Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3,685

  • Content count

   56,787


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3,218

  • Content count

   38,465


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1,497

  • Content count

   12,649


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1,142

  • Content count

   23,197Popular Content

Showing most liked content since 09/22/2016 in all areas

 1. 28 points
  கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள். இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார். இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும். இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்
 2. 27 points
  கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் பாடசாலையில் பல விருதுகளைப் பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். 12ம் வகுப்பில் ஒன்ராறியோ புலமைப்பரிசிலும் பாடசாலையில் அதி விசேட புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டார். யோர்க் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியிலும் அமெரிக்க சட்டக்கல்லூரியிலும் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகள் கற்று இவ் வருடம் மே மாதத்தில் அமெரிக்காவிலும் யூன் மாதத்தில் கனடாவிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாக வெளிவர உள்ளார். பசி வந்திட பத்தும் பறக்கும் என்பர் ஆனால் என் மகளுக்கு படிக்க தொடங்கினால் பசியே மறக்கும். நான் படி படி என்று சொல்லும்படி வைக்காமல் படித்தது போதும் நிற்பாட்டு என்று சொல்லும்படி செய்வார். படிக்கும் பொழுது அவருக்கு முன்னால் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் பலமுறை கண்டித்திருக்கிறேன். அதற்கு அவரது பதில் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினால் தன்னால் படிக்க முடியாது என்பதுதான். சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள். தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.
 3. 27 points
  "எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன் போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் . இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து எனது முதல் விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு. டொக்டர்மாருக்கு பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான். எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது. சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன். "இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்" பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு அ சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்" அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன். .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர். அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது. உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்க‌ எழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு. புகையிரதத்திலிருந்து இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன். முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன். ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது.... அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது. பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."
 4. 27 points
  டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன் எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது. சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள். இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள். காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது. கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு. கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை. ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........ சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு. எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது. அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள். இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன். ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள். இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.
 5. 27 points
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 6. 26 points
  கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் காதல் கொண்டான். இருவரது வீட்டிலும் தம் காதலை சொல்லவே அவர்களது பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்பு அவர்கள் இருவரும் படித்து முடித்தபின்பு திருமணம் செய்து தரலாம் என்று கூறியதால் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தம் படிப்பை தொடர்ந்தார்கள். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைந்து செல்ல படிப்பை முடித்த வாமன் கனடாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. வாமனுடன் கூடப்பிறந்தவர்கள் ஆண் சகோதரர்கள் அதனால் அவனின் பெற்றோருக்கு பெண்பிள்ளைகள் என்றால் மிகவும் விருப்பம். தான் கனடா பயணிக்கும் முன் நாட்டுப்பிரச்சனை காரணமா வைதேகியை தன் அம்மாவுடன் கொழும்பிற்கு சென்று அங்கே அவர்களுடன் இருக்கும்படி ஆலோசனை கூற அவளும் அவர்கள் கூடவே கொழும்பிற்கு சென்று வேலைக்கு செல்லத்தொடங்கினாள். பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊர் விட்டு ஊர் போய் பல இடங்களில் இடம் பெயர்ந்தநேரங்களில் அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து போனது. கொழும்பிற்கு வந்த பின்பு வைத்தியரிடம் சென்றபோது இடப்பெயர்வுகளின் போது அருந்திய தண்ணீரால் அவளுக்கு மஞ்சள் காமலை வந்துள்ளதாகவும் அதனால் அவளது ஈரல் சிறிதளவு பாதிப்படைந்திருப்பதாகவும் சொல்லியபோது உலகமே தலைகீழாக சுத்தியது. இந்த விடயத்தை வாமனிடம் சொன்னபோது வாமனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் அதெல்லாம் இங்கு கனடா வந்தால் சரி செய்யலாம் பயப்பிடாமல் வருவதற்கு ஆயத்தங்களை செய்யும் படி வைதேகியிடம் கூறினான். ஒரு விதமாக வைதேகிக்கும் வாமனின் பெற்றோருக்கும் விசா கிடைத்து கனடாவிற்கு வந்து சேருகின்றார்கள். வாமன் வைதேகியின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாமன் வைதேகி பலவித மனக்கோட்டைகளுடன் தங்கள் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து மகிழ்வாக சென்ற அவர்கள் வாழ்வில் திரும்பவும் வைதேகிக்கு அடிக்கடி வயிற்றுவலி வர வைத்தியரை நாடியபோது தான் எடுத்து வரும் மாத்திரைகளுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் ஈரல் பாதிப்படையும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். அன்றிலிருந்து அவர் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் வைத்தியர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டு மருந்தும் எடுத்துவந்தாள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிற்றுவலி அடிக்கடி வந்து பல முறை வைத்தியாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றது. வாமனோ எந்த வித முகச்சுழிப்பும் இல்லாமல் 10 வருடங்கள் வைத்தியசாலையும் வீடுமாக வைதேகியை கொண்டுதிரிந்தான். வைத்தியர்களோ வைதேகிக்கு ஈரல் மாற்றவேண்டும் என்றும் அவளுக்கு சரியாக பொருந்து ஈரல் கிடைக்கும் மட்டும் மருந்தால் காலத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி இருந்த அழகிற்கு தற்போது மெலிந்து கண்கள் உள்ளுக்குள் போய் ஆளை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஆகியிருந்தாள். இன்னும் 6 மாதத்திற்குள் அவளுக்கு பொருத்தமான ஈரல் கிடைக்காவிட்டால் அவளை காப்பாற்றுவது கடினம் என்றும் அத்துடன் தைதேகிக்கு முன்னால் 200 பேர் வரை ஈரல் மாற்று சிகிச்சகைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர்கள் வாமனிடம் சொல்லிவிட்டார்கள். வாமனோ முடிந்தவரை எந்த மனக்கஸ்டத்தையும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் கவலையில் வாடிபோயிருந்தான். வாமனின் பெற்றோர் வைதேகியை மிகவும் அன்புடன் பாத்துக்கொண்டார்கள். திடீரென்று ஒரு நாள் காலையில் வைதியசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு 22 வயது இளைஞன் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டதாகவும் அவன் தனது உறுப்புக்களை தானம் செய்வதாக எழுதிவைத்திருப்பதாகவும் அவனது இரத்தவகை வைதேகிக்கு பொருந்துவதாகவும் அவனது ஈரலில் ஒரு பகுதியை வைதேகிக்கும் இன்னும் ஒரு பகுதியை 10 மாத குழந்தை ஒன்றுக்கும் மாற்று சிகிச்சை செய்யப்போவதான சொல்கின்றார்கள். வாமனுக்கும் அவனது பெற்றோருக்கும் அந்த தொலைபேசி அழைப்பு கடவுளை நேரில் கண்டது போன்று தோன்றியது. அன்றே வைதேகியை அழைத்துகொண்டு வைத்தியசாலை செல்கின்றனர். மாற்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் செய்து அறுவைச்சிகிச்சை 10 மணித்தியாளங்கள் நடைபெற்று வைதேகி சுகமடைந்தாள். வைதேகிக்கும் வாமனுக்கும் தமக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை. நான்கு வருடங்கள் உருண்டோடிவிட வாமனுக்கும் வைதேகிக்கும் அழகிய ஆண்குழந்தை பிறக்கின்றது. இப்போது அவர்கள் மகனுக்கு 9 வயதும் ஆகிவிட்டது. வாமனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைதேகிக்கு வருத்தம் என்று வந்தபோது வைதேகி சுகமாக தன்னோடு இருந்தால் போதும் என்று மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இரட்டிப்பு மகிழ்வாக குழந்தையும் சுகமே கிடைத்து அவர்களது வாழ்க்கை மீண்டும் பூத்துக்குலுங்கத்தொடங்கியது. திரும்பவும் அலாரம் அடிக்கவே பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த வைதேகி தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முத்தமிட்டு எழுபியவாறு தனக்கு மீள் வாழ்வு தந்த அந்த இறந்து போன இளைஞனை மனதில் நினைத்து நன்றி சொல்லியவாறே அவன் அன்று அவனது உடல் உறுப்புக்களை தானம் செய்யாதிருக்காவிட்டால் இன்று தானும் இல்லை தன் குழந்தையும் இல்லை எல்லாம் அவனது தாராள உள்ளமே என்று நினைத்தபடி அன்றய நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தாள். -இது கதையல்ல நிஜம்- -முற்றும்- நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?
 7. 24 points
  வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா பறக்காதையுங்கோ சொல்லுறன். அன்று மாலை நாலு மணிக்கு பூங்கா வீதிக்கு வாங்கோ.நான் எனது சினேகிதியை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுறன். பிறகு என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது சரியா. சற்று நேரம் யோசித்த சந்திரன் சரி என்று விட்டு கண்ணடித்துக் கொண்டே செல்கிறான். 30ம் தேதி மாலை 3:58:40 க்கு சந்திரன் காரில் வந்து இறங்கி வாரான். அவனுக்கு முன்னதாகவே வந்தனா வந்து காத்திருக்கின்றாள். அருகில் ஒருத்தர் வண்டிலில் இளநி வித்துக் கொண்டு இருக்கின்றார். சந்திரன் இளநி குடிப்பமா என்று கேட்க்கிறான். வந்தனாவும் ம்... என்று சொல்லிவிட்டு காசை எடுக்க அவன் மறுத்துவிட்டு இரண்டு இளநி வாங்கி இருவரும் குடித்தனர். எங்கே அவ இன்னும் வரவில்லையா...! இல்லை இப்ப வந்திடுவா, இன்று வேலை கூட போலிருக்கு. அருகே ஒரு வாடகை வண்டி வந்து நின்றது. அதில் இருந்து நாகரிக யுவதி இறங்கி வந்தாள். வா சினேகா உனக்காகத்தான் காத்திருக்கிறோம். அவள் சந்திரன் அருகே வந்து நிக்க கண்களில் நீளமாய் கீறிய மையும், கன்னத்தில் சற்று தூக்கலாய் பூசிய பவுடரும், உதட்டில் அடர்த்தியான சிகப்பு சாயமும் அவளது வேலைக்கு விளம்பரமாய் இருந்தன.அத்துடன் அவளிடம் இருந்து வீசிய மட்டமான நறுமணம் அவனது நாசிக்குள் புகுந்து இளநியுடன் இதழ்பதிக்க வயிற்றில் இருந்த இளநி வாய்க்கு மீண்டு வாந்தியாய் வெளியேறவும் இவள் அவள்தான் என மூளை அறிவுறுத்தவும் சரியாய் இருந்தது. வந்தனா நீ என்னை அவமானப் படுத்தி விட்டாய். ஏன் இந்தப் பிள்ளைக்கு என்ன குறை, நிறமாகவும், அழகாகவும், அலங்காரமாகத்தானே இருக்கிறாள்.நீ கூப்பிடும் இடத்துக்கு உன்னோடு அவள் வருவாள். நீ பணம் கூட குடுக்க வேண்டாம். நான் குடுத்து விட்டேன். என்ன சொல்லுறாய் நீ .மனசுக்கு பிடிக்காத ஒன்றை எப்படி ஏற்பது. வாந்தி வந்ததை பார்த்தனிதானே. அன்று நீ என்னை அழைத்ததும் எனக்கும் அப்பிடித்தான் வாந்தி வந்தது. அடக்கிக் கொண்டேன். நான் இரு பிள்ளைகளுக்கு தாய். அன்பான கணவன்.எங்களை பற்றி தெரிந்தும் நீங்கள் அப்படிக் கேட்டது தப்பில்லையா.மன்னித்து விடுங்கோ வந்தனா.சந்திரன் அட்டமியாய் குறுகி நிக்க , இது எதுவும் புரியாத அந்தப் பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய். ஒரு நிமிஷம் திகைத்த இருவரும் அடுத்தநொடி எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டார்கள்.....! இது ஒரு சுய ஆக்கம். இதுக்கு காப்புரிமை, மோதிரஉரிமை எதுவும் கிடையாது. ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக் காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம். இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!
 8. 24 points
  இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு. ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம். பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும், பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று. பள்ளிக்கூட நாட்களில் பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம். சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம். குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும், வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள். மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான் அதிகம் மினக்கெடுவார்கள். பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு. இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு. ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன். அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான். அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான். "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும் அசூசையும் கலந்த உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான். நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது, எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட பெரிய சவால் மாதிரி இருந்தது. பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது. சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன். குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்; எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன். பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். - தொடரும் -
 9. 24 points
  மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சிறு தொகை கொடுத்தாலும் "சந்தோஷமாக " ஒரு மதுப்போத்தலும் கொடுத்துவிடுவார்கள் . கடையின் அத்தனை கணக்கு வழக்குகளும் வரிக் கட்டுபாடடாளரின் கண்ணுக்கு தடுப்படாமல் சுழியோடி கணக்கை கச்சிதமாய் வரவு செலவு .. காட்டி விடுவான் . இதனால் அந்த கடைத் த்தொகுதியில் மிகவும் பிரபலமானான் .. வேலை . களைப்பு என்று ஆரம்பித்த மதுப் பழக்கம் ..போதை மயக்கத்தில் மறு நாள் வேலைக்கு போகாமல் இருப்பது என்ற நிலைக்கு ஆளாக்கியது ..நாட்கள் கிழமைகளாக வேலைக்கு போக முடியாது இருந்தான் ... .காலப்போக்கில் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். முதல் மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த அடுத்த வருடங்களில் பருவ வயதை அடைந்தனர் .மிகவும் கட்டுப்பாடான குடும்ப கஷ்டம் உணர்ந்த பெண் மக வுகளாய் . அவர்கள் அழகிலும் ஆண்டவன் குறை வைக்காத அளவுக்கு கண்ணுக்கு இனிய இளம் குமாரத்தி கள் ஆகி னார் வீட்டுக் கஷ்டம் உணர்ந்து ..பகுதி நேரமாய் ...பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தமது சிறு தேவைகளுக்கு பணம் சேர்த்துக் கொள்வார்கள் ...தங்கள் ஒரே தம்பி யையும் கவனமாய் பார்ப்பார்கள் . கஷ்டங்கள் மத்தியிலும் கலாவதி ..சிறப்பாக வளர்த்தாள் . ஒரு முறை கடைப் ப குதிக்கு சென்றவன் ...தெருவில் வீழ்ந்து கிடப் ப தாக செய்தி வரவே காலாவதி அங்கு நோக்கி போகையில் தயராக இருந் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு ...... வைத்திய நிலையம் சென்றார்கள் . அங்கு மூன்று நாட்களின் பின் வைத்திய அறிக்கையில் மிகவும்பலவீனமாக் இருப்பதாகவும் ஈரல் மிக்வும்பதிப்புள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தால் ..இனி வருங்காலத்தில் மதுவகை பாவிக்க கூடாதெனவும் கண்டிப்பான கடடளையோடு வீடு நோக்கி அழைத்து வரப்ப படடான் ஒழுங்காக இருந்தவன் . சில வாரங்கள் கிறிஸ்ம்ஸ பண்டிகையின் போது ..நண்பர்கள் அழைக்கவே சென்று மது போதையில் வந்தான் . மறு நாள் ஒரே வாந்தி ...அவசர அம்புலன்ஸ் அழைத்து வைத்ய சாலையில் அனுமதித்தார்கள் ... ஒரு வா ரம் படுக்கையில் இருந்தவன் ..மி கவும் பலவீனமானான் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகவே ..ஒரு ஞாயிறு அதிகாலை காலமானான் . நான்கு பிள்ளைகளும் மனைவியும் கதற ..ஊர்வலர்களும் ஒன்று கூடி மரண அடக்கம் நடந்தது .... காலம் உருண்டோடியது .மூத்தவள் திருமண வயதை எட்டி விடடதால் தந்தையின் சகோதரி .. தான் வாழும் கனடா நாட்டில் ..தூரத்து உறவு முறையில் ஒரு திருமணம் பேசி ..முடித்தார் .. இரு வீடடை சார்ந்தவரும் தொலைபேசி வழியே .. ஒழுங்காக்கி .நாள் குறித்து ... பின் தொழில் நுட்பம் மலிந்த இக்காலத்தில் ஸ்கைப் ..முக புத்தகம்.. போன்ற இணைய வழித் ...தொடர்பில் மணமக்கள் பேசிக் கொண்டனர் ...இருவருக்கும் பிடித்து போக வே வரும் கோடை விடுமுறையில் மணமகள் இங்கு வந்து பதிவு செய்ய ... ஒழுங்காகியது . இதற்கிடையில் மண மக ளின் தாயின் சகோதரி ..மணமகன் உள்ள கனடா நா ட்டிற்கு அழைக்கவே வந்தவர், மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ... .மனம் ஒத்து போனாலும் தோற்ற பொருத்தம் சிறு ,,குறை யாக தென் படடது . மணமகன் 4'11" ஆகவும் பெண் 5'2" ஆகவும் இருந்தனர் .....இனி அவர்களின் தேர்வு மணமகள் சம்மதத்தில தங்கி இருந்தது ..... அவள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ..விடடாள் . ஒரு வா ரம் ஆகியது பையன் அழை ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தான். பெண் தாயிடம் சென்று நடந்த்து .விபரித்தார் ... இதனால் வேறிடம் பார்க்கலாம் என் சொல்லிவிடடார் ..... மணமகள் தீவிரமாய் சிந்தித்தாள் .ஒரு வேளை மணமகன் என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா .? ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ வில்லையா ....உயரம் ஒரு குறையா ..இரு மனம் கலந்ததே திருமணம் ... மறு நாள் விடிந்தது ..... அம்மாவிடம் தன மூடிவைத்து தெரிவித்தாள் மக ள் ...நான் அவரைத் தான் திருமண செய்வேன் வேறு எவரையும் செய்யமாடடேன் என்றாள் தீர்மானமாக ..... நான் அவரோடு பேசி என் முடிவு சொல்ல போகிறேன் என்று ...தொலைபேசியில் அழைத்தாள் ...இந்த அழைப்புக்காகவே காத்திருந்த மணமகன் ....பேசினான் .......வார்த்தைகள் முடிவுகளாகி ..திருமணம் இனிதே நடந்தேறியது ..... ஒரு வருட இன்பமான வாழ்வில் அழகான பெண் குழந்தை கையில் ...ஒரு திருமண வீட்டில் சந்தித்தேன்.தம்பதிகள் ...இனிதே வாழ்க ..அவளுக்கென்றொரு மனம் ...அது ஆழமான அன்புள்ள ..நேசிக்க தெரிந்த உள்ளம். திருமணங்கள் நறு மணம் வீசி மலர்வ்து இனிய நல்மனம் கொண்ட மலர்களால் ... படித்த அழகான மெல்லிய மாநிறமாக மணமகள் தேவை என் விளம்பரம் செய்யும இக்காலத்தில் இப்படியான நல்ல உள்ளம் கொண்ட மணமக்களும் வாழ்கிறார்கள்
 10. 23 points
  எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன. மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள். "நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின் பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன. இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது. இதே சம்பவத்தில், இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான். பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன். மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான். வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். அம்மானிடம் சென்று விசாரணை முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன். அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது. அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது. அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின் பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது.
 11. 23 points
  அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது! அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்! என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக் கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்! இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்! தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்! தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப் பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்! இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்! அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்! கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்! கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..! அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது! ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது! வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்! நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது! அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது! சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்! 'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?' அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! (இன்னும் கொஞ்சமிருக்கு! )
 12. 23 points
  பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்
 13. 21 points
  முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது. விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என. இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன. ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன. என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன். அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம். (மிகுதி பிறகு) ------------ தொடர்ச்சிகள்: சென்னை உங்களை வரவேற்கின்றது
 14. 21 points
  இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான். அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம். இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார். பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும். இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம். நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே. யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.
 15. 21 points
  பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவும் அழுதுநிக்க அங்குவரும் மாமாவின் கையின் கிளுவந் தடியில் பால் சுரக்கும். எண்ணை வைக்க அடம்பிடிக்கும் என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும் நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும் முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும். களைத்து வரும் வேளை காத்திருந்து முத்தத்தால் முகம் துடைத்து கட்டியவள் காப்பிதர இரு கண்களிலும் பால் சுரக்கும். எகிறிவரும் எட்டுவயது மகள் பாய்ந்து மார்பினில் ஒட்ட பக்குவமாய் பற்றிக் கொள்ளும் பத்து விரலும் பால் சுரக்கும். எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய தாளை இரண்டு இழுக்க தாத்தாவை தள்ளி விட்டு முதுகில் துள்ளியாட பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....! யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!
 16. 21 points
  என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன் என்றார் கந்தசாமியர் . ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும் டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன். விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாமியருக்கு உடம்பில் ஆட்டம் கொடுத்து விட்டது என்ன இவன் சாதாரண தலைச்சுற்றுக்கு வந்தால் ஆயிரம் கோதாரிகளை சொல்லிப்போட்டு போறான் என்று மனதுக்குள் ஏசி திட்டிக்கொண்டே இருந்தார் கந்தர் அவன் சொல்லுறதும் சரிதானே இப்ப உள்ள சாப்பாடுகளை தின்னுறதால உடம்பில வருத்தங்கள் தான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் ஒருவர் வந்து உட்காருகிறார் கந்தரோ இருங்கள் என்று சொல்லி பக்கத்தில் அமர பேச்சுக்கொடுக்கிறார் உங்களுக்கு என்ன எனக்கு சீனி கூடிட்டுது உடம்பில போன‌ மாதம் தான் விரலை களற்றி விட்டார்கள் என்று காலை காட்டினார் பெரு விரல் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது . கந்தருக்கு இருக்கிற தலையிடி உடம்பு முழுக்க இடிக்க தொடங்கியது இன்னும் கூடி காயம் ஆறாவிட்டால் முழங்காலுடன் கழட்டி விடுவார்கள் என்று சொல்ல கந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்ல்றீங்க பின்ன என்னங்க நாம் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் நாயா பேயா உழைக்கிறம் இந்த உடம்பில என்ன கோதாரி இருக்கிறது என்று எப்பாவாச்சும் பார்க்கிறமா இல்லையே பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றார் அவர் . இப்ப பாருங்கள் மாதா மாதம் கிளின் என்று சொல்லி ஒரு கொப்பியை தந்து இருக்காங்கள் அதனால மாதா மாதம் வந்து போகிற வேலையா கிடக்கு ம்ம்ம்ம் நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சொன்ன கந்தர் டகித்தன் வந்த பிறகு எல்லாத்தையும் செக் பண்ண வேணும் என்ற நினைப்போடு இருந்தார் கந்தர் வைத்தியர் வரவே ஐயா ஒரே தலைச்சுற்றா இருக்கிறது என்னவெண்டு ஒருக்கா பாருங்கள் ஐயா என்றார் சரி ஐயா முதலில் இருங்கள் என்று அவரை சோதித்த போது இது இந்த வெயில்லுக்கு வாரதுதான் என்றார் வைத்தியர் வெயிலுக்குள்ள போறத்தை குறைங்க அப்போது விமலன் அங்கு வரவே ஐயா இவர் நம்மட சொந்த காரர்தான் இவரு ஆஸ்பத்திரி பக்கம் வந்ததே இல்லை ஒருக்கா ஆளை முழுசா செக் பண்ண சொல்லுங்களன் ஓ அப்படியா விமலனின் சிபாரிசு ஐயாவுக்கு கிடைக்க ,ரத்தம் ,சிறுநீர் எல்லாம் சோதிச்ச ,பிறகுதான் சொல்ல முடியும் ,இப்ப பிறசர் கட்டிப்பார்ப்போம் என்று வைத்தியர் கையை தூங்கி காட்டுங்கோ என்ற சொல்ல இவரும் கையை தூக்கி காட்டினார் பின்னர் பிறசர் கட்டிப்பார்த்தார்கள் ,கைப்பிறசர் இல்லை நோர்மல் தான் என்றார் வைத்தியர் ஓ அப்படியா ஐயா இப்பதான் எனக்கு நிம்மதி எதுக்கும் பிலட்டை செக் பண்ணிப்பார்ப்போம் என்ன சரி என்று சிறிஞ்சில் ரத்தம் எடுத்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அதிலும் அவருக்கும் ஒன்று இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே அவருக்கு உன்மையான மூச்சு வந்தது வருத்தம் இல்லாவிட்டாலும் உனக்கு அது வந்திருக்கு இது வந்திருக்கு என்று சொன்ன விமலை முறைத்து பார்த்தாலும் நமது உடம்பை இந்த காலத்தில் அடிக்கடி செக் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டுவந்த வீடு வந்த கந்தர் தன் மனைவி சுந்தரியை பார்த்து இனிமேல் சாப்பாட்டுல உப்பு , சீனி , உறைப்பு , எண்ணெய் இதெல்லாம் குறைச்சு போடு சரியா என்றார் சரி என்று அவரும் சொல்ல வருத்தம் வராமல் செத்து போகவேணும் காலை கழட்டி கையை கழட்டியெல்லாம் வாழ இயலாதுடி நாளைக்கு நம்க்கு பீ அள்ள மூத்திரம் அள்ள ஒருத்தரும் இல்லை நீயும் வா ஒருக்கா உன்னையும் செக் பண்ண வேணும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போகிறார் ஆஸ்பத்திரிக்கு. எல்லாரும் சுய ஆக்கம் எழுதும் போது நம்ம பங்கிற்கு சும்மா கிறுக்கியது இந்த மெசின் வாழ்க்கையில் தன் உடம்பை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு நடந்த சில நிகழ்வுகளை சின்ன கதையாக
 17. 21 points
  நான் ஒரு அசைவ பிரியன் அதே போன்று எனது நண்பர்களும் அசைவப்பிரியர்கள் .ஐந்து லாம்படிசந்தி நானா கடையில் கொத்துரொட்டி எங்களது அதிஉயர் கெளரவமான சாப்பாடு அன்றைய எங்களது பொருளாதர நிலையில் அதுதான் எங்களுடைய‌ சைனீஸ்,தாய்,இட்டாலியன் ரெஸ்ரோரன்ட்.ஆட்டிறைச்சி கொத்து என்று சொல்லுவோம் ஆனால் அவர் ஆட்டை போட்டாரா மாட்டைபோட்டரா என்று ஆராச்சி ஒன்றும் செய்வதில்லை.எங்களுடன் ஒரு ஐயர் பெடியனும் இருந்தவன் அவன் வரமாட்டான். டுயுசன் வகுப்பில் பெண்களின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் முதலாவதாக போய் இருப்பது அவன் தான்.வேறு குழப்படிகளுக்கு ஒத்தாசை செய்வான் அதாவது பெண்களுக்கு லவ் லெட்டர் கொடுப்பது ,அவர்களி பின்பு சைக்கிளில் திரிவது போன்ற செட்டைகளுக்கு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் மிகவும் கடுமையாயாக இருப்பான். டெய் நாங்கள் அப்பாட்ட சொல்ல மாட்டோம் நீ சாப்பிடு " " இல்லையடா கோவிலுக்கு போக வேணும்" "நாங்களும் கோவிலுக்கு போறனாங்கள் தானே" "இல்லையடா எங்கன்ட பரம்பரையே சாப்பிடுவதில்லை,ஆச்சார்மாக இருக்க வேணும்" அதன் பிறகு அவனை நாங்கள் வற்புறுத்தவில்லை . அவனுக்கு பூணுல் சடங்கு நடந்தபின்பு அவன் எங்களை மெல்ல மெல்ல புற‌க்கணிக்க தொடங்கினான். . அவனை எல்லோரும் ஐயா என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள் . நான் பெயர் சொல்லித்தான் அவனை அழைப்பேன்,ஆனால் அம்மா "ஐயா ஒர் அர்ச்சனை செய்ய வேணும் என்று தான் கேட்பார்"அவனும் மந்திரம் சொல்லி தீபத்தை காட்டுவான் பிறகு தொட்டு கும்பிடுவதற்காக எங்களிடம் கொண்டுவருவான் அம்மா மிகவும் பயபக்தியுடன் தொட்டு கும்பிட்டு தட்டில் தட்சணையும் இடுவார். கால போக்கில் நானும் அவனை ஐயா ஒரு அர்ச்சனை செய்யவேணும் என்று கேட்க வேண்டிய நிலைக்கு போய்விட்டேன். எங்களுடைய வீட்டுக்கு பின்னே கன்னியாஸ்திரிகள் மடம் இருந்தது .ஞாயிறு காலையில் குழுக்களாக வெள்ளை சட்டை அணிந்து கன்னியாஸ்திரிகள் செல்வார்கள் .கன்னியாஸ்திரிகள் என்று சொல்லுறாங்கள் ஆனால் வயசு போனவையள் எல்லாம் இருக்கினம் என்று எங்களுக்கு மனதினுள் ஒரே குழப்பம்.கன்னிகள் என்றால் இளம் பெண்கள் என்று எங்கள் மனதில் பதிந்துவிட்டது.பிறகு தமிழ் படங்கள் பார்க்க தொடங்க விளக்கம் தானகவே வந்திட்டுது. எங்களது வீட்டுக்கு முன்னே மகளிர் பாடசாலை .பாடசாலை தொடங்கும் பொழுது அல்லது முடியும் பொழுது எனது நண்பர்களுக்கு என்னிடம் கொப்பிகள் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்,அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருப்பேன். சைக்கிள் மணிசத்தம் கேட்டவுடன் கையில் அகப்படும் கொப்பியை தூக்கி கொண்டு படலையடிக்கு சென்று சைக்கிள் மாநாடு நடத்துவோம்.ஆனால் அந்த மாநாட்டில் எடுத்த தீர்மாணங்கள் ஒன்றும் நிறைவடையவில்லை என்பதையிட்டு நாம் யாரும் இன்று வரை கவலைப்படவில்லை. ஒரு நாள் கெற்றின் கொழுவியை தட்டும் சத்தம் கேட்க யன்னலூடாக பார்த்தேன் வெள்ளை யூனிபோர்ம் தெரிந்தது ,மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது.எங்களது மாநாட்டின் முடிவுகளை அம்மாவிடம் சொல்ல வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் வளவின் பின்னே ஒடி ஒழிந்து கொண்டேன். "தம்பி கண்ணா எங்க போயிட்டா" என அம்மா கூப்பிட்டு கொண்டே வந்தார். "இங்க வந்து பார், யார் வ்ந்திருக்கிறது என்று" நான் இருக்கும் இடத்து கிட்ட வந்த சத்தம் கேட்க "வாரன் அம்மா ஆட்டுக்கு குழை ஒடிக்கிறன்,சும்மா ஏன் கத்திறீயள்" "நீங்கள் போங்கோ நான் கை காலை கழுவிபோட்டு வாரன் " " மினக்கெடாமல் வா" பயந்து கொண்டே வீட்டினுள் சென்றேன் ,கன்னியாஸ்திரிகளின் உடையுடன் முதியவரும் ஒர் இளையவரும் இருந்தார்கள். அவர்களை பார்த்தவுடந்தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். மத போதனைக்கு வந்திருப்பார்கள் ஏன் அம்மா என்னை இதுக்குள் மாட்டிவிட்டவர் என நினைக்கும் பொழுதே "கண்ணன் என்னை தெரியுதோ" "இல்லை சிஸ்டர் " "என்னடா தெரியவில்லையடா " "யார் அம்மா சொல்லுன்கோவன்" "மட்டகளப்பு அக்ணஸ் " "ஹலோ அக்ணஸ் அக்கா எப்படியிருக்கிறீங்கள்" "நல்லாய் வளர்ந்திடீர்,இப்ப என்ன செய்யிறீர்" "இந்த வருடம் ஏ/எல் எடுக்கப்போரன்" "எப்படி தெரியும் நாங்கள் இந்த வீட்டில் இருக்கிறோம் என்று" "உங்களை அண்ரி போனகிழமை கெற்றடியில் கண்டனான் ,ஒவ்வோரு தடவையும் கண்ணை வாசலில் பார்க்கும் பொழுதும் இது உங்கன்ட வீடாக இருக்கும் என்று நினைக்கிறானான் போனகிழமை உங்களை கண்டபின்புதான் சுயராய் தெரிந்தது ,மதரிட்ட பெர்மிசன் எடுத்து போட்டு மிஸ்ஸுடன் வந்தனான் உங்களை மீட் பண்ணிட்டு போவம்மென்று." "டேவிட் அண்ணா என்ன செய்யிறார்" "பாதிரியாராக -------முனையில் இருக்கிறார்" அக்ணஸ் அக்கா விடை பெற்று சென்ற பின்பு . "இந்த பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ தெரியாது ,நல்ல வடிவான பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ,டேவிட் பாதிரியாரக வரவேணும் என்றுசின்ன வயசிலயே அவையளின்ட அம்மா விரும்பினவர் அதானால் அவர் பாதிரியாராக வந்திருப்பார்"எல்லாம் அவையளின்ட தலையெழுத்து என பெருமூச்சு விட்டபடியே அம்மா வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். அக்ணஸ் அக்கா என்னைவிட ஐந்து வயது கூடியவர் அவரின் அழகு அவரைவிட வயது குறைந்தவர்களையும் சபலமடையச்செய்யும்.. `புகையிரதம் கொழும்பு நோக்கி போய்கொண்டிருந்தது.மெல்ல மெல்ல சிவப்பு வெள்ளை நிற கட்டிடங்களுடன் கோபுரங்களும் மறையத்தொடங்கின. இடையிடையே சிலுவையில் அறைந்த ஜேசுநாதர்,கையில் குழந்தையுடன் மாதா சொருபங்களும் வந்து போய்கொண்டிந்தது . காடுகளிடையே ஆலமரத்தடியில் பிள்ளையார் தனிதிருந்தார் சில இடங்களில் திரிசூலத்தை காணக்கூடியதாக இருந்தது.புகையிரதத்தின் தாலாட்டில் தூங்கிபோனேன்.முழித்த பொழுது காடுகளினுடாகவும் சிறு மலை தொடர்களினுடாக வண்டி சென்றுகொண்டிருந்தது.மலைகளின் உச்சியில் வெள்ளைநிற கோபுரங்களும் புத்தர் சிலைகளும் தெரியத்தொடங்கின.மஞ்சள் வர்ண காவியுடுத்து புத்தர் சிலையாக நிற்க அவரை தரிசிக்க காவியுடுத்த சிறுவர்கள் வரிசையாக படிகட்டில் ஏறிகொண்டிருந்த்தார்கள் . அந்த சிறுவர்கள் எதை தேடி ஏறுகிறார்கள், தேடச்சொன்னது யார் இன்றுவரை பதில்லை.சில இடங்களில் ஊரில் கண்ட மாதசொருபங்களும்,சிலுவையில் அறைந்த ஜெசுநாதரும் ,சில வீடுகளின் முற்றத்தை அலங்கரித்தார்கள்.அரசமரத்தடியில் புத்தர் உரிமையுடன் குடிகொண்டிருந்தார். தலைநகரம் பிக்குகள், பாதிரியார்கள் ,கன்னியாஸ்திரிகள் என நிறைந்திருந்தது விமானம் சவுதியரபியா நோக்கி பயணமானது.அநேகர் வேலைவாய்ப்பு தேடி சென்று கொண்டிருந்தார்கள் .பெரும்பாண்மையானவர்கள் இஸ்லாமியர்கள் .எனக்கு அருகில் இருந்தவர் மெல்ல கதையை தொடங்கினார். "கம கோயத" "யாப்பானய‌" "நீங்கள் தமிழா" " ஒம்,நீங்கள் எந்த இடம்" "நான் காலி" அந்த விமானத்தில் இருந்த அநேகர் தொப்பியணித்திருந்தனர். ஆனா இஸ்மயில் தொப்பிய்ணித்திருக்கவில்லை ,தாடியும் வைத்திருக்கவில்லை.அவரும் நான் வேலை தேடிசெல்லும் கொம்பனியில்தான் பணிபுரிய போகின்றார் என்பதை அறிந்து கொண்டேன். விமானநிலையத்தில் இறங்கியவுடன் கடவுச்சீட்டுக்களை கம்பனி பொருப்பெற்றுகொண்டது.சினேக பூர்வமாக பழகினார் தாடி வளர்த்திருந்தவர்களை நக்கலடித்தார். காலப்போக்கில் அவர .தாடி வளர்த்து, ஐந்து நேர‌ தொழுகைக்கு ஒழுங்காக செல்ல தொடங்கியிருந்தார்.ஒரு வெள்ளிக்கிழமை அரேபிய உடை அணித்து வந்திருந்த்தார். "என்ன இஸ்மயில் எப்ப தொடக்கம் அரபியா மாறினீங்கள்" அவர் இப்ப மெளலான பாந் ஒத பள்ளிக்கு போகின்றார் என பக்கத்தில் நின்ற மற்றைய இஸ்லாமிய நண்பர் சொன்னார். சவுதியில் அநேக பல்நாட்டு மெளலானக்களை பார்க்ககூடியதாக இருந்தது சவுதி வாழ்க்கையில் எதிர்காலமில்லை என்று தெரிய வர ,எனைய புத்தாசலி தமிழனை போன்றுநானும் அவுஸ்ரெலியாவுக்குள் குடிபெயர்தேன். பரமற்றா வில் ஒரு ரெஸ்ரோரன்டுக்கு மகள் அழைத்து சென்றாள் .சாப்பாட்டை ஒடர் செய்து விட்டு கதைத்துகொண்டிருக்கும் பொழுது "இது முந்தி சேர்ச்சாக இருந்தது இப்ப ரெஸ்ரோரன்ட் ஆக்கி போட்டினம் "என்று பெட்டர்காவ் சொல்ல நான் அங்கும் இங்கும் பார்த்தேன். "என்ன ஏமலாந்திரிய‌ள்" " ஒரு கன்னியாஸ்திரியையோ ,பாதிரியையோ காணவில்லை அது சரி இந்த இருபது வருசத்தில் அவுஸ்ரேலியா வீதியில் கன்னிகளை கண்டிருக்கிறன் கன்னியாஸ்திரிகளையோ பாதிரிமாரையோ காணக்கிடைக்கவில்லை எப்படி பழைய சேர்ச்சில் அவையளை தேடலாம்" "உந்த லொல்லுக்கு குறைச்சலில்லை சூடு ஆர முதல் சாப்பிடுங்கோ" .
