Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   211

  • Content count

   41,943


 2. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   184

  • Content count

   11,598


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   163

  • Content count

   35,101


 4. புங்கையூரன்

  புங்கையூரன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   124

  • Content count

   11,583Popular Content

Showing most liked content since 02/28/2017 in all areas

 1. 27 likes
  கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண்டே போவார்கள். எமது ஒழுங்கைக்குள் ஒலி பெருக்கியில் பாட்டு கேட்டால் ஒன்றில் ஐஸ்பழ வானாக இருக்கும் அல்லது இப்படி ஏதாவது திருவிழா போன்ற கொண்டாட்டம் ஏதாவதாக இருக்கும்.ஆனால் என்ன சத்தம் கேட்டாலும் ஒழங்கையில் உள்ள பெடி பெட்டைகள் எல்லாம் பறந்து வந்து வாசலில் நிற்பார்கள்.பாட்டு சத்தம் எங்கோ கேட்டிருக்கும் ஆனாலும் வாகனம் வந்து சேர இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.சிலவேளை காவல் நின்றால் ஐஸ்பழ வான் தான் வரும்.அவனும் ஓரிரு நிமிடம் நிற்பாட்டி எட்டி பார்த்து கொண்டு நின்றுவிட்டு போவான்.நாங்களும் ஆளை ஆள் பாரத்து கொண்டு நின்றுவிட்டு போவோம்.யாராவது ஐஸ்பழ வான் வந்திருக்கு காசு தாங்கோ என்று கேட்டால் அடியில் அழுகைச் சத்தம் தான் கேட்கும்.பின்னர் சந்திக்கும் போது எப்படி ஐஸ்பழம் என்று கிண்டல் பண்ணுவார்கள். இதுவே காரில் ஒலிபெருக்கியுடன் வந்தால் நிச்சயம் ஏதோ ஒரு கூத்தைப் பற்றியதாக தான் இருக்கும்.இப்போ எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.கார் கிட்ட வந்ததும் காருக்கு பின்னால் அண்ணே நோட்டீஸ் அண்ணே என்று கத்திக் கொண்டு எறத்தள ஒரு மைலுக்கு காருக்கு பின்னால் எல்லோரும் ஓட்டம் தான்.அதில் ஒரு ஆள் நின்றால் மற்றவர்களும் படிப்படியாக நின்றுவிடுவார்கள்.கடைசியில் யார் யார் எத்தனை எத்தனை நோட்டீஸ் என்று எண்ணிப் பார்த்து கூடுதல் நோட்டீஸ் எடுத்தவர் மிகவும் சந்தோசமாக ஆகூ என்று கத்திக் குளறுவார். இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் எமுது ஊர் திருவிழா என்றால் திருவிழா செய்கிறவர்கள் ஊர்க்காரராக இருக்கும்.ஒரு மாதம் முதலிருந்தே அண்ணை நோட்டீஸ்போட நானும் வாறம் விட்டுட்டுப் போடாதைங்கோ என்று ஒரு மாதிரி காரில் ஏறி நசி பட்டுக் கொண்டிருக்கிறது.இப்போ நம்மைப் போல ஓடி வாறவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் போது சந்தோசம் என்றால் எழுத்தில் வடிக்க முடியாது.அன்று அறிவிப்பு முடிந்து வீடு போகும் போது தான் ஏனடா இந்தக் காரில் ஏறிப் போனேன் என்று பதுங்கி பதுங்கி போவேன்.நினைத்த மாதிரி எனக்காக ஒரு தடி காத்திருக்கும். இருந்தாலும் அந்தக் காரில் இருந்த போது அடைந்த சந்தோசத்துடன் பார்க்கும் போது இன்னும் எத்தனை தடவை வேணுமென்றாலும் அடிங்கப்பா என்று சொல்லத் தோன்றும்
 2. 25 likes
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 3. 24 likes
  டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன் எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது. சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள். இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள். காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது. கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு. கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை. ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........ சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு. எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது. அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள். இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன். ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள். இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.
 4. 23 likes
  மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சிறு தொகை கொடுத்தாலும் "சந்தோஷமாக " ஒரு மதுப்போத்தலும் கொடுத்துவிடுவார்கள் . கடையின் அத்தனை கணக்கு வழக்குகளும் வரிக் கட்டுபாடடாளரின் கண்ணுக்கு தடுப்படாமல் சுழியோடி கணக்கை கச்சிதமாய் வரவு செலவு .. காட்டி விடுவான் . இதனால் அந்த கடைத் த்தொகுதியில் மிகவும் பிரபலமானான் .. வேலை . களைப்பு என்று ஆரம்பித்த மதுப் பழக்கம் ..போதை மயக்கத்தில் மறு நாள் வேலைக்கு போகாமல் இருப்பது என்ற நிலைக்கு ஆளாக்கியது ..நாட்கள் கிழமைகளாக வேலைக்கு போக முடியாது இருந்தான் ... .காலப்போக்கில் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். முதல் மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த அடுத்த வருடங்களில் பருவ வயதை அடைந்தனர் .மிகவும் கட்டுப்பாடான குடும்ப கஷ்டம் உணர்ந்த பெண் மக வுகளாய் . அவர்கள் அழகிலும் ஆண்டவன் குறை வைக்காத அளவுக்கு கண்ணுக்கு இனிய இளம் குமாரத்தி கள் ஆகி னார் வீட்டுக் கஷ்டம் உணர்ந்து ..பகுதி நேரமாய் ...பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தமது சிறு தேவைகளுக்கு பணம் சேர்த்துக் கொள்வார்கள் ...தங்கள் ஒரே தம்பி யையும் கவனமாய் பார்ப்பார்கள் . கஷ்டங்கள் மத்தியிலும் கலாவதி ..சிறப்பாக வளர்த்தாள் . ஒரு முறை கடைப் ப குதிக்கு சென்றவன் ...தெருவில் வீழ்ந்து கிடப் ப தாக செய்தி வரவே காலாவதி அங்கு நோக்கி போகையில் தயராக இருந் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு ...... வைத்திய நிலையம் சென்றார்கள் . அங்கு மூன்று நாட்களின் பின் வைத்திய அறிக்கையில் மிகவும்பலவீனமாக் இருப்பதாகவும் ஈரல் மிக்வும்பதிப்புள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தால் ..இனி வருங்காலத்தில் மதுவகை பாவிக்க கூடாதெனவும் கண்டிப்பான கடடளையோடு வீடு நோக்கி அழைத்து வரப்ப படடான் ஒழுங்காக இருந்தவன் . சில வாரங்கள் கிறிஸ்ம்ஸ பண்டிகையின் போது ..நண்பர்கள் அழைக்கவே சென்று மது போதையில் வந்தான் . மறு நாள் ஒரே வாந்தி ...அவசர அம்புலன்ஸ் அழைத்து வைத்ய சாலையில் அனுமதித்தார்கள் ... ஒரு வா ரம் படுக்கையில் இருந்தவன் ..மி கவும் பலவீனமானான் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகவே ..ஒரு ஞாயிறு அதிகாலை காலமானான் . நான்கு பிள்ளைகளும் மனைவியும் கதற ..ஊர்வலர்களும் ஒன்று கூடி மரண அடக்கம் நடந்தது .... காலம் உருண்டோடியது .மூத்தவள் திருமண வயதை எட்டி விடடதால் தந்தையின் சகோதரி .. தான் வாழும் கனடா நாட்டில் ..தூரத்து உறவு முறையில் ஒரு திருமணம் பேசி ..முடித்தார் .. இரு வீடடை சார்ந்தவரும் தொலைபேசி வழியே .. ஒழுங்காக்கி .நாள் குறித்து ... பின் தொழில் நுட்பம் மலிந்த இக்காலத்தில் ஸ்கைப் ..முக புத்தகம்.. போன்ற இணைய வழித் ...தொடர்பில் மணமக்கள் பேசிக் கொண்டனர் ...இருவருக்கும் பிடித்து போக வே வரும் கோடை விடுமுறையில் மணமகள் இங்கு வந்து பதிவு செய்ய ... ஒழுங்காகியது . இதற்கிடையில் மண மக ளின் தாயின் சகோதரி ..மணமகன் உள்ள கனடா நா ட்டிற்கு அழைக்கவே வந்தவர், மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ... .மனம் ஒத்து போனாலும் தோற்ற பொருத்தம் சிறு ,,குறை யாக தென் படடது . மணமகன் 4'11" ஆகவும் பெண் 5'2" ஆகவும் இருந்தனர் .....இனி அவர்களின் தேர்வு மணமகள் சம்மதத்தில தங்கி இருந்தது ..... அவள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ..விடடாள் . ஒரு வா ரம் ஆகியது பையன் அழை ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தான். பெண் தாயிடம் சென்று நடந்த்து .விபரித்தார் ... இதனால் வேறிடம் பார்க்கலாம் என் சொல்லிவிடடார் ..... மணமகள் தீவிரமாய் சிந்தித்தாள் .ஒரு வேளை மணமகன் என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா .? ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ வில்லையா ....உயரம் ஒரு குறையா ..இரு மனம் கலந்ததே திருமணம் ... மறு நாள் விடிந்தது ..... அம்மாவிடம் தன மூடிவைத்து தெரிவித்தாள் மக ள் ...நான் அவரைத் தான் திருமண செய்வேன் வேறு எவரையும் செய்யமாடடேன் என்றாள் தீர்மானமாக ..... நான் அவரோடு பேசி என் முடிவு சொல்ல போகிறேன் என்று ...தொலைபேசியில் அழைத்தாள் ...இந்த அழைப்புக்காகவே காத்திருந்த மணமகன் ....பேசினான் .......வார்த்தைகள் முடிவுகளாகி ..திருமணம் இனிதே நடந்தேறியது ..... ஒரு வருட இன்பமான வாழ்வில் அழகான பெண் குழந்தை கையில் ...ஒரு திருமண வீட்டில் சந்தித்தேன்.தம்பதிகள் ...இனிதே வாழ்க ..அவளுக்கென்றொரு மனம் ...அது ஆழமான அன்புள்ள ..நேசிக்க தெரிந்த உள்ளம். திருமணங்கள் நறு மணம் வீசி மலர்வ்து இனிய நல்மனம் கொண்ட மலர்களால் ... படித்த அழகான மெல்லிய மாநிறமாக மணமகள் தேவை என் விளம்பரம் செய்யும இக்காலத்தில் இப்படியான நல்ல உள்ளம் கொண்ட மணமக்களும் வாழ்கிறார்கள்
 5. 23 likes
  பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் அவனிடம் 50 சதம் இல்லாதது அல்ல.மாறாக அவன் அதி பணக்காற வீட்டு பிள்ளையாக இருந்ததே.அவனைக் பாடசாலையிலிருந்த கூட்டிச் செல்வதற்க்கு கார் வரும்.அதால மற்ற பிள்ளைகளுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிக்கும் பாக்கியம் அவனக்கு கிடைப்பதில்லை.ஒரு முறை இவனும் மறடறவர்களுடன் சோ்ந்து ஐஸ் பழம் குடிப்பதை பார்த்த சாரதி தகப்பனிடம் போட்டுக் கொடுத்ததால் அதுவே முதலும் கடைசி முறையுமாகப் போய் விட்டது.கால ஓட்டத்தில் அவன் தனது தகப்பனின் வியாபரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றுக் கொன்டான். இப்போது அவனது பொறுப்பில் பல வேலையாட்க்கள் உதவிக்குப் பலர்.அந்த 50 சத ஐஸ் பழ கனவு மடடும் இன்னும் தீரவில்லை. குற்றம் குறை மன்னித்தருள வேண்டும்
 6. 21 likes
  "எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன் போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் . இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து எனது முதல் விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு. டொக்டர்மாருக்கு பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான். எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது. சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன். "இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவர‌ வேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்" பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு அ சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்" அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன். .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர். அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி என‌ விளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது. உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்க‌ எழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு. புகையிரதத்திலிருந்து இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன். முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன். ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது.... அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது. பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."
 7. 21 likes
  அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது! அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்! என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக் கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்! இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்! தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்! தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப் பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்! இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்! அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்! கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்! கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..! அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது! ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது! வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்! நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது! அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது! சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்! 'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?' அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! (இன்னும் கொஞ்சமிருக்கு! )
 8. 21 likes
  முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது. விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என. இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன. ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன. என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன். அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம். (மிகுதி பிறகு) ------------ தொடர்ச்சிகள்: சென்னை உங்களை வரவேற்கின்றது
 9. 19 likes
  என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன் என்றார் கந்தசாமியர் . ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும் டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன். விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாமியருக்கு உடம்பில் ஆட்டம் கொடுத்து விட்டது என்ன இவன் சாதாரண தலைச்சுற்றுக்கு வந்தால் ஆயிரம் கோதாரிகளை சொல்லிப்போட்டு போறான் என்று மனதுக்குள் ஏசி திட்டிக்கொண்டே இருந்தார் கந்தர் அவன் சொல்லுறதும் சரிதானே இப்ப உள்ள சாப்பாடுகளை தின்னுறதால உடம்பில வருத்தங்கள் தான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பக்கத்தில் ஒருவர் வந்து உட்காருகிறார் கந்தரோ இருங்கள் என்று சொல்லி பக்கத்தில் அமர பேச்சுக்கொடுக்கிறார் உங்களுக்கு என்ன எனக்கு சீனி கூடிட்டுது உடம்பில போன‌ மாதம் தான் விரலை களற்றி விட்டார்கள் என்று காலை காட்டினார் பெரு விரல் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது . கந்தருக்கு இருக்கிற தலையிடி உடம்பு முழுக்க இடிக்க தொடங்கியது இன்னும் கூடி காயம் ஆறாவிட்டால் முழங்காலுடன் கழட்டி விடுவார்கள் என்று சொல்ல கந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்ல்றீங்க பின்ன என்னங்க நாம் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் நாயா பேயா உழைக்கிறம் இந்த உடம்பில என்ன கோதாரி இருக்கிறது என்று எப்பாவாச்சும் பார்க்கிறமா இல்லையே பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றார் அவர் . இப்ப பாருங்கள் மாதா மாதம் கிளின் என்று சொல்லி ஒரு கொப்பியை தந்து இருக்காங்கள் அதனால மாதா மாதம் வந்து போகிற வேலையா கிடக்கு ம்ம்ம்ம் நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சொன்ன கந்தர் டகித்தன் வந்த பிறகு எல்லாத்தையும் செக் பண்ண வேணும் என்ற நினைப்போடு இருந்தார் கந்தர் வைத்தியர் வரவே ஐயா ஒரே தலைச்சுற்றா இருக்கிறது என்னவெண்டு ஒருக்கா பாருங்கள் ஐயா என்றார் சரி ஐயா முதலில் இருங்கள் என்று அவரை சோதித்த போது இது இந்த வெயில்லுக்கு வாரதுதான் என்றார் வைத்தியர் வெயிலுக்குள்ள போறத்தை குறைங்க அப்போது விமலன் அங்கு வரவே ஐயா இவர் நம்மட சொந்த காரர்தான் இவரு ஆஸ்பத்திரி பக்கம் வந்ததே இல்லை ஒருக்கா ஆளை முழுசா செக் பண்ண சொல்லுங்களன் ஓ அப்படியா விமலனின் சிபாரிசு ஐயாவுக்கு கிடைக்க ,ரத்தம் ,சிறுநீர் எல்லாம் சோதிச்ச ,பிறகுதான் சொல்ல முடியும் ,இப்ப பிறசர் கட்டிப்பார்ப்போம் என்று வைத்தியர் கையை தூங்கி காட்டுங்கோ என்ற சொல்ல இவரும் கையை தூக்கி காட்டினார் பின்னர் பிறசர் கட்டிப்பார்த்தார்கள் ,கைப்பிறசர் இல்லை நோர்மல் தான் என்றார் வைத்தியர் ஓ அப்படியா ஐயா இப்பதான் எனக்கு நிம்மதி எதுக்கும் பிலட்டை செக் பண்ணிப்பார்ப்போம் என்ன சரி என்று சிறிஞ்சில் ரத்தம் எடுத்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அதிலும் அவருக்கும் ஒன்று இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே அவருக்கு உன்மையான மூச்சு வந்தது வருத்தம் இல்லாவிட்டாலும் உனக்கு அது வந்திருக்கு இது வந்திருக்கு என்று சொன்ன விமலை முறைத்து பார்த்தாலும் நமது உடம்பை இந்த காலத்தில் அடிக்கடி செக் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டுவந்த வீடு வந்த கந்தர் தன் மனைவி சுந்தரியை பார்த்து இனிமேல் சாப்பாட்டுல உப்பு , சீனி , உறைப்பு , எண்ணெய் இதெல்லாம் குறைச்சு போடு சரியா என்றார் சரி என்று அவரும் சொல்ல வருத்தம் வராமல் செத்து போகவேணும் காலை கழட்டி கையை கழட்டியெல்லாம் வாழ இயலாதுடி நாளைக்கு நம்க்கு பீ அள்ள மூத்திரம் அள்ள ஒருத்தரும் இல்லை நீயும் வா ஒருக்கா உன்னையும் செக் பண்ண வேணும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போகிறார் ஆஸ்பத்திரிக்கு. எல்லாரும் சுய ஆக்கம் எழுதும் போது நம்ம பங்கிற்கு சும்மா கிறுக்கியது இந்த மெசின் வாழ்க்கையில் தன் உடம்பை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு நடந்த சில நிகழ்வுகளை சின்ன கதையாக
 10. 19 likes
  இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு. ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம். பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும், பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று. பள்ளிக்கூட நாட்களில் பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம். சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம். குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும், வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள். மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான் அதிகம் மினக்கெடுவார்கள். பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு. இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு. ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள் மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன். அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான். அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான். "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும் அசூசையும் கலந்த உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான். நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது, எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட பெரிய சவால் மாதிரி இருந்தது. பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது. சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன். குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்; எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன். பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். - தொடரும் -
 11. 18 likes
  துருச்சாமி . சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை). என்னுரை: இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன. அவையாவன: 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம். 2) பாதயாத்திரைப் படலம். 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க). 5) பந்திபோஜனப் படலம். 6) நீதிவழங்கும் படலம். இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அவற்றைப் பின்பு பார்க்கலாம். எமது துருச்சாமியுடன் பயணிக்கும் அடியவர்கள் மூளைக்கு ஓய்வளித்துவிட்டு, லாஜிக்கைத் தவிர்த்து மனசை இலேசாக்கி சிரிப்பை சிந்திக்கொண்டு (வந்தால்) பயணிக்கவும். காண்டம் ஒன்று: பாலகர் காண்டம். ( பாகம் ... ஒன்று). 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைக்கும் படலம். நேரம் அதிகாலை 03 : 45. அதிகாலை எங்கோ தூரத்தில் சேவல் ஒன்று கூவுகின்றது. அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த தரிப்பிடத்தில் ஒரு பேருந்து வந்து நின்று பெரு மூச்சுடன் புறப்பட்டுப் போகின்றது. அதில் இருந்து திடகாத்திரமான உருவம் ஒன்று இறங்கி வருகின்றது. அப்படியே அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு தனக்குள் வெள்ளி காலித்துக் கிடக்கு ஒரு நாலு மணி இருக்கும் போல. அப்படியே கோவில் அருகால் நடந்து திருக்குளத்துக்கு வருகின்றது. படிக்கட்டில் ஆடையைக் களைந்து வைத்துவிட்டு கௌபீனத்துடன் குளத்தில் இறங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கி முங்கி உடல் சூடு பறக்க நன்றாக முழுகி விட்டு எழுந்து வந்து ஒரு துணிப்பையில் இருந்த துண்டால் தலையைத் துவட்டி மேலைத் துடைத்துவிட்டு ஒரு காவி வேட்டியை அணிந்து கொண்டு கோவணத்தை அலம்பிப் பிழிந்து படிக்கட்டில் விரித்துவிட்டு கிழக்குப் பார்த்து நின்று சிவ சிவ என்று திருநீறு பூசி பையையும் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து வருகின்றது. அப்போது அங்கு நின்றிருந்த தென்னை ஒன்றில் இருந்து தேங்காய் விழ, அந்த இருட்டில் அதைத் தேடி எடுத்து அதோடு இன்னும் இரண்டையும் பொறுக்கி எடுத்து மூன்றையும் பையில் இருந்த கத்தி எடுத்து உரித்து எடுத்துக் கொண்டு வரும்பொழுது வழியில் நின்ற பொன்னச்சி, அரளி, செம்பருத்தியில் நாலுபூவும் பறித்துக் கொண்டு வந்து விநாயகர் சந்நிதிமுன் நின்று கதவருகில் பூவை வைத்துவிட்டு அங்கு தொங்கிய சங்கில் இருந்தும் திருநீறு எடுத்து நெற்றியில் மார்பில் கையில் பூசிக்கொண்டு பையில் இருந்து ரெண்டு சூடம் எடுத்து அங்கிருந்த கல்லில் வைத்து ஏற்றிவிட்டு அடுத்திருந்த கல்லில் சிதறு தேங்காய் அடித்து விட்டு கண்முடி " திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் " என்று ஸ்தோத்திரம் பாடி உடைத்த தேங்காயில் இரண்டு சில்லையும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வருகுது. 2) பாதயாத்திரைப் படலம். கோயில் வெளிச்சுற்றைத் தாண்டி வரும் பொழுது மடப்பள்ளிக் கதவு ஒரு கம்பியால் கட்டி இருக்கு, அருகே எலி வாகனமும் இருக்கு. அதையும் தாண்டி வந்து வயலுக்குள் இறங்கி வரப்பால் வெகுதூரம் நடந்து கடந்து பனங்கூடலுக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடந்து வருகின்றது. சூரியன் உதயமாக அந்தக் கருக்கலில் சிறிது வெளிச்சமும், பறவைகளின் இரைச்சலும் தொடங்குகிறது. "மாசிப் பனி மூசிப் பெய்யும்" பனி விழுவதால் இருள் முற்றாக விலகவில்லை. இப்போது அந்த உருவத்தை சிறிது பார்க்க முடிகின்றது. கொஞ்சம் ஒல்லியாய் நெடு நெடு என்று ஆறடிக்கு குறையாத தோற்றம். மாநிறம், கைகளும் கால்களும் தோள்களும் எஃகு போல வலுவாக இருக்கின்றது. ஒரு காவி வேட்டி கட்டியிருக்கு. அது முழங்காலுக்கு கொஞ்சம் கீழே இறங்கி கணுக்காலுக்கு மேலே ஏறி இருக்கு. உடலை ஒரு நீளமான சால்வையால் போர்த்தி இருக்கு. தோளில் இருந்து ஒரு ஏணை போன்ற தூளிப் பை தொடைவரை தொங்குகின்றது. அந்தப் பையின் உள்ளே பல பொக்கட்டுகள் விசேஷமாய் தைக்கப்பட்டிருக்கு. அதனுள்தான் சாமியின் ( இனி அவரை சாமி என்றே அழைப்போம்) சொத்து பத்து எல்லாம் அடக்கம். அந்தப் பை ஒரு அட்ஷய பாத்திரம்.கேட்டது எல்லாம் தரும். அத்துடன் கையிலே ஒரு தண்டம் வைத்திருக்கு. அந்தத் தண்டம் ஒண்டரை முழம் நீளம் இருக்கும்.கொப்பு வளைத்துப் பூப்பறிக்க, குலைத்து வரும் நாயைத் துரத்த, முதுகு அரித்தால் சொறிய என்று அதுக்கும் நிறைய வேலை. மேலும் குடிக்க கழுவ என்று ஒரு கமண்டலம். சரி சாமி மெதுவாய் நடந்து போகுது நாமும் தொடர்ந்து போவோம். அந்தப் பனங்கூடலுக்குள் ஏராளமான பனைகளும், வடலிகளும், அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, பாவட்டை என்று பரந்து கிடக்கு. அங்கு சாமி நடந்து வர ஒரு பனையின் அடியில் நுரை ததும்ப கள்ளுமுட்டி ஒன்று பக்குவமாய் வைக்கப் பட்டிருக்கு. சாமியும் தனது கமண்டலத்தை எடுத்து அண்ணாந்து நீர் பருகிவிட்டு மேலும் நடக்கின்றது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்திருந்த வாழைத் தோப்புக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடக்குது. அந்தப் பாதையில் நிறைய குலை தள்ளிய வாழைகளும் பொத்திகளுமாய் இருக்கு. அவை பாதையில் வளைந்து தலையிலும் இடிக்குது.சாமி அதையும் கடந்து நடந்து வருது. பொழுதும் புலருது, பனியும் அடங்குது. அடுத்து ஒரு காய்கறித் தோட்டத்துக்குள்ளால் அந்தப் பாதை வர சாமியும் அதில் நடந்து வருது. அங்கே கத்தரி, புடலை, வெண்டை, தக்காளி, கீரை, மிளகாய், பயத்தங்காய்,பூசணி என்று வழியெல்லாம் பார்க்க மனசு கொள்ளை போகின்றது. அதையொட்டி வர ஒரு வீடும் அருகே கொட்டிலில் ரெண்டு ஆடும் , ஒரு கரப்புக்குள் கோழியும் குஞ்சுகளும் இருக்கு. அவை வெளியே வர முண்டியடிக்குது. அந்த வீட்டைக் கடந்து வர எல்லைக் கடவையில் முருங்கை ஒன்று ஏராளமாய்க் காய்த்துத் தொங்குது. அதையும் சாமி எட்டிக் கடந்து அடுத்திருந்த பனங்காட்டுக்குள் இறங்கி வருது. இப்போது அந்தக் காட்டுக்குள் ஒரு அன்னமுன்னா கொப்பில ஒரு மஞ்சள் பை தொங்குகின்றது.அதையும் கடந்து அடுத்திருந்த வீதிக்குள் வந்து விட்டது சாமி. இப்ப நல்லா வெளிசிட்டுது சற்று தூரத்தில் எட்ட எட்டவா பல வீடுகள் தெரிகின்றன. வீதியால் சாமியைக் கடந்து போகும் இரண்டொருவர், வண்டில்காரர் ஆளாளுக்கு கும்புடு போட சாமியும் தண்டத்தை உயர்த்தி ஆசிர்வதித்துக் கொண்டு வருது. அப்படியே வருகையில் வளப்பமான ஒரு ஒட்டு வீட்டின் படலையடியில் வந்து நிக்க, உள்ளே முத்தம் கூட்டிக் கொண்டிருந்த கிழவி பர்வதம் படலைப் பக்கம் பார்த்து என்னடா இது காலங்கார்த்தால குடுகுடுப்பைக் காரன் வந்திட்டான் போல என்று தனக்குள், உவங்கள் சுடலையில் இருந்து வருவாங்கள், உவங்கட முகத்தில முழிக்கக் கூடாது ஆனால் உவர் உடுக்கடித்து என்ன சொல்லுகிறார் என்று கேட்பம் என நினைத்து வீட்டுப் பக்கமாய் விளக்குமாத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு நிக்கிறாள். சாமியும் முத்தத்தில ஆள் நிக்கிறதைப் பார்த்திட்டு கொழுக்கியைத் தூக்கி படலையைத் திறந்து கொண்டு கிழவிக்கு அருகில் வந்து நிக்குது. கிழவியும் என்ன இன்னும் உடுக்கு சத்தத்தைக் காணேல்ல என்று திரும்ப முன்னால சாமி நிக்குது. கிழவியும் அட இது குடுகுடுப்பை இல்லை யாரோ பரதேசியோ, பண்டாரமோ என்று வடிவாய்ப் பார்த்து அட இது சாமி என்று ஐயம் தெளிந்து மெய்வணங்கி வரவேண்டும் சாமி வரவேண்டும், நீங்கள் வந்தது நாங்கள் செய்த புண்ணியம் போன ஆடி அமாவாசைக்கு சோறு போடுவான் எண்டால் ஒரு சாமியையும் கண்ணில காணக் கிடைக்கேல்ல என்கிறாள். இந்த அமர்க்களத்தில் பர்வதத்தின் பேத்தி உள்ளிருந்து வந்து யார் பாட்டி என்று கேட்க, சாமியும் தண்டம் உயர்த்தி எம்பெருமான் பைரவரின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் இல்லத்துக்கும் குடும்பத்துக்கும் உண்டு. மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லுது. அந்தப் பெண்ணும் அட சாமிக்கு என்பேரு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்பட்டு, ஓம் சாமி இப்ப எட்டாவதாய் உண்டாகியிருக்கேன் சாமி வாங்கோ வந்து திண்ணையில இருங்கோ என்று உள்ளே சென்று ஒரு மான்தோல் எடுத்துவந்து திண்ணையில் போடுகிறாள். சாமியும் அதில் இருந்துகொண்டு பிள்ளை ஒரு செம்பில கொஞ்சம் துத்தம் கொண்டுவானை, நெடுந்தொலைவு நடந்து வாறன் தாகமாய் இருக்கு என்று சொல்லிவிட்டு, தனது பாரமான தூளிப்பையை பக்குவமாய் திண்ணையில் வைத்துவிட்டு தானும் கால்களை சம்மணம் கட்டி இருந்து கண்களை மூடி மோனத்தில் அமருது. பர்வதாக கிழவியும் வந்து பவ்யமாக சாமி இன்று இங்குதான் மத்திய போஜனம் செய்ய வேண்டும் என்று பயபக்தியுடன் விண்ணப்பிக்கின்றாள். "ஏடுடைய மலரவனின் ஏறுதலை கிள்ளியவன் இறுமாப் படக்குமரசே" சாமி மெதுவாய் ஸ்தோத்திரம் சொல்லுது. பயணம் தொடரும்.....!
