hasan

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    105
  • Joined

  • Last visited

  • Days Won

    2

hasan last won the day on January 22

hasan had the most liked content!

Community Reputation

79 Good

About hasan

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

529 profile views
  1. நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.
  2. பவுத்த மதத்தை இழிவு படுத்த தங்களுக்கு போட்டியாக மோடி வந்துவிடுவாரோ என்ற கவலை தேரருக்கு.
  3. தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.
  4. நான் பல்கலை கழக படிப்பை முடித்தபின் தனியார் துறையில் வேலை செய்தேன். பின்னர் அரச வேலை கிடைத்தவுடன் அதற்கு மாற விரும்பியபோது எனது முதலாளி கையாலாகாதவன்தான் கவர்மெண்த்தில் வேலை தேடுவான் என்று போதித்தர். ஆனால் தமிழில் கோழி மேய்த்தாலும் கோரணமேந்தில் மேய்த்தால்தான் மவுசு என்று பழமொழி உண்டு. யாழ் பட்டதாரிகளின் நிலை என்ன என்று விளங்கவில்லை. கையாலாகாதவர்களா அல்லது கோரணமேந்தில் மேய்ந்து கொழுத்த சீதனத்தை எதிர்பார்கிறார்களா.
  5. An architect friend from Batticaloa submitted this article in 2004 Model Village This exercise is to evolve a model village layout suitable in north and east (dry zone) of Sri Lanka. UDA standards are basically adopted with additional requirements for housing in rural dry zone. This concept layout can be modified to local site configuration and conditions. Home unit A home is not just a shelter to protect human from outside environment. It has evolved for many centuries as a core element of social, cultural and economic development of an individual, family and the society. It reflects and symbolizes the status of a family in the society and the status of the society in the world. A complete package delivery of habitat by outsiders leads to disintegrate the traditional bond of the inhabitant to their house and land especially in suburban and rural areas. Therefore the participation of the occupant in the design and construction of their house is important for healthy physical and social environment. Government sponsored corporate housing in third world countries, where there is no room for development by the occupant, proved that these housing projects are the cause of many social, cultural environmental and economic problems of the urban society. These planed slums become eyesore of many cities in third world as well. The people, the main stakeholders of those developments, had the least influence in the shaping of their built environment. The occupant of the house should participate in every decision making exercise right from the beginning. Core House The basic concept of core house is to build villages by the villagers with the help of outside technical expertise. It tries to minimize the alienation of the people from the development of their own habitation. This ‘Core house’ provide minimum built spaces such as a room to store valuables, a kitchen and a toilet with various design options to develop in later stages whenever the user is able and willing to do it. The objectives of the Core House are to Make the end user an integral part of the design and development process of their habitat and environment to strengthen the sense of belongingness and ownership. Achieve variations in the end product to meet the need of the individual or family and to the environmental conditions. Create an interesting environment with variety of house forms in a scheme. Be cost effective with minimum construction work Make easy to change the use of space depend on the need of the individual user and environmental condition. The unit can be extended horizontally and vertically without compromising architectural style or form. The high roof space can be used to create an upper level with no change to the external façade. Linear extension of the high roof in all four directions will allow horizontal expansion. The verandahs around the rooms are provided at natural ground level with natural floor materials such as sand, mud or brick paving. The verandahs are essential and important element in this unit that- · act as a transitions space between private and public spaces · Provides an inviting homely entry to the house. · shade the internal rooms from hot outside · provide well ventilated open space for various family activities · allow to convert into room areas These units in a cluster can be located in any combination of various directions to fit the condition and create interest. This ‘core house’ is not designed for any particular subculture or environment. Therefore it may need to be changed to cater for the people and environment. Neighborhood Ten to twelve housing lots facing each other make a neighborhood. These lots should have minimum width of 12m and depth of 20m. The minimum frontage of 12 metre is required to ensure reasonable front façade for the house unit after leaving at least a metre setback from both sides for adequate separation between units. The depth of 20m is also required to have minimum of 6m front setback. The closed neighborhood provides: Security Sense of belongingness Social interaction Common large front area for communal activities such as children playing No traffic noise or disturbance Hamlet Hamlet is something between neighborhood and village. Six to eight neighborhoods can make a hamlet with common facilities such as Children play area Accessible roads Village Number of hamlet makes a village with common facilities. To make a village socially and culturally self sufficient the following facilities have be incorporated in the village.: A primary and nursery school A good size playground A small shopping area to cater the village community A market place A community centre with a library A medical centre Most of these common facilities can be located in one place to make a town centre. Locating this town centre closer to the main artillery road will make the centre economically viable by attracting users from outside the village. A sketch of the model village and unit design is attached.
