Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   7

  • Content count

   46,708


 2. ரதி

  ரதி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   3

  • Content count

   10,315


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   3

  • Content count

   22,469


 4. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   2

  • Content count

   10,227Popular Content

Showing most liked content on 05/26/2017 in all areas

 1. 7 likes
  தமிழர்கள் பூமியின் மத்திய கோட்டை அண்டி வாழ்ந்து வருவதால்.. அதிகம் சூரிய வெளிச்சத்துக்கும்.. அழுத்தம் கூடிய காற்று மண்டலத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் சராசரியாக கறுப்பாகவும்.. (சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க.. கறுப்பை கொடுக்கும் தோல் நிறமணி உதவுகிறது).. காற்றழுத்தம்.. கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும். இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். இயற்கை என்பது ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப வாழ அதில் மாற்றங்களை மரபணுக்களில் ஏற்படுத்தும் விகாரங்களை.. மாறல்களை செய்து வருகிறது. இன்னும் இந்த மாற்றங்களை தூண்டும் சரியான காரணிகள் எப்படி மரபணுக்களில் செல்வாக்குச் செய்கின்றன என்பது.. சரியாக விளங்கப்படவில்லை. மாறாக டார்வின் இயற்கைத் தேர்வுக் கொள்கை மூலமும்.. டி என் ஏ மாறல்கள் கொண்டும்.. இன்னும் விளங்கம் கொடுத்து வருகினம். அந்த மாறல்கள் எப்படி அச்சொட்டாக நிகழத் தூண்டப்படுகின்றன என்பதில்.. இன்னும் விளங்க பல இருக்கிறது. (இவை ஆய்வு ரீதியான கருத்துக்கள் அல்ல. அவதானிப்பு மற்றும் அது தொடர்பான விளக்கம் சார்ந்த கருத்துக்கள்.)
 2. 4 likes
  அட.. முழுப் பிரச்சினையும் என்ன எண்டு தெரியேல்ல.. எங்கட "பழைய" சமூக கட்டமைப்பில் அம்மா அப்பாவோடு பிணக்கு என்றால் மாமா, மாமி அல்லது சித்தப்பா, பெரியப்பாமார் தலையிட்டு தீர்த்து வைப்பினம். இந்த கட்டமைப்பு முறிந்தால் சிறு பிள்ளைகளுக்குத்தான் கெடுதல். ஒன்றில் சமூகம் பாதுகாப்பு தரவேண்டும்; இல்லாவிட்டால் அரசாங்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம் ஊரில் இப்போது இரண்டும் இல்லை என்பதுதான் நிலை. அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா..
 3. 3 likes
  இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில் இவ் நிலையற்ற பூவுலகில் (மாய உலகில்) பிறக்கும் ஒவ்வொருவரும் "இறப்பது நிச்சயம்" என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் (சிவமாக்குவதகாகவும்) கிரியைகள் நடாத்தப்பெற்று;தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன. மேலும் விளக்கமாக கூறூவதாயின்; மானிட பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தாம் செய்யும் செயல் பாவம் என அறிந்திருந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது அல்லது எதுவுமே அறியாமலேயே நிகழ்ந்து விடுவது போன்ற சந்தற்பங்களில் உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் மூன்று விதமாக பாவ வினைகளைச் செய்கின்றது. இவற்றுள் பாவம் என அறிந்து செய்யும் செயலால் ஏற்படும் பாவ வினையை அந்த ஆன்மா அனுபவித்தே ஆக வேண்டும். அறியாது செய்த பாவ வினைகள் அவரின் வழிவந்த வாரிசுகள் அவருக்காக செய்யும் மரணச் சடங்கு, அந்தியேட்டி கிரியைகள், தான தர்மங்களினால் நிவர்த்தியாகின்றன அல்லது குறைந்துபோகின்றன என ஆகம நூல்கள் கூறுகின்றன. கன்ம வினைகளால் பீடிக்கப்பெற்ற ஆன்மாவை ஜீவாத்மா அல்லது சூட்சும சரீரம் என்றும் அது இப்பூவுலகில் பெற்றிருக்கும் உடலை தூலசரீரம் என்றும் அழைப்பர். சூட்சும சரீரம் தூலசரீரத்தை விட்டுப் பிரிதலையே நாம் இறப்பு என கூறுகின்றோம். இந்த இறப்பின்போது ஜீவாத்மாவானது (சூட்சும சரீரம்) யமதூதர்களினால் கவர்ந்து யமலோகத்தில் இருக்கும் யமதர்மாராஜனிடம் அழைத்துச் செல்கின்றனர். பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார்எண்பத்தியாறாயிரம் காதவழி தூரம் இருப்பதாகவும்; பாவம் செய்த ஆன்மாக்களுக்கு உரிய தண்டனை அவர்கள் செல்லும் பாதையிலும், எமலோகத்திலும் வழங்கப் பெறுவதாகவும்; அப் பாதையை கடந்து செல்வதற்கு பாவம் செய்த சில ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும், கருடபுராாணம் கூறுவதாக சொல்லப்பெறுகின்றது. இறந்த ஜீவாத்மாவின் கன்ம வினைகளுக்கு ஏற்ப பாதையின் உக்கிரம் தன்னிச்சையாகவே மாற்றமடைவதால்; உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா பாவம் என அறியாது செய்த பாவங்களை நிவர்த்தி செய்து அல்லது குறைத்து யமலோகம் செல்லும்வரை உள்ள பாதையையின் உக்கிரத்தை குறைத்து சுகமாக கடந்து செல்வதற்காகவும், அந்த ஜீவாமாவை சாந்திபெறச் செய்வதற்காகவும்அவர்களின் வாரிசுகளினால்; இறுதிக் கிரியை, (எட்டுவீடு, 15ம் நாள் படையல்) அந்தியேட்டி கிரியை, மாதமாசியம், திவசம் போன்ற சிரார்த்த கிரியைகளையும், தானங்களையும் சிரத்தையோடு செய்கின்றார்கள். இதனால் அந்த ஜீவாத்மாவிற்கு புண்ணியப் பேறினால் நற்பிறப்பு கிடைக்கும் என்பதும் ஐதீகம். ஒருவர் இறந்த காலத்தை வைத்தும் அந்த ஜீவாத்மா பாவம் அதிகம் செய்த ஆத்மாவா அல்லது புண்ணியம்அதிகம் செய்த ஆத்மாவா என்று கணித்துக் கொள்கின்றார்கள். உத்தராயண காலத்தில் (தைமாதம் முதல் ஆனிமாதம் வரை உள்ள காலம்), சுக்கிலபக்‌ஷத்தில் (வளர்பிறைக் காலம்), உடலின் தொப்பூழுக்கு மேல் (கண்கள், காதுகள், நாசிகள், வாய்) அமைந்துள்ள ஏதாவது ஒரு வாசலினால் உயிர் பிரிந்திருந்தால் புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவாகவும்; தட்சணாயன காலத்தில் கிருஷ்ணபக்‌ஷத்தில் உடலின் தொப்பூழுக்கு கீழ் உள்ள வாயில்களில் ஒன்றினால் உயிர் பிரிந்திருந்தால் பாவவிணை அதிகம் செய்த ஆன்மாவாக கணிக்கப்பெறுகின்றது. ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசலினால் பிரிவதாக ஐதீகம். இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாவம் செய்யாத பரிசுத்த ஆன்மாக்களை காண்பது அரிதினும் அரிது. எந்த ஒரு ஆன்மாவும் தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தே இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பரிசுத்தமான ஆன்மாவானது நேரடியாக பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தவிடுகின்றது என்பது ஐதீகம். புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்தபின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் மிகவும் முக்கியமாகின்றது. முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக இது பற்றிய விபரங்களை (நாம் அறிந்தவற்றை) இங்கு பகிர்ந்து கொள்கின்றோம். ஒருவர் நோய்வாய்ப் பட்டு, அல்லது (முதிர்ச்சி) வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலையில்); அந்த ஆன்மா இறைவனையே எண்ணும் படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்து நின்று பஐனைகள் (தோத்திரங்கள்) பாடுவார்கள். அனுபவம் மிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் "ஜீவன் போகப் போகுது" உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்று கூறுவர். அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால் பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் "பஞ்சாட்சர மந்திரம் -சிவாயநம" சொல்லி தோத்திரம் பஜனையாக பாடுவார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் ஜீவன் (ஆன்மா) பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் எனபது ஐதீகம். ஆனால் நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால் ஆன்மா பிரியும் தறுவாயிலும்கூட அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து; அந்த ஆன்மாவை நின்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் பெரும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது எம் குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும். சைவ மதத்தைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக செய்யப் பெறும் கிரியைகள் பற்றி அறிந்து கொள்வோம். இவற்றுள் சில கிரியைகள் இடத்திற்கு இடம் வேறுபடலாம். ஆனால் நோக்கம் ஒன்றே. இறுதிக் கிரியைகள்: இந்து மகன் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தணம்,குங்கும பொட்டும் வைத்து தெற்குத் திசை நோக்கி தலைப் பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்து விளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல் வைக்கப்பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்கு மேலே வெள்ளை கட்டுவார்கள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப் பெறுகின்றது. அதாவது இறந்தவரின் உடல் வைக்கப் பெற்றிருக்கும் கட்டிலுக்கு (இடத்திற்கு) மேலே கட்டப்பெற்ற வெள்ளைத் துணியில் அந்த உடலை விட்டுப் பிரிந்த சூட்சும சரீரம் கொண்ட (ஆன்மா) ஆவியானது தொங்கிக் கொண்டு நிற்குமாம். அதனாலேயே இறந்தவரின் உடலை தோயவாக்கும் போதும் வெள்ளைத் துணி கட்டிய இடத்திற்கு கீழே வைத்து தோய வார்க்கிறார்கள். அதன் பின்பும் இறுதிக் கிரியைகள் நடக்கும் போதும் வெள்ளை கட்டிய இடத்திலேயே தலைப் பக்கம் தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்கிறார்கள். குளிப்பாட்டும் போதும், கிரியைகள் நிகழும் போதும் இறந்தவரின் ஆத்மா அந்த வெள்ளை துணிகளில் தொங்கியவாறு இருக்கும் என்பது நமது மூதாதையினர் கூறிய விளக்கமாகும். இறந்தவரின் ஆவி இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரை