Leaderboard


Popular Content

Showing most liked content on 11/24/2015 in all areas

 1. 8 points
  மழை வரப் போவதுபோல் மேகங்கள் எல்லாம் கருங் குன்றுகளாகி ஒன்றுடனொன்று மோதுவதுபோல் செல்வதும் பின்னர் விலகுவதுமான விண் விளையாட்டைப் பரணி யன்னலினூடே பாத்துக்கொண்டே நின்றான். இப்ப சில வாரங்களாக இப்படித்தான் கடும் புழுக்கம் இவன் மனதிலும் வெளியிலும். என் மனதைப் போலத்தான் மேகங்களுமோ??? இன்னும் முடிவை எடுக்க முடியாது அலைந்துகொண்டு திரிகின்றன. குளிர் காற்று வீசுகிறது. கரு மேகங்களும் தெரிகின்றன. ஆனால் இன்னும் ஒருசிறு மழைத்துளி கூட விழாது ஏன் எல்லோரையும் எதிர்பார்த்தே காத்திருக்க வைக்கின்றது என மனதில் எண்ணிக்கொண்டே, என்னால் கூட ஒரு மாதமாகியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான். ................................................................................ அவர்கள் லண்டனில இருந்து வந்திருக்கினம். இரண்டே இரண்டு பெட்டையளாம். மூத்தது ஒரு கோடீஸ்வரனைக் கலியாணம் செய்து வசதியா இருக்கினமாம். இது இரண்டாவது பெட்டை. லண்டனில பெரிய வீடும் இங்கை முப்பது லட்சம் காசும் தரீனமாம். நல்ல சம்பந்தம். பொருத்தமும் எண்பது வீதப் பொருத்தம். அம்மா சொல்லிக்கொண்டே போக இவன் இடை நிறுத்தி "ஏனம்மா மூத்த மகளுக்குக் கோடீஸ்வரனைக் கட்டிக் குடுத்தவை. ஏன் இரண்டாவதுக்கு என்னைக் கட்ட விருப்பப் படினம்" என்று கேட்டவுடன் தாய்க்குக்கூட ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. "அதைப்பற்றி எங்களுக்கு என்ன தம்பி. இண்டைக்குப் பின்னேரம் இங்க அவை வரீனம். நீ எங்கையாலும் போனாலும் எண்டுதான் சொல்லுறன். எதுக்கும் அவை வந்து போகட்டும் அப்பன் பிறகு மிச்சத்தைக் கதைப்பம்" என்று தாய் அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மிகுதிக் காரியங்களைச் செய்யக் கிளம்ப, சரி வரட்டும் பார்ப்பம் என்று நினைத்தவுடனேயே ஆண் பார்க்க வருகிறார்கள் என்று மனதில் எழுந்த எண்ணம் கூச்சப்பட வைத்தது. அவன் கடந்த ஆண்டுதான் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியுள்ள பொறியியலாளர். ஒருவாறு கடனை உடனை வாங்கி அம்மா படிப்பிச்சு முடிச்சிட்டா. அதுக்காக அம்மாவை எதிர்த்துக் கதைக்கப் பயந்து பேசாமல் இருக்கிறதோ என்று மனம் எதிர்த்தாலும், உண்மையில் அம்மா சொல்வதை எப்பதான் எதிர்த்துள்ளான் வாழ்க்கையில் இப்ப மட்டும் எதிர்க்க என வகையற்றுத் தவித்தது மனம். எதிர்க்க முடியாது என்று இல்லை. இவனின் பன்னிரண்டாவது வயதில் தந்தை விபத்து ஒன்றில் இறந்துபோக, அவனையும் தங்கையையும் எந்தக் குறையும் இன்றி ஒரு பட்டம் பெறுமளவு வளர்த்து விட்டதற்கு கைமாறு இதைவிட வேறென்ன செய்யமுடியும் என்று நினைத்து மனதைச் சமாதானம் செய்து கொண்டான். >>>>>>>>>>>........................................................ மாலையில் நான்கு மணிக்கு அவர்கள் பெரிய பென்ஸ் காரில் வந்து இறங்க இவனுக்கு வாங்கோ என்று வெளியே போய்க் கூப்பிட கூச்சமாக இருந்ததில் அம்மா என்று தாய்க்கு அவர்கள் வருவதைத் தெரியப்படுத்திவிட்டு என்ன செய்வது என்று தெரியாது யன்னலூடே பார்த்தபடிவெளியே நின்றான். தாய் ஓடாத குறையாகச் சென்று அவர்களை வரவேற்க, முதலில் பின் கதவைத் திறந்துகொண்டு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்க அவரைத் தொடர்ந்து ஒரு சின்னப் பெண்ணும் இன்னொரு நாற்பதுக்குள் வயதுள்ள பெண்ணும் இறங்க, மறுபக்கத்திலிருந்து இரண்டு ஆண்கள் இறங்கினர். ஒருவரைப் பார்த்ததுமே அவர்தான் பெண்ணின் லண்டன் அப்பா என அவரின் ஆடையிலும் பளபளப்பிலும் இவன் ஊகித்துக்கொண்டான். பெண்கள் மூவருமே தலை முடியை ஓட்ட வெட்டியிருந்தனர். வயது கூடிய பெண் தலைக்கு மண்ணிறம் அடித்திருந்தது பார்க்க அவனுக்கு எதோ போல் இருந்தது. எல்லோரும் உள்ளே வந்ததும் அவன் வேறு வழியின்றி வாங்கோ இருங்கோ என்று சொல்லிவிட்டு நின்றான். இரண்டு ஆண்களும் இவனுக்குக் கிட்ட வர இவனுக்கு ஒரே குழப்பம் ஒருநொடி. ஆனால் நீட்டிய அவர்களின் கையை கண்டதும் அவனின் குழப்பம் மறைந்து அவனும் கைகுலுக்கிக் கொண்டான். அவர்களின் கைகுலுக்கலில் கை இலேசாக நோவெடுத்தது. முதலில் கை குலுக்கியவர், கமோன் தட்சா என்று கண்ணைக் காட்ட அந்தச் சின்னப் பெண் எழுந்து வந்து இவனுக்கு முன்னால் கை நீட்டியது. இவன் வேறு வழியின்றிக் கை குலுக்கிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அம்மா அதை விளங்கிக் கொண்டு பரணி நீயும் இரு என்று சொல்ல, அவன் நுனிக் கதிரையில் அமர்ந்தான். அந்தப் பெண் இவனையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருக்க, இவனும் துணிவாய் நிமிர்ந்து பார்த்தான். நல்ல வெள்ளை தான். ஆனாலும் அழகி என்று சொல்ல முடியாது. நெற்றியில் பொட்டுமின்றித் தலை முடியையும் ஓட்ட வெட்டி, ஒரு ஆண் தனம் இருந்தது அப்பெண்ணிடம். ஒரு அழகிய பெண் தான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவன் எப்போதுமே எண்ணியதுமில்லை. ஆயினும் தன் மனைவி இவளா என்று எண்ணவே, இல்லை என்று அவன் மனம் அழுத்திக் கூறியது. பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது இவனை விரும்புவதாகக் கூறிய நிசா கண் முன் வந்து சிரிப்பதுபோல் இருந்தது. தாயின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்வதில்லை என்ற கட்டுப்பாடு கொண்டதால் அவன் யாரையும் தன் மனதில் எண்ணாமல் எண்ணியவரையும் சுலபமாக விலத்தி வரமுடிந்தது. ஆனால் என் விதி இப்படியாகி விட்டதே என மனதில் எழுந்த பச்சாதாபத்தை ஓரம் தள்ளியபடி அவர்கள் கதைப்பதில் தன் மனதைப் பதித்தான். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> பெண்ணின் தாயார் தம்பட்டம் அடிப்பதைப் பார்க்க எரிச்சலாக வந்தாலும் அடக்கிக்கொண்டு இவர்கள் யார் என்று மற்ற இருவரையும் பார்த்துக் கேட்டான். இது என் அக்காவின் மகளும் கணவரும். இரண்டு பேருமே டொக்ரேர்ஸ் என்று ஆங்கிலத்தில் கூற, அம்மாவுக்கு ஆங்கிலம் விளங்காது என்றுவிட்டு இவையும் லண்டனிலை இருக்கினமா என்றான் பரணி. இவை இங்க கொழும்பில்தான் வேலை செய்யினம். இங்கதான் இருக்கிறது. வருசத்தில ஒருமாதம் அங்க ஹோலிடேக்கு வாறவை என்று கூறிவிட்டு மகளைப் பார்த்து தட்சா இவரைப் பிடிச்சிருக்கோ என்று எல்லார் முன்னாலும் கேட்டார்அந்தத் தாய். இவனுக்குத் தன்னையும் அதேபோல் கேட்டாலும் என்ற பயம் எழ, என்ன குடிக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு உடனே எழுந்தான். டீ ஒன்றும் வேண்டாம். ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் தாங்கோ என்று தந்தை கூற, தம்பி நீ இரு நான் கொண்டு வாறன் என்று தாயார் எழமுயல, அம்மா நீங்கள் இருந்து கதையுங்கோ நான் கொண்டுவாறன் என்றுவிட்டு குசினிக்குள் சென்றபின் தான் இவனுக்கு நின்மதி வந்தது. அங்கு சென்ற பின்னும் காது வெளியே என்ன கதைக்கிறார்கள் என்பதிலேயே நிக்க, அவர்களுக்கும் மகளிடம் அப்படிக் கேட்டதால்த்தான் பெடியன் எழுந்து சென்றுவிட்டான் என்று புரிந்ததால் மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பொதுவாகக் கதைக்கவாரம்பிக்க, இவனும் மனதை இலகுவாக்கியபடி கடையில் வாங்கிய பற்றிசையும் வடையையும் எடுத்துக்கொண்டு போய்த் தாயிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்து ஊற்றி வைத்த நெக்டோச் சோடாவை கிளாசில் ஊற்றி தாய் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தட்டில் வைத்துக் கொண்டுபோய் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தான். **************************************** இவன் மனம் இன்னுமே அமைதியாகவில்லை. பணம் கொட்டிக் கிடந்தால் எதுவும் கதைக்கலாமோ ?? நாங்களா அவையிட்டை பெண் கேட்டு ஓடினோம். கஷ்டப் பட்டனாங்கள் என்று தெரிந்தும் இன்சினியர் எண்டதும் பல்லைக் காட்டிக் கொண்டு வந்தது அவர்கள். சீதனம் தந்தாப்போல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஒரு ஒண்டும் தெரியாத பெண்ணுக்கு புருஷன் வேலை பார்த்ததும் இல்லாமல் உணர்வுகளையும் எல்லாம் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்று எப்பிடி எதிர் பார்ப்பார்கள். எல்லாம் பணக் கொழுப்பு. நினைக்க நினைக்க பரணியின் மனதில் கொதிநிலை கூடிக்கொண்டு சென்றதேயன்றிக் குறையவில்லை. இனி அம்மாவுக்காகவோ ஆருக்காகவோ பார்க்க முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே என மனம் சொன்னது. அம்மாவுக்கு அவன் முடிவாகச் சொல்லிவிட்டான். இனியும் நான் தட்சாவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று. தாய் இரண்டு மூன்றுதரம் அழுது ஆர்பாட்டம் செய்து இவனை மசியவைக்கப் பார்த்தாலும் இவன் கடைசியில் தன் வெக்கத்தை விட்டு நடந்தவற்றைத் தாயாரிடம் சொன்னதன் பின்னர் தாய் எதுவும் கதைக்கவே இல்லை. அவர்கள் கொடுத்த சீதனம் பதினைந்து இலட்சத்தில் பட்ட கடன்கள் அடைத்ததுபோக தங்கைக்குச் சீதனம் கொடுக்க என்று பத்துலட்சம் வங்கியில் வட்டி போட்டபடி இருக்கிறது. அதை எடுத்து அவர்கள் மூஞ்சியில் தூக்கி எறிவோம் என்றால் "நீ அந்தப் பயித்தியத்தோட வாழ்ந்ததுக்கு அதுசரியாப் போச்சு. அவை கேட்டாலும் அந்தக் காசைக் குடுக்கிறேல்லை" என்று தாயார் கறாராகக் கூறிவிட்டார். அவன் மனமும் கொஞ்ச நாட்கள் கொடுப்போமா விடுவோமா என்று இரு பக்கமும் ஆடியபடி இருந்தது . இப்ப கொடுப்பதில்லை என்று அவனும் முடிவுக்கு வந்துவிட்டான். இன்னும் அவர்கள் மகளின் பெயரில் வாங்கிய வீட்டிலேயே தங்கியிருக்கிறான். தாய் கூறியது போல் தட்சா பைத்தியம் எல்லாம் இல்லைத்தான் எனினும் அவன் எத்தனையைச் சமாளித்து அவளுடன் வாழ்க்கையைக் கொண்டு போனான். சோறுகறி சமைப்பது எப்படி என்று தெரியாது, இடியப்பம் புட்டுக் கூட ......தமிழர்களின் உணவே சமைக்கத் தெரியாது அவளுக்கு. எத்தனை நாட்களுக்குத்தான் கடையில் எடுத்து உண்பது?? அவனாவது லண்டன் வந்து தட்டுத்தடுமாறி இறைச்சிக்கறி வைக்கப் பழகிக் கொண்டான். தட்சாவுக்கோ சொல்லிக் கொடுத்தாலும் வர மறுத்தது. சரி தன் விதி என்று மனதைத் தேத்திக் கொண்டாலும் கடைசியாக அவளுடன் நடந்த வாக்குவாதம் நினைவில் வந்து இரக்கம் என்பதையே அவன் மனதிலிருந்து தூக்கிப் போட, இன்னும் தன் மனநிலையைப் பாதித்துக்கொண்டிருக்கும் அவள் பேச்சுக்களே மீண்டும் மீண்டும் நினைவுகளை எல்லாம் வளைத்துப் போட்டது. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> திருமணப் பேச்சு முற்றாகி எழுத்தும் இலங்கையில் எழுதிவிட்டு அவர்கள் லண்டன் சென்று ஆறு மாதங்களிலேயே இவனுக்கு விசாவும் கிடைத்தது. இவனை உடனே அங்கு வரும்படி தட்சாவின் பெற்றோர் அழைக்க, பரணி பிடிவாதமாக இலங்கையில் தான் கலியாணவீடு செய்யவேண்டும் என்று முடிவாகக் கூறிவிட்டான். தாயும் தங்கையும் பார்க்காது என்ன கலியாணம் என்று ஒரு பிடிவாதம். அவர்களும் வேறு வழியின்றி அங்கு போய்க் காசை அள்ளி எறிந்து மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர். தாய்க்குத் தங்கைக்குக் கூட அவர்களே சேலைகள் எடுத்து, கூறைச் சேலை கூட இவர்களை எடுக்க விடவில்லை. தாயோ பரணியோ அது பற்றிக் கவலை கொள்ளவுமில்லை. திருமணம் நடந்த அடுத்த நாளே அவர்கள் எல்லோருடனும் இவனும் லண்டன் வந்துவிட்டான். மருமகள் தன் வீட்டில் நிக்கவில்லையே என்னும் கவலை பரணியின் தாய்க்கு இருந்தாலும், உதைப் பெரிசு படுத்தக் கூடாது என்று ஒன்றும் கூறவில்லை. எல்லாரும் போல லண்டனும் அவனைப் பிரமிக்க வைத்து மனதை ஒருசஞ்சரிப்புக்கு ஆட்படுத்தியது. வந்த அடுத்த நாளே இருவரையும் தட்சாவுக்கு வாங்கிய வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்ட பின்னர் தான் அவனுக்கு தட்சாவுடன் தனிய இருக்கவே சந்தர்ப்பம் கிடைத்தது. தனிமை அவனுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த அவளுக்குப் பக்கத்தில் போய் அமர்ந்து தட்சா என்றான் ஆசையுடன். "வெயிட் பர்ணி ப்ரோக்ராம் முடியட்டும்" என்றுவிட்டு அவள் தன் பாட்டுக்கு சிறுவர்களின் நிகழ்வொன்றைப் பார்த்துக்கொண்டு இருக்க இவன் வேறு வழியின்றி மேசையில் கிடந்த மகசின் ஒன்றைப் புரட்டியபடி அமர்ந்தான். அப்படியே கதிரையில் சாய்ந்து தூங்கிவிட்டவன் கண் விழித்தபோது அவள் சான்விச் ஒன்றை உண்டுகொண்டிருந்தாள். என்ன நீர் என்னை விட்டுவிட்டுச் சாப்பிடுகிறீர். எழுப்பி இருக்கலாமே என்று இவன் ஆதங்கத்துடன் சொல்ல, நான் அதை யோசிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் முகம் பதிக்க ஏற்பட்ட எரிச்சலை அடக்கியபடி இண்டைக்கு வெளியே போய் இரண்டுபேரும் சாப்பிடலாம் என்று நினைத்தேன் என்றான் இவன். நீங்களும் இப்ப சான்விச் சாப்பிடுங்க. இரவு போகலாம் என்றுவிட்டு அதுபற்றி வேறெதுவும் கதைக்காது சாப்பிடுபவளை எதுவும் சொல்ல முடியாது தானே எழுந்து சென்று பிறிச்சில் இருந்த ஒரு பாணைக் கொண்டுவந்து அவளுக்கு அருகிலிருந்து உண்ண ஆரம்பித்தான். அவனுக்கு அரை வயிறுதான் நிரம்ப மீண்டும் எழுந்து பிரிச்சைத் திறந்து பார்த்தவன், அது காலியாக இருக்கவே எரிச்சலுடன் அடித்துச் சாற்றிவிட்டு வந்து அமர்ந்தான். வீட்டில் அம்மா கலையில் மட்டும் தான் பாண் தருவது. அதுவும் அந்த அரைத்த சம்பலோ அல்லது இடித்த