Leaderboard

 1. தனிக்காட்டு ராஜா

  தனிக்காட்டு ராஜா

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   26

  • Content count

   5,459


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   14

  • Content count

   38,465


 3. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Content count

   56,787


 4. யாயினி

  யாயினி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content count

   7,151Popular Content

Showing most liked content on 12/29/2016 in all areas

 1. 5 points
  எங்களது யாத்திரை என்பது கதிர்காம ஆரம்ப கொடியேற்ற நிகழ்வுக்கானது அல்ல அதன் பிறகான‌ யாத்திரயே ஆரம்ப‌ கொடியேற்றம் பார்க்க ஒரு சில ஆயிரம் பேர் நேரத்துடன் சென்று விடுவார்கள் நாங்கள் அடுத்த யாத்திரியர்களாக சென்றது. உகந்தையில் இருந்து எமது யாத்திரை குமுக்கனுக்கானது ஆனால் அந்த இடம் அதிக தூரம் என்ற படியால் நடையை குறைக்க வேண்டிய‌ நிலை அதானால் இடையில் உள்ள வண்ணாத்து வில்லுவரைக்கும் மட்டுமே என்றார்கள். யாத்திரை ஆரம்பமாக பொருட்களை எல்லாம் பிரித்து ஆட்களின் தொகைக்கு ஏற்றால் போல் உரப்பையில் பிரித்து கொடுத்தார்கள் நாங்கள் சின்ன ஆட்கள் என்ற படியால் சிறிய பொதிகள் எங்களுக்கு கிடைத்தது பொதிகள் தலையில் எங்களது உடுப்பு பைகள் முதுகில் நடப்பதற்கு சுலபமென மனது நினைத்தாலும் தூக்கி தலையில் வைக்க கனத்தது உகந்தையில் இரு நாட்கள் நின்றோம் நடக்கும் நாள் பின்நேரம் நேரம் சரியாக 2.30 மணியளவில் உகந்தை கோவில் கொடியேறிய பின்பு நடக்க ஆயத்தமானோம் ஆண்கள் எல்லாம் காவி உடையுடனும் பெண்கள் எல்லாம் ஒரு சிலர் காவிச்சட்டை அணிந்து இருந்தனர். அந்த நாட்களில் வனவிலங்கு அதிகாரிகள் யாரும் இருக்க வில்லை காட்டுப்பாதை தொடங்கும் இடத்தில் ஆனால் தற்பொழுது நேவிப்படையினர்,வன விலங்கு பாதுகாவலர் , மீன்பிடிக்கும் மீனவர்கள் கூட உகந்தை கோவிலை அண்டிய பகுதிகளில் வந்து கூடிவிட்டார்கள் ,பொத்துவில் பகுதியில் வரும் உல்லாச பிரயாணிகள் கூட தற்போது உகந்தை கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள் , கோவில் அழகிய தோற்றத்தை படமெடுத்து செல்கிறார்கள் அவர்கள் வரும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியென்பதால் அவர்கள் கமறாவுக்குள் நல்ல போட்டோக்களை எடுத்து கொள்கிறார்கள் , சிங்கள் மக்கள் உகந்தைக்கு வரும் வழியில் இடையில் குடும்பி மலையென்று இருக்கிறது ஆரம்ப காலத்தில் விகாரை கட்ட முற்பட்டபோது அது தடுக்கப்பட்டது விகாரையின் அண்டம்பகுதி மட்டும் தெரிவதால் அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது குடும்பி போல் தெரிவதால் அதை குடும்பி ஹல என்று சிங்களத்திலும் தமிழில் குடும்பி மலை என்றும் அழைக்கிறார்கள் சிங்கள மக்கள் அதிகமாக வருகை தருகிறார்கள் உகந்தைக்கும் அந்த குடும்பிமலைக்கும் தற்போது அந்த மலையை சிங்கள மக்கள் , பிக்குகள் கையகப்படுத்தியுள்ளார்கள் . யாத்திரைக்கு வருவோம் பொதிகளை தூக்கி கற்பூரத்தை இருந்த இடத்தில் எரித்து விட்டு பெரியவர்களால் கழுகுமலைப்பத்து பாடியும் தேவாரங்கள் பாடியும் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமானது யாத்திரை பல் ஆயிரக்கணக்கான மக்களுடன் (இந்த வருடம் எங்களுடன் வந்தவர்கள் சுமார் 12000 பேர்) முருகனின் பெயரை சொல்லியும் அரோகரா கோஷத்துடனும் நடை தொடங்கியது உகந்தை முருகன் கோவிலிருந்து போகும் வழியில் பாலப்பழம் , வீரப்பழம் என்பவற்றை கந்து கந்தாக‌ முறித்து சுவைத்தேன் பாலப்பழத்தை விட அதிக வீரப்பழம் கிடைத்தது. அதிகம் வேற சுவைக்க இயலாது பின்விளைவுகளை இறுக்கி விடுமாம் அதனால் பாலப்பழங்களை மட்டும் சுவைத்து தொடர்ந்தது வண்ணாத்து வில்லு என்ற தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம் முதன் முதலாவதாக நட‌ப்பதால் எனக்கு களைப்பு காட்ட வில்லை முந்தி முந்தி ஓடியோடி நடந்தேன் முதலில் செல்லும் போதே சில காட்சிகள் காண‌ முடியும் காட்டில் மான்கள் , மயில்கள் , நரிகள் , காட்டுக்கோழிகள் ,உடும்புகள் , மிகப்பெரிய காட்டுமாடுகள் பார்க்க சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தோம், ஆனால் வயது போனவர்கள் அடிக்கடி இருந்து ஓய்வெடுத்தே நடப்பார்கள் அந்த தங்குமிடத்தில் போன நான் நல்ல இரு இடமாக பிடித்து வைத்தேன் இரவை கழிப்பதற்காக நடுக்காட்டில் ஓரத்தில் எல்லாம் தூங்கமுடியாது காரணம் இரவு வேளைகளில் மிருகங்கள் வரும் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள் . போன இடம் ஒரு வெட்ட‌வெளி ஆனால் ஒரு கிணறு அந்த கிணற்றில் உப்புத்தண்ணீர் மட்டுமே பக்கத்தில் ஓடும் பெரிய ஓடை கூட உப்பாறு தண்ணி இல்லை. அந்த தண்ணீரைத்தான் குடித்தாக வேண்டும் கொஞ்ச நேரம் அமர்ந்து கொண்டேன் என்னுடன் வந்தவர்கள் வந்து சேர்ந்தனர்.சேர்ந்த உடனேயே வாங்கோ காட்டுக்க போவோம் விறகு எடுக்க என்று சொல்லி கூட்டிகொண்டு போனார்கள் போகும் போது கிளைகளை முறித்து கொண்டுதான் போனோம் காட்டுக்குள் காரணம் சிலவேளைகளில் வழி மாறினால் அந்த கிளைகளின் உதவியால்தான் மீண்டும் வரமுடியும் இல்லையென்றால் திண்டாட வேண்டிய நிலைதான் தேவையான‌ விறகுகளை எடுத்து வந்து வந்த பெண்மணிகளிடம் கொடுத்தோம் அவர்களும் உப்பு தேனீர் தயாரிக்க ரெடியாகினார்கள் மீண்டும் காட்டுக்க போக வேண்டும் இரவில் மிருகங்கள் வரும் என்ற படியால் பெரிய தீனா போட வேண்டும் என்றார்கள் அதற்கு பெரிய கட்டைகள் வேண்டுமென்றனர் காட்டுக்குள் போனோம் தேவையான கட்டைகளை எடுத்து வந்து மொத்த குவியலாக போட்டு விட்டோம் பின்னர் பெண்கள் சமைக்க தயாரானார்கள் அடிக்கும் காற்று சூறைக்காற்று போல் அந்த வெளியை சனத்திரளுக்குள் தூசும் புழுதியுமாக அள்ளி எறிந்து கொண்டே இருந்தது காற்று தொடர்ந்தது காட்டில் இருள்வது விரைவாக நடந்து கொண்டிருந்தது இவர்களும் சமைத்து முடிய இருட்டானது வெளிச்சம் குறைவானதால் மெழுகுதிரியை கொழுத்தினோம் ம்கும் காற்று விடுவதாக இல்லை பின்னர் ஐடியா ஒன்று ரப்பர் போத்தல் ஒன்றின் கீழ் பகுதியை வெட்டி அதை தலை கீழாக நிறுத்தி அதற்குள் மெழுகு திரியை வைத்து இருக்கும் இடத்தில் ஒளியை தக்க வைத்துக்கொண்டோம் கொண்டு போன டோச் லைட்டை எந்தநேரமும் அடித்து கொண்டு இருக்க முடியாதல்லவா அதனால் மெழுகுதிரி பாவனையே அதிகமாக இருந்தது . நேரம் செல்ல செல்ல ஒரு குறுப் பஜனை ஆரம்பிக்க ஒரு குறுப் பக்திப்பாடலகளை அரையும் குறையுமாக ஆரம்பிக்க தொடங்கியது இசை விடாத கச்சேரி கடைசியில் பைலாவாக மாறியது கொண்டு போன சில்வர் பீங்கான் கள் சிலுசிலுக்க சினிமா பாட்டுக்கள் அனல் பறந்தது அன்றைய இரவில். ஒரு மாதிரியாக பைலாக்கள் இரவு 12.00 மணீயளவில் நிற்க அந்த விறகு கட்டைகளுக்கு நெருப்பு வைத்து விடுவார்கள் அது விடிய விடிய எரியும் ஒரு சிலர் பீடி பிடிப்பவர்கள்( மூலிகையும் கூட) அடிக்கடி அதை சரி செய்து மேலதிக கட்டைகளை போடுவதால் அந்த நெருப்பு இடைவிடாமல் எரியும் விடியும் வரை அதனால் எந்த விலங்கும் வராது என்ற நம்பிக்கை இருந்தாலும் தூரத்தில் யானைகள் மரங்களை உடைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் ,பிளீருவதும் கேட்கும் இரவு வேளைகளில் , சில நேரங்களில் நான் சொன்ன சூறைக்காற்று அப்படியே தூங்கும் இடங்களில் அப்படியே விழும் ஆளை தூக்காத குறையாக அப்படியே எல்லாவற்றையும் தூக்கும் அதை பேய் என்று சிலர் சொன்னாலும் , சிலர் ஓடுவார்கள் அந்த நேரத்தில் அதனால் சில வேளைகளீல் அல்லோல கல்லோலப்படும் சனம் பிறகு என்ன அந்த இரவு சிவராத்திரி பயந்தவர்களுக்கு எங்களுக்கு நித்திரைதான். காரணம் அந்த இடத்தில் கதிர்காமம் நடந்து வந்த ஒரு வயது போன அம்மா இறந்ததாகவும் அவரை அந்த இடத்தில் எரித்து விட்டு சென்றதாகவும் கதை உலாவும் நடந்து இருக்கலாம் அந்த நேரத்தில் காவிச்செல்ல முடியாது அந்த இடத்தில் எரித்து விட்டு செல்வது வழமையே. ஆரம்ப காலத்தில் பாதயாத்திரை செல்பவர்கள் தங்கள் சொத்துக்களை கூட மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களாம் ஏனென்றால் காட்டுப்பாதையில் எதுவும் நடக்கலாம் என்ற காரணத்திற்க்காக. இந்த இடத்தில் தற்போது அதாவது வருடா வருடம் பாதயாத்திரை போகும் போது வன காவலர்களால் குடிநீர் வவுச்சர்களீல் வைக்கப்பட்டுள்ளது.அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை ஆனால் இது வைக்ககூடாது என்ற விருப்பம் எனக்கு இந்த பாத யாத்திரை சிலருக்கு பொழுது போக்குவது என்றாகிவிட்டது தண்ணீர் கஸ்ரம் என்றால் கன பேர் வரமாட்டார்கள் . அந்த நாட்களில் இந்த பாதை வெறும் அரவம் என்று சொல்கின்ற ஒற்றையடிப்பதை மட்டுமே தற்போது வனக்காவலர்கள் செல்ல பாதை அமைத்துள்ளார்கள் காரணம் வெளிநாட்டு பயணீகள் விலங்குகள் , பறவைகள் சரணாலயம் என்பவற்றை பார்வையிட‌ அதிகமாக வருகிறார்கள் குமுக்கன் என்ற இடம் வரைக்கும். அதிகாலை எழும்பி நேரத்துடன் காலை உணவுக்கான வேலைப்பாடுகள் ஆரம்பிக்கும் கடலை அல்லது கவ்ப்பி அவிப்பார்கள் அதை சிறிய பைகளில் இட்டு ஆளுக்கொரு பையில் தருவார்கள் கழைப்பு ஏற்படும் இடத்திலிருந்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதும் தான் பிறகு தேநீராக நல்ல பால் கோப்பி ஒன்று கிடைக்கும் காலையில் அதை குடித்து விட்டு முகம் கழுவி விட்டு சூரியன் உதிக்கும் முதல் நடக்க வேண்டும் காரணம் சூரியன் வந்தால் அதிக கழைப்பாக இருக்கும் அதானால் விடியச்சாமமே டோச் லைட்டின் உதவியுடன் நடக்க ஆரம்பித்து விடுவார்கள் யாத்திரிகர்கள். அடுத்த இடம் குமுக்கன் ஆறு தொடரும் அந்த இடம் இது தான் வண்ணாத்து வில்லு வெட்ட வெளி
 2. 3 points
 3. 3 points
  ஆனால் காரைதீவில் எல்லைகளில் உள்ள வளவுகளை ( காணிகளை ) கோவில் நிர்வாகத்தினர் வாங்கி பிற இனத்தவர்களால் வாங்க முடியாதபடி வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்கள் அந்த மக்கள் அந்த வீட்டில் வசிக்கலாம் விற்க முடியாது அதை பாராட்டி ஆக வேண்டும் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினரை
 4. 3 points
  ஓரளவு கிட்ட போய் மரத்துக்கு கீழே நின்று சுட்டது
 5. 3 points