அவ்வீட்டை சுற்றிக் கொண்டு நிற்கும் என்பதும் ஆன்றோர் கூற்று. அதனாலேயே 3ம் நாள், 8ம் நாள், 15ம் நாள் படையல் என இறந்தவர் விரும்பி உண்ணும் உணவும், உணவுப் பண்டங்களும் படைத்து இறந்தரின் ஆவியை மகிழ்விக்கின்றார்கள். இக் கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை)தூல சரீரத்தை தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் "சமாதியும்"இருத்துவார்கள். அனேகமாக வெளிநாடுகளில் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக் கிரியைகள் செய்து; மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகம விதிகளுக்கு அமைய இடம் பெறுகின்றன. இறந்தவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாகஇருந்தாலும் சரி (பள்ளிவாசலில் வைக்கப் பெற்றிருக்கும்) பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மையவாடிக்கு (இஸ்லாமியர்-இடுகாடு) எடுத்துச் செல்வார்கள் அத்துடன் பூதவுடல் உயிர் பிரிந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்று விடும். அது அவர்களின் சமய கலாச்சாரமாகும். சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமய கிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம்தீபம் ஏற்றிய பின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறி எல்லாச் சந்தற்பங்களிலும் சமய கிரியைகள் செய்கின்றனர். வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால்; இறந்த உடன் பூதவுடலைச் சுத்தம் செய்து (குளிப்பாட்டி), விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒரு பகுதியில் தெற்குப் பக்கம் தலை இருக்கும்படியாக கட்டிலில் படுக்க வைத்து தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூர தேசத்தில் இருந்து வரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரிய மருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள். சில சந்தற்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிற்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது அல்லது உப்பை சீலைத்துணியில் கட்டி நெஞ்சில் வைத்தும், ஒரு சாக்கில் நெல்லை கட்டி கட்டிலுக்கு கீழே வைப்பார்கள். வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரேசெய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தற்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் தெரியாமல் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம்.அத்துடன், தன்னை இயங்க வைத்த ஆன்மாவைபிரிந்தனால் சவமாக இருக்கும் உடலை சிவமாக்கி அதனை அக்கினியில் சங்கமக்க செய்யும் புனித கிரிகையாகவும் நிகழ்த்தப் பெறுகின்றது. அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்தனை செய்யக் கூடியவர்களாக ஆண் பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினாலும்; அவர்கள் விவாகம் செய்து கணவனுடன் இருப்பதாலும் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர். கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றையது அபரக்கிரியை. இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது. சுபகிரியைகள் செய்யப் பெறும் போது ஆராத்தி, தீபங்கள் வலதுபக்கமாக உயர்த்தி செய்யப் பெறுகின்றன. ஆனால் அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப் பெறுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது (குருமார் இடதுபக்கத் தோழில் அணிவர்). ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அனேகமாக சுபகிரியையின் போது கும்பத்திற்கு வைக்கப் பெறும் மாவிலைகள் 5-7-9 ஆகவும் அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும். ஆன்ம ஈடேற்றத்திற்காக; சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்;சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள். விளக்கமாக கூறுவதாயின் மரணச்சடங்கு முதல் பாஷாணபூசை வரையுள்ள பூசைகளைஅபரக்கிரியைகள் என்றும், சபிண்டீகரணம, சிரார்த்தம் முதலியன சுபகிரியைகள் என்றும் அழைக்கப் பெறும். ஆனால் சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்ற வீட்டுக் கிரியைகளை சிலர் சைவக் குருமார் மூலம் செய்விக்கின்றனர். சைவக் குருமார் “சூத்திரராக” இருப்பதனால் சூத்திரர் ஒருவரின் இறப்பினால் அல்லது பிறப்பினால் உண்டான ”ஆசூசம்” என்னும் துடக்கு நீங்காது என பல சமூகங்களில் கருத்து நிலவுகின்றது. அதனால் அவர்கள் வீட்டுத் கிருத்தியங்களை (அந்தியேட்டி, துடக்குக் கழிவு போன்றவற்றை) பிராமண குருமார் மூலம் செய்விக்கின்றனர். இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும். மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை "ஆசூசம்" எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள். மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) பந்தல் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அமைக்கப் பெறும் பந்தலை “சொக்கட்டான் பந்தலும்” (முகடு உள்ள தாகவும்), அபரகிரியைகளுக்கு “தட்டைப் பந்தல்” முகடுஅற்ற பந்தலும் அமைப்பார்கள். வெளிநாடுகளில் அதற்கென அமைக்கப் பெற்ற மண்டபங்களில் நடைபெறுவதால், அவ்விடத்தை மஞ்சள் தண்ணீர் தெளித்து புனிதமாக்கிய பின் கிரியைகள் செய்யத் தொடங்குவார்கள், பூதவுடல் மலர்சாலையைச் சேர்ந்தவர்களால் சுத்தன் செய்யப்பெற்று, அலங்கரிக்கப் பெற்றிருக்கும் அதனால், இங்கு குளிப்பாட்டுதல், அபிழ்ஷேகம் செய்தல் போன்றன செய்யப் பெறுவதில்லை, பதிலாக பஞ்சகவ்விய நீரினைச் தெளித்து பூதவுடலை புனிதப் படுத்துவார்கள். சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கடமை செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம்நோன்பு இருத்தல் அவசியம். கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப் பெறும். வீட்டின் தென் புறத்தில் தெற்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள். அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். சில ஊர்களில் கிரியை செய்யும் சைவக் குருவே அபிஷேகத்தை நடாத்துவார். அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு அணியப் பெற்று பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் பொடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுத்முறை இடித்த பின்பு,திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்குன் ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம். பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பேறாக கருதுகின்றனர். சுமங்கலியாக இறப்பது என்பது வயோதிபமடைந்து, கணவருக்கு முதல் இயற்கை மரணம் எய்துதலைக் குறிக்கும்.சுமங்கலியாகவே பூவோடும், பொட்டோடும் இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் இறைவன் கொடுத்த வரம் எனக் கூறுகின்றனர். கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து நடப்பவர்களுக்கு இப் பேறு சுலபமாக கிடைத்து விடுகின்றது என நம்புகின்றனர். கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டமாக தானம் வழங்கள் நடைபெறு, அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமானதாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார். அன்று முதல் அந்தப் பெண் நல்ல காரியங்களை முன்நின்று செய்வதற்கு அருகதை அற்றவள் என ஒதுக்கப் பெற்று விடுவாள். ஆதி காலத்தில் கணவனை இழந்த மனைவியை கணவரின் சிதையில் வைத்து உயிரோடு எரித்து விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சில பெண்கள் தானாகவே முன் வந்து உடன்கட்டைஏறுவார்கள் பலர் ஊர்மக்களின் வற்புறுத்தலில் அதனைச் செய்துள்ளனர். இந்நிலை தற்போது மாற்றம் அடைந்து அப்பெண் இளமையானவளாயின் மறுமணம் செய்தும் வைக்கின்றனர். சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள். வெளி நாடுகளில் அதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் பந்தத்திற்குப் பதிலாக ஊதுபத்தியைப் பிடித்து இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திப்பார்கள். அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வைப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மரடித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகிதர் (பாபர்) கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள். மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் முக்கியமாக கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம். சிதையின்மேல் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறும், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரமாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசிஇடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார். அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடலானது நெருப்பில் எரியும்போது (புளுப்போல) முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள். அதன் பின்; முன்போல மண்பாலைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு; கும்ப நீரினை சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் சுடலை மடத்திற்கு செல்வது வழக்கம். அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு, கெட்ட ஆவிகள் அவரைத் தொடராது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அங்கு ஊர்ப்பெரியவரின் தலைமையில் இக் கிரியையில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் படலையடியில் கையில் இருக்கும் கத்தியினால் சூல கீறி