 18. 20 points
  துருச்சாமி . சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை). என்னுரை: இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன. அவையாவன: 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம். 2) பாதயாத்திரைப் படலம். 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க). 5) பந்திபோஜனப் படலம். 6) நீதிவழங்கும் படலம். இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அவற்றைப் பின்பு பார்க்கலாம். எமது துருச்சாமியுடன் பயணிக்கும் அடியவர்கள் மூளைக்கு ஓய்வளித்துவிட்டு, லாஜிக்கைத் தவிர்த்து மனசை இலேசாக்கி சிரிப்பை சிந்திக்கொண்டு (வந்தால்) பயணிக்கவும். காண்டம் ஒன்று: பாலகர் காண்டம். ( பாகம் ... ஒன்று). 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைக்கும் படலம். நேரம் அதிகாலை 03 : 45. அதிகாலை எங்கோ தூரத்தில் சேவல் ஒன்று கூவுகின்றது. அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த தரிப்பிடத்தில் ஒரு பேருந்து வந்து நின்று பெரு மூச்சுடன் புறப்பட்டுப் போகின்றது. அதில் இருந்து திடகாத்திரமான உருவம் ஒன்று இறங்கி வருகின்றது. அப்படியே அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு தனக்குள் வெள்ளி காலித்துக் கிடக்கு ஒரு நாலு மணி இருக்கும் போல. அப்படியே கோவில் அருகால் நடந்து திருக்குளத்துக்கு வருகின்றது. படிக்கட்டில் ஆடையைக் களைந்து வைத்துவிட்டு கௌபீனத்துடன் குளத்தில் இறங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கி முங்கி உடல் சூடு பறக்க நன்றாக முழுகி விட்டு எழுந்து வந்து ஒரு துணிப்பையில் இருந்த துண்டால் தலையைத் துவட்டி மேலைத் துடைத்துவிட்டு ஒரு காவி வேட்டியை அணிந்து கொண்டு கோவணத்தை அலம்பிப் பிழிந்து படிக்கட்டில் விரித்துவிட்டு கிழக்குப் பார்த்து நின்று சிவ சிவ என்று திருநீறு பூசி பையையும் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து வருகின்றது. அப்போது அங்கு நின்றிருந்த தென்னை ஒன்றில் இருந்து தேங்காய் விழ, அந்த இருட்டில் அதைத் தேடி எடுத்து அதோடு இன்னும் இரண்டையும் பொறுக்கி எடுத்து மூன்றையும் பையில் இருந்த கத்தி எடுத்து உரித்து எடுத்துக் கொண்டு வரும்பொழுது வழியில் நின்ற பொன்னச்சி, அரளி, செம்பருத்தியில் நாலுபூவும் பறித்துக் கொண்டு வந்து விநாயகர் சந்நிதிமுன் நின்று கதவருகில் பூவை வைத்துவிட்டு அங்கு தொங்கிய சங்கில் இருந்தும் திருநீறு எடுத்து நெற்றியில் மார்பில் கையில் பூசிக்கொண்டு பையில் இருந்து ரெண்டு சூடம் எடுத்து அங்கிருந்த கல்லில் வைத்து ஏற்றிவிட்டு அடுத்திருந்த கல்லில் சிதறு தேங்காய் அடித்து விட்டு கண்முடி " திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் " என்று ஸ்தோத்திரம் பாடி உடைத்த தேங்காயில் இரண்டு சில்லையும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வருகுது. 2) பாதயாத்திரைப் படலம். கோயில் வெளிச்சுற்றைத் தாண்டி வரும் பொழுது மடப்பள்ளிக் கதவு ஒரு கம்பியால் கட்டி இருக்கு, அருகே எலி வாகனமும் இருக்கு. அதையும் தாண்டி வந்து வயலுக்குள் இறங்கி வரப்பால் வெகுதூரம் நடந்து கடந்து பனங்கூடலுக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடந்து வருகின்றது. சூரியன் உதயமாக அந்தக் கருக்கலில் சிறிது வெளிச்சமும், பறவைகளின் இரைச்சலும் தொடங்குகிறது. "மாசிப் பனி மூசிப் பெய்யும்" பனி விழுவதால் இருள் முற்றாக விலகவில்லை. இப்போது அந்த உருவத்தை சிறிது பார்க்க முடிகின்றது. கொஞ்சம் ஒல்லியாய் நெடு நெடு என்று ஆறடிக்கு குறையாத தோற்றம். மாநிறம், கைகளும் கால்களும் தோள்களும் எஃகு போல வலுவாக இருக்கின்றது. ஒரு காவி வேட்டி கட்டியிருக்கு. அது முழங்காலுக்கு கொஞ்சம் கீழே இறங்கி கணுக்காலுக்கு மேலே ஏறி இருக்கு. உடலை ஒரு நீளமான சால்வையால் போர்த்தி இருக்கு. தோளில் இருந்து ஒரு ஏணை போன்ற தூளிப் பை தொடைவரை தொங்குகின்றது. அந்தப் பையின் உள்ளே பல பொக்கட்டுகள் விசேஷமாய் தைக்கப்பட்டிருக்கு. அதனுள்தான் சாமியின் ( இனி அவரை சாமி என்றே அழைப்போம்) சொத்து பத்து எல்லாம் அடக்கம். அந்தப் பை ஒரு அட்ஷய பாத்திரம்.கேட்டது எல்லாம் தரும். அத்துடன் கையிலே ஒரு தண்டம் வைத்திருக்கு. அந்தத் தண்டம் ஒண்டரை முழம் நீளம் இருக்கும்.கொப்பு வளைத்துப் பூப்பறிக்க, குலைத்து வரும் நாயைத் துரத்த, முதுகு அரித்தால் சொறிய என்று அதுக்கும் நிறைய வேலை. மேலும் குடிக்க கழுவ என்று ஒரு கமண்டலம். சரி சாமி மெதுவாய் நடந்து போகுது நாமும் தொடர்ந்து போவோம். அந்தப் பனங்கூடலுக்குள் ஏராளமான பனைகளும், வடலிகளும், அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, பாவட்டை என்று பரந்து கிடக்கு. அங்கு சாமி நடந்து வர ஒரு பனையின் அடியில் நுரை ததும்ப கள்ளுமுட்டி ஒன்று பக்குவமாய் வைக்கப் பட்டிருக்கு. சாமியும் தனது கமண்டலத்தை எடுத்து அண்ணாந்து நீர் பருகிவிட்டு மேலும் நடக்கின்றது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்திருந்த வாழைத் தோப்புக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடக்குது. அந்தப் பாதையில் நிறைய குலை தள்ளிய வாழைகளும் பொத்திகளுமாய் இருக்கு. அவை பாதையில் வளைந்து தலையிலும் இடிக்குது.சாமி அதையும் கடந்து நடந்து வருது. பொழுதும் புலருது, பனியும் அடங்குது. அடுத்து ஒரு காய்கறித் தோட்டத்துக்குள்ளால் அந்தப் பாதை வர சாமியும் அதில் நடந்து வருது. அங்கே கத்தரி, புடலை, வெண்டை, தக்காளி, கீரை, மிளகாய், பயத்தங்காய்,பூசணி என்று வழியெல்லாம் பார்க்க மனசு கொள்ளை போகின்றது. அதையொட்டி வர ஒரு வீடும் அருகே கொட்டிலில் ரெண்டு ஆடும் , ஒரு கரப்புக்குள் கோழியும் குஞ்சுகளும் இருக்கு. அவை வெளியே வர முண்டியடிக்குது. அந்த வீட்டைக் கடந்து வர எல்லைக் கடவையில் முருங்கை ஒன்று ஏராளமாய்க் காய்த்துத் தொங்குது. அதையும் சாமி எட்டிக் கடந்து அடுத்திருந்த பனங்காட்டுக்குள் இறங்கி வருது. இப்போது அந்தக் காட்டுக்குள் ஒரு அன்னமுன்னா கொப்பில ஒரு மஞ்சள் பை தொங்குகின்றது.அதையும் கடந்து அடுத்திருந்த வீதிக்குள் வந்து விட்டது சாமி. இப்ப நல்லா வெளிசிட்டுது சற்று தூரத்தில் எட்ட எட்டவா பல வீடுகள் தெரிகின்றன. வீதியால் சாமியைக் கடந்து போகும் இரண்டொருவர், வண்டில்காரர் ஆளாளுக்கு கும்புடு போட சாமியும் தண்டத்தை உயர்த்தி ஆசிர்வதித்துக் கொண்டு வருது. அப்படியே வருகையில் வளப்பமான ஒரு ஒட்டு வீட்டின் படலையடியில் வந்து நிக்க, உள்ளே முத்தம் கூட்டிக் கொண்டிருந்த கிழவி பர்வதம் படலைப் பக்கம் பார்த்து என்னடா இது காலங்கார்த்தால குடுகுடுப்பைக் காரன் வந்திட்டான் போல என்று தனக்குள், உவங்கள் சுடலையில் இருந்து வருவாங்கள், உவங்கட முகத்தில முழிக்கக் கூடாது ஆனால் உவர் உடுக்கடித்து என்ன சொல்லுகிறார் என்று கேட்பம் என நினைத்து வீட்டுப் பக்கமாய் விளக்குமாத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு நிக்கிறாள். சாமியும் முத்தத்தில ஆள் நிக்கிறதைப் பார்த்திட்டு கொழுக்கியைத் தூக்கி படலையைத் திறந்து கொண்டு கிழவிக்கு அருகில் வந்து நிக்குது. கிழவியும் என்ன இன்னும் உடுக்கு சத்தத்தைக் காணேல்ல என்று திரும்ப முன்னால சாமி நிக்குது. கிழவியும் அட இது குடுகுடுப்பை இல்லை யாரோ பரதேசியோ, பண்டாரமோ என்று வடிவாய்ப் பார்த்து அட இது சாமி என்று ஐயம் தெளிந்து மெய்வணங்கி வரவேண்டும் சாமி வரவேண்டும், நீங்கள் வந்தது நாங்கள் செய்த புண்ணியம் போன ஆடி அமாவாசைக்கு சோறு போடுவான் எண்டால் ஒரு சாமியையும் கண்ணில காணக் கிடைக்கேல்ல என்கிறாள். இந்த அமர்க்களத்தில் பர்வதத்தின் பேத்தி உள்ளிருந்து வந்து யார் பாட்டி என்று கேட்க, சாமியும் தண்டம் உயர்த்தி எம்பெருமான் பைரவரின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் இல்லத்துக்கும் குடும்பத்துக்கும் உண்டு. மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லுது. அந்தப் பெண்ணும் அட சாமிக்கு என்பேரு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்பட்டு, ஓம் சாமி இப்ப எட்டாவதாய் உண்டாகியிருக்கேன் சாமி வாங்கோ வந்து திண்ணையில இருங்கோ என்று உள்ளே சென்று ஒரு மான்தோல் எடுத்துவந்து திண்ணையில் போடுகிறாள். சாமியும் அதில் இருந்துகொண்டு பிள்ளை ஒரு செம்பில கொஞ்சம் துத்தம் கொண்டுவானை, நெடுந்தொலைவு நடந்து வாறன் தாகமாய் இருக்கு என்று சொல்லிவிட்டு, தனது பாரமான தூளிப்பையை பக்குவமாய் திண்ணையில் வைத்துவிட்டு தானும் கால்களை சம்மணம் கட்டி இருந்து கண்களை மூடி மோனத்தில் அமருது. பர்வதாக கிழவியும் வந்து பவ்யமாக சாமி இன்று இங்குதான் மத்திய போஜனம் செய்ய வேண்டும் என்று பயபக்தியுடன் விண்ணப்பிக்கின்றாள். "ஏடுடைய மலரவனின் ஏறுதலை கிள்ளியவன் இறுமாப் படக்குமரசே" சாமி மெதுவாய் ஸ்தோத்திரம் சொல்லுது. பயணம் தொடரும்.....!
 19. 20 points
  பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறிப்பில் இப்படிதான் எழுதுகிறேன். கண்ணீரே வாழ்வாகி வற்றிப்போன எனது கண்களிலும் சுரக்கிறது ஆனந்த கண்ணீர் ... ********************* 03.03.2017 மகள் வவுனீத்தாவின் பரீட்சை முடிவுகள் வெளியாகும் நாள். நேரம் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள் ஒருவித பதட்டம். பன்னிரண்டாம் வகுப்பு வரையும் ஒவ்வொரு வகுப்பேற்ற பெறுபேறுகள் வெளியாகும் நாளில் பாடசாலை வாகனத்தரிப்பிடத்தில் நின்றே பிள்ளைகளை வரவேற்பேன். வகுப்பில் வாங்கிவரும் தேர்வறிக்கையினை கையில் ஏந்தி வந்து முகம் நிறைந்த மகிழ்வோடு தந்த பொழுதுகளிலெல்லாம் என்னை மறந்திருக்கிறேன். இந்தமுறை வவுனீத்தாவின் தேர்வறிக்கையோ அப்படியானதொன்றில்லை. அவளதும் எனதும் பார்த்திபனதும் அவளை நேசிக்கும் ஒவ்வொருவரின் கனவும் எதிர்பார்ப்புமாக இருந்தது. இறுதியாண்டு தேர்வறிக்கை. இருந்த போதிலும் நேரில் சென்று பிள்ளையை வரவேற்க முடியவில்லை. வேலை என்ற ஓர் நிர்ப்பந்தச் சுழலில் சிக்கிக்கொண்டிருந்ததால் அதிலிருந்து வெளியேற முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பரீட்சை முடிவே எனது மகளின் பல்கலைக்கழகக் கனவையும் என் வாழ்நாள் கனவையும் நனவாக்கும் முடிவு. காலை 10.56மணிக்கு எனது தொலைபேசிக்கு அவளின் செய்தி வந்தது. அம்மாவுக்கு நன்றி. அம்மா நான் உங்களை நேசிக்கிறேன்.அவள் எழுதிய குறுஞ்செய்தியை பார்த்த போது பெருமிதமானேன். வேலை முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறினேன். மகளை தொலைபேசியில் அழைத்தேன். 'அம்மா நான் பாஸ். அவள் அழுதாள். சத்தமிட்டு கத்தி என் குழந்தையின் பரீட்சை பெறுபேற்றினை சொல்ல வேண்டும் போலிருந்தது. என் தோழனை அழைத்து மகளின் பெறுபேறு விபரத்தைச் சொன்னேன். என்போல அவளது பரீட்சை முடிவை அவனும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். (தோழன் பற்றிய குறிப்புகள் பின்னர்) உலகில் எனக்காக உயிரையும் தரக்கூடியவன். பிள்ளைகளின் கல்வியும் இறுதியாண்டுத் தேர்வும் அவர்கள் வாழ்வில் எத்தனை முக்கியமானது. ஆனால் கல்வியொன்றையே வாழ்நாள் கனவாக கொண்டியங்கும் எனது பிள்ளைகளுக்கு அவற்றை மன அமைதியுடன் தொடர முடியாதிருந்தது கடந்தகாலம். பார்த்திபனின் இறுதியாண்டு தேர்வுக்காலம் நினைவில் வந்து நெருடுகிறது. அம்மா நான் படிக்க வேணும் அம்மா நான் படிக்க வேணும் என என் குழந்தை கெஞ்சியதும், அதற்காக அவன் போராடியதும் இன்னும் வலிக்கும் நினைவுகளாகவும் இருக்கின்றன. இந்தக்கால கட்டத்தில் தான் எனது வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளுக்கு தெளிவாக பதில் எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன். 'அப்பு நீங்கள் உங்களோடை படிக்கிற பிள்ளையள் ஆரிட்டையும் கேளுங்கோ. சோதினை முடியும் மட்டும் ஆற்றையேன் வீட்டில இருந்து படியுங்கோ. நான் காசு தாறன்' முதல் முதலில் அம்மாவையும் தங்கையையும் விட்டுப் பிரிய அவனால் முடியவில்லை. அழுதான். நீங்கள் எப்பவோ உவரை விட்டிருக்கலாம். எல்லாம் உங்கடை பிழை. இது பார்த்திபன். நானும் அண்ணாவும் எப்பவோ சொன்னம் நீங்கள் தான் கேட்காமல் பாவம் பாத்தனீங்கள். உவர் திருந்தமாட்டார் உவர் நடிப்பு எல்லாம்பொய். என்றாள் வவுனீத்தா. நான் காத்த பொறுமையும் அதன் விளைவுகளும் தங்கள் நிம்மதியைக் கெடுப்பதாக பிள்ளைகள் இருவரும் குறைசொன்னார்கள். இது எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவுதான். அவர்களுக்கு விபரம் தெரியாத வயதில் இந்த முடிவை எப்போதோ நான் எடுத்திருந்தால் அவர்கள் எனது முடிவை தவறென்று யோசித்திருக்கவும் கூடும். அம்மா இது அண்ணாவின்ரை வாழ்க்கை அவன்ர München Universität கனவு. கொஞ்சநாளைக்கு அவன் வெளியில இருந்தால் தான் அவன் படிக்கலாம். மகனைப் பிரிதல் என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனாலும் எனது பிள்ளையின் எதிர்காலத்திற்காய் அதைச்செய்ய வேண்டியே இருந்தது. பிள்ளையின் படிப்பை குழப்புவேன் அதுவே என்னை தோற்கடிக்க இருக்கும் இறுதி வழியென்பதை புரிந்து என்னை பழிவாங்க காத்திருந்தவன் வெல்லக்கூடாது. அதற்காக பிள்ளையின் பிரிவைத் தாங்க வேண்டும். 'பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' பாரதியார் பாடல்கள் பக்கத்துணையாய் இருந்தன. 000 000 000 24.12.2016 நத்தாருக்கு முதல் நாள். வளமைபோல நிறைவெறியில் கதவுகளை அடித்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான். மேலே மகன் இறுதியாண்டு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான். அவனது படிப்பு குழம்பக்கூடாது என்பதற்காக அமைதியாய் இருக்கும்படி மன்றாடிய போது...., 'உன்ர பிள்ளை பெயில் விட்டா திரும்பி படிக்சொல்லடி....' அவனுக்கு துணையாக ஒருத்தி என் வீட்டில் வந்து இருந்து என்னை அதிகாரம் செய்தாள். காதல் உலகில் எவ்வளவோ நல்லதையெல்லாம் சாதிக்குமாம். ஆனால் எனதும் எனது குழந்தைகளின் வாழ்வையும் தெருவில் போட்டே தன் பழைய காதலை அவள் வெல்ல எதையும் செய்யத் துணிந்தாள். அவளுக்கும் ஒரு ஆண்குழந்தை இருந்தது. இயன்றவரை பிள்ளைகள் இருவரையும் அமைதிப்படுத்தி அவர்களை இடம் மாற்ற வேண்டும். அதற்கான வழிகளைத் தேடினேன். என் பிள்ளை பரீட்டையை நல்லபடியாக எழுத வேண்டும். பார்த்திபன் தனது நண்பர்களிடம் விடயத்தை தெரிவித்தான். அவனைத் தாங்க அவனது நண்பர்கள் முன்வந்தனர். தாயும் தந்தையும் மருத்துவர்களான அவனது தோழியின் பெற்றோர்கள் அவனைத் தங்கள் 3பிள்ளைகளோடு 4வது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறோம் என தங்களோடு அவனை விடுமாறு சொன்னார்கள். பரீட்சைக்கு ஒருமாதம் இருந்தது. இந்த நிலையில் பாடசாலைக்கு விடயம் தெரிந்தால் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது. அதனால் வீட்டு விடயங்களை பாடசாலை நிருவாகத்திற்கு தெரியாமல் பாதுகாத்ததில் என்பிள்ளையை பொறுப்பெடுத்த குடும்பத்திற்கு பெரும் பங்குண்டு. என் வாழ்வில் மறக்க முடியாத நன்றிக்குரிய குடும்பங்களில் அந்த யேர்மனியக் குடும்பத்தை என்றும் என்னால் மறக்க முடியாது. மன அழுத்தம் நித்திரை இழப்பென பிள்ளைகளின் அமைதி குலைந்து அவன் பரீட்சையை எப்படி எழுதப்போகிறான் ? நொடிக்கு நொடி அந்தரித்துக் கொண்டிருந்தேன். என்னையும் தங்கையையும் பார்த்தால் அவன் அங்கே நித்திரை கொள்வதில்லையாம் தானாக இயங்கவோ உண்ணவோ முடியாது அவன் குழம்பிவிடுவதாக அவனை பொறுப்பெடுத்த அம்மா என்னை வெளியில் ஒரு நண்பர் வீட்டில் அழைத்து சொன்னார். அவன் பரீட்டை முடியும் வரை அவனை நானும் மகளும் சந்திக்கவோ தொலைபேசி தொடர்புகளோ வைக்காமல் இருந்தால் நல்லமென ஆலோசனை சொன்னார். மனசை கல்லாக்குதல் என்பதை பிள்ளையுடனான தொடர்பாடலை தவிர்க்க வேணுமென்ற போதே உணர்ந்தேன். காவல்துறையின் உதவியை நாடி சட்டத்தரணியின் ஆலோசனைப்படி அடாவடித்தனங்களை எதிர்கொண்டேன். வீட்டில் தன் விருப்பத்திற்கு சாப்பிடும் பிள்ளை இன்னோரிடத்தில் எப்படி எதிர்கொள்வானோ என்பது முதல் எப்படி இருப்பானோ என்ற துயரம். என் வழியெல்லாம் கண்ணீரோடு கரையத் தொடங்கியது. எதைச் சமைத்தாலும் பிள்ளை சாப்பிடாத உணவு ஒவ்வொன்றும் எனக்கு விசமாயிருந்தது. அம்மா நீங்களும் கொஞ்ச நாளைக்கு அண்ணாமாதிரி வேற இடத்தில இருப்பியளோ ? இந்தப் பிரச்சனை முடியுமட்டும் நீங்கள் அமைதியாக படிக்க வேணும். மகளிடம் கேட்டேன். நான் உங்களை விட்டிட்டு போகமாட்டேன். நீங்கள் தனிய. அவள் என்னைவிட்டு போகமாட்டேனென்று முடிவாக சொல்லிவிட்டாள். மகள் என்னை விட்டு போகாமல் என்னோடே இருந்தாள். மரணத்தை நெருங்கும் நாட்களாகவே அன்றைய நாட்கள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும். பரீட்சை வந்தது. பர்த்திபன் பரீட்சை எப்படி எழுதினான் ? கேட்ட போது வந்த பதில் பயமென்றால் என்னவென்று உணர வைத்தது. அவன் ஆசைப்படி infomatik கற்றலுக்கு போதுமான புள்ளிகளில் இருந்து சில புள்ளிகள் போதாமல் இருந்தது. என் பிள்ளையை தங்கள் பிள்ளையாக பாதுகாத்த தாயும் தந்தையும் பாடசாலை நிருவாகத்தினரிடம் நேரில் சென்று நிலமைகளைச் சொல்லி போதாத புள்ளிகளை சமப்படுத்த மறுபரீட்சையை எழுத அனுமதிக்குமாறு கோரினார்கள். infomatikபாடத்தில் ஏற்கனவே அவன் செய்திருந்த பிரத்தியேக பரீட்சையில் முழுமையான புள்ளகளைப் பெற்றிருந்தான். பாடசாலையின் அனைத்து ஐகெழஅயவமை தொடர்பான பணிகளைச் செய்திருந்தமையாலும் குறைந்த புள்ளிகளை இட்டுநிரப்ப உதவியது. பார்த்திபன் என்றால் பாடசாலையில் சின்னப்பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள் வரை அறிவார்கள். அவன் சிறந்த பெறுபேறுகள் பெறுவான் என்பது அவர்களது நம்பிக்கை. அவனது தன்னார்வ பணிகள் முதல் infomatik இல் ஏற்கனவே நடந்த பரீட்சைகளில் அவன் மொத்தப்புள்ளிகளையும் பெற்று நம்பிக்கையை கொடுத்திருந்தான். அவன் அங்கேயொரு சின்னக்கதாநாயகன். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்த அதிசிறந்த பெறுபேறுகளை அவன் அடைய முடியவில்லை. இன்றுவரை அவனை கவலையடையச் செய்யும் அந்த நாளை அவன் தனது தற்போதை பல்கலைக்கழக படிப்பிலிருந்து சரி பறவாயில்லையென சற்று சமாதானமடைகிறான். இப்போது பல்கலைக்கழகத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகிறான். என் பிள்ளையின் பரீட்சைக்கால அமைதியிழப்பு என்னோடு அருகிருந்து சாப்பிட்டு நிம்மதியாக பரீட்சை எழுத முடியாத தொல்லையை தந்தவன் தந்தவளை என் சாவிலும் மன்னிக்கும் மனநிலையை எனக்குள் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் ஒருபோதும் வராது. மனஅழுத்தம் மருத்துவம் என பிள்ளைகளையும் என்னையும் பழிவாங்கியவன் தங்கள் வெற்றிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் மேடையேறி சான்றிதழ் வாங்கிய மேடைக்கு அவனை பிள்ளைகள் அழைக்கவேயில்லை. இன்று நாங்கள் வென்ற இந்த வெற்றி எங்கள் அம்மாவின் வெற்றி எனச்சொல்லி என்னை மகிழ்வால் அழவைத்த என் பிள்ளைகளே என் வாழ்நாள் சாதனை. 'அண்ணா எடுக்காத புள்ளிகளை நான் எடுப்பனம்மா' என் கண்ணீரை தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மகள் அதிசிறந்த பெறுபேறுகள் பெற்று என்னை வானத்தில் மிதக்க வைத்திருக்கிறாள். தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து தங்கையின் வெற்றியை தனதாய் மகிழும் என் மகன். எல்லோரின் எதிர்பார்ப்புகளும் ஏன் ஏன் ? என்ற கேள்விகளும் அவனுக்கு கிடைக்கவிருந்த புலமைப்பரிசில் கிடைக்காமல் போனதில் அடைந்த துயரையும் தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து மகிழ்கிறான். 24.03.2017 பல்கலைக்கழகத்திலிருந்து ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து தங்கையோடு நின்று அவளை வாழ்த்தி அடுத்த அவளது பல்கலைக்கழக கற்றலுக்கான ஆலோசனைகள் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு தங்கையை தயார்படுத்தினான் என் பார்த்திபன். பார்த்திபன் என்ற பெயர் கடவுளின் பெயரல்ல. திலீபன் என்றொரு தியாகதீபம் தமிழர்களின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தனையீந்தார். அவரது நாமத்தையே அவனுக்குச் சூட்டினேன். சிறுவயதிலிருந்து அவனது பெயர் தொடர்பாக அவனோடு நான் உரையாடுவதுண்டு. 'திலீபன்மாமா எனக்கு பிடித்த அரசியல் போராளி. அவரது இயற்பெயர் பார்த்திபன் அவரது நினைவாகவே உனக்கு பார்த்திபன் என பெயரிட்டேன்' அவனது பெயர் பற்றி குழந்தைக்காலத்தில் சொன்னதை பார்த்திபன் என்ற பெயருக்கான காரணத்தை தனது நண்பர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் கேட்போருக்கெல்லாம் சொல்லுவான். என் மகளுக்கும் கூட ஒரு காரணப்பெயராகத் தான் வவுனீத்தா என பெயரிட்டேன். நான் நேசித்த என்னை அதிகமாய் நேசித்து 1997இல் வன்னி ஏ9 வீதியில் தன்னுயிரை விதைத்து வீழ்ந்த நேசிப்பிற்குரியவனின் நினைவாகவும் வீரம் நிறைந்த வன்னிமண்ணின் ஞாபகமாகவும் அமைகிறது. அந்த மண்ணில் வாழ்ந்த அனைத்து வீரர்களின் ஞாபகமும் என் மகள் வவுனீத்தாவின் பெயரில் என்னோடு வாழ்கிறார்கள். என் குழந்தைகளுக்கு மாமாக்களாய் சித்திகளாய் உறவுகளாய் இருந்த பலர் இன்று உயிரோடு இல்லை. பலர் மாவீரர்கள். பலர் காணாமற் போனோர்களாய்.... இன்னும் பலர் இன்றும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நன்மையே செய்தபடி எங்கள் மீதான நேசிப்போடு துணையாய் இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கென எதையும் சேர்த்துவைக்கவில்லையென்றாலும் தேடற்கரிய பல நல்ல உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். வன்னிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கிடைத்த மூன்று தடவைகளில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உறவுகளும் மிகப்பெறுமதியானது. யேர்மனியில் பெற்ற மதிப்பேட்டு அறிக்கையினை காட்டி மகிழ்ந்ததும் இன்னும் படியுங்கோ நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டுமென்று அவர்கள் வாழ்த்தியதும் மறக்க முடியாதது. உலகால் அதிசயித்து பார்க்கப்பட்டவரும் உள்ளிருப்பவர்கள் கூட நெருங்கிப்பழகும் வாய்ப்பு கொடுக்காதவரும் எனது பிள்ளைகளைத் தனது மருமக்களாய் தோழ்காவித்திரிந்ததுவும் விளையாடியதும் பெருங்கொடையே. என் பிள்ளைகள் நாட்டுக்கு பயனுள்ளவர்களாய் வரவேண்டும் என பலர் கடிதங்களாய் வாழ்த்துக்களாய் பலவருடங்கள் முன் எழுதி மாவீரர்கள் ஆனவர்களின் கடிதங்கள் வாழ்த்துக்களை பத்திரப்படுத்தி கொடுத்திருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் என் பிள்ளைகள் பல்கலைக்கழகம் முடித்து பட்டமளிப்பு விழாவில் அம்மாவின் வாழ்வின் முழுமையையும் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் வலுக்கிறது. 20வருட உழைப்பு சேமிப்பு , என் குழந்தைகளினதும் எனதும் நிம்மதி அமைதி யாவையும் கொண்டு தொலைந்தவனின் ஒருசத உதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாழுவோம் என என் கடின உழைப்பின் மூலம் கொடுக்கும் உதவியில் படிக்கும் பிள்ளைகள். தேவைகள் நிறைய இருக்கிறது. ஆனால் என்னால் இயலும் அடுத்த ஐந்து வருடம் இன்னும் அதிகம் நான் உழைக்க வேண்டும். எனக்கு ஆதரவு தரவேண்டிய அம்மாவே எவனுக்காகவோ என்னை எதிர்த்தார். என்னை மகளாகப் புரிந்து கொள்ளாமல் ஆண் பெண்ணென்ற விதத்தில் தனது நியாயங்களை என்னுள் நிர்ப்பந்தித்தார். ஆணென்றால் இப்படித்தான் இருப்பார்கள். நாங்கள் தான் சமாளிக்க வேணும். பிள்ளைகளை இழந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழானாலும் பறவாயில்லை பெயருக்கு ஒரு ஆண் குடும்பத்தலைவனாய் இருக்க வேண்டும். அது போன்றொரு போலி வாழ்வே சமூக தகுதியென்று கருதினா. 'பிள்ளைகளை ஆண்துணையில்லாமல் வளத்துக் காட்டு பாப்பம் என சாபமிட்டு சபித்த என் அம்மாவின் சாபம் , என் நடத்தை பற்றி ஊரெங்கும் பழிசொல்லித்திரியும் டென்மார்க்கில் வாழும் அம்மாவின் கூடப்பிறந்த சகோதரியும் அவர்களது குடும்பமும் இன்னும் என் வீழ்ச்சியில் கைதட்ட காத்திருந்த அனைவருக்கும்....., இதோ நான் சாதித்துக் காட்டியிருக்கிறேன். உங்கள் யாரின் ஆதரவும் இல்லாமல் தனியொருத்தியாக என் பிள்ளைகளை உயர்த்தியிருக்கிறேன். உங்களைக் கூடாதெண்டு சொன்ன அம்மம்மாவும் எல்லாரும் எங்களைத் தேடிவாறமாதிரி நாங்கள் படிப்பமம்மா. என் மகள் சொல்லும் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். என்னை பழிசொன்னவர்களே , என் அம்மா உட்பட அனைவரும் எனது மரணத்தில் கூட உங்கள் மூச்சுக்கூட எட்டக்கூடாது. சாந்தி நேசக்கரம் பார்த்திபன் , வவுனீத்தாவின் அம்மாகவும் , வாழ்வில் எனக்கு கிடைத்த நட்புக்கு அர்த்தம் தந்தவனின் தோழியாகவுமே நான் சாக வேண்டும். பிற்குறிப்பு :- என் தோழமை பற்றி. அன்பையும் ஆதரவையும் பலத்தையும் தந்து என்னைத் தாங்கிச் சுமக்கும் உறவு என் தோழன். ஆண்வழியான நான் உணராத அப்பா , அண்ணா , தம்பி அனைத்து உறவுகளின் அன்பையும் ஒன்றாய் தந்தவன். எனக்குப் பறக்கும் வலுவைத் தந்த இறகுகள் அவனது. உடையாத உறுதியைத் தந்த உறவு அவன். என் அமைதியும் நிதானமுமே என் பிள்ளைகளை நிம்மதியாக வாழ்விக்கும். அடிக்கடி என் அருகில் இருந்து என்னை ஆற்றுப்படுத்திய என் தோழன். சாகும் வரையும் அவனுக்கு பட்டகடனை என்னால் திரும்பி கொடுக்க முடியாத கடன். நட்பென்றால் உலகில் நான் காட்டும் முதலும் கடைசியுமான உறவு அவன். எத்தனையோ பழி , வலி யாவும் தாங்கி நான் வீழாமல் என்னைத் தாங்கிய விழுது. என் கண்ணீரை வாங்கிக் கொண்டு புன்னகையைப் பரிசளித்தவன். எல்லாமுமாய் என்னைத் தாங்கிய என் தோழன் இல்லையென்றால் சிலவேளை இன்ற நான் சிறையில் கூட இருந்திருப்பேன்.
