Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   120

  • Content count

   36,646


 2. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   109

  • Content count

   46,708


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   37

  • Content count

   12,038


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   28

  • Content count

   22,469Popular Content

Showing most liked content since 05/19/2017 in all areas

 1. 14 likes
  எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
 2. 10 likes
  தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இது அல்ல தன் நாடு மீட்க தன் உயிரை தமிழன் ஈய்ந்த நாள் இது மீண்டும் நாம் நிமிர்வோம் எப்போதும் நிமிர்ந்து நிற்போம் ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை காத்திருக்கின்றோம் எம்மைக்கான காலம் வரும் வரை செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டும் கொடுமைகள் நிதம்கொண்டும் அடிமைகளாய் வாழ மாட்டோம்.... விடுதலைத் தாகம் உண்டு... அதற்கான குரலும் உண்டு... கோழைகளாய் வீழ மாட்டோம்... மீண்டும் எழுந்திடுவோம் பீனிக்ஸ் பறவைகளாய் ..... செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பெருக்கும் வீரவணக்கங்கள் மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை மரணத்தின் வாசலிலும் உங்களை மறக்க மாட்டோம் எம்மால் முடிந்தவரை உங்கள் கரம் சேர்ந்தோம் ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்பவர்கள் நாம் இல்லை எம் இதயத்தில் உம்மை இருத்தி இழப்புக்களை வலிப்புக்களை எல்லாம் ஒன்று சேர்த்து மீண்டும் வருவோம் உமக்காக உமது இரத்தத்திற்காக நாம் மீண்டும் வருவோம் ஆனால் இன்று..... காத்திருக்க மட்டுமே முடிகிறது......
 3. 9 likes
  ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது "கணிசமான" அக்கறை கொண்டிருந்த அன்னை இந்திரா காந்தியின் காலத்தின் (1984 ஒக்டோபர் இன்) பின்னர், வந்த அனைத்து இந்திய மத்திய அரசுகளும் தமிழின விரோத இந்திய கொள்கைவகுப்பாளர்களினது வழிகாட்டல்களின் படி தமிழர்களின் பலத்தை சிதைப்பதிலும் தமிழர் பிரச்சினைகளை வைத்து சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதிலும் பகீரதப்பிரயத்தனம் கொண்டுவந்துள்ளனர் என்பதை ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்! சிங்கள-பௌத்த வெறியர்களும், தமிழின விரோத ஹிந்திய வெறியர்களும், ஏனைய சந்தர்ப்பவாத சக்திகளும் இணைந்து ஈழமண்ணில் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பு / தமிழின ஒடுக்குமுறைகள் பல இலட்சம் தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொடரும் தமிழின அழிப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வரலாறு! இந்த தமிழினவழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இவற்றில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன. எனவே "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முடிந்தளவு திரட்டும் நோக்கத்தில் இந்த திரி திறக்கப்படுகிறது! இதில் யாழ்கள உறவுகள் தாங்கள் நேரடியாக அறிந்த, அனுபவித்த இன்னல்களை, கொடுமைகளை பதிவுசெய்யலாம். அறிந்த சம்பவங்களை பதியும் போது சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பெயர்களை தவிர்ப்பது அவசியம். நீங்களே நேரடியாக சம்பந்தப்படிருந்தால் உங்கள் பெயரை குறிப்பதுவும், தவிர்ப்பதுவும் உங்கள் உரிமை! மேலும் பொருத்தமான இடங்களில் திகதி, இடம், நேரம் போன்றவற்றை இணைத்தால் அந்தப் பதிவின் பெறுமதி மிகவுயர்வாக இருக்கும். ஏற்கனவே வெளிவந்த "தரமான" பத்திரிகை / இணைய செய்திகளையும் உரிய மூலங்களுடன் இணைக்கலாம்! இத்திரியில் தேவையற்ற கருத்தாடல்களை தவிர்க்கலாமே! (இருப்பினும் எந்தவொரு உறுப்பினரினதும் உரிமையை வலிந்து கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை). மீண்டும் வலியுறுத்த விரும்புவது, இந்த திரியில், "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை, கொடுமைகளை மட்டுமே பதிவுசெய்யுங்கள்! நன்றி!
 4. 9 likes
  இது கண்டிக்கப் பட வேண்டிய பதிவு பாஞ்சர். நாம் வெள்ளையர் என்றவுடன், அங்கு பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் நினைவுடன் தான் பாப்போம். ஆனால் அவர்கள் அப்படியா வாழ்கின்றனர்.? இன்றும் கூட, அறிவியல், புதிய கண்டுபிடிப்புகளில் UK தான் உலகின் முதல் தர நாடு. தண்ணி, தூள், திருமணத்துக்கு வெளியான கள்ள உறவு என்று நாசமாக்கிப் போன தாய், தந்தையரின், பிள்ளைகள், அவர்களது கவனிப்பில் இருந்து அரசால் எடுக்கப் பட்டு, அரச விடுதிகளில் வளர்க்கப் படுவார்கள். தாய், தந்தை அரவணைப்பில் வளர வேண்டிய இந்த, அன்புக்கு ஏங்கும் பிள்ளைகளை தான் இந்த நாதாரிகள் வளைத்து நாசம் பண்ணுகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. 40 வயதுக்கு மேலான பாகிஸ்தானியர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என பத்திரிகைகள் கவலை தெரிவிக்கின்றன. அப்படிபடட ஒரு கோஸ்ட்டிக்கு, மிக கடுமையான தண்டனை வழங்கப் பட்டது. நமது கலாசாரம்: பேசிக் கட்டி வைப்பவர் உடன் வாழக்கையை ஓட்டி முடித்து விடுவது. அவர்களது கலாசாரம், தனக்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்து வாழ்வினை சந்தோசமாக கொண்டு போவது. இந்த தேடல் ஒருவருடனும் முடியலாம். இல்லை ஒருவருக்கு மேலாகவும் முடியலாம். முக்கியமாக இவனை அல்லது இவளை நான் வாழ்வு முழுவது நம்பி வாழலாம் என்பதே அவர்கள் தேடுவது. கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி போன எனது உறவினர் மகன், டாக்டர், அங்கு ஒரு வெள்ளை இன டாக்டர் பெண்ணை சந்தித்து, கலியாணம் செய்து கொண்டார். தாலியும், பெண்ணுமாக பார்த்தீர்களானால் நீங்களே கண் சுத்திப் போடுவீர்கள். அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் கலாசாரமானது. தாயார் இப்போது தோசை எல்லாம் சுடுகிறார். எனக்குத் தெரிந்த மூன்று தமிழர்கள், 30 வருடங்களுக்கு மேலாக வெள்ளை இனத்தவர்களுடன் சந்தோசமாக வாழ்கின்றனர். ஒரு பெண், அது எவ்வினத்தில் இருந்தாலும், தான், வாழ்நாள் முழுவதும் பயமில்லாமல் வாழ, நம்பிக்கைக்குரிய துணை தேடுகிறார். முதலாவது, இரண்டாவது என அயோக்கியர்களிடம் சிக்கிக் கொள்வது அப்பாவித்தனம், அனுபவமின்மை. அதை காமத்துடன் இணைத்து மலினப் படுத்த வேண்டியதில்லை என்று நினைகிறேன்.
 5. 9 likes
  தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய் கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று மருத்துவிச்சி உதவியுடன் வெளி உலகம் கண்ட போது அதிர்ச்சியில் ஓலமிட்டு சிங்க குட்டியாய் வெளிவந்தேன் என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றார் அப்பா உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாட்டுப் பாடி .. அம்மாவின் அமுதம் அடிக்கடி சுவைத்து மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி ஒவ்வாத உணவுகளை ஓரமாய் வைத்தாள் பாற் பல்லு முளைத்தும் குறும்பன் நான் குறும்பு செய்ய வேப்பெண்ணையால் ...தடை யிடடாள் .பல் வேறு உணவுகளும் பழக்கிய பின் தவனம் தீரவில்லை உறங்க அணைக்கையிலே பால் குடி மறக்க வைக்க பாட்டி துணை வந்தாள் ... அன்றைய என் தாய் எங்கே . அவசர உலகில் நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் .... குறிப்பு.... .மாந்தம் ..(ஒருவகை வயிற் றோட்டம்) மருத்துவிச்சி ....மருத்துவமாது தவனம் ஒருவகை தாகம்
 6. 8 likes
  தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் எதுவும் செய்திட முடியா ஏழைகள் நாம் ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து அடுத்தநாள் எல்லாம் மறந்து மீண்டும் வரும் ஆண்டுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவேதுமற்று ..........
 7. 7 likes
  தமிழர்கள் பூமியின் மத்திய கோட்டை அண்டி வாழ்ந்து வருவதால்.. அதிகம் சூரிய வெளிச்சத்துக்கும்.. அழுத்தம் கூடிய காற்று மண்டலத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் சராசரியாக கறுப்பாகவும்.. (சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க.. கறுப்பை கொடுக்கும் தோல் நிறமணி உதவுகிறது).. காற்றழுத்தம்.. கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும். இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். இயற்கை என்பது ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப வாழ அதில் மாற்றங்களை மரபணுக்களில் ஏற்படுத்தும் விகாரங்களை.. மாறல்களை செய்து வருகிறது. இன்னும் இந்த மாற்றங்களை தூண்டும் சரியான காரணிகள் எப்படி மரபணுக்களில் செல்வாக்குச் செய்கின்றன என்பது.. சரியாக விளங்கப்படவில்லை. மாறாக டார்வின் இயற்கைத் தேர்வுக் கொள்கை மூலமும்.. டி என் ஏ மாறல்கள் கொண்டும்.. இன்னும் விளங்கம் கொடுத்து வருகினம். அந்த மாறல்கள் எப்படி அச்சொட்டாக நிகழத் தூண்டப்படுகின்றன என்பதில்.. இன்னும் விளங்க பல இருக்கிறது. (இவை ஆய்வு ரீதியான கருத்துக்கள் அல்ல. அவதானிப்பு மற்றும் அது தொடர்பான விளக்கம் சார்ந்த கருத்துக்கள்.)