காவல் செய்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல் தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயலார், உறவீனர்கள் பட்டினிச்சாப்பாடு கொடுப்பது வழக்கம். வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவையும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி, போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை செய்கின்றனர். மாமிச உணவு படைக்கும் முதலாம் எட்டு (மூன்றாம் நாள்) தோத்திரம் பாடுதல், கற்பூரம் கொழுத்துதல் என்பன செய்வதில்லை. காடாற்றுதல் (காடாத்து): ஊரில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப் பெறுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார். காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக இருக்கும் ”சுடுகாட்டை” ஆறச்செய்தல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் நீர் உற்றி ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்,) காடு ஆற்றச் செல்வதற்கு நவதானியம், கடகம், குடம், அரப்பு, எண்ணை, பழங்கள், தீன்பண்டம்முதலியவற்றை முற்றத்தில் வைப்பார்கள், பெண்கள் அதனை மூன்றுமுறை சுற்றி மாரடித்து அழுவார்கள். அதன் பின் கடமை செய்தவர், பெரியவர், இன்னும் உதவி செய்ய மூன்றுபேர் எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கே நெருப்புடன் இருக்கும் விறகுக் கொள்ளிகளை அகற்றிய பின் குடத்தில் நீர் கொண்டுவந்து சிதை இருந்த இடத்தின் கால்மாட்டில் ஆரம்பித்து தலைமாடு வரை ஊற்றி பூர்த்து தணலாக இருக்கும் நெருப்பை அணைப்பார்கள். அப்போது பார்த்தால் பூதவுடல் படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும். பின் சிதை இருந்த தலைப்பகுதில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களையும் வைப்பார்கள். மண்கலசம் ஒன்றில் பால் ஊற்றி அதை தலைப்பகுதியிலும் வைப்பார்கள். கடமைகள் செய்தவர்; பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து (பூதவுடல் தகனம் செய்த இடத்தில் உடலின் எலும்புகள் எரிந்த இடம் பால் போல் வெள்ளைச் சாம்பராக தெரியும்) மேற்கே பார்த்து நிற்றுகொண்டு; கால் பகுதியில் இருந்து தலை நோக்கி புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தனம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறுப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைக்கவும். பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் (தவற விடாது) எல்லாவற்றையும் எடுத்து (முடியுமானவரை கடமை செய்தவரே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து; நெற்பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி படைப்பார்கள். அதன் பின்னர்; அரளி பூ மரத்தண்டை வெட்டி அந்த இடத்தில் அளைத்து நட்டுவிடுவர்கள். முன்னர் கலசத்தில் எடுத்த (முக்கிய எலும்புப் பகுதி (அசதியையும்), ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றை கடமை செய்தவர் கடலுக்கு எடுத்து சென்று வடக்கு முகமாக பார்த்து நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக கடலில் (அல்லது நீர் நிலையில்) போட்டுக் கரைத்து விடுவார்கள். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். இதற்கென குறிக்கப் பெற்ற விதிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லோரும் செய்வதையே பின்பற்றிச் செய்கிறார்கள். எட்டுக்கிரியை. இக் கிரியை காலகாலமாக நம் முன்னோர்கள் செய்து வந்ததையே நாமும் பின்பற்றை செய்து வருகின்றோம். தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் உணவினை படைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் வகைகளை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும். பூதவுடல் தகனம் செய்யப் பெற்ற மூன்றாம் நாள் அல்லது உயிர் பிரிந்த எட்டாம்நாள் அல்லது இரண்டு தினங்களும் எல்லா வகை உணவுகளையும் அவியலாகவும், சிலவற்றை சுட்டும் சமைத்தும், அத்துடன் வெற்றிலைபாக்கு, சுறுட்டு, சாராயம் என்பனவற்றையும் மாலைநேரம் (மங்கல் பொழுதில்) படைத்து அதன்பின் படைக்கப் பெற்ற எல்லா உணவுகளிலும் சிறிது எடுத்து அவற்றை நீர்நிலைகளில் போடுவார்கள்ம் அல்லது சந்தியில் வைத்து காகத்திற்கு வைத்தபின் உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். ஆண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பேய் என்றும், பெண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பிசாசு என்றும் சொல்வதுண்டு. அந்தியேட்டி. இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். இந்தக் கிரியை இரண்டு விதமாகச் செய்யப் பெறுகின்றது. அந்தியேட்டி கிரியை, வீட்டுக் கிரியை என்பன. அந்தியேட்டி (இது சாதாரண சைவர்கள்) பூதவுடலுக்கு பதிலாக தர்ப்பையினால் (புத்தணி) சரீரம் போல செய்து அதற்கு இறுதிக் கிரியையின் போது பூதவுடலுக்கு செய்யப் பெற்ற எல்லாப் கிரியைகளும் செய்யப் பெற்று தகனம் செய்து அதன் அஸ்தி (தற்பையின் அஸ்தி) பெறப்படுகின்றது. இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பத்தியொரு பிண்டங்கள் இடப்படும். இவற்றுள் தலைப் பகுதியில் வைக்கும் பிண்டம் பெரிதாக இருக்கும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச் சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும். நம் முன்னோர்கள் இப்பூசையை வசதி கருதியும், புனித ஸ்தலம் எனக் கருதியும் அனேகமாக எல்லோருமே கீரிமலையில் செய்வது வழக்கம். கீரிமலையில் இதற்கென பிரத்தியேக இடவசதியும், குருமாரும், புனிதமான சமுத்திரமும் இருப்பதனால் அங்கு சென்று செய்தனர். தற்பை சுட்ட அஸ்தியையும் (பாசாணத்தையும்), பிதுருகளுக்கு சமர்ப்பித்த பிண்டத்தையும், கும்பத்தையும் புனிதமான சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தல் புனிதம் நிறைந்ததென என கருதுகின்றனர். இக்கிரியைகளை சைவக்குருமாரே செய்வது வழக்கம். வசதி படைத்தோர்; தங்கள் வீடுகளிலோ, அல்லது ஊர் ஆலய வளாகத்திலோ மண்டபம் அமைத்து கிரியைகள் செய்தபின்; பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அல்லது தேர் போன்று ஒரு வாகனம் அமைத்து அதில் வைத்து மேளம் தாளம் முழங்க எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் கடற்கரைக்கு எடுத்துச் சென்று கடமை செய்தவர் இடையளவு தண்ணீரில் நின்ற வண்ணம் வடக்குப் பக்கம் பார்த்து நின்று முதலில் பிண்டத்தை தெற்கு பக்கமாகவும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்வார்கள். அந்தியேட்டி கிரியைக்கு கடற்கரையே உகந்த இடமாகக் கருதப் பெறுகின்றது. பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை சப்பி, நெருப்பு, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கடமை செய்தவர் வீட்டினுள் நுளையும் போது ஆராத்தியும் எடுப்பார்கள். வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம். வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் செய்வதே ஒழுங்குமுறை. இக்கிரியை பொதுவாக பிராமணக் குருமார் மூலம் செய்யப் பெறுகின்றது. சில இடங்களில் சைவக்குருமாரே இதனையும் செய்கின்றனர், காரணம் பிதிர்த்தற்பணம்; இறுதிக்கிரியைகள் செய்தவருக்கே உரியன எனக் காரணம் கூறப்படுகின்றது. இறந்தவருக்காக வழங்கப் பெறும் தர்ப்பணம் (உடை, குடை, செருப்பு, தானம் முதலியன) இறந்தவருக்காக கிரியைகள் செய்த தமக்கே வழங்கப் பெறவேண்டும் என்பது சைவக் குருமாரின் வாதமாகும். வீட்டுக்கிரியையின் போது இரண்டு பிராமணக்குருமார்கள் வருவார்கள். அதில் சிரேஷ்ட குரு கிரியைகளைச் செய்வார், மற்றயகுரு பிதிர்காரகனாக வீற்றிருந்த்து ”ஏகதிட்டம்” என்றழைக்கப்பெறும் கிரியைகளைச் செய்து தானங்களைப் பெற்று முதலிலேயே சென்றுவிடுவார். அவர்செல்லும் போது வீட்டைத் திரும்பிப் பார்க்ககூடாது. அத்துடன் அவர் வெளியே செல்லும் போது அவரின் பின்னால் சாணம் கரைத்த தண்ணீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குவார்கள். காரணம் அவர் அங்கே பிதிராக தோற்றமளிக்கின்றார்.திரும்பவும் அங்கு வரக்கூடாது என்பது நியதி. அதன் பின்னர் சிரேஷ்ட குரு பூசைகளை நிறைவு செய்து, அங்கு இருப்போரை ஆசீர்வதித்து விடைபெற்றுச் செல்வார். அவர் முற்றத்தில் நிற்க அவரைச் சுற்றி வந்து வீழ்ந்து வணங்குவார்கள். அவர் வீட்டில் உள்ளவர்களை ஆசீர்வதித்த பின் விடை பெற்றுச் செல்வார். அவர் இங்கே இறைவனாக மதிக்கப் பெறுகின்றார். ஆனால் தற்போது எமது ஊரில் வதியும் சைவக் குரு ஒருவரே இரண்டு கிரியைகளையும் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்துள்ளார். இங்கு அவர் பிதிர்தேவதையாக இருந்து ஏகதிட்டத்தினையும், தெட்சனையையும் பெற்று, அதனைை ஒருவர் மூலம் தமது வீட்டிற்கு அனுப்பியபின்னர்; குருவாக அமர்ந்து கிரியைகள் செய்வதை எமது ஊர் சைவக் குருமார் தற்போது புதிதாக புகுத்தியுள்ளனர். அவர்கள் இரண்டு வருமானங்களும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில்அப்படிச் செய்வதனால் புனிதமான கிரியைகள் அர்த்தமற்றதாக்கி மாசுபடுத்துவது வேதனைக்குரியதே. எம்மைவிட்டுப் பிரிந்த ஆன்மாவிடம் சேர்ப்பதற்காக நாம் வழங்கும் தானஞ்களை பெற்றுச் செல்லும் “பிதிர் தேவதைக்கும்”, இறைவனாக வீற்றிருந்த்து கிரியைகளை நடாத்தி ஆசிகள் வழங்கும் குருவுக்கும் இடையே உள்ள பேதம் புரிந்து கொள்ளாத சைவைக் குருருவாகவும் இருக்கலாம். பொதுவாக வீட்டுக் கிரியைகளை எம் முன்னோர்கள் பிராமணக் குருமர் மூலமே செய்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சுபம் நன்றி: http://www.panippulam.com/index.php?option=com_content&view=articl குறிப்பு: இதனை இணைத்ததன் நோக்கம், இங்கே புலத்திலே தமிழரது இறுதிக்கிரியைகள் யாரந்த இடத்திலே குரலை உயர்த்திக் கதைப்பவராகவும் இரண்டு தேவாரம் தெரிந்தவராகவும் இருக்கிறாரோ அவருக்குத் தெரிந்த முறையிலே அல்லது வகையிலே நடாத்திமுடிக்கப்படுகிறது. உறவை இழந்த துயரில் உறவுகளும் அதனை நெறிப்படுத்த முடியாது நிற்பதாலும் துயர்பகிர வருகின்றவர்களும் தமக்கென்ன என்று போவதாலும் அதனது சீரமைவுகள் சரியாக அமைவதாகத் தெரியவில்லை. மேலேயுள்ளதிலும் சரிபிழைகள் இருக்கலாம். களஉறவுகள் பட்டறிவின்பாற்பட்டு சரியானவற்றையும் அறித்தவற்றையும் பகிர்வது பொருத்தமாகும். சிலநேரங்களில் மிகுந்த மனவேதனையளிப்பதாகச் சில நடைமுறைகள் உள்ளன. தாயைப்பிரிந்து துடிக்கும் ஒருபிள்ளை கொள்ளிக்குடத்தைத் தோளிலே ஏந்தியவாறு சுற்றிவந்து கால்மாட்டிலே உடைக்க முயல ஒருவர் வந்து பிழை தலைமாட்டில் உடைத்துவிட்டு திரும்பிப் பார்காது போக்ச் சொல்ல பிள்ளை போக வெளிக்கிட, இல்லை பூனூலைக்களற்றிக் கால்மாட்டிற் போட்டுக் கும்பிட்டுவிட்டுப் போகச்சொல்ல அந்த இளைஞன் தடுமாற ஏனிந்தநிலை. இறுதிக்கிரியைகளை கூடியவரை ஒரேவிதமாகச் செய்வதே சரியானது என்பது எனது எண்ணமாகும். http://www.kathiravan.com/aanmeekam/archives/195 https://ta.wiktionary.org/wiki/மரணச்சடங்கு