 12. 18 likes
  ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள். கிராமத்தில் பாலர் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது, பின் அருகில் இருக்கும் உயர்கல்விக்கு எ நாற்பது நிமிட நடை தூரத்தில் ஒரு கல்லூரி அங்கு ஆறாம் தரத்தில் இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பார்கள். மேலதிகமான கல்வி சா/ தரம் உயர் தரம் என்பவற்றுக்கு யாழ் படடணம் போக வேண்டி இருந்தது . நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே கோயில் வளவில் நண்பர்களுடன் ..பந்து விளையாடச்செல்வார்கள் .பிரேமனின் தாயார் வீட்டில் வளர்க்கும் பசுவைக்காணவில்லை போய் பார்த்துவா தம்பி என்றால் ...கேசவனும் கூடவே பிரேமனுடன் செல்வான் மாலையில் வீடு திரும்பாவிடில் இருவரில் ஒருவரிடம் மற்றவரைப் ப ற்றிக் கேட்க்கலாம். காலம் உருண்டோட இருவரும் எடடம் வகுப்பை அடைந்தனர் ஒன்பதாம் வகுப்பில் ..கலைத்து றை விஞ்ஞானத்துறை என பகுதி பிரிப்பார்கள் ஆசிரியர்கள். பின்னர் அதிபரினால் தெரிவு அறிவிக்கப்படும். அப்படியான கால்கட்ட்த்தில் ..பிரேமன் கலைத்துறைக்கும் . செல்வாக்குள்ள மனிதரின் மகன் கேசவன் சயன்ஸ் பிரிவுக்கும் அ னுமதிக்க படடனர் .. நண்பர்கள் பிரிவது ..மிகவும் கொடுமை ..கேசவன் தன் தாயாரிடம் ...நடந்ததை சொல்லி தனக்கும் கலைப்பிரிவு தான் . படிக்க ஆர்வமுள்ளது என்று கூறினான் . அந்தக் காலத்தில் சயன்ஸ் படிப்பது ஒரு கெளரவமான மாயத் தோற்றத்தை கொண்டிருந்தது ..பிள்ளையின் ஆற்றல் நாடடம் கலைத்துறையாக இருந்தாலும் ..ஊராரிடம்பறை சாற்ற பிள்ளையை நிர்பந்திக்க வேண்டி இருந்தது . கேசவனின் தாயாரும் கணவரிடம் பேசினாள். என் பிள்ளை டாக்ட்டராக இஞ்சினியராக நான் கனவு காண்கிறேன் .மறு பேச்சு பேசாமல் அவரை சயன்ஸ் பிரிவில் படிக்க சொல் என்று கண்டிப்பான கடடளையிட்டு விட்டார் . கேசவனும் தந்தை சொல் மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்து படித்து வந்தான் ...வெவ் வேறு வகுப்புக்க ளாயினும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர் ...வகுப்பில் தாவரங்களின் படங்களை கீறுவதற்கு , வீட்டுப் பாடம் ஒன்றாக செய்வதற்கு பிரேமனை தன வீட்டுக்கு அழைப்பான் ...எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் . அந்த வருட இறுதி தேர்வில் கேசவன் குறைந்த மதிப்பெண்களை பெற்றான் வீட்டிலும் ரிப்போர்ட் காட்டில் தந்தையின் கையெழுத்து வாங்க வேண்டி இருந்தது . தந்தை அந்த அறிக்கையை பார்த்தும் மிகவும் கடிந்து கொண்டார் . இதனால் மனவேதனை உற்ற கேசவன் பலவாறு யோசித்தான். நண்பன் பிரேமனுக்கு மட்டும் சொல்லிவிட்டு ....மறுவாரம் தாயாருக்கு சொல்லாமல் படடனத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ..சென்று விடடான். திடீர் வரவைக்க கண்ட தாத்தா ...மகிழ்ச்சி ஒரு புறமும் சந்தேகம் ஒருபுறமுமாய் ..பாட்டியிடம் எதுவும் அவனிடம் கேட்க்காமல் நல்ல உணவு கொடுக்க ச்சொன்னார் . .மாலையானது தாத்தா மெல்ல பேச்சுக்கு கொடுத்து பேரன் கோவித்து கொண்டு வந்ததை அறிந்தார் ..உடனடியாக மகள் வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பினார் பேரன் தங்களிடம் வந்து விட்ட்தாக ..தான் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார் . சில வாரங்கள் சென்றது . மார்கழி விடுமுறை முடித்ததும் மெல்ல அவனது எண்ணத்தைக் கேடடா ர். அவன் ஊருக்கு செல்ல விருமபவில்லை எனவும் படடண த்திலே ஒரு பாடசாலையில்க லைத்துறை பிரிவில் தன்னை சேர்க்க அனுமதி வாங்கி தரும்படியும் சொன்னான் . நீண்ட நாட்கள் தனிமையில் இருந் தாத்தா பாட்டி மிகவும் உற்சாகமாக அவனைக் கவனித்தனர் வயதான தாத்தா . தன் செல்வாக்கைப்பயன் படுத்தி பிரபலமான கல்லூரியில் கலைத்துறையில் அவனை சேர்த்து விடடார் .. அவன் சா /தரம் முடித்து பின் உயர் தரத்தில் மிக திறமையான சித்தி அடைந்து .. கலைத்துறைப் படடதாரி ஆனான் ...கால ஓடத்தில் ..கணணித் துறையிலும் நாடடங்கொண்டு .. மிகத் திறமையான நிலையை அடைந்தான் . பல கம்பெனிகளில் இருந்து ..வடிவமைப்புக்காக ஓடர்கள் வந்தன. அவனது பொருளாதாரம் உயர்ந்தது ... தன் முயற்ற்சியினால் ஒரு கம்பெனி அமைத்து நிர்வகித்து நல்ல நிலைக்கு வந்தான். ஊருக்கு செல்லும்போது தன் நண்பனைத் சந்திக்க மறப்பதில்லை . ..நீண்ட நாட்கள் பேசாதிருந்த தந்தை ..கம்பெனித் திறப்பு விழாவில் கலந்து பாராட்டினார் . இன்றும் தான் இழந்த அந்த ஒரு வருட வாழ்க்கையை எண்ணி கலங்குவதுண்டு ...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில் திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை மாறிச் செல்கிறது .. இது சற்று முன்னைய காலத்தின் கதை பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு அறியாது திணிக்கும் பெற்றோரின் மீதான தாக்கம் என்னால் முடிந்த எழுத்து வடிவில் நட் புடன் நிலாமதி
 13. 18 likes
  பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவும் அழுதுநிக்க அங்குவரும் மாமாவின் கையின் கிளுவந் தடியில் பால் சுரக்கும். எண்ணை வைக்க அடம்பிடிக்கும் என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும் நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும் முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும். களைத்து வரும் வேளை காத்திருந்து முத்தத்தால் முகம் துடைத்து கட்டியவள் காப்பிதர இரு கண்களிலும் பால் சுரக்கும். எகிறிவரும் எட்டுவயது மகள் பாய்ந்து மார்பினில் ஒட்ட பக்குவமாய் பற்றிக் கொள்ளும் பத்து விரலும் பால் சுரக்கும். எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய தாளை இரண்டு இழுக்க தாத்தாவை தள்ளி விட்டு முதுகில் துள்ளியாட பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....! யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!
 14. 18 likes
  அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்காலக் கனவுகளுடன் நான்கு மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கிப் படிக்க இடம் தேடினோம். இறுதியில் பாடசாலைக்கு அண்மையாக ஓர் அம்மாவும் மகளும் குடியிருக்கும் ஓர் வீட்டின் அவுட் கவுஸில் இரண்டு அறை சமையலறை குளியலறை என சகல வசதிகளுடன் கிடைத்தது. நான்கு பேரும் வாடகையைப் பங்கு போடுவதென்றும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதென்றும் முடிவாகியது. ஏமக்கு எப்படியாவது படிப்பைத் தொடர்ந்தால் போதும் என்ற நிலை. அந்த அம்மா நாள் பார்த்து பால் காய்ச்சி நாம் குடிவர அனுமதி கொடுத்து அட்வான்ஸ் பணமும் பெற்றுக் கொண்டு திறப்பைக் கையளித்தார். நால்வரும் எமது பெட்டி படுக்கை மண்ணெண்ணை அடுப்பு சகிதம் கதவைத் திறந்து வலதுகாலை? வைத்து வீட்டிற்குள் பிரவேசித்தோம். நேரம் மதியத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாவின் அழகிய மகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருமண நாளுக்காய் காத்துக்கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத அந்தப்பெண் எமது குடியிருப்புக்கு முதன்முதலாக விஜயம் செய்திருந்தார். ஆம் பால் காச்சும் அந்த வைபவத்திற்கு அவர் வந்திருப்பது எமக்கு விளங்கியது. அவரை உபசரித்து அமரச் சொல்ல எம்மிடம் கதிரை இல்லை. எனவே வாசல் படியில் அனைவரும் இருந்து எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எம்மில் ஒருவர் மெதுவாக சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணைக் குக்கரைப் பற்றவைத்து சோஸ்பேனில் தண்ணீரை வைத்துவிட்டு வந்தோம். சற்று நேரத்திற்கு ஒருவராக உள்ளே சென்று அடுப்பை பரிசோதித்து விட்டு வந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அக்கா உள்ளே எட்டிப் பார்ப்பதும் எம்முடன் உரையாடுவதுமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர பால் கிண்ணம் வந்தபாடில்லை. காரணம் அடுப்பில் பால் இ;ல்லை. அந்த புதிய இடத்தில் எங்குபோய் பால் வாங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் எமக்குத் தெரியாது. அடுப்பில் தண்ணீரும் வற்றிப் போனது. ஆந்த அக்காவும் என்ன நினைத்தாரோ தெரியாது “நான் போயிற்று வாறன்” என்று சொல்லிப் பார்த்தார். நாங்கள் அசடு வழிய தலையை ஆட்டி வைத்தோம். அதற்குமேல் ஏதாவது சொல்லவோ செய்யவோ எமக்கு வயதும் அனுபவமும் போதவில்லை. அதன் பின் அந்த அக்கா திருமணமாகிப் போகும்வரை எம்முடன் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார். இருந்தும் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை என்று விளங்கியது. அன்று நடந்த பால் இல்லாமல் பால் காய்ச்சும் வைபவம் இன்றும் மனதில் பசுமையாய் தினமும் பால் காய்ச்சும் வேளைகளில் மனதில் காயும். அந்த இளமைக்கால நினைவலைகள் இன்னும் இதயத்தில் ஈரமாய் ............
 15. 17 likes
  அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம் வீங்கித் தான் தனது இரண்டு பையன்களையும், தனது ஒரே மகளையும்..யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில்,,,விடுதிகளின் வைத்துப் படிப்பித்து வருகிறார்! காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்! இரண்டு பிள்ளைகள் ஒரே இடத்தில் படிப்பதால்….எவருடைய வசதிக் கட்டணத்தை எப்போது கட்டியது என்பது அவருக்கு நினைவில் இல்லை! இருந்தாலும் அதே கல்லூரியில் படிப்பிக்கும்...தன்னுடன் ஆசிரிய கலாசாலையில் ஒன்றாகப் படித்த பொன்னம்பலம் மாஸ்ரரிடம் பணத்தைக் கொடுத்ததாக அவருக்கு நினைவுண்டு! அதனால் தான் அவருக்கு அந்த எரிச்சல் வந்திருக்க வேண்டும்! அப்பா..அம்மாவுடன்...அளவளாவுவது...அவனுக்குக் கேட்டது! பின்னர் அம்மா...அப்பாவுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்த தனது சேமிப்பிலிருந்து ….நூறு ரூபாவை எடுத்து என்னிடம் தந்து...தம்பி..ஒருத்தரிட்டையும் குடுக்காமல்...நீயே நேர போய்க் கவுண்டரில கட்டிப்போட்டு, றிசீட்டை வாங்க்கி கொண்டு வரவேணும் எண்டு கடுமையான கட்டளையும் போட்டு விட்டுச் சென்று விட்டார்! கொடுத்த காசைப் பொன்னம்பலம் கட்டாமல் விட்டது ..அப்பாவுக்குப் பெரிய கவலையாகப் போய் விட்டது! வாத்திச் சீவியம் என்றால் இப்படித் தானே! அவனுக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்தவாறே….தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்! அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப் பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது! சனி ஞாயிறுகளில் பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்! எங்களிடம் ஒரு பழைய ரேடியோ ஒன்று இருந்தது! அதன் பின் பக்கத்தில் பெரிய..பெரிய பல்புகள் மாதிரி வால்வுகள் இருக்கும்! ஒரு இரவில்..அந்த றேடியோவின் பின பக்கத்தைத் திறந்து விட்டால்...அந்த வால்வுகளின் வெளிச்சத்தில்..ஒரு புத்தகம் கூட வாசிக்கலாம்! இவை அதிகம்...பற்றரிகளை உபயோகிப்பதால் நீண்ட நேரம் வானொலி கேட்க முடியாது! காலைச் செய்திகளும்..மாலைச் செய்திகளும் தான் கேட்பதுண்டு! ஐக்கிய தேசியக் கட்சி...அல்லது சுதந்திரக் கட்சி என்று எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அதற்கேற்ப யானை வரும் போது ஒலிக்கும் மணிச்சத்தமோ அல்லது..யானை கலைக்கும் போது பறை தட்டும் சத்தமோ மாறி ...மாறி வரும்! ஒரு நாள்.. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அடுத்த அறையிலிருந்து சல்லல்லாஹு சலையும் அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து கொண்டிருந்த போது ...வீதியில் ஒரு கல் கிடந்தது! அவர் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் என்று நபிகளின் போதனை போய்க் கொண்டிருந்தது! ஆனால் எமது ஆஸ்தான ரேடியோ ..தன்ர பாட்டில் 'சிவனே' என்று பேசாமல் குந்திக்கொண்டிருந்தது! அது கடைசியாக வாய் திறந்து கதைத்து.. ஆறுமாதங்கள் முடிந்திருந்தது! அப் போது தான் எல்லோருக்கும் தெரிந்தது...அம்மா..எங்களுக்குத் தெரியாமல் ஒரு ற்றானசிஸ்ரர் ரேடியோ வாங்கியிருக்கிறாள் எண்டு! அதன் பெயர் 'எலையிற்' என்று இப்போதும் நினைவில் உள்ளது! சரி...கதையை விட்டுக் கன தூரம் போய் விட்டோம் போல உள்ளது! மூத்தவனும், அக்காவும் ஒரு மாதிரி அரசாங்க வேலையில் சேர்ந்து..அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கை கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்! ஆனால் அப்பாவும்..இதுவரை தோட்டம் செய்வதை விடவுமில்லை…! அம்மாவும் கிடுகு பின்னுவதை நிறுத்தவுமில்லை! அவை இரண்டும் ..அவர்கள் பணத் தேவைக்காகவன்றி..ஒரு ஆத்ம திருப்திக்காகச் செய்வது போலத் தோன்றியது! கடைசி மகனால் தான் ....அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம் பிரச்சனை தோன்றியது! அவனுக்கும் படித்து வேலை செய்யும் நாட்டம் இருக்கவில்லை! அவனது நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் அனுப்பத் துவங்கியிருந்தனர்! அவனுக்கும் அந்த ஆசை பிடித்து விட்டது! அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்! அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்! அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..! "அம்மா...கொழும்பில ஒரு கொம்பியுட்டர் கோர்ஸ் ஒண்டு செய்தால்...நான் இதுவரை படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை எடுக்கலாமாம்! ஆனால் கொஞ்சம் ...காசு தேவைப்படும்!" அம்மாவிடம் இருந்து அமைதியாகப் பதில் வந்தது! அடுத்த பென்ஷன் வரட்டும்! ( யாவும் கற்பனை)
 16. 17 likes
  சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய்! சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய்! தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது! அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை! வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய்! பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய்! மெத்தப்படித்த செருக்கு உனக்கு! கடவுளே வந்தாலும் திருத்தமுடியாதென யாரோ சொன்னது. நந்திக்கடல் அலையின் ஓசையிலும் எனக்கு நன்றாய் கேட்டது. உன்னைக் காப்பாற்ற முடியா விரக்தியில் நானும் அர்ச்சுனர்களும் நந்திக் கடலில் இறங்கி, தூர நடந்தோம்... பெரிய அலையொன்று எங்களை விழுங்கியது. அர்ச்சுனர் கூட்டம் அமிழும் நிலையிலும் தாகத்திற்க்கு தமிழீழம் கேட்டது! கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன்! திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையாட்டியாய் மாறி நின்றது! இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது! இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது! நாசமாய் போகெட்டும் இந்தக் குடியென மனமார திட்டிவிட்டு நந்திக்கடலில் நானும் இறந்தே போனேன்!
 17. 16 likes
  அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது. "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 18. 16 likes
  நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி) “உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?” என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத் தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்! சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது! தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்! சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்? அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு! அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்! அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை? நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு? போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்! சரியண்ணை...இப்ப என்ன பிளான்? இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்! அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது! சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ? சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா? அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை! ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது! சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்! இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார! சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்! அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்! சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது! அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக் கொண்டு போய் இறக்கியும் விட்டான்! தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்! அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்! அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை! கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது! இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது! கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்! தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது! இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்! நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது! தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை! இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்! இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா அல்லது நியூசீலாந்து தான்! (சுபம்…)
 19. 15 likes
  இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று தடுமாற்றம் அடித்துப் பேசி அனைவரையும் அடக்கும் திடமான சொற்களில் கொஞ்சம் தயக்கம் சிந்தையில் வந்து வந்து சிதறிடும் நினைவுகளில் மாறாட்டம் அரண்மனையில் சிம்மாசனம் இழந்த என் சிங்காசனம் மட்டும் இன்னும் இருப்பதாய் உள்ளுக்குள் ஊஞ்சலாடும் மனவோட்டம் இத்தனை விரைவில் கழியும் இந்த வாழ்க்கைக்கா இத்தனை ஆா்ப்பாட்டம் போட்டி, பொறாமை, எாிச்சல், கோவம், எத்தனை பேரைக் காயப்படுத்தும் கயமை என் வீட்டு நிலைக்கண்ணாடி எனக்கு வாழ்வைப் போதிக்கும் போதிமரம் இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணாடியைப் பாா்த்து என்னை ஆசுவாசப் படுத்துவது வழக்கம் ஒரு காலத்தில் இந்த நிலைக்கண்ணாடி முன் என் விம்பம் எத்தனை அழகாய் எனக்கே பிரமிப்பு ஊட்டுவதாய் மனதில் கா்வம் ஏற்படுத்துவதாய் அழகை மிகைப் படுத்துவதாய்……. இன்று அதே கண்ணாடிதான் காலத்தின் கோலத்தை அழித்து அழித்து வரையும் ஓவியனாய் மாறி………… வாழ்க்கை மேடையில் எத்தனை கதாபாத்திரம் எம் ஒவ்வொருவருக்கும் அத்தனையும் கடந்து வந்த அனுபவத்தின் முத்திரைதான் முதுமை அது கூட அழகுதான். இளமை அழகு ரசிக்கத் தகுந்தது முதுமை அழகு ஆராதிக்கத் தகுந்தது எனவே எமக்கென்ன குறைச்சல் வந்தால் வரட்டும் முதுமை.
