karu

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,794
 • Joined

 • Last visited

 • Days Won

  1

karu last won the day on December 8 2014

karu had the most liked content!

Community Reputation

145 Excellent

About karu

 • Rank
  Advanced Member

Contact Methods

 • Website URL
  http://www.thamilarivu.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Interests
  Tamil Poetry & literature

Recent Profile Visitors

2,068 profile views
 1. நீரில் பொருட்களை இடம்பெயர்த்துவது எப்போதும் இலகுவானது அதாவது சக்திச் செலவு குறைவானது. ஆனால் சில உள் நகர்களில் தரைவழிப்பாதை மட்டுமே பொருத்தமானதால் ரயில் மூல நகர்த்தல் அவசியமாகலாம். உல்லாசப் பிரயாணிகளைக் கொண்டு செல்வதற்கே இத்தகைய முறைகள் சிறந்தவை.
 2. வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் அவர்கள் கல்முனைக்குத் தெற்கே திராய்க் கேணி, மீனோடைக்கட்டு போன்ற கிராமங்களை வந்து பார்வையிடவேண்டும். அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழர்களின் காணிகள் நிறையவுள்ளன. அவற்றில் விகாரைகள் பௌத்த மடப்பள்ளிகளையமைக்கலாம். ஐயா சம்பந்தன் இதற்குத் துணைபோனால் எவ்வளவோ உதவியாக இருக்கும். ஆயிரந்தானென்றாலும் பௌத்தர்கள் தமிழர்களின் உறவினர்கள். இந்தத விடயத்தில்தமிழ் தேசியத்துக்குப் புறம்பே நின்று இது பற்றிச் சிந்திப்பது நல்லது. தமிழ்த் தேசியம் கல்முனைக்கு அப்பால் இல்லையென்பது யாவருக்கும் தெளிவாகத் தெரியும்.
 3. நாதமுனி! அவர்கள் இணைய முற்பட்டாலும் அவர்களை இணைப்பதா இல்லையா என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம். கிழக்கு மாகாண சபையை ஏற்கனவே தமிழர்கள் இழந்து விட்டார்கள். அதை இனித் திரும்ப மீட்டுக்கொள்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல. கிழக்கு மாகாணச் சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழர்கள் அதைத் தங்கள் வசப்படுத்த வேண்டும். அதில் குறியாக இருப்பதை விட்டுவிட்டு இத்தகைய சிறிய விடயங்களில் சிங்கள மக்களின் முகச்சுழிப்பையும் வெறுப்பையும் சம்பாதிப்பது சரியான அரசியலாகாது என நினைக்கிறேன். இந்த விடயத்தை அவர்கள் பாட்டில் விட்டுவிடுவதே சிறப்பு.
 4. இன்று தமிழீழத்தின் வீரமங்கை அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத் தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும் தாங்குவன் நானெனக் கூறியே பாயும் புலி எம் திலீபனும் - பெரும் பட்டினிப் போரைத் தொடங்கவே இந்தியச் சோதரர் இஃதினை எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள் முந்தைய வாக்குறுதி தனை - விட்டு மோசங்கள் செய்யத் தொடங்கினர் சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள் தேச விடுதலைப் போரினைத் - தங்கள் சொந்த நலன்களைப் பேணவே சொதப்பிடலாமென எண்ணினர் நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள் நன்மைகளுக் கொரு காப்பிலை ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில் ஆயிரமாய்க் குடியேற்றலும் சாக்குச் சமாதானம் கூறலும் சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப் போக்கினர் காலம் திலீபனோ - தன்றன் பொன்னுடல் தேயத் தொடங்கினான் மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று மன்னவன் மண்ணின் விடுதலைத் தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ தேசம் அழுது துடித்தனள் பாயும் புலி பசும் புல்லினை - தன்றன் பட்டினி போக்கப் புசிக்குமோ - அட வாயில் வயிற்றில் விடுதலைப் பசி வாட்டத் துடித்தது அவனுயிர் காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன் கருணை உரைத்த உயர் நிலம் - பச் சோந்திகளின் புதரானதால் - எங்கள் சோகத்தை யாரும் மதித்திலர் ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு) என்ன எனத் திமிர் கொண்டுமே சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி செய்தனர் எம்மை ஒடுக்கவே நீருமருந்த மறுத்துமே - கொடு நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப் பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள் பாலகன் தன்னுயிர் நீத்தனன் ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில் ஈரமில்லாதவரோடினிக் - கதை ஏதென