Jump to content

கருத்துக்கள விதிமுறைகள் (முன்னை பட்டியல்)


Recommended Posts

வணக்கம்,

யாழ் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (13.04.2007 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  1. கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  2. சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  3. ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  4. கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  5. வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  6. சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  7. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

2. தலைப்பு

  1. நீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  2. தலைப்புகள் நீளமானவையாக இருத்தல் ஆகாது.
    • சுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்
    • தலைப்பு (Topic Title) என்பதில் சுருக்கமான தலைப்பை எழுதலாம்.
    • விளக்கம் (Topic Description) என்பதில் விரிவான தலைப்பை எழுதலாம்.

  • யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.
  • தலைப்புகள் பின்வரும் வகையில் அமைதல் ஆகாது:

    • வன்முறையையும், வக்கிரங்களையும் தூண்டும் வகையிலான தலைப்புகள்
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள்
    • [*]பின்வரும் முறையில் தலைப்புக்கள் எழுதப்படல் ஆகாது:

      • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
      • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
      • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

      3. மொழி

  1. யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  2. ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:
    • அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும்.
    • அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்
    • அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.

4. உரையாடல்

  1. "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  2. "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

5. அரட்டை

  1. கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் [சாதுவாக], யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  3. இருப்பினும், மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுப்பின் விதிமுறை "ஆ-5.1" செல்லுபடியாகும்.

6. படங்கள்

  1. யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.
  2. பின்வரும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது:
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்
    • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள்

  • செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:

    • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்
    • [*]படங்களின் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)

      [*]உங்கள் படம் அல்லாத வேறு ஒருவரின் படத்தை இணைக்கும் போது அவரது அனுமதி பெறப்படல் வேண்டும்.

      7. மூலம்

  1. யாழ் கருத்துக்களத்தில் உங்களால் இணைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்:
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்

  • மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும்.
  • எ.கா.: [தலைப்பு: யாழ் இணையமும் அது நடந்து வந்த பாதையும் | எழுதியவர்: மோகன் | காலம்: 25 March 2005 | மூலம்: யாழ் இணையம் | இணைப்பு: www.yarl.com/history/2005.html]
  • அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:

    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
    • 8. பொறுப்பு

  1. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  2. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
  3. அவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அரவரவரே பொறுப்பேற்க வேண்டும்.

ஆ) உறுப்பினர்கள்

1. உங்கள் பெயர்

  1. யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
    • பயனர் பெயர் (user name): இது யாழ் கருத்துக்களத்தில் உங்கள் பதிவிற்கான பெயர். நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்கான பெயர்.
    • புனை பெயர் (nick name): இது உங்களை நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அடையாளப்படுத்துவதற்கான பெயர்.

  • இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.
  • பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாது.)
  • பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
    • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்)
    • [*]பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:

      • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
      • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
      • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
      • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

      2. உங்கள் படம்

  1. யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.
    • பயனர் படம் (profile foto): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • சின்னம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.

  • இவை இரண்டும் உண்மையான உங்கள் படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.
  • படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:

    • பயனர் படம்: 90px * 90px
    • சின்னம்: 80px * 80px
    • [*]பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

      • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் (எ.கா.: சு.ப.தமிழ்ச்செல்வன்)
      • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
      • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
      • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
      • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

      3. கருத்தாடல்

  1. சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  2. புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  3. கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)

4. தனிமடற் சேவை

  1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.
  2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.
  3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)
  4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.

இ) வடிவம்

1. எழுத்து

  1. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicode எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  2. கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  3. தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனை பயன்படுத்தலாம்.
  4. வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.

2. நிறம்

  1. வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)

3. படம்

  1. இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.