Jump to content

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      23

    • Posts

      9910


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      76777


  3. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      9112


  4. நந்தன்

    நந்தன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      7556


Popular Content

Showing content with the highest reputation on 12/29/16 in Posts

  1. தேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்கின்றேன்.
    1 point
  2. வணக்கம் வாத்தியார்....! ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க சிரிப்போமே நந்தவனம் போல அதுபோதும் இந்த உயிர் வாழ போகும்வரை இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனைச்சா விலகும் வேதனை போகையிலும் நாம ஒத்துமையா போகப்போறோம் இதுதான் பெரிய சாதனை....! --- நம்பிக்கை---
    1 point
  3. அருமையான. பதிவுகள் , நன்றி தங்கச்சி
    1 point
  4. மூடிவைக்க முன்னர் நம்பிக்கையோடு கடைசி மூன்று பக்கங்களைப் பரிதாபமாகப் புரட்டினேன் அது வெறுமையாக இருந்தது அதில்தான் கவிதையே இருந்தது. Naavuk Arasan ·
    1 point
  5. HOME கட்டுரைகள் பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு on: December 28, 2016In: கட்டுரைகள் Print Email பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளம் ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் எனப்படும் இடையர் மரபு வழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை, அலங்கா நல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். பண்டையத் தமிழ் நூல்கள் ஏறு தழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன. பெயர்க் காரணம் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட, ஆயர் குல ஆடவர்கள் பெண்ணிற்க்காக காளையை அடக்க ஆரம்பித்தனர். முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும் போது திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம். வட தமிழகத்தில் வடம் மஞ்சு விரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இரு புறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது எனக் கூறப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது டில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி திருமணத்துக்கான முன் முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து ஆநிரை எனப்படும் மாட்டு மந்தையை கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும் அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. ஜல்லிகட்டு மாடு வளர்க்கப்படுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணக் கொடுக்கிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை. முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந்த நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும் காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேரே நின்று தாக்கும். வலிய கொம்புகளால் அதன் உடலைக் கிழித்துக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும் மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர். மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக் கூடியவை. ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கி வந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடி போட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊரின் தன்மையும் சேர்ந்தேயிருக்கிறது. ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியேதான் இருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக் கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை. மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்து விடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப் பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள். ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித் தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. காலத்தின் போக்கில் மனதில் உறங்கிக் கிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் மீட்கப்படுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவுகளில் கேட்கத் துவங்கியுள்ளது. “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று கூறுகிறது கலித்தொகை. அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான். தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணை அடைதற்கு வழி முறையாகவும் ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவு செய்து போய் இருக்கின்றன. இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம் மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப் போன பலவற்றையும் கலை என்ற பெயரில், கூத்து என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதி காரணம் இன்னதென அப்பழந் தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கு இருக்கும் இன்றைய அறிவு இப்பழந் தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களையும் ஆதி