Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7,591

  • Content count

   59,929


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7,475

  • Content count

   38,937


 3. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6,748

  • Content count

   28,205


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4,959

  • Content count

   23,414Popular Content

Showing most liked content since 12/13/2009 in all areas

 1. 34 points
  இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு. முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்... ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திரங்களில் அவர்களைப் பார்த்தேன். நெஞ்சு நிமிர்த்திக் கால் மிதந்து திரிந்தது. ஒவ்வொரு மண் துகளும் உயிர்கொண்டிருந்தது. இரணைமடு தென்னிந்திய இலக்கியம் சித்தரித்த காவிரியை விஞ்சி நின்றது. எமது மக்கள் நான் வெளியேறிய போது இருந்ததிலும் பாhக்க அதிகம் அன்போடும் மெருகோடும் இருந்தார்கள். துயிலும் இல்லங்களில் அறியாதவர்களைக் காணவும் உணரவும் முடிந்தது. பண்டிதரும் வாகீசனும் மட்டுமல்ல, ஒவ்வொரு குறியீடுகள் கொண்டிருந்த ஒவ்வொரு பாசறைகள். எத்தனை முகங்கள்... குறிப்பாக ஒரு முகம். ஆட்டி பிரிவின் மிகப்பெரும் பொறுப்பாளர். ஆட்டியினை மட்டும் அன்றி அந்தப் படையணிகளையே வேப்பங்குச்சியினால் பல்லுக்குத்துவது போல் மிகச் சாதாரணமாகக் கையாளக்கூடிய அந்த மாபெரும் ஆழுமை. விடுப்புப் பாக்கப்போன என்னைப் போன்ற கொஞ்ச வெறும் பயல்களிற்கு, ஒரு மாலைப் பொழுதில், அந்த உபகரணத்தையும் அது சண்டைகளில் எவ்வாறு நகர்த்தப்படும் என்றும் விளக்கிக் காட்டும் படி அந்த மனிதரிடம் கூறப்பட்ட போது, இயல்பில் வெக்கறையான அவரின் குழந்தைத் தனம் மனதில் பதிந்தது. புதிய மனிதர்கள் முன் கதைக்க முடியாது அவரிற்கு நாக்கு ஒட்டி வியர்த்து. அம்மாவின் பின்னால் ஒளியும் ஒரு குழந்தை போல் ஆகிப்போனார். உயரம் குறைவான அவர், பேசமுடியாத பதற்றத்தில் எங்களின் மூக்குவரை அண்மித்து வந்து பேசமுடியாது அண்ணாந்து நின்ற படி, ஆட்டியினை 'இவர்' என்று மட்டும் திருப்பத்திருப்பக் குறிப்பிட்டமை நெகிழச்செய்தது. அந்த மாபெரும் வீரன் என்றைக்கும் மனதில் மறையாதபடி பதிந்தது போல் ஏராளம் பதிவுகள் உள்ளேறிய பயணம் அது. பாண்டியனும் சேரனும் உண்பதெல்லாம் அமுதம் என்றுணர்த்திய படி துரை அண்ணையின் சமையலோடு போட்டிபோட்ட பயணம் அது. அந்தப் பயணத்தில், ஊரில் நடந்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்று தான் சொல்லவேண்டிய வகையில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பெருமை உள்ளுரப் பிரவாகித்துக்கொண்டிருந்தது. அந்தப் பயணம் முடிகையில், கனடா சென்று துரிதமாய் சில விடயங்களை முடித்துக் கொண்டு ஊரிற்கு நிரந்தரமாய் மீளவேண்டும் என்று முடிவெடுத்து விமானம் ஏறினேன். இங்கு வந்த பின்னரும் தேனிசைச் செல்லப்பா தமிழீழம் கிடைத்த நாளைப் விபரித்துப் பாடிய பாடல் தேயும்வரை திருப்பத்திருப்ப வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயணம். சாரதி எத்தனையோ தடவை பகுத்தறிவிற்குக் கட்டுப்பட்டு நிற்பாட்டிய பிரயாணம். இறுதியில், இம்முறை போவதென்று முடிவெடுத்த பின்னர், குறைந்தபட்சம் சில விசாரணைக் கேள்விகளைத் தன்னும் கட்டுநாயக்கா குடிவரவுப் பகுதியில் எதிர்கொள்ள நேரிடும் என்று பதற்றத்துடன் இருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கியபோது, இற்றைக்கு 23 ஆண்டுகளின் முன்னர் கனடாவில் அகதியாக இறங்கிய போதிருந்த மனநிலையில், முளங்கால்கள் பக்கிள் அடிக்க, கண்களை நேராக மட்டும் பார்த்தபடி நடந்து போனேன். ஆனால் குடிவரவு மேசையில் எனது முறை வந்தபோது, ஏன் வருகிறாய் என்ற கேள்வி கூட அங்கிருக்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கிய இருபது நிமிடத்திற்குள் பொதிகளையும் சேகரித்து வெளிவந்துவிட முடிந்தது. கொழும்பில் ஒரு நாள் நின்று விட்டு யாழ் செல்ல வாடகைக்கு அமர்த்திய வாகனச்சாரதி 'கிளிநொச்சி சிங்கப்பூர் மாதிரி இருக்கும் பாருங்கோ' என்று ஏகப்பட்ட பில்டப் தந்தார். கிளிநொச்சி நிச்சயம் எனக்குச் சிங்கப்பூராகத் தெரியப்போவதில்லை என்பதை அவரிற்குச் சொல்லத் தோன்றவில்லை. மிகவும் வயது குறைந்த அந்தச் சாரதியிடம் எங்கள் இனத்தவன் அவன் என்ற பரிவு எழுந்தது. தம்பி ோன்று ஒரு உணர்வு. மிகச் சாதாரணமாக ஏகப்பட்டதைப் பேசிக்கொண்டு போனோம். அந்த சில மணிநேர பயணத்துள் அவனிற்கு வந்த தொலைபேசி அழைப்புக்களில் எல்லாம், 'வெளிநாட்டுக் காரரை ஏற்றிக் கொண்டுபோகிறேன்' என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கரைந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சகஜமான உரையாடல் வழியாக அவனுடன் எனக்கு ஒரு அன்னியோனியத்தை உருவாக்கியதாக நானுணர்ந்த போதும், அவனைப் பொறுத்தவரை நான் ஒரு வெளிநாட்டுக் காரன் மட்மே. தெருவோரமாய் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வெள்ளைக் காரனிற்கும் எனக்கும் இடையே அந்தச் சாரதித் தம்பி கண்ட ஓரே வித்தியாசம் எனக்குத் தமிழ் கதைக்கத் தெரியும் என்பது மட்டுமே. அதுவும் ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் அவனும் வளர்ந்திருந்தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழ் தெரிந்த வெளிநாட்டுக் காரன். ஏதோ ஒரு நெருடல் உள்ளுர உணரப்பட்டது. இதைப் பற்றி பின்னரும் சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். தமிழீழம் வரவேற்கிறது புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பாதையோரத்தில் எங்கெல்லாம் எம்மைப் புல்லரிக்க வைத்த விடயங்கள் முன்னர் இருந்தனவோ அங்கெல்லாம் இப்போ நாம் தோற்றுப் போனதை முகத்தில் அறைந்து சொல்லும் சித்தரிப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன. இறந்த சிங்கள இராணுவத்தினரின் கட்டவுட்டுக்கள் அங்கங்கே அவர்களின் இராணுவ தரத்துடன் நமிர்ந்து நிற்கின்றன. மகிந்தரை வாழ்த்தும் செந்தமிழ் கவிதைகள், ஸ்த்தூபிகள் என அங்கு நாங்கள் இருந்தோம் என்பதே தெரியாதபடி அந்தச் சித்திரத்தை அவர்கள் முற்றாக அழித்து எழுதியிருக்கிறார்கள். எங்கள் காலம் என்று ஒன்றிருந்ததற்கான ஆதாரம் எதுவும் அங்கில்லை. கண்கள் நப்பாசையில் பாண்டியனையும் சேரனையும் கட்டுமானங்களையும் வரியுடைகளையும் காவற்துறையினையும் தேடத்தான் செய்தன. பண்டிதர் ஒழுங்கையோரம் கண் போகத் தான் செய்தது. புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பயணம் எந்த உரையாடலும் இன்றி நிகழ்ந்தது. வாகனத்தின் சத்தம் பின்னணியில் இருக்க எனது மனம் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலகாசன் கண்ட காட்டூண்களாக் குளம்பிக் கிடந்தது. நான் அறிந்திருந்த, இப்போது இல்லாத முகங்கள் அந்தரத்தில் தொங்கிக் கதைத்துக் கொண்டிருந்தன. நான் கண்ட இப்போது இல்லாத எங்கள் படையணிகள் இலக்கின்றி வியூகத்தில் நகர்ந்த படி என்னைப் பார்த்துச் சிரித்த முகங்களாய்க் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. எனது சனங்கள் ஊர்விட்டு ஊர் பொதிகளுடன் ஏதிலிகளாக நடந்துகொண்டிருந்ததும் சிதறிக்கிடந்ததுமான காட்சிகள், ற்றான்சிசன் சீன்களாக, எரிந்த மண்ணையும் வியூகத்தில் நகரும் படையணிகளையும் அந்தரத்தில் தொங்கும் முகங்களையும் மாற்றிமாற்றிக் காட்டுவதற்காக வந்து போய்க்கொண்டிருந்தன. அங்கங்கே எழுந்து நின்ற திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புச் சின்னங்கள் கண்ணில் பட்டபோதெல்லம் நிஜத்தில் யாரோ எனது நெஞ்சில் குத்தியதுபோல பௌதீகமாக என்னால் நோவினை உணர முடிந்தது. நத்தார் மரத்தில் பூட்டிய சோடனைகள் போல் தொங்கிக் கொண்டிருந்த முகங்கள் எமது வாகனத்தின் மீது என் மனத்திரையில் தொடர்ந்தன. வலி வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. சாரதிக்கு வந்த தொலைபேசியில் அவன் 'வெளிநாடடுக்காரரை ஏத்திப் போய்கொண்டிருக்கிறேன்' என்று மீண்டுமொருமுறை ஆருக்கோ சொன்னபோது சுயநினைவு மீண்டது. ஊரில் ஒருவருடன் இது பற்றிப் பேசியபோது அவர் கூறினார். முதற்தரம் அப்பிடித்தான் எனக்கும் இருந்தது. எல்லோரிற்கும இருக்கும். பிறகு பழகிரும் என்று. முறுகண்டி முறுகண்டியில் வாகனம் நின்றதும் நலிந்த உடல் கொண்ட தமிழர் ஒருவர் அண்மித்தார். தான் போரில் பாதிப்புற்றதாயும் உதவுமாறும் கேட்டார். வாழ்வேமாயம் கமலகாசன் றேஞ்சிற்கு இருமிக்காட்டினார். சுhரதி கண்ணைக் காட்டி அழைத்து அவர் ஒரு வழமையான குடிகாரர், இப்போதும் பையிற்குள் சிறுபோத்தலோடு வெறியில் தான் நிற்கிறார், என்றார். அவரிற்கு வெறியோ இல்லையோ, அவர் பாதிக்கப்பட்ட மனிதர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெரிந்தது. ஆனால் சாரதி என்னோடு கதைப்பதைக் கண்ட அவர் தனது குட்டு வெளிப்பட்டதாய் நினைத்து நான் திரும்பும் முன்னர் அப்பால் சென்று விட்டார். அவரது உருவம் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை குடிக்கு அடிமைத்தனம் என்பது ஒரு நோய் தான். அந்த நோய் வருவதற்கும் நிலைப்பதற்கும் ஏகப்பட்ட பின்னணிக்க காரணிகள் உள்ளன. ஊரில் நின்றுவிட்டு ஊரை விட்டு வருகையில் முறுகண்டியில் வேறு ஒருவர் வந்து மேற்படி அதே ஸ்க்கிறிப்ற்றைச் சொன்னபோது, முன்னைய உறுத்தல் நீங்க அவரிடம் கையில் இருந்த ஐந்நூறு ரூபாய்த் தாழைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அவர் தொடர்ந்து தனது ஸ்க்றிப்ற் பிரகாரம் பேசிக்கொண்டிருந்தார். இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களை வெளிநாட்டுக்காரர் என இலகுவில் அடையாளப்படுத்தி விடுகிறார்கள். விருந்தோம்பல் ஊரிற்குப் போன உணர்வினை ஒருவன் தந்தான். தடுப்பில் இருந்து மீண்டிருக்கும் ஒரு போராளியிடம் தான் அந்த உணர்வை முதன்முதலில் உணர முடிந்தது. அவனிற்கு ஏகப்பட்ட பணப்பிரச்சினை. நான் போனவுடன் தேத்தண்ணி போடத் தேவையான சாமான் வாங்க கடைக்கு வெளிக்கிட்டான். எவ்வளவோ தடுத்தும் கேட்காது கடைக்கு அவன் வெளிக்கிட, சரி நானும் வருகிறேன் எனக் கூடிச் சென்றேன். கடையில் நான் கடைக்காரிடம் பில்லிற்கான தொகையினைக் கொடுக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன். அடம்பிடித்துத் தடுத்தவன் இறுதியில் வெகுண்டுபோய் சொன்னான், 'அண்ணை, என்னை நீங்கள் தேத்தண்ணி கூடத் தரமுடியாதவன் என்று பாக்கிறியள் என்ன' என்று. எனது கண்கள் சுரந்ததை என்னால் அடக்கமுடியவில்லை. வெளிநாட்டில் இருந்து போகும் எவரும் விருந்து வேண்டி அங்கு போவதில்லை. தடுப்பில் இருந்து வந்தவன் தந்த தேத்தண்ணியினை மிஞ்சும் விருந்தினை எந்தக் கொம்பனாலும் எத்தனை லட்சம் செலவளித்தும் தர முடியாது. ஆனால் அங்கிருப்பவர்களிற்கு இப்போது புலம் பெயர்ந்தவர்கள் 'வெளிநாட்டுக் காரார்கள்'. செஞ்சிலுவைச் சங்கம் போன்று ஒரு கட்டமைப்பினர். நிவாரணம் தருபவர்கள். பெரும்பாலும் அவ்வளவு தான். வைத்தியர் ஒருவர் பல்வேறு காரணங்களால் உளவியல் பாதிப்பிற்குள்ளாகி—பொதுமைக்காகப் பேரிழப்பைச் சம்பாதித்த அர்ப்பணிப்பு மிக்க குடும்பப் பின்னணி--அதனால் குடிக்கு அடிமைப்பட்டுப்போன ஒரு இளைஞன். அங்கு இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடி தொலைபேசி அழைப்பின் மூலம் கடனிற்குச் சாராயமோ கசிப்போ பலரிற்குப் பெற முடிகிறதாம். ஆதனால் குடிக்கு அடிமையாதல் இலகுவாக இருக்கிறது. புலத்தில் எந்தப் பதார்த்தத்திற்கும் அடிமைப் படல் ஒரு நோயாகவே பார்க்கப் படுகிறது. ஆனால் ஊரில் குடிகாரனைத் திட்டும் மனநிலை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது. பொதுமக்கள் அவ்வாறு நடந்து கொள்வது எதிர்பார்க்கக்கூடியது, ஆனால் உளவியல் வைத்தியரே பொறுப்பற்றுப் பேசின்? மேற்படி இளைஞனின் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த இளைஞன் சுயநினைவின்றி இருந்தான். இந்நிலையில் அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு சும்மா வரமுடியவில்லை. அவன் நினைவு பெறும்வரை காத்திருந்து அவனுடன் இயன்றவரை உரையாடி வைத்தியரிடம் வருவதற்கு அவனைச் சம்மதிக்க வைத்து மறு நாள் ஒரு உளவியல் வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அந்த இளைஞன் முன்னரும் அந்த வைத்தியரிடம் சென்றிருந்தமையால் அது சாத்தியப்பட்டது. யாழ்ப்பாண ஆஸ்ப்பத்திரியில் வைத்தியர்கள் என்பவர்கள் பயப்படவேண்டியவர்களாகக் கொம்பு முளைத்தவர்களாக நடந்து கொள்கிறார்கள். தாதிகள் முதற்கொண்டு அத்தனை ஊழியர்களும் சேர் சேர் என்று வைத்தியரைப் பயந்து நடுங்கி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ வைத்தியர் முழுங்கிவிடுவார் போன்று அந்த ஊழியர்கள் நடுங்குகிறார்கள். இது ஊழியரின் நிலை என்றால் நோயாளிகள் நிலை சொல்லத் தேவையில்லை. வைத்தியரைப் பார்க்கும் முறை வந்ததும் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். நாங்கள் இருந்ததும் வைத்தியர் கூறிய முதல் வாசகம் 'இவைக்கு ஆட்டம்' என்பதாக இருந்தது. உளவியல் வைத்தியரின் சம்பாசனை இவ்வாறு ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்காததால் சற்றுச் சுதாகரித்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பின்னர் இயலுமான நிதானத்தோடு விளங்கவில்லை என்றேன். வைத்தியர் சொன்னார், 'ஆட்டம் என்பது தமிழில் ஒரு சரியான vulgarறான பதம். அதைத் தான் இவர்களை நோக்கிப் பிரயோகித்தேன்' என்று. எனக்குள் கோவம் பிரவாகிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தக் கட்டத்தில் எனது தேவை அந்த இளைஞனிற்கான மருத்துவ சேவையினைப் பெறுவது மட்டுமே. மேலும் நான் அங்கு நிற்கும் சொற்ப நேரத்தில் வேறு வைத்தியரைக் கண்டு பிடிப்பதோ, சந்திப்பிற்கான நேரம் பெறுவதோ சாத்தியமில்லை. மேலும் மற்றைய வைத்தியர்களும் ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இவரைப் போலவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். கோபத்தைக் கட்டுப்படுத்தி சொல்லவேண்டியதைக் காத்திரமாக ஆனால் நிதானம் தப்பாது சொல்வதற்கு எனக்குத் தோன்றிய ஒரே உத்தி எங்கள் உரையாடலை ஆங்கிலத்தில் நிழத்துவது என்பதாக இருந்தது. எனவே எனது மூச்சைக் சீர்ப்படுத்திக் கொண்டு, அந்த இளைஞனோடு முன்னைய நாள் இரவில் நான் கதைத்தவற்றின் சாராம்சத்தையும் அவன் எனக்குக் கூறியவற்றையும் ஆங்கிலத்தில் வைத்தியரிடம் கூறினேன். அவனது சரித்திரம் தனக்குத் தெரியும் நான் சொல்லத் தேவையில்லை என்பது போல் வைத்தியர் ஆரம்பித்தாலும் சில நொடிகளில் அவரது நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது. தனது கோபத்தின் காரணம் அந்த இளைஞனோ அவனது குடும்பத்தவரோ ஒழுங்காகத் தொடர்ந்து தன்னிடம் வருவதில்லை என்று வைத்தியர் சொன்னார். ஆங்கிலத்தில் உரையாடல் நகர்கையில் முன்னைய சொறித்தனம் மாறி வைத்தியரும் நாகரிகத்துடன் பேசமுனைந்தார். அந்த இளைஞனை வாட்டில் அனுமதித்துத் திரும்பினேன். ஊரில் வைத்தியர் மட்டுமல்ல அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை பணியாளர்கள் கதைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். காட்டுமிராண்டித் தனமான கத்தல்கள் தான் அவர்களிற்குத் தெரிகிறது. இதற்கு முதற்காரணம் துறைசார் விடயங்களை தொழில் சார் நிபுணர்கள் பொதுமக்களிடம் மறைத்து வைக்கிறார்கள். தமது துறைசார் அறிவை அஸ்த்திரமாகப் பிரயோகிக்கிறார்கள். ஒரு மெக்கானிக் ஒன்றைத் திருத்தும்போது தான் திருத்திய பிழையினை விபரிக்க மறுக்கிறார் 'திருத்தியாச்சு, இனிப் பிரச்சினை தராது, தந்தால் கொண்டு வாங்கோ' என்று மட்டும் தான் கூறுகிறார். இதுபோல் தான் வைத்தியர் முதற்கொண்டு அங்கு அனைவரும் இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகள் தேசமாகக், கத்துவதற்கு மட்டுமே கற்று வைத்திருக்கிறார்கள். உரையாடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பொது மக்களும் தலையைச் சொறிந்தபடி குனிந்து நின்று சேவைபெற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள், ஏனெனில் அவர்களிற்குத் தெரியும் ஒரு இடத்தில் தாம் கத்து வாங்கினாலும் தாமும் கத்துவதற்கான சந்தர்ப்பம் தம்மிடம் உள்ளதென்று. முதலில் மேற்படி வைத்தியரைப் படம் எடுத்து அவரது பெயருடன் இவ்விடயம் பற்றி விரிவாக நடவடிக்கை எடுக்கத் தான் நினைத்தேன். ஆனால் பின்னர் புரிந்தது அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே அப்படித் தான் இருக்கிறார்கள். அந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் தான் அவர்களது தொழிற்கலாச்சாரம். அந்த வைத்தியர் அந்தக் கலாச்சாரத்திற்குள் ஒருவர். அவ்வளவு தான். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் கனடாவில் வாழ்வதற்காக உள்ளுர நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். தலைமைத்துவ வெற்றிடம் அரசியலலை விட்டுவிடுவோம். சமூகத்தின் அன்றாட இயக்கம் என்பது மாலுமித் தலைவன் இல்லாத கப்பல் போல் அங்கு சென்று கொண்டிருக்கிறது. புலிகள் ஏகப்பட்ட கட்டமைப்புக்களை வைத்திருந்தார்கள். புலிகளிற்குப் பின் சமூகம் சார்ந்து கற்பனையுடனும் பெட்டிக்கு வெளியேயும் சிந்தித்துச் செயற்படும் தலைமைத்துவம் அங்கு மறைந்து போயுள்ளது. அவரவர் தத்தமது விடயங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள். ஊரிற்குள் கோயில் சார்ந்தும் இதர பொதுமைகள் சார்ந்தும் கன்னைகட்டி கட்டிப்புரண்டு சண்டை செய்கிறார்கள். அதிகாரத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தத்தமது மட்டத்தில் தமக்குத் தெரிந்த வகைகளில் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் தமக்காக மட்டும் தான் பிரயோகிக்கிறார்களே அன்றி சமூகம் என்ற சிந்தனை அங்கு அறவே இல்லை. இன்னமும் சொல்வதானால் அணைவுகள் அங்கு அஸ்த்திரங்களாக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன. தமிழர் தேசியக்கூட்டமைப்பு அல்ல எந்த தற்போதைய தலைமைகளும் (அது கிராம மட்டமாகினும் மாகாண மட்டமாகினும்) கற்பனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூக இயந்திரம் ஏதோ தொழிற்படுகிறது. பிரச்சினைகள் யாருடன் கதைதாலும் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஓயாது கதைக்கிறார்களே தவிர எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் புதிய தீர்வையும் அவர்கள் கண்டடைய முனைவதாகத் தெரியவில்லை. வயலில் அரிவி வெட்டும் இயந்திரம் முதலாக அங்கங்கங்கே தொழில் நுட்பங்கள் பாவiனியில் உள்ளபோதும் பெரும்பாலும் பழைய வழிகளிற் தான் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரில் இப்போது எல்லாம் கூலிக்கு ஆட்கள் பிடிப்பது மிகக் கடினம். இதை நேரடியாக ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடிந்தது. ஒரு கூலியாளிற்கு நாளிற்கு 1000 ரூபாய் ஊதியமும், ஒரு நேர மீன் சாப்பாடும், மூன்று தேனீரும், மிக்ஷர் புகையிலை வெற்றிலை முதலியனவும் கொடுத்தால் தான் வருகிறார்கள். அப்போதும் ஒரு நாளினை ஓட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்களே அன்றி வேலையினைப் பொறுப்பெடுத்து முடிக்கும் மனநிலை வேலையாட்களிற்கு இல்லை. நேரம் என்பது அங்கு ஒரு பொருட்டே இல்லை. இது பற்றி அங்குள்ளவர்களுடன் கதைத்தபோது இது பற்றி அவர்களும் ஏகப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் அனைவரும் பிரச்சினைகள் பற்றித் தான் பேசுகின்றார்கள் அன்றி எவரும் தீர்வு பற்றிச் சிந்திப்பதாய் இல்லை. கூலிக்கு வேலை செய்யும் ஒருவரிடம் ஒருநாள் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்போது இதுபற்றிக் கதைக்கையில் நான் அறிந்து கொண்டது என்னவெனில், கூலி வேலை என்பது அப்பப்போ தான் வருகிறது. அதில் வரும் ஊதியம் சேர்த்துவைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால் கூலி வேலை செய்யும் அனைவரும் வாழ்வினைக் கொண்டுசெல்லப் பல தொழில்கள் செய்கிறார்கள். உதாரணமாக நான் கதைத்த மனிதர் காலையில் சீவல் தொழில் முடித்துத் தான் கூலி வேலைக்கு வருவாராம். அத்தோடு மரம் வெட்டும் வேலைக்கும் போவாரம். கூலி வேலைக்கு யாரிடமேனும் வருவதாகத் தான் ஒத்துக் கொண்டாலும் திடீரென மரம் வெட்டும் வேலை வரின் தான் அங்கு சென்று விடுவாராம் ஏனெனில் அதில் வருமானம் அதிகமாம். மேற்படி விபரத்தைக் கேட்கையில் இந்தப் பிரச்சினை பின்வருமாறு தான் எனக்குப் புரிந்தது. அதாவது. கூலியாட்களிற்கு வருமான உத்தரவாதம் தான் பிரச்சினையாக இருக்கிறது. கூலிக்கு ஆட்கள் தேடுபவர்களிற்கு நிர்ணயிககப்பட்ட விலையில் குறித்த நேரத்தில் வேலை முடிப்பதற்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் கூலியாட்கள் எந்தவொரு நிறுவனமாகவோ கட்டமைப்பாகவோ இயங்கவில்லை. மேலும், இன்றையத் தேதிக்கு உள்ள தொழில் நுட்பங்கள் பெரிதாக அங்கு பாவனையில் இல்லை. மரத்தைக் கோடரியால் தால் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள், வேலிக்குக் கம்பிக்கட்டை கோடரியால் தான் தறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் வேலி அடைக்கையில் அலவாங்கால் தோண்டி சிரட்டையால் தான் மண் அள்ளுகிறார்கள். பிரச்சினையினையும் தேவையினையும் பார்க்கையில் தீர்வு மிக இலகுவானதாக இருந்தது. அங்குள்ள ஒரு பெருங்காணிக்காரரிடம்--அவர் பல லட்சங்களைக் காணி வேலைகளிற்காகத் தொடர்ந்து செலவளித்துக்கொண்டிருப்பவர். அத்தோடு ஓயாது தினமும் கூலியாட்கள் பிடிப்பதில் உள்ள தலையிடி பற்றி நொந்து பேசிக்கொண்டிருப்பவர்--மேற்படி பிரச்சினையினை உடடினடியாகத் தீர்கக்கூடிய, முதல் நாளில் இருந்து பணம் ஈட்டக்கூடிய ஒரு வியாபாரத் திட்டத்தை விளக்கமாகக் கூறினேன். ஆனால் அதை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சினைகளும் அவ்வாறே தொடரும் என்றே தோன்றுகிறது. சிறு முதலீடுகளுடன் (15 ஆயிரம் டொலர்கள் அளவில்) மேற்படி கூலியாட்கள் பிரச்சினை தொட்டு ஏகப்பட்ட பிரச்சினைகள் அங்கு தீர்க்கப்படக்கூடியன. அவை பிரச்சினை என்பதைக் காட்டிலும் வியாபார சந்தர்ப்பங்கள். அரசியல் முதலான பிரச்சினைகளைச் சந்திக்காது, றாடாரிற்குக் கீழாக இயங்கக்கூடிய முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் இவை. ஆனால் வெளிநாட்டில் இருந்தபடி அவற்றைச் செய்யமுடியாது. அங்கிருப்பவர்களிற்கோ கற்பனை போதவில்லை. நான் பார்த்தவரையில் மக்களின் சிந்தனை விரியவில்லை. பல கட்டுப்பட்டித் தனங்களும் காலதிகாலமான தழைகளும் அப்படியே இருக்கின்றன. எந்தப் பிரச்சினையினையும் தீர்ப்பதற்கு வரையறுக்கப்பட்டவர்களைத் தான் பார்க்கிறார்களே அன்றித் தம்மால் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற சிந்தனையினை அங்கு அறவே காணமுடியவில்லை. சாதி நான் நின்ற வீட்டின் குடும்பத்தாரிற்குப் பாரம்பரியமாகச் சாதி சார் தொழில்கள் புரிந்து வரும் பலரும் அவர்களது சந்ததியினரும் வெளிநாட்டுக் காரரைப் பார்க்க வந்தார்கள். 