Jump to content

அவனுக்குத்தான்..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு தவிர்ந்த நேரத்தில் ரொம்ப யாலியாக இருப்பது எனது வழக்கம்.

நன்றாக தூங்குவேன். நன்றாக சாப்பிடுவேன். நன்றாக ஊர் சுத்துவேன். நல்ல படங்கள் அதிலும் ரஐனி படம் முதல் காட்சி பார்ப்பேன். பாடசாலை கட் பண்ணாமல்.

அண்ணருடைய வீடு ஐம்பெற்றா வீதியில். மதியம் பாடசாலை முடிய அப்படியே 155இலோ 101 இலோ வந்திறங்கி 167 எடுப்பேன். சிலவேளை அப்படியே 167இல் போவேன் அல்லது கடைக்கு வந்து சைக்கிளில் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன்.. (கலருகள் ஏறுவதைப்பொறுத்தே போக்குவரத்து வாகனம் தெரிவு செய்யப்படும் உள்ளே போவதா வெளியில் தொங்குவதா என்பதுதும் அவர்கள் உளள்ளே இருக்குகும் இடத்தைப்◌ாறுத்தேத ததீர்மானிக்கப்படும் :wub: )

அதன் பின் ஐயாவைப்பிடிக்கமுடியாது. ஒன்றில் ஊர் சுற்றுவது. அல்லது நித்திரை கொள்வது தான் ஐயாவின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும்.

இத்தனைக்கும் உடுப்பை கழட்டி வைத்தால் வந்து எடுத்துப்போய் தோய்த்து அயன் செய்து கொண்டு வர ஒருவரை அண்ணர் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ஆனாலும் அவர் அயன் செய்வது நமக்கு சரிவராது. அப்பொழுது சூரியன் சந்திரன் எல்லாம் வரும்படி அயன் செய்வோம். அதில் நான்தான் வடிவாக செய்வேன் என்று ரூமில் உள்ளவர்கள் தங்களுடையதையும் தருவார்கள். கொஞ்சம் பிகு பண்ணினாலும் செய்து கொடுப்பேன். அதிலும் கண்ணன் மைச்சானுக்கு வடிவாக செய்து கொடுப்பேன் :wub: . ஏனெனில்......??? பிறகு வாறன் அதுக்கு.

ரூமில் நாங்கள் 5 பேர். இரண்டு பேர் எனது சொந்த மைத்துணர்கள். ஒருவர் வர்த்தக வங்கியிலும் மற்றவர் இலங்கை வங்கியிலும் வேலை. மற்றவரில் ஒருவர் வவுனியாவைச்சேர்ந்தவர். இவரும் இலங்கை வங்கிதான் வேலை செய்தார் . இவர்தான் எனக்கு கராட்டி பயிற்ச்சி ஆசிரியர் (வேறு கிளப்பில் கராட்டி பழகிவந்தேன்). மொட்டை மாடியில் தான் எமது ரூம். அங்கு இவர் அடிப்பதை நான் தடுப்பதே எனது பயிற்சி. அவரது உடம்பைப்பார்த்தால் எவருக்கும் தடுக்க மனம் வராது. ஓடத்தான் மனம் வரும். முறுக்கேறிய உடம்பு. மைத்துணர்மார் ஏசுவார்கள் ஏன் இந்த விபரீத விளையாட்டு என்று. ஆனால் ஒரு தேவைக்காக நான் பயற்சி எடுத்ததால் அதுவே எனக்கு + பொறின்ற்.

அடுடுத்தவர் கப்பலில் வேலை செசய்துவிட்டு நல்ல பணத்துடன் வந்து எம்முடன் இருந்து கொண்டு பொழுது போக்குக்காக காபரில் வேலை செய்துத கொண்டிருந்தார். இவர் மானிப்பாயைச்சேர்ந்தவர். வயது வித்தியாசம் அதிகமிருந்தாலும் தம்பி என்று கூப்பிட்டாலும் நண்பர் போல் என்னுடன் பழகும் அருமையான மனிதர். இவருடன் சேர்ந்து அதிகமாக பாட்டுப்பாடுவது எனக்கு பிடிக்கும். மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே மற்றும் ஒரு மூடன் கதை சொன்னால் போன்ற பாடல்களை அதே குரலில் பாடுவார்.

