Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,641
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,890
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,532
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 375,275
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   77,047
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   14,181
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   20,830
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,602
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   11,650
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   33,360
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,056
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,773
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,471
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   15,905
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   48,163
   posts
  2. 35,183
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,849
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,298
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,663
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   20,016
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   30,620
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   24,669
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   62,165
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,217
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,770
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,803
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,949
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   9,663
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,531
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   20,620
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,916
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   14,239
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   11,340
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,448
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   20,822
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,518
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   141
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

   சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
   creation-yarl19.jpg

   1,409
   posts
  2. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   57,019
   posts
  3. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,787
   posts
  4. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   446
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (356,084 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (12,853 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (13,158 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Upcoming Events

 • Posts

  • ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை!     நீண்ட காலத்துக்குப் பின்னர், தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் அவர்களிடம் பேசுகையில், ‘தற்போதைய சிஸ்டம் சரியாக இல்லை. அதனால், மக்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாமல்போய்விட்டது. எனவே, சிஸ்டத்தைச் சரிப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’, எனப் பூடகமாகப் பேசினார். அதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது. அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கின்றன.
   முக்கியமாக, "அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், ஊழல்வாதிகளைத் தன்னருகே நெருங்கவிட மாட்டேன்" என்று ரஜினி கூறியிருந்தார். மேலும், "அப்படி அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்போதே விலகிவிடுங்கள்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  
   இந்நிலையில், ரஜினி தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,"அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும்  ஒழுக்கத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். http://www.vikatan.com/news/cinema/90326-rajinikanth-warns-his-fans.html