  6. part of an article that I have written in 2004 Far higher than the material is the spiritual: far higher than function, material and technique stands Form. These three material aspects might be impeccably handled but – if Form were not – we would still be living in a merely brutish world. – Muthesius ஒரு மக்கள் குழுவின் கலாசாரமும் பண்பாடும் கட்டடசூழலின் அமைப்பை தீர்மானிக்கிறது. தொடர்சியாக மாற்றத்துக்குள்ளாகும் கலாசாரமும் பண்பாடும் கட்டடசூழலையும் மாற்றி அமைகிறது. ஆனால் அதே வேளையில் மாற்றியமைக்கப்படும் கட்டடசூழல் மக்களுடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதிக்கிறது. மாற்றியமைக்கிறது. அதாவது ஒரு கட்டடசூழல் மக்களின் கலாசாரத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. இது எவ்வாறு சாத்தியம் என்பதை நாடு விட்டு நாடு பெயர்ந்தவர்களை கிராமங்களை விட்டு நகருக்கு பெயந்தவர்களை பார்த்து புரிந்துகொள்ளலாம். எனவே சுயமரபு கலாசாரத்தையும் பண்பாட்டையும் பேண விழையும் மக்கள் தவிர்க்கவியலாது தமது சுய மரபு கட்டடக்கலையையும் நகர திட்டமிடலையும் மீட்டெடுப்பது அவசியமாகிறது. இது அத்தனை இலகுவான காரியமில்லை. ஐரோப்பிய ஆதிக்கத்தால் இடையிலே முற்றாக கைவிடப்பட்ட சுதேசிய நகர கிராம அமைப்புகள் கட்டட வடிவமைப்புகள் இயல்பான சமுக பொருளாதார தொழிநுட்ப மாற்றங்களுடன் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான வளர்சியை தவறவிட்டுள்ளது. இதனால் எமக்கென அடையாளப்படுத்தக்கூடிய வடிவமைப்புகள் அரும்காட்சியறை பொருளாகிவிட்டது. No man builds on voids, and a civilization that breaks with the style at its disposal soon finds itself empty-handed – Malraux நாங்கள் எங்கள் பாரம்பரிய கலைகளை அரும்பொருள் காடசியக்கத்தில் அந்நியர் பார்வையிட வைத்துவிட்டு எமக்கென ஒரு கட்டடக்கலை வடிவம் இல்லாதவராய் மேற்குலகிடம் கையேந்துகிறோம். எமது சமூகத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமில்லாத மேற்குலக கட்டட வடிவங்களை அச்சொட்டாக இறக்குமதி செய்து பெருமை பேசுகிறோம். தொடர்ச்சியான வளர்ச்சியை தவறவிட்டு அரும் காடசியக்கத்தில் அந்நியரை மகிழ்விக்க விறைத்துப்போய் இருக்கும் எமது பாரம்பரிய வடிவங்களை மீடடெடுக்க ஒரு பாரிய பாய்ச்சல் தேவையாகிறது. இந்த பாய்ச்சலை சாத்தியமாக்குவதற்கு ஆற்றலுள்ள வரலாறு கலாசாரம் பற்றிய பிரக்ஞய் உள்ள கட்டடக்கலைஞர்களும் அவர்களை ஏற்கும் மக்களும், அபிவிருத்தி பற்றி மேற்குலக நவகாலனித்துவ அணுகுமுறையை புரிந்துகொண்ட அரசியல் வழிநடத்தலும் அவசியமாகிறது. நவீன கலைவடிவங்களின் பொதுமையாலும் போதாமையால் மேற்குலக கலைஞர்கள் மூன்றாம் உலக நாடுகளின் பாரம்பரிய கலைவடிவங்களை பிரதி பண்ணும் போக்கு சம காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. காலனித்துவ அரசியல் சூழலில் முற்றாக ஒதுக்கப்பட்டு தேடுவாரற்று இருந்த கட்டடக்கலை வடிவங்கள் பின்னவீனத்தில் ஒரு அழகியல் அம்சமாகவேனும் பிரதிபண்ணப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனாலும் இந்த அழகியல் கூறுகளை உருவாக்கிய