 8. 7 likes
  Folsom / Sacramento // California
 9. 6 likes
  போட்டியில் வெற்றி ஈட்டிய.. Ahasthiyan, நந்தன், nesen க்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து சிறப்பித்த... நந்தன்,suvy, தமிழினி, vasanth1, nesen, ஈழப்பிரியன், Ahasthiyan, கறுப்பி ,வாத்தியார், கிருபன், nunavilan, ஜீவன் சிவா ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்தமைக்கு மீண்டும் நன்றி. இந்த போட்டி திரியில் மிகவும் கலகலப்பாக உங்கள் கருத்துகளை பதிந்து சுவாரசியமாக திரியை நகர்த்தி சென்ற நந்தன், கிருபன், ஜீவன் சிவா, எங்கு எல்லாமோ பாட்டுகளை தேடி இணையத்த suvy அண்ணா... எல்லோருக்கும் நன்றி. கிரிக்கெட் போட்டி என்று நடத்தி கொண்டு அதுக்கு எந்த தொடர்பும் இல்லாத நகைச்சுவை கருத்துகளும் பாட்டுகளும் இதை எல்லாம் வாசித்து பார்த்து ரசித்த அல்லது திட்டி கொண்டு போன வாசகர்களும் நன்றி. எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி. மீண்டும் அடுத்த சில நாட்களில் யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டியில் சந்திப்போம். அந்த போட்டியிலும் கலந்து கொள்ளுங்கள் உறவுகளே.
 10. 6 likes
  இறுதி புள்ளிகள்........ 1. Ahasthiyan 45 2. நந்தன் 40 3. nesen 36 4. வாத்தியார் 35 5. தமிழினி 34 6. கிருபன் 34 7. suvy 32 8. ஈழப்பிரியன் 31 9. nunavilan 29 10. vasanth1 27 11. ஜீவன் சிவா 27 12. கறுப்பி 22 போட்டியில் வெற்றி பெற்ற Ahasthiyan, நந்தன், nesen க்கு வாழ்த்துக்கள்
 11. 6 likes
  Pier 39 / Fisherman's wharf // San Francisco
 12. 6 likes
 13. 5 likes
  Pier 39 / Fisherman's wharf // San Francisco
 14. 5 likes
  அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.... 'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர். 'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள். 'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள். வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது. மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள். கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். ஓவ்வொரு முறையும் மாணிக்கம் மலருடன் சண்டை போட்டு பெரிய அட்டகாசப் படுத்தி விடுவான். இம்முறை எப்படியோ? வளர்ந்த மூன்று பிள்ளைகள் வீட்டிலிருக்கிறார்கள். மலருக்கு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. சங்கர் சுந்தர் இருவரும் 17 வயதைத் தாண்டியவர்கள். சாந்தி சென்ற மாதம்தான் மலர்ந்த புத்தம் புதுமலர். வீட்டிற்குள் ஓடிச் சென்ற மலர் ஒன்றிரண்டு மாற்றுடைகளைச் சேகரிக்கத் தொடங்கவும் மாணிக்கம் கோவத்துடன் கத்தவும் சரியாக இருந்தது. 'இதுகளுக்கு வேற வேலை இல்லை. அங்க ஆமியும் இறங்க இல்லை ஒண்டும் இல்லை. சும்மா சும்மா ஓடிறதும் வாறதுமே இதுகளுக்கு வேலையாப் போச்சு.' 'ஏய் மலர் நீ சும்மா வீட்டுக்குள்ள இரு பாப்பம். ஏத்தனை தடவை இப்படிப் போயிற்று வந்திருக்கிறாய்' கணவனின் பேச்சு அவளை அவளது அவசரத்தை நிறுத்தியது. ஊரோடினா ஒத்தோடு எண்டுசு;மாவா சொல்லியிருக்கினம். மனதுக்குள் மறுகியபடி இந்த மனுசனோட மல்லுக்கட்ட ஏலாது. சரி. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தபடி 'நாங்க இருப்பம் பரவாயில்லை. மூத்தவன்கள் இரண்டு பேரையும் சைக்கிள எடுத்துக்கொண்டு கோயிலடிக்கு போகச் சொல்லுவம்' என்றாள் ஆற்றாமையுடன். 'உனக்கென்ன விசரா? நாங்க பக்கத்தில இருந்தாத்தான் பிள்ளையளுக்கப் பாதுகாப்பு. அதுகள தனிய விட்டா எவனாவது பிடித்துக்கொண்டு போகவா? என்றுஉரத்துக் கத்தவும் மலர் அடங்கிப் போனாள். ஊரெல்லாம் ஓடிக்கொண்டிருக்க வானில் இரும்புப் பறவைகள் இரைதேடிப் பறக்கத் தொடங்கின. திடீரென்று குண்டுகள் கொட்டவும் வெடியோசை கேட்கவும் ஆரம்பித்தன. மலர் கணவன் பிள்ளைகளுடன் ஏற்கனவே ஆயத்தமாக இருந்த பங்கருக்குள் சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டனர். அப்பொழுது அந்த வீதியால் ஓடி வந்துகொண்டிருந்த பாக்கியம் அதற்கு மேலும் ஓடமுடியாமல் மலர் வீட்டுப் படலை திறந்திருப்பதைக் கண்டதும் அவசரமாக ஓடிவந்து அந்த பங்கருக்கள் அவர்களுடன் அடைக்கலமானாள். வெடியோசைகள் காதைப் பிளந்தன. சத்தங்கள் வரவர அண்மித்துக் கொண்டு வருவதை அவதானித்த மலர் தன் இஸ்டதெய்வங்களையெல்லாம் மானசீகமாக மனதில் நிறுத்தி கும்பிடத் தொடங்கினாள். காலடியோசைகளும் வெடியோசைகளும் அண்மித்து வருவது துல்லியமாகக் கேட்டது. புரியாத மொழியில் சத்தம்போட்டுக் கதைப்பதும் கூப்பாடு போடுவதும் கும்பல் கும்பலாக சிங்கள இராணுவம் தம் தெருவுக்குள் வருவதை உணர முடிந்தது. வேலிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தும் ஓசைகளும் கூச்சலும் அங்கே ஓரு பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர்கள் அடைக்கலமாகி இருந்த பங்கருக்கு மேல் சப்பாத்துக் கால்களின் காலடித் தடங்கள் நெருங்கி வந்திருப்பதை உணர்ந்த அனைவரும் பயத்தில் உறைந்து போய் இருந்தனர். துப்பாக்கி முனைகள் பங்கரை நோக்கி நீட்டியபடி சிங்களமொழியில் அனைவரையும் வெளியே வரும்படி கட்டளை அதிகாரமாக வெளிப்பட்டது கர்ணகடூரமாக வெளிப்பட்ட அந்த குரலைக்கேட்டதும் ஒவ்வொருவராக வெளிப்பட ஆரம்பித்தனர். அங்கு நின்ற இராணுவத்தினர் துப்பாக்கியுடன் ஆயத்த நிலையில் நிற்க அவர்களை அண்டியபடி நின்ற ஒரு பெரிய குழுவினர் பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்துடன் காட்சியளித்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் மனித மண்டையோடு வரைந்திருந்தது. தலையில் சிவப்புப் பட்டிகள் கட்டப்பட்டிருந்தது. முகத்திதல் பல வர்ணக் கோடுகள் கண்கள் மட்டும் கொள்ளிவாய்ப் பசாசுகள்போல பளபளத்துக்கொண்டிருந்தன. அந்த விழிகளில் தெரிந்த வெறியுடன் கைகளில் பெரிய கத்திகள் பொல்லுகள் இரும்புக்கம்பிகள் பேய்களைப் பற்றி கதைகளிலும் கற்பனைகளிலும்தான் இதுவரை கண்டுவந்தவர்கள் இப்பொழுது நேரிலேயே பார்த்துவிட்ட பயத்தில் வாயடைத்துப் போய் 'கடவுளே கடவுளே என்று மனதுக்குள் கடவுளை மட்டுமே அவ்வேளையில் துணைக்கழைக்க முடிந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அங்கலாய்ப்பு மட்டுமே அவர்களை நிலை குலைய வைத்தது. முதலில் வெளியே வந்த இரண்டு வாலிபர்களைக் கண்டதும் அவர்கள் விழிகளில் கொலைவெறி. ஏதேதோ தம் மொழியில் சத்தமிட்டு கொக்கரித்த வண்ணம் கூச்சலிட்டவர்கள் அடுத்து செப்புச்சிலைபோல அந்தப் புத்தம் புது மலரைக் கண்டதும் விழி விரிய விரசம் வழியும் வினோதமான பார்வையுடன் அவளது கைகளைப் பற்றி இழுத்தனர். இந்நிலையில் வாய் திறந்து கத்தக்கூட திராணியற்றவர்களாய் பெற்றவர்கள் பார்த்திருக்க அச் சிறுமியை கதறக் கதற இழுத்துச் சென்றனர். 