Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Content count

   56,739


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content count

   38,465


 3. Ahasthiyan

  Ahasthiyan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content count

   1,460


 4. Maruthankerny

  Maruthankerny

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content count

   7,562Popular Content

Showing most liked content on 01/08/2017 in all areas

 1. 3 points
  எவ்வளவு நேரம் இந்த வீடியோ இருக்கும் என்று சொல்ல முடியாது.. https://www.tvnz.co.nz/one-news/sport/cricket/happened-corey-anderson-spinners-secure-series-clean-sweep-new-zealand இந்த லிங்கில் போய் பாருங்கள் தாய்லாந்து சாப்பாடு கடையில் ஒரு சிக்ஸ் போய் விழுகுது...
 2. 2 points
  சரியான விடை: கொட்டாவி
 3. 2 points
  A/L Best Results (2016): Biology 1. R.A. Nisal Punsara (Sinhala medium) - Rahula College, Matara 2. M. Roshane Akthar (Tamil medium) - Kinniya Madya Maha Vidyalaya, Kinniya 3. G. Klerin Dilujan (Tamil medium) - Carmel Fatima College, Kalmunai Physical Science 1. K.D.M. Amaya Darmasiri (English medium) - Maliyadeva Girls’ College, Kurunegala 2. U.G. Chathura Jayasanka (Sinhala medium) – Richmond College, Galle 3. M.B. Sawindu Dimal Thanuka (Sinhala medium) – Royal College, Colombo Commerce 1. M.M.A. Muditha Akalanka Rajapaksa (Sinhala medium) - Ananda College, Colombo 2. T.F. Onil Vindula Perera (English medium) – St. Joseph’s College, Colombo 3. G.G.A. Nipuni Dhananjanee Rupasinghe (Sinhala medium) – Ananda Balika Vidyalaya, Hingurakgoda Arts 1. R. Indeevari Gawarammana(English medium)- Girls’ High School, Kandy 2. Padmanathan Kurupareshan (Tamil) – Hindu College, Manipai 3. U.W. Amanda Paramee Kalpashyaka (Sinhala medium) - Viharamahadevi Balika Vidyalaya, Kiribathgoda Engineering Technology 1. Kanakasundaram Jathursajan (Tamil medium) - Skandavarodaya College, Chunnakam 2. K.W. Nisal Kobbekaduwa (Sinhala medium) – Government Science College, Matale 3. R. A. Sandeepa Anjalee Ranatunga (Sinhala medium) – Ratnawali Balika Vidyalaya, Gampaha Bio Systems Technology 1. K. Malithi Shashikala Dilrangi (Sinhala medium) - Swarnajayanthi Maha Vidyalaya, Kegalle 2. T. Mayumi Thathsarani (Sinhala medium) – Devi Balika Vidyalaya, Colombo 3. Ilyas Fathima Arosha (Tamil medium) - Fathima Balika Maha Vidyalaya, Oddamavadi Other 1. Thilara Ekanayake (English) - Musaeus College, Colombo 2. M.G. Dhananjaya Vimukthi Karunaratne (Sinhala medium) – private candidate, Pelpola Thummodara 3. K.G.S.G. Lahiru Sasanka (Sinhala medium) – private candidate, Galle - See more at: http://www.dailymirror.lk/article/A-L-best-results-in-the-Island-121835.html#sthash.yNTH2tyS.dpuf
 4. 2 points
  தேர்வில் சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி என்று வந்தால் எல்லோரும் வெல்ல முடியாது, ஒரு மூன்று மணித்தியால பரீட்சை ஒருவனின் தலை விதியை நிர்ணயிக்கிறது. நன்றாக படிக்கக் கூடியவர்களும், சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் நல்லாக பரீட்சை எழுத முடியாமல் போகிறது. சித்தியடையாதவர்கள் மனதை தளர விடாது, இந்த தோல்வியை சவாலாக எடுத்து பல்வேறு துறைகளில் முன்னேற முடியும். விழுந்தவன் எழுந்து நின்று தன் விடா முயற்சியால் வெற்றி பெறலாம். நியூட்டனின் மூன்றாம் விதியே இதைத்தான் சொல்கிறது. எனக்கு தெரிந்த ஒருவருக்கு இலங்கை A/L கணித பிரிவில் C 3S. படிக்க கூடியவர், இதை விட கூட எடுத்து இருக்கலாம். அவர் பரீட்சை எழுதும் போது விதி வில்லனாக 83 கலவரம், அவரது அப்பா தனவந்தர், ஒரே நாளில் தனது வியாபாரத்தை இழந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒன்றும் இல்லாமல் ஊர் வந்து சேர்ந்தார். ஒரு வாறு double maths, physics முடிந்து விட்டது. ஆனால் Chemistry ஒத்தி வைக்கப் பட்டு ரெண்டு மாதங்களின் பின்னர் நடத்தப் பட்டது. இலங்கை பல்கலை கழகம் எடுபடவில்லை, பிரைவேட் ஆக படித்து இன்று ஒரு உயரிய பதவியில் உள்ளார் அவரது பட்டம் BSc (Hons), Msc (Eng), CEng, MIET இதை எழுதுவதன் காரணம், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நாமே கோடு கீறுகிறோம். துவண்டு விடாதீர்கள் எழுந்து நில்லுங்கள்.
 5. 2 points
  உருப்படமாட்டாய் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன் தான்.. அதிக கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாக ஆனார். முயற்சி திருவினை ஆக்கும் என்று எம் தமிழ் சொல்லித் தந்ததை கைக்கொண்டால்.. வெற்றி நிச்சயம். இங்கு பலருக்கும் தெரிந்திருக்குமோ தெரியல்ல... இந்த மாணவன் படித்த பாடம்.. Biotechnology அன்று அறியப்படும்.. இன்றைய உலகில் முக்கியமாகப் பேசப்படும்.. ஒரு பாடப்பரப்பு. உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு பாடப்பரப்பு.. குறிப்பாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கவல்ல.. ஒரு பாடப்பரப்பு. உயிரினங்களைக் கொண்டு எப்படி.. உபயோகமான பொருட்களை தயாரிப்பது.. சந்தைப் படுத்துவது.. இலாபமீட்டுவது என்பதாக அமையும். அது மருத்துவத்தில் இருந்து... சாதாரண யோக்கட் வரை ஆதிக்கம் செய்யவல்லது. அண்மையில்.. இங்கிலாந்துப் பிரதமர்.. கூட அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்.. இத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார்.. காரணம்.. இதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால்.
 6. 2 points
  மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது. யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் பின்னற்றத்தில் கைதொலைபேசி பேஸ்புக் மற்றும் நவீன வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ........... "முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான். அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது. பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது .... எனது கண்ணில் நீரை வர செய்கிறது !
 7. 1 point
  பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilkingdom.com/2017/01/45_7.html
 8. 1 point
  பிளாஸ்ரிக் அரிசியும் செயற்கை முட்டையும் உண்டு அழிந்தே போகும் செந்தமிழ் நாடு.
 9. 1 point
  கவனம் மருதர்... சரியான குளிரான இடத்தில இருக்கிறியள். என்ன அவசரம் எண்டாலும் வெளியால நம்பர் ஒன்னு அடிக்க எண்டு காரில் இருந்து இறங்கிடாதீங்கோ. சர்... எண்டு போகேக்கையே... ஐஸாக போயிடும்.... பிறகு.... உடைச்சுத்தான்.... விடணும்... உந்த -14 பாகைல விஷயம் தெரியாம தமிழ் சிறியர் சரியான பிரச்சனைப் பட்டுப் போனார் எண்டால் பாருங்கோவன்.