சமூகத்தின் அக புற சூழலை புரிந்து கொள்ளாமல் வெறும் புற தோற்றங்களை பிரதி பண்ணுதல் ஆரோக்கியமானதல்ல. இந்த வடிவங்களை அந்த சமூகம் தங்களுடைய புதிய சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்கும்போதே அதன் ஆத்மாவையும் வசப்படுத்தமுடியும்.;. சென்ற நூறாண்டின் பிற்பகுதியில் எகிப்திலே Hassan Fathy என்ற கட்டட கலைஞர் பாரம்பரிய எகிப்த்திய வீடமைப்பை வெற்றிகரமாக நவீன சமூகத்துக்கு ஏற்புடைய விதத்தில் அறிமுகப்படுத்தி சர்வதேச புகழ் பெற்றார். இந்த வகையில் இலங்கையில் Geoffrey Bawa வினதும் இந்தியாவில் Charles Correa, Balakrishna Doshi யினதும் பங்களிப்பு சர்வதேச கட்டடக்கலைஞரிடம் வரவேற்பை பெற்றது. உலகின் தலை சிறந்த கட்டடக்கலைஞர்கள் என்ற வரிசையில் முதன்முதலாக இலங்கையரும் இந்தியரும் சேர்க்கப்பட்டனர். ருகுணு பல்கலை கழகம், புதிய பாராளமன்ற தொகுதி போன்ற பல கட்டமைப்புகளால் பாரம்பரிய சிங்கள கட்டடக்கலைக்கு Geoffrey Bawa புத்துயிர் தந்துள்ளார். உலகின் தொன்மையான திராவிட கட்டடக்கலை மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. இருந்த போதும் காலனி ஆதிக்கத்தின் பின்னர் இதனை அறிமுகப்படுத்தவோ வளர்த்தெடுக்கவோ எவரும் முயலவில்லை. அப்படியான முயற்சிகளுக்கு நவீன கட்டடக்கலையின் கவர்ச்சியில் மயங்கிய மக்களும் இடம் தரவில்லை. ஆனால் மிகவும் கொச்சைத்தனமாக திராவிட அமைப்பில் உள்ள சில அலங்காரங்களை பிரதிபண்ணி புதிய கட்டடங்களின் தூண்களில் ஒட்டிவிட்டு அதுதான் திராவிட கட்டிட கலை என்று பெருமை படுவது நிறையவே நடக்கிறது. ஆனால் மேற்கு நாடுகளில் நவீனத்தின் வெறுமையால் சலிப்படைந்து பின்நவீன யுகத்தில் பாரம்பரியங்களில் அடையாளங்களை தேடும் புதுமை சகல துறைகளிலும் காணக்கிடைக்கிறது. நவீன கட்டடக்கலைகளின் பிதாமகரான Frank Lloyd Wright சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே திராவிட கட்டடக்கலையின் அடிப்படையில் இருந்தே தனது பிரபல்யமான Organic Architecture வடிவத்தை உருவாக்கினார் என்பதை பல கட்டடக்கலைஞர்களே அறிந்திருக்கவில்லை இன்று அசுர பலமிக்க பூகோளமயமாதல் முன்னே பாரம்பரிய பிராந்திய கலை வடிவங்கள் பின் நவீனத்துவதத்தின் பேரில் அதன் புறத்தோற்றத்தை மட்டுமே தக்கவைத்துள்ளது. பூகோளமயமாதலின் பிரதான பயனியரான பலதேசிய நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளை மிக வேகமாக நவீனப்படுத்த முயல்கின்றன. நவீனமும் பூகோளமயமாக்கலும் ஒன்றை ஒன்று அனுசரித்து போதல் விந்தையானதே. ஏனென்றால் நவீன கலை வடிவம், கட்டட கலை உட்பட, முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான ஒரு அரசியல் நிகழ்வே. ஆனால் இன்று அந்த எளிமையான பொதுமையான கலை வடிவம் பலதேசிய கம்பெனிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் கருவியாக மாறியது வரலாற்று கொடுமை. பலதேசிய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு வாய்ப்பாக உலக நகரங்களும் ஏன் கிராமங்களும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பலமிக்க சக்திகளுக்கு எதிராக விட்டுக்கொடாது சுய மரபுகளை தக்கவைத்து கொள்ளுதல் ஒரு அரசியல் சவாலே.
