• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Content count

   24,131


 2. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content count

   72,050


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content count

   40,448


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content count

   13,643Popular Content

Showing most liked content on 12/06/2017 in all areas

 1. 5 points
  குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.
 2. 3 points
  கொள்கைகளுக்காக உயிரைக் கொடுத்த பல்லாயிரக்கணக்கானவர் வாழ்ந்த மண்ணில் வெறும் ஆசன பங்கீட்டுக்காக பிரிந்து அடிபடுகின்றனர். தமிழரசுக் கட்சியும் அதன் தானை தலைவரும் இந்த விடயத்தில் கூட ஒற்றுமையை முக்கிய விடயமாக கருதாமல் தமக்கே அதிகம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதே காரணத்திற்கா பிற கட்சிகள் பிரிந்து போவதும் கேவலமான அரசியலையே காட்டுகின்றது. தமிழக அரசியல் கட்சிகளை கேவலமாக விமர்சிக்கும் நாம் அதை விட பலமடங்கு கேவலமான அரசியல்வாதிகளை கொண்டு இருக்கின்றோம். தமிழ் மக்கள் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு பேராதரவு கொடுக்கும் நிலை விரைவில்வரும்
 3. 2 points
  'மல்லூஸ்'களிடம் மிக மிக அவதானமாக பழகவேண்டும்.. உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் அசரும் நேரம் பார்த்து காலைவாரி அந்த இடத்தில் இன்னொரு மல்லுவை கொண்டுவர தயாராக அவர்களின் பயோடேட்டா இருக்கும்..ஒவ்வொரு மல்லுவின் மேசையினுள்ளே அவர்களின் உறவினர், நண்பரகளின் பயோடேட்டா நிறையவே தயாராக வைத்திருப்பார்கள்.. அவர்களின் நடுவே வேலை செய்வதென்றால் உங்களின் தொழிற்திறன், மற்றும் தகுதி அவர்களை விட நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும்.. அவர்களின் 'ஆயில்' அப்படி..! மொத்தத்தில் நாங்கள் அவர்களை அழைப்பது "காக்கா கூட்டம்". அல்லது சுருக்கமாக 'யு.கே' (UK - United Kerala) திருமண சந்தையில் தமிழ்நாட்டில் மத்தியகிழக்கு நாடுகளில் பையன் வேலை செய்கிறார் என்றால் யாரும் பெண் கொடுக்க தயங்குவார்கள்:.. ஆனால் கேரளாவில் நிலைமை தலைகீழ்.. அவர்களுக்கு பையன் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கிரார் என்றால் அவருக்கு கிராக்கி மிக அதிகம்.
 4. 2 points
  கிறிஸ்தவம் கொஞ்சம் நாகரீகமான மதம் என நினைத்தேன். புதைகுழியில் கூட தராதரம் பார்க்கின்றார்கள்.
 5. 2 points
 6. 2 points
  இந்த்தியனை விடுங்கோ புலம்ம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழ தமிழருக்கு ஏன் இதை செய்ய முடியாது? புலிகள் போருக்கு காசு கேட்ட போது அள்ளி கொடுதவர்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பின்னிப்பது ஏன்???? மாவீரர் தினம் கொண்டாடும் நாங்கள் உயிருடன் இருக்கும் மாவீரர்களை மறப்பது ஏன்??? கோவில்களில் புரளும் பணத்துக்கு என்ன நடக்குது ???? தவறை எம்மீது வைத்து கொண்டு ஏன் இந்தியனை பிழை சொல்ல வேண்டும்??
 7. 2 points
  பிறக்கும்போதும் இறக்கும்போதும்தான் மனிதன் மனிதனாக இருக்கின்றான் ....... இதன் இடையே வரும் சாதி மதத்தை ஏன் தூக்கி கொண்டாடுகின்றான் இந்த மனிதன் .........? பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டால் அவன் கிறிஸ்தவன் சுண்ணத்து செய்தால் அதன் பின் அவன் இஸ்லாமியன் என்று ஆகும் நிலையில் இதுவெல்லாம் தேவையா ?
 8. 1 point
  கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார். விவசாயி தூவிய விதைகள் “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார். விதை, நிலம், விளைச்சல் “விதைக்கிறவர் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள். பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் தன் மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.” நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? “அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும் சில சமயம் 60 மடங்கும் சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார். இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார். கதைகளே இயேசுவின் ஊடகம் ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார். சீடர்கள் அவரிடம் வந்து, “ ஏன் மக்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான். ஆனால், இல்லாதவர்களிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். இந்த மக்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் மனதால் உணராமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது. இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார். இயேசு, இந்த உவமைக் கதையின் இறுதியில் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். “ நான் கூறிய உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்” என்பதே இதன் பொருள். தொடரும்.. http://tamil.thehindu.com/society/spirituality/article19796209.ece
 9. 1 point
  கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு "‍ஹலோ" "இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ" "சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர் ""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்" "எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்" "சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ" "ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்." "நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள். கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து. நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன் இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க கொத்து ரொட்டி கடைக்கு போனேன். அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு நின்றேன். புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று. "வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் . "அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர். "‍ஹலோ" "இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே " "இல்லை ஏன்" "நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ டைகர் பிரான்ட் அரிசியும் வாங்கி கொண்டு வாங்கோ" " மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது" "ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்" " என்ன" " தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று" "சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி" மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன். இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம். மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும். விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது. வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில் சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன். "‍ஹலோ மச்சான் என்ன இந்த பக்கம்" " தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து கொண்டு போவம் என்று வந்தனான்" " என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு" "பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு" " பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல."
 10. 1 point
  தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இருக்கும் என்பதால் இந்தியா 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்து வீசி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 17 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:- 1. விராட் கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே (துணை கேப்டன்), 7. ரோகித் சர்மா, 8. சகா, 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11 பார்தீவ் பட்டேல், 12. ஹர்திக் பாண்டியா, 13. புவனேஸ்வர் குமார், 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா. http://www.maalaimalar.com/News/Sports/2017/12/04211910/1132647/India-squad-for-South-Africa-Tests--Bumrah-debut-6.vpf
 11. 1 point
  உவங்களுக்கு ஏற்கனவே செலுட்டு தலைக்கனம் சொல்லி வேலையில்லை. இப்ப அதுவும் பரிஸ்ஜெமனை வெண்டவுடனை கைகால் தெரியாமல் துள்ளிக்குதிக்கிறாங்கள்...
 12. 1 point
  அப்ப உங்களோடை நிக்கிற முசுலீமுகள்.... புதிய அரசியலமைப்பை ஏற்க மாட்டினம் என்று சொல்லுறது....மற்றப்பக்கத்தாலை காணி பிடிக்கிறது.....
 13. 1 point
  மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர். அந்த வகையில், மோசமாக செயலிழந்துக் காணப்படுகின்ற குறித்த துறைமுகத்தை, மீளப் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில், மறுசீரமைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்ேக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மயிலிட்டி-மீன்பிடித்-துறைமுகத்தை-மீண்டும்-செயற்படுத்த-நடவடிக்கை/71-208505
 14. 1 point
  கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்று இதைத்தான் சொல்லுறது.....!
 15. 1 point
  வெளியில் நாகரீகமாக நம்ம அய்யர் வாளுகள் போல் நடித்து கொண்டு உள்ளுக்குள் பல மிருகம்கள் தூங்கும் இடம் சிலுவை யுத்தம்கள் மனித குலம் மிருகமாக மாறிய நேரம்கள் .
 16. 1 point
  இதை செய்திருந்தால் இன்னும் மக்கள் வாழ்க்கையாவது சிறப்பாக இருந்திருக்கும் இவர்களை நம்பி இருந்தால் இன்னும் பல் ஆண்டுகள் வெறுமையாகவே கழியும் கழிந்து போகும் எல்லோரும் குற்றம் சாட்டுவது கட்சியில் உள்ள மூன்று பேரையும் தான் கிழக்கில் இவர்களை ஓரளவு ஒதுக்கியாச்சு எனலாம் நிலமை கருதி
 17. 1 point
  ஒரு காலத்தில் இவர்களையும், இவர்கள் கட்சிகளையும் ஒன்றுக்குமே சேர்க்ககூடாது என்று கொந்தளித்த அதே இனம்தான், இன்று இவர்கள் பிரிகிறார்களே என்று கவலைப்படவும் செய்கிறது! காலம்தான் எத்தனை மாற்றங்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மீது திணிக்கிறது!