 10. 1 point
  கருத்துகள் இடமிருந்து அனுபவத்தை பெறுவது தான் கல்வியில் பெரும் சோதனையும்,சாதனையும் ஆகும்
 11. 1 point
  எங்கே கனடாவில், டொரோன்டோ மாநகரில் பல்லடுக்கு மாடி பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப்பணிகளில் பங்கெடுத்த கட்டட பொறியியலாளர் இசைக்கலைஞன்? எதற்கு வம்பு என்று ஒன்றும் தெரியாததுபோல் இங்கே ஒளித்து திரிகின்றாரோ?. அவரை இங்கே இழுத்து வாருங்கள், அவரது அபிப்பிராயத்தை முதலில் பொறுமையாக கேட்போம். பின்னர் எல்லாருமாய் சேர்ந்து கும்மி பின்னி எடுக்கலாம்.
 12. 1 point
  முஸ்லிம்களை சாட்டாக வைத்து ஒன்றுமே செய்யாத அரசாங்கத்துக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.சித்தார்த்தன் சம்பந்தருக்கு நோகாமல் பேசியிருக்கிறார்.சுமத்திரன் தமிழ்மக்களுக்கான தீர்வுக்கு அவர்கள் பூரண சம்மதம் அரசியலமைப்பில் எழுதப்படும் வார்த்தைகளில்தான் பிரச்சினை உள்ளது என்கிறார். மாவை சேனாதிராசா வழக்கம் போல குழப்பகரமாகப் பேசியிருக்கிறார். ஒன்றமே புரிய வில்லை.அட இந்தக் கருமத்துக்காகவா? ஸ்கொட்லான்ட் சமஸ்டி பற்றி படிக்கப் போனீர்கள்?
 13. 1 point
  இதில் இன்னொரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். இந்திய உருக்கு கம்பிகள் வலு இல்லாதவை அதிக லாப நோக்கில் அதிக கலப்படம் கொண்டவை. இந்திய கம்பிகளை ஒரு நாடும் இறக்குமதி செய்வதில்லை ஜெர்மனி ...... இந்தியா பாரிய ரயில் இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்தபோது எதோ போன போகட்டும் என்று கொஞ்ச கம்பிகளை இறக்க ஒப்பந்தம் செய்தார்கள். இங்கு அவை நிலையாக நிற்கவில்லை. வளைவதுக்கு பதில் முறிக்கின்றன ............ ஜெர்மனியும் இப்போ தடை செய்துவிட்து. அதைத்தான் அங்கு தூக்கி போகிறார்களோ தெரியவில்லை. மழைக்கு முழங்க ............. வீடு தலையில் விழலாம். MUMBAI— In India’s financial capital, the skyline is dotted with decrepit buildings that seem to be only a strong monsoon shower away from crashing to the ground. The latest structure to collapse in Mumbai was a three-story building in the northern suburb of Thane, which caved in at 2:30 a.m. on Friday. Nine people were killed and 14 were injured as of Friday afternoon, said Sandeep Malvi, spokesman for the Thane municipal corporation. He said the civic authorities have yet to determine what caused the 35-year-old building to collapse. Mumbai has seen an alarming number of building mishaps this year, but what is more troubling is that more structures are likely to be vulnerable to collapse as old ones crumble from neglect and new ones are poorly made.
 14. 1 point
  இசை, இது நமது தெரிவு அல்ல, தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. இவரை சமூக நலத்துறை அமைச்சராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக ஏற்று க்கொள்வதால் ஒன்றும் பிரச்சனை இல்லை.
 15. 1 point
  பாக்கிற காட்சிகள் காணாது ......... இனி அதை புதிய டிவி யில வேற பாக்க வேண்டும் ?
 16. 1 point
  தீர்வைப் பெற்றுத்தராது நான் இறந்துவிட்டாலும்.... 'இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் தீர்வு கிடைக்கச் செய்வேன்'. இது உறுதி
 17. 1 point
  சில குடும்பங்களில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைதான் ! எந்த காலத்திலும் எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனை அதுதான் பிரச்சனை ஒன்று இருந்தால் .... அதட்கு தீர்வு காணலாம். பிரச்சினை இல்லாத .... பிரச்சனைதான் தீர்க்க முடியாதது.
 18. 1 point
  -14 எல்லாம் ஒரு குளிரா ? எமக்கு -20 எல்லாம் சாதாரணம் மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு மேலே வரும். என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது என்று நினைக்கிறேன். லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும்.
 19. 1 point
  நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன். அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை. இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது .... பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா என்று பொதுவாகவே இருக்கும். இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட அதிகமானதுதான். இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை. தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் ஏற்பட கூடிய காரணம்தான். சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை. வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.
 20. 1 point
 21. 1 point
 22. 1 point
  பேயை..... கண்டவுடன், தலை தெறிக்கும் ஓட்டம்.
 23. 1 point
  தமிழ் சினிமாவில் கிச்சுக்கிச்சு மூட்டிய சில கியாகியா நடனங்கள் தமிழ் சினிமா திரைப்படப் பாடல்களில் குறுக்கும் நெடுக்குமாக வலம்வரும் ஒரு சில கேரக்டர்களைப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியாது. 'அழகிய லைலா' கவுண்டமணியிலிருந்து 'ஊதுங்கடா சங்கு' பாடலில் ஆடும் தாத்தா வரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பொதுவாக பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தவிறவிடுகிறோம். நம் கவனம் முழுவதும் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மேல் மட்டுமே இருக்கும். ஆனால் அதைத் தாண்டி பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொன்னால் தாறுமாறாக ஸ்டெப் போடும் கேரக்டர்ஸ் நிறைய உள்ளன. டான்ஸ் ஆடுபவர்களில் மூன்று வகை உள்ளது. ஒன்று சிறப்பாக டான்ஸ் ஆடுபவர்கள், இரண்டு முன்னாடி ஆடுபவர்களைப் பின்பற்றி ஆடுபவர்கள், மூன்றாவது கேட்டகிரி தான் நம்ம ஆளுங்க... என்ன செய்வது என்று தெரியாமல் ரகளையாக ஆடுபவர்கள். அவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு! ஊதுங்கடா சங்கு : கமர்ஷியல் ஷோவில் சமூகப் பிரச்னை ஒன்றின் மீதான கவனம் சேர்த்து, பட்டம் தட்டிய 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் பிரபலம். அதே அளவுக்கு அந்தப் பாடலில் ஆடும் தாத்தாவும் செம ஃபேமஸ் தான் பாஸ். நன்றாகக் கூர்ந்து கவனித்திருந்தால் இந்தத் தாத்தாவை