30க்கு அதிகமான அறைகள் அத்துடன் மொட்டை மாடி மற்றும் கீழே இருந்த உணவகம் இத்தனையும் எனது அண்ணரின் நிர்வாகத்தில் இருந்தது. அண்ணர் தனக்கு ஒரு உடுப்பு எடுத்ததால் எனக்கும் எடுப்பது வழமை. அதனால் அதிகமாகவும் ஒவ்வொரு நிறத்திலும் என்னிடம் பல உடுப்புகள் இருக்கும். ஆனால் இந்த வங்கிகளில் வேலை செய்த எனது மைத்துணர்களிடம் 2 அல்லது 3 உடுப்குள் தான் இருக்கும். வேலை முடிந்து வந்து தாங்களே தோய்த்து உலர்த்தி கட்டுவதைப்பார்க்க எனக்கே பாவமாக இருக்கும். என்னைப்பார்த்து சிறு பொறாமை அவர்களுக்கு.

நான் மாலைகளில் இரவில் படிக்காமல் ஊர் சுத்துவதையும் நித்திரை கொள்வதையும் அண்ணரிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள். அண்ணர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார். ஏனெனில் அவரைக்கூப்பிட்டுத்தான் அவர் கையில்தான் அதிபர் எனது பரீட்சை பெறுபேற்றைக்கையளிப்பார். அதனால் அந்த நாளுக்காக அவர் காத்திருப்பார். போய் வாங்கி சந்தோசத்துடன் வருவார். இவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இப்படியே எனது குறும்புகளும் காலமும் போய்க்கொண்டிருந்தது. விடுமுறைக்கு இரண்டு மாதம் ஊர் போய்விடுவேன். ஊரை ஒரு கலக்கு கலக்குவேன். கொழும்பில் படிப்பவன் என்பதால் மவுசு அதிகம். அத்துடன் அதிகம் காணக்கிடைக்காதவனல்லவா?

அப்படியே ஒரு கொஞ்சத்தை பார்த்து சிலதை செலக்ட் செய்து 3யை நெஞ்சுக்குள் கொண்டு வந்திருந்தேன்.(அடப்பாவி).

அதில் ஒன்று கண்ணன் மைச்சானின் தங்கை............. :wub: .

தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
:D தொடருங்கள்.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடரைக் கொஞ்சம் விலாவாரியாக எழுதும்படி விசுகு அண்ணனிடம்

கேட்டுக் கொள்கின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மானிப்பாயைச்சேர்ந்தவர்

என்ட ஊர்காய்....{ஊர்வாதம்} தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் படிப்பவன் என்பதால் மவுசு அதிகம்.

தொடருங்கோ,விசுகர்! :D

Link to comment
Share on other sites

ஊரை ஒரு கலக்கு கலக்குவேன். கொழும்பில் படிப்பவன் என்பதால் மவுசு அதிகம். அத்துடன் அதிகம் காணக்கிடைக்காதவனல்லவா?

அப்படியே ஒரு கொஞ்சத்தை பார்த்து சிலதை செலக்ட் செய்து 3யை நெஞ்சுக்குள் கொண்டு வந்திருந்தேன்.(அடப்பாவி).

அதில் ஒன்று கண்ணன் மைச்சானின் தங்கை............. :wub: .

தொடரும்

கொழும்பில படிப்பதால் மவுசு என்றால் ஊரில் உள்ளவைக்கு விளக்கம்/புத்தி குறைவு போல. ஏதோ சாதனை செய்த மாதிரி எழுதத் தொடங்கியுள்ளீர்கள், எழுதுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா கதை படிக்கிறது குறைவு. இந்தப் பகுதியில்.. யாழின் வழமைக்கு மாறாக.. தலைப்புக்குரியவர் வித்தியாசமா இருந்ததால் படிக்க வந்தேன். நல்ல ஆரம்பம் விசுகு அண்ணா. இதையாவது எழுதி முடிப்பீங்களா.. இல்ல...?! :)

கொழும்பில் படிப்பதற்கும் ஊரில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு... கல்வி சார்ந்து.. மவுசு சார்ந்து அல்ல..!