 18. 1 point
  மாதக்கணக்காய் வைச்சு தின்னுற எங்கடையளுக்கு ஏழுநாள் பழசெல்லாம் ஜுசுப்பி...
 19. 1 point
  வீரயுக நாயகன் வேள்பாரி - 59 , பறம்பின் தலைவனுக்கு ஆதினியை மணமுடித்து எவ்வியூருக்கு அழைத்துவந்தனர். கொண்டாட்டங்களும் கூத்துகளும்தாம் எத்தனை வகை! விருந்துகளும் விளையாட்டுகளும் முடிந்தபாடில்லை. பொதினிவாழ் வேளிர்கள், இயற்கையின் அதிநுட்பங்கள் பலவற்றைக் கண்டறிந்தவர்கள்; தாதுக்களையும் உலோகங்களையும் நுட்பமாக அவதானித்த மாமனிதர்கள். அந்தக் குலமகள், பறம்புத் தலைவனை மணந்து எவ்வியூர் புகுந்தாள். மணமுடித்துச் செல்லும் குலமகளோடு பதினெட்டுக் குடிகளை அனுப்பிவைப்பது பொதினி வேளிர்களின் குலமரபு. பச்சிலை, தாதுக்கள், உலோகங்கள், உடற்கூறுகள் எனப் பலவற்றிலும் தேர்ந்த பதினெட்டு மருத்துவக்குடிகளை உடன் அனுப்பிவைத்தான் மேழகன். மதிப்பிட முடியாத மனிதச் செல்வங்களோடு ஆதினி எவ்வியூருக்குள் நுழைந்தாள். பொதினி, மலையடிவாரத்து ஊர். எவ்வியூர் பச்சைமலையின் உச்சியில் நிலைகொண்டுள்ள ஊர். மேகத்துக்குள் வாழ்வதுபோலவே எவ்வியூரின் பகற்பொழுது இருக்கும். நழுவி நகரும் மேகங்களுக்குள் கூந்தல் பறக்க ஓடவேண்டும் என்று ஆசை தோன்றியது ஆதினிக்கு. தான் ஒன்றும் குழந்தை அல்லள் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள். மரங்களின் எல்லா இலைகளின் மீதும் நீர் தேங்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ``ஆண்டின் பெரும்பான்மையான மாதங்களில் உலராத ஈரத்தோடுதான் இலைகள் இருக்கும்” என்றான் பாரி. இயற்கையின் குளுமையைவிட ஆதினியின் ஆழ்மனம் அதிகம் குளிர்ந்திருந்தது. மேல்மாடத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாடத்துக்குள் மலர்ப்படுக்கையை ஆயத்தம்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. எவ்வியூர்ப் பெண்கள் பொதினிக்குச் சென்ற அன்று மாலைதான் மணவிழா நடந்தது. அன்று இரவு பாரிக்கும் ஆதினிக்கும் தலைநாள் இரவு. பொதினியின் குலவழக்கப்படி குலசடங்குகளைச் செய்தனர். இரவு மலர்ப்படுக்கை ஆயத்தமானது. படுக்கையின் நடுவில் ஆவாரம்பூவின் இதழ்களைப் பரப்பியிருந்தனர். அது மஞ்சள் நிறத்திலானது. அதை அடுத்து அத்திப்பூவின் நீல நிறத்தாலான வளைந்த கோடுகளை உருவாக்கியிருந்தனர். மூன்று கோடுகளைச் சுற்றி வெண்டாழையின் வெண்மை பரவிக்கிடந்தது. அதன் விளிம்புப் பகுதியில் செந்தாழையின் சிவப்பு அணிவகுத்திருந்தது. அது ஒரு மாயப்படுக்கையைப்போல வண்ணத்திலும் மணத்திலும் பெருமயக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. அது பொதினியின் பூப்படுக்கை என்றால், எவ்வியூரின் மலர்ப்படுக்கை வேறுவிதமாக இருந்தது. ஐவண்ணக் குறிஞ்சியினால் படுக்கையை ஆயத்தம் செய்தனர். பல்லாண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, பச்சைமலையின் எத்திசையில் எல்லாம் பூத்துக்கிடக்கிறது என்பதை அறிந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்தனர். பொன்வண்ணக் குறிஞ்சியின் மஞ்சள் இதழ்களைப் படுக்கையின் நடுவில் விரித்தனர். பச்சைமலையின் வடகோடியில் மட்டுமே பூத்துள்ள மழைவண்ணக் குறிஞ்சியின் நீலநிற இதழ்கொண்டு நடுவிலிருந்த மஞ்சளைச் சுற்றி அழகிய வட்டம் அமைத்தனர். பவளக்குறிஞ்சியின் செம்மை நிற இதழ்களையும், பெருங்குறிஞ்சியின் வெண்மை நிற இதழ்களையும் மாற்றி மாற்றி அடுக்கினர். ஒரு சுடர் படபடத்து எரிவதைப்போன்ற ஒரு தோற்றம் கொள்ளச்செய்தது. வாடாக்குறிஞ்சியின் செந்நீல இதழ்களை விளிம்பெங்கும் வரிசைப்படுத்தினர். குறிஞ்சி காமத்துக்கான பூ. அதன் மணமும் வண்ணமும் கணநேரத்தில் மனித ஆழ்மனத்தைத் தன்னகப்படுத்திக்கொள்ளும். குறிஞ்சி பூக்கத் தொடங்கினால் காடு முழுவதும் பூக்கும். காமத்தின் தன்மையும் அதுதான். கால்விரல் நுனியிலிருந்து நெற்றியில் சுருண்டுகிடக்கும் கூந்தல் வரை எல்லாவற்றிலும் காமத்தீ இணையாகப் பற்றும். பற்றியெரியும்போது மிச்சமின்றி எரியும் தீ அது. மொத்தக் காடும் எரிவதைப்போலத்தான் இருக்கும் குறிஞ்சி பூக்கும் காலம். அதுதான் காமத்தின் காலம். காத்திருந்து எரிந்து காலகாலத்துக்கு மணக்கும். படுக்கையின் தன்மைக்கு ஏற்ப அதுவே மணத்தை அறையெங்கும் நிரப்பியிருக்கும். மாலை நேரத்துக் கதிரவன் ஒளி மங்க, சிறிது நேரமே இருந்தது. சட்டென ஒரு சிந்தனை தோன்றியது பாரிக்கு. ஆதினியை அழைத்துக்கொண்டு மாடத்தை விட்டுக் கீழிறங்கி வந்தான். மாடத்தின் வெளிப்புறத்தில் புதிதாகச் செய்யப்பட்ட தேர் நின்றிருந்தது. குதிரைகளை அதில் பூட்டச் சொன்னான். வீரர்கள் குதிரைகளைப் பூட்டினர். ஆதினியைத் தேரில் அமரவைத்து பாரி தேரை ஓட்டினான். வீரர்களும் மற்றவர்களும் பார்த்திருக்க, நாகப்பச்சை வேலியைக் கடந்து தேர் வெளியேறிப் போனது. எங்கே போகிறான் என யாருக்கும் தெரியாது. `ஆதினியைத் தேரிலே உட்காரவைத்து, சுற்றிக்காண்பித்து வருவான்’ என நினைத்தனர். ஆதினி இதுவரை தேர்ப்பயணம் செய்ததில்லை. மாலை நேரத்துச் சுருங்கும் ஒலியும், சீறிப்பாயும் தேரின் ஓசையும், மலை மடிப்புகளின் இளம்பச்சையும் காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது. அவளது முகம், இயற்கையின் ஆதிச்சுவையை உணர்ந்துகொண்டிருந்தது. முறையான பாதைகள் உருவாக்கப்படாததால் வேகத்தைக் குறைத்து, தேரை மெதுவாக ஓட்டினான். தேர் சென்றுகொண்டே இருந்தது. கதிரவன், ஒளி சிறுத்து அணைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. மலை உச்சியில் ஒளி அகலுதல், விளக்கை ஊதி அணைப்பதைப்போலச் சட்டென நிகழ்ந்துவிடும். ஆனாலும் தேரைத் திருப்பாமல் முன்னோக்கி ஓட்டிச்சென்றான் பாரி. ஆதினி எதுவும் கேட்கவில்லை. மலைமுகட்டோரம் போய் தேர் நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய பாரி, ஆதினி இறங்க உதவி செய்தான். சற்றே சிந்தித்தபடி நின்றவன், தேரிலிருந்து குதிரைகளைக் கழற்றி விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ஆதினியால் கணிக்க முடியவில்லை. ``உன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வா” எனச் சொல்லி, மலைமுகடு நோக்கி நடந்தான். ஒளி முற்றிலும் அகன்று இருள் கவிந்துவிட்டது. அவனைப் பின்பற்றி நடந்தாள் ஆதினி. ``குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களே, காட்டுக்குள் ஓடிவிடாதா?” ``போகாது. இந்த மேட்டில் மட்டுமே முயற்புல் இருக்கிறது. அதற்கு மிகப் பிடித்த உணவு அதுதான். இந்த இடம் விட்டு எளிதில் அகலாது.” ``அப்படியா!” எனக் கேட்டபடி