவித்து இருந்தார் . அதனை விக்னேஸ்வரன் என்ற சட்ட மேதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்தார் செயலில் . சுமந்திரன் என்கின்ற ******* *******. ஆதரிப்பது எங்களுக்கு நாம் வைக்கும் பொறி .
 14. வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்திலும் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்நியமனம் ஜனாதிபதி மைத்திரிக்கு சர்வதேசத்தின் பார்வையில் நன்மதிப்பைக் கொடுக்கக்கூடியதாகும். அதேநேரம் ஆளுநர் தொடர்பில், தமிழர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்ற கருத்து நிலையும் ஏற்படவே செய்யும். இவை ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனின் முன் பாரிய பொறுப்புக்களும் சவால்களும் உள்ளன என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. அதாவது சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருக்கின்றபோது அவர் அரசிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்கும், தமிழர் ஒருவர் ஆளுநராக இருந்து கொண்டு அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் பார்க்கின்ற பார்வைக்குமிடையில் நிறையவே வித்தியாசம் இருக்கும். அதேநேரம் தமிழர் ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் ஒரு சம்பிரதாயத்துக்குக் கேட்க; அது நிஜமாகிப் போன நிலையில், புதிய ஆளுநர் ஜனாதிபதியின் பக்கமா? அல்லது குறித்த தமிழ் அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறாரா? என்ற கோணங்களில் தமிழ் அரசியல் தரப்புகளின் விழிகள் படம் பிடிக்கவே செய்யும். இதற்கு மேலாக, வடக்கின் ஆளுநராகத் தமிழர் ஒருவர் பதவியேற்றிருக்கும் இவ்வேளையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசின் ஆட்சிக்காலமும் முடிவுற்ற நிலையில் உள்ளது. எனவே வடக்கு மாகாணத்தின் அத்தனை செயற்பாடுகளிலும் இயங்கு நிலைகளிலும் புதிய ஆளுநர் நேரடிப் பொறுப்பை உடையவராக இருப்பார். இது ஆளுநரின் சுமுகமான பணி நிலைக்குப் பாரிய சுமையாக இருக்கும் என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும். தவிர, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியை பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன்; வடபுலத்து மக்களின் கஷ்ரங்களை நேரில் சென்று அறிந்து அந்த மக்களின் விமோசனத்துக்கு தன்னால் முடிந்தளவு உதவியும் ஒத்தாசையும் நல்கவேண்டும். அதேநேரம் ஆளுநராக வந்திருப்பவர் ஒரு தமிழர் என்பதால்; விழுந்த பாட்டில் குறி சுடலாம் என்று நினையாமல், அனைத்துத் தரப்பினரும் அவருக்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, வடக்கின் ஆளுநர் ஒரு தமிழராக இருப்பதுதான் பொருத்தம் என்பதை தென் பகுதிக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தத் தார்மீகப் பொறுப்பை அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் நிர்வாகக் கட்டமைப்புகளும் செய்தாக வேண்டும் http://www.valampurii.lk/valampurii/content.php?id=17213&ctype=news