Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   399

  • Content count

   46,708


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   302

  • Content count

   36,646


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   132

  • Content count

   12,038


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   112

  • Content count

   22,469Popular Content

Showing most liked content since 04/26/2017 in Posts

 1. 14 likes
  எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
 2. 14 likes
  அம்மாவாம் அம்மா....! பத்து மாதங்கள் பகலையே காட்டாமல் இருட்டு வயிற்றில் படுக்க விட்டாள் புஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு இஷ்டமான காரம் விட்டாள்....! பிரசவத்தில் அவள் பட்ட வலியை பிறசமயத்தில் ஊரார் நன்றாய் உளறுகின்றார் கருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம் இங்கெவர் உரைப்பார் காண்....! பத்தியமென்று பகாசுரன் போல தின்று அறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி விருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை அருந்த பால் சுரக்கவே....! கொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட அணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம் அடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள் வேப்பெண்ணை பூசியே முலையை.....! கொட்டப் பெட்டியில் காசெடுத்து கடையில் மிட்டாயும் சூப்புத்தடியும் மித்திரரோடு களித்துவர எட்டிக் கைபிடித்து கப்பில் கட்டிவைத்து கண்ணில் தூவினாள் தூள்....! அயர்ந்து உறங்குபவனை அதட்டி எழுப்பி இடையில் சுமந்து பள்ளியில் விட்டு இடையேவந்து தேனீரோ டினிப்பும் தந்து "அ " எழுதென்று மொழியில் அடிப்பாள்....! காச்சலில் விழுந்து காரைக்காடு சென்று வழியில் ரயிலைக் கண்டு அடம்பிடிக்க அடித்திழுத்து நிலையத்தில் ஏற்றி இறக்கினாள் இணுவிலில் இருந்து தெல்லிப்பளைக்கு....! காப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள் சங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள் காணி வைத்து வேலை வாங்கினாள் எதைவைத்து எதைநான் தர....! அன்புடன் சுவி....!
 3. 12 likes
  விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய் பிழைதான் என்ன? காலனவன் கவர வரும் கடைசி ஒரு வேளை – என் கனவே! கட்டுடைத்து கரம் இறுகப் பற்றிடவே வருவாயா? சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன் விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?
 4. 10 likes
  தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இது அல்ல தன் நாடு மீட்க தன் உயிரை தமிழன் ஈய்ந்த நாள் இது மீண்டும் நாம் நிமிர்வோம் எப்போதும் நிமிர்ந்து நிற்போம் ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை காத்திருக்கின்றோம் எம்மைக்கான காலம் வரும் வரை செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டும் கொடுமைகள் நிதம்கொண்டும் அடிமைகளாய் வாழ மாட்டோம்.... விடுதலைத் தாகம் உண்டு... அதற்கான குரலும் உண்டு... கோழைகளாய் வீழ மாட்டோம்... மீண்டும் எழுந்திடுவோம் பீனிக்ஸ் பறவைகளாய் ..... செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பெருக்கும் வீரவணக்கங்கள் மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை மரணத்தின் வாசலிலும் உங்களை மறக்க மாட்டோம் எம்மால் முடிந்தவரை உங்கள் கரம் சேர்ந்தோம் ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்பவர்கள் நாம் இல்லை எம் இதயத்தில் உம்மை இருத்தி இழப்புக்களை வலிப்புக்களை எல்லாம் ஒன்று சேர்த்து மீண்டும் வருவோம் உமக்காக உமது இரத்தத்திற்காக நாம் மீண்டும் வருவோம் ஆனால் இன்று..... காத்திருக்க மட்டுமே முடிகிறது......
 5. 9 likes
  ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது "கணிசமான" அக்கறை கொண்டிருந்த அன்னை இந்திரா காந்தியின் காலத்தின் (1984 ஒக்டோபர் இன்) பின்னர், வந்த அனைத்து இந்திய மத்திய அரசுகளும் தமிழின விரோத இந்திய கொள்கைவகுப்பாளர்களினது வழிகாட்டல்களின் படி தமிழர்களின் பலத்தை சிதைப்பதிலும் தமிழர் பிரச்சினைகளை வைத்து சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதிலும் பகீரதப்பிரயத்தனம் கொண்டுவந்துள்ளனர் என்பதை ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்! சிங்கள-பௌத்த வெறியர்களும், தமிழின விரோத ஹிந்திய வெறியர்களும், ஏனைய சந்தர்ப்பவாத சக்திகளும் இணைந்து ஈழமண்ணில் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பு / தமிழின ஒடுக்குமுறைகள் பல இலட்சம் தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொடரும் தமிழின அழிப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வரலாறு! இந்த தமிழினவழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இவற்றில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன. எனவே "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முடிந்தளவு திரட்டும் நோக்கத்தில் இந்த திரி திறக்கப்படுகிறது! இதில் யாழ்கள உறவுகள் தாங்கள் நேரடியாக அறிந்த, அனுபவித்த இன்னல்களை, கொடுமைகளை பதிவுசெய்யலாம். அறிந்த சம்பவங்களை பதியும் போது சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பெயர்களை தவிர்ப்பது அவசியம். நீங்களே நேரடியாக சம்பந்தப்படிருந்தால் உங்கள் பெயரை குறிப்பதுவும், தவிர்ப்பதுவும் உங்கள் உரிமை! மேலும் பொருத்தமான இடங்களில் திகதி, இடம், நேரம் போன்றவற்றை இணைத்தால் அந்தப் பதிவின் பெறுமதி மிகவுயர்வாக இருக்கும். ஏற்கனவே வெளிவந்த "தரமான" பத்திரிகை / இணைய செய்திகளையும் உரிய மூலங்களுடன் இணைக்கலாம்! இத்திரியில் தேவையற்ற கருத்தாடல்களை தவிர்க்கலாமே! (இருப்பினும் எந்தவொரு உறுப்பினரினதும் உரிமையை வலிந்து கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை). மீண்டும் வலியுறுத்த விரும்புவது, இந்த திரியில், "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை, கொடுமைகளை மட்டுமே பதிவுசெய்யுங்கள்! நன்றி!
 6. 9 likes
  இது கண்டிக்கப் பட வேண்டிய பதிவு பாஞ்சர். நாம் வெள்ளையர் என்றவுடன், அங்கு பார்த்த அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் நினைவுடன் தான் பாப்போம். ஆனால் அவர்கள் அப்படியா வாழ்கின்றனர்.? இன்றும் கூட, அறிவியல், புதிய கண்டுபிடிப்புகளில் UK தான் உலகின் முதல் தர நாடு. தண்ணி, தூள், திருமணத்துக்கு வெளியான கள்ள உறவு என்று நாசமாக்கிப் போன தாய், தந்தையரின், பிள்ளைகள், அவர்களது கவனிப்பில் இருந்து அரசால் எடுக்கப் பட்டு, அரச விடுதிகளில் வளர்க்கப் படுவார்கள். தாய், தந்தை அரவணைப்பில் வளர வேண்டிய இந்த, அன்புக்கு ஏங்கும் பிள்ளைகளை தான் இந்த நாதாரிகள் வளைத்து நாசம் பண்ணுகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. 40 வயதுக்கு மேலான பாகிஸ்தானியர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என பத்திரிகைகள் கவலை தெரிவிக்கின்றன. அப்படிபடட ஒரு கோஸ்ட்டிக்கு, மிக கடுமையான தண்டனை வழங்கப் பட்டது. நமது கலாசாரம்: பேசிக் கட்டி வைப்பவர் உடன் வாழக்கையை ஓட்டி முடித்து விடுவது. அவர்களது கலாசாரம், தனக்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்து வாழ்வினை சந்தோசமாக கொண்டு போவது. இந்த தேடல் ஒருவருடனும் முடியலாம். இல்லை ஒருவருக்கு மேலாகவும் முடியலாம். முக்கியமாக இவனை அல்லது இவளை நான் வாழ்வு முழுவது நம்பி வாழலாம் என்பதே அவர்கள் தேடுவது. கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி போன எனது உறவினர் மகன், டாக்டர், அங்கு ஒரு வெள்ளை இன டாக்டர் பெண்ணை சந்தித்து, கலியாணம் செய்து கொண்டார். தாலியும், பெண்ணுமாக பார்த்தீர்களானால் நீங்களே கண் சுத்திப் போடுவீர்கள். அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் கலாசாரமானது. தாயார் இப்போது தோசை எல்லாம் சுடுகிறார். எனக்குத் தெரிந்த மூன்று தமிழர்கள், 30 வருடங்களுக்கு மேலாக வெள்ளை இனத்தவர்களுடன் சந்தோசமாக வாழ்கின்றனர். ஒரு பெண், அது எவ்வினத்தில் இருந்தாலும், தான், வாழ்நாள் முழுவதும் பயமில்லாமல் வாழ, நம்பிக்கைக்குரிய துணை தேடுகிறார். முதலாவது, இரண்டாவது என அயோக்கியர்களிடம் சிக்கிக் கொள்வது அப்பாவித்தனம், அனுபவமின்மை. அதை காமத்துடன் இணைத்து மலினப் படுத்த வேண்டியதில்லை என்று நினைகிறேன்.