'அம்மா அப்பா அண்ணா என்ற கதறல் அந்த இடத்தில் எதிரொலிக்க அவள் அண்ணாக்களில் ஒருவன் அவர்களின் பிடியிலிருந்து திமிறி தங்கையை நோக்கி ஓட எத்தனிக்க சடசட என்ற துப்பாக்கி ரவை அவனது மார்பைத் துளைக்க அய்யோ அம்மா என்ற கதறலும் அனைவரின் கதறல் ஒலியும் அங்கு சூழ்ந்திருந்த பேய்களின் அட்டகாசமான சிரிப்பொலியும் அந்த இடத்தின் பயங்கரத்தை அதிகமாக்கியது. அடுத்ததாக மற்றைய வாலிபனின் கதறலொலி அவனது முடிவையும் பறைசாற்றியது. கண்முன் இரு அண்ணாமாரும் சுருண்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து விக்கித்து நின்ற சாந்தியை வீட்டின் மண்டபத்திற்கு இழுத்துச் சென்ற பேய்கள் சுற்றிவர நின்று இச்சையுடன் அவளது ஆடைகளை கிழிக்கத் தொடங்கினர். அங்கு அதன்பிறகு நடந்ததை வார்த்தைகளில் எழுதமுடியாது. இங்கு ஒரு கூட்டம் இப்படியான கொடுமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க பெற்றவர்கள் பங்கரை விட்டு வெளியே வர முடியாதபடி அடைத்தபடி நின்ற இராணுவத்தினர் தாமும் அந்த மண்டபத்தில் நடக்கும் களியாட்டத்தில் பங்குபெற எண்ணி கிரைனைட் கிளிப்பைப் கழட்டி பங்கருக்குள் எறிந்தனர். பங்கருக்குள் இருந்த மூவரும் உடல் சிதறி அதற்குள்ளேயே சமாதியாகினர். அந்தச் சின்ன மலரை இதழிதழாகப் பிய்த்து உருக்குலைத்து உயிரற்ற உடலை வெற்றுடம்பாக வீசி எறிந்து விட்டு வீட்டிலும் அயலிலும் கையிலகப்பட்ட ஆடு கோழி முதலியவற்றை சமைத்து விருந்துண்டு வெற்றிக்களிப்போடு அடுத்த வேட்டைக்க வெளிக்கிட்டனர். இப்படியான பல சோகக் கதைகள் தொண்ணூறில் எம் ஊரில் நடைபெற்றாலும் சில கதைகளே வெளி உலகிற்கு தெரிந்தன. பல கதைகள் இன்றுவரை காற்றோடு கலந்து கடலலையோடு சங்கமமாகி விட்டன. -------------------------xx------------------------xx-------------------------------xx----------------------
 15. 5 likes
  கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்! அநாதரவாய்...., ஆதாரமில்லாமல் அலைந்தவர்கள், உனது பெயரைச் சொல்லி,,,,, தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டனர்! உனது பெயரால்...., சேமிக்கப் பட்ட செல்வங்களால்..., தங்களுக்கெனத் தனி விலாசங்கள், தேடிக் கொண்டார்கள்! ஏதிலிகள் என நாமம் சுமந்தவர்கள்..., ஏதிலியாக ஆக்கியவர்களுடன்...., இரு கரங்கள் கோர்த்து.., விருந்துண்டது தான் எமது சரித்திரமா? ஆகுதியானவர்கள்..., அங்கங்களை இழந்தவர்கள்...., அனாதைகள் ஆனவர்கள்..., எல்லாமே எம்மவரின்.., மூலதனங்களாக... மாறிப் போன அதிசயம் தான் ..., நாறிப் போன நமது சரித்திரமா? எனது ஈழக் கனவே..! எல்லோரும் அப்படியல்ல..! இருப்பினும் பெரும்பகுதி அவ்வாறே! கோவில் கோபுரங்களின்.. தங்கக் கலசங்களும்..., அவர்கள் கழுத்துக்களில் தொங்கும், அந்தப் புலிப்பல்லுச் சங்கிலிகளும்.., அவர்கள் வீரம் சொல்லி நிற்கட்டும்! முள்ளி வாய்க்காலின் ..., சாம்பல் மேடுகளும், வாழ்வைத் தொலைத்த இளசுகளின், வெற்றுக் கழுத்துக்களும்.., வரலாற்றின் சுவடுகளாய்...., எமக்காக இருக்கட்டும்! எனது ஈழக்கனவே...! நீ கனவாக இருக்கும் வரை.., காளான்களாய் முளைக்கின்ற விகாரைகளும்..,., செத்துப் போன புத்தனின்.., கல்லறைகளாகவே இருக்கும்! நீயும்....., உனக்காக மரணித்தவர்களின்.., ஈர நினைவுகளும்.., மரணம் கடந்த நிலையில்..., என்றும் வாழ்ந்திருக்கும்..! வீர வணக்கங்கள்! ,
 16. 5 likes
  வெள்ளைக்காரப் பெட்டைகள் என்றாலே easy meat என்று நினைக்கும் ஆசிய இனத்தினரில் தமிழரும் அடங்கித்தான் உள்ளனர். ஆனால் பராயப்படாத பிள்ளைகளை ஏமாற்றுவதும், பாலியல் உறவு வைப்பதும் பாரிய விளைவுகளைத் தரும் என்ற சட்டங்களைத் தெரியாமல் இவர்கள் இருந்திருக்கமாட்டார்கள். இனி எல்லாம் வற்றும்வரை சிறையில் இருக்கும்போது உணர்ந்துகொள்வார்கள்.
 17. 5 likes
  முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.
 18. 5 likes
 19. 4 likes
  அட.. முழுப் பிரச்சினையும் என்ன எண்டு தெரியேல்ல.. எங்கட "பழைய" சமூக கட்டமைப்பில் அம்மா அப்பாவோடு பிணக்கு என்றால் மாமா, மாமி அல்லது சித்தப்பா, பெரியப்பாமார் தலையிட்டு தீர்த்து வைப்பினம். இந்த கட்டமைப்பு முறிந்தால் சிறு பிள்ளைகளுக்குத்தான் கெடுதல். ஒன்றில் சமூகம் பாதுகாப்பு தரவேண்டும்; இல்லாவிட்டால் அரசாங்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம் ஊரில் இப்போது இரண்டும் இல்லை என்பதுதான் நிலை. அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா..
 20. 4 likes
  வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......
 21. 4 likes
 22. 4 likes
  59 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்... 1. nesen 36 2. வாத்தியார் 35 3. Ahasthiyan 34 4. கிருபன் 34 5. நந்தன் 32 6. தமிழினி 30 7. suvy 29 8. nunavilan 29 9. ஜீவன் சிவா 27 10. vasanth1 24 11. ஈழப்பிரியன் 23 12. கறுப்பி 22
 23. 4 likes
  தேசியத் தலைவரின் மூத்த புதல்வர்.... சாள்ஸ் அன்ரனி.
 24. 4 likes
 25. 4 likes
 26. 4 likes
  இவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.
