Leaderboard

 1. sathiri

  sathiri

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content count

   5,039


 2. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content count

   56,787


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content count

   38,465


 4. பகலவன்

  பகலவன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content count

   1,388



Popular Content

Showing most liked content on 10/06/2016 in all areas

 1. 5 points
  எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன. மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள். "நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின் பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன. இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது. இதே சம்பவத்தில், இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான். பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன். மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான். வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். அம்மானிடம் சென்று விசாரணை முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன். அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது. அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது. அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின் பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது.
 2. 5 points
  அஞ்சலி – சிறுகதை October 2, 2016 சிறுகதை சாத்திரி No Comments வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டுப் பத்திரிகை போடுபவன் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன். நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “. “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”. .”காணவில்லை. அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச் செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்துக் காவல் நிலையங்களும் தீயணைப்பு நிலையங்களும், கடலோரக் காவல் நிலைகளும் உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவியுங்கள்’.என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம். உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே…… தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும் குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின் இலக்கத்தைத் தேடினேன் . ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால் நோக்கியாவிலிருந்து ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும் சிறியண்ணாவின் கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன். பிட்சா போடுகிறவன் ஒரு நாள் லீவு வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும் வேலைக்கு வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும் லீவு தரமுடியாது என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை. அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும் நான்தான் கவனிக்க வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி விட்டேன். ******************************* காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல் வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று அவனை லேசாய் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது . ‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத் தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான். லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து அதற்குப் பணமும் கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான குய்னேசில் நடந்தது. வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில் நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில் இரவு வீடு திரும்பியபோது அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வைத்துவிட்டு “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ் தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது. காதல் மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில் தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான். ******************************* நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும் ஒருவர். சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு திருமணமாகியிருந்தது, கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும் திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில் கதைத்துப் பேசவும் அவரது கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார். கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு வாங்குவதுண்டு. அவர்களுக்கு அஞ்சலி பிறந்த பின்னர் அவர் நகர மத்தியில் பெரிய கபே பார் ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும் வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம் கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன் பின்னர் கடைதான் அவர்களுக்கு வீடு . அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள் செல்லப் பிள்ளையானாள். Angel bar நகர மத்தியில் அமைந்திருந்ததால் அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை, அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள். லீவு நாட்களில் சிறி அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள். ஒரே செல்ல மகள் என்பதால் அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும் மாறிவிட்டிருந்தாள். நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம் “டேய் மாமா டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப் பிடுங்கிவிடுவாள். “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன். பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து விட்டிருந்தது. “டேய் புகையிது புகையிது” என்று பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன். ஓம குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த பிட்சா. எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து “என்ன யோசனை”? என்றான். நான் “இல்லை அஞ்சலி” என்று சொல்லவும் “ஓ …அஞ்சலினா ஜோலியா” ஒழுங்கா வேலையைப் பார் என்று முறைத்து விட்டுப்போனான். எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான மாவை உருட்ட ஆரம்பித்தேன்…. ******************************* மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது அவனுக்கு யாரையும் தெரியாது. மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது. கிராமசபை உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு உணவு விடுதி ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இரவு நேரத்தனிமையையும் மகனின் நினைவுகளையும் போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மனைவி லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து குடித்து முடித்த பியர் கேனை ஆத்திரம் தீர நசுக்கி எறிவான். எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும் மறக்க நினைத்த அத்தனையும் மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத் தலை சுற்றிச் சுய நினைவிழந்துபோய் விடுவான். நினைவுகளை கொல்வதற்காக அடுத்த தெரிவாக கஞ்சா என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில் நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு இப்போதெல்லாம் வேலை முடிந்ததும் இரவில் இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டிருந்தான். அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து பொத்திப் பிடித்து கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில் கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி ஆழமாக உள்ளே இழுத்தான். பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம் அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது கொஞ்சம் சிறியதாக உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு குனிந்து பார்த்தான். தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது . அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை. அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது. “என்னைப் போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை அணைத்துத் தூக்கியவன் உனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின் முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு எல்லாமே லொக்காதான் . ******************************* அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம் கிடைத்துமிருந்தது. அவரது கடையில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. என்னைப் போலவே அவர்களும் புதினம் அறிய வந்திருக்கலாம். யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள். சிறிய வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று “ஏதாவது அருந்துகிறீர்களா” என்றவளிடம் ஒரு கோப்பிக்குச் சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன். சிறி அண்ணா பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை. என்னைக் கண்டதும் வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார். அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை நோக்கியே திரும்பின. “அண்ணை என்ன இது குழந்தை மாதிரி” என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் . என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர். “தம்பி நீ மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும் நம்பிக்கையாலையும் உன்னைக் கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “. ”சரியண்ணை நடந்தது நடந்து போச்சு, விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்” ”அவங்களும் அந்தப் பெடியன் ரெமியையும் அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” . ”கடைசிவரை அந்த ரெமியோடை தான் சினேகிதமா …….?” ”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப் பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும் களவாய்ப் பத்துவாள். எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.” ”அப்போ என்னதான் நடந்தது .?” ”முந்தா நாள் காலமை ஒரு சினேகிதியைப் பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை. இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”. “பேப்பரிலை இளம் தாய் எண்டு போட்டிருக்கே” என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப் போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே தொட்டிலில் சாயலில் அஞ்சலியைப் போலவே ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது . இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை ஏழு மாசம் . பணிப்பெண் கோப்பியை நீட்டினாள், அதனை அவசரமாக விழுங்கியபடி… “எங்கை சுமதியக்கா”? ”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.” “சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது” என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து “அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப் பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி” என்றவரிடம் விடை பெறும்போது வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும் பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி. “தம்பி சில நேரங்களிலை உங்களிட்டை 5 … 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன், என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின. “போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை” என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து முதல் நாள் பேப்பரில் அஞ்சலியின் “காணவில்லை” என்கிற அறிவித்தலை வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய பேப்பரை எடுத்துப் புரட்டினேன். அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன். போன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. சரி இன்றைக்கும் நான்தான் பிட்சா போடவேண்டும். ******************************* மதியத்துக்கு தேவையான உணவு, தண்ணீர், நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை பார்ப்பதுமாக இருந்தது. அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான். வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ் துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது, வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல் மூத்திரம் பெய்து விட்டு வந்தது. யாருமற்ற காடு, காற்று மரங்களில் மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை. பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான். மெதுவாகவே நடந்து சென்ற லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து அவனது காலடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு மீண்டும் பந்தை எறிந்தான். இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது. “களைத்துப்போய் விட்டாயா…. சரி” என்றபடி அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து வைன் போத்தலை எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை எடுத்து விட்டுப் பார்த்தான். பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக் கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது . ******************************* நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள். சில காலங்களின் பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள் “மாமா இவன்தான் ரெமி என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள். வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய போது அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி பதில் வணக்கம் சொன்ன விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின் தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன். சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல இரயில் நிலையத்தின் பின்னால் உள்ள கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு அமர்ந்திருப்பாள். “இந்தக் காலத்து பிள்ளைகள்” என்கிற ஒரு பெரு மூச்சோடு கார் ஒலிப்பானை ஒலிக்காமலும் காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு . அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு அவதானித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து தள்ளிவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி நின்றிருந்தான். கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச் செல்ல அனைவரும் ஓடி விட்டார்கள். தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத் தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன். கண்கள் சிவந்து, வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும் “ஒண்டுமில்லை” என்றபடி சீற்றில் சாய்ந்து கொண்டாள். ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினேன். “எங்கை மாமா போறாய்? ” ”உங்கடை கடைக்கு” ”எதுக்கு? ” ”உன்ரை அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்” ”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ” “பேசாமல் வா” ”காசு தர முடியுமா முடியாதா ?” “முடியாது ” என்றதும் அவள் ஆசனப்பட்டியை எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே, நான் சட்டென்று பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை ஒலிக்கத் தொடங்கின. ஒருவன் “ஏய் …பைத்தியக்காரா” என்று சத்தமாகவே கத்தினான். எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். “எடியே நில்லடி ” என்று நான் கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப் போய்விட்டாள். எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு இரண்டு அடி போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும். பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின் சத்தம் எதுவும் செய்ய முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய் அவரிடம் விபரத்தை சொன்னதும் அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார். கோபத்தோடு எனக்கு அவமானமும் சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன். அதுதான் நான் அவரோடும் அஞ்சலியோடும் பேசிய இறுதி நாட்கள். ******************************* அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கொள்ள, அதிலிருந்து இறங்கியவன் காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான தடித்த பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான். காரிலிருந்து ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா” என்று அழைத்தபடியே பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த அஞ்சலியிடம் நீட்டினான். அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம் அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல் அமர்ந்துகொள்ள, அவளருகே அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான். இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி யிருந்தனர். போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன் இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும் இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது. சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக் கொக்கெயின் பொட்டலத்தையும் எடுத்தவன் சினிமா டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து கொட்டி சிகரெட் பெட்டியில் மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை எடுத்து “இந்தா அஞ்சலி” என்று நீட்டினான். ”இல்லையடா எனக்கு வேண்டாம்” ”ஏன் ?” ”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்” ”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை” ”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்” “ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய் இதெல்லாம் ஒரு காரணமா?” ”வேண்டாம் விட்டிடேன்” “சரி எனக்கும் வேண்டாம்” என்றபடி பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப் போத்தலை எடுத்துச் சட்டென்று தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி உடைந்த போத்தலால் அதைக் கிழித்து இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய் எதுக்கடா இப்பிடி” என்றாள். “அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா ? எனக்கு நீ வேணும்” என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத் துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு நிமிந்தவளின் கண்கள் சிவந்து, கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன. அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன் சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண் மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்” என்று இழுத்து விட்டிருந்தான். அவள் கைகளை ஓங்கி நிலத்தில் அடித்த சத்தத்தில் மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று அலறிப் பறந்து போனது. இறுதியாய் உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன் முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது. எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன் கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை ஒட்டிக்கொண்டு இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல் பக்குவமாக அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன் கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் . ******************************* வைனைக் குடித்துமுடித்துவிட்டு சிறிய சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக் கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான். மாலை மூன்று மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம் நிற்கவேண்டும். எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு முன்னர் லொக்கவோடு செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள் வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது அதே வேகத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தது. “இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான் அவசரமோ ” என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான். லொக்கா அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது. கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள் நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து மருந்தை இழுத்தெடுத்தவர் இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில் அழுத்தியபடி மருந்தை செலுத்தினார். மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல் வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல் ஒற்றையும் வாங்கிச் சென்றவன் லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில் தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன் இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு இரண்டாவது கிளாஸில் விஸ்கியை நிரப்பத் தொடங்கியிருந்தான் . ******************************* யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள் வைத்திருக்கும் சிறிய கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான். இரத்தம் உறைந்துபோயிருந்த ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த தால் சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது. ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன் “என்னடி முறைக்கிறாய் ” என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித் தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை அரிந்து முடித்து இயந்திர வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான். ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுவிட்டு வெட்டும்போது சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில் போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப் பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி விழுந்த நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் . ******************************* அன்றும் வழமைபோல பத்திரிகையைத் தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப் போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான். “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”.. என்றதுக்கு கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன் “லொக்காவுக்கு வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது. அதுக்கு வயசாகி விட்டதால் கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர் சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்து கண்கள் கலங்கின. “சரி சரி கவலைப் படாதே” என்று அவனது தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும் “ஏய், இந்தப் பெண், அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான். “ச்சே என்ன இவன்…. மணிரத்தினம் படம் எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி “தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில் இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின் பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது. ”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர் இந்தக் காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாகப் போய் விட்டான். ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். மறுநாள் பத்திரிகையில் “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன் தொடர்பாக ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான். அவன் கொடுத்த மேலதிக தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப் பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. உடலின் சில பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான். அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது” ’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப் பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின் கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான். எனக்கு வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன். அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின் செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்” என்றிருந்தது. நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர். பல மெழுகுவர்த்திகள் இன்னமும் எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது “ச்சே சிறியண்ணர் இவளுக்கு அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன் “காதலே ஏன் இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய கடதாசியில் ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது. அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் . ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய எனக்கு “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது. அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி வீதிக்கு இறக்கியபோது தான் நான் போட்ட சில்லறைகளை ஒருவன் பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு “ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான். அதற்கிடையில் பின்னால் ஒரு வண்டிக்காரன் ஒலிப்பனை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம். நெற்றியில் விரல்களை அழுத்தி யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.
 3. 5 points
  1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க 5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந்து சிரிக்க 7 - சிரிக்க மட்டும் இல்லை மற்றத் திரி சிரிக்க மட்டும். எத்தனை திரி இருந்தாலும் அலுக்காமல் சிரிப்பது நலல்துதானே.
 4. 3 points
  பிரேக்கிங் நியூஸ் இண்டைக்கும் பண்ணையில சூரியன் குதிச்சிட்டார் இன்னொரு நன்நாளின் அஸ்தமனம் + புதிய நன்நாளுக்கான அஸ்திவாரம்.
 5. 2 points
  நன்றி கு ..சா நன்றி வாத்தியார் ..தொடர்ந்தும் யாழில் இணைந்திருப்பேன்
 6. 2 points
  60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்! #LegendSJanaki அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்து இரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலை கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம், தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்தவர் பாடகர் ஜானகி. அவர் அண்மையில் இசைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தென் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவர் வாழ்வில் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி, பாடப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார் மழலையாக இருக்கும் போதே பாடத் தொடங்கினார் ஜானகி. அவரின் முதல் மேடை நிகழ்ச்சியை மூன்று வயதில் பாடினார். தன் மாமாவின் அறிவுரைக்கு இணங்க இருபது வயதில் சென்னைக்கு பாடுவதற்காக வந்த இவர், ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பாடகராக சேர்ந்தார். 1957ம் ஆண்டு, “விதியின் விளையாட்டு” என்ற திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் ஜானகி. அன்று முதல் இன்று வரை, தென்னிந்திய மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். “செந்தூரப் பூவே”, “இஞ்சி இடுப்பழகி”, “ஊரு சனம் தூங்கிருச்சி”, “மச்சானப் பாத்தீங்களா” போன்ற கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும், பசுமையான பாடல்களுக்கு தன் மழலை குரலை கொடுத்து மேன்மை படுத்தியவர் ஜானகி. எஸ்.பி. பால சுப்பிரமணியம் மற்றும் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை கொண்டவர் ஜானகி. ஜானகியின் பாடல்களை திரையில் பார்க்கும் போது மட்டும், கதாநாயகியே பாட்டை பாடுவது போல தோன்றும். அவரின் பாடல்கள் இயற்கையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றே கூறலாம். குரலில் எந்த வித சிரமமும் தெரியாமல், பாடல் அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் சென்று வருவார் ஜானகி. “காதல் கடிதம் தீட்டவே” என்ற பாடலில், காதல் வழியும் என்றால் “சின்னத் தாயவள்” பாடலில் தாய்மை தாலாட்டும். “சின்னச் சின்ன பூவே” பாடலில் மழலை குரல், “ஊரு சனம் தூங்கிருச்சி”, “இஞ்சி இடுப்பழகி” போன்ற பாடல்களில், கிராமத்து பெண்ணின் குரல், “பொன் மேனி உருகுதே”, போன்ற பாடல்களில் விரகத்தின்கா வெளிப்பாடு, “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாடலில் குடி போதையில் ஆடும் பெண்ணின் தொனி என்று இசையின் பல பரிமாணங்களை குரல் வழியாகவே வெளிப்படுத்தியவர் ஜானகி. “சிங்கார வேலனே தேவா” போன்ற நுணுக்கங்களை கொண்ட பாடலை, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில் எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று இசை உலகினர் இன்று வரை வியக்கின்றனர். அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பை கொண்டவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. தனது இசை வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடிய “சிங்கார வேலனே தேவா” முதல், இப்போது பாடிய “அம்மா அம்மா” வரை தன் குரலால் மக்களை வசீகரிக்க முடிந்திருக்கிறது என்றால், அந்த பெருமை ஜானகியின் உழைப்புக்கும் திறமைக்குமே போய் சேரும். திரைப் பாடல்களுடன் பாரம்பரிய இசையை சேர்த்து அமைப்பது என்பது இளையராஜாவிற்கு கை வந்த கலை. அவ்வாறு அவர் இசை அமைத்த பாடல்களை மிகச் சரியாக பாடுவது ஜானகி தான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். “காற்றில் எந்தன் கீதம்”, “புத்தம் புது காலை”, “சுந்தரி நீயும்” போன்ற பாடல்கள் இதற்கு சான்று. பாடலின் ஏதாவது ஒரு நொடியில் தவறு செய்தால் கூட உணர்வு சரியாக கேட்பவருக்கு போய் சேராது என்பது போல் மிகக் கடினமான பாடல்களை குரலில் சின்ன சிரமம் கூட தெரியாதவாறு பாடியுள்ளார் ஜானகி. “சங்கத்தில் பாடாத கவிதை”, “தென்றல் வந்து தீண்டும்போது” போன்ற பாடல்கள் இதற்கு சான்று. ஜானகி முற்றிலும் வித்தியாசமான குரல்களில் பாடக் கூடியவர். “போடா போடா போக்க” பாடலில், கிழவியின் குரல், “மாமா பேரு மாறி” பாடலில் ஒரு ஆணின் குரலில் கூட பாடியுள்ளார். மேற்கத்திய இசையை தமிழ் திரையுலகிற்கு மிக சிறப்பாக கொண்டு\ வந்து சேர்த்த பாடகர்களில் ஜானகியும் ஒருவர். “பாடவா உன் பாடலை”, “ஒரு பூங்காவனம்”, “இது ஒரு நிலாக்காலம்” “ஓ ஓ மேகம் வந்ததோ” போன்ற பல்லாயிரக் கணக்கான மேற்கத்திய பாணி பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து ஜானகி பாடிய, “ஒட்டகத்த கட்டிக்கோ”, “கத்தாழங் காட்டுவழி”, “முதல்வனே” போன்ற பாடல்கள் என்றும் இனிமையானவை. “மார்கழி திங்களல்லவா” பாடல் ஜானகிக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றுத் தந்தது. பாடத் தொடங்கிய பிறகு எந்த வித குரல் பயிற்சியும் செய்ததில்லை என்று கூறியுள்ளார் ஜானகி. “நான் பாடகி” என்ற செருக்கும் ஆடம்பரமும் எந்த விதத்திலும் தெரியாமல், மிகவும் எளிமையான தோற்றத்துடன் மேடைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் வந்து செல்வார். அவர் பாடும்போது உதடை தவிர கை தலை என்று உடலில் வேறு எந்த பாகமும் அசையாது. மைக்கை பிடித்து ஒரு இடத்தில் நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே நின்று பாடுவார். உச்சஸ்தாயியில் பாடினாலும் சரி கீழ்ஸ்தாயியில் பாடினாலும் சரி, எந்த வித அசைவும் தெரியாது. ஜானகியின் குரலை விட இனிமையான குரலை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம் தான். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி. பிலிம் பேர், 1997ம் ஆண்டு, ஜானகிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. 2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த “பத்ம பூஷன்” விருதை “மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகித்தவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. “10 கல்பநகள்” என்ற மலையாள திரைப்படத்திற்காக அவர் பாடிய “அம்மபூவினு” என்ற பாடல் தான் அவர் கடைசியாகப் பாடிய பாடல். “மலையாள மொழியில் தான் கடைசி பாடலை பாட வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை”, என்று கூறுகிறார் ஜானகி, ”நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் அது தானாக அமைந்தது. சீமா விருதுகளில் நான் பாடியது தான் என் கடைசி மேடை நிகழ்ச்சி. நான் கடைசியாக பாடிய நேரலை நிகழ்ச்சி அதற்கு முன்னால் கோழிகோடில் நடை பெற்றது. பல மொழிகளில், ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதெல்லாம் போதும்” என்கிறார் ஜானகி. இனி பாடுவதில்லை என முடிவெடுத்தால் வருந்தவேண்டியதொன்றுமில்லை. எத்தனையெத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் அவர். ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து சிலாகிக்கவே நம் வாழ்நாள் போதாதே! vikatan
 7. 2 points
  சே....வாசித்த நமக்கே மனக்கிலேசம் வருகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் ஒரு உன்னத நோக்குக்காக செயல்பட்ட போது செய்த கடைமை அது. கீதா உபதேசத்தை நினைவில் கொள்ளுங்கள். கடமையை செய் பலனை எதிர்பாராதே.