  7. 1. பாரிய நிதியில் மக்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புகள் வரைபடங்களுடன் முடிந்தால் மாதிரி அமைப்புடன் காட்ச்சிப்படுத்தப்பட்டு மக்களினதும் வல்லுனர்களின் அபிப்பிராயங்களை பெறப்படுவது உலக வழக்கு. நல்லாட்ச்சியில் பலதேசிய கம்பெனியின் விருப்புதான் முடிந்த முடிவா. 2. இந்த தகர டப்பாவை எந்த கல்வீட்டுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் அறிக்கை தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வல்லுனர்களில் ஏன் ஒரு கட்டட கலைஞர்களும் இல்லை. இந்த வல்லுனர்களில் ஒருவருமே வீடமைப்பு அல்லது கட்டட கலையில் அனுபவம் உள்ளவர்கள் இல்லை. 3. வெப்பவலயத்தில் அமையும் வீடுகள் சூடான காற்றை உடல் உயரத்துக்கு மேலே கொண்டு செல்ல வசதியாக உயரமாக இருக்க வேண்டும். இந்த வீட்டிலே சூடான காற்று மேலே வெளிச்செல்ல வழியே இல்லை. ஓட்டு வீடுகளில் மேலே ஓட்டின் இடுக்குகளால் சூடான காற்று வெளியேற குளிரான காற்று வெளியிலிருந்து கீழால் உட்புக இடமளிக்கும். மேலும் பழைய வீடுகளில் யன்னல்களுக்கு மேலே கதவுகளுக்கு மேலே மர சட்ட்ங்களால் சூடான காற்று வெளியேற வழியமைத்திருப்பார்கள். இந்த வீடுகளில் cross ventilation க்கான எந்த வாய்ப்பும் இல்லை. 4. இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளில் Eave என்று சொல்லப்படும் சுவருக்கு வெள்ளியிலான கூரை இறக்கம் குறைந்தது 3 அடி இருக்கும். அது வீடடை வெய்யிலில் இருந்தும் மழையிலிருந்தும் காப்பதோடு தனித்துவமான அழகையும் கொடுக்கிறது. இந்த தகர டப்பாக்களுக்கு ஐரோப்பிய வீடுகள் மாதிரி மிக சிறிய இறக்கமே உள்ளது. குளிர் நாடுகளில் அதிக சூரிய வெப்பத்தை உள்வாங்க அவ்வாறு அமைக்கிறார்கள். அதை அப்படியே இங்கே இறக்கி வெய்யிலை தாராளமாக உள்ளே அனுமதித்து கிராமத்தின் அழகையும் கெடுக்கிறார்கள். 5. முன் கதவை திறந்தால் வெய்யிலும் மழையும் அனுமதி இல்லாமல் உள்ளே வரும். உலகில் உள்ள எல்லா வீடுகளிலும் முன் கதவுக்கு முன்னே ஒரு விறாந்தை யோ போர்ச்சோ இருக்கும். யாழ்ப்பாணத்தில் போர்டிகோ என்பார்கள். இந்த விறாந்தை அல்லது போர்டிகோ வெளிக்கும் வீடுக்குமான தொடர்பை பேணுகிறது. a space between private and public space that make the transition smooth. மேலும் இந்த விறாந்தை பகுதியே வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதியாகும். இது வீட்டுக்கு முகப்பை தந்து அழகுபடுத்துகிறது. இந்த மாதிரி வீடோ முகமில்லாத முண்டம்போல் காட்ச்சியளிக்கிறது. இந்த வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வெளியில் இருந்து கதைக்க இடமேயில்லை. Unfriendly fascist design 6. இலங்கை மக்களின் கலாசாரத்தில் அவர்கள் வீடுகளில் உள்ளே பகல் நேரங்களில் இருப்பதே இல்லை. படுப்பதற்கு மட்டுமே அறைகளுக்குள் போவார்கள். புது வீடு கட்டிய உடனேயே முன்னாலும் பின்னாலும் பத்தி இறக்கி முன் பக்கத்தை மக்களுக்கும் பின் பக்கத்தை ஆடு மாடுகளுக்கும் ஒதுக்கி விடுவார்கள். முன் விறாந்தை வீடடை முத்தத்தோடும் பின் விறாந்தை வீடடை பின் வளவுடனும் இணைக்கிறது. இந்த டப்பாவில் பத்தி இறக்கினால் தவண்டுதான் உள்ளே போக வேண்டும். 7. 65,000 வீடுகளை கட்டி உழைப்பவர்கள் ஆக்க குறைந்ததது ஒரு பத்து வெவ்வேறான அமைப்புகளை உருவாக்கி ஒரே மாதிரியான வீடுகள் அடுத்தடுத்தது வராது பார்த்திருக்கலாம். ஒரு இடத்தில் இந்த வீடுகளில் ஒரு நூறை கட்டிவிடடால் அந்த இடம் எப்படி இருக்கும். உடனடி நிவாரணமாக அமைக்கப்படும் டெண்டுகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கும். இந்த தகரங்களால் பிரதிபலிக்கப்படும் சூரிய வெளிச்சம் (Glare) கண்ணை கூச வைக்கும். 