பார்த்திருக்கலாம். முன்னாடி ஆடிக்கொண்டிருக்கும் கோ டான்ஸ்சர்ஸை பார்த்துத் தானும் ஆட முயற்சிப்பார். ஆனால் என்ன செய்வது என்று தடுமாறி, ஒரு கட்டத்தில் உட்கார்ந்து ஆட ஆரம்பித்துவிடுவார். பின் பாடல் முடியப் போவதை அறிந்த பெரியவர், பேக் டூ ஃபார்ம் ஆகி கலக்குவார். முடிவில் ஒரு ஸ்டெப் போட்டுவிட்டு தன் நடன சாகசத்தை நிறுத்திக்கொள்வார். அழகிய லைலா : 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலில் கதாநாயகன் கார்த்தி ஆடும் நடனத்தைப் பார்க்காமல், கவுண்டமணியின் நடனத்தை மட்டும் பார்த்தால் 'குபீர்' சிரிப்பு தான். கவுண்டமணியின் பாடி லாங்வேஜை நினைத்துப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படிப்பட்டவர் ஆடினால் எப்படி இருக்கும்! இந்தப் பாடலில் தனது தனித்துவமான ஆட்டத்தை ஆங்காங்கே வெளிப்படுத்துவார். மேகம் கருக்குது : 'குஷி' படத்தில் வரும் பாடல் தான் 'மேகம் கருக்குது' பாடல். ஜோதிகா தன் சிறப்பான நடனத்தை அதில் வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் பாடலில் ஜோதிகாவின் நடனத்தைக் கவனிக்காமல், அவரோடு இணைந்து நடனமாடும் கோ டான்ஸ்சர்களைக் கவனித்தால், அவர்கள் செய்யும் லூட்டிகளைக் காணலாம். பாடலில் திடீரென இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடுவது, ஜோ நடனமாடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே இவர்கள் ஸ்டெப் போடுவது என்று பாடல் முழுவதுமாக இவர்களின் லூட்டிக்குகளுக்குப் பஞ்சமிருக்காது. ரோமியோ ஆட்டம் போட்டால் : இந்தியன் 'மைக்கில் ஜாக்ஸன்' பிரபுதேவா பட்டையைக் கிளப்பிய பாடல் 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே'. இந்தப் பாடலில் கண்ணுக்குத் தெரியாமலே சில காமெடிகள் உள்ளன. வடிவேலு திரையில் இருந்தால் சொல்லவே தேவையில்லை அவரையும் தாண்டி ஒரு சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் சிரிப்பு தானாகவே வந்துவிடும். ஷில்பா ஷெட்டி, பிரபுதேவா இருவரும் நடனமாடிக் கொண்டிருக்க, திடீரென தரையில் ஒருவர் ஊர்ந்து செல்வார். திடீரென குறுக்கே ஓடுவார். முக்கியமாக அவரின் காஸ்ட்யூம்ஸ் வேற லெவல்! கொக்கு சைவ கொக்கு : 'முத்து' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கொக்கு சைவ கொக்கு' பாடல். இந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பலரும் நடனமாடியிருப்பர். அவர்களை விட்டுவிடுவோம். இந்த முறை இப்பாடலில் நடிகர் பொன்னம்பலத்தையும் அவருடன் இணைந்து ஆடும் பருமனான நபரை மட்டும் பாட்டு முடியும் வரை பார்த்தால், ஃபுல் எஞ்சாய்மென்ட் தான். மோசமான ஒரு வில்லனை அழைத்துவந்து டான்ஸ் ஆடச் சொன்னால் என்ன ஆகும்ன்றத விஷுவல்ல பாருங்க மக்களே. ஊத்திகினு கடிச்சுக்கவா : இந்தப் பாடலைக் கேட்டாலே நம் தலைமுடி கூட டான்ஸ் ஆடும். அந்த அளவு நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றக்கூடிய தேவாவின் இசையும், வரிகளும் அமைந்த பாடல். இந்தப் பாடல் முழுவதுமே அதகளம் தான். சுற்றியுள்ளவர்களை மட்டும் கூர்ந்து கவனித்தால், பாடலைத் தாண்டி சில நகைச்சுவைகள் சிக்கும். அவர்கள் கொடுக்கும் ரியாக்சன்கள், டான்ஸ் ஸ்டெப் என ஒவ்வொன்றிலும் காமெடி ததும்பி வழியும். சின்னச்சின்ன விஷயத்தையும் தவறாது கவனித்துப் பார்த்தால் நடனத்தைத் தாண்டி சில காமெடிகள் தெரியும். vikatan
 24. 1 point
  தமிழ்நாட்டு அரசியலை கூர்ந்து புகுந்து கவனிச்சு பாத்தால் தீபா மட்டுமில்லை எங்கடை நித்தியானந்தாவும் முதல்வராய் வரலாம் தானே.. மந்திரம் தந்திரத்தாலை வித்தை காட்டக்கூடியவர். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர். மக்களோடு மக்களாக இருந்து பகிர்ந்து உண்ணக்கூடியவர்.. மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்... எல்லாவற்றையும் விட சிறை சென்று களி உண்ட பெருமை இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்... இந்தியாவிலை சிறை போனால் நூறு பொயின்ஸ் எக்ஸ்ரா..
 25. 1 point
  பொருத்து வீட்டுத்திட்டத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பாரிய கமிசன் அரசியல் இருக்கிறது என நினைக்கிறேன். சுமந்திரனும் இதனை உறுதிப் படுத்துகிறார் ஒரு வீட்டின் விலை 21 லட்சம் என சொல்லப்படுகிறது, இதன் உண்மைப் பெறுமதி 15 , 16 லட்சத்திற்கு மேற்படாது (என் கணிப்பு) , மிகுதி அனைத்தும் பங்கு பிரிபடப் போகிறது ,அமைச்சருக்கு ஒரு வீட்டிற்கு 1 லட்சம் கமிசன் கிடைத்தால் 50 ஆயிரம் வீடுகள் என வைத்தால் கூட ,50 ஆயிரம் லட்சம் , 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ..... செம டீல் அதனால் தான் சுவாமிநாதன் ஒற்றைக்காலில் நிற்கிறார், பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதே தனது குறிக்கோள் எனவும் , வீட்டுத்திட்டத்தினை எதிர்ப்பவர்களை , மக்களின் விரோதியாகவும் காட்ட முயல்கிறார் (3ஆம் உலக நாடுகளில் அபிவிருத்திக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு இது, இதனை நன்கு தெரிந்து கொண்டதால் தான் சுவிசிலுள்ள உதவி செய்யும் அமைப்புக்கள் ஒரு போதும் தாம் உதவி செய்ய விரும்பும் திட்டத்திற்குரிய பணத்தினை அந்த நாடுகளின் அரசாங்கத்திடம் கொடுப்பதில்லை , தாமே நேரடியாகப் பொறுப் பெடுத்து செய்து முடிப்பார்கள், இங்கே உதவி நிறுவனங்கள் மக்களிடம் நிதி சேகரிக்கும் போது திட்டங்களை தாம் நேரடியாக செய்வதாக குறிப்பிடுவார்கள் . ) மக்கள் உண்மையிலேயே முகாம்களிலும் , கொட்டில்களிலும் மிகவும் துன்பப்படுகிறார்கள் இந்த துன்பங்களைத் தான் சுவாமிநாதன் தனது டீலுக்கான முதலீடாகக் கருதுகிறார் சுவாமிநாதன் உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் எனில் ...... அரசின் முக்கிய அமைச்சர் என்ற வகையில் அரசியல் கைதிகள் விடயத்திலோ அல்லது காணாமல் ஆக்கப் பட்டோரின் விடயத்திலோ கவணம் செலுத்தியிருக்கலாமே...... பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் வட மாகாணத்திற்கு வெளியேயும் எதிர்ப்புகள் உள்ளன அவற்றையும் நாம் கருத்திலெடுக்க வேண்டும். மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா "பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை" எனக் கூறுகிறார். பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்
 26. 1 point
  கியூபா காரர் 4/5 நிமிடம் தான் தாக்கு பிடிக்கினம், அதுதான் கனடாவில் உள்ள நம்ம ஆட்கள் புகுந்திருக்கிறார்கள்.