 8. 1 point
  By Deepam Desk - September 16, 2016 3784 மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு பெயரிட்டுள்ளேன். சுருக்கமாக மோனல் என்கிறார்கள். இன்னும் நிறையப் பெயர்களும் வைத்துள்ளனர். திருநங்கைகள் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாமல் இப்போதும் அலி, ஒம்பது மாதிரியான கொச்சை வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் குறைச்சமூகத்தில், மோனல்களாக மாறிய பானுஜன்களும், பானுஜன்களாக மாறிய மோனல்களும் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவையல்ல. தமது அடையாளங்களை நிரூபிக்க அவர்கள் குடும்பத்தில் தொடங்கி வசையாக பேசும் அறிமுகமேயில்லாத ஒவ்வொருவருடனும் போராடிக் கொண்டிருக்க வேண்டும். வசை, பாலியல் சீண்டல், குடும்பத்திற்குள் தினம்தினம் நடக்கும் அடி, உதை, சித்திரவதைகளை கடந்துதான் திருநங்கைகள் தமது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கு பின்னாலும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கும் ஏராளம் கதைகள் உள்ளன. ஒவ்வொரு திருநங்கையும் வலியும், அவமானமும் நிறைந்த அந்த கதைகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. யாழ்ப்பாணத்தில் மிகச்சாதாரண குடும்பத்தில் பானுஜனாக பிறந்து இன்று மோனலாக மாறியது வரையான காலத்தை, அந்தக்காலம் என்னில் பதித்த ரணமான நினைவுகளை எனது அடையாளங்களை நிரூபிக்க நான் கொடுத்த விலைகளை தொடராக இந்தப்பகுதியில் எழுதவிருக்கிறேன். 1998 இல் நான் பிறந்தேன். எனக்கு பெற்றோர் இட்டபெயர் பானுஜன். சிறுவயதிலிருந்தே நான் மிகுந்த மென்மையாக இருந்ததாக கூறுவார்கள். வீட்டுக்கு அண்மையிலிருந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டேன். பாடசாலை காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். பெண்களுடன் பழகுவதே எனக்கு இயல்பாக இருந்தது. அப்போது யுத்த நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்தது. எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் இந்தியாவிற்கு அகதியாக சென்றது. அங்கு பாடசாலைக்கல்வியை தொடர்ந்தேன். பாடசாலையில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால் என்னால் ஆண்களின் வரிசையில் உட்கார முடியவில்லை. பெண்களின் வரிசைதான் எனது வரிசையென உண்மையாகவே உணர்ந்தேன். ஆனால், சில பெண்கள் சிரித்து சத்தமிட, ஆசிரியர் வந்து எனக்கு தண்டனை தந்தார். அத்துடன், ஆண்கள் வரிசையிலேயே உட்கார வேண்டுமென கடுமையான உத்தரவிட்டார். எனக்குள் என்ன பிரச்சனையென்பதை புரியவும் முடியவில்லை, அதை ஆசிரியருக்கு புரிய வைக்கவும் முடியவில்லை. நாட்டுநிலைமைகள் ஓரளவு சீராக எனது குடும்பம் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியது. நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் என்னை சேர்த்தார்கள். நாளாகநாளாக நானொரு பெண் என்பதை தீவிரமாக உணரவும், நம்பவும் தொடங்கினேன். ஆண் தோற்றமிருந்தாலும், எனது உணர்வுகள் அனைத்தும் பெண்மைதான் என்பதை மெதுமெதுவாக உணரத் தொடங்கினேன். எனது ஒவ்வொரு அசைவிலும் பெண்மை மிகுந்திருப்பதாக நண்பர்கள் கேலி செய்வதை அப்போது சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாளாகநாளாக பிரச்சனைகள் எழத் தொடங்கின. எல்லாம் எனக்குள்ளான மனப்போராட்டங்கள்தான். ஒரு ஆணாக இருந்தும் மாணவர் வரிசையில் என்னால் உட்கார முடியாமலிருந்தது. மாணவர்களுடன் நெருங்கிப்பழகுவதை, ஒன்றாக உட்கார்வதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாமல் இருந்தது. ஏதோ நெருப்பின் மேல் உட்கார்வதை போலிருந்தது. அப்படியான சமயங்களில் பதற்றமும், மனப்பயமும் கூடி இயல்பற்ற தன்மையாக இருந்தேன். இதனால், மாணவர் வரிசையிலும் இல்லாமல், மாணவியர் வரிசையிலும் இல்லாமல் இரண்டு வரிசைக்கும் நடுவில் உட்கார தொடங்கினேன். ஏழு, எட்டு வயதில் பெண்களிற்கு நடுவில் உட்கார ஆரம்பித்து, நான் யார் என குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பதின்னான்கு, பதினைந்து வயதில் நான் யார் என்பதை கண்டடைய தொடங்கினேன். எது என்னுடைய திசையென்பது புரிய ஆரம்பித்தது. எங்கள் வகுப்பாசிரியர் ஒருநாள் என்னை தனிமையில் அழைத்து பேசினார். அவரிடம் அனைத்தையும் சொன்னேன். என்னால் ஆண்களுடன் உட்கார, ஒன்றாக பழக முடியாமலுள்ளதை சொன்னேன். எனக்குள்ளிருக்கும் பெண்மையை சொன்னேன். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச்சொன்னார். மறுநாள் பெற்றோர் பாடசாலைக்கு சென்று ஆசிரியரை சந்தித்தனர். அதுதான் பெற்றோருக்கு என்னைப்பற்றி கிடைத்த முதல் தகவல். ஆசிரியர் விடயங்களை கூறி, என் மாற்றத்தை புரிய வைத்து, கவனமாக பார்க்கும்படி ஆலோசனை கூறி அனுப்பியுள்ளார். நான் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர அன்று ஆரம்பித்தது பிரச்சனை. அப்பா இயலுமானவரை என்னை அடித்தார். சாதாரண விடயங்களிற்கு அடித்தால், பெரிதாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன். ஆனால் அப்பா அடித்தது, “எனக்கு” எதிராக. எனது உணர்வு வெளிப்பாடுகளிற்கு எதிராக. பொம்பிளை மாதிரி திரிவியா எனக்கேட்டு அடித்தார். நான் அசையாமல் நின்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. அதன்பின் பாடசாலைக்குள் விரைவாக கதை பரவியது. எல்லா மாணவர்களும் என்னை இளக்காரமாக பார்க்க தொடங்கினார்கள். “ஏய் அலி” என கூப்பிட்டனர். பானுஜன் என்ற பெயர் மாறி அலியானது. அப்போது பாடசாலையில் இருந்த அதிபர், ஆசிரியர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. எனக்கு ஆறுதலாக இருக்கவுமில்லை. “ஆணாக இரு.. ஆணாக இரு” என வீட்டில் அன்றாடம் தொடர்ந்த உடல், உள சித்திரவதைகள், தண்டனைகள், பாடசாலை அவமானங்கள் என சிறிய வயதிலேயே நான் சந்தித்த சவால்கள் அனேகம். இன்னொரு பிஞ்சு அதை எதிர்கொள்ளவும் கூடாது. திருநங்கைகள் கல்வியில், வேலை வாய்ப்பில் உயர்ந்த இடங்களை அடைந்து, தனித்துவமானவர்களாக மிளிர்வதெனில் அவர்களின் இளமைக்காலம், பாடசாலைக்கல்வி சீராக, நெருக்கடியில்லாமல் இருக்கவேண்டும். அதற்கு அரசுகள் திருநங்கைகளை பாதுகாக்க, அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் தனியடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தில் வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். திருநங்கையாக இந்த உலகத்தில் நான் சந்திக்க ஆரம்பித்த பிரச்சனைகள், சவால்கள், அவமானங்கள் அனைத்திற்கும் பிள்ளையார் சுழியிட்டது அந்தப்பாடசாலை வாழ்க்கைதான்.அப்போது எனக்கு ஏற்பட்ட முதற்காதல், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விபத்துக்கள், இயல்பான உலகத்தைவிட்டு தள்ளிச்செல்ல வைத்ததெல்லாம் அதன் தொடர்ச்சிதான். தொடரும்… http://deepam.news/2016/09/16/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-1/
 9. 1 point