 27. 3 likes
  இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில் இவ் நிலையற்ற பூவுலகில் (மாய உலகில்) பிறக்கும் ஒவ்வொருவரும் "இறப்பது நிச்சயம்" என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் (சிவமாக்குவதகாகவும்) கிரியைகள் நடாத்தப்பெற்று;தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன. மேலும் விளக்கமாக கூறூவதாயின்; மானிட பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தாம் செய்யும் செயல் பாவம் என அறிந்திருந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது அல்லது எதுவுமே அறியாமலேயே நிகழ்ந்து விடுவது போன்ற சந்தற்பங்களில் உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் மூன்று விதமாக பாவ வினைகளைச் செய்கின்றது. இவற்றுள் பாவம் என அறிந்து செய்யும் செயலால் ஏற்படும் பாவ வினையை அந்த ஆன்மா அனுபவித்தே ஆக வேண்டும். அறியாது செய்த பாவ வினைகள் அவரின் வழிவந்த வாரிசுகள் அவருக்காக செய்யும் மரணச் சடங்கு, அந்தியேட்டி கிரியைகள், தான தர்மங்களினால் நிவர்த்தியாகின்றன அல்லது குறைந்துபோகின்றன என ஆகம நூல்கள் கூறுகின்றன. கன்ம வினைகளால் பீடிக்கப்பெற்ற ஆன்மாவை ஜீவாத்மா அல்லது சூட்சும சரீரம் என்றும் அது இப்பூவுலகில் பெற்றிருக்கும் உடலை தூலசரீரம் என்றும் அழைப்பர். சூட்சும சரீரம் தூலசரீரத்தை விட்டுப் பிரிதலையே நாம் இறப்பு என கூறுகின்றோம். இந்த இறப்பின்போது ஜீவாத்மாவானது (சூட்சும சரீரம்) யமதூதர்களினால் கவர்ந்து யமலோகத்தில் இருக்கும் யமதர்மாராஜனிடம் அழைத்துச் செல்கின்றனர். பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார்எண்பத்தியாறாயிரம் காதவழி தூரம் இருப்பதாகவும்; பாவம் செய்த ஆன்மாக்களுக்கு உரிய தண்டனை அவர்கள் செல்லும் பாதையிலும், எமலோகத்திலும் வழங்கப் பெறுவதாகவும்; அப் பாதையை கடந்து செல்வதற்கு பாவம் செய்த சில ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும், கருடபுராாணம் கூறுவதாக சொல்லப்பெறுகின்றது. இறந்த ஜீவாத்மாவின் கன்ம வினைகளுக்கு ஏற்ப பாதையின் உக்கிரம் தன்னிச்சையாகவே மாற்றமடைவதால்; உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா பாவம் என அறியாது செய்த பாவங்களை நிவர்த்தி செய்து அல்லது குறைத்து யமலோகம் செல்லும்வரை உள்ள பாதையையின் உக்கிரத்தை குறைத்து சுகமாக கடந்து செல்வதற்காகவும், அந்த ஜீவாமாவை சாந்திபெறச் செய்வதற்காகவும்அவர்களின் வாரிசுகளினால்; இறுதிக் கிரியை, (எட்டுவீடு, 15ம் நாள் படையல்) அந்தியேட்டி கிரியை, மாதமாசியம், திவசம் போன்ற சிரார்த்த கிரியைகளையும், தானங்களையும் சிரத்தையோடு செய்கின்றார்கள். இதனால் அந்த ஜீவாத்மாவிற்கு புண்ணியப் பேறினால் நற்பிறப்பு கிடைக்கும் என்பதும் ஐதீகம். ஒருவர் இறந்த காலத்தை வைத்தும் அந்த ஜீவாத்மா பாவம் அதிகம் செய்த ஆத்மாவா அல்லது புண்ணியம்அதிகம் செய்த ஆத்மாவா என்று கணித்துக் கொள்கின்றார்கள். உத்தராயண காலத்தில் (தைமாதம் முதல் ஆனிமாதம் வரை உள்ள காலம்), சுக்கிலபக்‌ஷத்தில் (வளர்பிறைக் காலம்), உடலின் தொப்பூழுக்கு மேல் (கண்கள், காதுகள், நாசிகள், வாய்) அமைந்துள்ள ஏதாவது ஒரு வாசலினால் உயிர் பிரிந்திருந்தால் புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவாகவும்; தட்சணாயன காலத்தில் கிருஷ்ணபக்‌ஷத்தில் உடலின் தொப்பூழுக்கு கீழ் உள்ள வாயில்களில் ஒன்றினால் உயிர் பிரிந்திருந்தால் பாவவிணை அதிகம் செய்த ஆன்மாவாக கணிக்கப்பெறுகின்றது. ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசலினால் பிரிவதாக ஐதீகம். இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாவம் செய்யாத பரிசுத்த ஆன்மாக்களை காண்பது அரிதினும் அரிது. எந்த ஒரு ஆன்மாவும் தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தே இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பரிசுத்தமான ஆன்மாவானது நேரடியாக பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தவிடுகின்றது என்பது ஐதீகம். புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்தபின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் மிகவும் முக்கியமாகின்றது. முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக இது பற்றிய விபரங்களை (நாம் அறிந்தவற்றை) இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். ஒருவர் நோய்வாய்ப் பட்டு, அல்லது (முதிர்ச்சி) வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலையில்); அந்த ஆன்மா இறைவனையே எண்ணும் படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்து நின்று பஐனைகள் (தோத்திரங்கள்) பாடுவார்கள். அனுபவம் மிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் "ஜீவன் போகப் போகுது" உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்று கூறுவர். அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால் பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் "பஞ்சாட்சர மந்திரம் -சிவாயநம" சொல்லி தோத்திரம் பஜனையாக பாடுவார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் ஜீவன் (ஆன்மா) பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் எனபது ஐதீகம். ஆனால் நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால் ஆன்மா பிரியும் தறுவாயிலும்கூட அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து; அந்த ஆன்மாவை நின்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் பெரும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது எம் குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும். சைவ மதத்தைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக செய்யப் பெறும் கிரியைகள் பற்றி அறிந்து கொள்வோம். இவற்றுள் சில கிரியைகள் இடத்திற்கு இடம் வேறுபடலாம். ஆனால் நோக்கம் ஒன்றே. இறுதிக் கிரியைகள்: இந்து மகன் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தணம்,குங்கும பொட்டும் வைத்து தெற்குத் திசை நோக்கி தலைப் பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்து விளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல் வைக்கப்பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்கு மேலே வெள்ளை கட்டுவார்கள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப் பெறுகின்றது. அதாவது இறந்தவரின் உடல் வைக்கப் பெற்றிருக்கும் கட்டிலுக்கு (இடத்திற்கு) மேலே கட்டப்பெற்ற வெள்ளைத் துணியில் அந்த உடலை விட்டுப் பிரிந்த சூட்சும சரீரம் கொண்ட (ஆன்மா) ஆவியானது தொங்கிக் கொண்டு நிற்குமாம். அதனாலேயே இறந்தவரின் உடலை தோயவாக்கும் போதும் வெள்ளைத் துணி கட்டிய இடத்திற்கு கீழே வைத்து தோய வார்க்கிறார்கள். அதன் பின்பும் இறுதிக் கிரியைகள் நடக்கும் போதும் வெள்ளை கட்டிய இடத்திலேயே தலைப் பக்கம் தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்கிறார்கள். குளிப்பாட்டும் போதும், கிரியைகள் நிகழும் போதும் இறந்தவரின் ஆத்மா அந்த வெள்ளை துணிகளில் தொங்கியவாறு இருக்கும் என்பது நமது மூதாதையினர் கூறிய விளக்கமாகும். இறந்தவரின் ஆவி இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரை அவ்வீட்டை சுற்றிக் கொண்டு நிற்கும் என்பதும் ஆன்றோர் கூற்று. அதனாலேயே 3ம் நாள், 8ம் நாள், 15ம் நாள் படையல் என இறந்தவர் விரும்பி உண்ணும் உணவும், உணவுப் பண்டங்களும் படைத்து இறந்தரின் ஆவியை மகிழ்விக்கின்றார்கள். இக் கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை)தூல சரீரத்தை தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் "சமாதியும்"இருத்துவார்கள். அனேகமாக வெளிநாடுகளில் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக் கிரியைகள் செய்து; மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகம விதிகளுக்கு அமைய இடம் பெறுகின்றன. இறந்தவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாகஇருந்தாலும் சரி (பள்ளிவாசலில் வைக்கப் பெற்றிருக்கும்) பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மையவாடிக்கு (இஸ்லாமியர்-இடுகாடு) எடுத்துச் செல்வார்கள் அத்துடன் பூதவுடல் உயிர் பிரிந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்று விடும். அது அவர்களின் சமய கலாச்சாரமாகும். சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமய கிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம்தீபம் ஏற்றிய பின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறி எல்லாச் சந்தற்பங்களிலும் சமய கிரியைகள் செய்கின்றனர். வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால்; இறந்த உடன் பூதவுடலைச் சுத்தம் செய்து (குளிப்பாட்டி), விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒரு பகுதியில் தெற்குப் பக்கம் தலை இருக்கும்படியாக கட்டிலில் படுக்க வைத்து தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூர தேசத்தில் இருந்து வரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரிய மருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள். சில சந்தற்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிற்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது அல்லது உப்பை சீலைத்துணியில் கட்டி நெஞ்சில் வைத்தும், ஒரு சாக்கில் நெல்லை கட்டி கட்டிலுக்கு கீழே வைப்பார்கள். வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரேசெய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தற்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் தெரியாமல் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம்.