 4. 2 likes
  உப்புடியே வாறவன் போறவன் எல்லாரிட்டையும் உரைச்சு உரைச்சு காலத்தை கடத்த வேண்டியதுதான்
 5. 2 likes
  உலக மசாலா: ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா! சீனாவின் வேய்ஃபாங் நகரின் பைலாங் நதி மீதுள்ள பாலத்தில் அமைந்திருக்கிறது மிகப் பெரிய ஃபெர்ரி சக்கரம். இதில் 36 கூண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூண்டிலும் 10 பேர் அமர முடியும். இந்த கூண்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி, வைஃபை, செல்ஃபி எடுப்பதற்கான வசதிகள் உள்ளன. 475 அடி உயரமுள்ள இந்தச் சக்கரத்தில் அமர்ந்து, ஒருமுறை சுற்றி வருவதற்கு 28 நிமிடங்களாகின்றன. சக்கரம் மெதுவாகச் சுற்றும். நான்கு புறமும் நகரின் அழகை பறவை கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். அரை மணி நேரத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான அனுபவம் கிடைத்துவிடும். 4,600 டன் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட சக்கரம், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட இருக்கிறது. பொறியியல் வல்லுநர்களின் அபாரமான திறமைக்கு சான்றாக இது கருதப்படுகிறது. ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா! ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் ஸ்டெபானி ஹிஸ்டியின் பூனை, சாதாரண பூனைகளைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கிறது. 3.9 அடி நீளமும் 14 கிலோ எடையுமாக உலகின் மிகப்பெரிய பூனை என்ற சாதனையைப் படைக்க இருக்கிறது. “ஒமர் என்னிடம் வரும்போது, மிகச் சிறியப் பூனையாக இருந்தது. சில மாதங்களில் மிக வேகமாக வளர ஆரம்பித்தது. அதிகபட்சம் 9 கிலோ வரை செல்லும் என்று நினைத்தேன். ஆனால் மூன்று வயதுக்குள் 14 கிலோவை எட்டிவிட்டது. மற்ற பூனைகளைப் போல ஒமரை எளிதாக வெளியில் அழைத்துச் செல்ல முடியாது. பூனைக்காக வாங்கப்பட்ட மர வீட்டில் ஒமரால் நுழைய முடியவில்லை. நாய்க்கான வீட்டை வாங்கி இருக்கிறேன். பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும் ஒமர் மிகவும் அமைதி யானது. சொல்வதைச் செய்யக்கூடியது. கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்கிறார் ஸ்டெஃபானி. மிக நீளமான பூனை! ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பால் சான்யான்கோர் என்ற மத போதகர், தன்னிடம் இறைவனின் தொலைபேசி எண் இருப்பதாகக் கூறி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். “இறைவனின் நேரடியான தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலும் சந்தேகப்படுகிறார்கள். நான் கடவுளிடம் தொலைபேசி எண் இருக்கும் என்று நம்பினேன். மனம் உருகப் பிரார்த்தனை செய்தேன். அந்த நம்பிக்கைக்குப் பரிசாக அவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறார். தேவைப்படும்போது அவரைத் தொடர்புகொள்கிறேன். அவர் இடும் கட்டளைகளைக் கேட்டு, மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். எங்கள் தேவாலய தொலைக்காட்சி மூலம் ‘ஹெவன் ஆன்லைன்’ நிகழ்ச்சியில் இறைவனை தொலைபேசியில் அழைப்பேன். இந்த எண்ணை மற்றவர்களுக்கு தர இறைவனின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் என்னால் தர முடியாது. அதுவரை மக்களுக்கு தேவையான விஷயங்களைக் கேட்டு, இறைவனுக்குத் தெரிவிப்பேன். அவர் சொல்லும் தீர்வுகளைப் பெற்று மக்களிடம் அளிப்பேன்” என்கிறார் பால் சான்யான்கோர். என்ன சொல்வது! http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆச்சரியத்தில்-ஆழ்த்திக்கொண்டே-இருக்கிறது-சீனா/article9707544.ece?homepage=true&relartwiz=true
 6. 2 likes
  உலக மசாலா: நிஜ பார்பி பெண்! 28 வயது டச்யானா டஸோவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவருக்கு லிவிங் பார்பி, ரியல் டால் போன்ற செல்லப் பெயர்களும் உண்டு. ஒரு பார்பி பொம்மை உயிரோடு வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறார் டச்யானா. தலைமுடி, முக ஒப்பனை, ஆடைகள் என அனைத்தையும் பார்பியைப் போன்றே மாற்றிக்கொண்டார். அவரது அறை, படுக்கை, கார் அனைத்தும் இளம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கின்றன. ‘‘12 வயதில் ஒரு பார்பி பொம்மை எனக்குக் கிடைத்தது. அன்று முதல் பார்பியின் மேல் அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்துவிட்டது. வளர, வளர என்னை பார்பியாகவே நினைத்துக்கொண்டேன். இன்று எல்லோரும் என்னை நிஜ பார்பி என்று அழைக்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டன’’ என்கிறார் டச்யானா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், குழந்தைகள் பார்ட்டிகள் என்று எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார். உடலை வருத்தி ஒரு பார்பியாக இருப்பதை விட, ஒரு சாதாரண டச்யானாவாக இருப்பதில் என்ன கஷ்டமோ? ஆட்ரி ஹெப்பர்ன் உலகப் புகழ்பெற்ற நடிகையாகவும் மாடலாக வும் திகழ்ந்தவர். ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல விருது களைப் பெற்றவர். பிற்காலத்தில் யுனிசெஃப் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு, பணியாற்றி வந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அளித்து வந்தார். பலவிதங்களிலும் வித்தியாச மானவராக இருந்த ஆட்ரி ஹெப்பர்னைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் அவரது மகன் லுகா டோட்டி. ‘‘என் அம்மா மிகப் பெரிய நடிகை என்றோ, புகழ்பெற்ற மாடல் என்றோ எங்களுக்குத் தெரியாது. ஆடம்பர வாழ்க்கை நாங்கள் வாழவில்லை. எத்தனையோ பிரபலங்கள் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பிரபலங்கள் என்று தெரியாது. அம்மாவின் நண்பர்கள் என்றுதான் நினைத்திருக்கிறோம். மிக எளிமையான அம்மாவாக மட்டுமே அவர் எங்களிடம் நடந்துகொண்டார். விதவிதமாகச் சமைத்துப் போடுவார். அம்மா என்றாலே அன்பு, உணவு, நண்பர்கள் மூன்று மட்டுமே எங்கள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளியை வைத்திருந்தார். யுனிசெஃப் வேலைகள், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுதல் என்று எப்பொழுதும் பரபரப்பாகவே இருப்பார். அம்மா இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது எங்களுக்குத் தெரிந்தது’’ என்கிறார் லுகா. உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் மிக அழகான பெண்மணி! கனடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ் எபன் ஸ்டோல்ஸ். 5 வயது அரியாவும் 2 வயது எல்லியாவும் இவர்களது மகள்கள். கடலில்தான் இந்தச் சிறிய குடும்பம் வசிக்கிறது. நீச்சல், அலை விளை யாட்டு, படகு விளையாட்டு, நீர் விளையாட்டுகள் என்று எப்பொழுதும் சாகசமான விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடலில் வசிக்கும் டால்பின்கள்தான் அரியா, எல்லியாவின் நண்பர்கள். ஜெனிவிவ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த வேலை அலுப்பூட்டியது. உடனே ராஜினாமா செய்தார். ஸ்டோல்ஸைத் திருமணம் செய்துகொண்டு, சேமிப்பை வைத்து ஒரு படகு வாங்கினார். அதில் ஒரு குடும்பம் வசிப்பதற்கான எல்லா வசதிகளும் இருந்தன. நிலத்தை விட்டு, நீருக்குள் குடிபுகுந்தனர். இரு குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டுமே இருவரும் கனடா திரும்பினார்கள். கடலில் வசித்தாலும் குழந்தைகள் படிக்கிறார்கள். ஸ்டோல்ஸ் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவத்தில், மகள்களுக்கு ஆசிரியராகி விட்டார். ‘‘வெளியில் இருந்து பார்க்க அலுப்பூட்டும் நீர்ப்பரப்பாகத் தெரிந்தாலும் கடல் ஏராளமான பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக் கிறது. ஒவ்வொன்றையும் தேடிப் பார்ப்பதும், அறிந்துகொள்வதும், புத்தகமாக எழுதுவதும் சுவாரசியமாக இருக்கிறது’’ என்கிறார் ஸ்டோல்ஸ். கப்பல்கள், படகுகளில் வரும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை செய்துகொடுத்து, சம்பாதிக்கவும் செய்கிறார் ஜெனிவிவ். ஒவ்வொரு நொடியும் இயற்கையுடன் போராடும் சாகசக் குடும்பம்… http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article7433411.ece?ref=relatedNews
 7. 1 like
  அது முன்பு, இப்போது அதாவது பிரென்ஞ்,அமெரிக்க தேர்தலுக்குப் பின் உயரம் கூடினால் என்ன, வயது கூடினால் என்ன கட்ட தயாராக இருக்கிறோம் ....!