நடந்தாள். இருள் முழுமையாக நிலைகொண்டுவிட்டது. முகட்டை அடைந்ததும் மலையின் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினான். ``கால்களை கவனமாக எடுத்து வை” என்றான். நீருக்குள் மூழ்கும்போது உள்ளே போகப் போக அடர்ந்த ஓசை பெருகிவந்து காதடைக்குமே, அப்படித்தான் காட்டின் ஓசையும். நேரம் ஆக ஆக இருள் அடரோசையாக மாறிக் கொண்டிருந்தது. சிறிதும் பெரிதுமான பாறைகளுக்கு நடுவில் ஆதினியைக் கவனமாக அழைத்துக்கொண்டு கீழிறங்கினான் பாரி. இருளுக்குள் மீன்களைப்போல் மிதந்துகொண்டிருக்கும் செடிகொடிகளின் இலைகளைக் கையால் தட்டியபடி நடந்த ஆதினி கேட்டாள், ``எங்கே போகிறோம்?” குறுக்கிட்டுக்கிடந்த மரக்கட்டையை அகற்றி ஆதினி நடப்பதற்கு வழி அமைத்தபடி பாரி சொன்னான், ``நீ பொதினி மலையின் பேரதிசயத்தை எனக்குக் காண்பித்தாய் அல்லவா, அதேபோல பறம்பின் அதிசயத்தை உனக்குக் காட்ட அழைத்துச் செல்கிறேன்.” ``அன்று முழுநிலவு நாள். சிறகுநாவல்பழங்கள் மிதந்துவந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இன்று நிலவற்ற காரிருள் நாள். இந்தக் கும்மிருட்டில் எதைப் பார்க்க முடியும்?” ``பொதினியின் அதிசயத்தைப் பார்க்க நிலவின் ஒளி தேவைப்பட்டது. ஆனால், பறம்பின் அதிசயத்தைத் தெளிவாகப் பார்க்க ஒளியற்ற காரிருள்தான் தேவை.” ஆதினிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேரப் பெருகின. `ஒளியற்ற இருளில்தான் தெளிவாகப் பார்க்க முடியும் என்றால், அது என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்தபடியே நடந்தாள். நின்று பொறுமையாக வழிக்குறிப்புகளைக் கவனித்தபடி முன்நடந்தான் பாரி. இருளில் இறக்கத்தில் கால் எடுத்து வைப்பதில் கூடுதல் விழிப்பு உணர்வு தேவை. பாரி முன் நடப்பதால் பதற்றம் இல்லாமல் நடந்தாள் ஆதினி. நேரம் கூடியது. இருளின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டிருந்தது. முன் நடக்கும் பாரியின் கை பற்றிக் கீழிறங்குவதும், தோள் பிடித்து நடப்பதுமாக ஆதினி வேறொரு விளையாட்டை விளையாடியபடி வந்துகொண்டிருந்தாள். ஆனாலும், என்னதான் காண்பிக்கப்போகிறான் என்பதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ``நீங்கள் காண்பிக்கப்போகும் பறம்பின் அதிசயம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?” ``கண் முன்னால் அதைக் காண்பித்துச் சொல்கிறேன். அப்போது அடையும் அனுபவத்தை ஏன் இழக்க வேண்டும்?” பற்றிய தோளை ஆதினியின் கை இறுகப்பிடித்தது. கால்கள் தடுமாறுகின்றனவோ எனப் பாரி நின்றான். ஆதினி சொன்னாள், ``பறம்பின் பேரதிசயத்தோடுதான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த உணர்வு மற்ற எல்லாவற்றையும்விட மிக உயர்ந்தது. நான் புதிதாக எதையும் அடையப்போவதுமில்லை, இழக்கப்போவதுமில்லை. நீங்கள் தயங்காமல் சொல்லலாம்.” அவளின் சொற்களுக்குள் இருந்த காதல், பாரியைக் கிறங்கச்செய்தது. பிடித்து இறங்க முடியாத பள்ளம் இருந்தது. மிகப் பாதுகாப்போடு அவளைப் பிடித்து இறக்கினான். தோள் தொடுவதும் கை தொடுவதுமாகத்தான் இவ்வளவு நேரப் பயணம் இருந்தது. ஆனால், இந்தப் பள்ளத்தைக் கடந்தது அப்படியல்ல. கடக்க முடியாத பள்ளமாகப் பாரிக்குத் தோன்றியது. ஆதினியின் உணர்வோ அதையும் கடந்ததாக இருந்தது. சற்றே கால் சரிந்து பாரியின் மேல் விழுந்தவளை, தூக்கி விலக்கி நிறுத்த முடியவில்லை பாரியால். அந்த இடைவெளி உருவானால்தான் நடக்க முடியும் எனத் தெரிந்தும் அதை உருவாக்குவது எளிதாக இல்லை. செங்குத்தாகச் சரிந்துகிடக்கும் மலைச்சரிவில், கும்மிருட்டில் கண்கட்டி விளையாடுவதுபோல காதல் விளையாடியது. பாரி சற்றே சிந்தித்து `இந்த விளையாட்டுக்குள் மனம் சிக்கிவிடக் கூடாது, கவனமாகக் காலடியெடுத்து வைக்கவேண்டும்’ என நினைத்து நடந்தான். ஆதினிக்கு அதுவெல்லாம் இல்லை. பாரி மட்டுமே அவளின் பார்வையில் இருந்தான். முன் நடந்த பாரி சொன்னான், ``நான் காண்பிக்கப்போவதை, இதற்கு முன் மிகச் சில மனிதர்களே பார்த்திருப்பார்கள்.” ``அப்படியா!” என்றாள் ஆதினி. ``ஆம், அதன் பெயர் இராவெரி மரம்.” ஆதினிக்கு சட்டெனப் புரியவில்லை. ``என்ன மரம்?” ``இராவெரி மரம். அதன் இலைகள் பகலிலே வாங்கிய ஒளியை இரவிலே உமிழும். பார்ப்பதற்கு எண்ணிலடங்காத சுடர்கள் எரியும் விளக்கைப்போல் இருக்கும்.’’ கிறங்கி நின்றாள் ஆதினி. ``என்ன சொல்கிறீர்கள்? அப்படியொரு மரம் இருக்கிறதா?” ``ஆம். மழைநீரை உள்வாங்கிய மண், ஊற்றாகக் கசியவிடுகிறதல்லவா. அதேபோல பகல் முழுவதும் ஒளியை உள்வாங்கி இரவு முழுவதும் வெளிச்சத்தைக் கசியவிடும். பார்ப்பதற்கு மரம் பற்றி எரிவதுபோல் இருக்கும்.” சொல் கேட்டு நின்ற ஆதினியின் தோள் தொட்டான் பாரி. கனவிலிருந்து மீண்டவளைப்போல மீண்டாள். ``இன்னும் எவ்வளவு தொலைவில் அந்த மரத்தைப் பார்க்கலாம்?” ``சிறிது தொலைவு இறங்கினால் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் கிடக்கும். அங்கிருந்து பார்த்தால், எதிரில் இருக்கும் மலைச்சரிவில் இராவெரி மரம் தெரியும்.” ஆதினியால் ஆசையை அடக்க முடியவில்லை. ஒளிரும் மரத்தைப் பார்க்க வாய்க்கும் அந்தக் கணத்தை அடைய மனம் தவித்தது. ``இப்போதுதான் இன்னும் கவனத்தோடு நடக்கவேண்டிய இடம். எனவே பார்த்து வா” என்று சொல்லியபடியே நடந்தான் பாரி. ``நீங்கள் எப்போது அந்த மரத்தைப் பார்த்தீர்கள்?” ``காடறியப் பயணப்படும்போது. தேக்கன் காண்பித்தார்.” ``பல ஆண்டுகள் ஆகியிருக்குமே. அதன் பிறகு பார்க்கவில்லையா?” ``இல்லை. பகலில் அந்த மரத்தை நம்மால் கண்டறிய முடியாது. அந்த மரம் பகலில் எப்படி இருக்கும் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. இரவு நேரத்தில் எதிர்க் குன்றில் நின்று பார்த்தால்தான் கண்டறிய முடியும். அதுவும் நிலவற்ற இதுபோன்ற காரிருள் நாளின் நள்ளிரவில்தான் நன்றாகக் காண முடியும். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது” என்று சொல்லியபடி அழைத்துச்சென்றான். சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் திருகிக்கிடக்கும் இடம் வந்தது. அவற்றின் ஓரத்தில் நின்றபடி பார்த்தான், எதிரில் எதுவும் தெரியவில்லை. கும்மிருட்டாக இருந்தது. பாறையின் இன்னொரு முனையில் போய்ப் பார்த்தான். அப்போதும் எதிரில் மலைத்தொடர் தெரியவில்லை. தான் வந்தது சரியான பாதைதானா எனச் சிந்தித்தான். அந்த மலைச்சரிவில் இந்த இடம் மட்டும்தான் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டுக்கிடக்கும் ஒரே இடம். எனவே, தான் வந்துள்ளது சரியான இடம்தான் என்பதை முடிவுசெய்தபோதுதான் ஓர் உண்மை பிடிபட்டது. ஆதினியிடம் சொன்னான், ``நாம் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளோம். ஆனால், மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கும் இடையில் முழுமையாக இறங்கி நிற்கின்றன. அதனால் எதிரில் இருக்கும் மலைத்தொடர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.” ``ஆதினியின் முகம் சற்றே கவலையடைந்தது. அப்படியென்றால், நம்மால் இன்று பார்க்க முடியாதா?” அவள் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் பாரிக்குத் தோன்றியது. `இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்துவிடும். நாம் இருப்பது மிகவும் ஆபத்தான இடம். பெருமழை என்றால் சரிவுப்பாறையில் மழைநீர் எவற்றையெல்லாம் இழுத்துக்கொண்டுவரும் எனத் தெரியாது. நாம் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும்’ என்று. தொலைவில் இடியோசை கேட்டது. பாறையை இழுத்து அடிக்கையில் தோலின்மீது இருக்கும் தூசி அதிர்வதைப்போல மாமலை அதிர்ந்தது. பெருமின்னல் ஒன்று வெட்டி இறங்கியது. மொத்த மலைத்தொடரின் மீதும் ஒளியின் கண்திறந்து மூடியது. சரிவுப்பாறையைக் கடந்து இடப்புறம் போவதுதான் பாதுகாப்பு எனக் கருதிய பாரி, ஆதினியின் கையைப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடந்தான். இவ்வளவு வேகமாக இருளுக்குள் நடப்பது சரியில்லை எனத் தோன்றியது. ஆனாலும் வேறு வழியின்றி நடந்தான். அடுத்தடுத்து மின்னல்கள் இறங்கத் தொடங்கின. மின்னல் ஒளியால் தென்பட்ட பாதையை வைத்து விரைந்து அழைத்துச்சென்றான். அவன் எண்ணிவந்ததுபோலவே பிளவுண்ட பாறைகளுக்கு நடுவில் பெருங்குகை ஒன்று இருந்தது. விரைந்து வந்து குகைக்குள் நுழைந்தனர். கொட்டும் மழையின் கொட்டம் தொடங்கியது. எங்கும் மழையின் பேரோசை, இடியால் நடுங்கியது காடு. ``உரிய நேரத்தில் குகைக்குள் அண்டியதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நாம் இருப்பது மலையின் சரிவான பகுதி. மேலேறவும் முடியாது; கீழிறங்கவும் முடியாது. இந்தப் பகுதியில் பாதுகாப்பாக அண்டுவதற்கு இந்த ஒற்றைக் குகை மட்டுமே உண்டு” என்று பாரி சொல்லிக்கொண்டிருந்தான். காரிருளும் அடர்மழையும் சற்றே அச்சத்தை வரவைப்பனவாக இருந்தன. மின்னல்கள் இடைவெளியின்றி இறங்கிக்கொண்டிருந்தன. ஆனாலும் மின்னல் ஒளியில் குகையின் உட்புறத்தைப் பார்க்க முடியவில்லை. `எவ்வளவு உள்வாங்கிய குகை இது! இதற்குள் விலங்குகள் எதுவும் பதுங்கியிருக்குமோ?’ என்ற எண்ணங்கள் தோன்றியபடி இருக்க, ஆதினி அமைதியானாள். இடுப்பில் இருக்கும் சிறு வாள் தவிர, பாரியிடம் வேறு ஆயுதங்கள் இல்லை என்பதையும் அவள் கவனித்தபடி இருந்தாள். மழையின் பேரோசை அடங்கும் வரை ஆதினியின் அமைதி நீடிக்கும் என்பதை உணர்ந்தான் பாரி. குகையின் நடுவில் இருந்த சிறுபாறையின் மீது ஆதினியைத் தோள் சாய்த்து உட்கார்ந்திருந்தான். இராவெரி மரத்தை ஆதினிக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் மேகத்தின் தன்மையைக் கவனிக்காமல் இருந்துவிட்டோம் எனத் தோன்றியது. கவனித்திருந்தாலும் வராமல் இருந்திருப்போமா என்பது தெரியாது. காதல், இடிமின்னலுக்கு விலகி நடக்கத் தெரியாத உயிரினம் என்று மனதில் நினைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஒளியை உருவாக்க எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்துவிட்டோமே என்பதுதான் பாரிக்குக் குறையாகப் பட்டது. நீண்டநேரம் கழித்து மழை நின்றது. அதன் பிறகுதான் நீரின் ஓசை மேலேறிவந்தது. காற்றெங்கும் ஈரம் மிதந்தபடி இருந்தது. குகையின் உள்ளொடுங்கித்தான் உட்கார்ந்திருந்தனர். ஆனாலும் நீர்த்தொட்டிக்குள் இருப்பதுபோலத்தான் இருந்தது. குளிர் நடுக்கியது. முகம் பார்க்க முடியாத கும்மிருட்டு. மழை பெய்யும் வரை விடாது வெட்டிய மின்னல் ஒளியில் அவ்வப்போது குகைக்குள் வெளிச்சம் தென்பட்டது. மழை நின்ற பிறகு, இருளின் அடர்த்தி மிக அதிகமானது. பாரியின் இடதுகையை இறுகப் பிடித்தபடி சாய்ந்திருந்தாள் ஆதினி. பொழுதாகிக்கொண்டிருந்தது. `இந்நேரம் நள்ளிரவு கடந்திருக்கும்!’ என்று நினைத்த பாரிக்கு, முதன்முறையாக ஐயம் வந்தது. `பொழுது நள்ளிரவைக் கடந்திருக்குமா... இல்லையா... ஏன் குழப்பம்? ஆதினியின் பாதுகாப்புமீதே கவனம் குவித்திருந்த தால் பொழுதின் ஓட்டத்தைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. எப்படியோ, விடிந்த பிறகுதான் குகை விட்டு அகல முடியும். ஆதினியை இங்கேயே படுக்கச் சொல்லலாம். ஆனால், அவள் படுக்க மாட்டாள்’ என்று எண்ணியபடியே இருந்தான். கும்மிருட்டின் அச்சம் எளிதில் மனம் விட்டொழியாது. அதுவும் உள்காட்டின் அடர்குகைக்குள். ஆதினிக்கு அவ்வப்போது எழும் ஐயமே, தான் கண்ணைத் திறந்திருக்கிறோமா... மூடியிருக்கிறோமா என்பதுதான். இரண்டுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாத நிலையில் பாரியின் கையை இறுகப்பற்றுவதன்றி வேறு எதையும் கவனிக்க முடியவில்லை. `எந்தச் சொல்கொண்டு இந்த அமைதியைக் கலைப்பது?’ எனப் பாரி சிந்தித்துக்கொண்டிருக்கையில், குகையின் உள்ளடுக்கிலிருந்து சிற்றொளி வெளிப்பட்டது. அதை உணர்ந்த கணம், சட்டென குகையின் உட்பகுதியை நோக்கித் திரும்பினான் பாரி. தோளிலே சாய்ந்திருந்த ஆதினி திடுக்கிட்டு நடுங்கினாள். `உள்ளே இருப்பது விலங்கா... எந்த வகையான விலங்கு?’ எதையும் கணிக்க முடியவில்லை. `சட்டென குகையை விட்டு வெளியே போய் நின்று அதை எதிர்கொள்வது பாதுகாப்பானதா? உள்ளேயே எதிர்கொள்வது பாதுகாப்பானதா?’ பாரியால் முடிவெடுக்க முடியவில்லை. ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருப்பதுபோல் தெரிந்தது. ஒளியின் தன்மை எதையும் கணிக்க முடியாததாக இருந்தது. `பரவும் ஒளிக்குப் பின்னால் இருப்பது பாறையா... இருளா? அல்லது மிருகத்தின் உடலா?’ எதுவும் புலப்படவில்லை. இவ்வளவு குழப்பங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்டதில்லை. இயற்கையின் கணிக்க முடியாத கூர்முனையில் முன்னால் நின்றுகொண்டிருந்தான் பாரி. காடு அறியும் காலத்தில்கூட இவ்வளவு பதற்றமான கணத்தைச் சந்தித்ததில்லை. இப்போது ஏற்படும் பதற்றத்துக்குக் காரணம், ஆதினி; எது நடந்தாலும் அவளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. மஞ்சள் கலந்த வெண்ணொளி பாறை இடுக்கின் ஓரத்தில் நீரோடுவதுபோல் கசிந்து ஓடியது. பாரியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. `இது என்ன உயிரினமா... தாதுக்களின் கசிவா? அல்லது ஏதாவது ஆபத்தின் அடையாளமா?’ ஒன்றும் புரியவில்லை. சட்டென ஆதினியை இழுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், மனம் அதைச் செய்ய மறுத்தது. ஒளியின் நீளம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதன் நீளம் அதிகமாக அதிகமாக குகை முழுவதும் செவ்வொளி பரவியது. இது என்ன எனப் புரியவேயில்லை. துணிந்து அருகில் போக முடிவெடுத்தான் பாரி. ஆதினியின் இறுகிய பிடியைத் தளர்த்த முயற்சிசெய்யும்போது பரவும் நீளொளியின் முனைப்பகுதி குச்சிபோல மேலெழுந்தது. ஒருகணம் குப்பென வியர்த்தது பாரிக்கு. அறிவு, ஐயத்தின் புள்ளியைக் கண்டறிந்தது. அந்த ஐயத்தை நோக்கியே சிந்திக்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாரி அது என்ன என்று கணிக்கத் தொடங்கினான். சற்று முன்னால் நகர்ந்து பார்ப்போம் என்று எண்ணி, அதற்கு இடப்புறமாக மெள்ள நகர்ந்து பார்த்தான். அவன் கணித்தது சரியானது என்று உறுதிப்படுத்திய கணம், காடு அதிர்வதைப்போல கத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஆதினி அச்சமடைவாள். அதுவும் இடம் விட்டு விலகி பொந்துக்குள் ஓடிவிடும் என்பதால் மகிழ்வை அடக்க முடியாமல் அடக்கினான். அவ்வளவு நேரமும் உறையிலிருந்த ஆயுதத்தைப் பிடித்திருந்த வலக்கையை எடுத்து இப்போது ஆதினியை இறுக அணைத்தான். அவளுக்குக் காரணம் புரியவில்லை. கட்டற்ற மகிழ்வை கசியும் காதல்மொழியில் சொன்னான், ``ஆதினி, நீ பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புவியின் பேரதிசயம்.” அவளுக்குப் புரியவில்லை. ``இராவெரி மரத்தைப் பார்த்த பறம்பு மக்கள் பலர் உண்டு. ஆனால், பல தலைமுறைகளாக மனிதர்கள் பார்த்திராத ஒன்றை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” அச்சம் நீங்காத குரலில் பாரியின் கைகளை இழுத்து அணைத்தபடி, ``என்ன அது சொல்” என்றாள். ``இதுதான் ஒளி உமிழும் வெண்சாரை. நாகர்குடியின் குலதெய்வம். இதைப் பார்த்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்று நாகர்கள் நம்புகிறார்கள்.” பாரியின் சொல், ஒளியில் மிதந்தபடி இருந்தது. நேரம் ஆக ஆக அந்தக் குகை மிளிரும் வெண்மஞ்சள் ஒளியால் நிரம்பியது. சொற்கள், நாகர்களின் ஆதிவரலாற்றிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன. ஆதினியின் முகத்தில் பூத்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. பாரியின் முகம், அதைவிடப் பெருமகிழ்வை வெளிப்படுத்தியது. பெருமின்னல் வெட்டி மீண்டும் மழை தொடங்கியது. குகைக்குள் மகிழ்வு எல்லையற்றதாக இருந்தது. அவர்கள் அதைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தனர். அது பாறையின் ஓரம் அசையாமல் இருந்தது. செதில்களின் அசைவு, சிற்றகலின் நாக்கு அசைவதைப்போல ஒளியை அசைத்துக்கொண்டே இருந்தது. காலம் காலமாக இருக்கும் கதை ஒன்று காட்சியாக மாறிக்கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்ணருகே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இமைகள் துடிக்கவில்லை. உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் முகம் அசையவில்லை. ஆனாலும் ஒளியின் அளவு கூடுவதை அவர்களால் கவனம்கொள்ள முடியவில்லை. அதிசயத்தை அளவிட முடியாது. மனம் கரைந்த ஒன்றைக் கணக்கிட முடியாது. அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஆதினி, சட்டென திடுக்கிட்டுத் துள்ளியெழுந்தாள். என்னவெனப் பார்த்தான் பாரி. ஆதினியின் அருகில் இருந்த பாறையிடுக்கிலிருந்து இன்னொன்று ஊர்ந்து அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பார்த்தபடி பாரியின் வலப்புறம் வந்து பதுங்கி உட்கார்ந்தாள். ஒளி உமிழும் இரு வெண்கோடுகளும் ஒன்றாகச் சந்தித்தன. சிறிது நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றிப் பின்னத் தொடங்கின. காற்றுக்கு அசையும் சுடரொலிபோல வெண்ணொளி கூடிக்குறைந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒளிச்சுடர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பின்னியபடியே இருந்தன. ஆதினி, பாரியின் கைகளை இறுகப் பற்றினாள். அச்சம் உதிர்ந்த கணத்தில் ஆசை மேலேறத் தொடங்கியது. வெண்ணொளி பின்னுவதுபோல இருளுக்குள் இருந்த உருவங்களும் தயங்கித் தயங்கிப் பின்னத்தொடங்கின. மழையின் ஓசையைப்போல மூச்சுக்காற்றின் ஓசையும் கூடிக்கொண்டே இருந்தது. எவ்வியூர் மாளிகையில் ஐவகைக் குறிஞ்சிமலர் கொண்டு படுக்கையை ஓர் ஓவியம்போல வரைந்து வைத்திருந்தனர். ஆனால், குறிஞ்சி நிலத்தின் உள்ளங்கைக்குள் காமம் தானே தனக்கான ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தது. ஆதினி கால்களில் அணிந்திருந்த தண்டை இவ்வளவு ஓசையை எழுப்பியபோதும் பின்னிய நாகங்கள் விலகவில்லை. காமம், விலக முடியாத விளையாட்டு. நாகங்களும் விலகவில்லை, நாகங்கண்டும் விலகவில்லை. - பறம்பின் குரல் ஒலிக்கும்... https://www.vikatan.com
 20. 1 point
  ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்! மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை வழங்குகிறது பிபிசி தமிழ். ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா. அப்போது, அவரது வயது 13. 1961ல் அப்படம் வெளியானது. 1965 ஏப்ரல் 9 ஆம் தேதி வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஸ்ரீதர். 1961 லிருந்து 1980 ஆம் ஆண்டுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 140 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார். அவருடைய திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். Image caption1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை' Image caption1966ல் வெளியான 'சந்திரோதயம்' Image caption'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது. Image caption1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' Image caption1967ல் வெளியான 'அரச கட்டளை' Image caption1972ல் வெளியான 'சக்தி லீலை' Image caption1973ல் வெளியான 'வந்தாள் மகராசி' Image caption1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்' http://www.bbc.com/
 21. 1 point
  அதுவும் எந்தக் கேவலமா கொத்துரொட்டி செய்து வித்தாலும் அடிபட்டு வாங்கிச் சாப்பிடுதுகள் தமிழ் சனங்கள்.