 20. 15 likes
  1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எத்தனை பேரால் உணரப்படும். உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில் உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள் கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள் சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அனுதினமும் கண்ணீருடன் போராடும் எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் நீளும் பயணங்கள் தொடர்கின்றன சொந்த நிலத்தில் வாழ முடியாமல் தங்கள் நிலத்துக்காக தாமே போராடும் முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன நாளும் நாளும் போராடும் நிலையில் அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை ஆனாலும் அயராது போராடும் அவலநிலை யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்? இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும் அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில் நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில். எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு பிள்ளைகளை பிடித்து செல்வானோ என தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை. பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற வழியே இல்லையா என அன்னையர்கள் ஏங்கி தவிக்கும் அவலம். உறவுகளை பறிகொடுத்துவிட்டு உள்ளம் உடைந்து உருக்குலைந்து நடைப்பிணமாக வாழும் கொடுமை. இதுதான் எம் மண்ணில் இன்றைய மக்களின் அவல வாழ்நிலை. புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும் வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்கு நகரும் அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? உலகே உனக்கு கண்ணில்லையா என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது. உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள் எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை எண்ணிட ஏன் மறந்தோம் நாம்? பட்டால்தான் வலிகள் புரியும் என்பது மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை. சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும் அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து கண்ணீர் சொரிய முடிகின்ற எம்மவர்கள் பலருக்கு உண்மை மனிதர்களின் துயரம் எப்படி புரியாமல் போனது? உறவுகளின் இழப்பின் வலிகளை உணர முயல்வோம். தவித்து துடிக்கும் அவர்களுக்கு தோள்கொடுத்து துணைநின்று வலிமை அளிக்க நாம் உள்ளோம் என வாக்கு கொடுப்போம். அவர்கள் வாழ்வின் விடிவுக்காக உறுதியுடன் உழைப்போம் என உரத்து சொல்வோம்,செயற்படுவோம் மந்தாகினி
 21. 15 likes
  சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள். காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம். சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது. சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம். Horn அடிக்காத வாகனங்கள் இல்லை. கொழும்பில் Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்... ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது. மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்.. என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக. சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு. எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார். அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது.. நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன். சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது? அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம். இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம். வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது. ஒன்ரை மணியளவில், அடுப்பில் இருந்த நண்டுக் கறியின் வாசனை மூக்கைத் துளைக்க, மாட்டு இறைச்சி டெவிலும், கோழிக் கால் பொரியலும், Sausages அக்கா சமைச்சுத் தர எங்கள் முதல் பார்ட்டி கோலாகலமாக ஆரம்பமானது. (மிச்சம் பிறகு)
 22. 14 likes
  துருச்சாமி... தொடர்கிறது ! 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். காலை 09 : 00 மணி. அந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில் சற்றுத் தள்ளி இருந்த பூவரசமர நிழலில் சிலர் கூடி நிக்கிறார்கள். சூசை சயிக்கிளில் மீன் கொண்டுவாற நேரம்.அங்கு நின்ற காமாட்சி மற்றவர்களைப் பார்த்து பர்வதம் வீட்டில் ஒரு சாமி வந்திருப்பதைத் தான் பார்த்ததாக மெதுவாய் சொல்கிறாள்.அது சிறிது நேரத்தில் அந்தக் கிராமம் முழுக்க காதோடு காதாகப் பரவுகின்றது. அதேநேரம் சூசையும் அந்த பல்பு போல இருக்கும் ஹாரனை பீப்...பீப் என கையால் அமுக்கி அமுக்கிக் கொண்டு அங்குவந்து இறங்குகின்றான். எல்லோரும் மீன் பெட்டிக்குள்ளிருந்து தங்களுக்கு இசைவான மீன்கள் , றால்கள், நண்டு கணவாய், சுறா என்று பொறுக்கி எடுக்கினம். செண்பகமும் மோகனாவும் கதைத்துக் கொண்டே வந்து சேருகினம். காமாட்சி : சூசை நீ ஊரெல்லாம் நல்ல மீன்களை வித்துப் போட்டு உள்ள நாறல் மீனெல்லாத்தையும் கடைசில கட்டியடிக்க இங்கு கொண்டு வாராய். சூசை: இல்லையக்கா உங்களுக்கு நான் அப்படி செய்வேனா. இப்பதான் கடற்கரையிலே ஏலம் எடுத்துக் கொண்டு இங்கால வாறன். அவரவர் முன்பே பத்தியம் அதுக்கு இதுக்கு என்று சொல்லி வைத்த மீன்களைத் தனியாக எடுத்து அவரவர்களிடம் கொடுத்து சிலருக்கு கொப்பியில் கணக்கும் எழுதிக் கொள்கிறான். காசு கொடுத்தவர்களுக்கு மிச்சத்தை தனது சாரத்தின் சண்டிக்கட்டை தூக்கி உள்ளிருந்த காற்சட்டைப் பையில் இருந்து காசை எண்ணிக் கொடுக்கிறான். எல்லோரும் கலைந்து போனபின் செண்பகமும் அவனுடன் உரசினாப் போல் நின்றுகொண்டு மீன்கள் எடுக்க சூசையும் தனியாக வைத்திருந்த நல்ல மீன்களைப் பெட்டியில் போடுகின்றான். அவளும் எடுத்துக் கொண்டு கிளம்ப அவனும் "செம்பு" இன்னும் இரண்டு தெருவுக்குப் போட்டு வீட்டுக்கு வாறன் என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த பல்பு ஹாரனை அமுக்கிக் கொண்டே சயிக்கிளில் ஏறிப் போகிறான். (கிராமத்தைக் கொஞ்சம் பார்ப்போம். அது ஒரு மிகச் சிறிய கிராமம்.சுமார் ஐம்பது வீடுகள் வரை இருக்கும். ஒரு சில வீடுகளே ஓடு போட்டதும் பெரிய வீடுகளுமாய் இருக்கின்றன.கிராம எல்லையில் ஓரிரு கோயில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல செழிப்பான கிராமம். இயற்கை வளத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. அது அங்குள்ள ஆண்களிடம் வலிமையாகவும் பெண்களிடம் வனப்பாகவும் வாளிப்பாகவும் குவிந்து கிடக்கு. ஆங்காங்கு ஊருக்குள் நடக்கும் கொண்டாட்டங்கள் திருவிழாக்களுடன் சேர்ந்து கிசுகிசுக்களும், கசமுசாக்களும் தாராளமாக நடக்கும். எல்லாம் ஓரிரு வாரந்தான். பின்பு பழையபடி வேறொரு கிசுகிசு கசமுசா. ஒரு வெள்ளந்தியான கிராமம்.) சாமி திண்ணையில் தியானத்தில் இருக்குது. அந்த வீட்டுக்காரர் கதிரவேலு படலையை சயிக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்ட் போட்டு விட்டு உள்ளே வாரார்.வாசலில் கிளுவமர நிழலில் திருகணியில் இருந்த மண்பானையில் இருந்து கிண்ணத்தில் நீர் மொண்டு அண்ணாந்து குடித்து விட்டு உள்ளேபோய் சற்று நேரத்தில் வெளியே வந்து எதிர் திண்ணையில் அமர்கிறார். சாமியும் அரவம் கேட்டு கண்திறந்து பார்க்குது. கதிவேழு குசலம் விசாரிக்கிறார். கதிரவேலு: கும்புடுறேன் சாமி. சாமியை எப்படிக் கூப்பிடுறது. சாமி: ஒரு தெய்வீகப் புண்ணகை சிந்தி சொல்லுது. என்நாமம் "துருச்சாமி" . ( சாமியின் பூர்விகப் பெயர் துரைச்சாமி. அவரது பால்ய காலத்தில் அவருடன் இருந்த கஞ்சாச்சாமி, அபின்சாமி,கள்ளுச்சாமி எல்லாம் அவரை துருச்சாமி ...துருச்சாமி என்று அழைத்து இப்ப சாமியே தன்நாமம் கெட்டு, தானே மறந்து துருச்சாமியாய் கிராம வலம் வருகுது). கதிரவேலு: சாமியின் பூர்வீகம் அறியலாமோ. சாமி: மூச்சை நன்றாக இழுத்து வீட்டுக் கொண்டு ம்.... அது ஒரு ஆடி அமாவாசை. அறியாப் பருவத்தில் கீரிமலையில் நீராடப் போய் அங்கு கூட்டத்தில் ஐயா அம்மாவைத் தவறவிட்டு அங்கிருந்த சாமிமார்களுடன் அலைந்து,திரிந்து கால்நடையாய் கதிரமலை சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி மாங்குளத்தில் எழுந்து பின் இப்படியே கிராமம் கிராமமாய் அலைந்து ம் ....! சாமி மோனத் தவத்தில் மூழ்குது. "கூடுமறை யட்சரக் கோணமெல்லாம் காவல் கொண்டண்டம் பூத்த தேவே" அது ஒரு நாற்சார் வீடு. உள்ளே அடுக்களையில் பெண்டுகள் சிலர் சேர்ந்து சமையல் செய்ய தொடங்கிட்டினம். சிலர் நெல்லு எடுத்து வந்து மரஉரலில் போட்டு உலக்கையால் கைமாற்றி குத்தினம். ஒருவர் இருவராய் பலர் வாசலாலும் பின் வளவாலும் வந்து சேருகினம். சாமியும் திண்ணை விட்டு வெளியே வந்து முற்றத்து மாவின்கீழ் நிக்க பர்வதத்தின் பேரன் கண்ணன் ஒரு வாங்கை எடுத்து வந்து அங்கு வைக்கிறான்.சாமியும் அதில் மான்தோல் போட்டு அமருகின்றது. மறக்காமல் தூளிப் பையையும் கையேடு எடுத்து வந்து பக்கத்தில் வைத்திருக்கு. கதிரவேலுவும் மீண்டும் சயிக்கிளில் வெளியே போகிறார். செண்பகம் மீனோடு வந்து படலையைத் திறக்க சயிக்கிளில் வந்த கதிரவேலுவும் உள்ளே சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டு செண்பகத்திடம் எனக்கு கொஞ்சம் வாழை இலை வேணும் செம்பு என்கிறான். செண்பகம்: என்ன கதிரு உனக்கில்லாததா! தேவையானதை நீயே எடுத்துக்கொள். குருத்திலை எல்லாம் விரிஞ்சு கிடக்கு காத்தில என்கிறாள். கதிரும் கத்தியுடன் வளவுக்குள் சென்று நல்ல இலைகளாய்ப் பார்த்து பார்த்து வெட்டுகிறான். மீனை சட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்த செண்பகம் என்ன கதிர் உன் வீட்டுக்கு யாரோ சாமி வந்திருக்காமே ! கதிரவேலு: ஓம் செம்பு. அதுதான் கானபேர் வருகினம், மத்தியானம் சோறு ஆக்கிப் போடுறம் நீயும் வா என்ன. செண்பகம்: சும்மா போ கதிரு, உன் பொஞ்சாதி பொன்மணி பார்க்கிற பார்வையே சரியில்லை. ( பழனி வேற்ரூருக்கு வேலைக்கு போன இடத்தில் அவனுடன் பழக்கமாகி செண்பகம் அவனது ஆசைநாயகியாய் இங்கு வந்துவிட்டாள். ஊருக்குள் கிசுகிசு இல்லாத நேரங்களில் செண்பகம்தான் அவள்). என்று சொல்லிக் கொண்டே அதோ அந்த மொந்தன் குலையை வெட்டி ரெண்டு காயை எனக்குத் தந்திட்டு மிச்ச இலையையும் கொலையையும் நீ எடுத்துக் கொண்டுபோ என்கிறாள். இந்நேரம் வாசலில் வந்த சூசை வேலியால் எட்டிப் பார்த்துவிட்டு யாரோ நிக்கினம் போல என்று அப்பால் போகின்றான். கதிரும் அதை வெட்டி அவளுக்கும் குடுத்து விட்டு வாழை நாரால் எல்லாத்தையும் சயிக்கிளில் கட்டி விட்டுத் திரும்ப நில்லு கதிரு இந்தா இந்த ரெண்டு பொத்தியும் உனக்குத்தான் என்று வாளைப் பொத்தி இரண்டைக் கொடுக்கிறாள்.கதிரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போகிறான். சாமி வாங்கில் இருந்து அங்கிருந்த பிள்ளைகள் பெரியவர்களுக்கு சில பல சிரிப்புக்கு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு ஒரு பெண்மணி ஒரு பையனைக் கூட்டி வந்து சாமி இவனுக்கு மாலையில் இரவில் காச்சலாய்க் கிடக்கு. உன் கையாள கொஞ்சம் துண்ணுறு பூசிவிடு. சாமியும் விபூதிப் பொட்டலத்தை எடுத்து சிறிது விபூதியை அள்ளி இடது உள்ளங் கையில் பரப்பி ஒரு குச்சியால் ஏதோ யந்திரம் கீறி மந்திரிச்சு அந்தப் பையனது உச்சியிலும் நெத்தியிலும் பூசி சொடக்குப் போட்டு அனுப்பி வைக்குது. மற்றவர்களுக்கும் திருநீறு தந்து குழந்தைகளுக்கு தன்கையாலே பூசி விடுகுது. அந்தத் திருநீறும் ஒரு தனித்துவமான வாசனை வீசுது. வேறொரு பெண் கையில் ஒருமாதக் குழந்தையுடன் தனது மாமியாரோடு வந்திருக்கு. அவள் சாமியிடம் சாமி நீங்கள்தான் என்பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சாமியின் காலடியில் குழந்தைய கிடத்துகிறாள். சாமியும் பிள்ளையை அல்லி எடுக்க அது சாமியின் மார்பில் "உச்சா" போகின்றது. அப்பெண்ணும் அவசரமாய் தன் முந்தானையை எடுத்து சாமியின் மார்பைத் துடைக்கப் போக சாமி அதை கையால் தடுத்து தனது சால்வையால் துடைத்துவிட்டு விபூதி எடுத்து மாமிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் பூசிவிட அங்கிருந்த பர்வதாக கிழவியும் சின்னப் பிள்ளை யாரிடம் உச்சா போகுதோ அவர்களிடம் உறவு அதிகம் என்று சொல்லுறாள். சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள். பின் துருச்சாமிக்கு அரோகரா என்றும், குஞ்சிதபாதம் வாழ்க என்றும் கோரஸ்சாய் கோஷம் போடுகின்றார்கள். சாமியும் பிள்ளையைத் தாயிடம் குடுத்து குளிக்கும்போது மறக்காமல் சங்கிலியைக் கழட்டிவிடு , தண்ணி பட்டால் சாயம் போய்விடும் என்று சொல்லுது. எல்லோரும் போடும் சத்தத்தில் அது சக்தி போய்விடும் என்று அவளுக்கு விளங்குது. அப்படியே செய்கிறேன் சாமி என்று சொல்கிறாள். அவர்களுக்கு தண்டம் தூக்கி ஆசிவழங்கி அனுப்புது. அந்தப் பெண்ணும் திரும்பத் திரும்ப சாமியைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது மங்கலாய் பழைய நினைவொன்று பொறி தட்டுது. போனவருடமளவில் தனது மாமியார் தன்னிடம் கலியாணம் கட்டி நாலு வருடமாகுது இன்னும் ஒரு புள்ளை பெறக் காணேல்ல என்று திட்டிப் பேசி மகனிடம் சொல்லி அவளை அயல் கிராமத்திலிருக்கும் அம்மா வீட்டுக்கு அனுப்பியதும், அடுத்தடுத்த நாள் இரவு தான் தோட்டத்துக்குள் இருந்து வரப்பில வரும்போது யாரோ தன்னை இழுத்து விழுத்தியதும் அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும், அதையும் வீட்டில சொல்லப் பயந்து பேசாமல் இருக்க அடுத்தடுத்து வந்த இரண்டு மாதத்தில் தான் சத்தி எடுக்க இது மசக்கை என்டு கண்டு புருஷன் வீட்டுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வாடகைக்கு சிவதாற்ற காரோடு வந்து தன்னைத் தாங்காத குறையாய் இங்கு அழைத்து வந்ததும்,பின் சீராட்டிப் பாராட்டி இந்தக் குஞ்சிதபாதம் பிறந்ததும் நினைவில் வர "இவர் அவனாய் இருக்குமோ என ஐயப்பட்டு அவர் கையில் தண்டத்தையும் கண்டு அவன்தான் இவர்" என்று தெளிந்து மாமியிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு சற்று நில்லுங்கோ மாமி வாறன் என்று திரும்பிப் போய் சில ரூபாய் தாள்களும் கையில் கிடந்த காப்பையும் கழட்டி சாமியின் மடியில் போட்டு வாஞ்சையுடன் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு போகிறாள். அற்புதங்கள் தொடரும்....!
 23. 13 likes
  விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்கலாம் மேலதிக பசளை எதுவும் பல வருடங்களுக்குத் தேவையில்லை நிலப் பராமரிப்பு கிடையாது. வறட்சியான, உவர்ப்பான, பசளையற்ற, களித்தன்மையான எந்த நிலத்திற்கும் ஏற்றது நீர் சிறிதளவு போதுமானது ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. மழை காலங்களில் முற்றாக நீர்ப்பாசனத்தை நிறுத்தலாம். களைகள் அதிகம் வளராது. இன்னும் பல இப் பயிற்செய்கை முறையினால் குறுகிய இடத்தில் குறைந்த நீருடன் இலவசப் பசளையுடன் குறைந்த பராமரிப்புடன் இயற்கையான பரக்கறிகளை உற்பத்தி செய்யலாமே தவிர அமோகமான விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். செய்முறை நிலத்தில் 1.2 மீற்றர் அகலமாகவும் உங்கள் வசதிக்கேற்ப நீளமானதுமான நீள்சதுரத்தைத் தெரிவு செய்யவும். சூரியனின் பாதையில், அதாவது கிழக்கு மேற்காக நீளப் பகுதி இருப்பது சிறந்தது. இப் பகுதியை 30 சென்ரிமீற்றர் அளவில் தோண்டவும். தோண்டிய மண் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக இருந்தால் அம் மண்ணை நீள்சதுரத்தின் அருகிலேயே விடவும். இதன் அடிப் பகுதியில் இயற்கையான சிறு கற்கள் இருந்தால் பரவி விடலாம், இல்லாவிட்டால் பரவாயில்லை. அடுத்ததாக 5 - 10 சென்ரிமீற்றர் உயரத்துக்கு நன்கு உக்கிய சருகு, சாணி போன்ற சிறு பொருட்களால் நிரப்பிக் கொள்ளவும். இதன்மேல் உபயோகப் படாத காய்ந்த பெரிய மரக் மரக் கட்டைகள் , தென்னங் குற்றிகள் போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும். பச்சை மரத்தைத் தவிர்க்க வேண்டும். மரம் அதிக தடிப்பாக இருப்பது இன்னும் நல்லது. அடுத்ததாகப் பயன்படாத சிறிய காய்ந்த மரக் கிளைகள், குச்சுகள் தென்னை மட்டை, பாளை போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும். மரக் குச்சுகளின் இடைவெளிகளில் சாணி, ஆட்டுப் புழுக்கை, உக்கிய சருகு, உமி போன்ற சிறு இயற்கைப் பசளைகளால் நிரப்பவும். இதன்மேல் தோண்டி வைத்திருக்கும் மண்ணால் அல்லது தோட்ட மண்ணால் மூட வேண்டும். இப்போது இது கூரான வரம்பு போல் காட்சியளிக்கும். இறுதியாக வைக்கோல் துண்டுகள், ஓலைத் துண்டுகளால் முற்றாக மூடவும். இந்த வரம்பின் குறுக்கு வெட்டைப் பார்த்தோமானால் இவ்வாறு இருக்கும். வரம்பின் உச்சியில் ஓட்டையுள்ள சிரட்டைகளை, ஓட்டைகள் கீழ்ப்புறமாக இருக்குமாறு நில மட்டத்திற்கு அமிழ்த்தி விடவும். இதற்குள்தான் நீர் பாசனம் செய்யவேண்டும். மறக்காமல் சில மண்புழுக்களையும் பிடித்து வரம்பிற்குள் விடுங்கள். hugelkultur வரம்பு தயார். மேலுள்ள வைக்கோல் படையைச் சிறிதாக விலக்கிவிட்டுப் பயிர்களை நட்டு மீண்டும் வைக்கோலால் மூடி விடவும். பயிர்களின் வேர்கள் மண் படையைத் தாண்டி அடியிலுள்ள மரங்களைத் தொடப் போகின்றது. இந்த மரக் கட்டைகள் சிறிது சிறிதாக உக்கியபடி பயிருக்குத் தேவையான அத்தனை பசளைகளையும் கொடுக்கும். அத்துடன் நீரையும் உறிஞ்சி வைத்து படிப்படியாகப் பயிருக்கு வழங்குவதுடன் மண்ணுக்கு வேண்டிய காற்றோட்டத்தையும் வழங்குகிறது. முதல் வருடத்தில் மரம் உக்கத் தொடங்குவதால் அதிக விளைச்சல் இராது. மரக் கட்டைகளின் தன்மையைப் பொறுத்து சுமார் 20 வருடங்கள் வரை பயிச்செய்கை செய்யலாம். அதுவரை நிலத்தைக் கொத்திப் புரட்டவோ வேறு பசளைகள் சேர்க்கவோ தேவையில்லை. மேற்புறத்தில் உள்ள வைக்கோல் உக்கி மறைந்து விட்டால் மீண்டும் வைக்கோல் சேர்க்க வேண்டும். மேற்புறத்தில் அமிழ்த்திய சிரட்டைகளுக்குள் நீர் விட்டால் போதுமானது. சிரட்டைகளிலுள்ள நீர் வரம்பினுள் பரவ, மரக் கட்டைகள் அதனை உறிஞ்சிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. வைக்கோல் படை நீர் ஆவியாகாமல் தடுப்பதுடன் களைகள் முளைப்பதையும் தடுக்கும். அத்துடன் நத்தை மற்றும் சில பயிரின் இலைகளை உண்ணும் புழுக்கள் வராமல் தடுக்கும். வெவ்வேறு விதமான பயிர்களைக் கலந்து நடலாம். இடையிடையே சீல காஞ்சோண்டி, செவ்வந்திச் செடிகளையும் நட்டு விடுங்கள். இவை சில நோய்களையும் பூச்சிகளையும் நெருங்க விடாதாம். நீங்களும் சிறிய வரம்பு ஒன்றை உங்கள் தோட்டத்தில் ஒரு ஓரமாக அமைத்துப் பாருங்கள். அக்கம் பக்கத்தில் பட்ட மரம் இருந்தால் அதனை சேகரித்து வையுங்கள். தயார் செய்வதுதான் ஓரளவு சிரமம். பராமரிப்பு பெரிதாகத் தேவையில்லை அதுவும் வரம்பு உயரமாக இருப்பதால் நின்றபடியே களை பிடுங்கவும் பயிர் நடவும் முடியும். இனி hugelkultur முறையில் வேறு விதமான எனது அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன்.