 7. 9 likes
  தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய் கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று மருத்துவிச்சி உதவியுடன் வெளி உலகம் கண்ட போது அதிர்ச்சியில் ஓலமிட்டு சிங்க குட்டியாய் வெளிவந்தேன் என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றார் அப்பா உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாட்டுப் பாடி .. அம்மாவின் அமுதம் அடிக்கடி சுவைத்து மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி ஒவ்வாத உணவுகளை ஓரமாய் வைத்தாள் பாற் பல்லு முளைத்தும் குறும்பன் நான் குறும்பு செய்ய வேப்பெண்ணையால் ...தடை யிடடாள் .பல் வேறு உணவுகளும் பழக்கிய பின் தவனம் தீரவில்லை உறங்க அணைக்கையிலே பால் குடி மறக்க வைக்க பாட்டி துணை வந்தாள் ... அன்றைய என் தாய் எங்கே . அவசர உலகில் நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் .... குறிப்பு.... .மாந்தம் ..(ஒருவகை வயிற் றோட்டம்) மருத்துவிச்சி ....மருத்துவமாது தவனம் ஒருவகை தாகம்
 8. 9 likes
  மடிசாய வரம் தா... ஆண்டைந்து சென்றாலும் அகலாத நினைவோடு கண்ணுக்குள் கலையாத கனவானாய் நிலையாக எம் அன்புத் தாய் நீயே எமக்கெல்லாம் வரம் நீயே உயிரோடு உறவாடும் உலகெல்லாம் நீதானே மனசெல்லாம் நிறைந்திட்ட பிரியாத வரம் நீயே உடலாலே பிரிந்தாலும் உணர்வோடு இணைந்தாயே இணைகின்ற உறவெல்லாம் இருந்தாலும் தாயே உன் இதயத்திற் கிணையான உணர்வாக முடியாதே நிழலாக நீ நின்றாய் சிறகின்றித் தவிக்கின்றோம் பரிவோடு வருடும் உன் பாசத்தை நினைக்கின்றோம் இல்லாமை இருந்தாலும் இயல்பாக எமைத்தாங்கி சுகமாக அணைக்கின்ற சுமைதாங்கி நீ அம்மா எமதன்புத் தாய் இன்றி இதயத்துள் அழுகின்றோம் விழிநீரைத் துடைக்கின்ற விரலின்றித் தவிக்கின்றோம் அழுதாலும் தொழுதாலும் ஆறாது எம் காயம் நாளெல்லாம் உனை எண்ணி நனைகின்றோம் அன்பாலே மடிசாய இடமின்றி மனசெல்லாம் வெளியாகி துளிகூட பிரிவின்றி உன் துணையோடு நடக்கின்றோம் எமக்காக நீ பட்ட இன்னல்கள் இனி வேண்டாம் அம்மா எம் மடி சாய்ந்து அமைதியாய் நீ தூங்கு!
 9. 9 likes
  கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்
 10. 8 likes
  தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் எதுவும் செய்திட முடியா ஏழைகள் நாம் ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து அடுத்தநாள் எல்லாம் மறந்து மீண்டும் வரும் ஆண்டுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவேதுமற்று ..........
 11. 8 likes
  மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒன்று, ஒரே ஒன்று, துளிகளிற்குள்ளும் விரியும் ஒரே வெளி வெளியில் ஞானமில்லை, வெளியே ஞானம் அனைத்தும் வெளியாதலால் ஞானமே அனைத்தும் பள்ளியில் இல்லை கருத்தரிப்பில் இல்லை, இருப்பிற்கு முந்திய இல்லாமையில் இல்லை, அது இல்லாது இருந்ததே இல்லை, தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை பேருந்து நிலையத்தில் குள்ளன் ஒருவன், பிச்சைக்கார நோயாளி பிறிதொருவன், முதிய பெண்ணொருத்தி, அழகி இன்னொருத்தி தன் இருப்பைப் பேண... மனம் தீர்ப்புக்கள் எழுதிக்கொண்டிருக்கையில் மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டுதொலைந்தது கூடவே தூக்கமும் கலைந்தது குள்ளனும் கிழவனும் நொடிந்தோனும் அழகியும் என்னானார்கள் தெரியாது இரண்டு கட்டையில் எரியும் ஒரே நெருப்பு பூமிப்பந்தில்லை, பால்வெளிகளில்லை, சூரியசந்திர நட்சத்திரத் துகள்களில்லை ஆதியும் அந்தமும் அற்ற, அடியும் முடியும் இல்லா, நேரம் மரித்த ஞானப்பெருவெளியில்...ஆனந்தத் தாண்டவம் நேரமில்லை, ஆதலாற் தாண்டவம்... தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை
 12. 8 likes
  50 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 31 2. நந்தன் 30 3. வாத்தியார் 30 4. Ahasthiyan 28 5. கிருபன் 27 6. suvy 26 7. nunavilan 25 8. vasanth1 24 9. தமிழினி 23 10. ஜீவன் சிவா 23 11. ஈழப்பிரியன் 20 12. கறுப்பி 20
 13. 8 likes
  41 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 28 2. Ahasthiyan 25 3.வாத்தியார் 24 4. நந்தன் 23 5. கிருபன் 22 6. suvy 21 7. தமிழினி 20 8. nunavilan 19 9. ஜீவன் சிவா 19 10. கறுப்பி 18 11. vasanth1 17 12. ஈழப்பிரியன் 16
 14. 8 likes
  கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் பாடசாலையில் பல விருதுகளைப் பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். 12ம் வகுப்பில் ஒன்ராறியோ புலமைப்பரிசிலும் பாடசாலையில் அதி விசேட புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டார். யோர்க் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியிலும் அமெரிக்க சட்டக்கல்லூரியிலும் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகள் கற்று இவ் வருடம் மே மாதத்தில் அமெரிக்காவிலும் யூன் மாதத்தில் கனடாவிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாக வெளிவர உள்ளார். பசி வந்திட பத்தும் பறக்கும் என்பர் ஆனால் என் மகளுக்கு படிக்க தொடங்கினால் பசியே மறக்கும். நான் படி படி என்று சொல்லும்படி வைக்காமல் படித்தது போதும் நிற்பாட்டு என்று சொல்லும்படி செய்வார். படிக்கும் பொழுது அவருக்கு முன்னால் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் பலமுறை கண்டித்திருக்கிறேன். அதற்கு அவரது பதில் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினால் தன்னால் படிக்க முடியாது என்பதுதான். சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள். தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.
 15. 7 likes
  தமிழர்கள் பூமியின் மத்திய கோட்டை அண்டி வாழ்ந்து வருவதால்.. அதிகம் சூரிய வெளிச்சத்துக்கும்.. அழுத்தம் கூடிய காற்று மண்டலத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் சராசரியாக கறுப்பாகவும்.. (சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க.. கறுப்பை கொடுக்கும் தோல் நிறமணி உதவுகிறது).. காற்றழுத்தம்.. கூடியஅடர்த்தியான காற்று மண்டத்தில்.. ஒப்பீட்டளவில்.. கூடிய ஒக்சிசன்.. குறைந்த மட்டத்திலேயே போதிய அளவு கிடைப்பதால்.. சராசரி உயரம் குறைவாகவும் உள்ளனர். இதே.. சூரிய வெளிச்சம் குறைந்த துருவத்தில்.. வெள்ளையாகவும்.. காற்று மண்டல அடர்த்தி.. அழுத்தம்.. குறைந்த இடத்தில் போதிய அளவுக்கு ஒக்சிசனை பெற.. உயரமாகவும் உள்ளனர். அதேபோல்.. மூக்கின் அமைப்பும்.. எம்மவருக்கு அதிக வெப்பத்தை உடல் இழக்கும் வகையில்.. பெரிய துவாரங்களோடு.. அகண்டு அமையும். இதே துருவத்தை அண்டிய ஆக்களில் வெப்ப இழப்பை குறைக்கவும் குளிர்காற்றை சூடாக்கி உடலில் எடுக்கவும்.. மூக்கு ஒடுங்கி நீண்டு இருக்கும். இதே இமயத்தை அண்டிய மலைப் பகுதிகளை அண்டி வாழும்.. சீனர்களுக்கு சப்பையாக அகன்று.. குறுகி இருக்கும். காரணம்.. மலைப் பகுதிகளில் ஒக்சிசன் அளவு குறைவு என்பதால்.. கூடிய ஒக்சிசனை உள்வாங்கும் அதேவேளை வெப்ப இழப்பதையும் அது குறைக்க முயல்கிறது. குறைந்த கதிர்ப்பை எதிர்கொள்ள உடல் கட்டையாகவும் இருக்கும். இயற்கை என்பது ஒவ்வொரு உயிரினமும் அதன் சூழலுக்கு ஏற்ப வாழ அதில் மாற்றங்களை மரபணுக்களில் ஏற்படுத்தும் விகாரங்களை.. மாறல்களை செய்து வருகிறது. இன்னும் இந்த மாற்றங்களை தூண்டும் சரியான காரணிகள் எப்படி மரபணுக்களில் செல்வாக்குச் செய்கின்றன என்பது.. சரியாக விளங்கப்படவில்லை. மாறாக டார்வின் இயற்கைத் தேர்வுக் கொள்கை மூலமும்.. டி என் ஏ மாறல்கள் கொண்டும்.. இன்னும் விளங்கம் கொடுத்து வருகினம். அந்த மாறல்கள் எப்படி அச்சொட்டாக நிகழத் தூண்டப்படுகின்றன என்பதில்.. இன்னும் விளங்க பல இருக்கிறது. (இவை ஆய்வு ரீதியான கருத்துக்கள் அல்ல. அவதானிப்பு மற்றும் அது தொடர்பான விளக்கம் சார்ந்த கருத்துக்கள்.)
