Leaderboard

 1. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   7

  • Content Count

   37,424


 2. Jude

  Jude

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   1,207


 3. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   3

  • Content Count

   11,525


 4. Athavan CH

  Athavan CH

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   11,297Popular Content

Showing content with the highest reputation on 05/31/2015 in all areas

 1. 7 points
  மழைக்கால இரவு. - தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் - அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது. அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது. பெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது. அன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது. சங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது. ஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது. போர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன. சிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது.. ஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது. பலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். தன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது. “இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்” எனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம். விறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம். எம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது “இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா? எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..” “அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்” எனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன். தலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது. ஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள். அந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும். பின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன. தாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம். அந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது. அப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். எனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது. அன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன். எமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது. அன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்ன மும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும். அன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. ஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன். அடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது. திடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். எனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது. வானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது. முதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள். “இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். சங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன. எனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது, சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம். அன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது . அவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசையவும் முடியாமலிருந்தது. “உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். (1993-11-11) பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டது) http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2715:2015-05-21-07-08-32&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20
 2. 3 points
  தேவையான உணவுப் பொருட்கள் 1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள் 2. தேங்காய் பூ 3. மிளகுத் தூள் 4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள் 5. மஞ்சள் தூள் 6. மிளகுத் தூள் 7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்) செய்வது? 1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது 2. அந்த செதில்களை நன்கு கழுவவும் 3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும் 4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும் 5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளை தடவவும் 6. இனி இதை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணை விட்டு வறுத்து எடுக்கவும் 7. நன்கு வறுத்தபின் செதில்கள் பொன்னிரம் ஆகும். அவற்றை ஒன்றில் நீங்கள் 7.1. புட்டுடன் சாப்பிடலாம் 7.2 இல்லை வைத்து இருக்கும் நகை நட்டுகளுடன் இதனையும் ஒரு இணைத்து பொன்னின் பெறுமதியை கூட்டலாம் நன்றி பி.கு: இதனை செய்து பார்ப்பதோ, அல்லது செய்து சாப்பிட்ட பின் தொண்டையில் சிக்கி பிராணனை போக்குவதோ உங்கள் விருப்பம். இத்தகைய பின் விளைவுகளுக்கு நிழலியோ அல்லது யாழ் இணையமோ பொறுப்பேற்காது.
 3. 2 points
  இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன், அருகே சென்று, " என்ன செய்ய வேண்டும் அண்ணை..? " என்றான். “இலக்குமணா..! உனக்கு மிக முக்கிய வேலை இருக்கிறது.. என்னதான் தீங்கு செய்திருந்தாலும், இராவணன் ஒரு மகாமனிதன்.. வீரமிக்கவன்.. அறிவுஜீவி.. அது மட்டுமல்ல, மிகச்சிறந்த சிவபக்தன்.. சக்ரவர்த்தி.. சங்கீத ஞானமுள்ள பாடகன்.. வீணை வித்வான்.. அனைத்து வேதங்களையும் கரைத்துக் குடித்த அறிஞன்.. ஆகையால் இத்தனை சிறப்புக்களைக் கொண்ட ஒருவன், இவ்வுலகைவிட்டு மறையப்போவதால் அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அவனிடம் நல்லாசியுடன் அவன் கற்ற அனுபவ கூற்றுக்களை அறிவுரைகளாக கேட்டு வா..!" என கேட்டுக்கொண்டான்.. எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன், தமையன் சொற்படியே இராவணன் குற்றுயிராக வீழ்ந்துகிடக்கும் இடத்திற்கு சென்றான். இராவணின் தலையருகே சென்று, அவனை நோக்கி குனிந்தான். காலடிச்சத்தம் தன்னருகே வருவதைக் கேட்டுணர்ந்த இராவணன், தலையருகே இலக்குமணன் நிற்பதைக் கண்டவுடன் மெளனமாகவே இருந்தான். நீண்டநேரக் காத்திருப்புக்கு பின்னரும் இராவணன் ஒன்றுமே பேசாததால், இலக்குமணன் வெறுப்புற்று திரும்பிவந்து அண்ணன் இராமனிடம் முறைப்பாடு செய்தான்.. புன்னகையுடன் கேட்டுக்கொண்ட இராமன், " இலக்குமணா..! தவறு உன்னிடம் உள்ளது.. ஒருவரிடம் எதையும் கற்றுக்கொள்ள அவரிடம் அணுகினால், அவரின் கால்களுக்கருகே நின்று மரியாதையுடன் கேட்கவேண்டுமே தவிர அகந்தையுடன் தலைமாட்டருகே சென்று நிற்கக்கூடாது.. ஆகவே ஒருவருக்கு மரியாதை செலுத்துவது எப்படியென கற்றுக்கொள்.. நீ மறுபடியும் இராவணிடம் சென்று அவனின் காலடியருகே நின்று மரியாதையுடன் கேள்.. நிச்சயம் இராவணன் சொல்வான்..! " என அறிவுறுத்தினான். இலக்குமணன் மறுபடியும் இராவணனிடம் சென்று அவனின் காலடியருகே பவ்யமாக