மனித எச்சங்களையும் பண்பாட்டில் துடித்த சமூகத்தின் வேர்களையும் வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன். நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர் நீத்த வீரர்களைக் காட்டுகின்றன. பழங்காலத்தில் காடு கரை, வீடு என்பன எல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான். அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்து வர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது. “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை” என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான். முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது. தமிழ் இலக்கியங்கள் ஏத்திப் போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு. தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப் பின் புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழு விருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்கள். காயங்களும் வலியும் உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட வேண்டும் என்று முனைபவனும் என்றாலும் ஆழமான பள்ளத்தாக்கின் மேல் ஒற்றைச் சிறு கயிற்றைக் கட்டிக் கடப்பவனும் என்றாலும் உயிர் அபாயத்திற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான். மெய் சிலிர்க்க உள் நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும். வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான். ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணி வருகின்ற, காக்கத் துடிக்கின்ற ஒரு மரபு சரியா தவறா என்கிற சர்ச்சை அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது அவற்றின் சாதக பாதகங்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீயதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்க வேண்டும். ஒற்றுமைக் குரல் என்பது நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
    1 point
  6. பண்டைய தமிழர்களின் திறமையை அழகாக அமைதியாக சொல்கிறார். தவறவிடாமல் பாருங்கள்.
    1 point
  7. அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போதுதாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,கடவுளின் பரிசு. #Good_morning_?
    1 point
  8. Saturday, December 24, 2016 கண்ணீரை வர வைத்த கவிதை ஒரு விவசாயியின் கண்ணீர்• நெத்தில கைவச்சு நெடுக பாத்தா படுத்து கிடக்குறதெல்லாம் என்னோட பயிர் தான்... தண்ணி இல்லாம தலை சாஞ்சு போச்சு அதை பாத்த எனக்கு உசுரு கொல சாஞ்சு போச்சு.... வாங்குன கடனுக்கு தூங்குற இடமும் போச்சு கூலி குடுத்த காசுக்கு தாலி கூட போச்சு... கவுர்மென்ட் ஆபிசரெல்லாம் கார் எடுத்து வராங்க கடன கட்டுனு கண்டபடி ஏசுராங்க... பலகோடி அடிச்சவன் பந்தாவா திரியிறான் நடவுக்கு கடன் வாங்குன நானோ நடுத்தெருவுல நிக்கிறேன்... ஊரை ஏய்க்கிறவனெல்லாம் உச்சத்தில வாழுறான் சோறு போட பிறந்த நானோ சேத்துக்குள்ள கிடக்குறேன்... அடியாளா இருப்பவனெல்லாம் ஆடி கார்ல் போறான் விவசாயம் பன்னுற நானோ வீதியில நிக்கிறேன்.... என்னய்யா பாவம் செஞ்சேன்? மூத்த மக இப்ப தான் முழுகாம வந்திருக்கா, ஆஸ்பத்திரிக்கி போக கூட அப்பன் எனக்கு வக்கு இல்ல.... இளைய மக இப்பதான் எட்டாவது படிக்கிறா, பரிச்சைக்கு அனுப்பக் கூட பத்து ரூவா காசில்ல.... பாத்து வளத்த பசுமாடு கூட, வயித்துல பசியோட வலியில்லாம நிக்குது.... குறுவை நடவுக்கு ஒரு கொள்ளையை வித்துட்டேன்.... உரம் வாங்கிப் போட இருந்த ஒத்தை மாட்டையும் வித்துட்டேன்.... இனிமே ஒன்னுமில்ல என்கிட்ட அடகு வைக்க, இடிஞ்சு போச்சுய்யா என்வீட்டு செவருகூட... அய்யா அரசாங்க சாமிகளே! ஆண்டுக்கு ஒருமுறையாவது அணைக்கட்ட திறந்திடுங்க... ஏய்,பட்டனத்து மனுசங்களே, உங்க வயித்துக்கு சோறு தந்த எங்க வயித்தெறிச்சல கேளுங்க... அடுத்த தலைமுறைக்கு அஞ்சாறு பிளாட் வாங்குனீங்களே, சோறு திங்க நிலம் வேணும்னு கொஞ்சூண்டு நினைச்சிங்களா? பத்திரிகை காரங்களே சென்னையில் வெள்ளம்னு முன்னால எழுதுனிங்களே... விவசாயி வேதனை மட்டும் விளையாட்டா போச்சா? கரைவேட்டி காரங்களே தேர்தல் நேரத்தில தேடிவந்து நின்னிங்களே ஓயாம அழுகுற எங்க ஒப்பாரி கேட்கலயா? மரங்கள வெட்டாதிங்க! மண்ணை அள்ளாதிங்க! மழை வந்து எட்டி பாக்கும் அதை மல்லுக்கட்டி விரட்டாதிங்க! நீங்க திங்கிற அரிசியெல்லாம் தண்ணீருல விளையல, அது எங்க கண்ணீருல விளையுது! நீங்க பட்டன தட்டுனா ஏசி ஓடும், உங்க பசி ஓடுமா? உதட்டுச் சாயத்தை விலை கொடுத்து வாங்குவிங்க, விவசாயத்தை வாங்க முடியுமா? சோறு போடுற எங்களை கூறு போட பாக்காதிங்க, வாழ வச்ச எங்களை அழ வச்சு பாக்காதிங்க! ஏறு புடிச்ச நாங்க வேறு எங்க போவோம்..? உழைச்சு பொழச்ச நாங்க களச்சு போக மாட்டோம்! ஆண்டவன் அனுப்பி வச்ச அடுத்த கடவுள் நாங்க, வயிறு பசி போக்க வந்த வள்ளலார் நாங்க! எங்க கண்ணீரையெல்லாம் கண்டுக்காம விட்ராதிங்க, எங்க அழுகையெல்லாம அலட்சியம் செய்யாதிங்க.... காலம் ஒருநாள் எங்களை கடவுளாக் காட்டும்...! சரித்திரம் ஒருநாள் எங்களை சாதனையா பேசும்...! படித்ததில் பிடித்தது இப்படிக்கு ஓர் விவசாயி.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.