Leaderboard

 1. கவிப்புயல் இனியவன்

  கவிப்புயல் இனியவன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content count

   1,850


 2. Paanch

  Paanch

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content count

   3,953


 3. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content count

   28,205


 4. vaasi

  vaasi

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content count

   388Popular Content

Showing most liked content on 05/29/2015 in all areas

 1. 8 points
  தாயின் கணச்சூடு ----------------------------- பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி என் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......! என் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் . ஒரு நாள் அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில் போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...? அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார் அம்மா .....!!! சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என் மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..? இருந்த சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...? என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் . இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம் சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும் சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் . அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை . ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா . சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது . யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா . வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது . அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன . நான் மெல்ல மேலும் அழுத்தினேன் . யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில் சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை . எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான் அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன் என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு . ஒரு குழந்தை பிறந்தபோதும் தாய் தூக்கும் போதும் ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் . அம்மாவின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!! ------------ திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை மூன்றாம் இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சேனை உலா தளம் நடார்த்திய போட்டியில் 3ம் இடத்தை பெற்ற சிறுகதை
 2. 3 points
  ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் விரும்பியதை எடுத்து உண்டு பசியாறியபின்னரே நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இங்கு எல்லோரும் சாப்பாட்டுராமன்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு மாற்றத்தையே ஏற்பாட்டாளர்கள் செய்துபார்க்க விரும்பினர். பாராட்டும் பெற்றனர். விருந்தோம்பல் நிறைவுற்றதும், பலர்கூடி மங்களவிளக்கு ஏற்றப்பட்டு, தமிழ்மண் மீட்கப் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவித்து அவர்களது திறமையை ஊருக்கும் காட்டி மகிழ பெற்றோர்கள் விரும்புவது வழமையானது. இங்கு பெற்றோர்களின் கலைத்திறனை பிள்ளைகள் பார்த்து அதிசயித்து வியந்து, கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. என்னுடைய அம்மாவா இப்படி நடனம் ஆடுகிறா? அப்பா இப்படிப்பாடி நான்கேட்டதில்லையே! எனப் பிள்ளைகள் பிரமித்து வியந்து ஆனந்தப்பட்டனர். ஒரு குடும்பம்போல் ஒன்றுகூடிப் பழகி வாழ்ந்தவர்கள் சில முரண்பாடுகளால் விலகிப் பிரிந்துவிடும்போது.... அனைவருடனும், அன்புடன் பாசத்தோடும் வளர்ந்த பிள்ளைகளும் பிரிந்துபோய் விடுவதுண்டு. பிரிந்து சென்றவர்களை பார்க்கவே முடியாத நிலையும் ஏற்படுவதுண்டு. அப்படிப் பிரிந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்கள் முகங்களையே அடையாளம் காண்பது கடினமாகி விடுவதுண்டு. முரண்பாடுகளால் பிரிந்துவாழும் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கூடியிருந்தனர். கூடியிருந்தாலும் வேறாகவே இருந்தனர். அங்குதான் ஒரு சுவையான நிகழ்வையும் காணக்கூடியதாக இருந்தது. அன்னை ஒருவரை "அன்ரி" என்று ஒரு இளைஞன் அழைத்து ஆரத்தழுவியபோது அவன் யாரென்று புரியாத அந்த அன்னை அவனை வியப்புடன் பார்க்க, நான் இன்னாருடைய மகன் என்பதை அவன் தெரிவிக்க, அன்னைக்கு அந்தக்கால ஞாபகமெல்லாம் நினைவில்வர, தன்னிடம் பாசத்தோடு வளர்ந்த அந்தப்பிள்ளையா இவன்...! என்ற வியப்பும் ஆனந்தமும் மேலிட்டுக் கண்களில் கண்ணீர் பெருக அவனை ஆரத்தழுவி உச்சிமோர்ந்த காட்சி, அந்த நிகழ்ச்சிக்கு மகுடம்சூட்டியது.
 3. 2 points
 4. 2 points
  இத்தாலிக்கு அருகில் உள்ள டால்பின் வடிவத் தீவு.
 5. 1 point
 6. 1 point
 7. 1 point
  என்ன கொடுமை உயிரே .... உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு பிரிந்து விட்டோம் என்கிறாயே ....!!! கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....!!!
 8. 1 point
  பகிர்விற்கு நன்றி.
 9. 1 point