23 வருடங்களின் முன்னர் நான் பார்த்த நடைமுறைகள் சற்றும் மாறாது அப்படியே இருந்தன. ஒரு வயதான சலவைத்தொழிலாளி. அவர் வந்து வெளியில் நிலத்தில் அமர்ந்தார். அப்போது கதிரையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுச் சிறுவன், எழுந்து தன் கதிரையினைத் தூக்கிச் சென்று அவர் அருகில் போட்டு, தனக்குத் தெரிந்த கொன்னைத் தமிழில் 'இந்தாங்கோ இருங்கோ' என்று சொன்னான். வீட்டுக்காரர் முகம் இறுகி இருந்தது. அந்த முதியவர் 'ஐயா கதிரை போடுது' என்று சிரித்துச் சமாளித்து விட்டு, எழுந்து சென்று வேலியோரமாகத் தனது வெற்றிலையினைத் துப்பி விட்டு மீண்டும் வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். கதிரை காலியாகவே இருந்தது. லீசிங் வாகனங்கள் வீடுதோறும் நிற்கின்றன. எல்லோரும் லீசிற்குத் தான் வாகனம் எடுக்கிறார்களாம். ஒரு காலத்தில் சேமிப்பு மற்றும் வட்டிவீதம் முதலிய விடயங்களில் அடிப்படை அறிவினை இயல்பாகக் கொண்டிருந்த எமது மக்கள் இன்று வெற்றிகரமாக குருட்டு நுகர்வோர் ஆக்கப்பட்டுள்ளார்கள். சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தாயும் தந்தையும் அன்றாடச் செலவிற்கு அல்லாடும் குடும்பங்களிலும் குழந்தைகள் கைப்பேசியினை புதிய மொடல்களிற்குக் கடன்பட்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுத்தொகை கட்டமுடியாது போய் பறிமுதலாகும் சொத்துக்கள் சார்ந்து தற்கொலைகள் தினம் நிகழ்கின்றன. பத்திரிகைகள் சொல்கின்றன. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் சக்தி, வசந்தம் முதலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரைகைகளைப் பார்த்தபோது புலத்தில் இருக்கும் சிந்தனை வங்குறோத்தான தமிழ் ஊடகங்கள் போலத் தான் அவையும் இருக்கின்றன. இளம் பெண்களையும் ஆண்களையும் கவர்ச்சியாகக் கதைக்க வைத்துப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தான் நிகழ்கின்றனவே அன்றி சிந்தனை என்பது மருந்திற்கும் காணவில்லை. பத்திரிகைகளில் காலதிகாலமாக இருந்து வந்த நொண்டிக் கவிதைகளும் நொடிகளும் கட்டுரைகளும் மட்டமாகவே தொடர்கின்றன. ஞாபக வீதி எல்லோரையும் போல, 23 வருடங்களின் பின்னர் நான் பிறந்து வழர்ந்த ஊரிற்குச் செல்கையில் அங்கு ஞாபக வீதியில் பயணிப்பதும் இழந்தவற்றை மீள வாழ்வதும் தான் எனதும் முதற்குறியாக இருந்தது. பிரிந்தபின் ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பதை அறிவு அறிந்திருந்தபோதும் ஆசை அடம் பிடித்தது. கொத்துரொட்டியில் ஆரம்பித்தேன். கனடாவில் தமிழர்களுடன் கொத்துரொட்டி உண்ணும் போதெல்லாம் நானும் அவர்களும் சொல்வது ஊரில் இருந்த கொத்துரொட்டிக்கு இதெல்லாம் கிட்டவருமா என்பது தான். கொத்து ரொட்டி என்பது வாழை இலையில் சுற்றப்பட்டு பத்திரிகைத் தாழில் வெளியே பொதிசெய்யப்பட்டதாகவே எனது மனதில் இருந்தது. ரொட்டி பேபர் போல மெல்லிதாக மனதில் இருந்தது. ஆனால் ஊரிலும் கொழும்பிலும் இம்முறை கொத்துரொட்டி உண்டபோது, கனடாக் கொத்துரொட்டி தான் நான் முன்னர் இரசித்த கொத்துரொட்டிக்குக் கொஞ்சமேனும் கிட்ட நிற்பதாய்த் தோன்றியது. கனடாவின் கொத்துரொட்டி றெசிப்பி நான் புலம்பெயர்ந்த காலத்தில் புலம் பெயர்ந்தது. அதனால் அது ஓரளவிற்கு என் ஞாபகத்தோடு ஒத்துப் போகிறது. ஊரில் இப்போது கொத்துரொட்டி வாழை இலையில் சுற்றப்படுவதில்லை. பொலித்தீனில் சுற்றப்படுகறது. நான் பிரிந்த கொத்துரொட்டியினை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பணி குடித்தேன். அது அன்று போல் இல்லை. பலாப்பழம் உண்டேன் அது வாடல் பழமாக இருந்தது. சீசன் முடிந்து விட்டது என்றார்கள். பழங்களைப் பொதுவில் இப்போதெல்லாம் பிஞ்சில் பறித்த மருந்தடித்துப் பழுக்க வைக்கிறார்களாம். அதனால் சுவையில்லை என்பது மட்டுமல்ல கலியாண வீடுகள் முதலியவற்றில் வாழைப்பழத்தை மக்கள் உண்பதில்லையாம். அவை சோடனைக்கு மட்டும் தானாம். ஆலங்கொழுக்கட்டையும் பனங்காய்ப் பணியாரமும் அருமையாக இருந்தன. அள்ளி அடைந்து கொண்டேன். பசுப்பால் குடித்தபோது முன்னைய சுவை தெரியவில்லை. ஊரில் இப்போதெல்லாம் மாடுகள் பெரும்பாலும் எருவிற்காக மட்டும் தான் வளர்க்கப்படுகின்றன. இதுபற்றிப் பேசும் போது ஒருவர் சொன்னார் 'இங்கத்தே மாடுகள் ஒரு போத்தல் கறக்கும்' என்று. பறவாயில்லைத் தானே வீட்டுத் தேவைக்கு என்றேன். அவர் சிரித்துக்கொண்டு சொன்னார் 'ஊரில் உள்ள மாடுகள் எல்லாத்தையும் கறந்தால் மொத்தமாய் ஒரு போத்தல் வரும்' என்று. எடுத்து வளர்க்க ஆட்கள் இன்றி வன்னியிலும் தீவுப்பகுதிகளிலும் அலையும் மாடுகள் பற்றி பத்திரிகையில் செய்தி வந்திரிருந்தது. அது பற்றி பால் மா பிரச்சினை பற்றிக் கதைத்த ஒருவரிடம் கூறிய போது அவர் சொன்னார்: ' அப்பிடி நாங்கள் அவற்றை கொண்டு வந்து வளர்த்தால் மாடுகள் தேறியதும், ஓரிரு மாத்தத்தில் அவை தங்கள் மாடென்று கேஸ் போடப் பலர் வருவார்கள் என்று. பிரச்சினை விளங்கிக் கொள்ள முடிந்தது. ஊரில் திருட்டுக்கள் அப்பப்போ நடக்கின்றன. மக்கள் பொலிசில் முறையிடுகிறார்கள். நான் செல்வதற்குச் சில நாட்கள் முன்னர் நடந்த ஒரு திருட்டினை நான் அங்கு நிற்கும் போதே பொலிஸ் திருடனைப் பிடித்து தீர்த்திருந்தது. சிங்களப் பொலிஸ் தான் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பிரச்சினை சார்ந்து சிங்களப் பொலிசிடம் நம்பிக்கையுடன் முறையிடுவது, ஈழத்தில் பொலிசைக் காணாது வழர்ந்த எனக்கு விந்தையாக இருந்தது. வீதிகள் சிறுத்துப் போய்த் தெரிந்தன. கண் பழகப்பழகத் தான் ஞாபகம் சற்று மீண்டது. ஆனால் நான் பிரிந்த வீதிகளிற்கு என்னைப் பரிட்சயமில்லை எனக்கும் அவற்றை உணரமுடியவில்லை. பல்வேறு அபிவிருத்திகள் வீதிகளையும் ஒழுங்கைகளையும் உருமாற்றிவிட்டன. நான் பிரிந்த மரங்களை ஆரத்தழுவவேண்டும் என்று ஆசையோடு சென்றேன். பல மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மீதம் உள்ள மரங்களும் நானும் இந்த இருதசாப்த்தத்தில் பிரிந்து வளர்ந்ததால் பிணைப்பு கிடைக்கவில்லை. என் மரங்களிற்கு என்னைத் தெரியவில்லை. எனக்கும் அவற்றோடு ஒட்டவில்லை. மாமரங்களில் குருவிச்சகைள் பெரும்பான்மை ஆட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தன. பெரிய காடுகளாக எனது மனதில் பதிவாகியிருந்தவை இப்போது பற்றைகளாகத் தெரிந்தன. எனக்குத் தெரிந்த ஊரவர்கள் ஏறத்தாள அனைவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அதனால் நானறிந்தவர்கள் ஊரில் இல்லை. அருமையாக ஒரு சிலரைக் கண்டபோது மகிழ்வாகத் தானிருந்தது. குளங்கள் கிணறுகள் கூட காணாமல் போயுள்ளன அல்லது வற்றிக் கிடக்கின்றன. வல்லிபுரக்கோயில் பிரமாண்டமாக மாறிவிட்டது. சன்னதி பெரும்பான்மைக்கு அப்படியே தான் இருக்கிறது. எரிக்கப்பட்ட தேரினை நினைவூட்டி பெரிய தேர்முட்டி சிறிய தேரை உள்ளடக்கி உயர்ந்து நிற்கிறது. நல்லூர் அப்படியே இருக்கிறது. திருவிழா கோலாகலமாக நடக்கிறது. சன்னதியில் சாமி காவப்படுகையில் நிகழும் ஒலிகள் அறிவைக் கடந்து ஏற்படுத்தும் உணர்வு உடலிற்கு ஞாபகம் இருந்தது. கோயில்களும் பள்ளிக் கூடங்களும் பிரமாண்டமான கட்டிட வளர்ச்சிகளை அடைந்துள்ளன. பள்ளிக் கூட மதில்களில் பும்பெயர் நாடுகளின் ஊர்ச்சங்கங்களின் பெயர்கள் உபயகாரராகப் பதிவாகி இருக்கின்றன. கனேடிய தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புக்களையும் காண முடிந்தது. மொத்தத்தில் ஊரில் என்னால் ஞாபகவீதியில் அதிவேகத்தில் ஓடமுடியவில்லை. கனடாவில் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ்கடையில் கிடைக்கின்ற ஞாபகவீதி ஓட்டம் ஊரில் கிடைக்கவில்லை. ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பது தெரிந்தது தான். இலக்கியங்கள் இம்முனையில் நிறைந்து கிடக்கின்றன. எமது ஞாபகங்கள் நாம் குறித்த நேரங்களில் பிரதி எடுத்தவை தான். அந்தப் பிரதிக்கான காட்சிகளைத் திருப்பச் சென்று தேடுவது சாத்தியமற்றது, ஏனெனில் ஊரும் நாமும் பிரிந்து வழர்கிறோம். எமது அனுபவங்கள் மாறுபட்டவை. எத்தனையோ பிரமிப்புக்களையும் கிழர்ச்சிகளையும் புலப்பெயர்பில் அனுபவித்துவிட்டோம். விடயங்களை உள்வாங்கும் எமது அறிவு நாம் ஊiரைப் பிரிந்தபோது இருந்ததைக் காட்டிலும் பலதூரம் மாறிவிட்டது. ஒரே விடயத்தை அன்றைக்குப் பார்த்தது போல் இன்றைக்குப் பார்க்க முடியாது என்பது ஒரு புறம். மறுபுறத்தில் எமக்குள் முன்னர் பதிவான விடயங்கள் கூட எம்மால் பெருப்பித்துப் பார்த்துப் பழக்கப்பட்டு மறுபதிவாகிவிட்டன. இதனால் எமது ஒறிஜினல் பதிவுகள் எமக்குள் இப்போது இல்லை. அதாவது ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம் எமது ஊர் நினைவுகளை நாம் மனதில் மீள ஓட்டிப்பார்ப்போம். அவ்வாறு நாம் ஓட்டிப் பார்க்கும் போதெல்லாம் எமது பிரிவின் வலி முதலிய உணர்வுகளின் ஆதிக்கத்திலும் எமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்சியிலும் எம் மனத்திரையில் பழைய காட்சிகள் மருவிப் புதிதாக ஓட்டப்படும். பின்னர் அந்த மாறிய காட்சி தான் நான் நமது சிறுபராயத்தில் ஊரில் கண்ட ஒறிஜினல் காட்சி என்று மனம் நம்பத் தொடங்கி மருவிய காட்சி தொடர்ந்து மருவியபடி ஒறிஜினல் தொலைந்து போகும். இதனால் ஊரிற்குப் போய் ஞாபகங்களைத் தேடுகையில் அவை ஊரில் இல்லை. இது நாம் பிறந்த ஊரில் மட்டுமல்ல. உதாரணத்திற்கு ஐந்தாம் வகுப்பில் எனது பெற்றோரோடு நான் ஜால சரணாலயத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தூரத்தில் ஒரு யானைக் கூட்டத்தைக் கண்டு அதனால் பயந்து எனக்கு காய்ச்சல் கூட வநதிருந்தது. 28 வருடங்களின் பின்னர் இம்முறை யாலவிற்கு மீண்டும் சென்றேன். மிக அருகில் சிறுத்தைப் புலி யானை உள்ளிட்ட பலவற்றைப் பார்த்தும் உணர்வு அன்றுபோலில்லை. காரணம் இடைப்பட்ட இந்த 28 ஆண்டுகளில் பல சரணாலங்களிற்குச் சென்று விட்டேன். பார்வை மாறிவிட்டது. தூரத்தில் கண்ட யானைக் கூட்டத்தால் காய்ச்சல் வந்த சின்னப்பொடியன் இறந்து விட்டான். இன்றைய பார்வைக்கு ஏற்ப புதிய அனுபவம் தான் இன்று சாத்தியமே தவிர இறந்துபோன சின்னப்பையனின் பார்வை சாத்தியமில்லை. கொத்து ரொட்டி ருசிக்காததன் காரணமும் இது தான். மொத்தத்தில் ஞாபகவீதி என்பது எனக்குள் தான் இருக்கிறதே அன்றி ஊரில் இல்லை. புலம்பெயர் தேசங்களில் எம்மோடு புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கையில் தான் ஞாபவீதி ஓட்டம் பொதுமைப்படும். ஊரில் நான் பழயதை உணரவேண்டின் கற்பனையில் பார்வையினை மாத்தித் தான் காணமுடியும். அதைச் செய்வதற்கு ஊர் செல்வது அவசியமற்றது! திருகோணமலை மற்றும் சிங்கள தேசம். ஹபறண, கந்தளாய், திருகோணமலை, தம்புள்ள, சிகிரியா, கண்டி, நுவரேலியா, கதிர்காமம், திசமாறகம, ஹிக்கடுவ, பெந்தோட்டை என்று திரிந்தபோது மனம் அமைதியாக இருந்தது. ஏனெனில் கதிர்காமத்தையும் திசமாறகமவையும் தவிர மற்றைய பிரதேசங்கள் நான் முன்னர் சென்றிராதவை. அதனால் ஞாபகவீதி ஓட்டம் ஒப்பீடு போன்ற தொல்லைகள் இல்லை. இன்றைய நான் இன்றைய பார்வையில் முதற்தடவையாகப் பார்க்கும் பார்வை பிரச்சினையற்று இருந்தது. கோணேச்சரம் என்னைக் கட்டிப்போட்டது. என்னவொரு இடம் அது. சம்பந்தர் மானசீகமாகப் பாடினாரோ ஆரோ சொல்லிப் பாடினாரோ, அல்லது எப்படியோ வந்துபோய்ப்பாடினாரோ தெரியாது. ஆனால் எவரிற்கும் பாட்டுவரும் இடம் தான் அது. அப்படியே இருந்துவிடலாம் என்று தோன்றியது. நிலாவெளி தொட்டு இலங்கையின் அத்தனை "பீச் றிசோட்டுக்களும்" கரிபியனோடு ஒப்பிடுகையில் சிறுத்துத் தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் கடல் பெரிதாக இருந்தது. றிசோட்டைத் தாண்டி கடலை அதன் பிரமாண்டத்தில் உள்வாங்க இலங்கையில் தான் முடிந்தது. இந்து சமுத்திரம் சற்று உயிர்ப்பு அதிகமானதாகத் தான் தோன்றியது. வெள்ளவத்தை பீச்சில் மூன்று வயதுப் பையனின் ஞாபகவீதி ஒட்டமும் சற்றுச் சாத்தியப்பட்டது. அந்த ஞாபகம் நான் இரைமீட்டுப் பார்க்காததாய் இருந்ததால், ஒறிஜினல் பிரதி இருந்தது. அது இன்றைய நிலையோடு ஒத்துப் போனதால் மகிழ்வாய் இருந்தது. சிங்கள தேசத்தின் செழிப்பு செழிப்பாகத் தான் இருந்தது. மனம் குளிர்ந்தது. கந்தளாயில் எருமைத் தயிரும் கித்துள் பனியும் அமிர்தமாய் இருந்தது. சிகிரியா ஓவியங்களை அள்ளிப் பருக முடிந்தது மட்டுமன்றி காசியப்பன் என்னமா வாழ்ந்திருக்கிறான் என்று பெருமூச்சு விடவும் முடிந்தது. அருமையான இடம் சிகிரியா. கண்டி எசலபெரகராவால் மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தலதா மாளிகையின் உள்ளே செல்லமுடியவில்லை. சுற்றித் திரிந்து விட்டு பெரதேனியா பூந்தோட்டத்தில் அலைந்துவிட்டு நுவரெலியா சென்றேன். புசல்லாவில் கதிர்காமத்தைக் காட்டிலும் களுதொதல் நன்றாக இருந்தது. நுவரெலியாவில் குளிரிற்குள் அம்மக்களின் சோகத்தை உணரமுடிந்தது. ஒரு சிறுவனுடன் பேசமுடிந்தது. சைவ உணவகம் ஒன்றில் உணவு அருமையாக இருந்தது. நுவரெலியாவின் சீதா கோவில் அமைதியாக இருந்தது. நுவரெலியாவின் பூங்கா அழகாய் அமைதி தந்தது. பண்டாரவளையில் ஒரு பள்ளத்தாக்கில் நான் கற்பனையிலும் நினைத்திருக்கமுடியாப் பெருப்பத்தில் தேன்கூடுகள் பார்த்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஏதோ சாகசக் கதைப்புத்தகத்தின் அல்லது ஸ்டீபன் ஸ்ப்பீல்பேர்க்கின் கற்பனைப் படம் பார்ப்பதுபோன்ற பிரமிப்பை நிஜத்தில் அந்தத்தேன்கூடுகள் தந்தன. கதிர்காமத்தில் முருகன் ஓரங்கட்டப்பட்டுள்ளார். முற்றுமுழுதான சிங்கள மயம். ஆனால் பாற்செம்பெடுத்து வந்த ஒரு மூதாட்டி அரோகரா என்று ஒரு பிரத்தியேக ஆவர்த்தனத்தில் கத்தியபோது புல்லரிக்கத்தான் செய்தது. செல்லக்கதிர்காமமும் மாணிக்க கங்கையும் மக்களால் நிரம்பி வழிந்தன. எதிர்பாரா விதத்தில் பிள்ளையாரைக் கும்பிட முடிந்தது. வெள்ளைக்காரரும் பல்வேறு மக்களும் சர்வசாதாரணமாக பஸ்சிலும் சைக்கிளிலும் திரிகிறார்கள். மகிந்தவின் கட்டவுட்டுகள் வடமுனை தொடங்கித் தென்முனை வரை ஏகப்பட்ட போசுகளில் நிறைந்து குப்பையாகக் கிடக்கின்றன. மக்கள் புனரமைக்கப்படும் வேகவீதிகள் பற்றியும் ஏற்கனவே மெருகூட்டபட்ட தெருக்கள் சார்ந்தும் தான் வடக்கிலும் தெற்கிலும் பேசுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுக்குறியாக அனைவரிற்கும் இருப்பது மட்டுமன்றி வேகமாக அந்த முன்னேற்றத்தை அடைய அனைவரும் துடிப்பதால் வேகவீதிகள் பற்றி அவர்கள் ஓயாது பேசும் உளவியல் புரிந்துகொள்ளும் படி இருந்தது. தங்கல்லவை அண்டிய ஒரு குக்கிராமத்தில் சிங்களக் குடிசை ஒன்றில் நடக்கும் உணவகத்தில் மண்பானையில் உணவு உண்டேன். உணவு சுவையாக இருந்தது. தமிழர் அங்கு வந்து உண்பது அவர்களிற்கு மகிழ்ச்சி கொடுப்பதாக முகம்மலர்ந்து சொன்னார்கள்---சிங்களம் தெரிந்த சாரதி மொழிபெயர்த்தார். துவேசம் நான் துவேசத்தைக் கண்ட ஒரே ஒரு இடம் திரும்பி வரும் போது குடியகல்வு மேசையில் இருந்த சிங்களவனில் தான். பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பான் என்று நினைக்கிறேன். மிக மட்டான ஆங்கிலத்தில் பிறந்த ஊர் போனாயா என்றான். ஆம் என்ற போது மாறியிருக்கிறதா என்றான். நிறைய மாறிவிட்டது என்று நான் சொன்னபோது, 'பலத்தால் கட்டாயப்படுத்தி மாத்தினோம்' என்று விட்டு நக்கல் சிரிப்புச் சிரித்தான். உள்ளிற்குள் ஏகப்பட்ட ஆத்திரம். ஆனால் அவனுடன் நான் சண்டை பிடிப்பது சாத்தியமில்லை. மேலும் இனமொழி மத வித்தியாசங்களிற்கு அப்பால் இலங்கையில் அதிகாரிகள் அனைவருமே கதைக்கத்தெரியாத காட்டுமிராண்டிகளாகத் தான் இருக்கிறார்கள். அந்தவகையில் அந்த சிறிய சிங்களவனோடு விவாதிக்க வேண்டிய தேவை எனக்குள் மறைந்து போனது. முடிவாக சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும், இலங்கை என்பது இனிமேல் மெக்சிக்கோ இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து போன்று ஒரு சுற்றுலா நாடு மட்டுமே என்ற எண்ணத்தோடும் வெளிக்கிட்டேன். அதுவும் சுற்றுலா செல்வதற்கு இலங்கையினைக் காட்டிலும் ஏகப்பட்ட தெரிவுகள் உள்ள நிலையில் இனிமேல் நான் இலங்கை போகப் போவதில்லை என்றே நினைக்கிறேன். கனடாவைக் காட்டிலும் நுகர்வோரிசம் அங்கு தலைவிரித்தாடுகிறது. அரசியல் அபிலாசை என்று அவர்கள் அலட்டிக்கொள்வதை என்னால் காணமுடியவில்லை. புத்தகக் கடைகளில் காத்திரமான நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்க் கிராமங்களும் கிராமங்களின் தன்மை குறைந்து பேராசையிலும் பணம் பறிப்பிலும் பொருளாதாரத்திலுமே குறியாக இருக்கிறார்கள். திருப்த்தியினை அதிகம் காணமுடியவில்லை. முன்னர் மிகச் சிறு கிராமங்களாக என்னுள் பதிவாகியிருந்த குக்குக்கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போன்று தான் தெரிகின்றன. தங்களிற்குள் மக்கள் போட்டி போட்டு வீடு கட்டுகிறார்கள். பொறாமைப் படுகிறார்கள், கோவில் வைத்து அடிபடுகிறார்கள். வெளிநாட்டுக் காரரைக் கண்டால் குறியாகப் பணம் கேட்கிறார்கள். புலிகளின் மறைவோடு எனது ஞாபகவீதியும் இல்லாது போனதை உணர முடிந்தது. அதாவது தமிழீழம் என்ற சிந்தனையிலும் அதற்கான முயற்சியிலும் தான் நாம் தமிழர்களாக இருந்தோம். பொதுமை உணரக்கூடியதாக இருந்தது. புலிகள் எவ்வாறோ அந்தப் பொதுமையினைக் கயிற்றில் கட்டி வைத்திருந்தார்கள். புலிகளின் மறைவோடு என்னைப் பொறுத்தவரை எனது ஞாபக வீதியும் மூடப்பட்டுவிட்டது. இன்று அங்கு நுகர்வோர் மட்டும் தான் இருக்கிறாhகள். நுகர்வோரிற்கு இன மொழி மற்றும் பாரம்பரி அடையாளங்கள் அர்த்தமற்றவை. அன்றைய சந்தையின் கட்டழைகளிற்கு ஏற்ப ஓடுபவர்கள் நுகர்வோர். உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நுகர்வோரைச் சந்திப்பதற்காக இலங்கை செல்வது அவசியமற்றது. அந்த மக்களின் அபிலாசை பொருளாதாரம் மட்டுமாக இருக்கிறது. அவர்களிற்கும் எனக்கும் இடையில் தொடர்பு அறுந்துபோன உணர்வுடன் கனடா மீண்டேன். எனது ஆத்ம திருப்த்திக்காக இப்பயணத்தில் நான் செலவிட்ட மொத்த தொகையில் 70 வீதத்தை பல்வேறு மனிதர்களிற்கும் குழந்தைகளிற்கும் என்னால் இயன்ற தொகையாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு மீண்டேன். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் கங்கைக்குச் சென்று அப்பாவின் அஸ்த்திகரைத்து மீண்ட ஒருவரின் பயணம் போன்றே அமைந்தது. ஒரு நிரந்தர வெற்றிடத்தை எனக்குள் உணர்கிறேன்.
 2. 30 points
  மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக மக்களை நோக்கிச் செய்திருந்தோம். எதிர் காலத்திலும் எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம். அந்த வகையில் யாழ் இணையத்துக்கு கிடைக்கப்பெறும் ஒரு சில விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணம் தாயக மக்களுக்கான திட்டங்களில் இணைக்கப்படும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 3. 30 points
  பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது. மேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும். காலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல. இன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை..! ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர். இருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம். இதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...! இந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.
 4. 28 points
  கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள். இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார். இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும். இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்
 5. 28 points
  யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது. அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும். மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவது என்பது அறியாமையும் அபத்தமும் ஆகும். இச் சிறிய கருத்துக்களத்திலேயே எமக்கிடையே ஒற்றுமையைப் பேண முடியாது இருப்பதும் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் எழுத்து / கருத்து நாகரீகத்தினை தாண்டுவதும் வருத்தத்திற்குரிய விடயமாகவே நாம் பார்க்கின்றோம். வெள்ளப் பெருக்கினால் உயிர் உடமைகளை இழந்து நிற்கும் தமிழக மக்களின் துயரங்களிலும் துன்பங்களிலும் யாழ் இணையம் பங்கு கொள்கின்றது என்பதை இத்தருணத்தில் மீண்டும் அழுத்திக் கூறிக் கொள்கின்றோம்.