8. வீடு என்பது மக்களின் சுயத்தை பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளம். அவர்கள் நிலை உயரும்போது வீடு வளர்கிறது. அழகூட்டப்படுகிறது. வர்ணம் பூசப்படுகிறது. இந்த வீட்டிலே ஏதும் செய்ய முடியாது. அப்படி வலிந்து ஏதாவது செய்தால் அது என்னும் அசிங்கமாகிவிடும். மேலும் தொடரலாம். இத்தனையும் அதன் வெளித்தோற்றம் பற்றியதே. உள்ளமைப்பு பற்றி சொல்ல எதுவுமே இல்லை.
  8. போரழிவுக்கு ஐந்து வருடங்களின் பின்னர் பல பில்லியன் டொலர்களில் அமைக்கப்படும் வீடமைப்பை தற்காலிக ஏற்பாடு என கருதும் அளவுக்கு இலங்கை செல்வந்த நாடல்ல. சுனாமியின் பின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளுடன் இதை ஒப்பிட முடியாது. பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தை பின்னர் அந்த கிராமங்களை மீளமைக்க நான்கு வருடங்கள் நூற்றுக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்புகளூடாக திட்டமிடபட்டதாக சொன்னார்கள். இங்கே ஐந்து வருடங்களின் பின்னர் 65,000 தகர பெட்டிகளை கட்டி சூழலை வன்புணர்வு கொள்கிறார்கள். வீடு என்பது வெறுமனே மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கும் இடமல்ல. கற்கால மனிதனுக்கு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அது இன்று பல பரிமாணங்களை பெற்று மனிதனின் இருப்பை அவனது சமூக பெறுமானத்தை அடையாளப்படுத்தும் அமைப்பாக வளர்ந்துள்ளது. வீடும் அதன் சூழவுள்ள நிலமும் மனிதனுக்கும் சூழலுக்குமான உறவை வெளிப்படுத்துகிறது. மனிதனுக்கும் இன்னொரு மனிதருக்கும், மனிதருக்கும் சூழலுக்கும் உள்ள உறவே கலாசாரமாகிறது. இதை புரிந்து கொள்ளாத வீடமைப்பும் திடடமிடலும் மக்களின் பண்பாடடை வலிந்து மாற்றமுயல்கிறது. மாறக்கூடியவர்கள் வீடமைப்புக்கேற்ற மொக்கை கலாசாரத்தை உருவாக்குவார்கள். சேரிக்கலாசாரம் போல. இயலாதவர்கள் விட்டு ஓடுவார்கள். இதற்க்கு உலகிலே நிறைய உதாரணங்கள் உண்டு. உலகின் மிக பிரசித்திபெற்ற கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்படட இந்தியாவில் உள்ள சண்டிகாரும் பிரேசிலில் உள்ள பிரேஸிலிகாவும் நல்ல உதாரணங்கள். அவைகள் கட்டடக்கலையில் உச்சத்தை தொட்டாலும் மக்களின் கலாசாரத்தை கணக்கில் எடுக்காததால் மக்களால் தீண்டுவாரற்று காண்கிறீர் வனமாக காட்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த 65000 வீடுகளும் கட்டடக்கலையின் விளிம்பையும் தொடவில்லை. இதை ஒரு பெரும் நிலப்பரப்பில் நிறுவுவார்களேயானால் இது பெரும் கலாசார சீரழிவை தரும் அல்லது மக்கள் இதை விட்டுவிட்டு ஓடுவார்கள். எந்த வீடமைப்பும் அதில் வாழும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். அது வடிவமைப்பில் இருக்கலாம் அல்லது உடலுழைப்பில் இருக்கலாம். மேலும் அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறும்போது அவர்களது வீடடை முன்னேற்ற கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். அவ்வாறு வீடுகள் மாற்றமடையும்போது அவர்களுடைய சுய அடையாளங்கள் கிடைப்பதோடு army barrack மாதிரி இல்லாமல் வேறுபாடுகளோடு சூழல் அழகுபெறும். ஆனால் இந்த 6500 வீடமைப்பில் முன்னேற வேண்டுமென்றால் இதை உடைத்து தள்ளிவிட்டு வேறு வீடு கட்ட வேண்டும்.