 8. 1 like
 9. 1 like
  உலக மசாலா: பிரமிப்பூட்டும் நட்பு! ஒரு சாதாரண வேலை, உலகத்தையே ஆச்சரியப்படுத்தக்கூடிய நட்பை உருவாக்கித் தந்திருக்கிறது அப்துல்லா ஷோலேவுக்கு. 35 வயதான இவருக்கு 10 வயது வங்கப் புலிதான் சிறந்த தோழி. இருவரும் 24 மணி நேரமும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒன்றாகச் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் ஒன்றாக உறங்கவும் செய்கிறார்கள். முலன் ஜமிலா என்ற அழகான பெண் புலி, இந்தோனேஷியாவிலுள்ள மலாங் இஸ்லாமியப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. 3 மாதப் புலிக் குட்டியை ஒருவர் சரியாகப் பராமரிக்காததால், அந்தப் பொறுப்பு அப்துல்லாவிடம் வழங்கப்பட்டது. “ஆரம்பத்தில் பகுதி நேர வேலையாகத்தான் ஜமிலாவைக் கவனிக்க ஆரம்பித்தேன். விரைவிலேயே என்னை அதுக்கும் அதை எனக்கும் பிடித்துப் போனது. பகுதி நேர வேலையில் முழு நேர நட்பைப் பெற்றேன். எங்கள் நட்பைப் பார்த்து முழு நேர வேலையைக் கொடுத்துவிட்டனர். நான் வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஜமிலா மிகவும் வருத்தப் படுவாள். அதற்காகவே என் தங்குமிடத்தை இங்கேயே மாற்றிக் கொண்டேன். நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் எங்களைத் தவிர வேறு உலகம் இல்லை. என்னிடம் புலியாக அல்லாமல் பூனையாக நடந்துகொண்டாலும் நான் கண்மூடித்தனமான அன்பை அதன் மீது வைக்கவில்லை. 181 கிலோ எடை கொண்ட உலகின் மிக முக்கியமான வேட்டையாடியுடன் நட்பாக இருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். எந்த நேரமும் எனக்கு ஆபத்து நேரலாம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன். ஜாக்கிரதையாகத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்வேன். நமக்குதான் இந்தப் புரிதல் வேண்டும். புலிக்கு அதெல்லாம் தெரியாது. என்னுடன் விளையாடும்போது நகங்களும் பற்களும் முகம், கை, கால்களில் பட்டு, காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என் தோளில் தலை வைத்துக் கொண்டுதான் அதிகம் விளையாடும். கழுத்தில் காயம் ஏற்படக்கூடாது என்று தடிமனான துணியால் கழுத்தைச் சுற்றிக்கொள்வேன். ஒரு புலியின் அத்தனை குணங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். ஒருநாளைக்கு 6 கிலோ கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியைச் சாப்பிடுகிறாள்” என்கிறார் அப்துல்லா. பிரமிப்பூட்டும் நட்பு! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் பகுதியிலுள்ள சாலைகள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புக்காகப் பெருமளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். சாலைகளின் தரத்தை அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தவும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் நீர் நிறைந்த பள்ளங்களில் மஞ்சள் பிளாஸ்டிக் வாத்து பொம்மைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். இந்தக் கவன ஈர்ப்பு பெரும்பாலானவர்களைக் கவர்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் 6 சாலைகளில் ஒன்று மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிவிடுகிறது. இதை அரசாங்கம் மிக முக்கியப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் சாலைகளுக்கு எவ்வளவு பொம்மைகள் தேவைப்படும்? http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரமிப்பூட்டும்-நட்பு/article9713088.ece?homepage=true&relartwiz=true
 10. 1 like
 11. 1 like
 12. 1 like
  அந்தக் குழந்தையின் விழிகளில் இருக்கும் கூர்மை இதுவோர் அநியாய சாவு என்பதை உறுதிப்படுத்துகிறது! பெற்றோர்கள் கண்டிப்பதில் தவறில்லை! கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கண்டிப்பின் பின்னரும் சிறு இடைவெளியில் பலமடங்கு பாசத்தை பொழிய வேண்டும்! பிள்ளைகள் மீது உண்மையான அக்கறையை, அன்பை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்! இதில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தவறிழைக்கிறார்கள். இதன் பின்னணியில் எமது கல்வி, மத, சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இருப்பதாக கருதுகிறேன்! இவற்றை நிவர்த்தி செய்ய புத்திஜீவிகள் என்பவர்கள் முன்வரவேண்டும்! பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு!
 13. 1 like
  சம்பந்தர் ஒரு சந்தனக்கட்டை மாதிரி..! அரைக்க....அரைக்க... வாசம் வந்தபடியே இருக்கும்! கடைசியில 'சந்தனக் கட்டையில மிச்சம்...மீதி....இருக்காது! பிறகென்ன....? புதுக்கட்டை ஒன்று கிடைக்காமலா போகப்போகின்றது!
