Jump to content

Leaderboard

  1. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      90

    • Posts

      198


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      59

    • Posts

      43062


  3. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      56

    • Posts

      14524


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      52

    • Posts

      15423


Popular Content

Showing content with the highest reputation since 03/22/24 in Posts

  1. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
    19 points
  2. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
    15 points
  3. நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.
    10 points
  4. நானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக்கு… அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல் அடித்தவனோ..இல்லை கோல் அம்பயர் ..மறுக்க அடிதடி… கோலிக்கு நின்ற எனக்கு கோபத்தின் உச்சம்… கோதாரி விழுந்தது.. கோலிக்கு நின்ற நான் ஹோலி யாகமாறி.. ஆறடி அம்பயரின் பிடரியில் அசத்தலான அடிவிட்டேன்.. ஆட்டமே அல்லோல கல்லோலம் அம்பயர் சொன்னார் ஆரடித்தாலும் பரவாயில்லை அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர் அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை.. அந்த பொலிசு அதிகாரியும் அம்பயர்…என் மைத்துனன் அவனை என் கண்முன்னால் அடித்த அந்த பிளேயர் ஆரென்றாராம்… ஆரவாரம் இப்ப டி இருக்க.. ஆட்கள் என்னைப் பிடித்து அலிஸ்பாண்டையும் பறித்து ஆளையும் உருமாற்றி அல்வாயுக்கு அனுப்பிய கதை.. அப்புறம் ஆறடி அம்பயர் என்றால்.. அந்தப் பக்கமே அடியேன் இல்லை…
    9 points
  5. எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.
    8 points
  6. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
    8 points
  7. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
    8 points
  8. பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
    7 points
  9. காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.
    7 points
  10. கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)
    6 points
  11. யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம் ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட 36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான் நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    5 points
  12. எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.
    5 points
  13. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி". இசைத்துறையில் அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ? பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார். சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை : "(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. (2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். (3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது. (4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும். (5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும். (6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது. (7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான். (8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ? (9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை. மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்". இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் ! https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk
    5 points
  14. நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார். அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார். சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம். சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது. அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச் சொல்லும்படியாக இல்லை. ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம். அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன். கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம். எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது. இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள். தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை. வரும்
    5 points
  15. இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். எல்லாம் $$$$ ற்காக.. சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣
    5 points
  16. சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....
    5 points
  17. உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .
    5 points
  18. Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!
    5 points
  19. ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன. அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை. இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை. வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது. இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. - தொடரும்
    4 points
