Jump to content

Leaderboard

  1. மீனா

    மீனா

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      39

    • Posts

      1653


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      23

    • Posts

      43054


  3. நன்னிச் சோழன்

    நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+


    • Points

      14

    • Posts

      30345


  4. Athavan CH

    Athavan CH

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      6

    • Posts

      11326


Popular Content

Showing content with the highest reputation since 12/14/09 in Images

  1. From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.

    "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
    3 points
  2. பெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது. இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.
    2 points
  3. From the album: கண்களில் சிக்கியவை

    © மல்லிகை வாசம்

    1 point
  4. https://ta.wikipedia.org/wiki/மன்னார்_மாவட்டம்
    1 point
  5. கறையான் புற்றில் நாகம் புகுந்தது போல் தான் சிங்கள இனம் எம் தேசம் வந்தார்கள் என்று சொன்னால் உண்மையே முழு இலங்கையும் தமிழர்களின் நாடே இதை எம் முன்னோர்கள் ஏன் பாதிகேட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது?
    1 point
  6. ஆனையிறவு (Elephant Pass) இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈழப் போருக்குமுன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கே அமைந்திருந்தது. 1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி எழுப்பியதன் பின்னர் ஆனையிறவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளமாக இருந்து வந்துள்ளது. இக்கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக் காரரினாலும்,[1] பின்னர் பிரித்தானியராலும் மீளக் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் இலங்கைப் படைத்துறை இங்கு நவீன முறையில் இராணுவத் தளம் ஒன்றை இங்கு உருவாக்கியது. ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவு
    1 point
  7. ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். “கடகத்தின்” பின் இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக இது அமைகிறது. குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பணியெனவும், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும் இதைக் குடித்தால் வெறிக்கும் அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம். பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும். பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாச் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
    1 point
  8. From the album: Jaffna Port

    யாழ்ப்பாணத்து துறைமுகம்
    1 point
  9. மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து. https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்#/media/File:Jaffna_montage.jpg......
    1 point
  10. உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
    1 point
  11. நெடுந்தீவு குதிரைகள். ஐரோப்பிய காலனித்துவ காலத்தின் சான்றுகளை முன்வைக்கும் ஓர் இயற்கை மரபுரிமை எச்சங்களாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட இவை மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன. இது அக்காலகட்டத்தில் குதிரைகள் ஏராளமாக இருந்ததற்கு சான்று பகர்கின்றன. இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு மட்டக்குதிரைகள் , கோவேறுகழுதைகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன. நெடுந்தீவு நிலத்தின் கடந்தகாலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்கும் இக்குதிரைகள் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இங்கே இருக்கும் மூத்த பிரஜைகள் தங்களுடைய தீவு பற்றிய ஞாபகங்களில் குதிரைகள் பற்றிய ஏராளம் கதைகளைப்பகிர்கின்றனர். தீவில் குதிரைகளை அடைத்து வைப்பதற்கான லாயங்களும் , குதிரைகளை பராமரிக்கும் மூலிகை தொட்டிகளும் இன்னும் காணப்படுகின்றன. இங்கிருக்கும் பெருக்க மரம் குதிரைகளின் உணவு , மூலிகைத்தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். சிலர் வெடியரசன் காலத்தில் இங்கே சுதேசிகளும் குதிரைகளை பயன்படுத்தினார்கள் என்றும் , குதிரைகள் வர்த்தகம் , பொதி சுமத்தல் , போர் என்பவற்றுக்கு பயன்படுத்த பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஐரோப்பியருக்கு பிறகு நிலச்சுவாந்தார்கள் , சில குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்காக குதிரைகளை பராமரித்து பயன்படுத்தி வந்ததாக அறிகின்றோம்.அத்தோடு அரசாங்கம் இக்குதிரைகள் திரியும் தரவைகள் , காடுகள் , மேய்சல் நிலங்களை அடையாளப்படுத்தி அவற்றை “விலங்குகள் சரணாலயமாக ” அறிவித்துள்ளது . அத்தோடு பிரதேச சபை , கடற்படை , மற்றும் மக்கள் இணைந்து தொட்டிகள் நீர் நிலைகளை அமைத்து இக்குதிரைகள் பசி தாகத்தால் இறப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள் செய்கின்றனர். குதிரைகளை பிடிப்பத் வளர்ப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது எனினும் பரம்பரையாக குதிரைகளை கொண்டவர்கள் அவற்றை பராமரிக்கின்றனர். நெடுந்தீவின் மரபுக்கதைகளை ஞாபகமூட்டும் உயிரினங்களாகவும் தங்களுடைய அடையாளமாகவும் மக்கள் இவற்றை பார்க்கின்றனர் . ஆதாலால் நெடுந்தீவின் தொன்மங்களுகுள் இவற்றையும் தொன்ம யாத்திரை பதிவு செய்கின்றது. போதிய பராமரிப்பும் விழிப்புணர்வும் இன்மையால் இவை இப்போது அழியும் அபாயத்தில் உள்ளன. இனப்பெருக்கம் செய்ய முடியாதவையாக இஅவை இருப்பதனால் இவற்றிகு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றது .
    1 point
  12. From the album: முள்ளிவாய்க்காலும் அதன் பின்னும்