 22. 1 point
  புகார் தெரிவித்தது, அதிமுகவும், திமுகவும் 😂😂😂😂😂
 23. 1 point
  எய்தவனை விட்டிட்டு அம்பை பிடித்தால்??? ஒரு தமிழ் இளைஞனும் இல்லாமல் போகும் வரை உந்த ஆவா குரூப் வாள்வெட்டு தொடரும் கண்டியளோ.
 24. 1 point
  எப்ப பாத்தாலும் இடியாப்பம் புட்டு வெங்காயம் உள்ளி நூடில்ஸ் சோறு ..... உந்த விடுகதைக்கு சரியான விடை நயன்தாரா.
 25. 1 point
  அம்பாறை,மட்டக்களப்பு,மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா என்று புற்றுநோய்போல் பரவி வருகிறார்கள், தமிழர்களை ஒரு மூலைக்குள் அடக்கிவிட்டு அவர்கள் பெரும்பான்மையாகும் பக்கா திட்டம் அமைதியாக அரங்கேறுகிறது, அவர்கள் ஓரளவு பெரும்பான்மை அடைந்தவுடன் அது ஆவேசமாய் நிகழும்! தங்களது பிரதேசங்களில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கும் மதமாற்றங்களுக்கெதிராய் பொங்கியெழும் தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் பிரதேசங்களில்போய் என்னவேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்றரீதியில் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நேரெதிராக முட்டிக்கொண்டாலும் தமிழர்களின் தனித்துவத்தை,பிரதேசத்தை எம் வீட்டு வாசல்வரைவந்து கரையான்போல் அரித்து தள்ளுவதில் சிங்களமும் முஸ்லீம்களும் மறைமுக இறுக்கமான நட்பை கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். இதற்கு ஒரேவழி தமிழகத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான தாயக உறவுகளையும், வடக்கு கிழக்கில் வீடு,காணி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் முஸ்லீம்கள் ஆக்கிரப்பு நடத்த நினைக்கும் இடங்களில் குடியேற்ற வடமாகாண அரசு நடவடிக்கை எடுக்கணும், குடியேற்றப்பட்ட முஸ்லீம்களும் எந்தவித வியாபார தொடர்புகளும் தமிழர்கள் வைத்துக்கொள்ளாது அவர்கள் பொருளாதாரத்தை முடக்கணும், இல்லாமல் போனாபோகுது என்று இருந்தால் இன்னும் சில வருஷங்களில் அடித்து துரத்திவிட்டு முஸ்லீம்கள் வடக்கில் பெரும்பான்மை ஆவார்கள்! கால் நூற்றாண்டுக்கப்புறம் நல்லூர்கோவில் பள்ளிவாசலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மினத்தின் இருப்பையும் எல்லைகோடுகளையும்,இனிமேல் இன்னொரு பிரபாகரன் பிறந்துவந்து கட்டிக்காக்கபோவது எந்தக்காலமும் சாத்தியமே இல்லை, நாமாய் ஏதாவது பண்ணினால்தான் உண்டு!
 26. 1 point
  சூப்பர் அயிட்டம்..... எலும்புக்குள் இருக்கும் ஊண் உறிஞ்சி இழுக்க அந்தமாதிரி இருக்கும்....!
 27. 1 point
 28. 1 point
  இந்திரா காந்தி பற்றிய புரிதல் மிகவும் தவறானது. இந்திரா காந்திக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தவிர ஏனைய இயங்களிட்ற்கு வெளிப்படையான அரசியல் அங்கீகாரம் வழங்கி, ஏன் ஈழத்தமிழரின் பிரதி நிதிகளாக உத்தியோக பற்றற்ற முறையில் கூட ஏற்க்கவில்லை. இதை புலிகளும் ஏனைய இயக்கங்களும் பெரிது படுத்தாமல் தம்மை இராணுவ-அரசியல் சக்தியாக வலிமைப்படுத்துவதிலும், வளப்படுத்துவதிலும், வளர்த்தெடுப்பதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஆயினும், புலிகலின் தலைமை ஒன்றில் குறியாக இருந்ததது. அதவாது, இந்தியா என்கின்ற அரசும், அதன் அரச இயந்திரமும் மற்றும் வெளிநாட்டுக்கு கொள்கையும், தமிழீழம் என்ற சுதந்திர தேசம் அமைக்கப்படு வதிற்கு எவ்வளவு தூரம் தானே (இந்திய அரசு) முன்வந்து தடுக்கும் என்பதை அனுபவ வாயிலாக அறிவதற்கு புலிகலின் தலைமை மிகவும் முயறசி எடுத்தது. இந்தியாவின் புலிகளை நோக்கிய அணுகுமுறை அத்தகைய புரிதலை புலிகள் வளர்பதற்கு மிகவும் ஏதுவாக அமைந்தது. இந்திய அரசின் புலிகளை நோக்கிய அணுகு முறை மிகவும் முறைசாரா, உத்தியோக பற்றற்ற தரத்திலேயே இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இந்திரா காந்தி எத்தகைய புரிதல்களை கொண்டிருந்தார் என்பது அமிர்த லிங்கத்திற்கு கூட தெரிந்திருக்குமா, அப்படி தெரிந்திருந்தால் அமிர்த லிங்கம் இந்திரா காந்தியின் நிலைபாட்டுகளை தெளிவான புரிதல் கொண்டிருந்தாரா என்பது சந்தகமே. அண்மையில் கூட யதீந்திராவின் ஓர் ஆய்வில் அமிர்த லிங்கம், இந்திரா காந்தி மற்றும் பார்த்த சாரதி தான் கேள்விப்பட்ட ஓர் உரையாடலை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த உரையாடலில், இந்திரா காந்தி மிகவும் தெளிவாக (no mincing of words or beating the bush) அமிர்தலிங்கத்திற்கு, பார்தஹ் சாரதி முன்னிலையில், "இலங்கை இனப் பிரச்னைக்கு இந்தியா பெரும்பான்மையினர் மனம் நோகாத படி ஓர் தீர்வீடிற்கு ஆதரவு அளிக்கும்." அரசியல் ராஜ தந்திரத்தில் கூட புலிகள் இந்தியாவை விஞ்சி விட்டார்கள். ஏனெயவர்கள் தெரிந்து தெரியாமலோ ஏமாந்து விட்டார்கள். இதனால் தான் புலிகளை இந்திய ஒரு போதும், ஈழத்து தமிழின அழிப்பை விடுத்தது, கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்தவை சமீபத்திய வரலாறு. தற்போதைய நிலைமைகளின் படி, ஈழத்து தமிழினத்தின் தனித்துவமும் அடையாளமும் பேணப்படுவது, பெரும்பான்மை இனத்தவரின் மனதையும் மதியையும் வெந்தணலாக எரித்துக்கொண்டிரிருக்கிறது. இந்தியாவின் நகர்வுகளை இதில் இருந்தே புரியலாம்.