 16. 7 likes
  Folsom / Sacramento // California
 17. 7 likes
  நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்களவர்களுக்கோ திகைப்பு. அது குருந்தை மரஇலை. அதிர்ச்சியிலிருந்து மீளமுன், எந்த மரத்து இலை. அது குருந்தை. பூபதியம்மா உண்ணா நோன்பிருந்த மரம் சேர்.என்று கூறியவாறு, நல்லவேளை எனது கண்ணைக் குத்தவில்லை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் திருஞானர். ஓகே! அந்த மரத்தைத் தறித்துவிடுங்கள்! என்று சொல்ல அப்படியே ஆகட்டும் என்றவாறு எதிர்கட்சித்தலைவர் புறப்படத் தயாராகினார். அப்போது தலையில் காந்தியின் கைத்தடியால் அடிவிழுந்ததுபோன்றதொரு உணர்வேற்பட ' இன்னும் எவளவுகாலத்துக்கு நீங்கள் இந்தியாவை நம்புவியள். அந்த அன்னையைபபோல் உங்களால் முடியுமா?' இந்தியப்படைகள் அன்று பூபதியைக் கொல்லவில்லை. என்னையே கொன்றார்களடா!' என்று அசரிரீரியாகக் கேட்டது. கையெடுத்துக் கும்பிட்டவாறு அன்னை பூபதியின் நினைவிடம் நோக்கிப் புறப்பட்டார் திருஞானர்.
 18. 7 likes
  காலில் வெறும் செருப்புக் கூட இல்லாமல் வெறும் சாதாரண உடையுடன் வாகனதில் ஏறுகிறாளே ஒருத்தி .. அவள் கூட ஆடம்பரத்துக்காகத் தன்னை விற்கின்றாள் போலவா தெரிகின்றது? எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் குழந்தைகளைக் கிணற்றில் எறிந்து விட்டு அவளும் தன்னை மாய்த்துக் கொள்ளலாமா? ஆண்கள் தானே விபச்சாரிகளுக்குச் சந்தை அமைத்துக் கொடுக்கின்றார்கள் . அவர்கள் வைக்க வேண்டியதை...வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தால் இந்தப் பிரச்சனை தோன்றும் சாத்தியமே இல்லையே? பெண்கள் அவர்களைப் பிடித்தா இழுக்கிறார்கள்?
 19. 7 likes
  58) IPL 2017 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெறும் என்று கிருபன் பதில் தந்து 3 புள்ளிகளை பெறுகிறார். சன் ரைசர்ஸ் வெற்றி பெறும் என்று ஈழப்பிரியன், Ahasthiyan பதில் தந்து இருந்தார்கள். ஏனையோர் சரியான அணியை தேர்வு செய்யவில்லை. 58 வது கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியபின்... 1. வாத்தியார் 35 2. கிருபன் 34 3. nesen 33 4. நந்தன் 32 5. Ahasthiyan 31 6. suvy 29 7. nunavilan 29 8. தமிழினி 27 9. ஜீவன் சிவா 27 10. vasanth1 24 11. ஈழப்பிரியன் 23 12. கறுப்பி 22
 20. 7 likes
  அபலைப் பெண்களை வைத்து காசு பார்க்கும் கயவர்கள் தப்பிவிடுவார்கள் ... அவர்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை போராட்டத்தை புகைப்படங்கள் காட்டி நிட்கிறது. இவர்களின் படங்களை போட்டு விளம்பரம் தேடும் பத்திரிகையாளர்கள் சிந்திப்பார்களா?
 21. 7 likes
  இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில் வன் மோ ரு கோ இது 2015 ஐப்பசியில் நடந்தது.மகனின் திருமணம் 2016 ஆனியில் வன் மோ ரு கோ மகன் தான் மூத்தவர் தான் தங்கச்சிக்கு கட்டிய பின் தான் கட்ட விரும்பியதால் 15 இலும் 16இலும்
 22. 7 likes
  48 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 31 2. நந்தன் 29 3. வாத்தியார் 29 4. Ahasthiyan 28 5. கிருபன் 26 6. suvy 25 7. nunavilan 24 8. vasanth1 23 9. தமிழினி 22 10. ஜீவன் சிவா 21 11. கறுப்பி 20 12. ஈழப்பிரியன் 19
 23. 7 likes
  என்னையும் ஒரு மனுசனாக + புகைப்படப் பிடிப்பாளராக அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படங்களில் ஒன்று. காரைநகர் கரையோரத்தில் இந்தவருட ஆரம்பத்தில் எடுத்தது.
 24. 7 likes
  30 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 21 2. Ahasthiyan 19 3. நந்தன் 18 4. suvy 18 5.வாத்தியார் 18 6. கிருபன் 16 7. தமிழினி 15 8. கறுப்பி 14 9. ஜீவன் சிவா 14 10. vasanth1 13 11. nunavilan 13 12. ஈழப்பிரியன் 12
 25. 6 likes
  போட்டியில் வெற்றி ஈட்டிய.. Ahasthiyan, நந்தன், nesen க்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து சிறப்பித்த... நந்தன்,suvy, தமிழினி, vasanth1, nesen, ஈழப்பிரியன், Ahasthiyan, கறுப்பி ,வாத்தியார், கிருபன், nunavilan, ஜீவன் சிவா ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்தமைக்கு மீண்டும் நன்றி. இந்த போட்டி திரியில் மிகவும் கலகலப்பாக உங்கள் கருத்துகளை பதிந்து சுவாரசியமாக திரியை நகர்த்தி சென்ற நந்தன், கிருபன், ஜீவன் சிவா, எங்கு எல்லாமோ பாட்டுகளை தேடி இணையத்த suvy அண்ணா... எல்லோருக்கும் நன்றி. கிரிக்கெட் போட்டி என்று நடத்தி கொண்டு அதுக்கு எந்த தொடர்பும் இல்லாத நகைச்சுவை கருத்துகளும் பாட்டுகளும் இதை எல்லாம் வாசித்து பார்த்து ரசித்த அல்லது திட்டி கொண்டு போன வாசகர்களும் நன்றி. எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி. மீண்டும் அடுத்த சில நாட்களில் யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டியில் சந்திப்போம். அந்த போட்டியிலும் கலந்து கொள்ளுங்கள் உறவுகளே.