அத்துடன், தன்னை இயங்க வைத்த ஆன்மாவைபிரிந்தனால் சவமாக இருக்கும் உடலை சிவமாக்கி அதனை அக்கினியில் சங்கமக்க செய்யும் புனித கிரிகையாகவும் நிகழ்த்தப் பெறுகின்றது. அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்தனை செய்யக் கூடியவர்களாக ஆண் பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினாலும்; அவர்கள் விவாகம் செய்து கணவனுடன் இருப்பதாலும் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர். கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றையது அபரக்கிரியை. இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது. சுபகிரியைகள் செய்யப் பெறும் போது ஆராத்தி, தீபங்கள் வலதுபக்கமாக உயர்த்தி செய்யப் பெறுகின்றன. ஆனால் அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப் பெறுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது (குருமார் இடதுபக்கத் தோழில் அணிவர்). ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அனேகமாக சுபகிரியையின் போது கும்பத்திற்கு வைக்கப் பெறும் மாவிலைகள் 5-7-9 ஆகவும் அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும். ஆன்ம ஈடேற்றத்திற்காக; சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்;சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள். விளக்கமாக கூறுவதாயின் மரணச்சடங்கு முதல் பாஷாணபூசை வரையுள்ள பூசைகளைஅபரக்கிரியைகள் என்றும், சபிண்டீகரணம, சிரார்த்தம் முதலியன சுபகிரியைகள் என்றும் அழைக்கப் பெறும். ஆனால் சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்ற வீட்டுக் கிரியைகளை சிலர் சைவக் குருமார் மூலம் செய்விக்கின்றனர். சைவக் குருமார் “சூத்திரராக” இருப்பதனால் சூத்திரர் ஒருவரின் இறப்பினால் அல்லது பிறப்பினால் உண்டான ”ஆசூசம்” என்னும் துடக்கு நீங்காது என பல சமூகங்களில் கருத்து நிலவுகின்றது. அதனால் அவர்கள் வீட்டுத் கிருத்தியங்களை (அந்தியேட்டி, துடக்குக் கழிவு போன்றவற்றை) பிராமண குருமார் மூலம் செய்விக்கின்றனர். இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும். மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை "ஆசூசம்" எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள். மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) பந்தல் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அமைக்கப் பெறும் பந்தலை “சொக்கட்டான் பந்தலும்” (முகடு உள்ள தாகவும்), அபரகிரியைகளுக்கு “தட்டைப் பந்தல்” முகடுஅற்ற பந்தலும் அமைப்பார்கள். வெளிநாடுகளில் அதற்கென அமைக்கப் பெற்ற மண்டபங்களில் நடைபெறுவதால், அவ்விடத்தை மஞ்சள் தண்ணீர் தெளித்து புனிதமாக்கிய பின் கிரியைகள் செய்யத் தொடங்குவார்கள், பூதவுடல் மலர்சாலையைச் சேர்ந்தவர்களால் சுத்தன் செய்யப்பெற்று, அலங்கரிக்கப் பெற்றிருக்கும் அதனால், இங்கு குளிப்பாட்டுதல், அபிழ்ஷேகம் செய்தல் போன்றன செய்யப் பெறுவதில்லை, பதிலாக பஞ்சகவ்விய நீரினைச் தெளித்து பூதவுடலை புனிதப் படுத்துவார்கள். சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கடமை செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம்நோன்பு இருத்தல் அவசியம். கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப் பெறும். வீட்டின் தென் புறத்தில் தெற்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள். அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். சில ஊர்களில் கிரியை செய்யும் சைவக் குருவே அபிஷேகத்தை நடாத்துவார். அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு அணியப் பெற்று பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் பொடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுத்முறை இடித்த பின்பு,திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்குன் ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம். பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பேறாக கருதுகின்றனர். சுமங்கலியாக இறப்பது என்பது வயோதிபமடைந்து, கணவருக்கு முதல் இயற்கை மரணம் எய்துதலைக் குறிக்கும்.சுமங்கலியாகவே பூவோடும், பொட்டோடும் இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் இறைவன் கொடுத்த வரம் எனக் கூறுகின்றனர். கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து நடப்பவர்களுக்கு இப் பேறு சுலபமாக கிடைத்து விடுகின்றது என நம்புகின்றனர். கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டமாக தானம் வழங்கள் நடைபெறு, அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமானதாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார். அன்று முதல் அந்தப் பெண் நல்ல காரியங்களை முன்நின்று செய்வதற்கு அருகதை அற்றவள் என ஒதுக்கப் பெற்று விடுவாள். ஆதி காலத்தில் கணவனை இழந்த மனைவியை கணவரின் சிதையில் வைத்து உயிரோடு எரித்து விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சில பெண்கள் தானாகவே முன் வந்து உடன்கட்டைஏறுவார்கள் பலர் ஊர்மக்களின் வற்புறுத்தலில் அதனைச் செய்துள்ளனர். இந்நிலை தற்போது மாற்றம் அடைந்து அப்பெண் இளமையானவளாயின் மறுமணம் செய்தும் வைக்கின்றனர். சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள். வெளி நாடுகளில் அதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் பந்தத்திற்குப் பதிலாக ஊதுபத்தியைப் பிடித்து இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திப்பார்கள். அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வைப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மரடித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகிதர் (பாபர்) கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள். மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் முக்கியமாக கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம். சிதையின்மேல் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறும், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரமாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசிஇடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார். அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடலானது நெருப்பில் எரியும்போது (புளுப்போல) முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள். அதன் பின்; முன்போல மண்பாலைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு; கும்ப நீரினை சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் சுடலை மடத்திற்கு செல்வது வழக்கம். அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு, கெட்ட ஆவிகள் அவரைத் தொடராது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அங்கு ஊர்ப்பெரியவரின் தலைமையில் இக் கிரியையில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் படலையடியில் கையில் இருக்கும் கத்தியினால் சூல கீறி காவல் செய்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல் தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயலார், உறவீனர்கள் பட்டினிச்சாப்பாடு கொடுப்பது வழக்கம். வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவையும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி, போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை செய்கின்றனர். மாமிச உணவு படைக்கும் முதலாம் எட்டு (மூன்றாம் நாள்) தோத்திரம் பாடுதல், கற்பூரம் கொழுத்துதல் என்பன செய்வதில்லை. காடாற்றுதல் (காடாத்து): ஊரில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப் பெறுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார். காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக இருக்கும் ”சுடுகாட்டை” ஆறச்செய்தல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் நீர் உற்றி ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்,) காடு ஆற்றச் செல்வதற்கு நவதானியம், கடகம், குடம், அரப்பு, எண்ணை, பழங்கள், தீன்பண்டம்முதலியவற்றை முற்றத்தில் வைப்பார்கள், பெண்கள் அதனை மூன்றுமுறை சுற்றி மாரடித்து அழுவார்கள். அதன் பின் கடமை செய்தவர், பெரியவர், இன்னும் உதவி செய்ய மூன்றுபேர் எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கே நெருப்புடன் இருக்கும் விறகுக் கொள்ளிகளை அகற்றிய பின் குடத்தில் நீர் கொண்டுவந்து சிதை இருந்த இடத்தின் கால்மாட்டில் ஆரம்பித்து தலைமாடு வரை ஊற்றி பூர்த்து தணலாக இருக்கும் நெருப்பை அணைப்பார்கள். அப்போது பார்த்தால் பூதவுடல் படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும். பின் சிதை இருந்த தலைப்பகுதில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களையும் வைப்பார்கள். மண்கலசம் ஒன்றில் பால் ஊற்றி அதை தலைப்பகுதியிலும் வைப்பார்கள். கடமைகள் செய்தவர்; பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து (பூதவுடல் தகனம் செய்த இடத்தில் உடலின் எலும்புகள் எரிந்த இடம் பால் போல் வெள்ளைச் சாம்பராக தெரியும்) மேற்கே பார்த்து நிற்றுகொண்டு; கால் பகுதியில் இருந்து தலை நோக்கி புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தனம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறுப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைக்கவும். பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் (தவற விடாது) எல்லாவற்றையும் எடுத்து (முடியுமானவரை கடமை செய்தவரே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து; நெற்பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி படைப்பார்கள். அதன் பின்னர்; அரளி பூ மரத்தண்டை வெட்டி அந்த இடத்தில் அளைத்து நட்டுவிடுவர்கள். முன்னர் கலசத்தில் எடுத்த (முக்கிய எலும்புப் பகுதி (அசதியையும்), ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றை கடமை செய்தவர் கடலுக்கு எடுத்து சென்று வடக்கு முகமாக பார்த்து நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக கடலில் (அல்லது நீர் நிலையில்) போட்டுக் கரைத்து விடுவார்கள். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். இதற்கென குறிக்கப் பெற்ற விதிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லோரும் செய்வதையே பின்பற்றிச் செய்கிறார்கள். எட்டுக்கிரியை. இக் கிரியை காலகாலமாக நம் முன்னோர்கள் செய்து வந்ததையே நாமும் பின்பற்றை செய்து வருகின்றோம். தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் உணவினை படைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் வகைகளை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும். பூதவுடல் தகனம் செய்யப் பெற்ற மூன்றாம் நாள் அல்லது உயிர் பிரிந்த எட்டாம்நாள் அல்லது இரண்டு தினங்களும் எல்லா வகை உணவுகளையும் அவியலாகவும், சிலவற்றை சுட்டும் சமைத்தும், அத்துடன் வெற்றிலைபாக்கு, சுறுட்டு, சாராயம் என்பனவற்றையும் மாலைநேரம் (மங்கல் பொழுதில்) படைத்து அதன்பின் படைக்கப் பெற்ற எல்லா உணவுகளிலும் சிறிது எடுத்து அவற்றை நீர்நிலைகளில் போடுவார்கள்ம் அல்லது சந்தியில் வைத்து காகத்திற்கு வைத்தபின் உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். ஆண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பேய் என்றும், பெண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பிசாசு என்றும் சொல்வதுண்டு. அந்தியேட்டி. இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். இந்தக் கிரியை இரண்டு விதமாகச் செய்யப் பெறுகின்றது. அந்தியேட்டி கிரியை, வீட்டுக் கிரியை என்பன. அந்தியேட்டி (இது சாதாரண சைவர்கள்) பூதவுடலுக்கு பதிலாக தர்ப்பையினால் (புத்தணி) சரீரம் போல செய்து அதற்கு இறுதிக் கிரியையின் போது பூதவுடலுக்கு செய்யப் பெற்ற எல்லாப் கிரியைகளும் செய்யப் பெற்று தகனம் செய்து அதன் அஸ்தி (தற்பையின் அஸ்தி) பெறப்படுகின்றது. இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பத்தியொரு பிண்டங்கள் இடப்படும். இவற்றுள் தலைப் பகுதியில் வைக்கும் பிண்டம் பெரிதாக இருக்கும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச் சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும். நம் முன்னோர்கள் இப்பூசையை வசதி கருதியும், புனித ஸ்தலம் எனக் கருதியும் அனேகமாக எல்லோருமே கீரிமலையில் செய்வது வழக்கம். கீரிமலையில் இதற்கென பிரத்தியேக இடவசதியும், குருமாரும், புனிதமான சமுத்திரமும் இருப்பதனால் அங்கு சென்று செய்தனர். தற்பை சுட்ட அஸ்தியையும் (பாசாணத்தையும்), பிதுருகளுக்கு சமர்ப்பித்த பிண்டத்தையும், கும்பத்தையும் புனிதமான சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தல் புனிதம் நிறைந்ததென என கருதுகின்றனர். இக்கிரியைகளை சைவக்குருமாரே செய்வது வழக்கம். வசதி படைத்தோர்; தங்கள் வீடுகளிலோ, அல்லது ஊர் ஆலய வளாகத்திலோ மண்டபம் அமைத்து கிரியைகள் செய்தபின்; பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அல்லது தேர் போன்று ஒரு வாகனம் அமைத்து அதில் வைத்து மேளம் தாளம் முழங்க எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் கடற்கரைக்கு எடுத்துச் சென்று கடமை செய்தவர் இடையளவு தண்ணீரில் நின்ற வண்ணம் வடக்குப் பக்கம் பார்த்து நின்று முதலில் பிண்டத்தை தெற்கு பக்கமாகவும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்வார்கள். அந்தியேட்டி கிரியைக்கு கடற்கரையே உகந்த இடமாகக் கருதப் பெறுகின்றது. பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை சப்பி, நெருப்பு, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கடமை செய்தவர் வீட்டினுள் நுளையும் போது ஆராத்தியும் எடுப்பார்கள். வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம். வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் செய்வதே ஒழுங்குமுறை. இக்கிரியை பொதுவாக பிராமணக் குருமார் மூலம் செய்யப் பெறுகின்றது. சில இடங்களில் சைவக்குருமாரே இதனையும் செய்கின்றனர், காரணம் பிதிர்த்தற்பணம்; இறுதிக்கிரியைகள் செய்தவருக்கே உரியன எனக் காரணம் கூறப்படுகின்றது. இறந்தவருக்காக வழங்கப் பெறும் தர்ப்பணம் (உடை, குடை, செருப்பு, தானம் முதலியன) இறந்தவருக்காக கிரியைகள் செய்த தமக்கே வழங்கப் பெறவேண்டும் என்பது சைவக் குருமாரின் வாதமாகும். வீட்டுக்கிரியையின் போது இரண்டு பிராமணக்குருமார்கள் வருவார்கள். அதில் சிரேஷ்ட குரு கிரியைகளைச் செய்வார், மற்றயகுரு பிதிர்காரகனாக வீற்றிருந்த்து ”ஏகதிட்டம்” என்றழைக்கப்பெறும் கிரியைகளைச் செய்து தானங்களைப் பெற்று முதலிலேயே சென்றுவிடுவார். அவர்செல்லும் போது வீட்டைத் திரும்பிப் பார்க்ககூடாது. அத்துடன் அவர் வெளியே செல்லும் போது அவரின் பின்னால் சாணம் கரைத்த தண்ணீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குவார்கள். காரணம் அவர் அங்கே பிதிராக தோற்றமளிக்கின்றார்.திரும்பவும் அங்கு வரக்கூடாது என்பது நியதி. அதன் பின்னர் சிரேஷ்ட குரு பூசைகளை நிறைவு செய்து, அங்கு இருப்போரை ஆசீர்வதித்து விடைபெற்றுச் செல்வார். அவர் முற்றத்தில் நிற்க அவரைச் சுற்றி வந்து வீழ்ந்து வணங்குவார்கள். அவர் வீட்டில் உள்ளவர்களை ஆசீர்வதித்த பின் விடை பெற்றுச் செல்வார். அவர் இங்கே இறைவனாக மதிக்கப் பெறுகின்றார். ஆனால் தற்போது எமது ஊரில் வதியும் சைவக் குரு ஒருவரே இரண்டு கிரியைகளையும் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்துள்ளார். இங்கு அவர் பிதிர்தேவதையாக இருந்து ஏகதிட்டத்தினையும், தெட்சனையையும் பெற்று, அதனைை ஒருவர் மூலம் தமது வீட்டிற்கு அனுப்பியபின்னர்; குருவாக அமர்ந்து கிரியைகள் செய்வதை எமது ஊர் சைவக் குருமார் தற்போது புதிதாக புகுத்தியுள்ளனர். அவர்கள் இரண்டு வருமானங்களும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில்அப்படிச் செய்வதனால் புனிதமான கிரியைகள் அர்த்தமற்றதாக்கி மாசுபடுத்துவது வேதனைக்குரியதே. எம்மைவிட்டுப் பிரிந்த ஆன்மாவிடம் சேர்ப்பதற்காக நாம் வழங்கும் தானஞ்களை பெற்றுச் செல்லும் “பிதிர் தேவதைக்கும்”, இறைவனாக வீற்றிருந்த்து கிரியைகளை நடாத்தி ஆசிகள் வழங்கும் குருவுக்கும் இடையே உள்ள பேதம் புரிந்து கொள்ளாத சைவைக் குருருவாகவும் இருக்கலாம். பொதுவாக வீட்டுக் கிரியைகளை எம் முன்னோர்கள் பிராமணக் குருமர் மூலமே செய்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சுபம் நன்றி: http://www.panippulam.com/index.php?option=com_content&view=articl குறிப்பு: இதனை இணைத்ததன் நோக்கம், இங்கே புலத்திலே தமிழரது இறுதிக்கிரியைகள் யாரந்த இடத்திலே குரலை உயர்த்திக் கதைப்பவராகவும் இரண்டு தேவாரம் தெரிந்தவராகவும் இருக்கிறாரோ அவருக்குத் தெரிந்த முறையிலே அல்லது வகையிலே நடாத்திமுடிக்கப்படுகிறது. உறவை இழந்த துயரில் உறவுகளும் அதனை நெறிப்படுத்த முடியாது நிற்பதாலும் துயர்பகிர வருகின்றவர்களும் தமக்கென்ன என்று போவதாலும் அதனது சீரமைவுகள் சரியாக அமைவதாகத் தெரியவில்லை. மேலேயுள்ளதிலும் சரிபிழைகள் இருக்கலாம். களஉறவுகள் பட்டறிவின்பாற்பட்டு சரியானவற்றையும் அறித்தவற்றையும் பகிர்வது பொருத்தமாகும். சிலநேரங்களில் மிகுந்த மனவேதனையளிப்பதாகச் சில நடைமுறைகள் உள்ளன. தாயைப்பிரிந்து துடிக்கும் ஒருபிள்ளை கொள்ளிக்குடத்தைத் தோளிலே ஏந்தியவாறு சுற்றிவந்து கால்மாட்டிலே உடைக்க முயல ஒருவர் வந்து பிழை தலைமாட்டில் உடைத்துவிட்டு திரும்பிப் பார்காது போக்ச் சொல்ல பிள்ளை போக வெளிக்கிட, இல்லை பூனூலைக்களற்றிக் கால்மாட்டிற் போட்டுக் கும்பிட்டுவிட்டுப் போகச்சொல்ல அந்த இளைஞன் தடுமாற ஏனிந்தநிலை. இறுதிக்கிரியைகளை கூடியவரை ஒரேவிதமாகச் செய்வதே சரியானது என்பது எனது எண்ணமாகும். http://www.kathiravan.com/aanmeekam/archives/195 https://ta.wiktionary.org/wiki/மரணச்சடங்கு
 28. 3 likes
  உண்மைதான் சகோதரி...... ஒருகாலத்தில் கமல் ரஜனி படங்களின் வெற்றியை தீர்மானித்ததே சிலுக்குதானே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....! எனக்குத் தெரியும் நீங்கள் கதையோடு ஒன்றிப் போய் விட்டிர்கள் என்று...., நன்றி சகோதரி....! தனி விளையாடுறீங்களா, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இனி ஒரு கதை மாதிரி எழுதநேர்ந்தால் பெடிச்சியல் எல்லாம் துடிச்சுக் கொண்டு ஓடி வாற மாதிரித்தான் எழுதுவது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....! ஆஹா அத்தனையும் உண்மை விசுகு. நன்றி...! உண்மைதான் கிருபன்.... நான் தனியா இருந்து பார்த்தால் அதிகம் படத்தை ஓடவிட மாட்டன். நன்றி கிருபன் ....! இதுக்கு பதில் கீழே கிருபன் கூறியதுதான்..... நன்றி பிரியன்....! நீங்களே ரசித்திருக்கின்றீர்கள் என்றால் ஏதோ சுமாராய் வந்திட்டுது என நினைக்கின்றேன்....! பின்ன... நான் நகைச்சுவை கதை என்று சொன்னதுக்கு பிறகும் யாரும் சிரிக்கவில்லை என்றால் மனம் எவ்வளவு வேதனைப் படும்.... நன்றி நொச்சி...! சிறு திருத்தம்.... எல்லாம் கம்பன், சாண்டில்யன், பாகவதம் போன்றவற்றில் பொறுக்கியதுதான்....! நன்றி புங்கை....!
 29. 3 likes
  இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.
 30. 3 likes
  தனி, அது அவர் வடமாராட்சி வாலிபரை சொல்கிறார்.......! நான் சரியான குட்டை. சும்மா வாயைப் புடுங்கிறது, இப்ப சந்தோசமா. போய் பிரிட்ஜிலிருந்து கூலா ஒரு கிளாஸ் தண்ணி குடியுங்கோ ..!