  நான் ஒரு அசைவ பிரியன் அதே போன்று எனது நண்பர்களும் அசைவப்பிரியர்கள் .ஐந்து லாம்படிசந்தி நானா கடையில் கொத்துரொட்டி எங்களது அதிஉயர் கெளரவமான சாப்பாடு அன்றைய எங்களது பொருளாதர நிலையில் அதுதான் எங்களுடைய‌ சைனீஸ்,தாய்,இட்டாலியன் ரெஸ்ரோரன்ட்.ஆட்டிறைச்சி கொத்து என்று சொல்லுவோம் ஆனால் அவர் ஆட்டை போட்டாரா மாட்டைபோட்டரா என்று ஆராச்சி ஒன்றும் செய்வதில்லை.எங்களுடன் ஒரு ஐயர் பெடியனும் இருந்தவன் அவன் வரமாட்டான். டுயுசன் வகுப்பில் பெண்களின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் முதலாவதாக போய் இருப்பது அவன் தான்.வேறு குழப்படிகளுக்கு ஒத்தாசை செய்வான் அதாவது பெண்களுக்கு லவ் லெட்டர் கொடுப்பது ,அவர்களி பின்பு சைக்கிளில் திரிவது போன்ற செட்டைகளுக்கு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் மிகவும் கடுமையாயாக இருப்பான். டெய் நாங்கள் அப்பாட்ட சொல்ல மாட்டோம் நீ சாப்பிடு " " இல்லையடா கோவிலுக்கு போக வேணும்" "நாங்களும் கோவிலுக்கு போறனாங்கள் தானே" "இல்லையடா எங்கன்ட பரம்பரையே சாப்பிடுவதில்லை,ஆச்சார்மாக இருக்க வேணும்" அதன் பிறகு அவனை நாங்கள் வற்புறுத்தவில்லை . அவனுக்கு பூணுல் சடங்கு நடந்தபின்பு அவன் எங்களை மெல்ல மெல்ல புற‌க்கணிக்க தொடங்கினான். . அவனை எல்லோரும் ஐயா என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள் . நான் பெயர் சொல்லித்தான் அவனை அழைப்பேன்,ஆனால் அம்மா "ஐயா ஒர் அர்ச்சனை செய்ய வேணும் என்று தான் கேட்பார்"அவனும் மந்திரம் சொல்லி தீபத்தை காட்டுவான் பிறகு தொட்டு கும்பிடுவதற்காக எங்களிடம் கொண்டுவருவான் அம்மா மிகவும் பயபக்தியுடன் தொட்டு கும்பிட்டு தட்டில் தட்சணையும் இடுவார். கால போக்கில் நானும் அவனை ஐயா ஒரு அர்ச்சனை செய்யவேணும் என்று கேட்க வேண்டிய நிலைக்கு போய்விட்டேன். எங்களுடைய வீட்டுக்கு பின்னே கன்னியாஸ்திரிகள் மடம் இருந்தது .ஞாயிறு காலையில் குழுக்களாக வெள்ளை சட்டை அணிந்து கன்னியாஸ்திரிகள் செல்வார்கள் .கன்னியாஸ்திரிகள் என்று சொல்லுறாங்கள் ஆனால் வயசு போனவையள் எல்லாம் இருக்கினம் என்று எங்களுக்கு மனதினுள் ஒரே குழப்பம்.கன்னிகள் என்றால் இளம் பெண்கள் என்று எங்கள் மனதில் பதிந்துவிட்டது.பிறகு தமிழ் படங்கள் பார்க்க தொடங்க விளக்கம் தானகவே வந்திட்டுது. எங்களது வீட்டுக்கு முன்னே மகளிர் பாடசாலை .பாடசாலை தொடங்கும் பொழுது அல்லது முடியும் பொழுது எனது நண்பர்களுக்கு என்னிடம் கொப்பிகள் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்,அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருப்பேன். சைக்கிள் மணிசத்தம் கேட்டவுடன் கையில் அகப்படும் கொப்பியை தூக்கி கொண்டு படலையடிக்கு சென்று சைக்கிள் மாநாடு நடத்துவோம்.ஆனால் அந்த மாநாட்டில் எடுத்த தீர்மாணங்கள் ஒன்றும் நிறைவடையவில்லை என்பதையிட்டு நாம் யாரும் இன்று வரை கவலைப்படவில்லை. ஒரு நாள் கெற்றின் கொழுவியை தட்டும் சத்தம் கேட்க யன்னலூடாக பார்த்தேன் வெள்ளை யூனிபோர்ம் தெரிந்தது ,மின்சாரம் தாக்கியது போன்றிருந்தது.எங்களது மாநாட்டின் முடிவுகளை அம்மாவிடம் சொல்ல வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் வளவின் பின்னே ஒடி ஒழிந்து கொண்டேன். "தம்பி கண்ணா எங்க போயிட்டா" என அம்மா கூப்பிட்டு கொண்டே வந்தார். "இங்க வந்து பார், யார் வ்ந்திருக்கிறது என்று" நான் இருக்கும் இடத்து கிட்ட வந்த சத்தம் கேட்க "வாரன் அம்மா ஆட்டுக்கு குழை ஒடிக்கிறன்,சும்மா ஏன் கத்திறீயள்" "நீங்கள் போங்கோ நான் கை காலை கழுவிபோட்டு வாரன் " " மினக்கெடாமல் வா" பயந்து கொண்டே வீட்டினுள் சென்றேன் ,கன்னியாஸ்திரிகளின் உடையுடன் முதியவரும் ஒர் இளையவரும் இருந்தார்கள். அவர்களை பார்த்தவுடந்தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். மத போதனைக்கு வந்திருப்பார்கள் ஏன் அம்மா என்னை இதுக்குள் மாட்டிவிட்டவர் என நினைக்கும் பொழுதே "கண்ணன் என்னை தெரியுதோ" "இல்லை சிஸ்டர் " "என்னடா தெரியவில்லையடா " "யார் அம்மா சொல்லுன்கோவன்" "மட்டகளப்பு அக்ணஸ் " "ஹலோ அக்ணஸ் அக்கா எப்படியிருக்கிறீங்கள்" "நல்லாய் வளர்ந்திடீர்,இப்ப என்ன செய்யிறீர்" "இந்த வருடம் ஏ/எல் எடுக்கப்போரன்" "எப்படி தெரியும் நாங்கள் இந்த வீட்டில் இருக்கிறோம் என்று" "உங்களை அண்ரி போனகிழமை கெற்றடியில் கண்டனான் ,ஒவ்வோரு தடவையும் கண்ணை வாசலில் பார்க்கும் பொழுதும் இது உங்கன்ட வீடாக இருக்கும் என்று நினைக்கிறானான் போனகிழமை உங்களை கண்டபின்புதான் சுயராய் தெரிந்தது ,மதரிட்ட பெர்மிசன் எடுத்து போட்டு மிஸ்ஸுடன் வந்தனான் உங்களை மீட் பண்ணிட்டு போவம்மென்று." "டேவிட் அண்ணா என்ன செய்யிறார்" "பாதிரியாராக -------முனையில் இருக்கிறார்" அக்ணஸ் அக்கா விடை பெற்று சென்ற பின்பு . "இந்த பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ தெரியாது ,நல்ல வடிவான பிள்ளை ஏன் இப்படி போச்சுதோ,டேவிட் பாதிரியாரக வரவேணும் என்றுசின்ன வயசிலயே அவையளின்ட அம்மா விரும்பினவர் அதானால் அவர் பாதிரியாராக வந்திருப்பார்"எல்லாம் அவையளின்ட தலையெழுத்து என பெருமூச்சு விட்டபடியே அம்மா வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். அக்ணஸ் அக்கா என்னைவிட ஐந்து வயது கூடியவர் அவரின் அழகு அவரைவிட வயது குறைந்தவர்களையும் சபலமடையச்செய்யும்.. `புகையிரதம் கொழும்பு நோக்கி போய்கொண்டிருந்தது.மெல்ல மெல்ல சிவப்பு வெள்ளை நிற கட்டிடங்களுடன் கோபுரங்களும் மறையத்தொடங்கின. இடையிடையே சிலுவையில் அறைந்த ஜேசுநாதர்,கையில் குழந்தையுடன் மாதா சொருபங்களும் வந்து போய்கொண்டிந்தது . காடுகளிடையே ஆலமரத்தடியில் பிள்ளையார் தனிதிருந்தார் சில இடங்களில் திரிசூலத்தை காணக்கூடியதாக இருந்தது.புகையிரதத்தின் தாலாட்டில் தூங்கிபோனேன்.முழித்த பொழுது காடுகளினுடாகவும் சிறு மலை தொடர்களினுடாக வண்டி சென்றுகொண்டிருந்தது.மலைகளின் உச்சியில் வெள்ளைநிற கோபுரங்களும் புத்தர் சிலைகளும் தெரியத்தொடங்கின.மஞ்சள் வர்ண காவியுடுத்து புத்தர் சிலையாக நிற்க அவரை தரிசிக்க காவியுடுத்த சிறுவர்கள் வரிசையாக படிகட்டில் ஏறிகொண்டிருந்த்தார்கள் . அந்த சிறுவர்கள் எதை தேடி ஏறுகிறார்கள், தேடச்சொன்னது யார் இன்றுவரை பதில்லை.சில இடங்களில் ஊரில் கண்ட மாதசொருபங்களும்,சிலுவையில் அறைந்த ஜெசுநாதரும் ,சில வீடுகளின் முற்றத்தை அலங்கரித்தார்கள்.அரசமரத்தடியில் புத்தர் உரிமையுடன் குடிகொண்டிருந்தார். தலைநகரம் பிக்குகள், பாதிரியார்கள் ,கன்னியாஸ்திரிகள் என நிறைந்திருந்தது விமானம் சவுதியரபியா நோக்கி பயணமானது.அநேகர் வேலைவாய்ப்பு தேடி சென்று கொண்டிருந்தார்கள் .பெரும்பாண்மையானவர்கள் இஸ்லாமியர்கள் .எனக்கு அருகில் இருந்தவர் மெல்ல கதையை தொடங்கினார். "கம கோயத" "யாப்பானய‌" "நீங்கள் தமிழா" " ஒம்,நீங்கள் எந்த இடம்" "நான் காலி" அந்த விமானத்தில் இருந்த அநேகர் தொப்பியணித்திருந்தனர். ஆனா இஸ்மயில் தொப்பிய்ணித்திருக்கவில்லை ,தாடியும் வைத்திருக்கவில்லை.அவரும் நான் வேலை தேடிசெல்லும் கொம்பனியில்தான் பணிபுரிய போகின்றார் என்பதை அறிந்து கொண்டேன். விமானநிலையத்தில் இறங்கியவுடன் கடவுச்சீட்டுக்களை கம்பனி பொருப்பெற்றுகொண்டது.சினேக பூர்வமாக பழகினார் தாடி வளர்த்திருந்தவர்களை நக்கலடித்தார். காலப்போக்கில் அவர .தாடி வளர்த்து, ஐந்து நேர‌ தொழுகைக்கு ஒழுங்காக செல்ல தொடங்கியிருந்தார்.ஒரு வெள்ளிக்கிழமை அரேபிய உடை அணித்து வந்திருந்த்தார். "என்ன இஸ்மயில் எப்ப தொடக்கம் அரபியா மாறினீங்கள்" அவர் இப்ப மெளலான பாந் ஒத பள்ளிக்கு போகின்றார் என பக்கத்தில் நின்ற மற்றைய இஸ்லாமிய நண்பர் சொன்னார். சவுதியில் அநேக பல்நாட்டு மெளலானக்களை பார்க்ககூடியதாக இருந்தது சவுதி வாழ்க்கையில் எதிர்காலமில்லை என்று தெரிய வர ,எனைய புத்தாசலி தமிழனை போன்றுநானும் அவுஸ்ரெலியாவுக்குள் குடிபெயர்தேன். பரமற்றா வில் ஒரு ரெஸ்ரோரன்டுக்கு மகள் அழைத்து சென்றாள் .சாப்பாட்டை ஒடர் செய்து விட்டு கதைத்துகொண்டிருக்கும் பொழுது "இது முந்தி சேர்ச்சாக இருந்தது இப்ப ரெஸ்ரோரன்ட் ஆக்கி போட்டினம் "என்று பெட்டர்காவ் சொல்ல நான் அங்கும் இங்கும் பார்த்தேன். "என்ன ஏமலாந்திரிய‌ள்" " ஒரு கன்னியாஸ்திரியையோ ,பாதிரியையோ காணவில்லை அது சரி இந்த இருபது வருசத்தில் அவுஸ்ரேலியா வீதியில் கன்னிகளை கண்டிருக்கிறன் கன்னியாஸ்திரிகளையோ பாதிரிமாரையோ காணக்கிடைக்கவில்லை எப்படி பழைய சேர்ச்சில் அவையளை தேடலாம்" "உந்த லொல்லுக்கு குறைச்சலில்லை சூடு ஆர முதல் சாப்பிடுங்கோ" .
 10. 1 point
  . விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மத‌பக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும். காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால் மீண்டும் நித்திராதேவி என்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றி அம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல் முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியை கேட்டபடியிருப்பேன் . "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி தொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார். "என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வா, பள்ளிக்கு போக நேரமாகிறது " "ம்ம்ம்" பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்ல‌ மெல்லமாக பல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்ற எலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடி கிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள் போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் . "சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். "காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்" "யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை" "இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல் சொன்னவையள் அதில கேட்டனான்." இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும். " இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்" என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள் வைத்து விட்டு காலை சாப்பா ட்டுக்காக‌ அம்மாவிடம் சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ" "அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்" "ஒமோம் நாளைக்கு,நாளைக்கு" சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை கொழுவிக்கொண்டு படலையில் போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள். வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலை தாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாக உள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள். "டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது " "நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்" "ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு படத்திற்கு போவம்" "என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்" "டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி" பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றது பொங்கும் பூங்குழல் " " டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும் ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் . பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார். சினிமா பாட்டு ஒலிபரப்பாமல், சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்று எங்கள் எல்லொருக்கும் தெரியும். பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டை ஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசி மாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள். ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம் பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம். மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார் எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள். ‍‍‍‍‍வணக்கம்கூறி விடைபெறுவது கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்... வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள். அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை. தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரி தலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்து கொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாக‌ மொபைலில் வைப்ரேசன் மோட்டில் எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ் எ நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டு வெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடி வீட்டை நோக்கி காரை செலுத்துவேன். கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ‍ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ‍ஹலோ சொல்லி போட்டு "ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்" "தாத்தா பழைய படம் பார்க்கிறார் தட் இஸ் போரிங்" "மற்ற டி.வி அறையிலிருக்குதானே அதில போய் பார்க்கலாம் தானே" "அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! " "லப்டொப் ,tablet, iPad அதுகளில் பார்க்கலாம்" "லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்" " அப்பா இது Whatsapp" "அது என்ன" "It is a type of social media and you can only do it through your mobile phone " "எங்க அக்கா " "அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா" "என்ன செய்யிறாள்" "She is on Instagram" "வட் இஸ் தட்" "It is also a kind of social media" அக்கா அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும் "I just texted her " "அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்" நானும் பேஸ்புக்கில் இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ? அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்கு லைக் போடுங்கோ....
 11. 1 point
  ஆமா இவ்வளவு புடுங்குப்பாடலுக்கும் இடையே நான் இன்னமும் யாழ் களத்தில் இருக்கிறன் - எனக்கு தரமாட்டாங்களா?
 12. 1 point
  நான் பானுஜன் அல்ல; மோனிஷா! – 3 By Deepam Desk - September 28, 2016 22 முதன் முதலாக ஒரு மனித உயிரி என்னை ஆதரவாகப் பார்த்த தருணமது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அன்று மதிய உணவிற்கான இடைவேளயில் அவரைச் சந்திப்பதாகத் தீர்மானித்தேன். ‘நான் ஆணாக இருக்க விரும்பவில்லை. பெண்ணாகவே வாழவிரும்புகின்றேன்’ என்றேன். முதலில் அவர் என்னைக் குழப்பத்துடன்தான் பார்த்தார். அவரிற்கு நான் ஏதோ பிதற்றுவது போலவே இருந்திருக்க வேண்டும். ஆனால் சில நிமிடங்களில் அவர் என்னைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பார்வையில் ஒருவித கனிவு தெரிந்தது. ஆம், அந்த ஆசிரியர் என்னைப் புரிந்துகொண்டார். புரிந்து கொண்டது மட்டுமன்றி, மறுநாள் பெற்றோரை வரவழைத்துப் பேசினார். ஆனால் என்ன பேசினார் என்றுதான் தெரியவில்லை. வழமை போல அப்பா இரவில் குடித்துவிட்டு வந்து, அன்று வீட்டில் ருத்திர தாண்டவம் ஆடினார். வலிகள் கண்டு கண்டு இந்தத் தேகம் மரத்துப்போய்விட்டது. மனதில் வன்மம் கூடவே, ஒரு கட்டத்தில் கல் போல இருந்துவிட்டேன். என் மொளனம் மேலும் மேலும் அவரை வெறிகொள்ள வைத்திருக்க வேண்டும். ஆத்திரம் தீரும் வரை அடித்துத் துவைத்து விட்டார். ஆனால் என் கண்கள் அப்போது அழுவதற்குக் கூட அவருக்கு ஒத்துழைக்கவில்லை. யார் யாரோ உறவினர்கள் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள். குசலம் விசாரிப்பார்கள். அவர்களின் பார்வையில் நான் நாணிக் குறுகிக்போய்விட்டேன். ஒரு புழுவை விட அற்பமாக உணர்தேன். சிலர் என்னைக் கண்டு காறி உமிழ்ந்தார்கள். என்னும் சிலர் என்னைக் கண்டு அச்சப்பட்டார்கள். அருகில் வராமல் தெறித்தோடினார்கள். பலருக்கு நானொரு வேடிக்கை வினோதம். அவர்களுக்குத் தெரியாமல் நான் மாறிக்கொண்டேயிருந்தேன் . அப்பொழுது, ஆண்கள் என்றாலே ஏதோ நரலோகத்தின் எமதூதர்கள் போல இருந்தது எனக்கு. வீட்டிற்கு வரும் ஆண்களிற் கெல்லாம் கற்களால் எறிந்தேன். கோபத்தில் வாயில் வந்தபடியெல்லாம் ஏசினேன். ஆனால் என் செய்கைகள் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியிருக்கிறது. அதாவது பித்து நிலை. எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது என பலரும் பலவாறு பேசினார்கள். அதனால்தான் நான் பெண்கள் போல நடந்து கொள்கின்றேன். கற்களால் எறிகின்றேன் எனக் கூறினார்கள். ஆனால் அம்மா மட்டும் எதுவுமே போசாமல் அழுதுகொண்டேயிருந்தாள். அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருநாள் கோயிலுக்குப் போகப்போவதாகச் சொல்லி என்னை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நானும் ஏதோ விபூதி போட்டு, வேப்பிலை அடிக்கப் போகின்றார்கள் போல என எண்ணிக்கொண்டேன். ஆனால் அன்று நடந்த