  9. இரண்டாம் உலகப் போரிலே தோற்ற நாடுகள்தான் (ஜப்பான் + ஜெர்மனி) உலகை பின்னர் புதிய தொழில் நுட்பத்தால் வெற்றிகொண்டன. பழமையை பேசி புதியன புகுதலை மூர்க்கமாக எதிர்காது புதியன செய்து உலகை தமதாக்கினார். இன்று சீனா இந்தியா போலல்லாது அந்த வகையில் உலகை பொருளாதார நிலையில் ஆடசி செய்கிறது. எமது பாரம்பரியமென்று கொங்கிறீட் சுவரும் ஓட்டு வீடும்தான் வேண்டும் என்று கேட்பது எம்மை முன்னேற விடாது. மேலும் இந்த கொங்கிறீட் எங்களின் பாரம்பரியத்தில் வந்ததும் இல்லை. இன்றுவரை கட்டப்படும் வீடுகள் கூட எமது சூழலுக்கும் மக்களுக்கும் இசைய காலப்போக்கில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்படட ஐரோப்பிய வீடமைப்புகளே. எமது பாரம்பரிய வட்ட வீடுகள் நாற்சார் வீடுகள் காலனித்துவ ஆடசிகாலத்தில் முற்றாக கைவிடப்படடன. சூழலுக்கும் எமது மக்களுக்கும் பொருத்தமான புதிய வீடமைப்புகள் உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை யுத்தம் அல்லது யுத்தத்தில் அழிவு அல்லது தோல்வி நமக்கு வழங்கியுள்ளது. அதை சரிவர பயன்படுத்தும் ஆற்றலும் அறிவும் எம்மிடம் நிறையவே உள்ளது. மகாவலி அபிவிருத்தி திடடத்தின்போது எனது சக சிங்கள கடடடக்கலைஞர்களால் மிக கவனமாக நீண்ட ஆய்வுகள், மாதிரி அமைப்புகள் ஊடாக புதிய வீடமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. வெறும் வீடுகள் மட்டுமன்றி கிராமங்களே வடிவமைக்கப்படடன. இப்போது வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் வீடுகளின் கடடமைப்புகளில் எமது கடடடக் கலைஞர்களின், நாடு நகர திட்டவியலாளர்களின் பங்களிப்பே இல்லை என்பதை திடமாக சொல்லலாம். கல்வி அறிவற்ற அரசியல் பலமற்ற ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த விளையாடடை மேட்ற்கு நாடுகளால் செய்ய முடியாமல் உள்ளது. ஆனால் இலங்கை அவர்கள் விளையாட களம் அமைத்து கொடுக்கிறது. அதுவும் கல்வியில் உயர் நிலையில் இருந்த வடக்கு மக்களுக்கு. இது மிகவும் வேதனையானது. மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் கீழ் நிலையில் உள்ளதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த அரசியல் பலமும் இல்லை என்பதை காட்டுகிறது. இப்போது நிறுவப்படும் வீடுகள் மக்களுடைய கலாசாரத்தையும், சூழலையும், சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என நிறுவுவதற்கு அதிக அறிவு தேவை இல்லை. அதை எழுத இப்போதுகால அவகாசமில்லை. முடிந்தால் விரைவில் நீண்ட கட்டுரையே எழுதுகிறேன். . பிரேமதாசாவின் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து மிக பெரிய சம்பளத்தில் நான்கு நிபுணர்கள் 1984இல் 3 வருட ஒப்பந்தத்தில் வீடமைக்க வந்திருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம் இருந்த அமைப்புகளை பிரதி பண்ணி சில பொருத்தமில்லாத மாற்றங்களை செய்து சமர்ப்பித்தார்கள். மிகவும் ஆற்றலும் துணிவும் உள்ள எனது மேலதிகாரி (Turner Wickramasinge) அவர்களின் கையாலாகாத்தனத்தை விமர்சித்தது போராடி ஏழு மாதத்துள் அவர்களை நாட்டிடை விட்டு வெளியேற வைத்தார். பிரேமதாசாவுக்கு அது தோல்வியானாலும் உண்மையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை முறித்தார். இப்போது தேவையானது பிரேமதாச போன்ற அரசியல் தலைவர்களும் விக்ரமசிங்கே போன்ற அதிகாரிகளுமே. மக்களுக்கு சரியான வழியை காட்டும் பொறுப்பு கற்றவர்களுக்கு தலைவர்களுக்கும் உண்டு. மக்கள் விரும்புகிறார்கள். ஏன் தடுக்கிறீர்கள் என்றால் நாங்கள் கற்று என்ன பயன்.