 27. 1 point
  பழங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி? #FruitBuyingTips சந்தை, மார்க்கெட், தெருவில் கூவி விற்கும் வியாபாரிகளிடம் வாங்குவது போய், இன்றைக்கு சூப்பர்மார்க்கெட்டிலேயே கிடைக்கும் சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது பழங்கள். தஞ்சை வாழைப்பழம் தொடங்கி ஆஸ்திரேலிய ஆரஞ்சு வரை அத்தனையும் வாங்கலாம். குவித்து வைக்கப்பட்டு, பேப்பரில் சுற்றிவைக்கப்பட்டு, பாலிதீன் பைகளில் பேக் செய்யப்பட்டு அடுக்கிவைத்திருக்கும் பழங்கள் நிறத்திலும் சரி... பளபளப்பிலும் சரி, அத்தனை அழகு! ஆரோக்கியம்..? அதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி. சரி, பழங்களைப் பார்த்து வாங்குவது எப்படி? நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் அழகைப் பார்த்து, அந்தப் பழங்களில் எல்லாம் தரம், சுவை உள்ளது என நினைத்தால், அது தவறு. சில நேரங்களில் வீட்டுக்கு வந்து நறுக்கிப் பார்க்கும்போதுதான் தெரியும்... அதிகமாகப் பழுத்து, கொழகொழவென இருக்கும்; அல்லது பழுக்கவே பழுக்காத காயாக இருக்கும்; அழுகிப்போயும் இருக்கும். இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியுமா? பழத்தின் தரம் அதன் நிறத்திலோ, பளபளப்பிலோ, வாங்கும் சூப்பர்மார்க்கெட்டின் பிராண்ட் பெயரிலோ இல்லை. பழங்கள் வாங்கும்போது சில விஷயங்களை கவனித்தால், மோசமான, சரியில்லாத பழங்களை நாமே தவிர்த்துவிடலாம். அவை என்னென்ன என விளக்குகிறார்... சென்னையில், 'லோக்கோ ஃப்ரூட்ஸ்' பழக்கடை வைத்திருக்கும் டி.அமீத் கான். ஆப்பிள் நம் நாட்டு சிம்லா ஆப்பிள் இளஞ்சிவப்பாக அதிகச் சதையோடு இருக்கும். இதைச் சாதாரணமாக நீரில் கழுவிச் சாப்பிடலாம். ஆனால், ஃபிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே கிடைக்கும் ஆப்பிள், அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஆப்பிள்கள், மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாமல் இருக்க, இவற்றின் தோல் மேல் மெழுகைத் தடவிவிடுகிறார்கள். எனவே, இந்த ஆப்பிள்களை வாங்கினால், தோலை கட்டாயமாக அகற்றிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும். எந்த ஆப்பிளாக இருந்தாலும் காம்பைக் கிள்ளிப் பார்க்க வேண்டும். உள்ளே லேசான பச்சை நிறம் தெரிந்தால், அது நல்ல ஆப்பிள். இதை வாங்கலாம். சிவப்பாக இருந்தால், அதிமாகப் பழுத்தது; சீக்கிரம் அழுகிவிடும். வாங்கக் கூடாது. மாதுளை கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விளையும் மாதுளைகள் அதிகத் தரமானவை. சுவைமிக்கவை. அதிக சிவப்பாக இருக்கும் மாதுளைகள் ஆஃப்கானிஸ்தான், காபூலில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.இவற்றை வாங்கும்போது கவனம் தேவை. மாதுளையின் மேல் தோலை நசுக்கிக் பார்க்கவும். தோல் கடினமாக இருந்தால், நல்ல மாதுளை. மிருதுவாக இருந்தால், அதிகம் பழுத்த அல்லது கெட்டுப்போன மாதுளை. கெட்டுப்போன பூச்சி உள்ள மாதுளையில் கருப்புப் புள்ளிகள், துளைகள் இருக்கும். திராட்சை சமீபகாலமாக விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட சிறிய பச்சை திராட்சைகள் பிரபலமைடையத் தொடங்கிவிட்டன. விதையில்லாத பச்சை திராட்சைகளைவிட, விதையுள்ள பெரிய நாட்டு திராட்சை சுவைமிகுந்தது; உடலுக்கு நன்மை தருவது. திராட்சை வாங்கும்போது அதன் காம்பு பச்சையாக இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், அது நல்ல திராட்சை. காம்பு கறுப்பாக இருந்தால், அதிகம் பழுத்த திராட்சை. திராட்சையை எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர், அல்லது உப்புத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால் கை மூலமாகப் பரவும் கிருமித்தொற்றுகள் நீங்கும். ஆரஞ்சு, சாத்துக்குடி இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அடர்ந்த மஞ்சள் நிறம்கொண்ட, சிறிதாக இருக்கும் கமலா ஆரஞ்சு; இள மஞ்சள் நிறம்கொண்ட, அளவில் பெரிதாக இருக்கும் சாத்துக்குடி. `கமலா ஆரஞ்சு’ என்று அழைக்கப்படும் நாட்டு ஆரஞ்சு, கொடைக்கானல், பெங்களூரு, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பழுக்காத, பச்சை நிறமுள்ள சாத்துக்குடி சாப்பிட ஏற்றதல்ல. இதை வாங்கக் கூடாது. பழத்தின் மேல் பகுதியை அழுத்திப் பார்க்க வேண்டும். பழத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி கெட்டியாக இருக்கவேண்டும். மிருதுவாக இருந்தால் அதிகம் பழுத்தது என்று அர்த்தம். இது சீக்கிரம் கெட வாய்ப்புள்ளது. இதனை வாங்கக் கூடாது. பெரிய பழத்தை வாங்கக் கூடாது. இதன் உள்ளே சதை அதிகமாகப் பழுத்திருக்கும். சீக்கிரம் கெட்டுவிடும். பப்பாளி நாட்டுப் பப்பாளியே உடலுக்கு ஏற்றது. நாட்டுப் பப்பாளி கறுப்புப் புள்ளிகள் கொண்டது. மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் கறுப்புப் புள்ளிகள் இருக்காது. கடைக்காரர்கள், நாட்டுப் பப்பாளியை `நீட்டுப் பப்பாளி' என்று அழைப்பார்கள். இதன் சதைப் பகுதி சிவப்பாக இருக்கும்; விதை இருக்கும்; சுவை அதிகமாக இருக்கும். கனியாத, பச்சையாக உள்ள பப்பாளியை வாங்கக் கூடாது. மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் விதைகள் இருக்காது; உட்பகுதி மஞ்சளாக இருக்கும்; சுவை குறைவாக இருக்கும். வீட்டில் பப்பாளியை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால், ஃபங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பழத்தைக் காகிதத்தில் சுற்றிவைக்கலாம். வாழை மரபணு மாற்றப்பட்ட வாழை புத்தம் புதிதாக, கருப்புப் புள்ளிகள் இல்லாமல் பளபளவென இருக்கும். பழத்தோல் அடர்த்தியாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பலவிதமான உடல் உபாதைகள், பாதிப்புகள் ஏற்படலாம். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நாட்டுப்பழங்களில் பூச்சிகடித்ததன் அடையாளமாக, கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தோல் மெல்லியதாக இருக்கும். சதைப்பகுதி அதிகமாக இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். இவை தினமும் சாப்பிட ஏற்றவை. மாம்பழம் இன்று, `மல்கோவா’, `பங்கனப்பள்ளி’ ரக மாம்பழங்கள், கார்பனேட் கல் போட்டு குறுகியகாலத்தில் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகிறன. நல்ல பழங்கள் எவை என சில அறிகுறிகளைவைத்துக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தின் அனைத்துப் பகுதிகளும் சமமாகப் பழுத்திருக்காது. சில இடங்கள் கடினமாக, பழுக்காமல் இருக்கும். பழத்தின் மேல் பால் கறை இருக்காது. பார்க்க, பளபளப்பாக இருக்காது. இனிப்புச் சுவையுடன் இருக்கும். புளிப்பு சுவை இருக்காது. அன்னாசி நல்ல அன்னாசிப்பழம், எல்லா இடங்களிலும் சமமாகப் பழுத்திருக்காது. பழத்தின் அடிப்பகுதியை அழுத்திப் பார்த்தால், கடினமாக இருக்க வேண்டும். மிருதுவாக இருந்தால், கெட்டுப்போன பழமாகவோ, அதிகமாகப் பழுத்த பழமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. தர்பூசணி கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலங்களில் விளையும் மஞ்சள் தர்பூசணி தமிழகத்தில் விற்பனையாகின்றன. இவற்றைவிட இளம் பச்சை நிறம்கொண்ட, `வரி தர்பூசணி’ உடலுக்கு நல்லது. இவை சென்னை, கல்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் விளைகின்றன. மரபணு மாற்றப்பட்ட, `ஊதா நிற தர்பூசணி’ இந்த ஆண்டு விரைவில் தமிழகக் கடைகளுக்கு வர உள்ளது. தர்பூசணியைத் தட்டிப் பார்த்து வாங்கவேண்டும். தட்டும்போது 'தங்', 'தங்' எனத் தண்ணீர் சத்தம் வர வேண்டும். 'டப்','டப்' எனச் சத்தம் வந்தால், பழம் அதிகமாகப் பழுத்துவிட்டது என்று அர்த்தம். இதனை வாங்கக் கூடாது. vikatan
 28. 1 point
  புறோக்கர் பொன்னம்பலம் | EP 09
 29. 1 point
  மிகவும் நல்ல பேச்சு .... கட்டாயம் எமது ஆட்கள் இதை பார்க்க வேண்டும். அடிமையாய் இருந்து பழகிப்போனது மட்டும் இல்லை அடுத்த தலைமுறைக்கும் அதை பழக்கி கொடுப்பதில் வல்லவர்கள் தமிழர்கள். இது என்னுடையது என்ற எண்ணம் எப்போது இருக்க வேண்டும் எதிலும் இருக்க வேண்டும் .... இந்த பூமி ... நாடு ... மொழி .... ஏன் மணமுடித்தால் மனைவி. அப்படி ஒரு அடித்தள எண்ணம் வந்துவிட்டால் மற்றதெல்லாம் தானாக வரும். அதை எப்படி பாதுகாக்க வேண்டும் எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் அங்குதான் பிறக்க தொடங்குகிறது. இணைப்பிட்கு நன்றி நுணாவிலான் ... பார்க்கும்போது இதை இங்கே இணைக்க எண்ணினேன். எதோ ஒரு சோம்பேறி தனம் அதை செய்ய தூண்டுதல் தரவில்லை. யாரோ ஒருவன் மூளையில் என்றாலும் இந்த பேச்சு ஒரு சிறு தீயை உண்டு பண்ணும் என்ற உங்கள் எண்ணம்தான் உயர்வானது !
