manthahini

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  52
 • Joined

 • Last visited

 • Days Won

  1

manthahini last won the day on May 17 2014

manthahini had the most liked content!

Community Reputation

72 Good

About manthahini

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Female

Recent Profile Visitors

483 profile views
 1. நன்றி. டெங்குவால் மக்கள் சாவுக்கு பலியாகிக்கொண்டிருக்க அதனையிட்டு கவலைப்படாமல் ஆளுக்காள் நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் வேதனையாக இருந்தது.அதனால்தான் இந்த வரிகள்.
 2. டெங்குவே உன்னைச்சுற்றி நாளும் நாளும் உயிர்களை பறித்து கோர ஆட்டம் போடும் டெங்குவே! உன் கொட்டத்தை அடக்கி, மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை. உன்னை வைத்து அரசியல் நடத்த ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள். கேட்க யாருமில்லை என்பதால் நீயும் ஆவேசமாய் உயிர்களை பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய். ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து, அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால் நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும் மக்களை காத்திட யார் வருவார். உன்னிடமிருந்து மக்களை காத்திட எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை. உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள். மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல் வீதிக்குப்பைகளை துப்புரவு செய்தல், தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என ஆயிரம் நாடகங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் உயிர்களோ தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. இதுவும் போதாது என இன்னுமொரு கொடுமை. ஏழைமக்களுக்கு இலகுவாக கிடைக்கும் சித்தமருந்தாம் நிலவேம்பு குடிநீரும் ஆகாது என விளக்கம் சொல்ல பலர் புறப்பட்டு விட்டார்கள். உண்மையிலேயே உன்னிடமிருந்து மக்களை காக்க நினைப்பவர்கள் செய்யவேண்டியது என்ன என சிந்தித்தார்களா? தமது அனைத்து வழமையான நிகழ்ச்;சிகளை சில நாட்கள் நிறுத்திவிட்டு, டெங்கு ஒழிப்புக்கான பரப்புரைகளை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் தயாரா? தங்கள் அரசியல் கூத்துகளை ஒதுக்கிவிட்டு மக்கள் உயிர்களை பாதுகாக்கும் வேலையில் முழுமையாக இறங்கி வேலை செய்ய அரசியல்வாதிகள் முன்வருவார்களா? சமூகசெயற்பாடுகளில் ஈடுபடுவதாக சொல்லும் திரைப்படத்துறையினர் இதற்காக நேரம் ஒதுக்குவார்களா? இத்தனையும் நடந்தால் மக்கள் உயிர் காக்கப்படும்? நடக்குமா இது? மந்தாகினி
 3. வேதனைகள் இப்படி எழுத வைக்கின்றது. நன்றி வலிகளின் வரிகள். நன்றி நன்றி
 4. உண்மை. எங்கள் மக்கள் அனுபவிக்கும் துயரம் ஒன்றல்ல.இரண்டல்ல. ஓராயிரம். பொருளாதாரப்பிரச்சன.சமூகப்பரச்சனை.உடல்வலிகள்>உளவலிகள். இப்படி எத்தனையோ. இதற்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். ஆம். எமது உறவுகளின் வலிகளை எல்லோரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை
 5. 1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எத்தனை பேரால் உணரப்படும். உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில் உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள் கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள் சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அனுதினமும் கண்ணீருடன் போராடும் எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் நீளும் பயணங்கள் தொடர்கின்றன சொந்த நிலத்தில் வாழ முடியாமல் தங்கள் நிலத்துக்காக தாமே போராடும் முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன நாளும் நாளும் போராடும் நிலையில் அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை ஆனாலும் அயராது போராடும் அவலநிலை யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்? இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும் அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில் நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில். எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு பிள்ளைகளை பிடித்து செல்வானோ என தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை. பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற வழியே இல்லையா என அன்னையர்கள் ஏங்கி தவிக்கும் அவலம். உறவுகளை பறிகொடுத்துவிட்டு உள்ளம் உடைந்து உருக்குலைந்து நடைப்பிணமாக வாழும் கொடுமை. இதுதான் எம் மண்ணில் இன்றைய மக்களின் அவல வாழ்நிலை. புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு நகரும் அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? உலகே உனக்கு கண்ணில்லையா என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது. உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள் எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை எண்ணிட ஏன் மறந்தோம் நாம்? பட்டால்தான் வலிகள் புரியும் என்பது மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை. சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும் அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து கண்ணீர் சொரிய முடிகின்ற எம்மவர்கள் பலருக்கு உண்மை மனிதர்களின் துயரம் எப்படி புரியாமல் போனது? உறவுகளின் இழப்பின் வலிகளை உணர முயல்வோம். தவித்து துடிக்கும் அவர்களுக்கு தோள்கொடுத்து துணைநின்று வலிமை அளிக்க நாம் உள்ளோம் என வாக்கு கொடுப்போம். அவர்கள் வாழ்வின் விடிவுக்காக உறுதியுடன் உழைப்போம் என உரத்து சொல்வோம்,செயற்படுவோம் மந்தாகினி
 6. நன்றி. ஏமாற்றுக்காரர்களை எண்ணும்போது வேதனையாக இருந்தது. அதனால் எழுதினேன்