  10. அடிப்படையான தவறுகளை கண்டுகொள்ளாமல் விவாதம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்படுகிறது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் உள்ளது. என்றாலும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவே இந்த திடடம் என்று வாதிப்பது இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்க நகைசுவை. தமிழர்கள் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாலும் சிந்திக்க முனைவது அவர்களுக்கும் மனித குலத்துக்கும் நன்மை பயக்கும். பொருத்தது வீடு என்ற கருதுகோளில் எந்த தவறும் இல்லை. இன்று சீனா பொருத்து வீடுகளை உலகெங்கும் கொண்டைனர்களில் அனுப்புகிறது. நான் வசிக்கும் நாட்டிலே அத்தகைய ஒரு கட்டுமானத்தில் தற்போது ஈடுபட்டுள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் அந்த நாடுகளில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு இசையவே இந்த பொருத்து வீடுகள் அமைக்கப்படுகிறது. பல அரச நிறுவனங்களிடம் வெவ்வேறு அம்சங்களுக்கு அனுமதி பெற்ற பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறல்ல. பல் தேசிய நிறுவனங்கள் ஒரு அமைச்சரை பிடித்து தங்கள் எச்சங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இலங்கையில் கொட்டிவிட்டு காசு சம்பாதிக்கின்றன. உலக சந்தையில் உருக்கின் விலை வீட்சியால் லட்சுமி மிட்டேலின் வியாபாரம் சென்ற வருடம் பெரும் நட்டத்தை கண்டது. விற்பனை தேங்கியது. அதை ஈடுகட்டுவதற்குத்தான் இலங்கை உதவுகிறதே தவிர மக்களின் நலனுக்காக அல்ல. இதே போன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் சுனாமி வந்த சூட்டொடு தெற்கிலே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைக்கப்பட்ட்து. அந்த வேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Director General ஆகவிருந்த எனது பல்கலைக்கழக நன்பனிடம் விசாரித்தபோது தனக்கு ஏதும் தெரியாது என்றான். அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நிறைவேற்றப்படும் எந்த திட்ட்ங்களுக்கும் தங்களிடம் அனுமதி பெறுவதில்லை என கவலையுடன் கூறினான். ஏதோ தருகிறார்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல இது ஒன்றும் அமச்சர்களின் சொந்த பணத்தில் செய்யும் தானமல்ல. மக்களுடைய கலாசாரத்துக்கும் மண்ணுக்கும் ஏற்ற வீடமைப்புகள் என சம்பந்தப்படட அரச நிறுவனங்கள் அங்கீகரித்த திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஏதும் இல்லாத ஏழைகள் எதை தந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பில் பெருமுதலைகள் பொருளீட்ட அனுமதிப்பது எங்களை நாங்களே ஏமாற்ற இடம் கொடுப்பதாகும். மேலும் இலவசமாக வீடுகள் வழங்குவதை விட அவர்களே வீடுகளை அமைக்க நிதி வழங்குவது அவர்களை அந்த வீட்டுடன் கலாசார பொருளாதார ரீதியில் இணைக்க உதவும். இதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மிகப்பெரிய வெற்றி கண்டார். இதை பற்றி நிறைய எழுதலாம் பேசலாம்.