  நன்றி கிருபன் வாங்கோ ஒரு தரம் நடந்து பாருங்கோ இந்த தடவையும் வெள்ளைகள் நடந்து வந்தது , நான் ஏன் இதுவ்ரை கதிர்காமம் நடக்கிறேன் என்ற சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது அதயும் எழுகிறேன் படிக்கவும் ஓம் அண்ண அதன் சுவை தனியே நான் ஒவ்வொரு முறை போனாலும் மடத்தில் சமைக்கும் நண்பர்களுடன் இணைந்து கொள்வேன் சமைத்து வரும் மக்களுக்கு கொடுப்பது வழமை ஹாஹா ஜீவன் அண்ணை அதற்கென்ன அழைக்கிறேன் வாங்கோ அடுத்த வருடம் மட்டுவில் தேவையில்லை நாம் உகந்தையில் இருந்தே நடப்போம் ஆவலாக நானும் நல்ல இடம் பித்து பிடித்து போய்விடும் உங்க கமறாவுக்குள் விழும் போட்டோக்களை கண்டு அதிகாலை நடை ஆரம்பமானது இருட்டு வேற‌ டோச் லைட்டின் உதவியுன் ஒருவர் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தோம் சிறிது நேரத்தில் யானை ஒன்று போகும் வழியில் நிற்க அனைவரும் அப்படியே நின்று கொண்டோம் ஆனால் அது ஒன்றும் செய்ய இல்லை அதன் பாட்டுக்கு இலை குழைகளை முறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது கொன்ஞ்ச‌ நேரம் போன பின்பு அது அதன் பாட்டுக்கு சென்றது பயம் இருந்தாலும் இது வரை எந்த மிருகமும் நடக்கும் யாத்திரிகர்களை ஒன்றும் செய்தது இல்லை என்ற‌ நம்பிக்கை ஆனால் பயம் ஒன்று மனிதனுக்கு இருக்கிரதல்லவா அதுவும் மரணபயம் அதற்கு பயப்பட்டுதானே ஆகவேண்டும். போகும் வழிகள் சற்று சகதிகள் ,சுரிகள் நிறைந்த இடங்கள் முட்கள்,வள்ளி முள் என்பார்கள் சிலர் வெள்ளி முள் என்பார்கள் அந்த முட் மரங்களையெல்லாம் தாண்டி ஒரு வழியாக காலை 8.30 மணிக்கு பறவைக்குளம் என்ற இடத்தை அடைந்தோம். அந்த இடம் குமுக்கன் ஆற்றுக்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது பற‌வைகள் சரணாலயம் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளி நாட்டு பறவைகள் வந்து தங்கும் இடம் அந்த இடம் தான் கிழக்கு மாகாணத்தின் எல்லை போல ஆரம்ப காலத்தில் ஒரு எல்லை கல் இருந்தது அதில் கூமுனை என்று அந்த கல்லில் செதுக்கப்பட்டிருந்தது தற்பொழுது அந்த கல் இல்லை. தற்போது அந்த இடத்தில் ஒரு மூன்று (மாடி) அடுக்கு கோபுரம் போல் உள்ள கட்டிடம் அமைத்துள்ளர்கள் அதில் ஏறி நின்றுதான் வெளிநாட்டு பிரயாணிகள் போட்டோக்களை எடுப்பார்கள் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த இடம் அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஒரு சிறிய தென்னந்தோப்பு தெரியும் ஆனால் நான் இதுவரை அந்த இடத்துக்கு சென்றதில்லை. . அந்த இடத்தில் கொஞ்சநேர‌ம் இருந்து விஸ்கட்டும் தண்ணீரும் குடித்து விட்டு குமுக்கன் ஆற்றை அடைந்தோம் ஆஹா ஆற்று நீர் சலசலவென சத்தத்துடன் நடந்து சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்றது நான் யாரையும் பார்க்க வில்லை போன‌வுடன் பொருட்களை இறக்கி விட்டு ஆற்றில் பாய்ந்தேன் கடும் குளிராக இருந்தது .குளிக்க குளிக்க‌ வந்த களைப்பு தெரியவில்லை நான் ஒரு மணீ நேரம் இளகிய பின்பே என்னுடன் வந்த அனைவரும் வந்து சேர்ந்தார்கள் ஒரு இடத்தை மரத்தின் குப்பைகளை கொஞ்சம் விலக்கிவிட்டு கொஞ்ச நேரம் மட்டும் தங்குமிடமாக அமைத்து கொண்டோம் ஏனென்றால் மாலை அடுத்த கரைக்கு போக வேண்டுமாம் . அன்றைய நாளுக்கு குடிபதற்கு தன்ணீர் ஆற்றங்கரையோரம் மணலில் ஒரு குழியை தோண்டி அதிலிருந்து வடிகட்டி எடுப்போம் நீரை. சுத்தமான நீராக‌ இருந்தாலும் சுட வைத்தே பருகுவம். அந்த நீரை ஒரு கேனில் எடுத்து நடந்து வரும் யாத்திரிகர்களுக்கு அவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் இடம் வரை சென்று கொடுப்போம் சிறு உதவியாக கிட்ட தட்ட 4,5 கிலோமீற்றர் சென்று அவர்கள் தாகம் தீரும் வரைக்கும் தண்ணீர் கொடுபோம் அதற்கு அவர்கள் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்பார்கள் எல்லோரையும் சாமியென்றே அழைப்பார்கள் யாத்திரிகர்கள் பிறகு நாங்கள் இருக்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு மீண்டும் குளிக்க தொடங்குவோம் நன்றாக குளித்து விட்டு அங்கே மிகப்பழையான ஒரு அம்மன் கோவில் இருக்கிற‌து மிகவும் சக்தி வாய்ந்தது கூட ( தற்போது அந்த அம்மனுக்கு காவலாக ஒரு சின்ன விகரையும் வந்துள்ளது அது சிங்களவர்களின் வேலை ) அம்மனை தரிசித்துவிட்டு நல்ல ஒரு சாப்பாடு காட்டில் அது சாப்பிட்டவர்களுக்கே தெரியும் அதன் சுவை சாப்பாடு முடிந்த பின் தூக்கம் ஒன்று போட்டு விட்டு மாலை 4.30 மணிக்கு நேநீர் ஒன்றை சுவைத்து விட்டு அடுத்த கரைக்கு செல்ல வேண்டும் ஏனென்றால் அடுத்த நாள் காலை நேரத்துடன் செல்ல வேண்டும் அந்த நேரம் சில வேளைகளில் ஆற்றுநீர் கழுத்துக்கு மேலாக செல்லும் போகமுடியாது அதை தவிர்ப்பதற்க்காகவே அடுத்த கரைக்கு சென்றோம் அங்கே மீண்டும் ஒரு இடத்தை துப்பரவாக்கி இருந்தோம் அன்றைய இரவு தூங்க வேண்டும் என்பதற்க்காக. சிறிய வண்டுகள் , பூச்சிகள் , தேள்கள் , கட்டெறும்புகள் அதிகமாக இருந்தாலும் சருகுண்ணிகள் அதிகம் இந்த இடத்தில் கால்களில் விரல்களுக்குள்ளே என்ன கவட்டுக்குள்ளும் ஏறி ரத்தத்தை உறுஞ்சிக்கொள்ளூம் அதனால் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அன்றைய இரவை நெருப்புடன் தான் கழிக்க வேண்டும் நல்லபெரிய மர‌கட்டைகளை எடுத்து எரிக்க ஒரு இடத்தில் போட்டுக்கொண்டோம் மாலை மெல்ல மெல்ல இருளாக சூழ சின்ன சின்ன வெளிச்சம் போட்டு பஜனை பைலா தொடங்கியது பெண்கள் பஜனை பக்திப்பாடல்கள் பாடுவார்கள் இரவு சாப்பாடு அந்த சின்ன வெளிச்சத்திலிருந்து சாப்பிட்டோம் பிறகு மரக்கட்டைகளுக்கு தீ வைத்த் எரித்தார்கள் எரிக்கும் நேரத்தில் சூடு தாங்க முடியாமல் ஜந்துகள் ஊர தொடங்கியது. அன்றைய இரவு தூக்கம் நாங்கள் தூங்க பெரியவர்கள் காவல் இருந்தார்கள் . இந்த இடத்தில் நடந்த சில சம்பவங்கள் கூறுகிறேன் நான் இப்படியே சில ஆண்டுகள் சொந்தங்களுடன் சென்றேன் பிறகு நண்பர்களுடன் முதல் முதலாக‌ சென்ற வேளை பகல் சாப்பாட்டை சமைத்த பிறகு மூன்று நண்பர்கள் விளாம்பழம் எடுத்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு போன நண்பர்கள் காட்டுக்குள் சென்று வரவில்லை 12.00 மணீக்கு போனவர்கள் 3.00 மணியாகியும் வரவில்லை தொடரும் யாத்திரை
 6. 2 points
  வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்கு முன்னர் அதாவது 1998ம் ஆண்டளவில் எங்கள் ஊருக்கு அந்த பாத யாத்திரிகர்கள் வருவது வழமை ஊரில் உள்ள கோவில்களில் அன்றைய இரவை போக்க வருவார்கள் அவர்களை போய் பார்ப்பது வழக்கம் அதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடக்கம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சன்நிதியில் இருந்து வந்தார்கள் ஊரில் உள்ள சனங்கள் அவர்களை போய் பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது வழக்கம் அவர்கள் ஊர் வந்து சென்றதில் இருந்து நான் அவர்களுடன் சென்றால் என்ன ஒரு உணர்வு ஏற்பட்டது ஆனால் சிறு வயது என்பதால் அம்மா அப்பா விரும்பமாட்டார்கள் அந்த வேளையில் அம்மம்மாவும் அப்பம்மாவும் கதிர்க்காமம் செல்ல போகிறோம் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக வீட்டில் அனுமதி பெற்று செல்ல ஆயத்தமானேன் அந்த வருடம் . யாத்திரைக்கு தேவையான பொருட்கள் உடைகள் , சாப்பாடுகள் ,போதிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாடல் வசதி மிக குறைவு 10 நாட்கள் தேவை கதிர்க்காமத்தை சென்றடைய என்று சொன்னார்கள் யாத்திரை தயாரானது ஊரில் இருந்து நடக்க வில்லை காரணம் அந்த நேர பாதுகாப்பு நிலை காரணமாக யாத்திரை அதிகாலை புறப்பட்டது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் பொருட்களை ஏற்றி இறக்கி களைந்து காண்பித்து சென்றடைய சங்கமான்கண்டி வடக்கில் முறிகண்டி பிள்ளையார் எவ்வளவு முக்கியமான ஆளோ அதே போல் கிழக்கில் சங்கமன்கண்டி பிள்ளையார் முக்கியமான ஆள் யாத்திரை செல்லும் போது அவரை வழிபட்டு விட்டு நேரம் 1.00 மணியாகிவிட்டது பாணமையை போய் சேர பாணமையில் பாரிய சோதனை சாவடி அதன் பிறகு அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாரை தரிசித்த பின்னர் நடை தொடங்கியது வாகனம் உகந்தை வரை செல்ல முடியாது அதற்கு பாதையும் இல்லை காட்டு வழி வேறு நடக்க நடக்க இரு மருங்கிலும் காடுகள் விலங்கள் பறவைகள் , என பார்த்து பார்த்து போய் முதல் இடம் உகந்தைசெல்வதற்கு முன்னர் சன்நியாசிமலை என்ற ஒரு மலை அதன் கீழ் பிள்ளையார் ஒருவர் வீற்றிருக்க அவரை தரிசனம் அவருக்கு கொஞ்சம் அவலை பிரட்டி படைத்து விட்டு செய்து நடை ஆரம்பமானது ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக உகந்தையை சென்றடைந்தோம் சுற்றி வர காடு கிழக்கில் கடல் மேற்கில் அடர்ந்த காட்டில் ஒரு கோவில் மனதிற்கு ஒரு இதமான அமைதி அந்த இடத்தில் தெரிகிறது யாத்திரை தொடரும். போய் வந்த பிறகு தமிழ் சிறி அண்ணன் எழுத சொன்னவர் படங்கள் கிடைக்க வில்லை இப்போது அந்த படங்களை கமறாவிலிருந்து எடுத்துக்கொண்டேன் இது தான் பாணமை பிள்ளையார் கோவில்           click image upload click image upload
 7. 2 points
  யோவ் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை கவனிப்பது கிழக்கு மக்கள் கொஞ்சம் வித்தியாசம் அதாவது வயிறார வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது பண்பாடு மரபும் கூட சிலர் அணிவார்கள் அண்ணே சிலபேர் அணிய மாட்டார்கள் ஒருவருக்கு ஒரு முள் குத்தி அதாவது கீழ் பகுதியில் குற்றி மேல் பக்கத்துக்கு மேலாக வந்து விட்டது அவரை காவிக்கொண்டே சென்றார்கள் அதனால் சில பேர் அணிவார்கள் சிலர் அணிய மாட்டார்கள். பெயருக்கும் செயலுக்கும் என்ன அண்ண வச்ச புனைப்பெயரே சரியாக அமைந்து விட்டது போல் ஓடுகிறது மத்திய கிழக்கில் இருக்கும் போது நண்பர் ஒருவருக்கு வைத்த பட்டம் அது முனி என்று யாழில் இணையும் போது புனை பெயர் கேட் க அதை வைத்தேன் அவ்வளவுதான் ஆனால் ஒரு முருக பக்தன் அவ்வளவே
 8. 2 points
  யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி. ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது. எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன். கட்டுரைக்கு நன்றி!
 9. 2 points
  நண்பர்கள் முதல் முதலாக வருவதனால் அவர்களுக்கு காட்டைப்பற்றி தெரியவில்லை போக வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் போய்விட்டார்கள் இளங்கன்றுகள் பயமறியாதது போல். சாப்பிட எடுத்தோம் எங்க இவனுகளை காணவில்லையென்று தேட தொடங்கினோம் அவர்கள் அந்த காட்டுப்பகுதியில் இல்லை கதை மெல்ல மெல்ல‌ சனங்களின் காதுகளுக்கு செல்ல கொஞ்சநேரம் அந்த இடத்தில் ஒரு ஆசாதாரண சூழல் நிலவியது சரி தேடவேண்டும் தேடியே ஆகவேண்டும் நானும் மீதியாக இருந்த நண்பர்களும் கையில் கொண்டுபோன சீன வெடியுடனும் போனோம் காட்டில் கூக்குரல் இட்டவாறு சில மணிநேரம் நடந்தோம் போகும் வழியில் அவர்கள் சத்தம் கேட்டாவது வருவார்கள் என்று. ஆனால் இல்லை வெடிகளும் போட்டு பார்த்தோம் எந்த சத்தமும் இல்லை பிறகென்ன காட்டுக்குள் போவதென முடிவெடுத்தோம் கிளைகளை முறித்துக்கொண்டு சில மீற்றர் தூரம் சென்றோம் அங்கே அவர்கள் ஒருமரத்தில் மூன்று பேரும் ஏறி அமர்ந்து இருந்தனர் பயத்தில் வழி தெரியவில்லையென்று சொன்னார்கள் போகும் போதே சொன்னேனே என்று நான் கூற கூட வந்த நண்பர்கள் அடிக்காத குறையாக நல்ல ஏச்சும் பேச்சும் கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தோம். ஒரு அரை உரப்பை விளாம்பழத்துடன் . அன்று யானை வரவில்லையோ என்று தெரியாது இல்லையென்றால் அத்தனை பழங்களையும் விழுங்கி வெறும் கோது மட்டுமே மரத்தின் கீழ் கிடக்கும் . இன்னொரு சம்பவம் அடுத்த ஆண்டில் ஒரு இளைஞன் காட்டில் எதற்கு சென்றான் என்று தெரியவில்லை காணாமல் போனான் தனியே ஆளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை மதியம் காணாமல் போனான் நானும் நண்பர்கள் எல்லோரும் காட்டை அலசி தேடியும் அவன் கிடைக்கவில்லை. படையினருக்கு அறிவிக்கப்பட்டது என்ன நடந்தது என்று தெரியவில்லை அடுத்த நாள் காலை நாங்கள் தான் அடுத்த தங்குமிடத்துக்கு முதல் முதலாக நடந்து செல்வது வழமை எல்லோரும் இளைஞர்கள் என்பதால் நிற்காமல் நடந்து செல்வோம் அப்போது அந்த இடத்தை இடத்தை நெருங்கும் வேளையில் அந்த இளைஞன் அங்கு தனியாக நிற்பதை பார்த்த எங்களூக்கு யாரு அது நமக்கு முன்னதாக வந்து விட்டானே என்று அருகில் சென்று பார்க்கும் போது அவன் அழுது கொண்டிருந்தான் அடேய் உன்னை காணவில்லையென்று அவர்கள் அங்கே தேடிக்கொண்டு இருக்கிறார்கள் அழுது கொண்டும் இருக்கிரார்கள் நீ இங்க என்ன செய்கிறாய் எப்படி வந்தாய் என்று கேட்க எனக்கும் ஒன்றும் தெரியாது காட்டில் போனவுடன் வழி மாறி விட்டேன் யானை ஒன்று என்னை துரத்தி வர வர நான் இந்த இடம் வரைக்கும் வந்தேன் என்றான். சரி சரி அழாதே உனக்காக அவர்கள் அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் சனம் வந்து கொண்டே இருக்கிறது அவர்கள் வந்து கொண்டிருக்கும் வழி வரை நீ செல்லும் நீ போனால்தான் அவர்கள் வருவார்கள் என்று சொல்லி அங்கேயே அழுது கொண்டிருக்கிறார்கள் நீ போ என்று அவனை திருப்பி அனுப்பி விட்டு அந்த இடத்தில் நின்றோம் அவன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் செல்லும் வரை . யாத்திர‌க்கு வ‌ருவோம்: அதிகாலையில் எழும்புங்கோ எழும்புங்கோ நேரத்துடன் நடக்க வேண்டும் என்று அதிகாலை தூக்கத்தை கலைத்தார்கள் எழும்ப மனம் இல்லை