 29. 1 point
  இந்த ஊடகங்கள் சில "கோமா"விலிருந்து எழும்பியதுபோல் அப்பப்போ செய்திகளையும் ஆய்வுகளையும் தவறான கருத்துருவாக்கக் கட்டுரைகள்(கட்டுக்கதைகள்)ஐயும் வெளியிடுகின்றன. எப்போதாவது இந்திராகாந்தியால் தமிழருக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுத்திருக்கமுடியுமா(?) என்றெல்லாம் சிந்திக்கவே மாட்டார்களா இந்த ஊடகப் பிரதானிகள். இந்தியா இருக்கட்டும் முதலில் சம்பந்தரையாவையும் சுமந்திர மகாத்தய மாமாவையும் தீர்வுகுறித்துப் பேசுமாறு கேட்கலாமே.
 30. 1 point
 31. 1 point
  இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார். லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய நிலவரப்படி இருவரும் முதல் இடத்தில் உள்ளனர். 2-வது இன்னிங்சில் யார் அதிக விக்கெட் எடுக்கிறார்களோ அவர் முன்னிலை பெறுவார். லயன் 50 ரன் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியதே ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவிச்சாகும். அஸ்வின் 41 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்தததே சிறந்ததாகும். தென்னாப்பிரிக்க வீரர் ரபடா 54 விக்கெட்டும், இலங்கையை சேர்ந்த ஹெராத் 52 விக்கெட்டும், ஜடேஜா 51 விக்கெட்டும் எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர். http://www.maalaimalar.com/News/Sports/2017/12/05111641/1132726/Ashwin-joins-Lyon-as-highest-wicket-taker-in-Tests.vpf
 32. 1 point
  சமரசம் உலாவும் இடத்திற்கு வேட்டுவைத்தது அருட்தந்தையர்கள் அல்ல. அருவருப்பான தந்தையர்.
 33. 1 point
 34. 1 point
  வான்கலந்த மாணிக்கவாசகம் 40 - பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன் திருவாசகத்தில் நான்கு பாடல்களில் தில்லையைக் குறித்து மணிவாசகர் கூறிய சான்றுகள் கிடைக்கின்றன. திருவாசகத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20-ம் பாடலில் வரும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரிக்கு ‘கடல் நீரலைகள் ஒசை எழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற’ எனப் பொருள்கொண்டால், தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்திருந்ததாகக் கொள்ள இடம் உண்டு; ஆனால், பல உரையாசிரியர்கள் வயலில் தேங்கியுள்ள நீர் அலம்புகின்றது என்றே பொருள் கொள்கின்றனர். திருவாசகத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் ஒன்றாம் பாடலில் “அணையார் புனல்தில்லை” என்ற பதிவின் மூலம் தில்லையின் வயல்வளத்தையும் 14-ம் பாடலில் “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவின் மூலம் தில்லைக் கோயில், பெரிய மதில்களைக் கொண்டிருந்ததையும் கண்டபத்துப் பதிகத்தின் ஆறாம் பாடலில் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று வருவதால் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் அறிகிறோம். ஞானசம்பந்தர் பாடல் ‘கழிசூழ்ந்த தில்லை’ என்று சுட்டிக்காட்டியதைப் போல, மேற்கண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை நிறுவவில்லை. எனவே, நானூறு பாடல்கள் கொண்ட மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை ஆராய்வோம். திருக்கோவையாரில் (பாடல் எண்கள்: 20, 49, 85, 122, 182, 183, 222) ஏழு பாடல்கள் தில்லைப் பெருங்கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன. தவறாகத் தீர்மானிக்கப்பட்ட மணிவாசகரின் காலம் இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வாளர்கள் மாணிக்கவாசகர் காலத்திலிருந்த மன்னனின் பெயர் வரகுணப்பாண்டியன் என்பதைத் திருக்கோவையாரிலிருந்துதான் எடுத்துக்காட்டினார்கள்; அம்மன்னன், முதலாவது வரகுணனா இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, புறச்சான்றுகளைக் கொண்டு, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை ஒன்பதாவது அல்லது பத்தாவது நூற்றாண்டு என்று முடிவுசெய்தனர். அதே திருக்கோவையாரில்தான், தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெளிவாகச் சுட்டும் அகச் சான்றுகளான ஏழு பாடல்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். விநாயகர் வழிபாட்டுக்கு முன் தோன்றியது திருவாசகம் முருகப்பெருமானைக் குறித்துத் திருவாசகம் திருவுந்தியார் 17-ம் பாடலில் “குமரன்தன் தாதைக்கே உந்தீபற!” என்றும், திருப்பொற்சுண்ணம் 3-ம் பாடலில் “நல்வேலன் தாதை” என்றும் இரண்டு பதிவுகள் கிடைக்கின்றன. இளையவரான குமரக் கடவுளைக் குறித்து மணிவாசகர், மூத்தவரான விநாயகப் பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தில் தமிழகத்தில் விநாயக வழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத் தெளிவு. தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றியது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு, மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ திருக்கோவையாரிலோ முற்றிலும் இல்லாதது, மாணிக்கவாசகரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதற்கும், தேவார மூவருக்கும் முந்தையது என்பதற்கும் ஒரு வலுவான புறச் சான்று. மூவருக்கும் மூத்த திருமூலரை சம்பந்தரும், அப்பரும் பாடவில்லை. “ஒன்று அவன்தானே” என்று தொடங்கும் பாடலே திருமந்திரத்தின் முதல் பாடல் என்று சேக்கிழார் பெருமான் சொல்வதிலிருந்து திருமூலரின் திருமந்திரத்திலும் விநாயகர் வழிபாடு இல்லை என்பதும், திருமூலரும் தேவார மூவருக்கும் மூத்தவர் என்பதும் தெளிவு. திருமூலரைத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் பாடவில்லை; ஆனால், சுந்தரர் பெருமான் திருத்தொண்டர் தொகையில் ‘நம்பிரான் திருமூலன்’ என்று தனியடியாராகப் பாடியதுபோல், ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று மணிவாசகரையும் தனியடியாராகப் பாடியிருப்பதற்கான வாய்ப்பை மறுக்க இயலாது. சுந்தரர் பெருமான் ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்றது மணிவாசகரைத்தான் என்று நிறுவினால், அறுபத்துமூவரில் மணிவாசகர் உண்டு என்பது தெளிந்துவிடும். வலுவான அகச் சான்றும் , வலுவற்ற புறச் சான்றும் வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், மாணிக்கவாசகரின் காலத்தில் கடற்கரைக் கோயிலாக விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் என்பதைக் காட்டும் வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிக மிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். (ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க் குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள்.) எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி. உண்மையுமாய் இன்மையுமாய் எக்காலத்தும் மாறாது நிலைபெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும் உண்மை ஆகும்; இடையே தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் என்னும் மாற்றம் ஆகும். இறைவனும் உயிர்களும் மெய்ப்பொருட்கள்; உலகமும் உலகியல் சார்ந்த மனித உடல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மாற்றம் என்பதற்கு உட்பட்டு, மாறிக்கொண்டே இருப்பதால் அவை யாவும் பொய் ஆகும். முற்றறிவு பெற்ற இறைவன், ஆணவம் என்னும் அறியாமையில் அகப்பட்டுக் கிடக்கும் சிற்றறிவு கொண்ட உயிர்களுக்கு அறிவு புகட்டி, ஆணவ மலம் நீக்கவே, எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகையும் உடல்களையும் படைத்து, உயிர்களை அவ்வுலக உடல்களில் வாழச்செய்து, உயிர்கள் தன்னிச்சையாக வினைகள் செய்ய அனுமதிக்கிறான்; அவ்வினைப்பயன்களை உயிர்களுக்கு நுகர்வித்து, உயிர்களுடன் தானும் உடன் வாழ்ந்து, வழிகாட்டுகிறான். இவ்வாறு, மெய்ப் பொருளான இறைவனே, உயிர்களிடம் கொண்ட கருணையால் பொய்ப் பொருளாகவும் ஆகி நிற்கும் மாண்பை, மணிவாசகர் “உண்மையுமாய், இன்மையுமாய்” என்று போற்றுவார். பொய்யடிமையில்லாப் புலவராக . . . இறைவன் இன்மையாய் (பொய்ப் பொருட்களாகவும்) நிற்பது, உயிர்கள் உண்மையை (மெய்ப் பொருளை) உணரும் பொருட்டே என்னும் திருவுளக் குறிப்பை அறிந்து, மெய்ப் பொருளான சிவத்திடம், மெய்ம்மையாம் சிவத்தையே வேண்டினார் மணிவாசகர். சுந்தரர் காலத்துக்கு முன்பும், பின்பும் திருவாசகத்துக்கு இணையான நூல் இல்லை. மணிவாசகரையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்தார் சுந்தரர் பெருமான். உயிர்கள் உலகில் வாழ, மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைவாய்ந்த