 20. 20 points
  அனுபவம் 1. இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது. சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்.. சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது. இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள். இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை. அனுபவம் 2. சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள். அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். அனுபவம் 3. வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அனுபவம் 4. வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது. அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு. வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம். அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம். அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை. அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று. அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன. நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை. அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு. அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது. ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம். அனுபவம் 14. யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது. அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது. அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது. அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது. அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு. அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது. அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன. ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு. அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன. அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். அனுபவம் 24. இப்ப எல்லாம் தமிழ் பாட்டு போட்டுக் கொண்டு மொரட்டுவ தமிழ் மாணவ சமூக.. ஆக்கள் வாரத்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் வர ரயிலை பாவிக்கினம். சோடி சோடியா லப்டப்பும் கையுமா திரியினம். அனுபவம் 25. வெள்ளையளும் உல்லாசப் பயணம் போகினம் யாழ்ப்பாணம். யாழ் பண்ணை வீதி நன்கு திருத்தப்பட்டு வீதி இரு மருங்கிலும் நடைபாதை அமைக்கப்பட்டு.. ஒரு உருப்படியான வேலை அதில் நடந்தது தெரியுது. அனுபவம் 26. இப்ப எல்லாம் யாழ்ப்பாண நகரில் என்றில்லை.. எல்லா சிற்றூரிலும் ஓட்டோ தான். மக்கள் நடக்க சரியான பஞ்சி. அனுபவம் 27. சிறீலங்கா முப்படை ஆட்களும் யாழ் நகரில் சர்வ சாதாரணமாக திரியினம்.. போகினம்.. வ்ருகினம்.. பொருள் கொள்வனவு செய்யினம்.. எம்மவர்களும் மதிப்பு மரியாதையோட தான் நடத்தினம். அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது. அனுபவம் 29. கோவில்கள் பல நிறைவடைந்து.. கம்பீரமாக எழுந்து நிற்பதோடு.. மின்விளக்குகளால் எரியூட்டி நிற்கின்றன. அனுபவம் 30. இப்ப மின்சாரம் தடையின்றி வருகிறது. லக்ஸபான மின்சாரம் என்று சொல்லினம். மின்சாரச் செலவு பொருட் செலவோடு ஒப்பிடும் போது அதிகமாகத் தெரியவில்லை. அனுபவம் 31. வீதி அகட்டிப்பு என்று.. மக்களின் காணிகள்.. மதில்கள்.. வேலிகள்.. எல்லாம் பறிபோய்க்கிட்டு இருக்குது. மக்கள்.. ஏதோ வீதி அகலுது என்று கதைக்கப் பேச ஆளின்றி.. மெளனித்துக் கிடக்கிறார்கள். அனுபவம் 32. யாழில்... பெண் பிள்ளைகள் எல்லாம்.. சில புலம்பெயர்.. உள்ளூர் ஊடகங்கள் சொல்லுற மாதிரி ஆடிக்கிட்டுத் திரிவதாகத் தெரியவில்லை. ஒரு சிலது திரியலாம். பொரும்பான்மை பிள்ளைகள் நல்லாத்தான் இருப்பதாகத் தெரியுது. அனுபவம் 33. படி.. படின்னு.. இப்ப முன்னிலைப் பாடசாலைப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடுவது அவலம். அனுபவம் 34. யாழ் நகர.. கொழும்பு.. பள்ளிப் பிள்ளைகளிடம் நல்ல ஆங்கில மற்றும் கணணி அறிவும் நவீன தொழில்நுட்பக் கையாடல் அறிவும் வளர்ந்திருப்பது.. வளர்ந்து வருவது ஆரோக்கியம். அனுபவம் 35. யாழ் பல்கலைக்கழகம் அப்படியே கிடக்கு. வர்ணம் மட்டும் பூசி இருக்காங்க. அனுபவம் 36. யாழ் நகர ஒழுங்கைகள் எல்லாம் புது வீடுகளால் நிரம்பி இருக்குது. ஆனால் சில இடங்கள் அதே தகர வேலிகளோடு தான். அனுபவம் 37. யாழ் நகர்.. மற்றும் அதனை அண்டி நவீன வியாபார நிலைகள் பெருகி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புள்ளது. கொழும்பில்.. காலி வீதி நவீனமாகி இருக்குது. அனுபவம் 38. கொழும்பில் இன்னும் வீதி போக்குவரத்து நெருசல் குறையவில்லை. காலையும் மாலையும்.. பல மணி நேரம் தாமதங்கள். ஓட்டோக்கள்.. கடற்கரை வீதியை இப்ப பாவிக்கினம். மற்றும்படி காலி வீதி பிசி. அனுபவம் 39. கொழும்பு வாழ் எம்மவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களை கொப்பி பண்ணுவதில்.. அதாவது வீடுகளில் பாத்ரூம் அமைப்பதில் இருந்து.. பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது உள்ளிடங்க.. துடியா துடிச்சுச் செய்கிறார்கள். தப்பில்லை. நல்ல வழிக்கு போனால் நல்லது. அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. அனுபவம் 41. காலநிலை மழை. ஊரிலும் மழை கொழும்பிலும் பிற்பகலில் மழை. ஊரில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருந்தது. நுளம்பு வலை நல்ல தூக்கத்துக்கு உதவும். நுளம்பு வத்தி தலையிடிக்கும். ஆனால்.. நுளம்பு ஸ்பிரே பறுவாயில்லை. மற்றும் பள்ளிக்கூடங்கள்.. 7:30 காலை தொடங்கி 1:30 முடியுது. பெற்றோரில் பெரும்பான்மையானோர் இதனை வரவேற்கினம். அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை. சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்கு.
 21. 20 points
  பாகம் - 3 குருவியன் வெட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் இலந்தை மரத்தோடு அண்டிய அன்னமுன்னா, அணிஞ்சில் பத்தைக்குள் சைக்கிளை வெளியே தெரியாமல் மறைத்துவிட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தேன். மூவரும் ஒருவர் பின் ஒருவராக நேரம் சுணங்கமுன்னரே வந்து சேர்ந்தனர். புக்கையரும் சொக்கியும் இருட்டில் தெரியாத நிறத்தில் உடுப்புக்களைப் போட்டுத் தயாராக வந்திருந்தார்கள். ஆனால் கட்டையன் வழமையான வெள்ளைச் சேர்ட்டுடன் வந்திருந்தான். இருட்டில வெள்ளைச் சேர்ட் வெளிச்சமாகத் தெரியும் என்று யோசிக்காமல் மொக்கன் மாதிரி வந்திருக்கின்றான் என்று உள்ளே கோபப்பட்டாலும், கன கச்சிதமாக திட்டம் போடாதது என்ரை கவனக்குறைவு என்பதால் அவனை சேர்ட்டைக் கழற்றச் சொன்னேன். கட்டையன் சேர்ட்டைக் கழற்றி சாரத்துக்குள் வைத்து சாரத்தை மடித்துக்கட்டி மந்திபோல இளித்தான். ஏற்கனவே போட்ட திட்டத்தை மீண்டும் ஒருமுறை சுருக்கமாகச் சரிபார்த்துக்கொண்டோம். ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எப்ப செய்யவேண்டும் என்பதில் ஒரு குழப்பமும் இருக்கவில்லை. நன்றாக இருட்டுப்பட்டாலும் முன்னிலவுக் காலமாக இருந்ததால் நிலவு வெளிச்சத்தில் குருவியன் வெட்டை குளித்துக்கொண்டிருந்தது. நிலவொளியில் வெட்டையில் நிற்பது அதனூடாகப் போய் வருபவர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் நாங்கள் முன்னரே தீர்மானித்த பனங்கூடல் ஒற்றையடிப் பாதையின் வளைவுக்கு வேகமாக ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசாது நடந்தோம். எமது குதிகால்கள் நிலத்தில் படும் ஓசையும், நெஞ்சு படபடக்கும் ஓசையும் மட்டுமே கேட்டன. யாரோ எங்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவது போன்ற உணர்வு வர அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டோம். ஆனால் அப்படி ஒருவரும் எங்களைத் தொடரவில்லை. அடிபாட்டுக்குப் போகும்போது எல்லாப் புலன்களும் கூர்மையாக ஏற்படும் பதட்டத்தால் வரும் மனப்பிரமை என்று நினைத்தேன். மூச்சை சீராக உள்ளிழுத்து பதட்டத்தைத் தணிக்கமுயன்றேன். பனை மரங்கள் செறிவாக இருந்தமையாலும் பல பனைகள் கள்ளுவடிக்கத் தேர்ந்தவையாக இருந்ததாலும் பனங்கூடலுக்குள் நிலவொளி இருக்கவில்லை. புக்கையரும் சொக்கியும் வளைவைத் தாண்டி பனை மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டையன் எனக்கு எதிர்ப்புறமாக ஒரு பனைக்குப் பின்னால் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டான். நான் நின்ற பக்கத்தில் பாதை வளைவுக்கு பக்கத்தில் ஒரு பனம்பாத்தி போட்டிருந்தார்கள். அதனைச் சுத்தி நிறையக் காவோலைகள் கருக்குமட்டைகளோடு இருந்தன. கொக்காரை, பன்னாடைகளையும் கூட பனம்பாத்தியின் மேல்பக்கம் அடுக்கிவைத்திருந்தார்கள். கால்களுக்கிடையில் உமல்கொட்டைகள் இடறினாலும் பதுங்கி இருக்க வசதியாக இருந்ததால் பனம்பாத்தியோடு நான் ஒதுங்கினேன். இருண்டுவிட்டதால் பின்னேரக் கள்ளுக்குப் போய்விட்டு ஆடி ஆடிப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு சைக்கிள்களைத் தவிர பனங்கூடல் மயான அமைதியாக இருந்தது. ஊரடங்கிவிட்டதால் கல்லுரோடும் வெறிச்சோடித்தான் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்ச நேரத்தில் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பெட்டைக் குயிலன் கல்லுரோட்டிலிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையில் பனங்கூடலுக்குள் இறங்குவது நிலவு வெளிச்சத்தில் அவனது நெளிந்த நடையில் தெரிந்தது. அடுத்த கணமே அவனை அடிச்சுத் துவைக்கவேண்டும் என்ற திகில் நிறைந்த ஆவல் உடலெல்லாம் பெருகி, கைகளும், கால்களும் தினவெடுத்தன. படபடவென இடிக்கும் இதயத்தோடு அவன் பாதை வளையும் இடத்திற்கு வரும்வரை தயாராகக் காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களாகத் மாறி, இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரித்தன. இந்த அனுபவம் இதுவரை உணர்ந்திருந்தாத புதிய அனுபவமாக இருந்தது. பெட்டைக் குயிலன் பாதை வளையும் இடத்திற்கு சரியாக வந்தபோது அவிட்டுவிட்ட நாம்பன் போல தடதடவென்று வேகமாக ஓடிவந்த புக்கையர் பெட்டைக்குயிலன் முதுகு மீது முழுப் பலத்தோடு பாய்ந்து விழுந்தான். பாதையின் வளைவில் பெட்டைக் குயிலனுக்கு மேல் புக்கையர் புளிச் சாக்குமூட்டை மாதிரிக் கிடந்தது தெரிந்தது. உடனடியாகவே சொக்கி மற்றப் பக்கத்தாலும், நானும், கட்டையனும் எங்கள் பக்கத்தாலும் அவர்கள் கிடந்த இடத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினோம். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பெட்டைக் குயிலன் ஒருகணம் ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வெலவெலத்துப் போனாலும், அடுத்த கணமே கலவரத்துடன் பெருங்குரலில் குரவெடுத்து " ஐயோ, ஐயோ அடிக்கிறாங்கள், காப்பாத்துங்கோ" என்று ஒரு குட்டைபிடித்த நாயைப் போல ஊளையிடத் தொடங்கினான். அடுத்த நொடியில் சொக்கி விழுந்த கிடந்த பெட்டைக் குயிலனின் திமிறும் கைகளை நிதானித்து மடக்கிப் பிடித்து பின்வளமாகப் பூட்டைப்போட்டுப் அழுத்தமாக இழுத்து நிமிர்த்தினான். பெட்டைக் குயிலனின் குழறலும் கத்தலும் இன்னும் அதிகமாகி ஒரு விசித்திரமான விலங்கொலியாக காதை அறைந்தது. சொக்கியின் அழுங்குப் பிடிக்குள் ஈரச்சாக்குக்குள் அகப்பட்ட எலி மாதிரி வெடவெடுத்து நடுங்கிக் கொண்டும், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கத்திக்கொண்டு நிற்கும் பெட்டைக் குயிலனைச் சுத்தி நான், கட்டையன், புக்கையர் மூவரும் நின்றோம். போட்ட திட்டப்படி நான் பெட்டைக் குயிலனின் மூஞ்சையையும் நெஞ்சாங்கூட்டையையும் நொருக்கத் தொடங்கியிருக்கவேண்டும். கட்டையன் அவன்ரை கவிட்டைக் கந்தலாக்கியிருக்கவேண்டும். ஆனால் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி உடம்பெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கெஞ்சி மண்டாடி அழுதுகொண்டிருந்தவனின் கண்களைப் பார்த்தபோது எனது நிலை தளர்ந்தது. குத்துவதற்கு உரப்பாக ஓங்கின கை அந்தரத்தில் உறைந்துபோய் பின்னர் அறுபட்டு உயிரற்ற சடம்போல் தளர்ந்து கீழே பதிந்தது. நான் அடிக்காமல் நிற்பதைப் பார்த்த கட்டையனும், புக்கையரும் கூட செய்வதறியாது நின்றார்கள். செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, தன்னை விட்டுவிடும்படி இறைஞ்சிக்கொண்டிருக்கும் பெட்டைக் குயிலனைப் பார்த்து எனது மனம் இளகிச் சுருங்கிவிட்டதால் அவனுக்கு அடிக்க மனம் வரவில்லை. சரிக்குச் சரி என்று யாரியாக சண்டைக்கு நிற்பவனுக்கு அடிக்கலாம். ஆனால் சரணாகதி அடைந்து ஒடுங்கி நிற்பவனுக்கு அடிப்பது எப்படி நீதியாகும் என்ற கேள்வி மனதைக் குடைந்தது. பெட்டைக் குயிலனை பூட்டுப்போட்டுப் பின்பக்கத்தால் அமத்திப் பிடித்துக்கொண்டிந்த சொக்கி, திட்டமெல்லாம் சறுக்குவதை உணர்ந்து, கதறும் பெட்டைக் குயிலனை இன்னும் இறுக்கி, முழங்காலால் அவனது காலிடுக்குக்குள் மிண்டித் தள்ளியவாறு "பேப் பூனாவளே! பனியங்கள் மாதிரி மிலாந்திக்கொண்டு நிக்காமல் ஆக்கள் வரமுந்தி அடியுங்கோடா.. இப்ப இவனைச் சும்மா விட்டால் நாளைக்கு எங்கள் எல்லாருக்குமெல்லே சேத்து வைச்சுக் கம்பியடிக்கப்போறான்" என்று ஆத்திரத்தோடு உறுமினான். பெட்டைக் குயிலன் எதிர்ப்புக் காட்டாமல் கெஞ்சுவது ஒரு தற்காப்புக்கான தந்திரமாக இருக்கும் என்று மனதைச் சுதாகரித்துத் திடப்படுத்தி, அவன் காலமையில் குழவியனுக்கு செய்ததை நினைவுக்கு கொண்டுவந்து, தளம்பல் எதுவுமில்லாமல் அவனை அடிப்பதற்கு என்னை மீளவும் தயார்படுத்த முயன்றேன். பெட்டைக் குயிலனின் அந்தப் பரிதாபமான பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று மனம் குறுகியது. அப்படிப் பார்த்தாலும் அவனது பார்வையை உள்வாங்காது எதிர்கொண்டு வெறித்துப் நோக்க வேண்டும். இது ஒரு பெரும் சவாலாகவே பட்டது. ஆரம்பத்தில் ஏராளமாக இருந்த மனோதிடம் சொல்லாமல் கொள்ளாமல் காலை வாரிவிட்டது. அடிக்கவேண்டும் என்ற வெறி துப்பரவாக வடிந்துவிட்டது. பலப் பரீட்டை விஷப் பரீட்சையாக மாறிக்கொண்டிருந்தது. சொக்கி "அடியுங்கோடா.. அடியுங்கோடா" என்று கத்தியபோதும் நான் அடிக்காமல் மீண்டும் பின்வாங்குவதைப் பார்த்த புக்கையரும் ஒன்றும் பேசாமல் நின்றான். வினாடிகள் ஓடிக்கொண்டிருந்தன. பனங்கூடலுக்கு அண்டிய வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. ஆக்கள் வரப்போகின்றார்கள் என்று புரிந்தது. கட்டையன் என்ன நினைத்தானோ, ஏது நினைத்தானோ தெரியவில்லை. திடீரென்று சாரத்தின் மடிப்பைக் குலைத்து உள்ளேயிருந்த சேர்ட்டை எடுத்து தனது கண்கள் வெளியே தெரியாதவாறு தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டினான். தோட்ட வேலை செய்து உரமேறிப்போன கட்டையனது விம்மிப் புடைத்த நெஞ்சிலிருந்து குத்தீட்டிகளாக விசை கொண்ட கைகள் வேகமாக வெளிக்கிளம்பி, சொக்கியின் பிடியிலிருந்த பெட்டைக் குயிலனை தாறுமாறாகத் தாக்கத் தொடங்கின. அவனது இரண்டு கைகளும், கால்களும் சுற்றிச் சுழன்று மிகுந்த நுட்பத்துடனும், லாகவமாகவும் இயங்கின. ஓலமிட்டுக் கொண்டிருந்த பெட்டைக் குயிலனது உடம்பு கட்டையனது பயங்கரமான அடிகளாலும், உதைகளாலும் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருந்தது. கட்டையனுக்கேயுரிய கைவந்த வித்துவத்தை நான் கண்களை இமைக்காமலும் வாயைப் பிளந்தவாறும் பார்த்துக்கொண்டு நின்றேன். பெட்டைக் குயிலனது அலறல் உச்சத்தைத் தொடவும், சத்தத்தைக் கேட்டு ஓடி வரும் ஆட்களின் காலடிச் சத்தம் கேட்கத் தொடங்கவும் நாங்கள் நாலு பேரும் பனைகளுக்கிடையே பிரிந்து முங்கியன் தோட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கினோம். மற்றையவர்களின் முகங்களில் வெற்றி முறுவல்கள் பூத்திருந்தபோதும், அடிபிடிக்கு உதவாத சொத்தையன் என்ற அவமானத்தில் நான் அமிழ்ந்துகொண்டிருந்தேன். - முற்றும் -
 22. 20 points
  அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்காலக் கனவுகளுடன் நான்கு மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கிப் படிக்க இடம் தேடினோம். இறுதியில் பாடசாலைக்கு அண்மையாக ஓர் அம்மாவும் மகளும் குடியிருக்கும் ஓர் வீட்டின் அவுட் கவுஸில் இரண்டு அறை சமையலறை குளியலறை என சகல வசதிகளுடன் கிடைத்தது. நான்கு பேரும் வாடகையைப் பங்கு போடுவதென்றும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதென்றும் முடிவாகியது. ஏமக்கு எப்படியாவது படிப்பைத் தொடர்ந்தால் போதும் என்ற நிலை. அந்த அம்மா நாள் பார்த்து பால் காய்ச்சி நாம் குடிவர அனுமதி கொடுத்து அட்வான்ஸ் பணமும் பெற்றுக் கொண்டு திறப்பைக் கையளித்தார். நால்வரும் எமது பெட்டி படுக்கை மண்ணெண்ணை அடுப்பு சகிதம் கதவைத் திறந்து வலதுகாலை? வைத்து வீட்டிற்குள் பிரவேசித்தோம். நேரம் மதியத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாவின் அழகிய மகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருமண நாளுக்காய் காத்துக்கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத அந்தப்பெண் எமது குடியிருப்புக்கு முதன்முதலாக விஜயம் செய்திருந்தார். ஆம் பால் காச்சும் அந்த வைபவத்திற்கு அவர் வந்திருப்பது எமக்கு விளங்கியது. அவரை உபசரித்து அமரச் சொல்ல எம்மிடம் கதிரை இல்லை. எனவே வாசல் படியில் அனைவரும் இருந்து எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எம்மில் ஒருவர் மெதுவாக சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணைக் குக்கரைப் பற்றவைத்து சோஸ்பேனில் தண்ணீரை வைத்துவிட்டு வந்தோம். சற்று நேரத்திற்கு ஒருவராக உள்ளே சென்று அடுப்பை பரிசோதித்து விட்டு வந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அக்கா உள்ளே எட்டிப் பார்ப்பதும் எம்முடன் உரையாடுவதுமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர பால் கிண்ணம் வந்தபாடில்லை. காரணம் அடுப்பில் பால் இ;ல்லை. அந்த புதிய இடத்தில் எங்குபோய் பால் வாங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் எமக்குத் தெரியாது. அடுப்பில் தண்ணீரும் வற்றிப் போனது. ஆந்த அக்காவும் என்ன நினைத்தாரோ தெரியாது “நான் போயிற்று வாறன்” என்று சொல்லிப் பார்த்தார். நாங்கள் அசடு வழிய தலையை ஆட்டி வைத்தோம். அதற்குமேல் ஏதாவது சொல்லவோ செய்யவோ எமக்கு வயதும் அனுபவமும் போதவில்லை. அதன் பின் அந்த அக்கா திருமணமாகிப் போகும்வரை எம்முடன் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார். இருந்தும் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை என்று விளங்கியது. அன்று நடந்த பால் இல்லாமல் பால் காய்ச்சும் வைபவம் இன்றும் மனதில் பசுமையாய் தினமும் பால் காய்ச்சும் வேளைகளில் மனதில் காயும். அந்த இளமைக்கால நினைவலைகள் இன்னும் இதயத்தில் ஈரமாய் ............
 23. 20 points
  கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்.... பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.
 24. 19 points
  வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்கு முன்னர் அதாவது 1998ம் ஆண்டளவில் எங்கள் ஊருக்கு அந்த பாத யாத்திரிகர்கள் வருவது வழமை ஊரில் உள்ள கோவில்களில் அன்றைய இரவை போக்க வருவார்கள் அவர்களை போய் பார்ப்பது வழக்கம் அதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடக்கம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சன்நிதியில் இருந்து வந்தார்கள் ஊரில் உள்ள சனங்கள் அவர்களை போய் பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது வழக்கம் அவர்கள் ஊர் வந்து சென்றதில் இருந்து நான் அவர்களுடன் சென்றால் என்ன ஒரு உணர்வு ஏற்பட்டது ஆனால் சிறு வயது என்பதால் அம்மா அப்பா விரும்பமாட்டார்கள் அந்த வேளையில் அம்மம்மாவும் அப்பம்மாவும் கதிர்க்காமம் செல்ல போகிறோம் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக வீட்டில் அனுமதி பெற்று செல்ல ஆயத்தமானேன் அந்த வருடம் . யாத்திரைக்கு தேவையான பொருட்கள் உடைகள் , சாப்பாடுகள் ,போதிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாடல் வசதி மிக குறைவு 10 நாட்கள் தேவை கதிர்க்காமத்தை சென்றடைய என்று சொன்னார்கள் யாத்திரை தயாரானது ஊரில் இருந்து நடக்க வில்லை காரணம் அந்த நேர பாதுகாப்பு நிலை காரணமாக யாத்திரை அதிகாலை புறப்பட்டது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் பொருட்களை ஏற்றி இறக்கி களைந்து காண்பித்து சென்றடைய சங்கமான்கண்டி வடக்கில் முறிகண்டி பிள்ளையார் எவ்வளவு முக்கியமான ஆளோ அதே போல் கிழக்கில் சங்கமன்கண்டி பிள்ளையார் முக்கியமான ஆள் யாத்திரை செல்லும் போது அவரை வழிபட்டு விட்டு நேரம் 1.00 மணியாகிவிட்டது பாணமையை போய் சேர பாணமையில் பாரிய சோதனை சாவடி அதன் பிறகு அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாரை தரிசித்த பின்னர் நடை தொடங்கியது வாகனம் உகந்தை வரை செல்ல முடியாது அதற்கு பாதையும் இல்லை காட்டு வழி வேறு நடக்க நடக்க இரு மருங்கிலும் காடுகள் விலங்கள் பறவைகள் , என பார்த்து பார்த்து போய் முதல் இடம் உகந்தைசெல்வதற்கு முன்னர் சன்நியாசிமலை என்ற ஒரு மலை அதன் கீழ் பிள்ளையார் ஒருவர் வீற்றிருக்க அவரை தரிசனம் அவருக்கு கொஞ்சம் அவலை பிரட்டி படைத்து விட்டு செய்து நடை ஆரம்பமானது ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக உகந்தையை சென்றடைந்தோம் சுற்றி வர காடு கிழக்கில் கடல் மேற்கில் அடர்ந்த காட்டில் ஒரு கோவில் மனதிற்கு ஒரு இதமான அமைதி அந்த இடத்தில் தெரிகிறது யாத்திரை தொடரும். போய் வந்த பிறகு தமிழ் சிறி அண்ணன் எழுத சொன்னவர் படங்கள் கிடைக்க வில்லை இப்போது அந்த படங்களை கமறாவிலிருந்து எடுத்துக்கொண்டேன் இது தான் பாணமை பிள்ளையார் கோவில்           click image upload click image upload
 25. 19 points
  நெகிழி குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்று கேட்க, "அன்னம் இந்தப் பொலித்தீனாலை ஒரே தொல்லையாக் கிடக்குதடி! இழுக்க இழுக்க வந்தகொண்டேயிருக்குதடி! இதுவரை அமைதியாயிருந்த பொலித்தீன் "நாங்களுங்கட விழாக்கள் முதல் சொதிப்பொதி கட்டுறது வரைக்கும் தேவைப்பட்டம். எங்களைக் கக்கத்துக்க கொண்டு திரிஞ்சுபோட்டு கண்டமாதிரி எறிஞ்சுபோட்டு இப்ப குய்யோமுறையோ என்றால் என்ன நியாயமாம்! பக்குவமாகப் பாவிக்கத் தெரியாது. பிறகு எங்களை நோகிறது என்றவாறு சுழன்றடித்த காற்றில் மேலெழுந்து பறந்தது.