சம்பலுடன் சாப்பிடும்போது கால்றாத்தல் பாணுடனேயே வயிறு நிறைந்துவிடுமே. இத்தனை பணம் இருந்து என்ன. இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையே என சினம் கூடியது. நானும் அம்மாவிடம் வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டுமோ என்று முதல்முறையாக அவனுக்குத் தன்மேல் கோபம் எழுந்தது. மாமியார்க்காரி ஒரு வாரமாவது தம்முடன் எங்களை வைத்திருக்கலாம் என்று எழுந்த கோபத்தில் தட்சா எனக்குப் பசிக்குது வாரும் ஏதாவது வாங்கிக் கொண்டுவந்து சமைப்பம் என்றவன், அவளின் கையைப் பிடித்து கதிரையிலிருந்து அவளை எழுப்பினான். அவள் உடை மற்ற அறைக்குள் செல்ல சிறுநீர் கழிக்கச் சென்றவன் வெளியே வரும்போது தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருந்தாள். இந்தாங்க மம்மி என்றுவிட்டு இவனிடம் போனைக் கொடுத்தவள், மீண்டும் இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாள். பரணி, அங்க வெட்டிங் நடந்ததால இங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு நெக்ஸ்ட் சனி ரிசெப்சன் வச்சிருக்கு. அதால நீங்கள் வெளியில பெரிசா திரியாமல் இருக்கிறது பெட்டர். நான் ஒரு மணித்தியாலத்தில பூட் கொண்டு வாறன் என்று மாமியார் ஆங்கிலமும் தமிழும் கலந்து சொல்ல இவனுக்கு பசி குறைந்துவிட்டாற்போல் உணர்வு ஏற்பட, சரி என்றுவிட்டு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தான். அவளுக்கு அவனிடம் எந்த ஈர்ப்பும் ஏற்படாதது அவனுக்கு வியப்பையும் ஒருவித ஏமாற்றத்தையும் கூட அளித்தது. அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்போமா என்று எண்ணியவன் அவளைப் பயப்படுத்தக் கூடாது என்று எண்ணியவனாய் அவள் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அவளோ எந்தவித உணர்வும் அற்றவளாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். ************************************************************************************************************************************* எல்லோரையும் போல அவனும் எதிர்பார்ப்புடன் இரவுக்காகக் காத்திருக்க, தனது அறையினுள் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வந்தவள் கையில் ஒரு சிறிய பெட்டியை எடுத்து நீட்டினாள். இவன் பெட்டியை வாங்காது திடுமென அவளை அனைத்துத் திக்குமுக்காட வைத்தபோதும் அவள் பெரிதாக உணர்ச்சிவசப்படாது மம்மி பெட்டியை குடுக்கச் சொன்னவ என்றபோது உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்த அவன் உணர்வுகள் தடைப்பட்டுக் கீழே விழுந்தன. அதன்பின் அதை வாங்கிப் பார்த்தவனுக்கு கோபமும் எரிச்சலும் ஒன்றாய் எழுந்தன. மம்மி தந்துவிட்டவவா என்றபடி பெட்டியைப் பார்த்தவனுக்கு "கொண்டம்" என்று எழுதியிருந்ததைப் பார்த்தவன் புரிந்ததும் உம்மட மம்மிக்கு விசரா என்று அதைத் தூர ஏறிந்தான். சின்னப்பிள்ளைபோல் அதை ஓடிப்போய் எடுத்துவந்த தாட்சா இதை கட்டாயம் யூஸ் பண்ணட்டுமாம் மம்மி என்றவள், அக்கா கூட கோல்சேல் கடையில் பெரிய பண்டல் வாங்கி வச்சிருக்கிறா. நெக்ஸ்ட் டைம் அவவிட்டை இது ஓகே என்றால் அவவே எமக்கும் வாங்கித்தருவா என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் மனக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான் பரணி. ***************************************************************************************************************************************** ஒருவாறு அவன் லண்டன் வந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டது. நல்ல வேலையும் சம்பளமும் கொம்பனிக் காருமாக இருந்தாலும் தட்சாவின் போக்கும் குணமும் செயல்களும் அவனுக்குப் பெரும் சவாலாகவே இருந்தன. காசுக்காக அம்மா என்னை விற்க நான் அம்மாவுக்காக என்னை விற்றுவிட்டேன் என்று மனம் ஓலமிடத்தான் செய்தது. உண்மையைச் சொல்லு அம்மாவுக்காக மட்டும் தானா நீ இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தது?? லண்டன் போகும் உன் ஆசையாலும் தானே என மனம் இடித்துரைத்ததை ஏற்கமறுத்த மனதை வலுக்கட்டாயமாக ஏமாற்றியபடி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். வீடு வைத்தது வைத்தபடி அப்படியே இருந்தது. தட்சாவும் இவன் வரவை ஆவலின்றி எதிர்கொண்டு கடமைக்காகச் சிரித்துவிட்டு தன்பாட்டில் டிவி பார்த்தது. இவன் முகம் கழுவி உடை மாற்றி வர,தாட்சா எழுந்து சாப்பாடை சூடாக்கவோ என்று கேட்க இவன் ஆம் என்று தலையசைத்தான். தாய் விருந்து சமைக்காவிடாலும் ஒருகறியோ இரண்டோ சுடச்சுடச் சமைத்து வைத்து உண்பதற்காய்க் கூப்பிடுவார். அந்தச் சுவையே இரண்டாம்தரமும் போட்டு உண்ண ஆவலை ஏற்படுத்தும். இங்கு பணமிருந்து என்ன? தாயின் சமையல் போல் இல்லாவிடாலும் சாதாரணமாகக் கூடச் சமைக்கத் தெரியாத மனைவியை வைத்துக்கொண்டு மாமியார் சமைத்துத் தரும் உணவை இரண்டு நாளுக்கொருதடவை குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுத்துச் சூடாக்கி உண்ணவே பசி பறந்துபோகும். நல்ல காலம் மதியம் இவன் வேலை செய்யும் அலுவலகத்துக்கு அண்மையில் ஒரு இலங்கைத் தமிழரின் உணவகம் இருந்ததனால் இவன் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. இங்கே பிறந்து வளர்ந்தபடியால் தட்சாவுக்கு சோறு கறியில் பெரிதாக நாட்டமே இல்லை. சான்விச்சும் பொரித்த உருளைக்கிழங்கும் இறைச்சிப் பொரியல்களும் நினைக்கவே இவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் நல்ல காலம் இடியப்பம், அப்பம், இட்லி போன்ற எம்மூர் உணவுகள் சிலதும் அவளுக்குப் பிடிததால் பக்கத்தில் இருக்கும் தமிழ் கடையில் அவற்றை வாங்கி உண்டும் அப்பப்ப வெளியே சேர்ந்து சென்று உணவகங்களில் சாப்பிட்டும் தன் ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொண்டான் பரணி. இப்படியே எத்தனை காலம் தான் ஓட்டமுடியும் என்ற யோசனையும் அவனை அலைக்கழித்தபடியே இருக்க, முடிவே தெரியாதவனாய் வாழ்ந்துகொண்டிருந்தான் அவன். **************************************************************************************************************************************** அன்று சாதாரணமாக் வேலைக்குச் செல்ல வேண்டியவன் சிறிது காச்சல்க் குணமாக இருக்க, போன் செய்து அன்று வரவில்லை என்று சொல்லிவிட்டு, என்னை எழுப்பவேண்டாம். இண்டைக்கு படுத்து நித்திரை கொள்ளப் போறன் என்றுவிட்டு உண்மையிலேயே தூங்கியும் போனான். தற்செயலாகக் கண்விழித்தவன் தட்சா யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கேட்டதும் தன் காதை அங்குவிட்டபடி கவனித்தான். இல்லை