  20. அதிர்ஷ்ட லாபச் சீட்டு ----------------------------------- மீண்டும் ஒரு பில்லியன் டாலர்கள் இன்று இங்கு ஒரு அதிர்ஷ்ட லாபச் சீட்டிற்கு கிடைத்திருக்கின்றது. மெகா மில்லியன் மற்றும் பவர் லொட்டோ என்னும் இரண்டு பெரிய குலுக்கல்கள் வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ தடவைகள் இங்கு நடக்கும். அதை விட பல மாநிலங்களின் விதவிதமான சீட்டுகளும், குலுக்கல்களும். மொத்தத்தில் இங்கு இவை ஆயிரக் கணக்கில் வரும் என்று நினைக்கின்றேன். எல்லாம் குலுக்கல்கள் என்றில்லை, பல சுரண்டும் வகையையும் சேர்ந்தவை. மெகா மற்றும் பவர் குலுக்கல்கள் பரிசு சில மில்லியன்கள் என்று ஆரம்பித்து, எவருக்கும் பெரும் பரிசு விழாமல், ஆயிரம் மில்லியன்களையும் (ஒரு பில்லியன்) தாண்டிப் போவன. ஒரு சீட்டின் விலை ஒன்று அல்லது இரண்டு டாலர்கள் (மட்டுமே....). வேலையில், நண்பர்கள் வட்டத்தில், விளையாட்டுக் குழுமங்களில் என்று குழுக்களாக சேர்ந்து இந்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுகளை வாங்குவார்கள். முக்கியமாக பெரும் பரிசு பில்லியன் டாலர்களை அணுகும் போது, எல்லோரும் 'போனால் மயிர், வந்தால் மலை....' என்று ஓரணியில் திரள்வார்கள். அப்படியே குழுக்களாக வாங்கிக் கொண்டு, தனித்தனியாகவும் வாங்கிக் கொள்வார்கள். குழுக்களில் அதிர்ஷ்டம் கெட்டவர் யாராவது இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் முற்காப்பு யோசனை போல. நான் வாங்குவதில்லை, குழுக்களில் சேர்வதில்லை. இதுவரை வாங்கவில்லை. ஏனென்ற காரணம் கடைசியில் இருக்கின்றது. குழுக்களுடன் சேராமல், சீட்டு வாங்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். வேலையில் இருக்கும் குழு சொல்லும் பரிசு விழுந்தால் அவர்கள் எல்லோரும் இந்த வேலையை விட்டுவிட்டுப் போய் விடுவார்களாம். நான் தனியே வேலை செய்ய வேண்டி வருமாம். நண்பர்கள் குழு சொல்லும் நான் இப்படியே இருக்க அவர்கள் மட்டும் பல மில்லியன்களுக்கு அதிபதிகள் ஆவது அவர்களுக்கு சங்கடமாக இருக்கின்றது என்று. விளையாட்டுக் குழுக்கள் அவர்கள் வென்றால் நாங்கள் வழமையாக ஆடும் மைதானங்களுக்கு அதன் பிறகு வரவே மாட்டார்களாம். என் அதிர்ஷடமோ என்னவோ, இவர்களில் ஒருவருக்கு கூட இன்னமும் சொல்லும் படியாக ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பரிசு விழுவதற்கான நிகழ்தகவு நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைவு என்று கலைமாமணி, முதுமாமணி, பெருமாமணி என்று எவருக்கு நான் சொல்ல ஆரம்பித்தாலும், 'ஆனாலும் யாருக்கோ பரிசு விழுகிறது தானே....' என்ற ஒற்றையடி மட்டையடியாக என் மேல் விழுகின்றது. படிப்பும், வாழ்க்கையும் ரயில் தண்டவாளங்கள் போல, ஒன்று இன்னொன்றுடன் இணையவே மாட்டாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம் போல. இந்தப் பரிசு விழுவதை விட, மின்னல் தாக்கி இறப்பதற்கு பதினைந்து மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. இந்தப் பரிசு விழுகுதோ இல்லையோ, உலகில் மின்னல் தாக்கி தினமும் பலர் போய்க் கொண்டிருக்கின்றார்கள். மின்னல் தங்களை தாக்கவே மாட்டாது என்று நினைப்பவர்கள், பெரும் பரிசு மட்டும் தங்களுக்கு விழும் என்று நம்புவது கொஞ்சம் வேடிக்கையானதுதான். எது என்னவோ, சீட்டு எடுப்பவர்கள் எல்லோரும் தங்களுக்கு பரிசு விழும் என்று நம்பியே எடுக்கின்றனர். சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன். பிற் குறிப்பு: 1. இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகள் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும். 2. பல நிகழ்விற்கான நிகழ்தகவுகள் கீழே இருக்கின்றது. பெரும் பரிசு விழ முன், ஒரு தேனீ குத்தி போய்ச் சேருவதற்கு ஐம்பது மடங்குகள் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது: Winning Mega Millions: 302,575,350 to 1 Winning Powerball: 292,201,338 to 1 Being eaten by a shark: 264 million to 1 Being struck by lightning twice: 19 million to 1 Becoming U.S. president: 32.6 million to 1 Dying in a plane crash: 11 million to 1 Being hit by debris from a plane: 10 million to 1 Being killed by a bee sting: 6.5 million to 1 Being attacked by a shark: 5 million to 1 Being attacked by a grizzly bear: 2.7 million to 1 Becoming a movie star: 1.5 million to 1 Being struck by lightning: 960,000 to 1 Winning an Olympic medal: 662,000 to 1 Hitting a hole-in-one in golf: 12,500 to 1 Winning an Oscar: 11,500 to 1 Bowling a perfect 300 game: 11,500 to 1 Being injured by a toilet: 10,000 to 1
    4 points
  21. தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    4 points
  22. 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள். சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
    4 points
  23. நீங்கள் அங்கே பென்ஷன் எடுக்கிறீர்கள் போலுள்ளது
    4 points
  24. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் வீட்டு பூந்தொட்டிகளை ரோட்டில் போட்டுடைத்து தூக்கிவைத்து…. உள்ள கடையெல்லாம் சாப்பிட்டு ஐஸ்கிறீம் குடித்துமுடிய மணி சாமம் ஒரு மணியாச்சு… என்னதான் சுத்து சுத்தினாலும் படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்.. இல்லையோ வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்.. சரி ஒரு கரும்பு வாங்கி முழத்தில் .இரண்டாக்கியாச்சு போகும்பாதை திருடர் காடையர் உள்ள பாதையாகையால்..ஆயுதம் 154 இலக்க பஸ் எடுத்து கனத்தை சந்தியில் இறங்கி ஒரு மைல் வடக்கை நடக்கணும் கை இரண்டிலும் கரும்பு நிமிர்ந்த நடை.. கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை.. என்பது அறிந்த கதை.. இனி… நடை தொடங்க மெல்லிய சலங்கைச் சத்தம்.. நிற்க கேட்கவில்லை… நடக்க சலங்கை ஒலி நிற்க இல்லை ஏம சாமம்… பேய் என்னோடை வருகுது கரும்பும் கையும் நடுங்குது.. ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது நிற்க ..இல்லை. சலங்கைச் சத்தம் கேட்க கேட்க ஓடிவந்து ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு.. சத்தம் இல்லை… சாரம் எடுக்கப் போக மீண்டும் சத்தம்.. கத்தியை கையிலை வைத்தபடி உடுப்பை கழட்டினால்.. சிரிப்பை அடக்க முடியவில்லை உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த சத்தம் தான் கனத்தை பேய்… (மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)