என்றாலும் அந்த நெருப்பு சூட்டில் இறுக்கி போர்த்துகொண்டு தூங்குவது ஒரு சுகம் இருந்தாலும் நேரத்துடன் நடக்க வேண்டும் எழும்பி தேநீரை குடித்து விட்டு தேவையான நீரை போத்தலில் இட்டு கொண்டிருக்கும் போது சொன்னார்கள் எவ்வளவு நீரை எடுக்க இயலுமோ எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே நாவலடியில் உப்பு தண்ணிதான் இருக்கிறது என்றும் குடிக்க தண்ணீர் இல்லை என்றும் சொன்னார்கள் ஐந்து காடு ஐந்து வெட்ட வெளி தாண்ட வேண்டும் சொன்னார்கள். தேவாரம் பாடப்பட்டு நாவலடி நோக்கி யாத்திரை தொடங்கியது கடும் காடு விளாமரங்கள் இலையில்லை காய்களாக தொங்கிய வண்ணம் ஆயிரம் மரங்கள் காட்டினுள்ளே வானுயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு அது . மொன்ராகலை மாவட்டத்தினுள் இணையும் காடு அது மிகப்பெரிய காடும் கூட போகும் வழியில் காட்டுபன்றிகள் கூட்டம் கூட்டமாகவும் மான்கள் கூட்டம் கூட்டமாகவும் காட்டுமாடுகள் தொலைதூரத்தில் ஆட்கள் நடந்து செல்வதனை பார்த்துக்கொண்டே இருக்கும் அது காஞ்ச புல்லை மேய்ந்து விசித்திர தோற்றமுடையதாக இருக்கும் சில வேலைகளில் இறந்து துர்நாற்றமும் வீசும் அது மட்டுமல்ல வேற விலங்குகளும் கூட வெட்டை ஐந்து வெட்டை தாண்டியவுடன் சிறிய ஆற்றுப்பகுதி இருந்தது அந்த ஆறு உப்பு ஆறு அதைதாண்டித்தான் போகவேண்டும் இறங்கினால் சரியான சுரியாக இருந்தது கடும் கஸ்ரமாக இருந்தது சில வேளைகளில் காய்ந்துபோய் இருக்கும். நாங்கள் சென்ற நேரம் நல்ல நீராக இருந்தது அதையும் தாண்டி நாவடியை போய்சேர்ந்தோம் காலை 10.00மணிக்கு. அந்த இடம் முழுக்க நாவல்மரங்கள் பழங்கள்பழுத்து இருந்தது நான் கொண்டு போன பையில் இருந்த கத்தியை எடுத்து மரம் ஒன்றில் ஏறி கிளையை வெட்டி விட்டேன் கீழே வீழ்ந்தமரக்கிளையில் நல்ல பழங்களை பறித்து சாப்பிட்டோம் வாய் முழுக்க நாவல் நிறமாகியது போன எல்லோரும் நல்ல பழங்கள் சாப்பிட்டார்கள் பிறகு சமையல் வேலைகள் ஆரம்பிக்க தேவையான உதவி செய்து விட்டு ஒரு கிண்று இருந்தது அதில் உப்புதண்ணிதான் அதனால் குளிக்க வில்லை மேலைக்காலை கழுவி விட்டு வந்து கால்கள் நோவெடுக்க ஆரம்பமானது கொண்டு போன தைலங்கள் ,சித்தாலபே போன்ற சாதனங்களை கால்களூக்கும் தோள் பட்டைக்கும் உரஞ்சி உரஞ்சி பூசி நோவை போக்கினோம் பகல் சாப்பாட்டை முடிந்த பிறகு நல்ல துக்கம் போன களைப்புக்கு பின்நேரம் எழும்பி மரக்கடைகளை எடுத்து தீனாவுக்கு போட்டுக்கொண்டோம் அன்றைய இரவு பஜனையோ பாட்டுக்கச்சேரியோ நடத்த ஆட்கள் இல்லை காரணம் கடும்களைப்பில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி விட்டார்கள் நாங்களும் ஏனென்றால் வியால என்று சொல்லும் இடத்துக்கு செல்ல வேண்டும் மிகவும் தூரம் என்று சொன்னார்கள் அடுத்த தங்குமிடம் வியால என்று சொல்கின்ற யால காட்டுப்பகுதியை நோக்கி தொடரும் சகதிகளுக்குள்ளும் சிறிய ஆறுகளுக்குள்ளும் மக்கள் ஒரு வெட்ட வெளி நான் சொன்ன அந்த உப்பாறு
 10. 2 points
  தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர். மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள். கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது. உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது. அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை. அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. http://thirutamil.blogspot.ae/2008/04/1_14.html தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2 தமிழர் கண்ட கால அளவீடு பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும். சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம். மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர். "கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்) காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. http://thirutamil.blogspot.ae/2008/04/2.html தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3 தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர். சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:- 1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை 2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை 3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு 4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு 5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 'பத்தன்று நூறன்று பன்னூ றன்று பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்'' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது. தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும். http://thirutamil.blogspot.ae/2008/04/3.html தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4 சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார். ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார். பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும். பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது. ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும். ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது. http://thirutamil.blogspot.ae/2008/04/1.html
 11. 2 points
 12. 2 points
 13. 2 points
 14. 2 points
 15. 2 points
  நல்ல விடயம் நடந்திருக்கிறது ....அவர்கள் விஷமிகள் அல்ல முதுகெலும்பு உள்ளவர்கள்
 16. 2 points
  இந்த வருடம் மருத்துவ உதவிகள் யாத்திரையின் காட்சி
 17. 2 points
  வாங்கோ அண்ணே வாங்கோ நெறைய விசயம் இருக்கு இப்பெல்லாம் சீணிக்காரர்கள் அதிகM அதனால சிகப்பு வெள்ளை யெப்புடி போகும் வழியில் நம்ம ஆளின் வாகனம் குறுக்கறுத்து போனது இறகுகளை போட்டு விட்டு
 18. 1 point
  தமிழ் விடுகதைகள் - ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர், பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம் பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர். விடுகதைகள் கூறும் வழக்கம் நம்மவர்களில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே பழமொழிகளும் விடுகதைகளும் வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும் சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும் பயிற்சியளிக்கன்றன. சில விடுகதைகளை இவ்விடம் அவிழ்த்து விடுகின்றேன், இதில் யாரும் பதில்கள் பதியலாம் , விடுகதையும் விடலாம். மூன்று நிறக் கிளிகளாம், அவை கூண்டில் போனால் ஒரே நிறமாம் அது என்ன?
 19. 1 point
  தேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்கின்றேன்.
 20. 1 point
  பாகற்காய் தக்காளிப் புளிக்கறி உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. தேவையான பொருட்கள்: பாகற்காய் - 250 கிராம் தக்காளிப்பழம் - 250 கிராம் வெங்காயம் - 5 பூண்டு - 10 வெந்தயம் - 2 மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 25 கிராம் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன் நீர் - தேவைக்கேற்ப செய்முறை: முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். http://www.koodal.com/women/cooking/recipes.asp?id=932&title=south-indian-gravy-bitter-gourd-gravy
 21. 1 point
 22. 1 point
  வணக்கம் வாருங்கள் . சொன்ன வாக்கு மாற மாடடீர்கள் தானே
 23. 1 point
 24. 1 point
  10 சாமர்த்திய கோல்கள்
 25. 1 point
  இதில் ஒருவிஷயம் மட்டும் தெளிவாக புலப்படுகின்றது என்னவெனில் கிந்தியாவின் திணிப்புக்களுக்கு தமிழ் ஈழ விடுதலை புலிகள் முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றார்கள் என்பது
 26. 1 point
  கிரிக்கெட் வீரரின் வேற லெவல் ஐடியா! இந்திய ஏ அணி மற்றும் ஐ.பி.எல். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர் சச்சின் பேபி. இவர் விரைவில் சாண்டி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் இவரது திருமண அழைப்பை மிகவும் வித்தியாசமான முறையில் தயாரித்துள்ளார். இதற்காக தயாரிக்கப்பட்ட வீடியோவில் சச்சின் பேட் செய்கிறார். மணப்பெண் சாண்டி பந்து வீசுகிறார். இதில் சாண்டியின் அழகில் மயங்கிய சச்சின், அவரது பந்தில் போல்டாகி, காதலில் விழுகிறார்.
 27. 1 point
  பாலின்றி / பால் வற்றி
 28. 1 point
  ஜே - சசி காலக்கண்ணாடி.. - அதிமுக புள்ளிகளும், அரசு அதிகாரிகளும் ஊழல் செய்வதை கண்டும் காணாமல் ஊக்குவித்தவர் ஜே. அந்த ஆதாரங்களை சேர்த்து வைத்துக்கொண்டவர் ஜே.. இதன்மூலம் அவர்களை காலில் விழச் செய்தார். - காலில் விழ வைத்த ஜேவை கீழே தள்ளி விழுத்தியவர் சசி.. ஆஸ்பத்திரியில் சேர்த்து எம்பாம் பண்ணி நேரத்தை எடுத்துக்கொண்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜேவின் கோப்புகளை வசப்படுத்தினார்கள் மன்னார்குடி குரூப். - இதையறிந்த டில்லி குரூப் சசியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வழங்குதல்.. எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களை அனுப்பி தகவல் சேகரித்தல்.. - தங்களது தகவல்கள் சசியிடம் போனதை அறிந்த அதிமுக புள்ளிகள் சசியின் காலில் விழுதல்.. - டில்லி குரூப் தனது அதிகாரிகளை அனுப்பி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ் என ஊழல் திமிங்கிலங்களைப் பிடித்தல்.. ராம மோகன் ராவின் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுத்துறை தகவல்களை எடுத்துச் செல்லுதல்.. - சசிக்கு பொதுச்செயலாளர் பதவி.. - 2019 தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி..
 29. 1 point
  சொந்த பாடசாலை மட்டுமே முன்னேறினால் போதும்: இது சுயநலமா? அரசாங்கத்தின் நிதி வளங்களை பயன்படுத்தத் தமிழர்களுக்கு தெரியாது?
 30. 1 point
  அன்பின் வெளிப்பாடு : படுகாயமடைந்து நடு தண்டவாளத்தில் இருந்த நண்பனை இரண்டு நாட்களாக பாதுகாத்த நாய் : காணொளி இணைப்பு படுகாயமடைந்த நிலையில் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பெண் நாய் ஒன்றை ஆண் நாய் ஒன்று ரயிலில் ரயிலில் அடிபடாமல் இரு நாட்களாக பாதுகாத்த சம்பவம் ஒன்று உக்ரைனில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உக்ரைனில் காயமுற்று தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட லுஸி எனும் நாயை அதன் துணை நாயானபண்டா இரண்டு நாளாக பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமைக்கான காணொளி வெளியாகி அணைவரையும் நெகிழவைத்துள்ளது. டெனிஸ் மலாப்பேயெவ் என்பவர் உக்ரைனின் டிசெக்லொவ்கா பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் காணொளியை பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக டெனிஸ் குறிப்பிட்டுள்ளதாவது, லுஸி எனும் பெண் நாய் அடிபட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்து வலியால் துடித்து கொண்டிருந்தது. இதன்போர் இதற்கு பக்கத்தில் அதன் ஆண் துணையான பண்டா நின்று ரயிலில் மோதாமல் காக்க ஒவ்வொரு முறை ரயில் குறித்த தண்டவாளத்தை கடக்கும் போதும் அடிபட்ட தனது ஜோடி நாயை தரையில் அமுத்துகின்றது. இவ்வாறு பனிப்பொழிவு மிகுந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த காணொளி வெளிவரவே குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்ததோடு நாயின் உரிமையாளரிடம் அவற்றைக் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk
 31. 1 point
