Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,641
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,891
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,532
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 375,619
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   77,160
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   14,198
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   20,849
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,602
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   11,677
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   33,373
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,058
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,774
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,473
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   15,920
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   48,175
   posts
  2. 35,205
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,851
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,301
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,663
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   20,053
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   30,687
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   24,723
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   62,257
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,217
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,771
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,803
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,952
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   9,681
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,533
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   20,647
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,921
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   14,256
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   11,346
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,448
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   20,826
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,518
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   141
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

   சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
   creation-yarl19.jpg

   1,413
   posts
  2. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   57,061
   posts
  3. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,787
   posts
  4. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   446
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (356,183 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (12,859 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (13,162 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Upcoming Events

 • Posts

  • உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘Unitary State’ என்ற ஆங்கிலப் பதத்தினையும் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். Unitary State என்ற ஆங்கிலப் பதம், நாட்டின் சுபாவத்தைக் குறிக்குமே தவிர ஆட்சிமுறையைக் குறிக்காது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆகையால், ஆங்கிலப் பதம் பயன்படுத்துவதால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்பதையும் அவர்கள் விளங்கப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர், சர்வதேசத்தின் தாளத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுவதாக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தன் ஐயா, “உங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்” என்று கடுந்தொனியில் தெரிவித்துள்ளார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சம்பந்தன் அவர்கள் முதலாவது சுதந்திர தின நிகழ்விலேயே கலந்துகொண்டவர்” எனக் குறுக்கிட்டிருக்கிறார். “நான் அந்த அடிப்படையில் இதனைக் கூறவில்லை. இந்த நாட்டில் ஒரு சதமேனும் நான் களவாடவில்லை. ஆனால் உங்களில் யாராவது இதனைத் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படியில்லையாயின் நான்தான் உண்மையான இலங்கையன்” என்று, சம்பந்தன் ஐயா, பதிலடி கொடுத்துள்ளார். சம்பந்தன் ஐயாவின் இச்சவாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்ப, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் அங்கம் வகித்த எவரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் சங்கடத்துக்குள்ளாகினார்கள் எனவும் நம்பகரமாகத் தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து, “நாட்டைப் பிரிவுபடுத்தாத, பிளவுபடாத, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பூரண அதிகாரங்கள் உட்பட அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அரசியலமைப்புக் கவுன்ஸில் இணக்கப்பாடு கண்டுள்ளது. இதனை நாடாளுமன்றப் பெரும்பான்மை மற்றும் மக்கள் ஆணையைக் கொண்டு நிறைவேற்றுவோம். ஆகையால், பெயர் பற்றிய விடயங்களில் பின்னர் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்கப் பயணம் முடிவடைந்து இலங்கை திரும்பியதும், தேர்தல்கள் முறைமை மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை பற்றிய தீர்மானம் எட்டப்பட்டு, உத்தேச அறிக்கை வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. http://battinaatham.com/description.php?art=10350
  • கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் முக்கிய தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.  கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒரு ங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். நகர அபிவிருத்தி  அதிகார சபையின் அதிகாரிகள் நகர திட்டமிடல் பற்றி கூட்டத்தில் விளக்க மளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருக்கின்ற இராணுவ நினைவுச் சின்னம் யாருக்காக இருக்கிறது? டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டது? எங்கிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டது? 2009 இற்கு முன் நாங்கள் இடம்பெயர்ந்து சென்ற போது அந்த இடத்தில் அப்படி எதுவும் இல்லையே.   இது யாருடைய கலாசாரம் என்பதை காட்டுவதற்கு யார் எடுக்கிற முயற்சி? இதற்கு நகர அவிருத்தி அதி கார சபையும் உடந்தையாக இருக்கிறதா?  எனத் தெரிவித்த அவர்,
   கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் ஒத்துழைப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டினார். இதன்போது அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  கிளிநொச்சி டிப்போச் சந்தி இராணுவ நினைவுச் சின்னம் நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என்பதால் அது தொட ர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவோம் எனத் தெரிவித்தார். 
   தொடர்ந்து இக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. http://www.valampurii.lk/valampurii/content.php?id=14711&ctype=news
  • கிளிநொச்சியில் பதற்றம்: ஏ9 வீதி முடக்கம் Editorial / 2017 மே 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:23Comments - 0Views - 65 -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுச் செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், இன்றுக் காலை 10.30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னதாகவுள்ள யு9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்றும் இதனால், இன்றைய இப்போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பொலிஸாரால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், நேற்றைய தினம் (29), மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், நீதவான் நீதிமன்றம், அதனை நிராகரித்திருந்தது. இந்நிலையில், போராட்டத்தால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணி, போராட்டக்காரர்கள் கூடியுள்ள பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களிலும், பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், “எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்;கொண்டு வருகின்றோம். இந்நிலையில், எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்;;தோம். இப்போராட்டம், இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், எங்களுக்கான எந்த ஒரு தீர்வுகளும் வழங்காது எங்களது போராட்டங்களை தொடர்ந்து நீடிக்க விட்டு, நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் தலைமகளும் வேடிக்கை பார்க்கின்றன” என்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். ஏ9 வீதி முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி நீதவான், மாவட்ட மேலதிகச் செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், போராட்டக்காரர்களுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை, மாவட்ட மேலதிகச் செயலாளரிடம் கையளிக்குமாறு, நீதவான் தெரிவித்தார். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மனுக் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மேலதிகச் செயலாளர், போராட்டக்காரர்களிடம்  உறுதியளித்தார் Tamilmirror
  • 180 பேர் உயிரிழப்பு   110 பேரைக்காணவில்லை ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு 76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம் போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