 6. 28 points
  எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து.... எனக்கே ஆச்சரியமாக போய் விட்டது. பேட்டி முடிந்தவுடன்... உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டேன். https://www.youtube.com/watch?v=N_dJU-tcnCc இது ரங்கா யோகேஷ்வர், இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. 40´வது வினாடியில்... ரங்கா வருகின்றார்.
 7. 28 points
  யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்.. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது. அது தானாக வந்ததன்று. சிங்களம் அடித்து படிப்பித்தது அதை. 1983 இல் மிகவும் வசதியாக சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை.. உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி வைத்தனர்.... அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன. அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்..... இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை. அதற்காக உழைப்பதற்கோ அதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்க்கவோ என்றும் பின்னின்றதில்லை.... எனது உழைப்பில் ஒரு பகுதியை அதற்காக ஒதுக்க மறந்ததில்லை.... முள்ளிவாய்க்காலுக்கு பின் பலர் இதிலிருந்து விலகி ஒதுங்கி விட்டாலும் நான் அதிலிருந்து இம்மியளவும் விலகவில்லை ஆனால் அண்மைய காலங்களில் இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன. நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது.. அதற்காக ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்... எனது குடும்பத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு (எனது அண்ணர் மற்றும் அக்காமாரின் பேரப்பிள்ளைகள்) பிறந்தநாள் விழாக்கள் செய்யும் போது அவர்களுக்கு எனது தாகத்தை வெளிப்படுத்தும் வேரூன்ற வைக்கும் நோக்கத்துடன் ஒரு அணிகலனை (பென்ரன்) செய்து போடுவது வழமை. இதுவரை ஒரு 15 பேருக்கு செய்து போட்டிருப்பேன். அது முள்ளிவாய்க்காலுக்கு முன் பச்சையாக இருக்கும் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சிவப்பாக இருக்கும்........ எனது நண்பரின் நகைக்கடையில் தான் தொடர்ந்து அதைச்செய்து வருகின்றேன். இறுதியாக அந்த அணிகலனை நான் செய்தபோது அந்த முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடந்த சம்பாசனையை எழுதி முடிக்கின்றேன்..... இந்த அணிகலனை நான் எடுக்கப்போயிருந்தபோது அதை என்னிடம் தந்த தொழிலாளி என்னிடம் கேட்டார் இன்னும் தமிழீழத்தை நம்புகின்றீர்களா அண்ணா என்று.... நான் பதில் சொல்லும் முன் அந்தக்கடை முதலாளியே பதில் சொன்னார். இந்தக்கேள்வி இவர் இதை என்னிடம் செய்யும்படி ஓடர் கொடுக்கும் போதெல்லாம் எனக்கும் வரும். ஆனால் இவர் ஒன்றை விதைக்கவிரும்புகின்றார் அதனாலேயே பெறுமதியானதைக்கொடுக்கின்றார் அதுவும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கின்றார் இவருடைய ஆசை என்ன என்று கேட்டால் அத்தனை பிள்ளைகளும் சொல்வார்கள் தமிழீழம் என்று. முள்ளிவாய்க்காலுக்குப்பின் இவரது இந்த நடவடிக்கை தான் என்னுள் சில கேள்விகளை விதைத்தது அதுவே இவரது நோக்கமாக இருக்கும் என்றார்... இது தான் அந்த அணிகலன்... எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால் அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்.... முன்பக்கம் பின் பக்கம்..... (யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும் போலிருந்தது.)
 8. 28 points
  அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுதுகளில் தான் வாழ்வின் நிதர்சனம் எனக்குள் புகுந்து கொண்டது... பெரும் மரமாய் சூறைக் காற்றாய் அலை எழும் கடலாய் நான் கண்ட அப்பாவின் உடல் தீயில் உருகிய தருணங்களி தான் வாழ்வின் வனப்பும் புரிபட்டது.. சாம்பலின் ஊடாக தேடி தேடி 'இது விலா எழும்பு 'இது மூட்டெழும்பு' என்று அவரது எலும்புகளை பொறுக்கிய அந்த வினாடிகளில்தான் வாழ்க்கையின் பரிமாணமும் பிடிபட்டது.. இப்பவெல்லாம் அடிக்கடி அவர் நினைவுகள் எழுகின்றன இறந்த நாட்களில் உயிரற்றுக் கிடந்த அவர் பற்றிய நினைவுகள் இன்று உதிரம் பாச்சிய காற்றாக மீண்டும் மீண்டும் எனக்குள் எழுகின்றன என் பிள்ளைகளை காணும் போதும் அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும் தவறுகளைத் திருத்தும் போதும் கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும் அமைதியாக அவர்கள் உறங்கும் போதும் மீண்டும் மீண்டும் என் அப்பாவின் நினைவுகள் எழுகின்றன அவர்கள் இடும் முத்தத்தின் ஈரத்தில் அவர் கண்களில் தெரிந்த ஈரம் எனக்குள் தெரிகின்றது.... இப்படியான சில கணங்களில் நானே அவராக மாறிவிடுவம் இல்லை அவரே நானாக ஆகிவிடுவதும் நடக்கத்தான் செய்கின்றன.... மார்ச், 25 2013 ------------ இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,
 9. 28 points
  இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன். திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது........... வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது...... துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள். லா சப்பலுக்கு ஓடினேன். சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து (வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை) சிறிய கத்தரிக்காய் திறமான நல்லெண்ணெய் வயிற்றில் பூச மஞ்சல் தடவிவிட வேப்பிலை குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி........... எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம். ஆனால் கண்ணில் கலக்கம். என்ப்பா எனக்கேட்டேன். நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள். இடிந்து நொருங்கியது நெஞ்சு. பதில் சொல்ல ஏதுமில்லை. உண்மை எப்போதும் சுணைக்கும்.
 10. 27 points
  கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் பாடசாலையில் பல விருதுகளைப் பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். 12ம் வகுப்பில் ஒன்ராறியோ புலமைப்பரிசிலும் பாடசாலையில் அதி விசேட புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டார். யோர்க் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியிலும் அமெரிக்க சட்டக்கல்லூரியிலும் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகள் கற்று இவ் வருடம் மே மாதத்தில் அமெரிக்காவிலும் யூன் மாதத்தில் கனடாவிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாக வெளிவர உள்ளார். பசி வந்திட பத்தும் பறக்கும் என்பர் ஆனால் என் மகளுக்கு படிக்க தொடங்கினால் பசியே மறக்கும். நான் படி படி என்று சொல்லும்படி வைக்காமல் படித்தது போதும் நிற்பாட்டு என்று சொல்லும்படி செய்வார். படிக்கும் பொழுது அவருக்கு முன்னால் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் பலமுறை கண்டித்திருக்கிறேன். அதற்கு அவரது பதில் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினால் தன்னால் படிக்க முடியாது என்பதுதான். சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள். தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.
 11. 27 points
  "எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன் போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் . இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து எனது முதல் விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு. டொக்டர்மாருக்கு பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான். எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது. சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன். "இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்" பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு அ சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்" அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன். .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர். அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது. உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்க‌ எழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு. புகையிரதத்திலிருந்து இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன். முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன். ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது.... அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது. பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."
 12. 27 points
  டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன் எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது. சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள். இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள். காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது. கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு. கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை. ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........ சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு. எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது. அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள். இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன். ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள். இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.
 13. 27 points
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 14. 27 points
  . விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மத‌பக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும். காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால் மீண்டும் நித்திராதேவி என்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றி அம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல் முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியை கேட்டபடியிருப்பேன் . "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி தொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார். "என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வா, பள்ளிக்கு போக நேரமாகிறது " "ம்ம்ம்" பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்ல‌ மெல்லமாக பல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்ற எலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடி கிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள் போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் . "சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். "காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்" "யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை" "இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல் சொன்னவையள் அதில கேட்டனான்." இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். " இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்" என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள் வைத்து விட்டு காலை சாப்பா ட்டுக்காக‌ அம்மாவிடம் சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ" "அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்" "ஒமோம் நாளைக்கு,நாளைக்கு" சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை கொழுவிக்கொண்டு படலையில் போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள். வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலை தாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாக உள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள். "டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது " "நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்" "ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு படத்திற்கு போவம்" "என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்" "டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி" பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றது பொங்கும் பூங்குழல் " " டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும் ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் . பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார். சினிமா பாட்டு ஒலிபரப்பாமல், சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்று எங்கள் எல்லொருக்கும் தெரியும். பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டை ஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசி மாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள். ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம் பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம். மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார் எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள். ‍‍‍‍‍வணக்கம்கூறி விடைபெறுவது கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்... வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள். அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை. தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரி தலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்து கொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாக‌ மொபைலில் வைப்ரேசன் மோட்டில் எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ் எ நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டு வெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடி வீட்டை நோக்கி காரை செலுத்துவேன். கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ‍ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ‍ஹலோ சொல்லி போட்டு "ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்" "தாத்தா பழைய படம் பார்க்கிறார் தட் இஸ் போரிங்" "மற்ற டி.வி அறையிலிருக்குதானே அதில போய் பார்க்கலாம் தானே" "அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! " "லப்டொப் ,tablet, iPad அதுகளில் பார்க்கலாம்" "லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்" " அப்பா இது Whatsapp" "அது என்ன" "It is a type of social media and you can only do it through your mobile phone " "எங்க அக்கா " "அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா" "என்ன செய்யிறாள்" "She is on Instagram" "வட் இஸ் தட்" "It is also a kind of social media" அக்கா அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும் "I just texted her " "அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்" நானும் பேஸ்புக்கில் இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ? அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்கு லைக் போடுங்கோ....
 15. 26 points
  கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் காதல் கொண்டான். இருவரது வீட்டிலும் தம் காதலை சொல்லவே அவர்களது பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்பு அவர்கள் இருவரும் படித்து முடித்தபின்பு திருமணம் செய்து தரலாம் என்று கூறியதால் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தம் படிப்பை தொடர்ந்தார்கள். காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைந்து செல்ல படிப்பை முடித்த வாமன் கனடாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. வாமனுடன் கூடப்பிறந்தவர்கள் ஆண் சகோதரர்கள் அதனால் அவனின் பெற்றோருக்கு பெண்பிள்ளைகள் என்றால் மிகவும் விருப்பம். தான் கனடா பயணிக்கும் முன் நாட்டுப்பிரச்சனை காரணமா வைதேகியை தன் அம்மாவுடன் கொழும்பிற்கு சென்று அங்கே அவர்களுடன் இருக்கும்படி ஆலோசனை கூற அவளும் அவர்கள் கூடவே கொழும்பிற்கு சென்று வேலைக்கு செல்லத்தொடங்கினாள். பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊர் விட்டு ஊர் போய் பல இடங்களில் இடம் பெயர்ந்தநேரங்களில் அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து போனது. கொழும்பிற்கு வந்த பின்பு வைத்தியரிடம் சென்றபோது இடப்பெயர்வுகளின் போது அருந்திய தண்ணீரால் அவளுக்கு மஞ்சள் காமலை வந்துள்ளதாகவும் அதனால் அவளது ஈரல் சிறிதளவு பாதிப்படைந்திருப்பதாகவும் சொல்லியபோது உலகமே தலைகீழாக சுத்தியது. இந்த விடயத்தை வாமனிடம் சொன்னபோது வாமனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் அதெல்லாம் இங்கு கனடா வந்தால் சரி செய்யலாம் பயப்பிடாமல் வருவதற்கு ஆயத்தங்களை செய்யும் படி வைதேகியிடம் கூறினான். ஒரு விதமாக வைதேகிக்கும் வாமனின் பெற்றோருக்கும் விசா கிடைத்து கனடாவிற்கு வந்து சேருகின்றார்கள். வாமன் வைதேகியின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாமன் வைதேகி பலவித மனக்கோட்டைகளுடன் தங்கள் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து மகிழ்வாக சென்ற அவர்கள் வாழ்வில் திரும்பவும் வைதேகிக்கு அடிக்கடி வயிற்றுவலி வர வைத்தியரை நாடியபோது தான் எடுத்து வரும் மாத்திரைகளுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் ஈரல் பாதிப்படையும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். அன்றிலிருந்து அவர் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் வைத்தியர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டு மருந்தும் எடுத்துவந்தாள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிற்றுவலி அடிக்கடி வந்து பல முறை வைத்தியாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றது. வாமனோ எந்த வித முகச்சுழிப்பும் இல்லாமல் 10 வருடங்கள் வைத்தியசாலையும் வீடுமாக வைதேகியை கொண்டுதிரிந்தான். வைத்தியர்களோ வைதேகிக்கு ஈரல் மாற்றவேண்டும் என்றும் அவளுக்கு சரியாக பொருந்து ஈரல் கிடைக்கும் மட்டும் மருந்தால் காலத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி இருந்த அழகிற்கு தற்போது மெலிந்து கண்கள் உள்ளுக்குள் போய் ஆளை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஆகியிருந்தாள். இன்னும் 6 மாதத்திற்குள் அவளுக்கு பொருத்தமான ஈரல் கிடைக்காவிட்டால் அவளை காப்பாற்றுவது கடினம் என்றும் அத்துடன் தைதேகிக்கு முன்னால் 200 பேர் வரை ஈரல் மாற்று சிகிச்சகைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர்கள் வாமனிடம் சொல்லிவிட்டார்கள். வாமனோ முடிந்தவரை எந்த மனக்கஸ்டத்தையும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் கவலையில் வாடிபோயிருந்தான். வாமனின் பெற்றோர் வைதேகியை மிகவும் அன்புடன் பாத்துக்கொண்டார்கள். திடீரென்று ஒரு நாள் காலையில் வைதியசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு 22 வயது இளைஞன் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டதாகவும் அவன் தனது உறுப்புக்களை தானம் செய்வதாக எழுதிவைத்திருப்பதாகவும் அவனது இரத்தவகை வைதேகிக்கு பொருந்துவதாகவும் அவனது ஈரலில் ஒரு பகுதியை வைதேகிக்கும் இன்னும் ஒரு பகுதியை 10 மாத குழந்தை ஒன்றுக்கும் மாற்று சிகிச்சை செய்யப்போவதான சொல்கின்றார்கள். வாமனுக்கும் அவனது பெற்றோருக்கும் அந்த தொலைபேசி அழைப்பு கடவுளை நேரில் கண்டது போன்று தோன்றியது. அன்றே வைதேகியை அழைத்துகொண்டு வைத்தியசாலை செல்கின்றனர். மாற்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் செய்து அறுவைச்சிகிச்சை 10 மணித்தியாளங்கள் நடைபெற்று வைதேகி சுகமடைந்தாள். வைதேகிக்கும் வாமனுக்கும் தமக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை. நான்கு வருடங்கள் உருண்டோடிவிட வாமனுக்கும் வைதேகிக்கும் அழகிய ஆண்குழந்தை பிறக்கின்றது. இப்போது அவர்கள் மகனுக்கு 9 வயதும் ஆகிவிட்டது. வாமனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைதேகிக்கு வருத்தம் என்று வந்தபோது வைதேகி சுகமாக தன்னோடு இருந்தால் போதும் என்று மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இரட்டிப்பு மகிழ்வாக குழந்தையும் சுகமே கிடைத்து அவர்களது வாழ்க்கை மீண்டும் பூத்துக்குலுங்கத்தொடங்கியது. திரும்பவும் அலாரம் அடிக்கவே பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த வைதேகி தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முத்தமிட்டு எழுபியவாறு தனக்கு மீள் வாழ்வு தந்த அந்த இறந்து போன இளைஞனை மனதில் நினைத்து நன்றி சொல்லியவாறே அவன் அன்று அவனது உடல் உறுப்புக்களை தானம் செய்யாதிருக்காவிட்டால் இன்று தானும் இல்லை தன் குழந்தையும் இல்லை எல்லாம் அவனது தாராள உள்ளமே என்று நினைத்தபடி அன்றய நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தாள். -இது கதையல்ல நிஜம்- -முற்றும்- நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?
 16. 26 points
  யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம். நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது. கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது. அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது. திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும். தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும். இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள். http://nesakkaram.org/ta/nesakkaram.3753.html
 17. 26 points
  அன்பான உறவுகளுக்கு முதலில் மன்னிப்பு கோருகின்றேன். யாழ் கள உறவு சாகாறா அக்காவின் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் பங்கெடுத்து விட்டு காணாமல் போனதற்காக... இது நாள் வரை யாழ் களத்தை தொலைபேசியினுடாகவே பாவித்து வந்தேன். தற்போது தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய வசதி தொலைபேசியில் இல்லாததால் களத்தில் பங்கெடுத்து கொள்ள இயலவில்லை. (கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்) காலம் : 2014 மாதம் மே சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு. வருவதற்கு முன்பு அறிய கிடைத்தால் நானும் சந்திக்க திட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் அல்லவா. வரும் முன்னம் சொல்லுங்கோ என்டு சொல்லியிருந்தேன். பிறகு நானும் மறந்துவிட்டேன். இடையில் அவரிடம் கதைக்கவில்லை. அதுவரை அவரை பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை கனடாவை வசிப்பிடமாக கொண்டவர் அபாரமான கவிதை எழுதும் திறனுடையவர் ஒரு பெர்ர்ரிய்ய்ய குடும்பத்தின் தலைவி என்பதை தவிர. ஒகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாலக்காட்டில் இடைவிடாது கொட்டும் மழையின் ஈரலிப்பும், நீலகிரி மலைத்தொடரில் சறுக்கி வந்து நிலைகொண்ட மேகங்களும் குளிர்ச்சியுடைய கோயமுத்துரை மேலும் குளுமைபடுத்திக் கொண்டிருக்கும் முன்னிரவில் முகப்புத்தகம் பார்த்து கொண்டிருப்பதற்காக அம்மாவிடம் வசமாக வசை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் சென்னை வெயிலாக வந்து உட்பெட்டியில் விழுந்தது சாகாறா அக்காவின் தகவல். "தம்பியவை நான் இப்ப சென்னையில் நிக்கிறேன் என்டு, நான் இப்ப கோயமுத்தூரில் அம்மாவிடம் ஏச்சு வாங்கி கொண்டிருக்கிறேன் என்டு சொல்லி வேகமாக தொலைபேசி எண்ணை அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் துண்டித்துவிட்டு அம்மா நான் தூங்கிட்டேன் என சொல்லவும் தலையனை முகத்தில் விழவும் சரியாய் இருந்தது. அடுத்த நாள் தொலைபேசி அழைப்புவரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவில்லை இரண்டொரு நாள் கழித்து திண்ணையில் வணக்கம் வைத்தார். கொஞ்சம் யோசித்து வணக்கம் வைத்து திரும்ப திண்ணையில் குருநாதருடனும் விசகு தாத்தா ராசவன்னியன் மாமாகாருவுடனும் ஐக்கியமாகி கவிதாயினியை கண்டு கொள்ளவில்லை. நேரமிருப்பின் பேசுங்கள் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றேன். அடுத்தநாள் முகப்புத்தகத்தில் விழா அழைப்பிதழை பார்க்க சற்று கிலியானது. அதில் அழைக்கப்பட்டுள்ளவர்களெல்லாம் அடிக்கடி தலைப்பு செய்தியில் கேட்ககூடிய பெயர்கள். ஆகா எவ்வளவு பெரிய ஆளிடம் இப்படி பரோட்டா சூரி மாதிரி லொடலொட என்டு பேசிட்டமென்டு குற்ற உணர்வு குறுகுறுக்க அக்கா நீங்க யாரெண்டு தெரியாம அறியா சிறுவன் தெரியாமல் பேசிட்டன் மன்னிச்சுகோங்கனு மடல் அனுப்பி பார்த்திருந்தேன். பாவ மன்னிப்பு வழங்கபடவில்லை என்பது படித்தும் பதிலனுப்பாததில் இருந்தே விளங்கியது. விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் அவரது மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் சாகாறா அத்தாச்சிக்கு அக்கணமே வருகையை அறிய தந்துவிட்டேன். தமிழ் என்னை தலைநகர் நோக்கி இழுத்தது... ஆனாலும் சென்னை செல்வதென்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றால் பிரம்மாக்களிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி நிச்சயமில்லாததால் யாழில் யாரிடமும் கதைக்கவில்லை. அனுமதி இல்லையென்றால் அவசர கால சிகிச்சை பிரிவில் அறைகுறை மயக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லி சாமாளிக்க முடிவு செய்தாயிற்று. புத்தக வெளியீடு சென்னை கனடாவில் வசிப்பவர் இணைய நண்பர் என்பதையெல்லாம் அழகாக விவரித்தால் என்ன நிகழும் என்பது ஒரளவு யூகித்திருந்ததால் திருமணம் நண்பனின் அண்ணன் சென்னை என்று எளிமையாக முடித்து கொண்டேன். காலை 6,15 ரயில் புறப்படும் நேரம் 5,30 நிலையத்தை அடைந்தேன். பயணச்சீட்டை வாங்கும்போது மணி 6,20. வாங்கிய சீட்டை வெறித்தபடி இருந்தேன் அடுத்தநாள் ஒணம் என்பதால் கேரள நாட்டிளம் பெண்டிரால் சுழ்ந்திருந்தாலும் மனம் ஜென் நிலைக்கு போயிருந்தது. சென்னை வழியாக மங்களூர் வரைசெல்லும் திருவனந்தபுரம் சிறப்புரயில் 6,40 மணிக்கு நடைமேடை நாலில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு ஒடு ஒடு என்று அசிரிரீ உள்ளே ஒலித்தது. அருகில் நின்றிருந்த சிறிய மலையாள குட்டியிடம் "என்ட ஹிருதயம் நிறைஞ்ஞ ஒண அஷம்ஷகள்" என வாழ்த்திவிட்டு இரயில் பயணங்களில் மூழ்கியிருந்தேன்... (நாளை சென்னையில்) # நூல் வெளியீட்டின் நடுவே எனது மானே தேனே பொன்மானே எல்லாம் பொறுத்து கொள்ளுங்கள்....
 18. 26 points
  வணக்கம் உறவுகளே எமது கலைச்சொத்துக்களில் ஒன்றான இந்த யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலை இசையாக்கி உறவுகளாகிய உங்களின் சார்பில் இதை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன். சிறக்கும் வகையில் வரிகளை தந்து இந்தப்பாடலை சிறப்புற செய்த மதிப்புக்குரிய சகாறா அக்காவிற்கும் ,தெளிந்த மனத்துடன் ஒருங்கிணைப்பு செய்த சகோதரன் சுண்டலுக்கும் ,பரந்த மனத்துடன் சிந்தனை ஆக்கம் செய்த அண்ணா தமிழ்சிறிக்கும் ,அழகான குரலில் பாடலை பாடி சிறப்புற செய்த என் உடன்பிறவா அண்ணன் நாதன் அவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள் இந்தப்பாடலின் ஒரு பகுதி மட்டுமே இங்கே இப்போ காண்பிக்கப்படும் .......பரிசளிப்பு விழா அன்று முழுமையாக வெளியிடப்படும் .....மீண்டும் நன்றிகள் பின்னணி குரல் ,படக்கலவை ..............நாதன் வரிகள் .........................................................வல்வை சகாறா ஒருங்கிணைப்பு .........................................சுண்டல் சிந்தனை ,ஆக்கம் .....................................தமிழ்சிறி இசை .............................................................தமிழ்சூரியன் .
 19. 26 points
  பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது, என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை... நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!! வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!! சாகப் போகின்றோம்.... எனும்போது, "கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது! இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை! அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்.... நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!! பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா.... விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று, என் மூளை திருவி... வலக்கண் வழியே, வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும், எனக்கு வலிக்கவேயில்லை!!! செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்... அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!! புறநானூறு பிறழ்ந்த தமிழனாய்... பின் பிரடியில் புண் வாங்கி, மண்மீது சரிந்த எங்களையும், என்றாவது ஒரு நாளேனும்... - விடிந்த எம் மண்ணின்... மாவீரர் பட்டியலில் சேர்ப்பார்கள்....என்ற கடைசி நப்பாசையுடன், இறுகிப்போன என் இதயம் -முதலும் கடைசியுமாய், தன் இயக்கத்தினை நிறுத்திக்கொள்ள, என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது. இறுதியாக ஒரு வேண்டுகோள்... "இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!! ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!! "இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்... அதையும் நான் மறந்திருந்தேன்'!!!
 20. 24 points
  வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா பறக்காதையுங்கோ சொல்லுறன். அன்று மாலை நாலு மணிக்கு பூங்கா வீதிக்கு வாங்கோ.நான் எனது சினேகிதியை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுறன். பிறகு என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது சரியா. சற்று நேரம் யோசித்த சந்திரன் சரி என்று விட்டு கண்ணடித்துக் கொண்டே செல்கிறான். 30ம் தேதி மாலை 3:58:40 க்கு சந்திரன் காரில் வந்து இறங்கி வாரான். அவனுக்கு முன்னதாகவே வந்தனா வந்து காத்திருக்கின்றாள். அருகில் ஒருத்தர் வண்டிலில் இளநி வித்துக் கொண்டு இருக்கின்றார். சந்திரன் இளநி குடிப்பமா என்று கேட்க்கிறான். வந்தனாவும் ம்... என்று சொல்லிவிட்டு காசை எடுக்க அவன் மறுத்துவிட்டு இரண்டு இளநி வாங்கி இருவரும் குடித்தனர். எங்கே அவ இன்னும் வரவில்லையா...! இல்லை இப்ப வந்திடுவா, இன்று வேலை கூட போலிருக்கு. அருகே ஒரு வாடகை வண்டி வந்து நின்றது. அதில் இருந்து நாகரிக யுவதி இறங்கி வந்தாள். வா சினேகா உனக்காகத்தான் காத்திருக்கிறோம். அவள் சந்திரன் அருகே வந்து நிக்க கண்களில் நீளமாய் கீறிய மையும், கன்னத்தில் சற்று தூக்கலாய் பூசிய பவுடரும், உதட்டில் அடர்த்தியான சிகப்பு சாயமும் அவளது வேலைக்கு விளம்பரமாய் இருந்தன.அத்துடன் அவளிடம் இருந்து வீசிய மட்டமான நறுமணம் அவனது நாசிக்குள் புகுந்து இளநியுடன் இதழ்பதிக்க வயிற்றில் இருந்த இளநி வாய்க்கு மீண்டு வாந்தியாய் வெளியேறவும் இவள் அவள்தான் என மூளை அறிவுறுத்தவும் சரியாய் இருந்தது. வந்தனா நீ என்னை அவமானப் படுத்தி விட்டாய். ஏன் இந்தப் பிள்ளைக்கு என்ன குறை, நிறமாகவும், அழகாகவும், அலங்காரமாகத்தானே இருக்கிறாள்.நீ கூப்பிடும் இடத்துக்கு உன்னோடு அவள் வருவாள். நீ பணம் கூட குடுக்க வேண்டாம். நான் குடுத்து விட்டேன். என்ன சொல்லுறாய் நீ .மனசுக்கு பிடிக்காத ஒன்றை எப்படி ஏற்பது. வாந்தி வந்ததை பார்த்தனிதானே. அன்று நீ என்னை அழைத்ததும் எனக்கும் அப்பிடித்தான் வாந்தி வந்தது. அடக்கிக் கொண்டேன். நான் இரு பிள்ளைகளுக்கு தாய். அன்பான கணவன்.எங்களை பற்றி தெரிந்தும் நீங்கள் அப்படிக் கேட்டது தப்பில்லையா.மன்னித்து விடுங்கோ வந்தனா.சந்திரன் அட்டமியாய் குறுகி நிக்க , இது எதுவும் புரியாத அந்தப் பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய். ஒரு நிமிஷம் திகைத்த இருவரும் அடுத்தநொடி எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டார்கள்.....! இது ஒரு சுய ஆக்கம். இதுக்கு காப்புரிமை, மோதிரஉரிமை எதுவும் கிடையாது. ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக் காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம். இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!