    4 points
  25. தொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி. மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான். அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம். கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை. கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார். அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம். அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை. இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15 படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார். படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை. சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம். பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை. வரும்
    4 points
  26. பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?
    4 points
  27. இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.
    4 points
  28. அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள். ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும் புட்டின் பெருந்தலைவர் என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!
    4 points
  29. ஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது. செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என் கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர். ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள். போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது. அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை. வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர். அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால் கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம். எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு. அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான். ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம். இனி தாஜ்மகால் வரும்
    4 points
  30. படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை. இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.
    4 points
  31. தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
    3 points
  32. நம்மட அழகிகளையும் அவர்களுடைய அலங்காரங்களையும் பார்த்து இரசியுங்கள்.
    3 points
  33. கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    3 points
  34. சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம். உயர் கணிதம் . . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில் இதில் நிகழ்தகவு என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது மூன்று பந்துகளில். இரண்டு இரணடாக. எத்தனை முறைகள் எடுக்கலாம் ?? இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம் 1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும் லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு” முதலாவது பல இலட்சம்கள். வரும் பல தடவைகள் வெற்றி கிடையாது விடில் பில்லியன் வரும் ஆனால் நிகழ் தகவுப்படி 49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை 1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால் வகுக்க. வரும் தடவைகள் நிரல்களை லொத்தர். வெட்டினால். நிச்சயம் ஆறு இலக்கம். வரும் ஆனால் செலவு பரிசு தொகையை விட. அதிகம் 🤣🤣🤣 குறிப்பு,. முயன்று பாருங்கள் 😂
    3 points
  35. அந்தக் கஸ்ரம் எல்லாம் உங்களுக்கெதற்கு? அதற்குத்தானே பெருமாள், அல்வாயன், விசுகர் ......இருக்கிறார்கள். போற வாற வழியெல்லாம் அப்படியே,...சும்மா,.... எடுத்து விசிறிக்கொண்டே இருப்பார்கள். 🤣
    3 points
  36. ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
    3 points
  37. உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......! 😁
    3 points
  38. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
    3 points
  39. 2009 என்பது இராணுவ ரீதியிலான வெற்றி மட்டும்தான். கோட்பாடு ரீதியிலான வெற்றி இல்லை. எனவே, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமாகின் பலம் மிக்க தமிழ்த் தரப்புக்களுடன் பேசித்தான் ஆக வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். வட அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
    3 points
  40. உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼 எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்...... இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா? திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽
    3 points
  41. பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை இது தான் உண்மை . ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த மண்ணில் இடம் எது .... வாழ்கை என்பது வியாபாரம் வருவதும் போவதும் செலவாகும். .....போனால் போகட்டும் போடா........... )
    3 points
  42. சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.
    3 points
  43. நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.
    3 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.