டாடி. நேற்று ஒன்றும் நடக்கவில்லை. நேற்று முதல் நாள்தான் இரண்டுபேரும் ஒன்றாய் இருந்தது. எனக்கு பர்ணி கிஸ் பண்ணினாலும் எந்த பீலிங்கும் இல்லை டாட். டோன்ட்வொறி டாட். நான் கட்டாயம் சொல்லுவன் என்று கூறிப் போனை வைக்க இவனுக்கு கோபத்தில் உடல் கொதிக்க உடனே எழுந்து யாருடன் கதைத்தீர் என்றான். அப்பாதான் என்றுவிட்டு எந்தவிதக் கூச்சமும் இன்றி அவள் இருக்க எங்கடை பேசனல் விஷயத்தைப்பற்றி அதுவும் உம்மட அப்பாவுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தீரா. உமக்கு என்ன விசரா என்றான். அம்மாவும் டெய்லி போன் செய்து கேக்கிறவ. நான் சொல்லுறனான் என்றுவிட்டு அதுபற்றிய அவமான உணர்வு எதுவுமற்றபடி அவனைப் பார்த்தாள் தட்சா. உன்ர குடும்பத்துக்கு விசரா? ஒரு அப்பா பிள்ளையிட்டைக் கதைக்கிற கதையா இது? லூசா நீ என்று இவன் கோபமாக் கூறியபடி கையை ஓங்க, என்னை நீங்க அடிக்க முடியாது என்று அம்மா சொன்னவ. நாங்க நிறையக் காசு தந்திருக்கிறம் உங்களுக்கு. பொறுங்கோ டாடிக்குச் சொல்லிறன் என்று போனை அவள் எடுக்க, இவனுக்கு வந்த கோபத்தில் கண்மண் தெரியாமல் அத்தனை மூர்க்கமாக அவளை அடித்தான் என்று அவள் உணர்வற்றுக் கிடக்கத்தான் உணர்ந்தான். பத்து நிமிடத்தில் அவள் கண்விழித்தபோது இவன் குற்ற உணர்வுடன் சொறி தட்சா என்றபடி அவளருகே செல்ல, பேயைக்கண்டவள் போல் இவனைப் பார்த்துப் பயந்த தாட்சாவைப் பார்க்கப் பரணிக்குப் பாவமாக இருந்தது. அவள் பயப்படுவது தெரிந்ததும் அவன் மீண்டும் சென்று படுக்கையில் விழ, சிறிது நேரத்தில் வந்துசேர்ந்த தாயும் தந்தையும் இவனை பார்த்துக் கேட்ட கேள்விகள் கொஞ்சமல்ல. இவனும் விடவில்லைத்தான். எல்லாம் உங்களாலத்தான். பிள்ளையோட என்ன கதைக்கிறது எண்டு தெரியாத நீங்கள் எல்லா ஒரு மனிசரா என்று வாக்குவாதம் முற்றி அவர்கள் தாட்சாவைத் தம்முடன் கூட்டிக்கொண்டு போக இவனால் தடுக்கவே முடியாது போய்விட்டது. "இப்பவே பொலிசுக்குச் சொன்னால் உன்னை உள்ளே போடுவாங்கள். ஆனால் எமக்குத்தான் அது கேவலம் என்று தான் பேசாமல் போறம்" என்று இவனை மிரட்டிவிட்டுத்தான் மாமியார் போனார். தாட்சாவைக் காரில் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவளுக்குக் கோப்பி ஒன்று போட்டுக் கொடுத்து படுக்க வைத்தபின் தாயார் திலகா கணவனிடம் வந்து அடுத்து என்ன செய்வது என்றபோது " எல்லாம் உம்மால்த்தான். எத்தன தடவை சொன்னனான் தட்சாவுக்குக் கலியாணம் வேண்டாம் எண்டு. அவளின் டொக்ரர் உனக்கு வடிவாத்தானே சொன்னவர். தட்சா சாதாரண ஆட்கள் போல் இருந்தாலும் சில பிரச்சனைகளும் டிக்ஸ்லெக்சியாவும் இருக்கிறதால நீங்கள் எப்பவும் உங்கட கண்காணிப்பில வச்சிருக்கிறதுதான் நல்லது எண்டு. உனக்குப் பேராசை. நல்ல காலம் எக்குத்தப்பா ஏதும் நடந்து போலிசுக்குப் போயிருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சனை வந்திருக்கும் " என்று திட்டிக்கொண்டே போக, "நான் என்னப்பா செய்ய. கலியாணம் செய்தால் எல்லாம் சரியாயிடும் என்று நினைச்சன்" என்று அழத் தொடங்கும் மனைவியை தொடர்ந்தும் திட்ட மனமின்றி ஏதும் செய்ய வகையற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார் தட்சாவின் தந்தை கண்ணன். அடுத்தநாள் இவன் போன்செய்தும் யாரும் இவனிடம் கதைக்க முன்வரவில்லை. தட்சா இனி உன்னோட இருக்க விரும்பேல்லை. மரியாதைய வீட்டை விட்டு வெளியே ஒரு மாதத்தில போவிடவேணும். இல்லாட்டால் வீண் பிரச்சனை தான் என்றும் இவனை மிரட்டி இன்றுடன் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அவன் மனம் நன்றாகவே தெளிந்துவிட்டது. அவன் ஒரு முடிவோடு அவர்கள் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்திட்டு உறையை ஒட்டியபின்தான் நீண்ட நாட்களின் பின் மனம் முழுதும் ஒரு நிம்மதி பரவுவது போல் இருந்தது.
 2. 3 points
  கருகாத பூக்கள் .....!!!-------எம் .....மண்ணில் தான் ....கறுப்பு பூக்கள் அழகழகாய் ....பூத்தது - பூத்த பூக்கள் ....வாடிவிட்டதே - நினைக்காதீர் ....எம் மனதில் என்றும் வாடாமலர் ....உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!எம் மண்ணில்தான் கடலில் ....நீலபூக்கள் பூத்தன ....பூத்த பூக்களை அலை ....அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!கறுப்பு எண்ணங்களாலும் ....கருப்பு ஜூலையாலும் ....கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....கறுப்பு சிந்தனைகளால் ....கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....கருகாத பூக்கள் .....!!!
 3. 2 points
  கந்தசாமியாருக்கு தடை நீக்கம் என்று இரண்டு மாதத்தில் சிறிலங்கா அரசு அறிக்கை விடும்
 4. 2 points
  ஏன் நீங்கள் எல்லாம் உதவி களைச்சு போனிங்களோ..? இலவச அறிவுரை குடுப்பவர்களுக்கு மட்டும் இங்கு பஞ்சமே இல்லை..
 5. 2 points
  இங்கே ஐ.எஸ் பற்றிய சில கருத்துக்களைப் பார்க்கும் போது ஆச்சரியப் பட மட்டுமே முடிகிறது! அவர்கள் இப்படி நடந்து கொள்ள ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்று சிலர் சொல்வது இன்னும் ஆச்சரியம் தருகிறது. உண்மையில் ஐ.எஸ் சுக்கு நியாயமாகத் தெரியும் காரணம் இது தான்: இஸ்லாம் அல்லாதவன் அவிசுவாசி, அவனைக் கொல்ல வேண்டும். இஸ்லாமியனும் இதற்குக் குறுக்கே நின்றால் அவனையும் கப்fஇர் ஆக்கிக் கொல்ல வேண்டும்! இது மட்டுமே ஐ. எஸ் சின் நீங்கள் சிலர் நியாயமானது என்று நினைக்கும் காரணங்கள்! ரதி சொல்வது போல மேற்குலகம் தயாரித்து வெளியிடும் விவரணங்கள் அல்ல! ரகசியமாக ஐ.எஸ் சிடம் வேறு வழியின்றி மாட்டுப் பட்ட மக்கள் சிலரே எடுத்து வெளி வரும் குறுகிய கைத்தொலைபேசி வீடியோக்கள் தான் அதிகம்! ஏன், ஐ,எஸ் சே பயத்தை விதைக்க தாங்கள் செய்யும் அரக்கத் தனங்களை தங்கள் தளத்தில் வெளியிடுவதுண்டு (கைதான ஜோர்தானிய பைலட்டை உயிரோடு எரித்த வீடியோ ஒரு உதாரணம்!). நீங்கள் எல்லாம் சொல்வது போல ஐ.எஸ் முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினருக்காகவாவது போராடுகிறார்கள் எனில், ஏன் ஐ.எஸ் கைப்பற்றும் நகரங்களில் இருந்து தப்ப முடிந்த மக்கள் தப்பியோடுகிறார்கள்? இந்த மாதம் சிஞ்சார் நகரை குர்திஷ் படைகள் மீட்ட போது அங்கே மக்கள் யாருமே இருக்கவில்லை! அவ்வளவு மக்கள் விரோத காட்டு மிராண்டிகள் ஐ.எஸ் மிருகங்கள்! "the face of evil" என்று அவர்களைச் சொல்வது மிகப் பொருத்தம்! ஆனால் புரட்சிகரமாக யோசிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு devil's advocate ஆக சிலர் இங்கே மனிதத் தன்மையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம்!