கதைவேறு. உண்மையில் நான் அழைத்துச் செல்லப்பட்டது, கோயிலுக்கல்ல. அதுவொரு வைத்தியசாலை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம். ஆம், அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு சென்றது தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு. அங்கு எனக்கு ஊசி மூலமாக மருந்து ஒன்று ஏற்றப்பட்டது. அதன் விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. அது ஏற்றப்பட்டதன் பின்பு, நான்கு நாட்களின் பின்னர்தான் நான் கண்விழித்தேன். வாழ்க்கையில் அது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது. அதன் பின்பு மனநல மருத்துவர் சிவயோகனிடம் அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் என்னைப் பதினெட்டு வயது வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அதன் பின்பு தூரத்து உறவுக்கார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்குதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவருக்கு ஒரு 65 வயதிருக்கும். ஒருவகையில் எனக்குத் தாத்தா முறையானவர். அன்று சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்தபடி என்னை அழைத்தார். நானும் ஏதோ உடல்நலம் சரியில்லைப் போலஎன எண்ணியபடி அருகில் சென்றேன். ஆனால் அந்த வஞ்சகன் என்னை அசிங்கமாகத் தொட்டான். உறவிற்கு அழைத்தான். வெலவெலத்துப் போய்விட்டேன். கைகளை உதறிவிட்டு என் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன். அவர் மனைவி வரும் வரை கதவினை இறுக்கமாகத்தாள்பாழ் இட்டுக் கொண்டு அறைக்குள்ளேயே முடங்கியிருந்தேன். http://deepam.news/2016/09/28/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-3/
 13. 1 point
 14. 1 point
  பிறப்பால் இவர் தென் ஆபிரிக்கர், விளையாடியது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு - இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் வாழ்ந்தது அவுஸ்திரேலியாவில்.. நேர்முக வர்ணனையாளராக ரசித்ததும் நேசித்ததும் இலங்கை கிரிக்கெட் அணியை.. மறைந்த டோனி கிரேய்க்கின் பிறந்தநாள் இன்று. Happy Birthday Tony Greig
 15. 1 point
  “திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன. ஸ்டிக்கர் --------------- மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்! இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை. நவீன உலகுக்கேற்ப நீதிகளை மறைபொருளாக வழங்குகிறார்கள். மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும் இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர் குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும். குறைந்தபட்சம் கோபத்தில் கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும். சிகரெட் பெட்டிகளின் மீது நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள் குழந்தைகளின் ஸ்டிக்கர் கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் தலை நசுங்கிய ஒருவனின் படத்தை ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது சாலையில் கவனமாக இருக்கவைக்கும். சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை புழக்கடையிலாவது இருப்பை உறுதி செய்யும்! சூத்திரனின் பிறப்பு ----------------------------------------- வழக்கம் போல் நகர் உலாச் சென்ற கடவுள் ஒரு வேசியின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார் ஏதுமறியா வேசிக்கு வந்திருப்பது கடவுளென்று தெரியாவிட்டாலும் யாவுமறிந்த கடவுளுக்கு அவள் வேசியென்பது தெரிந்தே இருந்தது. உள்ளே அழைத்தாள் வேசி. “இல்லை, நான் அதற்காக வரவில்லை”, கடவுள் தயங்கினார். வேசி சிரித்தாள், “நேற்றும்தான் ஒருவன் கவிதை எழுதத்தான் வந்தேன் என்று காகிதம் பேனாவோடு வந்தான் காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை காலையில் தான் போனான்” என்றாள். “நான் அப்.....“ கடவுள் திக்கினார். அதற்கு மேல் கடவுளைப் பேசவிடவில்லை வேசி. ஆட்கொல்லி ஆண்டவன் ஆட்கொள்வதற்கு வேசிகள் ஒன்றும் விலக்கல்லவே! சூத்திரனின் பிறப்பை வேதங்கள் அறிவித்தன, பிரபஞ்சம் கொண்டாடியது! இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ----------------------------------------------------------------------------- சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டியில் சிற்றெறும்பைக் கண்டதும் சட்டென்று அடக்கி அப்படியே நகர்ந்தேன் அடுத்த பீங்கானுக்கு, அப்படியே அடுத்ததற்கு… ஞாயிற்றுக்கிழமைகளில் பலியிடும் நாட்டுக்கோழிகளை இப்படியாகத்தான் சமன் செய்துகொள்கிறேன்.
 16. 1 point
  வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கிருபன்.....ஆள் வைச்சு கருத்தெழுதினால் தாங்காது கருத்துலகம்... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் நிலாமதி நன்றிகள் ஜீவன் ,ஒலிநாட இணைப்பிற்கு நன்றிகள் பல..... நன்றிகள் குருவே நன்றிகள் கலைஞன்....ஓம் அவர் அந்த காலகட்டத்தில் வானோலியில் பணியாற்ற தொடங்கிவிட்டார்.... நன்றிகள் தமிழ்சிறி நீண்ட கருத்து பகிர்வுக்கு....
 17. 1 point
  இன்று அற்புதமான நாள் 6-10-2016 ( 6 1 0 2 0 1 6) என்பதை முன்னிருந்தும் பின்னிருந்தும் பாருங்கள் ஒன்று போலவே தெரியும்..... #Happy_teacher's #day Good morning ....☁️☁️ அனைத்து ஆசிரியர்களுக்கும் உலக ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!06.10.2016 ¤ ¤
 18. 1 point
  ஜேர்மனிய ரயில் நிலையத்தில் விதிகளுக்கு முரணாக சைக்கிள் செலுத்திய ஆர்னோல்ட்; எச்சரிக்கை விடுத்த பின்னர் செல்பீ படம் பிடித்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் 2016-10-05 14:49:53 ஹொலிவூட் நட்சத்திரமான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஜேர்மனியிலுள்ள ரயில் நிலையமொன்றில் விதிகளுக்கு முரணாக சைக்கிளோட்டிக்கொண்டு சென்ற வேளையில், அவரை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததுடன் பின்னர் ஆர்னோல்ட்டுடன் செல்பீ படம் பிடித்துக் கொண்டுள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் அண்மயில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 69 வயதான நடிகர் ஆர்னோல்ட் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் 2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனிக்கு சுற்றுலா சென்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை மியூனிச் நகரிலுள்ள ரயில் நிலையமொன்றுக்கு சென்றார். ரயில் நிலையத்தை அடைந்த பின்னரும் அவர் சைக்கிளை விட்டு இறங்காமல், தொடர்ந்தும் சைக்கிளை செலுத்திச் சென்றார். இதை அவதானித்த ஜேர்மன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆர்னோல் ட்டை தடுத்து நிறுத்தினார். இவ்வாறு ரயில் நிலையத் துக்குள் சைக்கிள் செலுத்தி வந்த நபர் உலகப் புகழ்பெற்ற ஹொலி வூட் நடிகரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ் நெகர் என்பதை அறிந்தவுடன் அப் பொலிஸ் உத்தியோகத்தர் வியப்படைந்தார். அதன்பின் ஆர்னோல்ட்டை எச்சரிக்கையுடன் அவர் விடுவித்தார். அதேவேளை தனது அபிமான நடிகரான ஆர்னோல்ட்டுடன் செல்பீ படமொன்றையும் பிடித்துக் கொண்டார். இப் புகைப்படத்தை ஜேர்மனியின் பேயெர்ன் பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ளனர். 'டேர்மினேட்டராக இருந்தாலும் மியூனிச் மத்திய ரயில் நிலையத்தில் சைக்கிளோட்டு வது தடுக்கப்பட்டுள்ளது' என ஜேர்மன் பொலி ஸார் தெரிவித்து ள்ளனர். http://www.metronews.lk/article.php?category=gossips&news=19733
 19. 1 point
  அவர் திருந்த வேண்டாம் சிறி ..., அப்பத்தான் உங்களுக்கும் ஏதாவதொரு சமயத்தில் அவருடன் செல்ஃபீ எடுக்கும் சந்தர்ப்பம் அமையும் ....! நானுந்தான் ஸ்டேசனுக்க சைக்கிள் ஒட்டிக் கொண்டு போறன் ஸ்டேசன் மாஸ்ட்டர் வேண்டாம் ஒரு பாசஞ்சர் கூட என்னோடு செல்ஃபீ எடுக்க முயற்சிக்கவில்லை ....!