 31. 3 likes
  இதுவே நெடுக்கர் க.மு எழுதியிருந்தால் ஏன் அந்தப் பெண்ணாலே 20 ரூபா உழைக்கேலாதோ என்டு எழுதியிருப்பார்
 32. 3 likes
  பாடும் பறவை... இறந்ததுபோல் ஏன் நடித்தது? - சூஃபி கதையின் தத்துவம் சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது... அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு... எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல... அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான். ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். ``உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான். ``எது கேட்டாலும் கிடைக்குமா?’’ ``நிச்சயமாக... என்ன வேண்டும் கேள்!’’ ``வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்... முடியுமா?’’ ``என்ன அது/’’ ``நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’ ``அதற்கென்ன... சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’ ``வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது. வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். ``என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்...’’ அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான். திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்... எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான். மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர, பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது. அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்... கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது... அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது. பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்... ``இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’ ``நீ பார்த்தாயே... என் உறவுக்காரப் பறவை... அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்...’’ அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது. *** இதைத்தான் கவிஞர் கல்யாண்ஜி, `` `பறவை’ என்றால் `பறக்கும்’ எனும் பாடம் முதலில் படி’ ’என ஒரு கவிதையில் சொல்கிறார். அந்த வியாபாரியைப் பொறுத்தவரை பறவை, ஒரு மதிப்புமிக்க பொருள். பறவைக்கோ சிறை. சுதந்திரமாகப் பறக்க முடியாமல், பாடுவதால் மட்டும் என்ன கிடைத்துவிடும்? ஒரு பக்கம், அவன் தரப்பில், அவனுடைய கர்வத்துக்குக் கிடைத்த தண்டனை என இதைக்கொள்ளலாம். மற்றொருபுறம், பறவையின் தரப்பிலும் ஒரு கருத்து உண்டு. அந்தப் பறவை தன் அழகையும் தன் குரலையும் விரும்பியதைப்போல, நம்மை நாமே விரும்ப ஆரம்பித்தால் காலம் முழுக்க சிறைக்குள்ளேயே இருக்கவேண்டியதுதான். http://www.vikatan.com
 33. 3 likes
  யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன. யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள். கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார். அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை? பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது. "Scout Attention" என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா. ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார். "படுத்து நிலையெடு" (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை. பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு. அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "Down Postion" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது. தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார். ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார். இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம். விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார். கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும். http://www.veeravengaikal.com/index.php/commanders/16-ltcolonel-ratha-kanagasabapathy-harichandra
 34. 3 likes
  ஒவ்வொருவரும் மூன்று நிமிடங்கள் ஒதுக்கி மேலுள்ள காணொளியைப் பாருங்கள்.
 35. 3 likes
 36. 3 likes
  அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிகள் வந்தனர். சுடர்களை ஏற்றினர். பட்டிப் பூக்களை மேவி எடுத்து வந்த பூக்களைப் பரப்பினர் துயரும் அழுகையும் மீட்கப்பட்டது மண்ணடுக்குகளில் துயரில் ஆழப் புதைந்துறங்கிய மனிதர்கள் மெல்லக் கண் திறந்து நேற்றைய நாளை நினைவு கூர்ந்தனர் அப்படியே இன்றைய நாளைப் பார்த்தனர். எரியும் சுடர் பலியிடப்பட்டோரையெல்லாம் பெருகியோடும் கண்ணீரில் பிரதிபலித்தது பொழுதகல துயர் விழாவின் காட்சிகளெல்லாம் மெல்ல மாறின ஏற்றிய சுடர்கள் அணைய முன் பரப்பிய மலர்கள் வாடமுன் எல்லோரும் திரும்பிச் சென்றனர். மண்ணடுக்குகளில் விழிதிறந்த மனிதர்கள் மறுபடியும் தனித்தனர் பட்டிப் பூக்களும் தனித்தன நாளையும் தனித்தே பூக்கும் பட்டி 2 முள்ளிவாய்க்கால் பரணி, தீபச்செல்வன்01கால்கள் எதுவுமற்ற என் மகள்தன் கால்களைக் குறித்துஒருநாள் கேட்கையில்நான் என்ன சொல்வேன்?அவர்கள் கூறினர்யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையெனஒருவரும் கொல்லப்படவில்லையெனயுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பெனஅவர்கள் கூறினர்ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமெனயுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமெனபின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரெனபின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமெனஇறுதியில் சொல்லினர்யுத்தம் போராளிகளுக்கு எதிரானதெனஎமை மீட்கும் யுத்தமென்றனர்மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர்பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துமேலும் அதை தொடர்ந்துஎல்லாவற்றையும் மறப்போமென்றனர்எதையும் பகிராமல் ஒருதாய் பிள்ளையென்றனர்தாயற்ற என் மகளுக்குஇதையெல்லாம் எப்படி விளக்குவேன்?பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோதுமன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோதுதிரும்பாத இழப்பைவெற்றி என்போரே!என் மகளைக் குறித்துநான் கண்ணீர் மல்குதல்தான்பழிவாங்குதலா?02எனதாசை மகளே!இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?காயங்களை மூடும்இழப்புக்களை மறைக்கும்தந்திரம் மிக்க வார்த்தை என்னிடமில்லைமீளப் பெறமுடியாத கால்களை மறந்துகால்களை பறித்த வெற்றியைகொண்டாடச் சொல்லினர்அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?அது நம் குழந்தைகளை கருவிலே நசித்ததுஅப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்ததுநிலத்துடன் லட்சம் மனிதர்களை தின்று செரித்ததுஎலும்புக்கூடுகளினிடையேநிணங்களினிடையேகுருதியினிடையேகொடி உலுப்பி மகிழ்ந்ததுஅவர்கள் சொல்லுவதைப் போலஅந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?அவர்கள் சொல்வதைப்போலஅந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்மறக்கக்கூடியவை அல்லவேவேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள் மனிக்கக்கூடியவை அல்லவே03ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்புகைப்படங்களில் இருக்கும் இல்லாதவர்களைக் குறித்தும்பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?இரத்தமும் சதைகளும் படிந்தபழைய பத்திரிகைகளைநீ விரித்துப் பார்க்காதபடிமறைவாகவே வைத்துள்ளேன்04யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடிஎல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்என் கால்களுக்கு என்ன ஆனது?ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவெனஅவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?என் தாயிற்கும்என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரெனஅவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்பற்கள் நிரம்பிய கொடியைஎன் மகளுக்கு பரிசளிக்கும் இந்த நாட்களில் தொடங்குமொரு காலம் எப்படியானதாய் இருக்கும்?மேலுமொரு காயம் வேண்டாம் மகளேமேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே05நாம் கேட்பதெல்லாம்உயிருக்கு உயிரல்லகொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையைமாண்டுபோனவர்களின் கல்லறைகளைஅழுது கண்ணீர் விடும் விடுதலையைநாம் கேட்பதெல்லாம்குருதிக்குக் குருதியல்லஅழிக்கப்பட்டவர்களுக்கு நீதியைநாம் கேட்பதெல்லாம்பழிக்குப் பழியல்லஇன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தைநாம் கேட்பதெல்லாம்எவருடைய உரிமையையுமல்லஎம்முடைய உரிமையைஎனதருமை மகளே!நாம் கேட்பதெல்லாம் நீதியின் உண்மையைஉண்மையின் நீதியைஉண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்துஇடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீதுஎளிய நம் சனங்களின் குருதியினால் பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறுஅழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாதுஏனெனில் அவர்களின் போர்சூழ்ச்சிகளினால் வென்றதுஏனெனில் அவர்களின் போர்அநீதிகளால் வென்றதுஏனெனில் அவர்களின் போர்விதிகளை மீறியது05எனதருமை மகளே!நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்நம்முடைய அரசை கலைக்கவும்தம்முடைய வேர்களைப் பதிக்கவும்நம்மை பூண்டோடு துடைக்கவும்உனது கால்களை பிடுங்கிஉன் தாயையும்ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?
 37. 3 likes
  நன்றி...வாத்தியார் ! உங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்! மற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை! நாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை! ஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்! எமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன! ஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை! அதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை!
 38. 3 likes
  கொழும்பில் ஒரு பேச்சு. யாழ்ப்பாணத்தில் ஒரு பேச்சு. இன்று முள்ளிவாய்க்காலில் ஒரு பேச்சு. - இதுசம்பந்தர். நீ துரோகி வெளியேறு -இது தமிழ் மக்கள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தபின்னர் தான் அவர்களின் பிரச்சினைகளை நான் உணர்ந்தேன்.- விக்கி ஐயா விக்கி ஐயாவின் காலைப்பிடித்து சம்பந்தர் துரோகி அவரை பேசவிடாதீர்கள் - தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும்சொல்கின்றோம் ரத்தமும் சதையும் எலும்பும் உயிரும் கொடுத்த போராட்டம் இங்கே உங்கள் அரசியலை நடத்தாதீர்கள் நாசமாப்போவீர்கள் அல்லது போகடிக்கப்படுவீர்கள்.
 39. 3 likes
 40. 3 likes
  என்னை மாதிரியே அந்த தம்பியும் நல்ல குணம் படைச்சவன்....ஒரு அப்பாவி..
 41. 3 likes
  கிராமத்தில் சொந்த வீட்டில் வசதியாய் வாழுபவனை, நகரத்து வாடகை வீட்டில் வசிப்பவன் ஏளனமாய் பார்க்கின்றான்..