  1. Show previous comments  1 more
  2. manthahini

   manthahini

   தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  3. suvy

   suvy

     வணக்கம் சகோதரி...!

   பரவாயில்லை தொடர்ந்து எழுதுங்கள்...!

   அன்புடன் சுவி...!

  4. manthahini

   manthahini

   தொடர்ந்து எழுதுகின்றேன். ஊக்கம்தருவதற்கு மீண்டும் நன்றிகள்

 7. எழுதிட மறுக்குது மனக்கோல் எழுதிட எடுத்தேன் எழுதுகோல் இயங்கிட மறுத்தது மனக்கோல் எழுதி எழுதி என்ன பயன் எதற்கும் தீர்வு இல்லை எனின் நாளும் நாளும் தொடருது அவலம் தடுத்திட வழி காண எவருமில்லா துயரம் போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம் முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும் அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான் தமிழர் தலைவிதியோ என்று எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல் வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என வெதும்புகின்றது உள்ளம் சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச இருக்கைகள் காப்பவர்களும் தான் அதிகமாகிவிட்டனர் என்னும்போது அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை. மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு உடந்தையாளர்கள்தான் கூடுமானவர்களோ? உண்மை உணர்வுடன் நீதி கேட்டு போராட பக்கபலமாக மக்களுக்கு யாருமில்லையோ? மக்களின் துயரநிகழ்வுகளில் கலந்து கொண்டு அங்கும் அரசியல்மேடை போட நினைப்பவர்கள் நித்தம் துயரத்துள் தள்ளாடும் மக்கள் நிலையை எப்படி உணர்வார் உதவிட வருவார்? சாவையே காசாக்க துணிந்திடும் எத்தர்கள்- மக்கள் வலிகளையே படமாக்கி விற்றிட முனையும் கொள்ளையர்கள் போலி வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டி அரசியல் ஆதாயம் தேடும் கொடியவர்கள் நடுவே மக்கள் வாழ்வு. நச்சுப்பாம்புகள் நடுவேயும் கொடிய விலங்குகள் மத்தியிலும் அச்சமின்றி எவரும் வாழ்ந்துவிடலாம் -பதவி மோகம் பணவெறி பிடித்தலையும் மனிதப்பண்பில்லாதோர் நடுவே பயமின்றி நிம்மதியாக வாழ முடிந்திடுமா? நீதிதான் கிடைத்திடுமா? மந்தாகினி
 8. பதின்மூன்று..பதினாலு., பத்தொன்பது என்று, தீர்வுத் திட்டங்களின், வரிசை நீள்கின்றது! உண்மைதான். திட்டங்கள் என்ற பெயரால் ஏமாற்றப்படும் நாடகங்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அநீதியை பொறுக்க முடியாமல் மக்கள் எழுந்து கொண்டு போராட்டங்களை நடத்த முற்படும் வேளைகளிலெல்லாம் சில கறுப்பு ஆடுகள் புகுந்து கெடுத்துவிடும் கொடுமையும் அல்லவா தொடர்கின்றது
 9. மே 18...!!!(கவிதைச்சரம்)