 26. 6 likes
  இறுதி புள்ளிகள்........ 1. Ahasthiyan 45 2. நந்தன் 40 3. nesen 36 4. வாத்தியார் 35 5. தமிழினி 34 6. கிருபன் 34 7. suvy 32 8. ஈழப்பிரியன் 31 9. nunavilan 29 10. vasanth1 27 11. ஜீவன் சிவா 27 12. கறுப்பி 22 போட்டியில் வெற்றி பெற்ற Ahasthiyan, நந்தன், nesen க்கு வாழ்த்துக்கள்
 27. 6 likes
  Pier 39 / Fisherman's wharf // San Francisco
 28. 6 likes
  49 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 31 2. வாத்தியார் 30 3. நந்தன் 29 4. Ahasthiyan 28 5. suvy 26 6. கிருபன் 26 7. vasanth1 24 8. nunavilan 24 9. தமிழினி 23 10. ஜீவன் சிவா 22 11. கறுப்பி 20 12. ஈழப்பிரியன் 20
 29. 6 likes
  45 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 30 2. நந்தன் 27 3. Ahasthiyan 27 4.வாத்தியார் 27 5. கிருபன் 24 6. suvy 23 7. தமிழினி 22 8. nunavilan 22 9. vasanth1 21 10. ஜீவன் சிவா 21 11. கறுப்பி 19 12. ஈழப்பிரியன் 18
 30. 6 likes
  37 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 25 2. நந்தன் 22 3. Ahasthiyan 22 4.வாத்தியார் 22 5. கிருபன் 21 6. suvy 20 7. தமிழினி 18 8. கறுப்பி 18 9. nunavilan 18 10. vasanth1 16 11. ஜீவன் சிவா 16 12. ஈழப்பிரியன் 15
 31. 6 likes
  பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... (1) நான் ரசித்த சில மலர்கள் உங்கள் ரசனைக்காகவும் இங்கே... 1. யூகலிப்டஸ் பூக்கள் (Eucalyptus) 2. பாப்பி பூ (poppy) 3. பாட்டில் பிரஷ் பூ (callistemon) 4. மஞ்சள் மலர்கள் (aeonium arboreum) 5. கற்றாழைப் பூக்கள் (aloe vera) 6. ஐரிஸ் ஜாப்பனிகா (Iris Japonica) 7. அஸேலியா பூக்கள் (Azalea flowers) 8. மஞ்சள் பாப்பி மலர் (poppy) 9. கிறிஸ்துமஸ் கள்ளிப்பூ (christmas cactus) 10. செவ்வந்தி (marigold) 11. சாமந்தி (daisy) 12. மேக்னோலியா மலர்கள் (magnolia) 13. ரோஜா (rose) 14. தீக்குச்சிப் பூக்கள் (Aechmea gamosepala) 15. அல்லிப்பூ (water lily) 16. பாப்பி பூ (poppy) 17. சைக்ளமென் (cyclamen) 18. ஃப்யூஷியா (fuchsia) 19. அலமாண்டா (allamanda) 20. மந்தாரை (Bauhinia) பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 2 21. மஞ்சள் லில்லி மலர் (daylily - Hemerocallis) 22. crape myrtle flowers 23. தேவதையின் ஊதுகொம்பாம் (Angel's trumpet - Brugmansia) 24. மஞ்சள் செம்பருத்தி (yellow hibiscus) 25. Hemerocallis red velvet daylily 26. இலவம்பூ வகையுள் ஒன்று (silk floss flower - Ceiba speciosa) 27. சிலந்திப்பூ (spider flower - grevillea) 28. துலிப் மலர்கள் (Tulips) 29. பெயர் அறியாப்பூ 30. பெகோனியா (begonia) 31. (Brillantaisia) 32. (star cluster) 33. நித்திய கல்யாணிப்பூக்கள் (rosy periwinkle) 34. pink abutilon 35. வெட்சியில் ஒரு வகை (ixora) 36. ரோஜாக்கள் (roses) 37. கொலம்பைன் மலர்கள் (columbine flowers) 38. ஆந்திரியம் பூக்கள் (Purple Arc Anthurium) 39. சிலந்திப்பூ - (white grevillea) 40. அடுக்கு செம்பருத்தி (layered hibiscus) http://geethamanjari.blogspot.ca/
 32. 5 likes
  Pier 39 / Fisherman's wharf // San Francisco
 33. 5 likes
  அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.... 'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர். 'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள். 'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள். வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது. மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள். கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். ஓவ்வொரு முறையும் மாணிக்கம் மலருடன் சண்டை போட்டு பெரிய அட்டகாசப் படுத்தி விடுவான். இம்முறை எப்படியோ? வளர்ந்த மூன்று பிள்ளைகள் வீட்டிலிருக்கிறார்கள். மலருக்கு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. சங்கர் சுந்தர் இருவரும் 17 வயதைத் தாண்டியவர்கள். சாந்தி சென்ற மாதம்தான் மலர்ந்த புத்தம் புதுமலர். வீட்டிற்குள் ஓடிச் சென்ற மலர் ஒன்றிரண்டு மாற்றுடைகளைச் சேகரிக்கத் தொடங்கவும் மாணிக்கம் கோவத்துடன் கத்தவும் சரியாக இருந்தது. 'இதுகளுக்கு வேற வேலை இல்லை. அங்க ஆமியும் இறங்க இல்லை ஒண்டும் இல்லை. சும்மா சும்மா ஓடிறதும் வாறதுமே இதுகளுக்கு வேலையாப் போச்சு.' 'ஏய் மலர் நீ சும்மா வீட்டுக்குள்ள இரு பாப்பம். ஏத்தனை தடவை இப்படிப் போயிற்று வந்திருக்கிறாய்' கணவனின் பேச்சு அவளை அவளது அவசரத்தை நிறுத்தியது. ஊரோடினா ஒத்தோடு எண்டுசு;மாவா சொல்லியிருக்கினம். மனதுக்குள் மறுகியபடி இந்த மனுசனோட மல்லுக்கட்ட ஏலாது. சரி. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தபடி 'நாங்க இருப்பம் பரவாயில்லை. மூத்தவன்கள் இரண்டு பேரையும் சைக்கிள எடுத்துக்கொண்டு கோயிலடிக்கு போகச் சொல்லுவம்' என்றாள் ஆற்றாமையுடன். 'உனக்கென்ன விசரா? நாங்க பக்கத்தில இருந்தாத்தான் பிள்ளையளுக்கப் பாதுகாப்பு. அதுகள தனிய விட்டா எவனாவது பிடித்துக்கொண்டு போகவா? என்றுஉரத்துக் கத்தவும் மலர் அடங்கிப் போனாள். ஊரெல்லாம் ஓடிக்கொண்டிருக்க வானில் இரும்புப் பறவைகள் இரைதேடிப் பறக்கத் தொடங்கின. திடீரென்று குண்டுகள் கொட்டவும் வெடியோசை கேட்கவும் ஆரம்பித்தன. மலர் கணவன் பிள்ளைகளுடன் ஏற்கனவே ஆயத்தமாக இருந்த பங்கருக்குள் சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டனர். அப்பொழுது அந்த வீதியால் ஓடி வந்துகொண்டிருந்த பாக்கியம் அதற்கு மேலும் ஓடமுடியாமல் மலர் வீட்டுப் படலை திறந்திருப்பதைக் கண்டதும் அவசரமாக ஓடிவந்து அந்த பங்கருக்கள் அவர்களுடன் அடைக்கலமானாள். வெடியோசைகள் காதைப் பிளந்தன. சத்தங்கள் வரவர அண்மித்துக் கொண்டு வருவதை அவதானித்த மலர் தன் இஸ்டதெய்வங்களையெல்லாம் மானசீகமாக மனதில் நிறுத்தி கும்பிடத் தொடங்கினாள். காலடியோசைகளும் வெடியோசைகளும் அண்மித்து வருவது துல்லியமாகக் கேட்டது. புரியாத மொழியில் சத்தம்போட்டுக் கதைப்பதும் கூப்பாடு போடுவதும் கும்பல் கும்பலாக சிங்கள இராணுவம் தம் தெருவுக்குள் வருவதை உணர முடிந்தது. வேலிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தும் ஓசைகளும் கூச்சலும் அங்கே ஓரு பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர்கள் அடைக்கலமாகி இருந்த பங்கருக்கு மேல் சப்பாத்துக் கால்களின் காலடித் தடங்கள் நெருங்கி வந்திருப்பதை உணர்ந்த அனைவரும் பயத்தில் உறைந்து போய் இருந்தனர். துப்பாக்கி முனைகள் பங்கரை நோக்கி நீட்டியபடி