முன்னர் எங்க தாத்தா பாட்டி காலத்தில் இருந்தது போல.. இப்ப எல்லாம் கொழும்புத் தமிழர்களுக்கு தனி மவுசு இல்ல..! அதேபோல் தான் வெளிநாட்டு பந்தாக்களுக்கும் இப்ப அவ்வளவு மவுசு இல்லை. அறிவியல் மயமாகிவிட்ட உலகம்.. குக்கிராமமாகி விட்டது அல்லவா.. இதற்கு அதுவும் ஒரு காரணம். :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size="4"]நன்றாக இருக்கிறது விசகு, தொடருங்கள் [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ன்றாக இருக்குது அண்ணா தொட‌ருங்கள்...உண்மையாக நட‌ந்த சம்பவம் என்ட‌ படியால் அப்படியே தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]3இல்

ஒன்று

கொழும்பு.13

அண்ணரின் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்தவர்கள். தகப்பன் காபரிலே வேலை. மிகவும் நல்ல மனிதர் அதனால் இந்தக்குடும்பத்துக்கு அந்த பகுதியில் நல்ல பெயர்.

5 பெண் பிள்ளைகளில் 4வது பெண்.

அண்ணர் வீட்டில் தொலைக்காட்சி இருந்ததனால் புதன் கிழமைகளில்??? தமிழ்ப்படம் பார்க்க வரும்போது தான் கண்ணில் விழுந்தது. நல்ல பழைய படங்கள் போடுவார்கள் மகாராசா நிறுவனத்தின் ஆதரவில் என நினைக்கின்றேன். நான் அப்படத்தின் பாடல்கள் வரும்போது நான் அதனுடன் சேர்ந்து பாடுவேன். அப்படியொரு நாள் பாடும்போது முன்னுக்கிருந்த ஒருவர் திரும்பியது போலிருந்தது. கண்ணும் கண்ணும் கண்டன.[/size]

[size=4]எனக்கு 18 வயதிருக்கும். அவருக்கு 16 இருக்கும் என்று நினைக்கின்றேன். பெயர் இந்தி...... கறுப்பு நிறம். நல்ல மொத்தமாக இருப்பார். . சரிதாவைப்போலிருப்பார். ஆனால் அவரைவிட கறுப்பு. நிமிர்ந்து பார்த்து யாருடனும் பேசாத குடும்பம். அவரது பழக்க வழக்கங்கள் குடும்பம் மற்றும் அதன் பண்புகள் பிடித்திருந்தன.

நான் அண்ணரின் வீட்டுக்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் வருவேன். அந்த நேரம் பார்த்து அவர்களது வாசலில் அவர் வந்து நிற்பார். அநேகமாக சைக்கிளிலும் வருவேன். அந்த ஒழுங்கைக்குள் நான் வரும்போது ஏற்படும் சத்ததத்தை வைத்துக்கொண்டே ஓடி வருவதும் உண்டு. இதில் இன்னொரு விடயம் அவரது அக்காவும் ஓடி வருவார். அவரை நான் பார்ப்பதில்லை என்றாலும் இவரில்லா நேரங்களில் அவர்தான் வருவார். பார்த்து சிரிப்பார். என் பதில் மழுப்பலாக இருக்கும். அவரது பெயர் கூட எனக்கு தெரியாது. சனி ஞாயிறு என்றால் கொஞ்சம் அதிக நேரம் அண்ணரின் மக்களுடன் விளையாடுவேன். அவர்களுக்கும் சின்ன பிள்ளகள் வீட்டில் இல்லாததால் எனது பெறாமக்களையே தூக்கிக்கொண்டு திரிவார்கள். அந்த சாக்கில் அடிக்கடி அண்ணர் வீட்டுக்கு வருவார்கள்.

சரி பிடிச்சிருக்கு. இனி பேசணுமே....

ஒரு நாள் கொட்டகேனாவில் ஒரு நண்பன் வீட்டுக்கு போய்விட்டு குறுக்கு வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் தூர சில மாணவிகள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இவரும் இதற்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் வரவே மெதுவாக நடக்கத்தொடங்கினேன். வேகமாக நடந்து வந்து பக்கத்தில் வந்தார். உண்மையைச்சொன்னால் இப்பவும் ஞாபகம் இருக்கு. அப்படி ஒரு வியர்வை. பதட்டம். கால் தடக்கி விழுந்துவிடுவேனோ என்றநிலை.

முதலாவது சொல் வெளியில் வரவே மாட்டேன் என்றது. தலை மட்டும் அசைந்தது. ஒரு மாதிரி எப்படி இருக்கிறியள் என்றேன். சிறிது நேரம் பேசிக்கொண்டு நடந்தோம். பத்து வசனம் பேசினோமா என்பதே சந்தேகம். என்னைவிட அவர் கூடுதலாக பேசியதாக ஞாபகம்.