 20. 1 point
  லண்டனில் தோட்டக்கலை சமூகத்தினரின் அறுவடைக் கண்காட்சி பிரித்தானிய ரோயல் தோட்டக்கலை சமூகத்தின் அறுவடைக் கண்காட்சி லண்டனில் நேற்று ஆரம்பமாகியது. வித்தியாசமான வகையில் விளைவிக்கப்பட்ட ஏராளமான மரக்கறிகள், பழங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. metronews.lk
 21. 1 point
  உலக மசாலா: கால் இல்லாவிட்டாலும் கவலை இல்லை! சீனாவைச் சேர்ந்த 11 வயது காவோ ஜியு, 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டான். அவன் தன் நிலையை நினைத்து, முடங்கிப் போய்விடவில்லை. அவனைப் போலவே 13 வயதில் இரண்டு கால்களையும் இழந்த சென் ஜோவுவைப் பார்த்து, நம்பிக்கை கொண்டான். சென் ஜோவு பாடகராகவும் பேச்சாளராகவும் இருக்கிறார். இரண்டு கால்களை இழந்த நிலையிலும் சீனாவில் உள்ள 700 நகரங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்! டாய், ஹுவான்ஷான் உட்பட 100 மலைகளில் ஏறியிருக்கிறார்! காவோவின் கதையைக் கேட்ட சென், அவனைத் தான் வசிக்கும் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் சேர்ந்து முதல்முறையாக, 900 மீட்டர் உயரமுள்ள மலை மீது ஏறியிருக்கிறார்கள். லாவோஷான் மலையில் இருவர் ஏறிய செய்தி, சீனா முழுவதும் பரவியது. இடுப்புக்குக் கீழே எதுவும் இன்றி, சாதாரண தரைகளில் செல்வதே கடினம். சென்னும் காவோவும் படிகளில் ஏறி, மலை உச்சியை அடைந்திருக்கிறார்கள்! காவோவுக்கு இனி கவலை இல்லை! நியுயார்க்கில் வசிக்கும் ஜிம், சூசன் கோவல்ஸிக் தம்பதியர், 22 வயது பழுப்புக் கரடியை வளர்த்து வருகிறார்கள். 635 கிலோ எடை கொண்ட கரடி, ஜிம், சூசனிடம் அன்பாகப் பழகி வருகிறது. தோள் மீது சாய்ந்துகொள்கிறது. நாக்கால், முகத்தை வருடுகிறது. விளையாடுகிறது. ‘உங்களுக்குத்தான் இவன் கரடியாகத் தெரிவான். எங்களைப் பொறுத்தவரை அன்பான மகன். நாம் கொடுக்கும் அன்பைப் போல பல மடங்கு அன்பைத் திருப்பிக் கொடுப்பதற்கு, கரடிகளால் மட்டுமே முடியும். சிறிய குட்டியாக, ஆதரவற்று திரிந்த கரடியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தோம். இவனிடம் இருந்துதான், கரடிகள் குறித்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். அதற்குப் பிறகு பல ஆதரவற்ற கரடிகளை எடுத்து, வளர்க்க ஆரம்பித்தோம். கரடிகள் இயற்கைச் சூழலில் வளர வேண்டும் என்பதற்காகவே 100 ஏக்கரில் ஒரு பண்ணையை வாங்கினோம். இங்கே காயம் அடைந்த கரடிகளை மீட்டு மருத்துவம் அளிக்கிறோம். பல்வேறு வகையான 11 கரடிகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். 20 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வந்தாலும் கடந்த ஆண்டுதான் தொண்டு நிறுவனமாக இதை மாற்றியிருக்கிறோம். ஒருநாளைக்கு 14 கிலோ உணவுகளைத் தயாரித்து கரடிகளுக்கு வழங்குகிறோம். இறைச்சி, செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், பழங்களை வழங்கி வருகிறோம். நடுநடுவே மிட்டாய்களையும் கொடுப்பதுண்டு. எங்கள் இருவருக்கும் கரடிகளைப் பராமரிப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்கிறார் ஜிம். கரடிகளை அரவணைக்கும் தம்பதியர்! சிரியாவில் நடைபெற்று வரும் போரில், இடிபாடுகளுக்கு இடையே 4 மாதப் பெண் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டெடுத்த காட்சி உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியிருக்கிறது. காயம் அடைந்த வஹிதாவை மீட்டவர், தாங்க முடியாமல் கதறி அழுதார். பிறகு வஹிதா, அவள் அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டாள். மனைவியும் முதல் மகளும் போரில் கொல்லப்பட்டுவிட, வஹிதாவைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார் யாயா மாடொக். சே... இரக்கமற்ற போர்கள்… http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கால்-இல்லாவிட்டாலும்-கவலை-இல்லை/article9183335.ece?ref=relatedNews
 22. 1 point
  திருகோணமலையை பிரநிதிப்படுத்தும் கூட்டமைப்பு எம்பிக்கள் இருவரும் என்ன செய்கிறார்கள்? எங்கோ இருக்கும் இவர் கேள்வி கேட்கிறார். ஆமா 500 ஏக்கரிலும் அலுவலகம் அமைத்திருக்கிறார்களா? ஆளில்லா கடையில் ரீ ஆத்திற மாதிரி கைவிடப்பட்ட திட்டத்திற்கு ஏனையா 500 ஏக்கர்?
 23. 1 point
  இசை, ஆன்மிகம், கல்விப் பணி, இதழியல் துறை என்று பல்வேறு தளங்களில் பரிமளித்தவர் விபுலாநந்தர் பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர். 1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவு என்னும் ஊரில் விபுலாநந்தர் பிறந்தார். இயற்பெயர் மயில்வா கனன். காரைத்தீவு, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், கொழும்பில் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர். ‘கேம்பிரிட்ஜ்’ தேர்வு எழுதி இளம் அறிவியல் பட்டமும் பெற்றிருக்கிறார். தனது 24-வது வயதில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இலங்கைக் குடிமகன் இவர்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தி யாழ்ப் பாணம் சென்றபோது அவரை வரவேற்ற பெருமை விபுலாநந்தருக்கு உண்டு. துறவறம் திருவிளங்கம் எனும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வாழ்வின் மீது பற்றிழந்த நிலைக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் 1922 முதல் 1924 வரை துறவறப் பயிற்சி பெற்றார். பிரமச்சரிய காலத்தில் ‘பிரபோத சைதன்யர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. 1924-ல் சிவானந்தரால் ஞான உபதேசம் பெற்றார். அவருக்கு ‘விபுலாநந்தர்’ என்ற பெயர் அமைந்தது அந்தக் காலகட்டத்தில்தான். பின்னர், 1925 முதல் 1931 வரை இலங்கையில் பல்வேறு பள்ளிகளை ஏற்படுத்தினார். தனக்கு ஞான உபதேசம் செய்த குருநாதர் நினைவாக மட்டக்களப்பில் ‘சிவானந்த வித்யாலயம்’ என்ற பெயரில் பள்ளியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற வழிவகுத்தார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கருத்துகளை இலங்கையில் பரப்பி, ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார். அண்ணாமலை அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் அழைப்பின் பேரில் 1931 முதல் 1933 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது, விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பதஞ்சலி யோகசூத்திரம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப் பதிலும் முன்னோடியாக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கும் அவர், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழறிஞர்களின் நட்பு உ.வே.சா, ஞானியார் அடிகள், திரு.வி.க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை. துரைசாமிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பேராசிரியர் க.வெள்ளைவாரணன் உள்ளிட்ட அறிஞர்களுடன் நல்லுறவு கொண்டவர். ராமகிருஷ்ண விஜயம், பிரபுத்த பாரதம் (ஆங்கிலம்), வேதாந்த கேசரி, விவேகானந்தன் (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிந்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங் களிலும், ஞானியார் மடம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும், சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களிலும் இசைத் தமிழ்ச் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றியவர். அவரது உரைகளை அக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழ் பதிவுசெய்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் யாழ் குறித்த குறிப்புகளையும், சங்க இலக்கியங் களில் இடம்பெறும் யாழ் பற்றிய குறிப்பு களையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து, ‘யாழ்நூல்’ என்ற நூலை 1947-ல் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்குப் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த கோனூர் ஜமீன்தார் இராம. பெரி. பெரி. சிதம்பரம் செட்டியார் பொருளுதவியும் ஆதரவும் தந்துள்ளார். விபுலாநந்தரின் மீது பற்றுகொண்ட சிதம்பரம் செட்டியார், பதினோராயிரம் சதுரஅடி பரப்பளவுகொண்ட தனது வீட்டினை வழங்கி, ஆய்வுக்கு உதவினார். அந்தச் சமயத்தில் விபுலாநந்தரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இறுதி ஆசை அந்த நூல் வெளியிடப்பட்டால் தனது உடல்நிலை தேறிவிடும் என்று விபுலாநந்தர் நம்பினார். அவரது விருப்பம் அறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழியாக நூல் அச்சேற வழிவகை செய்தார் சிதம்பரம் செட்டியார். அவரைப் போன்ற பலரும் விபுலாநந்தருக்கு உதவி செய்தனர். பேராசிரியர் க.வெள்ளைவாரணன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரின் உதவியுடன் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலில், 1947-ல் ‘யாழ்நூல்’ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, விபுலாநந்தர் உருவாக்கிய யாழினைச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை இசைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர். ‘யாழ்நூல்’ வெளிவந்த 44-வது நாள், கொழும்பு மாநகரில் உள்ள மருத்துவமனை யில் இயற்கை எய்தினார் விபுலாநந்தர். அவரின் உடல் மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப் பட்டு, புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் பல மதத்தவரும் கலந்துகொண்டு திருமறைகளை ஓதி வழிபட் டனர். அவரது நினைவு தினத்தைத் தமிழ்மொழி தினமாக அனுசரித்தது இலங்கை அரசு. அவரது கல்விப் பணியும் ஆன்மிகப் பணியும் இலங்கையில் பல்வேறு அறிவார்ந்த மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விபுலாநந்தர் உருவாக்கிய பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் இன்று கல்வியில் முன்னேறி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவரது வாழ்வின் மேன்மையைச் சொல்லும் செய்தி இது! - மு.இளங்கோவன், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர். விபுலாநந்தரைப் பற்றிய விரிவான ஆவணப்படத்தை உருவாக்கிவருபவர். http://tamil.thehindu.com/opinion/columns/இசைத்-தமிழின்-இலங்கை-முகம்/article9191359.ece?homepage=true&theme=true
 24. 1 point
 25. 1 point
  தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால்... அந்த நன்றிக்காக, சிறீலங்காவின் கடன்சுமையை தமிழர்களே தீர்த்துவைப்பார்கள் என நம்பலாம்.