 30. 1 point
  2017: கலக்கப்போகும் தொழில்நுட்பங்கள்! காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்கக்கூடிய சாதனங்களை மூக்குக் கண்ணாடி போல அணிந்திருப்போம். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவைச் செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்... இவையெல்லாம் என்னவென்று வியக்கிறீர்களா? 2017 - ம் ஆண்டில், தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுநர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டுபவை இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் நாம் நினைப்பதையும், புரிந்துகொள்வதையும்விட வேகமாக உருவாகிவரும் நிலையில், இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பப் போக்குகள் பற்றிப் பார்ப்போம்: அசத்தும் அணிகணினிகள் ‘வியரபில்ஸ்’ எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜனப் பழக்கத்துக்கு வர ஆரம்பித்துவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ‘ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ்’ புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீனத் தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும் கழுத்துச் சங்கிலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணினிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன. ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள் ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்பப் பித்தர்களுக்கான நவீன விளையாட்டுச் சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்புப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களின் பங்களிப்பு அதிகரித்துவருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் நுழையலாம். கூடவே ட்ரோன்களின் தொல்லையும் அதிகரிக்கலாம். மெய்நிகர் மாயம் பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வரப்போகிறது என உணர்ந்துகொள்ளலாம். அந்த வகையில், ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ‘ஆக்குலஸ் ரிப்ட்’ நிறுவனத்தின் மூலம் இது தொடர்பான ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்குக் கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோ கேம் முதல் உளவியல் சிகிச்சை வரை இந்த மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்கள் தயாரா? இன்னொரு யதார்த்தம்! கடந்த ஆண்டு உலகத்தை ஆட்டிப்படைத்த ‘போக்கேமான் கோ’ விளையாட்டு நினைவிருக்கிறதா? இது வெறும் ஸ்மார்ட் போன் விளையாட்டு அல்ல; நிஜ உலகையும், இணைய உலகையும் இணைக்கும் ஒரு புதிய வகை விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு ‘கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி’ அதாவது மேம்பட்ட யதார்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. நிஜ வாழ்க்கைப் பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சி இது. கல்வித் துறை உட்பட பல துறைகளில் இதன் பயன்பாட்டைக் காணும் நிலை வரலாம்! செயற்கை நுண்ணறிவு ‘ஏ.ஐ’ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறிவருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித் துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது, பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம்காட்டிவருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும் முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதேபோல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் எனச் சொல்கின்றனர். அரட்டைக்கு உதவுவது முதல், சேவைகளுக்கு வழிகாட்டுவது வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. ‘எனக்கொரு பாட் வேண்டுமடா’ எனப் பாடும் அளவுக்குத் தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம். புத்திசாலி செயலிகள் இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளைவிடப் புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக, மின்னஞ்சல் சார்ந்த ஒரு செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான மின்னஞ்சல்களைக் கண்டறிந்து ‘இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும்’ எனப் பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவுதான்! எதிர்கால கார்கள் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கெனவே தானியங்கி கார்கள் ‘எல்-போர்டு’ மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்பக் கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி ‘டிரக்’, பஸ்களும் பவனிவரத் தொடங்கியுள்ளன. இணைய ‘கால் டாக்சி’ நிறுவனமான ‘உபெர்’ நிறுவனமும் இதில் ஆர்வம்காட்டிவருகிறது. சைபர் தாக்குதல் உஷார் ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தாக்காளர்களின் கைவரிசை இந்த ஆண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களைக் கொத்துக் கொத்தாகக் களவாடிச்செல்வதும், போன்களையும் கணினிகளையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், ‘பிஷிங்’ (Phising) வகை மோசடிகளும் அதிகரித்துவருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதால் என்கிரிப்ஷன் பாதுகாப்பு குறித்தெல்லாம் இணையச் சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். பேட்டரி ஆற்றல் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்குத் தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகமாக உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்! அதே போல புதிய வகை ஸ்மார்ட் போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம். இயர்போன் புதிது காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் ‘வயர்லெஸ்’ நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்துவருகின்றன. ஆப்பிளின் ‘ஏர்பாட்’ உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுக்கின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. பிளாக்செயின் நுட்பம் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித் துறையில் அதிகம் நிகழ்வதை அண்மைக் காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிவருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்தப் பிரிவில் முக்கியமாகப் பேசப்படும் பிளாக்செயின் (Blockchain) நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு (Bitcoin) அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது. பொருட்களின் இணையம் ‘இண்டெர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன. tamil.thehindu
 31. 1 point
  இசை, குட்டி சின்னம்மாவின் இரண்டு கைகளும் ஏன் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன? அவர் கையில் ஏதும் முறிவு ஏற்பட்டதா அல்லது இதன் பின்னால ஏதும் அரசியல் சூத்திரம் உள்ளதோ?