 42. 3 likes
 43. 3 likes
 44. 3 likes
  மீண்டும் சென்னை இருப்பது இன்னும் 5 தினங்கள் தான். ஐந்தாம் நாள் இரவு 10 மணிக்கு மீண்டும் ரொரன்டோ நோக்கி பயணம் செய்யவேண்டும் என்பதால் ஏலுமான அளவுக்கு அக்கா குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க நினைக்கின்றேன் செவ்வாய் காலை 10 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வீட்டை வந்த பின் அன்று முழுதும் ஓரளவுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு இரவு சிறிது வெளியே சென்று வர நாள் முடிகின்றது. அடுத்த நாள் செப். 23 அன்று முதலில் சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு செல்கின்றோம். திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் முதலைகள் முதலைகள் முதலைகள். வாயை பிளந்த படி சில முதலைகள், வாயை மூடிக் கொண்டு சிலது, சிவனே என்று தண்ணிக்குள் மூழ்கிக் கொண்டு இன்னும் சில, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு மூலைக்குள் சுருண்டுக் கொண்டு சில…. சில இடங்களில் கப் என்று அடிக்கும் சேற்று நாற்றத்தினை விட குறை சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு முதலைகளுக்கும் எங்கிருந்து எப்படி சாப்பாடு போடுகினமோ தெரியாது. அங்கு இரண்டு மணித்தியாலங்கள் செலவழித்தபின் மாமல்லபுரம் செல்கின்றோம். இந்திய சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகளில் மாமல்லபுரம் பற்றி வாசித்து வாசித்து அதை பார்ப்பது ஒரு பெருங்கனவாக இருந்தது எனக்கு. பல்லவ அரசர்களின் வழி வந்த நரசிம்மவர்மனால் 1300 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கடற்கரை கோவிலை ஒட்டி எழுப்பப்பட்ட சிலைகள் பற்றிய பிரம்மிப்பான கதைகளை கேட்டு இருக்கின்றேன். புலிக் குகை, அர்ச்சுனன் தபசு போன்றவற்றை வாசித்து வாசித்து அது பற்றி மனதில் எழுந்த பிம்பங்கள் ஏராளம். ஆனால் மாமல்லபுரம் போனபின் அங்கு அதை தமிழ்நாட்டு அரசு அதை பேணும் முறையை கண்டபின் என் கனவு உடையத் தொடங்குகின்றது. குன்று ஒன்றில் ஏறி சற்று நடக்கும் போதே மனிதக் கழிவுகள் எம்மை வரவேற்கின்றன. பன்றிகள் ஒரு ஓரத்தில் இருந்து ஓடி ஓடி வருகின்றன. குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்து கிடக்கின்றன. இலங்கை அரசு சிகிரியா குகை ஓவியங்களை பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகளில் 10 வீதம் கூட இங்கில்லை. பென்னம் பெரும் வரலாற்று பொக்கிசம் பொறுப்பற்ற மனிதர்களின் நிர்வாகத்தால் பொலிவிழந்து செல்கின்றது. தமிழர்களின் நாகரீகம் தமிழர்களாலேயே அழிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றையும் மீறி அங்குள்ள சில சிற்பங்கள் தாம் இருக்கும் சூழ்நிலையை மீறி தம் வரலாற்றை உரக்க மூச்சிறைத்து சொல்ல விளைகின்றன. சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகளின் பாதங்களில் ஒட்டிய மண் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுது புரள்வதாக எனக்கு தோன்றுகின்றது. அங்கு சில மணித்தியாலம் செலவழித்த பின் மீண்டும் வீடு திரும்பும் போது மாலையாகி விட்டது. அடுத்த நாள் செப் 24 மனைவியின் தங்கையின் வீட்டில்….மச்சினிச்சியின் வீட்டில் விருந்து. அவர் வீட்டை எதிர்த்து ஒரு தமிழ் நாட்டு பொடியனை கட்டியதால் உறவுகளால் ஓரளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தார். தொப்புள் கொடி உறவு தன் வம்சத்திற்கு தொப்புள் கொடிக்குரிய குழந்தைகளை கொடுப்பதை எம் சமூகம் இன்னமும் மறுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. தமிழ்நாட்டு மதிய விருந்தென்பது வித்தியாசமானது போலும். மச்சம் (அசைவம்) என்றால் முழுக்க முழுக்க மச்சம் தான். எனக்காக வஞ்சிர மீன் பொரியல், காடை பறவை முழுப் பொரியல், கோழிப் பொரியல், கோழி இறைச்சி, முட்டை, மட்டன் பிரியாணி, சிக்கன் புரியாணி என்று விருந்து களை கட்டியது. சாப்பாட்டு ராமனான என்னாலேயே முழுமையாக சாப்பிட முடியாதளாவுக்கு எக்கச்சக்க உணவு. திரும்பி பார்க்கும் போது என் மகன் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தான். அவர்களுடன் விடை பெற்று வீடு வந்த பின் வாய் நம நமக்குது. தமிழ்நாட்டுக்கு வந்த பின் இன்னும் உள்ளூர் சரக்கை அடிக்கவில்லை என்று மனசு அழுதது. முக்கியமாக டாஸ்மாஸ் கடை ஒன்றுக்காகவது செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட நரேஸ் அண்ணார் இரவு கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு ஒரு உள்ளூர் பிரண்டி வாங்கிக் கொண்டு வந்து இரவு அடிச்சுப் பார்த்தோம். குறை சொல்ல ஒன்றும் இல்லை, நன்றாக இருந்தது. (டாஸ்மாஸ் இற்கு முன்பாக) செப் 25. சென்னைக்கு பயணம் திட்டமிடும் போதே நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சரியான புத்தகக் கடை எதுவென தெரியவில்லை. காலச்சுவடு வெளியீடுகளை வாங்குவம் என்று அவர்கள் அலுவலகம் எங்கிருக்கு என்று அவர்களின் இணையத்தளம் சென்று முகவரி பார்த்து அங்கு போனால் அந்த அலுவலகத்தினை காலி பண்ணிப் போய் கன நாளாகுது என்று சொன்னார்கள். பிறகு ஓவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அவர்களின் தற்போதைய விலாசம் கண்டு பிடிச்சு போக வெறுத்தே போய்விட்டது. புத்தகங்கள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒரு பெண் அங்கிருந்தார். பின் அங்கிருந்து குமரன் பதிப்பகம் செல்கின்றேன். சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று காட்டிய இன்னொரு நிகழ்வு அங்கு நடக்கின்றது. நான் கேட்ட புத்தகங்கள் இல்லை என்று அங்கிருந்தவர் சொல்கின்றார். சொன்னது மட்டுமன்று New book land இற்கு call பண்ணி கேட்கின்றார். ஆனால் எமக்கு அந்த புத்தகக் கடை எங்கிருக்கின்றது என்பது தெரியாது எங்கின்றோம். அவர் குமரன் பதிப்பகத்தை பூட்டி விட்டு எம்முடன் வெளியே வந்து ஆட்டோ ஒன்றை தானே பிடித்து தந்து சாரதிக்கு விலாட்சத்தையும் சொல்லி அனுப்புகின்றார் சென்னை மக்கள் அன்பானவர்கள்! New book land இல் புத்தகங்கள் வாங்கிய பின் வீடு செல்கின்றோம். இரவு அக்கா குடும்பத்துடன் நேரம் போகின்றது, (வாங்கிய புத்தகங்களின் ஒரு தொகுதி) செப் 26: காலையில் என் சித்தப்பா கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்திருக்கின்றார் என அறிய முடிகின்றது. பகலில் மீண்டும் சுலோச்சனாவிடம் போய் பெருங்கால் நண்டு வாங்கி சமைத்து உண்டபின் சித்தப்பாவை கண்டு கன காலம் என்பதால் மாலை 5 மணிக்கு அவரை காண செல்கின்றோம். இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நிற்க வேண்டும், இடையில் அவர் இருக்கும் இடத்துக்கு செல்ல தாமதமாகின்றது. மிக மோசமான வாகன நெரிசல். நரேஸ் அண்ணா வழியில் ஒரு ஸ்கூட்டரில் போனவரிடம் விலாசம் சொல்லி எப்படி சீக்கிரமாக போவது என்று கேட்க அந்த மனுசர் “நான் காட்டுறன்” என்று சொல்லி எம் காருக்கு முன்னால் சென்று வழி காட்டுகின்றார். யார் என்றே தெரியாத எமக்காக நேரம் மினக்கெட்டு வழி காட்டும் இந்த அன்பான மனுசர் யார் என்றே தெரியாது சித்தப்பாவை சந்தித்து வீட்டை வந்து மீண்டும் விமான நிலையம் செல்கின்றோம். நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. அக்காவின் கண்களை பார்க்கும் துணிச்சல் இல்லாமல் போய்ட்டு வருகின்றோம் என சொல்லி வரும் கண்ணீரை காட்டாமல் விடை பெறுகின்றோம். இந்த நாட்களில் என் மகன் அக்காவின் குடும்பத்துடன் இனி இல்லை அளவுக்கு கலந்து விட்டான். கனடா தாண்டி இங்கேயும் ஒரு கங்கை இருக்கும் என்பதை புரிந்து கொண்டான் காலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் சந்திக்க வைக்கின்றது என்பதை அறியாமல் இன்னும் 2 வருடங்களில் சந்திப்பம் என்று சொல்லி விடை பெறுகின்றேன். பயணம் 1 நிறைவடைகின்றது பயணம் 2 இனி தொடரும்
 45. 3 likes
  இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) செஞ்சிலுவைச் சங்கத்தினை நிறுவியவரான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) (இவரே முதலாவது நோபல் விருதைப் பெற்றவராவார்) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது
 46. 3 likes
 47. 3 likes
 48. 3 likes
 49. 3 likes
  மனதை நெகிழ வைத்த படம்.
 50. 3 likes
  நீங்கள், கேள்விப் பட்டதுண்டா ? பனை மரமும், தென்னை மரமும்... தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்குமாம்.