சிங்களமொழியில் அனைவரையும் வெளியே வரும்படி கட்டளை அதிகாரமாக வெளிப்பட்டது கர்ணகடூரமாக வெளிப்பட்ட அந்த குரலைக்கேட்டதும் ஒவ்வொருவராக வெளிப்பட ஆரம்பித்தனர். அங்கு நின்ற இராணுவத்தினர் துப்பாக்கியுடன் ஆயத்த நிலையில் நிற்க அவர்களை அண்டியபடி நின்ற ஒரு பெரிய குழுவினர் பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்துடன் காட்சியளித்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் மனித மண்டையோடு வரைந்திருந்தது. தலையில் சிவப்புப் பட்டிகள் கட்டப்பட்டிருந்தது. முகத்திதல் பல வர்ணக் கோடுகள் கண்கள் மட்டும் கொள்ளிவாய்ப் பசாசுகள்போல பளபளத்துக்கொண்டிருந்தன. அந்த விழிகளில் தெரிந்த வெறியுடன் கைகளில் பெரிய கத்திகள் பொல்லுகள் இரும்புக்கம்பிகள் பேய்களைப் பற்றி கதைகளிலும் கற்பனைகளிலும்தான் இதுவரை கண்டுவந்தவர்கள் இப்பொழுது நேரிலேயே பார்த்துவிட்ட பயத்தில் வாயடைத்துப் போய் 'கடவுளே கடவுளே என்று மனதுக்குள் கடவுளை மட்டுமே அவ்வேளையில் துணைக்கழைக்க முடிந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அங்கலாய்ப்பு மட்டுமே அவர்களை நிலை குலைய வைத்தது. முதலில் வெளியே வந்த இரண்டு வாலிபர்களைக் கண்டதும் அவர்கள் விழிகளில் கொலைவெறி. ஏதேதோ தம் மொழியில் சத்தமிட்டு கொக்கரித்த வண்ணம் கூச்சலிட்டவர்கள் அடுத்து செப்புச்சிலைபோல அந்தப் புத்தம் புது மலரைக் கண்டதும் விழி விரிய விரசம் வழியும் வினோதமான பார்வையுடன் அவளது கைகளைப் பற்றி இழுத்தனர். இந்நிலையில் வாய் திறந்து கத்தக்கூட திராணியற்றவர்களாய் பெற்றவர்கள் பார்த்திருக்க அச் சிறுமியை கதறக் கதற இழுத்துச் சென்றனர். 'அம்மா அப்பா அண்ணா என்ற கதறல் அந்த இடத்தில் எதிரொலிக்க அவள் அண்ணாக்களில் ஒருவன் அவர்களின் பிடியிலிருந்து திமிறி தங்கையை நோக்கி ஓட எத்தனிக்க சடசட என்ற துப்பாக்கி ரவை அவனது மார்பைத் துளைக்க அய்யோ அம்மா என்ற கதறலும் அனைவரின் கதறல் ஒலியும் அங்கு சூழ்ந்திருந்த பேய்களின் அட்டகாசமான சிரிப்பொலியும் அந்த இடத்தின் பயங்கரத்தை அதிகமாக்கியது. அடுத்ததாக மற்றைய வாலிபனின் கதறலொலி அவனது முடிவையும் பறைசாற்றியது. கண்முன் இரு அண்ணாமாரும் சுருண்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து விக்கித்து நின்ற சாந்தியை வீட்டின் மண்டபத்திற்கு இழுத்துச் சென்ற பேய்கள் சுற்றிவர நின்று இச்சையுடன் அவளது ஆடைகளை கிழிக்கத் தொடங்கினர். அங்கு அதன்பிறகு நடந்ததை வார்த்தைகளில் எழுதமுடியாது. இங்கு ஒரு கூட்டம் இப்படியான கொடுமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க பெற்றவர்கள் பங்கரை விட்டு வெளியே வர முடியாதபடி அடைத்தபடி நின்ற இராணுவத்தினர் தாமும் அந்த மண்டபத்தில் நடக்கும் களியாட்டத்தில் பங்குபெற எண்ணி கிரைனைட் கிளிப்பைப் கழட்டி பங்கருக்குள் எறிந்தனர். பங்கருக்குள் இருந்த மூவரும் உடல் சிதறி அதற்குள்ளேயே சமாதியாகினர். அந்தச் சின்ன மலரை இதழிதழாகப் பிய்த்து உருக்குலைத்து உயிரற்ற உடலை வெற்றுடம்பாக வீசி எறிந்து விட்டு வீட்டிலும் அயலிலும் கையிலகப்பட்ட ஆடு கோழி முதலியவற்றை சமைத்து விருந்துண்டு வெற்றிக்களிப்போடு அடுத்த வேட்டைக்க வெளிக்கிட்டனர். இப்படியான பல சோகக் கதைகள் தொண்ணூறில் எம் ஊரில் நடைபெற்றாலும் சில கதைகளே வெளி உலகிற்கு தெரிந்தன. பல கதைகள் இன்றுவரை காற்றோடு கலந்து கடலலையோடு சங்கமமாகி விட்டன. -------------------------xx------------------------xx-------------------------------xx----------------------
 34. 5 likes
  கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்! அநாதரவாய்...., ஆதாரமில்லாமல் அலைந்தவர்கள், உனது பெயரைச் சொல்லி,,,,, தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டனர்! உனது பெயரால்...., சேமிக்கப் பட்ட செல்வங்களால்..., தங்களுக்கெனத் தனி விலாசங்கள், தேடிக் கொண்டார்கள்! ஏதிலிகள் என நாமம் சுமந்தவர்கள்..., ஏதிலியாக ஆக்கியவர்களுடன்...., இரு கரங்கள் கோர்த்து.., விருந்துண்டது தான் எமது சரித்திரமா? ஆகுதியானவர்கள்..., அங்கங்களை இழந்தவர்கள்...., அனாதைகள் ஆனவர்கள்..., எல்லாமே எம்மவரின்.., மூலதனங்களாக... மாறிப் போன அதிசயம் தான் ..., நாறிப் போன நமது சரித்திரமா? எனது ஈழக் கனவே..! எல்லோரும் அப்படியல்ல..! இருப்பினும் பெரும்பகுதி அவ்வாறே! கோவில் கோபுரங்களின்.. தங்கக் கலசங்களும்..., அவர்கள் கழுத்துக்களில் தொங்கும், அந்தப் புலிப்பல்லுச் சங்கிலிகளும்.., அவர்கள் வீரம் சொல்லி நிற்கட்டும்! முள்ளி வாய்க்காலின் ..., சாம்பல் மேடுகளும், வாழ்வைத் தொலைத்த இளசுகளின், வெற்றுக் கழுத்துக்களும்.., வரலாற்றின் சுவடுகளாய்...., எமக்காக இருக்கட்டும்! எனது ஈழக்கனவே...! நீ கனவாக இருக்கும் வரை.., காளான்களாய் முளைக்கின்ற விகாரைகளும்..,., செத்துப் போன புத்தனின்.., கல்லறைகளாகவே இருக்கும்! நீயும்....., உனக்காக மரணித்தவர்களின்.., ஈர நினைவுகளும்.., மரணம் கடந்த நிலையில்..., என்றும் வாழ்ந்திருக்கும்..! வீர வணக்கங்கள்! ,
 35. 5 likes
  வெள்ளைக்காரப் பெட்டைகள் என்றாலே easy meat என்று நினைக்கும் ஆசிய இனத்தினரில் தமிழரும் அடங்கித்தான் உள்ளனர். ஆனால் பராயப்படாத பிள்ளைகளை ஏமாற்றுவதும், பாலியல் உறவு வைப்பதும் பாரிய விளைவுகளைத் தரும் என்ற சட்டங்களைத் தெரியாமல் இவர்கள் இருந்திருக்கமாட்டார்கள். இனி எல்லாம் வற்றும்வரை சிறையில் இருக்கும்போது உணர்ந்துகொள்வார்கள்.
 36. 5 likes
  அம்மா சொல்லிக்கொடுத்து சொல்லாமல் சொன்ன சொல் "அம்மா"... எண்ணும் கணக்கில் எண்ணாமல் எண்ணும் நெஞ்சம் "அம்மா"... தத்தி நடை நடந்து மண்ணில் தடக்கி அங்கே விழுகையிலும் முட்டி நிற்க்கும் கண்ணீர் முன்னே முந்தி வரும் வார்த்தை "அம்மா"... தள்ளாடும் வயதினிலும் சொல்லாடல் மாறாமல் உள்ளோடும் உயிரோடு உறைந்த உயர்ந்த வார்த்தை "அம்மா"... கண் மூடிப் தூங்க பாயில் போகும் போதும் "அம்மா" கனவு கண்டு உளறி வாய் உதிர்க்கும் வார்த்தை "அம்மா"... உண்ட உணவு தொண்டை வரை நிறைந்துவிடும் போதும் எடுத்துப் பெரு மூச்சுவிடும் வேளையிலும் "அம்மா"... களைத்து உடல் இளைப்பாறும் வேளையிலும் கூட இதமாய் கையை நிலத்தில் உன்றி சொல்லும் வார்த்தை "அம்மா"... வருந்தி நோயில் முணங்கையிலும் வலிகள் வாழ்வில் சூழ்கையிலும் மொழிகள் எல்லாம் மறைந்து போக உயிரின் மொழி உரைக்கும் வார்த்தை "அம்மா"... ஏழ் பிறவி எடுத்தாலும் அங்கும் தொடரும் "அம்மா" "அம்மா" ஒன்று இல்லாமல் ஒரு உயிர் வருமோ சும்மா யாரென்று சொல்லியே யாரெல்லாம் நாம் அறிந்தோம் யார் வந்தும் சொல்லாமல் நாமாக தாயறிந்தோம். அம்மா, அம்மா, அம்மா என்று சொன்ன வார்த்தை கோடி ஓடி உயிர் போகும் மட்டும் அம்மா உயிர் நாடி.