 32. 1 point
  பஞ்சு அருணாச்சலம் பற்றிய ஆவணப் படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது Jan 07, 2017 தமிழ்த் திரையுலகின் மகத்தான திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான மறைந்த திரு.பஞ்சு அருணாசலம் பற்றிய ஆவணப் படம், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. `தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி` என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆவணப் படத்தை, திரு அருள் புரொடெக்சன்ஸ் சார்பில் லலிதா ஜெயானந்த் – எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த ஆவணப் படம் ஏற்கெனவே சென்ற நவம்பர் மாதம் கோவா நகரில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த ஆவணப் படத்தை புளூ ஓஷன் திரைப்பட – தொலைக்காட்சி கல்லூரியின் தலைவரான கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.எஸ்.விக்னேஷ் படத் தொகுப்பை கவனிக்க, ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பை ஷாமந்த் மேற்கொண்டுள்ளார். பஞ்சு அருணாசலம் அல்லது பஞ்சு என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், சாதனைகள் பல படைத்த ஒரு படைப்பாளி மட்டுமல்ல. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்ற இரு பெரும் சாதனையாளர்கள் தமிழ் சினிமாவில் உருவாக, தனது எழுத்துகள் மூலம் பெரும் பங்காற்றியவர். இளையராஜாவை அறிமுகம் செய்து ஒரு இசை புரட்சியையே தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்தவர். தமிழ் சினிமாவில் பஞ்சுவின் சாதனைகள் மதிப்புமிக்கது. இவர் 45 திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இவற்றில், 70 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல, 150 திரைப்படங்களில், 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 45 படங்களை தயாரித்த பெருமைக்குரியவர். 1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத் தனது திரைப் பணியை தொடங்கிய பஞ்சு, கடந்த 47 வருடங்களில் சாதனைகள் பல படைத்து, அதை பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தவர். இசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு 1976-ல் தனது தயாரிப்பான ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்து இசை புரட்சியை செய்தது இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று. இந்த ஆவணப் படத்தில் `இயக்குநர் இமயம்` பாரதிராஜா கூறியதுபோல, “தமிழ் சினிமாவை முதன் முதலில் ஸ்டுடியோக்களுக்கு வெளியே எடுத்துச் சென்று `அன்னக்கிளி` திரைப்படத்தை வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பு நடத்தித் தயாரித்ததும் இவர்தான். ரஜினிகாந்த்துக்கு 23 மாறுபட்ட திரைப்படங்களை எழுதி, அவரை ஒரு பெரிய நடிகனாக மாற்றியதும், கமல்ஹாசனை, வெகுஜன மக்களிடம் தனது எழுத்துகள் மூலம் 13 படங்களில் கொண்டு சென்றதும் பஞ்சு அவர்கள்தான். இந்த ஆவணப் படம், பஞ்சுவின் சிறு வயது முதல், அவர் கடந்து வந்த பாதை, குடும்பம், அவரது திரைப்படப் பிரவேசம், முதலில் சந்தித்த தோல்விகள் – வெற்றிகள் – சாதனைகள் – அதன் பின் பெற்ற தோல்விகள் – படிப்பினைகள் என அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. 95 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், சாதனையாளர்கள் பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை உணர்வுபூர்வமாக விவரித்துள்ளனர். பஞ்சுவின் திரைப்படங்கள் பலவற்றிலிருந்து பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பஞ்சுவின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப் படத்தில், 35 பெரிய சாதனையாளர்கள் அவரது படங்கள் பற்றியும், தங்களது வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் மனம் திறந்து பேசுகிறார்கள். இவர்களின் பங்களிப்பால், இந்த ஆவணப் படம் பெரும் மதிப்பை பெற்றது. Dhananjeyan sir with Legendary Paanchu Sir குறிப்பாக, `சூப்பர் ஸ்டார்` ரஜினிகாந்த், பாரதிராஜா, மகேந்திரன், வி.சி.குகநாதன், ஜி.என்.ரங்கராஜன், சிங்கிதம் சீனிவாசராவ், பி.லெனின், கங்கை அமரன், அபிராமி ராமநாதன், கே.ஆர்., கலைஞானம், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், சுந்தர் சி., ஏ.வெங்கடேஷ், அண்ணாதுரை கண்ணதாசன், சி.வி.ராஜேந்திரன், `சித்ரா` லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, சத்யராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், ராதிகா சரத்குமார், ஒளிப்பதிவாளர் பாபு போன்றவர்களின் ஆர்வமும், பங்களிப்பும் இந்த ஆவணப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இந்த சாதனையாளர்களின் பேட்டிகளும் கருத்துகளும், ஒரு தொலைக்காட்சித் தொடராக, விரைவில் வெளிவர இருக்கிறது. திரையரங்கிலும் வெளியாகவிருக்கும் இந்த 95 நிமிட ஆவணப் படம்,தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்தவுடன் டி.வி.டி. மற்றும் புளு-&ரே போன்ற மின் தகடுகளின் மூலமும் வெளிவரும். தொட்டதெல்லாம் பொன்னாக்கிய ஒரு மாபெரும் சாதனையாளரை பற்றிய இந்த ஆவணப் படம், சினிமாவில் நுழைய நினைக்கும் அனைவருக்கும் ஒரு வரப் பிரசாதம். சினிமாவில் உள்ளவர்களுக்கு ஒரு படிப்பினை. தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளியான பஞ்சுவை பற்றிய இந்த ஆவணப் படம் ஒரு புதிய பாதையை உருவாக்கி, பிற சாதனையாளர்களை பற்றியும் ஆவணப் படங்கள் தயாரிக்க ஒரு உந்துதல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆவணப் படக் குழு: ஆராய்ச்சி, எழுத்து மற்றும் இயக்கம்: கோ. தனஞ்ஜெயன் (இயக்குநர் & பாஃப்டா திரைப்படக் கல்லூரி) தயாரிப்பு : லலிதா ஜெய்ஆனந்த் மற்றும் எஸ். உமா மகேஸ்வரி ஒளிப்பதிவு : சுதர்சன் சீனிவாசன் படத்தொகுப்பு : ஜெ.எஸ். விக்னேஷ் பின்னணி இசை: ஷமந்த் பஞ்சு அவர்களது ஆவணப் படம், சென்னை உலகத் திரைப்பட விழாவில் ஜனவரி 8-ம் தேதியன்று ஐநாக்ஸ் திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது.
 33. 1 point
  முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். சிக்கன் பக்கோடாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறலாம். குறிப்பு: சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம். http://www.vikatan.com/news/health/77147-in-thirty-minutes-ready-to-chicken-pakoda.art
 34. 1 point
  முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய். முடிந்த வகைகளில எல்லாம் நன்மை செய். முடிந்த இடஙகளில் எல்லாம் நன்மை செய். முடிந்த நேரங்களில் எல்லாம் ந்ன்மை செய். முடிந்த மனிதருக்கு எல்லாம் ந்ன்மை செய். இது எதுவுமே செய்யாட்டிலும் பரவாயில்லை. தீமை மட்டும் செய்யாது இரு.
 35. 1 point
  குறைந்த விலையில் கூடிய இன்பம் பெற இன்றே வாருங்கள்.
 36. 1 point
  செயலில் ஈடுபடாத நம்பிக்கை பட்டினி தருவது நிட்சயம்
 37. 1 point