 6. 2 points
  மறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா ஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் ! சில பயணங்களில் சிலர் போட்டோ எடுப்பதற்கும், அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஹிட்லர் போல இருப்பதை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்படி செய்யும் பயணங்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகம்தான் ! நாங்கள் நான்கு நண்பர்களும் இந்த பயணம் ஆரம்பிக்கும்போது குழந்தை போல குதூகலத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம்.... அதை சரியாக செய்தோம் என்றே நினைக்கறேன் ! கேரளாவில் இருக்கும் ஆலப்புழாவில் ஒரு நான்கு நாட்கள் குழந்தைகளாக சுற்றி திரியலாமே என்று யோசித்து எல்லோரும் கிளம்பினோம்..... அந்த பயணத்தில் படகு வீட்டில் பயணம் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோசம் ! சீசன் இல்லாதபோது இந்த படகு வீடுகள் சுமார் ஏழாயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இந்த படகு வீடுகளில் பல வகைகள் இருக்கின்றன, அதற்க்கு ஏற்ப விலையும் !! காலை பன்னிரண்டு மணிக்கு இந்த படகு வீட்டை எடுக்கிறார்கள், மெதுவாக அது வேம்பநாடு ஏரியில் மிதந்து செல்லும்போது சுகமான காற்றில் கொஞ்சம் கிறக்கமாக இருக்கிறது. இந்த படகு வீட்டை நிர்வகிக்க மூன்று பேர் இருக்கின்றனர், ஒரு ஆள் படகை ஓட்டுவதற்கு, இன்னொரு ஆள் அவருக்கு துணை மற்றும் தொழில் கற்றுக்கொள்பவர், மூன்றாவது ஆள் என்பது சமையலுக்கு. சிறிது தூரம் சென்ற பின்னே ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தனர், அதை சியர்ஸ் என்று சொல்லி எங்களது நட்பினை அழகுபடுத்தினோம், பின்னர் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இயற்கையை ரசிக்க வயிறு பசிக்க ஆரம்பித்தது. எப்போ சாப்பாடு ரெடி ஆகும் என்று கேட்க, அவர்களோ இன்னும் அரை மணி நேரம் என்று சொல்ல திகிலாய் இருந்தது. அப்போது அவர் உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க நாங்கள் முழித்தோம்.... பின்னர் அவரே பக்கத்தில் பொறித்த மீன்கள், இறால், நண்டு, கள் எல்லாம் கிடைக்கும் வேண்டுமா என்று கேட்கவும் நாங்களும் சரி என்றோம் ! படகு போக போக தூரத்தில் அந்த தண்ணீர் தேசத்தில் ஒற்றை வீடு, அதை சுற்றி சில படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வீட்டை நெருங்க நெருங்க பொறித்த மீன் வாசம் வந்து கொண்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் இலையில் சின்ன இறால் எல்லாம் மசாலா தடவி வைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் மண் சட்டியில் மீன், இறால் குழம்பு கொதிதுக்கொண்டு இருந்தது. இன்னொரு பக்கத்தில் பல வகை மீன்களும், இறால்களும் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் எங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு படகுக்கு திரும்ப மேஜையில் சாப்பாடு தயாராக இருந்தது ! சாப்பாடு மெனு என்பது சாம்பார், கூட்டு, போரியல், அப்பளம், பொறித்த மீன், பச்சடி அவ்வளவுதான்...... பின்னர் நாங்கள் வாங்கிய மீன் கொழம்பு, இறால் மற்றும் கிழங்கு ! பசிக்கு அது தேவாமிர்தமாக இருந்தது என்று சொல்லவா வேண்டும். சமைக்கும் ஆள் முன்னாள் துபாயில் ஸ்டார் ஹோடேலில் வேலை செய்தவர், இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டு விட்டு இங்கே வந்து இருக்கிறார், அதனால் ருசி அருமையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டதில் அந்த சாப்பாட்டின் சுவை இன்னும் அதிகமாக இருந்தது.சாப்பிட்டு கை கழுவிய பின்னே படகு மீண்டும் அந்த தண்ணீரில் மிதக்க, அங்கு அடித்த அந்த குளிர்ந்த காற்றில் கண்கள் மயங்க ஆரம்பித்தது, நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் என்று சொல்ல உட்கார்ந்த படி இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து சயன நிலைக்கு போயிருந்த நான் "நெக்ஸ்ட் வேற என்ன...... ரெஸ்ட் தான் !!" என்று கண்களை மூடிக்கொண்டேன் ! சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு தூங்கிய பிறகு எழுந்து பார்த்தால் எல்லோரும் அதே நிலை. அப்போது படகு ஒட்டியவருடன் பேசி கொண்டு இருந்தபோது அங்கு பலருக்கு சைக்கிள் போல வீட்டுக்கு ஒரு சிறு ஓடம் இருக்கும் என்பது தெரிய வந்தது. அப்போது தூரத்தில் ஒருவர் ஒரு ஓடத்தை நிறுத்தி வைத்து விட்டு, மூழ்கி மேலே வந்து எதோ கொட்டினார், என்னவென்று கேட்க அது மணல் என்றார். இங்கு வீடு கட்ட மணலை ஆற்றில் இருந்து மட்டுமே எடுக்க வேண்டுமாம், அரசாங்க விதி இதனால் இங்கு மணல் விலை அதிகம் என்று தெரிந்தது. நிறைய பேர் இப்படி தொழில் செய்து பிளைப்பதாகவும், வேறு நல்ல தொழில் இங்கு எதுவும் இல்லை என்றார். நாங்கள் பேசி முடிக்கவும் எனது நண்பர்கள் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. அப்போது சூடாக இஞ்சி தட்டி போட்ட டீயும், மொரு மொறுவென்று வெங்காய பஜ்ஜியும் வர எங்களுக்கு நாக்கில் நீர் ஊற ஆரம்பித்தது ! இப்படி செல்ல செல்ல மாலை மயங்க ஆரம்பிக்க, அவர்கள் யாருமே இல்லாத ஒரு தீவை போன்ற பகுதியில் படகை நங்கூரமிட்டனர். ஒரு பக்கம் தண்ணீர், மறு பக்கம் வயல் வெளி என்று அந்த இடம் அருமையாக இருந்தது. அப்போதுதான் தெரிந்தது அந்த படகு இனி அடுத்த நாள் காலையில் மட்டுமே எடுக்கப்படும் என்று ! ஆக..... இந்த படகு சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மட்டுமே ஓடுகிறது, மீதி நேரங்களில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். நாங்கள் அந்த வயல் வெளிகளில் இறங்கி குழந்தைகளை போல விளையாட ஆரம்பித்தோம். சுற்றிலும் பச்சை பசேல் என்று வயல், சிலு சிலுவென்ற காத்து என்று இருந்த அந்த தேசத்தை நாம் ஏன் கடவுளின் தேசம் என்று சொல்கிறோம் என்று அன்று புரிந்தது !! என்னதான் நாங்கள் வயல் வெளிகளில் சுற்றி திரிந்தாலும், சீக்கிரம் இருட்டிய பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த படகு வீட்டில் பெரிய டிவி, CD பிளேயர் என்று இருக்கிறது, நீங்கள் நல்ல படம் எடுத்துக்கொண்டு சென்றால் நல்லது இல்லையென்றால் மோட்டுவளையை பார்க்க வேண்டியதுதான். குடும்பத்துடன் செல்பவர்கள் இப்படி தீவு போன்ற இடத்தில் இப்படி தங்கினால் குழந்தைகளுக்கு பொழுது போகாதே என்று கேட்க இந்த படகு வீடுகள் நான்கு மணி நேரம், அரை நாள் என்ற வகையில் எல்லாம் கிடைப்பதால் இப்படி தங்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் அரை நாள் வாடகைக்கு மட்டும் எடுத்தால் மீண்டும் மாலைக்குள் ஹோட்டல் சென்று விடலாம் என்பது ஒரு உபயோகமான செய்தி. நண்பர்களாகிய நாங்கள் அந்த இரவினில் அந்த தீவினில் பேசிக்கொண்டு இருந்தது என்றும் மறக்க முடியாத ஒன்று ! அங்கு சேற்றினில் புரண்டு ஆடும்போது கரையினில் மீன்கள் துள்ளி ஆடி கொண்டு இருந்தது. சில மீன்கள் துள்ளும்போது கரையினில் விழுந்து துடிக்க நண்பர்கள் சீனா சென்ற நீ இந்த பச்சை மீன்களை சாப்பிட முடியுமா என்று சவால் விடுக்க அதை நிறைவேற்றி காட்டினேன்.... என்ன உப்பு கொஞ்சம் அந்த மீனில் கம்மி !! அடுத்து மீன் பிடிக்கலாம் என்று எண்ணி அந்த படகு வீட்டில் இருந்த தூண்டிலை வாங்கி மீன் பிடிக்க ஒரு நல்ல மீன் சிக்கியது. இரவினில் சப்பாத்தி, குருமா, இறால் என்று சுவையான சாப்பாட்டோடு எங்களது அரட்டையும் சேர அங்கு மின்னிய நட்சத்திரங்கள் அந்த இரவை இன்னும் அழகாக்கின. அடுத்த நாள் அதிகாலை எழுந்தபோது அப்படி ஒரு அமைதியையும், குளிர்ச்சியையும், காட்சியையும் நான் அதுவரை கண்டதில்லை எனலாம். வெறும் பறவை சத்தம் மட்டுமே, சில்லென்ற காற்று வீச, வயல் வெளிகளின் இடையே ஒரு சிறு வாக் சென்று திரும்பினால் அது சொர்க்கம்தான். நகரத்தின் இரைச்சல்கள் இடையே வாழ்ந்தவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக உலகம் இவ்வளவு அழகா என்று வியப்பது உறுதி. எங்களுக்கு இட்லி, சட்னி, சாம்பார், அப்பம், கடலைகரி என்று கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் அந்த படகு எங்களை இறக்கிவிட கிளம்ப....... அந்த இடத்தை விட்டு பிரிய மனமே இல்லாமல் பிரிந்தோம். படகு வீட்டு பயணம் என்பது கண்டிப்பாக உங்களது மனதை நிரப்பும்...... ஒரு முறை நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று !! http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_5.html
 7. 2 points
  ரதி, ஐ.எஸ் ஐயும் புலிகளையும் ஒரே கூடைக்குள் போடமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பச்சை போட்ட சேர்வையரும் புரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் புலிகளும் காட்டுமிராண்டித்தனமாக நடந்தார்கள் என்று அர்த்தப்படும். ஐ.எஸ் பயங்கரவாதிகளைப் பற்றி பல்வேறு விவாதங்கள், கருத்துக்கள் ஆங்கில ஊடகங்களில் வருகின்றன. அவற்றினை வாசித்தும், கேட்டும் , கூட வேலை செய்யும் ஈராக்கியர், குர்தீஸ், சிரியர்களுடன் கதைத்தும் பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது. அதிதீவிர சன்னி இஸ்லாமிய பிரிவாகவே இவர்கள் இருக்கின்றார்கள். மோசமான ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு கலிபேற்றை மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் நிறுவுவதுதான் அவர்கள் கொள்கை. இவர்கள் அதிகமாகக் கொல்வது சக இஸ்லாமியர்களையே. யஸிடி இனப் பெண்களையும், சிறுமிகளையும் அடிமைகளாக வைத்திருக்கும் மோசமானவர்களை உலகில் இருந்து ஒழிக்கவேண்டும். இதனை தனியே படைபலத்தை மட்டும்கொண்டு செய்யமுடியாது. கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டும், அதற்கு முன்னர் அவர்களுக்கும் நியாயமான கோரிக்கைகள் இருக்கும் என்று நினைக்கும் நீங்கள் குறைந்தபட்சம் சனல்-4 இல் தினமும் ஏழு மணிக்கு வரும் செய்திகளையும் அலசல்களையும் பார்ப்பது நல்லது.