நின்றான்.. உயிர்விடும் நிலையிலிருந்த இராவணன் இறுதி மூச்சைசுக்களை விட்டவாறே இலக்குமணனை பார்த்து சிநேகமுடன் புன்னகைத்து வரவேற்றான்.. " அருமை இலக்குமணா.. என்னை நாடி வந்திருக்கிறாய்.. உனக்கு நான் என்ன செய்யவேண்டுமென சொல்..! " என கேட்டுக்கொண்டான்.. இலக்குமணன் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே பணிவுடன் நின்றான்.. புத்திசாலியான இராவணன், இலக்குமணனின் வருகையையும், நோக்கத்தையும் சாதுர்யத்தால் உணர்ந்துகொண்டு இலக்குமணனை அருகே வந்து காதை கொடுக்குமாறு மெல்லிய சைகையில் அழைத்தான்.. இலக்குமணன் பணிவுடன் அணையப்போகும் விளக்காக பிரகாசிக்கும் இராவணனின் முகத்தருகே அவனின் தீர்க்க அறிவுரைகளை கேட்க குனிந்தான்.. “அருமை இலக்குமணா..! நான் உனக்கு மூன்றே முன்று அனுபவ அறிவுரைகளை, மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை என் அறிவுரைகளாக சொல்கிறேன் கேள்..!” என காதருகே கிசுகிசுத்தவாறே சொல்லிவிட்டு, கடைசியாக நீண்ட நிம்மதிப் பெருமூச்சை இழுத்துவிட்டு இம்மண்ணைவிட்டு மீளாத் துயிலிலாழ்ந்தான்.. இராவணன் கடைசியாக இலக்குமணனிடம் போதித்த அந்த அறிவுரைகள், மனிதகுலத்திற்கே மிகமிக அத்தியாவசியமான நெறிப்படுத்தும் பொன்மொழிகளாகும்.. அவை யாவை..? இராவண ராச்சிய இந்நாள் பிரஜைகளான யாழ்கள உறவுகளே, உங்கள் மன்னன் அறிவுறுத்திய அந்த பொன்மொழிகளை நீங்கள் அறிந்துகொண்டு பின்பற்றுவது உங்கள் கடமைதானே? அறிய ஆவலாக உள்ளீர்கள் தானே..? ... .... .... .... .... .... யாழ் சக்கரவர்த்தி இராவணனின் அறிவுறுத்தல்கள்..! 1. தயவுசெய்து 'வாட்ஸ்அப்'பிலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாதீர்கள்.. 2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்.. 3. வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள்.. இம்மூன்றையும் இதயசுத்தியாக பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் உய்வீர்கள்.. "இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா தான்..!" - அடியேனின் 'உல்டா 'தமிழாக்கம் தான்! ( அனைவருக்கும் இனிய நாளாகட்டும் ! ) .
 4. 2 points
  கடத்தப்பட்டு திரும்பி வராத பிள்ளைகளின் நினைவிலேயே எந்த நாளும் கவலையோடு இருக்கும் ஒருவரின் செய்தியிலும் கூட கீழ்த்தரமான அரசியல் செய்து நாங்கள் எமது இனப்பற்றினையும், தேசியப் பற்றினையும், மனிதாபிமானப் பண்புகளையும் காட்டுவோம். இவ்வண்ணம் தமிழ்த் தேசிய மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தேசம்.
 5. 1 point
  காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல் மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை நினைவுபடுத்தலாம். வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்கள் மூலம் நம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களுக்குப் பின்னணி இசை போல ஒலித்து, நம் மனதுடன் தங்கிவிட்டவை திரையிசைப் பாடல்கள். அந்தப் பாடல்களுடனான நமது உறவைப் பற்றிப் பேசும் தொடர் இது. இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கூறுகளைத் தம்முள் புதைத்து வைத்திருப்பவை. சாலையின் இரு புறமும் விரியும் வெவ்வேறு நிலப்பரப்புகள் அவரது பாடல்களின் நிரவல் இசைக்கோவையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை, நீண்ட பயணங்களின்போது ஆத்மார்த்தமாக உணர முடியும். வீடுகளின் நிழல்கள் விழுந்து கிடக்கும் மாலை நேரத் தெருக்கள், சாலையின் பரபரப்புக்கிடையில் ஒதுங்கிக் கிடக்கும் பூங்காக்களைக்கூடத் தனது இசைக் குறிப்புகளால் காட்சிப்படுத்தியவர் இளையராஜா. அவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக, சுமன், சுமலதா, பானுச்சந்தர் நடித்த ‘எனக்காகக் காத்திரு’ (1981) திரைப்படப் பாடல்களின் தொகுப்பைச் சொல்லலாம். பனிமலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவுக்குப் பேர்போன நிவாஸ். சுமனும் பானுச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். மர்மமான கதாபாத்திரமாக வரும் சுமன், காதலிப்பதாகக் கூறிப் பல பெண்களை ஏமாற்றுவார். அவரால் வீழ்த்தப்படும் பட்டியலில் பானுச்சந்தரின் தங்கையும் இருப்பாள். ஆத்திரமடையும் பானுச்சந்தர், சுமனைக் கொல்வதற்குத் தேடியலைவார். இலக்கற்ற திரைக்கதையுடன் அலைபாயும் இந்தப் படம், ஒளிப்பதிவு, திபெத்திய இசைக் கருவிகள் ஒலிக்கும் பாடல்கள், மர்மத்தைப் பிரதியெடுக்கும் பின்னணி இசை மூலம் தொலைதூரப் பனிப் பிரதேசத்தின் கனவைக் காண்பதுபோன்ற வித்தியாசமான உணர்வைத் தரும். படத்தில் நான்கே பாடல்கள். காதலில் உருகும் பெண்களின் படம் என்பதால், டூயட் பாடல்களின் பல்லவியைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள். ‘ஓ நெஞ்சமே’ பாடல் தொடங்குவதற்கு முன்னதாக, ஜானகியின் ஆலாபனையும், வயலின்களின் சேர்ந்திசையும் ஒரு மயக்க நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். பாலத்தின் மீது கடைகள் படர்ந்திருக்கும் அந்தப் பாதையில் காதலனைத் தேடி ஓடுவாள் நாயகி. நினைவில் மங்கலாக உறைந்திருக்கும் படிமம் மாதிரியான காட்சியமைப்பு. ‘பனிமழை விழும், பருவக் குளிர் எழும்’ எனும் அடுத்த பாடல் புத்தக் கோயில்களின் பெரிய மணியின் ஓசையுடன் தொடங்கும். தந்தி மற்றும் குழலிசைக் கருவிகள் காற்றின் மவுனத்தைக் கலைத்தபடி ஒன்றுடன் ஒன்று உரையாடத் தொடங்கும். உறைபனிக் காற்றைக் கிழித்துக்கொண்டு ஷைலஜாவின் குரல் ஒலிக்கும். எந்த மட்டத்திலும் குரல் உடையாமல் உச்ச ஸ்தாயியை எட்டும் குரல் அவருடையது. ‘…கனவுகளின் ஊர்கோலமே…’ என்று ஒவ்வொரு முறை பல்லவி முடியும்போதும் சில்லிடும் காற்று நம்மை வருடும். மெல்லிய அதிர்வுடன் ஒலிக்கும் தாளக்கட்டைத் தழுவியபடி புல்லாங்குழல் கசிந்துகொண்டே இருக்கும். அமைதியில் உறைந்த, பாந்தமான குரலில் பாடியிருப்பார் தீபன் சக்கரவர்த்தி. தான் பாடிய பாடல்களில் மிகவும் வித்தியாசமானவை இந்தப் படத்தின் பாடல்கள்தான் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டிருக்கிறார். உமா ரமணன் பாடும் ‘தாகம் எடுக்கிற நேரம்’, இளையராஜா பாடும் ‘ஊட்டி மலை காட்டிலே’ என்று எல்லாப் பாடல்களும் குளிர்மலையின் பின்னணியில் படமாக்கப்பட்டவை. சுமலதா, நிஷா, மாலினி என்று அழகுப் பெண்கள் நிறைந்த இந்தப் படத்தின் பாடல்களை, உயிர்ப்பான காதலுடன் இசைத்திருப்பார் இளையராஜா. பரவலான ரசிகர்கள் அறிந்திராத பாடல்கள் என்றாலும், இவற்றைக் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும். http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-1-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article7137546.ece
 6. 1 point
  பூக்கள் மரங்கள் செடி கொடிகள் என நான் இரசித்தவற்றை என் கைத்தொலைபேசியில் கிளிக்கியத்தை உங்களுக்குமாக இங்கே
 7. 1 point
  ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் விரும்பியதை எடுத்து உண்டு பசியாறியபின்னரே நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இங்கு எல்லோரும் சாப்பாட்டுராமன்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு மாற்றத்தையே ஏற்பாட்டாளர்கள் செய்துபார்க்க விரும்பினர். பாராட்டும் பெற்றனர். விருந்தோம்பல் நிறைவுற்றதும், பலர்கூடி மங்களவிளக்கு ஏற்றப்பட்டு, தமிழ்மண் மீட்கப் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்து அவர்களது திறமையை ஊருக்கும் காட்டி மகிழ பெற்றோர்கள் விரும்புவது வழமையானது. இங்கு பெற்றோர்களின் கலைத்திறனை பிள்ளைகள் பார்த்து அதிசயித்து வியந்து, கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. என்னுடைய அம்மாவா இப்படி நடனம் ஆடுகிறா? அப்பா இப்படிப்பாடி நான்கேட்டதில்லையே! எனப் பிள்ளைகள் பிரமித்து வியந்து ஆனந்தப்பட்டனர். ஒரு குடும்பம்போல் ஒன்றுகூடிப் பழகி வாழ்ந்தவர்கள் சில முரண்பாடுகளால் விலகிப் பிரிந்துவிடும்போது.... அனைவருடனும், அன்புடன் பாசத்தோடும் வளர்ந்த பிள்ளைகளும் பிரிந்துபோய் விடுவதுண்டு. பிரிந்து சென்றவர்களை பார்க்கவே முடியாத நிலையும் ஏற்படுவதுண்டு. அப்படிப் பிரிந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்கள் முகங்களையே அடையாளம் காண்பது கடினமாகி விடுவதுண்டு. முரண்பாடுகளால் பிரிந்துவாழும் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கூடியிருந்தனர். கூடியிருந்தாலும் வேறாகவே இருந்தனர். அங்குதான் ஒரு சுவையான நிகழ்வையும் காணக்கூடியதாக இருந்தது. அன்னை ஒருவரை "அன்ரி" என்று ஒரு இளைஞன் அழைத்து ஆரத்தழுவியபோது அவன் யாரென்று புரியாத அந்த அன்னை அவனை வியப்புடன் பார்க்க, நான் இன்னாருடைய மகன் என்பதை அவன் தெரிவிக்க, அன்னைக்கு அந்தக்கால ஞாபகமெல்லாம் நினைவில்வர, தன்னிடம் பாசத்தோடு வளர்ந்த அந்தப்பிள்ளையா இவன்...! என்ற வியப்பும் ஆனந்தமும் மேலிட்டுக் கண்களில் கண்ணீர் பெருக அவனை ஆரத்தழுவி உச்சிமோர்ந்த காட்சி, அந்த நிகழ்ச்சிக்கு மகுடம்சூட்டியது.
 8. 1 point
  இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. முக்கியமாக யாழ் இணைய நிர்வாகிகளுக்கும் நன்றிகள். இந்த திரியில் பல இடங்களில் நான் ஆங்கிலத்திலும் சில அல்ல பல பதிவுகளை இட வேண்டிய நிலையில் இருந்தேன். சில அணி பெயர்களை தமிழில் எழுதுவதில் இருந்த சிக்கல், நேரமின்மையை குறிப்பிடலாம் காரணன்களாக. அப்படி ஆங்கில பதிவுகளை இட்டதுக்காக யாழ் இணையத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் இப்படி ஒரு போட்டியை நடத்தும் சந்தர்பம் வந்தால் இயன்றவரை ஆங்கிலத்தை தவிர்க்க முயற்சிக்கிறேன். மேலும் இந்த போட்டி திரியில் அடிக்கடி வந்து நகைச்சுவையாக கருத்து எழுதிய ராஜன்விஷ்வா, சுவி அண்ணாவுக்கு நன்றிகள் மீண்டும் வேறு யாரையாவது மறந்து இருந்தால் மன்னிக்கவும். இந்த திரியில் பச்சை போட்டு என்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி. அதில் தமிழினி, நந்தன், MEERA இவர்களுக்கு சிறப்பு நன்றி
 9. 1 point
  கிரிக்கட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் ரசிப்பவன் நான். எனக்கு என்னவோ 20/20 ஆட்டங்கள் பிடிப்பதில்லை. ஆனால் அடுத்தவர் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்பதில்லை.
 10. 1 point
  அனேகமாய் பலரும் சென்னையைத்தான் போடுவினம் , நான் ஒரு மாறுதலுக்காக மும்பையைப் போட்டேன். அத்துடன் அதில் நிறைய நடிகர்கள் , நடிகைகள் கலந்து கொள்வார்கள் ,அதனால் திரி ஜாலியாய்ப் போகும் என்றுதான் நினைத்தேன். முதல் ஐஞ்சாறு மட்சில் மும்பை தோற்றபோதும் நான் ஏமாறவில்லை. சும்மா முதலைக் கண்ணீர் விட்டதுதான் ... ஆனால் வடக்கு வாசலில கச்சேரி தொடங்கி கோபுரவாசலில கும்பம் வாங்கும்போதுதான் நானும் ஏமாந்துபோய் அண்ணாந்து பார்த்தேன்...!
 11. 1 point
  வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்! 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்'' ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்'' ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு? மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு! ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி? பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''