  அறிவோம் நம் மொழியை... - பிரச்சினை எங்கே இருக்கிறது? ஆங்கிலத்தில் கலைச் சொற்களைத் தமிழில் பெயர்க்கும்போது ஒரே சொல்லாகக் கொண்டுவர முடியவில்லை என்னும் ஆதங்கம் நியாயமானது. கலைச் சொற்களும் துறைசார் சொற்களும் (globalisation, demonetisation, faculty, fellowship…) ஒரு மொழியில் இயல்பாக உருவாகும்போது, அம்மொழிக்கே உரிய தன்மையுடன் சிக்கனமாக உருவாகும். கலை / துறைசார் சொற்கள் பலவற்றுக்கு, நேரடிப் பொருள்கொள்ள இயலாது என்னும் நிலையில், அவை சுட்டும் பொருளை மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் சிக்கல் வரத்தான் செய்யும். அதே சிக்கல், தமிழிலிருந்து ஆங்கிலம் முதலான மொழிகளுக்குச் செல்லும்போதும் வரும். பரிசம்போடுதல், வெற்றிலை பாக்கு வைத்தல், களவொழுக்கம், மூக்கில் வியர்த்தல், சொறிந்து கொடுத்தல் முதலானவற்றை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது, இதுபோன்ற சிக்கல் வரத்தான் செய்யும். எனவே, மொழிபெயர்ப்புச் சிக்கல்களை, அதிலும் கலை / துறைசார் சொற்களின் மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தமிழ் மொழிக்கே உள்ள சிக்கல்போலப் பேசுவது பிழையானது. (மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி இந்தப் பத்தியில் தனியாக அணுகவிருக்கிறேன்.) படைப்பூக்கமும் மொழி ஆளுமையும் உள்ளவர்களிடத்தில் சிக்கனம் அவர்களுடைய இயல்பாகவே இருப்பதைக் காணலாம். ஒரு பின்னணியை, கதையைச் சொல்லிக்கொண்டே போகும்போது அது தேவைக்கு அதிகமாக விரிந்துகொண்டுபோவதை உணரும் எழுத்தாளர், To cut a long story short என்று சொல்லி, சுருக்கமாக ஓரிரு சொற்களில் / வாக்கியங்களில் முடித்துவிடுவது உண்டு. விரித்துச் சொன்னது போதும் என உணரும்போதும் இப்படி நடக்கும். ஆங்கிலத்தில் இது இயல்பாகப் புழங்குவதைக் காணலாம். ஆங்கில வாசிப்பின் மூலம் இதை அறியும் சிலர், தமிழில், இதுபோன்ற சூழல்களில், ‘நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வதானால்’என எழுதத் தலைப்படுகிறார்கள். இது தமிழ்ப் பண்புடன் ஒட்டாமல் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது அல்லவா? இதற்கு மாற்று என்ன? புதுமைப்பித்தன் மிக எளிதாக இதை எதிர்கொண்டிருக்கிறார். ‘வளர்த்துவானேன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஒற்றைச் சொல்லில் To cut a long story short என்பதன் சாரமும் தொனியும் கூர்மையாகப் பிரதிபலிப்பதைப் பாருங்கள். இந்தச் சொல் புதுமைப்பித்தனின் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால், இந்த இடத்தில், இப்படிப் பயன்படுத்தியது அவருடைய படைப்பாற்றல். தமிழை இயல்பாக உள்வாங்கி, இயல்பாகக் கையாளும்போது இவையெல்லாம் சாத்தியமாகும். ஆங்கிலமே பிறந்திராத ஒரு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்தும் உதாரணம் காட்டலாம். சீதையைக் கைப் பிடிக்க ராமன் சிவன் வில்லை முறித்தது ராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்வு. ராமன் மிக வேகமாகவும் இலகுவாகவும் இதைச் செய்கிறான். கம்பன் இதை ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்கிறார். வில்லை எடுத்ததைப் பார்த்தவர்கள் பிறகு வில் முறியும் ஒலியைத்தான் கேட்டார்களாம். நடுவில் நிகழ்ந்ததை ஒருவரும் அறியவில்லை. அவ்வளவு வேகமாக அது நடந்துவிட்டது என்கிறான் கம்பன். ராமனின் வில்லாற்றலுக்குச் சவால் விடும் இந்தச் சொல்லாற்றல் தமிழின் சிக்கனத்துக்குப் பொருத்தமான சான்றல்லவா? பிரச்சினை எங்கே இருக்கிறது? மொழியிலா, அதைப் பயன்படுத்துபவர்களிடத்திலா? (மேலும் அறிவோம்…) http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-பிரச்சினை-எங்கே-இருக்கிறது/article9410833.ece?ref=relatedNews
 38. 1 point
  10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேசாத பேச்சு! ``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா! - கி.ரவிக்குமார் ஞானம் கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்! - கீர்த்தி நடிப்பு `ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்! - எஸ்.ரமணி சின்ன மீன்... பெரிய மீன்! வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்... 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி ! - ஸ்ரீ ரங்கம் ஏ.எஸ்.முரளி சுதந்திரம்?! சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்! - சொக்கம்பட்டி தேவதாசன் அனுபவம்... அறிவு! “நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?” “அப்பதாம்ப்பா, அவங்க நல்லா படிப்பாங்க!” - கி.ரவிக்குமார் ஒன்று எங்கள் சாதியே... சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்! - கா.ரமேஷ் ஆடுகளம் 10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்... வீடியோ கேம்ஸில்! - பெ.பாண்டியன் சந்தேகம் ``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” - சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்... “உங்க ஆபீஸுக்கு!” - கி.ரவிக்குமார் பாடம்! நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது... வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது! - நவநீ குரு http://www.vikatan.com
 39. 1 point
  ஒரு கிரிக்கெட் போட்டி, ஒரு ரசிகை, ஒரு வீரர், ஒரு கேமராமேன் எல்லோரும் சேர்ந்து அடித்த ரகளை..
 40. 1 point
  4. நினைத்து நினைத்து பார்த்தேன்..! இயக்குநர்கள் + இசையமைப்பாளர்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழில் இத்தகைய கூட்டணிகள் இருந்தே வந்திருக்கின்றன. தமிழின் முதல் சூப்பர் ஸ்டாராகிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் முக்கியமான படங்கள் அனைத்துக்கும் இசை பாபநாசம் சிவன். இவரது ‘சிந்தாமணி’, ’அம்பிகாபதி’, ’திருநீலகண்டர்’, ’அஷோக் குமார்’, ’சிவகவி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய பிரமாதமான வெற்றிப்படங்கள் பாபநாசம் சிவனின் பாடல்களாலேயே மிகப்பிரபலமாகின. இப்படங்களை YV ராவ், எல்லிஸ் ஆர் டங்கன், ராஜா சாண்டோ, எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு, சுந்தர்ராவ் நட்கர்னி முதலிய பலர் இயக்கியிருந்தாலும், இசையாலும் பாடல்களாலுமே இப்படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின என்ற கருத்தில் மறூப்பு இருக்காது. பாகவதரின் அருமையான குரல்வளத்துக்குப் பாபநாசம் சிவனின் பாடல்கள் அட்டகாசமான கூட்டணியாக அமைந்தன. பாகவதர் கிட்டத்தட்ட கடவுளைப் போல பிரபலமானார்.’கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ’சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’, ’பூமியில் மானிட ஜென்மம்’, ‘ராஜன் மகராஜன்’, ’வதனமே சந்த்ர பிம்பமோ’, ’அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்’, ’சத்வகுண போதன்’, ’வசந்த ருது மன மோகனமே’ முதலிய பாடல்கள் இன்றுமே கேட்க இனியவை (பாகவதரைப் பற்றி இந்தத் தொடரில் விபரமாகப் பிறகு பார்க்கப்போகிறோம்). பாகவதரின் காலத்துக்குப் பிறகு, இயக்குநர்களின் காலம் துவங்கியது. ஸ்ரீதர், பீம்சிங், கிருஷ்ணன் – பஞ்சு, பிரகாஷ்ராவ், பந்துலு, யோகானந்த், பா.நீலகண்டன், கே.சங்கர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மற்றும் ராமசுந்தரம், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எம்.ஏ திருமுகம் முதலிய ஏராளமான இயக்குநர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர். அவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்ததில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், ஏ.எம்.ராஜா, வேதா, சங்கர்-கணேஷ், வி.குமார் போன்ற இசையமைப்பாளர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, பாடல்களை மறக்க முடியாமல் ஆக்கியதில் ஸ்ரீதர் முக்கியமானவர். இவருடன் ஆரம்பத்தில் ஏ.எம்.ராஜா கூட்டணி அமைத்துப் பிரமாதப்படுத்தினார். பின்னர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவருடன் இணைந்தனர். பின்னர் விஸ்வநாதன் மட்டும் பல இறவாப் பாடல்களை ஸ்ரீதருக்கு அளித்தார். இவர்களுடன் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, ஆலங்குடி சோமு, கொத்தமங்கலம் சுப்பு, மருதகாசி, கா.