 8. 2 points
  மன்னிக்க வேண்டும் கிருபன்,இது வரை காலம் நீங்கள் இணைத்த கட்டுரைகளில் ஒரு மோசமான கட்டுரை என்டால் இது தான். கட்டுரையாளார் ஜஎஸ்ஏ பற்றிய விவரணப் படம் பார்த்தாராம் அதில் அவர்களை பற்றி கூடாமல் சித்தரித்திருக்குதாம் உடனே அவர்கள் கொடுமைக்காரார்கள் என்ட முடிவுக்கு கட்டுரையாளார் வந்து விடுகிறார். மேற்கத்தைய ஊடகங்கள் ஜஎஸ்ஏவைப் பற்றி படம் எடுத்தால் யோக்கியமானவர்களாய் காட்டப் போகிறார்களா என்ன? முதல் நாள் லெபனானில் குண்டு வெடித்து சனம் செத்திருக்கு அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை.பாரிசில் இருக்கின்ற வெள்ளைக்காரன் செத்தவுடன் மனம் பதறி துடிக்குது அவருக்கு...அதிலை வேற மே.நாடுகள் எல்லாம் சேர்ந்து ஜஎஸ்ஏ அழிக்கப் போயினமாம். அதிலை அங்கேயிருக்கின்ற அப்பாவிச் சனங்களும் சாவர்கலாம். செத்தாலும் பரவாயில்லையாம் ஆனால் ஜஎஸ்ஏகாரன் அழியோணுமாம். இதை வாசிக்கேக்குள்ள உங்களுக்கு எங்கட மக்களும்,எங்கட அழிவும் ஞாபகத்திற்கு வரவில்லை...புலியை அழிக்கிறோம் என சொல்லித் தான் எங்கட சனத்தை அழித்து முடித்தவர்கள். ஜஎஸ்ஏ செய்வது சரியா/பிழையா என்பதற்கு அப்பால் அவர்கள் இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று வடிவாய் ஆராயுங்கோ
 9. 1 point
  நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது எனது காணியில் பாதையை அடைத்துக்கொண்டு நின்ற மாமரத்தை தறிக்கவேண்டியிருந்தது. பெருமரங்கள் தறிப்பதற்கு முதல் விதானையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள்....அதனால் விதானையாரின் அலுவலகம்? சென்றேன். அவரது அலுவலகம் ஒரு பழையவீட்டின் முன் விறாந்தையில் ஒரு அறையுடன் ஒதுக்கப்பட்டிருந்தது....வீட்டுவிறாந்தையில் ஒரு மேசையும் அதன் முன் ஒரு வாங்கும் போடப்பட்டிருந்தது. அவர் ஒன்று விட்டு ஒருநாள் வேலைக்கு வருவார் என்று போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது....எனது நல்லகாலம் நான் போனபோது onduty யில் இருந்தார்....ஆனால் பெரும்பாலும் அவரை தேத்தண்ணி கடைகளில்தான் காணமுடியும் என்றார்கள்.....வேலை நேரத்திலும் அடிக்கடி வெளியேபோய் நினைத்த நேரத்திற்கு வருவாராம்.... நான் போனது ஒருமழைநாளில்......விதானையார் சிவனே என்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்....நானும் பக்கத்துவீட்டு பொண்ணும் போனபோது.....மேலும் கீழும் பார்த்தபடி என்னவேணும் என்றுகேட்டார்....நான் விடயத்தை சொன்னேன்....இருங்கோ என்றார்....உட்கார்ந்தால் மேலே கூரை ஒழுகி தண்ணி விழுந்து தெறித்துக்கொண்டிருந்தது, கீழே சிவப்பு அட்டைகள் இலங்கை C.T.B. பஸ் போல் குறுகும் மறுக்குமாக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன......நான் காலை சிறிது உயர்திப்பிடித்தபடி அவர் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தேன்.....அவர் கேள்வி கேட்கும்போது முகத்தை ஒரு விசனமாகவே வைத்திருந்தார் (அவர் இயல்பு அப்படிதான் என்பதை ஓரிரு நிமிடங்களில் அறிந்துகொண்டேன்).....சில கேள்விகள் எரிச்சலை தந்தது......நீங்கள் வேதக்காரியா, ஏன் போட்டுவைக்கவில்லை, கலியாணம் பண்ணிவிட்டீர்களா என.....அதற்கு நான் “வேதக்காரி இல்லை, போட்டு வைத்தால் வியர்வையில் கரைந்துவிடும், எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றேன்....உடனே கூடவந்த பெண்ணிடம் நீங்கள் யார் எங்கு இருக்கிறீர்கள், திருமணம் முடித்துவிட்டீர்களா எனக்கேட்டார்.... எல்லாவற்றிற்கும் பதில் அளித்தபின்...அப்ப மாமரம் என்ன சைஸ் இருக்கும் எனக்கேட்டார்.... வாய்க்குள் வந்த பதிலை விட்டுவிட்டு... அவர் வீட்டுக்கு முன் இருந்த மாமரத்தை காட்டி..அந்த மாமர சைஸ் இருக்கும் என்றேன்...பின் உயரம் ஒரு பனையடி இருக்குமா என்றார்....பனைமரம் அறுபதடி வளரும் மாமரம் அந்தளவு வளராதே என்றுவிட்டு....மீண்டும் அந்த மாமரத்தை காட்டி அதைவிட ஒரு பத்து இருபது அடி கூட இருக்கும் என்றேன். எல்லாவற்றையும் எழுதிவிட்டு.. மரத்தை பார்த்துவிட்டு தான் அனுமதி தரமுடியும் என்றார்....இதற்கிடையில் ஒரு வயதுபோன அம்மா ஒருவர் வந்து தனது காணிப்பிரச்சனையை முறையிட்டுக்கொண்டிருந்தார்.... நான் அந்த அம்மாவின் காலையே பார்த்துக்கொண்டிருந்தேன் காரணம் அட்டை காலில் ஏறிவிடுமோ என்ற பயம்....அந்த பெண்மணி விதானையாரை சராமாரியாக திட்டதொடங்கியிருந்தார்.......வந்த பெண்மணியின் காணிப்பாதையை அடுத்தவீடுகாறருக்கு விதானையார் அனுமதி அளித்துவிட்டாரம்.....அவர் விதானையாரை பேசும்போது “விதானயார் நீங்கள் வேலைக்கு புதுசு உங்களுக்கு சட்டம் கிட்டம் ஒண்டும் சரியா தெரியாது சும்மா தேவையில்லா வேலைகள் பாக்கதையுங்கோ, என்ன செய்யிறதெண்டாலும் முதல்ல உறுதிய பார்த்து அதன்படி செய்யுங்கோ” என்று. அத்துடன் விதானையார் சரண்டர்....”சரியம்மா கத்தாதையுங்கோ” நான் பாக்கிறன் நீங்கள் போங்கோ என்று அவரை அனுப்பிவிட்டு என்னுடைய காணிக்கு கிளம்பி வந்தார், வந்தவர் மாமரத்தை மேலும் கீழும் பார்த்துவிட்டு....அனுமதி தாறன் ஆனால் நீங்கள் காணி விக்கககூடாது, அப்படி விக்கிறதென்றால் sign பண்ணமாட்டன் என்று ஒரு குண்டை தூக்கிபோட்டார்....நான் ஒருகணம் சமாளித்துவிட்டு...ஆ......நான் கடைசிவரையும் விக்க மாட்டேன், அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லை என்று ஒரு பொய்யை சொல்லி...மனதுக்குள் signஐ போடுமான் என்று வேண்டிக்கொண்டேன். ஒருவழியாக மோட்டார் seatன் மேல்வைத்து sign பண்ணி தந்துவிட்டு..மேலும் நல்லூரில் இருக்கும் பிரதேச சபையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார், அட கடவுளே என்றுவிட்டு உடனேயே ஒரு ஆட்டோ பிடித்து பிரதேச சபைக்குசென்று கொடுத்தால்...அங்கு D.O. sign பண்ணவேண்டுமாம்..... அதற்குமுன் D.O. ஒருவரை அனுப்பி மரத்தை வெட்டுவது சரியா இல்லையா என செக்பண்ணி...எல்லாம் ஓகே என்று சொன்னால் sign பண்ணுவார்....அதற்கு ஒரு இரண்டு, மூன்று நாட்களாகும் என்றார்கள்...நானும் பெருமூச்சுவிட்டபடி வெளியில் வந்தேன்..........