   (ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் தொடரும் மோச­மான கால­நிலை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் சிக்­குண்டு பலியா­னோரின் எண்­ணிக்கை 180 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.  மேலும் 110 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். அத்­துடன் அனர்த்­தங்­களில் 1 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 303 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 82 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட 18,845 குடும்­பங்­களை   சேர்ந்த 75,308 பேர் தொடர்ந்தும் முகாம்­களில் தங்­கி­யுள்­ளனர். கடந்த வாரம் ஏற்­பட்ட சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு என்­ப­ன­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்­த­வண்ணம் உள்­ளது. பாதிப்­புக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்­களை நேற்று 179 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­துடன் 109 பேர் காணாமல் போயுள்­ளனர். அதேபோல் இரத்­தி­ன­புரி, கேகாலை, மாத்­தளை, கண்டி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மாத்­தறை, ஹம்­பாந்­தோட்டை, காலி,கொழும்பு, களுத்­துறை, கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு,திரு­கோ­ண­மலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 1 இலட்­சத்து 50 ஆயி­ரத்து 392 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 57 ஆயி­ரத்து 505 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட 18 ஆயி­ரத்து 612 குடும்­பங்­களை சேர்ந்த 74 ஆயி­ரத்து 928 பேர் இது­வ­ரையில் 366 தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர் . நேற்று மற்றும் நேற்று முன்­தினம் கால­நிலை சாதா­ரண நிலை­மையில் இருந்த போதிலும் சாதா­ரண மழை­வீழ்ச்சி காணப்­பட்­டது. சில பகு­தி­களில் கடு­மை­யான மழை வீழ்ச்சி குறித்த சில மணி­நே­ரங்­க­ளுக்கு மாத்­திரம் பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களின் நீர் தேங்­கி­யுள்­ளதை அடுத்து மக்­களின் இயல்பு வாழ்க்கை தொடாந்தும் பதிக்­கப்­பட்ட வண்­ணமே உள்­ளது. வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக மீண்டும் கன­மழை பெய்­யக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.  மாத்­தறை மாவட்­டத்தில் அதி­க­ள­வானோர் பாதிப்பு இந்த அனர்த்­தங்­களில் மாத்­தறை மாவட்­டமே அதி­க­மாக பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தை சேர்ந்­த­வர்­களே அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலைய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. மாத்­த­றையில் மாத்­திரம் 24 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 15 பேர் காணாமல் போயுள்­ளனர். பாது­காப்பு படை­க­ளினால் காணமால் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்­த­வண்ணம் உள்­ளன. குறித்த மாவட்­டத்தில் 16 பிர­தேச செய­ல­கங்கள் அனர்த்­தத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இப் பிர­தேச செய­லங்­க­ளுக்கு உட்­பட்ட 87 வீடுகள் முற்­றா­கவும் 2001 வீடுகள் பகுதி அள­விலும் சேத­ம­டைந்­துள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தில் 41 ஆயி­ரத்து 545 குடும்­பங்­களைச் சேர்ந்த 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 775 பேர் வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்­கப்­பட்ட நிலையில் அவர்­களில் 2714 குடும்­பங்­களைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 370 பேர் 29 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். களுத்­து­றையில் 54 பேர் பலி இயற்கை அனர்த்­தத்தில் சிக்­குண்டு களுத்­துறை மாவட்­டத்தில் 54 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 69 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக மேலும் 57 பேர் காணாமல் போயுள்­ளனர். களு கங்­கையின் நீர் மட்டம் ஓர­ளவு குறைந்­துள்ள போதும் தாழ் நிலப் பகு­தி­களில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடித்து வரு­கின்­றது. இது வரை­யி­லான காலப்­ப­கு­தியில் களுத்­துறை மாவட்­டத்தில் 29 ஆயி­ரத்து199குடும்­பங்­களைச் சேர்ந்த 107906 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் 1602 குடும்­பங்­களைச் சேர்ந்த 6034 பேர் 60 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.   