 26. 19 points
  ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள். கிராமத்தில் பாலர் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது, பின் அருகில் இருக்கும் உயர்கல்விக்கு எ நாற்பது நிமிட நடை தூரத்தில் ஒரு கல்லூரி அங்கு ஆறாம் தரத்தில் இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பார்கள். மேலதிகமான கல்வி சா/ தரம் உயர் தரம் என்பவற்றுக்கு யாழ் படடணம் போக வேண்டி இருந்தது . நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே கோயில் வளவில் நண்பர்களுடன் ..பந்து விளையாடச்செல்வார்கள் .பிரேமனின் தாயார் வீட்டில் வளர்க்கும் பசுவைக்காணவில்லை போய் பார்த்துவா தம்பி என்றால் ...கேசவனும் கூடவே பிரேமனுடன் செல்வான் மாலையில் வீடு திரும்பாவிடில் இருவரில் ஒருவரிடம் மற்றவரைப் ப ற்றிக் கேட்க்கலாம். காலம் உருண்டோட இருவரும் எடடம் வகுப்பை அடைந்தனர் ஒன்பதாம் வகுப்பில் ..கலைத்து றை விஞ்ஞானத்துறை என பகுதி பிரிப்பார்கள் ஆசிரியர்கள். பின்னர் அதிபரினால் தெரிவு அறிவிக்கப்படும். அப்படியான கால்கட்ட்த்தில் ..பிரேமன் கலைத்துறைக்கும் . செல்வாக்குள்ள மனிதரின் மகன் கேசவன் சயன்ஸ் பிரிவுக்கும் அ னுமதிக்க படடனர் .. நண்பர்கள் பிரிவது ..மிகவும் கொடுமை ..கேசவன் தன் தாயாரிடம் ...நடந்ததை சொல்லி தனக்கும் கலைப்பிரிவு தான் . படிக்க ஆர்வமுள்ளது என்று கூறினான் . அந்தக் காலத்தில் சயன்ஸ் படிப்பது ஒரு கெளரவமான மாயத் தோற்றத்தை கொண்டிருந்தது ..பிள்ளையின் ஆற்றல் நாடடம் கலைத்துறையாக இருந்தாலும் ..ஊராரிடம்பறை சாற்ற பிள்ளையை நிர்பந்திக்க வேண்டி இருந்தது . கேசவனின் தாயாரும் கணவரிடம் பேசினாள். என் பிள்ளை டாக்ட்டராக இஞ்சினியராக நான் கனவு காண்கிறேன் .மறு பேச்சு பேசாமல் அவரை சயன்ஸ் பிரிவில் படிக்க சொல் என்று கண்டிப்பான கடடளையிட்டு விட்டார் . கேசவனும் தந்தை சொல் மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்து படித்து வந்தான் ...வெவ் வேறு வகுப்புக்க ளாயினும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர் ...வகுப்பில் தாவரங்களின் படங்களை கீறுவதற்கு , வீட்டுப் பாடம் ஒன்றாக செய்வதற்கு பிரேமனை தன வீட்டுக்கு அழைப்பான் ...எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் . அந்த வருட இறுதி தேர்வில் கேசவன் குறைந்த மதிப்பெண்களை பெற்றான் வீட்டிலும் ரிப்போர்ட் காட்டில் தந்தையின் கையெழுத்து வாங்க வேண்டி இருந்தது . தந்தை அந்த அறிக்கையை பார்த்தும் மிகவும் கடிந்து கொண்டார் . இதனால் மனவேதனை உற்ற கேசவன் பலவாறு யோசித்தான். நண்பன் பிரேமனுக்கு மட்டும் சொல்லிவிட்டு ....மறுவாரம் தாயாருக்கு சொல்லாமல் படடனத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ..சென்று விடடான். திடீர் வரவைக்க கண்ட தாத்தா ...மகிழ்ச்சி ஒரு புறமும் சந்தேகம் ஒருபுறமுமாய் ..பாட்டியிடம் எதுவும் அவனிடம் கேட்க்காமல் நல்ல உணவு கொடுக்க ச்சொன்னார் . .மாலையானது தாத்தா மெல்ல பேச்சுக்கு கொடுத்து பேரன் கோவித்து கொண்டு வந்ததை அறிந்தார் ..உடனடியாக மகள் வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பினார் பேரன் தங்களிடம் வந்து விட்ட்தாக ..தான் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார் . சில வாரங்கள் சென்றது . மார்கழி விடுமுறை முடித்ததும் மெல்ல அவனது எண்ணத்தைக் கேடடா ர். அவன் ஊருக்கு செல்ல விருமபவில்லை எனவும் படடண த்திலே ஒரு பாடசாலையில்க லைத்துறை பிரிவில் தன்னை சேர்க்க அனுமதி வாங்கி தரும்படியும் சொன்னான் . நீண்ட நாட்கள் தனிமையில் இருந் தாத்தா பாட்டி மிகவும் உற்சாகமாக அவனைக் கவனித்தனர் வயதான தாத்தா . தன் செல்வாக்கைப்பயன் படுத்தி பிரபலமான கல்லூரியில் கலைத்துறையில் அவனை சேர்த்து விடடார் .. அவன் சா /தரம் முடித்து பின் உயர் தரத்தில் மிக திறமையான சித்தி அடைந்து .. கலைத்துறைப் படடதாரி ஆனான் ...கால ஓடத்தில் ..கணணித் துறையிலும் நாடடங்கொண்டு .. மிகத் திறமையான நிலையை அடைந்தான் . பல கம்பெனிகளில் இருந்து ..வடிவமைப்புக்காக ஓடர்கள் வந்தன. அவனது பொருளாதாரம் உயர்ந்தது ... தன் முயற்ற்சியினால் ஒரு கம்பெனி அமைத்து நிர்வகித்து நல்ல நிலைக்கு வந்தான். ஊருக்கு செல்லும்போது தன் நண்பனைத் சந்திக்க மறப்பதில்லை . ..நீண்ட நாட்கள் பேசாதிருந்த தந்தை ..கம்பெனித் திறப்பு விழாவில் கலந்து பாராட்டினார் . இன்றும் தான் இழந்த அந்த ஒரு வருட வாழ்க்கையை எண்ணி கலங்குவதுண்டு ...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில் திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை மாறிச் செல்கிறது .. இது சற்று முன்னைய காலத்தின் கதை பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு அறியாது திணிக்கும் பெற்றோரின் மீதான தாக்கம் என்னால் முடிந்த எழுத்து வடிவில் நட் புடன் நிலாமதி
 27. 18 points
  சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனென்றால் கீரிமலையில் வந்து நிற்பன்" "பின்ன போறது தானே பிள்ளைகள் கூப்பிடுதுகள்" "எங்கன்ட நாட்டு தண்ணி அந்த மாதிரி, சுவிம் பண்ணினாலும் ஒரு சுகமிருக்கும் உவங்கன்ட சாக்கடை கடலில் எவன் சுவிம் பண்ணுவான் அதோட சுறாவும் வந்து கடிச்சு போடும்" "உவற்றையை தான் சுறா பார்த்துகொண்டிருக்கு கடிக்கிறதற்கு விட்டா அப்பர் உதுவும் கதைப்பார் உதுக்கு மேலயும் கதைப்பார்" மனிசி அவனுடைய‌ கதைகளால் எரிச்சலடைவது புரிந்து "சரி வீக்கென்ட் போவம்" எங்கன்ட நாட்டில நல்ல சுவிம்மேர்ஸ் இருந்தவையள் அவையள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்தி போய் திரும்பி வந்தவையள் ,அதுமட்டுமல்ல இங்கிலிஸ் கனலையும் நீந்த முயற்சித்தவையள் என ஆழிக்குமரன் ஆனந்தனைப்பற்றி சொல்லி சரிந்த எனது இமேஜ்ஜை சரிக்கட்ட முயற்சித் தான் ஆனால் ஒருத்தரும் அதை கண்டு கொண்டமாதிரி தெரியவில்லை. கறுத்த கண்ணாடி போடுற வழக்கம் அவனுக்கில்லை.ஆனால் கடற்கரைக்கு போகும் பொழுது மட்டும் மறக்காமல் கொண்டு போய் விடுவான்.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க வேணும் என்ற நல்லெண்ணம்எல்லோரும் வெளியால சூரியனை கண்டவுடனே கறுத்த கண்ணாடி போடுவினம் ஆனால் அவன் பீச்சுக்கு போனால் மட்டும்தான் கறுத்தக்கண்ணாடி போடுறவன்அன்று வெளிக்கிட்டு சிறுதூரம் சென்ற பின்பு பொக்கற்றை தட்டிப்பார்த்தவன் ,கறுத்த கண்ணாடி எடுத்து வரவில்லை என்றுணர்ந்து காரை திருப்பினான். "ஏன் இப்ப திரும்பி வீட்டை விடுறீயள்" "வயிற்றை வலிக்குது ஒருக்கா இறக்கினால் சுகமா இருக்கும் " "வெளிக்கிட முதல் உதுகளை செய்யிறதில்லை" "சரி சரி இருங்கோ டக் என்று ஓடி வாறேன்." "டக் என்று வாறது என்றால் காரை ஸ்டார்ட்டில் விட்டிட்டு ஏ.சியை ஒன் பண்ணிட்டு போங்கோ" " பெற்றோல் வெஸ்டா போயிடும் யன்னலை திறந்துவிடுங்கோ" கார் திறப்பை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கண்ணாடியை தூக்கினான் அவனை பார்த்து அது 'என்ன பீச்சுக்கோ' என்று கேட்பது போன்றிருந்தது. மீண்டும் காரை பீச் நோக்கி செலுத்தினான்.லெட்டாக போனால் கார் பார்க் கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் வேகத்தை கூட்டினான்.சிட்னிமுருகன் புண்ணியத்தில் பீச்சுக்கு கிட்ட ஓரிடம் கிடைத்தது. குடும்பத்தினருடன் உடையைமாற்றி நீந்த சென்றான் . அவனுடைய நீச்சல் சகாசங்களை புரிந்து விட்டு கரைக்கு வந்தவன் , ரவலை விரித்து அமர்ந்து கலப்படம் செய்த கோக்கை சுவைத்தபடி கறுத்த கண்ணாடியை மாட்டினான் அது அவனைப்பார்த்து சிரிப்பது போலிருந்தது. .நீச்சல் உடையில் பலர் உலா வந்தனர் .சிலர் உள்ளாடைபட்டிகளால் வந்த அடையாளங்களை கலைவதற்காக சூரிய குளியல் செய்துகொண்டிருந்தனர்.சிறுவர்கள் மணலில் வீடுகள்,கோட்டைகள் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். இளைஞன் ஒருவன் கோக் கான் ஒன்றை மறைவாக‌ குலுக்கிவிட்டு நண்பியிடம் கொடுத்தான் அவள் வாங்கி திறக்க அது சிறீப்பாய்ந்து அவளது முகத்தை நனைத்தது,செல்லமாக திட்டியபடி அவனை துரத்திசென்று கட்டிப்பிடித்து மணலில் வீழ்த்தினாள் அவன் அவளது இதழ்களை தனது இதழ்களால் கவ்விகொண்டான். அருகிலிருந்த கலப்படமான கொக்கை ஊறிஞ்சியவன் ,நாகரிகம் கருதி பார்வையை திருப்பவில்லை வேறு காட்சிகள் தெரியும் என்ற எதிர்பார்ப்பில் திருப்பினான். அவனுக்கு உலக நட‌ப்புக்கள் தெரியதொடங்கிய காலகட்டத்தில் அதாவது சின்ன வயசில் அவன் கண்ட ஆச்சிமார்களில் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த ஆச்சிமார் பிளவுஸ் போட்டிருப்பினம்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரவிக்கை போட்டிருக்கமாட்டார்கள்.பிளவுஸ் போட்ட ஆச்சிமார்கள் கூட்டத்தில் பழகிய அவனுக்கு ரவிக்கை போடாதா ஆச்சிமாரை கண்டால் ஒரே சிரிப்பு .. அவனுடய‌ ஊர் சந்தைக்கு பெயரே ரவிக்கை சந்தை.சந்தைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தாலோ அல்லது அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் ரவிக்கை போட்டிருந்தகாரணத்தால் அந்த பெயர் வந்ததோ என அண்மைக்காலம் வரை தெரியாமலிருந்த அவனுக்கு மேடைபேச்சாளர் ஒருவர் மூலம் விடை கிடைத்தது.. மானிப்பாயிலிருந்த டச்சுஇராணுத்தினர் ரொந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது மானிப்பாய் சந்தையில் மட்டும் ஏன் அதிகளவு நேரத்தை செலவழிக்கின்றனர் என்பதை அறிவதற்காக அவர்களது கப்டன் மறைமுகமாக நின்று அவதானித்துள்ளான் .காரணத்தை அறிந்த கப்டன் அடுத்த நாள் சந்தைக்கு தனது மனைவியின் ரவிக்கையை கொண்டு வந்து இரண்டு தடியை குறுக்காக கட்டி அதற்கு ரவிக்கையை அணிவித்து இனி வியாபாரம் செய்ய வரும் பெண்கள் இதை அணிந்து வரவேண்டும் இல்லையேல் வியாபாரம் பண்ணமுடியாது என்று கட்டளை பிறப்பித்தான் அன்றிலிருந்து அது ரவிக்கை சந்தையாக மாறியது என மேடை பேச்சாளர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வரவே மீண்டும் தனது கலப்பட கோக்கை முழுமையாக குடித்து முடித்தவன் . அன்று சுதந்திரமாக திரிந்த எம்மை அடிமையாக்கியவன் ,இன்று சுதந்திரமா திரியிரான் நாங்கள் கறுத்த கண்ணாடியோட திரியவேண்டிகிடக்கு என‌ புறுபுறுத்தபடியே எழும்பி உடம்பில் பட்டிருந்த மண்ணை தட்டியவன் கானை வாயில்வைத்தான் அது நான் காலிடப்பா என்றது .கானை கையால் நசுக்கி ஆத்திரதை குறைத்தான். குடும்பத்தினர் இவனருகே வர கார் திறப்பை மனைவியிடம் கொடுத்தான். "ஏனப்பா நீங்கள் ஓடுங்கோவன்" "எனக்கு தலையிடிக்குது" "வாயை ஊதூங்கோ பார்ப்போம்" "ஏய் நீ என்ன பொலிஸ்காரியே....மனசனுக்கு வெறுப்பை ஏற்றாமல் ஓடப்பா"
 28. 18 points
  ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான். "சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான் கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து அமர்ந்திருந்தார். "என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப பழகிட்டியோ" "நீச்சலுக்கு வரயில்லை" "பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே" "சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான், அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள் போலகிடக்கு" "என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மனசு கொஞ்சம் ததும்பத்தான் செய்யுது,மகனும் மருமகளும் வெளியால போயிட்டினம்,அதுதான் நான் உவங்களை கூட்டிக்கொண்டு வந்தனான்" கந்தரின்ட பேரன் ஒருத்தனுக்கு மூன்று வயதுதான் இருக்கும் கையில் ஐ போனை வைச்சு விளையாடிக்கொண்டிருந்தான் மற்றவன் ஆறு வயசிருக்கும் தடாகத்தில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தான். "‍ஹாய் உங்கன்ட பெயர் என்ன" திரும்பி ஒரு முழுசு முழுசிப்போட்டு மீண்டும் ஐபோனில் இளையான் கலைத்துகொண்டிருந்தான். "நீ என்னடாப்பா ஊர் பெடியளிட்ட கேட்கிறமாதிரி அவனிட்ட தமிழில் கேட்கிறாய் அவங்களுக்கு தமிழ் தெரியாது" "ஏன் அண்ணே நீங்கள் தமிழ்தானே அவங்களோட தமிழில் கதைக்கலாம் தானே" "தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்" சொல்லி போட்டு தன்னுடைய பேரன்களை பற்றி புகழத்தொடங்கினார். "உவன் இருக்கிறானே அண்ணனை வென்டவன் .ஐபொனுக்குள்ள புகுந்து விளையாடுவான்.எனக்கு தெரியாதெல்லாம் அவனுக்கு அத்துப்படி." "எத்தனை வயசு " "இப்பதான் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடினவன்.,காலையிலிருந்து பின்னேரம் வரை உதை வைச்சு நோன்டிகொண்டிருப்பான் செய்யிற வேலைகள் எல்லாம் ஆறு வயசு காரங்களின்ட வேலை. மற்ற எங்கன்ட தமிழ்பிள்ளைகளை விட இவன் கெட்டிக்காரன்." இப்படித்தான் ஒருநாள் தாய் தகப்பனுடன் வந்தவன் ,அவையள் சூவிமிங்பூலில் இறங்கிட்டினம் இவன் கதிரையிலிருந்து விளையாடிகொண்டிருந்தவன் திடிரென தாய் தகப்பனை பார்த்திருக்கிறான் அவையளை காணவில்லை என்று போட்டு 000 அடிச்சுபோட்டான்,அவையள் திரும்பி வரும்பொழுது பெடியன் லொலிபொப் கையுடன் பொலிஸாருடன் சிரிச்சு கதைச்சு கொடு நிற்கிறான். கந்தரின்ட புளுகுமூட்டைகளை நங்கு அறிந்த சுரேஸ் "இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன் அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி கங்காரு நாட்டில் நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன் " நமச்சிவாய" மன அழுத்தம் வந்தால்" நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம். நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்? "சம்பந்தர் சேர்" "எத்தனை வயசில பாடினவர்" "மூன்று வயசில" "கெட்டிக்காரன்" "ஏன் அந்த தேவாரத்தை பாடினவர்" "பெற்றோர்கள் அவரை கரையில் வைத்துவிட்டு நீந்த சென்றுவிட்டார்கள்,அவர்களை காணவில்லை என்று பயந்த சம்பந்தர் சுவாமிகள் அம்மையே அப்பா என்று அபயக்குரல் எழுப்பினார் உடனே உமாபதியாரும் சிவபெருமானும் தோண்றி அவருக்கு பால் கொடுத்து அவரின் அழுகையை நிறுத்தினார்கள்" உடுப்புக்களை மாற்றி ஈர உடைகளை பையுனுள் வைத்து தோல்பையை எடுத்துகொண்டு கந்தரிடம் சென்றான். "அண்ணே நான் வாரன்" "சுரேஸ் அவசரமாய் போறியோ" "இல்லை அண்ணே ஏன் " "இவனோட கொஞ்ச நேரம் இருக்கிறியோ பெரியவனின் உடுப்பை மாற்றிப்போட்டு ஒடிவாரன்" "தம்பி இந்த அங்கிளோட இருங்கோ அண்ணாவுக்கு செஞ் பண்ணியிட்டு உடேனே வாரன்" என்று ஆங்கிலத்தில் சொல்ல‌ பார்த்து மீண்டும் ஒரு முழியள் முழிச்சு போட்டு ஐபோனில் முகத்தை புதைத்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனை பார்த்து ஒரு புன்முறுவலை உதிர்ந்தவன் பக்கத்தில் இருக்கும்படி தலையால் சைகை காட்டினான். தன்னை படம் எடுத்தான் பிறகு சுரேசைக் கேட்காமலயே அவனையும் படம் எடுத்தான்.சிறிது நேரம் போக விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டான் .சுரேஸ் பயந்து போனான் , "வட் கப்பின் வை யு ஆர் லாவிங்" ஏன் இவன் சிரிக்கிறான் என்று பதட்டப்படாமல் கேட்ட படியே வந்த கந்தர்"தாங்ஸ் சுரேஸ்" என்றார். தமையனிடம் கைதொலைபேசியை காட்டினான் அவனும் கெக்கட்டம் விட்டு சிரிக்க தொடங்கி விட்டான். கந்தர் ஆங்கிலத்தில் அவங்களை திட்டிப்போட்டு கைதொலைபேசி வாங்கி பார்த்து சிரித்துவிட்டு சுரேசிடம் காட்டினார். திடுக்கிட்டு விட்டான் அவனது முகம் நரியின் முகமாக மாற்றப்பட்டிருந்தது. " வி கான் மொர்ப் யு அ பேஸ் இன்டு டொன்கி,மங்கி,அன்ட் டொக்"ஹா...ஹா ...என்று சொல்லி விடை பெற்றனர் பசங்களும் கந்தரும். "நமச்சிவாய.நமச்சிவாய" மீண்டும் அவன் மனம் பாடசாலைக்கு சென்றது. "நரியை பரி ஆக்கியது யார்" "சிவபெருமான்" "நமச்சிவாய....நமச்சிவாய" வைப்பிரேசன் மோட்டிலிருந்த கைத்தொலைபேசி அதிர்ந்தது. இதுவும் ஒரு அதிசயம் தான் ,பிறமனிதர்களின் தொடுதலின்றி எமது உடம்பை அதிர‌வைக்க‌ முடியுதே...எல்லாம் தொழிநுட்பத்தின் உச்சம் தான்.... நினைத்தபடி ‍"‍ஹலோ " "இன்றைக்கு மாணிக்க வாசகரின்ட குரு பூஜை " "அதுக்கு நான் என்ன செய்ய " "நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் வார வழியில சுதாவின்ட வீட்டை போய் அவளின்ட அம்மாவின்ட சீலை ஒன்று தருவா வாங்கி கொண்டு வாங்கோ" "என்னடி ஆத்த உனக்கு அம்மாவின்ட சீலை கட்டுற வயசு வந்திட்டெ" "ஐயோ... எங்கன்ட பெரியவளை புட்டுக்கு மண் சுமந்த‌ கதையில் வருகின்ற செம்மணச்செல்வியா வெளிக்கிடித்து பின்னேரம் குரு பூஜைக்கு கூட்டிப்போக வேண்டும் அதுகுத்தான் ." "சரி வாங்கிகொண்டு வாரன் வைக்கட்டா" "ஓம் வையுங்கோ" எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்த காலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ. இப்ப ஐடி கார்ட் ,மொபைல் எல்லாத்தையும் கழுத்தில தொங்கவிடுறமாதிரி அந்த காலத்தில உருத்திராட்சையை தொங்கவிட்டுகொண்டு சனம் திரிஞ்சதுகள் .இந்த உருத்திராட்சைகளுக்கும் இமயமலையிலிருந்த எம்பெருமானுக்கும் வயர்லெஸ் தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமோ.கையில் இரும்பால் செய்த ஆயுதங்கள் ,தலையில் பரபோலிக் அன்டனா....எல்லாம் தொடர்பாடலுக்கு ஏற்றவகையிலிருந்திருக்கு... "நமச்சிவாய நமச்சிவாய" என்ன கோதாரி பிடிச்ச எண்ணங்கள் என்றபடி சுதாவீட்டுக்கு போய் சேலையை எடுத்துகொண்டு வீடு சென்று அங்கிருந்த சிவாஸை பார்த்தான்.என்ன தீர்த்தமாடப்போறியே வடுவா பயளே என்று கேட்பது போலிருந்தது ... "‍
 29. 18 points
  கோபம் காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் . வேளைக்கு உணவின்றேல். புகைச்சலுடன் கோபம். ஏழைக்கு இறைவன் மீது கோபம் குழந்தை சிந்தும் உணவின் மேல் கோபம் குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம் உதட்டு அருகே வரும் உணவு கீழே சிந்திய கோவம் எரியும் அடுப்பில் காஸ் தீர்த்து விடடால் கோபம் .. ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் மீது கோபம் விரும்பியது கிடை க்கா விடடால் கோபம் . காத்திருக்கும் அவள்/அவன் வராவிடடால் கோபம் . பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் பசி வேளையில் உணவின்றேல் கோபம் நீண்ட வரிசையி ல் குறு க்கிடல் கோபம் படித்தும் உரிய வேலை கிடைக்காவிடில் கோபம் கள்ளுண்ட கணவனுக்கு கருவாட்டு பொரிய ல் இல்லாத கோபம் அடுப்பெரிக்கும் மனைவிக்கு ஈர விறகின் மீது கோபம் கோவிலுக்கு செல்ல நினைத்த மனை யாளுக்கு கணவன் தாமதமாய் வந்தால் கோபம், எனக்கும் வரும் உனக்கும் வரும் எவருக்கும் வரலாம் கோபம் சினிமா வரிசையில் ஹவுஸ் புள் வந்தால் கோபம் .. அண்ணனும் தம்பியும் அடிக்கடி கோபம் ..காதலன் காதலி செல்லக்கோபம் . ஏறு என்றால் எருதுக்கு கோபம் இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் . எதிர் பார்ப்பு ஏமாறும் போது வரும் பெருங் கோபம்
 30. 18 points
  “அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!! பணி தொடரும்.
 31. 18 points
  அன்புள்ள அக்கா இது உங்களுக்கு நீங்கள் இதுவரை முகம் அறியாத உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது. காலங்கள் தம் சுவடுகளை பதிந்துவிட்ட அப்பால் நகர்ந்து செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் எச்சங்களை இந்தப் பூமிப்பந்தில் விட்டே அப்பால் சென்றுவிடுகின்றான். அந்த எச்சங்கள் பல்கிப்பெருகி விழுதுகளாகிப் படர்ந்து இந்தப்பாரெல்லாம் பரவிக் கிடக்கின்றன. விரிந்த மணற்பரப்பில் பதிந்திருக்கும் அழகான ஆழமான சுவடுகளைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இடையிடையே அள்ளி வீசிய காற்றின் வேகத்தால் சுவடுகள் அழிந்து போயிருந்தன. சில தேடல்களின் பின்னர் அந்த அழகான சுவடுகள், என்மனதின் எதோ ஒரு மூலையில் உறங்கி கிடந்த அந்த ஆழமான சுவடுகள் அந்த மணற்பரப்பில் மீண்டும் என் கண் முன்னே தோன்றின. நான் இப்போது தான் உணர்கின்றேன். தந்தையை அல்லது தாயை அவர்கள் வாழ்ந்து கொடிருந்தாலும், என்னால் அவர்களை அணுகமுடியவில்லை என்றால் ஏற்படும் வலியின் அளவிற்கு ஏது அளவுகோல். இதை உங்கள் நிலையில் இருந்த பார்த்தால் நீங்கள் உங்கள் தந்தையை இழந்தீர்களா? இல்லை, அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவரை யாரோ உங்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். தந்தையிருந்தும் உங்களுடன் அவர் இல்லாத வலி ஒரு கொடுமையான வலி. பசியோடு போராடும் குழந்தையின் கண் முன்னே ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் பால் இருந்தால் அந்தக் குழந்தையின் தவிப்பு எப்படி இருக்கும். அந்தத் தவிப்பு உங்களுக்கும் இருந்திருக்கும். உங்கள் தாயின் மனவலிமை பல வருடங்கள் தவங்கள் செய்து பேறு அடையும் முனிவர்களின் மனவலிமையை விட மேலானது.கையிலே இரு குழந்தைகள் கண் முன்னே இருந்தும் இல்லாத கணவன் ஆனாலும் அவர் தன மனதில் செய்து கொண்ட சபதம் , அதைவிட மேலாகத் தன சபதத்தை பூரணமாக்கிய சாமர்த்தியம். இத்தனையும் உங்கள் தாயின் வெற்றியின் ரகசியம். அக்கா நான் உங்களையும் உங்கள் தம்பியையும் என் வாழ்வின் முடிவிற்குள் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும்.உங்கள் இருவரது கால்களிலும் வீழ்ந்து உங்கள் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.உங்கள் இருவரது பிள்ளைகளையும் உச்சிமுகரவேண்டும்.அதற்கான தருணத்தை நானோ நீங்களோ அல்லது இருவரும் சேர்ந்தோ ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உங்கள் தந்தையின் இதயத்தில் நீங்கள் இருவரும் ஓங்கி ஒரு பெரிய விருட்ஷமாகவே வாழ்ந்தீர்கள். அதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.. அவரின் மிக அண்மையில் இருந்து அதை உணர்ந்துகொண்டோம். உங்கள் பல்கலை வாழ்வில் நீங்கள் அடைந்த வெற்றியை அவர் தன் வெற்றியாகக் கொள்ளாவிட்டாலும் அவர் மனம் ஆனந்தமானதை அவர் அருகில் இருந்து உணர்ந்தோம். எங்கள் தந்தை இனிமையானவர். எங்களைக் கடிந்து கொள்ளும்போதும் அதில் ஒரு மென்மைஇருக்கும். எங்கள் தந்தையே எங்களுக்கு குருவானவர். எங்களுக்கு மட்டுமல்ல, அவரிடம் கற்றவர்கள் இல்லாத நாடே இந்த இந்த உலகில் இல்லை. குருவாக மட்டுமின்றி ஒரு தோழனாக நண்பனாக வாழ்ந்தவர் எங்கள் தந்தை. ஐந்து வயதில் சீட்டுக்கட்டுடன் எங்கள் முன்னமர்ந்து சீட்டு விளையாட்டும் கற்றுத்தந்தவர். நாங்கள் பஞ்ச பாண்டவர்கள் .அக்கம் பக்கம் எங்கும் எங்களின் ஆட்சிதான்.எண்களில் ஒருவரை யாராவது தீண்டினால் அவர்களின் கதிகௌரவர்களின் விதியாகக் கணிக்கப்படும். அன்றொரு நாள் ஐயா ஒருவர் அர்ஜுனனைத் தீண்டிவிட்டார். கோபமே வராத தர்மருக்கு வந்தது அன்று கோபம். பீமன் கதாயுதத்துடன் தர்மரைப் பின்தொடர அவர்களுக்கு அர்ஜுனன் ஐயா சென்ற வழிகாட்டியானான். நானும் சகாதேவனும் தடுத்தும் முடியவில்லை. அய்யாவின் பட்டறை சின்னாபின்னாமாக்கப்பட்டது அய்யாவின் நிலைமையோ இன்னும் பரிதாபத்துக்குரியதானது. போர் முடிந்ததும் மாலையில் பாண்டவர்கள் நாங்கள் அண்ணை றைற் நாடகத்தில் அண்ணையின் நகைச்சுவையில் ஆழ்ந்திருந்தோம். திடீரென அரங்கில் காயங்களுடனும் கிழிந்து கந்தலான உடையிலும் ஐயாவும் அவர் முன்னே எங்கள் தந்தையும் தோன்றினார்கள் . ரசிகர்கள் எங்கள் தந்தையும் ஐயாவும் தங்களை மகிழ்விக்கப் போகின்றார்கள் என நினைத்துப் பலத்த கரகோசத்தை ஏற்படுத்தினார்கள் ஒலிவாங்கியைக் கையில் ஏந்திய தந்தை பாண்டவர்கள் எங்கிருந்தாலும் விரைவில் மேடைக்கு வரவும் என்று அறிவித்து விட்டார்.நாங்கள் அங்கிருப்பதை அவர் எப்படியோ அறிந்து விட்டதால் வேறு வழியில்லாமல் நாங்கள் மேடையில் அணிவகுத்து நின்றோம். தந்தை மைக்கை மீண்டும் வாங்கி இதோ இந்த அய்யாவின் இந்த நிலைமைக்கு எனது புதல்வர்கள் காரணம். அய்யாவின் வயதையும் அவர் எங்கள் ஊருக்குச் செய்யும் உதவிகளையும் மனதில் கொள்ளவேண்டும். அவர்தான் முதலில் தப்புச் செய்ததாக என்னிடம் கூறிவிட்டார். ஆனாலும் பாண்டவர்கள் இவருடன் போருக்குச் சென்றதை மன்னிக்க முடியாது. ஆகவே பாண்டவர்கள் அய்யாவின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டால் அவர்களை நான் விட்டுவிடுகின்றேன் இல்லையேல் அவர்களை நான் விடமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் நாங்களும் தந்தை முன்னர் அய்யாவின் காலில் வீழ்ந்து ஒவ்வொருவராக மன்னிப்புக் கேட்டோம் . ரசிகர்கள் பலத்த ஒளியில் கரகோசத்தை எழுப்பி தந்தையின் செயலை வழிமொழிந்தார்கள் . இத்தனைக்கும் ஐயா எங்கள் ஊரில் இருந்த ஒரேயொரு கொல்லன் பட்டறையின் முதலாளி. எங்கள் அப்பாவைப் புகழ்வதாக நினைக்கவேண்டாம். நீங்கள் அறிந்திராத அவரின் மறு பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து என்மனதில் இருந்த ஏக்கங்களை உங்களுக்கு அறியத்தர விரும்புவதாலேயே இவற்றை உங்களுக்கு எழுதுகின்றேன். எங்கள் தந்தை செய்தது மிகப்பெரிய தவறு. அதை யாராலும் சரியென்று வாதாட முடியாது.அவருடன் வாழ்ந்த காலங்களில் அவர் ஏன் இந்தத் தவறினைச் செய்தார் என்று யாரும் எனக்கு விளங்கக்கூறவில்லை. என்னால் முடிந்தவரை என் அறிவிற்கெட்டியரை அவர் செய்த தவறினை என்னால் புரிந்து கொள்ளமுடிந்த அன்றிலிருந்து நான் உங்களைத் தேட ஆரம்பித்தேன். எனது திருமண வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு கூற விரும்புகின்றேன். காதல் திருமணம் இனிமையான வாழ்வின் ஆரம்பம்.அப்போது நான் ஒரு இறுதியான முடிவை எடுத்துக் கொண்டேன் .அது ஒரு சபதம் என்று கூடக் கூறலாம் உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் ஏற்பட்ட நிலைமை என் மனைவிக்கோ குழந்தைகளுக்கோ என்னால் ஏற்படக்கூடாது என்று ஒரு சபதம் செய்துகொண்டேன்.அதன்படி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். சில மாதங்களில் எனது மனைவி கர்ப்பமானாள். அது வரை எங்கள் வாழ்வில் நுழையாத மதம் அப்போது வந்துவிட்டது. மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். பிறக்கப் போகும் குழந்தையின் மதம் எதுவாக இருக்க வேண்டும் என்பதே இப்போது பிரச்சனையாக இருந்தது.குழந்தையும் பிறந்தது. பிரச்சனைக்கு முடிவில்லை. குழந்தையை கிறிஸ்தவ மதத்தில் இணைப்பதற்கு நான் சம்பாதிக்கவில்லை. மதம் முக்கியம் அல்ல என்பது எண்ணம். மதம் தான் முக்கியம் என்பது மனைவியின் கருத்து. சரி இருவரும் சண்டையிடாமல் எங்கள் அப்பாவின் கருத்தைக் கேட்டோம். எங்கள் வீட்டில் அப்பாவின் பேசசுக்கு எப்போதும் நாம் மறுப்பதில்லை. மறுக்கக் கூடியதாகவும் அவர் பேசுவதில்லை. அவர் கூறும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். குழந்தை பெறுவது என்பது பெண்களுக்குக்கிடைத்த ஒரு சிறந்த பேறு. ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உறவல்ல அது. பத்து மாதம் அந்தக் கருவைச் சுமந்து காப்பாற்றி இடையில் ஏற்படும் வலிகளையும் பொறுத்துக்க கொண்டு பத்தாவது மாதத்தில் மீண்டும் ஒருமுறை பிறந்துதன் உயிரையும் குழந்தையின் உயிரையும் காப்பவள் தான் தாய். அப்படியான தாயின் வழியில் செல்வதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது .அந்தத் தாயின் வழியிலேயே குழந்தைகளும் செல்லட்டும் என்கிறார் அப்பா.எல்லா அப்பாக்களும் தம் பிள்ளைகளுக்கு இப்படி அறிவுரை செய்வார்களோ தெரியவில்லை. எனக்கு அப்பாவின் வாக்கு வேத வாக்காக இருந்தது. இப்போது அந்தக் குழந்தைகள் தெய்வத்தின் குழந்தைகளாக என் முன் வலம் வருகின்றார்கள். அக்கா நான் எழுதிய இரண்டு விடயங்களிலும் எங்கள் அப்பா மனித நேயம் உள்ளவராகவும் பெண்களை மதிப்பவராகவும் இருக்கும் பொழுது உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் மட்டும் ஏன் அப்படியொரு துரோகத்தை இழைத்தார் என்பது தான் இன்னும் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனிமேல் அவற்றைப் பற்றிப் பேசி யாருக்கும் ஏதும் நன்மை கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. நீங்களும் நானும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக இல்லாவிடடாலும் உங்கள் அப்பாவின் ரத்தமே என் உடலிலும் ஓடுகின்றது. அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் என் வாழ்வைத் சீராக்கியிருக்கின்றன. அந்த வகையில் அவர் உங்களுக்கு இழைத்த துரோகத்தின் பாவ மன்னிப்பாக இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக அவருக்குத்தான் இக்கடிதத்தை முதலில் காட்டியிருப்பேன். அவரும் நிச்சயமாக கடிதத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டித் திருத்தம் செய்திருப்பார். ஆனால் அவர் இப்போது எங்களைவிட்டுப் பிரிந்து ஒன்பது வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் உங்களைத் தேடி இந்த மடலை எழுதுகின்றேன். நாஷ்வில் நகரில் நீங்கள் நலமாக இருப்பினர்கள் என நினைக்கின்றேன். உங்கள் கணவர் உங்கள் பிள்ளைகள் எல்லோரும் நலமாக இருக்க உங்கள் கர்த்தரை வேண்டிக்கொள்கின்றேன். கடிதத்தை எழுதி முடித்த சிவாவின் ஆழமான நீண்ட பெருமூச்சு அந்த அறையெங்கும் எதிரொலிப்பது போல் இருந்தது அவனுக்கு. உனடடியாக அந்தக் கடிதத்தை அவனுடைய அக்காவின் முநூலினூடாக அவருக்கு அனுப்பிவிட்டு அக்காவின் பதில் எதுவாக இருக்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றான் சிவா
 32. 17 points
  டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!
 33. 17 points
  சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்... இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி" இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம். உதாரணமாக... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழினி தொடங்கிய வசனம் முற்றுப்பெறாமல் இடையில் நிற்க ) வீதியில் வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற, சேற்று தண்ணீரை... வயதான மூதாட்டி மேல் அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்... (தமிழ்சிறி வசனத்திற்கு முடித்து ...மீள புதிதாக ஒன்றை ஆரம்பித்து அது இடையில் நிற்க) சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்".. (சசி அதை முடித்து வைத்து புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து தொங்கவிட) ... நாயர் கடை ரேடியோ அலறியது... இப்படியும் போகலாம்.. எழுதுபவர்கள், தொங்கி நிற்கும் வசனத்தை பூரணப்படுத்தி, புதிய வசனத்தை சிறிதாக எழுதினால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்தை அறிய ஆவல்... ஏனென்றால் ஒருவர் கோர்வையாக எழுதிய வசனத்தை இன்னும் ஒருவர் நிறைவுக்கு கொண்டு வருவது அவரது கற்பனையை சுருக்கும். சிறிதாக எழுதிய வார்த்தைகளுக்கு பல வடிவங்களை கொடுக்கலாம். தொடர்ந்தும் எழுத வசதியாக இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை மெருகேற்றி சுவாரஸ்யமாக கொண்டு போவது உங்கள் கையில்...