 12. 1 point
 13. 1 point
  சிறியேனின் கவனக்குறைவான தவறுக்கு மன்னித்தருள்க..! 'உய்யலாலா' என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது. அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே. நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும், அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் கவிஞர் எடுத்துரைக்கிறார். உய்யல் என்றால் உயர்தல்! நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் 'ஆலா' என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் இராவணனின் ராச்சியத்தில் உய்யல் ஆலா என்கிறார். ஆலா என்றால் ஆங்கிலத்தில் Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம். இராவணனின் ராச்சியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர். -இணையத்தில் சுட்ட விளக்கத்தின் சுருக்கம் (நன்றி)
 14. 1 point
  சிறீலங்கா செல்லும்போது கவனத்தில் கொள்ளவும் https://www.facebook.com/sooriyanfmnews/videos/490918947723190/
 15. 1 point
  .அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு மனைவியும், ”தங்கமீனாய்” ஒரு மகளும், குடியுரிமைக்கு (டாஸ்மாக் அல்ல) காத்திருத்தலுமாய் வாழ்க்கை ஓடுகிறது. கரியர்,வேலை என லௌகீக விஷயங்களில் ஒரு தெளிவு வந்த்திருக்கிறது. நான் 'சுந்தர் பிச்சை' மெட்டிரியல் இல்லை என உணர்கிறேன். ”எங்கப்பா என்னை படிப்புக்கப்புறம் வேலைக்கு போக சொன்னாரு, PhDயா படிக்கவெச்சாரு?” என சப்பைக்கட்டு கட்டுகிறது மனசு, IIT நுழைவுத்தேர்வில் பரம கோட்டு அடித்ததை மறந்துவிட்டு. ஆனால், பொதுவாய் கூடப்படித்தவர்களின் linkedin பக்கங்களை அவதானிக்கையில், ரேசில் பின் தங்கிவிடவில்லை என நிம்மதி. பணம் இன்னும் அந்நியமாய் போய்விடல்லை. தேவைகளும் குறைந்தபாடில்லை. அதுக்கு சுஜாதா போல் 70 வயது ஆகியிருக்கனுமோ என்னவோ? ஆனால் வாத்தியார் சொல்வது போல் priorities மாறியிருக்கிறது. காலையில் களைப்பின்றி எழுந்து நிம்மதியாய் வெளியே போனால் சுகம் என சொன்னதன் அர்த்தம் புரிகிறது. பணத்தைவிட நிம்மதி முக்கியம் என உணர்கிறேன். நேரம்,நோக்கம் ஏதுமின்றி சனிக்கிழமை காலை மனைவி/மகளை கட்டிக்கொண்டு சும்மா படுத்திருக்க பிடித்திருக்கிறது. உடல்நலம் பெரிதாய் பாதகமில்லை. இதுவரையில். ஆனால், 8 மணி ட்ரைனுக்கு 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து ஓடமுடிவதில்லை. மூச்சிரைக்கிறது. மசால்வடை அவ்வளவு எளிதில் ஜீரணமாவதில்லை. இளைத்தபின் போடுவேன் என்ற பேண்ட்டுகள் சிரிக்கின்றன. தலைவாரிய பின் பேசினில் கிடக்கும் முடிகள் பீதியை கிளப்புகின்றன. உடலை கவனிக்கனும் என புத்திக்கு தெரிகிறது. ஆனால் 15 டாலர் பஃபேக்கு போன வயிற்றுக்கோ, பார்ட்டிக்கு போன மனசுக்கோ தெரிவதில்லை. திடீரென வீறுகொண்டு 8 கிலோமீட்டர் நடக்கிறேன். முளைக்கட்டின பயிரை உண்கிறேன். பின்னிரவில் பசித்து குர்குரேவயும் தின்கிறேன். இடும்பைக்கூர் என் வயிறும்,நாக்கும். ரசனை சார்ந்த விஷயங்களிலும் முன்போல் பரவலாக தொடர முடிவதில்லை. புதிதுபுதிதாய் வரும் பாடகர்களை அடப்போங்கடா என விட்டு விடுகிறேன். எம்பி3 தேடி அலைவதில்லை. ஐட்யூனில் ஆர்கனைஸ் செய்வது நேரவிரயமாக தெரிகிறது. கேடிபில்லா கில்லாடி ரங்காக்களை மிகச்சரியாய் பத்து நிமிடங்களில் அணைத்துவிட முடிகிறது. நமக்கென்று ஒரு ஃபோகஸ் இசை, புத்தக விருப்பத்தை எடுத்துக்கொண்டு அதில் உழன்றுவிட விழைகிறேன். ராஜா,கம்பர் என வேலிப்போட்டுக்கொண்ட சொக்கன்களை பொறாமையோடு நோக்குகிறேன். கேட்ஜட்ஸ் இன்னும் மோசம். Tab வகையறாக்களை பாவிக்க பிடிப்பதில்லை. லேப்டாப் ஏதேஷ்டம். 