  •   அஜித்தும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவும்! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12       ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்!  ஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... அஜித்தின் மீதி இரண்டு படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்... 56. ‘வேதாளம்’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பண்ணிய படம். மீண்டும் இயக்குநர் சிவா காம்பினேஷன். தவிர, முதல்முறையாக அனிருத் இணை. படத்தைக் கவனித்த ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும். இதில் அஜித்தை, ஸ்ருதிஹாசன்தான் காதலிப்பார். ஓர் இடத்தில்கூட, ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்’ என்று ஸ்ருதியிடம் அஜித் சொல்லியிருக்கவே மாட்டார். கடைசியில் திருமணமும் செய்துகொள்ள மாட்டார். பாடல் காட்சிகளில்கூட இவருக்கு முன்பாக ஸ்ருதி ஆடுவார். அஜித் அவர் பின்னால் நடந்து வருவாரே தவிர, இவர் ஆட மாட்டார். இப்படி இதில் அஜித் கையாண்டது எம்.ஜி.ஆர் ஃபார்முலா.  ‘வேதாளம்’ கேரக்டரின் கெட்டப் இவரைச் சுற்றியுள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. ‘ஐயய்யோ ரொம்ப மோசமா இருக்குங்க. ‘ரெட்’லயாவது சின்ன வயசு மொட்டையனா இருப்பீங்க. இதுல சால்ட் அண்ட் பெப்பர் மொட்டை. பயங்கரமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘இதில் கன்டென்ட்தான் ஹீரோ. கதை கன்வின்ஸிங்கா இருந்தா படம் நிச்சயம் ரீச் ஆகும். அப்ப ‘வேதாளம்’ கேரக்டரும் ரீச் ஆகும்’ என்றார். அப்படியேதான் நடந்தது. இப்படி, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார் அஜித்.  ‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு உலகளவில் பலர் ஆடுகிறார்கள். அஜித்தின் மகன் ஆத்விக்குக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலுடன் அஜித்தின் மனதுக்கு நெருக்கமான உணர்வுபூர்வமான ஒரு சம்பவம் உண்டு. ‘வேதாளம்’ படம் 2015-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ரிலீஸ். இவர் சங்கம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள குமரன் மருத்துவமனையில் நவம்பர் 11-ம் தேதி ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ‘இன்னிக்கு நைட்டே ஆபரேஷன்’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே, சங்கம் தியேட்டரிலிருந்து வந்த ‘ஆலுமா... டோலுமா...’ பாடலுக்கு ரசிகர்களின் ஆரவாரத்தைக் கேட்கும்போது இவருக்கு ஒரு மாதிரி ஆகியிருக்கிறது. இரண்டு முட்டி, கழுத்தில் ஆபரேஷன். ஆனால், ஆபரேஷன் ஆன அன்றே டிஸ்சார்ஜ் ஆகணும் என்று பிடிவாதமாக இருந்து, அதேபோல டிஸ்சார்ஜும் ஆகிவிட்டார்.  57. ‘விவேகம்’ ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அதே ‘வி’ சென்ட்டிமென்ட். ‘வீரம்’ கிராமத்துக் கதை என்றால், ‘வேதாளம்’ நகரத்துக் கதை. ஆனால் ‘விவேகம்’, இன்டர்நேஷனல். இந்தப் படத்தின் ஸ்பெஷலே அஜித்தின் ஃபிட்னஸ்தான். ‘என்னைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு என்னால் திரும்பச் செய்ய முடிஞ்சது இதுமட்டும்தான்’ என்பது அவரின் எண்ணம். ஆனால், ‘போன வாரம் வாங்கித் தந்த பேன்ட் ரெண்டு இன்ச் குறைஞ்சிடுச்சு சார்’ என்று ‘விவேகம்’ பட காஸ்ட்யூம் டிசைனர்தான் புலம்புகிறாராம். முதல்முறையாக காஜல் காம்பினேஷன். ‘ஹீரோஸ்ல முதல் ஜென்டில்மேன் அஜித்தான்’ என்று ‘வேதாளம்’ சமயம் புகழ்ந்த ஸ்ருதியைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நடிக்கும் அவரின் தங்கை அக்‌ஷராஹாசனும் அதையே சொல்கிறாராம். ‘தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஆக்‌ஷன் வந்ததில்லை’ என்று சொல்வது மாதிரியான சண்டைக் காட்சிகளை ‘விவேகம்’ படத்தில் அஜித் பண்ணியிருக்கிறாராம்.  57 படங்கள் பற்றி பார்த்தோம்.. AK58? ஒரு படம் தயாராகி முதல் காப்பி பார்க்கும் வரையில் அடுத்த பட இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதை  முடிவு பண்ண மாட்டார். வேறொரு இயக்குநரிடம் அடுத்த படத்துக்கு கமிட் ஆகிவிட்டால் தற்போது படம் பண்ணும் இயக்குநர் இன்செக்யூர்டாக ஃபீல் பண்ணுவார் என்பதால் அப்படி கமிட் பண்ண மாட்டார். கேட்டால், ‘என் பட இயக்குநர் அடுத்து வேறொரு நடிகருக்கு கதை சொல்லி ஒகே பண்ணிவிட்டால், நான் நடிப்பதை ‘இந்த காட்சியில் அந்த நடிகர் நடிச்சா எப்படி இருக்கும்’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். அதேபோல்தான் நானும். அதனால் ஒரு படம் முடியாமல் அடுத்த படம் அறிவிக்க மாட்டேன்’ என்பார்.