 14. 1 like
 15. 1 like
  நல்லாப் போய் போப்பை வெருட்டு,வெருட்டு என்று வெருட்டிப் போட்டு போட்டோவுக்கு போஸ் குடுக்கச் சொன்னால் அவர் பயத்தில இப்படித் தான் போஸ் குடுப்பார்
 16. 1 like
  முனி, எல்லாரும் இந்த குண்டு வெடிப்பில 8,15,22 சிறுவ,சிறுமிகள் இறந்திருக்கினம் சொல்லினம்,அவர்களுக்காக கவலைப்படினம்...உண்மையிலேயே இறந்தது அப்பாவிகள் தான்...ஆத்மா சாந்தியடையட்டும். நிற்க அந்த குண்டைக் கொண்டு போய் வெடித்தவருக்கு எத்தனை வயது...அவரும் சிறுவன் தான்...இன்னொரு திரியில லிபியாவில் இருந்து அகதியாப் போன கப்பல் முழ்கி ஆட்கள் பலி என்று போட்டு இருந்தது...அதில் குழந்தைகள் இல்லையா? எல்லோரும் தங்கட நாட்டில் தங்கட வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் இப்படிப்பட்ட அழிவுகள் ஏற்படாது
 17. 1 like
  செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்? வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்? எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக்கொண்டே நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியாயின், நிச்சயமாக சுயநிதி முகாமைத்துவம் பற்றியும், அதன் பயன்தொடர்பிலும், அதனை ஏன் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இன்றைய தினத்தில் பலரது குறையாகவிருப்பது, வருமானத்திற்கு மேலாக செலவீனங்கள் இருக்கிறது என்பதே ஆகும். வருமானம் இதுதான் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளுகின்ற நாம், நமது சேமிப்புகள், முதலீடுகள், செலவுகள் என்பவற்றை முறையாக முகாமைத்துவம் செய்யாமல், தனியே எனக்கான வருமானம் போதாது என்று குறை கூறிக்கொண்டிருப்பதானது அர்த்தமற்ற செயல்பாடே ஆகும். சுயநிதி முகாமைத்துவம் என்றால் என்ன ? நீங்கள் உழைக்கும் பணத்தினை விட, உங்களிடம் உள்ள நிகரபெறுமதியான (Net Worth) தொகையே உங்களது சேமிப்பாக அமையும். (usnews.com) ஒவ்வொரு தனிநபரும் தனது வருமான மூலங்களை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்திகொள்வதன் மூலமாக, எதிர்காலத்துக்கான வளங்களை உருவாக்குவதோ அல்லது வருமானங்களை முதலீடாக மாற்றி மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வதையோ உறுதி செய்கின்ற முறைமையாகும். அப்படியாயின், எந்தந்த வழிமுறைகளின் ஊடாக அல்லது எவற்றை எல்லாம் கடைப்பிடிப்பதன் ஊடாக அல்லது எதனை அறிந்துகொள்வதன் மூலமாக சுயநிதியை வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள முடியும். வருமானம் வேறு, அதில் சேமிப்பு வேறு சுயநிதி முகாமைத்துவத்தின் மிகப்பெரும் அடிப்படையே இதுதான். நீங்கள் உழைக்கும் பணத்தினை விட, உங்களிடம் உள்ள நிகரபெறுமதியான (Net Worth) தொகையே உங்களது சேமிப்பாக அமையும். ஒருவர் அதிகமாக வருமானம் உழைப்பதால் அவரை செல்வந்தராகவும், குறைவாக வருமானம் பெறுவதனால் ஏழையாகவும் நினைத்துகொள்வது தவறாகும். அவர்களது வருமானத்தில், செலவினங்கள் எப்படி உள்ளது என்பதனை பொறுத்தே ஒருவரது நிலையை தீர்மானிக்ககூடியதாக இருக்கும். சேமிப்பு இல்லாமல் முதலீடு இல்லை என்பதை உணர்க முதலீட்டு எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முதல், அந்த முதலீட்டை உருவாக்கக்கூடிய சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. இந்த சேமிப்பு தன்மையில்லாமல், எந்த முதலீட்டையும் உருவாக்கிக்கொள்ள முடியாது. கடனட்டைக்கு அடிமையாக வாழாதீர்கள் சாதாரணமான ஒருவர் கடனட்டை பழக்கத்திற்கு அடிமையானபின்பு, இயல்பாகவே மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. (creditcard.com) இன்றைய நிலையில் மக்களால் வங்கிகளில் பெறப்படுகின்ற கடன்களுக்கு சமனாக, கடனட்டை மூலமான கடன்களின் அளவும் உள்ளது. சாதாரணமான ஒருவர் கடனட்டை பழக்கத்திற்கு அடிமையானபின்பு, இயல்பாகவே மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. இது சாதாரண ஒருவர் கடனை மீள செலுத்தாமல் காவிச் செல்லும் நிலையையும், பணத்தினை சேமிக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தும். எனவே, கடனட்டை பயன்பாட்டை தவிர்த்தல் மிகநன்று, அல்லது வருமானத்துக்கு ஏற்ப, மாதசெலவினத்தை அடிப்படையாக கொண்டு கடனட்டையை பயன்படுத்துவது உசிதமானது. செலவுகள் மீது கண்டிப்புடன் இருத்தல் அவசியம் பணத்தினை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் மாத்திரமே போதுமானது அல்ல. மாறாக, செலவின கோலத்தை கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதாரித்தனமாக செலவு செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டாலே, மாத இறுதியில் ஏற்படும் இறுக்கநிலையும் குறையும். கூடவே, சேமிப்பும் உருவாகும். முறைமையை கையாளுதல் கடந்தகாலத்தில், தான் மாதம்தோறும் செலுத்தவேண்டிய கட்டணங்களையும், செலவுகளையும் குறித்துவைத்துக்கொண்டு, குறித்த தினத்தில் அதனை செலுத்துவதற்கு பரபரத்துகொண்டிருக்கும் நிலையிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலையான தொகையை வங்கிகளின் மூலமாக முன்னதாகவே முறைமைபடுத்திக்கொள்ள முடிகிறது. இது, வருமானத்தில் எவ்வளவு பணத்தினை செலவிடவேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டக் கூடியதாவும் இருக்கும். மிகப்பெரிய செலவுகளை அவதானமாக செய்தல் ஆடம்பரத்துக்கும், அத்தியவசியத்திற்குமான வேறுபாடு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால், வீடு வாங்குவதிலும், போக்குவரத்து சாதனங்கள் வாங்குவதிலும் நம்மவர்கள் ஆடம்பரத்துக்கும், அத்தியவசியத்துக்குமான இடைவெளியை மறந்து விடுவார்கள். இதன் காரணமாக, மிகப்பெரிய கடனை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்கும், திட்டமிடாத செலவினங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றினை கையாளக்கூடிய வகையில், திரவ பணத்தினை கொண்டிருத்தல் அவசியமாகும். அதாவது, மிகப்பெரிய செலவினங்களை செய்ய தயாராகும்போது, ஆடம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிலும், அதன் அத்தியவசியத்தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப செலவுகளை மேற்கொள்ளும்போது, எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும். உடனடி செலவினங்களை கையாளுதல் ஒவ்வொரு மனிதருக்கும், திட்டமிடாத செலவினங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றினை கையாளக்கூடிய வகையில், திரவ பணத்தினை கொண்டிருத்தல் அவசியமாகும். திட்டமிட்ட செலவுகள் போக, எஞ்சிய அனைத்தையுமே சேமிப்பது என்பது முட்டாள்தனமே ஆகும். காரணம், எதிர்பாராத செலவுகளுக்கு எப்போதுமே நாம் தயாராக இருத்தல் அவசியமாகிறது. எனவே, எப்போது? எவ்வளவு? சேமிப்பது என்பது தொடர்பில் அவதானமாக இருத்தல் அவசியமாகிறது. வருடம்தோறும் பழக்கத்தினை மாற்றல் எப்படி ஒரு கெட்ட பழக்கத்தை உடனடியாக கைவிட முடியாமல், சிறிது சிறிதாக கைவிடுவதாக முடிவு செய்கின்றோமோ அதுபோல, எந்தவொரு சேமிப்பு மற்றும் முதலீட்டையும் உடனடியாகவே மிகப்பெரிய அளவில் செய்வதென்பதும் கடினமானதாகும். எனவே, சிறிது சிறிதாக அதிலும் மாற்றத்தை கொண்டு வருதல் அவசியம். இந்த வருடத்தில் இந்தளவு தொகையை சேமிப்பதாகவோ அல்லது முதலிடுவதாகவோ முடிவு செய்திருப்பின், அடுத்துவரும் காலங்களில் அதைவிட அதிகமாக முதலீடு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அருகிலிருப்பவர்களுக்கும் கற்றுகொடுத்தல் தனியாக நீங்கள் மட்டும் சுய முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக, உங்கள் நிதியை வளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாறாக, உங்கள் அருகிலிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் இந்த பழக்கத்தை கற்றுகொடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான், மிகச்சிறந்த முறையில் நிதியைக் கையாளக்கூடியதாக அமையும். பொருத்தமானவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை நம் சமூகத்தை பொறுத்தவரை, நமது சொத்துக்கள் தொடர்பிலோ,வருமானம் தொடர்பிலோ அடுத்தவருக்கு தெரிந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தை கொண்டவர்களாகவே இருக்கிறோம். இதனால்தான், பல சந்தர்ப்பங்களில் பொருத்தமான ஆலோசனைகளை பெறத்தவறிவிட்டு, வருமானம் உழைக்கும் வழிகளையும், மூலதனங்களையும் இழந்து நிற்போம். எனவே, பொருத்தமானவர்களிடம் தேவையான தகவல்களை வழங்கி ஆலோசனைகளை பெறுவதில் தவறில்லை. இது உங்கள் செல்வத்தை மேலும் பெருக்குவதாகவே அமையுமே தவிர, பாதிப்படையச் செய்யாது. தற்போதைய நிலை என்ன என்பதனை உணர்தல் நமது தற்போதைய நிலை என்ன? நமது சேமிப்பு மற்றும் செலவின சக்தி என்ன? பலம், பலவீனம் என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது. (cdn.lynda.com) சுயநிதி முகாமைத்துவ செயல்பாட்டில் ஈடுபட முதலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க முதலோ, நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதனை அறிந்துகொள்வது அவசியமாகிறது. காரணம், நமது தற்போதைய நிலை என்ன என்பதனை அறியாமல் எதிர்காலத்தை திட்டமிடுவதுபோல முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. எனவே, நமது தற்போதைய நிலை என்ன? நமது சேமிப்பு மற்றும் செலவின சக்தி என்ன? பலம், பலவீனம் என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது. வரிகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் கடந்தகாலங்களில் இலங்கையில் தனிநபர் வருமானம் சார்ந்த வரிகளில் இறுக்கமான நடைமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தற்போதய அரசாங்கம் தனிநபர்களிடமிருந்து எவ்வாறு வருமானத்துக்கு ஏற்ற வரிகளை அறவிடலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் நிச்சயம் வருமான வரிகளில் இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்படப் போகின்றதென்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு தனிநபரும் தனது வருமான மூலங்களை முதலீட்டு நடைமுறைகளுக்கு பயன்படுத்தும்போது, எவ்வாறு வரி வினைத்திறன் தன்மையை கையாள முடியும் என்பதனை அறிந்திருத்தல் அவசியமாகிறது. இல்லாவிடின், தேவையற்றவகையில் வீணாக நிறைய வரியினை செலுத்துகின்ற நிலை உருவாகக்கூடும். மேலேகூறிய வழிமுறைகள் அனைத்துமே, தற்சமயம் உழைக்கும் வருமானத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி மேலதிகமாக எதிர்காலத்தில் எத்தகைய நலன்களை பெறலாம் என்பதனையே தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலமாக, உழைக்கும் வருமானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி மேலதிக பணத்தினை உழைக்க கூடியதாக இருக்கும்.உண்மையில், ஒவ்வரு தனிநபருக்குமே இயலுமை காலம் என்கிற ஒன்று கட்டாயமாக இருக்கும். அதற்குள் முடிந்தவரை உழைத்துவிட வேண்டும் எனவும், தனக்கும் எதிர்கால சந்ததிக்கும் தேவையானவற்றை சேர்த்துவிட வேண்டும் என்கிற சுமையும் நிச்சயமாக இருக்கும். ஆனால், ஒவ்வொருவருமே தமக்கான சுயநிதி முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றும் போதுதான், மனதிலே ஓய்வுகால பயம் என்பதனை தாண்டிய, நிதி சுதந்திரம் கண்டிப்பாக இருக்கும். https://roar.media/tamil/tech/income-saving/
 18. 1 like
  தமிழனை அரவணைத்தால் சிங்களம் தானாக வழிக்கு வரும் என்பது இந்திராகாந்திக்கு நன்றாக தெரிந்திருக்க வேணும்,அதே கொள்கையைதான் மீண்டும் மோடிக்கு வெளிவிவகாரத்துறையினர் சொல்லி கொடுத்திருக்கினம்.அதுதான் வடக்கு கிழக்கு மலையகம் என்று திரிகின்றார் போலும். சிறிமாவின் குணத்தை இந்திராகாந்தி அறிந்திருக்க கூடும்...1971 ஆண்டு.ஜெ.வி.பி கிளர்ச்சியை அடக்க இந்தியா உதவியது ஆனால் பங்களதேஷ் போரின் பொழுது இலங்கை பாகிஸ்தான் பக்கம் நின்றது...