களுத்­துறை மாவட்­டத்தின் 5 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் 26 பாரிய மண் சரிவு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. களுத்­துறை, மது­ரா­வல, தொடான்­கொடை செய­லகப் பிரி­வு­களின் கீழ் உள்ள பகு­திகள் பல நேற்றும் அபாய எச்­ச­ரிக்­கையின் கீழேயே அடை­யா­ள­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேல் மாகா­ணத்தி க்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்­படும் நிலையில் களுத்­துறை மாவட்­டத்­திற்­கான எச்­ச­ரிக்கை தொடர்­கி­றது.  காலியில் 12 உயி­ரி­ழப்­புக்கள்  நிவா­ரண சேவைகள் தீவிரம் தொடர்ச்­சி­யாக பெய்த கன­மழை கார­ண­மாக காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கிங் கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­ததன் விளை­வாக ஏற்­பட்ட வெள்­ளத்தில் கிங் கங்­கையை அண்­மித்­துள்ள பகு­திகள் அனைத்தும் நீரில் மூழ்­கிய போதும் தற்­போது வெள்ளம் வடிந்­தோ­டி­வ­ரு­கின்­றது. எனினும் காலியின் பத்­தே­கம மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் வெள்ள நீர் தொடர்ந்தும் அதே மட்­டத்தில் காணப்­படும் நிலையில் அப்­ப­கு­தி­களில் உள்ள பல கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை கொன்டு செல்லும் பணி­களில் தொடர்ந்தும் சிரமம் காணப்­ப­டு­கின்­றது.  அனர்த்தம் கார­ண­மாக காலி மாவட்­டத்தில் 38155 குடும்­பங்­களைச் சேர்ந்த 151360 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 10 பேர் காணாமல் போயுள்­ளனர். பாதிக்­கப்­பட்­டோரில் 634 குடும்­பங்­களைச் சேர்ந்த 1411 பேர் 13 முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­பு­ரியில் 77 உயி­ரி­ழப்­புக்கள்    28 பேரை காண­வில்லை அனர்த்­தங்­க­ளினால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லேயே அதிக உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. மண் சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பகு­திகள் தொடர்ந்தும் நீரில் மூழ்­கி­யி­ருந்­தன. இந் நிலையில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 77 பேர் மண் சரிவு மற்றும் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் 26 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 28 பேர் காணாமல் போயுள்­ளனர். இரத்­தின புரி மாவட்­டத்தில் தற்­ச­மயம் மழை ஓய்ந்­துள்ள போதும் , இரத்­தி­ன­பு­ரியின் 325 கிராம சேவகர் பிரி­வுகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.  ஏனைய மாவட்­டங்கள் கேகாலை மாவட்­டத்தில் 1526 குடும்­பங்­களை சேர்ந்த 5799 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நான்கு பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 7 குடும்­பங்­களை சேர்ந்த 31 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். வவு­னியா மாவட்­டத்தில் 31 குடும்­பங்­களை சேர்ந்த 102 பேர் பாதிக்கப் பட்­டுள்­ள­துடன், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 27குடும்­பங்­களை சேர்ந்த 72பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 2409 குடும்­பங்­களை சேர்ந்த 10368 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொழும்பு மாவட்­டத்தில் 5150 குடும்­பங்­களை சேர்ந்த 20172நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கம்­பஹா மாவட்­டத்தில் 3756 குடும்­பங்­க­களை சேர்ந்த 16133பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 206 குடும்­பங்­களை சேர்ந்த நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 28 குடும்­பங்­களை சேர்ந்த 123 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நீர்­மட்டம் குறைவு. மழை­வீழ்ச்சி குறை­வ­டைந்­துள்ள நிலையில் களு­கங்கை, நில்­வலா கங்கை, கிங் கங்கை, களனி கங்கை ஆகிய நான்கு கங்­கை­களின் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்ள நிலையில் வெள்­ள­பெ­ருக்கும் குறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்ட போதிலும் திடீர் மழை பெய்யும் நிலையில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது எட்டு மாவட்டங்கள் தொடர்தந்தும் அனர்த்த எச்சரிக்கை.  கேகாலை, காலி மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை களுத்துறை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த நிலைமை எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலின் அடிப்படையில் மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.  http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-30#page-1
  • போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,412
  • Most Online
   1,326

  Newest Member
  அறிவு
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   173,554
  • Total Posts
   1,103,164