ஈழம் தெளிந்தனள் அன்னை பூபதி இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின் எதற்கினி வாழ்வெனக் கென்றுமே தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு தாய் எழுந்தாள் அந்த நாளிலே அன்னை அவள் பெயர் பூபதி - தன் ஐம்பத்தியாறு வயதிலே உன்னி விடுதலைக் காகவே - தன் உணவை மறுத்தனள் சாகவே பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ பூமியிற் சோகம் கவிந்தது சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச் சேனை பெருகிச் சிறந்தது வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட வானர சேனையிற் பாய்ந்தது தாயவள் காளி விழித்தனள் - இந்தத் தாரணி ஆடச் சிரித்தனள்
 5. தற்போது ஜெயலலிதாவையும் மாட்டிவிட்டார்கள்.
 6. இந்தக் காலத்தில் குற்றவாளிகளென்று அப்பாவிகளைத் தண்டிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி எத்தனைபேர் சிறையில் வாடுகிறார்கள். அப்படிப் பிரேமானந்த சுவாமியின் கேசும் இருக்கக்கூடும். முதலமைச்சர் சிவி அவரை நிரபராதியென்கிறார். அவர் ஒரு பழைய சுப்பிரீம் கோட் நீதிபதி. அரசியல் ஆதாயம் பதவியென்று எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கிறாரென்றால் அதையிட்டுச் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்தறிவதே மெய். அதை இந்திய நீதிமன்றம் செய்ததா என்று தெரியவில்லை.
 7. கவிதையை விரும்பிக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி. கவிதைக்கான எனது அடிக்குறிப்பில் ஒரு சிறு திருத்தம் -(ஏலேஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் கைவிட்டாய்).
 8. ஈஸ்டர் கவிதை பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன் வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர் செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே ஆக்கினையை உங்களுக்காய் அனுபவிப்பேன் - செய்யும் ஆட்களுக்கும் மன்னிப்பைப் பெற்றுக் கொடுப்பேன் தூக்கிச் சிலுவையிலே தொங்க வைத்தாலும் - அந்தத் துயர் பொறுப்பேன் உமக்காய் உயிர் துறப்பேன் தட்டத் திறக்குமந்த அருட்கதவு - அங்கு தாழ்பணிந்து கேட்பவர்க்கு இல்லை மறுப்பு எட்டுத் திசையும் தேடும் இன்னலங்கில்லை - எங்கள் இதயத்துள் உள்ள அதற் கீடிணையில்லை. என்றுரைத்த இயேசு சுதன் ஆக்கினையினால் - ஏலே ஏலே லாமாசபக் தானி எனவே தன்துயரம் தாங்காமல் பரிதவித்தான் - அவன் தவிப்பினில் பங்கெடுத்துத் துயர் பகிர்வோம் இன்று சுதன் பட்டதுயர் நினைவில் வைத்தே - அதை ஈஸ்டர் என இவ்வுலகம் அனுஷ்டிக்குதாம் அன்று மனிதர் புரிந்த பாவமனைத்தும் - தாங்கி அற்புதனின் அன்புலகில் நிலைநிற்குதாம். (ஏலே ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் படைத்தாய்)
 9. நன்றி குமாரசாமி, நன்றி சுவி
 10. சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள். அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது. அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது. அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும். சித்திரை வந்தாள் நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும் தத்திமித்தா தையெனும் ஓசை – அட எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே சித்திரையாள் என்னிடம் வந்தாள். கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட மிட்டதனை எங்ஙனம் சொல்வேன் - பிடித் திட்ட பத முத்திரைகள் ஆயிரமாம் அன்னவளின் திட்டமென்ன என்பதறியேன். கச்சிறுக்கு மார்பழகு காட்டிடத் திமிர் அவளின் கைகள் பிடித்திட்ட பதத்தால் – ஒரு பொய்ச்சிரிப்பினூடு மருள் பொங்கிடத் தா தை தையென்றே போதையெழப் பாய்ந்த விதத்தால் அச்சிறுக்கி என்றனைத் தன் அடிமைகொள்ள வந்தளென்ற ஆத்திரத்தில் மோக மயக்கில் – பெரும் இச்சையொடு பாய்ந்தணைக்க என்னது சீ என்ற குரல் என் மனைவி என்ன கண்றாவி. நாள் முழுதும் வேலை கொஞ்சம் நானயர வேண்டுமென்றால் நாசமது உங்களின் தொல்லை – அட காலையெடுங்கள் நெடுகக் கனவு கண்டு கனவு கண்டு கண்ணயர வழியுமிங்கில்லை. என்றவளின் காதில் அடி இன்று புது வருஷமென்றேன் எங்களுக்கஃதில்லை விடுங்கள் – அது என்றுமினித் தையினிற்தான் எம்மினத்திற் கென்றனள் நான் என் கனவில் மீண்டு லயித்தேன். தை தை தை தை முதலே தமிழர் புதுவருடமெனத் தாளமிட்டுத் தத்தி உதைத்தாள் – அவள் செய் கைகள் யாவினையும் தௌிவாகப் பார்த்திருந்தேன் செய்தவள் என் அன்பு அகத்தாள்.