 34. 17 points
  நம்பிக்கையும் ஏமாற்றமும். “என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள், பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். “ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி.“ என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச் சமைந்து நின்றான். தேவலோகத்து ரம்பை ஊர்வசிகளைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத அழகுநிறைந்தவள் நந்தினி. காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் அழகியான ராதாகூட நந்தினின் அழகு கண்டு பிரமித்தவள். திருமணமாகி நந்தினி அந்தப் பக்கத்து வீட்டிற்கு வந்தபோது கர்வியாக இருப்பாளோ....! என்றெண்ணிப் பழகத் தயங்கியவள் ராதா. அவள் கணவன் நந்தினியின் அழகுபற்றி ஏதாவது ஒரு சொல் சொன்னாலே பொருமியவள். போகப் போக நந்தினியின் பூப்போன்ற உள்ளம்கண்டு புன்னகைபூக்க....! அந்தப் புன்னகையே அவர்களைத் தோழிகளாக இணைத்தது. அந்தரங்களையும் கூச்சமின்றிக் கதைக்கும் அளவிற்குச் சினேகிதிகளாக்கி விட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது இருவரின் அழகு கண்டு தடுமாறும் இளவட்டங்களைக் கண்டு, தங்களுக்குள்ளேயே கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள். பவானியம்மாளும் நந்தினியை உள்ளம்கையில் வைத்துத் தாங்கினாள். கணவன் நந்தகுமாரோ...! சித்தெறும்புகூட வீட்டிற்குள் நுளையாது பார்த்துக்கொண்டான். இப்படியே இனிமையாக இரண்டு வருடங்கள் பறந்தோடிவிட்ட நிலையில்தான்,! இரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தினால்.! பவானியம்மாளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அற்ப விடயங்களுக்கெல்லாம் குறைகண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் கவலைகொண்ட நந்தினி அவளது கவலைகள்பற்றி ராதாவோடு மனம்விட்டுக் கதைத்தபோது....! “நந்தினி எனக்குத் தெரிந்த லேடி டாக்டர் ஒருவர் இருக்கிறார் நீ அவரிடம் சென்று செக்கப் பண்ணிப் பார். உன்னிடம் குறையில்லை என்றால் உன் கணவரைச் செக்கப்பண்ணச் சொல்லு.“ என்று அறிவுரை வழங்கினாள். “சரி“ என்று நந்தினியும் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்றாம் நாள் அவளிடம் குறை எதுவும் இல்லையென்று ரிப்போட் வந்ததை அடுத்து தன் கணவனைச் செக்கப்பண்ணச் சொன்னபோதுதான் பிரளயமே வெடித்தது. நந்தகுமாரும் தன்னில் குறையில்லை, தான் பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லயென்று உறுதியாக நம்பினான். அதற்குக் காரணமும் இருந்தது. முன்பு ஒருமுறை நந்தினிக்கு நாட்கள் தள்ளிப்போனபோது. வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது ஆனாலும் அந்த மகிழ்ச்சி ஆறேழு நாட்களிலே அற்றுப்போனது. கொடுத்ததைப் பாதுகாக்க முடியாத குறையை அவள் உடல் கொண்டிருப்பதாக அவன் பூரணமாக நம்பினான். அதற்காக அவளைப் பரிசோதனைக்கு அனுப்பிப் பார்க்க அவன் விரும்பவில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டும் என அவன் இருந்துவிட்டான். அத்தோடு பக்கத்துவீட்டு ராதா குடும்பம் தங்களுக்கு 5 வருடங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று செயற்கையாகவே முயற்சிகள் செய்யும்போது.... தங்களுக்கு இயற்கையாகவே அந்த வரம் கிடைத்திருப்பதை வரவேற்கவே செய்தான். நந்தினியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டிப்பார்க்காத நந்தகுமாரைத் தாயின் உத்திர தாண்டவம் ஆட்டங்கொள்ளச் செய்தது. “அம்மா எத்தனையோ குடும்பங்களில் பத்து வருடங்களுக்குப் பின்பும் குழந்தை கிடைத்துள்ளது எங்களுக்கு இரண்டு வருடங்கள்தானே,“ எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றான். மகனின் ஆதங்கத்தைக் கண்டு இறங்கிவந்த பவானியம்மாள், “சரி இன்னமும் ஒருவருடம் பார்க்கிறேன், அப்போதும் இல்லையென்றால்....! உனக்கு வேறு கலியாணம்தான். நீ மறுத்தால் இந்த உலகைவிட்டே நான் போய்விடுவேன்.“ என்று மகனை ஆட்டம்காணச் செய்து அவனிடம் சத்தியமும் வாங்கிவிட்டாள். . நந்தினியின் கணவன் நந்தகுமார் பரிசோதனைக்கு உட்பட மறுப்பதை அறிந்த அந்தப் பெண் வைத்தியரின் ஆலோசனைப்படி, பிறிதொரு நாளில் நந்தகுமாருக்கு வந்த சாதாரண நோய்க்கு மருந்தெடுக்கும் சாட்டில், ராதாவின் கணவனே நந்தகுமாரை அந்தப் பெண் வைத்திரிடம் கூட்டிச் செல்லவே சந்தேகம் எதுவும் இன்றி, வைத்தியரும் தனது பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையுமே பெற்றுக்கொண்டார். சோதனையின் முடிவை வைத்தியர் நந்தினியை மட்டுமே தனியாக அழைத்துத் தெரிவித்தார். நிவர்த்தி செய்யக்கூடிய குறையே அவள் கணவனுக்கு இருப்பதாகவும். அதற்கான மருந்தைப் பாலில் கலந்து ஒரு மாதம் மட்டும் கொடுத்தால் போதும். பலன் ஆறுமாதங்களின் பின்பு நிச்சயம் எனவும் தெரிவித்தார். என்னதான் கூச்சல் போட்டாலும், மாமிக்கு மருமகளிடத்தில் அன்பு, பாசம் இல்லையென்று கூறிவிட முடியாது. தன் மகனைக் குறைகூறிவிட்டாளே…! என்ற ஆதங்கமே அவரை உருக்கொண்டு ஆடவைத்தது. சிறிதுநாளில், சற்று ஆத்திரம் அடங்கியதும் மருமகளைக் கடிந்துவிட்டோமே என்ற கவலை அவரை வாட்டியது. மருமகளைக் கூப்பிட்டு ஆறுதல் கூறத்தொடங்கினார். “நந்தினி குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைப்பது. உந்த டாக்குத்தர்மாருக்கு உது ஒன்றும் புரியாது. என் சித்தப்பா இருக்கும் ஊரில் உள்ள அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவர். தற்போது அந்த அம்மனின் ஆச்சிரமத்தில் இருக்கும் இரண்டு சாமிமார்கள் சாத்திரம், குறி பார்ப்பது, காண்டம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்களாம். பலருடைய குறைகளைக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரமும் சொல்லிப் பலனடைய வைத்துள்ளார்களாம். சித்தப்பாவின் இருக்கும் ஊருக்கு இங்கிருந்து ஒரு நாளில் சென்றுவர முடியாது ஆகவே நீ அங்கு ஒருமுறை சென்று சித்தப்பா வீட்டில் ஒருநாள் தங்கி, அம்மனின் அருள்பெற்று உன் சாதகத்தையும் சாமிமார்களிடம் கொடுத்து உன் குறைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிந்துவா!“ என்றார். நந்தினியால் அதை மீறமுடியவில்லை. நந்தகுமாருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை பெறுவது கடினமாக இருந்தது. சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தாயை ஆறுதல்படுத்த வேண்டி நந்தினியை அனுப்பவேண்டிய தேவையும் இருந்தது. ஆகவே தன் மனைவியின் தோழியான ராதாவையும் அழைத்துச்செல்ல அவள் கணவனிடம் அனுமதியும் யாசிக்கப்பட்டது. நிலமையின் தாக்கத்தை உணர்ந்த அவரும் அனுமதி அளித்தார். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நந்தினியும், ராதாவும் வேறு வழியின்றிப் புறப்பட்டனர். “இன்று மாலை கோவிலிலே அன்னதானம் வழங்குவார்கள். பூசை முடிய 10மணியாகும் அதன்பின்புதான் சாமிமார்கள் உங்களின் குறைகளைக் கேட்டுப் பரிகாரமும் சொல்வார்கள். சாமத்தில் இங்கு திரும்ப வருவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அங்கே மடத்திலேயே படுத்துறங்கவும் வசதியுள்ளது. காலையில் புறப்படும் பேரூந்தில் நேராகஊருக்கும் சென்றுவிடலாம்“ பவ்வியமான சித்தபாவின் கூற்றில் கஞ்சத்தனம் கடுகளவும் குறையாது தெரிந்தது. அம்மன் பூசை முடிந்து அன்னதானமும் அருந்தியபின் சாமியார்களிடம் தங்கள் குறையறிந்து பரிகாரம்தேடவந்த பக்தர் கூட்டம் சாமிகளைச் சுற்றி இருந்தது. தங்கள் தியானத்திலிருந்து கண்களின் இமைகள் திறந்த சாமிகளைக் கண்டு பக்தர்களி்ன் முகங்கள் மலர்ந்தன. ஆனால் சாமிகளின் முகங்களோ…! நந்தினி ராதா என இருவரது முகங்களையும் கண்டு மலர்ந்தது. இவர்களைக் கண்டு வியக்கும் மனிதர்கள் பலரைக் கண்டு பழகிவிட்டதால் இருவருக்கும் அது பெரிதாகத் தெரியவில்லை. கைவிரல்களை மடித்தும், எண்ணியும், கண்கள்மூடித் தியானித்தும் பக்தர்கள் கொண்டிவந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தும், அவற்றில் கண்டுகொண்ட குறைகளுக்கான பரிகாரங்களைச் செய்வதற்கான நாட்களையும் மின்னல் வேகத்தில் தெரிவித்த சாமியார்கள் நந்தினி ராதா இருவரது குறிப்பேடுகளைப் பார்த்ததும் உடனேயே இவற்றுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனக்கூறி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் ஏவல் ஆட்களுக்குக் கட்டளைகளை இட்டபின், ஏனைய பக்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் கிடைத்த அதிட்டத்தைக் கண்டு பக்தர்களும் அவர்களை வாழ்த்திக் கலைந்தார்கள். “இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா“ என வினவினார்கள். “ஆமாம் உள்ளது“ எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர். குடிலின் உள்ளே இருந்து வந்த நறுமணம் இனம்புரியாத உணர்வை உண்டுபண்ணியது. ”அம்மா இப்படி அமருங்கள்.“ சாமிகளில் ஒருவர் இனிமையாக அழைத்து தனக்கு எதிரில் இருக்க வைத்தார். அவரின் இருபக்கமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. “அம்மா உங்களுக்கு அம்மனின் ஆசி பரிபூரணமாய் கிட்டட்டும்“ என்று தனது இரு கைகளையும் இருவரின் தலைகள்மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க, அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். “ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. “அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது. சாதகக் குறிப்பை மீண்டும் புரட்டிப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ”ஆகா.! மிக அருமையான ஜாதகங்கள்.! என்றவர், ஏதோ மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், “பரிகாரத்தை ஆரம்பிக்கலாம்“ என்றார். வீபூதியை எடுத்து கண்களை மூடச்சொல்லி இருவரது முகங்களிலும் ஊதினார். ஊதிய சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏதோ மயக்கம் வந்ததுபோல் தெரிந்தது. மலர்ந்த இன்முகத்துடன் மயங்கி உறங்கினார்கள். பறவைகளின் சத்தமும் வானத்தின் சிவந்த ஒளியும் விடியலை உணர்த்தியது. கண்விழித்தபோது அடித்துப் போட்டதுபோல் உடம்பெல்லாம் வலி, எழமுடியாது அவர்கள் தலைகள் சுற்றியது. மிகவும் சிரமப்பட்டு இருவரும் எழுந்தபோதான் நடந்ததவை நினைவிலும், உணர்விலும் தெரிய விழிபிதுங்கி அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் நிலையைக்காண.... அங்கு எவரும் இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே முடியாத நிலையில் கூனிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நடந்தவற்றை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தையும் மனதுக்குள்ளே இறுகப் பூட்டிவைப்பதென முடிவானது. சாமிகளின் பரிகாரம் முடிந்து வந்து மாதம் ஒன்றும் கழிந்து, சிலநாட்களில் பவானியம்மாள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவித் குதித்தார். பெற்ற தாயைவிடவும் அன்போடு மருமகளை அரவணைத்தார். தானே அவள் முகத்தைக் கழுவித் துடைத்து வீபூதி குங்குமம் இட்டு அழகுபார்த்தார். சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே...! மருமகளுக்காக அதைத் தானே உண்ணமுடியாத நிலைமைக்கு வருந்தினாரென்றால் பார்க்கவேண்டுமே...! அத்தனை கவனிப்பு...!! இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....! நந்தினியின் கண்கள் பனித்தது. ராதா அவள் கண்ணீரைத் துடைத்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணசைத்தாள்.
 35. 17 points
  என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவளே...! தோற்றத்தில்…, நீ கொஞ்சம் பெரிசு தான்! அதுவும் நல்லது தானே! அதிலும்,,, ஒரு வசதி தெரியுமா? எந்த தேசத்தின் பணமானாலும், உனது ஆடைகளுக்குள் இரகசியமாக, மறைத்து விடலாமே! உன்னை அடைவதற்கு.., நான் பட்ட பாடு…, உன்னைத் தொடுவதற்கு, நான் கடந்த தடைகள், அப்பப்பா..! இப்போது நினைத்தாலும், இதயத்தில் இலேசாக வலிக்கிறதே! விதானையிடம் கூட…, கையெழுத்துக்கு அலைந்தேன்! விதானையின் விடுப்புக்களுக்கு…, விடை சொல்லிக் களைத்தேன்! பாம்புகள் போல நீண்ட வரிசைகளில், பல பகல் பொழுதுகள்..,, பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்! நாளைக்கு வந்திருவாள் என்றார்கள், நாலு நாட்கள் எடுத்தது! சில வேளைகளில்.., உனது அழகிய மேனியில்.. அன்னியர்கள் சிலர், ஓங்கிக் குத்துவார்கள்! அந்த வேளைகளில்.., உன்னை விடவும், எனக்குத் தான் வலிக்கும்! ஒரு நாள்…, உன்னை அந்நியர்களின் வீட்டில், அனாதரவாய்க் கை விட்டேன்! எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா? உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்! எனக்கோ, இரவு முழுவதும் தூக்கமேயில்லை! எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்.., இமைகளை மூட முடியவில்லை! விடிந்ததும்.., ஓடோடி வந்தேன் உன்னிடம்! உன்னைக் காணவில்லை என்றார்கள்! இதயத்தின் துடிப்பே,,,. அடங்கிப் போன உணர்வு! இரண்டு நாட்களின் பின்னர்.., அந்த உத்தியோகத்தரின், 'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,, உனது சக தோழிகளுடன்.., நாலாவது காலாகி..... நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்! அப்போதும் கூடப் பார்..! உனது கறுப்பு நிறம் தான்…, உன்னை மீட்டுத் தந்தது! பத்து வருடங்களின் பின்னர்…, இன்னொரு காதலி வந்தாள்! நீ எனது முதல் காதலியல்லவா? உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை! கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்! வஞ்சகர்கள் அவர்கள்! இரண்டு லட்சம் கேட்டார்கள்! இரண்டு லட்சத்தை.., எங்கே தேடுவேன்! அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்! என் சொந்தங்கள் மீது,,,, எரி குண்டுகள் போடவாம்! ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்! உனது முகம் வாடியது தெரிந்தது! இறுக்கமாய் மனதை வரித்து, உன்னிடம் சொன்னேன்…! சரி தான் …. போடி! (உருவகக் கவிதை)
 36. 17 points
  அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம் வீங்கித் தான் தனது இரண்டு பையன்களையும், தனது ஒரே மகளையும்..யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில்,,,விடுதிகளின் வைத்துப் படிப்பித்து வருகிறார்! காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்! இரண்டு பிள்ளைகள் ஒரே இடத்தில் படிப்பதால்….எவருடைய வசதிக் கட்டணத்தை எப்போது கட்டியது என்பது அவருக்கு நினைவில் இல்லை! இருந்தாலும் அதே கல்லூரியில் படிப்பிக்கும்...தன்னுடன் ஆசிரிய கலாசாலையில் ஒன்றாகப் படித்த பொன்னம்பலம் மாஸ்ரரிடம் பணத்தைக் கொடுத்ததாக அவருக்கு நினைவுண்டு! அதனால் தான் அவருக்கு அந்த எரிச்சல் வந்திருக்க வேண்டும்! அப்பா..அம்மாவுடன்...அளவளாவுவது...அவனுக்குக் கேட்டது! பின்னர் அம்மா...அப்பாவுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்த தனது சேமிப்பிலிருந்து ….நூறு ரூபாவை எடுத்து என்னிடம் தந்து...தம்பி..ஒருத்தரிட்டையும் குடுக்காமல்...நீயே நேர போய்க் கவுண்டரில கட்டிப்போட்டு, றிசீட்டை வாங்க்கி கொண்டு வரவேணும் எண்டு கடுமையான கட்டளையும் போட்டு விட்டுச் சென்று விட்டார்! கொடுத்த காசைப் பொன்னம்பலம் கட்டாமல் விட்டது ..அப்பாவுக்குப் பெரிய கவலையாகப் போய் விட்டது! வாத்திச் சீவியம் என்றால் இப்படித் தானே! அவனுக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்தவாறே….தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்! அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப் பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது! சனி ஞாயிறுகளில் பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்! எங்களிடம் ஒரு பழைய ரேடியோ ஒன்று இருந்தது! அதன் பின் பக்கத்தில் பெரிய..பெரிய பல்புகள் மாதிரி வால்வுகள் இருக்கும்! ஒரு இரவில்..அந்த றேடியோவின் பின பக்கத்தைத் திறந்து விட்டால்...அந்த வால்வுகளின் வெளிச்சத்தில்..ஒரு புத்தகம் கூட வாசிக்கலாம்! இவை அதிகம்...பற்றரிகளை உபயோகிப்பதால் நீண்ட நேரம் வானொலி கேட்க முடியாது! காலைச் செய்திகளும்..மாலைச் செய்திகளும் தான் கேட்பதுண்டு! ஐக்கிய தேசியக் கட்சி...அல்லது சுதந்திரக் கட்சி என்று எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அதற்கேற்ப யானை வரும் போது ஒலிக்கும் மணிச்சத்தமோ அல்லது..யானை கலைக்கும் போது பறை தட்டும் சத்தமோ மாறி ...மாறி வரும்! ஒரு நாள்.. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அடுத்த அறையிலிருந்து சல்லல்லாஹு சலையும் அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து கொண்டிருந்த போது ...வீதியில் ஒரு கல் கிடந்தது! அவர் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் என்று நபிகளின் போதனை போய்க் கொண்டிருந்தது! ஆனால் எமது ஆஸ்தான ரேடியோ ..தன்ர பாட்டில் 'சிவனே' என்று பேசாமல் குந்திக்கொண்டிருந்தது! அது கடைசியாக வாய் திறந்து கதைத்து.. ஆறுமாதங்கள் முடிந்திருந்தது! அப் போது தான் எல்லோருக்கும் தெரிந்தது...அம்மா..எங்களுக்குத் தெரியாமல் ஒரு ற்றானசிஸ்ரர் ரேடியோ வாங்கியிருக்கிறாள் எண்டு! அதன் பெயர் 'எலையிற்' என்று இப்போதும் நினைவில் உள்ளது! சரி...கதையை விட்டுக் கன தூரம் போய் விட்டோம் போல உள்ளது! மூத்தவனும், அக்காவும் ஒரு மாதிரி அரசாங்க வேலையில் சேர்ந்து..அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கை கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்! ஆனால் அப்பாவும்..இதுவரை தோட்டம் செய்வதை விடவுமில்லை…! அம்மாவும் கிடுகு பின்னுவதை நிறுத்தவுமில்லை! அவை இரண்டும் ..அவர்கள் பணத் தேவைக்காகவன்றி..ஒரு ஆத்ம திருப்திக்காகச் செய்வது போலத் தோன்றியது! கடைசி மகனால் தான் ....அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம் பிரச்சனை தோன்றியது! அவனுக்கும் படித்து வேலை செய்யும் நாட்டம் இருக்கவில்லை! அவனது நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் அனுப்பத் துவங்கியிருந்தனர்! அவனுக்கும் அந்த ஆசை பிடித்து விட்டது! அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்! அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்! அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..! "அம்மா...கொழும்பில ஒரு கொம்பியுட்டர் கோர்ஸ் ஒண்டு செய்தால்...நான் இதுவரை படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை எடுக்கலாமாம்! ஆனால் கொஞ்சம் ...காசு தேவைப்படும்!" அம்மாவிடம் இருந்து அமைதியாகப் பதில் வந்தது! அடுத்த பென்ஷன் வரட்டும்! ( யாவும் கற்பனை)
 37. 17 points
  சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய்! சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய்! தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது! அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை! வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய்! பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய்! மெத்தப்படித்த செருக்கு உனக்கு! கடவுளே வந்தாலும் திருத்தமுடியாதென யாரோ சொன்னது. நந்திக்கடல் அலையின் ஓசையிலும் எனக்கு நன்றாய் கேட்டது. உன்னைக் காப்பாற்ற முடியா விரக்தியில் நானும் அர்ச்சுனர்களும் நந்திக் கடலில் இறங்கி, தூர நடந்தோம்... பெரிய அலையொன்று எங்களை விழுங்கியது. அர்ச்சுனர் கூட்டம் அமிழும் நிலையிலும் தாகத்திற்க்கு தமிழீழம் கேட்டது! கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன்! திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையாட்டியாய் மாறி நின்றது! இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது! இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது! நாசமாய் போகெட்டும் இந்தக் குடியென மனமார திட்டிவிட்டு நந்திக்கடலில் நானும் இறந்தே போனேன்!
 38. 17 points
  நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி) “உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?” என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத் தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்! சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது! தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்! சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்? அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு! அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்! அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை? நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு? போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்! சரியண்ணை...இப்ப என்ன பிளான்? இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்! அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது! சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ? சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா? அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை! ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது! சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்! இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார! சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்! அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்! சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது! அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக் கொண்டு போய் இறக்கியும் விட்டான்! தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்! அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்! அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை! கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது! இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது! கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்! தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது! இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்! நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது! தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை! இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்! இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா அல்லது நியூசீலாந்து தான்! (சுபம்…)
 39. 17 points
  அஞ்சலி – சிறுகதை October 2, 2016 சிறுகதை சாத்திரி No Comments வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டுப் பத்திரிகை போடுபவன் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன். நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “. “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”. .”காணவில்லை. அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச் செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்துக் காவல் நிலையங்களும் தீயணைப்பு நிலையங்களும், கடலோரக் காவல் நிலைகளும் உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவியுங்கள்’.என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம். உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே…… தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின் இலக்கத்தைத் தேடினேன் . ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால் நோக்கியாவிலிருந்து ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும் சிறியண்ணாவின் கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன். பிட்சா போடுகிறவன் ஒரு நாள் லீவு வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும் வேலைக்கு வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும் லீவு தரமுடியாது என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை. அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும் நான்தான் கவனிக்க வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி விட்டேன். ******************************* காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல் வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று அவனை லேசாய் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது . ‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத் தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான். லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து அதற்குப் பணமும் கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான குய்னேசில் நடந்தது. வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில் நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில் இரவு வீடு திரும்பியபோது அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வைத்துவிட்டு “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ் தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது. காதல் மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில் தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான். ******************************* நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும் ஒருவர். சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு திருமணமாகியிருந்தது, கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும் திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில் கதைத்துப் பேசவும் அவரது கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார். கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு வாங்குவதுண்டு. அவர்களுக்கு அஞ்சலி பிறந்த பின்னர் அவர் நகர மத்தியில் பெரிய கபே பார் ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும் வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம் கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன் பின்னர் கடைதான் அவர்களுக்கு வீடு . அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள் செல்லப் பிள்ளையானாள். Angel bar நகர மத்தியில் அமைந்திருந்ததால் அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை, அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள். லீவு நாட்களில் சிறி அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள். ஒரே செல்ல மகள் என்பதால் அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும் மாறிவிட்டிருந்தாள். நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம் “டேய் மாமா டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப் பிடுங்கிவிடுவாள். “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன். பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து விட்டிருந்தது. “டேய் புகையிது புகையிது” என்று பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன். ஓம குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த பிட்சா. எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து “என்ன யோசனை”? என்றான். நான் “இல்லை அஞ்சலி” என்று சொல்லவும் “ஓ …அஞ்சலினா ஜோலியா” ஒழுங்கா வேலையைப் பார் என்று முறைத்து விட்டுப்போனான். எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான மாவை உருட்ட ஆரம்பித்தேன்…. ******************************* மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது அவனுக்கு யாரையும் தெரியாது. மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது. கிராமசபை உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு உணவு விடுதி ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இரவு நேரத்தனிமையையும் மகனின் நினைவுகளையும் போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மனைவி லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து குடித்து முடித்த பியர் கேனை ஆத்திரம் தீர நசுக்கி எறிவான். எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும் மறக்க நினைத்த அத்தனையும் மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத் தலை சுற்றிச் சுய நினைவிழந்துபோய் விடுவான். நினைவுகளை கொல்வதற்காக அடுத்த தெரிவாக கஞ்சா என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில் நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு இப்போதெல்லாம் வேலை முடிந்ததும் இரவில் இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான். அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து பொத்திப் பிடித்து கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில் கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி ஆழமாக உள்ளே இழுத்தான். பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம் அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது கொஞ்சம் சிறியதாக உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு குனிந்து பார்த்தான். தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது . அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை. அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது. “என்னைப் போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை அணைத்துத் தூக்கியவன் உனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின் முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு எல்லாமே லொக்காதான் . ******************************* அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம் கிடைத்துமிருந்தது. அவரது கடையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. என்னைப் போலவே அவர்களும் புதினம் அறிய வந்திருக்கலாம். யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். சிறிய வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று “ஏதாவது அருந்துகிறீர்களா” என்றவளிடம் ஒரு கோப்பிக்குச் சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன். சிறி அண்ணா பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை. என்னைக் கண்டதும் வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார். அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை நோக்கியே திரும்பின. “அண்ணை என்ன இது குழந்தை மாதிரி” என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் . என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர். “தம்பி நீ மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும் நம்பிக்கையாலையும் உன்னைக் கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “. ”சரியண்ணை நடந்தது நடந்து போச்சு, விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்” ”அவங்களும் அந்தப் பெடியன் ரெமியையும் அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” . ”கடைசிவரை அந்த ரெமியோடை தான் சினேகிதமா …….?” ”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப் பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும் களவாய்ப் பத்துவாள். எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.” ”அப்போ என்னதான் நடந்தது .?” ”முந்தா நாள் காலமை ஒரு சினேகிதியைப் பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை. இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”. “பேப்பரிலை இளம் தாய் எண்டு போட்டிருக்கே” என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப் போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே தொட்டிலில் சாயலில் அஞ்சலியைப் போலவே ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது . இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை ஏழு மாசம் . பணிப்பெண் கோப்பியை நீட்டினாள், அதனை அவசரமாக விழுங்கியபடி… “எங்கை சுமதியக்கா”? ”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.” “சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது” என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து “அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப் பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி” என்றவரிடம் விடை பெறும்போது வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும் பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி. “தம்பி சில நேரங்களிலை உங்களிட்டை 5 … 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன், என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின. “போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை” என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து முதல் நாள் பேப்பரில் அஞ்சலியின் “காணவில்லை” என்கிற அறிவித்தலை வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய பேப்பரை எடுத்துப் புரட்டினேன். அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன். போன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சரி இன்றைக்கும் நான்தான் பிட்சா போடவேண்டும். ******************************* மதியத்துக்கு தேவையான உணவு, தண்ணீர், நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை பார்ப்பதுமாக இருந்தது. அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான். வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ் துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது, வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல் மூத்திரம் பெய்து விட்டு வந்தது. யாருமற்ற காடு, காற்று மரங்களில் மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை. பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான். மெதுவாகவே நடந்து சென்ற லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து அவனது காலடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு மீண்டும் பந்தை எறிந்தான். இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது. “களைத்துப்போய் விட்டாயா…. சரி” என்றபடி அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து வைன் போத்தலை எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை எடுத்து விட்டுப் பார்த்தான். பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக் கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது . ******************************* நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள். சில காலங்களின் பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள் “மாமா இவன்தான் ரெமி என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள். வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய போது அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி பதில் வணக்கம் சொன்ன விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின் தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன். சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல இரயில் நிலையத்தின் பின்னால் உள்ள கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு அமர்ந்திருப்பாள். “இந்தக் காலத்து பிள்ளைகள்” என்கிற ஒரு பெரு மூச்சோடு கார் ஒலிப்பானை ஒலிக்காமலும் காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு . அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு அவதானித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து தள்ளிவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி நின்றிருந்தான். கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச் செல்ல அனைவரும் ஓடி விட்டார்கள். தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத் தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன். கண்கள் சிவந்து, வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும் “ஒண்டுமில்லை” என்றபடி சீற்றில் சாய்ந்து கொண்டாள். ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன். “எங்கை மாமா போறாய்? ” ”உங்கடை கடைக்கு” ”எதுக்கு? ” ”உன்ரை அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்” ”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ” “பேசாமல் வா” ”காசு தர முடியுமா முடியாதா ?” “முடியாது ” என்றதும் அவள் ஆசனப்பட்டியை எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே, நான் சட்டென்று பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை ஒலிக்கத் தொடங்கின. ஒருவன் “ஏய் …பைத்தியக்காரா” என்று சத்தமாகவே கத்தினான். எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். “எடியே நில்லடி ” என்று நான் கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப் போய்விட்டாள். எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு இரண்டு அடி போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும். பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின் சத்தம் எதுவும் செய்ய முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய் அவரிடம் விபரத்தை சொன்னதும் அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார். கோபத்தோடு எனக்கு அவமானமும் சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன். அதுதான் நான் அவரோடும் அஞ்சலியோடும் பேசிய இறுதி நாட்கள். ******************************* அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கொள்ள, அதிலிருந்து இறங்கியவன் காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான தடித்த பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான். காரிலிருந்து ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா” என்று அழைத்தபடியே பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த அஞ்சலியிடம் நீட்டினான். அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம் அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல் அமர்ந்துகொள்ள, அவளருகே அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான். இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி யிருந்தனர். போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன் இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது. சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக் கொக்கெயின் பொட்டலத்தையும் எடுத்தவன் சினிமா டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து கொட்டி சிகரெட் பெட்டியில் மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை எடுத்து “இந்தா அஞ்சலி” என்று நீட்டினான். ”இல்லையடா எனக்கு வேண்டாம்” ”ஏன் ?” ”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்” ”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை” ”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்” “ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய் இதெல்லாம் ஒரு காரணமா?” ”வேண்டாம் விட்டிடேன்” “சரி எனக்கும் வேண்டாம்” என்றபடி பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப் போத்தலை எடுத்துச் சட்டென்று தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி உடைந்த போத்தலால் அதைக் கிழித்து இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய் எதுக்கடா இப்பிடி” என்றாள். “அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ? எனக்கு நீ வேணும்” என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத் துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு நிமிந்தவளின் கண்கள் சிவந்து, கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன. அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன் சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண் மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்” என்று இழுத்து விட்டிருந்தான். அவள் கைகளை ஓங்கி நிலத்தில் அடித்த சத்தத்தில் மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று அலறிப் பறந்து போனது. இறுதியாய் உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன் முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது. எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன் கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை ஒட்டிக்கொண்டு இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல் பக்குவமாக அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன் கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் . ******************************* வைனைக் குடித்துமுடித்துவிட்டு சிறிய சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக் கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான். மாலை மூன்று மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம் நிற்கவேண்டும். எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு முன்னர் லொக்கவோடு செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள் வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது அதே வேகத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தது. “இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான் அவசரமோ ” என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான். லொக்கா அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது. கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள் நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து மருந்தை இழுத்தெடுத்தவர் இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில் அழுத்தியபடி மருந்தை செலுத்தினார். மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல் வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல் ஒற்றையும் வாங்கிச் சென்றவன் லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில் தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன் இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு இரண்டாவது கிளாஸில் விஸ்கியை நிரப்பத் தொடங்கியிருந்தான் . ******************************* யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள் வைத்திருக்கும் சிறிய கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான். இரத்தம் உறைந்துபோயிருந்த ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த தால் சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது. ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன் “என்னடி முறைக்கிறாய் ” என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித் தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை அரிந்து முடித்து இயந்திர வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான். ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுவிட்டு வெட்டும்போது சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில் போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப் பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி விழுந்த நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் . ******************************* அன்றும் வழமைபோல பத்திரிகையைத் தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப் போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான். “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”.. என்றதுக்கு கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன் “லொக்காவுக்கு வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது. அதுக்கு வயசாகி விட்டதால் கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர் சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்து கண்கள் கலங்கின. “சரி சரி கவலைப் படாதே” என்று அவனது தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும் “ஏய், இந்தப் பெண், அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான். “ச்சே என்ன இவன்…. மணிரத்தினம் படம் எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி “தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில் இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின் பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது. ”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர் இந்தக் காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாகப் போய் விட்டான். ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். மறுநாள் பத்திரிகையில் “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன் தொடர்பாக ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான். அவன் கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப் பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. உடலின் சில பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான். அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது” ’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப் பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின் கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான். எனக்கு வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன். அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின் செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்” என்றிருந்தது. நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர். பல மெழுகுவர்த்திகள் இன்னமும் எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது “ச்சே சிறியண்ணர் இவளுக்கு அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன் “காதலே ஏன் இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய கடதாசியில் ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது. அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் . ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய எனக்கு “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது. அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி வீதிக்கு இறக்கியபோது தான் நான் போட்ட சில்லறைகளை ஒருவன் பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு “ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான். அதற்கிடையில் பின்னால் ஒரு வண்டிக்காரன் ஒலிப்பனை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம். நெற்றியில் விரல்களை அழுத்தி யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.