இப்பொய்ப் பொருட்களும் அவசியம். மூவர் தேவாரமும் இத்தேவை கருதி, பொய்ப் பொருளாம் பொன்னையும் மெய்ப் பொருளாம் இறைவனையும் ஒருங்கே வேண்டுபவை என்பதால் அவை ‘திரோதானம்’ என்னும் உலகியல் வழியாக இறைவனை அடையப் பாடப்பட்டவை; திருவாசகப் பாடல்களில் ‘திருவருள்’ என்னும் மெய்ப் பொருளாம் சிவத்தை மட்டுமே பாடி, இப்பொய்ப் பொருட்களைச் சிந்தையிலும் வைக்காத மணிவாசகரின் பொய்யடிமை இல்லாச் சிறப்பே திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர் பெருமானின் மனதில் மேலோங்கி நின்றதால், ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று மணிவாசகரைப் பாடிவிட்டார். அறுபத்து மூவரில் மணிவாசகர் இறுதியாக, மணிவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையது என்பதும் சுந்தரர் பெருமான் தம் திருத்தொண்டர் தொகையில் தாம் பாடிய தனியடியார்கள் அறுபத்தியொருவரில் ஒருவராக மணிவாசகப் பெருமானையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார் என்பதும் அவரையே பெரிய புராணத்தில் சேக்கிழாரும் பாடியுள்ளார் என்பதும் தெளிவு. சிவாலயங்களில் அறுபத்து மூவர் வரிசையில் மணிவாசகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டுச் சிவனடியார்களின் மனங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த குறை நீங்கும். ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த வரலாற்றுப் புதிரை விடுவித்து நற்செய்தியுடன் வான்கலந்த மாணிக்கவாசகம் உங்களுடன் கலந்து நிறைவடைகிறது. (வாசகம் நிறைந்தது) http://tamil.thehindu.com/society/spirituality/article19456520.ece
 35. 1 point
  உலகம் மயங்கும் Bitcoin 2017
 36. 1 point
  வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...
 37. 1 point
  வான்கலந்த மாணிக்கவாசகம் 39: அறுபத்து மூவரில் மணிவாசகர் உண்டா? தி ருவாசகத்தேன் தந்த வள்ளலும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவருமாகிய மாணிக்கவாசகர், சைவத் திருத்தொண்டர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கொள்ளப்படவில்லை என்பது பெரும்பான்மையான சைவசமய அன்பர்களுக்கே பெருவியப்பைத் தரும். நாயன்மார்களின் எண்ணிக்கையைப் பாடும் சுந்தரரின் திருத்தொண்டர்தொகையை அடியொற்றி, திருத்தொண்டர் திருவந்தாதியை நம்பியாண்டார் நம்பிகள் அருளினார். இவ்விருவர் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார் சேக்கிழார் பெருமான். திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இக்கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை வரலாற்றுப் பார்வையுடன் தேடுவோம். கணக்கீடு தோன்றிய முறை இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்’ என்று (தொகையடியாரைக் குறித்து) சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுக்க, பதினொரு பாடல்களில், அறுபத்தொரு தனியடியார் திருத்தொண்டர்களையும் எட்டுத் தொகையடியார்களையும் பாடி, திருத்தொண்டர் தொகையை நிறைவுசெய்தார் சுந்தரமூர்த்தி நாயனார். இறைவனே எடுத்துக்கொடுத்த முதலடியில், தொகையடியார்களான தில்லையில் வாழும் அந்தணர்களையும் மற்ற தொகையடியார்கள் எழுவரையும் பத்தாவது பாடலிலும் பாடியுள்ளார்; மற்ற பாடல்கள் அனைத்திலும் தனியடியார்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளனர். திருத்தொண்டர் திருவந்தாதி திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள், இத் ‘திருத்தொண்டர் தொகை’யிலிருந்து ‘திருத்தொண்டர் திருவந்தாத’என்னும் சார்புநூல் ஒன்றைச் செய்தார். சுந்தரர் பாடிய ஏழாம் பாடலில் வரும் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்னும் அடியைத் தொகையடியாராகக் கருதிய நம்பியாண்டார் நம்பி, அதற்கு, தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், ‘கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்து ஒன்பது கடைச் சங்கப்புலவர்கள்’ என்று குறிப்பிட்ட தொகையடியார்களுக்கு ஏற்றிப் பாடிவிட்டார். மற்ற அறுபது தனியடியார்களுடன், சுந்தரரையும், அவர்தம் பெற்றோர் சடையனார் – இசைஞானியம்மையார் இருவரையும் சேர்த்து, திருத்தொண்டர்கள் அறுபத்து மூவர் என்று கொண்டு பாடிவிட்டார். சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர்தொகையையும் திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக்கொண்டு, பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். பெரிய புராணத்தில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு விரிவாகச் சொல்லப்படுகிறது. ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற வரிக்கு நம்பியாண்டார் நம்பிகள் கூறும் ‘பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர்’ என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளார் சேக்கிழார் பெருமான். ‘திருத்தொண்டர் தொகை’யை உற்றுநோக்கினால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் பல சிறப்புப் பெயர்களைக் காணலாம். இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று பல தனியடியார்களையும் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துள்ளது தெளிவு. சேக்கிழாரின் அறிவுநுட்பம் ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று அறியப்படுபவர் ஒரு ‘தனியடியாரே’ என்பதால்தான், ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டு வாழும், அவரல்லாத ஏனைய தொகையடியார்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி அடிகள் மீண்டும் குறிப்பிட்ட நுட்பத்தைத் தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்? இத்துணை தெளிவாக விளக்கினாலும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பு ஏதும் கூறாது, சரியான விளக்கத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிச் சென்றது, நம்பியடிகள் பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாம் கொண்ட கருத்தில் சேக்கிழாருக்கு இருந்த உறுதியையும் விளக்குகிறது. மணிவாசகரின் காலம் ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பட்ட அத்தனியடியார் மாணிக்கவாசகர்தாம் என்பதை நிறுவுமுன், மாணிக்கவாசகரின் காலம் சுந்தரருக்கு முற்பட்டது என்று நிறுவ வேண்டும். மணிவாசகர் காலத்தை ஒன்பதாவது நூற்றாண்டு என்பது பெரும்பான்மைத் தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அவர்களது ஆய்வு முடிவுகள் புறச்சான்றுகள் கொண்டே முடிவு செய்யப்பட்டுள்ளன. தில்லை மரங்களே சாட்சி சிதம்பரம் நடராசர் திருக்கோயில், ஒருகாலத்தில் கடல் சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும் பகுதி காடாக இருந்ததால் ‘தில்லைவனம்’ என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத்தலத்தின் தலவிருட்சம் தில்லை மரமேயாகும். காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகி உப்பங்கழி சூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கி, தில்லையை அடுத்து பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவு சென்று பிச்சாவரத்தில் நிற்கிறது; பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லை மரங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம். தில்லையை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கி உப்பங்கழி சூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கி ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது மாணிக்கவாசகரின் கால வரலாறு. ஞானசம்பந்தர் பார்த்த உப்பங்கழி சூழ்ந்த தில்லை திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலில் மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் (திருமறை: 1.866.1-2) ‘மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்து ஓச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒருபக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவாகிறது. மணிவாசகரின் பாடல்களில் தில்லைக் கோயிலை எப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று அடுத்த வாரம் காண்போம். (வாசகம் தொடரும்) http://tamil.thehindu.com/society/spirituality/article19409007.ece
 38. 1 point
 39. 1 point
 40. 1 point
 41. 1 point
 42. 1 point