 21. 24 points
  இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு. ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம். பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும், பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று. பள்ளிக்கூட நாட்களில் பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம். சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம். குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும், வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள். மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான் அதிகம் மினக்கெடுவார்கள். பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு. இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு. ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன். அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான். அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான். "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும் அசூசையும் கலந்த உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான். நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது, எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட பெரிய சவால் மாதிரி இருந்தது. பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது. சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன். குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்; எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன். பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். - தொடரும் -
 22. 24 points
  மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சிறு தொகை கொடுத்தாலும் "சந்தோஷமாக " ஒரு மதுப்போத்தலும் கொடுத்துவிடுவார்கள் . கடையின் அத்தனை கணக்கு வழக்குகளும் வரிக் கட்டுபாடடாளரின் கண்ணுக்கு தடுப்படாமல் சுழியோடி கணக்கை கச்சிதமாய் வரவு செலவு .. காட்டி விடுவான் . இதனால் அந்த கடைத் த்தொகுதியில் மிகவும் பிரபலமானான் .. வேலை . களைப்பு என்று ஆரம்பித்த மதுப் பழக்கம் ..போதை மயக்கத்தில் மறு நாள் வேலைக்கு போகாமல் இருப்பது என்ற நிலைக்கு ஆளாக்கியது ..நாட்கள் கிழமைகளாக வேலைக்கு போக முடியாது இருந்தான் ... .காலப்போக்கில் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். முதல் மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த அடுத்த வருடங்களில் பருவ வயதை அடைந்தனர் .மிகவும் கட்டுப்பாடான குடும்ப கஷ்டம் உணர்ந்த பெண் மக வுகளாய் . அவர்கள் அழகிலும் ஆண்டவன் குறை வைக்காத அளவுக்கு கண்ணுக்கு இனிய இளம் குமாரத்தி கள் ஆகி னார் வீட்டுக் கஷ்டம் உணர்ந்து ..பகுதி நேரமாய் ...பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தமது சிறு தேவைகளுக்கு பணம் சேர்த்துக் கொள்வார்கள் ...தங்கள் ஒரே தம்பி யையும் கவனமாய் பார்ப்பார்கள் . கஷ்டங்கள் மத்தியிலும் கலாவதி ..சிறப்பாக வளர்த்தாள் . ஒரு முறை கடைப் ப குதிக்கு சென்றவன் ...தெருவில் வீழ்ந்து கிடப் ப தாக செய்தி வரவே காலாவதி அங்கு நோக்கி போகையில் தயராக இருந் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு ...... வைத்திய நிலையம் சென்றார்கள் . அங்கு மூன்று நாட்களின் பின் வைத்திய அறிக்கையில் மிகவும்பலவீனமாக் இருப்பதாகவும் ஈரல் மிக்வும்பதிப்புள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தால் ..இனி வருங்காலத்தில் மதுவகை பாவிக்க கூடாதெனவும் கண்டிப்பான கடடளையோடு வீடு நோக்கி அழைத்து வரப்ப படடான் ஒழுங்காக இருந்தவன் . சில வாரங்கள் கிறிஸ்ம்ஸ பண்டிகையின் போது ..நண்பர்கள் அழைக்கவே சென்று மது போதையில் வந்தான் . மறு நாள் ஒரே வாந்தி ...அவசர அம்புலன்ஸ் அழைத்து வைத்ய சாலையில் அனுமதித்தார்கள் ... ஒரு வா ரம் படுக்கையில் இருந்தவன் ..மி கவும் பலவீனமானான் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகவே ..ஒரு ஞாயிறு அதிகாலை காலமானான் . நான்கு பிள்ளைகளும் மனைவியும் கதற ..ஊர்வலர்களும் ஒன்று கூடி மரண அடக்கம் நடந்தது .... காலம் உருண்டோடியது .மூத்தவள் திருமண வயதை எட்டி விடடதால் தந்தையின் சகோதரி .. தான் வாழும் கனடா நாட்டில் ..தூரத்து உறவு முறையில் ஒரு திருமணம் பேசி ..முடித்தார் .. இரு வீடடை சார்ந்தவரும் தொலைபேசி வழியே .. ஒழுங்காக்கி .நாள் குறித்து ... பின் தொழில் நுட்பம் மலிந்த இக்காலத்தில் ஸ்கைப் ..முக புத்தகம்.. போன்ற இணைய வழித் ...தொடர்பில் மணமக்கள் பேசிக் கொண்டனர் ...இருவருக்கும் பிடித்து போக வே வரும் கோடை விடுமுறையில் மணமகள் இங்கு வந்து பதிவு செய்ய ... ஒழுங்காகியது . இதற்கிடையில் மண மக ளின் தாயின் சகோதரி ..மணமகன் உள்ள கனடா நா ட்டிற்கு அழைக்கவே வந்தவர், மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ... .மனம் ஒத்து போனாலும் தோற்ற பொருத்தம் சிறு ,,குறை யாக தென் படடது . மணமகன் 4'11" ஆகவும் பெண் 5'2" ஆகவும் இருந்தனர் .....இனி அவர்களின் தேர்வு மணமகள் சம்மதத்தில தங்கி இருந்தது ..... அவள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ..விடடாள் . ஒரு வா ரம் ஆகியது பையன் அழை ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தான். பெண் தாயிடம் சென்று நடந்த்து .விபரித்தார் ... இதனால் வேறிடம் பார்க்கலாம் என் சொல்லிவிடடார் ..... மணமகள் தீவிரமாய் சிந்தித்தாள் .ஒரு வேளை மணமகன் என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா .? ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ வில்லையா ....உயரம் ஒரு குறையா ..இரு மனம் கலந்ததே திருமணம் ... மறு நாள் விடிந்தது ..... அம்மாவிடம் தன மூடிவைத்து தெரிவித்தாள் மக ள் ...நான் அவரைத் தான் திருமண செய்வேன் வேறு எவரையும் செய்யமாடடேன் என்றாள் தீர்மானமாக ..... நான் அவரோடு பேசி என் முடிவு சொல்ல போகிறேன் என்று ...தொலைபேசியில் அழைத்தாள் ...இந்த அழைப்புக்காகவே காத்திருந்த மணமகன் ....பேசினான் .......வார்த்தைகள் முடிவுகளாகி ..திருமணம் இனிதே நடந்தேறியது ..... ஒரு வருட இன்பமான வாழ்வில் அழகான பெண் குழந்தை கையில் ...ஒரு திருமண வீட்டில் சந்தித்தேன்.தம்பதிகள் ...இனிதே வாழ்க ..அவளுக்கென்றொரு மனம் ...அது ஆழமான அன்புள்ள ..நேசிக்க தெரிந்த உள்ளம். திருமணங்கள் நறு மணம் வீசி மலர்வ்து இனிய நல்மனம் கொண்ட மலர்களால் ... படித்த அழகான மெல்லிய மாநிறமாக மணமகள் தேவை என் விளம்பரம் செய்யும இக்காலத்தில் இப்படியான நல்ல உள்ளம் கொண்ட மணமக்களும் வாழ்கிறார்கள்
 23. 24 points
  கணனித் திரையில் தனது அம்மாவைப் பார்த்து என் மனைவி கதைத்தபோது, நாளை நான் இருப்பேனா இல்லையோ என்ற அவரின் வயதிற்கேற்ற கூற்று என்மனைவியை ஆதங்கப்படுத்தியதில் வியப்பில்லை. அந்த ஆதங்கம் 90 வயதைத் தொடும் தனது அம்மாவைக் காணவேண்டும் என்ற தவிப்பை மேலோங்கச் செய்தது. தாய்தந்தையரை இழந்துவிட்ட எனக்கும் என் மாமிதான் தாயாக விளங்கினார். மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன். விடிந்ததும் எழுந்து யாழில் செய்திகள் பார்த்துக் கருத்துக்களும் எழுதும் எனக்கு இனிச் சிலவாரங்கள் அது முடியாதே என்ற கவலை எழுந்தது. கைத்தொலைபேசி பாவிக்கவும் தயக்கமாக இருந்தது. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், சென்றதடவை யாழில்நின்று ஐரோப்பா, கனடா என்று ‘வொய்ப் சீப்‘ மூலம் கதைத்தபோது கட்டணம் 0 என்று சொல்லியது. செலவில்லாமலே தொர்புகள்... கேட்கவேண்டுமா! தாரளமாக தினமும் கதைத்துவிட்டு யேர்மனிக்குத் திரும்ப வந்தும், நூற்றுக்கணக்கான யூரோக்களை ‘வூடபோன்‘ என்னிடமிருந்து புடுங்கிக்கொன்டது. விமானப் பதிவை மேற்கொண்டபின், மட்டக்களப்பில் மறைந்த என் நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கச் செல்லவேண்டும் என்ற கடமை உணர்வும் எழுந்தது. ஆகவே, கொழும்பு வந்ததும் நேராக மட்டுநகர் விரைந்தோம். பெண்னுக்கு முதலிடம் என்பதால் என் மனைவி பிறந்த மண்ணுக்குச் செல்லும் சந்தர்ப்பமும் தானாக அமைந்தது. சிலகாலத்திற்கு முன்பாக நாங்கள் இலங்கை சென்றபோது, வழி நெடுகிலும் ஆமியும், காவல்துறையும் மறித்து மறித்துச் சோதனை என்ற பெயரில் செய்த கெடுபிடிகள் போன்று இல்லாது இந்தத்தடவை இராணுவத்துக்குப் பதிலாகச் சிங்கள மக்கள் மறித்து மறித்துத் தாகசாந்தி செய்துகொள்ளுமாறு வரவேற்றுக் கிரிபத்தும் தந்து உபசரித்ததைக் காண வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய வெசாக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்துகொண்டேன். அரசியலுக்குள் வந்த சிங்கள அதர்மிகள் பதவியை அடைவதற்காக இனப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்தாது இருந்திருந்தால் இன்று சிங்களரும் தமிழரும் ஒன்றாக இணைந்து தங்கள் கொண்டாட்டங்களை எத்துணை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை அந்த வரவேற்பு ஏற்படுத்தியது. மட்டக்களப்பு நகரின் மாற்றம் என்னை அதிசயிக்க வைத்தது. அங்கு குச்சொழுங்கைகள் எல்லாம் அத்துப்படியான எனக்கு, கோட்டைமுனைப் பாலத்திற்குச் செல்வதற்கே வழிதேடவேண்டி இருந்தது. ஆற்றின் இருமருங்கிலும் பெரும் பெரும் கட்டிடங்கள் கொண்ட விற்பனை நிலையங்கள் பெரும் பட்டணம்போல் காட்சிதந்தது. அனேகமானவை முசுலீம்களுக்குச் சொந்தமாக மாறியிருந்தன. மட்டுநகரின் பிரதான வீதிகளூடாகச் செல்லும்போது, முசுலீம்கள் வாழும் நகரங்களின் இருபக்கங்களும் கடை கண்ணிகளும், தமிழர்வாழும் நகரங்களின் இருபக்கங்களிலும் அனேகமாக ஆலயங்களும், வீடுகளும் வெற்றுக் காணிகளுமாகக் காணப்பட்டன. மட்டக்களப்பு செல்பவர்கள் விசேடமாக வாங்கிச்செல்லும் பொருட்களில் முக்கியமானது தயிர். தயிரும், முந்திரிப்பருப்பும், அரிசியும் வாங்கி நாங்கள் பயணித்த சிற்றூர்தியில் ஏற்றிவிட்டு, மீன்பாடும் தேன்நாட்டில் தேன்வாங்கும் எண்ணமும் எழுந்தது. பனிச்சம்கேணித் தேன் சிறந்தது, சுவையானது போகும் வழியில் அங்கு வாங்கலாம் என்ற சாரதியின் அறிவுரையைப் பின்பற்றினோம். மிகுதி தேன்வாங்கிச் சுவைத்த பின்பு.
 24. 24 points
  இப்பணமானது யாழ் இணைய உறுப்பினர்கள் வாசகர்கள் மற்றும் யாழ் இணையத்தின் விளம்பரப் பணம் என அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு வாசம் உதவும் உறவுகள் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் கணவனை இழந்து குடும்ப சுமைகளை தாங்கிய தாய்மார்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 20 குடும்பங்களுக்கு கோழிக் கூடும் நாட்டுக் கோழி குஞ்சுகளும் வழங்கப்பட்டு அதனை பராமரிக்கின்ற பயிற்சியும் மிருக வைத்தியர் ஊடாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது
 25. 24 points
  கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துகொண்ட விபரங்கள் பின்வருமாறு. அப்பாவி இசைக்கலைஞன் வீட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி மருத்துநீர் பெறுவதற்காக கனடா கற்பக விநாயகர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார். இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார். சாதாரணமாக விருந்தாளி வீட்டுக்குள் நுழையவே பத்துத்தரம் யோசிக்கும் இசைக்கலைஞனால் ஊடு கட்டியெல்லாம் அடிக்க முடியுமா? நைசாக அந்தப்பக்கமாக தள்ளி 20 அடி சுற்றி அந்தப்பக்கமாகப் போய்விட்டார். முறுகலை தவித்துக்கொண்ட இவரது செயலை காவல்துறை பாராட்டுகிறது. தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட மருத்து நீர் பெறுவதில் குறியாக இருந்த இசைக்கலைஞன் கோயிலுக்குள் சென்று (அங்கு ஏற்கனவே மருத்து நீர் எடுத்துக்கொண்டு நின்ற ஃபிகரை சைட் அடித்து வழிந்துவிட்டு ) வெற்றிகரமாகத் திரும்பிவந்தார். தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இவரின் செயலை காவல்துறை வெகுவாகப் பாராட்டுகிறது. அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பெண் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத்துக்கிடமான பெண் எவரையும் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அண்மையில் திருட்டு வழக்கில் கைதான பெண் ஒருவரின் படம் வெளியானதால் யாழ்களத்தில் பயங்கர கலகம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கலகம் மறுபடியும் ஏற்படுவதை ஒன்ராரியோ காவல்துறை விரும்பவில்லை. ஆகவே, சந்தேக நபரின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுகிறோம். Spoiler
 26. 24 points
  அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன் மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது. வெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள். எம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும். நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி. எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம். நன்றி. யாழ் இணைய நிர்வாகம்
 27. 24 points
  தாங்கவியலா வெறுமைகளில் அமிழ்ந்து விழிகளில் நீர்வர நினைவுகள் கரைந்தழிகிறது... எழுதுகோலும் வெற்றுத்தாளுமாய் என் எதிரிலே... எதை எழுதுவது...? முகவரி இழந்து முகமிழந்து முற்றத்து நிழல் இழந்து ஊர் சுமந்த கனவிழந்து உள்ளே வலி சுமந்து அகதியாய் உருக்குலைந்து கிடக்கும் கதை எழுதவா..? ஒளித்து ஒளித்து - தன் இணையுடன் விளையாடும் ஒற்றைப்பனை அணிலுக்கும் விரத விருந்துண்டு களைத்து முற்றத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் வேம்பில் கரகரத்த குரலில் கரையும் காக்கைக்கும் கிடைத்த சுதந்திரம் என் மண்ணில் என் முற்றத்தில் எனக்கு மறுக்கப்பட்டதை எழுதவா..? என் பாடு பொருளாய் பலகாலம் இருந்த கொலுசொன்றின் ஒலிக்காக மனசெல்லாம் காத்திருந்து காலங்கள் உருக்குலைந்து உள்ளே துருப்பிடித்து மனச்சுவர்களில் உக்கி உதிர்ந்து போனதை எழுதவா..? என் தேசத்தின் தெருக்களில் நிற்கும் எருக்கலைக்கும் நாயுருவிக்கும் கூட எல்லாமாய் எதுவுமாய் வெளித்தெரியாமல் உள்ளே ஒட்டி இருப்பவை வேர்கள்... ஊட்டி வளர்த்து - என் உள்ளிருக்கும் ஆன்மாவை உருவாக்கிய பாட்டியை எங்கள் வீட்டின் வெளித்தெரியா வேரை விட்டுப்போகும்படி பிடுங்கி எறிந்த போரை நீழ்கின்ற இரவினிலே நினைவுகளினூடே கொப்பளிக்கும் அது தந்த வலிகளை எழுதவா..? உறவுகள் அறுபட அகதியாய் ஊர் விட்டு வந்து பனி உதிர்ந்த வீதிகளில் பாதை தெரியாமல் கனவுகளை பரணில் காயப்போட்டுவிட்டு வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமாய் போராடும்போது செருக்குடன் கடந்துபோகும் செல்வந்த மனிதர்களின் இரக்கமற்ற வார்த்தைகளை புழுவைப்போல் எமைப்பார்க்கும் எள்ளல்களை எழுதவா..? சுமை அமத்தும் அகதி வாழ்க்கையில் ஊற்றெடுக்கும் விழி நீரை துடைக்க ஒரு உறவும் இன்றி உருக்குலைந்து நிற்கதியாய் நின்றிருக்கும் பொழுதுகளில் எல்லாம் நாமிருக்கிறோம் என்று தானாடாவிட்டாலும் தமிழனென்ற தசையாடிய ஓடி வந்து தூக்கிவிடும் ஊரில் பார்த்தறியா உடன்பிறவா இரத்தங்களை நினைக்கும்பொழுதெல்லாம் பனி இரவிலும் கண்கள் பனிக்க உள்ளம் விம்மி அழும் கதை எழுதவா..? நெஞ்சுள் இருக்கும் கறுத்த பக்கம்கள் தெரியாமல் உரித்துள்ள ரத்தங்கள் என்று உரிமையுடன் எதிர்பார்த்த உறவுகள் கழுத்தறுத்த கதை எழுதவா..? இவை எல்லாம் பார்த்த கொதிப்பில் தொல்லைகளை துடைத்தழித்து எல்லைகள் வரையப்பட்ட என் சுதந்திர மண்ணில் ஒரு நாள் இறப்பேன் என்று நெஞ்சுக்குள் நெருப்பாய் வளர்த்த கனவை கடைசியாக தின்று முடித்த முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த காலமும் கண்ணீரும் எம் வலிகளைப்போக்காத கதை எழுதவா..? வானம் பார்த்து வரும் கண்ணீரில் வடுக்களைத் தடவிக்கொள்கிறேன்.. ஓ கடவுளே.. எதை எழுதுவேன் நான்..? எல்லாக் கண்ணீரும் என் வேலிகளை அரிக்கையில்...
 28. 24 points
  கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம், பேரக் குழந்தைகளை கவனிப்பதே அவள் வேலை அடுத்த வாரம் அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும், உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ... பாதிரியார் வந்தவரைய் பார்த்து முறுவலித்தார், கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 26 அநாதை சிறுவர்கள், யார் யார்க்கு என்ன தேசமோ கவலையானார், இது பெரும் பொறுப்பு தான் நல்லபடியாக எல்லாம் அமைய வேணும் யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்... சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான், அன்னை சலித்துக்கொண்டாள் அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன், பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள் அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார், முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ... உயரமாய் தெரிந்தவர் சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார், சாப்பாடு சுவையாய் இல்லை நொந்து கொண்டார் எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார், என்ன அழகு இவள் 24 இருப்பாளா ? பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி, இவளை போலதான் இருப்பாள், பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ... யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் அதை இங்கு தான் வைத்தேனா, இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா, தலையை சொரிந்தாள், போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி, கொஞ்சம் கவலையானாள், எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்... கைக் குழந்தை சிணுங்கிற்று, அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் குழந்தை அமிர்தம் கண்டது, அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது, பால் வெளியே வழிந்தது அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் , கனவுகளோடு சஞ்சரித்து தூங்கிப் போனார்கள்.. அழகிய அந்த பெண் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தாள், ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் குழந்தைகளுக்கு பரிசு தந்தாள், முதியவருக்கு போர்வை தந்தாள், விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள், இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள், அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் .. ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி, ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி... ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி, ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ... அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ... எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம், தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ, பரபரப்பானான், செய்தி அனுப்பினான் அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான், உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான் உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று, மனதுக்குள் கருவிக்கொண்டான், எழுந்து சென்று கட்டளை இட்டான், இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 300 கனவுகளை சுமந்து வந்த மலேசிய பட்சி நான் .. சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன் உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது, அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் .... எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம், நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன் மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்.. "Missile downed Malaysia Airlines" CNN, BBC அலறுகிறது!!
 29. 24 points
  வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படிந்த வெண்மை நிறமான துணிக்கைகளை எடுத்து முகர்ந்து பார்க்கையில், அவனது நினைவுகள் பல வருடங்கள், பின்னோக்கி நகர்ந்தன! அது ஒரு சற்றுக் குளிர்மையான காலைப்பொழுது. சகாரா பாலைவனத்திலிருந்து, தெற்கு நோக்கிப் பயணம் செய்த மெல்லிய மணல் துணிக்கைகள் வெண்ணிறத் துகள்களாகக் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை, என அந்த நாட்டு மக்களால் நம்பப்படுவதால், இதனை அவர்கள் ஒரு பாதிப்பாகக் கருதுவதில்லை. இது வரும் பருவ காலத்தைக் ‘ஹமட்டான்' என அழைத்துக் கொள்வதோடு சரி. அன்று சனிக்கிழமையாதலால், சற்று நேரம் மேல் மாடியிலிருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். இரண்டு பேர், எதிர் எதிராக நடந்தபடி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு போனார்கள். உனது சுகம் எப்படி, உனது மனைவியின் சுகம் எப்படி, அவளது குழந்தைகளின் சுகம் எப்படி, உனது இரண்டாவது மனைவியின் சுகம் எப்படி, என்று ஒருவருடன் ஒருவன் கதைத்தபடி, எதிர்த் திசைகளில் சென்று கொண்டிருந்தது, சின்ன வயதில் பௌதீகத்தில் படித்த ‘தொப்ளரின் விளைவை' அவனுக்கு நினைவு படுத்தியது. தூரத்தில் ஒரு தாய், தனது குழந்தையொன்றை முதுகில் கட்டியவாறு, தனது இரண்டு கைகளிலும், இரண்டு கோழிகளைத் தலைகீழாகத் தூக்கியபடி, அந்த மேட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்ததை அவதானித்தான். பொதுவாகக் குன்றின் மீது இருந்த அவனது வீட்டை நோக்கி, அவனது நண்பர்கள் தான் வருவதுண்டு. உள்ளூர் வாசிகள் பொதுவாக எட்டிப்பார்ப்பது அபூர்வமாகையால், சற்று ஆச்சரியத்துடன், அந்தத் தாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி அந்தத் தாய், தனது வீட்டுக்கதவைத் திறந்ததும், மனசு பக்கென்றது. நேற்று இரவு வீட்டுக்கு வந்து போன நண்பர்கள், போற வழியில் ஏதாவது இசக்குப் பிசகாக ஏதாவது செய்து தொலைத்து விட்டார்களோ, என்று எண்ணியவன், கீழே ஓடி வந்து, மரியாதைக்காகக் கதவைத் திறந்ததும், அந்தப் பெண், அப்படியே அவனது கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடவும் சற்றுக் கலவரமடைந்து போனவன்,’மமா' என்று கூறியபடி அவளது கரங்களைப் பிடித்து அந்தப் பெண்ணைத் தூக்கிவிட்டான். அவனது கால்களில், அந்த நாட்டு வழக்கப்படி, பலர் விழுந்தெழும்புவது வழமை தான் எனினும், ஒரு தாய் அவனது காலில் விழுந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு கோழிகளையும், அவனிடம் கையளித்தவள், தனது மகனைக் கல்லூரியிலிருந்து கலைத்து விட்டதைப் பற்றிக் கூறினாள். அவன் படிப்பிப்பது, கணித பாடமென்பதாலும், அநேகமான ஆபிரிக்கர்களுக்குக் கணிதம், சூனியம் என்பதாலும், அவன் பலரை, வகுப்பிலிருந்து அடிக்கடி கலைத்து விடுவதுண்டு. மற்றவர்களைப் போல,' பாம்' மரங்களை வெட்ட விடுவது போன்ற தண்டனைகள், மரங்களுக்கேயன்றி, மாணவர்களுக்கு அல்ல என்று அவன் நம்புவதே, அதற்கான காரணமாகும். அவளது மகன் யாரென்று உடனே நினைவுக்கு வராததால், உள்ளூர் மொழியில், மகனது பெயரைக் கேட்டவன், தாய் பெயரைச் சொன்னதும் யாரென்று அவனுக்குப் புரிந்து விட்டது. அந்த மாணவனது, தகப்பன் ஒரு ‘ பிறிக் லேயர்' எனவும் தனது மகன், நன்றாகப் படிக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியவள், இந்தத் தடவை மட்டும், அவனை மன்னித்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டாள். அவள் வந்த விதமும், தனது மகனின் படிப்பில் அவள் காட்டிய அக்கறையும் அவனுக்குக் கொஞ்சம் பிடித்துக்கொண்டது. எனவே, அன்று விடுமுறையானதால், அந்தப் பையனது தகப்பனைப் பார்க்க முடியுமா எனக் கேட்டான். ஆம், என்று கூறியவள், அங்கு தான் அண்மையில் ஒரு ‘சைட்' டில் அவர் வேலை செய்வதாகவும், அவனை அப்போதே, கூட்டிச் செல்வதாகவும் கூறினாள். கண்ணுக்கெட்டிய வரையும், எந்த விதக் கட்டிட வேலைகளும் நடப்பது போலத் தெரியவில்லை எனினும், அந்தத் தாயுடன் நடந்து சென்றான். ஓரிடத்தில், களிமண் குழைக்கப் பட்டுக், கட்டப்பட்டிருந்த தடிகளின் மீது, உருண்டைகளாக அவை அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவன் மட்டும், வெளியில் வந்து அவனது காலடியில் குனியவே, ‘பிறிக் லேயரைப்' பிழையாய் விளங்கிக் கொண்ட தனது முட்டாள் தனத்தை நொந்துகொண்டான்! மறுநாள், அந்தப் பையன், ‘அஜிபோலா' வீட்டுக்கு வந்தான். அவனைக் குளித்து விட்டு உள்ளே வரும்படியும், கீழேயுள்ள அறையில் தங்கிக் கொள்ளும்படியும் கூறினான். நம்ம ஆக்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதால், அவர்களின் ‘செல்வாக்கு' மூலம் தண்ணீர்த் தாங்கி அடிக்கடி நிரப்பப்படும். ஒரு வாளியில் மட்டும் தண்ணீரை நிறைத்தவன், கைகளில் உள்ள விரல்களை உபயோகித்து, காது, மூக்கு போன்ற பகுதிகளை, முதலில் கழுவியபின்பு, முழு உடம்பையும் கழுவத் தொடங்கினான். ஒரு ஐந்து நிமிடங்களில்,அவனது குளிப்பு முடிந்ததைக் கண்டு, சற்று ஆச்சரியப் பட்டுப் போனதுடன், எவ்வளவு தண்ணீரை நாம் வீணாக்குகின்றோம் என்றும் ஒரு கவலையும் அவனுக்கு ஏற்பட்டது. அன்று காலையில்.சிற்றோடையொன்றில், குளித்துக்கொண்டிருந்த குழந்தையொன்றும், தலைக்கு ;ஒமோ;போட்டுக் குளித்துக் கொண்டிருந்ததுவும், அவனது மனதில் ஒரு வலியை ஏற்படுத்தியிருந்தது. காலப் போக்கில்,அவனுக்குக் கணிதத்தை, மெல்ல,மெல்லத் தான் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. பைபிளைப் போன்றோ, அல்லது பூமிசாத்திரத்தைப் போன்றோ, கணிதத்தைப் பாடமாக்கி எழுத முடியாமல் உள்ளது என்பது தான்,அஜிபோலாவின் பிரச்சனையாகவிருந்தது. அவன், உதாரணமாகச் செய்து காட்டுபவைகளை, கேள்வி,வேறு இலக்கங்களுடன் இருந்தாலும்,அப்படியே,எழுதிவிட்டு வரும், பழக்கம் அவனிடமிருந்தது. அந்த அடிப்படைச் சிந்தனையை, மாற்றியதும், அவனுக்கும் அஜிபோலாவுக்கும் இடையில் பிரச்சனைகள் வரவில்லை, காலப் போக்கில், அவன் தனது வீட்டுக்கே போவது குறைந்து விட்டது. அஜிபோலாவின் சமையல் அவனுக்கும் பிடித்துக்கொண்டது. இறைச்சி கொஞ்சம், மீன் கொஞ்சம், அவித்த முட்டை கொஞ்சம் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ‘’டையினமயற் என எம்மவர்களால் அன்புடன் அழைக்கப்படும் மிளக்காய்த் தூளையும் போட்டு, மஞ்சள் நிறப் ‘பாம்' ஒயிலில் கொதிக்க வைத்தால், அதுக்குப் பெயர் ‘கறி' எனப்படும். தேவையான படி, மீனோ அல்லது இறைச்சியோ அல்லது முட்டையோ சாப்பிட்டுக் கொள்ளலாம். கறியும் ஒரு வாரம் வரைக்கும், பழுதடையாமல் இருக்கும். ஒரு நாள், அதிகாலையில் கல்லூரிக்குப் போனபோது, எல்லோரும் ஏசுநாதருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு அடித்த, சுழல் காற்றில், ஒரு கட்டிடத்தின் கூரை தூக்கி எறியப்பட்டகற்குத் தான் நன்றி சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியாமல், பக்கத்திலிருந்தவரை ஏனென்று கேட்கப், பகலில் அந்தச் சுழல்காற்று வந்திருந்தால், மாணவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். எனவே,அதனை இரவில் வர வைத்தற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றார்கள் என்று விளக்கமளித்தார். என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான். அன்றைய தினமும் ஒரு மாணவனை, வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த படியால் துரத்தி விட்டவன் பின்னர், அந்த மாணவனுக்கு ‘நித்திரை வருத்தம்' இருப்பதாக அறிந்து மனவருத்தப் பட்டான். ரெஸ்ரி' என அழைக்கப்படும் ஒருவகை மாட்டிலையான்கள் கடிப்பதால் இது ஏற்படும். இவர்கள் மட்டுமல்ல,மாடுகளும் மேய்ந்தபடியே, பல மணி நேரங்கள் தூங்கி விடுவதைப் பிற்காலங்களில் பல தடவைகள் அவன் அவதானித்துள்ளான். இனிக்கதைக்குத் திரும்பவும் வருவோம், உயர்தர வகுப்பில், மிகத்திறமையாகச் சித்தியடைந்த அஜிபோலா, பிற்காலத்தில் நல்ல வேலையில் இருந்தான். அவனும், அவனது தாயும், அவனது முன்னேற்றத்துக்கு அவனது 'உதவி' தான் காரணம் என்று நம்புகின்றார்கள். காலமும், அவனது பாதையை நகர்த்தி நீண்ட நாட்களாகி விட்டன. அஜிபோலா, தனது மகனுக்கும் அவனது பெயரை, வைத்திருப்பதாகச் சொல்லுகின்றான். வருடம் தவறாது, அவனது பிறந்தநாள் வாழ்த்தும், அவன் பல நாடுகள், மாறியபோதும், அவனைத் தேடி வந்து கொண்டிருக்கின்றது. அதில் படிந்திருக்கும், சகாராவின் வெள்ளைத் துணிக்கைகளைத் தடவும் ஒவ்வொரு தடவையும், அவன் நேரில் வாழ்த்துவது போலவும், ஒரு விதமான அன்னியோன்னியமும் வந்து போவது போலவே அவன் உணர்கின்றான்!