 19. 1 like
  உலக மசாலா: நீ பாதி... நான் பாதி...! தொலைதூரத்தில் இருக்கும் உறவுகள் துயரமானவை. ஆனால் கொரியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, இந்தப் பிரச்சினையை வேறுவிதமாகக் கையாண்டிருக்கிறது. டான்பின் ஷின், சியோக் லி தம்பதியர் புகைப்படக் கலைஞர்கள். ஒருவர் நியுயார்க்கிலும் இன்னொருவர் சியோலிலும் வசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 14 மணி நேர வித்தியாசம். இருவரும் அவரவர் இடங்களில் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு இந்த இரு படங்களையும் ஒன்றாக இணைக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார்கள். நாடு, நகரம், சூழல் மாறினாலும் இருவரும் ஒன்றாக இருப்பது போல படங்களை உருவாக்குகிறார்கள். இந்தக் கலைக்கு ‘ஷின்லி ஆர்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய ஷின்லி ஆர்ட் படங்களுக்கு இணையத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மிகப் பெரிய வரவேற்பும் வாழ்த்துகளும் குவிகின்றன. நீ பாதி… நான் பாதி… என்று பெயர் வைத்திருக்கலாம்! ஃபோர்ட் நிறுவனம் ‘டிரக் டிரைவிங் சூட்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். இதனால் உலகம் முழுவதும் விபத்துகள் நிகழ்கின்றன, ஏராளமானோர் உயிரிழந்து விடுகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சூட் உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி, ஹெட்போன், கால், கை முட்டிகளுக்குப் பட்டைகள் என்று இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதை அணிந்துகொண்டு காரை இயக்குவது மிகக் கடினமானது. கண்ணாடி தெளிவான பிம்பத்தைக் காட்டாது. குகைக்குள் செல்வது போலக் காட்டும். ஹெட்போனில் அளவுக்கு அதிகமாகச் சத்தம் வெளிப்படும். கை, கால் முட்டிகளில் கட்டப்பட்டுள்ள பட்டைகள் எளிதாக அசைக்க முடியாதபடி செய்துவிடும். மொத்தத்தில் இந்த சூட் அணிந்து காரை ஓட்டவே முடியாது. இப்படித்தான் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டுவதும் என்று சொல்கிறார்கள். “இந்த சூட் அணிந்து என்னால் சிறிது தூரம் கூட செல்ல இயலவில்லை. போதைப் பொருள் எடுத்துக்கொண்டு ஓட்டுவது எவ்வளவு மோசமானது என்பதை அறிந்துகொண்டேன்” என்கிறார் ஓர் ஓட்டுநர். ஜெர்மனியில் உள்ள மேயர் ஹெண்ட்ஷெல் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ள டிரைவிங் சூட் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. நல்ல விஷயம்… பெய்ஜிங்கில் உள்ள சான்யுவான் பாலத்தை இடித்து, 43 மணி நேரங்களில் புதிய பாலத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள். பாலத்தின் கட்டுமானப் பணிகள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டது. சில நாட்களுக்குள் 15 லட்சம் மக்கள் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் இந்தப் பணியைச் செய்ய 5 ஆண்டுகள் ஆகியிருக்கும், 3 மடங்கு செலவு அதிகரித்திருக்கும். பிரான்ஸில் 2 முதல் 5 ஆண்டுகளில் இந்தப் பணியைச் செய்து முடித்திருப்பார்கள். பிலிப்பைன்ஸில் 7 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று பல நாட்டைச் சேர்ந்தவர்களும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனக் கட்டுமான நிறுவனமோ, “24 மணி நேரத்தில் கட்டி முடிப்பதாக உறுதியளித்திருந்தோம். எங்களால் அதைச் செய்து முடிக்க முடியவில்லை. 43 மணி நேரங்களை எடுத்துக்கொண்டோம்” என்று கூறியிருக்கிறது. பாலத்துக்குத் தேவையான உத்திரம், தூண்கள் போன்ற பல பாகங்களும் ஏற்கெனவே செய்து தயாராக இருந்ததால், இத்தனை விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அசத்துகிறார்கள் சீனர்கள்! இங்கிலாந்தில் வசிக்கும் ஜேன், ஒரு முட்டையை உடைத்து வாணலியில் ஊற்றிய உடன் அலறினார். அவரது கணவர் கிறிஸ் ஓடி வந்து பார்த்தபோது, வாணலியில் உடைத்த முட்டைக்குள் ஒரு மஞ்சள் கருவும் ஒரு முட்டையும் இருந்தன. ஒரு முட்டைக்குள் 2 மஞ்சள் கருக்கள் அரிதாக இருப்பதுண்டு. ஆனால் ஓடுடன் கூடிய முழு முட்டை இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. முட்டைக்குள் இருந்த முட்டையை உடைத்தபோது, மஞ்சள் கரு இல்லை. வெள்ளைக் கரு மட்டுமே இருந்தது என்கிறார் கிறிஸ். ஒரு முட்டை காசில் இரண்டு முட்டைகள்! http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/article7918830.ece?homepage=true&relartwiz=true
 20. 1 like
  உலக மசாலா: நாய்களுக்காக எல்லாச் சொத்துக்களையும் செலவிட்ட பணக்காரர்! சீனாவின் ஜிலின் மாகாணத்தில் வசிக்கிறார் 29 வயது வாங் யான். இரும்புத் தொழிற்சாலை நடத்தி, மிகப் பெரிய பணக்காரராக 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார். ஆனால் இன்று அவர் பெயரில் சிறிதும் பணம் இல்லை. அத்தனை சொத்தையும் தெரு நாய்களை காப்பாற்றுவதற்காகச் செலவிட்டிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு யானின் செல்ல நாய் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் கசாப்புக் கடைகளில் தேடிப் பார்க்கச் சொன்னார். அப்படிச் சென்றபோது ஒரு நாயை கொல்லும் காட்சியைக் கண்டார். மிகவும் மனம் உடைந்து போனார். அன்று முதல் தெருவில் சுற்றித் திரியும் நாய்களில் இருந்து கசாப்புக் கடைகளுக்கு வரும் நாய்கள் வரை காப்பாற்றி வருகிறார். இதற்காக நிறைய பணம் செலவு செய்து ஒவ்வொரு நாயையும் மீட்டு வருகிறார். நாய்களைத் தங்க வைப்பதற்கான இடமாகத் தன்னுடைய தொழிற்சாலையை மாற்றிவிட்டார். நாய்கள் காப்பகம் என்று பெயரும் வைத்துவிட்டார். சிலர் தாங்களாகவே நாய்களைக் கொண்டு வந்து இங்கே விட்டுவிடுகிறார்கள். இதுவரை 215 நாய்களை வைத்துப் பராமரித்து வருகிறார். நாய்களுக்கான உணவு, மருந்து, நாய்களைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளம் என சொத்து முழுவதும் கரைந்துவிட்டது. ஆனாலும் நன்கொடையாகப் பணம் பெற மறுத்து வருகிறார் யான். நாய்களுக்குத் தேவையான கட்டிடம் கட்டுவதற்குப் பொருளாகக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். எதிர்காலத்தில் 1000 நாய்களாவது இங்கே பராமரிக்கும் நிலை உருவாகலாம் என்கிறார். ‘பணக்காரனாக இருந்ததைவிட இன்று நாய்களைப் பராமரிப்பவனாக, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்று யோசிப்பவனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது’ என்கிறார் யான். எதில் மகிழ்ச்சி என்பதை யாரால் சொல்லிவிட முடியும்? இங்கிலாந்தில் வசிக்கும் ஜோன் மர்பி வீட்டுக்குத் தேவையான 24 பொருள்கள் கொண்ட கிச்சன் செட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தார். ஜோனின் வீட்டு வாசலில் ஒரு பெரிய ட்ரக் வந்து நின்றது. ட்ரக் முழுவதும் பெரிய, பெரிய அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சேமிப்புக் கிடங்குக்குப் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று நினைத்தார் ஜோன். ஒரு ட்ரக் முழுவதும் இருந்த பெட்டிகள் அனைத்தும் ஜோனின் வீட்டுக்குள் வைக்கப்பட்டன. அந்த அறையே ஒரு கிடங்காக மாறிவிட்டது. 24 பொருட்களுக்கு 48 ராட்சச பெட்டிகளில் வைத்து, பாதுகாப்பு என்ற பெயரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘’ஒரு சின்ன ஸ்பூனுக்கு இத்தனை பெரிய அட்டைப் பெட்டி என்பதை எல்லாம் சகிக்க முடியவில்லை. பெட்டியைத் திறந்து பொருட்களை எடுப்பதற்குள் சோர்ந்து போய்விட்டோம். வீடே அட்டைப் பெட்டிகளும் காகிதங்களுமாகக் காட்சியளிக்கிறது. இதில் 5 பாத்திரங்கள் உடைந்துவிட்டன. புகார் அளித்து, இந்த அட்டைப் பெட்டிகளைச் சுத்தம் செய்யவேண்டும் என்றும் உடைந்த பாத்திரங்களுக்கு வேறு பாத்திரங்கள் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஜோன். குறைந்த காகிதங்களில் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்பது கூடவா தெரியாது? http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/article7915461.ece
 21. 1 like