  உலக மசாலா - 19 நாட்களில் கட்டிய 37 மாடி வீடு சீனாவின் கட்டுமான நிறுவனம் ஒன்று மிக மிகக் குறைந்த காலத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி சாதனை படைத்திருக்கிறது. சாங்ஷா நகரில் இருக்கும் இந்த ஸ்கை சிட்டி, 97 மாடிகளில் 800 குடியிருப்புகளைக் கட்டி 4 ஆயிரம் பேர் வசிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. 20 மாடிகளை நிறைவு செய்திருந்தபோது, உள்ளூர் அதிகாரிகள் கட்டிடத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்கள். இதற்காக ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல், அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார்கள். அருகில் விமான நிலையம் இருப்பதால், 57 மாடிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வருட காலத்தாமதத்தைச் சரி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது கட்டுமான நிறுவனம். மீதியுள்ள 37 மாடிகளையும் இரவு, பகல் பார்க்காமல் ஏராளமான தொழிலாளர்களை ஈடுபடுத்தி 19 நாட்களில் கட்டி முடித்துவிட்டது. 97 மாடிக் கட்டிடம் என்றால் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற சாதனை கிடைத்திருக்கும். ஆனால் 19 நாட்களில் 37 மாடிகளை கட்டி முடித்த சாதனை எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது! சாதனை மேல சாதனை செஞ்சிட்டே இருக்காங்க சீனர்கள்! அமெரிக்காவில் வசிக்கிறார் 21 வயது கேமரென் ப்ராண்ட்லி. அலபாமா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் மூன்று வேளையும் பூச்சிகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறார். மனிதர்களின் எதிர்கால உணவாக இருக்கப் போவது பூச்சிகள்தான். அதனால் பூச்சிகளை விதவிதமாகச் சமைத்து, சுவைத்துப் பார்க்கத் திட்டமிட்டேன். பூச்சிகளைச் சமைக்கும் வரை கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் சமைத்த பிறகு, சுவையில் எங்கோ சென்றுவிட்டது. மாடு, பன்றி இறைச்சிகளுக்குப் பதில் பூச்சிகளை வைத்துக்கொண்டேன். ஒரு மாதத்தில் என் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஃப்ரைட் ரைஸ் முதல் சிப்ஸ் வரை பூச்சிகளில் அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன். எண்ணெய் இல்லாமல் பாப்கார்ன் போல சில பூச்சிகளைப் பொறித்தும் உண்டேன். பட்டுபூச்சிகளில் உள்ள பியூபா பருவப் புழுக்கள் தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்கிறார் கேமரென். இந்தியாவில் பூச்சிகளுக்கும் தடை விதிப்பாங்களோ? சீனாவின் அல்டாய் மலைப் பகுதியில் தங்கம் கிடைப்பது வழக்கம். அங்கே கால்நடைகளை மேய்த்துக்கொண்டு சென்ற ஒருவரின் பார்வையில் பட்டது மஞ்சள் நிற உலோகக் கட்டி. நிலத்திலிருந்து தோண்டி எடுத்தார். வீட்டுக்குக் கொண்டு வந்தார். கட்டியைச் சுத்தம் செய்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். 7 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டி என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. இது 80 சதவிகிதம் சுத்தமான தங்கமாக இருந்தது. நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம். கண்டெடுத்தவர் பாராட்டுகளை வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டார். அல்டாய் என்றாலே தங்கம் என்று பொருள். இங்கே தங்கம் கிடைப்பது வெகு சகஜம். ஆனால் மிகப் பெரிய அளவில் நிலத்துக்கு மேலே தங்கக் கட்டி கிடைத்திருப்பதுதான் ஆச்சரியம் என்கிறார்கள். ம்… கண்டெடுத்தவருக்குக் கொஞ்சம் தங்கமாவது கொடுத்திருக்கலாம்… http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-19-நாட்களில்-கட்டிய-37-மாடி-வீடு/article6991324.ece?ref=relatedNews
 32. 1 point
 33. 1 point
  2016´ல்... தீர்வு கிடைக்கும், என்று இதைத்தான்... சம்பந்தன் ஐயா, சூசகமாக சொல்லியிருக்கிறார் போலை கிடக்கு.
 34. 1 point
  அருமையான. பதிவுகள் , நன்றி தங்கச்சி
 35. 1 point
  மூடிவைக்க முன்னர் நம்பிக்கையோடு கடைசி மூன்று பக்கங்களைப் பரிதாபமாகப் புரட்டினேன் அது வெறுமையாக இருந்தது அதில்தான் கவிதையே இருந்தது. Naavuk Arasan ·
 36. 1 point
  HOME கட்டுரைகள் பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு on: December 28, 2016In: கட்டுரைகள் Print Email பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளம் ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் எனப்படும் இடையர் மரபு வழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை, அலங்கா நல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். பண்டையத் தமிழ் நூல்கள் ஏறு தழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன. பெயர்க் காரணம் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட, ஆயர் குல ஆடவர்கள் பெண்ணிற்க்காக காளையை அடக்க ஆரம்பித்தனர். முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும் போது திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம். வட தமிழகத்தில் வடம் மஞ்சு விரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இரு புறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள். சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டி விடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக் கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது எனக் கூறப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது டில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி திருமணத்துக்கான முன் முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து ஆநிரை எனப்படும் மாட்டு மந்தையை கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும் அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. ஜல்லிகட்டு மாடு வளர்க்கப்படுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணக் கொடுக்கிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை. முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந்த நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும் காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேரே நின்று தாக்கும். வலிய கொம்புகளால் அதன் உடலைக் கிழித்துக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும் மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர். மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக் கூடியவை. ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கி வந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடி போட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊரின் தன்மையும் சேர்ந்தேயிருக்கிறது. ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியேதான் இருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக் கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை. மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்து விடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப் பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள். ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித் தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. காலத்தின் போக்கில் மனதில் உறங்கிக் கிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் மீட்கப்படுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவுகளில் கேட்கத் துவங்கியுள்ளது. “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று கூறுகிறது கலித்தொகை. அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான். தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணை அடைதற்கு வழி முறையாகவும் ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவு செய்து போய் இருக்கின்றன. இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம் மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப் போன பலவற்றையும் கலை என்ற பெயரில், கூத்து என்ற பெயரில், விளையாட்டு என்ற பெயரில் அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதி காரணம் இன்னதென அப்பழந் தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கு இருக்கும் இன்றைய அறிவு இப்பழந் தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களையும் ஆதி மனித எச்சங்களையும் பண்பாட்டில் துடித்த சமூகத்தின் வேர்களையும் வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன். நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர் நீத்த வீரர்களைக் காட்டுகின்றன. பழங்காலத்தில் காடு கரை, வீடு என்பன எல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான். அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்து வர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது. “கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை” என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான். முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது. தமிழ் இலக்கியங்கள் ஏத்திப் போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு. தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப் பின் புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழு விருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்கள். காயங்களும் வலியும் உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட வேண்டும் என்று முனைபவனும் என்றாலும் ஆழமான பள்ளத்தாக்கின் மேல் ஒற்றைச் சிறு கயிற்றைக் கட்டிக் கடப்பவனும் என்றாலும் உயிர் அபாயத்திற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான். மெய் சிலிர்க்க உள் நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும். வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான். ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணி வருகின்ற, காக்கத் துடிக்கின்ற ஒரு மரபு சரியா தவறா என்கிற சர்ச்சை அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது அவற்றின் சாதக பாதகங்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீயதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்க வேண்டும். ஒற்றுமைக் குரல் என்பது நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
 37. 1 point
  பண்டைய தமிழர்களின் திறமையை அழகாக அமைதியாக சொல்கிறார். தவறவிடாமல் பாருங்கள்.
 38. 1 point