 37. 5 likes
  முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.
 38. 5 likes
  மனதை நெகிழ வைத்த.... குறும்படம்.
 39. 5 likes
  ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புள்ளிகள் 1. வாத்தியார் 35 2. nesen 33 3. நந்தன் 32 4. Ahasthiyan 31 5. கிருபன் 31 6. suvy 29 7. nunavilan 29 8. தமிழினி 27 9. ஜீவன் சிவா 27 10. vasanth1 24 11. ஈழப்பிரியன் 23 12. கறுப்பி 22
 40. 5 likes
  54 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. வாத்தியார் 34 2. நந்தன் 31 3. nesen 31 4. Ahasthiyan 29 5. கிருபன் 29 6. suvy 28 7. nunavilan 27 8. தமிழினி 25 9. ஜீவன் சிவா 25 10. vasanth1 24 11. ஈழப்பிரியன் 21 12. கறுப்பி 20
 41. 5 likes
  52 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. வாத்தியார் 32 2. nesen 31 3. நந்தன் 30 4. Ahasthiyan 29 5. கிருபன் 28 6. suvy 27 7. nunavilan 26 8. vasanth1 24 9. ஜீவன் சிவா 24 10. தமிழினி 23 11. ஈழப்பிரியன் 20 12. கறுப்பி 20
 42. 5 likes
  தலமஸ் என்பது மூளையின் மூளையம் மற்றும் முண்ணானுக்கு இடையில் உள்ள முக்கிய பகுதி. இது பல உடற்தொழிற்பாடுகளை கட்டுப்படுத்தும் பகுதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது. ஆனாலும்.. வந்துள்ள தலமஸுக்கான..குருதிக் குழாய் அடைப்பு அல்லது சிதைவு.. என்பது அது ஏற்படுத்தியுள்ள பாதிப்பின் அளவைப் பொறுத்துத்தான்.. இதில் இருந்து மீள்வார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும். மனித உடலைப் பொறுத்த வரை சில விடயங்கள் வைத்தியர்களின் அனுமானங்களுக்கு அப்பாலும் நல்லவை நிகழ்வதுண்டு. காரணம் எமது உடலைப் பற்றி நாம் இன்னும் 100% சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.. மருத்துவரீதியாகவும் கூட. அந்த வகையில்.. உங்கள் அம்மாவுக்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்ந்து அளியுங்கள். அவரை கவலைகளுக்கு அப்பால் மகிழ்ச்சியா.. வைத்திருக்க முயலுங்கள். நல்லவை நடக்க வாய்ப்பிருக்குது. எதையும் நாம் எதிர்மறையாக ஒரேயடியாக நோக்கக் கூடாது. நல்லதை நினைத்துச் செயற்படுவதே சிறந்தது.
 43. 5 likes
  தனிப்படட கோபத்தினால், ஒரு லாபத்தில் இயங்கிய அரச நிறுவனத்தினை சீரழித்த கதை தான் இது. ராஜபக்சே மனைவி, சிராணி ராஜபக்சே துபாய் போக விரும்பிய போது, முதல் வகுப்பில் இடமில்லை என்று சொல்லப் பட்டது. யாரையாவது நிறுத்தி, அம்மணிக்கு சீட் கொடுக்க சொல்லப் பட்டது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து. ஸ்ரீ லங்கான் விமான சேவையை நடாத்திக் கொண்டிருந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரி வரை போயும், முதல் வகுப்பு முழுவதும் ஒரு மேல் நாட்டினது ராஜதந்திரிகள் பயணிப்பதால் எதுவுமே செய்ய முடியாது என்று கை விரித்து விட, வந்ததே கோபம் ராஜபக்சேக்களுக்கு. உடனடியாக பிரிட்டனை சேர்ந்த அந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரியின் விசாவை ரத்து செய்து 48 மணி நேரத்தில் நாட்டினை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படடார். அத்துடன் எமிரேட்டுடனான உடன்படிக்கையும் ரத்து செய்யப் பட்டது. தனிப்படட காரணகளுக்காக மிகவும் லாபகரமாக இயங்கி வந்த நிறுவனத்தினை பிடுங்கி, அனுபவமே இல்லாத சிரானியின் சகோதரரிடம் கொடுக்கப்பட, அவரோ மாதம் ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் உலகெங்கும் சுத்தி திரிந்தார், ஸ்ரீ லங்கான் செலவில். முக்கியமாக தமது கொள்ளைகளை அடிக்க முடியாமல், நந்தி போல் எமிரேட்ஸ் தடுத்ததும் இன்னுமொரு காரணம். இன்று ஸ்ரீ லங்கான் $2பில்லியன் டொலர் நஷடத்தில்.... ரிம்மில் ஓடுகின்றது. புது முதலீட்டாளர்களை தேடுகிறது. மகிந்த மீண்டும் வர முயல்வதும், அவருக்கான, மே தின கூட்டம் கூடுதலாக இருந்ததாலும், ஆரவப் பட்டவர்களும் தலை தெறிக்க ஓடிவிட்டார்கள். கடைசியாக, எமிரேட்ஸ்சுக்கே கடதாசி போடுவோமா என்று யோசிக்கின்றனர். ஆனால் சூடு கண்ட பூனை. மிகவும் கவனமாக உடன்படிக்கை போடும். கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்கள் ராஜபக்சே குடும்பத்தினர். முக்கியமாக சிராணி நோனா... மே 2014 பிரான்ஸ் இல் நடந்தா வெசாக் கொண்டாட்டங்களை, சிறப்பிக்கவென தனது மாமி 'டெய்சி ஆன்டி' உடன் நான்கு நாட்கள் பயணத்தில் செலவழித்த பணம், 137,396 யூரோ (Rs 25,000,000). வெசாக் என வந்து, அவர்கள் செய்தது, கிங் ஹென்றி V ஹோட்டலின் 'presidental suite' ல் இருந்து வெசாக்கினை பார்த்தது மட்டுமே. பாரிஸில் இருந்து மாமியாருடன், லிமோசின் காரில் லூர்ட்ஸ் தேவாலயத்துக்கு போய் வந்தது தான் கத்தோலிக்கரான அவரது வெசாக் கொண்டாட்டம். பில்லை அரசு தலையில் கட்டிவிட, செலவு விபரங்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள இப்போது வெளியியீட்டுள்ளார். 41,650 யூரோ மட்டும் இந்த பிரான்சில் சுத்திய லிமோசின் கார் வாடகை மட்டும். ஊதாரிப் பெண்ணும் அப்பாவி இலங்கையர் வரிப்பணமும். 1973ம் ஆண்டு இலங்கை அழகுராணியாக தேர்வான அம்மணி அதே ஆண்டு, லண்டன் ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்த உலக அழகு ராணிப் போட்டியில் பங்கு கொண்டார். வெல்லவில்லை. ஹோட்டல் ரூமில் இருந்த மினி பார் பல முறை நிரப்ப வேண்டி இருந்தது. தண்ணி பில் மட்டும் 845 யூரோ.... நான்கு நாட்களுக்கு. 'இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னர் இங்கு தங்கி இருந்ததால் இந்த பெயர் வந்தது. ஆனலும் இன்றையஎலிசபெத் மகாராணியார் தங்கவில்லை.... காரணம் கட்டணம் மிகமிக அதிகம்.... ஆனாலும் எமது ராணி அம்மாவுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை' என்றார் மங்கள. அவர்கள் மீண்டும் வர ஆசைப் படுகின்றனர். http://dbsjeyaraj.com/dbsj/archives/52786
 44. 5 likes
  தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுங்கள், பணத்தை அனுப்பாதீர்கள்.... உண்மையான வார்த்தை......!