   அதேபோல போன படத்து தயாரிப்பாளரோ, அடுத்தப்பட தயரிப்பாளரோ தற்போது ஷூட்டிங் நடக்கும் ஸ்பாட்டுக்கு வரக்கூடாது என்பதிலும் அஜித் உறுதியாக இருப்பார். ‘உங்கள்ட்ட அட்வான்ஸ் வாங்கிட்டா, ’பார்க்கணும்’னு நீங்க கேட்டால் ‘வரக்கூடாது’னு என்னால சொல்ல முடியாது. ‘வாங்க’னு சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அது எனக்கு பிடிக்காது. ஏன்னா இந்தப்பட தயாரிப்பாளர்தான் என் இப்போதைய முதலாளி. அந்த ஸ்பாட்டுக்கு நீங்க வர்றது, அவருக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். தேவையில்லாத அந்த டென்ஷன் வேண்டாமே’ என்று சிரிப்பார். அதனால்தான் ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். இதிலும் அஜித் தனி பாணிதான்!  இந்தத்  தொடரை 12 நாட்களாக படித்து வந்த உங்களுக்காக, சில போனஸ் செய்திகளோடு நாளை.. இறுதிப்பகுதியில் சந்திப்போம்!    -அஜித் அறிவோம் http://www.vikatan.com/cinema/tamil-cinema/90279-facts-about-ajith-ajithai-arinthaal-series-part-12.html
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
  • தகவலுக்கு நன்றி தமிழ்சிறியவர்களே! இதுபோன்று  தமிழரது ஊர்களில் இன்றும் பறையிசையை பயன்படுத்தும் ஆலங்களின் விபரங்களை இணைத்தால்  அறிந்த உறவுகள் இணைப்பது ஒரு தகவலாக மற்றவரும் அறிந்துகொள்ளலாம். 
  • ‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive     திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் படபடக்கிறது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற முடிவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கியுள்ளார். அந்த அணியின் குறிக்கோளுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு அணிகளும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தார். இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை, குறுக்கு வழியில் மீட்டெடுக்க முயற்சித்ததாக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டெல்லி போலீஸரால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவருகின்றனர். இதையெல்லாம் சசிகலா குடும்பத்தினர் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர். அ.தி.மு.க-வின் கட்டுப்பாடு முழுவதும் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகுவதை அந்தக் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் சிறையில் இருப்பதால், அடுத்த அதிகார மையத்தை அ.தி.மு.க-வில் ஏற்படுத்த அந்தக் குடும்பத்தினர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, திவாகரனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாகப் பேசுவதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், டெல்லிச் சென்றார். அங்கு, சிறையில் உள்ள  டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசினாராம். திவாகரனை அ.தி.மு.க-வின் அதிகார மையத்துக்குக் கொண்டுவருவது தொடர்பாக, எம்.நடராஜன் தினகரனிடம் விவாதித்திருக்கிறார். ‘இனி, சிறையிலிருக்கும் வரை திவாகரன்மூலம் அ.தி.மு.க-வை செயல்படுத்துவோம். மற்றவற்றையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். விரைவில் உன்னை சிறையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆறுதலும் தேறுதலுமாகப் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம் தினகரனும் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது அ.தி.மு.க-வில், திவாகரனை அதிகார மையத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தொகுதிப் பிரச்னைகளைப் பேசிவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள தன்னுடைய ஆதரவு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். மத்திய அரசின் உறுதுணை இருந்தால் மட்டுமே சசிகலா குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில், தனியாகவே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதில், சசிகலா குடும்ப விவகாரமும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் பெற, எம்.நடராஜனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் இது தொடர்பாகப் பேச ஆர்வம் காட்டவில்லை. எம்.நடராஜன் தரப்பினர் சிலரிடம் டி.டி.வி.தினகரன் சந்திப்புகுறித்து கேட்டபோது, “சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒரங்கட்ட சில துரோகிகள் முயற்சித்துவருகின்றனர். அதை, சசிகலாவின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. டி.டி.வி.தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியதிலும் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. டெல்லி வழக்கை சட்டப்படி சந்தித்துவருகிறோம். எங்கள் குடும்பத்தினரிடம் நிலவிய மனக்கசப்புகளைப் பயன்படுத்தி, சிலர் குளிர்காய்ந்துவிட்டனர். குடும்பத்தினரிடம் இதுதொடர்பாக விரிவாகப் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே, இப்படியான சில முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறையிலிருக்கும் வரை திவாகரன்மூலம் கட்சிப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சந்திப்பு!’’ என்று தெரிவித்தனர். தமிழக அரசியலைத் தீர்மானித்த கட்சி அ.தி.மு.க. இப்போது, அதன் தலையெழுத்தைத் தீர்மானிக்க முக்கோண கோஷ்டிகள் முண்டா தட்டுகின்றன. http://www.vikatan.com/news/tamilnadu/90308-sasikala-husband-mnatarajan-met-ttvdinakaran-in-jail.html
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,410
  • Most Online
   1,326

  Newest Member
  வென்றிராவணன்
  Joined
 • Images

 • Today's Birthdays

 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   173,303
  • Total Posts
   1,102,194