  உலக மசாலா: பாடம் சொல்லித் தந்த பறவை! அடர்ந்த பனி நிறைந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கும்போது பனியால் மூடப் பட்டு விபத்துக்கு உள்ளாகின் றன. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள் கின்றன. இந்தப் பிரச்சினைக் குத் பெங் குயின்களிடமிருந்து ஒரு தீர்வை கண்டுபிடித்திருக் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெங்குயின்களின் இறகில் ஒருவித எண்ணெய் சுரப்பதால் அவை நீந்தும்போது உடலில் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை போனாலும் பெங்குயின்களின் உடலில் மட்டும் பனி படர்வதில்லை. இதற்கும் காரணம் அந்த எண்ணெய்ச் சுரப்புதான். பெங்குயின் வால் பகுதியில் இருந்து சுரக்கும் எண்ணெய், அப்படியே இறக்கைகளுக்குப் பரவி விடுகிறது. இந்த நுட்பத்தை விமானங்களின் இறக்கைகளில் செயல்படுத்தினால், பனிப் பிரதேசங்களில் விமானங்கள் பறந்து செல்லும்போது பனியால் மூடப்படாது. விபத்துகளையும் தடுக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெங்குயின் இறகுகளைச் சேகரித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். விமானங்களின் இறக்கைகளிலும் நீர்விலக்கியாக பெங்குயின் எண்ணெயைப் போல ஒரு பொருளைப் பயன்படுத்த இருக்கிறார்கள். பறக்க இயலாத பறவை, பறக்கும் விமானத்துக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறது! ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மெக்கார்தி புதிய உடற்பயிற்சி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் பயன்படுத்தி விலங்குகளைப் போல நடந்து செல்ல வேண்டும். ‘‘நான்கு கால் பிராணிகளைப் போல நடந்து செல்வது உடலுக்கு மிகச் சிறந்த பயிற்சி. மற்ற உடற்பயிற்சிகளைப் போல இது ஒன்றும் எளிதான செயல் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வேறு எந்த உடற்பயிற்சியை விடவும் இந்தப் பயிற்சி உடலுக்கு மிகச் சிறந்த முறையில் நன்மை விளைவிக்கிறது. கைகளையும் கால்களையும் கொண்டு நடந்து செல்லும்போது அனைத்துப் பகுதிகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. தலை, கழுத்து, கைகள், உடல், கால்கள், விரல்கள் என்று ஒட்டு மொத்த உடலும் வேலை செய்கின்றன. அதனால் ஓடுவது, நடப்பது போன்ற பயிற்சிகளை விட இது சிறந்தது. கலோரிகள் வேகமாகக் கரைந்துவிடுகின்றன. தொடைகளில் இருக்கும் அதிகப்படியான சதைகளைக் கரைக்க வேண்டும் என்றால் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார் மெக்கார்தி. இதை மற்ற உடற்பயிற்சி நிபுணர்கள் மறுக்கிறார்கள். ‘‘உடல் முழுவதுக்கும் பயிற்சி தரக்கூடிய உடற்பயிற்சிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மெக்கார்தியின் பயிற்சியில் அபாயம் அதிகம். கழுத்து சுளுக்கிக்கொள்ளும். வேகமாகச் செல்லும்போது மூக்கு உடைந்துவிடலாம். கைகளால் நடக்கும்போது காயம் ஏற்படலாம். தோள்களுக்குக் கடுமையான வலி உண்டாகும். மனிதன் ஏன் விலங்குகளைப் போல நடக்க வேண்டும்? மனிதனுக்கு உரிய உடற்பயிற்சிகளைச் செய்தாலே ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார்கள். பாதுகாப்பான கையுறை, மெதுவாகச் செல்வது போன்றவற்றைக் கடைபிடித்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்கிறார் மெக்கார்தி. எங்கிருந்துதான் இப்படியெல்லாம் யோசனை உதிக்குதோ… சீனாவின் குன்மிங் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார் வாங். கடந்த மாதம் இரவில் காரை விடுதிக்கு வெளியே நிறுத்திவிட்டு, சென்றுவிட்டார். அதிகாலை அவர் வெளியே வந்தபோது காரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த வாங், அருகில் இருக்கும் காவலாளிகளை விசாரித்தார். ஒருவருக்கும் யார் இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளித்தார் வாங். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பார்த்தனர். வெள்ளை காரில் இறங்கிய ஒருவர், நீண்ட குடையால் கார் கண்ணாடிகளை உடைப்பது தெரிந்தது. ஆனால் அந்த ஆளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் பல வழிகளில் முயன்றும் குற்றவாளி மட்டும் அகப்படவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாததால் வாங் மிகவும் மனம் உடைந்து போனார். எப்படியும் அந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார். பாதாளக் கடவுளிடம் முறையிட முடிவு எடுத்தார். ஒரு பெரிய தாளில் 4 மோசமான விதங்களில் குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என்று எழுதி, கார் மீது ஒட்டினார். மெழுகுவர்த்திகளை ஏற்றினார். கோழி படையல் இட்டார். இன்றுவரை குற்றவாளி யார் என்பதும், அவனை பாதாளக் கடவுள் தண்டித்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் வாங் மனத்தைத் தேற்றிக்கொண்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். அடப் பாவமே… http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/article7911756.ece?homepage=true&relartwiz=true
 22. 1 like
  உலக மசாலா: பாம்பு ஃப்ரண்ட்! இங்கிலாந்தில் வசிக்கிறார் ராப் கவான். இவர் ஒரு பாம்பு ஆர்வலர். 19 பாம்புகளை வளர்த்து வருகிறார். அதிலும் ஆஸ்டின் என்ற மஞ்சள் நிற மலைபாம்புதான் அவரது செல்லப் பிராணி. 82 கிலோ எடை கொண்ட ஆஸ்டின் பிறந்து 10 மாதங்களே ஆகின்றன. ஆஸ்டினின் நெருங்கிய தோழி ராப்பின் இரண்டு வயது அலிஷா மே. ஆஸ்டினையும் அலிஷாவையும் தன் மகன், மகள் போலவே வளர்த்து வருகிறார் ராப். 15 அடி நீளம் கொண்ட ஆஸ்டின் தோட்டம், வீடு என்று எங்கும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது. அலிஷாவோ தினமும் ஆஸ்டின் பாம்புக்கு முத்தம் கொடுத்து, குட்நைட் சொல்லிவிட்டுத்தான் தூங்கச் செல்கிறாள். கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது ராப்… ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 19 வயது பாடகர் ஜேம்ஸ் மெக்எல்வர். ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, லண்டனிலிருந்து கிளாஸ்கோவுக்குச் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அவருடைய குழுவினர் ஏற்கெனவே விமானத்துக்குள் சென்று விட்டனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எடை வைத்திருந்தார். அதற்காக அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜேம்ஸிடம் பணம் இல்லை. நண்பர்களும் அருகில் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தார். வேகமாகக் குளியலறைக்குச் சென்றார். ஒவ்வொரு துணியாக எடுத்து, ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் போட்டுக்கொண்டார். இப்படி 12 சுற்றுத் துணிகளைச் சுற்றிக்கொண்டார். 6 சட்டைகள், 4 டிசர்ட்கள், 3 ஜீன்ஸ், 2 கால் சட்டைகள், ஒரு கோட், 2 தொப்பிகள் இவற்றில் அடக்கம். அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. விமானத்தில் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜேம்ஸ். ஐயோ… பாவமே… ஜப்பானில் கொசுக்களை ஒழிப்பதற்கு ஸ்ப்ரே, வலை என்று என்னெ ன்னவோ பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். ஆனால் முற்றிலுமாகக் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. பிபி லேப் என்ற நிறுவனம் கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் புதிய வகை ஆடைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆடை தலை முதல் கால் வரை, உடலைச் சுற்றி மூடிவிடுகிறது. இந்த ஆடைய அணிந்துகொண்டு வீட்டிலும் இருக்கலாம், வெளியிலும் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பு. மென்மையான ஆடை முழுவதும் மிகச் சிறிய துளைகள் இருப்பதால் சுவாசிக்கவும் எளிதானது. கை, கால், தலை என்று ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனி ஜிப்கள் தைக்கப்பட் டிருக்கின்றன. வேகமாகப் பிரிக்கலாம், மடக்கலாம். மூன்று வண்ணங் களில் கிடைக்கின்றன. இந்த ஆடையின் விலை 3,400 ரூபாய். கொசுத்தொல்லைக்கு இது நிரந்தர தீர்வாக இருக்குமா… http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article7428759.ece?ref=relatedNews