    சர்வதேசம் சுயநலனுக்காக முண்டுகொடுத்து பலமாக்கிய சிங்கள இராணுவ மேலாதிக்கத்தின் விளைவு, ஈழத்தீவில் அடிமைகளாய் தமிழ் சந்ததி.

    © unknown media photo

    1 point
  13. சுப்பிரமணியம் பூங்கா, 1950களில் அப்போதைய யாழ்ப்பாணம் நகரசபையால் உருவாக்கப்பட்டது. உள்ளூர் மருத்துவரான எஸ். சுப்பிரமணியம் இதற்குத் தேவையான பெருந்தொகைப் பணத்தை நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.இதனால் இப்பூங்காவுக்கு அவருடைய பெயரில் சுப்பிரமணியம் பூங்கா எனப் பெயரிடப்பட்டது.
    1 point
  14. கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது. சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924 இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது. இதற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் 1790 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் அமைக்கப்பட்டு 2013.03.21 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. - Long: 288.35m - Wide: 16.5m - Funded: Japan International Corporation Agency - (JICA) - தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதல் பாலம் - இலங்கையின் 3வது நீளமான பாலம்
    1 point
  15. வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. இக் கடற்கோட்டை ஆனது ஊர்காவற்றுறை – காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோட்டையில் இருந்து இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே செல்லும் கப்பல்களை அவதானிக்கலாம். யாழ் குடா நாட்டின் வெளித்தொடர்புகளை கட்டுப்படுத்தக் கூடிய கேந்திர ஸ்தானமாக அமைந்துள்ளது. இது பன்றியின் கால் வடிவத்தில் அமைந்துள்ள படியால் ஒல்லாந்தர் தமது மொழியில் இவ்வாறு அழைத்தனர்.ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணி பாதுகாக்கப்பட்ட இக்கோட்டை 1795 இல் பிரிட்டிஷ்காரரிடம் சரணடைந்த பிற்பாடு சிறைக்கூடமாகவும் மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. 2ம் உலக யுத்த காலத்தில் இது கடல் ஆகாய மீட்பு நிலையமாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாக விளங்கியது. மேற்கூறப்படும் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதியாக இருந்தது. சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. அலுப்பாந்திக்கு நேராக இருப்பதனால் இலங்கைத்தீவின் கடல் நீர்ப்பரப்பிலிருந்து யாழ்ப்பாண கடல் நீரேரிக்குள் பிரவேசிக்கும் கப்பல்களை இங்கிருந்தே கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் முடிந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாக விளங்கியது.
    1 point
  16. இம் மணிக்கூட்டுக் கோபுரமானது 1877 தொடக்கம் 1884 காலப் பகுதியில் “சேர் ஜேம்ஸ் லோங்டன்” என்பவர் நிறுவகித்துக் கொண்டிருந்த போது இங்கு விஐயம் செய்த “றோயல்” குடும்ப அரசரால் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வடிவமைப்பை அரசாங்க கட்டட கலைஞர் “சிமித்தர்” அவர்கள் மேற்கொண்டார். போரால் பாதிக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு 2000 ஆம் ஆண்டில் விஐயம் செய்த இளவரசர் சாள்ஸ் அவர்களால் 4 மணிக்கூடுகள் வழங்கப்பட்டது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.