 24. 13 likes
  http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்தியில் அது பற்றிப் பேசுகிறேன். மனதைப் புரட்டிப்போடும் ஒரு படைப்பை நுகர்ந்தபின், அது பற்றி யாரிடமாவது பேசாது இருப்பது முடியாதகாரியம். இன்று காலை வேலைக்குப் போகும் போது புகையிரதத்தில் இக்கதையினைப் படித்தேன். வேலைக்கு லீவு போட்டுவிட்டுப் பதிவெழுதுவோமா என்று தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் கதையின் அதிர்வை ஒளித்துவைக்க முடியவில்லை. இப்போது வீடு மீழும் புகையிரத்தில் இருந்து இதனை எழுதுகிறேன். இங்கு இருவிடயம் பேசுவது எனக்கு அவசியமாகிறது. ஓன்று கதை. மற்றையது கதைசொல்லி. முதலில் கதைசொல்லி பற்றிப் பேசிவிடுகிறேன். அனைத்துப்படைப்பாளிகளும் தமது அனுபவத்தில் இருந்தே படைப்புக்களை உருவாக்குகின்றனர். ஆனால், இயன்றவரை தமது அனுபவத்தின் மூலத்தை மறைப்பதை அனைவரும் அவசியமாகக் கருதுகின்றனர். இதற்கு சட்டரீதியான பிரச்சினைகள், தாம் தம்மைப் பற்றிக் கட்டிவைத்திருக்கும் விம்பத்தினைக் காத்துக்கொள்ளல் முதலான ஒரு முனைக்காரணங்களும், அனுபவங்கள் சார்;ந்த படைப்பாளியின் வாசிப்பு சார்;ந்து உள்ளார்ந்து படைப்பாளிக்குள் எழும் அதிர்வுகளால் பார்த்த படம் மாறிப்போவது போன்ற பிறிதொரு முனைக்காரணங்களுமாகப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுய அனுபவத்தை மறைப்பதை அனைவரும் தலையாய கடனாகச் செய்துவருகின்றனர். இந்தக் கதையில் மாறாக, சோபாசக்தி இதனை ஒரு வாக்குமூலமாக முன்வைக்கிறார். விடுதலை வேண்டி உளவியல் மருத்துவரின் கதிரையில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல் கொட்டிவிடுகிறார். தன்னைப் புரிந்துகொள்ளும் படியும் மன்னிக்கும் படியுமாக இலக்கின்றி இறைஞ்சுகிறார். ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுகிறது. கதை கதையாகவின்றி வாக்குமூலமாக வருகையில், வாசகர்கள் நீதிபதிகளாகிறார்கள். சோபாசக்தி இங்கு கோருவது கல்லெறிகளையும், தண்டனைகளையம், வசைகளையும் அதனூடான ஒரு ஆன்ம ஈடேற்றத்தையுமே. ஆனால் வாசகரால் அவரிற்கு அதனைக் கொடுக்க முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஓன்று சோபா தன்னைச் சார்ந்து புனிதர் விம்பத்தை வளர்க்காதமையினால், அவர் சார்ந்து வாசகர் எதையும் சாத்தியம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஏந்தப் பாவத்தையும் அவர்களால் சோபாவில் பாவம் என்று பார்;க்க முடியாதபடி சோபாசக்த்தி என்பவர் பெறுமதிகளைக் கடந்தவராக, எந்தப் பாதாளத்திற்கும் தீமைகளோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவராக, காமப்பேரரசாக, தூசண வார்த்தைகளைச் சுவாசிப்பராக, விலைமாதரோடே புளங்குபவராக இன்னும் எத்தனையோவாக, மொத்தத்தில் புனிதங்களின் எதிர்ப்பதமாக வாசகரின் மனங்களில் வேரூன்றி இருக்கிறார். இதை இப்படி உருவாக்கியதே சோபா தான். இயக்கத்தை விட்டுவெளியேறி தெற்கில் தண்டவாளத்தில் நடந்த பதின்மப் பையன் முதற்கொண்டு, எந்தப் படைப்பாகட்டும் சோபாவின் ஆண் குறியும் அதிலிருந்து வெளியேறும் சுரப்புக்களும் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமானவை. இரண்டு வகை வாசகர்கள் சோபாவிற்கு இருக்கிறார்கள்., ஒன்று ஆயத்தப்படாத ஆரம்பநிலையில் தெரியாத்தனமாகச் சோபாசத்தியின் கதையினை வாசிக்க ஆரம்பித்துப் பதின்வயதுப் பையன் பார்த்த நீலப்படம் போன்று அரைவேக்காட்டாய் சோபாவின் கதைகளை விளங்கி அதன் நிமித்தம் ஒரு பயங்கர விம்பத்தைக் கதைசொல்லி சார்ந்து உருவாக்கிக் கொண்டவர்கள். மற்றையவர்கள், நன்கு புரிந்து படித்து, கதைசொல்லியின் படைப்பாளி அனுமதிப்பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டவர்கள். இங்கு வேடிக்கை என்னவெனில், இந்த இரு சாராரில் எவராலும் சோபா இரஞ்சும் நீதியினை இக்கதை மூலம் அவரிற்குக் கொடுக்க முடியப்போவதில்லை. ஏனெனில் முதலாமவர் கட்டமைத்து வைத்திருக்கும் பயங்கர பாத்திரத்திற்குள் இந்தப் பாவம் மிகச்சாதாரணம். இரண்டாமவரிற்கோ, இதை ஏன் பாவன் என்று சொல்ல வேண்டும் என்ற மனநிலை இம்சைப் படுத்தும். கதைக்கு மேலால் இந்தவாக்குமூலம் சார்ந்து மேற்படி எழுகின்ற அதிர்வுகள் அடக்கமுடியா ஆர்ப்பரிப்பை உள்ளார்ந்து உண்டுபண்ணுகின்றன. இனிக் கதைக்குள் வந்தால். அட அட அட, எத்தனை இலகுவாக இந்த மனிதரால் இப்பிடிப் பின்னிப் பெடலெடுக்க முடிகிறது. கதையினைப் படிக்கின்ற புனிதர்களிற்குத் தாம் சுயவின்பத்தில் ஈடுபட்டோம் என்று தன்னும் தமக்குள்ளாகவேனும் ஒத்துக்கொள்வது கூடச் சிலசமயம் அசாத்தியமாகலாம். ஆனால், முதன் முதலில் பதின்மத்தில் அதுவும் இலங்கையில் இந்த அனுபவத்தைக் கதைசொல்லி வருணித்த விதத்தில் உணரவில்லை என்று எவரேனும் கூறின், ஒன்றில் அவர்கள் பொய் சொல்லுகிறாhகள் அல்லது அவர்கள் ஜடங்களாவே பிறந்திருக்கிறார்கள். முதற் தடைவ விந்து வெளியேறியதும், பயப்படாதவர் இருப்பது, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயின் அவர்கள் அசாதாரண மனிதர்கள். ஐம்பதுகளை எட்டும் சோபா சக்த்தியால் அந்தத் தருணத்தை இத்தனை தத்ரூபமாக விளக்க முடிவது மலைப்பேற்படுத்துகிறது. அது மட்டுமன்றி வேளாங்கன்னியினை அதற்குள் கொண்டுவந்து...பின்னிப் பெடலெடுத்திட்டான்யா.. பதின்மத்தில் தொடங்கி ஐம்பது வரை, காமம் புரியாத புதிராகக் கதைக்குள் இழையோடித் தொடர்கிறது. காமம் சார்ந்து பயங்களும், புரியாமைகளும் குளப்பங்களுமே வெளிப்படுகின்றன. "குற்றவுணர்வு என்பது உள்ளார்ந்ததாக, நன்கு புரியப்பட்டதாக, உண்மையானதாக, தன்னுடையதாகக் கதைசொல்லியால் முன்வைக்கப்படுகின்ற அதே நேரம் காமம் என்பது வெளியில் இருந்து வந்ததாக, விசித்திரமானதாக, புரியாததாக, தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவே வெளிப்படுகிறது. இதனால்த்தான், நூலகராக இருந்த திருவின் அக்காவைத் தூக்கி அப்புறப்படுத்தி விட்டு, மாயோளைக் கதைக்குள் கதைசொல்லி கொண்டுவருகிறார். மாயோளை வெளியில் இருந்து வந்தவளாக, விசி;த்திரமான பெயருடையளவாக, தனக்குத் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவளாக, மதிலில் பார்த்த தூசணவார்த்தை போன்றிருக்கிறது ஆனால் அவள் பெயர் அதுவல்ல என்பதாக, புரிகிறது ஆனால் புரியவில்லை என்பதைக் குறியிடுவதற்காக மாயோள் என்று பெயரிடுகிறார். அதாவது. தனக்கும் தனது வாசகரிற்கும் நன்கு தெரிந்த ஒரு வார்த்தையினை எடுத்து அதில் ஒரு எழுத்தை மாற்றி அதன் முன்னால் மாயை என்ற சொல்லைச் சேர்த்துக் கதைசொல்லி மாயோளைப் பிரசவிக்கிறார்;. அதனால் தான் இந்தக் கதைக்கு 'மாயோள்' என்பது அற்புதமான தலைப்பாக இருந்திருக்கும் என்றேன். ஆனால் அது இலக்கியத்திற்கு. இங்கு வாக்குமூலமாக விடுதலை கோரப்படுவதால் 'காயா' என்ற தலைப்புத் தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது. என்னதான் சோபாசக்த்தி வாக்குமூலத்தை வைத்து விடுதலை கோரினும், நெஞ்சை நிமிர்த்திப் பிளந்து காட்டினும் தனியே அவரால் சமூகத்தை எதிர்கொள்ளவோ அல்லது சமூகம் எடுக்கிற முடிவை எடுக்கட்டும் என்று விட்டுவிடவோ முடியாதபடி பாதியில் பயம் அவரைப் பற்றிக் கொள்கிறது. அங்கங்கு தனக்காகத் தானே வாதிட்டுகொள்வதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. தான் அத்தனை கெட்டமனிதன் அல்ல என்றும் சொல்லிக் கொள்ளுகிறார். ஆதானால் தான் பெரதேனியாவில் படித்த மீசை மளித்த திருச்செல்வம் மாயோளின் மார்பைப் பிடித்த கதையும் அதற்காக இயக்கப் பொறுப்பாளனாகத் தான் வளங்கிய தண்டனை பற்றியும் இந்தக் கதைக்குள் பேசுகிறார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற யாழ்ப்பாணத்தானின் பாவபுண்ணிய மனநிலையையும் தனக்குத் துணைக்களைக்கிறார். திருவின் வாயாலேயே அதனைச் சொல்லவும் வைக்கிறார். திருகோணமலைச் சாமியாரும் பவானியும் குவியமும் என்று பேசுகிறார். ஒரு முனையில் நீதிகோரித் திறந்த கையுடன் முன்வரும் சோபா பாதியில் பயம் பற்றிக் கொள்ள நாயகன் கமலகாசனைப் போல் 'அவனை நிறுத்தச் சொல்லு இவனை நிறுத்தச் சொல்லு' என்று புலம்புவதையும் தவிர்கமுடியாதவராகிப் போகிறார். அந்தத் தவிப்புக் கதையினை இலக்கியத்தரத்தில் எங்கோ உயரத்தில் தூக்கி அமர்த்துகிறது. பெறுமதிகளிலிருந்து விட்டுவிடுபடல் என்பது ஞானிக்கும் முற்றாகச் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அத்தனை பெறுமதிகளையும் எத்தனை நக்கல் பண்ணினும் பெடபீலியாவினைக் கடந்து சென்றுவிட முடியாதவராகக் கதைசொல்லி பாவமன்னிப்புக் கோரிப் பம்முவதைப் பாத்ததுச் சமூகம் தனது முப்பதாயிரம் வருடத்து வேரைக் காட்டி முறுவலிக்கிறது. இன்றைய நாள் முழுவதும் நான் ஏறி மிதந்து திரிந்த அலாடினின் பாயாக இக்கதை எனக்குள் பதிகிறது.
 25. 13 likes
  நம்பிக்கையும் ஏமாற்றமும். “என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள், பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். “ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி.“ என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச் சமைந்து நின்றான். தேவலோகத்து ரம்பை ஊர்வசிகளைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத அழகுநிறைந்தவள் நந்தினி. காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் அழகியான ராதாகூட நந்தினின் அழகு கண்டு பிரமித்தவள். திருமணமாகி நந்தினி அந்தப் பக்கத்து வீட்டிற்கு வந்தபோது கர்வியாக இருப்பாளோ....! என்றெண்ணிப் பழகத் தயங்கியவள் ராதா. அவள் கணவன் நந்தினியின் அழகுபற்றி ஏதாவது ஒரு சொல் சொன்னாலே பொருமியவள். போகப் போக நந்தினியின் பூப்போன்ற உள்ளம்கண்டு புன்னகைபூக்க....! அந்தப் புன்னகையே அவர்களைத் தோழிகளாக இணைத்தது. அந்தரங்களையும் கூச்சமின்றிக் கதைக்கும் அளவிற்குச் சினேகிதிகளாக்கி விட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது இருவரின் அழகு கண்டு தடுமாறும் இளவட்டங்களைக் கண்டு, தங்களுக்குள்ளேயே கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள். பவானியம்மாளும் நந்தினியை உள்ளம்கையில் வைத்துத் தாங்கினாள். கணவன் நந்தகுமாரோ...! சித்தெறும்புகூட வீட்டிற்குள் நுளையாது பார்த்துக்கொண்டான். இப்படியே இனிமையாக இரண்டு வருடங்கள் பறந்தோடிவிட்ட நிலையில்தான்,! இரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தினால்.! பவானியம்மாளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அற்ப விடயங்களுக்கெல்லாம் குறைகண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் கவலைகொண்ட நந்தினி அவளது கவலைகள்பற்றி ராதாவோடு மனம்விட்டுக் கதைத்தபோது....! “நந்தினி எனக்குத் தெரிந்த லேடி டாக்டர் ஒருவர் இருக்கிறார் நீ அவரிடம் சென்று செக்கப் பண்ணிப் பார். உன்னிடம் குறையில்லை என்றால் உன் கணவரைச் செக்கப்பண்ணச் சொல்லு.“ என்று அறிவுரை வழங்கினாள். “சரி“ என்று நந்தினியும் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்றாம் நாள் அவளிடம் குறை எதுவும் இல்லையென்று ரிப்போட் வந்ததை அடுத்து தன் கணவனைச் செக்கப்பண்ணச் சொன்னபோதுதான் பிரளயமே வெடித்தது. நந்தகுமாரும் தன்னில் குறையில்லை, தான் பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லயென்று உறுதியாக நம்பினான். அதற்குக் காரணமும் இருந்தது. முன்பு ஒருமுறை நந்தினிக்கு நாட்கள் தள்ளிப்போனபோது. வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது ஆனாலும் அந்த மகிழ்ச்சி ஆறேழு நாட்களிலே அற்றுப்போனது. கொடுத்ததைப் பாதுகாக்க முடியாத குறையை அவள் உடல் கொண்டிருப்பதாக அவன் பூரணமாக நம்பினான். அதற்காக அவளைப் பரிசோதனைக்கு அனுப்பிப் பார்க்க அவன் விரும்பவில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டும் என அவன் இருந்துவிட்டான். அத்தோடு பக்கத்துவீட்டு ராதா குடும்பம் தங்களுக்கு 5 வருடங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று செயற்கையாகவே முயற்சிகள் செய்யும்போது.... தங்களுக்கு இயற்கையாகவே அந்த வரம் கிடைத்திருப்பதை வரவேற்கவே செய்தான். நந்தினியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டிப்பார்க்காத நந்தகுமாரைத் தாயின் உத்திர தாண்டவம் ஆட்டங்கொள்ளச் செய்தது. “அம்மா எத்தனையோ குடும்பங்களில் பத்து வருடங்களுக்குப் பின்பும் குழந்தை கிடைத்துள்ளது எங்களுக்கு இரண்டு வருடங்கள்தானே,“ எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றான். மகனின் ஆதங்கத்தைக் கண்டு இறங்கிவந்த பவானியம்மாள், “சரி இன்னமும் ஒருவருடம் பார்க்கிறேன், அப்போதும் இல்லையென்றால்....! உனக்கு வேறு கலியாணம்தான். நீ மறுத்தால் இந்த உலகைவிட்டே நான் போய்விடுவேன்.“ என்று மகனை ஆட்டம்காணச் செய்து அவனிடம் சத்தியமும் வாங்கிவிட்டாள். . நந்தினியின் கணவன் நந்தகுமார் பரிசோதனைக்கு உட்பட மறுப்பதை அறிந்த அந்தப் பெண் வைத்தியரின் ஆலோசனைப்படி, பிறிதொரு நாளில் நந்தகுமாருக்கு வந்த சாதாரண நோய்க்கு மருந்தெடுக்கும் சாட்டில், ராதாவின் கணவனே நந்தகுமாரை அந்தப் பெண் வைத்திரிடம் கூட்டிச் செல்லவே சந்தேகம் எதுவும் இன்றி, வைத்தியரும் தனது பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையுமே பெற்றுக்கொண்டார். சோதனையின் முடிவை வைத்தியர் நந்தினியை மட்டுமே தனியாக அழைத்துத் தெரிவித்தார். நிவர்த்தி செய்யக்கூடிய குறையே அவள் கணவனுக்கு இருப்பதாகவும். அதற்கான மருந்தைப் பாலில் கலந்து ஒரு மாதம் மட்டும் கொடுத்தால் போதும். பலன் ஆறுமாதங்களின் பின்பு நிச்சயம் எனவும் தெரிவித்தார். என்னதான் கூச்சல் போட்டாலும், மாமிக்கு மருமகளிடத்தில் அன்பு, பாசம் இல்லையென்று கூறிவிட முடியாது. தன் மகனைக் குறைகூறிவிட்டாளே…! என்ற ஆதங்கமே அவரை உருக்கொண்டு ஆடவைத்தது. சிறிதுநாளில், சற்று ஆத்திரம் அடங்கியதும் மருமகளைக் கடிந்துவிட்டோமே என்ற கவலை அவரை வாட்டியது. மருமகளைக் கூப்பிட்டு ஆறுதல் கூறத்தொடங்கினார். “நந்தினி குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைப்பது. உந்த டாக்குத்தர்மாருக்கு உது ஒன்றும் புரியாது. என் சித்தப்பா இருக்கும் ஊரில் உள்ள அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவர். தற்போது அந்த அம்மனின் ஆச்சிரமத்தில் இருக்கும் இரண்டு சாமிமார்கள் சாத்திரம், குறி பார்ப்பது, காண்டம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்களாம். பலருடைய குறைகளைக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரமும் சொல்லிப் பலனடைய வைத்துள்ளார்களாம். சித்தப்பாவின் இருக்கும் ஊருக்கு இங்கிருந்து ஒரு நாளில் சென்றுவர முடியாது ஆகவே நீ அங்கு ஒருமுறை சென்று சித்தப்பா வீட்டில் ஒருநாள் தங்கி, அம்மனின் அருள்பெற்று உன் சாதகத்தையும் சாமிமார்களிடம் கொடுத்து உன் குறைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிந்துவா!“ என்றார். நந்தினியால் அதை மீறமுடியவில்லை. நந்தகுமாருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை பெறுவது கடினமாக இருந்தது. சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தாயை ஆறுதல்படுத்த வேண்டி நந்தினியை அனுப்பவேண்டிய தேவையும் இருந்தது. ஆகவே தன் மனைவியின் தோழியான ராதாவையும் அழைத்துச்செல்ல அவள் கணவனிடம் அனுமதியும் யாசிக்கப்பட்டது. நிலமையின் தாக்கத்தை உணர்ந்த அவரும் அனுமதி அளித்தார். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நந்தினியும், ராதாவும் வேறு வழியின்றிப் புறப்பட்டனர். “இன்று மாலை கோவிலிலே அன்னதானம் வழங்குவார்கள். பூசை முடிய 10மணியாகும் அதன்பின்புதான் சாமிமார்கள் உங்களின் குறைகளைக் கேட்டுப் பரிகாரமும் சொல்வார்கள். சாமத்தில் இங்கு திரும்ப வருவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அங்கே மடத்திலேயே படுத்துறங்கவும் வசதியுள்ளது. காலையில் புறப்படும் பேரூந்தில் நேராகஊருக்கும் சென்றுவிடலாம்“ பவ்வியமான சித்தபாவின் கூற்றில் கஞ்சத்தனம் கடுகளவும் குறையாது தெரிந்தது. அம்மன் பூசை முடிந்து அன்னதானமும் அருந்தியபின் சாமியார்களிடம் தங்கள் குறையறிந்து பரிகாரம்தேடவந்த பக்தர் கூட்டம் சாமிகளைச் சுற்றி இருந்தது. தங்கள் தியானத்திலிருந்து கண்களின் இமைகள் திறந்த சாமிகளைக் கண்டு பக்தர்களி்ன் முகங்கள் மலர்ந்தன. ஆனால் சாமிகளின் முகங்களோ…! நந்தினி ராதா என இருவரது முகங்களையும் கண்டு மலர்ந்தது. இவர்களைக் கண்டு வியக்கும் மனிதர்கள் பலரைக் கண்டு பழகிவிட்டதால் இருவருக்கும் அது பெரிதாகத் தெரியவில்லை. கைவிரல்களை மடித்தும், எண்ணியும், கண்கள்மூடித் தியானித்தும் பக்தர்கள் கொண்டிவந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தும், அவற்றில் கண்டுகொண்ட குறைகளுக்கான பரிகாரங்களைச் செய்வதற்கான நாட்களையும் மின்னல் வேகத்தில் தெரிவித்த சாமியார்கள் நந்தினி ராதா இருவரது குறிப்பேடுகளைப் பார்த்ததும் உடனேயே இவற்றுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனக்கூறி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் ஏவல் ஆட்களுக்குக் கட்டளைகளை இட்டபின், ஏனைய பக்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் கிடைத்த அதிட்டத்தைக் கண்டு பக்தர்களும் அவர்களை வாழ்த்திக் கலைந்தார்கள். “இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா“ என வினவினார்கள். “ஆமாம் உள்ளது“ எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர். குடிலின் உள்ளே இருந்து வந்த நறுமணம் இனம்புரியாத உணர்வை உண்டுபண்ணியது. ”அம்மா இப்படி அமருங்கள்.“ சாமிகளில் ஒருவர் இனிமையாக அழைத்து தனக்கு எதிரில் இருக்க வைத்தார். அவரின் இருபக்கமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. “அம்மா உங்களுக்கு அம்மனின் ஆசி பரிபூரணமாய் கிட்டட்டும்“ என்று தனது இரு கைகளையும் இருவரின் தலைகள்மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க, அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். “ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. “அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது. சாதகக் குறிப்பை மீண்டும் புரட்டிப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ”ஆகா.! மிக அருமையான ஜாதகங்கள்.! என்றவர், ஏதோ மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், “பரிகாரத்தை ஆரம்பிக்கலாம்“ என்றார். வீபூதியை எடுத்து கண்களை மூடச்சொல்லி இருவரது முகங்களிலும் ஊதினார். ஊதிய சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏதோ மயக்கம் வந்ததுபோல் தெரிந்தது. மலர்ந்த இன்முகத்துடன் மயங்கி உறங்கினார்கள். பறவைகளின் சத்தமும் வானத்தின் சிவந்த ஒளியும் விடியலை உணர்த்தியது. கண்விழித்தபோது அடித்துப் போட்டதுபோல் உடம்பெல்லாம் வலி, எழமுடியாது அவர்கள் தலைகள் சுற்றியது. மிகவும் சிரமப்பட்டு இருவரும் எழுந்தபோதான் நடந்ததவை நினைவிலும், உணர்விலும் தெரிய விழிபிதுங்கி அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் நிலையைக்காண.... அங்கு எவரும் இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே முடியாத நிலையில் கூனிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நடந்தவற்றை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தையும் மனதுக்குள்ளே இறுகப் பூட்டிவைப்பதென முடிவானது. சாமிகளின் பரிகாரம் முடிந்து வந்து மாதம் ஒன்றும் கழிந்து, சிலநாட்களில் பவானியம்மாள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவித் குதித்தார். பெற்ற தாயைவிடவும் அன்போடு மருமகளை அரவணைத்தார். தானே அவள் முகத்தைக் கழுவித் துடைத்து வீபூதி குங்குமம் இட்டு அழகுபார்த்தார். சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே...! மருமகளுக்காக அதைத் தானே உண்ணமுடியாத நிலைமைக்கு வருந்தினாரென்றால் பார்க்கவேண்டுமே...! அத்தனை கவனிப்பு...!! இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....! நந்தினியின் கண்கள் பனித்தது. ராதா அவள் கண்ணீரைத் துடைத்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணசைத்தாள்.
 26. 13 likes
  (படம் இணைத்திலிருந்து....) ஏதோ... ஒரு உத்வேகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரியை ஆரம்பித்து விட்டேன். (இடையில்... "ஜகா" வாங்குவமா என்று யோசித்த போதும்.....) பலரும் ஆவலுடன் இந்த திரியை எதிர் பார்த்து... உற்சாகத்துடன் இருப்பதால், இதனை தொடர்ந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமையை ஏற்படுத்தி விட்டது. எனது 25 வயதில், இங்கு வேலை செய்ய ஆரம்பித்தேன். முதலில் குறுகிய காலங்கள் வேலை செய்த இடங்களில்... ஒன்றிரண்டு துருக்கியர் வேலை செய்தாலும், அவர்களும் தங்கள் வேலையும் என்று இருந்த படியால்... மற்றவர்களைப் போல் தான் இவர்களும் இருப்பார்கள் என்பதால்... அவர்களை அவதானிக்கும் படியாக வித்தியானமான நடவடிக்கைகள் இருக்கவில்லை. பின் எனக்குப் பிடித்த ஒரு இடத்தில்... வேலையை ஆரம்பித்த போது, அங்கு 5800 பேர் வேலை செய்யும் இடம். அதில்... ஆயிரம் பேரளவில் துருக்கியர் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அவதானித்த போது... அவர்களின் செயல்கள், நடவடிக்கைகள் யாவும் சிரிப்பையும், சில சினத்தையும்... வரவழைக்கக் கூடியதாக இருந்தது. ஒரு சில துருக்கியர் விதி விலக்காக இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். துருக்கியருடன்... இரண்டு தலைமுறையினருடன் வேலை செய்த படியால்.... முதல் தலைமுறைக்கும், இங்கு பிறந்து வளர்ந்த தலை முறைக்கும் பாரிய வித்தியாசத்தை தெள்ளத் தெளிவாக காண முடியும். முதலாவது தலை முறை... இரண்டாவது உலகப் போர் முடிந்த வேளை, ஜேர்மனியில் வேலைக்கு ஆண்கள் பற்றாக்குறை காரணமாக, சகட்டு மேனிக்கு... இங்கு அழைத்து வரப் பட்டவர்கள். பெரும்பாலோருக்கு.... எழுதவோ, வாசிக்கவோ தெரியாத நிலைமையில் இருந்தார்கள். போரில் சிதைவுண்ட இடங்களை.... அவசரமாக மீண்டும் கட்டி எழுப்புவதற்காக மனித உழைப்பு தேவைப்பட்டதால்... அவர்களின் கல்வி அறிவு கணக்கில் எடுக்கப் படவில்லை. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல்.... பழைய துருக்கியர் எல்லோரும், ஜனவரி முதலாம் திகதி பிறந்ததற்கு உரிய காரணத்தை அவர்களிடம் கேட்ட போது... தாம் எல்லோரும் கிராமப் பகுதிகளில் இருந்து வந்ததாகவும், ஒவ்வொரு பிள்ளையும் பிறக்க, நகரத்தில் உள்ள சம்பந்தப் பட்ட அலுவலகத்துக்குப் போய், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எடுக்க நேரத்தை செலவழித்தால்... இங்குள்ள விவசாயம், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை யார் கவனிப்பது என்பதால்.... அந்தந்த ஊரில் 10 - 15 குழந்தைகள் பிறந்த பின்பு, எல்லோரின் பெயரையும் எடுத்துக் கொண்டு ஒருவர் நகரத்துக்கு சென்று, அவர்களின் பெயர்களை... ஜனவரி 1´ம் திகதி பிறந்தவர்கள் என்று பதிந்து விடுவார்களாம். இதில் சிலர் 4 - 5 வருடம் கழித்து பதிந்தவர்களும் உண்டு. அவர்கள் தமது தள்ளாத வயதில், வேலை செய்ததை கண்டுள்ளேன். சிலர்... அவர்களின் பதிவுப் படி இன்னும் சில ஆண்டுகள் வேலை செய்தால் தான், முழுமையான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற போதிலும், உடல் ஒத்துழைக்காததால்.... மருத்துவ சான்றிதழுடன்.. ஓய்வு எடுத்து விட்டு, "சயிஸ டொச்லான்ட்" என்று விட்டு, ஊருக்கு சென்று விட்டார்கள். இன்னும் வரும்....