5 வருடங்களில் லேப்டாப்பே இருக்காதாமே என்பது கிலியாக இருக்கிறது. வாட்சாப் புரியமாட்டேங்கிறது. புரிய என்ன இருக்கிறது என்றார் ஒருத்தர். ஹ்ம்ம், இல்லை, இப்பவும் புரியலை. இளைஞர் என்ற நிலை கிட்டத்தட்ட(!) போயாகிவிட்டது. நிறைய பேர் பொதுவாய் சின்னவர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில். ட்வீட்டு, FB ஸ்டேடஸ்களின் தொனியை வைத்தே பொடிப்பசங்களை கணிக்கிறேன் (Thala Ajith is Mass வகையறாக்கள்). துள்ளுபவர்களை கமல் போல் “பொடிப்பசங்களா..யார்கிட்ட” என கடக்க முடிகிறது. இணக்கமான இளையர்களிடம் உரிமையில் ஒருமையில் இயல்பாய் தாவ முடிகிறது. சமவயதினரிடம் “கொண்டக்கடலை ஊறவெச்சு சாப்பிடனுமா, ஊறவெச்ச கொண்டக்கடலைய சாப்பிடனுமா” என டயட் பேச்சுக்கள் அதிகரிக்கிறது. சமூகவிழாக்களில் “பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறது பெரிய பொறுப்பு சார்” க்ரூப்பிலும், முதல்/இரண்டாம் குழந்தை பெற்ற நண்பனை கொஞ்சம் லேசுபாசாய் ரசாபாசமாய் ஓட்டும் க்ரூப்பிலும் இரண்டிலுமாய் பால்மாறி பேசமுடிகிறது. மனதும்,புத்தியும் பக்குவப்படவில்லை. ஆனால் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது. பிரச்சனை நேரங்களில் ”என்ன இப்ப” என சற்று விலகி சாதக,பாதகங்களை அலசமுடிகிறது. மானம், மரியாதைக்கு எங்காவது பங்கம் வந்தால் சுர்ரென்று கோபம் வருகிறது. குறிப்பாக உறவுகளிடம். இன்னமும் விவரம் கேட்பீர்கள்யேயானால் குறிப்பாக மாமியார் வீட்டு உறவுகள் ;-) காமம் ஆசாபாசங்கள் சற்று மட்டுப்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவு தானா இது, அடப்போங்கடா என்ற இடத்துக்கு வந்தாயிற்று. உழைத்துக் களைத்து தூங்கும் மனைவியை தொந்தரவு செய்ய முயலுவதில்லை. யதேச்சையாக செய்வது போல் அவள் தோளை பிடித்துவிடுகிறேன். உடல் தாண்டி, அவளுக்கிருக்கும் பிரச்சனைகள், முன் நரைகள்,உணர்வுகள், ஸ்ட்ரெஸ், மோசமான அதிகாரி, கனவுகள் எல்லாம் சேர்த்ததுதான் மனைவி என புரிகிறது. அதற்காக வாரயிறுதி இரவுகள் இல்லாமலும் இல்லை. தீவிர கடவுள் தொழல்கள், தத்துவ தேடல்கள் ஆரம்பித்திருக்கிறது. எதற்கும் சக்திவிகடனில் குருப்பெயர்ச்சி பலன் கும்பத்துக்கு என்ன போட்டுருக்கான் என பார்த்து விடுகிறேன். எனக்கான ஒரு கொழுகொம்பை தேடி பிடித்துக்கொள்ள வேண்டும் என புரிகிறது. கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது. பொதுவாய் நமக்கு பிடித்தமானவர்களிடம் ஒரு உண்மையான வாஞ்சை,அக்கறை தோன்றுகிறது. நண்பனுக்கு பிரச்சனை என்றால் அடடா என ஒரு பதட்டம் வருகிறது. மெய், மெய்நிகர் இரண்டு உலகிலேயும் அந்த அக்கறை இயல்பாய் வருகிறது. ஒருத்தரை புண்படுத்தி,குழிபறித்து ஓரெழவும் ஆகப்போவதில்லை என புரிகிறது. சாவை பற்றிய பயம் இன்னும் வரவில்லை. ஆனால், பொட்டுன்னு போனால் மனைவி/மகள் என்ன செய்வாள், என் உடலை ஐஸ்பொட்டியில் ஃப்ளைட் ஏத்த ஆள் வருமா என்ற பயம் உண்டு. இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகளை முன்போல் சூச்சூ என விரட்டுவதில்லை . வெள்ளைக்காரன் போல் Will (உயில்) எழுதிவைத்துவிடலாமா என திவீரமாய் யோசிக்கிறேன். எங்கு ரிடையர்மெண்ட் வாழ்க்கை (”ஃப்ளோரிடால ஷாந்தினிகேதன்னு ஒரு தேசி கம்யுனிட்டி இருக்காமே”, “என் கட்டை புதுக்கோட்டை கீழரெண்டாம் வீதில தான் வேகும்”) என்பதான சம்பாஷனைகள் அவ்வபோது நடக்கின்றன. ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம். நான் இரண்டுமின்றி தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன். மெதுவாய் குறையும் அப்புள்ளியில் உண்மையாய் வாழ்ந்துவிட பார்க்கிறேன். http://www.rasanai.net/2013/05/blog-post.html