Jump to content

Leaderboard

  1. சண்டமாருதன்

    சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      7

    • Posts

      2554


  2. போல்

    போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      6134


  3. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      1735


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      76760


Popular Content

Showing content with the highest reputation on 08/30/18 in all areas

  1. ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி ஓட்டுனர் , உடனே பிரேக்கை மிதித்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை 'கன்னா பின்னா'வென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல், ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர, தவறாக வண்டி ஒட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை. “ஏன் அவனை சும்மா விட்டீங்க..? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல…? அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிறுகிறான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி ஓட்டுனர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். “இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்..! பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும், அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும். அது போன்ற குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க, அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அவற்றை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அவற்றை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும்..! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய், நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்..! நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பை வண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்' என்பது தான். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது, ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது..! வாழ்க்கை என்பது, 10% நாம் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை பொறுத்தது மட்டுமில்லாமல், மீதி 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொறுத்தது. -'வாட்ஸ்அப்'பில் வந்தது
    1 point
  2. களத்திலே வரும் சீர்திருத்தங்கள், அறிவிப்புகள், புது மாற்றங்களை உள்வாங்குதல் எல்லாம் சரி.. வரவேற்கிறோம்..! ஆனால் சில தொடர்ந்து எழுதும் பதிவாளர்கள்/உறவுகள் சொல்லாமல் கொள்ளாமல், நைசாக கம்பி நீட்டிவிடுகிறார்களே..? அவர்களை வலைபோட்டு தேடிப்பிடிக்க, ஏதாவது "பொறிமுறை" வையுங்கப்பு..!
    1 point
  3. ஈழப்பிரியன், நான் சிரித்தற்கு காரணம்... ? ராஜ வன்னியன், எழுதிய தமிழில்... ஈழத்து பேச்சு மொழியும், தமிழகத்து பேச்சு மொழியும் கலந்து அடித்து விட்டதை கவனித்தீர்களா. ? அதை.... உன்னிப்பாக வாசித்தால், உங்களுக்கும் சிரிப்பு வரும். ? (அட நீங்க வேற.... /// நல்லா வடிவா பாருங்கோ..!! ///கண்டியளோ..!! ) இது, நம்ம ஊர் தமிழ் ஐயா...?
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.