 27. 12 likes
  என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவளே...! தோற்றத்தில்…, நீ கொஞ்சம் பெரிசு தான்! அதுவும் நல்லது தானே! அதிலும்,,, ஒரு வசதி தெரியுமா? எந்த தேசத்தின் பணமானாலும், உனது ஆடைகளுக்குள் இரகசியமாக, மறைத்து விடலாமே! உன்னை அடைவதற்கு.., நான் பட்ட பாடு…, உன்னைத் தொடுவதற்கு, நான் கடந்த தடைகள், அப்பப்பா..! இப்போது நினைத்தாலும், இதயத்தில் இலேசாக வலிக்கிறதே! விதானையிடம் கூட…, கையெழுத்துக்கு அலைந்தேன்! விதானையின் விடுப்புக்களுக்கு…, விடை சொல்லிக் களைத்தேன்! பாம்புகள் போல நீண்ட வரிசைகளில், பல பகல் பொழுதுகள்..,, பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்! நாளைக்கு வந்திருவாள் என்றார்கள், நாலு நாட்கள் எடுத்தது! சில வேளைகளில்.., உனது அழகிய மேனியில்.. அன்னியர்கள் சிலர், ஓங்கிக் குத்துவார்கள்! அந்த வேளைகளில்.., உன்னை விடவும், எனக்குத் தான் வலிக்கும்! ஒரு நாள்…, உன்னை அந்நியர்களின் வீட்டில், அனாதரவாய்க் கை விட்டேன்! எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா? உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்! எனக்கோ, இரவு முழுவதும் தூக்கமேயில்லை! எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்.., இமைகளை மூட முடியவில்லை! விடிந்ததும்.., ஓடோடி வந்தேன் உன்னிடம்! உன்னைக் காணவில்லை என்றார்கள்! இதயத்தின் துடிப்பே,,,. அடங்கிப் போன உணர்வு! இரண்டு நாட்களின் பின்னர்.., அந்த உத்தியோகத்தரின், 'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,, உனது சக தோழிகளுடன்.., நாலாவது காலாகி..... நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்! அப்போதும் கூடப் பார்..! உனது கறுப்பு நிறம் தான்…, உன்னை மீட்டுத் தந்தது! பத்து வருடங்களின் பின்னர்…, இன்னொரு காதலி வந்தாள்! நீ எனது முதல் காதலியல்லவா? உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை! கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்! வஞ்சகர்கள் அவர்கள்! இரண்டு லட்சம் கேட்டார்கள்! இரண்டு லட்சத்தை.., எங்கே தேடுவேன்! அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்! என் சொந்தங்கள் மீது,,,, எரி குண்டுகள் போடவாம்! ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்! உனது முகம் வாடியது தெரிந்தது! இறுக்கமாய் மனதை வரித்து, உன்னிடம் சொன்னேன்…! சரி தான் …. போடி! (உருவகக் கவிதை)
 28. 12 likes
  ரஜனிகாந்த் ஒரு நடிகர், உலகில் உள்ள அனேகமான சினிமா கலைஞர்கள் போன்றே பணம் வாங்கி நடிக்கும் நடிகர். அத்துடன் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுதுமாகக் கொண்டவர். ஆயிரம் வாக்குறுதி கொடுத்து விட்டு அதிகாரத்துக்கு வந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்யும் அரசியல்வாதி அல்ல. அவர் யாழ்ப்பாணம் வரவிருப்பின் தாராளமாக வந்து தன் ரசிகர்களை/ ரசிகைகளை மகிழ்விக்கட்டும். அவ் நிகழ்வை லைக்கா நடத்துகின்றது எனில் தாரளமாக நடத்தட்டும். லைக்காவின் திரைப்படங்கள் அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்படும் போது அமைதி காத்தவர்கள் இப்பவும் அமைதி காத்துக்கொள்ளுங்கள். மரண வியாபாரி மோடி வருவது பிரச்சனை இல்லை. ரப்பர் ஸ்டாம்பாக இருந்த தலையாட்டி பொம்மை அப்துல் கலாம் வருவது பிரச்சனை இல்லை. எண்ணற்ற சாத்திரகாரர்களும் இயேசு ஜீவிக்கின்றவர்களும் வருவது பிரச்சனை இல்லை. அதிக வட்டிக்கு கடன் கொடுத்து மக்களின் நிம்மதியைக் கெடுத்த பல வங்கிகள் / நிதி நிறுவனங்கள் வருவது பிரச்சனை இல்லை. எயார் ரெல் போன்ற யுத்தத்திற்கு நேரடியாக ஆதரவு கொடுத்த நிறுவனங்கள் வருவதும் பிரச்சனை இல்லை. ஆனால் ஈழத்தமிழருக்கு எந்த கெடுதலும் செய்யாத ரஜனிகாந்த் வருவதுதான் பிரச்சனை என்றால் பிரச்சனை உண்மையில் யாருக்கு இருக்கு என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன், நடிகர்கள் வந்தால் யாழ்ப்பாண மக்கள் சினிமா மோகத்துக்குள் சிக்கிவிடுவார்கள் என்று சொல்வதே யாழ்ப்பாண மக்களை மட்டம் தட்டி கேவலப்படுத்தும் கருத்தாகத்தான் பார்க்க முடிகின்றது. கோடை காலம் வந்தாலே போதும் எத்தனை தமிழ் நடிகர்கள்/ நடிகைகள் புலம்பெயர் நாடுகளுக்கு வருகின்றனர். எத்தனை சினிமா நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்கின்றது. ஆயினும் எவரும் புலம்பெயர் இளைய சமூகம் சினிமா மாயைக்குள் சிக்க போகின்றது என எவரும் சொல்வதில்லை. ஆனால் யாழ்ப்பாண / தாயக மக்கள் மட்டும் சிக்கி விடுவார்கள் என்று சொல்வது அவர்கள் மீது எத்தகைய பார்வையை இவர்கள் சொல்கின்றவர்கள் வைத்து இருக்கினம் எனக் காட்டுகின்றது.
 29. 11 likes
  ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர். நானும் மகனும் நிதானமாக இறங்கி விமான நிலைய குடிவரவு பகுதிக்கு செல்லும் போது மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. நேரம் அதிகாலை 1 மணி இருக்கும். வேறு இரு விமானங்கள் தாமதமாக வந்தமையால் ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிறங்கியதாகவும் அதனால் தான் பெரிய வரிசை என்றும் ஒரு சில பணியாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. சென்னை விமான நிலையம் பற்றிய செய்திகள் கேள்விப்பட்டு இருந்தமையாலும் அதிகாரிகள் மிகவும் அசமந்தமாக நடப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருந்தமையாலும் வரிசை மிக மெதுவாக நகரும் என நினைத்து சலிப்படைய ஆரம்பித்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக வரிசை வேகமாக நகரத் தொடங்கி என் முறை வந்தது. நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார். சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன. ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது. அந்த உற்சாகத்தில் duty free shop இற்கு சென்று இரண்டு Glenfiddich Whisky வாங்கிக் கொண்டு (அதற்கு மேல் வாங்க முடியாதாம்) பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு (அவையும் விரைவாக வந்து விட்டன) வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர். அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன். 7 வயதில் பார்த்த அக்காவின குட்டி மகன்16 வயது நெடு நெடுவென 6 அடிக்கு வளர்ந்து இருக்கும் பெரிய பெடியனாக காணுகின்றேன். அத்தான் இந்த 9 வருடத்தில் இலங்கையை சேர்ந்த கப்பல் போக்குவரத்து கம்பெனியில் regional manager ஆக தன் தொழில் துறையில் வளர்ர்சி அடைந்து நிற்கின்றார் (சென்னையில் தான் அதன் அலுவலகம்). ஒன்றரை வயதுக்கு பின Skype இன் மூலமாக மட்டுமே பரிச்சயமாக இருந்த அக்காவின் குடும்பத்தினை என் மகன் காணுகின்றான். எப்படியான உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் என் கைகளை இறுக்கிப் பிடிச்சு கொண்டு ஆள் நிற்கின்றான். முற்றிலும் மாறான ஒரு தேசத்தில் தனக்கு பழக்கமில்லாத ஒரு குடும்பத்துடன் எந்தளவுக்கு ஒன்றிப் போவான் என்பது எனக்குள் ஒரு கேள்வியாக எழுந்தது. என் பயணத்திட்டத்தின் படி மூன்றாம் நாள் நான் அவனை சென்னையில் விட்டுவிட்டு இலங்கைக்கு செல்ல வேண்டும். இலங்கையில் எனக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருந்தமையால் அவனை கூட்டிக் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இலங்கைக்கு கூட்டிச் செல்ல நினைக்கவில்லை. சாமம் மூன்று மணிக்கு அக்காவின் apartment வந்த பின் 4 மணிக்கு படுக்க போய் நல்லா அயர்ந்து நித்திரை கொள்ளும் போது சரியாக 6: 30 இற்கு பெரும் சத்தத்துடன் ஏதோ தொம் என்று விழுகின்றது. என்னவென பார்த்தால் அந்த கட்டிடத்தின் தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் குழாய் உடைந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியிருந்தது.....அதாவது அபார்ட்மென்டுக்கான தண்ணீர் அதை திருத்தும் வரை கிடைக்காது. நான் வந்த அதிஷ்டத்தினை தண்ணீரை நிறுத்தி அபார்ட்மென் கொண்டாடத் தொடங்கியது (சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)
 30. 10 likes
  நான் அந்தக் கட்டடத்தின் பெரிய அறை ஒன்றைத் திறந்து கொண்டு உள்நுழைகிறேன். "நான் ஆர்? நான் ஆர்? நான் ஒருத்தனுக்குத்தான் மூண்டு பிள்ளையளையும் பெத்தனான். ஒருத்தன் என்னைப் பாத்து என் நடத்தையில பிழை எண்டு சொல்லட்டும். அவன்ர வாயைக் கிழிச்சு வச்சுத் தச்சுப்போடுவன். எளிய நாய் அவன். எளிய நாய். என்னோட படுத்து மூண்டு பிள்ளைப் பெத்த பிறகும் என்னைப்பற்றி கூடாமல் சொல்லிக்கொண்டு திரியிறான்" என்ற பெரிய கூச்சலைக் கேட்டபடி தொடர்ந்து உள்ளே செல்வோமா அல்லது இப்பிடியே நிர்ப்போமா என்று மனதில் குழப்பத்துடன் நின்ற என்னைப் பார்த்து "வாங்கோ வந்து இருங்கோ" என்று விட்டு " அமைதியாய் இருங்கோ. ஆக்களுக்கு முன்னால உப்பிடிக் கத்தக் கூடாது என்று கத்திய பெண்ணை முதுகில் தடவி அமைதிப்படுத்தியபடி என்னைப் பார்க்கிறார் ரஞ்சி. பெண்களுக்கான ஒன்றுகூடலில் என்னை விசேட விருந்தினராக அழைத்திருந்தனர். நான் வாய்காரி என்று ஒருபக்கம் பெயர் எடுத்திருப்பது அப்பப்ப எனக்குக் கவலை தருவதுதான் என்றாலும் மறுபக்கம் துணிவானவள் என்று மற்றவர் என்னைப் பற்றிக் கூறும் போது பெருமையாகவும் இருக்கும். உண்மையில் நான் துணிவானவள் தானோ என என் மனதை நானே எத்தனையோ தடவைகள் கேட்டாலும் பதில் இதுவரை கிடைக்கவே இல்லை என்பது வேறு. பல பெண்கள் அங்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவர் முகங்களிலும் ஏதோவொரு சோகம் இழையோடி இருந்ததை அவர்கள் முகங்கள் காட்டின. அறிமுக நிகழ்வு முடிந்த பின்னர் எப்பிடி நீங்கள் இத்தனை துணிவாக எழுதுகிறீர்கள், ஆண்களுடன் வேலை செய்கிறீர்கள் ... இப்படிப் பல கேள்விகள் என்முன்னால். உங்கள் கணவருக்கு நீங்கள் நன்றிதான் கூறவேண்டுமென்று ரஞ்சி கூறியவுடன் "எங்களுக்கு ஆர் உவங்கள் சுதந்திரம் தர. நாங்கள் தான் பாவம் பாத்து அவங்களுக்கு அடங்கி வீட்டுக்குள்ளயே தண்டனை அனுபவிக்கிறம். எல்லாரும் கள்ளங்கள்" என்று கேவி அழும் இன்னொரு பெண்ணை இரக்கத்துடன் பாத்தேன் நான். எல்லாரும் உங்கள் பிரச்சனைகளைச் சொல்லலாம். அதுக்கான நேரம் தருவன் என்று ரஞ்சி கூறியதும் எழுந்த சலசலப்பு சிறிது அடங்கியது. நான் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தவாறே மெதுவாக எழுந்து நின்றேன். ***************************************************** பாமாவின் நிறத்தைப் பார்த்தால் அத்தனை வெண்மை. நிட்சயமாக எதோ வெள்ளைக்காரர்களின் கலப்பு இருப்பதாகத்தான் ஊரில் கூடப் பேசிக்கொள்வார்கள். ஆனால் இரண்டு தலைமுறையில் அப்பிடி யாருமே அவள் குடும்பத்தில் இல்லை. சிலநேரம் ஆசுபத்திரியில் பிள்ளை மாறிப் போச்சோ என்று கூட ஆரம்பத்தில் அயலட்டையில் பேசாதவர்கள் இல்லை. ஆனாலும் மற்றைய பிள்ளைகளுடன் பாமா இயல்பாய் பேசிப் பழகியதில் எல்லோருக்கும் அவள் பற்றிய சந்தேகம் இல்லாமல்த்தான் போய்விட்டது. அவளின் நண்பி சரோவுக்கே சிலவேளை நானும் அவள் மாதிரிப் பிறந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். அத்தனை அழகு. அத்தனை அழகு இருந்தாலும் கெட்டித்தனம் என்னவோ குறைவு தான் தன்னிலும் பார்க்க என்று சிறிது மனதைத் தேத்திக் கொள்ளுவாள் சரோ. தாய் சிரோன்மனிக்கு மகளைப் பார்க்கப்பார்க்க வயிற்றில் எதோ பிசையும். இந்தியன் ஆமி வந்தபோது அவளை பள்ளிக்கூடம் போகவிடாமல் வீட்டில் மறித்து, நெற்றியில் பெரிய குங்குமம் வைத்து நீண்ட தலைமுடியை அழகாகத் தொங்கவிடாமல் சுத்திக் கொண்டையும் போட்டு, ஏற்கனவே திருமணம் ஆனவள் போல் காட்டிக்கொண்டாலும், எங்கே கண்டுபிடித்து விடுவாங்களோ என்று மனப் பதைப்புடன் பாதுகாத்தது எப்பிடியும் வெளிநாட்டில் ஒரு கலியாணம் பேசி மகளை அனுப்பிவிட்டால் நின்மதி என்னும் நினைப்போடுதான். சிரோன்மணியின் தமையன் குடும்பமாக லண்டனில் வாழ்கிறார். அவரிடம் எத்தனையோ தடவை போன்செய்து சொல்லிவிட்டாள் தன் மகளுக்கு நல்ல மாப்பிளையாகப் பார்க்கும்படி. தமையன் பாக்கிறன் பாக்கிறன் எண்டு இரண்டு ஆண்டுகள் உருண்டோட, புரோக்கர் செல்லையா கொண்டுவந்த வெளிநாட்டுச் சம்மந்தம் எண்பது வீதப் பொருத்தம் என்று வர, தன் மகள் குடுத்துவச்சவள். இனி வெளிநாட்டில் நின்மதியாகவும் சந்தோசமாகவும் வாழப்போகிறாள் என்று நின்மதிப் பெருமூச்சு விட்டாள் சிரோன்மணி. மாப்பிளை கறுப்பு எண்டாலும் அழகாகத்தான் இருக்கிறார் என மனதுள் மகிழ்ந்து, கற்பனைகளில் திளைத்து ஒருவாறு லண்டன் போக இன்று விமானத்தில் ஏறியபின்பும் தாய் நாட்டையோ அன்றி பெற்றவர்களையோ விட்டுப் போவதற்காகத் தான் சிறிதும் கவலை கொள்ளவில்லை என்று எண்ணும்போது பாமாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கை இந்திய இராணுவம், போர் இடப்பெயர்வு எல்லாம் சேர்ந்து ஒவ்வொருவர் மனதிலும் எத்தனை துன்பநினைவையும் வெறுப்பையும் விதைத்திருக்கிறது. அதிலிருந்து தப்பிப் போவதனாலேயே எனக்கும் கவலை ஏற்படவில்லையோ என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள். தாய்நாட்டின் நிலை மாறுமா? தான் இனி எப்ப திரும்ப இங்கே வருவேன் என்ற எண்ணக் கூட அவளுக்கு எழவில்லை. அந்த நேரத்தில் சுதாகரனைக் காணும் ஆவல் மட்டுமே அவள் மனதில் மேலோங்கியிருந்து மற்ற எல்லாவற்றின் நினைவையும் புறம்தள்ளி விட்டிருந்தது. சுதாகரனுக்கு பிரித்தானிய நிரந்தர வதிவிட உரிமை இருந்ததனால் மற்றவர் பலர் படும் துன்பம் ஒன்றும் இல்லாது, எந்தவித பயமும் இன்றி லண்டன் வந்து இறங்குவதற்கான வசதிகள் ஏற்பட்டிருந்தன. முன்னரெல்லாம் பலர் வெளிநாடு போவதற்காக மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட காத்திருந்த கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு மனதில் ஏற்பட்டிருந்த பயம் சுதாகரன் செய்த ஒழுங்கினாலும் தொலைபேசியில் கதைக்கும்போது நேரே நீர் இங்க வந்து இறங்கலாம். நான் எயாப்போட்டில நிப்பன் என்ற வார்த்தையாலும் இல்லாமல் போனது. நல்ல குரல் தான் அவருக்கு என்று தனக்குத்தானே சிரித்தபடி விமானம் மேலேற ஆயத்தமாக, வயிற்றில் ஏதோவொரு பிசைவும் தலை சுற்றலும் ஏற்பட எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள் பாமா. வரும் இன்னும் .......
 31. 10 likes
  ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு 5 அன்றில்கள் ஒன்றான கூடு இது தான் அவர்களால் அவர்கள் வீட்டில் அநேகம் பாடப்பட்ட பாடல். அன்பான அம்மா அடித்தே இருக்காத அப்பா வசதியான நாடு திறமையான பிள்ளைகள் மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது சாதி வந்து குறுக்கிட்டது குடும்பம் சின்னாபின்னமாகியது தகப்பனார் கோமா நிலையில் வைத்தியசாலையிலிருந்தார் கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி அவர் பெற்ற பிள்ளை பாசமாக வளர்ந்த வளர்த்த படித்த பிள்ளை சொன்னது சாதி வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.
 32. 10 likes
  சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை
 33. 10 likes
  துருச்சாமி தொடர்கிறது....! இந்தக் களேபரத்தில் எல்லோரும் இருக்கையில் வீட்டுப் படலையை உதைத்துத் திறந்துகொண்டு பழனி தன் பெஞ்சாதி செண்பகத்தின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கையில் அவிழும் சாரத்தையும் பற்றிக் கொண்டு உள்ளே வருகிறான். அவன் நல்ல வெறியில் வேறு இருக்கின்றான்.அவனுக்கு செண்பகத்தின் மேல் அவ்வப்போது சந்தேகம் வரும். ஏனெண்டால் அவனே "முதல் ஒருவனின் ரெண்டாம் தாரமாய் இருந்த அவளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வந்து ப்ரமோஷன் குடுத்து முதலாவது வைப்பாட்டியாய் வீடு வாசலோடு வைத்திருக்கிறான். அவளும் அதுக்குத் தகுதியானவள்தான்.உலக அழகிகளே உச் சுக் கொட்டும் அளவுக்கு ஓங்கு தாங்காய் இருக்கிறாள். எல்லோரும் விலகி நின்று வேடிக்கை பார்க்கினம். சாமியிடம் நேராக வந்து அவளை சாமியின் காலடியில் தள்ளிவிட்டு சாமி" இண்டைக்கு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" சாமியும் ஒருமுறை கோவணத்தைத் தொட்டுப் பார்த்து ம்...கட்டியிருக்கிறன் என்று தனக்குள் சொல்லுது. என்ன சொல்லு. சிலநாளாய் எனக்கு இவளின் நடத்தையில் சந்தேகமாக் கிடக்கு. இவள் இல்லை என்று சொல்லுறாள்.நீ ஒருக்கால் இவளிட்ட கேட்டுச் சொல்லு. சாமி முகத்தில் சாந்தம் தவழ அவளைப் பார்க்கிறது. செண்பகமும் வலு கெஞ்சலாய் சாமியைப் பார்க்கிறாள்.அந்தப் பார்வை எப்படியாவது என்னை காப்பாத்து என்கிறது. பழனியும் விடாமல் அடியேய் இப்ப நீ சாமிமேல கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுடி என்று கத்துகிறான். செண்பகத்துக்கு பெருத்த அவமானமாய் இருக்கு. ஒரு முடிவுக்கு வந்தவளாய் முடியை இழுத்து முடிஞ்சு கொண்டு ஆவேசமாய் எழுந்து நிக்கிறாள். பழனியைப் பார்த்து உனக்குச் சாத்தியம்தானே பண்ணவேண்டும். நாயே என்னை யாரென்று நினைத்தாய், நீ சூடத்தை ஏற்று நான் இப்ப வாறன் என்று பழநியைத் தள்ளிவிட்டு கிணத்தடிக்குப் போகிறாள். நிறைவெறியில் நிண்ட பழனியும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து கீழே இருந்த சனங்களுக்கிடையில் மல்லாந்து விழ குழந்தைகள் சேம்... சேம் என்று காத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.சுற்றி இருந்த பெண்டுகள் எல்லாம் முகத்தைத் திருப்பி கமுக்கமாய் சிரிக்கினம். சாமிக்கு செண்பகம் தன்மேல் சத்தியம் பண்ணுவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அது சுற்று முற்றும் பார்க்குது. எட்டத்தில் ஒரு சிறு பிள்ளை ஒரு சின்ன பிள்ளையார் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கு. உடனே சாமி அருகில் இருந்த ஒரு பெடிச்சியைக் கூப்பிட்டு காதில் எதோ சொல்ல, அவளும் ஓடிச்சென்று அந்தப் பிள்ளையிடம் இருந்து பிள்ளையாரைப் பிடுங்கிக் கொண்டு வருகிறாள். உடனே அந்தக் குழந்தையும் " என்ர பிள்ளையாரைத் தாடி பூமணி என்று பின்னால காத்திக் கொண்டு ஓடி வருகுது. பூமணி பொம்மையை சாமியிடம் குடுக்க வந்தப்பிள்ளை சாமியின் தண்டத்தைப் பார்த்து கம்மென்று நிக்குது. சாமி அந்தப் பிள்ளையாரை தன்னருகே வைத்து ஒரு இலையில் சூடத்தை ஏற்றிவிட்டு எழுந்து நிக்குது. நீர் ஒழுக ஈரச்சேலையுடன் அங்கங்கள் எல்லாம் அங்கும் இங்கும் குலுங்க லக லக லக என்று பத்ரகாளிபோல் வந்த செண்பகம் பழனியை முன்னால இழுத்துவிட்டு சொல்கிறாள் " நீதான் என்ர புருஷன். உன்னோடு தவிர வேறு யாரோடும் போகவில்லை" என்று ஆவேசமாய்க் கூறி வலது கையை உயர்த்தி கற்பூரத்தின் மீது ஓங்கியடித்துச் சத்தியம் செய்ய வெலவெலத்துப் போன துருச்சாமியின் கையில் இருந்த தண்டம் எகிரிப் பிள்ளையார் மேல் விழ மண்ணில் இருந்து வந்த பிள்ளையார் நொறுங்கி மண்குவியலாய்க் கிடக்கிறார். எல்லோரும் பிரமித்துப் போய் செண்பகத்தைப் பார்க்கினம். தங்கள் கண்களையே தங்களால் நம்ப முடியாமல் கிடக்கு. அட இந்தப் பத்தினித் தெய்வத்தையா இவ்வளவு நாளும் நாங்கள் வாய்கூசாமல் வம்பு பேசிக்கொண்டு திரிந்தோம், தாயே மகமாயி எங்களை மன்னித்துக் கொள் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். பழனிக்கு வெறி எல்லாம் முறுஞ்சு போச்சு. கத்துறான் என்னை மன்னிச்சுக் கொள்ளடி செண்பகம், உன்னான இனி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டன். உன்னைச் சந்தேகப் படமாட்டன் என்று அவள் காலைக் கட்டிப் பிடித்து அரற்றுகிறான்.எல்லோரும் எட்ட தூரமாய் விலகி நிக்கினம். சாமிக்கு கிட்ட வந்த செண்பகம் சாமியைக் கும்பிட சாமி விபூதி எடுத்து அவள் முகத்தில் அடித்து விட்டு வாங்கில் இருக்க, அவள் தனது இடது கையில் இருந்து இரண்டு ஓட்டுச் சில்லுகளை சாமியின் மடியில் விட்டெறிந்துவிட்டு , ஈர ஆடையில் நீரொழுக நெஞ்சம் விம்மித் தனிய பின்னழகுகள் சதுராட ஒய்யாரமாய் நடந்து போறாள். போகும் போது மறக்காமல் கதிரைப் பார்த்து ஒரு காமப் பார்வையும் வீசிவிட்டு போகிறாள். பொன்மணியும் அநியாயமாய் சென்பத்தையும் தன்ர புருஷனையும் சந்தேகப் பட்டுட்டேன் என்று மனதுக்குள் மருகி இன்றிரவு மனுசனுக்கு விசேஷமாய் விருந்து போடணும் என்று நினைக்கிறாள். கதிரும் கூட அசைந்தசைந்து போகும் செம்பூவை வெறித்துப் பார்க்கிறான். அவனது பார்வையும் எல்லோரையும் போல் அவள் முதுகையோ முழங்காலையோ மேயவில்லை. சாமி தன் மடியில் செண்பகம் எறிந்த ரெண்டு ஓட்டுச் சில்லுகளையும் எடுத்துக் பார்க்குது. அதில் ஒன்றில் கதிர் என்றும் மற்றதில் சூசை என்றும் காரியால் எழுதியிருக்கு. அவள் நின்ற இடத்துக்கு சிறிது தூரத்தில் இன்னொரு சில்லு கிடக்குது.சாமி எட்டி அதை எடுத்துப் பார்க்க அதில் பழனி என்று எழுதிக் கிடக்கு. அப்படியென்றால் முதலே மூன்றுபேரின் பெயரையும் மூன்று ஓட்டில் எழுதிவிட்டு வரும்போது பழனி என்று எழுதிய ஓட்டைத் தவறவிட்டு மற்ற இரண்டையும் இடக்கையில் வைத்துக் கொண்டு வலது கையால் அசத்தியம் பண்ணியிருக்கிறாள். " உன் ஓடு தவிர வேறு யார் ஓடும் போகவில்லை" சிறுக்கி மவள். ஆகா எனக்குச் சிஷ்யையாக வரக்கூடிய அத்தனை தகுதியும் உனக்கு இருக்குதடி என் தங்கம். என்று சென்பகத்தைச் சிலாகிக்குது சாமியின் மனசு. இந்த நிகழ்ச்சியை எல்லோரும் உருசையாய் கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு குழந்தை மட்டும் "என்ர பிள்ளையாரை வாங்கித் தாடி பூமணி" என்று அழுது அடம்பிடிக்குது. மண்குவியலாய் கிடக்கும் பொம்மையைப் பார்த்து பூமணி முழுச, சாமி அந்தக் குழந்தையைப் பார்த்து உனக்கு பிள்ளையார் பொம்மைத்தானே வேணும் ,நான் செய்து தாறன் அழக்கூடாது என்று சொல்லி வாங்கில் கிடந்த மண்குவியலோடு கொஞ்சம் குறுனிக் கற்களையும் பொறுக்கிச் சேர்த்து கமண்டலத்தில் இருந்த நீரை அதன் மேல் ஊத்துது. கமண்டலத்தில் காலையில் ஊத்திய கள்ளு புளித்துப் போய்க் கிடக்கு எண்டதை சாமி மறந்துட்டுது.ஊத்தியாச்சு இனி என்ன செய்ய, பேசாமல் அதைக் கையால் குழைத்து பிசைந்து அமுக்கி அமுக்கி பிள்ளையார் செய்யுது. குழந்தையும் அதை பார்த்து ஆர்வத்துடன் ஐ...யா... ஆ.... கள்ளுப்பிள்ளையார் எண்டு கத்துது. பக்கத்தில் இருந்த சுவேதா டீச்சர் பிள்ளையிடம் அப்படிச் சொல்லக் கூடாது. கல்லுப்பிள்ளையார் என்று சொல்ல வேண்டும். எங்க சொல்லு கல்லு ...கல்லு மேலண்ணத்தை நாக்கு தொட்டு வருட வேண்டும். சொல்லிக் கொடுக்கிறாள்.குழந்தையும் விடாமல் "ள " கள்ளுப்பிள்ளையார் என்று பாடுது. சாமியும் சுவேதாவைப் பார்த்து விடுங்கம்மா குழந்தையும் தெய்வமும் ஒன்று எப்போதும் உண்மைதான் பேசும். பெரியவர்கள் நாங்கள்தான் பொய்யும், களவும்,பித்தலாட்டமும் என்று சொல்லி அந்தப் பிள்ளையார் பொம்மையை பிள்ளையிடம் குடுக்குது. குழந்தையும் அதை வடிவாய்ப் பார்த்து, ஹை ...யோ குரங்குச்சாமி , எனக்கு இதுதான் பிடித்திருக்கு என்று குதூகலிக்குது.எல்லோரும் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்படியே அச்சு அசலாய் குரங்கு போலவே இருக்கு வால்தான் இல்லை என்று சொல்லுகினம்.பர்வதக் கிழவியும் குரங்கு எண்டு சொல்லாதையுங்கோ, அனுமார் எண்டு சொல்லுங்கோ என்கிறாள்.சாமியும் மீண்டும் அதை வாங்கி தும்பிக்கையை ஒடித்து பின்னால் ஒட்டிவிட்டு மூக்கைச் சரிபண்ணிக் குடுக்குது. எல்லோரும் சாமியைப் புகழ்ந்து துருச்சாமிக்கு அரோகரா என்று கோஷம் போடுகிறார்கள். நேரம்...05 : 00 மணி. பொன்மணியும் சுவேதாவும் எல்லோருக்கும் சுடச்சுட தேநீரும் கருப்பட்டியும் , அவித்த மரவள்ளிக் கிழங்கும் இடித்த சாம்பலும் , உளுந்து வடையும் பரிமாறுகினம். சாமியும் அவர்களுடன் சேர்ந்து அவற்ரைப் புசித்து விட்டு, தனக்குள் அட சே இன்று முழுதும் ஒரு புகை அடிக்கேல்ல , நாக்கு நாம நாம என்குது .எங்காவது ஒரு நல்ல இடமாய்ப் இருந்து சுருட்டு பத்தவேணும். எண்டு நினைத்து தூளிப்பையையும், தண்டத்தையும், கமண்டலத்தையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் நமஸ்காரம் சொல்லுது. அப்போது எல்லோருமாய் சேர்ந்து தங்களால் முடிந்தளவு சில்லறையும் தாளுமாய் பணம்சேர்த்து சாமியின் பையில் கொண்டு வந்து போடுகினம்.சின்னஞ்சிறு நகைகள் கூட அதில் இருக்கு கோமளமும் தன்ர மோதிரத்தையும் கழட்டிப் போடுகிறாள். பொன்மணி கொஞ்சம் இறைச்சிக் கறியும் பொரியலும் வடை,கிழங்கு சம்பல் முதலியனவும் வாழை இலையில் கட்டி வந்து சாமியிடம் கொடுக்கிறாள். சுவேதாவும் புருஷன் காசு தன்னிடம் தாறதில்லை என்று சொல்லி பெண்மணியிடம் நூறுரூபாய் கடனாய் வாங்கிக் குடுக்கிறாள். கதிரவேலுவும் சாமி படலையடிக்கு வர அங்கு நின்று கொண்டு சாமியின் பையுக்குள் ஒரு சாராயப் போத்தலும் பணமும் வைத்து விடுகிறார். சாமியும் தனது தண்டத்தைத் தூக்கி எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு வீதியால் இறங்கி நடக்குது.....! பாலகர் காண்டம்: பாகம் ஒன்று முற்றும்...!