 30. 24 points
  இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்பையே எம்மிடம் கொடுத்துள்ளானே அதற்குமேலால் என்னத்தை அவனில் பார்க்கப்போகின்றோம் என்பது எனது எண்ணம் (சில எழுத்தாளர்கள் சார்ந்து அரிதாக சந்திக்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது தான், ஆனால் வெகு வெகு அரிது.) இதனால் இளையறாஜா நிகழ்ச்சிக்கு நான் போவதாய் இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை வேலைக்குப் புகையிரதத்தில் சென்றுகொண்டிருந்தேன். புத்தகம் ஏதும் இருக்கவில்லை. அதனால் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை (C.B.C) காதுக்குள் ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகை ஒரு தமிழர் பற்றிய ஒலிப்பேளை ஒலிபரப்பாகியது. றாஜீவ் என்ற இயற்பெயரும், Prophecy என்ற புனைபெயரும் கொண்ட ஒரு கனேடிய ஈழத்தமிழ் இ;ளைஞன்பற்றியது அது. "அப்பா இல்லை. அம்மா தனித்து என்னை வளர்த்ததால் வாடகை வசதிப்பட்ட ஆபத்தான இடத்தில் குடியிருப்பு. அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. சும்மா பலரும் சொல்வது போலன்றி, என் அம்மா உண்மையில் மூன்று வேலை செய்து தான் தினம் ஒரு நேர உணவை எம்மால் உண்ண முடிந்தது. வாடகை போன்ற இதர செலவுகள் போக, நாளைக்கு ஒரு உணவிற்கே அம்மாவின் மூன்று வேலை ஊதியம் போதியது. அம்மா கடினமாக உழைப்பதைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் வேலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். உழைப்பதற்கான வயதில்லை என்று வேலை கிடைக்கவில்லை. ஒரு தந்தை அடையாளத்திற்காக என் மனம் ஏங்கியது. அப்போது தான் எனது சுற்றாடலில் அவர்களைக் கண்டேன். விலையுயர் கார்களில் நாகரிக உடை அணிந்து திரிந்தார்கள். பணம் பண்ண வயது பிரச்சினை இல்லை என்றார்கள். என்னைத்; துவட்டிய நான் ஏங்கிய அப்பா வெற்றிடத்தை அண்ணாக்களாக நிறைத்தார்கள். அவர்கள் கனேடிய தமிழ் வன்முறைக்குழுவினர். அவர்களால் ஏகப்பட்ட சிக்கல்களில் நான் மாட்டி, காவல்துறையால் சிறையனுப்பப்பட்டேன். தினம் ஒரு உணவிற்கு மட்டுமே காசு சரிப்பட்ட அம்மா, இல்லாத காசை எவ்வாறோ புரட்டி என்னை பெயிலில் எடுத்தார். அப்போது தான் ஒரு மாமா துணைக்கு வந்தார். என்னையும் என் அன்னையையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பாதுகாப்பான அவரது மிசிசாகா வீட்டுச் சூழலில் வாழ்வில் முதன்முறையாகப் பயமின்றி பாதுகாப்புணர்வுடன் நான் பள்ளி சென்றுவந்தேன். என் மாமா என் இசையார்வத்தை நான் தொடர்வதற்காக தன்காசில் உபகரணங்கள் வாங்கித் தந்தார். அவ்வாறு நான் ஒலிப்பதிவு செய்த "I have a dream" ('எனக்கொரு கனவிருக்கிறது') என்ற மாட்டின் லூத்தர் கிங்கின் பாதிப்பில் உருவான ஒரு சொல்லிசைப்பாடல் எனது சமூகத்தின் பலத்த வரவேற்பைப் பெற்றது. முள்ளிவாய்க்காலிற்குச் சற்று முந்திய இந்தக் காலப்பகுதியில் எனது பாடல் மக்களிற்கு மருந்தானது. நான் பிரபலமானேன். மேடைகள் எனக்குச் சாதாரணமாகின. எவருமே கவனிக்காது கிடந்து பழகிய எனக்கு இந்த வெற்றி புதிதாக இருந்தது. நான் தலைக்கனமிக்கவனானேன். என் நண்பர்களோடு சண்டையிட்டேன். எனது காதலியைத் தூக்கியெறிந்தேன். குடித்துக் கும்மாளமிட்டேன். தலைகால் தெரியாது நடந்துகொண்டேன். என் வாழ்வு மீண்டும் சரியத் தொடங்கியது. மீண்டும் சட்டம் என்னைநோக்கிச் சாட்டை வீசியது. நான் வெறும்பயலாயப் படுத்துக் கிடந்தேன். மதியம் தாண்டி ஒரு மணிக்குப் பின் தான் தூக்கத்தால் எழுவேன். இலக்கின்றிக் கிடந்தேன். அப்போது என் அம்மா இரண்டாம் முறையாக இல்லாத பணத்தை எவ்வாறோ புரட்டினார். என்னைப் பார்த்துச் சொன்னார். இந்த உலகில் நீ பிறந்ததில் இருந்துஇந்தச் சமூகம் உன்னை மனிதனாய்ப் பார்த்தது நீ இசையோடு சேர்ந்தபோது தான். அது மட்டும் தான் உன்னிடம் உண்டு. அதைப்பற்றித் தான் நீ எழவேண்டும். வெளிக்கிடு இந்தியாவிற்கு என்று எனது தாயார் மீண்டும் என்னைத் தூக்கிவிட்டார். நான் சென்னை சென்றேன். அமீர் என்னை அடையாளங்கண்டார். இன்று ஆதிபகவனில் எனது பாடல் வருகிறது. ஆனால் எனக்கினித்தலைக்கனம் வராது. எனது இசை மட்டும் அன்றி நான் ஒரு மனிதனாகவும் வளர்ந்துவிட்டேன். எனக்கு வாழ்வில் இப்போது ஒரு நம்பிக்கை தெரிகிறது. போற்றவேண்டிய விடயங்கள் புரிகின்றன. என் அன்னையின் அர்ப்பணிப்புப் புரிகிறது. கடவுளை நான் அதிகம் நம்புகிறேன். வாழ்வு இனிச் சீராகச் செல்லும் என்று தோன்றுகின்றது. என்னைப்போன்ற ஒரு தமிழன் இசையினால் பிளைக்கணும் என்றால் அது தமிழகத்தில் தான் சாத்தியம். அந்தத் தமிழகம் எனக்கு இப்போது ஒரு பாதையினைத் தந்துள்ளது" ஏறத்தாள அந்த இளைஞனின் பேட்டியின் சாராம்சம் அப்படித் தான் இருந்தது. எனது மண்டையில் யாரோ சுத்தியலால் தாக்கியது போலிருந்தது. எனது தாயகம் தொடர்பில் எனது மசாட்சிக்கு எந்த உழல்தலையும் கொடுக்காதவகை எனது வாழ்வு நகர்ந்தது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் எனது மனசாட்சி நிம்மதியாய் உறங்கும் வகை மனிதாபிமானம் தொடர்கிறது. ஆனால் நான் வாழும் அதே மாகாணத்தில் எனக்குச் சிலமணிநேர தூரத்தில் ஒரு தமிழ்ச்சிறுவன் நாளைக்கு ஒருநேர உணவு மட்டுமே உண்ண முடிந்து பசியோடு கிடந்தான் என்ற செய்தியினை எனது காதிற்குள் சி.பி.சி அறைந்தபோது மனசு பிசைந்தது. அப்போது அந்த ஒலிப்பேளை சொன்ன ஒரு உதிரித் தகவல் மனதின் முற்புறத்திற்கு வந்தது. அந்த இளைஞன் இன்று நம்பிக்கையோடு பயணிப்பதற்குத் தென்னிந்திய திரையுலகு தான் வழி செய்தது என்பது மட்டுமன்றி, புலம்பெயர் சமூகத்தில் இரண்டாம் தலைமுறைக்குக் கூட கோடம்பாக்கம் ஒரு பற்றிக்கொள்ளக் கூடிய கிளையாய் இருக்கிறது என்பது தெரிந்தது. அந்த இளைஞனிற்கு அந்த நம்பிக்கைக் கீற்றை வழங்கிய அந்தத் திரையுலகிற்கு ஒரு நன்றி செலுத்தத் தோன்றியது. இளையறாஜா நிகழ்விற்குப் போக முடிவெடுத்தேன். சனிக்கிழமை நிகழ்விற்கு வெள்ளி காலையில் ரிக்கற் கிடைப்பது அரிது என்று தோன்றியது. தெரிந்த சிலரைத் தொடர்பு கொண்டபோது வி.வி.ஐ.பி ரிக்கற்றுக்கள் மட்டும் தான் சாத்தியம் என்றார்கள் (நிகழ்வில் ஏகப்பட்ட இருக்கைகள் சாதார ரிக்கற்றிற்குரிய இருக்ககைகள், காலியாய் இருந்தது வேறுகதை). இரண்டை வாங்கிக்கொண்டேன். இப்போது நிகழ்வால் வந்து தான் இதனை எழுதுகிறேன். எனக்கு நிகழ்வு 90 வீதம் பிடிக்கவில்லை. பாலசுப்பிரமணியத்தின் மடைதிறந்து, கார்த்திக்கின் இரு பாடல், இளையறாயாவின் சில பாடல், விவேக்கின் நிகழ்வு, இப்படி தொட்டுத்தொட்டாக ஒரு பத்துவீதம் மட்டும் பிடித்தது. பாடல்களை யார் தெரிவுசெய்தார்கள் என்று தெரியவில்லை, இளையறாஜாவைக் கூட்டிவந்து வைத்து ஏதோ கத்தினார்கள். கார்த்திக் திறமை மிக்கவர் தான், ஆனால் 'என் இனிய பொன்நிலாவே' பாடலைக் கார்த்திக் பாடியபோது எழுந்து சென்று கன்னத்தில் ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றியது. அன்னக்கிளி பாடலைக்கூட சித்திரா கொலைசெய்திருந்தார். வி.வி.ஐ.பி ரிற்கற் என்று காசை வாங்கி விட்டு வாங்கு போலக் கதிரை போட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்வென்று, வாங்கில் வந்து குந்தச் செய்துவிட்டு, ஏழு மணிக்கு நிகழ்வு தொடக்கினார்கள். இளையறாஜாவால் ரசிகர்களுடன் connect பண்ண முடியவில்லை. கரகோசத்தையும் எழுந்துநின்று பாராட்டுவதையும் இரந்து பெற்றுக்கொண்டார்கள். இசை நிகழ்ச்சி பார்ப்பதற்கான பக்குவமற்ற பல பீடைகள் வந்திருந்து தண்ணியைப் போட்டுட்டு கத்தி மறைத்துக் கிடந்தார்கள். இசையை இரசிப்பதற்கான உள் உலகத்தைக் கோதி எடுக்க முடியவில்லை. அதற்கான பக்குவம் எனக்குச் சாத்தியப்படவில்லை. ஒரு இருட்டறையில் இருந்து இளையறாஜா பாடல்களை காதுக்குள் ஒலிக்கவிட்டு இந்த 7 மணிநேரத்தைச் செலவிட்டிருப்பின் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கும். அதை விட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்து வந்தது தான் மிச்சம். ஒரு இசை நிகழ்விற்குச் சென்று வந்தால் மனது இறகாய்ப் பறக்கணும். ஆனால் இன்று இரும்பாய்க் கனக்கிறது. இத்தனை செலவில் இவர்களை அழைத்து வந்தவர்களிற்கு, நிகழ்வை எவ்வாறு சிறப்புற வடிவமைப்பது என்று சிந்திப்பதற்குத் தோன்றவில்லை என்பது பலத்த ஏமாற்றமாக இருக்கிறது. இளையறாஜாவின் எண்பதுகளின் முத்துக்களை மட்டும், அதைச் சரியாகப் பாடக்கூடியவர்கள் மூலம் பாடவைத்து, அவை பற்றிய இசைநுணுக்கங்களை இளைறாஜா வாயால் சொல்லவைத்துச் சென்றிருந்தால், இன்று பாடப்பட்டதில் அரைவாசிப்பாடல்கள் மட்டுமே பாடப்பட்டிருப்பினும் திருப்த்தி கிடைத்திருக்கும். அதைவிட்டுக், கடமைக்குக் கத்திச் சென்றார்கள். வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த எந்தக் காரியமும் உள்ளார்ந்த வெறுப்பையே எனக்கு இது வரை சம்பாதித்துத் தந்தன. இந்நிகழ்வு கூட உணர்ச்சிவசப்பட்டுச் செல்லணும் என்று நான் முடிவெடுத்துச் சென்று, நொந்து நூடில்சாகி வீடு வந்துசேர்ந்தது தான் மிச்சம்.
 31. 23 points
  எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன. மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள். "நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின் பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன. இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது. இதே சம்பவத்தில், இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான். பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன். மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான். வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். அம்மானிடம் சென்று விசாரணை முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன். அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது. அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது. அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின் பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது.
 32. 23 points
  அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது! அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்! என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக் கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்! இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்! தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்! தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப் பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்! இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்! அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்! கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்! கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..! அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது! ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது! வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்! நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது! அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது! சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்! 'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?' அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! (இன்னும் கொஞ்சமிருக்கு! )
 33. 23 points
  பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்
 34. 23 points
  ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் ஆட்டோ பிடித்தால், கட்டணத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். எனினும் வெள்ளவத்தையில் இருந்து, புறக்கோட்டை செல்ல ஆட்டோ 1000 என்றார்கள். பின்னே வந்த பஸ்ஸில் ஏறினால் 12 ரூபா. சலூனில் ஷேவ் எடுக்கப் போனால், முதலே எவ்வளவு என்று கேட்டால், லோக்கல் ரேட் 100 ரூபா. முடிஞ்ச பிறகு கேட்டால் 300 முதல் 500 வரை. (ஷேவ் எடுத்துப் பாருங்கள், நெடுக ஸெல்ப் ஷேவ் எண்டு, வறாண்டிக் கொண்டு இருபவர்களுக்கு, நல்ல ஒரு அனுபவம். ஆனால், டிசு பேப்பர் பாவிக்க வேண்டும், ஜெல் கையினால் பூச வேண்டும், முகம் துடைக்க, அவர்களது துவாய் பாவிக்கப் படாது என்று சொல்லி வையுங்கள். அப்படியே ஒரு டிப்ஸ் கொடுத்து விடுங்கள். அடுத்த நாள் இன்னும் அமர்க்களமாய் எடுத்து விடுவார்.). ஹோட்டல் மிகவும் அதிகமாக அறவிடுகிறார்கள். நேரே போனால் அதிகமாக சொல்வார்கள் (களைப்புடன் வருபவர்கள் அங்க, இங்க போய் மினக்கட மாட்டர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரம்). நான் booking.com மூலம், ஒரு ஹோடேலில் இருந்து மறு ஹோட்டலுக்கு போகும் முன்னர் புக் பண்ணிக் கொண்டே போனதால், மலிவான டீல்கள் கிடைத்தன. ஆகவே அங்கே இருக்கும் போதே, இவ்வகையில் புக் பண்ணுங்கள். ஆட்டோ, வாடகை கார்களுக்கு, கொண்டு வரும் வாடிக்கை யாளருக்கு, கொமிசனோ, ரெஸ்டாரன்ட் ஆயின், ஒரு சாப்பாடு பார்சலோ கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடங்களை காட்டி, கட்டி அடித்து விடுவார்கள். நான் booking.com மூலம் எடுத்த அதே $29 ரூம், நேரே சென்ற ஜேர்மன் தமிழருக்கு $70. ரயில் பயணம் சிறப்பு. அதிகூடிய விலை 1300 ரூபா. அதிகுறைந்த விலை 370 ரூபா. பஸ்கள் 1300 ரூபா, ஆனால், அந்த பணத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் ஓரிரு நிறுவன பஸ்களே தரமானவையாக உள்ளன. அதாவது எல்லோரும் 1300 ரூபா அறவிடுவதால், பல தரமில்லாத பஸ்களும் ஓடுகின்றன. கொமிசன் அதிகமாக கிடைப்பதால், தரம் இல்லாத பஸ்களை, தரமானதாக சொல்லி விற்பார்கள். அண்மைய மழையில் பஸ்கள் ஒழுகி, மக்கள் பணத்தினைக் திருப்பக் கேட்டதால், சில பஸ்கள் ஓடாமல் இருந்தன. மேலும் இவ்வைகையான பஸ்களில் A/C புல்லாக போட்டு விடுவார்கள். மக்கள் குளிரில் நடுங்கி வெடவெடத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கவலை இல்லை. மிக முக்கியமாக, கொழும்பு - யாழ், யாழ் - கொழும்பு பஸ் பதிவுகளில் கவனமாக இருங்கள். மிகச் சிறந்த பஸ்களை மட்டுமே கேட்டு பதிவு செய்யுங்கள். வெங்கடேஸ்வரா, குணசேகர பஸ்கள் நல்ல தரம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனித்தனியாக A/C கொன்றோல் பண்ண முடியும். நான் குணசேகர பஸ் லில் வரும் பொது பயணித்தேன். எனினும் புறக் கோட்டையில் இருந்து CTB பஸ்கள் மலிவு விலைகளில் செல்கின்றன (ரூபா 370?). பஸ் இலக்கம் 87. தரமில்லா 1300 ரூபா பஸ்களிலும் பார்க்க, இந்த அரச பஸ்கள் நன்றாக உள்ளன. நீண்ட தூரமாயின், விசேட இருக்கைகள் (சாய்ந்து படுக்கக் கூடியாவாறு) உள்ளன. நல்ல உணவு விடுதிகள் உண்டு. கொள்பிட்டியில் க்ரீன்கபே நன்றாக இருந்தது. ராஜ போஜன் உணவகம் ரூபா 1950 புபே. மிகவும் அதிக கட்டணம். curry leves வெள்ளவத்தையில் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். நான் போக முடியவில்லை. யாழ் சந்தையில் பலாப்பழம் ஒரு துண்டு வாங்கி, அந்த பாட்டியம்மா விடமே பேசி, கொஞ்சம் காசு கொடுத்து சுளை ஆய்ந்து வாங்கியதால், ஹோட்டல் கொண்டு போய் சுவைக்கக் கூடியதாக இருந்தது. மாம்பலமும் அவ்வாறே. இன்னும் முழு பலாப் பழ சீசன் வரவில்லை. யாழ் ரயில் நிலையத்தில் உத்தியோகத்தர்களாக, சிங்கள இளஞர்கள் டிக்கெட் வியாபாரம் செய்கிறார்கள். சிங்களத்தில் கேட்டால், தமிழில் பதில் அளிக்கிறார்கள். ஆச்சரியத்துடன் அவர்களது சூப்பெர்வைசெர் ஆயிருந்த தமிழ் அதிகாரியுடன் கதைத்த போது, இப்போதெல்லாம், அரச வேலைகள் பெறுவதாயின், தமிழர்கள் சிங்களமும், சிங்களவர்கள் தமிழும் சித்தி அடைய வேண்டுமாம். யாழ் நீதி மன்று பார்க்க போனேன். வாசில் இருந்த போலிஸ் கார் கூப்பிட்டு, சேட்டினை இன் பண்ணி போங்கோ என்கிறார் தமிழில். திரும்பி வரும் போது, கேஸ் முடிந்ததா என்றார். இல்லை, பல ஆண்டுகள் பின்னால் பார்க்க வந்தேன் என்றேன். ஆரவத்துடன் உரையாடினார். நாடு முழுவதுமே யுத்தத்தினால் பாதிக்கப் பட்டது. இன்று முழு நாடுமே நிமதியாக உள்ளது. விரைவில் தீர்வு வர வேண்டும் என்றார். தண்ணீர் போத்தல் ஒன்றையும் தந்தார். யாழில் சில இளையோரின் இன்றைய தளம்பல் நிலை, விரைவில் மாறும் என்றார் ஒரு லோயர். அவர்கள் இடையே நோக்கம் இன்றி தடுமாறு கின்றனர். நோக்கம் தெளிவாகும் போது தடுமாட்டம் நீங்கும் என்றார். பல புலம் பெயர்ந்தோர் முதலீடு செய்வதால் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதே வேலை யாழில் இருந்த திறமையான, ஏலேக்ட்ரிசியன், பிளமேர், மேஸ்திரி மார் கொழும்புக்கு அதிக சம்பளத்துக்கு கடத்தப் பட, அங்குள்ள அப்பிரசெண்டிங்குகள் இங்கே வருகிறார்கள். அதனால் வேலைகளில் தரமில்லை. டியூஷன் சென்டர், அதன் விளம்பரங்கள் மட்டும் எந்த வித வித்தியாசமும் இல்லை. ஆளில்லா டீக்கடையில், யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என்ற வகையில், ஆக்களே வராத கோயில்கள் எல்லாம், கோபுரம், குளம், மதில் என்று பிரகாசிகின்றன. வெளிநாட்டார் உபயம். அருமையான ரோட்டுக்கள் அமைந்துள்ளன. ஆர்மிக்காரர், தாமும் தம் பாடும். அவர்களுடன் சொறியாவிடில், அவர்கள் ஏனப்பா சொறியப் போகினம் என்றார் ஒரு உறவுப் பெரிசு. நம்ம ஜீவன் சிவாவை சந்திக்க திட்டம் போட்டு, செவ்வாய் காலை ரயில், வெள்ளம் காரணமாக ரத்தாகியதால், ஒரு நாள் இழந்து, சந்திக்க முடியவில்லை.