திரும்பிப்பார்த்தபோது எனது அண்ணருக்கு வாடகைக்கு வீட்டைவிட்டவரின் மனைவி நடந்து வருவது தெரிந்தது. அதையும் அவர்தான் எனக்கு சொன்னார். அப்படியே வந்த 167இல் தொங்கிக்கொண்டு ரூமுக்கு வந்துவிட்டேன். அந்த மனுசி அப்படியே போய் அண்ணியிடம் போட்டுக்கொடுத்துவிட்டார். அப்படியே வீடு ஒரு பூகம்ப ஆட்டம் கண்டு விட்டது. அண்ணரின் தயவில் படித்துக்கொண்டிருந்தேன். படிப்புத்தான் இலக்கு. அண்ணருக்கு அடுத்து ஐந்து பெண் பிள்ளைகளில் 2பேர் என்னை நம்பி வீட்டிலிருந்தது எல்லாமே தற்போதுதான் உறைக்கத்தொடங்கியது. உடைத்துக்கொண்டு கிழம்பணும். இல்லையென்றால் மனதை மாத்திக்கொண்டு படிப்பைத்தொடரணும். காதலைக்கூட சொல்லாதபடியால் இரண்டாவது முடிவை எடுப்பது தற்போதைக்கு சரியாக இருந்தது.[/size]

[size=4]அதன் பின்னரும் அண்ணர் வீட்டுக்கு போவேன். எனது சத்தம் கேட்டதும் வாசலுக்கு வருவார். தவிர்த்துவிடுவேன். இது தொடர்ந்தது..................

நான் இருக்கும் இடத்தைத்தேடி வரத்தொடங்கினார். ஒருமுறை எனது கைக்குள் ஒரு துண்டை வைத்துவிட்டுப்போனார். அதில் இடம் நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் போக விரும்பவில்லை. அடுத்த முறை அண்ணரின் மனேசரிடம் கடிதம் ஒன்றைக்கொடுத்துவிட்டுப்போயிருந்தார். அதை என்னிடம் தரும்போது மனேசர் தம்பி அந்த பிள்ளையின் கண் கலங்கியிருந்தது என்றார். விசயம் அண்ணருடைய வேலையாட்களுக்கு எட்டுவதை நான் விரும்பவில்லை. கடிதத்தை படித்ததும் அதிர்ந்து போனேன். இந்த நேரத்தில் இந்த இடத்துக்கு நீங்கள் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என அதில் இருந்தது. இது எனது குடும்பத்தை மாத்திரமல்ல அமைதியாக வாழும் அவரது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நான் அணுகியது எனது மச்சான் கண்ணனை. அதைப்பார்த்தும் பயங்கரமாக சத்தம் போட்டார். ஏதோ நான் கெடுத்துவிட்டு ஓடப்பார்ப்பதுபோல். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்து விட்டு இவ்வளவுதான் அவருக்கும் எனக்குமான தொடர்பு என்பதை நம்ப வைக்க மிகவும் சிரமப்பட்டேன். கடைசியாக என்னை நம்பாதபோதும் என்னை என்ன செய்யச்சொல்கிறாய் எனக்கேட்டார்.

எனக்காக ஒரு முறை இந்த இடத்துக்கு நீங்கள் செல்லுங்கள் என்றேன். மீண்டும் சத்தம் சண்டை என சில மணித்தியாலங்களின் பின் சம்மதித்தார்.

அவரது மனதைக்குழப்பியதற்கு மன்னிப்புக்கேட்கச்சொன்னேன். மற்றும்படி எனது நிலையில் சிலவற்றை என்னால் தற்போது உடைக்கமுடியாது என்பதையும் சொல்லச்சொன்னேன். போனார். மிகுந்த கவலையுடன் திரும்பி வந்தார். அழுது குளறி அட்டகாசம் செய்ததாக சொன்னார். ஆறுதலைய நேரமெடுத்ததையும் ஆனால் உனக்காக காத்திருப்பதாகவும் வேறு யாரையும் செய்யமாட்டேன் என்று சொன்னதாகவும் சொன்னார். ஆனால் அவன் செய்யமாட்டான். காத்திருக்கவேண்டாம் என தான் சொல்லிவிட்டு வந்ததாகவும் சொன்னார். ஏனெனில் அவரது இந்த பிடிவாதம் என்னை மாற்றியிருந்தது. ஒருவரை அடிமை செய்து அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதை எந்தநிலையிலும் நான் ஏற்கமாட்டேன்......