 34. 10 likes
  இந்த முகநூல் ஆரம்பத்தில் புலம்பெயர் உறவுகளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் தற்போது அந்தபக்கம் போவதுக்கே யோசிக்க வேண்டி உள்ளது ஒரு சாமி படத்தை அனுப்பிவிட்டு பார்த்தவுடன் பகிரவும் நல்லசெய்தி வரும் இல்லயென்றால் கஷ்ட்டம் வந்து நூடில்ஸ் ஆவிர்கள் ,வருடக்கனகான முத்தின கான்சருக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு ,எகிப்திய பிரமிட்டை கட்டினவன் தமிழர்களே ஒரு சில குறிபிட்ட செய்திகள் முகநூல் தொடக்க காலத்தில் உலாவியவை இன்றும் திரும்ப திரும்ப வருவது போன்ற முட்டாள்தனமும் ,பாமரத்தனமும் நிறைந்த ஒன்றாய் மாறி உள்ளது இதைவிட நம்ம தமிழ் குடும்பம் ஒன்று கல்யாணம் காதுகுத்து என்று வெளிக்கிட்டால் முதல் வேலை வீட்டை விட்டு இறங்கும்போது காரில் ஏறியபடி போட்டோ எடுத்து mukanoolil போட்டுவிட்டு தான் காரில் சாவியை போடும் பாமரகேசுகள் பின்னாலே கள்ளன் போய் வீட்டில் சுவர் மணிக்கூடு வரை ஆறுதலாக இருந்து கழட்டி எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் இப்போது முகநூல் உபத்திரவ பக்கமா மாறி விட்டுது நிறைய சொல்லலாம்.
 35. 9 likes
  ஒரு சாதாரண பயணம் இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன். கற்பனை கலக்காத ஒரு பதிவு இது. புதன் கிழமை மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மச்சான், எனக்கு கொழும்பில் சில வேலைகள் இருக்கு, முடித்துவிட்டு வாறன் எண்டேன். இவனுடன் டேய், அடோய் என்று கதைத்தாலும் எனக்கு அவனை விட 6 வயது குறைவு. ஒருமுறை எனது அண்ணியே நானும் இவனும் நேரில் கதைப்பதை பார்த்து கோபப்பட்டா. நானும் அண்ணி நான் எனது நெருங்கிய நண்பர்களுடன் எப்பவும் இப்படித்தான் என்றேன். வயதுக்காவது மரியாதை குடுக்க வேண்டாமா + பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றார். நானும் சிரித்தபடி அண்ணியின் சொக்கையை கிள்ளியபடி நல்ல நண்பர்கள் என்று நினைப்பார்கள் என்றேன். நீ வளரவே மாட்டாய், எப்படியாவது இருடா என்றார். வீட்டில் கடைசிப் பிள்ளைக்கு மட்டுமே கிடைக்கும் அன்பு + உரிமை. அடுத்த கேள்வி - எப்படா கொழும்புக்கு வாறாய்? டேய் நான் இப்ப கொழும்பிலதான் அண்ணாவுடன் நிற்கிறேன். சரி உடனே அண்ணா வீட்டை வாறன் - வாடா. மவனே உன்னோடே வந்தால் சகலதும் கெட்டிடும். வந்த அலுவலை முடிச்சிற்று கால் பண்ணுறன் - அதுவரை சந்திக்க வேண்டாம் என்றேன். எப்படியாவது போய் துலையடா என்று அம்மா மாதிரியே திட்டினான். வெள்ளிக்கிழமை புதன் + வியாழன் + வெள்ளி அலுவல்களை முடித்துவிட்டு ஆறுதலாக சோபாவில் குந்தியிருந்து யாழை நோண்டும்போது மறுபடியும் தொலைபேசியில் கத்தினான் நண்பன். டேய் ரெடியா இரு, பத்துமணிக்கு வாறன் போகலாமென்றான். பக்கத்தில் இருந்த அண்ணியும் என்னவாம் அருமை நண்பர் என்றார். நானும் வாறானாம் ரெடியா இருடா எண்டவன் என்றேன். ஒவ்வொரு மாதமும் வரோணும் எண்டது எங்கட உடன்படிக்கை, வந்ததே இரண்டு மாதத்துக்கு அப்புறம் - இன்னும் இரண்டு நாள் நின்றால் என்னவாம் என்றா. பக்கத்தில் இருந்த அண்ணரும் சிங்கன் சிங்கிளா மாட்டிட்டான் என்று நினைத்தாரோ என்னவோ வாயே திறக்கவில்லை. மவனே சரியான களைப்பு, நீ போ நாளைக்கு வாறன் எண்டேன். சனியனே துலைஞ்சு போடா எண்டு திட்டாத குறையா எதோ சொன்னவன் தொலைபேசியை கட் பண்ணினான். சனிக்கிழமை 10 மணி டேய் £@$€£ இப்ப கார் அனுப்புறேன் ரெடியா நில்லடா எண்டான். இல்லையடா எனக்கு ட்ரைனில் வர ஆசையா இருக்கு நாளைக்கு காலையில் வாறன் எண்டேன். எக்கேடாவது கெட்டுப்போ பிடிவாத @£$€£@€$ எண்டான். பி ப 3 மணி டேய் டிக்கெட் எடுத்திட்டியா இல்லை சுத்துறியா எண்டான் - இல்லைடா நாளைக்கு காலை 8 :30 புறப்படுகின்றேன் என்றேன். சரி வந்துசேர் எண்டான். ஞாயிற்றுக்கிழமை காலை 9 "நாயே ட்ரெயின் எடுத்துட்டியா, இல்லை நித்திரையா?" சரியடா, நான் ட்ரைனிலதான் இருக்கிறேன் எண்டன். சரிடா 2 மணிக்கு வரும், நான் ஸ்டேஷனிலே வெயிற் பண்ணுவேன் எண்டான். உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் தொடரும் .....
 36. 9 likes
  துருச்சாமி....பாகம்... 2 ... தொடர்கிறது....! இப்ப சின்னப்புவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது. காத்தாலை நினைவில் எட்டப் போய் புங்க மரத்துக்கு கிட்டவா நின்று நடிக்கத் தொடங்கி விட்டார். " உவன் சின்ராசிட்ட ஒண்டரைப் போத்தல் கசிப்பு வாங்கி அரைப் போத்தல் அங்க குடிச்சிட்டன், பிறகு ஒரு போத்தலை பைக்குள்ள வைத்துக் கொண்டு மேற்கால இஞ்ச வந்தன், வயித்தைக் கலக்கிச்சுது. அன்னமுன்னாவில பையைக் கொழுவிவிட்டு அங்கால வெளிக்குப் போனன், அப்படியே துரவில அடிக்கழுவி விட்டு வந்து பார்த்தால் கசிப்போடு பையைக் காணேல்ல. (கடைசியில் ஒரு வரி சேர்க்குது) உவன் ராசப்பு எடுத்துப் போட்டான். என்றபடியே நின்றாடுது. சோமுவும் எழுந்து பின்னால் போகிறான். ராசப்புவும் கஞ்சா போதையில் கோமளத்தை மடியில் இருத்தி முதுகால் பின்னை கழட்ட முயற்சிக்கிறான். முன்ன பின்ன பழக்கமில்லாததால் பின்னும் கழருதில்லை. புறாக்களும் கொழுத்துக் கிடக்கு. சலப்பை நிறைந்திட்டுது. சாமி எழுந்து சற்று தள்ளி இருந்த பத்தைக்குள் சிறுநீர் கழிக்க ஒதுங்குது. அங்கே அடுத்த பக்கத்தில் ஒரு ஆணும் பெண்ணும் குசு குசு வென்று கதைக்கினம்.சாமி சத்தமில்லாமல் குந்தி இருக்கு. பெண்: இஞ்ச பாருங்கோ என்னால அந்தச் சுடலைப் பக்கமெல்லாம் வரமுடியாது.நீங்கள் என்ர புருசன், நான் உங்கட பெண்டில். சும்மா கதைக்கக் கூட கள்ளப் புருசன் பெண்டாட்டி போல வரவேண்டிக் கிடக்கு. ஆண் : என்னடி மோகனா இப்படிச் சொல்லுறாய். என்ர அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியும்தானே. அதுக்கு வயதும் போட்டுது.என்னை யாரும் ஏமாத்தக் கூடாது என்று பாக்குது. மோகனா: நாங்கள் உன்னை எங்க ஏமாத்தினனாங்கள் மாறன். நீயும் விசர்க்கதை கதைக்காத. மாறன் : நீங்கள் சொன்னதுபோல அந்த சங்கிலியும் காசு ஆயிரமும் தரவில்லைத்தானே. அதுதான் அம்மாவுக்கு கோவம். மோகனா: நாங்கள் ஒன்றும் ஏமாத்த நினைக்கேல்ல. எதிர்பாராமல் ஐயா செத்துப்போக இருந்த காசெல்லாம் செலவாயிட்டுது.கொம்மாவுக்கும் தெரியும்தானே. மாறன்: அந்தக் கோதாரி கிடக்கட்டும், நீ இரவைக்கு கருப்புசாமி கோயில் துரவடிக்கு வாரியோ இல்லையோ சொல்லு. நீ வாறதெண்டால் நானும் தோட்டத்தால நேராய் அங்கு வாறன். மோகனா யோசித்து விட்டு (அவளுக்கும் ஆசையாய் இருக்கு. அவனின் வேர்வை வாசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்)சரி வாறன் இண்டைக்குத்தான் கடைசியும் முதலும் சொல்லிப்போட்டன் கண்டியோ....! பின் சிறிது நேரம் அங்கு பேச்சில்லை அவளை இழுத்தணைத்து முத்தமிடும் சத்தம். அவள் வாயிலிருந்து ஊறித் தெறித்து அவன் முகத்தில் சிந்தும் நீர்... ம்மா ...ம்ம் மா....பாலோடு தேன் கலந்ததுபோல் பிசு பிசுவென்று உருசையாய் இருக்கு அவனுக்கு. பின் விடு என்னை என்று அவள் எழுந்து சீலையால் வாயைத் துடைத்துக் கொண்டு போகிறாள். அவனும் சயிக்கிளை எடுத்துக் கொண்டு உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டு எதிர் திசையில் போகிறான். சாமியும் எழுந்து மரத்தடிக்கு வர பியர் டின்னால் அடிவாங்கிய பூனையொன்று வந்து காலடியில் நிக்குது. தலையால பியர் ஒழுகுது. சாமி அதை எடுத்துக்கொண்டு தனது துண்டால் அதைத் துடைத்துக் கொண்டு மரத்தடிக்கு வந்து ரெண்டு கறித்துண்டு அதுக்கு போட்டுவிட்டு பூனையிடம், மேனகா காந்தியோ,திரிஷாவோ யாழ்ப்பாணம் வந்தால் மறக்காமல் போய் சொல்லு என்ன என்று சொல்லுது. ராசப்புவும் எழுந்து சிதறிக் கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி சுருட்டுகளை சாமியிடம் நீட்ட சாமியும் ரெண்டை எடுத்துக் கொண்டு மிச்சத்தை அவனிடமே குடுக்குது. அவனும் தனது பையில் இருந்து ஒரு அரைப் போத்தல் சாராயம் எடுத்து சாமியின் பையில் வைக்கிறான்.சாமிக்கு வச்ச மிச்ச சாராயத்தை சின்னப்புவும் சோமுவும் குடித்து விட்டார்கள்.அதுதான் நன்றியோடு அவன் அதை பையில் வைக்கிறான்.சாமியும் ஒன்றும் சொல்ல வில்லை. பிறகு ராசப்பு சாமியிடம் இவன் வையாபுரியைப் பார் சாமி எலும்பிறானில்லை.நல்ல ஏத்தத்தில இருக்கிறார். இங்க தனியாய் விட்டுட்டு போகவும் பயமாய்க் கிடக்குஇரவு பூச்சி கீச்சி கடித்துப் போடும் என்கிறான். சாமியும் அங்க கிடந்த அபின் சாரையை எடுத்து அவன் பொக்கட்டில் வைத்து விட்டு அவனைப் பார்க்குது. அவனோ ஆகாயத்தைப் பார்த்து எம்பி எம்பிக் கொண்டிருக்கிறான்.சாமி அவனைப் பாக்குது, ஆகாசத்தைப் பாக்குது, பெரிய வட்டமாய் நிலா அமுதைப் பொழியுது. ஆகாசத்தைப் பாக்குது அவனைப் பாக்குது. அங்கு இன்னும் பெல்லி டான்ஸ் நடக்குது உடனே அவன் முகத்தின் முன்னே ஒரு சொடக்கு போடுது. அடுத்தநொடி அங்கே காட்சி மாறுது. அந்த மேடை ஐ.நா மேடையாய் மாறுது. ஐஸ்வர்யா துர்காவாய் காலைத் தூக்கி தாண்டவம் ஆடுகின்றா. சூலத்தால் எட்டி எட்டி அவனைக் குத்துகின்றா, கன்னத்தில் இரு கையாளும் மாறி மாறி அடிக்கின்றா, பின் அப்படியே அகலக் கால் பரப்பி நின்று குனிந்து இரு கைகளாலும் அலேக்காய் அவனைத் தூக்க, வையாபுரிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு போதையும் கெட்டு எழுந்து பாதையில் நடந்து போகிறான். பக்கத்தில் ராசப்புவும் தள்ளாடித் தள்ளாடி சயிக்கிளை எடுத்துக் கொண்டு போக சாமி கேட்குது, ராசப்பு கருப்பு சாமி கோயில் எங்கிருக்கெண்டு. ராசப்புவும் அதை எஞ்சாமி கேட்கிறே, இந்த நேரத்தில அங்க போகாத.பகலிலேயே அங்கு போகப் பயப்பிடுவினம். அதோ அந்த மணல் மேட்டைத் தாண்டினால் கோயிலும் மடமும் துரவும் கிணறும் இருக்கு. இரவு சங்கிலிக் கருப்பு வேற காவலுக்கு கிளம்பிடும். அது பொல்லாதது.என்று சொல்லிப் போட்டு போறான். சாமி நடந்து வர புங்கை மரத்தடியில் சின்னப்பு நடித்துக் கொண்டிருக்கு, சோமு அவனோடு போராடிக் கொண்டிருக்கு. இவனைப் பார் சாமி வாறானில்லை. சாமியும் பையில் இருந்து ஒரு தேசிக்காய் எடுத்து சோமுவிடம் குடுக்குது. சோமுவும் அதைப் பிய்த்து சின்னப்புவின் உச்சியில் வைத்து தேய்க்கிறான். சாமி நிலவைப் பார்த்த படி நடக்குது. மோகனா எப்படி இருப்பாள். "நிலா அது வானத்து மேலே" குயிலி போல் இருப்பாளோ, சி ச் சி ... செண்பகம்தான் அந்தமாதிரி இருக்கிறாள். இவள் எப்படி இருப்பாள். என்ன அது... ம் மா.....ம்...மா என்றாளே, அப்ப அவள் போலத்தான் இருப்பாள். "நேத்து ராத்திரி ம்மா" சிலுக்கு போல்தான் இருப்பாள். அடுத்த நொடி மோகனா அவர் மனதில் சிட்டுக் குருவிபோல் சிறகடித்து வர, சிலுக்கு இடுப்பில் சம்மனமிட்டுக் கொண்டு வருகிறாள்....! மோகனம் பாடும்.....!
 37. 9 likes
  துருக்கியும்.... நானும். - தமிழ் சிறி. - நான் வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல... துருக்கி ஆட்களின், 30 ஆண்டு கால... நினைவு மீட்டல். ------ ஒவ்வொரு துருக்கியரும்.... ஜனவரி முதலாம் திகதி பிறந்திருப்பார்.