  அறிவோம் நம் மொழியை: மற்றும் ஒரு பிரச்சினை... ஒருமை - பன்மை என்பதையும் செய்வினை - செயப்பாட்டுவினை என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்வதும் தவறு இல்லாமல் எழுத உதவும். ‘இப்படிப்பட்ட யோசனையும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன’ என்ற வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. யோசனை, ஆய்வாளர்கள் என ஒருமையும் பன்மையுமான பெயர்ச் சொற்கள் அருகருகே வந்ததால் ஏற்பட்ட குழப்பம் இது. ஒரு வாக்கியத்தில் எத்தனை பெயர்ச் சொற்கள் வந்தாலும், எது எழுவாய் என்பதில் தெளிவு இருந்தால் இந்தக் குழப்பம் வராது. இதே வாக்கியத்தைச் சற்றே மாற்றிப் பார்க்கலாம். ‘‘இப்படிப்பட்ட யோசனையை ஆய்வாளர்கள் முன்வைக் கிறார்கள்.’ செயப்பாட்டு வினை செய்வினையாக மாறியதும் எழுவாயும் மாறிவிட்டது. யோசனை என்பது ஒருமை. அது எழுவாயாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் என்னும் பன்மைச் சொல் எழுவாயாக இருந்தால், அதன் பயனிலைச் சொல் பன்மையாக இருக்க வேண்டும். செய்வினையிலும் செயப்பாட்டுவினை யிலும் நிகழும் மாற்றம் எழுவாயை மாற்றிவிடுவதை கவனித்து வாக்கியத்தை முழுமைப்படுத்த வேண்டும். தமிழில் எழுதும்போது தேவையில்லாமல் ஒட்டிக்கொள்ளும் சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். ‘ஒரு’ என்னும் சொல்லும் ‘மற்றும்’ என்னும் சொல்லும் பல இடங்களில் தேவையில்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஒரு வயதான பெரியவர்’ என்னும் வாக்கியத்தைப் பாருங்கள். ‘ஒரு’வயதானவர் எப்படிப் பெரியவராக இருக்க முடியும்? ‘வயதான ஒரு பெரியவர்’ என்று மாற்றி எழுதலாம் என்று சட்டென்று தோன்றக்கூடும். ஆனால், முதியவர் அல்லது வயதானவர் என்னும் சொல் நாம் சொல்லவருவதைத் தெளிவாகச் சொல்லிவிடும். இந்நிலையில் ‘ஒரு வயதான பெரியவர்’ என்பது எதற்கு? ‘ஒரு அழகான பெண்’, ‘ஒரு பெரிய மரம்’. ‘ஒரு பத்தாம்பசலித்தனமான நடவடிக்கை’ என்றெல்லாம் பல வாக்கியங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஒரு அழகு என்பது பொருளற்ற தொடர். அழகை ஒன்று, இரண்டு என்று எண்ண முடியாது. ‘அழகான ஒரு பெண்’ என்று சொல்லலாம். சரியாகச் சொல்லப்போனால், ‘ஒரு’ இல்லாமலேயே எழுதலாம். ‘பெரிய மரம்’, ‘அழகான பெண்’ என்றெல்லாம் சொல்லும்போது, அது தமிழுக்கு இயல்பாக இருக்கிறது. எத்தனை பெண்கள், எத்தனை மரங்கள் என்னும் குழப்பம் இந்த வாக்கியங்களில் வருவதும் இல்லை. ஆங்கிலத்தில் Articles எனச் சொல்லப்படும் A, An, The ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பயன்படுத்தப்பட வேண்டும். பெயர்ச் சொல்லுக்கு முன்பு அழகிய, பெரிய, பழைய என்பன போன்ற பண்புத் தொகைகள் இருந்தால் அவற்றுக்கு முன்பும் A / An / The பயன்படுத்த வேண்டும். A beautiful tree, an old man, the narrative style என்பது போன்ற வாக்கியங்கள் ஆங்கிலத்தில் மிகவும் இயல்பானவை. ஆங்கில இலக்கணத்தை அடியொற்றியவை. ஆனால், இந்தத் தாக்கத்தில் தமிழிலும் எங்கு பார்த்தாலும் ‘ஒரு’ சேர்ப்பது தேவையற்றது. இந்தப் போக்கை மொழிபெயர்ப்புகளில் அதிகம் பார்க்கலாம். ஒன்று என்னும் பொருள் கட்டாயம் தேவைப்படும் இடம் தவிர, பிற இடங்களில் ‘ஒரு’ என்பதைத் தவிர்ப்பது இயல்பான தமிழாக இருக்கும். இதே போன்ற இன்னொரு சொல் ‘மற்றும்’. இதை அடுத்த வாரம் பார்ப்போம். http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-மற்றும்-ஒரு-பிரச்சினை/article9260865.ece October 24, 2016
 39. 1 point
 40. 1 point
  அம்மம்மா நல்ல கைப் பக்குவம், வாசனை இங்கேயே தூக்குது ....! பகிர்வுக்கு நன்றி நவீனன் ....!
 41. 1 point
  வாழ்த்துக்கள் நெடுக்ஸ், சுண்டுஸ், சேவையர், கலைஞன். என்னப்பா அதிசயம்மாய் இருக்கு.
 42. 1 point
  ஒரு நிமிடக் கதை: கடன் நல்லது ‘‘சார்..!’’ வாசலில் குரல் கேட்டு எட்டிப் பார்த்தார் முரளி. அந்தத் தெருவில் அயர்ன் பண்ணுபவர், ஒரு 15 வயசு பையனுடன் நின்றுகொண்டிருந்தார். ‘‘சார்.. இவன் என் பையன். . ஸ்கூலுக்குப் போக ஒரு சைக்கிள் வேணும்னு கேக்கறான். இந்த தெருவுல எல்லார் வீட்டிலும் கொஞ்சம் கடன் வாங்கி சைக்கிள் வாங்கித் தரலாம்னு கூட்டிட்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுங்க.. அயர்ன் பண்ணுற காசுல கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுக்கலாம்..” என்றார். அஞ்சு வருஷமாக அவரைத் தெரியும்.. நம்பிக்கையானவர்தான். முரளியும் ஒரு தொகையைக் கொடுத்தனுப்பினார். ஆனால் மகனையும் கூட்டிக்கொண்டு வந்து அவர் கடன் கேட்டது முரளிக்கு உறுத்தியது. சின்னப்பையன்.. இப்படி ஒவ்வொரு வீட்டிலும் அப்பா கடன் கேட்பது அவனுக்கு அவமானமாக இருக்காதா..? அடுத்த நாள் அவரைப் பார்த்ததும் தன் மன உறுத்தலைச் சொன்னார். அயர்ன்காரர் சிரித்துக்கொண்டே, ‘‘சார்.. பையன் கேட்டது உபயோகமானதுன்னு கண்டிப்பா வாங்கித் தர்றேன்னு சொல் லிட்டேன்.. அதனால, அப்பாவுக்கு நம்ம மேல எவ்வளவு அன்புன்னு அவனுக்குப் புரியும். நியாயமானதைக் கேட்டா வாங்கித் தரு வார்னு நம்பிக்கையும் வரும். அதேசமயம், அதை வாங்க நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு அவனுக்குத் தெரியணும்.. அப்பத்தான் அவனுக்கு அதன்மேல் அக்கறையும், குடும்பப் பொறுப்பும் வரும்..’’ என்றார். படிக்காத ஒரு ஏழைத் தொழிலாளியின் தொலைநோக்குப் பார்வை முரளியை வியக்க வைத்தது! http://tamil.thehindu.com/opinion/blogs/ஒரு-நிமிடக்-கதை-கடன்-நல்லது/article9445569.ece
 43. 1 point
  எமக்கான புத்தாண்டு என்று சித்திரை வருடபிறப்பை கொண்டுவந்தவர்கள் ஆரியர்களே. அதன் முன்னர் தை மாதத்தில் தான் தமிழர்களும் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இது தொடர்பான பதிவை தேடுகிறேன். கிடைத்ததும் போடுகிறேன். யாழ் உறவு ஒன்றுதான் பதிந்திருந்தார். நீங்கள் எல்லாம் சித்திரைப புத்தாண்டைக் கொண்டாடுகிறீர்களா என்ன ??/ ஆங்கிலப் புத்தாண்டுக்கும் கிறித்தவத்துக்கும் என்ன தொடர்பு ???? ஒரு கருத்து விளங்கினாலும் விளங்காததுபோல் எழுத உங்களால் மட்டும் தான் முடியும் அண்ணா
 44. 1 point
  மதவாதம் - ஏதாவது ஒரு மதத்தை மையப்படுத்தி கட்டியெழுப்பப்படும் இனொரு மதத்துக்கு ஏதிரானகருத்து. இனவாதம் - ஏதாவது ஒரு இனத்தை மையப்படுத்தி கட்டியெழுப்பப்படும் இனொரு இனத்துக்கு ஏதிரானகருத்து. மதவாதம் பெரும்பாலும் மதக்கலவரங்களிலும் இனவாதம் இனக்கலவரங்களிலும் முடியும்.
 45. 1 point
 46. 1 point
  அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட் Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia — Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016 இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றபோது ‛என் தலைவனை மட்டும் எப்படி தவிர்க்கலாம்’ என போர்க்கொடி தூக்கினர் டிராவிட் ரசிகர்கள். ‛பொறுமை, பொறுமை... இந்தியா - ஏ மற்றும் அண்டர் -19 அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களைக் கண்டறிந்து தேசிய அணிக்கு அனுப்புவது அவர் பொறுப்பு’ என அப்போது பி.சி.சி.ஐ. செயலராக இருந்த அனுராக் தாக்கூர் பதில் சொன்னார். இப்போது புரிகிறதா? அனுராக் ஏன் டிராவிட்டை பாராட்டினார் என்று. ‛ஒப்புக்குச் சப்பாணி பதவி இது’ என திருப்தியில்லாமல்தான் இருந்தனர் டிராவிட் ரசிகர்கள். ஆனால் அந்த பணியை அவ்வளவு அனுபவித்து செய்தார் டிராவிட். இதோ... இரண்டே ஆண்டுகளில் தேசிய அணியில் விளையாடுவதற்கு தகுதியுடைய வீரர்களை இறக்கிக் கொண்டே இருக்கிறார். ரகானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் டிராவிட்டிடம் பாலபாடம் பயின்றவர்கள் என்பது கிரிக்கெட் உலகம் அறிந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட்டில் ஒன்பதாவது இடத்தில் இறங்கி சதம் அடித்த ஜெயந்த் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா ஆகியோரை, தேசிய அணியில் ஜொலிக்கும் வகையில் செதுக்கியது டிராவிட்டின் கைவண்ணம். இன்னும்... ரிஷப் பன்ட் போன்ற அவர் வார்ப்பில் உருவான நட்சத்திரங்கள் எந்நேரத்திலும் ஜொலிக்க காத்திருக்கின்றனர். கருண் நாயர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மூவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். டிராவிட் சொல்லி கருண் நாயரை டெஸ்ட் அணியில் கும்ப்ளே சேர்த்துக் கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. இதை ஊர்ப்பாசம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், கும்ப்ளே, டிராவிட்டின் மனநிலைக்கு நேர் எதிர் கேரக்டர், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். டிராவிட் சொல்லும் வீரர்களை கும்ப்ளேதான் பயன்படுத்தப் போகிறார் என்றாலும், அந்த வீரர்களை தேர்வு செய்வதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது எம்.எஸ்.கே.பிரசாத். ஸோ... ஊர்ப்பாசம் தவிர்த்து, வீரர்களிடம் திறமை இருந்தால்தான் வேலைக்கு ஆகும். அப்படி திறமையானவர்களை டிராவிட் கண்டறிந்தார் என்பதற்கு சமீபத்திய பெஸ்ட் உதாரணம் ஜெயந்த் யாதவ். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டி மெல்போர்னில் நடந்தது. அதில், ஜெயந்த் யாதவ் மூன்று இன்னிங்சில் அடித்த ரன்கள் 11,46, 28. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த ரன்கள் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். இவை அனைத்தும் அணி ஆறு விக்கெட்டை இழந்து தள்ளாடியபோது, லோயர் ஆர்டரில் இறங்கி ஜெயந்த் அடித்தவை. அதை விட, பிரிஸ்பேன் ஆடுகளத்தில், கேன் ரிச்சர்ட்சன், ஜேக்சன் பேர்ட் பெளன்சர்களாக வீசிய வேகத்தைப் பார்த்து மிரளாமல், அநாயசமாக எதிர் கொண்டார் என்பதால் டிராவிட்டின் குட்புக்கில் இடம்பிடித்தார் ஜெயந்த். அதோடு ஃபீல்டிங்கில் கல்லியில் நிற்பதிலும் பக்கா. ஆஃப் ஸ்பின்னர் என்பது கூடுதல் பலம். இது எல்லாவற்றையும் விட அவரது ஆட்டிட்யூட் டிராவிட்டுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. 'அஷ்வினுக்கு மாற்றாக எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்’ என ஜெயந்த் பற்றி கும்ப்ளே காதில் போட்டு வைத்தார் டிராவிட். அடுத்த சில நாட்களில் இந்திய அணியில் சேர்ந்தார் ஜெயந்த். டிராவிட் இளம் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதும் சென்னையில் இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் மோதிய நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் தொடர் நடந்தன. இதில் இந்தியா சொதப்பிய நாட்களில் எல்லாம், பிரஸ் மீட்டுக்கு வந்தார் டிராவிட். பயிற்சியாளராக உங்கள் பணி என்ன எனக் கேட்டதும் 'உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்பது என் குறிக்கோள் அல்ல. பிராசஸ். இந்திய அணியில் விளையாடவல்ல வீரர்களை அடையாளம் காண்பதே என் பணி. இங்குள்ள இளம் வீரர்களில் பலர், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். எனவே, அவர்களுக்கு சின்ன சின்ன கரெக்சன்கள் சொல்வதோடு சரி. மற்றபடி எல்லோருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவர்கள் ஆட்டத்தை மாற்ற ஒருபோதும் நிர்பந்திக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை மனதளவில் பெரிய இன்னிங்ஸ் விளையாடத் தயார்படுத்துவதே என் வேலை’ என்றார் இந்திய அணியின் சுவர். '50 ரன்கள் அடித்தபின் அதை சதமாக மாற்றவும், அதற்கு மேலும் ரன் அடிக்கவும் காரணம், என் ஆதர்ச நாயகன் ராகுல் டிராவிட் சொன்ன அறிவுரைதான் ’ என்றார், 2014-15 ரஞ்சி சீசனில், தமிழ்நாட்டின் சிறந்த வீரர் விருது வென்ற விஜய் சங்கர். இதைப் பல வீரர்கள் வழிமொழிவர். டிராவிட் அப்படி சொன்னாரே தவிர, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் ஆட்டத்தைப் பற்றியும் நன்கு கணித்து வைத்திருந்தார். விராட் கோஹ்லி என்னதான் அடித்து நொறுக்கினாலும், இன்னும் அவருக்கு ட்ரைவ் போல ஸ்வீப் வசப்படவில்லை. கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன், சென்னையில் நடந்த போட்டியில் இந்தியா ஏ அணியினருடன் இணைந்து விளையாடினார் கோஹ்லி. போட்டி சீக்கிரமே முடிந்து விட்டதால் மதிய நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர் இந்திய வீரர்கள். அப்போது டிராவிட் தனியாக கோஹ்லிக்கு ஸ்வீப் அடிக்க கற்றுக் கொடுத்தார். ஸ்வீப் செய்யும்போது முன்னங்கால் எப்படி இருக்க வேண்டும், எந்தளவு பெண்ட் செய்ய வேண்டும், பேட்டை எந்த கோணத்தில் பிடித்திருக்க வேண்டும், முகம் எப்படி திரும்ப வேண்டும் என விலாவரியாக விவரித்த தருணத்தை, ஃபோட்டோகிராபர்கள் மிஸ் செய்யாமல் க்ளிக்கினர். மறுநாள் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஸ்போர்ட் ஸ்பக்கத்தில் அந்த செய்திதான் ஹைலைட். இலங்கை புறப்படும் முன் கோஹ்லியிடம் ‛நேற்று டிராவிட் உங்களுக்கு ஸ்வீப் ஆடக் கற்றுக் கொடுத்தது போல தெரிந்ததே...’ என நிருபர்கள் கேட்க 'ஆமாம், டிராவிட் சில நுணுக்கங்களை சொன்னார். ரகானே, ராகுல், ரோகித் என எல்லோருக்குமே ஸ்வீப் நன்றாக வருகிறது. நானும் கூடுதலாக ஒரு ஷாட் தெரிந்து வைத்திருந்தால் நல்லதுதானே’ என விளக்கினார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன். டிராவிட்டிடம் கேட்டபோது ‛ரொட்டேட் தி ஸ்ட்ரைக் ரொம்ப முக்கியம். ட்ரைவ்களில் நீங்கள் திறமைசாலி எனில், எளிதாக உங்களை கட்டம் கட்ட முடியும். நீங்கள் அடிக்கடி ட்ரைவ் செய்தால் எதிரணியினர் அந்த இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்தி உங்களை திணறடித்து விடுவர். கூடுதலாக ரன் எடுக்க வேண்டுமானால், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்றார். 'அதேநேரத்தில் இன்றைய இளைஞர்கள் சுழற்பந்தை ஆரம்பத்தில் இருந்து அடித்து ஆட முயல்கின்றனர். அது தவறு. Sometimes we need to give the ball the respect it deserves’ என்றார் ஆபத்தான பந்தை தொடாமல் விடுவதில் வல்லவரான டிராவிட். இப்படி டெக்னிக்கல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய டிராவிட், உளவியல் ரீதியாக, மனரீதியாக வீரர்களை தயார்படுத்தியது தனிக்கதை. ‛As long as rahul dravid is at other end, india will not lose... முதல் பதினைந்து நிமிடங்களில் டிராவிட் விக்கெட்டை எடுக்க முயற்சி செய். முடியவில்லையா, அவருக்கு எதிர்முனையில் இருப்பவரை ஆட்டமிழக்கச் செய்...’ என்பது, டிராவிட் விளையாடிய காலத்தில் நிலவிய கருத்து. அதையே இன்று, தன் வீரர்களுக்கு சொல்லி வருகிறார் டிராவிட். ‛போனவுடன் அடித்து ஆடாதே. சில சமயங்களில் நாம் ஆட்டம் மோசமாக இருக்கலாம். பெளலர் ஏற்கனவே வியூகங்களுடன் தயாராக இருக்கலாம். முதலில் சூழலையும், பெளலரின் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் என பல நுணுக்கங்களைச் சொன்னார் டிராவிட். ஒவ்வொரு முறையும் பயிற்சியின்போது புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயம் சொல்வார். டெக்னிக்கல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம் ஏராளம். இந்திய ஏ அணியில் இருந்து வரும் ஒவ்வொரு வீரரும் இதை உணர்வர்’’ என்றார் சஞ்சு சாம்சன். ஜூனியர்கள் மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் சீனியர்களும் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்டு நின்றனர். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்கு புஜாரா தலைமை ஏற்றிருந்தார். ஏனெனில் அப்போது அவர் இந்திய அணியில் தடுமாறிக் கொண்டிருந்தார். தன் ஆட்டம் குறித்து புஜாரா கேட்டதும் ‛‛டெக்னிக் ரீதியாக உங்கள் ஆட்டத்தில் குறை ஏதும் இல்லை. ரன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு உள்ளது. ஸ்பின்னர்களுக்கு எதிராக அபாரமாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதால், கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதும். உங்கள் இயல்பான ஆட்டம் வெளிப்படும்’ என, புஜாராவுக்கு டிராவிட் அறிவுரை சொன்னார். டிராவிட்டிடம் இளம் வீரர்கள் அதிசயிக்கும் இன்னொரு விஷயம், அவரது எளிமை. ஒருமுறை ஃபீல்டிங் பயிற்சி முடித்து விட்டு வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் திரும்பிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட சப்போர்ட்டிங் ஸ்டாஃப் முதல் வீரர்கள் வரை எல்லோருமே மைதானத்தில் இருந்து புறப்பட்டு விட்டனர். ஆனால், டிராவிட் பயிற்சியின்போது ஆங்காங்கே சிதறிக் கிடந்த பந்துகளை எல்லாம் ஒன்று விடாமல் சேகரித்து, அதை அதற்குரிய பெட்டியில் போட்டு விட்டு நகர்ந்தார். அவர் கை அசைத்திருந்தால், அதை எடுத்து வைக்க நூறு பேர் இருக்கின்றனர். டிராவிட் அப்படிச் செய்யவில்லை. அதான் டிராவிட். பனைமரத்தில் எதுவும் வீண் போகாது. போலவே, கிரிக்கெட்டுக்கு ராகுல் டிராவிட். http://www.vikatan.com/news/sports/75803-rahul-dravid-behind-indias-bench-strength.art
 47. 1 point
  நிட்சயமாக ஈழப்பிரியன் அண்ண விபரமாக அன்றைய நினைவையும் அதன் பின்பு வந்த நினையையும் தருகிறேன் மறக்க வில்லை விபரமாக தருகிறேன் . உங்கள் நினைவுக்கும் மீள் பார்வைக்கும் நன்றிகள் மரைகள் இரண்டு கொம்பன்
 48. 1 point
 49. 1 point
  கக்கூஸ் கதையல்ல கலாய் ... ஜீவநதிக்காக..சாத்திரி . வாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம் அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக "யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா".. "இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் " என்றார் பவ்வியமாக . இதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா?".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் "டை". யில் பிடித்து யன்னலோரம் இழுத்துப் போனவர்."பார் நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்."உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி" என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும் போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான். "சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் .."நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு".. வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ...... 000000000000000000000000000000000000000000 அன்றைய தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி.."உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா?..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப் பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். "ச்சே போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான். "நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி" என்று பிரேக்கின் நியூஸ் போய்க்கொண்டிருந்தது.. அருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு "இது தான் கக்கூசு".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள் பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... "பாத்தது போதும் வாடா".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் . ஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி "டேய் லேசா கலக்குது ஒருக்கா".. என்று கெஞ்சியவனிடம். "எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த வெஸ்டர்ன் கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய் பின்னலை பெரிய பனங்காணி இருக்கு".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு." உலக வங்கியின் நிதியுதவியோடு முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. "அடே நண்பா உன்னை வெல்வேன்".. என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன் இரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. "கழிப்பறையை முகமாலையில் கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் . 0000000000000000000000000000000000000000000000000000 யாழ் நாவலர் கலாச்சார மண்டபம் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத் தொடங்குகிறார். "சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள் .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் . ஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். "..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின் கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே ." இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர் இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை "..என்று தாடியை தடவியபடி சிரித்தார் தயானந்தா. அதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம் உரத்த குரலில்.. "இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில் இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான் 1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்".. என்றார். சிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம் மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு"உண்மையிலேயே இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அதற்கிடையில் கிம் மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று "முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்" என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் "வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு. "வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் ."டேய் வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு".. நான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை .. இவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் .. பார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் .."வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு"..தொடர்ந்து கத்தினார் .. "சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம் கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே "சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் "..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே "அதை நீங்களே போட்டு கிழியுங்கடா".. என்று விட்டு கிழம்பிவிட்டார் . 00000000000000000000000000000000000 மீண்டும் வாஷிங்டன் சிட்டியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம் அறைக்குள் நுழைத்ததும்."சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சு?வெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல"... சொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ... அமேசன் காட்டுக்கா ?...அங்கைதான் மனிசரே இல்லையே .... பரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ... செயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ... ....................................................................................................................................................... குமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...
 50. 1 point