இதனுடன் கண்ண மச்சான் என்னிடம் சொன்னது

இனி மேலாவது கவனமாக இரு. பெண்களை ஏமாற்றாதே. இதிலிருநந்து அவர் என்னை நம்பவில்லை என்பது மட்டும் தெரிந்தது. இது பெண்களின் கண்ணீருக்குள்ள வலிமை.

தொடரும்............[/size]

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது விசுகு அண்ணா தொடருங்கள்.

எப்பவுமே கற்பனையை விட அனுபவத்துக்கு சுவையும் மதிப்பும் அதிகம்.

விசுகு அண்ணா,

சில வேளைகளில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்தமைக்காக நானே எனக்குள் சந்தோசபட்டதுண்டு.

அப்படி தான் நீங்களும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தமையால் தான் இந்த நிலையில் உங்களால் இப்படி கதை எழுத முடிகிறது.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்கிறேன்.

நீங்கள் எழுதும் உண்மை சம்பவம் யாரையும் (உங்களையோ அல்லது அந்த பெண்ணையோ/ பெண்களையோ) :icon_mrgreen: பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் போயி.. சிம்பிள் மாற்றர். ரெம்ப பீல் பண்ணுறீங்க..! நீங்களா.. விசுகு அண்ணா சொன்னீங்க.. ஓடி வந்து எட்டிப்பார் என்று. அவையா.. எட்டிப் பார்த்திச்சினம்.. காதல் வயப்பட்டிச்சினம்.. அது அவைட பிரச்சனை..! நல்ல காலம்.. அப்ப எடுத்த நல்லதொரு முடிவால தான்.. இன்றைக்கு நீங்க.. இந்த நிலையில இருக்கீங்க என்று நினைக்கிறன்..! :)

ம்ம்ம்... தொடருங்க..! இப்படி குட்டி குட்டியா எழுதினால் தான் படிப்பம். நீட்டா எழுதினீங்க... படிக்க மாட்டம்..! :lol:

Link to comment
Share on other sites

தொடருங்கள் தொடருங்கள் அண்ணா ...........ஆர்வமுடன் வாசிக்க காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]வசந்த கால நினைவுகள் தொடரட்டும்...[/size].........[/size][size=1] [/size][size=1] :D[/size]

Link to comment
Share on other sites

ஒ..........................................உங்களுக்குள் இப்படியும் ஒன்று இருக்கா....................................... எதிர்பார்க்கவே இல்லை....

Link to comment
Share on other sites

ஒருத்தியோடை பழகேக்க இருக்கிற துணிவு , நல்லது கெட்டதைச் சொல்லேக்கையும் இருக்கவேணும் விசுகர் . மற்றும்படி கதைக்கு குறை சொல்லேலாது . தொடருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான காதல்க்கதை. குடும்பம் அதற்கு வில்லன்.

தொடருங்கள் விசுகு அண்ணை

முடிவில் சுபமாக இருந்தால் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா அந்தப் பெண்ணை காதலித்து விட்டாலும்,அவரில் பிழை இருந்தாலும் தான் செய்தது பிழை என ஒத்துக் கொள்ளவா போறார் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2வது

இதுவும் கொழும்பில்தான் ஆரம்பித்தது.

ஆனாலும் வீட்டில் வறுமையின் காரணமாக அவசரமாக வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருக்கு கட்டி அனுப்பிவிட்டார்கள். எனக்கு அதில் வருத்தமில்லை. காரணம் அவசரமாக கல்யாணம் செய்யக்கூடிய நிலையில் நானில்லை. அவள் வெளிநாடு போனதால் அந்தக்குடும்பம் நிமிர்ந்தது. அதுவும் ஒருவகை தியாகம்தான். (கடைசிவரை இருவரும் எமது காதலைச்சொன்னதில்லை. மனதளவில் மட்டுமே. ஆனால் அந்த நினைவுகள்.......???).....

முதலாவதுக்கு வந்த எதிர்ப்பு காரணமாகவும் இன்றும் குடிகார கணவன் குழப்படியான பிள்ளைகள் என ஐரோப்பாவின் மூலை ஒன்றில் வாழும் அவளைத்தொந்தரவு செய்யாது இத்துடன் நிறுத்துகின்றேன்.

இனி 3வது

கண்ணன் மைச்சானின் தங்கச்சி......

தொடரும்.....