மு.ஷெரீஃப் போன்ற பாடலாசிரியர்கள் அணி சேர்ந்து, மறக்கமுடியாத பல பாடல்களை அளித்தனர். இதன்பின் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், பாக்யராஜ், மணிவண்ணன், ராஜசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், தேவராஜ்-மோகன், ராபர்ட்-ராஜசேகரன், ஆபாவாணன் முதலியவர்களின் படையெடுப்பு. அப்போது இளையராஜாவே பிரதான இசையமைப்பாளர். இத்தனை பேருக்கும் அள்ள அள்ளக் குறையாத அருமையான பாடல்களை வழங்கினார். பின்னர் ரஹ்மான் அறிமுகமானார். அவரும் பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்தார். மணி ரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், அசுதோஷ் கொவாரிகர், கதிர் போன்ர இயக்குநர்களுக்கு மறக்க முடியாத பாடல்கள் அளித்தார். இதன்பின் இன்றுவரை இப்படிப் பல இயக்குநர்கள்+இசையமைப்பாளர்கள் கூட்டணிகளைச் சொல்லலாம். இப்படிப்பட்ட இயக்குநர்+இசையமைப்பாளர் கூட்டணிகளில் செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என்ற கூட்டணி மிகவும் முக்கியமானது. செல்வராகவன் படங்கள், ஏனைய இயக்குநர்களின் படங்களில் இருந்து வித்தியாசமானவை. காதல் என்ற ஒன்று நம்மைத் தாக்கும்போது அதில் மகிழ்ச்சி மட்டுமே இல்லையல்லவா? அந்த மகிழ்ச்சியோடு நெருங்கிய தொடர்புடைய சோகமும் துயரமும் காதலின் இரண்டு முக்கியமான விளைவுகள். இவை ஒரு மனிதனை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பது பற்றிய மிக இயல்பான சித்தரிப்புகளை உள்ளது உள்ளபடி செல்வராகவன் காட்டினார். பல உணர்வுகளால் தாக்குறும் மனம், இந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் எப்படிக் கையாள்கிறது? எப்படி ஒரு மனிதனைச் செலுத்துகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் செல்வராகவனிடம் பதில்கள் இருக்கும். காதலை அழுத்தமாகக் கையாண்ட இவரது படங்களில், கதாநாயகனே இருண்ட தன்மை உடையவனாகவும் இருப்பான். தனியாக வில்லன் என்று ஒரு கதாபாத்திரம் இருக்காது. இந்தக் கதாநாயகன் உளவியல் ரீதியாக, மனதில் ஒரு பெண்ணை விரும்பத் தொடங்கியதும் ஏற்படும் மாற்றங்களால் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதே செல்வராகவனின் பெரும்பாலான படங்களின் கருத்தாக இருக்கிறது. செல்வராகவனின் நாயகர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள், அவர்களின் மனதில் எழும் காதலைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட நாயகர்களை எழுதுவதோ, அவர்களுக்கு ரத்தமும் சதையுமான குணாதிசயங்களை அளிப்பதோ எளிது அல்ல. இவர்களை போகிற போக்கில் உருவாக்கிவிட முடியாது. மனதில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உருவாகி, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதுதான் இவை இயல்பான கதாபாத்திரங்களாக மாறுகின்றன. இவைகளுக்குள் நிகழும் காதலோ, அதன் பின் அதனால் இவர்களின் மனதில் ஏற்படும் மாற்றமோ - எதுவாக இருந்தாலும் அவைகளையும் இயல்பாகக் காட்டுவது கடினமான செயலே. அதையும் தாண்டி அவைகளை நிஜ வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களைப் போல் உருவாக்கி உலவவிடுவது பலராலும் முடியாது. அதை செல்வராகவனின் படங்கள் பெரும்பாலானவற்றில் காண முடியும். அப்படிப்பட்ட ஒரு செல்வராகவன் படத்தில் வரும் பாடல் இது. கதிர் என்ற இளைஞனுக்கு, அவரது காலனியில் இருக்கும் அனிதா என்ற வடநாட்டுப் பெண்ணின்மேல் காதல். அவளுடன் பழக ஆரம்பிக்கிறான். அவளுக்கு அவனைப் பற்றித் தெரியும். அவனது காதலை மறுத்துக்கொண்டே இருக்கிறாள். கதிர் ஒரு வெட்டிப்பயல். அவனுக்குப் பிடித்த பெண்ணைப் பேருந்தில் பார்க்கையில் கூட, அவளைப் பற்றி யோசித்துப் பார்க்காமல், தன் மொக்கையான காதலையே பெரிதாக எண்ணி அதனை அவள் மீது சுமத்தி, அவளை அழவைக்கும் இளைஞன். ஆனால் அவனது மனதில் இருக்கும் அந்த மொக்கையான காதலே கூட, அந்தப் பெண்ணின் மீது ஒரு மரியாதையான உணர்வாகவே இருக்கிறது. அந்தப் பெண் சரியாகப் புரிந்து கொள்ளாமல், உடலையே பெரிதாக நினைக்கும் இளைஞர்களிடம் பழகுகையில், அதைப்பற்றிக் கதிர் பேசும் நீளமான வசனம் மிகவும் முக்கியமானது. சிறுகச்சிறுக கதிரைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறாள் அனிதா. இருவரும் இருவரது வீடுகளுக்கும் அவ்வப்போது செல்கின்றனர். இருவருக்கும் இருவரைப் பற்றிய புரிதலும் மேம்படுகிறது. அனிதா அவனைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள். இருந்தாலும் தன் பின்னால் கதிர் சுற்றுவதை அவ்வப்போது கண்டிக்கவும் செய்கிறாள். அவளைக் கொண்டுபோய் கல்லூரியில் விடுகிறான் கதிர். அவனைப் பொறுப்பாக இருக்கச் சொல்கிறாள் அனிதா. அவனை மனிதனாக மாற்றுகிறாள். அவனிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறாள். கதிர் பொறுப்பானவனாக மாறுகிறான். அந்த நேரத்தில், எதிர்பார்க்காமல், அனிதா ஒரு விபத்தில் இறந்துபோகிறாள். அவளுக்கு இவன் மீது காதல் இல்லை என்று, அவள் பெற்றோர்களுக்காகக் கதிர் பொய் சொல்லிவிடுகிறான். அந்தப் பெண்ணின் சவ ஊர்வலத்தின்போது வரும் பாடல் இது. அவளுடன் பழகிய தருணங்கள், அவளது முகம், அவளது நினைவுகள் என்று கதிருக்குப் பல தருணங்கள் நினைவு வருகின்றன. நா.முத்துக்குமாரின் இறவா வரிகள் இந்தப் பாடலை நமது ஒவ்வொருவரின் நினைவுகளோடும் பின்னிப் பிணைய வைக்கின்றன. நம் எல்லாருக்குமே காதல்கள் உண்டு. ஆணாக இருந்தாலும் சரி- பெண்ணாக இருந்தாலும் சரி. அப்படிப் பழகியவர்களின் நினைவுகள் இந்தப் பாடல் எங்காவது ஒலிக்கும்போது ஒரு கணம் வந்துபோகாமல் இருக்காது. தனது மனதில் இருக்கும் உணர்வுகளை அப்படியே ஆடியன்ஸின் மனதில் கடத்துவது கட்டாயம் ஒரு கலை. அந்தக் கலை செல்வராகவனுக்கு இருந்தது. இசை, பாடல் வரிகள் ஆகியவை மூலம் தான் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள்/கேட்பவர்களின் மனதை ஒரு ஆட்டு ஆட்டும் விதமாகவே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலனி ஆகிய படங்களை எடுத்தார். கிட்டத்தட்ட அவரது எல்லாப் படங்களிலுமே அவப்போது, சில காட்சிகளில் அவரது அந்த brilliance வெளிப்படும். இந்தப் பாடலின் வரிகளை மட்டுமே, எந்த இசையும் இல்லாமல் படித்தாலே உள்ளுக்குள் எதுவோ ஒன்று உருகுவதை உணர முடியும். நா முத்துக்குமார் எழுதிய அமரத்துவம் வாய்ந்த பல பாடல்களில் என்னைப் பொறுத்தவரை இதுவே முதன்மையானது. யுவன் ஷங்கர் ராஜா பலவிதமான genre-களில் இசையமைப்பதில் வல்லவர். தமிழில் இளையராஜாவின் மெலடிகளை ரஹ்மானின் புதிய வடிவில் அனாயாசமாகக் கோர்ப்பதில் கில்லாடி. உண்மையில் தமிழுக்கு ஏற்ற பாடல்களை வழங்குவதில் என்னைப்பொறுத்தவரை யுவனே பிரதானமானவர். அவரது பருத்திவீரன் இசை+பாடல்கள் பற்றியே பல கட்டுரைகள் எழுத முடியும். இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடும் வடிவமும் உண்டு. அதுவும் இதற்கு இணையாக – ஏன்? இதற்கு மேலும் மனதைக் கரைக்க வல்லது. அதையும் கேட்டுப்பாருங்கள். ’அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்? உதிர்ந்துபோன மலரின் மௌனமா? தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்? உடைந்துபோன வளையல் பேசுமா உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே . . .?’ (தொடரும்) http://www.dinamani.com
 41. 1 point
  அவருக்கு எத்தனை மனைவி இருந்தால் மற்றவர்களுக்கு என்ன?... தங்களுக்கும் அப்படி கிடைக்கவில்லையே என்ட பொறாமை