ஒவ்வொருநாளும் நானும் விடாமல் போன் அடிப்பேன் அவர்களும் விதவிதமான கரணங்கள் கூறுவார்கள் ஒருநாளைக்கு D.O. “மீட்டிங், off, விஜயதசமி என.... ஆனால் சரியாக எட்டு நாட்களின் பின்தான் மரம்வெட்ட அனுமதி தந்தார்கள் அதுவும் தெரிந்தவர் மூலம் வேண்டிகொண்டதானால். அதன்பின் மரத்தை வெட்டி வெளியில் எடுத்து செல்வதற்கு roadpermit எடுக்கவேண்டும் என்றார்கள் உடனேயே 3rd cross street இல் (சரியாக ஞாபகம் இல்லை ) இருக்கும் இன்னுமொரு பிரதேச சபைக்கு சென்று அனுமதி கேட்டபோது......மாமரத்துக்கு அனுமதி தேவையில்லை என்றுகூறி ஒரு வர்த்தமானியை தூக்கி கையில் தந்துவிட்டார்கள்... அதுமுழுக்க சிங்களத்தில் பிரிண்ட் பண்ணபட்டு இருந்தது. அதில்அனுமதி எடுக்கதேவையில்லாத மரங்களுள் மாமரமும் அடக்கம்(சிங்களம் தட்டு தடுமாறி கொஞ்சம் வாசிப்பேன்). ......இவ்வளவு நாளும் அநியாயமாக போச்சே என்ற கவலை......விதானை, பிரதேச சபை ஒருவருக்குமே இதுபற்றி தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. .........எல்லாம் முடிந்து மாமரம் தறிக்கவெளிக்கிட்டால் ஒரே அடைமழை....அப்படி இருந்தும்...மழை விட்டு இடை வெளி வரும்போது தறிக்கத்தொடங்கிவிட்டார்கள்....எனக்கோ மனது கனத்து பாரமாக இருந்தது......நாங்கள் ஏறி விளையாடிய, ஊஞ்சல்கட்டி ஆடியமரம், நன்றாகக் காய்த்த மரம், ருசியான அம்பலவி மாம்பழம், தம்பி ஏறி மாங்காய் பிடுங்கி எறிய நான் சாக்கைவைத்து கேட்ச் பிடிப்பேன்...பிற்காலத்தில் அக்காவின் மகன் மாமரபுட்டியில் ஏறி நின்று பக்கத்து அறையில் தூங்கும் என்னை “ஆண்டே....ஆண்டே” என்று கூப்பிட்டு நித்ரையை குழப்புவார்.... இன்றும் கூட ஒரு சாக்கு முட்ட காய்த்து நின்றது.....ஆனால் நோய்வந்த முதியவர் போல்......நீண்ட கால பராமரிப்பில்லாமல் ஏராளமான குருவிச்சை பிடித்து நோய்வாய்பட்டது போல் தோற்றமளித்தது....இந்த மரத்தை வளர்க்க அம்மம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பார், இதுவளர எவ்வளவு காலம் எடுத்திருக்கும்..........”BACK TO THE FUTURE” படம் போல் காலச்சக்கரதில் ஏறி முன்னைய வாழ்கை வாழ்ந்து விட்டு வந்தால் எப்படி இருக்கும்.... எல்லா நினைவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துபோயின...மனம் கனத்து வெறுமையாகி போக கடைசியில் அடி மாமரத்தை வாள்கொண்டு அறுக்க....பார்க்க...சகிக்காமல் பின்புறம் போய்விட்டேன். - ஊருக்கு போன மனைவியின் பதிவு .
 10. 1 point
  [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ] தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும், மாவீரர் வாரம் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 27ம் திகதி வரை இது அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv2C.html
 11. 1 point
  இயந்திர லோகத்து சுந்தரி ======================= பெய்ஜிங்கில் நடந்த உலக ரோபோ மாநாட்டில் பலரையும் கவர்ந்தது, அச்சு அசலாக ஒரு பெண்ணைப் போலவே படைக்கப்பட்டிருந்த இந்த ரோபோதான். ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணி நாடாக திகழ வேண்டும் என்பது சீனாவின் திட்டம்.
 12. 1 point
  அவர் சொல்வது அடுத்தவனிடம் ஆட்டை போட்ட காசு பற்றி , ஏன் உங்களுக்கு உடனே கடிக்குது . "முரண்பாடுகள் இருப்பினும், ஒன்றாக உரையாடக்கூடிய, கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு ஜனநாயக மரபை ஒரு புதிய கலாச்சாரத்தை எம் சமூகத்தில் தோற்றவிக்க வேண்டுமென்ற நோக்குடனேயே இந்த தோழமை தினத்தை நினைவுகூறுவதாகவும் அதற்கு இந் நிகழ்வு வழிசமைக்க வேண்டுமெனவும்" அவரின் உரை இருந்தது. வரவேற்க்கப்படவேண்டிய, இன்றைய காலத்தின் முக்கிய தேவை இது. இன்று ,இலங்கையில் யுத்தத்தினால் பாதிப்புற்ற வாழ்க்கை இழந்த நூற்றுக்கணக்கான போராளிகளின் குடும்பங்களும், பொது மக்களும் துன்பமும், வறுமையும் கொண்டு வாழ்கின்றார்கள்.இவர்களின் குழந்தைகள் கல்வி வசதி அற்றவர்களாக எதிர்கால வாழ்வை பறிகொடுத்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். புகலிட விடுதலைப் புலிகளிடம் கோடிக்கணக்கான சொத்துக்களும் பணமும் உண்டு.ஆனால் இவர்கள் அப்போராளிகளின் குடும்பங்களையோ, மக்களையோ கவனிக்கப்போவதில்லை. எனவே, நாம் இன்னுமொரு புதிய பண்பாட்டை, கலாச்சாரத்தை இலங்கையில் தோற்றுவிக்கவேண்டும். -வரதராஜ பெருமாள்
 13. 1 point
  மாவீரர் நாளில் மணக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!!
 14. 1 point
  துருக்கி நினைத்தால் ஐ எஸ் தீவிரவாதத்தை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும். துருக்கி நேட்டோவின் வாலாக இருந்து ஐ எஸ்ஸை வளர்த்து வருகிறது. ரஷ்சியாவின் தற்போதைய சிரிய அரசு ஆதரவு என்பது துருக்கிக்கும் நேட்டோவுக்கும் அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அந்தக் காட்சியில்.. ரஷ்சியாவின் பழைய வகை எஸ் யு 24 வெற்றிகரமாகச் சுட்டாச்சு. ஒரு விமானியை கொன்று விட்டார்கள்.. துருக்கி ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள். இன்னொருவரை காணவில்லை. அடுத்த காட்சி... துருக்கிக்கு கொஞ்சம்.. கஸ்டமாக அமையலாம். ரஷ்சியாக்காரன் சும்மா இருப்பானோ. அவனை சும்மா இருக்க நேட்டோ தான் விடுமோ..?! ஆக மொத்தத்தில்.. ஐ எஸ்ஸுக்கு கொண்டாட்டம் தான். துருக்கி தான் ஐ எஸ்ஸின் தந்தை. அமெரிக்கா ஐ எஸ்ஸின் வளர்ப்புத் தாய். தமிழர்களை அழிப்பதில் இவங்கள் எல்லாம் ஒன்றா நின்றவங்கள். அதனால் எவன் அழிஞ்சாலும்.. டோன்ட் கெயர் தான்.
 15. 1 point
  தலை சாய்த்து வணங்குகிறேன் வீரர்களே ...... !!!
 16. 1 point
 17. 1 point
  புத்த பிக்குவாகிறதுக்கு சமூகத்திலை இருந்து கழிக்கப்பட்ட காவாலி களிசறைகளைத்தான் விகாரைக்கு கொண்டுபோய் லொக்கு ஹாமதுறுவிடம் விட்டுவிடுகிறது, பிறகு ஹாமதுறு அவர்களை துஸ்பிரயோகம் செய்துவுடுவார். இந்தத் தொல்லை காரணமாக சிறுவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கலாம். பாதிரிமாரும் ஹமதுறுமாருக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் சிறுவயதிலேயே குடும்பத்தில் ஒருவரை தமது குடும்ப கௌரவத்துக்காக பாதிரிக்காகவோ அல்லது கன்னியாஸ்திரிக்காகவோ நேர்ந்துவிடுவார்கள். இதில் தேறுவது வெகு சிலரெ. அப்படித்தேறினாலும் பிறகு சிங்கிச்சா பச்சை கலரு சிங்கிச்சா நீளம் கலரு சிங்கிச்சா ......... அதுபோக வாலிக்கு கொழும்பு செண்ட் லூசியாஸ் கதீறலுக்கு பக்கத்திலை இருக்கிற சிஸ்டர்ஸ் மடத்திலை இருந்த ஒரு ****ர் மேல கிராஸ் இருந்தது. சாமிக்குத்தம் ஆகாது எண்டு விட்டிட்டன்!