 35. 23 points
  வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உற‌வுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான‌ நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல‌ ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒரு தருனம்...எந்த எந்த வீரருக்கு நல்ல எதிர் காலம் இருக்கு என்று கணிப்பிடுவதில் மச்சான் கிள்ளாடி..தொலை பேசியில் கதைக்கேக்க கூட புத்திமதி தான் கூட சொல்லிட்டு இருப்பார். வார வருடம் கனடா போர ஜடியா இருக்கு அப்படி போனால் மச்சானை கண்டிப்பாய் சந்திச்சிட்டு தான் வருவேன்... (2) சுண்டல் மூன்று வருடத்துக்கு முதல் என்ற தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திச்சு யார் என்று பார்த்தால் நம்ம சுண்டல்..மச்சி நான் சுண்டல் கதைக்கிறேன்டா நீஎனக்கு ஒரு உதவி செய்யனும் என்று சொன்னான்..சரி சொல்லு மச்சி என்ன உதவி நான் உனக்கு செய்யனும் என்று கேட்டேன் ( சுண்டலும் உதவியை சொன்னான் நீ இதை தான் செய்யனும் என்று..அவன் சொல்ல என்ற வீடு ஒருக்கா நில நடக்கம் வந்தது நடுங்கின‌ போல உனந்தேன்.அந்த கதையோடை சுண்டலுக்கு இன்னொரு பெயரும் வைச்சாச்சு முட்டை என்று …அதிலை இருந்து இரண்டு பேரும் அலட்ட வெளிக்கிட்டது தான் இன்று வர தொடருது எங்கள் நற்பு இடைக்கிடை ஸ்கைப்பில கதைப்போம் சுகம் விசாரிப்போம்...சுண்டல் பார்த்தது கேட்டது ரசித்தது என்ற திரியில் ஒரு வசனம் எழுதியிருந்தார் அதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை அந்த வசனம் இதோ ( டாக்டர் டாக்டர் என்ற கணவர் பத்து லீற்றர் பெற்றோல் குடித்து விட்டார் டாக்டர் இப்ப என்ன செய்யலாம் டாக்டர் என்று..அப்ப டாக்கடர் சொல்லுவார் உங்கட கணவர பத்து கிலோ மீற்றர் ஓட சொல்லுங்கோ எல்லாம் சரியா வரும் என்று )சுண்டல் மச்சியிடமும் கதை கவிதை என்று எழுதுற திறமைகள் அதிகம் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி (3) ஜமுனா ஜமுனா என்றால் யாழில் தெரியாத் ஆட்கள் இருக்க மாட்டினம்...ஜம்மு பேபி யாழிழ் எழுதினது ஏராள‌ம்...கவிதை படக் கதை நாங்களும் கிரிக்கெட் விளையாடப் போறோம் என்று நகைச்சுவையாய் எழுதி யாழ் உறவுகளை சிரிக்க வைச்ச பெருமை ஜமுனாவையே சேரும்...நான் யாழில் இணைந்த காலத்தில் ஜமுனா கூட‌ ஜொல்லு விட்டு ஆளை ஆள் கிண்டல் அடிச்சசு பழகினது மறக்க முடியாத தருனம் அது..ஏதோ தெரியல இரண்டு பேருக்கும் எல்லா விசயத்திலும் நல்லா ஒத்துப் போக்கும்..யாழுக்கு வெளியில் நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்கள்...ஜமுனா கூட சேர்ந்து செய்த குழப்படி ஏராளம் அந்த நாட்களில் ...நான் யாழிழ் மனம் விட்டு பழகிய உறவுகளில் ஜமுனாவும் ஒரு ஆள்.... அப்ப நான் வரட்டா (4) குமாரசாமி தாத்தா குமாரசாமி தாத்தா யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் தாத்தவும் ஒரு ஆள்...குமாரசாமி தாத்தாவிடம் இருந்து தான் நிறைய பஞ்சு டையிலாக் கற்றுக் கொண்ட்டேன்...எதையும் பயப்பிடாமல் துனிந்து எழுதக் கூடிய ஒரு உற‌வு.....நானும் ஜமுனாவும் ஒரு திரியில் சும்மா அலட்டி புலம்பி எழுதி கொண்டு இருக்க..தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாய்த்த மாதிரி நீங்களும் வந்து வாச்சியல் என்று...அதிலை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றும் தொடருது....கால் பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..நான் சந்திக்க விரும்பும் உறவுகளில் தாத்தாவும் ஒரு ஆள்..அடுத்த முறை ஜெர்மன் வரும் போது உங்களை கண்டிப்பாய் சந்திப்பேன் தாத்தா...... (5) தமிழ் சிறி அண்ணா யாழில் புதிய‌வர் முதல் பழையவர் வர தமிழ் சிறி அண்ணாவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...யாழின் தூண் என்று கூட சொல்லலாம் இவர‌ .....கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு ஆள்...யாழிழ் அறிமுகம் ஆகும் உறவுகளை அன்பாய் வர வேற்பார்.....கருணாநிதியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேணும் என்றால் தமிழ் சிறி அண்ணாவை தொடர்பு கொண்டால் விளக்கமாய் அந்த மாதிரி சொல்லுவார்...ஒரு திரியில் கருணாநிதியை பற்றி எழுதி இருந்தார் அதை வாசித்து வியந்து போனேன்...தமிழ் சிறி அண்ணாவும் கால் பந்து விளையாட்டு மேல் தீவீர ஆர்வம் கொண்டவர்...2010 பீபா உலக கோப்பை கால் பந்து போட்டியில் சிறி அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒன்று....யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒரு ஆள் (6) வாத்தியார் வாத்தியார் அண்ணா கூட விளையாட்டு திரியில் தான் என் கருத்தாடல் ஆரம்பம் மானது..வாத்தியார் மிகவும் அமைதியான ஒரு உறவு.....கூட அலட்டி எழுத மாட்டார்..மற்றவர்களை சீன்டி பார்ப்பதும் இல்லை.....எப்பவும் வெளிப்படை பேச்சு..மற்ற உறவுகளை கவனிப்பதிலும் வாத்தியார் அந்த மாதிரி..உறவுகள் 5000 அல்லது 10000 ஆயிரம் கருத்து எழுதி முடித்தால்..அவர்களுக்கு புது திரி திறந்து வாழ்த்து சொல்லி மற்றவர்களையும் வாழ்த்த செய்பவர்....வாத்தியாரும் ஒரு சில ஆக்கங்களை யாழிழ் எழுதி இருந்தார்..அதிலும் கோயில் சம்மந்தமாக்க எழுதி இருந்தார்....அடுத்த வருடம் நடக்க இருக்கும் பீபா உலக கோப்பை விளையாட்டில் யாழிழ் வாத்தியின் ஆதீக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்....மற்ற உறவுகளைப் போல் வாத்தியும் நல்ல ஒரு உறவு (7) டங்கு இசைக்கலைஞன் இசைக்கலைஞன் அண்ணா..யாழில்யார் தன்னும் இவருடன் சீன்டி பார்த்தால் கூட கோவப் படமாட்டார்..பொறுமையா பதில் அளிப்பார்...நான் கவனித்த மட்டில் இவர சீன்டிப் பார்க்கிற ஆக்கள் எல்லாம் 50 கருத்துக்கு உள்ளை எழுதின ஆட்கள் தான் இவர கூட சீன்டி பார்ப்பது ...இசைக்கலைஞன் அண்ணாவுக்கு யாழ்ழுக்கு வெளியிலும் ஒரு சில ரசிகர்கள் இருக்கினம் இவரின் எழுத்தை விரும்பி வாசிக்க...என்ர நெருங்கிய உறவு சொன்னது இது தான் இசைக்கலைஞன் அண்ணா நல்ல ஒரு கருத்தாளர் என்று (வாழ்த்துக்கள் அண்ணா... ) யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் இசைக்கலைஞன் அண்ணாவும் ஒரு ஆள்..... (8) தமிழ் அரசு தமிழ் அரசு அண்ணா...யாழின் புயல் என்று கூட இவர சொல்லலாம்...தீவிர ஈழ ஆதரவாளர்..ஒரு தருடனும் முரன் படுவது இல்லை தானும் தன்ர பாடும்...இவர் யாழிற்கு ஆற்றும் பணி பெரியது...உறவுகளை காணாட்டி கூட..காணவில்லை திரிக்கு சென்றும் ஆக்களை தேடுவார்..தெரியாத‌தை கேட்டால் பொருமையா சொல்லியும் குடுப்பார்.... (9) நிலாமதி நிலாமதி அக்கா...இந்த அக்காவை பற்றி கூட எழுதலாம்...எல்லாருடனும் நல்ல மாதிரி பழகும் ஒரு உறவு...ஆரம்ப காலத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்பா...நான் எழுத்துப் பிழை விட்டு எழுதும் தமிழை பார்த்து கவலைப் பட்ட ஆட்களில் நிலா அக்காவும் ஒரு ஆள்....ஒழுங்காய் எழுதனும் என்று ஊக்கம் தருவா.நான் அவாக்கு வைச்ச பெயர் டீச்சர் ….நிலா அக்காவை இப்ப பெரிதாக்க யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் நான் எழுதின கதையை அடிக்கடி ஆரம்பத்தில் நினைவு படுத்துவா...நிலாக்க கூட கருத்தாடின அந்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள்..... (10) நெடுங்கால போவான் நெடுங்ஸ் அண்ணா...யாழின் அறிவாளி என்று கூட இவர சொல்லலாம்...நெடுங்ஸ் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு...இவரும் தீவிர ஈழ ஆதரவாளர்...இவருடன் எதிர் அணியினர் கருத்து எழுதி ஜெயிக்கிறது ரொம்ப கஸ்ரம்....நல்ல ஒரு எழுத்தாளர்..யாழிழ் நான் அதிக பச்சை குத்தினது என்றால் அது நெடுங்ஸ் அண்ணாவின் கருத்துக்கு தான்...ஈழ விசயத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக்கும்...நெடுங்ஸ் அண்ணாவுக்கு விஞ்ஞான ரீதியிலா பல‌ விடையங்கள் தெரியும் அதிலும் நாசா சம்மந்தமாய்.. உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.... தொடரும் எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்
 36. 23 points
  சிமிக்கி மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்த்ததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள். நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான். இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா. உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான். 0000000000000000000000 ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது. ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை. 00000000000000000000000 ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார். மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார். ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ?? தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம். சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும். கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா. தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ?? எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே? உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம். சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம். தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார். அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார். வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான். 000000000000000000000000 இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான். மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது. மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள். 0000000000000000 பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது..தம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சம் பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு? நான் நினைச்சமாதிரியே இருக்கு .. அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள்?? . என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது. கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்?? சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ? இல்லைத்தான் ..... சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது... எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான். அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும். விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன். சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே?? அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன். எந்தப் பாட்டை ?? அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள். யாவும் கற்பனையே
 37. 22 points
  காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் கேட்டவனுக்கு கேட்டவன் நான் நல்லவன்ன்ன்ன்ன்........ நான் கேட்டவன்ன்ன்ன்ன்..... லவ் பண்லாமா வேண்டாமா.....???? ) மப்பு தெளிந்த பின் விசயத்தை கேள்வி பட்டு திரும்ப மப்பான அர்யுன் அண்ணா விடுவாரா நவீனன் அவரும் வருகிறார் என்ன ஆச்சு என்று அக்கம் பக்கம் ஓடி விடுப்பு பார்த்து முகநூலில் நேரடி தகவல் போடும் துளசியக்கா சிக்கனமாய் வர மாட்டு வண்டி தான் சரி என்று உடையார் ஏறி உக்கார்ந்த மாட்டு வண்டியை பாருங்கோ என்ன சிக்கல்னு விஞ்ஞான விளக்கத்த குறிப்பெடுத்து கொண்டு வாற நெடுக்ஸ் அண்ணா பாழா போன டங்கு விட்டுட்டு போயிட்டாரே : நிழலி அண்ணா முதலில் வந்த புத்தன் அண்ணாவும் சுவியண்ணாவும் சிறியாருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து போகின்றனர் வேலையிடத்தில் கையும் ஓடல காலும் ஓடல சோழியன் அண்ணனுக்கு, வேலையெல்லாம் தப்பு தப்பாய் முடிகிறது ஒல்லாந்து காரர் துங்கி வந்தவரை கொண்டு இழுத்து வருகிறார் கெதியில நண்பன போய் பாப்போம் எண்டால் இந்த மனுஷி விடுறா இல்ல : நந்தன் அண்ணா அசுர வேகத்தில் வருகிறார் மணிவாசன் அண்ணா
 38. 22 points
  பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை. மனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள். மீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் "அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை " "மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்.... 'கஞ்சாவையா.....என்ட சிவனே' டேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் " உன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு. ஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு. என்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா. உன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு....... டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்.... டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா? .ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா..... கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...
 39. 22 points
  ரயிலை பிடித்தாயிற்று, கெளதம் மேனனின் படங்களை போல் அதிசயத்தக்க அழகிகள் இல்லாமால் பாலாவின் திரைப்படங்களை போல் பிச்சைகாரர்களும், வறியவர்களும், நாடோடிகளும், வித்தைகாரர்களுமாய் இயல்பாய் இருந்தது. மெல்ல சிந்தனையோடியது, ஒரு வாரத்திற்கு முன் வருவதாக சொல்லியதோடு சரி அதன்பின் பேசவில்லை, இன்னமும் படுபாவி புலவர் தொலைபேசி எண்ணை கொடுக்கவில்லை, எங்கே போய் யாரை சந்திப்பது என்ற அச்சம் வேறு புகுந்துகொண்டது. குமரனிருக்க இடமில்லையேல் குன்றிற்க்கு பெருமையில்லை, இசை இல்லையேல் பயணங்களுக்கு சிறப்பில்லை. ஏதோ... மோகம் ஏதோ... தாகம் நேத்துவரை முளைக்களயே... ஆசைவிதை விதைக்களயே... சேதிதிதிதி....... என்னனன . . . . . . வனக்கிளியே....!!! ராஜாவின் பாடல்களால் சலனமடைந்த மனம் ஒருநிலைக்கு வந்தது. சென்னை நண்பனை அழைத்து ஒரு நிகழ்ச்சிக்கு உடன்வரும்படியும், விலாசத்தை சொல்லி இணையத்தில் போக வேண்டிய இடம், பேருந்து பற்றிய தகவல்களை பார்த்து வைக்க சொன்னேன். ரயில் சமிஞ்சைக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தது சென்னையின் புறநகர் பகுதியில், கடந்து சென்று கொண்டிருந்த மாநகர் உள்ளூர் சேவை ரயிலின் படிக்கட்டுகளில் ஆண்களும், பெண்களும், காதலர்களும் அநாயசமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நிலையத்தில் ஏறிய ஒருவர் மதியம் இரண்டு மணியளவில் எல்.ஆர்.ஈஸ்வரியை "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்று கத்த விட்டு கொண்டிருந்தார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு போக போகிறோம் என்றேன். மேலும் கிழும் பார்த்தான். தலைநகரின் சுற்றாடல் மிக மிக மோசமாக இருந்த்து மெட்ரோ ரயில் பணிகளினால். எங்கும் புகை தூசி. நண்பனுடன் பேருந்தில் பயணபட தொடங்கினேன். கையில் அழைப்பிதழ் இல்லை, தொலைபேசி எண்ணில்லை ஒருவேளை உள்ளே நுழைய தடை போட்டுவிட்டால் எண்ண செய்வதென மனம் தரிகெட்டு பாய்ந்தது. இடையிடையே இரவு உணவு இருக்கு தானே என்று கேட்டு கொண்டிருந்தான். கனடாகாரர் கனக்க கவனிப்பினம் என்டு மனதில் நினைத்து அவனிடன் ஒம் ஒம் எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையூட்டி கொண்டிருந்தேன். ஊரிலிருந்து வரும்போதே உடனொருவன் வருவதாக சொல்லியிருந்தேன் அம்மாவிடம். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது அவனிடமே கொடுத்து பேச சொன்னேன். அவனும் சமாளித்தான் இனி கவலையில்லை. குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றாயிற்று. வரவேற்பரையில் ஊழியரிடம் நிகழ்வை பற்றிய விடயத்தை சொன்னேன், மேலே முதல் மாடியில் என்றார். வரவேற்பரையிலேயே ஒரு சிறு வண்ணமயமான கூட்டம் அகமகிழந்து எதையோ குடித்தபடி இருந்தனர். அதில் இரண்டு சிறிய பெரிய சிறுவர்களும் இருந்தனர். என் பயணத்தின் இலக்கானவர் மெதுவாக திரும்பி பார்த்து மீண்டும் காகித குவளைக்குள் மூழ்கிவிட்டார். மேலே போகனுமடா என்று திரும்பினேன் ஆளை காணோம். மேலே போவதா அவனை தேடுவதா இல்லை தமிழிடம் போவதா என்று மனம் ஊசலாடியது பெண்டுலத்தின் துணையில்லாமல். சரியென்று மேலே படிக்கட்டிற்கு போவதுபோல் சென்று ஒரு அரைவட்டமடித்து அவர் முன்னேபோய் நின்றேன். நிமிர்ந்து பார்த்தவரிடம் ராஜன் விஷ்வா என்றேன். ஒ ஒ ராஜன் விஷ்வாஆஆஆ வாங்கோ வாங்கோ வணக்கம் என்று புன்னகைத்தார். நான் சுதாகரிப்பதற்குள் ஏவுகணை வேகத்தில் சில சொல்லாடலை முடித்திருந்தார் யாழ்பாண தமிழில், என்ன சொன்னார் என்று யோசிப்பதற்குள் மீண்டுமொரு பல்முனை ஏவுகணை தாக்குதலை முடித்திருந்தார். பிறகு பிள்ளைகளை அறிமுகம் செய்தார் கணவரிடம் அறிமுகம் செய்தார் இவர் தான் யாழ்கள இசையின் சிஷ்யபிள்ளை கோவயமுத்தூரிலிருந்து வந்திருக்கிக்கிறார். ராமனுக்கு அணிற்பிள்ளை உதவிசெய்து பெருமையடந்தை போல் குருநாதருக்கு சிறுதுளி பெருமை சேர்த்து இந்த சிஷ்யபிள்ளை பிறவிப்பயனைடைந்தது. என்னை பார்த்திருக்கிறீர்களா என்றவரிடம் ஒம் விவசாயி விக் அண்ணாவின் சந்திப்பில் களைத்துப் போயிருந்த கள உறவுகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தந்த பாரியின் படங்களை பார்த்திருக்கிறேன் என்றேன். முதலில் நான் சாகாறாவின் அண்ணன் என்று குழப்படி செய்து பார்த்தார். எதிரிலிருந்து கண்ணை சுழற்று சுழற்றி வெருட்டினார் பிறகு சில நிமிடங்கள் கனத்த மவுனம். இருவரும் நகர்ந்து விட்ட பின் நானும் பெரிய மகனருகில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக அவதானித்தேன் அவர்களை. குடும்பமே தமிழர் உடையில் மிடுக்காய் இருந்தது. சாரம் உடுத்தியிருந்தார் தந்தை. பெரிய பிள்ளை தாவணி பாவாடையிலும், ஆண் பிள்ளைகள் குர்தா மாதிரியான உடையிலிருந்தனர். அவர்களுக்கும் அக்கா சாரம் கட்டிவிட்டிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும். பெரிய மகள் கையில் போட வேண்டிய மருதாணியை தலைமுடிக்கு போட்டிருந்தார். சிறிய மகள் அனார்கலி வடிவ சுடிதாரில் கொள்ளை அழகில் துடுக்குடன் இருந்தாள். சிறிய மகன் அமைதியின் வடிவாய் சாந்தமாயிருந்தான் நல்ல பண்பான சிறுவன்போல் தோன்றியது. பெரிய மகன் என்னிடம் பேச முயன்றவர்போல் இருந்தது. முதலில் பெயர் கேட்டவர் பிறகு முகப்புத்தக முகவரி வாங்கி குறித்து வைத்து கொண்டவர் அத்திட்டத்தை இன்று வரை கிடப்பில் போட்டுவிட்டார். என்ன வேலை செய்கிறீர் என்றவரிடம் அது அதுவந்து அதாவது என்டு இழுக்க எளிதில் புரிந்து கொண்டார் வேலையில்லா பட்டதாரியென்டு, திடிரென்று அம்மா இவருக்கு இருபத்திமூன்று வயதாம் என்டு கத்திவிட்டார். அருகில் வந்த அக்கா நலம் விசாரித்தவர். இந்த மடிக்கணினியால் படங்களையேற்ற முடியவில்லையென கவலைப்பட்டார். எனக்கும் தான் யாழில் படங்களை ஏற்ற தெரியாது என்டு வெகுளியாய் சொல்ல பிறகு இத்தனை நாள் என்ன அங்க குப்பையா கொட்டுறியள் என்று கடிந்தார். ( நியானி: கருத்துக்கள விதிகளை மீறி சக கள உறவை ஒருமையில் திட்டியதற்காக கள உறுப்பினர் வல்வை சகாறாவிற்கு மூன்று எச்சரிக்கை புள்ளிகளையும், ஒரு மாத தடையும் தாராளமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ) தொலைபேசியில் தான் வருகிறேன் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்தார். பிறகு கனாடாவிலும் நடைபெற உள்ள நிகழ்வு பற்றியும் பேசி கொண்டிருக்க ஆளை காணமென்று தேடப்பட்ட நண்பன் ஆளுடன் பேசி முடித்து வந்தான். அவனை அறிமுகப்படுத்த பிறகு ஒவியர் புகழேந்தி அங்கு நின்றிருந்தார் பின்னால், அவரை பற்றி சொன்னார் எனக்கு பிடிபடவில்லை. பல அரசு விருதுகளெல்லாம் வாங்கியவர் என்டு எனக்கு விளங்கவைக்க கடினமாக முயன்று தோற்றுவிட்டிருந்தார். ஞாபக மறதிக்கு அம்மா வாங்கி கொடுத்த ஞாபக சக்தி மாத்திரையையே சாப்பிட மறந்துவிடும் நினைவாற்றல் உடையவன் நான். வெகுநேரம் கழித்துதான் அவரது ஒவியங்களை யாழில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவர்தான் புத்தக அட்டைப்பட ஒவியம் வரைந்துள்ளார். விழாவிற்கு வர போகிறவர்களில் உன்னை மட்டும் தான் தெரியும் என்றபோது ஒருவேளை வராமல் போயிருந்தால் அவரிற்கு தனிமையுணர்வு எற்பட்டிருக்கலாம், தம்பி என்ற நிலையிலும் சக யாழ் கள உறுப்பினர் என்ற வகையிலும் அவர் சார்பாக கலந்து கொண்டது மனநிறைவை தந்தது. நண்பனுக்கு சூழல் புதியதாக இருக்க அவனை அழைத்து மேலே நிகழ்விடத்துக்கு சென்றுவிட்டேன். விழா நிகழ்விடம் எளிமையாக இருந்தது. சாகறா அக்கா சிரித்து கொண்டிருப்பது போல் ஒரு விளம்பரதட்டி அறிமுக புத்தக அட்டைப் படத்துடன் மேடைக்கு பின்புறம் தொங்கவிட்டிருந்தது. ஒரு பெரியவர் அவசரத்துடன் வருவதும் போவதுமாக இலங்கை தமிழிலும் தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தார். நாற்பது இருக்கைகள் வரை போடப்பட்டிருந்தது. அக்காவின் கணவர் சற்று கலவரத்துடன் காணப்பட்டார். முன்பே என்னிடம் விழாவிற்கு ஒப்பனை எதுவும் செய்யபோவதில்லை என்டு அக்க சத்தியம் சொன்னவர், சத்தியத்தை அப்பட்டமாக மீறியிருந்தார். உள்ளே வந்த சிறியவனை அழைத்து அருகில் அமர்த்தி எனது அதியுயர் ஆங்கில புலமையால் அவனது தமிழ் புலமையை சோதித்து கொண்டிருந்தேன். தமிழ் பட கதாநாயகிகளை போல ஒரளவு பேசினான். முதலில் வந்த கொளத்தூர் மணி அவர்கள் அப்போது தான் புத்தகத்தை எடுத்து ஆராய்ந்தார். பிறகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனும் ஒவியர் புகழேந்தியும் மற்றவர்களும் வர துவங்கினர். ஐய்யா பழ.நெடுமாறன் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். நெடுமாறன் ஐய்யாவும் மணி அவர்களும் தங்களது புதல்விகளுடன் வந்திருந்தனர். விழா ஆரம்பிக்க முன் அனைவருக்கும் பிரட் சான்ட்விச் பரிமாறப்பட்டது. இலங்கை தமிழிலும், தமிழக தமிழிலும் பேசி கொண்டிருந்தவர் விழாவின் துவக்க உரை வழங்கினார். அவர் சாகறா அக்காவின் தந்தையின் வகுப்பு தோழனாகிய கவிஞர் வல்வை.குமரன். பிறகு தந்தை பழ.நெடுமாறன் ஐய்யா அவர்களின் கரங்களால் வல்வை சாகறாவின் "காவியத் தூது" "வேங்கையன் பூங்கொடி" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டது. இது அவரது இலக்கிய வாழ்வின் ஒரு சிகரமாயிருக்கும் என்றும். மிகப்பெரும் சாதனையை சத்தமில்லாமல் செய்து தன் மண்ணுக்கு பெருமை தேடி தந்துள்ளார். ஐய்யா பழ.நெடுமாறன் முதல் சில நிமிடங்கள் பேச கடினப்பட்டது உடல் நலனில்லாமல் இருப்பதை உணர்த்தியது. அவரது குரலும் சற்று தழுதழுத்திருந்தது. தமிழ் உள்ளளவும் சாகறாவின் புகழ் நிலைத்திருக்கட்டும், தொடர்ந்து இலக்கியங்களை எழுத வேண்டுமென உளமாற வாழ்த்தினார். தொடர்ந்து ஒவியரும், உணர்ச்சி கவிஞரும், கொளத்தூர் மணி அவர்களும், பத்மாவதி என்ற விரிவுரையாளரும் பேசினர். நிகழ்ச்சியினூடே அந்த கட்டிடத்தின் மைதானத்தில் வெட்டவெளி திரையில் வேலையில்லா பட்டாதாரி ஒடிக் கொண்டிருந்ததால் அதன் ஒலி அவ்வப்போது இடையூறாக இருந்தது. சத்தம் அதிகமாக வரும் போதெல்லாம் முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறிய மகனும் மகளும் ஒன்றாக திரும்பி பார்ப்பதுமாக இருந்தனர். விழா முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது உணவு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட நண்பன் கண்களால் கொலைமிரட்டல் விட்டு கொண்டிருந்தான். இடையிடையே நம்மைதான் பார்க்கிறார் அக்கா என்டு நான் அசட்டு சிரிப்பு சிரிப்பதும் முகத்தை அவா வேறுபக்கம் திருப்புவதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. இறுதியில் நன்றியுரை சொல்ல வந்த நாயகி ஒரு அற்புதமான கவிதையொன்றை வாசித்தார். அதை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். பிறகு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். என்னை அழைத்து நீயும் எனக்கு மகன் மாதிரி தானே என்டு சொல்லி பிள்ளைகளுடன் சேர்த்து படமெடுத்துக் கொண்டார். அவசரத்தில் வாங்கிய அன்பளிப்பை கொடுப்பமா வேண்டாமா என்ற குழப்பத்திலே கொடுத்துவிட்டு நூல்களை அவரது கையெழுத்தில் பெற்றுகொண்டபின் அன்புகளை பரிமாறிக் கொண்டதும் விடைபெற்று பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கியபடி நினைவுகளில் மூழ்கினேன்.... யாழ் களம் தான் எத்தனை எத்தனை அன்பானவர்களை அறிமுகம் செய்துள்ளது. இவர் ஏன் நண்பர்கள் சொந்தங்களை இலக்கிய உலக சாதனையாளர்களை விடுத்து யாழ் உறவுகளின் வாழ்த்துக்களை தன் நூலில் அச்சேற்ற வேண்டும் ? அதிலும் என்னைபோன்ற சிறுவனின் எழுத்துக்களையும் கூட அச்சேற வாய்ப்பளித்துள்ளாரே...! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை... பேருந்து நிலையத்தை அடைந்தபோது மழை பொழிந்தது. நல்லார் ஒருவர் காணும் புவிதனில் பெய்திடும் பூ மழை...! எது எப்படியோ இன்று குருகுலத்தின் பெருமையை உலகறிய செய்த உளமகிழ்வு அடியேனுக்கு... எல்லா புகழும் குருவிற்கே... குருவே சரணம்... சரணம் சரணம்
 40. 22 points
  நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்காக, கண்களை இறுக்க மூடிக்கொண்டு நித்திரை போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான். வீடு மீண்டும் களேபரப்பட்டது. கூடத்தில் அப்பாவும் அம்மாவும் தாத்தாவும் பரபரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில கணத்தில் வேறும் சில குரல்கள். பக்கத்து வீட்டு அன்ரியும் அம்மம்மாவும் வந்துவிட்டார்கள். முன்வீட்டு அண்ணையும் அவர்கள் பக்கத்துவீட்டு அண்ணையும் கூட வந்துவிட்டார்கள். அதிர்ந்தது இவர்கள் வீடு மட்டுமல்லவாம். அயலே அதிர்ந்ததாம். உடல் தெப்பமாய் நனைந்திருந்தது, உடலில் இருந்து பல்வேறு திரவங்கள் அவ்வெள்ளத்தை உருவாக்கியிருந்தன. குழறி அழுதுவிடவேண்டும் போல் தோன்றியது. வேண்டுமென்று நான் செய்யவில்லை என விம்மி அழவேண்டும் போலிருந்தது. இன்னமும் எவரும் தன்னை எழுப்ப வராதமை சற்று நம்பிக்கை தந்தபோதிலும், தனது அழிவுக்கான நேரம் நொடிகள் மட்டுமே என மனம் மிரட்டிக்கொண்டிருந்தது. "நாசமாப்போன கணிதம்" என்று பற்களை நறும்பிக்கொண்டு சிறுவன் குலுங்கி அழத் தொடங்கினான். அவனது அழுகையின் ஒலியினை இதற்குமெலால் அவனால் கட்டுப்படுத்தமுடியவில்லை. குரலெடுத்து அழத்தொடங்கினான். யாரோ ஓடி வருவது கேட்டது. அம்மாவந்து அணைத்துக்கொண்டார். "அப்பன் அழாதை, சண்டை இஞ்சையில்லையப்பு, அது எங்கையோ தூர நடக்குது. நீ பயப்பிடாத." அம்மா சமாதானப்படுத்தினார். சுவிட்ச்சைப் போட்டது போல் அழுகை நின்றது. அம்மாவிற்குத் தனது அணைப்பின் பெருமை தலைக்கனம் தந்தது. சிறுவன் எழுந்து அம்மாவுடன் கூடத்திற்கு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். அடுத்த ஒரு மணிநேரம் வரை, மேலும் ஒலிகளிற்காய் காது குடுத்தபடி கூட்டம் கூடியிருந்தது. எதுவும் இல்லாது போக. இரவு தூக்கத்துள் புகுந்து கொண்டது. கூடத்தில் பரபரப்புக்கேட்டு, சிறுவன் பதைத்து எழுந்தான். அப்பா பத்திரிகை வாங்கக்கடைக்குச் சென்று, பத்திரிகை தீர்ந்துபொனதால் தான் செய்தி காவிப் பத்திரிகையாய் மீண்டிருந்தார். "துன்னாலைப் பொடியனாம், நெல்லியடி அமோக வெற்றியாம்" என்பது சாராம்சயமாய இருந்தது. ---------------------------- சொந்தத் தோட்டத்தில் விளைந்த சின்ன வெங்காயத்தை, இரவில் தெரியும் நட்சத்திரங்கள் அளவிற்குச் சின்னதாய் வெட்டி, கொல்லையில் நின்ற செடியில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த பச்சை மிழகாயினை நீழக்கோடுகளாய் அரிந்து, வீட்டுக்கோழி போட்ட சிவத்தை முட்டையில் இரண்டை நல்லெண்ணையோடு சேர்த்துத் தான் சிறுமியின் அம்மா அவளிற்காய் எப்போதும் முட்டை பொரிப்பார். அதை அரிசிமாப் புட்டோடு சேர்த்து உண்பது சிறுமிக்கு மிகப்பிடித்த உணவு. உண்ணும் போது புராணக் கதைகளை அம்மா அவளிற்குச் சொல்லிக் கொண்டிருப்பாள். அருகே இருக்கும் அம்மம்மா ஒவ்வொரு கதைக்குள்ளும் உதிரிக்கதை சொல்லுவார். அன்றிரவும் அவ்வாறு தான் சிறுமிக்கு அவர்கள் உணவூட்டிக்கொண்டிருந்தார்கள். அநீதி எப்போதும் தோற்கும் என்று நரசிம்மன் கதை தத்ரூபமாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. முகட்டில் எலி கலைத்துச் சென்ற பூனைக் குட்டி தவறிக் கோப்பைக்குள் விழுந்து சிறுமியின் புட்டும் முட்டைப்பொரியலும் கொட்டிப்போனது. ஆத்திரத்தில் சிறுமி நரசிம்மனாகி, இடுப்பில் கைவைத்த படி, பூனையினைப் பார்த்துக் கோரப்பார்வையினைப் பிரயோகித்தாள். பூனை தாவி ஜன்னலில் இருந்தது. சிறுமி பார்வையால் பூனையினைத் தொடர்ந்து ஜன்னலை அடைந்தபோது, வீடு அதிர்ந்தது. ஜன்னல் உடைந்து நொருங்கி விடும்போல் இருந்தது… ----------------------------------------- ஆழ்மனதின் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நெற்றிக்கண் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுவனிற்குள் வளர்ந்தது. ஆழ்மனதில் ஆழத்தில், எங்கோ ஒரு மூலையில், மில்லரின் வெடிப்பில் தன் நரசிம்மன் அவதாரம் ஆற்றிய பங்கு நம்பிக்கையாய் சிறுமிக்குள் வளர்ந்தது. ------------------------ முதற்பனி தூவியிருந்த கனேடிய மாலை. பருவத்தின் மிழிர்ச்சிகள் அத்தனையும் உச்சத்தில் இருந்த பல்கலைக்கழக மண்டபம். தமிழ் மாணவர் மன்றத்தின் கலையிரவு ஆரம்பமாகியிருந்தது. என்னதான் வெள்ளச்சியாய் வாழினும் சேலைகட்டிப் பொட்டு வைத்ததும் தமிழிச்சிக்குள் ஏதோ ஒன்று நடந்து தான் விடுகிறது. “தந்தன தந்தன தாளம் வரும் ஒரு ராகம் வரும்" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவளிற்குள் ஓலித்துக் கொண்டிருந்தது. விளக்குகள் அணைந்திருந்த அறைக்குள் யாரோ பிந்தி வந்தவர்கள் திறந்த கதவின் நீக்கலிற்குள்ளால் நுழைந்த ஒளி அவள் முகத்தில் பட்டபோது, கடைசி வரியில் நண்பர் மத்தியில் அமர்ந்திருந்த அவனின் கண்கள் பாலுமகேந்திராவின் கமராவாய் ஆகி அவள் முகத்தை மந்த ஒளியில் கவ்விக் கொண்டன. “வளையோசை கலகலகலவென…" பாடல் ஏ.ஆர்.றகுமானால் றீமிக்ஸ் செய்யப்பட்டு அவனிற்குள் ஒலிக்கத் துவங்கின. “Excuse me, is that seat taken?”, மாதக்கணக்கில் மறைந்திருந்து பார்ப்பதற்கு அவனென்ன தண்ணியில்லாக் காட்டிலா இருக்கிறான். பின்வாங்குப் பையன் இப்போ அவளருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து கலைநிகழ்வு பார்க்கத் தொடங்கினான். ------------------------------------- "Grit தான் வாழ்வில் வெற்றிக்கு அத்தியாவசியம். அறிவு ஆற்றல் என்பனவெல்லாம் வெறும் அலட்டல்கள். Grit இல்லாத எவரும் வாழ்வில் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்துவிடுவதில்லை. கணக்கில் தொண்ணூற்றைந்து காணாது. நீ நூறு எடுப்பது முற்றிலும் சாத்தியம். அதற்கு நீ கடினமாய் சீராய் உழைக்கணும். " ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பையனிற்கு மேசையில் இருந்து அவன் அப்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். “அம்மா I just can't get enough of your முட்டைப் பொரியல்" தாயால் உணவு தீத்ததப் பட்டுக்கொண்டிருந்த சிறுமி தாயோடு செல்லம் கொட்டிக்கொண்டிருந்தாள். ரொனேடோ ஒன்று எங்கோ கடந்து செல்வதன் குறியாய் காற்றுச் சுழன்று அடித்தது. திடீரென கோடை இடி முழங்கி வீடு அதிர்ந்தது. நெற்றிக்கண்ணனின் முகத்திலும் நரசிம்மியின் முகத்திலும் அதே யோசனை ரேகைகள், எப்போதும் போல் படர்ந்தன. துன்னாலை என்பது எங்கிருக்கிறது என்று தெரியாது வளர்கின்ற சிறுவனும் சிறுமிறும் என்றோ ஒரு நாள் வியந்து கேட்க இருக்கின்ற துன்னாலைப் பொடியனின் கதை பல்கலைக்கழக்க கலைவிழாவில் சந்தித்து அம்மா அப்பாவாகியிருக்கும் சிறுவனிற்குள்ளும் சிறுமிக்குள்ளும் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன…
 41. 22 points
  விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப் போனாள்! சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்! அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின. சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது. பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும். சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்! சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில், வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை. சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும் போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம். ‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார். யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும். ஒரு நாள் இரவு, ஒரு ஆறு பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம் எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும், துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை. அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார். அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான். இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டன ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!
