Jump to content

Leaderboard

  1. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      6

    • Posts

      7218


  2. தமிழரசு

    தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      33749


  3. Paanch

    Paanch

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      3

    • Posts

      7510


  4. MEERA

    MEERA

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      5137


Popular Content

Showing content with the highest reputation on 02/13/17 in all areas

  1. எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.
    3 points
  2. வணக்கம் வாத்தியார்....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே இனி பிரிவே இல்லை உன் உளறலும் எனக்கு இசை எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் --- காதலர் தின நினைவுகள்---
    1 point
  3. *Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...* *அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...* *“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*. *நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...* *1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*. *2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.* *3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.* *4. அதிகாலையில் எழ பழகுங்கள்*. *வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.* *5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.* *அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.* *6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.* *எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.* *7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.* *8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.* *9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*. *10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.* *11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.* *12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.* *13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*. *14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.* *15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*. *16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.* *17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.* *18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.* *19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!* *"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"
    1 point
  4. தும்பளையில் (பருத்தித்துறை) உள்ள பெரியவளவு வரத வினாயகர் ஆலய முன் மண்டப தூண்கள் இடிக்கப் பட்டமை தொடர்பில் மிகுந்த கண்டனத்தை தமிழ் சமூகம் தெரிவிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். முந்தாநாள் அந்த தூண்கள் இடித்துக் கொட்டிய மண் மலையைப் பார்த்தேன், ஒரு கோயிலையே இடித்துக் கொட்டியிருப்பது போலிருந்தது . சுமார் அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் அந்த தூண்களைப் பற்றி ஆயிரம் ஞாபகங்கள் உண்டு. கை பிடித்து நடந்ததிலிருந்து வெயில் காலங்களில் அரப்புத் தட்டி விளையாடுவது, அதன் மறைவுகளுக்குள் அவல் சுண்டல் கை மாற்றியது வரை இன்னும் இன்னும் கதைகளை இந்த தூண்கள் கொண்டிருக்கின்றன. இதனை மக்களின் பொது முடிவின்றி தான்தோன்றி தனமாக ஒரு சிலரின் அராஜகப் போக்கினால் நிகழ்த்தியமை என்பது கடும் கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தித்துறை போன்ற புராதனங்கள் நிறைந்த ஊரில் இப்படி கேட்டுக் கேள்வியில்லாமல் உடைத்தெறிந்து கொண்டு போனால் வரலாற்றில் நமக்கு மிஞ்சப் போவது என்ன என்பதை ஊர் இளைஞர்களும் ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும். கிருசாந்... ·
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.