 18. 1 point
  யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான். அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த.
 19. 1 point
  குருவிக்கி விசா.. தடை.. எல்லை வகுக்க முடியாததால்.. அது பூமியின் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு சுதந்திரமாகப் பறந்து வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு அந்த தகவு கூட இல்லை. அதிலும் தமிழனுக்கு சிங்கள ஆதிக்கத்துக்குள் அடிமையாத்தான் வாழனுன்னு விதிப்பு. அதில் சில ஜென்மங்களுக்கு பரிபூரண சந்தோசம் வேற.
 20. 1 point
  மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது. “பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன. “தம்பி உங்கட பேரென்ன?” “சித்தார்த்தன்” ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது... இன்னும் வலிமையாய்.... * * * * * * * * * * * * * * * * * * * * * * மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான். இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான். மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. * * * * * * * * * * * * * * * * * * * * * * பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது. படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான். * * * * * * * * * * * * * * * * * * * * * * பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன. * * * * * * * * * * * * * * * * * * * * * * யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான். * * * * * * * * * * * * * * * * * * * * * * “ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல.... இது எத்தனையாவது....” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது. “முதல் மூண்டு... ஜெயசிக்குறுவில நாலு.... மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான். ஓ... இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்... அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்... குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்.... * * * * * * * * * * * * * * * * * * * * * * ஓயாத அலைகள் - 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது. சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்..... அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.... * * * * * * * * * * * * * * * * * * * * * * குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.... “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.” “லெப்.கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்....” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை. சித்தா....அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல். http://www.veeravengaikal.com/index.php/battlefieldheroes/100-lt-colsithathan-kandasamy-kalainesan-kokkaddicholai-batticaloa
 21. 1 point
  ஈஸியான... காளான் சூப் அனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம். ஆனால் வீட்டிலேயே அனைத்து வகையான சூப்புகளையும் எளிதில் செய்யலாம். மேலும் சூப் டயட் மேற்கொள்வோருக்கு நல்ல ஒரு ஸ்நாக்ஸ். அந்த வகையில் இப்போது காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் புதினா மற்றும் மல்லி - சிறிது (நறுக்கியது) சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - தேவையான அளவு மிளகு தூள் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும். பின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் சூப் ரெடி!!! இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும். Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/easy-mushroom-soup-recipe-003385.html
 22. 1 point
  காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை கொன்றுவிட்டு விடியலை பொறுவித்த சூரியன்போல் எல்லோர்க்கும் பொதுவாய். 23-11-2015
 23. 1 point
  உலக மசாலா: நிஜ பார்பி பெண்! 28 வயது டச்யானா டஸோவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவருக்கு லிவிங் பார்பி, ரியல் டால் போன்ற செல்லப் பெயர்களும் உண்டு. ஒரு பார்பி பொம்மை உயிரோடு வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறார் டச்யானா. தலைமுடி, முக ஒப்பனை, ஆடைகள் என அனைத்தையும் பார்பியைப் போன்றே மாற்றிக்கொண்டார். அவரது அறை, படுக்கை, கார் அனைத்தும் இளம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கின்றன. ‘‘12 வயதில் ஒரு பார்பி பொம்மை எனக்குக் கிடைத்தது. அன்று முதல் பார்பியின் மேல் அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்துவிட்டது. வளர, வளர என்னை பார்பியாகவே நினைத்துக்கொண்டேன். இன்று எல்லோரும் என்னை நிஜ பார்பி என்று அழைக்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டன’’ என்கிறார் டச்யானா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், குழந்தைகள் பார்ட்டிகள் என்று எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார். உடலை வருத்தி ஒரு பார்பியாக இருப்பதை விட, ஒரு சாதாரண டச்யானாவாக இருப்பதில் என்ன கஷ்டமோ? ஆட்ரி ஹெப்பர்ன் உலகப் புகழ்பெற்ற நடிகையாகவும் மாடலாக வும் திகழ்ந்தவர். ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல விருது களைப் பெற்றவர். பிற்காலத்தில் யுனிசெஃப் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு, பணியாற்றி வந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அளித்து வந்தார். பலவிதங்களிலும் வித்தியாச மானவராக இருந்த ஆட்ரி ஹெப்பர்னைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் அவரது மகன் லுகா டோட்டி. ‘‘என் அம்மா மிகப் பெரிய நடிகை என்றோ, புகழ்பெற்ற மாடல் என்றோ எங்களுக்குத் தெரியாது. ஆடம்பர வாழ்க்கை நாங்கள் வாழவில்லை. எத்தனையோ பிரபலங்கள் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பிரபலங்கள் என்று தெரியாது. அம்மாவின் நண்பர்கள் என்றுதான் நினைத்திருக்கிறோம். மிக எளிமையான அம்மாவாக மட்டுமே அவர் எங்களிடம் நடந்துகொண்டார். விதவிதமாகச் சமைத்துப் போடுவார். அம்மா என்றாலே அன்பு, உணவு, நண்பர்கள் மூன்று மட்டுமே எங்கள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளியை வைத்திருந்தார். யுனிசெஃப் வேலைகள், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுதல் என்று எப்பொழுதும் பரபரப்பாகவே இருப்பார். அம்மா இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது எங்களுக்குத் தெரிந்தது’’ என்கிறார் லுகா. உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் மிக அழகான பெண்மணி! கனடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ் எபன் ஸ்டோல்ஸ். 5 வயது அரியாவும் 2 வயது எல்லியாவும் இவர்களது மகள்கள். கடலில்தான் இந்தச் சிறிய குடும்பம் வசிக்கிறது. நீச்சல், அலை விளை யாட்டு, படகு விளையாட்டு, நீர் விளையாட்டுகள் என்று எப்பொழுதும் சாகசமான விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடலில் வசிக்கும் டால்பின்கள்தான் அரியா, எல்லியாவின் நண்பர்கள். ஜெனிவிவ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த வேலை அலுப்பூட்டியது. உடனே ராஜினாமா செய்தார். ஸ்டோல்ஸைத் திருமணம் செய்துகொண்டு, சேமிப்பை வைத்து ஒரு படகு வாங்கினார். அதில் ஒரு குடும்பம் வசிப்பதற்கான எல்லா வசதிகளும் இருந்தன. நிலத்தை விட்டு, நீருக்குள் குடிபுகுந்தனர். இரு குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டுமே இருவரும் கனடா திரும்பினார்கள். கடலில் வசித்தாலும் குழந்தைகள் படிக்கிறார்கள். ஸ்டோல்ஸ் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவத்தில், மகள்களுக்கு ஆசிரியராகி விட்டார். ‘‘வெளியில் இருந்து பார்க்க அலுப்பூட்டும் நீர்ப்பரப்பாகத் தெரிந்தாலும் கடல் ஏராளமான பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக் கிறது. ஒவ்வொன்றையும் தேடிப் பார்ப்பதும், அறிந்துகொள்வதும், புத்தகமாக எழுதுவதும் சுவாரசியமாக இருக்கிறது’’ என்கிறார் ஸ்டோல்ஸ். கப்பல்கள், படகுகளில் வரும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை செய்துகொடுத்து, சம்பாதிக்கவும் செய்கிறார் ஜெனிவிவ். ஒவ்வொரு நொடியும் இயற்கையுடன் போராடும் சாகசக் குடும்பம்… http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article7433411.ece?ref=relatedNews
 24. 1 point
  புகையிர கடவைகளில் மக்கள் கவனித்து கவனமாக கடக்கவேண்டும். எடுத்தற்கெல்லாம் அரசை குறைசொல்வது/கோரிக்கை வைப்பது எல்லாம் சோம்பேறித்தனம். 30 வருடங்களுக்கு முன்னர் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு கடவைகள் இல்லவேயில்லை. கோச்சிவரும் கவனம் என்பதை கவனத்திலெடுக்கவேண்டும்.
 25. 1 point
  மெரினாவில் ஆர்ப்பரித்துக்கொண்டு கடலில் கடக்கும் மழை நீர்!
 26. 1 point
  சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் இன்று வரைக்கும் ஈழத்தமிழ்மக்களுக்காக இதுவரை சாதித்தது / நிறைவேற்றியது என்னவென்று சொல்லுங்கள்?
 27. 1 point
  நீண்ட கால பதவி வெறி பிடித்து அலையிது இந்த வெறி படுகுழியில் வெகுவிரைவில் இவரை விழுத்தும்.