 42. 22 points
  மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமையான அந்த நினைவுகளை - எம்மால் மறையும் வரை மறக்கத்தான் முடியுமா.....?
 43. 22 points
  பார்க்கும் கண்களே துடிக்கும் காட்சி பாலனின் மேனியில் பலதுளைகள் கொடுங்கோற் சிங்களம் செய்த கொடுமை கொலைக்களத்தின் அதி உச்சக்கட்டம் அவன் விழிகளில் தெரிகின்றது அவன் ஒரு வீரன் மகன் என்று அவன் விழிகளைக் கண்டு மிரண்டு அவன் மேனியில் துளைத்ததா குண்டு சிங்களம் செய்த கொலை வேள்வியில் எங்கள் குலவிளக்கை எரித்ததா ஈனம் இல்லாச் சிங்களம் ஆடிய கொலைவெறியில் தங்கள் இச்சையைத் தீர்த்ததா இச்சிறு வேங்கையின் பொற்திருவுருவில் பாரெங்கும் பரந்திருக்கும் நாமெல்லாம் கோர்த்திடுவோம் கரங்களைக் கொடுங் கோலனை ஒளித்திடக் கூடிடுவோம் ஒன்றாய் கொலைக்களத்தின் உச்சத்தைப் பரப்பிடுவோம் உலகமெங்கும் எடுத்திடுவோம் சபதம் எங்கள் பாலனின் பாதத்தில்
 44. 22 points
  முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால் நிலா, என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள். ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு போனால் ஆராவது இறைக்க மெசினிலை குளிச்சிட்டு வந்து வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் போக முதல் அண்ணனுக்கு தேத்தண்ணியும்,கடைக்கு விக்க அம்மா கடலையும் அவிச்சு தருவா கொண்டுபோய் அண்ணனட்டை குடுத்திட்டு ஒரு கறுவாமுட்டாசியை எடுத்து வாயுக்குள்ளை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனால் எதையாச்சும் மறந்த்இருப்பேன் இல்லை என்னிடம் இருக்காது, கலர்பென்சில் எல்லாம் கொண்டுபோவதில்லை இவளின்ரையத்தான் பறிச்சு வரைவது, சாப்பாடு கூட "காக்கா" போல தட்டி பறிச்சு சாப்பிடுவதுண்டு அதை விட பெட்டையள் ஒரு குறூப் பொடியள் ஒரு குறூப்பா பிரிஞ்சு "பூப்பறிக்க போறோம் பூப்பறிக்கப்போறோம் எந்த பூவைப்பறிப்பாய், எந்த மாதம் வருவாய்" என்று கேட்டு அதில் ஏதும் ஒரு பூவை பறிப்பது தான் எமது விளையாட்டு. இப்படி அவளுடனான நெருக்கம் பள்ளி தாண்டியும் தொடரும், எங்களுடைய பொழுதுபோக்கு என்றால் தோட்டம் தான். வருசம் முழுக்க தோட்டத்திலை ஏதும் அப்பா வைப்பார். மாரிக்காய், கோடைக்காய் என்று வெங்காயம், பொயிலைக்கன்று,கத்தரி,மிளகாய் என்று தறையுக்குள்ளை கால் வைக்காத காலம் கொஞ்சமாத்தான் இருக்கும். நாங்கள் சின்னப்பொடியள் எண்டதாலை அம்மாவும்,அப்பாவும் தான் தண்ணி வாக்குறது,புல்லுப்பிடுங்கிறது எல்லாம். அண்ணா வந்து மெசினை பூட்டி இறைப்பான் நான் அக்கா தேத்தண்ணி வச்சு தர,சாப்பாடு கொண்டுபோறது, கிளிக்கு காவல் இருப்பது, மாடு வந்தால் கலைக்குறது தான் வேலை. இவளின்ரை அப்பாவும் தோட்டம் தான் அதுவும் பக்கத்து பக்கத்து தறை அதனால் இரண்டு குடும்பமுமே நல்ல நெருக்கம். காலமும் ஓடிக்கொண்டே இருந்தது 1996 சிங்கள இனவெறி ஆமியின் யாழ்வருகை அப்போது தான் எமக்கு ஸ்கொலசிப் பரீட்சை நடந்து கொண்டிருந்து அப்போது புரியாமல் புதினம் பார்த்துக்கொண்டிருந்தோம். அத்தோடு வேறு பள்ளிக்கூடம் மாறுவதாய் முடிவு பருத்தித்துறையில் ஆமி காம்ப் இருந்ததால் அண்ணா கூட்டிக்கொண்டு போய் வர ஏதும் பிரச்சனை வந்தாலும் என்று என்னை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்கள், அவளும் செல்லையா ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். இரண்டுமே சகோதர பாடசாலைகள் தான் இருந்தும் முன்னர் போல பேசுவதில்லை அவள் பெரிய பிள்ளை ஆனதும் எங்களுக்குள் நெருக்கம் குறைவு. 1997 ஊர் பிரச்சனைகளால் வெளிநாடு போக அண்ணா கொழும்பு வர அப்பா கூட்டி வந்தவர் அதனால் நான் பள்ளிக்கூடம் நடந்து தான் போய் வருவது ஆனால் என்ரை நல்ல காலம் இவளின்ரை அண்ணாவும் எங்கண்டை பள்ளிக்கூடத்திலை படிச்சதால் அவர் தான் கூட்டிக்கொண்டு போறது. காலமை அவங்கண்டை வீட்டை போனால் சாந்தன் அண்ணா வெளிக்கிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு போவார். அண்ணாவை அனுப்பிவிட்டு அப்பா கொழும்பில் இருந்து திரும்பி வந்தபின் 8ஆம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு சைக்கிள் எடுத்து தந்தவர், அதுவும் லேடி சைக்கிள் அக்கா,தங்கச்சி யும் இருக்கிறார்கள் அவர்களும் ஓடுவார்கள் என்று. அதன் பின் நாங்கள் பேசுவது, பார்ப்பது கூட குறைவு, வீட்டில் போனால் கூட ஒரு சிரிப்புடன் சரி o/L முடிந்ததும் அவள் கலைத்துறையைத் தேர்வுசெய்தாள், நான் விஞ்ஞான பிரிவு (பயோ) அதை விட அண்ணா வெளிநாடு போனபின் கடை,தோட்டம் எல்லாம் பார்க்க அப்பா தனிய கடைய விட்டிட்டு தோட்டம் தான் அதுவும் முன்னர் போல இல்லை குறைவு. அப்பாவுக்கு உதவி செய்ய எனக்கும் நேரம் இல்லை பாடசாலையில் மாணவர்தலைவராக எல்லாம் இருந்ததால் ஆசிரியர்கள் கூட போய் விடுவார்கள் நாங்கள் குழப்படி செய்த பொடியள், பிந்தி வந்த பொடியளை எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மறிச்சு வச்சு ஏதும் சிரமதானம் செய்ய வச்சிட்டு வீட்டை வந்து சாப்பிட கூட நேரம் இருக்காது திரும்ப ரியூசனுக்கு போகத்தான் சரி.. அதனாலை அவளை பார்க்கிறதும் இல்லை. அதை விட பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை அமாவாசையட்டை ரியூசன் படிக்கும் போது ஒருத்தி மேலை ஒருதலைக்காதல் வேறை.. அதோடை A/L பரீட்சை முடிவுகள் வந்து நான் ஆசைப்பட்டதே எனக்கு படிக்க வாய்த்தது அவள் இரண்டாவது முறை பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்களின் பின்னர் பேசும் வாய்ப்புக்கிடைத்தது அவளுடைய தங்கையின் சாமத்திய சடங்குக்கு சாந்தன் அண்ணா வீடியோ எடுத்து தர சொன்னான். போட்டோவுக்கு ஆள் வைத்தார்கள் அண்ணா அனுப்பிய வீடியோ கமெரா இருந்ததால் நானே அதை முழுமையாக எடுத்துக்கொடுத்தேன். அன்று தான் அவளின் கண்கள் எப்போதையும் விட ஒரு மாதிரியாய் இருந்து, நிலா சூரியனை விடச் சுட்டெரித்தது, காதல் வந்த பெண்ணின் கண்களை கம்பன் கூட கவி எழுதிவிடமுடியாது.. ஆனால் அந்த கண்களின் வார்த்தைகளை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது காலத்திலேயே குடும்ப சூழ்நிலையால் அவள் திருமணமாகி கனடா வந்துவிட்டாள். அதன் பின் என்ன எப்படி என்ற தொடர்பே இல்லை நானும் அவளை மறந்திருந்தேன். பழைய நினைவுகள் செல்லரித்த காகிதமாய் அரிக்க அவளை நண்பர்கள் பட்டியலில் சேர்த்தேன். மறு நாள் மடல் வந்திருந்தது எப்படி இருக்கிறாய்? என்ன செய்யுறாய்? இப்ப எங்கை இருக்கிறாய்? என்ற நலன் விசாரிப்புக்கள்,பதில்களுடன், என் தொலைபேசி இலக்கமும் வாங்கி இருந்தாள். அவள் இப்போ மூன்று பிள்ளைகளின் அம்மா முதல் பிள்ளை பெண் குட்டி நிலா, அடுத்து இரண்டு அழகான ஆண்குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள். அழகான,அன்பான குடும்பம். ஒருநாள் தொலைபேசி எடுத்திருந்தால் வழமையான பேச்சுக்களோடு எதிர்பாராத ஒரு கேள்வி கேட்டாள் முந்தி உனக்கு என்னை பிடிக்குமாடா? ஏன் இத்தனை நாளைக்கு பிறகு இந்த கேள்வி கேட்குறாய்? பதில் சொல்லடா.. ஓமடி நான் யார் வீட்டையும் போறதில்லை, சாப்பிடுறதில்லை உங்க வீட்டை மட்டும் தானே சாப்பிடுவேன், என்னையும் ஒரு பிள்ளை போல தானே உன்ரை அம்மா,அப்பா பார்த்தவை அதாலை உன்னை மட்டுமில்லை உன்ரை வீட்டை எல்லாரையும் தான்டி பிடிக்கும். மீதி பேச கூட விடாமல் மறிச்சவள், தீனிபண்டாரம் தின்னுறதிலையே இருக்கிறியேடா என்று திட்டினாள்... என்னாச்சடி உனக்கு எதுக்கடி என்னை பேசுறாய் சின்ன பிள்ளையிலை உன்னோடை படிச்சதிலை இருந்து மயூரியோடை சாமத்திய வீட்டுக்கு நீ போட்டு வந்த செவ்விளநி கலர் பஞ்சாபிவரை ஞாபகம் இருக்கு, அன்றைக்கு பார்த்த உன்னோடை கண் கூட மறக்க முடியாதடி.. ஆமா ஏன் கேட்கிறாய்? எதிர்முனையில் மௌனம்.. அழுதாள்.. உண்மையில் எனக்கு போனை கட்பண்ணவா.. பாவம் அழும் போது விட்டுபோவது நல்லாவா இருக்கும்.. புரியாத உணர்வுகள் எனக்கு.. மௌனம் கலைத்து ..அப்ப ஏன்டா சொல்லவில்லை? எதை? என்ன சொல்லவில்லை? எனக்கு புரியவில்லை !! உனக்கு பிடிக்கும் என்பதை..! நான் தான் அதிகம் உன்ரை வீட்டை வாறனான் தானே நீயாவது சொல்லியிருக்கலாம் தானே.. நான் எப்படி சொல்ல? அதை மாதிரித்தான் நானும் எப்படி சொல்ல? நான் உன் வீட்டை சாப்பிட்டிருக்கிறேன். உன் வீட்டை என் கால் படாத இடமே இல்லை. அதை விட உன் அண்ணா அவங்களோடை தான் தினமும் விளையாடுறது, நாளைக்கு இரண்டு வீட்டுக்காறரும் முகத்தை பார்க்கணும், உனக்கு தெரியும் தானே உன் அப்பாவும் எங்க அப்பாவும் எப்படி என்று எங்கை கண்டாலும் அண்ணை,அண்ணை என்று பழகுபவர்கள் அதை விட எல்லாருக்கும் என்னை தெரியும் இப்படி பழகிட்டு இப்படி செய்திட்டான் என்று நான் கெட்ட பெயர்வாங்க முடியாது.. மனதிலிருந்த அத்தனையும் கொட்டி தீர்த்துவிட்டேன்.. மறுபடியும் எதிர்முனையில் அழுகை, காரணம் தெரியவில்லை அந்த நொடி கொதிநீரின் வெப்பத்தையும் தாண்டி என்கண்களிலும் கண்ணீர் துளி.. இதுக்கு தான் கேட்டேன் நன்றியடா.. மௌனம் மட்டுமே பதிலாய் நான். ஜ மிஸ் யு டா.. நான் பிள்ளைய கூட்டிட்டு வர போறேன். சரி .. நானும் ஒருக்கா கடை பூட்டி போட்டு போஸ்ட் ஒஃபிஸ் பூட்ட முதல் ஆத்துக்காரிக்கு பாசல் அனுப்பிட்டு வாறேன். ........................முற்றும்..................... ஜீவா 30.12.2012
 45. 22 points
  தாண்டினேன்...தாண்டினேன் சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன் மழையிருட்டிலும் உன்முகம் காண தாண்டினேன்...தாண்டினேன் அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன் உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க தாண்டினேன்...தாண்டினேன் காவோலை வேலி சரசரக்க தாண்டினேன் உன் வைடூரிய வார்த்தைகளுக்காக தாண்டினேன் தாண்டினேன் என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன் உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக......... தாண்டினோம் தாண்டினோம் இருவரும் தாண்டினோம் இன்றோ நீ அங்கே நான் இங்கே உனக்கு நான்கு எனக்கு நான்கு இதில் யார் தாண்டவர்?
 46. 21 points
  முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது. விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என. இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன. ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன. என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன். அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம். (மிகுதி பிறகு) ------------ தொடர்ச்சிகள்: சென்னை உங்களை வரவேற்கின்றது
 47. 21 points
  பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவும் அழுதுநிக்க அங்குவரும் மாமாவின் கையின் கிளுவந் தடியில் பால் சுரக்கும். எண்ணை வைக்க அடம்பிடிக்கும் என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும் நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும் முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும். களைத்து வரும் வேளை காத்திருந்து முத்தத்தால் முகம் துடைத்து கட்டியவள் காப்பிதர இரு கண்களிலும் பால் சுரக்கும். எகிறிவரும் எட்டுவயது மகள் பாய்ந்து மார்பினில் ஒட்ட பக்குவமாய் பற்றிக் கொள்ளும் பத்து விரலும் பால் சுரக்கும். எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய தாளை இரண்டு இழுக்க தாத்தாவை தள்ளி விட்டு முதுகில் துள்ளியாட பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....! யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!
 48. 21 points
  அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை. கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது. எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம். எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள் அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது. ---------------- அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை. "என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை. அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர். அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர். எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர். ------------------------------------- வெளியில் நிற்கின்றோம். பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம். பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது. அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது. அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன். அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன். --------------------------------------------- இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது. இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார். அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார். சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது. ----------------- எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள். எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை. மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன். ---------------------------- அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார். இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது. அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார். --------------------------------------- அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது. இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார், கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன். மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார், அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை. நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை. ---------------------------------------------------------------------- மீண்டும் காலை உதறி விடுகின்றேன். திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு. அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன் வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன். என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா. செத்தே போயிருந்தான். நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது. உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம். அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை. அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார். ------------------ நான் இப்ப லண்டன் வந்து விட்டேன். அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது. இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது. பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது மறுமுனையில் இருந்தவர் அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார். என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது. அண்ணாவை புசித்த புழு. --------------------------------------------- மார்ச் 18, 2014
 49. 21 points
  மதிப்பிற்குரிய நடுவர்களே, விசேட சிறப்பு விருந்தினராகச் சமூகமளித்து எமக்குப் பெருமையைச் சேர்க்கும் யாழின் மூலகர்த்தாவாகிய என்றென்றும் என் மதிப்பிற்குரிய மோகன் அண்ணா அவர்களே, சிறப்பு விருந்தினர்களான யாழின் நிர்வாகிகளான இணையவன், நியானி, நுணாவிலான் மற்றும் நிழலி அவர்களே, எம்மிடம் தோற்றுப் போகவிருக்கும் எதிரணியினரே மற்றும் எமக்கு ஊக்கமளிக்கப் போகும் பார்வையாளர்களே! அனைவருக்கும் கனடாவின் தைரியப்புயலின் அன்பு கலந்த வணக்கம்! புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல. நாம் புலம்பெயர்ந்த காரணத்தினாலேயே எமக்கு இவ்வாய்ப்பைத் தந்த யாழ்களமே உருவாகியது. நாம் ஊரில் இருந்திருந்தால் எம்மில் பலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டோம். நாங்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சௌகரியங்களை நாம் அங்கு அனுபவித்திருப்போமா? எங்கள் பிள்ளைகள் அத்தனை பேரும் கல்வியில் சிறந்து விளங்கியிருப்பார்களா? இங்கு வளரும் பிள்ளைகளில் அதிகம் பேர் உயர்கல்வியைக் கற்று மிகச் சிறந்த வேலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். அமரப் போகிறார்கள். இவை நாம் ஊரிலிருந்திருந்தால் எத்தனை வீதம் சாத்தியப்பட்டிருக்கும்? ஊரிலிருந்திருந்தால் எம் பிள்ளைகளில் ஒரு பத்து வீதமானோர்தான் பல்கலைக்கழகம்வரை சென்று சிறந்து விளங்கியிருப்பார்கள். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளிலோ அனைத்துப் பிள்ளைகளும் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்புள்ளது. அப்பிள்ளைகளின் பட்டமளிப்பின்போது பெற்றோர் படும் ஆனந்தம் இருக்கிறதே, அதனை வார்த்தைகளில் வடித்து விட முடியாது நடுவர்களே. ஆனால், நாட்டில் ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அல்லது பாடசாலைகளிலிருந்தும் ஆகக்கூடியது பத்து மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருக்கிறதா? பொதுவாக, தாயகத்தில் ஒரு ஊரிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து ஓரிருவர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்வதைக் கண்டிருக்கிறோம். எத்தனை மாணவர்கள் படிப்பில் சுட்டியாக இருந்தாலும் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாழ்வியலை இழந்திருக்கிறார்கள்? அவர்களிடம் திறமைகள் இருந்தாலும், சாதாரண வேலைகளையே செய்யும் நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்படிச் சாதாரண வேலையில் அமர்ந்தாலும் தொடர்ந்து அச்சாதாரண வாழ்வியலை வாழும் வாய்ப்பே அங்கு அதிகம். மேலதிகமாக முன்னேறுவது கடினம். ஆனால், இங்கோ ஒருவர் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் வேலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்தும் படித்து வேலையில் உயர்நிலைகளுக்கு வந்திருக்கிறார்கள். அங்கு சாதாரண வகுப்போடு படிப்பை முடித்த பலர் புலம்பெயர்ந்த பின்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு பல நல்ல வேலைகளில் இருப்பது கண்கூடு நடுவர்களே. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்வியல் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் வளமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தளவு சம்பளத்தைப் பெறுபவர்களும் அனைத்து வசதிகளோடும் வாழும் வாய்ப்பு புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது. நாம் கூடியளவு அனைத்துப் பொருட்களையும் நுகர்ந்து எமது வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதாரணமாக, இங்கு தொலைக்காட்சிப் பெட்டி முதற்கொண்டு இந்த வருடம் வந்த இலத்திரனியல் பொருட்கள் வரை எம்மவர் வீடுகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நடுவர்களே, இது தாயகத்தில் அனைத்து வீடுகளிலும் சாத்தியப்படும் ஒன்றா? நாம் ஊரில் இருக்கும்போது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இருந்த நெருக்கத்தைவிட, இங்கு வாழும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான நெருக்கம் அதிகம் மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகம். நாம் அவர்களோடு அன்னியோன்யமாகப் பழகும் விதமும் இங்கு சிறப்பாகவே இருக்கிறது. இதனைவிட முக்கியமாகக் கணவன், மனைவி உறவுகள்கூட புலம்பெயர் நாடுகளில் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே நாம் பாராட்டும் அன்பும் நட்பும்கூட புலம்பெயர் நாடுகளில் சிறப்பாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையை நாம் அனுபவிக்கக் கற்றுக் கொண்டதே நாம் புலம்பெயர்ந்த பின்புதான் நடுவர்களே. நடுவர்களே, இங்கு நாம் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்தாலும் இங்கிருக்கும் சுத்தம், சுகாதாரம் எமக்கு அங்கு இருக்கிறதா? எமக்கு இங்கிருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அங்கிருக்கிறதா? ஒருவர் இறந்து போனால் அதற்கான உரிய காரணம்கூட அறியாத நிலைதான் அங்குண்டு. இங்கோ, எத்தனை கொடிய நோய் வந்தாலும் குணப்படுத்தக்கூடிய வசதிகள் எமக்கு நிறையவே உண்டு. அங்கு சிறப்பாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே. ஒன்று அது பரம்பரையாக வந்ததாக இருக்கும். அடுத்தது சிறந்த கல்வி கற்று அந்த உத்தியோகத்தில் வந்ததாக இருக்கும். இன்னொன்று புலம்பெயர் மக்களின் உறவினர்கள். அங்கு அதிகம் சலுகைகளைப் பெறுபவர்களும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே. கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறுபவர்களும் அதிகம் இவ்வகையைச் சேர்ந்தவர்களே. பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு அங்கு முன்னேறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எங்காவது ஓரிரு குடும்பங்களே இவ்வாறு முன்னேறியிருக்கிறார்கள். ஆனால், இங்கு நாம் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். அரச பணத்தைப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் பலர் இப்போது படித்து முன்னேறி நல்ல பதவிகளில் உள்ளார்கள். ஊரில் அவ்வாறு முன்னேற முடியுமா நடுவர்களே? இத்தனை சிறப்பாக வாழ்ந்து கொண்டு, அங்கிருந்திருந்தால் சிறப்பாக வாழ்வோமென்ற எதிரணியைப் பார்த்து நான் கேட்கிறேன். இத்தனை வசதிகளை அனுபவித்த பின்பு, உங்களால் இப்போது ஊரில் போய் வாழ முடியுமா? இல்லை ஊரிலிருந்திருந்தால் இவ்வாறான சிறப்புகளைப் பற்றியாவது நாம் இவ்வளவு தூரம் அறிந்திருப்போமா? புலம்பெயர்ந்திருக்கும் எமக்கான ஒரேயொரு கவலை ஊரில் எஞ்சியிருக்கும் எமது உறவினர்களே தவிர எமது புலம்பெயர் வாழ்வியல் அல்ல. அவ்வுறவினர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வரும் வசதிகள் எம்மிடம் உண்டு. தாயகத்தில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்வதற்கே கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலைதான் இன்றும் பலருக்கு அங்குண்டு. நாம் புலம்பெயராது இருந்திருந்தால் எம்மில் பலருக்கும் அந்த நிலைதான் இருந்திருக்கும். எதிரணியினர், இக்கரைக்கு அக்கரைப் பச்சைகள்தானே தவிர, யதார்த்தத்தை உணர்ந்தவர்களல்ல நடுவர்களே. இவர்கள் இன்னும் ஊரின் மாயையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நடுவர்களே. இந்தப் பட்டிமன்றத்தின் பின்னராவது இவர்கள் நிஜ உலகிற்கு வரட்டும் என்று கூறி எனதுரையை முடித்துக் கொள்கிறேன்.