 40. 16 points
  காலம்....இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி...! இடம்....யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தை. நேரம்....மத்தியானம் பன்னிரெண்டு மணி... திறேசாக்கா கடையைப் பரப்பி வைத்திருக்கிறார்! மீன்கள் அவவின் முன்னே இருக்கிற சீமந்துக் கட்டில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன! மத்தியான வெய்யிலில் அவை பழுதுபடாதிருக்க...ஒரு வாளியில் இருந்து..தண்ணீரைத் தடவித் தடவி...அவற்றைப் பளபளப்பாக வைத்திருக்க முயன்று கொண்டிருக்கிறார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த சங்கிலி..தொங்கிக்கொண்டிருக்க..அவரது வாயில் ஒரு அரைவாசி எரிந்த நிலையில் ஒரு சுருட்டு குந்திக் கொண்டிருக்கின்றது! அது உயிருடன் இருக்கின்றதா....அல்லது சும்மா குந்திக்கொண்டிருக்கின்றதா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது...அதிலிருந்து மெல்லிய புகை மண்டலம் கிளம்பி.....அது உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டது! அப்போது நிழலி வருகின்றார்! அவர் அதிக காலம் சவுதிப் பக்கம் இருந்ததால்....அப்போதைய யாழ்ப்பாணத்து மீன் விலை நிலவரத்தை..அறிந்திருக்கவில்லை! ஆச்சி கொஞ்சம் றால் வேணும்! திறேசக்காவின் முகம் கொஞ்சம் மாறியது! அவரது வயது கொஞ்சம் போயிருந்தாலும்...அவரை நன்றாக அறிந்தவர்கள்..அக்கா என்று தான் அழைப்பார்கள்! திறேசக்கா கொஞ்ச றால்களை எடுத்து....ஒரு பக்கம் வைத்தார்! வைத்த படியே...தம்பி...காணுமே..என்ற கேள்வியையும் கேட்டார்! நிழலி..அப்போது..வேறு உலகத்தில் ...றால்களைப் பொரிக்கலாமா..அல்லது 'டெவில்' பண்ணலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்! திறேசக்கா கேட்டதை அவர் கவனிக்காமல் இருக்கவும்....திறேசக்கா மேலும் சில றால்களை எடுத்து வைத்தார்! பின்னர் திறேசக்கா...தம்பி....காணுமோ..என்று கேட்டார்! நிழலியும் ..பழைய நினைவில்...நீங்கள் வையுங்கோ ஆச்சி.....பதினைஞ்சு ரூபா அளவில வரச் சொல்லுவான் தானே எண்டு சொல்ல...திறேசக்காவின் கோபம் உச்சத்துக்க்ப் போனது! தம்பி....என்ன இவ்வளவு நாளும்... உள்ளுக்கே இருந்தனீர்? ஆளைப் பார்த்தால்..காச்சட்டையும்...சேட்டும்...கன்னாடியுமாப் படிச்ச பெடியன் மாதிரிக்கிடக்குது....பேச்சுத் தொடர்ந்து கொண்டேயிருக்க நிழலி...பின்னர் யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தார்! ஒருவரும் இல்லாதிருக்கவே..தனக்குத்தான் அர்ச்சனை நடக்கிறது என்று உணர்ந்து கொண்டு...மெதுவாகப் பின்னோக்கி நடந்தது சென்றார்! இனி...இந்தச் சின்னக்கடைப் பக்கமே வரக்கூடாது..என்று அவரது உள் மனம் ..தீர்க்கமாக...முடிவெடுத்துக் கொண்டது! 00000000000000 000000000000000000 0000000000000 000000000000000 00000000000 அடுத்ததாக....ராசவன்னியன் கடைப்பக்கம் வந்தார்! அடுக்கியிருந்த மீன்களைக்....கண்களால் அளவெடுத்த விதமே...அவர் ஒரு பொறியியளாராக இருக்க வேண்டும் என்று திறேசக்காவை எண்ண வைத்தது! ஆளும்..கடைக்குப் புதுசாயிருக்கவே.. .....இண்டைக்கு முழுவியளம் சரியா அமையாவிட்டாலும்...வியாபாரம் நல்லாயிருக்கும் போல...என்று நினைத்துக்கொண்டார்! திடீரென ஏதோ நினைத்துக்கொண்டவர் போல ....ராசவன்னியன்...அன்னியோன்னியமாக..ஒரு மீனை எடுத்து...அதன் நாட்டைத் திறக்கவே....திறேசக்காவுக்குச் சுருக்கென்றது! அவவின்ர மீன்களைத் தொட்டுப் பார்க்கிற தையிரியம் இது வரை எவருக்குமே வந்தது கிடையாது! ஐயா.....என்னைப் பார்க்க நாறல் மீன்....விக்கிற ..ஆள்...மாதிரியாக் கிடக்குது! பதினைஞ்சு வருஷம்... இந்தச் சந்தையில மீன் விக்கிறன்...ஒருத்தர் கூட...என்ர மீனில் கை வைச்சது கிடையாது! ஐயா...வேணுமெண்டால் என்னிட்டைக் கேட்டிருந்தால்...திறந்து.. காட்டியிருப்பனே..எண்டு சொல்லவும்....ராசவன்னியன் ஏறத்தாள நடுங்கியே போனார்! இல்லையம்மா.....மீன் நாறியிருந்தால்...வீட்டில ..வீட்டுக்காரி...சத்தம் போடுவா..அது தான்..என இழுத்தார்! ஐயா....நீங்க ஆம்பிளை தானே......? எதுக்கு அந்த அம்மாவை இதுக்குள்ளை இழுக்கிறீங்கள்! மீனின்ர கண்ணைப் பார்க்க நாறல் மீன் மாதிரியா கிடக்குது? ...திறேசக்காவின் பேச்சுத் தொடரவே....ஆளை விடு தாயே...என்ற படியே..வன்னியனும்..நடையக் கட்டினார்! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦ அப்போது...தமிழ் சிறி....நல்லூரிலிருந்து...சைக்கிள் உழக்கிய களைப்பில்....சைக்கிளை மதிலில் சாத்தி விட்டு...சின்னக் கடைக்குள் வந்து கொண்டிருந்தார்! அவரது...நெற்றியில்....மெல்லிய திருநீற்றுக் கீற்றுப் படிந்திருந்தது! அருகிலிருந்த வாய்க்காலுக்குள்...ஒரு மாட்டின் முழங்காலுடன் ....இரண்டு நாய்கள் போராடிக் கொண்டிருந்தன! அடச் சீ.....என அலுத்துக் கொண்ட படி.....திறேசம்மாவின் கடையை நோக்கி நடந்தார்! காலம் ...யாரைத் தான் விட்டு வைத்தது? திறேசக்காவின் முன்னாள்....ஒரு பால் சுறா....நன்றாக நீட்டி ..நிமிர்ந்து படுத்திருந்தது! அதைக் கண்டதும்.....கொஞ்சம் தேங்காய்ப் பூவும்.. போட்டும்...வறுத்துப் புட்டோட சாப்பிட...அந்த மாதிரி இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டார்! அக்கா....இந்தச் சுறா...எவ்வளவு வரும்..? அக்கா..என்ற அழைப்பைக் கேட்டதும்...கொஞ்சம் அகம் மகிழ்ந்த திறேசக்கா....தம்பி..எவ்வளவு மதிக்கிறீங்கள் எண்டு கேட்கத் தானாச் சீனாவும்..அக்கா...இந்தச் சுறா...ஆம்பிளையா அல்லது பொம்பிளையா என்று கேட்க....திறேசக்காவும்...சுராவைப் பிரட்டிப் பார்த்து விட்டு....ஆம்பிளை தான் எண்டு சொல்லவும்...தானாச் சீனா...அது எப்படித் தெரியும் என்று கேட்டார்! இண்டைக்கு நமக்கு விடிஞ்ச பொழுது சரியில்லைப் போல என நினைத்த திறேசக்காவும்...சிரித்த படியே...சுறா..காச்சட்டை போடேல்லை என்று பதில் கூறத் தானாச் சீனாவும்... இருபது ரூபாய்க்கு சுறாவைக் கேட்க....அக்காவின் கண்கள் கோபத்தால் சிவந்தன! தம்பி....இஞ்சை பாரும்....காக்கை தீவில..வலையில இருந்து புடுங்கி எரியிற குஞ்சு குருமான்களைப் பொறுக்கிப் பெட்டிக்குள்ள போட்ட படி...வாரவனிட்டை மீன் வாங்கிற ஆக்கள் நீங்கள்...! உங்களுக்கெப்படி...மீனைப் பற்றித் தெரியும்? இந்தச் சுறாவுக்கு...இருபது ரூபாய் விலை கேக்கிற அளவுக்குத் தான்.....உங்கட...மீன் அறிவு...இருக்குது! அக்கா....நீங்க தானே விலை சொல்லச் சொன்னீங்கள் என்ற படி....தானாகச் சீனா வழிய...சரி ...சரி...முப்ப்த்தஞ்சைத் தந்து போட்டுக் கொண்டு போங்கோ..எண்டு திறேசக்கா சொல்லவும்...இஞ்சை இருந்து வெளிய போனால் சரி என்று நினைத்த தானாச் சீனாவும்...சுறாவுடன்..சைக்கிளை நோக்கி நடந்தது கொண்டிருந்தார்! மனுசிக்கு...என்ன விலை சொல்லலாம் என்று அவரது மனம்....கணக்குப் போட்ட படி இருந்தது! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அன்றைய சம்பவங்களால் அலுத்துப் போயிருந்த திறேசக்காவிடம்....றோசக்கா வந்தார்! அக்கா இண்டைக்கு வீட்டில கொஞ்சம் விருந்து வரும்போல கிடக்குது...கொஞ்சம் நல்ல மீனாய்ப் பாத்துத் தாவன் என்று கேட்கக்....கொஞ்சம் கும்பிளா வைச்சிருககிறன்...தரட்டா எனக் கேட்டார்! சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பி.கு: குளத்து மீன் ...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது! எனவே...ஏதோ எழுதினேன்! திறந்த மனம் கொண்ட...யாழ்கள உறவுகள்...மன்னிப்பார்கள் எனும் நம்பிக்கையுண்டு.....எவரையும் புண் படுத்தும் எண்ணம்...என்னிடம் இல்லை!
 41. 16 points
  ஓ...மானிடனே ! ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்.., உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது! எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,, எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...! அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர..., உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்..., கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க.., அதை மறைக்க ... நீ படும் பாடு..., சொல்லில் வடிக்க இயலாது! யாழ்.., என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்! காலம்.., அவளைத் தின்று விடவுமில்லை! அவளின் இளமையைக், கொன்று விடவுமில்லை! மாறாக..., இன்னும்...இன்னும்..., வளம் பெறுகிறாள்! சத்தியமாய்ச் சொல்கிறேன்! அவள் மீது எனக்குப் பொறாமையில்லை! ஆசை மட்டும் தான் ! களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்!
 42. 16 points
  அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது. "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 43. 16 points
  " உயர்தர பரீட்சை எடுத்த‌வுடன் ந‌ண்பர்களுடன் ஊர் சுற்றி திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கைய‌டக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக அந்த திருவிளையாடலை செய்வோம்.. நாலு திசையும் தரிசனம் செல்வோம் .சில நாட்களில் இரண்டு திசைகள் தான் சாத்தியப்படும் தரிசிக்க வேண்டிய ஆட்கள் அதிகமாக இருப்பதால்.தரிசிக்க வேண்டிய ஆட்களின் இயற்பெயர்களை சொல்லி தரிசிக்க செல்வதில்லை பட்ட பெயர்களை சொல்லி தான் செல்வது வழக்கம்.இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி.. கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம். அப்படி ஊர் சுற்றிதிருந்தவர்கள் அநேகர் சொந்தநாட்டிலேயே பட்டங்கள் பெற்று புலம் பெயர்ந்து விட்டார்கள் .இன்னும் சிலர் புலர் பெய‌ர்ந்த பின்பு பட்டங்கள பெற்றார்கள்...சிலர் பட்டங்கள் பெறாமலே வாழ்க்கையை கொண்டு போகிறார்கள். இப்பொழுது அவ‌ர்களில் அநேகர் ஐம்ப‌து வயதை தாண்டிவிட்டார்கள். வட்ஸப்பில்...குறுந்தகவல் வந்துள்ளது என கைத்தொலைபேசி மின்னிமின்னி அறிவித்தது. செய்தியை படித்தான். "மீட் அட் த ரெஸ்டொரன்ட் அட் சிக்ஸ்" லண்டனிலிருந்து வந்திருக்கும் நண்பனை சந்திப்பது என்று ஏற்கனவே முடிசெய்திருந்தார்கள் ஆனால் இடம் தெரிவு செய்வில்லை தற்பொழுது தெரிவு செய்துவிட்டு குகன் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.ரெஸ்டொரன்டில் கார் பார்க் வசதி குறைவாக இருக்கும் தன்னையும் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டிருந்தான் குகன். காரை பார்க் பண்ணிவிட்டு லண்டன் நண்பனை ஒடி போய்கட்டிபிடித்து நீண்ட நாட்களின் பின்பு சந்தித்தது மகழ்ச்சி என்று ரஜனி ஸ்டைலில் அன்பை தெரிவித்தேன். "இத்தாலியன்,இந்தியன் ,தாய்,சைணிஸ் எந்த ரெஸ்ரோர‌ன்ட்டிற்கு போகப்போறீயள்" "மலேசியனுக்கு புக் பண்ணிபோட்டேன் அதை கான்சல் பண்ணுவோமா". எல்லோருமாக‌ மலேசியனுக்கு போவதாக முடிவெடுத்தோம். மலேசியன் பணிப்பெண் வரவேற்றாள். "எத்தனை பேர்" "ஐந்து பேர் " மேசையை காட்டியவள் மெணுப்புத்தகத்தையும் தந்து சென்றாள். கலர் கலராக படங்கள் ஒவ்வோரு சாப்பாட்டுக்கும் ஓவ்வோரு பெயர்கள்,சாப்பாட்டை தெரிவு செய்வதே ஒரு குழப்பமாக இருந்தது. ஆல் இன் ஆல் கந்தர். கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை. படம் காப்புரிமை ஜீவன் சிவா கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட். கடைக்குள்ளிருந்து சிகரட்டும் தேனீரும் அருந்தும் ஐயா மாரை பார்த்தவுடன் நண்பர்களுக்கும் அந்த எண்ணம் வந்து ,தம் அடிக்க சுத்தந்திரம் கிடைக்கவில்லையே என்று புறு புறுத்தபடி ஒதுக்குப்புறம் தேடுவார்கள்...ஆரம்பகாலங்களில் திருட்டு தம் அடிக்க கல்லுண்டை வெளிவரை சென்றிருக்கிறோம்.சிகரட் வாங்குவதில் எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் யாராவது பெரிசுகள் வீட்டாருக்கு சொல்லி போடுவார்கள் என்ற பயம். ,தம் அடிக்க வேணும் என்று ஒரு சிலருக்கு ஆசை ஆனால் பல‌ உத்தம புத்திரர்களுக்கு விருப்பமிருக்காது.தம் அடிக்கிற கோஸ்டிகள் ஒசியில் பிளேன் டி குடிச்சு போட்டு அந்த காசுக்கு சிகரட் ஒன்று இரண்டை வாங்கி பொக்கற்றில் வைத்து கொண்டு மறைவிடம் தேடி ஒதுங்குவார்கள். உந்த சிகரட்டிலும் தராதரம் இருந்தது கண்டியளோ மிகவும் மலிவானது வோர் எசஸ்,பிறகு திரி ரோசஸ்,பிரிஸ்டல், விலை உயர்ந்தது கொல்ட்லீவ். மால்பரொ என்ற ஒரு பிராண்ட்டிருந்தது அதை கொழும்புக்கோஸ்டிகள் தான் அதிகம் பாவிப்பினம்.25 சதத்திற்கு இரண்டு வொர் எசஸ் சிகரட் வாங்கலாம். இப்படிதான் நானும் தம் அடிச்சு பார்ப்போம் என்று ஒன்றை வாயில வைச்சு இழுத்தேன் பிரக்கடிச்சு கண்னிலிருருந்து கண்ணீர் வரத்தொடங்கி விட்டது.வாயும் ஒரு கச்சலாக இருந்தது .அதன்பின்பு சிகரட்டை கைவிட்டு கள்ளை தழுவிகொண்டேன். "நண்பர்களை கண்ட சந்தோசம் பழைய கந்தர் கடை என நினைத்து "அண்ணே ஒடர் ரெடி" என்று கத்த வாய் வந்தது இருந்தும் சுதாகரித்துகொண்டேன் . மேசைக்கு அருகிலிருந்த மணியை அடிக்க நவீன கருவியுடன் வந்தவள் "ஒர்டெர் பிளிஸ்" என்றாள் ஐந்து பேரும் ஐந்து விதமான உணவு வகைகளை ஒடர் கொடுத்தோம். ஒரு நண்பன் சொன்னான் ஐந்து பிளேட் எடுத்து ஐந்து விதமான சாப்பாடுகளையும் எல்லொரும் பகிர்ந்து உண்போம் என்று, அவன் விருப்பபடி பகிர்ந்துண்டோம். சலாட்டுக்குள்ளிருந்த தக்காளி துண்டை முள்ளுக்கரண்டியால் கூத்தி எடுத்தபடியே "எங்களோட படிச்ச தக்காளி இப்ப எங்கயடாப்பா" "அவள் இப்ப கனடாவில் இருக்கிறாள்,இரண்டு மகள் மெடிசின் செய்யினம்" "மனிசிமார் பக்கத்தில இல்லை என்ற துணிவில பழைய காய்களை பற்றி கதைக்கிறீயள் " "மனிசிக்கு நான் எல்லா கதையும் சொல்லி போட்டன்," "நீ என்ன தக்காளியை காதலிச்சனீயோ" "நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்" "பிறகு ஏன்டா அவளின்ட சரித்திரத்தை இப்பவும் அறிஞ்சு வைச்சிருக்கிறாய்" "I don't know....I think that's also a kind of love" தக்காளி,முருங்கை ,வாத்து,கிப்பி,காளி எல்லோரினதும் அப்டெட் வந்து போயின. பில் கொண்டு வந்தாள் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு கொடுக்க போனோம் ,எதை எடுப்பது என்பது காசாளருக்கு பெரிய தலையிடியாக இருந்திருக்கும்.கடைசியில் ஒருத்தர் வெற்றி பெற்றார். வெளியே சிகரட் பிடித்துக்கொண்டு இருவர் நின்றனர்.மூக்கை மற்ற பக்கம் திருப்பிகொண்டு எல்லோரும் சென்றோம்.பப்ளிகா சிகரட் பிடிக்கிறதை தடை செய்ய வேணும் எண்டு பேசிய படி நடந்து செல்லும் பொழுது பப்புக்கு வெளியே மது கிண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் வயது வித்தியாசமின்றி இயற்கையை ரசித்தபடி இருந்தனர். நாம் அதையும் தாண்டி எமது காரை நோக்கி சென்றோம்... இளமை எனும் பூங்காற்று....என்ற பாடாலை விசிலடித்த படி வீட்டு கதைவை திறந்தேன் "என்னப்பா 30 வயது குறைந்த மாதிரி துள்ளி கொண்டு வாறீயள்" அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே வந்ததே கண்மணி கண்மணி..
 44. 16 points
  கூடைப்பந்து மைதானத்தில் நாலு பக்கம் கோடு போட்ட - நான்முகன் நடுவில் இட்ட புள்ளி நீயே ! காதிலும் வளையம் மூக்கிலும் வளையம் நாக்கிலும் வளையம் -நாபி உன்னிலும் மின்னுது வளையம் ! கண் இமைக்கு கருமை கைகளுக்கு மருதாணி - தொப்புள் உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் ! கோடிகள் கொட்டும் திரையிலும் கொடியிடை அசைவினில் - குளோசப் முழுதும் கொள்ளையடிக்கின்றாய் ! நடிகைக்கு தரும் நான்கு கோடியில் மூன்று கோடி - முழுதும் முகம் காட்டி முழுங்குகின்றாய் ! எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் மின்னும் ஆவணியும் நீதானே ! காலையில் கல்லூரியில் காற்று இன்றி உறங்குகின்றாய் - மாலையில் கடைவீதியில் காலாற நடக்கின்றாய் ! பார்த்தால் பசி தீரும் பார்த்தபின் பசி எடுக்கும் தொட்டால் புல் -அரிக்கும் தொட்ட பின் உயிர் துடிக்கும் ! மண்ணிலே சுற்றும் பம்பரம் எல்லாம் இப்போது உன் - மேல் சுற்றுதல் அதிசயமே ! உன்னை வருடாது கண்கள் உறங்காது வந்து வருடிய - பின் கைகள் உறங்காது ! அகப்பையில் வளரும் சிசுவின் அட்ஷயபாத்திரமும் நீயே அல்லி - ராணி கோட்டையில் அழைப்புமணியும் நீயே ! ஆக்கம் சுவி....!
 45. 16 points
  விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்கலாம் மேலதிக பசளை எதுவும் பல வருடங்களுக்குத் தேவையில்லை நிலப் பராமரிப்பு கிடையாது. வறட்சியான, உவர்ப்பான, பசளையற்ற, களித்தன்மையான எந்த நிலத்திற்கும் ஏற்றது நீர் சிறிதளவு போதுமானது ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. மழை காலங்களில் முற்றாக நீர்ப்பாசனத்தை நிறுத்தலாம். களைகள் அதிகம் வளராது. இன்னும் பல இப் பயிற்செய்கை முறையினால் குறுகிய இடத்தில் குறைந்த நீருடன் இலவசப் பசளையுடன் குறைந்த பராமரிப்புடன் இயற்கையான பரக்கறிகளை உற்பத்தி செய்யலாமே தவிர அமோகமான விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். செய்முறை நிலத்தில் 1.2 மீற்றர் அகலமாகவும் உங்கள் வசதிக்கேற்ப நீளமானதுமான நீள்சதுரத்தைத் தெரிவு செய்யவும். சூரியனின் பாதையில், அதாவது கிழக்கு மேற்காக நீளப் பகுதி இருப்பது சிறந்தது. இப் பகுதியை 30 சென்ரிமீற்றர் அளவில் தோண்டவும். தோண்டிய மண் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக இருந்தால் அம் மண்ணை நீள்சதுரத்தின் அருகிலேயே விடவும். இதன் அடிப் பகுதியில் இயற்கையான சிறு கற்கள் இருந்தால் பரவி விடலாம், இல்லாவிட்டால் பரவாயில்லை. அடுத்ததாக 5 - 10 சென்ரிமீற்றர் உயரத்துக்கு நன்கு உக்கிய சருகு, சாணி போன்ற சிறு பொருட்களால் நிரப்பிக் கொள்ளவும். இதன்மேல் உபயோகப் படாத காய்ந்த பெரிய மரக் மரக் கட்டைகள் , தென்னங் குற்றிகள் போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும். பச்சை மரத்தைத் தவிர்க்க வேண்டும். மரம் அதிக தடிப்பாக இருப்பது இன்னும் நல்லது. அடுத்ததாகப் பயன்படாத சிறிய காய்ந்த மரக் கிளைகள், குச்சுகள் தென்னை மட்டை, பாளை போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும். மரக் குச்சுகளின் இடைவெளிகளில் சாணி, ஆட்டுப் புழுக்கை, உக்கிய சருகு, உமி போன்ற சிறு இயற்கைப் பசளைகளால் நிரப்பவும். இதன்மேல் தோண்டி வைத்திருக்கும் மண்ணால் அல்லது தோட்ட மண்ணால் மூட வேண்டும். இப்போது இது கூரான வரம்பு போல் காட்சியளிக்கும். இறுதியாக வைக்கோல் துண்டுகள், ஓலைத் துண்டுகளால் முற்றாக மூடவும். இந்த வரம்பின் குறுக்கு வெட்டைப் பார்த்தோமானால் இவ்வாறு இருக்கும். வரம்பின் உச்சியில் ஓட்டையுள்ள சிரட்டைகளை, ஓட்டைகள் கீழ்ப்புறமாக இருக்குமாறு நில மட்டத்திற்கு அமிழ்த்தி விடவும். இதற்குள்தான் நீர் பாசனம் செய்யவேண்டும். மறக்காமல் சில மண்புழுக்களையும் பிடித்து வரம்பிற்குள் விடுங்கள். hugelkultur வரம்பு தயார். மேலுள்ள வைக்கோல் படையைச் சிறிதாக விலக்கிவிட்டுப் பயிர்களை நட்டு மீண்டும் வைக்கோலால் மூடி விடவும். பயிர்களின் வேர்கள் மண் படையைத் தாண்டி அடியிலுள்ள மரங்களைத் தொடப் போகின்றது. இந்த மரக் கட்டைகள் சிறிது சிறிதாக உக்கியபடி பயிருக்குத் தேவையான அத்தனை பசளைகளையும் கொடுக்கும். அத்துடன் நீரையும் உறிஞ்சி வைத்து படிப்படியாகப் பயிருக்கு வழங்குவதுடன் மண்ணுக்கு வேண்டிய காற்றோட்டத்தையும் வழங்குகிறது. முதல் வருடத்தில் மரம் உக்கத் தொடங்குவதால் அதிக விளைச்சல் இராது. மரக் கட்டைகளின் தன்மையைப் பொறுத்து சுமார் 20 வருடங்கள் வரை பயிச்செய்கை செய்யலாம். அதுவரை நிலத்தைக் கொத்திப் புரட்டவோ வேறு பசளைகள் சேர்க்கவோ தேவையில்லை. மேற்புறத்தில் உள்ள வைக்கோல் உக்கி மறைந்து விட்டால் மீண்டும் வைக்கோல் சேர்க்க வேண்டும். மேற்புறத்தில் அமிழ்த்திய சிரட்டைகளுக்குள் நீர் விட்டால் போதுமானது. சிரட்டைகளிலுள்ள நீர் வரம்பினுள் பரவ, மரக் கட்டைகள் அதனை உறிஞ்சிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. வைக்கோல் படை நீர் ஆவியாகாமல் தடுப்பதுடன் களைகள் முளைப்பதையும் தடுக்கும். அத்துடன் நத்தை மற்றும் சில பயிரின் இலைகளை உண்ணும் புழுக்கள் வராமல் தடுக்கும். வெவ்வேறு விதமான பயிர்களைக் கலந்து நடலாம். இடையிடையே சீல காஞ்சோண்டி, செவ்வந்திச் செடிகளையும் நட்டு விடுங்கள். இவை சில நோய்களையும் பூச்சிகளையும் நெருங்க விடாதாம். நீங்களும் சிறிய வரம்பு ஒன்றை உங்கள் தோட்டத்தில் ஒரு ஓரமாக அமைத்துப் பாருங்கள். அக்கம் பக்கத்தில் பட்ட மரம் இருந்தால் அதனை சேகரித்து வையுங்கள். தயார் செய்வதுதான் ஓரளவு சிரமம். பராமரிப்பு பெரிதாகத் தேவையில்லை அதுவும் வரம்பு உயரமாக இருப்பதால் நின்றபடியே களை பிடுங்கவும் பயிர் நடவும் முடியும். இனி hugelkultur முறையில் வேறு விதமான எனது அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன்.