 38. 9 likes
  இலங்கை விமான நிலையமும் நானும் இலங்கைக்கு பயணம் செய்ய முடிவெடுத்த பின் என் இலங்கைப் பயணம் பற்றி கனடிய அரசுக்கு உரிய முறையில் அறிவிக்க வேண்டும் என திட்டமிட்டு, கனடாவில் இருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்துக்கு என் பயண திட்ட விபரங்களை ஈமெயிலில் அனுப்பி இருந்தேன். அத்துடன் Registration of Canadians abroad தளத்துக்குச் சென்று (https://travel.gc.ca/travelling/registration) அங்கும் முழு விபரங்களையும் கொடுத்து இருந்தேன். கனடா என்று இல்லை, எந்த நாட்டிலிருந்து நீங்கள் வேறு எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டாலும் இப்படியான சில விடயங்களை செய்வது நல்லது. அதுவும் இலங்கை / இந்தியா போன்ற நாடுகளுக்கு ரகசியமாக செல்வதை விட அறிவித்து விட்டு செல்வது பாதுகாப்பானது என நம்புகின்றேன். என் முகநூலிலும் பயண விடயங்களை தொடர்ச்சியாக பதிந்து கொண்டே வந்தனான். அதாவது 'இங்க பார் நான் ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் ஒழிச்சு வரவில்லை... அறிவித்து விட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தான் வாரன்' என்று காட்ட. *********************************** ******************************************* ******************************* விமானத்தை விட்டு இறங்குகின்றேன். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டில், இலவசக் கல்வியினூடாக எனக்கு கல்வி புகட்டிய நாட்டில், முதல் முத்தத்தில் இருந்து, முதல் காதல் வரைக்கும் நான் பயின்ற நாட்டில், தொழில் பயிற்சியில் இருந்து முதல் பத்து வருடங்கள் எனக்கு வேலை வாய்ப்பு தந்து வளர்த்து விட்ட நாட்டில், எண்ணற்ற நண்பர்களையும் தோழிகளையும் வரமாக நான் பெற்றநாட்டில், அச்சம் கொள்ள வேண்டிய நேரங்களிலும் பயமற்று வாழக் கற்றுத் தந்த நாட்டில், உரிமைக்காக உரத்து குரல் கொடு என்று காட்டித் தந்த நாட்டில், என் தாய் நாட்டில் காலடி வைக்கின்றேன். இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன். தமிழன் என்ற காரணம் ஒன்றே போதும் படுகொலை ஆகவும் காணாமல் போக்கடிப்படவும் என பயங்கரங்கள் மலிந்து போய் இருந்த காலத்திலும் பூக்களையும் ரசிக்க கற்றுத் தந்த நாட்டில் காலடி வைக்கின்றேன். அடர்ந்த காட்டில் நெடுதுயர்ந்து வீசிய பெரும் சுடர் ஒன்று அணைந்து போய்விட்ட காலமொன்றில் நான் இலங்கையில் காலடி வைக்கின்றேன். அதுவரைக்கும் ஒரு சின்ன பதட்டம் மனசுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது. ஆனால் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைச்சவுடன் அது ஓடிப் போய் விடுகின்றது. என்னுடன் விமானத்தில் பயணித்தவர்களில் அநேகர் கட்டார் செல்வதற்காக அடுத்த விமானத்தினை பிடிக்க செல்கின்றனர். நான் இலங்கை குடிவரவு பிரிவுக்கு Embargo form இனை நிரப்பிய செல்கின்றேன். என்னுடன் சேர்த்து ஆக 10 பேர் தான் நிற்கின்றோம். ஒரு சின்ன வரிசை. என் முறை வருகின்றது. குடிவரவு அதிகாரி என்ற மனிதன் என் கடவுச் சீட்டை வாங்கிக் கொள்கின்றார். அம் மனிதனின் முகத்தில் இலேசாக நக்கலும் ஏளனமும் குடிபெயர்கின்றது என தோன்றுகின்றது.நேற்று அடிச்ச தண்ணி இன்றும் முகத்தில் தெரிகின்றது. இயலாதவர்களிடம் வெருட்டி கொள்ளை அடிச்சே வயிறு வளர்த்த கூட்டம் இது. தருணம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் இவர்கள். எப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார் நான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன் ஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர் 'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை' என் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்' என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார் 'உன் சிஸ்டத்தில் அப்படியா என் விபரத்தினை காட்டுகின்றது - அதில் எல்லாம் தெளிவாக இருக்கின்றது தானே.வாசித்துப் பார்." என அதே நக்கலுடன் நானும் பதில் சொல்கின்றேன். வரும் போதே முடிவெடுத்து விட்டுத்தான் வந்து இருந்தேன். ஒன்றில் என்னை உள்ளே விடாமல் திருப்பி அனுப்புவார்கள், அல்லது அனுமதிப்பார்கள். இந்த இரண்டில் ஒன்றைத்தான் அவர்களால் செய்ய முடியும். கனடிய பிரஜை என்பதுடன், கைது செய்து உள்ளே அனுப்பக் கூடிய எந்த காரணங்களையும் நான் காவவில்லை. அப்படியே கைது செய்வினும் சட்ட உதவிகளை உடனடியாக பெறக்கூடியதாகவே சென்று இருந்தேன். என் மடியில் கனம் இப்ப இருக்கவில்லை. இருந்த கனத்தை காலம் கரைத்து விட்டது. இலங்கை பாஸ்போர்ட்டை அங்குள்ள இலங்கை தூதுவரலாயத்தில் கொடுத்து விட்டாயா எனக் கேட்டார் "ஓம் எப்பவோ கொடுத்து விட்டேன்" என்றேன். இதுக்கு மேல் அவர் எதுவும் கேக்கவும் இல்லை, முகத்தை பார்க்கவும் இல்லை. கடவுச் சீட்டை தருகின்றார். சிங்களத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நகர்கின்றேன். குடிவரவுப் பகுதி கடந்து Duty Free பக்கம் வருகின்றேன்.Hennessy Brandy இரண்டு வாங்கினால் மூன்றாவது இலவசம் என்கின்றனர். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர் ஒன்றுதான் வாங்கலாமாம். "நான் ஒன்பது வருடங்களின் பின் வாரன் மச்சான்....நீயே யோசிச்சு பார்.. ஒரு போத்தல் குடிக்க காணுமோ..." என சிங்களத்தில் அங்கு நின்றவனிடம் கேக்கின்றேன். அவன் சிரித்துக் கொண்டு "சரி சரி கொண்டு போ...ஆனால் கஸ்டம்ஸ் பக்கம் இதை காட்டாதே' என்று அனுப்பி வைக்கின்றான். இலங்கை விமான நிலையம் இந்த 9 வருடங்களில் நிறைய மாறி இருக்கின்றது. முன்னை விட நன்றாக இருக்கின்றது. சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது. பணியாளர்களும் மிகவும் நட்புடன் பழகுகின்றனர். இன்னும் பல மாற்றங்கள் தேவையாகவும் இருக்கின்றன. Professional look இன்னும் முழுமையாக வரவில்லை. வெளியே வந்து 200 டொலர்களை அங்குள்ள Money Exchange இல் மாற்றுகின்றேன். இது ஒரு மிகப் பெரிய கொள்ளை என்று பிறகு வெள்ளவத்தையில் டொலர் மாற்றும் போதுதான் புரிந்தது. வெறும் 101 இற்கு அங்கு மாற்றி தந்தார்கள். (வெள்ளவத்தையில், பிரசன்னாவில் 109 ரூபா) அங்குள்ள Taxi service இல் போய் கார் ஒன்றை பிடிச்சுக் கொண்டு கொழும்பை நோக்கி விரைகின்றேன். கொழும்பு வரும் வரைக்கும் யுத்தத்தின் பின்னரான அரசியல், மகிந்தவின் பின்னரான நிலமை என்பனவற்றை Taxi ட்ரைவருடன் கதைத்துக் கொண்டே வருகின்றேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த மனுசனும் கதைத்து கொண்டு வருகின்றார். நான் கொழும்பில் நிற்கும் நாட்கள் முழுதும் கண்ணில் படும் அனைத்து சிங்கள தமிழ் ஆட்களுடன் அரசியல் கதைக்காமல் விடவில்லை. பல நாட்களின் பின் கதைப்பினும் சிங்களம் ஓரளவுக்கேனும் சரளமாக கதைக்கவும் முடிகின்றது. கொழும்பில் வந்து Juliana hotel இல் தங்குகின்றேன். இந்த வரியை வாசிச்சவுடன் தும்பளையான் கொடுப்பிற்குள் சிரிப்பது கேக்கின்றது.
 39. 9 likes
  ஆக்க பூர்வமான கருத்தாடல். இலங்கைப் பட்டதாரிகளைப் பொறுத்தவரை பலரது பட்டம் வெறும் பேப்பர் மட்டுமே. இவர்கள் அரசாங்கமே படிப்பிச்சும் விட்டு, வேலையும் குடுக்கவேணும் எண்டு கேட்பது எவ்வளவு முட்டாள் தனம். மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் அவதானித்தவரை இலங்கையில் சில குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் இன்றி நன்கு காசு பார்க்க முடியும். உல்லாசப் பிரயாணத் துறை அப்படியானது. பருத்தித் துறையில் எமக்குத் தெரிந்த ஒருவர் சிறு மூலதனத்துடன் கடற் கரைக்கு கிட்ட இருக்கும் தனது வீட்டை டைல்ஸ் போட்டு, பெயிண்ட் அடிச்சு திருத்தம் செய்து ஒரு அறைக்கு attached bathroom உம் கட்டி தட்டித் தடவி trip advisor/air bnb மூலம் விளம்பரப்படுத்தியிருந்தார். இவளத்திற்கும் அவருக்கு ஆங்கிலம் கூட அதிகம் தெரியாது. மனுசனுக்கு அடிச்சுதே யோகம். வெள்ளைக்காரர், லோக்கல் டூரிஸ்ட் என்று கும்பல் கும்பலாக றூமுக்கு புக்கிங் வரத் தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்கு 2,000/- படி இருந்த இடத்தில் இருந்தே உழைப்பு. அது மட்டுமல்ல வருபவர்களுக்கு புட்டு, நண்டுக்கறி எண்டு சாப்பாடு சமைச்சு வித்து அதையும் காசாக்கிவிட்டார். அதைவிட அவரது வீட்டுக்கு அருகிலிருக்கும் ஓட்டோ ஒன்றுக்கும் நல்ல வருமானம் வர வழி செய்துவிட்டார். இப்ப மூன்று அறைகளை வாடகைக்கு விடுகிறார். எனக்கும் இலங்கைக்கு வந்து கொழும்பில் ஒரு consulting நிறுவனம் போடத்தான் விருப்பம். இலங்கையில் இருக்கும் big 4 தவிர்ந்த consulting நிறுவனங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டது, அத்துடன் சிறிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விற்பது பற்றி அவர்கள் யோசிப்பத்தில்லை. இப்படியான சிறிய வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் சேவை பெற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டால் நல்ல பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன. வேறு இடங்களில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன், பார்க்கலாம். you will never get rich working for some one!
 40. 8 likes
  “அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!! பணி தொடரும்.
 41. 8 likes
  பாகம் - 2 அநேகமான பெரிய பொடியங்கள் படிப்பிலும் அல்லது பெட்டை பாக்கிறதிலையும் மினக்கெடுவாங்கள் என்பதால் இதில் இரண்டிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத, நேர்மை, நியாயம், புரட்சி, தத்துவம் என்று எந்த நேரமும் பெரிய தடிமனான புத்தகங்களைப் படித்து, விளங்காத தமிழில் அகிலம், பிரபஞ்சம் என்ற வாயோயாமல் தத்துவம் கதைக்கும் சொக்கியை கேட்டால் உடனடியாகச் சம்மதிப்பான் என்று நினைத்தேன். சொக்கிக்கு பதினேழு வயதுதான் என்றாலும் ஆள் வாதநாராயணி மரம் மாதிரி நல்ல வளர்த்தி. மெலிஞ்ச தேகம். முள்ளுப் பண்டி மாதிரி தலையும் தாடி, மீசையும் வளர்ந்திருக்கும். அவன் உலக சோசலிச இயக்கத்தினது நான்காம் அகிலத்தின் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீவிர பக்தனாக இருந்தபடியால் அவனுக்கு ட்ரொட்ஸ்கி என்று பட்டப்பெயர் வைத்தோம். அது எங்கள் பல்லுக்கையே கொழுவிக்கொண்டு நிண்டு, வாய்க்குள்ள பூராததால் சொக்கி என்று மருவி விட்டது. அடிதடியில பெரிதாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், சமூக சிந்தனை கூடினவன். பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி போட அவன் போதுமென்று நினைத்தேன். அடுத்ததாக பெட்டைக் குயிலனை திகைக்க வைக்கக் கூடியமாதிரி அதிவேகமாக இயங்கி, இடக்கு முடக்கான இடத்தில மோட்டு அடிபோடக்கூடியவனும், அதிகம் விளக்கம் கேளாமல் சொன்னதைச் செய்யத் தோதாய் இருக்கக் கூடியவனுமான உசார் மடையன் கட்டையனைத் தேர்ந்தெடுத்தேன். கட்டையன் கருங்காலி நிறமும் வலிமையுமானவன். எங்களுடன் எப்பவும் கூடித் திரிய விரும்புகிறவன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். இருந்துவிட்டு எப்போதாவது ஞாபகம் வந்தால் மாத்திரமே பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்ப்பான். அநேகமான நேரம் தோட்டம், துரவு என்று உழுவான் மாதிரி உழுதுகொண்டு திரிவதும், விளையாடுவதும்தான் அவனது தினப்படி உத்தியோகம். மூன்றாவதாகப் பனங்கூடலுக்குக் கிட்டடியில் உள்ள புக்கையரை பிடிக்கலாம் என்று தோன்றியது. புக்கையருக்கு என்னைவிட ஒருவயது குறைவு என்றாலும் நல்ல தோற்றம். விளையாடும்போது அடிக்கடி அளாப்பல் வேலைகள் செய்து சண்டையில் ஈடுபடுபவன் என்பதால் பிரயோசனப்படுவான் என்று நினைத்தேன். புக்கையரின் தகப்பனார் 'அன்' விகுதியில் பேர் வந்தால் 'அவன்/இவன்' என்று மற்றவர்கள் சொல்லக்கூடும் என்பதால் கவனமாகப் பிள்ளைக்கு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தவர். செல்லப் பெயரிலும் 'அன்' விகுதி வரக்கூடாது என்று தானே நல்ல மரியாதையான வீட்டுப் பெயரையும் வைத்திருந்தார். நாங்களும் புக்கையரின் தகப்பனாருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பட்டப்பெயரிலும் 'அன்' வராமல் பார்த்து வைத்த பெயர்தான் புக்கையர். அளாப்பிக் குழப்பும்போதுகூட கோபம் வந்தால் நாங்கள் "டேய் புக்கை" என்றுதான் கூப்பிடுவோம். உடனடியாகவே தெரிவுசெய்த ஓவ்வொருவரினதும் வீடுகளுக்கும் போய் அவர்களைத் தனித்தனியே ரகசியமாக அழைத்து வெட்டையில் நடந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லி, பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி கொடுப்பதற்கு விடாப்பிடியாகச் சம்மதம் வாங்கிவிட்டேன். சொக்கி பல குறுக்குக்கேள்விகள் கேட்டாலும் நடந்தது மிகவும் பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்ததும் ஒரு சமூகக் குற்றத்தை ஒழிக்கவேண்டும், ஒரு மோசமான சமூகவிரோதியைத் தண்டிக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட ஆவேசமாக இருட்டடி கொடுப்பதுதான் சரி என்ற முனைப்பில் நின்றான். அவன் படிக்கும் தடிமனான புத்தகங்களில் இப்படியான விடயங்களை எப்படிக் கையாளாலாம் என்று அகிலக்காரர்களின் மத்திய குழுவினர் முன்னரே தீர்மானம் போட்டிருந்தார்களா என்று கேட்க நினைத்தாலும் அது அன்றையநாளின் முக்கிய நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால் விட்டுவிட்டேன். இருட்டடித் தாக்குதல் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மூவரையும் பிற்பகல் மூன்று மணியளவில் குருவியன் வெட்டைக்கு வரச்சொல்லிவிட்டு, மத்தியானச் சாப்பாட்டுக்கு அம்மா தேடத் தொடங்க முதலே வீட்டுக்குப் போனேன். சாப்பிடும்போதே ஏதோ பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கப்போவதாக மனம் மிகவும் சந்தோஷப்பட்டது. மயிர்க்கூச்செறியும் மின்னல்வேகத் தாக்குதலை சிறு பிசகும் இல்லாமல் காரியமாற்ற ஒழுங்கான திட்டம் தேவை என்பதால் நண்பர்களைச் சந்திக்கும் தருணம் மட்டும் பொறுமைகாக்க முடியவில்லை. முற்றத்திற்குப் போவதும், வீட்டுக்குள் வருவதுமாக மனதுக்குள் பல கோணங்களில் இருட்டடித் தாக்குதலை ஒத்திகை பார்த்தேன். எதுவும் திருப்தியானதாக இருக்கவில்லை. ஆனால் நல்லா செவிள் பறக்க சப்பல் அடி கொடுக்கவேண்டும் என்ற உந்துதல் கூடிக்கொண்டுவந்தது. முன்னைய வீரதீரச் செயல்களை நினைவுபடுத்த முயன்றேன். பெரிதாகத் தன்னும் சொல்லிக்கொள்ளுமளவில் ஒன்றும் இருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் அண்ணன், தம்பியோடு அடிபாடுகள் இருந்தாலும், வெளியில் நல்லபிள்ளையாகவே அநேகமாக இருந்திருக்கின்றேன். விளையாடும்போது இடையிடையே எதிர்க் 'கன்னை'யாருடனும் விளையாட்டு ருசியில் சில்லறைச் சண்டைகள் பிடித்திருந்தாலும், அவை ஒருநாளும் மோசமான சண்டைகளாக மாறியதில்லை. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பருப்பனுடன் அங்கிரி போட்டதால் வகுப்பில் நாங்கள் இரு கோஸ்டிகளாக இருந்தோம். ஒரு கோஸ்டிக்கு நானும், மற்றக் கோஸ்டிக்கு பருப்பனும் தலைவர்கள். வகுப்பிலும் மைதானத்திலும் வாய்த் தர்க்கங்களிலும், பட்டம் தெளித்தலிலும்தான் எங்கள் கோஸ்டிகள் முறுகுப்பட்டுத் திரிந்தன. ஆளுக்காள் கை வைத்தால் தலைமை வாத்தி செகிடு கிழிய அறைந்துவிடுவார் என்ற பயத்தில் முட்டுப்பட்டதில்லை. எங்கள் கோஸ்டிகளின் முறுகல் முற்றிய நேரத்தில்தான் ஊர்த்திருவிழா வந்தது. சப்பறத் திருவிழா இரவில் கோயில் பின்வீதியில் சப்பறம் போனதன் பிற்பாடு போட்டுப் பிடிப்பதென்று பருப்பனும் நானும் சம்மதித்திருந்தோம். பருப்பன் என்னைவிடப் பலசாலி மாதிரி எனக்குத்தோன்றியது. அதனால் அவன் எதிர்பார்க்காதமாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தபோது, அப்போதுதான் வீட்டில் 'வயறிங்' வேலை செய்து மிஞ்சியிருந்த வயர் துண்டுகளில் இரண்டைச் சுத்திக் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டு கோயிலடிக்குப் போனேன். சப்பறத்திற்குப் பின்னால் பொருமிப் புடைத்த காற்சட்டைப் பொக்கற்றுகளுடன் போய்க்கொண்டிருந்தபோது பருப்பனும் அவன் கோஸ்டியினரும் சில அடிகள் பின்னாலேயே வந்துகொண்டிருந்தனர். சப்பறம் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்குத் திரும்ப நாங்கள் இருதரப்பினரும் பின்தங்கிவிட்டோம். போட்டுப் பிடிப்பதில் முந்துபவன்தான் வெல்வான் என்பதால் பருப்பன் எதிர்பாராத வேளையில் பொக்கற்றுக்குளிருந்த வயரை சடாரென்று எடுத்துச் சுழற்றியபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய பொடியன் ஒருவன் எங்கள் இருவரையும் காதில பிடித்து "சின்ன முளையான்களாக இருக்கிற நீங்கள் கோயில் திருவிழாவில் சண்டைபிடிக்கப் போறியளோ?" என்று கேட்டு புறங்கையால் பளீரென கன்னத்தில் இருவருக்கும் மாறி மாறி அறைந்தான். வயர் வைத்திருந்த காரணத்தால் எனக்குப் பல அடிகள் விழுந்து கன்னம் விண்விண் என்று வலித்தது. பருப்பனும் நானும் "ஐயோ அம்மா" என்று அலறிக் கத்தியவாறே எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். "இனி எங்கையாவது சண்டை பிடிக்கிறது கண்டனெண்டால் அந்த இடத்தில கை காலை ஒடிச்சு கரண்ட் கம்பியில தோரணம் கட்டிவிடுவன் " என்று வெருட்டி எங்களை ஓடித்தப்புமாறு சொன்னதும், நாங்கள் குதிகால் குண்டியில்பட கன்னத்தைப் பிடித்தவாறே ஓடி வீட்டுக்குப் போனதும் இப்பத்தான் நடந்தமாதிரி இன்னமும் உணர்வில் உள்ளது. மூன்று மணிக்கு முந்தியே சைக்கிளை எடுத்துக்கொண்டு குருவியன் வெட்டைக்கு வேகமாகப் பறந்தேன். சொல்லி வைத்த மாதிரி நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். வெட்டையின் ஒரத்தில் பனைமர நிழலின் கீழ் வழமையாக இருந்து கதைக்கும் பனங்குத்தியில் குந்தியவாறே இருட்டடி கொடுக்கும் திட்டத்தை விபரிக்கத் தொடங்கினேன். பின்னேரம் விளையாட்டு முடிந்தபின்னர், வீட்டுக்குப் போவது மாதிரிப் போய் இருள் கூடியதும் திரும்பவும் குருவியன் வெட்டையில் சந்திக்கவேண்டும் என்றேன். கல்லுரோட்டில் இருந்து பனங்கூடலுக்குள்ளால் பிரியும் ஒற்றையடிப்பாதை வெட்டைக்கு வர சுமார் நூறு யாருக்கு முன்னால் வில்லு மாதிரி வளையும் இடம்தான் தோதான இடம் என்று அந்த இடத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொன்னேன். அந்த வளைவான பாதைக்கு கிட்டவாக பல பனைமரங்கள் நெருங்கி நிற்பதால், கரிய இருளில் பனைமரத்தோடு இருட்டாக இருட்டாக நின்று தாக்குதலைச் செய்யலாம் என்று சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். கட்டையன் தன்னிடம் இருக்கின்ற மம்பட்டிப் பிடிக் கொட்டனைக் கொண்டுவரவா என்று கேட்டபோது, கொட்டன், பொல்லுகளால் அடித்தால் பெட்டைக் குயிலன் சிலநேரம் பொட்டென்று போனாலும் போய்விடுவான் என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் நாலு ஆம்பிளையள் அவனைக் கையாலையும் காலாலையும் உழக்கினாலே சவிள் அடி சம்பல் இடியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெட்டைக் குயிலன் விட்ட சேட்டைக்கு அவனுக்கு நல்ல பூசை கொடுக்கவேண்டும் என்பதால், கட்டையனை பெட்டைக் குயிலனின் கவிட்டைக் குறி தப்பாமல் நாலு எத்து எத்தி அடிபட்ட ட்றக் மாதிரிச் சப்பிளிக்கிறதுதான் முக்கியம் என்று சொன்னேன். பெட்டைக் குயிலனுக்கு தான் கொழுப்பு முத்திச் செய்த வேலையாலதான் அடிவிழுகுது என்று தெரிந்தாலும் ஆர் அடிக்கிறது என்று தெரியக்கூடாது. எங்களில ஒருத்தனையும் அவன் மட்டுக்கட்டக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். அதாலை அடிபோடும்போது ஒரு சொல்லுத்தன்னும் கதைக்காமல் நாங்கள் உசாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன். அரை மணித்தியாலமாக பல்வேறு உத்திகளையும் அலசிய பின்னர் திட்டத்தை இவ்வாறாகச் செய்யலாம் என்று நாலுபேரும் உடன்பட்டோம். கல்லுரோட்டுப் பக்கத்தால் வரும் பாதை வளைவதற்கு முன்னால் சொக்கியும், புக்கையரும் பாதையின் இருபக்கமும் உள்ள பனை மரங்களின் பின்னால் சத்தம் சலாரில்லாமல் ஒளித்திருக்கவேண்டும். வளைவில் இருந்து வெட்டைப் பக்கமாக வரும் பாதையின் இரு பக்கத்தில் கட்டையனும் நானும் பனைகளுக்கு பின்னால் பதுங்கியிருக்கவேண்டும். பெட்டைக் குயிலன் வளைவில் வர அவனுக்கு பின் பக்கமாக நிற்கும் புக்கையர் முதலில் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கும்பத்தில் பாய்ந்து அவனை நிலத்தில் தடாலடியாக விழுத்தவேண்டும். பெட்டைக் குயிலன் நிலைகுலைந்த கணத்தில் சொக்கி ஓடிவந்து அவனின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து இறுக்கி பூட்டுப்போட்டு, அவனைத் திமிறாமல் பார்க்கவேண்டும். நிலத்தில பெட்டைக் குயிலன் விழுந்து கிடக்கிற நேரத்தில கட்டையன் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கவிட்டைக் காலால் பதம் பார்க்கவேண்டும். நான் பெட்டைக் குயிலனின் நெஞ்சிலையும் முகத்திலையும் ஓங்கிக் குத்தி அவனின் சொண்டை உடைத்து, பல்லை நொருக்கி, சொத்தையையும் வீங்கச் செய்யவேண்டும். இதெல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். அதிரடியான இருட்டடியை முடித்துக்கொண்டு, வேறு ஆட்கள் வரமுன்னர் நாங்கள் நாலுபேரும் பிரிந்து ஓடி முங்கியன் தோட்டத்து தண்ணித்தொட்டியடியில சந்திக்கவேண்டும். சிக்கல்கள், குழறுபடிகள் எதுவும் வராத மிகவும் தெளிவான திட்டத்தை போட்டதில் மனதில் பெருமிதம் குடிகொண்டது. நேரம் நிறைய இருந்ததால் தாக்குதல் ஒத்திகை பார்க்க முங்கியன் தோட்டத்திற்கு கல்லுரோட்டில் ஏறி, கிழக்குப் பக்கமாகத் திரும்பும் எருக்கலை, பாவட்டை, ஆமணக்குகளால் நிறைந்த பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றையடிப் பாதையூடாகப் போனோம். முங்கியன் தோட்டம் குத்தினால் ஏற்பேத்தும் கறள்பிடித்த முள்ளுக்கம்பிகளாலும், பட்ட இடத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளுகளைக் கொண்ட கிளுவைகளாலும், மூரி மட்டைகளால் அடைக்கப்பட்ட வேலியாலும் திறமாக அறுக்கை செய்யப்பட்ட பெரியதோட்டமாக இருந்தாலும், நாங்கள் களவாகப் போய்ப் புழங்க இடையிடையே பொட்டுக்களை பிரிச்சு வைத்திருந்தோம். பிரிச்ச பொட்டு ஒன்றுக்குள்ளால் உள்ளே புகுந்து, தோட்டவேலியோடு பத்தையாக வளர்ந்திருந்த நாயுருவி, கூப்பிட்டுகுத்தி, காவிளாய்ச் செடிகளை விலத்தி பெரிய வாய்க்கால் பாதையூடாக தண்ணித்தொட்டியடிக்குப் போனோம். முங்கியன் தோட்டத்தில் அழுக்கணவன் பூச்சிகள் பிடிச்சு கீழ்ப்பக்கமாக இலை சுருட்டிக் கிடந்த மிளகாய்க் கண்டுகளுக்கு கள்ளுமுட்டித் தலையோடு காவல் செய்யும் வெருளியைக் கண்டதும், அதை பெட்டைக் குயிலனாகப் பாவித்து அடிபோடுகின்ற ஒத்திகையைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது. வெருளிக்கு முதுகு கிடையாததால் வாய்க்கால் மணலில் நான் நிற்க புக்கையர் எனக்குப் பின்பக்கமாக ஓடிவந்து என்னைக் கீழே விழுத்துவது முதலாவது ஒத்திகையாக இருந்தது. நான் கீழே விழாமல் இருக்க அகட்டிய கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊண்டியபடி நின்றேன். புக்கையர் வேகமாக ஓடிவந்து ஒரு பண்டிக்குட்டி மாதிரி எனது முதுகில் ஏறியபோது, அவனது பாரம் தாங்கமுடியாமல் முகம் குப்புற வாய்க்கால் மணலில் விழுந்தேன். வாயெல்லாம் வாய்க்கால் மண் போய்விட்டது. ஏதோ பழைய கறளை வைத்து புக்கையர் என்னை வேண்டுமென்றே விழுத்திவிட்டான் என்று சரியான கோபம் வந்தாலும், ஒத்திகை ஒழுங்காக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன். அடுத்ததாக கட்டையனை கவிட்டைப் பொத்தி அடிக்க தயாராகச் சொன்னேன். அவனும் அதிவேகமாக எனது இடுப்புப் பிரதேசத்தை நோக்கிக் காலை வளைத்து சுழற்றமுனைந்தான். அவனைச் சரமாரியாக வாய்க்குவந்தபடி தூஷணத்தால் அர்ச்சித்து திட்டியபடி வெருளியின் கவிட்டுக்கு உதைக்கச் சொன்னேன். கட்டையன் வலுவேகமாக ஓடிப்போய் வெருளிக்கு ஒரு உதைவிட்டான். அந்த உதையில் வெருளியின் தலையாக இருந்து கள்ளுமுட்டி நிலத்தில் விழுந்து சிதிலமாக உடைந்து சிதறியது. விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லிய பின்னர் கேட்கின்ற கேள்விக்கு விக்கிரமாதித்தன் விடை தெரிந்தும் சொல்லாமல் மெளனம் சாதித்தால் அவன் தலையும் வெருளியின் முட்டித்தலை மாதிரி சுக்குநூறாக இப்படித்தான் வெடித்திருக்கும் என்று பட்டது. கைகளை முறுக்கிப் பூட்டுப் போடுவது தனக்கு வடிவாகச் செய்யத் தெரியும் என்றும், தான் வீட்டில் தமையன்மாரை அடிக்கடி பூட்டுப்போட்டு மடக்கிறானென்று சொக்கி சொன்னதால் பூட்டுப்போடும் ஒத்திகை தேவையில்லை என்று விட்டுவிட்டோம். நானும் என் பங்குக்கு எனக்கு இடக்கைக் பழக்கம் என்பதால், என்ரை கை ஓங்குவதை எதிராளி பார்க்கமுன்னரே கன்னத்திலும், தோள்மூட்டிலும் உரமான குத்துவிட்டு கொழுக்கட்டை மாதிரி வீங்கச் செய்யமுடியும் என்று சொன்னேன். ஏற்கனவே முன்னர் ஒருக்கால் த்றீ, நோட், ஃபோர் காட்ஸ் விளையாடும்போது அளாப்பியதால் புக்கையருக்குக் குடுத்த குடுவையை ஞாபகப்படுத்த, புக்கையரும் நான் கள்ள இடிகள் நல்லாப் போடுவதில் மன்னன் என்று ஒத்துக்கொண்டான். நாலு பேரும் சேர்ந்து பெட்டைக் குயிலனுக்கு கும்முற கும்மலில அவன் பிழியப்பட்ட சக்கையாகத்தான் போகிறான் என்ற திருப்தி எல்லோர் முகத்திலும் இழையோடியது. ஒத்திகை வேகமாக முடிந்ததால் திரும்பவும் குருவியன் வெட்டைக்குப் போய் உதைபந்து விளையாடிவிட்டு வெய்யில் தாண்டு இருட்டுப்படும் கருக்கல் நேரத்தில் எல்லோரும் கலைந்து வீட்டுக்குப் போனோம். அம்மா மேச்சலுக்குப் போட்டு வந்த பசுமாட்டில் பாலைக் கறந்து காய்ச்சி ஈயப்பேணியில் விட்டு ஆத்தியபடி இருந்தா. உலகத்தில என்னதான் நடந்தாலும், ஆறு மணிக்கு அம்மா பால் காய்ச்சுவதும், அதை நானும் அண்ணன், தம்பியும் குடிப்பதும் நடந்துதான் ஆகவேண்டும். தப்பித் தவறி பிந்திப் போனால் அம்மாவின் ஏச்சுப் பேச்சுக்குத் தப்பமுடியாது. எனவே, நல்ல பிள்ளைமாதிரி மேலைக் காலைக் கழுவி, ஆத்தி மிதமான சூட்டிலிருக்கும் பாலை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, காற்சட்டைக்கு மேல் சாரத்தையும் கட்டிகொண்டு சேர்ட்டும் இல்லாமல் பட்டிக்கு வந்த ஆடு மாதிரி பவ்வியமாக இருந்தேன். அம்மா இரவுச்சாப்பாடு செய்வதற்கு தட்டுமூடல், நீத்துப் பெட்டிகளை தேடுவதில் பிராக்காக இருந்தநேரம், டக்கென்று சைக்கிளை எடுத்து வேகமாக உருட்டிக் கேற்றைத் தாண்டியதும் பாய்ந்தேறி பெடலை உழக்கிக் கொண்டு குருவியன் வெட்டைக்குப் பறந்தேன். தப்பித் தவறிச் சுணங்கிப் போனால் மற்றவர்கள் திட்டத்தை மாற்றிக் குழப்பக்கூடும் என்பதால் முதலில் நானே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன். - தொடரும் -
 42. 8 likes
  ஏகாந்தமாய் இம்மாலையில் அன்பே, உன் தோள் சாய நான் தூங்காமல் காத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டுந்தான் நீ வருவாயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக்கிடக்கிறாய். நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே நடப்பதுவும் சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் மட்டும் முடிகிறது. உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதிற்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இருந்ததில்லை இருந்தும் ஏகாந்தத்தை இரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை பொத்தி வைத்த தருணங்கள் பூக்களாய் இதழ் விரிக்க மயிலிறகாய் வருடும் உன் நினைவுகளால் சிரிக்கிறேன் கரை தொடும் அலையென என் கனவினில் மட்டும் வாஞ்சையுடன் வருடும் உன் பிரிவினில் உணர்கின்றேன் வாழ்வின் அர்த்தத்தை.