 45. 5 likes
  40 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 28 2. Ahasthiyan 25 3.வாத்தியார் 24 4. நந்தன் 22 5. கிருபன் 22 6. suvy 20 7. தமிழினி 19 8. nunavilan 19 9. கறுப்பி 18 10. ஜீவன் சிவா 18 11. vasanth1 17 12. ஈழப்பிரியன் 15
 46. 5 likes
  35 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 23 2. நந்தன் 21 3. Ahasthiyan 21 4. suvy 20 5.வாத்தியார் 20 6. கிருபன் 19 7. தமிழினி 17 8. கறுப்பி 17 9. nunavilan 16 10. vasanth1 15 11. ஜீவன் சிவா 15 12. ஈழப்பிரியன் 14
 47. 5 likes
  33 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 22 2. Ahasthiyan 20 3. நந்தன் 20 4. suvy 19 5.வாத்தியார் 19 6. கிருபன் 17 7. தமிழினி 16 8. கறுப்பி 16 9. nunavilan 14 10. ஜீவன் சிவா 14 11. vasanth1 13 12. ஈழப்பிரியன் 13
 48. 5 likes
  “இன்று எழுக தமிழ் நடப்பதால் கடைகள் எல்லாம் பூட்டி இருக்கும் என்று முதல் நாளே ஆட்டிறைச்சி எல்லாம் வாங்கியாச்சு” என மாமா சொன்னார். ஆனாலும் எனக்கு மீனும் ஊர் சாவலும் சாப்பிட வேண்டும் போல இருந்தமையால் காரில் வெளியே வெளிக்கிட்டோம். பெரியளவில் கடைகள் பூட்டி இருக்கவில்லை. ரவுனுக்குள் பூட்டி இருக்கும் என மாமா சொன்னார். எனக்கு பிடிச்ச பாஷையூருக்கு கார் விரைகின்றது. இடையில் பாஷையூர் அந்தோனியார் கோவில் எதிர்படுகின்றது. அலையலையாக நினைவுகள் எழுகின்றன. பாசையூர் அந்தோனியார் கோவில் ஒரு அழகான அமைவிடம். கோவிலுக்கு முன்பாக மூன்று குளங்கள். இக் குளங்களை ‘வண்ணார்’ குளம் என்று சாதிப் பெயர் கொண்டு அழைப்பர். நல்லா நீர் இருக்கும் காலங்களில் சலவைத் தொழிலாளர்கள் இங்கு உடுப்புகளை தோய்ப்பதை கண்டிருக்கின்றேன். முதல் இரு குளங்களுக்கும் இடையில் ஒரு பெரிய காணி பிரிச்சு இருக்கும். குளங்கள் கோடையில் காயும் போது குளத்துக்குள் இறங்கி பட்டம் விட்டு இருக்கின்றோம். கோவிலின் முன் பெரிய திடல் ஒன்றும் இருக்கு. இங்கு உள்ளூர் கழகங்களின் விளையாட்டு போட்டிகள் நடக்கும். இப்ப ஒரு குளத்தை காண முடியவில்லை. ( தூர்வாரப்படாமலேயே முற்றாக வற்றி வெறும் தரையாக போய்விட்டதா அல்லது குளத்தை மூடி விட்டார்களா எனத் தெரியவில்லை. அந்தோனியார் கோவில் திருவிழா காலங்களில் ஊரே ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அடிக்கடி சுண்டிக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவினதோ அல்லது அருணா இசைக் குழுவினதோ இசை நிகழ்வுகள் திருவிழாக் காலங்களில் நடக்கும். அமுதன் அண்ணாமலை தன் கணீர் குரலால் பாட கிட்டார் ரமணன் “ராஜா ராஜாதி ராஜன் அல்ல ராஜா” பாட இரவுப் பொழுதுகள் திருவிழா காலங்களில் அற்புதமாக கழியும். அந்தோனியாரைக் கடந்து பாசையூர் கடற்கரையில் இருக்கும் மீன் சந்தைக்கு போகின்றோம். எனக்கு யாழ்ப்பாணத்தில் பிடித்த இடங்களில் ஒன்று இந்த மீன் சந்தை. நான் அப்பாவுடன் அடிக்கடி வந்து போன இடம். அதன் மீன் வாசனை நினைவுகளில் இன்றும் இனிப்பதுண்டு. ஆனால் அங்கு நான் எதிர்பார்த்தளவுக்கு பெரிய மீன்கள் எதுவும் இருக்கவில்லை. பெரிய மீன்களை தமிழகத்தில் இருந்து வரும் மீன் பிடி கொள்ளையர்கள் பிடித்துக் கொண்டு போகின்றனர் என்று உள்ளூர் மீனவர்கள் குறைபடுகின்றனர் என மாமா சொன்னார். (பாசையூர் சந்தையில் மீன்கள்) பாசையூரில் மீன் பெரியளவில் இல்லாததால் சின்னக்கடை பக்கம் போகின்றோம். இடையில் 1986 June 10 அன்று மண்டை தீவில் வைச்சு கொல்லப்பட்ட 31 மீனவர்களுக்கான நினைவு தூபிதெரிகின்றன. வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கப் போன அப்பாவி 31 மீனவர்களை சிங்கள கடற்படை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்து இருந்தது. வெட்டுண்ட உடல்களை குருநகரில் இருக்கும் சன சமூக விறாந்தையில் அடுக்கி வைத்து இருக்கும் போது நானும் நண்பர்களுமாக போய் பார்த்து இருந்தோம். அப்படி பார்க்கும் போது என் வயது 11. குருநகர் கழிய வந்த ஒரு பெரிய காணிகள் உள்ளடக்கிய பகுதியை இராணுவம் கையகப்படுத்தி இருந்தது. பொதுமக்களின் காணிகள் அவை. “இந்த --- மக்கள் என்னத்துக்கு இன்னும் இதை பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள்.. பாடையில போவார்” என மாமா தன் ஸ்ரைலில் திட்டிக் கொண்டு வந்தார் இடையில் பண்ணை பாலம், கோட்டை பகுதி ஆகியவற்றை காரை நிறுத்த சொல்லி பார்க்கின்றேன். கோட்டையின் அருகே கடற்கரை ஓரங்களில் ஒரு சில இளம் சோடிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு மெய்மறந்து இருந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கண்ட சோடிகளின் நினைவு வந்து போனது. (பண்ணை பாலம் மற்றும் அதனருகில் உள்ள இடங்கள்) சின்ன கடை எழுக தமிழுக்காக சந்தை பூட்டி இருக்கும் என நினைச்சால், அங்கும் திறந்து இருந்தார்கள். இருப்பதில் ஓரளவுக்கு பெரிய ‘கலவாய்’ மீனை வாங்கிக் கொண்டு ரவுன் பக்கம் போனோம். கடைகள் அநேகம் பூட்டி இருந்தன. ரவுனை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டை வருகின்றோம். இடையில் எனக்கு செவ்விளனி குடிக்க ஆசை ஆசையாக வருகின்றது. கனடாவுக்கு வந்த பின் செவ்விளனி குடிக்கவே இல்லை. அங்கு ரின்னில் அடைச்சு வரும் இளநீரை குடிப்பதை விட கோமியத்தை குடிக்கலாம். மாமா பழைய பூங்கா வீதிக்கருகில் இருக்கும் ஒரு இளநீர் சிறு கடையின் அருகில் காரை நிறுத்த இறங்கிக் குடிக்கின்றோம். மாமாவுக்கு டயபடீஸ் உச்சத்தில் இருந்து பல்லிளிச்சுக் கொண்டு இருந்தாலும் நான் இளநீர் வாங்கி குடிக்கும் போது ஆளால் தன் ஆசையை மட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை diabetes அறியாது என முன்னோர் சும்மாவா சொன்னார்கள். வீட்டை வந்து மீனை எல்லாம் சமைச்சு சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித்தூக்கம் போட பொழுது மாலையாகின்றது. மாலை மாமாவுடன் நான் நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்த பல உறவுகளின் வீடுகள் தேடிச் சென்று சந்திக்கின்றேன். அப்பாவின் மூத்த தமக்கை – என் பெரிய மாமியை கட்டிக் கொஞ்சி அணைத்துக் கொள்கின்றேன். அப்பாவின் செத்த வீட்டில் மாமியை பார்த்த பின் இன்று தான் 13 வருடங்களின் பின் பார்க்கின்றேன். பெரிய மாமியை சந்தித்த வீட்டின் கதியாலில் எங்கிருந்தோ வந்து ஒரு செண்பகம் அமர்கின்றது. யுத்தத்தின் பின் கனகாலமாக யாழ்ப்பாணத்தில் செண்பகத்தை காணவில்லை என சிலர் முன்னர் சொல்லியிருந்தனர். இப்பதான் மீண்டும் செண்பகம் அதிகமாக புழங்கத் தொடங்குகின்றது. செண்பகம் எத்தனை பசுமையான நினைவுகளை தன் இறக்கைகளில் காவிக் கொண்டு அமர்ந்து இருக்கின்றது. படம் எடுப்பம் என்றால் அவ்வளவு நேரமும் முகத்தை காட்டிக் கொண்டு நின்ற செண்பகம் தன் முதுகை காட்டத் தொடங்கிட்டு. பெரிய