Link to comment
Share on other sites

[size=5]நல்லாயிருக்கு விசுகு அண்ணா, என்னதான் மூடி மூடி வச்சாலும் , சில நேரங்கள் வாழ்கையை திரும்பி பார்த்து யோசிக்கும் போது சில இனிமையான சம்பவங்கள் கோடையில் பெய்யிற மழை போல நினைவுகள் எல்லாம் சில்லிடும் .[/size]

[size=5]தொடருங்கோ ...[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D தொடருங்கள்.. :D

ம்ம்ம்

இது நீங்கள் நிலத்தில் ஆற்றில் கட்டிடம் கட்டுவதைவிட கவனமாக எழுதணும் ராசா.

இல்லையென்றால் எதிர்காலம் எகிறிடும்............. :lol:

இந்தத் தொடரைக் கொஞ்சம் விலாவாரியாக எழுதும்படி விசுகு அண்ணனிடம்

கேட்டுக் கொள்கின்றேன். :D

எனக்கும் அதுதான் ஆசை.

ஆனால் அங்கால முற்று முழுதுமாக மறைக்கப்பட்டிருந்தால்.....??? :(

என்ட ஊர்காய்....{ஊர்வாதம்} தொடருங்கோ

அதற்காக அந்த எண்ணத்தில் எழுதவில்லை புத்தர்

2003இல் ஊர் போயிருந்தபோது தேடிப்பிடித்து சந்தித்தேன் ஒரு ஆட்டோக்காறனாக. அழுகை வந்தது. என்ன மாதிரி வாழ்ந்தவர் தெரியுமா? யுத்தம் எப்படி நடந்தது? அங்குள்ள மக்கள் என்ன ஆனார்கள்? எப்படி யுத்த்துக்கு முகம் கொடுத்தார்கள் என்பதை அவரது தோற்றத்தை வைத்தே கணிப்பிட முடிந்தது. ஆனாலும் அங்கு தான் கடைசிவரை வாழ்ந்தார் என்பது எனக்கு செருப்படியாக இருந்தது.

தொடருங்கோ,விசுகர்! :D

நன்றி

சொதப்பாமல் உங்கள் மரியாதையைக்காப்பேன்

கொழும்பில படிப்பதால் மவுசு என்றால் ஊரில் உள்ளவைக்கு விளக்கம்/புத்தி குறைவு போல. ஏதோ சாதனை செய்த மாதிரி எழுதத் தொடங்கியுள்ளீர்கள், எழுதுங்கள் பார்க்கலாம்.

ஊரில் வைத்தியரைவிட

வெளிநாட்டு மாப்பிளைக்குத்தானே இன்றும் மவுசு.

நான் பொதுவா கதை படிக்கிறது குறைவு. இந்தப் பகுதியில்.. யாழின் வழமைக்கு மாறாக.. தலைப்புக்குரியவர் வித்தியாசமா இருந்ததால் படிக்க வந்தேன். நல்ல ஆரம்பம் விசுகு அண்ணா. இதையாவது எழுதி முடிப்பீங்களா.. இல்ல...?! :)

கொழும்பில் படிப்பதற்கும் ஊரில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு... கல்வி சார்ந்து.. மவுசு சார்ந்து அல்ல..!

முன்னர் எங்க தாத்தா பாட்டி காலத்தில் இருந்தது போல.. இப்ப எல்லாம் கொழும்புத் தமிழர்களுக்கு தனி மவுசு இல்ல..! அதேபோல் தான் வெளிநாட்டு பந்தாக்களுக்கும் இப்ப அவ்வளவு மவுசு இல்லை. அறிவியல் மயமாகிவிட்ட உலகம்.. குக்கிராமமாகி விட்டது அல்லவா.. இதற்கு அதுவும் ஒரு காரணம். :icon_idea::lol:

நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

ஊரில் படிப்பதைவிட வேலணை மகாவித்தியாலத்தில் படிடிப்பவன் மேலாகவும்

அதைவிட யாழில் படிப்பவன் மேலாகவும் அதைவிட கொழும்பில் படிப்பவன் மேலாகவும்ஒரு மவுசு இருந்தது அந்தக்காலத்தில். அத்துடன் கோயில் மேளம் போல எப்பவும் பார்த்து சலித்த அந்த ஊர் மாணவர்களிடையே நாங்கள் போய் சப்பாத்தும் விலையுயர்ந்த விதம் விதமாக உடுப்புக்களும் சென்ரும் அடித்து வலம் வந்தால்........???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.