 43. 8 likes
  அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் பெண் மகவும் கொண்ட குடும்பம் பூரண அழகு மகிழ்வான குடும்பம் பிறர் பார்வைக்கு அழகு அன்பான மனைவியும் பண்பான கணவனும் ஊருக்கு அழகு இன் சொல்லும் உபசரிப்பும் ஊர் மண்ணுக்கு அழகு இயற்கை வளம் கொண்ட கிராமங்கள் அந்த நாட்டுக்கு அழகு நாடுகளின் நல்லாட்சி நல்லரசனுக்கு அழகு நல்லரசனின் ஆடசியில் மதி நுட்ப மந்திரி அழகு மந்திரியின் உதவிக்கு மெய்க் காப்பாளர் அழகு காவலர்களின் நேர்மை ச ட் டம் ஒழுங்குக்கு அழகு
 44. 8 likes
  எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை! வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது! சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்! எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும் சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது! ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்! இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன 'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா! ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது ஆரியம்! உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை! சிவ தாண்டவம் என்பது 'பிரபஞ்ச' இயக்கம்! இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது! திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை! சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்! மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்! 'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம், பழித்தது ஒழித்து விடின்!
 45. 8 likes
  பால்ய நினைவுகள்..! இப்படித்தான் இருந்தது எங்கள் கிராமத்தில் 'டூரிங் டாக்கீஸ்'..! ஆற்று மணல் குவியலே எங்கள் இருக்கை.! பண்டிகை நாட்களில் இருபுறமும் தடிப்பான துணிகளால் மூடிவிட்டு பகல் காட்சியும் நடைபெறும்!! சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டி..! சிவாஜி, எம்ஜியார் படங்களென்றால் இந்த மாட்டுவண்டி, வண்ண வண்ண பேப்பர், ஜரிகை அலங்காரத்தால் கவர்ந்திழுக்கும்!! அன்று திரையிடும் சினிமா பற்றிய அறிவிக்கும் மாட்டு வண்டியின் பின்னால் இப்படித்தான் நாங்களும் பால்ய வயதில் மகிழ்ச்சியுடன் ஓடினோம்..! (சகோதரி நிலாமதி சொன்னபடியே பெண்குட்டிகள் பின்னாடி ஓடி வருவதை, இங்கேயும் காணலாம் ) .
 46. 8 likes
  ஆண்மகனின் பேறுகாலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது? அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D 2 ஆம் மாதம்: அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. அவர்: நீ rest எடு. நான் பாத்துக்கிறேன். 3 ஆம் மாதம்: அவள்: மருத்துவமனைக்கு கூட வருவ தானே? அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல. அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது. நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா? அவர்: இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு? அவள்: கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. அவர்: சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம். அவள்: அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ. 4 ஆம் மாதம்: இரவு 3 மணி: அவள்: எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா? அவர்: (தூக்க கலக்கத்தில்) போறேன். வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு . அவள்: :O 5 ஆம் மாதம்: அவள்: கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில. அவர்: பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன். அவள்: என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற? 6 ஆம் மாதம்: அவள்: முக்கி முனகி எந்திரிக்க முனைகையில் அவர்: என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ. அவள்: யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில. அவர்: இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம். அவள்: (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன். 7 ஆம் மாதம்: அவர்: பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார். அவள்: எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க? அவர்: பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற? அவள்: நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும். அவர்: சரி. நான் போறேன். உன்ன பாக்கல. அவள்: ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத. 8 ஆம் மாதம்: நடுஇரவில்: அவள்: ஏன் தூங்குற? அவர்: இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா? அவள்: ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான். அவர்: சரி. நான் திரும்பியே படுத்துகிறேன். 9 ஆம் மாதம்: அவள்: ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு. அவர்: பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன். அவள்: நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன். அவர்: சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன். அவள்: ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது. அவர்: கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. 10 ஆம் மாதம்: அவள்: என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடு. இதுக்கு மேல முடியாது. அவர்: கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான். கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" . பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான். பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.. 💝💝💝 உபயம் - முகநூல் மு
 47. 8 likes
  இந்த திரி தொடங்கி ரெண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டது. எதிர் பார்க்க வில்லை இவ்வளவு காலம் நீடிக்கும் என்று. பலர் பங்குபற்றுவது எனக்கும் ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு- நன்றிகள் இதுவரை 77 விடுகதைகள் கேட்கப் பட்டன. 8இக்கு மட்டும் ஒருவரும் பதில் அளிக்க வில்லை . ஒன்றுக்கு இருவர் ஒரே நேரத்தில் முதலில் பதில் அளித்துள்ளனர். இது போட்டி அரங்கம் அல்ல. இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும் என்னிடம் Excel கோப்பில் பதிவில் உள்ளது. அதன்படி, 1 மீரா - 17 2 நிலாமதி - 15 3 வாத்தியார் - 13 4 நவீனன்-6 5 வாசி - 4 = தமிழ் சிறி- 4 6 நுணாவிலான்- 3 = ஜீவன் சிவா - 3 7 சுவி- 2 8 குமாரசாமி-1 = கறுப்பி-1 8 தமிழினி-1
 48. 7 likes
  துருச்சாமி....பாகம் ..2 தொடர்கிறது...! சாமி தனது மேலில் போர்த்து இருந்த சால்வையை எடுத்து கீழே வைத்து விட்டு பையில் இருக்கும் சாமான்களை ஒழுங்காக அடுக்கி வைக்குது. சந்நியாசிகளின் வாழ்க்கையில் அந்தந்தப் பொருள் அந்தந்த இடங்களில் இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் தந்திரங்கள் மாயங்கள் செய்ய முடியும். பணத்தை ஆயிரம் ஆயிரமாய் சுருட்டி அதற்குரிய பையில் போடுது. நகைகளை அதற்குரிய பையில் வைக்குது. ராசப்புவும் சிறிது போதை ஏறிய நிலையில் கீழே பார்த்து சுருட்டையும் சுற்றிக் கொண்டு சொல்லுகிறான். சாமி நீ என்ன நினைத்தாலும் சரி, நான் வேணுமெண்டு மோதிரத்தை எடுக்கேல்ல நான் அப்பா, அம்மா மூன்றுபேர். அக்காவை நல்ல சீதனத்துடன் கட்டிக் குடுத்திட்டம். எங்கட தோட்டத்தில நான் துலா மிதிக்க அப்பு பட்டையால இறைக்க அம்மா பாத்தி கட்டுறவா. முந்தாநாள் மாச்சான் சொன்னார் ஒரு வூல்ஸிலி மிசின் ஒன்று நல்ல மலிவா வந்திருக்கு. வேணுமெண்டால் எடு என்று சொன்னவர். மிசின் இறைத்தால் நானும் அப்புவும் பாத்தி கட்ட அம்மாவுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும். நானும் அதே யோசனையில் இருக்கும் போதுதான் மணலுக்குள்ள அந்த மோதிரத்தைக் கண்டன்.எதோ ஒரு சபலத்தில அதை எடுத்திட்டன். தப்புதான். நல்ல காலம் நீங்கள் என்னைக் காப்பாற்றிப் போட்டிங்கள் சாமி என்கிறான்.அவன் கண்கள் கலங்கி இருக்கின்றன. சாமி யோசிக்குது காலாகாலத்தில எனக்கு ஒரு மகன் இருந்தால் இந்த வயசிலதான் இருப்பான். சாமியும், ஒரு விவசாயிக்கு வாழ்க்கையில் என்னேரம் என்னென்ன கஷ்டம் வரும் என்று சொல்ல முடியாது.அதுக்காக திருடுறது,தற்கொலை செய்வது என்றெல்லாம் நினைக்கக் கூடாது.நீ ஒன்றுக்கும் யோசிக்காத. இந்தா இதை வைத்துக்கொள் என்று சில கட்டுக் காசும் எதோ நினைத்தாற்போல் அந்த மோதிரத்தையும் அவனிடம் குடுக்குது. அவனும் வேண்டாம் சாமி என்று முதலில் மறுத்தாலும், பின்பு வாங்கிக் கொள்கிறான். பணத்தைத் தனது பையில் பத்திரப் படுத்தி விட்டு மோதிரத்தை தனது சின்னி விரலில் போட அது வலு பொருத்தமாய் இருக்கு. மேலும் ஒருகிளாஸ் பொன்னிறத் திரவம் தொண்டையில் இறங்கியதும், பொன்னிற மேனிக் கோமளம் கண்முன்னே வருகின்றாள். கோமளம் பதினெட்டு பத்தொன்பதில் திருமணம் முடித்து விட்டாள்.ஆனால் மணமாகி ஒரு வருடத்தில் ஓர்நாள் அவள் கணவன் நண்பர்களுடன் இரணைமடுவில் நீர்க்காகத்தை சுட்டுவிட்டு குளத்தில் விழுந்த காகங்களை நீந்தி எடுக்கப் போனவன்தான், பேந்து வரவில்லை. இப்ப கோமளம் பருவத்தின் வாசலில் நிக்கின்றாள். எட்டிப் பறிக்கத் தோதாய் காய்த்திருக்கும் செவ்விளனி மரம்போல. நாளைக்கு முதல் வேலையாய் அந்த மிஷினை வாங்க வேண்டும். பிறகு அப்பு ஆச்சியை கோமளத்தைப் பெண் கேட்டு அனுப்ப வேண்டும். இப்ப பங்குனி, ஆவணியில் கலியாணம் காட்டினாலும் அடுத்து வார குளிர்காலம் அம்சமாய் இருக்கும் என்று திட்டம் போட்டுக் கொண்டு நிம்மதியுடன் சாமியைப் பார்க்கிறான். சாமி வெறும் மேலுடன் இருக்குது. அதன் உடம்பு முழுதும் தழும்பாய் கிடக்கு.....! நினைவுகள் தொடரும்....!
 49. 7 likes
  ************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் நான் தற்செயலாக கல் தடக்கி விழுந்தாலும் இந்த சமுதாயம் அவர் வெறியில் விழுந்திருப்பார் என்று தான் சொல்வார்கள் ஆனால் நீ ஒரு நாள் வெறியில் விழுந்தாலும் அவருக்கு கல் தடக்கி இருக்கும் என்பார்கள் என்று. ********** நண்பர்களோ உறவுகளோ தண்ணி அடி என்று என்னை ஒரு போதும் வற்புறுத்தியதில்லை என்னை விட்டு ஒதுங்கிக்கொள்வார்கள் ஏதாவது பேசணும் என்றால் தண்ணி என்றால் என் முன்னே வரமாட்டார்கள் தவிர்த்துவிடுவார்கள். இது தான்வழமை. இதுவரை... ********** இப்ப எதுக்கு இதெல்லாம் அது தானே கேள்வி முடிவுரை இனித்தானே.... ********* தம்பி ஒருத்தன் அன்றைக்கு வீட்டுக்கு வந்தான் குடித்திருக்கின்றான் என்று தெரிந்தது. சாதாரணமாக குடித்திருந்தால் என்முன்னே வரமாட்டான் அன்று சுத்தி சுத்தி வந்தான் ஏதோ என்னிடம் பேச முயல்கின்றான் என்பது தெரிந்தது ஆனாலும் தண்ணியில இவன் என்னத்தை புலம்பி என்ன பயன்?? ஏதாவது இருந்தால் நாளை பேசலாம் என புறக்கணித்து விட்டேன் போகும் போது ஒரு மாதிரி பார்த்தபடியே தான் போனான் அந்த பார்வை ????? அன்றிரவு அவன் தற்கொலை செய்து கொண்டான். (சில வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம். சில உருமாற்றங்களுடன்)
 50. 7 likes
  துருச்சாமி தொடர்கிறது.....! 5) பந்தி போஜனப் படலம்....! அடுக்களையில் அஞ்சாறு பெண்கள் நன்றாக சப்பாணி கட்டிக் கொண்டு இருந்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருக்கினம். அது ஒரு பெரிய நாற்சார் வீடு என்ற படியால் நிறைய இடமும் வசதியும் இருக்கு. செல்லையாவின் மனைவி செல்லாச்சியும் அங்கிருந்த வாழைக்காய்களையும் பொத்திகளையும் பார்த்து எங்கட தோட்டத்து காய்களும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே வெட்டி வைக்கிறாள். பொன்னாச்சியும் ஓமடி காய்கறிகளும் அப்படியேதான் இருக்கு என்று கூடமாட வேலை செய்கிறாள். பின் வளவில் இருந்த கண்ணன் மூன்று கோழிகளையும் உரித்து அளவளவாய் வெட்டி இரண்டு சட்டிகளில் வைத்து விட்டு செட்டைகளைத் தாக்க பக்கத்தில் பள்ளம் தோண்டுகிறான். அப்ப பெட்டை அன்னம் அடுத்த வீட்டு வளவுக்குள்ளால கடந்து அங்கு வருகிறாள்.அவள் குழந்தைப் பருவம் கடந்து யௌவனப் பருவத்தில் இருக்கின்றாள். அவளிடம் கண்ணன் எடி அன்னம் இந்தக் கறிச்சட்டிகளைக் கொண்டுபோய் அம்மாவிட்ட குடுத்திட்டு சவர்க்காரம் எடுத்துக் கொண்டு வாடி என்கிறான். அன்னமும் அவன் தாக்க வைத்திருந்த கோழிச்செட்டைகளை பார்த்துவிட்டு இந்த மண்ணிறச் செட்டைக் கோழியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து அட எங்கட கண்ணாத்தா ஆச்சியின் குஞ்ச்சுகளிண்ட தாய்க்கோழி, அன்னைக்கு கூட குஞ்சுகளைப் பிராந்து தூக்காமல் சாயம் பூசிவிட்டது ஞபகம் வருது. அந்த யோசனையுடன் இந்த விசர் மனிசி என்னத்துக்கு அந்தக் கோழியை அறுக்கக் குடுத்தது என்று தனக்குள் புறுபுறுத்துக் கொண்டுபோய் அங்கிருந்த கண்ணாத்தாளிடமே சட்டியைக் குடுத்து ஒரு முறைப்பு முறைத்து கேவலமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சவர்காரத்தை எடுத்துக் கொண்டு திரும்புகிறாள். கண்ணாத்தாவும் இந்தக் குமாரி என்ன இருந்தாப்போல இந்தச் சிலுப்பு சிலுப்பிறா என்று நினைத்துக் கொண்டு இறைச்சியை அடுப்பில் இருந்த பெரிய சட்டிக்குள் போட்டு வேக விடுகின்றாள். அவளுக்கு தன கோழியைக் காணேல்ல என்ற கவலையில் தன்னையறியாமல் கண்ணீரும் வேர்வையுடன் கலந்து வருகுது. யோசனையுடன் சவர்காரத்தயும் கொண்டு வந்த அன்னம் கிணத்தடி வாய்க்காலை எட்டிக் கடக்க பாவாடை தடுக்கி சறுக்கி மல்லாந்து விழுகிறாள்.சவர்க்காரம் எகிறி கோஹ்லி அடித்த பந்துபோல் மேலே போகுது, அவள் விழுவதை பார்த்த கண்ணனும் ஓடிவந்து ஒருகையை நாரியில் குடுத்து அவளை பிடிக்க சவர்க்காரம் நெஞ்சடியில் விழ தாவணியுடன் சேர்த்து சவற்காரத்தையும் பிடித்து விடுகின்றான் தோனி மாதிரி. ஒருமாதிரிச் சுதாகரித்து எழுந்த அன்னத்துக்கு இடையில் எதோ நழுவிற மாதிரி இருக்கு.மற்றச் சட்டியையும் கொண்டுபோய் குசினிக்குள் குடுத்து விட்டு அப்படியே குந்தில் குந்துகிறாள்.அவள் நெளியிறதைப் பார்த்த பொன்மணி அன்னத்தை அங்கால கூட்டிப் போய் கதைச்சு உடுப்புகளையும் பார்த்துட்டு வந்து அன்னம் சமைஞ்சிட்டா என்று முறுவலிப்போடு சொல்ல எல்லோரும் சந்தோசமாய் அவளை பார்த்தது கதைக்கினம். உதுக்குத்தான் அவள் இப்ப என்னை முறைச்சவள் எண்டு கண்ணாத்தாளும் சொல்லுறாள். பொன்மணியும் அவளின் தாயுமாய் அன்னத்துக்கு பச்சை முட்டையை உடைத்து வாய்க்குள்ள ஊத்திவிட்டு அன்னம் வேண்டாம் என்று மறுக்க விடாமல் கொஞ்ச நல்லெண்ணையும் பருக்கி சற்று நேரத்தின்பின் கத்தரிக்காய் சாறும் குடிக்கக் குடுத்துவிடுகிறாள். மற்றவர்கள் வடிச்ச கஞ்சிக்க உப்பு போட்டு தேங்காய் பாலும் கலந்து குடிக்கினம்.ஒருமாதிரி சமையல் தடபுடலாய் முடியுது. அங்கு கதிரவேலுவும் அன்னம் சமைச்சாச்சா என்று கேட்டுக் கொண்டே வருகிறார். பொண்மணியும் ஓமப்பா அன்னம் சமைச்சாச்சு, அன்னமும் சமைஞ்சாச்சு என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். சாமியும் எழுந்து கைகால் கழுவ கிணத்தடிக்கு வருகுது. அங்கு எலுமிச்சை, பிலா மரங்களில் குரங்குகள் தாவித் திரிகின்றன. சாமியும் நாலு தேசிக்காயைப் பிடுங்கி பையில போட்டுக்கொண்டு வருகுது. அப்போது மங்களம் கண்ணனைத் தேடிக் கொண்டு சுட சுட கஞ்சிக் கிண்ணத்துடன் வருகிறாள். டேய் கண்ணா இந்தாடா கஞ்சி, வந்து குடிச்சுட்டுப் போடா என்று கூப்பிடுகிறாள். அவனும் அங்கால பாவட்டைப் பத்தைப் பக்கம் நின்று பொறக்கா வாறன். நீ கிணத்துக் கட்டிலை வைச்சிட்டுப் போ என்கிறான். அந்நேரம் சாமியும் கவனம் பிள்ளை பின்னால குரங்கு என்று சொல்லவதற் கிடையில் ஒரு தாட்டன் குரங்கு ஒன்று பாய்ந்து அந்தக் கஞ்சிக் கிண்ணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுது. கஞ்சியும் காலிலையையும் நிலத்திலையும் கொட்டிட்டுது. அவள் கல்லெடுத்து குரங்குக்கு ஏறிய கண்ணனும் வேர்க்க விறுவிறுக்க ஓடி வாரான். சாமியும் கைகால் முகம் கழுவி நல்லா திருநீறு பூசிக்கொண்டு மீண்டும் திண்ணையில் வந்து அமருது. சாமிக்கு முன்னாள் பெரிய குருத்துத் தலைவாழை இலையில் சாதம் குவித்து இறைசிக்குழம்பும் பொரியலும் நிறையப் போட்டு சுத்தி எல்லா கறிவகைகளும் வைத்திருக்கு. பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் எலும்புரசமும், செம்பில தண்ணீரும் இருக்கு.மற்றவர்கள் எல்லோரும் அடுத்த திண்ணையிலும் கீழே பாய் விரித்தும் , பெண்கள் உள் திண்ணையிலுமாய் அமர்ந்திருக்கின்றனர். எல்லோருக்கு முன்னாலும் வாழையிலையில் சாப்பாடு வஞ்சகமில்லாமல் பரிமாறியிருக்கு.சாமியும் ஒருகையில் தண்ணீரெடுத்து கண்முடித் தியானித்து சாதத்தைச்சுற்றி இலையில் விட்டு ஆனந்த பைரவா போற்றி என்று சொல்லி சாப்பிடத் தொடங்குது. எல்லோரும் கலகலப்பாக கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிடுகினம். பின் எல்லோரும் ஆங்காங்கே குழுக்களாகக் கூடி வெத்தலைப் பெட்டியும் சுறுட்டுமாய் இருக்கினம். மதியம் 02 :00 மணி. சாமியும் உண்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்து படுத்திருக்க பர்வதம் ஒரு தலைகாணியைக் எடுத்து வந்து வைத்து விட்டுப் போகிறாள். அற்புதங்கள் தொடரும்....!