 46. 16 points
  துருச்சாமி... தொடர்கிறது ! 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். காலை 09 : 00 மணி. அந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில் சற்றுத் தள்ளி இருந்த பூவரசமர நிழலில் சிலர் கூடி நிக்கிறார்கள். சூசை சயிக்கிளில் மீன் கொண்டுவாற நேரம்.அங்கு நின்ற காமாட்சி மற்றவர்களைப் பார்த்து பர்வதம் வீட்டில் ஒரு சாமி வந்திருப்பதைத் தான் பார்த்ததாக மெதுவாய் சொல்கிறாள்.அது சிறிது நேரத்தில் அந்தக் கிராமம் முழுக்க காதோடு காதாகப் பரவுகின்றது. அதேநேரம் சூசையும் அந்த பல்பு போல இருக்கும் ஹாரனை பீப்...பீப் என கையால் அமுக்கி அமுக்கிக் கொண்டு அங்குவந்து இறங்குகின்றான். எல்லோரும் மீன் பெட்டிக்குள்ளிருந்து தங்களுக்கு இசைவான மீன்கள் , றால்கள், நண்டு கணவாய், சுறா என்று பொறுக்கி எடுக்கினம். செண்பகமும் மோகனாவும் கதைத்துக் கொண்டே வந்து சேருகினம். காமாட்சி : சூசை நீ ஊரெல்லாம் நல்ல மீன்களை வித்துப் போட்டு உள்ள நாறல் மீனெல்லாத்தையும் கடைசில கட்டியடிக்க இங்கு கொண்டு வாராய். சூசை: இல்லையக்கா உங்களுக்கு நான் அப்படி செய்வேனா. இப்பதான் கடற்கரையிலே ஏலம் எடுத்துக் கொண்டு இங்கால வாறன். அவரவர் முன்பே பத்தியம் அதுக்கு இதுக்கு என்று சொல்லி வைத்த மீன்களைத் தனியாக எடுத்து அவரவர்களிடம் கொடுத்து சிலருக்கு கொப்பியில் கணக்கும் எழுதிக் கொள்கிறான். காசு கொடுத்தவர்களுக்கு மிச்சத்தை தனது சாரத்தின் சண்டிக்கட்டை தூக்கி உள்ளிருந்த காற்சட்டைப் பையில் இருந்து காசை எண்ணிக் கொடுக்கிறான். எல்லோரும் கலைந்து போனபின் செண்பகமும் அவனுடன் உரசினாப் போல் நின்றுகொண்டு மீன்கள் எடுக்க சூசையும் தனியாக வைத்திருந்த நல்ல மீன்களைப் பெட்டியில் போடுகின்றான். அவளும் எடுத்துக் கொண்டு கிளம்ப அவனும் "செம்பு" இன்னும் இரண்டு தெருவுக்குப் போட்டு வீட்டுக்கு வாறன் என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த பல்பு ஹாரனை அமுக்கிக் கொண்டே சயிக்கிளில் ஏறிப் போகிறான். (கிராமத்தைக் கொஞ்சம் பார்ப்போம். அது ஒரு மிகச் சிறிய கிராமம்.சுமார் ஐம்பது வீடுகள் வரை இருக்கும். ஒரு சில வீடுகளே ஓடு போட்டதும் பெரிய வீடுகளுமாய் இருக்கின்றன.கிராம எல்லையில் ஓரிரு கோயில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல செழிப்பான கிராமம். இயற்கை வளத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. அது அங்குள்ள ஆண்களிடம் வலிமையாகவும் பெண்களிடம் வனப்பாகவும் வாளிப்பாகவும் குவிந்து கிடக்கு. ஆங்காங்கு ஊருக்குள் நடக்கும் கொண்டாட்டங்கள் திருவிழாக்களுடன் சேர்ந்து கிசுகிசுக்களும், கசமுசாக்களும் தாராளமாக நடக்கும். எல்லாம் ஓரிரு வாரந்தான். பின்பு பழையபடி வேறொரு கிசுகிசு கசமுசா. ஒரு வெள்ளந்தியான கிராமம்.) சாமி திண்ணையில் தியானத்தில் இருக்குது. அந்த வீட்டுக்காரர் கதிரவேலு படலையை சயிக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்ட் போட்டு விட்டு உள்ளே வாரார்.வாசலில் கிளுவமர நிழலில் திருகணியில் இருந்த மண்பானையில் இருந்து கிண்ணத்தில் நீர் மொண்டு அண்ணாந்து குடித்து விட்டு உள்ளேபோய் சற்று நேரத்தில் வெளியே வந்து எதிர் திண்ணையில் அமர்கிறார். சாமியும் அரவம் கேட்டு கண்திறந்து பார்க்குது. கதிவேழு குசலம் விசாரிக்கிறார். கதிரவேலு: கும்புடுறேன் சாமி. சாமியை எப்படிக் கூப்பிடுறது. சாமி: ஒரு தெய்வீகப் புண்ணகை சிந்தி சொல்லுது. என்நாமம் "துருச்சாமி" . ( சாமியின் பூர்விகப் பெயர் துரைச்சாமி. அவரது பால்ய காலத்தில் அவருடன் இருந்த கஞ்சாச்சாமி, அபின்சாமி,கள்ளுச்சாமி எல்லாம் அவரை துருச்சாமி ...துருச்சாமி என்று அழைத்து இப்ப சாமியே தன்நாமம் கெட்டு, தானே மறந்து துருச்சாமியாய் கிராம வலம் வருகுது). கதிரவேலு: சாமியின் பூர்வீகம் அறியலாமோ. சாமி: மூச்சை நன்றாக இழுத்து வீட்டுக் கொண்டு ம்.... அது ஒரு ஆடி அமாவாசை. அறியாப் பருவத்தில் கீரிமலையில் நீராடப் போய் அங்கு கூட்டத்தில் ஐயா அம்மாவைத் தவறவிட்டு அங்கிருந்த சாமிமார்களுடன் அலைந்து,திரிந்து கால்நடையாய் கதிரமலை சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி மாங்குளத்தில் எழுந்து பின் இப்படியே கிராமம் கிராமமாய் அலைந்து ம் ....! சாமி மோனத் தவத்தில் மூழ்குது. "கூடுமறை யட்சரக் கோணமெல்லாம் காவல் கொண்டண்டம் பூத்த தேவே" அது ஒரு நாற்சார் வீடு. உள்ளே அடுக்களையில் பெண்டுகள் சிலர் சேர்ந்து சமையல் செய்ய தொடங்கிட்டினம். சிலர் நெல்லு எடுத்து வந்து மரஉரலில் போட்டு உலக்கையால் கைமாற்றி குத்தினம். ஒருவர் இருவராய் பலர் வாசலாலும் பின் வளவாலும் வந்து சேருகினம். சாமியும் திண்ணை விட்டு வெளியே வந்து முற்றத்து மாவின்கீழ் நிக்க பர்வதத்தின் பேரன் கண்ணன் ஒரு வாங்கை எடுத்து வந்து அங்கு வைக்கிறான்.சாமியும் அதில் மான்தோல் போட்டு அமருகின்றது. மறக்காமல் தூளிப் பையையும் கையேடு எடுத்து வந்து பக்கத்தில் வைத்திருக்கு. கதிரவேலுவும் மீண்டும் சயிக்கிளில் வெளியே போகிறார். செண்பகம் மீனோடு வந்து படலையைத் திறக்க சயிக்கிளில் வந்த கதிரவேலுவும் உள்ளே சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டு செண்பகத்திடம் எனக்கு கொஞ்சம் வாழை இலை வேணும் செம்பு என்கிறான். செண்பகம்: என்ன கதிரு உனக்கில்லாததா! தேவையானதை நீயே எடுத்துக்கொள். குருத்திலை எல்லாம் விரிஞ்சு கிடக்கு காத்தில என்கிறாள். கதிரும் கத்தியுடன் வளவுக்குள் சென்று நல்ல இலைகளாய்ப் பார்த்து பார்த்து வெட்டுகிறான். மீனை சட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்த செண்பகம் என்ன கதிர் உன் வீட்டுக்கு யாரோ சாமி வந்திருக்காமே ! கதிரவேலு: ஓம் செம்பு. அதுதான் கானபேர் வருகினம், மத்தியானம் சோறு ஆக்கிப் போடுறம் நீயும் வா என்ன. செண்பகம்: சும்மா போ கதிரு, உன் பொஞ்சாதி பொன்மணி பார்க்கிற பார்வையே சரியில்லை. ( பழனி வேற்ரூருக்கு வேலைக்கு போன இடத்தில் அவனுடன் பழக்கமாகி செண்பகம் அவனது ஆசைநாயகியாய் இங்கு வந்துவிட்டாள். ஊருக்குள் கிசுகிசு இல்லாத நேரங்களில் செண்பகம்தான் அவள்). என்று சொல்லிக் கொண்டே அதோ அந்த மொந்தன் குலையை வெட்டி ரெண்டு காயை எனக்குத் தந்திட்டு மிச்ச இலையையும் கொலையையும் நீ எடுத்துக் கொண்டுபோ என்கிறாள். இந்நேரம் வாசலில் வந்த சூசை வேலியால் எட்டிப் பார்த்துவிட்டு யாரோ நிக்கினம் போல என்று அப்பால் போகின்றான். கதிரும் அதை வெட்டி அவளுக்கும் குடுத்து விட்டு வாழை நாரால் எல்லாத்தையும் சயிக்கிளில் கட்டி விட்டுத் திரும்ப நில்லு கதிரு இந்தா இந்த ரெண்டு பொத்தியும் உனக்குத்தான் என்று வாளைப் பொத்தி இரண்டைக் கொடுக்கிறாள்.கதிரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போகிறான். சாமி வாங்கில் இருந்து அங்கிருந்த பிள்ளைகள் பெரியவர்களுக்கு சில பல சிரிப்புக்கு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு ஒரு பெண்மணி ஒரு பையனைக் கூட்டி வந்து சாமி இவனுக்கு மாலையில் இரவில் காச்சலாய்க் கிடக்கு. உன் கையாள கொஞ்சம் துண்ணுறு பூசிவிடு. சாமியும் விபூதிப் பொட்டலத்தை எடுத்து சிறிது விபூதியை அள்ளி இடது உள்ளங் கையில் பரப்பி ஒரு குச்சியால் ஏதோ யந்திரம் கீறி மந்திரிச்சு அந்தப் பையனது உச்சியிலும் நெத்தியிலும் பூசி சொடக்குப் போட்டு அனுப்பி வைக்குது. மற்றவர்களுக்கும் திருநீறு தந்து குழந்தைகளுக்கு தன்கையாலே பூசி விடுகுது. அந்தத் திருநீறும் ஒரு தனித்துவமான வாசனை வீசுது. வேறொரு பெண் கையில் ஒருமாதக் குழந்தையுடன் தனது மாமியாரோடு வந்திருக்கு. அவள் சாமியிடம் சாமி நீங்கள்தான் என்பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சாமியின் காலடியில் குழந்தைய கிடத்துகிறாள். சாமியும் பிள்ளையை அல்லி எடுக்க அது சாமியின் மார்பில் "உச்சா" போகின்றது. அப்பெண்ணும் அவசரமாய் தன் முந்தானையை எடுத்து சாமியின் மார்பைத் துடைக்கப் போக சாமி அதை கையால் தடுத்து தனது சால்வையால் துடைத்துவிட்டு விபூதி எடுத்து மாமிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் பூசிவிட அங்கிருந்த பர்வதாக கிழவியும் சின்னப் பிள்ளை யாரிடம் உச்சா போகுதோ அவர்களிடம் உறவு அதிகம் என்று சொல்லுறாள். சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள். பின் துருச்சாமிக்கு அரோகரா என்றும், குஞ்சிதபாதம் வாழ்க என்றும் கோரஸ்சாய் கோஷம் போடுகின்றார்கள். சாமியும் பிள்ளையைத் தாயிடம் குடுத்து குளிக்கும்போது மறக்காமல் சங்கிலியைக் கழட்டிவிடு , தண்ணி பட்டால் சாயம் போய்விடும் என்று சொல்லுது. எல்லோரும் போடும் சத்தத்தில் அது சக்தி போய்விடும் என்று அவளுக்கு விளங்குது. அப்படியே செய்கிறேன் சாமி என்று சொல்கிறாள். அவர்களுக்கு தண்டம் தூக்கி ஆசிவழங்கி அனுப்புது. அந்தப் பெண்ணும் திரும்பத் திரும்ப சாமியைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது மங்கலாய் பழைய நினைவொன்று பொறி தட்டுது. போனவருடமளவில் தனது மாமியார் தன்னிடம் கலியாணம் கட்டி நாலு வருடமாகுது இன்னும் ஒரு புள்ளை பெறக் காணேல்ல என்று திட்டிப் பேசி மகனிடம் சொல்லி அவளை அயல் கிராமத்திலிருக்கும் அம்மா வீட்டுக்கு அனுப்பியதும், அடுத்தடுத்த நாள் இரவு தான் தோட்டத்துக்குள் இருந்து வரப்பில வரும்போது யாரோ தன்னை இழுத்து விழுத்தியதும் அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும், அதையும் வீட்டில சொல்லப் பயந்து பேசாமல் இருக்க அடுத்தடுத்து வந்த இரண்டு மாதத்தில் தான் சத்தி எடுக்க இது மசக்கை என்டு கண்டு புருஷன் வீட்டுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வாடகைக்கு சிவதாற்ற காரோடு வந்து தன்னைத் தாங்காத குறையாய் இங்கு அழைத்து வந்ததும்,பின் சீராட்டிப் பாராட்டி இந்தக் குஞ்சிதபாதம் பிறந்ததும் நினைவில் வர "இவர் அவனாய் இருக்குமோ என ஐயப்பட்டு அவர் கையில் தண்டத்தையும் கண்டு அவன்தான் இவர்" என்று தெளிந்து மாமியிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு சற்று நில்லுங்கோ மாமி வாறன் என்று திரும்பிப் போய் சில ரூபாய் தாள்களும் கையில் கிடந்த காப்பையும் கழட்டி சாமியின் மடியில் போட்டு வாஞ்சையுடன் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு போகிறாள். அற்புதங்கள் தொடரும்....!
 47. 16 points
  1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எத்தனை பேரால் உணரப்படும். உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில் உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள் கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள் சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அனுதினமும் கண்ணீருடன் போராடும் எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் நீளும் பயணங்கள் தொடர்கின்றன சொந்த நிலத்தில் வாழ முடியாமல் தங்கள் நிலத்துக்காக தாமே போராடும் முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன நாளும் நாளும் போராடும் நிலையில் அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை ஆனாலும் அயராது போராடும் அவலநிலை யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்? இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும் அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில் நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில். எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு பிள்ளைகளை பிடித்து செல்வானோ என தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை. பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற வழியே இல்லையா என அன்னையர்கள் ஏங்கி தவிக்கும் அவலம். உறவுகளை பறிகொடுத்துவிட்டு உள்ளம் உடைந்து உருக்குலைந்து நடைப்பிணமாக வாழும் கொடுமை. இதுதான் எம் மண்ணில் இன்றைய மக்களின் அவல வாழ்நிலை. புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு நகரும் அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? உலகே உனக்கு கண்ணில்லையா என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது. உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள் எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை எண்ணிட ஏன் மறந்தோம் நாம்? பட்டால்தான் வலிகள் புரியும் என்பது மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை. சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும் அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து கண்ணீர் சொரிய முடிகின்ற எம்மவர்கள் பலருக்கு உண்மை மனிதர்களின் துயரம் எப்படி புரியாமல் போனது? உறவுகளின் இழப்பின் வலிகளை உணர முயல்வோம். தவித்து துடிக்கும் அவர்களுக்கு தோள்கொடுத்து துணைநின்று வலிமை அளிக்க நாம் உள்ளோம் என வாக்கு கொடுப்போம். அவர்கள் வாழ்வின் விடிவுக்காக உறுதியுடன் உழைப்போம் என உரத்து சொல்வோம்,செயற்படுவோம் மந்தாகினி
 48. 16 points
  க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் அதற்குப் பிறகு அங்கு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருக்க முடியாது எனவே நண்பன் ஒருவனுக்கு போனடித்து ஹோட்டல் அறை ஒன்று புக் பண்ணி விடுமாறு சொல்லி விட்டிருந்தேன் .நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்குவேன் என்பதால் நண்பனும் அதற்கு அருகில் வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்துவிட்டு அதன் விலாசத்தை எனக்கு எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தான் . கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவை பிடித்து அறைக்குச் சென்று பயணப் பையை வைத்து விட்டு.அன்றைய பயணத்தின்போது வீதி முழுதும் வாரி வாங்கி வந்த தூசியை உடலை விட்டு போக்க ஒரு குளியல் போட எண்ணி குளியலறையை திறந்து லைற்றை போட்டதும் சுவரின் மூலையில் கூட்டம் போட்டு தமிழ் நாட்டின் அரசியல் பற்றி தீவிரமா விவாதித்துக்கொண்டிருந்த பல கரப்பான்பூச்சிகள் விர் ..என்று சுவர் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீர் போகும் குழாயினுள்ளும் ஓடி மறைய ஒரேயொரு பூச்சி திசை தவறி என்னை நோக்கிவர. கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதன்மீது ஓங்கியடித்து தண்ணீர் குழாயுள் தள்ளிவிட்டு சுற்றி வர பார்த்தேன்.எல்லாம் ஓடி மறைத்து விட்டிருந்தது .நீண்ட காலத்துக்குப் பிறகு கரப்பான்பூச்சியை கண்டதும் எனது கலியாணமும் முதலிரவும் மீண்டும் நினைவுக்கு வரவே ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீரில் நனையத் தொடங்கினேன் ..எல்லாம் சரி என் கலியானதுக்கும் கரப்பான்பூச்சிக்கும் என்ன சம்பந்தம்? ..எல்லோருக்கும் அறிய ஆவலாயிருக்கும் எனவே இங்கே கட் பண்ணி அங்கே ஒப்பின் பண்ணுகிறேன் . 0000000000000000000000000000000000000 கல்யாணம் செய்துபார் வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழி .இப்போவெல்லாம் கலியாணம் செய்வது சுலபம் வீடு கட்டுவதுதான் சிரமம் .இன்றைய காலத்தில் வீடு கட்டுறதென்ன ஒரு வீடு வாடைக்கு எடுக்கிறதே சிரமமாகிவிட்ட காலம்.கலியாணம் என்னமோ ஒரு பிரச்னையும் இல்லாமல் காதலிச்சு சிம்பிளா பதிவுத் திருமணமா முடிச்சிட்டேன் .அதுவரைக்கும் பச்சிலரா ஒரு அறையில் ஆறு நண்பர்களோடு இருந்த எனக்கு குடும்பஸ்த்தன் என்கிற பிரமோசன் கிடைத்து விட்டிருந்தது .முதலிரவுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது கல்யாணப் பரிசாக நட்சத்திர விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டிருந்தர்கள்.திருமணம் முடிந்து ஒரு ரெஸ்ராரண்டில் அனைவருக்கும் விருந்து.அது முடிந்ததும் எல்லோரும் பரிசுப் பொருட்களை தரத் தொடங்கினார்கள்.எனக்கு இப்போதைக்கு வீடு இல்லாதாதால் அதை வைக்க இடமும் இல்லாததால் நண்பர்கள் தரவிரும்பும் பரிசை பணமாகவே தரும்படி அழைப்பிதழிலேயே அச்சடித்து விட்டிருந்தேன். அதனால் அனைவரும் கொடுத்த என்வலப்புகளை வாங்கி பாக்கெட்டில் செருகிவிட்டு கடைசியாய் மனைவியிடம் "போகலாமா" ..என்றதும் எங்கே .. ஹோட்டலுக்கு தான் . என்னது ஹோட்டலா .. ம் ...ஸ்டார் ஹோட்டேல் ..கண்ணை சிமிட்டினேன் . நானெல்லாம் அந்த மாதிரி பொம்பிளை இல்லை .. ஐயையோ ..நீ தப்பா நினைக்காதை இது பிரெண்ட்ஸ் ஏற்பாடு .. நினைச்சேன் ..உங்களை கெடுக்கிறதே அவங்கள்தான் .. சரி இப்ப என்னதான் சொல்லுறாய் .. முதல்லை ஒரு வீடு தேடிப் பிடியுங்கோ .பிறகுதான் எல்லாம் ...பாய் .சொல்லிவிட்டு அவளது நண்பிகளோடு போய் விட்டாள் . என்னை மாதிரி மத்திய தர குடும்பம் ஒன்றுக்கு கொழும்பு, சென்னை மாதிரி நகரங்களிலேயே எங்களுக்கு பிடித்தமாதிரி வீடு வாடகைக்கு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு மாதிரி என்றால் பிரான்சில் ஒரு பெரு நகரத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து அதில் குஞ்சம் கட்டி அழகு பார்த்த மாதிரி. எங்களுக்கு பிடிக்கிற பிகரை விட கிடைச்ச பிகரோடை சந்தோசமா வாழவேண்டும் என்கிற மாதிரி .. பிடிக்கிற வீட்டை விட வடைகைக்கு கிடைச்ச வீட்டிலை சந்தோசமா வாழப்பழக வேணும். நானும்அவசரமா நாலு வீட்டு ஏஜென்சில பதிவு செய்து ஏஜென்சிக்கு என்னுடையதும் மனைவியுடையதும் சம்பள விபரம் எல்லாம் குடுத்து . இருபது வீடு ஏறி இறங்கி எங்கள் இருவரது வேலையிடதுக்கும் கிட்டவாக ஒரு வாரத்திலேயே ஒரு அப்பாட்மென்டில் முதல் மாடியில் வீட்டு ஏஜென்சிக் காரனுக்கு பிடித்தமான ஒரு வீடு பார்த்து சரி சொல்லி இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் கொடுத்து கையெழுத்தும் வைத்தாச்சு . முதல் வாங்கியது கட்டில் .பால்காய்ச்சி வீடு குடி புகுந்தாச்சு.கலியாணமாகி ஒரு வாரம் கழித்து முதலிரவு. அண்ணாந்துபார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தேன். வெள்ளைச் சுவற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.."முன்னர் குடியிருந்தவன் எதாவது ஆணி யடித்திருப்பனோ".. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவியும் உள்ளே வர அந்த கறுப்புப் புள்ளி அசையத் தொடங்கியது.அதைக் கண்டதுமே ஆ ...., என்று கத்தியபடி கட்டிலில் ஓடியந்து ஏறியவள். கரப்பான்பூச்சி ....கரப்பான்பூச்சி ..என்று கண்ணை மூடிக் கத்தினாள் .. ச்சே ..எதுக்கு கரடியை கண்ட மாதிரி கத்துறாய் ..கரப்பான்பூச்சி தானே ..அதுவும் குட்டிப் பூச்சி . "முதல்லை அதை அடியுங்கோ" திரும்பவும் கத்தினாள் . பல்கனியை திறந்து தும்புத்தடியை எடுத்துவந்து பூச்சியை தட்டியதும் அது கீழே மல்லாந்து விழுந்தது கிர் ...என்று பம்பரம் போல சுத்திக் கொண்டிருக்கவே அப்படியே நசித்துவிட காலை உயர்த்தவும் .கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் உயர்த்திய காலைக் கட்டிப் பிடித்தபடி . "வேண்டாம்.. அத்தான் வேண்டாம்..அதனை காலால் நசித்து விடாதீர்கள் . "இவளுக்கு கரப்பான்பூச்சியில் பயமா ? பாசமா" ??.. எதுக்கடி நசிக்கக் கூடாது .. "கரப்பான்பூச்சியை காலால் நசிக்கும் போது அதில் இருக்கும் முட்டைகள் காலில் ஒட்டிவிடும்.பிறகு நீங்கள் நடக்குமிடமெல்லாம் அதன் முட்டைகள் பரவி அதன் இனம் பெருகி விடும்" .... இங்கை ஒருத்தன் முதலிரவே நடக்காமல் கடுப்பில இருக்கும்போது கரப்பான்பூச்சி இனப்பெருக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .."சரி இப்போ என்னதான் செய்ய" ? .. அதை அப்பிடியே பிடிச்சு வெளியாலை எறிஞ்சு விடுங்கோ .. சுற்றிக்கொண்டிருந்த பூச்சியை ஒரு கடதாசியில் போட்டு பொட்டலம் செய்து யன்னலால் வெளியே எறிந்துவிட்டு வந்து "அப்பாடா " என்றபடி லைட்டை நிப்பாட்டவும்.. "எதுக்கு லைட்டை நிப்பாட்டுரீங்கள்" ?..பதட்டத்தோடு கேட்டாள் . முதலிரவன்று இதெல்லாம் ஒரு கேள்வியா ?....அப்போ ..................... "எனக்கு சின்ன வயசிலை இருந்தே கரப்பான்பூச்சி க்கு சரியான பயம்.முதல்ல பூச்சியை இல்லாமல் பண்ணுங்கோ .இல்லாட்டி வேறை வீடுட்டுக்கு மாறுவம்.இப்ப லைட்டை போடுங்கோ.".. எனக்கு லைட்டை போட்டால் எதுவுமே வராது ..ச்சே ..நித்திரை வராது ... எனக்கு பூச்சியை பார்த்தால் நித்திரை வராது . என்றவள் போர்வையால் இழுத்து போர்த்துக்கொண்டு படுத்து விட்டாள் . லைட்டை போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து சில்லென்ற தண்ணீரை தலையில் சிதற விட்டுக் கொண்டிருக்கும்போது காலடியில் ஒரு கரப்பான்பூச்சி .அது என்னைப் பார்த்தே சிரிப்பது போல இருந்ததது.காலால் நச்சென்று நசித்து குழாயில் தள்ளி விட்டேன் . .......................................................................... அந்தவார இறுதி லீவு நாட்களான சனி,ஞாயிறு கரப்பான்பூச்சி ஒழிப்பு நாட்களாக பிரகடனம் செய்து .எப்படியும் மருந்தடித்து பூச்சியை ஒழித்து விடுவேன் என்று மனைவியின் காலைப் பிடித்து செய்த சத்தியத்தின் பின்னரே மறுநாள் அதிகாலை முதலிரவாய் விடிந்திருந்தது .அடுத்தடுத்த நாட்கள் கரப்பான்பூச்சியை கண்டு அவளின் அலறலோடும் . இரவு முழுதும் லைட்டை எரிய விட்டு அரைகுறை நித்திரையோடும் கழிந்தது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்ற மருந்துக் கடை ஒன்றில் புகுந்தேன் . "வாங்க... எலியா ,எறும்பா ,புளுவா ,பூச்சியா எதனால் பிரச்னை".. என்றபடியே வரவேற்றவளின் சிரிப்பு.. மருந்தடிக்காமலேயே என்னை கொன்றுவிடும் போல இருந்தது .என் பார்வையை மேலிருந்து கீழ் இறக்கிய படியே .. "பூச்சி ...பூச்சி ..கரப்பான் பூச்சி க்கு மருந்து "என்று தட்டித் தடுமாற .. ஓ ..கரப்பான்பூச்சியா ? ஒரே நாளில் ஒழித்துவிடும். என்றபடி ஒரு ஸ்பிரேயை எடுத்து வைத்தவள். இது அபாயமான மருந்து. எனவே கைகளுக்கு கிளவுசும் முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்து அவதானமாக பாவிக்கவும். என்றபடி நான் கேட்காமலேயே அவற்றையும் எடுத்து வைத்து பில்லை நீட்டினாள் . சனிக்கிழமை காலை கைகளுக்கு கிளவுஸ் ,மாஸ்க் எல்லாம் அணிந்து ஒப்பிரேசன் கரப்பான்பூச்சி ஆரம்பமானது. மூலை முடுக்கு எல்லாம் ஸ்பிரே அடித்து முடித்து ஒரு பூச்சி கூட வெளியே தப்பிப் போய் விடாதபடி ஜன்னல்கள் கதவு எல்லாம் சாத்தி விட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.பகல் வெளியே சாப்பிட்ட பின்னர் நகரை சுற்றி விட்டு மாலை வீடு வந்து கதவை திறந்ததும் இறந்து கிடந்த பூச்சி களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் "சக்சஸ்" என்று கத்தியபடி மனைவியை கட்டிப் பிடிக்க. "ச்சே ..கையை எடுங்கோ முதல்லை வீட்டை கிளீன் பண்ணுங்கோ" என்றாள் .வேகமாய் வீட்டை கூட்டி சுத்தம் செய்து இறந்து போன பூச்சிகளில் இருந்து ஒரு முட்டை கூட தவறி குஞ்சு பொரித்து மீண்டும் அதன் வம்சம் உருவாகி விடக்கூடாது என்கிற குரூரத்தோடு அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு கொளுத்தி சாம்பலை கொண்டுபோய் கடலில் கொட்டி திவசம் கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து முடித்து கட்டிலில் போய் விழுந்தேன். ............................................................................ எந்தப் பூச்சியும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்ததொரு நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவி நிலத்தை துடைப்பதற்காக பிரிஜ்சை கொஞ்சம் தள்ளியவள் ..ஆ ........ஐயோ .. அவசரமாய் ஓடிப்போய் .."என்னடி" ? பூச்சி .பிரிஜ்சுக்கு பின்னலை பூச்சி ..முதல்லை வீட்டை மாத்துங்கோ .. பொறடி.. எதுக்கெடுத்தாலும் உடனே வீட்டை மாத்துங்கோ எண்டு கத்தாதை..மாஸ்க் ,கிளவுசோடை சேர்த்து வாங்கின ஸ்பிரேயும் வேலை செய்யேல்லை . ஊருக்கு போனடிச்சு அம்மாவிட்டை கேட்டுப் பார்ப்பம் எதாவது ஐடியா சொல்லுவா .. "பூச்சியை கொல்ல வைரசிட்டை ஐடியா கேக்கப் போறாராம்" ...புறு புறுத்தாள் .. என்னடி நக்கலா ?.. ஒண்டும் இல்லை.. தாராளமாய் உங்கட அம்மாவிட்டை ஐடியா கேளுங்கோ .தம்பி கொஞ்சம் காசு அனுப்பு எண்டு கேட்பா ..அதையும் ரெடி பண்ணுங்கோ ..என்று விட்டு போய் விட்டாள் . அம்மா விற்கு போனடித்து பிரச்சனையை சொன்னதும் " மகனே இது சின்னப் பிரச்னை வீட்டிலை எல்லா இடமும் மஞ்சள் தண்ணியை தெளிச்சுட்டு ஒவ்வொரு மூலையிளையும் வேப்பமிலையை கட்டிவிடு " என்றார் .. மஞ்சள் இங்கை கிடைக்கும்.கருவப்பிலையையே கஞ்சா கடத்துற மாதிரி கஷ்டப்பட்டு கடத்தி தான் கொண்டு வாறாங்கள்.இதுக்கை வேப்பமிலைக்கு எங்கை போறது ?. அதுக்கான தீர்வையும் அம்மாவே சொன்னார் ." கவலைப் படாதை மகனே .வேப்பமிலை நானே பார்சல் பண்ணி விடுறேன் .ஒரு ஐம்பத்தாயிரம் ரூபா அனுப்பி விடு ".. வேப்பமிலைக்கு ஐம்பத்தாயிரமா?.. பின்னை மரத்திலை ஏற ஆள் பிடிக்க வேணும், நல்ல இலையா பார்த்து பிடுங்க வேணும் ,பார்செல் பண்ண வேணும்,போஸ்ட் ஆபிஸ் கொண்டு போக வேணும்,எல்லாம் சும்மாவா ?. சரி, சரி என்று விட்டு போனை வைத்து விட்டு மனைவியை பார்த்தேன்..நல்ல வேளையாக அவள் பால்கனியில் நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் . ..................................................................................... ஊரிலிருந்து பார்சலில் வந்த வேப்பமிலையை எல்லா மூலையிலும் கட்டித் தொங்க விட்டு உள்ளூர் ஆசியன் கடையில் வாங்கிய மஞ்சளும் தெளிச்சு களைத்துப் போயிருந்தேன்.கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை காய்ந்து சருகாகிப் போயிருந்ததே தவிர பிறிச்சுக்கு பின்னாலும்,குளியலறையும் கரப்பான்பூச்சியின் பிரதான ரியல் எஸ்டேட் குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது.மனைவியின் ஆ ....ஐயோ ..சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது . அடுப்படிக்குள் போகவே மனிசி பயந்ததாலை கரப்பான்பூச்சிகளின் அடுக்கு மாடி குடியிருப்பான பிரிஜ்சை மாற்றி விடுவதென முடிவெடுத்தேன்.அதை முதலாவது மாடி வரை தூக்கி வரவேண்டும்.உதவிக்கு கூடவே வேலை செய்யும் மமாடுவை அழைத்திருந்தேன்.மமாடு ஆபிரிக்க செனெகல் நாட்டை சேர்ந்தவன்.பிறிச்சை தனியாகவே தூக்கும் உடல்வாகும் பலமும் கொண்டவன் .அவனின் உதவியோடு புதிய பிரிஜ்சை கொண்டு வந்து வைத்தாகி விட்டது. மறுநாள் வேலைக்கு போனதும் மமாடுவை பார்த்து வணக்கம் சொன்னதும் அவனும் வணக்கம் சொன்னான்.. வாய் அசைந்ததே தவிர சத்தம் வரவில்லை. "என்னாச்சு".. நேற்று பிரிஜ்சை தூக்கியதாலை ஏதும் ஆகியிருக்குமோ ? என்று நினைத்தபடி "என்ன ஆச்சு"... என்றதும் .. கோபமாக தன் சட்டைப்பையில் கையை விட்டு காய்ந்துபோன சில இலைகளை எடுத்து மேசையில் எறிந்தவன் "இது என்ன "..என்றான் .. உற்றுப்பார்த்தேன் .."அடடே இது வீட்டிலை கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை ..இது எப்பிடி இவனிட்டை"? .. அவனே சைகையில் சொல்லத் தொடங்கினான் .."நேற்று உன் வீட்டுக்கு வந்தனா" ... ஆமா ... டாய்லேட் போனனா .... ஆமா ...... அங்கை ஒரு மூலையிலை இது தொங்கிட்டு இருந்திச்சா .... ஆமா ..... "அதை உருவிக்கொண்டு போய் கசக்கி பத்தினன் ..சவுண்டு போயிட்டுது"..என்றான் .. "ஏன்டா டேய்" ..ஒரு ஆசியா காரன் வீட்டிலை காய்ந்துபோன எந்த இலை கிடந்தாலும் உடனையே அது கஞ்சா தான் எண்டு எப்பிடிடா முடிவு பண்ணுறீங்கள் ..சரி ஒண்டும் ஆகாது உடம்புக்கு நல்லது. மிகுதியையும் கசக்கி பத்து.. என்று அவனை தேற்றினேன் .. ........................................................................................ எப்பிடியோ கரப்பான் பூச்சிகள் . புது பிறிச்சுக்கு பின்னாலும் பால் காச்சி குடி கொண்டு விட்டிருந்தன. வீட்டை மாத்துங்கோ என்கிற மனைவியின் நச்சரிப்பு.வாழ்க்கை வெறுத்துப்போய் அந்த சோகத்தில் இரண்டு பியரை வாங்கி ஒன்றை மமாடுவிடம் கொடுத்து சியர்ஸ் சொல்லி உறுஞ்சிய படியே அவனிடம் சோகத்தை பகிந்து கொண்ட போது ..கை தட்டி விழுந்து புரண்டு சிரித்தான் .. எதுக்கடா சிரிக்கிறாய் .... இதெல்லாம் ஒரு பிரச்சனையா ??... அடேய் ..இது தாண்டா பிரச்சனையே ... இதை முதல்லையே என்னிடம் கேட்டிருக்கலாமே .சூப்பர் ஐடியா சொல்லியிருப்பேன் .. சரி இப்போ சொல்லு .. கண்ணீர் புகை அடி. எல்லாம் ஒரே நாளிலை முடிஞ்சிடும் .. கலகத்தை அடக்கத் தானே கண்ணீர் புகை அடிப்பாங்கள் ..கரப்பான்பூச்சியை அடக்கவுமா ??.. அடிச்சு பார்த்திட்டு அப்புறமா சொல்லு .. சரி கண்ணீர்ப்புகை சின்ன அளவு ஸ்பிரே தானே வாங்கலாம்.ஒவ்வொரு கரப்பான்பூச்சியா பிடிச்சி கண்ணிலையா அடிக்க முடியும் . கவலையை விடு.செக்கியூரிட்டி சேர்விசிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கிறான் அவனிட்டை சொன்னால் ஆயுதம் விக்கிற கடையிலை கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுப்பான் .ஒரேயொரு குண்டு.. "புஸ்ஸ்" ...எல்லாம் குளோஸ் .. " என்னது குண்டா"... இது சட்டப்படி குற்றமில்லையா? ஏதும் பிரச்னை வராதே ??.. கரப்பான்பூச்சி போலிஸ் ஸ்டேசனிலை போய் வழக்கு போடாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்லை ..பயப்பிடாதை . மமாடு கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுத்து எப்படி இயக்குவது என்றும் சொல்லிக் கொடுத்து விட்டிருந்தான்.பயங்கர ஆயுதம் கடத்துவது போலவே.. பயந்தபடி கார் சீட்டுக்கு கீழே ஒளித்துவைத்து கொண்டு வந்து சேர்த்தாச்சு ..அடுத்த சனிக்கிழமை தாக்குதலுக்கான நாளும் குறித்து விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விபரம் மனைவிக்கும் தெரியாமல் இரகசியம் காக்கப் பட்டது .. ...................................................... சனிக்கிழமை காலை அந்த திக் ..