 50. 21 points
  அனைவருக்கும் இனிய வணக்கங்கள், முன்பு எழுந்தமானமாக எழுதத்தோன்றும் போதெல்லாம் எழுதமுடிந்தது. இப்போது காலம், சூழ்நிலை பார்த்தே எழுதவேண்டியுள்ளது. இதனால் முன்புபோல் நம்மால் அடிக்கடி அங்கும் இங்குமாக ஆக்கங்களை படைக்க முடியவில்லை. ஆயினும்.. யாழ் இணையத்துடன் - நம்மைப்போன்ற வலைத்தள கருத்தாளர்களுடன் நீண்டதூரம் பயணம் செய்து அண்மையில் அமரத்துவம் அடைந்த 'வசம்பு' என அழைக்கப்படும் மதிப்புக்குரிய ‘சிவஞானசுந்தரம் கிருபானந்தன்’ அவர்களை நினைவுகூர்ந்து ஓர் ஆக்கத்தை படைக்கவேண்டிய கட்டாயத்தை எனது உள்ளம் கடந்த சில நாட்களாக வலியுறுத்தியது. ஆரம்பத்தில் இரண்டு வரிகளாயினும் ஓர் கவிதையாக - அஞ்சலிப்பா எழுதலாம் என்று பார்த்தேன். கவிதை எழுதுவதற்குரிய உளநிலை எனக்குள் ஏற்படவில்லை. எனினும்.. 2004ம் ஆண்டு தொடக்கம் வசம்பு அவர்கள் யாழ் கருத்தாடல் தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்துவந்திருப்பினும், 2007ம் ஆண்டிலேயே நான் யாழ் இணையத்தில் இணைந்தாலும், கடந்த மூன்று முக்கால் வருடங்களில் வசம்பு அவர்களுடன் யாழ் கருத்துக்களத்தில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும், அத்துடன் தொழில்நுட்பம் - நவீனத்துவம் - நம்மவர் எதிர்காலம் இவைபற்றிய எதிர்கால சிந்தனைகளையும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக தெரிகின்றது. மேற்கண்ட கருத்து 'யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்' எனும் தலைப்பில் - எனது அனுபவப் பகிர்வில் வசம்பு அவர்கள் குறித்து நான் முன்பு எழுதியது. ஓர் கருத்துக்களத்தில் கருத்தாளர் ஒருவர் எப்படி கருத்தாடல் செய்யவேண்டும் என்பதற்கு வசம்பு அவர்களும் சிறந்ததொரு உதாரணமாக விளங்கினார். கருத்தை பார்த்து, கருத்தை கருத்தால் வெல்லும் பாங்கு கருத்துக்களத்தில் உறவாடல் செய்பவர்களிற்கு காணப்படவேண்டிய முக்கியமானதொரு தகமை. குறித்த தகமையை வசம்பு அவர்களிலும் காணமுடிந்தது. இங்கு, வசம்பு அவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யவில்லை, எப்போதும் கருத்திற்கே பதில் கருத்து வைத்தார் என்று நான் கூறவில்லை. ஓர் விவாதம் சூடுபிடிக்கும்போது - கருத்தாளர்கள் தாம் வைத்த கருத்தை துல்லியமானது என நிலைநாட்ட முயலும்போது - வாதத்தில் வெற்றியடைய முயற்சிக்கும்போது - ஓர் கட்டத்தில் அல்லது ஆரம்பத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு சககருத்தாளர்கள் மீது தனிநபர் தாக்குதல்கள் செய்வது வழமை. இங்கு வசம்பு அவர்களும் அவ்வாறான சூழ்நிலைகளில் சில சமயங்களில் நிதானம் இழந்ததை அவதானித்துள்ளேன். கருத்துக்களத்தில் ஓர் இலட்சிய புருசராக இல்லாதுவிடினும், ஒப்பீட்டளவில் வசம்பு அவர்கள் நாகரிகமான முறையில் கருத்தாடல்களில் பங்குபற்றினார். இணையத்தில் கருத்தாடல் செய்வது சம்பந்தமான சில விடயங்களை அலசிப்பார்த்துவிட்டு தொடர்ந்து வசம்பு அவர்களுடனான நினைவுப்பகிர்விற்கு திரும்புவது உசிதமாகபடுகின்றது: வலைத்தளத்தில் கருத்துக்களம் என்று பார்த்தால்: முதலாவது விடயம் இது புதியது - இதன் வயது சுமார் பத்து ஆண்டுகளே - இங்கு நாம் இதனை பரீட்சிக்கும் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். உலகத்தில் எவருக்குமே இதுபற்றி முன் அனுபவம் இல்லை. எல்லோரும் நாளாந்தம் புதிய, புதிய அனுபவங்களை பெறுகின்றார்கள். கடந்த மூன்று வருடங்களிற்கு முன்னர் கருத்துக்களம் பற்றி எனக்கு காணப்பட்ட பார்வைக்கும் இன்று கருத்துக்களம் பற்றி எனக்குள்ள பார்வைக்கும் இடையில் ஏராளம் வேறுபாடுகள் உள்ளன. தினமும் புதிய, புதிய அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கின்றன, அவைமூலம் தொடர்ச்சியாக எம்மை நாம் கற்பித்து கொள்கின்றோம். அதாவது, முதலாவது விடயமாக நிருவாகம் + மட்டறுத்துனர்கள் + கள உறவுகள் + வாசகர்கள் என அனைத்து பங்காளிகளிற்குமே கருத்துக்களம் பற்றி போதிய அறிவு, அனுபவம் இல்லை. நாம் எல்லோருமே இந்த விடயத்தில் கற்றுக்குட்டிகள். பல சமயங்களில் கசப்பான அனுபவங்கள் கருத்துக்களத்தில் பெறப்படுவதற்கு இது காரணமாக அமைகின்றது. இரண்டாவது விடயம் ~ நேரம் | நேரக்கட்டுப்பாடு | நேரமிகுதி ~. கருத்துக்களத்தின் பங்காளிகளாக அமையக்கூடிய வெவ்வேறு மட்டத்தில் உள்ளவர்களிடையே காணப்படும் சீரற்ற நேரப்பங்கீடு வலைத்தளம் ஊடாக இயங்கும் கருத்துக்களத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதற்கும் - இறுதியில் மனக்கசப்புக்கள், விரும்பத்தகாக அனுபவங்கள் பெறப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது. உதாரணத்திற்கு நிருவாகிக்கு அல்லது மட்டறுத்துனர்களிற்கு தமது பணியை செய்வதற்கு நேரம் போதாவிட்டால் சில மணி நேரங்களிலேயே கருத்துக்களத்தில் அமளி, துமளி ஏற்படக்கூடும். மூன்றாவது விடயம் ஒவ்வொரு கருத்தாளரும் வெவ்வேறு காரணங்களிற்காக யாழ் இணையத்திற்கு வருகின்றார்கள், கருத்தாடல் செய்கின்றார்கள். பொழுதுபோக்கு, விளம்பரம், தகவல் பரிமாற்றம், போராட்டம் என இவர்களின் தேவைகள் வேறுபடுகின்றன. ஒருவருக்கு ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தேவைகள் காணப்படலாம். இதனாலும் பல பிரச்சனைகள் உருவாகின்றன. உதாரணமாக போராட்டத்தை மையப்படுத்தி கருத்தாடலில் ஈடுபடுபவருக்கு பொழுதுபோக்கு சம்மந்தமான ஓர் கருத்தாடலில் கருத்தாளர்கள் அரட்டை அடித்து மகிழ்வது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு பொழுதுபோக்கு பகுதியில் கருத்தாடல் செய்பவர்கள் மீது அவர் தனிநபர் தாக்குதலும் செய்யக்கூடும். நான்காவது விடயம், எமக்கு எதிர்ப்புறமாக - தனது இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் அல்லது நூல்நிலையத்தில் கணணிக்கு முன்னால் அமர்ந்து கருத்தாடல் செய்யும் சககருத்தாளர் பற்றி அவர் எவ்வாறான நிலையில் - எப்படியான சூழ்நிலையில் ( உடல் + உளம் ) - எத்தகைய அழுத்தங்கள் மத்தியில் - கருத்தாடல் செய்கின்றார் என்று எம்மால் அறியமுடியாது போகின்றது. இதை ஒருவிதத்தில் தத்தம் கண்களை கட்டிக்கொண்டு, காதைப்பொத்திக்கொண்டு ஆளையாள் தடவிப்பார்த்து உரையாடல் செய்வது என்றுகூட கூறலாம். மேற்கூறியவை போன்று பலநூறு விடயங்கள் கருத்துக்களத்தில் சம்பந்தப்பட்டுள்ளன. இதை நான் ஏன் இங்கு கூறவேண்டியுள்ளது? அடிப்படையில் கருத்துக்களத்திற்கு சில எல்லைகள் உள்ளன. நாளாந்தம் எல்லைகளில் மாற்றங்கள் வரலாம். ஆயினும், யதார்த்தம் என்று பார்க்கும்போது ஒட்டுமொத்த தோற்றமாக கருத்துக்களத்தை தரிசிக்கும்போது எமக்கு தனிநபர்களே பூதாகரமாக தெரிகின்றார்கள். இலகுவில் ஓர் கருத்தாளர் மீது எமக்கு கோபம் வருகின்றது. சொல்லப்பட்ட கருத்தின் மீதல்லாது சொல்லியவர் மீது கடிந்து கொள்கின்றோம். இந்தவகையில் வசம்பு அவர்களும் தொடர்ச்சியாக பலரது கோபத்திற்கு ஆளாகினார். யாழ் கருத்துக்களத்தில் சிவப்பு, பச்சை என புள்ளியிடும் ஓர் செயற்பாட்டு அமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்தினார்கள். உங்களிற்கு ( வாசகர்களிற்கு இந்தவசதி கொடுக்கப்படவில்லை, கருத்துக்கள உறவுகள் மட்டுமே இதனை பயன்படுத்தமுடியும் ) ஒரு கருத்து பிடித்தால் குறித்த கருத்திற்கு பச்சைப்புள்ளி வழங்கமுடியும், பிடிக்காவிட்டால் சிவப்பு புள்ளி வழங்கமுடியும். ஒருவர் ஒருநாளைக்கு மூன்று தடவைகள் சிவப்பு, பச்சை புள்ளிகளை வழங்கலாம். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்புரிமைகளை வைத்திருந்தால் ( உதாரணமாக எனக்கு கலைஞன், கரும்பு ஆகிய இரண்டு உறுப்புரிமைகள் உண்டு ) தனது ஒவ்வொரு உறுப்புரிமை மூலமும் மூன்று தடவைகள் சிவப்பு, பச்சை புள்ளிகளை வழங்கலாம். அதாவது இரண்டு உறுப்புரிமை வைத்திருக்கும் ஒருவர் ஆறுதடவைகள் ஒருநாளைக்கு புள்ளிகள் வழங்கமுடியும். மூன்று உறுப்புரிமைகள் வைத்திருக்கும் ஒருவர் ஒருநாளைக்கு ஒன்பது புள்ளிகள் வழங்கமுடியும். குறிப்பிட்ட புள்ளிவழங்கல் திட்டம் வசம்பு அவர்களிற்கு தனிப்பட உளவியல் ரீதியாக அதிக பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று கூறலாம். வசம்பு அவர்கள் தாயகம், போராட்டம், போராட்ட அமைப்புக்கள், அரசியல்... இவ்வாறான விடயங்களில் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்யும் பெரும்பாலான கருத்தாளர்களிற்கு பிடிக்காத கருத்துக்களை கூறினார். இதனால் தினமும் அவர் கருத்துக்களிற்கு சிவப்பு புள்ளிகளை சக கருத்தாளர்கள் வழங்கினார்கள். நான் ஒருபொழுதும் சிவப்பு புள்ளியை வசம்பு அவர்களிற்கு வழங்கியது கிடையாது. இதர சககருத்தாளர்களிற்கும் சிவப்பு புள்ளியை ஓரிரு தடவைகள் தவிர வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியது கிடையாது. ஆனால்.. தினமும் எனக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு பச்சைப்புள்ளிகளை தாராளமாக வழங்கி வந்தேன், வழங்கி வருகின்றேன். சக கருத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதே இதற்கான முக்கிய காரணம். மீண்டும் சிவப்பு புள்ளி விடயத்திற்கு வருவோம். சிவப்பு அல்லது பச்சை புள்ளி வழங்கப்படும்போது ( + ) , ( - ) கணிப்பீடு போல் எது தொகையில் அதிகளவில் உள்ளதோ அது கருத்தாளர் ஒருவரின் பிரத்தியேக பக்கத்தில் ( Profile ) வெளிக்காட்டப்படும். உதாரணமாக எனக்கு மொத்தமாக 200 சிவப்பு புள்ளிகளும் 450 பச்சை புள்ளிகளும் கிடைத்தால் இறுதியில் 450 - 200 = 250 பச்சைப்புள்ளிகள் எனது பிரத்தியேக பக்கத்தில் வெளிக்காட்டப்படும். அதிகளவு பச்சை புள்ளிகளை பெறும்போது எனது மதிப்பு நிலை Excellent - மிகநன்று என காண்பிக்கப்படும். மாறாக 450 சிவப்பு புள்ளிகளும் 200 பச்சை புள்ளிகளும் மொத்தமாக எனக்கு கிடைத்திருந்தால் இறுதியில் 200 - 450 = - 250 சிவப்பு புள்ளிகள்... எனவே எனது பிரத்தியேக பக்கத்தில் எனது மதிப்பு நிலை - Reputation மிகவும் கேவலமானது - Very Bad என காண்பிக்கப்படும். வசம்பு அவர்களின் பிரத்தியேக பக்கத்தில் தினமும் அவர் பெற்ற அதிகளவான சிவப்பு புள்ளிகள் காரணமாக அவரது மதிப்பு நிலை - Reputation மிகவும் கேவலமானது - Very Bad என காண்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட புள்ளி வழங்கல் செயற்பாட்டு அமைப்பு நிச்சயம் வசம்பு அவர்களின் உள்ளத்தை மிகவும் பாதித்து இருக்கும் என நினைக்கின்றேன். இதன்பின்னர் சிறிதுகாலத்தின் பின் அவர் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டார். யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலத்தில் வசம்பு அவர்கள் பங்குகொள்ளாமைக்கு தனிப்பட வேறு காரணங்கள் காணப்படலாம். ஆயினும், குறிப்பிட்ட இந்தவிடயமும் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடலில் ஈடுபடுவதற்கான அவரது ஆர்வத்தை குறைத்திருக்கலாம். நான் அண்மையில் தெருவில் நடந்து சென்றபோது நவீன தொழில்நுட்பங்கள், நவீனத்துவம், வியாபார உலகம் இவைபற்றிய சில எண்ணங்கள் எனக்குள் ஓடின. அப்போது இவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களில் இருந்து முதலில் என்னை காத்துக்கொள்ள வேண்டும், அடுத்ததாக எனக்கு நெருக்கமானவர்களை காத்துக்கொள்ள வேண்டும், மூன்றாவதாக சமூகத்தை காத்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்துக்கொண்டேன். நான் சுயநலத்தினால் இவ்வாறு கூறுகின்றேன் என்று நீங்கள் நினைத்தாலும், அதை நான் மறுக்கவேண்டிய தேவை இல்லாதுவிடினும்.. நான் முதலில் என்னை காத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியதற்கு முக்கியதொரு காரணம் உள்ளது. ஏன் என்றால்.. எனது வாழ்க்கை எனது கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எனது சிந்தனைகளை எனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது இலகுவானது. இதேபோல் எனக்கு நெருக்கமானவர்களிற்கு அன்புக்கட்டளை இடுவதன் மூலம் சில செய்கைகளை - தற்காப்பு முயற்சிகளை - Precautions - எடுக்கச்செய்து அவர்களையும் காக்கமுடியும். ஆனால்.. இந்த சமுதாயம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. சமுதாயத்தில் வாழக்கூடிய பெரும்பாலானவர்களிற்கு விரும்பாத கருத்துக்களை நான் கூறினால் 'எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ ஆரடா? சும்மா பொத்திக்கொண்டு போடா... லூசா..!' இவ்வாறு பதில் வரக்கூடும். எனவே, சமுதாயத்திற்கு எனது சிந்தனைகளை கூறுவது கடைசி செயற்பாடாகவே வருகின்றது. உண்மையைக் கூறப்போனால்... தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம்.. இவற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மனிதனின் உளவளம் தயாராகவில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் எந்திரன் படம் பார்த்து இருக்கக்கூடும். அங்கு, கடைசியில் தானியங்கி மனிதன் எவ்வாறு நமது - நிஜமனிதனின் கட்டுப்பாட்டை மீறி இதர தானியங்கி மனிதர்களை உருவாக்கி நிஜமனிதரிற்கு பெரும் அழிவுகளை செய்கின்றானோ.. அது ஓர் பொழுதுபோக்கு படமாக காணப்படினும்... ஆனால்.. அச்சொட்டாக அவ்வாறான ஒரு நிலமையிலேயே இன்று உலகம் உள்ளது. அதாவது தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் இவை மனித வாழ்வை தமது பூரணகட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து மனிதனை அடிமைப்படுத்தி உள்ளன. இதனால் வருகின்ற கேடுகளிற்கு - இதனால் உடலாலும், உளத்தாலும் அடையக்கூடிய பாதகமான தாக்கங்களிற்கு மனிதனால் - எம்மால் முகம் கொடுக்க முடியவில்லை. சரி, இவற்றை நான் ஏன் இங்கு கூறவேண்டும்? வசம்பு அவர்களின் கருத்தாடலை பார்க்கும்போது என்னால் ஓர் விடயத்தை ஊகிக்கமுடிகின்றது. அவர் மாற்றுக்கருத்தாளர் என்று நாமம் இடப்படுவதற்கு அல்லது யாழ் கருத்துக்களத்தில் உள்ள கடும் போக்காளர்களினால் துரோகி, எட்டப்பன் என்று முத்திரை குத்தப்படுவதற்கு - அவர் ஏன் அப்படி கருத்துக்களை வைத்தார் என்று கேள்வி எழுகின்றது. போர் மூலம் தீர்வு வரப்போவது இல்லை என்பது காலங்காலமாக அவர் உள்ளத்து உட்கிடக்கையாக இருந்திருக்கக்கூடும். இதனால் போர் - போர் சம்பந்தமான போராட்டங்கள் இவற்றில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போயிருக்கலாம். அவர் தனிப்பட்ட வாழ்வில் பெற்ற அனுபவங்கள் அவர் கருத்துக்களினை தீர்மானித்துள்ளன. இவ்வாறே, இதர கருத்தாளர்களின் கருத்துக்களும் தீர்மானிக்கப்படுகின்றன. எப்படியானாலும்... ஆக்கபூர்வமான உரையாடல் - கருத்துக்களம் மூலம் சாதிக்கப்படக்கூடியவை எவை எனும் கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நடந்தவை நடந்தன. நடப்பவற்றையும், நடக்கப்போவதையும் தீர்மானிப்பதில் தனிநபர் -> நெருக்கமானவர்கள் - > சமுதாயம் எனும் ஒழுங்கில் நாம் நிச்சயம் செல்வாக்கு செலுத்தமுடியும். 'நீ எப்படியும் வாழ்ந்துபோட்டு போ. உன்ரை ஆக்களும் எப்பிடியாவது சீரழிஞ்சு போகட்டும். ஆனால்.. எங்கட சமுதாயத்தில கைவைக்க நீ ஆர்? உனக்கு என்ன தகுதி இருக்கிது? நீ இவ்வளவு காலமும் எங்கடை சமுதாயத்துக்கு உருப்படியாய் என்ன செய்தனீ..?' இதே பாங்கில் சக கருத்தாளர் என்னை விளம்பக்கூடும், சககருத்தாளரை அதே பாங்கில் நானும் விளம்பக்கூடும். இப்படியான உளப்போக்குகளை கருத்தாடலில் வெளிப்படையாக காண்பிக்காவிட்டாலும்.. உள்ளார இவ்வாறான உளநிலையில் நம்மில் பலரும் காணப்படக்கூடும். இது வாதம் ஒன்று வைக்கப்படும்போது வாதிடுபவர்கள் வாதத்தினை மையப்படுத்தாது வாதிடுபவர்களை மையப்படுத்தி கருத்துக்களை திசை திருப்புவதற்கும் ஏதுவாக அமைகின்றது. அடுத்த ஐம்பது ஆண்டுகள் எமது கைகளில் உள்ளன என்று நண்பர் ஒருவருக்கு கூறினேன். இதை எனது வாழ்க்கை -> எனக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கை -> சமுதாயத்தின் வாழ்க்கை எனும் ஒழுங்கில் பார்க்கமுடியும். பல்வேறு கருத்தாளர்கள் வலைத்தளம் ஊடாக கருத்துக்களத்தில் சங்கமிக்கும்போது 'சமுதாயத்தின் வாழ்க்கை' எனும் பகுதியை தொட்டு கருத்தாடல் செய்யும்போது முரண்பாடுகள் வருகின்றன, அவை பெருகுகின்றன. வசம்பு அவர்கள் தனது தீர்க்கதரிசனம் மூலம் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்த விடயங்கள் தற்போதுள்ள தாயக நிலமையை அவர் ஏற்கனவே எதிர்வுகூறியுள்ளாரோ - எச்சரித்துள்ளாரோ என எண்ணத்தோன்றுகின்றது. இறுதியாக, நகைச்சுவை உணர்வை அளவுக்கு அதிகமாகவே பெற்றவர் வசம்பு. அவரது நக்கல், நளினங்களை விரும்பாத பலர் காணப்படலாம், விரும்பும் பலரும் காணப்படலாம். நான் முதலாவது வகை. குறிப்பாக காதல், பெண்கள், குடும்பவியல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசம்பின் நகைச்சுவைகள் எனக்கு பிடிப்பதில்லை. நான் இதுபற்றி 'யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்' எனும் தலைப்பில் - எனது அனுபவப் பகிர்வில் முன்புகூறிய கருத்திற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்: நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்தசெயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கையிது என்றேன்! வாழ்க்கையில் நிலையாமை பற்றியும், நட்பையும் நினைவுகூர்ந்து சுவாமி விபுலானந்தர் இறந்துபோன தனது நண்பனுக்கு கங்கையில் விடுத்த ஓலை எனும் பெயரில் பெரிய கவித்திரட்டு ஒன்றே படைத்தார். என்னால் ஓர் சிறிய நினைவுப்பகிர்வை மட்டுமே சக கருத்தாளர் முகமறியாத உறவு வசம்பு அவர்களிற்காக இங்கு எழுதமுடிகின்றது. எல்லோரும் ஒருநாளைக்கு இறக்கத்தான் வேண்டும். ஆனாலும், பிரிவு என்பது துயரைத் தருகின்றது. அனுபவங்களை மீட்டுப்பார்க்கும்போது வேதனைகளும் சுகமான அனுபவங்களாக அமைகின்றன. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு! நேற்றுவரை எம்முடன் உறவாடிய வசம்பு இனி மீண்டும் கருத்தாடல் செய்வதற்கு வரப்போவது இல்லை, இங்குள்ள பெரும்பாலான கருத்தாளர்களுடன் கருத்துக்களினால் முரண்படப்போவதும் இல்லை. கருத்துக்கள் எழுதிய அவரது விரல்கள்.. கைகள்.. சிந்தித்த மூளை... இவை எல்லாம் இறப்பின் சக்கரத்தில் இறுதிப்பயணத்திற்காக காத்து இருக்கின்றன. அவை சுட்டெரிக்கப்படுவதற்கு தற்போது மணித்தியாலங்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும்.. யாழ் கருத்துக்களம் அழியாதவரை.. வசம்பு எனும் ஜீவன் இங்கு மெளனமாக வாழ்ந்துகொண்டே இருக்கும்...! ஓம் சாந்தி..!