 11. ஏப்ரல் பூலுக்கு நல்லொரு செய்தி.
 12. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய புதுவையை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையைப் பதிவிட்டேன். அதனை யாழிலும் பதிலிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சூரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால் தேரிலேறிய தீந்தமிழாளவள் திலகமாகத் திகழ அவன் கவி பாரிலே தமிழீழப் பரணியைப் பாட வேண்டியதில்லை யென்றானது. காற்றையே கயிறாக முறுக்கியும் கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின் ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும் அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய இரத்தினத்துரை எம் கவி வாணனைப் போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம். வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும் வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய் தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை சாகஸங்கள் நடாத்த அறிந்திலான் கூழ் குடித்து அரைவயிற்றோடுதன் குடும்ப மோடினும் ஈழவிடுதலை நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான் நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்! வேறு: புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட் சத்திரமே எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே அல்லல் படுமெம் நிலையுரைத்த சொல்லேருழவா சீராளா எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி ஒளித் தூறல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி முழுத் தாரணியும் கழுவுண்ண முழுக்காட்டினை நின் கவியாலே! என்றும் நின்றன் இனியகவி ஈழமண்ணில் நிலை நின்றே நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும் நின்றன் புகழைப் பறைசாற்றும். முற்றும்.
 13. கிடைத்திருக்கும் இந்தக் கால அவகாசத்தினுள் எவ்வளவோ சாதகமான விடயங்களைத் தமிழர் அரசியல் நடத்திக் காட்டலாம். மனிதவுரிமைகளுக்கு மதிப்பளித்தேயாக வேண்டிய கடப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கையரசு தமிழர்களின் அறப் போராட்டங்களை இரும்புக் கரங்கொண்டு நசுக்க முற்பட முடியாது. சர்வதேசம் அல்லது ஐநா> தமிழர்களுக்குச் சொல்லாமற் சொல்லியிருக்கும் செய்தி இது. தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழீழப் பிரதேசங்களை மீட்டெடுக்கக்கூடிய புரட்சிகர(அறம் சார்ந்த) போராட்ட வடிவங்களைத் திட்டமிட்டு உருவாக்கி அரசை உலுக்க ஏற்ற சந்தர்ப்பமிது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராகவும்> வேலை வாய்ப்புகளில் தமிழர் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும்> அரசியற் கைதிகளின் விடுதலைக்காகவும்> காணாமற் போனோர் தொடர்பாகவும்> மேலும் பல கோரிக்கைகளi முன்வைத்தும் தீவிர தொடர் போராட்டங்களை இந்த இரண்டு வருட காலமும் நடத்த முடியும். சிலவற்றில் வெற்றிகாணவும் முடியும். அடுத்த இரண்டு வருடத்திற்குள் பொறுப்புக் கூறும் கடமையை ஏற்றுக் கொண்டுள்ள சிங்களப் பெரும்பான்மையரசு தனது இராணுவக் கெடுபிடிகளைத் தமிழர் மீது திணிக்க முடியாத நெருக்கடிக்குள் கொண்டு வரப்படடுள்ளது. மீறித் திணிக்க முற்படுமாயின் சர்வதேசத்திற்கு முகம் கொடுப்பது சங்கடமானதாய் விடும். ஆகவே இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவோமென்ற நிலையில் தமிழர்கள் ஆக்ரோஷமான (அகிம்சை?) அறப்போராட்டங்களைத் தொடங்க வேண்டும்.
 14. நடிகர் ரஜினி காந்த் வந்துதான் வீட்டுச் சாவிகளைக் கொடுக்க வேண்டுமென வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் நினைப்பது அவர்களின் உரிமை. ஏனென்றால் வீடுகள் அவர்களின் உடைமை. ஆனால். அவர் வந்தால் இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட்டுத்தான் போகவேண்டுமென எதிர்பார்ப்பது மடமையிலும் மடமை. வீட்டைப் பெறக் காத்திருப்பவர்கள் அதைக் கையளிக்க வருபவரை வரவேற்றுக் கெளரவிக்க வேண்டியது கட்டாயக் கடமை. ஆனால் இடையிலிருந்து கொண்டு சிலர் ரஜினியின் வருகையைத் தடுத்ததும்> சிலர் வா தலைவா! வா! என்று அவர் தலையில் கொதி கூழை அல்லது பாலை ஊத்த நினைப்பதும் கொடுமையிலும் கொடுமை.