மாமியை சந்தித்த பின் இன்னும் சில உறவுகளையும் சந்தித்து முடித்து வரும் வழியில் Rio வில் மச்சானின் பிள்ளைகளுக்கு ஐஸ் கிரீமையும் வாங்கிக் கொண்டு இரவு வீட்டை வர மாமாவுடன் பார்ட்டி ஆரம்பமாகியது. நான் கனடாவில் குடிப்பது St Remy எனும் French brandy தான். அது கிடைக்காவிடின் சில நாட்கள் வேறு எதுவும் குடிக்காமல் இருந்து விடுவதுண்டு. மாமா யாழ்ப்பாணத்தில் தேடிப் பிடித்து அதை வாங்கி வைத்து இருந்தார். இரவிரவாக மாமாவுடன் கதைத்துக் கொண்டு 2 மணி வரைக்கும் தண்ணி அடித்துக் கொண்டு இருந்தோம். மாமாவின் வாழ்க்கை ஒரு பெரிய நாவலுக்குரியது. ஒரு முறை அவரிடம் உங்கள் கதையை சிறுகதைகளாக எழுதட்டா எனக் கேக்க, “என் கதையை இரண்டு மூன்று திரைப்படங்களாகவே எடுக்க முடியும்” என சொன்னவர். தன் தாய் புற்றுநோயால் இளம் வயதில் இறக்க, குடிகாரத் தந்தை ஏற்க வேண்டிய பொறுப்பை தான் ஏற்று தன் சகோதரங்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து, காதல் திருமணம் முடிச்சு, சவூதி போய் உழைச்சு வீட்டை கட்டி,பின் 1987 இல் கனடா வந்து தன் குடும்பத்தை ஏஜென்சி மூலம் கூப்பிட்டு, 25 வருடம் கனடாவில் வாழ்ந்து, வாழும் போது தன் மனைவியை படிப்பித்து, பின் அவருடனேயே முரண்பட்டு மீண்டும் இலங்கை வந்து, வந்த பின் நோயில் விழ தன்னை பார்க்க மனைவியும் பிள்ளைகளும் வரவில்லை என்று இன்னொரு திருமணம் முடிச்சு……………… சுருக்கமாக சொல்ல முயலும் போதே நீள்கின்ற சரிதம் அவருடையது. மாமா 2008 இன் பின் ஒவ்வொரு வருடமும் கனடா வருவார். இங்கு 3 பிள்ளைகளும் முதல் மனைவியும் இருந்தாலும் என்னுடன் மட்டும் 2 மாதம் தங்கி தன் பென்ஷன் வேலைகளை பார்த்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் சென்று விடுவார். சிறுவயதில் எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு நபராக இருந்து 2004 இன் பின் மனசுக்கு மிகவும் நெருங்கிய உறவாக ஆனவர். அடுத்த நாள் உதயமாகின்றது இரவு மீண்டும் கொழும்பு பயணம் என்பதால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு என் உறவுகளையும் முன்னர் இருந்த அக்கம் பக்கத்தினரையும் சந்தித்து கொள்கின்றேன். என்னுடன் எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் என் மச்சான் வருகின்றான். என் அம்மாவின் தம்பியின் இளைய மகன். வாழ்ந்தது முழுக்க கொழும்பில். நான் சந்திக்கும் எவரையும் அவன் முன்னர் கண்டதில்லை. ஆனாலும் என்னுடன் எல்லா இடத்துக்கும் வருகின்றான். மதியம் மாமா எம் வீட்டுக்கு ஒரு வீடு தள்ளி இருக்கும் வைரவர் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றார். மாமா கனடாவில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் வந்த பின் இக் கோயிலை மிகவும் பலரின் உதவியுடன் பெருப்பித்து இருந்தார். வெறும் கோவணம் மட்டும் கட்டி இருந்த ஞான வைரவர் இப்ப பட்டாடையுடனும் பெரும் ஆடம்பரத்துடனும் வீற்றிருக்கின்றார். கோவிலுக்குள் போகின்றேன். நான் தோழமையுடன் தோளில் கை போட்டு கதைச்சு சிரிச்ச வைரவரைக் காணவில்லை. பணத் திமிரும் செயற்கை உடையும் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கின்றார். சின்னத்துரை அங்கு வருகின்றார். பெரிய மேசன். அம்மா இவருக்கு ஒரு நாளும் நாம் வழக்கமாக விருந்தாளிகளுக்கு கொடுக்கும் கிண்ணத்தில் தேனீரோ அல்லது தண்ணீரோ கொடுப்பதில்லை. ஏனென்றால் சாதியில் குறைந்தவர் என்று சொல்லுவார். நான் இருந்த காலத்தில் கோவிலிற்கு வெளியில் தான் நிற்பார். இப்ப கோவிலின் உள்ளே வந்து சாதித் தடிப்பை தன் பிரதான குணாதிசயமாக கொண்ட மாமாவுடன் நேருக்கு நேராக நின்று கதைக்கின்றார். சந்தோசமாக இருக்கின்றது. மாற்றங்கள்……….! (கோவிலில் இருந்த பெரிய வண்ணாத்திப் பூச்சி) (இந்தப் பூவின் சரியான பெயர் என்ன? கோவிலின் வீதியில் இருந்தது. மிகவும் பரிச்சயமான பூ... ஆனால் பெயர் மறந்து விட்டது) மதியம் மாமி அருமையாக சமைச்சு இருந்தார். நேற்று விட்ட மிச்சத்தினை குடிக்கின்றேன். மாமா Prostate cancer இல் அவதியுற்று கொண்டு இருப்பவர். அடுத்த நாள் Chemotherapy இற்குரிய Injection அடிக்க வேண்டிய நாள். குடிக்க கூடாது. ஆனால் என்ன நினைச்சாரோ ஒரு கிளாஸ் எனக்கும் ஊத்து எனச் சொல்லி ஊற்றிக் குடிக்கின்றார். மிகவும் மனக் கட்டுப்பாடுடைய மாமா எனக்காக இறங்கி வருவதை காண சந்தோசமாக இருக்கு இரவு வருகின்றது. 7 மணி மாமாவின் வீட்டில் இருந்து வெளிக்கிட்டு ரவுனுக்கு வருகின்றோம். பேரூந்து காத்து நிற்கின்றது மாமாவின் கரங்களை பற்றி கை குலுக்கி, அணைத்து “மார்ச் மாசம் கனடாவில் சந்திப்பம்” என்று சொல்லி விடைபெறுகின்றேன். அப்ப தெரியவில்லை அந்த கைகுலுக்கல் தான் மாமாவினுடனான என் இறுதி கைகுலுக்கல் என்று. அந்த பிரியாவிடை மாமா எனக்கு சொல்லிய தன் இறுதி பிரியாவிடை என்றும் இரவு பேரூந்தில் ஏறி கொழும்பை அதிகாலை 3 மணிக்கு அடைகின்றேன். மீண்டும் சென்னை செல்ல 21 மணித்தியாலங்கள் இருந்தன. விரைவாக ஷொப்பிங் செய்து விட்டு மச்சானின் வீட்டுக்கு போய் உணவும் அருந்தி விட்டு குட்டித் தூக்கம் போட இரவு 12 ஆகியது. குட்டித்தூக்கத்தின் பின் எழுந்து Taxi யில் விமான நிலையத்தை அடைந்து விமானத்தில் ஏற காலை 5:30 ஆனது. விமானத்தில் ஏறி என் இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்த சில நிமிடங்களில் என்னருகில் வந்து “கோமத ஐய்யே ஆயித் சென்னை யனவத” என்று ஒரு குரல் விசாரிக்க நான் நிமிர்ந்து பார்க்க கொழும்பு வரும் போது வந்த அழகு மயில் நெருக்கமாக வந்து நின்று சுகம் விசாரிக்கின்றது. பெண் மயிலின் குரலில் ஆண் மயில் தோகை விரிச்சாட நினைக்கும் போது விமானம் மேலே எழும்பி பறக்கின்றது ஒரு மணி நேரத்தின் பின் சென்னை என்னை மீண்டும் வரவேற்கின்றது
 49. 5 likes
  அன்பின் தமிழ் சிறி அண்ணா, இம்மாதிரியான அரிதான புகைப்படங்களை தேடி இணைக்கும் உங்கள் முயற்சிக்கு, கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு, தமிழ் வம்சத்தின் ஒரே வெளிச்சம், தமிழினத்தின் மொத்த குறியீடு ... எம் தலைவர் அவர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது மனதில் அறியாமலேயே ஒரு பூரிப்பு, பெருமிதம் வந்து போகின்றது. அவர் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே வரம்.
 50. 5 likes
  31) Royal Challengers Bangalore vs Gujrat Lions Gujrat Lions வெற்றி Gujrat Lions வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள். கிருபன், nunavilan 31 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 21 2. Ahasthiyan 19 3. நந்தன் 18 4. suvy 18 5.வாத்தியார் 18 6. கிருபன் 17 7. தமிழினி 15 8. கறுப்பி 14 9. nunavilan 14 10. ஜீவன் சிவா 14 11. vasanth1 13 12. ஈழப்பிரியன் 12