  தங்களுக்காக குரல் கொடுப்போம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் எம் மக்களை காப்பாற்ற இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் காத்திருக்கவேண்டும்? இங்கேதானே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றார்களே
 10. மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உறவுகள் மூச்சடங்கியது அன்று இரசாயன குண்டுகளாலும் எறிகணைகளாலும் எங்கள் உறவுகள் உயிர்கள் பறிக்கப்பட்டன இன்று போலி உறுதிமொழிகளாலும் ஏமாற்றுப் பேச்சுக்களாலும் மக்கள் சிந்தனை முடக்கப்படுகின்றன போதைப்பொருட்களால் எம்மினம் சிதைக்கப்படுகின்றது வாள்வெட்டுக்களும் பாலியல் வன்கொடுமைகளும் நாளாந்த நடைமுறைகளாக்கப்பட்டு மெல்ல மெல்ல எம்மினம் அழிக்கப்படுகின்றது நிலத்தடிநீரை நஞ்சாக்கி நிலங்களை பாழாக்கி மக்கள் வயிற்றிலடித்து அலைந்து உலையவைக்கப்பட்டு எம்மினம் கருக்கப்படுகின்றது ஒரு சில நாட்கள் சில நொடிப் பொழுதுகளுக்குள் அன்று நடத்தப்பட்ட இனப்படுகொலை ஆறாண்டுகளுக்குள் அன்றாடம் தொடரும் அவலமாகிவிட்டது எம்மக்களின் வலிகள் இன்று விலைப்பொருளாக்கப்படும் கொடுமை உலப்பரப்பெங்கும் மலிந்துவிட்டன மனிதாபிமானம் மரணித்த நிலையில் நீதியைத் தேடி எங்கே போவோம்? மீண்டும் உருவெடுக்க தொடங்கும் போராட்டம் முளையிலேயே கிள்ளப்படும் ஆபத்து தொடரும் நிலையில் நீதிகேட்கும் போராட்டம் எப்படி தொடரும்? தொடரும் என்ற நம்பிக்கை இன்னும் சாகவில்லை அடித்தால் அழும் இனமாக வாழும்படி எம்மாவீரர்கள் சொல்லிச் செல்லவில்லை விடியும் என்ற உறுதியுடன் இறுதிவரை தாய்மண்ணில் நின்று மடிந்த எங்கள் உறவுகளும் உயிர்ப்புடன் நிமிருங்கள் என்றுதான் உணர்த்தி சென்றார்கள் அதனால், பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றப்படுவதும் கொடியவதைகளால் ஒடுங்கிக்கிடப்பதும் இனியும் தொடராது முடக்க முடக்க மக்கள் எண்ணம் வலுக்கும் சிதைப்பவர்களை உலகமன்றில் நிறுத்தும் வல்லமை பெறுவர் எம் மக்கள் மந்தாகினி
 11. ஆசிரியரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்
 12. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம் என நாம் சோர்ந்துவிடாமல் என்னஎன்ன வழிகள் உண்டு என தேடினால் நல்ல வழி ஒன்று கண்ணில் தென்படலாம் என்ற நம்பிக்கையுடன்தான் தாயகத்தில் எம் உறவுகள் தாங்களே அந்த வழியைத்தேடி புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதிலாவது ஒன்றுபட்டால் நல்லது.நடக்குமா ? நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன் நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்
 13. இன்று அனைத்துலகபெண்கள்நாள். இன்று என்ன நடக்கும் என யோசித்தேன். வாழ்த்துக்கள்,சாதனையாளர்கள் தகவல் சொல்லுதல்,பெண்களை உயர்த்தி கூறுதல்,பெண்கள் மாநாடு என ஊடகங்கள் உட்பட பல நாடகங்கள் அரங்கேறும்.இதனை நினைத்தேன். எங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி பேச ஒருவருக்கும் நேரமில்லை. காணாமல்போகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளைத்தேடி கண்ணீருடன் நீதிகேட்டு அலையும் எங்கள் உறவுகளைப்பற்றி யோசிக்க எவருக்கும் மனமில்லையே. அவர்களின் உள்ளவலிகளை புரிந்துகொள்ள எவருமேயில்லையே