• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Our Picks

Top content from across the community, hand-picked by us.

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நாங்கள் கண்காணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/10/news/34218

 
 • 3 replies

மாவீரர்கள்.
மாவீரர்கள் எங்கள் மனங்களில் நிறைந்தவர்கள் எங்கள் வாழ்வோடு இணைந்தவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். என்றும் எங்கள் உயிர் மூச்சாய் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், இவர்களின் சுவாசக்காற்றில் நாம் உயிர்தெழுகிறோம் எங்கள் சுவாசங்கள் இவர்களின் உணர்வுகளை உள்வாங்கி நிமிர்கின்றது.  

1. நீலக் குறிஞ்சி

 

 

மதியம் அவள் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது.

(தொடரும்)

By பா. ராகவன் 

http://www.dinamani.com/junction/yathi/2018/mar/19/1-நீலக்-குறிஞ்சி-2881855--2.html
  • Like

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம்  அம்பலம் ..

 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.

...

https://tamil.oneindia.com/news/tamilnadu/kerala-plays-dirty-politics-mullaiperiyar-dam-issue-328189.html
 • 10 replies

ஒய் திஸ் கல்லி..வல்லிdi..?
ஒய் திஸ் கல்லி வல்லிdi..?

பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..

 

 
 • 0 replies

என்ன என்ன வார்த்தைகளோ..!
எப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..!
 
  • Thanks
 • 12 replies

மனிதநேயம் பேசும்
   மகாத்மாக்கள் இங்கு அதிகம்!
மதவெறியை பிரசவிக்கும்
   ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்!
மக்களாட்சியைப் பேசும்
   மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்!
க‌வர்ச்சி காட்டி பணமீட்டும்
   கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்!

பெண்களைத் துர‌த்தும்
   நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்!
அன்னையின் கருவறையில் நசுக்கப்படும்
   பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்!
பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும்
    கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்!
ஏழையின் செந்நீரை உறிஞ்சும்
   இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்!
இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!!  

 

 
  • Like
 • 0 replies

IMAX என்றால் என்ன..?
'IMAX' என்றால் என்ன?

தமிழில் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தின் சிறிய விளக்கம்..
 

 

 

சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள்.

ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்?

Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ்.

 சென்னையில் 'ஐமேக்ஸ்'!

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.

சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது

டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது.

 என்ன தான் இருக்கு?

 ஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.

ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.

 ஐமேக்ஸில் 3D படம்!

 வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும்.

அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். 

ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.

 

இதந்தி
  • Thanks
  • Like
 • 2 replies

காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்..
கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என்  சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..
கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. !

உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.

மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..!

வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..!

உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.

40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..

மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..

என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..!

அதாங்க.. வாங்கிவிட்டேன்..!! 

 
  • Haha
  • Like
 • 1 reply

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?
திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?

 கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

ரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.

.....
  • Sad
  • Thanks
 • 20 replies

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 
-என்.கே.அஷோக்பரன்
இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடரும்...
- See more at: http://www.tamilmirror.lk/152667#sthash.pPQmD2sZ.dpuf
 • 172 replies

ஒலித்துண்டுகளின் தொகுப்பு..
யாழ் களத்தில் என்னால் பதியப்படும் ஒலித்துண்டுகளின் (Sound Cloud Tracks) தொகுப்பை கீழேயுள்ள இணையத்தை சுட்டினால் கேட்டு ரசிக்கலாம், வேறெங்கும் இணைக்கலாம்...

 

 
  • Like
 • 0 replies

சுப்ரபாதம் பாடல்
இன்று தொடங்கும் நவராத்திரி கொலுவிற்கு இந்த பாடல் உபயோகமாக இருக்குமென எண்ணுகிறேன்..

 

 
 • 0 replies

இளங்காற்று வீசுதே...!
இளங்காற்று வீசுதே... 
இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்..

இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது..

போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..! 
 
 • 2 replies

சிரிக்க மட்டும் வாங்க
  • Like
 • 1,749 replies

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’
மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது.  

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. 

காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.

 

 குறுந்தொகைப் பாடல்  எண் - 27

 ஆசிரியர் - வெள்ளிவீதியார்

 திணை - பாலைத்திணை

 தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

 தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

 ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமக் கவினே’’

 

கலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு

தீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல்

என்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன்

பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது

உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல்

அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)

மாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு 

 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலை படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல் அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.

 

தள நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. 
  • Thanks
  • Like
 • 1 reply

காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை  இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.  அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே
இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…
ஒன்று கலவி
மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை
இளமையான வயது
கெட்டியான எருமைத் தயிர்
சர்க்கரை சேர்த்த பால்
மானின் மாமிசம்
அழகிய பெண் துணை
என் ஒவ்வொரு ஜன்மத்திலும்
இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!”. காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது. காளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள். உதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;  “மழையின் முதல் துளிகள்அவளின் கண் இமைகளில்சிறிது தங்கின…பின் அவள் மார்பகங்களில்சிதறின…இறங்கி அவள் வயிற்றுசதைமடிப்பு வரிகளில்தயங்கின…வேகுநேரத்திற்கு பின்அவள் நாபிச் சுழியில்கலந்தன…” இனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன். தொடரும்.. நன்றி,அருள்மொழிவர்மன்(www.entamilpayanam.blogspot.com)
  • Like
 • 0 replies

வான்கலந்த மாணிக்கவாசகம்
  • Like
 • 39 replies

பாட்டுக்குள்ளே பாட்டு

ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.
எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.
எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ
  • Like
 • 6,867 replies

வீரயுக நாயகன் வேள் பாரி - 1

புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
  • Like
 • 127 replies

உலக மசாலா: இது ஒரு தொடர் பதிவு
  • Like
 • 1,045 replies

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..
எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது.....
பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.
  • Like
 • 3,172 replies

 வணக்கம்-தாய்நாடு
 • 1 reply

நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம். 
 
  • Like
 • 909 replies

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக
தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 
இந்த வீரவேங்கைகளுக்கு
எனது  வீரவணக்கங்கள் !!!
  • Like
 • 12,877 replies