 26. 1 point
  கல்லுக் கிளப்பின காசில் பக்ச குடுபத்தை கிளப்பினால் 90வீதம் சிம்பிளா எடுக்கலாம்...
 27. 1 point
  நான் பானுஜன் அல்ல மோனிஷா! -2 By Deepam Desk - September 20, 2016 174 முதற்காதல் ஒரு குழந்தையின் முத்தம் போலப் பரிசுத்தமானது. நம்மையறியாமலே நம்முள் ஒருவகைக் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்திவிடும். எல்லோருடைய வாழ்விலும் பருவமாற்றத்தில் கடந்து சென்ற ஒரு காதல்கதை நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். ஒரு சராசரி மனித உயிரியாக எனக்குள்ளும் அந்தக் காதல் மலர்ந்தது. ஆனால் இந்தக் காதல் அபூர்வமானது. அது ஒர் ‘அவள்’ மீது ஏற்பட்ட காதலல்ல அது ‘அவன்’ மீது ஏற்ப்பட்ட காதல். அவன் என் அயல்வீட்டுத் தோழன்.என் சக பராயத்தவன். எப்பொழுதெல்லாம் அவனைக் காண்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் மனத்தில் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் செட்டை கட்டிப்பறந்தன. ஏனோ இனம் புரியாத ஒரு படபடப்பு என்னில் ஒட்டிக்கொள்ளும். வெட்கம் வேறு பிடுங்கித்தின்றது. தினம் தினம் எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என மனது அடித்துக் கொள்ளும். ஆனால் அவனுடன் பேசுவததென்றாலே கையும் காலும் வெடவெடத்துப் போய்விடும். அப்பொழுது நடிகர் குணால் மிகவும் பிரபலமாக இருந்தார். என் அவன் கூட குணாலின் சாயலிலே இருந்தான். மோனல் என எனது பெயரினை நான் மாற்றிவைத்துக் கொண்ட பின்ணணியில் கூட என் முதற்காதல் இருந்தது.இப்படியே அவன் மீதான காதலின் பெறுமதி நாளுக்குநாள் ஏறுவரிசையில் சென்றது. ஒரு கட்டத்தில் பாடப்புத்தகங்களிலெல்லாம் அவன் பெயரினைக் கிறுக்கி வைக்கும் அளவிற்குக் கிறுக்குக் கூடிப்போனது. இப்படி ஒருநாள் கணக்குப் புத்தகத்தில் அவன் பெயரினை எழுதி வைத்து விட்டு உறங்கிவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் பார்த்து விட்டனர். விடயம் அவன் காதுகள் வரை சென்றது. அவர்கள் பார்வையில் எப்போதும் நான் பானுஜன்தான். அதனால்தான் என்னவோ, அவர்கள் அன்று நான் புத்தகத்தில் கிறுக்கியததை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஏதோ சக நண்பன் பெயரினை விளையாட்டாகக் கிறுக்கிவைத்துள்ளான் என்றே நினைத்திருந்தனர். ஆனால் அன்று முதல் என் காதல் ஊரறிந்த பரகசியமாகிவிட்டது. பானுஜன் என்ற என் பெயரே மறந்து போகும் அளவிற்கு பற்பல புதுப்புது பெயர்களை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அலி, ரொபி, சூப்புத்தடி என தத்தமது மொழியறிவிற்கு எட்டிய வகையில் எல்லாம் புதிய புதிய பல பெயர்களை வைத்தனர். ஆனால் எனது மன உணர்ச்சியைப் பற்றி யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இப்போது அவர்களுக்கு தேவையானதெல்லாம் கிண்டலடித்து கேலிபேசுவதற்கான ஒரு வேடிக்கைப் பொருள். அது தம்மைப் போல இரத்தமும் சதையும் இணைந்த உணர்ச்சியுள்ள ஒரு ஜீவன் என்பது அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. வகுப்பில் தனியாக இருக்கிறான், ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் நெளிந்து நெளிந்து பதில் செல்கிறான், பெண்கள் போல நடக்கின்றான், இவன் அப்படி, இப்படி என இட்டுக்கட்டி அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான் அன்றிரவு அப்பா ருத்திர தாண்டவம் ஆடிவிட்டார். கோவம், அவமானம் இரண்டையும் ஒன்றாக எப்பெழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா?. நான் உணர்ந்திருக்கின்றேன். அது வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு நான் வந்த தருணம்.எப்படியாவது என் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தீவிரமாக வலுப்பெற்றது. ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. அப்போது மலத்தியோன்தான் என் கண்ணில் தென்பட்டது. ஏதா ஒரு வேகத்தில் கரைத்துக் குடித்துவிட்டேன். மலத்தியோனைக் குடித்தது மட்டுமன்றி நித்திரைக் குளிசைகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டேன். கண்விழித்தபோதுதான் தெரிந்ததது நான் இருப்பது ஒரு மருத்துவமனை. மரணம் கூட என்னை நேசிக்கவில்லைப் போல. அன்று நான் பிழைத்துக்கொண்டேன். ஆனால் அதன் பின்புதான் எனக்கான சோதனைகள் ஆரம்பித்தன. மருந்தினைக் குடித்து விட்டு சிகிச்சை பெற்றுக் கொண்ட பின்பு எனது பாடசாலை வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போய் விட்டது. என்னை ஆண்கள் வரிசையில் அமருமாறு பாடசாலை சமூகம் நிர்ப்பந்தித்திருந்தது. ஆனால் என்னால் ஆண்கள் மத்தியில் சமமான ஒரு ஆணாக இருக்க முடியவில்லை. நானும் கூட ஒரு ஆணாக வாழ விரும்பவில்லை. அதேநேரம் பெண்கள் வரிசையில் ஒரு பெண்ணாகவும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. எனவே ஆண்கள் வரிசைக்கும் பெண்கள் வரிசைக்கும் இடையில் கதிரை, மேசை போட்டு தனியாக அமர்ந்து விட்டேன். யாருடனும் பேசுவதற்குக் கூட அந்த நேரத்தில் பிடிக்கவில்லை. ஆனால் மனதிற்குள் ஆயிரம் சுனாமி அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தன. அப்பொழுது என் மன உணர்வை எங்காவது ஒரு இடத்தில் கொட்டித்தீர்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவர் எனது பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் வயது முதிர்ந்தவர். எனது பாடசாலையின் கண்டிப்பான ஆசிரியரும் அவர்தான். அவரிடம் வீட்டுப்பாடம் செய்யாமல் பல தடவை அடிகூட வாங்கியிருக்கின்றேன். ஆனாலும் அந்த ஆசிரியரிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்தேன். எனது மனப்பாரத்தை ஒருவாறு இறக்கிவைக்கத் தீர்மானித்தேன். தெடரும்… மோனிஷா http://deepam.news/2016/09/20/நான்-பானுஜன்-அல்ல-மோனிஷா-2/
 28. 1 point
 29. 1 point
  காட்டு விலங்குகள் நடமாடும், அடர்ந்த காட்டுகுள்... "கண்ணாடி" வைத்தால் எப்படி இருக்கும்.
 30. 1 point
  பிள்ளைகளுக்கு Surprise Birthday வைப்பது இல்லையா? அது போல் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
 31. 1 point
  அமெரிக்காவிலை குஞ்சியம்மா கிலாரியும் குஞ்சியப்பு ரம்பும் விடிய விடிய பன்னாடை கதையள் கதைச்சு சனத்தை பேய்ப்பட்டம் காட்டினால்.....வாவ் அது அரசியல். ஆனால் எங்கடை சனம் உள்ளதை உணர்வாக சொன்னால் அது விசிலடிச்சான் கூட்டமாம்.....விசர்க்கூட்டமாம். எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்து முன் நகர்வதுதான் ஒரு இனவிடுதலை விரும்பிக்கு அழகும் அறிவுபூர்வமான செயலுமாகும்.
 32. 1 point
  துட்டகைமுனுக்களும் காக்கைவன்னியர்களும் நிறைந்த உலகமிது. அத்துடன் நல்லதுக்கு காலமில்லை என்ற முதுமொழியையும் கவனத்தில் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு கம்பேர்க்கர் சீஸ்பேர்க்கர் கோலா எல்லாம் உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறார்கள். ஆனால் அவைகள் தான் இன்று கொடிகட்டி பறக்கின்றன. அது போலத்தான் இதுவும்..... நல்லது தின்ன ----- தெரியாது என்று ஒரு பேச்சு வழக்கு வசனமும் இருக்கின்றது.
 33. 1 point
 34. 1 point
  இலங்கை வானொலியின் நினைவலைகளை மீட்டியமைக்கு புத்தனுக்கு நன்றி. நான் பொங்கும் பூம்புனலைத் தவிர எதுவும் கேட்குமளவிற்கு வீட்டில் நின்றதில்லை. ஆனாலும் மற்றைய நிகழ்ச்சிகள் பரிச்சயமானவையே. இப்போது email எல்லாம் இளவயதினர் பாவிக்க விரும்புவதில்லை. Snapchat தான் அவர்கள் விரும்புவது. சமூகவலைத் தொடர்பாடல் virtual reality, augmented reality எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும் விரிவடையும். மனிதர்கள் பல்வேறு வகையான bot வடிவில் உள்ள உதவியாளர்களைப் பாவித்து நாளாந்தக் கடமைகளைச் செய்வார்கள். சிலநேரம் யாழில் எனக்காக ஒரு bot ஐ வைத்தே கருத்து எழுதும் நிலையும் உருவாகலாம்!