திக் ..நிமிடங்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் மனைவியிடம் கரப்பான்பூச்சிகள் மீதான எனது தாக்குதல் திட்டத்தை விளக்கிவிட்டு கட்டிலுக்கடியில் ஒழித்து வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து டக்கென்று மேசையில் வைத்தேன் .ஆச்சரியத்தாலும் பயத்தாலும் அகல விரித்த கண்களால் என்னைப் பார்த்து .. "ஒண்டும் பிரச்சனை வராதா".. இல்லையடி மமாடு இதை அடிச்சுத்தான் பூச்சியை ஒழிச்சவன் .. ஓ எல்லாம் அந்த கறுப்பன் கொடுத்த ஐடியாவா ?.. கருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டி .. காய்ஞ்ச வேப்பமிலையை மட்டும் களவெடுப்பானாக்கும் .. சரி" கெதியா வெளிக்கிடு இண்டைக்கு இரவு ஹொட்டேல்லை தான் தங்கவேணும் அதுக்கான உடுப்பு எல்லாம் ரெடி பண்ணு ..என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து மிகுதி எல்லாவற்றையும்பிரிஜ்ச்சில் அடைந்து விட்டு சிறிய பையில் துணியோடு தயாராய் நின்றிருந்தவளை "நீ ஓடிப்போய் காரிலை இரு.. நான் குண்டை எறிஞ்சிட்டு ஓடி வாறன் "..என்றதும் "சரி கவனமா வாங்கோ" ...என்று விட்டு போய் விட்டாள் . வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் சரியாக சாதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வெளியே வந்து போத்தல் வடிவில் இருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து " அப்பனே முருகா ,பிள்ளையாரே, அல்லாவே, அந்தோனியாரே ,பெரியாரே" ..என்று எல்லா மத கடவுளையும் .மனதில் வேண்டியபடி அதன் பாதுகாப்பு கிளிப்பை இழுத்து வீட்டுக்குள் எறிந்துவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி பூட்டிவிட்டு படிகளில் வேகமா இறங்கிக்கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் தனியாக வசிக்கும் பிரெஞ்சுக் கிழவி மேலே ஏறிக்கொண்டிருந்தார் . போகிற வேகத்தில் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னேன் .பதில் வணக்கம் சொல்லாமல் என்னை முறைத்து விட்டு போய்க்கொண்டிருந்தார் ."ஆரம்பத்தில நல்லா சிரித்து கதைச்ச கிழவி இப்பவெல்லாம் முறைக்குது.என்னவாயிருக்கும்".. என்று நினைத்தபடி போய் விட்டேன் . அன்றைய பகல் பொழுதும் தெருத் தெருவாக அலைந்தே கழிந்து போய் மாலையானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலிவான ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம் .நம்ம ஹோட்டலுக்கும் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியில் எழுந்து நின்று விழுந்து விழுந்து ஒருத்தன் வரவேற்றான் . அவனிடம் .."றூம் இருக்கா" ?... இருக்கே ..லக்ஸ்சறி ? ஸ்டாண்டர்ட் ..எது வேணும் .. ஸ்டாண்டர்ட் போதும் .. எத்தினி நாளைக்கு ?.. நாங்கள் இந்த ஊர் காரங்கள் தான். ஒரே இரவுக்கு மட்டும் போதும் .. மனிசியை பார்த்து லேசாய் கொடுப்புக்குள் சிரித்தபடி "ஓ ...ஒரே ஒரு இரவுக்கு மட்டுமா"..என்றான் . "டேய் ..டேய் ..அது என்னோடை பெண்டாட்டி"" எண்டு சொல்லி அவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது . எதுக்கு வம்பு என்று உள்ளுக்குள்ளே உறுமிக்கொண்டிருந்த சிங்கத்தை சாந்தப்படுத்தி விட்டு.பெயர் விபரத்தை கொடுத்து அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதும் ."என்ஜோய்" என்று கண்ணடித்த படியே அறை சாவியை எடுத்து நீட்டினான் .சிங்கம் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துக் கொள்ள.. அடக்குவதை தவிர வேறு வழியில்லை . அவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அறையை தேடிப்பிடித்து நுழைத்ததும் கட்டிலில் விழுந்தபடி.. "அவனின்டை மூஞ்சியும், முகரகட்டையும்.பரதேசி" . யாரை திட்டுறீங்க? .. ரிசெப்சனில் நின்டவனை ...அவனின்டை பார்வை ,பேச்சு சரியில்லை .. அப்பிடி எதுவும் வித்தியாசமா எனக்கு தெரியலையே .. "இல்லடி உனக்கு புரியாது"..என்று அவளுக்கு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் "ஓ..கோ அப்பிடியான பெண்ணுகளை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறிங்களா"? ..என்று அடுத்த கேள்வி வந்து விழும் .சனியனை பிடித்து எதுக்கு பனியனுக்குள்ள விடவேணும்.என்று நினைத்தபடி பேசாமல் படுத்து விட்டேன் . மறுநாள் மதியமளவில் வீட்டுக்கு போய் பார்த்தேன் சில பூச்சிகள் மயங்கி கிடந்தன .கண் எரிச்சலாக இருக்க யன்னல் கதவு எல்லாம் திறந்து விட்ட பின்னர் வழக்கம்போல் வீட்டை கூட்டி பூச்சிகளை கொளுத்தி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்து விட்ட பொழுது சமையலறையில் இருந்து "ஆ ..ஐயோ "..ஓடிப்போய் பார்த்தேன் .கதிரைக்கு மேல் ஏறி நின்றபடி "ஓவனுக்குபின்னலை ..பின்னலை" .. கத்தினாள் . ஓவனை நகர்த்திப்பார்த்தேன் .சிறிய சந்தில் இருந்தபடி தினாவெட்டா என்னைப் பார்த்து மீசையை ஆட்டிக்கொண்டிருந்தது.கொலைவெறியோடு மீசையில் பிடித்து இழுக்க அதை அறுத்துவிட்டு ஒட்டிவிட்டது.அறுந்த பாதி மீசையோடு மனைவியை திரும்பிப்பார்த்தேன் .. "நீங்களும் உங்கடை கண்ணீர்ப்புகை ஐடியாவும் .ஊகும் .. சமைக்கிற வேலையை பாருங்கோ". சமைக்கிறதா ? பேசாமல் பீட்சா ஒடர் பண்ணவா ? என்னது பீட்சாவா ? அதோடை முதல் எழுத்தே சரியில்லை எனக்கு வேணாம்.. எழுத்தை எதுக்கடி பாக்கிறாய் பேசாமல் தின்ன வேண்டியதுதானே .. அதை நீங்களே தின்னுங்க எனக்கு சமைச்சு வையுங்க .நான் குளிச்சிட்டு வாறன்" ..என்றபடி குளியலறைக்கு போய் விட்டாள் . ச்சே ..கறுப்பன் தந்த ஐடியாவும் பெயிலியர் .என்கிற கோபத்தில் பிரீசரில் இருந்த கோழியை எடுத்து மைக்குரோனில் வைத்து சூடாக்கி இளகவைத்து கத்தியால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டிய போதே அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது . "யாராயிருக்கும்"?..என்று நினைத்தபடியே கதவின் துவாரத்தால் பார்த்தேன்.வெளியே ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள் . "ஐயை.. யோ .. கரப்பான்பூச்சிக்கு கண்ணீர்ப்புகை அடிச்சது தெரிய வந்திருக்குமோ"..என்று லேசாய் உதறல் எடுக்கவே பயத்தை காட்டாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு கதவைத் திறந்ததும்.சட்டென்று இருவரும் துப்பாக்கியை உருவியபடி "கத்தியை கீழே போடு கையை உயர்த்து ".. என்று கோரஸில் கத்தினார்கள் .. கத்தியை கீழே போட்டு விட்டு கையை உயர்த்தவும் போலீஸ்காரன் என்னை சுவரோடு தள்ளி துப்பாக்கியை தலையில் அழுத்தியபடி என் கால்களை அகல வைக்கச்சொல்லி உத்தரவிட்டவன். உடலை மேலிருந்து கீழாக ஒரு தடவை தடவி முடித்து விட்டு போலீஸ்காரியிடம் "வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை".. என்றான் .நல்ல வேளை நான் உள்ளே ஜட்டி போட்டிருந்ததால் தப்பித்தேன் . அதே நேரம் சத்தம் கேட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவி பதறிப்போய் "என்ன பிரச்னை" என்றவும் ..அவளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த போலீஸ்காரி "மேடம்.. பயப்பட வேண்டாம் உங்களை கொலை முயற்சியில் காப்பாற்றி விட்டோம் .இனி உங்கள் கணவரால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது "..என்றவளின் கையை உதறியவள் "கொலை முயற்சியா யார் சொன்னது"? .. "உங்களை கணவர் போட்டு அடிப்பதாகவும் அதனால் உங்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.இப்பொழுதும் உங்களை கொலை செய்ய முயற்சித்ததால் தானே குளியலறையில் போய் ஒழிந்துகொண்டீர்கள் .நல்ல வேளையாக நாங்கள் வந்து காப்பாற்றி விட்டோம்" .. "கடவுளே நான் அலறுவது உண்மைதான் ..கணவன் அடிப்பதால் அல்ல ..கரப்பான்பூச்சியால் .இப்பவும் அவர் என்னை கொல்ல வரவில்லை ..ஏற்கனவே கொலை செய்து ஆறு மாதமாய் பிரிஜ்ச்சில் அடக்கம் செய்யப் பட்டிருந்த கோழியைத்தான் வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரமா பார்த்து நீங்கள் வந்து பெல்லை அடிச்சிட்டீன்கள்" ..என்று சொல்லி முடித்த பின்னர்தான் என் தலையில் அழுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்தான் . ஆனாலும் போலீஸ்காரி விடுவதாய் இல்லை.. "மேடம் கணவருக்கு பயந்து பொய் சொல்ல வேண்டாம் உன்மையிலேய அவர் உங்களை அடித்தால் உடனேயே எங்களுக்கு போன் பண்ணுங்கள் .டைவோஸ் எடுக்கிறதுக்கான சட்ட ஆலோசனை,லாயர் ,எல்லாம் இலவசமாகவே கொடுப்போம்".. என்று சொல்லியவள் என்னை லேசாய் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் . "பார்ரா ..ஒரு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு என்னமா பாடு படுறாங்கள் ..போனடித்து போட்டுக் குடுத்து யாரா இருக்கும்"?.. என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தபோது ..எதிர் வீடுக் கிழவி ஆமை தலையை இழுத்தது போல கதவுக்கு உள்ளே தலையை இழுத்தாள்.என்னைப் பார்த்து முறைததுக்கான அர்த்தம் அப்போ தான் எனக்கு புரிந்தது .. .......................................................................................... இந்த சனியனை ஒழிக்க என்னதான் வழி என்று கூகிளில் "கரப்பான்பூச்சியை ஒழிப்பது எப்படி".. என்று அடித்துப் பார்த்தேன் .ஒரு கட்டுரை வந்து விழுந்தது ..கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த உயிரினம் என்று தொடங்கியது .. "அடாடா நம்மள மாதிரியே கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியிருக்கு நமக்கு நெருங்கிய உறவு.அதுதான் சுத்திச் சுத்தி வருது"..என்று நினைத்தபடி அரை மணித்தியால கட்டுரையை பொறுமையாய் படித்தேன்.. இந்த பூமிப் பந்து சுற்றிக்கொண்டிருக்கும் வரை அதனை அழிக்க முடியாது என்று முடிந்திருந்தது ..""அடங்""..... பூமி சுத்திறதை நிப்பாட்ட முடியாது.எனவே பூச்சி இல்லாத புது வீடு பார்கிறதாய் முடிவெடுத்து வீட்டு ஏஜென்சியில் போய் பதிவு செய்ததும்.. "உங்களுக்கு என்னென்ன வசதிகளோடை வேணும்" என்றான் .. "தண்ணி, கரண்டு, இல்லாவிட்டலும் பரவாயில்லை கரப்பான்பூச்சி இல்லாமல் இருக்க வேணும்". என்ற என்னை ஏற இறங்க பார்த்தவன் .. புது பில்டிங்,புது பெயிண்ட் ,நாலாவது மாடி ஒரு வீடு இருக்கு பார்க்கிறின்களா?.என்றதும் தலையாட்டி விட்டு அவன் பின்னலையே போய் பார்த்தேன் .வீடு பிடித்திருந்தது.பூச்சி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை .. "என்ன வீடு பிடிச்சிருக்கா". என்றவனிடம் .. பிடிச்சிருக்கு ஆனால் இரவிலும் ஒருக்கா பாக்க முடியுமா ? இரவிலையா எதுக்கு ?.. "ஒரு வேளை பகலிலை பூச்சி எங்கையாவது ஒழிச்சிருக்கும் .இரவிலை வெளியை வரும்.அதாலை இரவும் ஒருக்கா பார்த்திட்டேன் எண்டால் மனதுக்கு திருப்தியா இருக்கும். நாளைக்கே அட்வான்ஸ் குடுத்திடுவேன் " ....என்று இழுத்தேன். "உனக்காக நான் நைட் டியூட்டி எல்லாம் பாக்க முடியாது.இந்தா சாவி .விடிய விடிய இங்கயே இருந்து பாத்திட்டு காத்தாலை சாவியை கொண்டுவந்து கொடுத்திட்டு போ" ..என்று தந்துவிட்டு போய்விட்டான் . அன்றிரவு நீளக்கருப்பு கோட்டு,தொப்பி,கறுப்புக்கண்ணாடி,கையில் டார்ச் லைட் என்று பழைய படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் போலவே வெளிக்கிட்டு கொண்டிருக்கும்போது .."என்னங்க இது கோலம் .இரவிலை கறுப்புக் கண்ணாடி வேறை".. அப்போ தாண்டி கரப்பான்பூச்சிக்கு என்னை அடையாளம் தெரியாது .. நானும் கூடவே வரவா ?.. வேண்டாம். நீ சத்தம்போட்டு ஊரையே கூட்டிடுவாய்.பூச்சி ஓட்டிடும் ..என்று விட்டு கிளம்பி விட்டிருந்தேன் .அப்பார்ட்மெண்ட் கதவை மெதுவாக திறந்து பூனையைப்போல அடிமேல் அடிவைத்து உள்ளே போய் டார்ச் லைட்டை திடீர் திடீரென எல்லாப் பக்கமும் அடித்துப் பார்த்தேன் . ""அப்படா எந்தப் பக்கமும் பூச்சி இல்லை"" . மறு நாளே அட்வான்ஸ் கொடுத்து .வீட்டு ஏஜென்சிக் காரன் காட்டிய இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டு திறப்பும் வாங்கியாச்சு.அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக சாமான்கள் எல்லாம் பெட்டிகளில் பொதி செய்யத் தொடக்கி விட்டிருந்தோம்.புது வீட்டுக்கு லிப்ட் வசதி இருந்தது ஆனால் வீடு மாறுபவர்கள் பொருட்களை லிப்டில் ஏற்றக் கூடாது என்று எழுதி ஒட்டியிருந்தார்கள் பாவிகள் .கண்ணீர்ப்புகை புகழ் மமாடுவும் உதவிக்கு வந்திருந்தான்.வார இறுதி இரண்டு நாளும் பொருட்களை புது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.நாலாம் மாடிக்கு பொருட்களோடு ஏறி இறங்கி நாக்கு தள்ளிவிட்டது. மறுநாள் காலை அலாரம் சிணுங்கியது.வேலைக்கு கிளம்ப வேண்டும். உடம்பு அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தது. "என்னங்க நீங்கள் பாத்ரூம் போறிங்களா இல்லை நான் போகட்டா "?... "நீயே .. போ..நான் இன்னும் ஒரு பத்து நிமிசம் படுக்கிறேன்".. என்று விட்டு போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன் . இன்னமும் ஒழுங்கு படுத்தப் படாமல் வீடெங்கும் பரவிக் கிடந்த பொருட்களை தாண்டியபடி குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திய சத்தம் கேட்டது .ஒரு நிமிடம் சென்றிருக்கும் ....... என்னங்க ..ஐயோ ..ஆ ஆ ஆ....................................................... க .பூ ..க ..போ ..கரப்பான்பூச்சியும் கடந்து போகும்
 49. 15 points
  போர்ப்பரிசு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத் தமிழில் எங்க போகிறீர் எந்த ஊர் எப்படிக் கண் தெரியாமல் போனது போன்ற வினாக்களைத் தொடுக்கிறான். பேரூந்துக்கான நேரம் இருக்கிறது என்பதை அசைபோட்டுவாறு அமைதியாக இருந்த மயூரனின் மனதுள் உங்களாலதானடா இந்த நிலை என்று கத்தவேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டவனின் எண்ண அலைகள் பின்னோக்கி நகர்கிறது. மயூரன் ஓரளவு வசதியாக வறுமையற்ற நிலையில் வாழ்ந்த குடும்பம். தைப்பொங்கல் திருநாளிற்கு முந்தையநாள். அவனது கிராமமும் தைத்திருநாளை வரவேற்க ஆவலோடு காத்திருக்கப் பொழுது நள்ளிரவைக்கடந்திருந்தது. அப்பப்போ ஆமி வருவதும் கைது செய்வதும் காணாமலாக்கப்படுவதும் நடக்கும். ஆனால் நள்ளிரவைக் கடந்தபொழுதில், அன்று வழமைக்கு மாறாக அதிக வானங்களின் நடமாட்டம். தாய் தந்தை தமக்கையுடன் வாழ்ந்த மயூரன், பொங்கலிடுவது உறவுகளோடு களிப்பது முருகண்டிக் கோவிலுக்கு ஈருருளியில் போவது என்று மறுநாள் நடைபெற இருக்கும் பொங்கல் திருநாளின் குதூகலமான நினைவுகளோடு உறங்கிவிட்டான்."அடோ நக்கிண்ட என்ற குரல்கேட்டுத் திடுக்குற்றெழுந்த மயூரன் திகைத்துப்போய் நின்றான். தாயும் தந்தையும் முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.தமக்கையைக் காணவில்லை. பால்ய வயதை நெருங்கியிருந்த மயூரன் நடுங்கியவாறு அழுதவனை படையினனின் மிரட்டல் நிறுத்தியது. "அடே ஒங்கட மாமா„ எங்க! அவன்... "அவர் இஞ்சை வாறேல்லை„ என்றதை நம்பவில்லை. பொறு...கியண்டெப்பா! தமது காவலரணைக் காக்க முடியாத சிங்களப்படைகள் இதயரூபனது தமக்கையின் வீட்டைச் சல்லடை போட்டன. இதயரூபனின் அணியே தாக்குதல் நடாத்தித் தமக்கு இழப்பை ஏற்படுத்தியது என்ற வெறியில் தேடுதல். தேடுதலின் முடிவில் தறதறவென்று இழுத்துச் செல்லப்படும் ஒலி அழுகை ஒலி என அதனைத் தொடர்ந்து சில வேட்டொலிகளும் கேட்டன. தாயும் தந்தையும் பிணமாகிச் சாயத் தமக்கை என்ன ஆனாள் என்றறியாது மயூரன் அனாதையானான். மாறி மாறி உறவுகளின் பராமரிப்பில் வாழ்ந்த மயூரன் பதிட்டுவயதை எட்டிய இளைஞனான். எல்லா இளையோரும் வயதுக்கேயுரிய விளையாட்டுக்களோடு களிக்க இவன் அமைதியாகவே அந்த மைதானத்தின் ஓரத்தில் நிற்பான். அப்பப்போ அங்குவரும் சைமனின் அறிமுகத்தால் புலிகளோடு பழகி பின்னர் புலியாகவே வாழ்ந்தான். பல்வேறு சிறுசிறு தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்திய மயூரனுக்கு பெரும் சமரின் போர்களமாய் விரிந்த ஆனையிறவுச் சமரிலே அவனும் பங்கெடுக்கும் வாய்ப்பு. சுண்டிக்குளச் சதுப்பு நிலத்தைக் கடந்து நீர்பரப்பில் இருக்கு முட்கம்பிவேலித் தடைகளைக் களைந்து அணிகளுக்கான பாதையைத் திறக்கும் பணி. அவனோடு வந்த அணியில் இருவர் குறிசுடும் தாக்குதலில் வீரமரணமடைய, வித்துடல்களை நகர்தியவாறு தமது அணிக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவுசெய்த திருப்தியில் மயூரன் மகிழ எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டொன்று அவனையும் பதம்பார்க்கிறது. மருத்துவஅணி அவனுக்கு முதலுதவியளித்துவிட்டு மருத்துவ முகாமுக்கு அனுப்புகிறது. அன்றுதான் அவனுக்குப் பார்வைதெரிந்த இறுதிநாளாகவும் அமைந்தது. பார்வை இழந்தபோதும் அவனது கண்ணுக் கண்ணாகச் சகபோராளிகள் பரிவுகாட்டுவதும். நடக்கப் பழக்குவதும், எல்லாவற்றையும் விட ஆனையிறவின் மீட்பு அவனுக்குப் பார்வை இழந்த கவலையைப் போக்கியது. காலம் வெகு வேகமாக உருண்டோடியது. இறுதியுத்தம் பெரும் கோரத்தாண்டவமாடி எல்லாவற்றையும் உலுப்பிக் கொட்டிவிட்டு ஓய்ந்தபொழுதில், இவன் இடம்தெரியா முகாமொன்றில் இருந்தான். அவன் முகாமிலிருந்து வெளியேறும்போது, தனியே நின்ற மார்க்கண்டர்ளூ "தம்பி! என்னோட வாருமன் என்று கேட்க, " ஐயா! நானொரு சுமைதானே ஐயா! உங்களை யாரெண்டும் தெரியாது,, என்று இழுத்தான். மார்க்கண்டர் அருகேவந்து, ' நீங்கள் யாரென்றும் ஊரென்றும் உறவென்றும் பார்த்தே போராடினீர்கள்! தம்பி வாரும் எனக்கும் ஒருதரும் இல்லை எல்லாரையும் குடுத்துட்டன்,, என்றார் பெருமூச்சோடு. அந்தப் பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை மயூரன் உணர்ந்தான். அவரோடு நடக்கத் தொடங்கினான். இன்று மருத்துவப் பரிசோதனைக்காக வந்தவன் மருத்துவமனையைப் பூங்கா அமைத்து அழகுபடுத்த வைத்திருந்த கற்களில் தட்டுப்பட்டே விழுந்தான். அமைதியாக இருந்த சுமதிபால, மயூரனது கையை எடுத்து தனது முழங்காற் பகுதியில் வைத்தான். முழங்காலுக்கீழ் இல்லை என்பதை உணர்ந்தவாறு சுமதிபாலாவைப் பார்த்துத் தலையை அசைக்கின்றான். சுமதிபாலாளூ அவனது கனவு ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வரவேண்டும் என்று படித்தவனுக்கு குடும்பச்சூழல் இடம்கொடுக்கவில்லை. தந்தையற்ற தாயார். திருமணவயதை எட்டிவிட்ட சகோதரிகள் மூவரென்று பெரும் பொருண்மிய நெருக்கடி. தனது நண்பனான பண்டார ஆமியில் சேர்ந்தபின் அவனது குடும்பத்தில் வசதிகள் கூடியுள்ளதையும், பத்திரிகைகளில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் எனப் பார்த்தவனுக்கு ஆமியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, தனது தாயாரிடம் கேட்கின்றான். அவளும் அரைமனதோடு சம்மதிக்கிறாள். குறுகியகாலப் பயிற்சியோடு சுமதிபால வழங்கற்பிரிவிலே இணைக்கப்படுகிறான். காடுகளை அண்டிய எல்லைப்பகுதிகளிலுள்ள உருமறைப்பு முகாம்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வது இவனது பணி. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராது ஏற்பட்ட மோதலில் காயம்பட்டு மயக்கமடைய அவனைவிட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். தேடுதலில் ஈடுபட்ட புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்படுமவன், மயக்கம் தீர்ந்து கண்விழித்தவனுக்கு அங்கேதெரிந்த வரிப்புலிச் சீருடையாளர்களைக் கண்டதும் ஒருவிதபயமும் அதிர்வலைகளும் அவனை ஆக்கிரமிக்கத், தானிப்போது புலிகளிடம் பிடிபட்டுவிட்டதையும்; தனது கால்போனதையும் உணர்கின்றான். அவனுக்கு அவித்த பயறும் தேனீர் வழங்கப்படுகிறது. ஒருவித தயக்கத்தோடு உண்கின்றான். ஆனால், அவனது ஆழ்மனதில் பலவிதமான வினாக்கள் எழுகிறது. படைமுகாம்களுக்கு வரும் பிக்குகள் தமிழர்களை பேய்களெனவும் புலிகளைப் பயங்கரமானவர்கள் எனவும் மனிதாபிமானவற்றவர்கள் எனவும் போதனைசெய்வதைத் தாம் கேட்டபோது ஏற்பட்ட உணர்வும், அவர்கள் தன்னைப் பார்க்;கும் விதத்தால் நேரடி அனுபவம் வேறாகவும் அல்லவா இருக்கிறது என எண்ணிக்கொள்கின்றான். அன்றையபொழுது கழிந்து போகிறது. மறுநாள் தனக்கு ஒருவர் உதவிக்குவரத் தனது கடமைகளை முடித்தவனிடம் காலை உணவின்பின் ஒரு சீருடையணிந்த புலி வருகிறார். நலம் விசாரிப்போடு ஒரு தகவலைக் கூறுகிறார். பயங்கரவாதிகளுடனான மோதலில் சுமதிபால என்ற இராணுச் சிப்பாய் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுக்கமுடியவில்லையென்றும் உங்கள் லங்க புவத் கூறியது. முதலில் உங்களின் முழுப்பெயர் முகவரி தொலைபேசி எண் போன்ற விபரங்களைப் பெற்றவாறு படையில் சேர்ந்த நோக்கம் போன்ற விபரங்களைத் திரட்டிக் கொண்டு போக இப்போது இவரை இன்னொரு அணிபொறுப்பேற்றுக் கொள்கிறது. அங்குதான் அவனொரு புதிய உலகைக் காண்கிறான் புரியாத மொழியைப் பழகும் வாய்ப்பு. தன்னை எதிரியாகப் பார்க்காது ஒரு கைதியாக வைத்திருந்தாலும் ஒரு கைதியைப்போலன்றி சாதாரணமாக தன்னோடு நடந்துகொள்ளும் புலிகள் எனப் புலிகள்பற்றிய தவறான கற்பிதங்கள் அவன் மனதிலிருந்து சாய்ந்து விழுகிறது. அவனது காயம்மாறி ஊன்றுகோலின் உதவியோடு நடக்கத்தொடங்கியிருந்தான். அவனிடம் திரட்டிய தகவலின் உதவியோடு சுமதிபாலாவின் தாயாருக்கும் அவன் தங்களிடம் இருப்பதை அறிவித்த புலிகள், நந்தவனத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டால் சுமதிபாலவுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள். கடிதப்போக்கு வரத்தையடுத்து சுமதிபாலாவின் தாயார் பாரப்பதற்கு வரமுயற்சிக்கிறார். ஆனால் போரரக்கனின் பொல்லாத பொழுதுகள் தீவிரமாகித் தாக்குதல் அதிகரிக்க, அவனைப் பாதுகாப்பது பராமரிப்பது எனச் சிக்கல்கள் தோன்றுகிறது. தமது காவலில் உள்ள போர்கைதிகள் தொடர்பான ஆலோசனைகளின் பேரில், அவர்களைப் பாதுகாப்பாகச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு பணிக்கப்படுகிறது. செங்கதிரும் வாகையனுமாக சுமதிபாலாவை அழைத்துக்கொண்டு ஆவணங்களைப் பரிமாறி அவர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். சுமதிபாலா அந்தக்கணத்தில் அவர்களை அழைத்துக் கைகளைப் பற்றி நன்றியைக் கண்ணீரால் பரிமாறுகிறான். விடைபெறும்போது, கவனமாகப் போய்வரவும் என்று சிங்களத்தில் கூறிய வாகையனையும் செங்கதிரையும் விழிகள் விரியப்பார்க்கிறான் சுமதிபாலா. போராளிகள், „அதுதான் எங்கள் அண்ணன்' என்று கூறியவாறு, அவர்கள் சென்றுவிட இவனது பயணம் தனது ஊரைநோக்கித் தொடர்கிறது. சிலமணிநேரங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரால் எல்லைப்பகுதியிலே உள்ள இருபகுதியினரோடும் உரையாடி அனுமதியைப் பெற்று அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட அவன், வன்னிக் கட்டளைப் பணியகத்தின் படைத்துறை ஆளணிப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அங்கு பல்வேறு விசாரணைகள் புலிகளின் பலம் பலவீனம் யார்யாரைப் பார்த்தாய் போன்ற வினாக்கள். அவனுக்குள்ளே இவர்களது வினாக்கள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தச் சகித்துக்கொண்டு அனைத்தையும் முடித்தபின் மருத்துவ பரிசோதனைகள் முடிய மாற்றுவலுவுள்ளோர் முகாமுக்கு செல்லச் சொல்கிறார்கள். ஆனால் அவன் தனக்கு நிரந்தர விடுப்புக்கோரி எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அவனை வீட்டிலே இறக்கிவிடுமாறு அங்கிருந்த ஒரு அதிகாரி பணிக்கிறார். காலிழந்தவனாக வீடு வந்தவனைக் கடைசிச் சகோதரியும் தாயுமாகப் பெரும் அழுகையோடு கட்டியணைக்கின்றனர். அவனது உள்ளம் பெருமோலமிட்டு அழுகிறது. தான் எதற்காக படைக்குச் சென்றானோ அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத துயரம் சூழ்கிறது. இன்று அவன் பொய்க்கால் அணிய நோவதனால் அதனைச் சீர்செய்யவே மருத்துவமனைக்கு வந்திருந்தான். அங்கே அவனுக்குப் புதுக்கால் செய்ய அளவெடுத்துவிட்டு அனுப்பியுள்ளார்கள். இருவரது இறுக்கமும் தளர்ந்து ஒரு இயல்பான நட்புரீதியான உரையாடல் நிலைக்கு மயூரனும் சுமதிபாலாவும் வந்திருந்தனர். சுமதிபாலா சொல்கின்றான். இனவாதம் உங்களை மட்டுமல்ல எங்களையும் முடமாக்கியுள்ளது. இன்று ஒரு புதியதலைவர் ஆள்கிறார். அன்று போர் நடத்தியோர் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் நானும் நீயும் அதன் வலிகளைச் சுமந்தபடி. மயூரன், எமது அடுத்த தலைமுறையாவது அமைதியாக வாழநாங்கள் சிந்திப்போமா? மயூரன் பெரிதாகச் சிரித்தேவிட்டான். நாங்கள் இதனையேதான் எழுபது ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். என்று ஆழ்மனம் அசைபோட அவன் தொடரூந்துத் தரிப்பிடம் நோக்கி நடக்கிறான். முற்றும்.
 50. 15 points
  தோள் கொடுப்பான் தோழன் .......... ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய் காத்திருந்தாள். கணவன் அப்போது தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது முப்பதாக போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என பிரார்த்தனை செய்துவிட்டு வந்து சமையலறையில் , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர உலர வைத்தாள் . சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும் கட்டுப் பாடானவர் ,மது புகை போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் ..இடையில் வெற்றிலை போடுவார்.. ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தனது வசதிக்கு ஏற்ப வேண்டிய கல்வியை கொடுத்து ஆளாக்கி விட்டவர். மூத்தவள் பெண் அந்த ஊரின் கல்லூரியில் ஆசிரியையாக்கி பார்த்தவர். இளையவன் ராஜேந்திரனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டிட நிர்மாணத்துறை அதிகாரியாக்கினார் .சுந்தரத்தின் க டின் உழைப்பு இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதோடு ஒரு கல்வீட்டுக்கும் சொந்தக்காரர் ஆகி இருந்தார். சாப்பிட உட்கார்ந்தவர் மகன் ராசேந்திரன் பற்றிக் கேட்டார். சாப்பிட்டு முடித்தவர். உடல் அசதியால், சற்று சாய்வு நாற்காலியில்அ உட்க்கார்ந்து சென்ற வாரம் வந்த வரனைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார். என் மகளுக்கு இந்த வரனாவது கை கூட வேண்டும். வீடும் ரொக்க்முமாய் கேட்கிறார்களே ....வீட்டை சீவிய உரித்து வைத்து கொடுத்து விடலாம். நகை நட்டு கொஞ்சம் கமலா சேகரித்து வைத்திருக்கிறாள் .செலவுக்கு கடனோ உடனோ வாங்கி சமாளித்து விடலாம். ரொக்கத்து க்கு என்ன செய்வது . பொருட்கள் விற்கும் விலைவாசியில் நாளாந்த சீவியமே அப்படியும் இப்படியுமாய் போகிறது . என்று ஆழ்ந்த் சிந்தையில் அப்படியே உறங்கிவிடடார் . மதகின் மீதிருந்த இந்திரன். தேநீர் பருகியவாறே ..இருக்கையில் ..தூரத்தே மோட்டார் சைக்கிளில் .கறுப்புக் கண்ணாடியுடன் வருபவர் இவனை நோக்கி வேகத்தை மெதுவாககினார். எதோ வழி கேட்பவர் போலும் என்று எண்ணியவன்..சற்று அருகே வந்ததும் ..அட இவன் நம்ம கதிரேசன் போல் இரு க் கிறதே என் எண்ணினான். அதற்கிடையில் ..மாப்பிள ....என்னடா யோசினை ... ..........என்றான். அட டா ...நாம் கதிரேசு .....எப்படா வந்தாய் மிடில் ஈஸ்ட்இல் இ ருந்து ..சென்ற வாரம் தானடா ..என்று பலதும்பத்தும் கதைத்தவர்கள் , . இறுதியில் சகோதரியின் கலியாணபேச்சுக்கு கதையில் வந்து நின்றது . கதிரேசுவுக்கு மூன்று பெண் சகோதரிகள். மூத்த ஆண் பிள்ளையான இவனை கடன் உடன் எல்லாம் பட்டு மத்திய கிழக்குக்கு அனுப்பிய தந்தை ..இரு வருடத்தில் கடனும் முடிய , தன் கடமை முடிந்த்து என மேலுலகம் சென்று விடடார் மூத்தவனான் இவருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய கடடாயம். தங்கை மார் படித்துக் கொண்டு இருந்தார்கள் .நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை வீட்டில் இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும் கா லையில் வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் மறு நாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு புறப்ட்டுக் கொண்டு இருந்தான். மாலாவும் தந்தையும் பஸ் க்கு சென்று விட்டனர். வாயிலில் மோட்டார் சைக்கிள் ....கதிரேசு வந்திருந்தான் .... கிளம்பிடடாயா மாப்பிள்ளை ..இந்தா இதைக்கொண்டு உள்ளே வை என்று பணம் நிரம்பிய பார்சல் ஒன்றை நீட்டினான். என்னடா இது ..... . இன்று லீவு எடுக்கவா என்று கேட்டான் போக மனமின்றி .. மாலையில் பேசலாம் டா நீ புறப்படு .. சென்று வா என்று விடை கொடுத்தான் நண்பன். . ராஜேந்திரன்நே ரே சென்று சாமி அறையில் வைத்தவன். அதில் பணம் பத்து லட்சம் இருக்க கண்டு ஆச்சரியம் அடைந்தான் , அலமாரியில் வைத்து பூட்டி திறப்பை தாயிடம் கொடுத்து மாலையில் வந்து பேசுவதாக சொன்னான். கதிரேசு கமலா ம்மா வு டன் பேசிக் கொண்டு இருந்தாள் தன மக ளுக்கு இந்த இடமாவது சரி வரவேண்டும் இவர்களது வயதுடையவர்கள் கையிலே குழந்தையுடன் இருக்கிறார்கள் என் சொல்லி ஆதங்கப்பட் டாள் . நல்ல காரியம் நடை பெற வேண்டுமேன்று மிகவும் விரும்பினாள். தேநீரை பருகி முடித்தும் கவலைப் படாதீர்கள் அம்மா .எல்லாம் சுபமே நடக்கும் என் விடை பெற்றான். மறு நாள் மாப்பிள்ளை வீட்டுக்கு சேதி பறந்தது. இவர்கள் கலியாண விடயமாக கலந்தாலோசிப்பதற்கு வர இருப்பதாக . பேச்சின் முடிவில் அடுத்த மாதம் வரும் நல்ல நாளில் மண மக்கள் திருமணம் நடை பெற வேண்டிய ஆயத்தங் களை செய்ய தொடங்கினார்கள் மாலையில் நண்பர்கள் மீண்டும் சந்தித்தார்கள். கதிரேசு ...என்று கண் கலங்கினான்......... உனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் இந்த நிலையிலும் எனக்கு இவ்வளவு உதவி செய்கிறாய் .. என் அவனது நல் உள்ளத்தை பாராட்டினான் . திருமணம் இனிதே நடந்தது . தருணம் அறிந்து உதவுபவர்கள் உலகில் மிகச்சிலர் தான் . இத்தகைய சில தக்க தருணத்தில் உதவும் நட்புகளால் தான் பல பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம் . . ஒரு குட்டிக் கதை சொல்ல வந்தேன் .