  அஞ்சலி – சிறுகதை October 2, 2016 சிறுகதை சாத்திரி No Comments வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டுப் பத்திரிகை போடுபவன் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன். நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “. “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”. .”காணவில்லை. அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச் செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்துக் காவல் நிலையங்களும் தீயணைப்பு நிலையங்களும், கடலோரக் காவல் நிலைகளும் உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவியுங்கள்’.என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம். உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே…… தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின் இலக்கத்தைத் தேடினேன் . ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால் நோக்கியாவிலிருந்து ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும் சிறியண்ணாவின் கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன். பிட்சா போடுகிறவன் ஒரு நாள் லீவு வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும் வேலைக்கு வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும் லீவு தரமுடியாது என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை. அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும் நான்தான் கவனிக்க வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி விட்டேன். ******************************* காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல் வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று அவனை லேசாய் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது . ‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத் தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான். லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து அதற்குப் பணமும் கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான குய்னேசில் நடந்தது. வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில் நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில் இரவு வீடு திரும்பியபோது அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வைத்துவிட்டு “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ் தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது. காதல் மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில் தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான். ******************************* நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும் ஒருவர். சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு திருமணமாகியிருந்தது, கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும் திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில் கதைத்துப் பேசவும் அவரது கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார். கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு வாங்குவதுண்டு. அவர்களுக்கு அஞ்சலி பிறந்த பின்னர் அவர் நகர மத்தியில் பெரிய கபே பார் ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும் வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம் கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன் பின்னர் கடைதான் அவர்களுக்கு வீடு . அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள் செல்லப் பிள்ளையானாள். Angel bar நகர மத்தியில் அமைந்திருந்ததால் அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை, அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள். லீவு நாட்களில் சிறி அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள். ஒரே செல்ல மகள் என்பதால் அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும் மாறிவிட்டிருந்தாள். நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம் “டேய் மாமா டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப் பிடுங்கிவிடுவாள். “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன். பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து விட்டிருந்தது. “டேய் புகையிது புகையிது” என்று பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன். ஓம குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த பிட்சா. எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து “என்ன யோசனை”? என்றான். நான் “இல்லை அஞ்சலி” என்று சொல்லவும் “ஓ …அஞ்சலினா ஜோலியா” ஒழுங்கா வேலையைப் பார் என்று முறைத்து விட்டுப்போனான். எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான மாவை உருட்ட ஆரம்பித்தேன்…. ******************************* மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது அவனுக்கு யாரையும் தெரியாது. மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது. கிராமசபை உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு உணவு விடுதி ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இரவு நேரத்தனிமையையும் மகனின் நினைவுகளையும் போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மனைவி லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து குடித்து முடித்த பியர் கேனை ஆத்திரம் தீர நசுக்கி எறிவான். எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும் மறக்க நினைத்த அத்தனையும் மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத் தலை சுற்றிச் சுய நினைவிழந்துபோய் விடுவான். நினைவுகளை கொல்வதற்காக அடுத்த தெரிவாக கஞ்சா என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில் நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு இப்போதெல்லாம் வேலை முடிந்ததும் இரவில் இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான். அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து பொத்திப் பிடித்து கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில் கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி ஆழமாக உள்ளே இழுத்தான். பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம் அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது கொஞ்சம் சிறியதாக உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு குனிந்து பார்த்தான். தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது . அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை. அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது. “என்னைப் போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை அணைத்துத் தூக்கியவன் உனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின் முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு எல்லாமே லொக்காதான் . ******************************* அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம் கிடைத்துமிருந்தது. அவரது கடையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. என்னைப் போலவே அவர்களும் புதினம் அறிய வந்திருக்கலாம். யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். சிறிய வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று “ஏதாவது அருந்துகிறீர்களா” என்றவளிடம் ஒரு கோப்பிக்குச் சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன். சிறி அண்ணா பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை. என்னைக் கண்டதும் வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார். அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை நோக்கியே திரும்பின. “அண்ணை என்ன இது குழந்தை மாதிரி” என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் . என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர். “தம்பி நீ மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும் நம்பிக்கையாலையும் உன்னைக் கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “. ”சரியண்ணை நடந்தது நடந்து போச்சு, விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்” ”அவங்களும் அந்தப் பெடியன் ரெமியையும் அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” . ”கடைசிவரை அந்த ரெமியோடை தான் சினேகிதமா …….?” ”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப் பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும் களவாய்ப் பத்துவாள். எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.” ”அப்போ என்னதான் நடந்தது .?” ”முந்தா நாள் காலமை ஒரு சினேகிதியைப் பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை. இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”. “பேப்பரிலை இளம் தாய் எண்டு போட்டிருக்கே” என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப் போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே தொட்டிலில் சாயலில் அஞ்சலியைப் போலவே ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது . இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை ஏழு மாசம் . பணிப்பெண் கோப்பியை நீட்டினாள், அதனை அவசரமாக விழுங்கியபடி… “எங்கை சுமதியக்கா”? ”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.” “சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது” என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து “அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப் பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி” என்றவரிடம் விடை பெறும்போது வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும் பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி. “தம்பி சில நேரங்களிலை உங்களிட்டை 5 … 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன், என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின. “போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை” என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து முதல் நாள் பேப்பரில் அஞ்சலியின் “காணவில்லை” என்கிற அறிவித்தலை வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய பேப்பரை எடுத்துப் புரட்டினேன். அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன். போன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சரி இன்றைக்கும் நான்தான் பிட்சா போடவேண்டும். ******************************* மதியத்துக்கு தேவையான உணவு, தண்ணீர், நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை பார்ப்பதுமாக இருந்தது. அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான். வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ் துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது, வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல் மூத்திரம் பெய்து விட்டு வந்தது. யாருமற்ற காடு, காற்று மரங்களில் மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை. பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான். மெதுவாகவே நடந்து சென்ற லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து அவனது காலடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு மீண்டும் பந்தை எறிந்தான். இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது. “களைத்துப்போய் விட்டாயா…. சரி” என்றபடி அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து வைன் போத்தலை எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை எடுத்து விட்டுப் பார்த்தான். பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக் கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது . ******************************* நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள். சில காலங்களின் பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள் “மாமா இவன்தான் ரெமி என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள். வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய போது அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி பதில் வணக்கம் சொன்ன விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின் தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன். சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல இரயில் நிலையத்தின் பின்னால் உள்ள கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு அமர்ந்திருப்பாள். “இந்தக் காலத்து பிள்ளைகள்” என்கிற ஒரு பெரு மூச்சோடு கார் ஒலிப்பானை ஒலிக்காமலும் காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு . அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு அவதானித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து தள்ளிவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி நின்றிருந்தான். கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச் செல்ல அனைவரும் ஓடி விட்டார்கள். தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத் தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன். கண்கள் சிவந்து, வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும் “ஒண்டுமில்லை” என்றபடி சீற்றில் சாய்ந்து கொண்டாள். ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன். “எங்கை மாமா போறாய்? ” ”உங்கடை கடைக்கு” ”எதுக்கு? ” ”உன்ரை அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்” ”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ” “பேசாமல் வா” ”காசு தர முடியுமா முடியாதா ?” “முடியாது ” என்றதும் அவள் ஆசனப்பட்டியை எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே, நான் சட்டென்று பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை ஒலிக்கத் தொடங்கின. ஒருவன் “ஏய் …பைத்தியக்காரா” என்று சத்தமாகவே கத்தினான். எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். “எடியே நில்லடி ” என்று நான் கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப் போய்விட்டாள். எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு இரண்டு அடி போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும். பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின் சத்தம் எதுவும் செய்ய முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய் அவரிடம் விபரத்தை சொன்னதும் அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார். கோபத்தோடு எனக்கு அவமானமும் சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன். அதுதான் நான் அவரோடும் அஞ்சலியோடும் பேசிய இறுதி நாட்கள். ******************************* அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கொள்ள, அதிலிருந்து இறங்கியவன் காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான தடித்த பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான். காரிலிருந்து ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா” என்று அழைத்தபடியே பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த அஞ்சலியிடம் நீட்டினான். அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம் அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல் அமர்ந்துகொள்ள, அவளருகே அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான். இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி யிருந்தனர். போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன் இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது. சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக் கொக்கெயின் பொட்டலத்தையும் எடுத்தவன் சினிமா டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து கொட்டி சிகரெட் பெட்டியில் மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை எடுத்து “இந்தா அஞ்சலி” என்று நீட்டினான். ”இல்லையடா எனக்கு வேண்டாம்” ”ஏன் ?” ”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்” ”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை” ”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்” “ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய் இதெல்லாம் ஒரு காரணமா?” ”வேண்டாம் விட்டிடேன்” “சரி எனக்கும் வேண்டாம்” என்றபடி பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப் போத்தலை எடுத்துச் சட்டென்று தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி உடைந்த போத்தலால் அதைக் கிழித்து இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய் எதுக்கடா இப்பிடி” என்றாள். “அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ? எனக்கு நீ வேணும்” என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத் துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு நிமிந்தவளின் கண்கள் சிவந்து, கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன. அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன் சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண் மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்” என்று இழுத்து விட்டிருந்தான். அவள் கைகளை ஓங்கி நிலத்தில் அடித்த சத்தத்தில் மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று அலறிப் பறந்து போனது. இறுதியாய் உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன் முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது. எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன் கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை ஒட்டிக்கொண்டு இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல் பக்குவமாக அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன் கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் . ******************************* வைனைக் குடித்துமுடித்துவிட்டு சிறிய சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக் கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான். மாலை மூன்று மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம் நிற்கவேண்டும். எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு முன்னர் லொக்கவோடு செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள் வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது அதே வேகத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தது. “இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான் அவசரமோ ” என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான். லொக்கா அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது. கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள் நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து மருந்தை இழுத்தெடுத்தவர் இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில் அழுத்தியபடி மருந்தை செலுத்தினார். மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல் வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல் ஒற்றையும் வாங்கிச் சென்றவன் லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில் தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன் இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு இரண்டாவது கிளாஸில் விஸ்கியை நிரப்பத் தொடங்கியிருந்தான் . ******************************* யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள் வைத்திருக்கும் சிறிய கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான். இரத்தம் உறைந்துபோயிருந்த ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த தால் சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது. ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன் “என்னடி முறைக்கிறாய் ” என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித் தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை அரிந்து முடித்து இயந்திர வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான். ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுவிட்டு வெட்டும்போது சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில் போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப் பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி விழுந்த நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் . ******************************* அன்றும் வழமைபோல பத்திரிகையைத் தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப் போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான். “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”.. என்றதுக்கு கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன் “லொக்காவுக்கு வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது. அதுக்கு வயசாகி விட்டதால் கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர் சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்து கண்கள் கலங்கின. “சரி சரி கவலைப் படாதே” என்று அவனது தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும் “ஏய், இந்தப் பெண், அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான். “ச்சே என்ன இவன்…. மணிரத்தினம் படம் எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி “தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில் இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின் பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது. ”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர் இந்தக் காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாகப் போய் விட்டான். ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். மறுநாள் பத்திரிகையில் “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன் தொடர்பாக ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான். அவன் கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப் பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. உடலின் சில பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான். அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது” ’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப் பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின் கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான். எனக்கு வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன். அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின் செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்” என்றிருந்தது. நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர். பல மெழுகுவர்த்திகள் இன்னமும் எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது “ச்சே சிறியண்ணர் இவளுக்கு அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன் “காதலே ஏன் இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய கடதாசியில் ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது. அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் . ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய எனக்கு “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது. அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி வீதிக்கு இறக்கியபோது தான் நான் போட்ட சில்லறைகளை ஒருவன் பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு “ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான். அதற்கிடையில் பின்னால் ஒரு வண்டிக்காரன் ஒலிப்பனை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம். நெற்றியில் விரல்களை அழுத்தி யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.