  11. நான் சுத்தமான தமிழில் தான் எழுதுகிறேன். ஆனால் புரியாத மாதிரி என்மேல் சாயங்களை பூசுகிறீர்கள். உங்களுக்கு புரிய விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இஸ்ரேல் நாட்டை உருவாக்க அமெரிக்காவில் உள்ள யூத தலைவர்கள் ஐன்ஸ்டைன் இன் ஆதரவை நாடினர். ஆனால் அவர் அதை மறுத்ததோடு நீங்கள் செய்வதற்கும் ஜெர்மானியர் செய்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்கிறார். யூதர்கள் மில்லியன் கணக்கில் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்ட போதும் அவர்கள் அறியாமைக்காக இரங்கினார். வெறுப்பு கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் நான் ஐன்ஸ்டைனை முன்மாதிரியாக கொள்ள விரும்புகிறேன். பெரியார் சொல்வதைப்போல ஜாதியபிமானம் இனஅபிமானம் மதஅ பிமானம் தேசாபிமானம் எல்லாமே பிற்போக்கானது.
  12. ஒருவருக்கும் மற்றொருவருக்கு தண்டனை வழங்கவோ மற்றொருவரை கொலை செய்யவோ உரிமை இல்லை. குற்றம் செய்தவராக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படுபவர் கூட குற்றத்தை கெட்டித்தனமாக செய்யத் தெரியாமையால் மாட்டுப்பட்டவரே. கெட்டிக்காரர்கள் அதை விட மோசமான குற்றங்களை செய்துவிட்டு மக்கள் மத்தியில் மதிப்போடு வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் இனத்தவர் மற்ற இனத்தவரை கொலை செய்ய அனுமதி வழங்குகிறோம். அவர்கள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை கொலை செய்தாலும் சரி என்று வாதாடி குதூகலிக்கிறோம். மற்ற இனத்தவர் எம்மினத்தவரை கொலை செய்யும்போது இரத்தம் துடிக்கிறது. கொலைகளை செய்தவர்களை விட அதை செய்வதற்கு அதிகாரம் கொடுத்தவர்களும் அதை நியாயப்படுத்துபவர்களுமே மாபெரும் தவறிழைக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் சமுக விரோத செயல்களை அடக்கலாம் என நினைப்பது அதற்க்கு எதிரான விளைவுகளைத்தான் தரும். துப்பாக்கி கலாசாரம் நீண்ட காலம் கோலோசியதால்தான் இந்த நிலைமை. அதிலிருந்து மீளுவதற்கு மாற்று வழி தேவை.
  13. இது ஒரு மோசமான முன்னுதாரணம். புலிகள் இருந்தபோது குற்றச்செயல்கள் இல்லை என்றார்கள். நீதியரசர் இளம்செழியனும் அதே பாதையில் குற்றச்செயல்களை தடுக்க முனைந்தார். போலீசுக்கு புலிகளுக்கு இருந்த அதிகாரத்தை கொடுத்தார். அவர்களும் புலிகளை போன்று தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமானவர்களை சுட்டு தள்ளுகிறார்கள்.
  14. இந்த விஷயத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் ஏதும் சொல்லியிருக்கலாமே? மறந்து விட்டீர்களா
  15. சுருக்கமாக எழுத முயன்றதால் தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறது. மதங்களை எதிர்க்கவேண்டாம் என்பது அடுத்தவர் மதங்களை எதிர்க்கவேண்டாம் என்ற அர்த்தத்தில் எழுதினேன். ஒட்டுமொத்தமாக எல்லா மதங்களையும் நிராகரிப்பவன் எந்த மதத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டிடலாம். ஆனால் தன்னுடைய மதமே சரியானது மற்ற மதங்கள்தவறானது என்பதே மதவாதம்.